Posts Tagged ‘வியாபாரம்’

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர், சிங்கப்பூரிலிருந்து சென்னை என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (3)

மே 3, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுசார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர், சிங்கப்பூரிலிருந்து சென்னை என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (3)

02-05-2023 ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பப் பட்ட ஈ-மெயில்:

அன்புள்ள அறிஞருக்கு,  

வணக்கம்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மய்ய நிர்வாகக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க காத்திருந்தமைக்கு நன்றி.

நாம் முன்னர் அறிவித்த படி பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு ஏற்ற பல்வேறு இடங்களை பார்வையிட்டோம். அதன் அடிப்படையில் உலகில் உள்ள அனைவரும் எளிதாக வந்து செல்லும் வகையிலான இடத்தினை கண்டறிந்துள்ளோம். மாநாடு நடைபெறவிருக்கும் இடத்தினை உறுதி செய்யும் இறுதிக்கட்ட பணிகளை செய்து வருகிறோம். வருகின்ற வாரத்தில் தேர்வு செய்த இடத்தையும் மேலும் விவரங்களையும் பகிர்ந்து கொள்கிறோம்.   மாநாட்டிற்கு தொடர்ந்து உங்கள் ஆதரவையும் பங்கேற்பையும் எதிர்பார்க்கிறோம்.

மாநாடு ஏற்பாடுகள் தொடர்பான மேலதிக விவரங்களுக்கு organizing-committee@icsts11.org என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.  

நன்றி .  

அன்புடன்

ஆய்வுக்குழு,
பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு  

தமிழறிஞர்களுக்குள் சச்சரவு ஏன்?: தமிழ் பெயரில் உண்மையில் ஆராய்ச்சி, போன்றவை விடுத்து, எப்படியெல்லாம் வியாபாரம் செய்யலாம் என்று தமிழகம் மட்டுமல்லாது அயல்நாடுகளில் வாழும் “தமிழர்களும்மரசியல் செய்வது தெரிகிறது. இதனால், உண்மையான தமிழ் வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர் மற்றும் விற்பன்னர்களுக்கு சங்கடம், பிரச்சினை ஏன் குழப்பமும் ஏற்படுகிறது. அரசியலோடு, சித்தாந்தம், எல்லை கடந்த மற்ற விருப்பு-வெறுப்புகள் முதலியவையும் இவற்றுடன் சேர்கின்றன.  “தமிழறிஞர்களுக்குள் சச்சரவு” என்று குறிப்பிடுவதே[1] தகுதியற்றது, தேவையற்றது மற்றும் விலக்கத் தக்கது எனலாம்[2]. அதிகாரம், செல்வாக்கு, வியாபாரம், அரசியல் முதலியவை இல்லை என்றால், மாநாடு நடத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை எனலாம். கருணாநிதி காலத்திலேயே, இத்தகைய மாநாடு நடத்தும் விவகாரம் பிரச்சினை, சர்ச்சை மற்றும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. நொபூரா கராஷிமா போன்றோர், தமிழகத்தில் அரசியல் ரீதியில் நடத்தப் படும் மாநாடு, “உலகத் தமிழ் மாநாடு” இல்லை மற்றும் தாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் அறிவித்தனர்.

மாரிமுத்து வெர்சஸ் பொன் வைக்கோ போட்டி ஏன்?: உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, சென்னையில் நடத்த திட்டமிடப்படுகிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில், இதுவரை பத்து மாநாடுகள் நடந்துள்ளன. பத்தாவது மாநாடு, சிகாகோவில் நடந்தது. அதில், 11வது மாநாட்டை, சிங்கப்பூரில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், உலக தமிழ் ஆராய்ச்சி மன்ற தலைவர் பொன்னவைக்கோ தலைமையில் ஒரு குழு சிங்கப்பூரிலும், முன்னாள் தலைவர் மாரிமுத்து தலைமையில் ஒரு குழு மலேஷியாவிலும், 11வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதாக அறிவித்து, பணிகளை செய்து வருகின்றன. இது, தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அறிஞர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது[3]. இந்நிலையில், பொன்னவைக்கோ தலைமையிலான குழு, ஜூன் 16, 17, 18 ஆகிய தேதிகளில், சென்னை, கிண்டி, அண்ணா பல்கலை வளாகத்தில், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டு, அரசின் அனுமதியை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது[4].

தமிழக அரசு உயர் அதிகாரிகள், இரு குழுக்களையும் இணைந்தது, ஒரே மாநாடாக நடத்தும்படி அறிவுரை: உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, இரண்டு இடங்களில் நடத்த திட்ட மிட்டுள்ள குழுக்களை இணைக்கும் முயற்சியில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, பொன்னவைக்கோ தலைமையிலான குழு, ஜூன், 16, 17, 18ம் தேதிகளில் சென்னையில் நடத்தவும்; டான் மாரிமுத்து தலைமையிலான குழு, ஜூலை, 20, 21,22 ஆகிய தேதிகளில் மலேஷியாவில் நடத்தவும் தயாராகி வருகின்றன[5]. இதுகுறித்த செய்தியும், ஒரே மாநாடாக நடத்த வேண்டிய அவசியம் மற்றும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தினமலர் நாளிதழில் கடந்த மாதம் ஏப்ரல் செய்தி வெளியானது. இந்நிலையில், தமிழக அரசு உயர் அதிகாரிகள், இரு குழுக்களையும் இணைந்தது, ஒரே மாநாடாக நடத்தும்படி, பொன் வைக்கோ தலைமையிலான குழுவினரிடம் அறிவுறுத்தினர்[6].

பொன் வைக்கோ, மாரிமுத்துவுக்கு எழுதியுள்ள கடிதம்: இதையடுத்து, பொன் வைக்கோ, மாரிமுத்துவுக்கு எழுதியுள்ள கடிதம்: “உலகத் தமிழ் ஆராய்ச்சி 11வது மாநாட்டை, ஒரே குழுவாக இணைந்து நடத்த, தமிழக அரசு விரும்புகிறது. அதனால், எங்களின் குழு, உங்கள் தலைமையை ஏற்று மாநாட்டை நடத்த சம்மதிக்கிறது. எங்களிடம் இதுவரை, 1,057 ஆய்வுச் சுருக்கங்களும், 450 ஆய்வுத் தாள்களும் வந்துள்ளன. அவற்றில், 200 ஆய்வுத் தாள்களை பேராசிரியர் மருதநாயகம் தேர்வு செய்துள்ளார். அந்த ஆய்வாளர்கள், கட்டுரைகளை வாசிப்பர். அவர்களுக்கும், எங்களின் நிர்வாக குழு உறுப்பினர்கள், 10 பேருக்கும், மலேஷியாவில் உணவு, தங்குமிடம், சுற்றுலா தலங்களைக் காணும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆறு கூட்ட அரங்கங்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், நாங்கள் மாநாட்டுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்,”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது சுமார் 250 பேருக்கு “மலேஷியாவில் உணவு, தங்குமிடம், சுற்றுலா தலங்களைக் காணும் ஏற்பாடுகளை செய்தால்” பொன் வைக்கோ, “ மாநாட்டுக்கு முழு ஒத்துழைப்பு ” தருவார், இல்லையென்றால், “இல்லை,” அதாவது, சென்னையில் நடத்தப் படும்.

மாநாடு சென்னையிலா, மலேசியாவிலா?: இதில் இடம் மட்டுமல்லாது, ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் நிலை என்னவாயிற்று என்று தெரியவில்லை. சார்ஜா, சிங்கப்பூர், மலேசியா என்று ஆய்வுக் கட்டுரைகளை வாங்கி வைத்துளளனர்.ளாந்த ஈ-காபிகளை வைத்திருப்பவர்களுக்குக் கொண்டாட்டம் தான். இப்பொழுதெல்லாம், இதுதான் பெரிய வியாபாரமாகி விட்டது. மாநாடு பெயரில் போலி வெசைட், பணம் வசூல், ஆய்வுக் கட்டுரைக்கு ஆயிரம்-இரண்டாயிரம் வசூல் என்றெல்லாம் நடத்தும் கூட்டங்களும் இவர்களது ஆசியோடு உலா வருகின்றன. அத்தகைய அறிவுக்கொள்ளை கூட்டங்கள், இவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப் படங்களையும் இணைதளத்தில் போட்டு, தூண்டில் போட்டு வளைத்து வருகின்றனர், வசூல் செய்கின்றனர். ஆய்வுகட்டுரை விசயத்தில், பொன் வைக்கோ குழுவினர் பாரபட்சத்துடன் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. வந்த கட்டுரைகளை காப்பி அடித்து உபயோகப் படுத்தவும் கூடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், சிலர், வெளிப்படையாகவே இ-மெயிலில் அத்தகைய பிரச்சினையை எழுப்பியுளளனர். ஆனால், தமிழாராய்ச்சியாளர்களுக்கு “பிளாஜியாரிஸம்” என்பது, டீ-காபி குடிப்பது போன்றது. டீ குடித்துக் கொண்டே காபி குடிப்பதில் வல்லவர்கள். இதனால் தான், தரமும் குறைந்து வருகிறது. குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

03-05-2023


[1] தினமலர், தமிழறிஞர்களுக்குள் சச்சரவு: நடக்குமா உலகத் தமிழ் மாநாடு?, Added : ஏப் 05, 2023  06:57

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3285547

[3] தினமலர், சென்னையில் உலகத் தமிழ் மாநாடு?, பதிவு செய்த நாள்: ஏப் 07,2023 05:50

[4]  https://m.dinamalar.com/detail.php?id=3287252

[5] தினமலர், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு குழுக்களை இணைக்க அரசு முயற்சி, பதிவு செய்த நாள்: மே 02,2023 01:49; https://m.dinamalar.com/detail.php?id=3309489

[6] https://m.dinamalar.com/detail.php?id=3309489

கவுன்சிலிங் முறை சரியில்லை என்றால் நுழைவு தேர்வு வைக்க வேண்டியதுதான் – அப்பொழுதுதான் உண்மையில் படிக்க விருப்பம் உள்ளவர்கள் சேருவார்கள்!

ஜூலை 3, 2013

கவுன்சிலிங் முறை சரியில்லை என்றால் நுழைவு தேர்வு வைக்க வேண்டியதுதான் – அப்பொழுதுதான் உண்மையில் படிக்க விருப்பம் உள்ளவர்கள் சேருவார்கள்!

கவுன்சிலிங் என்பது மாணவ – மாணவியர்களுக்கு உபயோகமாக உள்ளதா அல்லது கான்வாசிங் போல செயல்படுகிறதா: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 02-07-2013 அன்று 13-வது நாளாக கவுன்சிலிங் 168.50 கட் ஆப் முதல் 165.75 கட் ஆப் வரை உள்ள மாணவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். 02-07-2013 அன்று இரவு 51,629 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இதில் 41,176 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 11 ஆயிரம் பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை[1]. அவர்கள் எந்த காரணங்களுக்காக பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்படவில்லை. 50,000 பேர் கவுன்சிலிங்கு வந்தார்கள் என்றாலே ரூ.25 லட்சங்கள் வசூலாகி விட்டது என்று அர்த்தம். [2].  எத்தனையோ ஏழைக்குடும்பத்தினருக்கு கவுன்சிலிங்கிற்கு ரூ.5000/- கட்டுவதற்கே பெரும்பாடாக இருக்கிறது. கவுன்சிலிங் என்பது மாணவ-மாணவியர்களுக்கு உபயோகமாக உள்ளதா அல்லது கான்வாசிங் போல செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகின்றது.

தனியார் பொறியியல் கல்லூரிகள் கூடுதலாக ஏன் சீட்டுகளை கொடுக்கவேண்டும்: இந்த ஆண்டு 2013 – கலந்தாய்வுக்கான ஒதுக்கீடு, தனியார் பொறியியல் கல்லூரிகள் சமர்பித்த இடங்கள் இவற்றின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால் காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்படியென்றால் அந்த 11,000 பேர்களுக்கு இடம் கொடுத்தால் ஒருவேலை சந்தோஷமாக சேர்ந்து படிப்பார்களோ என்னமோ? கலந்தாய்வுக்கு 1.75 லட்சம் ஒதுக்கீட்டு இடங்கள் போக சுமார் 25,000 இடங்களை தனியார் பொறியியல் கல்லூரிகள் கூடுதலாக சமர்ப்பித்துள்ளன. இவை அக்கல்லூரிக்களின் சாமர்த்தியத்தைப் பொறுத்து லட்சங்களுக்கு விற்று கோடிகளை அள்ளிவிடும், ஆனால், விலைபோகவில்லை என்பதனால் கொடுத்திருக்கிறர்களா என்று தெரியவில்லை.

கடந்த வருடம் 79,000 சீட்டுகள் காலி, இப்பொழுது 70,000 என்றால் சந்தோஷப் படவேண்டும்: முதல் நிலையில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அனைத்து இடங்களிலும் நிரம்பி விடும். ஆனால் 2-வது, 3-வது நிலைகளில் உள்ள கல்லூரிகளில் பல இடங்கள் நிரம்பாது என்பதால் அந்த கல்லூரிகள் பி.இ. கலந்தாய்வுக்கு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் சமர்ப்பிப்பதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு வசூலாகவில்லையா அல்லது மாணவ-மாணவியர்களுக்கு பொறியியல் படிப்பு கசந்து விட்டதா? கடந்த ஆண்டு கலந்தாய்வில் மொத்தம் 1.82 லட்சம் இடங்களில் 55,000 காலியிடங்கள் ஏற்பட்டன. இந்த ஆண்டு 2 லட்சம் இடங்களில் 70,000 இடங்கள் வரை காலியிடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது[3]. இப்படி தவறான விவரங்களைக் கொடுத்து ஏன் புலம்ப வேண்டும். இதே செய்தியை இணைதளங்கள் அப்படியே போட்டு வருகின்றன[4]. கடந்த வருடம் 79,000 சீட்டுகள் காலி, இப்பொழுது 70,000 என்றால் சந்தோஷப்படவேண்டும். மாணவ-மாணவியர்கள் வரவில்லை என்றால் அக்காரணங்களை அலசியாக வேண்டியுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் காலிகள் ஏற்படுவது ஏன்?: தமிழகத்தில் 2006லேயே இந்நிலை இருந்த போதிலும், வருடா வருடம் புதிய பொறியியல் கல்லூரிகள் தோன்றி வருகின்றன[5]. அரசியல் செல்வாக்கு முதலியவை இருப்பதால் அவற்றிற்கு அனுமதியும் கொடுக்கப்படுகின்றன[6]. இஞ்சினியங்கல்லூரி திறப்பது என்பது கோடிகளை போட்டு, கோடிகளை எடுக்க உதவும் மிகப்பெரிய வியாபாராமாகி விட்டது என்பதால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை[7]. கடந்த வருடத்தில் மொத்தம் இருந்த 2,62,164 சீட்டுகளில் 1,82,493 சீட்டுகள் தாம் நிரம்பின[8], அதாவது சுமார் 79,000 சீட்டுகள் – 30% மேல் காலி! வருடா வருடம் இக்கதை தொடர்கிறது[9].  இதில் கவின்சிலிங்கிற்கு வராமல் இருப்பவர், வந்த பிறகு சேராமல் இருப்பவர் என்ற கணக்கு எல்லாம் இருக்கிறது[10].  எத்தனையோ ஏழைக்குடும்பத்தினருக்கு கவுன்சிலிங்கிற்கு ரூ.5000/- கட்டுவதற்கே பெரும்பாடாக இருக்கிறது.

பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு,காலி இடங்களும் அதிகரிப்பு: கல்லூரிகளின் எண்ணிக்கைப் பெருகி வந்தாலும், பொறியியல் படிப்புகளை முறையாகச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் இல்லாமை, ஆசிரியர்களின் திறமையின்மை,  லாப்-வசதியின்மை அல்லது குறைவான வசதிகள் கொண்டநிலை, தொழிற்சாலை அனுபவமின்மை, முதலிய காரணங்களினால், இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன[11].

ஏதோ பிஏ டிகிரி போல பிஈ பிடெக் டிகிரியை வாங்கிக் கொண்டு வேலைக்கு வந்தால் வேலை கிடைக்காது: கவுன்சிலிங் முறை சரியில்லை என்றல் நுழைவு தேர்வு வைக்க வேண்டியதுதான் – அப்பொழுதுதான் உண்மையில் படிக்க விருப்பம் உள்ளவர்கள் சேருவார்கள். கல்வியை விற்கும் முறையும் சிறிது கட்டுப் படுத்தப்படும். ஏதோ பிஏ டிகிரி போல பிஈ/பிடெக் டிகிரியை வாங்கிக் கொண்டு வேலைக்கு வந்தால், ஒன்றும் தெரியால் முழிக்கிறார்கள். இன்டர்வியூவிலேயே அவர்களது நிலை வெளிப்பட்டு விடுகிறது. அந்தந்தத் துறைகளில் அனுபம் உள்ளவர்கள், மாணவ-மாணவியர்களைக் கேள்விகள் கேட்கும் போது குட்டு வெளிப்பட்டு விடுகிறது. சிவில், மெக்கானிகல், எலக்ட்ரானிஸ் என்று எத்துறைப் படித்தாலும் அடிப்படை விஷயங்களே தெரியாமல் இருப்பது வெளிப்படுகிறது. ஆகையால் லட்சங்களைக் கொட்டி அத்தகைய டிகிரியை வாங்குவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

வேதபிரகாஷ்

© 03-07-2013


[2] Statistics for the first ten days of single window admissions at TNEA 2012 shows that roughly one-fifth of the students called for counselling remained absent. As on Friday, 45,977 students were called for counselling, of whom 36,019 students were allotted seats and 9,783 students, i.e. 21.28 per cent, were absent. Roughly, 700-odd students are absent on any day of counselling.

[10] Statistics for the first ten days of single window admissions at TNEA 2012 shows that roughly one-fifth of the students called for counselling remained absent. As on Friday, 45,977 students were called for counselling, of whom 36,019 students were allotted seats and 9,783 students, i.e. 21.28 per cent, were absent. Roughly, 700-odd students are absent on any day of counselling.