Archive for the ‘கட்டுரை’ Category

பொறியியல் கல்லூரிகளின் தரம், போதிக்கும் திறன் மற்றும் கட்டுமானம் முதலியவற்றைப் பற்றி, ஏன் விவரங்கள் மறைக்கப் படுகின்றன?

திசெம்பர் 18, 2023

பொறியியல் கல்லூரிகளின் தரம், போதிக்கும் திறன் மற்றும் கட்டுமானம் முதலியவற்றைப் பற்றி, ஏன் விவரங்கள் மறைக்கப் படுகின்றன?

கல்லூரிகளில் முதலீடு செய்பவர்கள் ஏன் தரத்தைப் பற்றி கவலைப் படுவதில்லை?: பொறியியல் கல்லூரிகளின் தரம், போதிக்கும் திறன் மற்றும் கட்டுமானம் முதலியவற்றைப் பற்றி, கடந்த 25 வருடங்களாக, நிறைய விசயங்கள் அலசப் பட்டு, எடுத்துக் காட்டியாகி விட்டது. பணத்தை கோடிகளில் போட்டு, கோடிகளில் அள்ள வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், நிறைய கல்லூரிகள் உருவாக்கப் படுகின்றன. அரசியல்வாதிகள் தமது பணத்தை முதலீடு செய்வது போல இத்தகைய கல்லூரிகளை உருவாக்கி வருகிறார்கள். ஆனால், தேவையான கட்டுமானங்கள், சோதனைக் கூடங்கள், ஒவ்வொரு பாடத்தையும் போதிக்க தகுதியான ஞானம் கொண்ட ஆசிரியர்கள் என்றெல்லாம் இல்லாமலேயே இவர்கள் கல்லூரிகளை ஆரம்பிக்கிறார்கள். இதனால், கல்லூரிகளில் வகுப்பறைகள் இல்லை, ஆசிரியர்கள் இல்லை, சோதனைக் கூடங்கள் இல்லை என்று தரமற்ற முறையில்  மாணவ-மாணவியரை ஏமாற்றி வருகிறார்கள்.

இதில் எந்த மாடல் பின்பற்றப் படுகிறது?: அட்மிசன் நேரத்தில் டொனேஷன் வாங்கி. கோடிகளை வசூலித்து, அதன் மூலம் கொஞ்சம்-கொஞ்சமாகக் கட்டலாம் போன்ற திட்டங்களுடனும் ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் –ஜேப்பியார், பச்சமுத்து [பாரிவேந்தர்], ஏ.சி.சண்முகம் இதர மைனாரிடி மாடல்களை பின்பற்ற முயல்கிறார்கள். அவர்கள் எல்லாம் மாட்டிக் கொண்டாலும், ஒரு நிலையில் தரத்தை உயர்த்திக் கொண்டார்கள், நிலைத்து நிற்கிறார்கள். ஆனால், வெறுங்கையால் முழம் போடலாம் என்ற எண்ணங்களுடம்-திட்டங்களுடன் செயல்படுகிறவர்கள், எந்த தரமுமில்லாமல், மாணவ-மாணவியரை ஏமாற்றி வருகிறார்கள். பல குடும்பங்களை நாசமாக்கி வருகிறார்கள். ஏனெனில், அவர்களது பெற்றோர் வீட்டை, நிலத்தை, சொத்தை விற்று தமது குழந்தைகளை படிக்க ஆசைப் பட்டு லஞ்சங்களில் பணத்தைக் கொடுக்கிறார்கள். ஆனால், இந்த முதலைகள் அப்படியே முழுங்கி ஏப்பமிட்டு வருகின்றன..

44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை: தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும், 35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது என்றும் வெளியாகி இருக்கும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[1], என்று ஊடகத்தினர் குறிப்பிட்டாலும், கடந்த 20-30 ஆண்டுகளாக நடந்து வரும் செயல்பாடுகளிலிருந்து, அவற்றிற்கு உண்மை நிலை தெரிந்து தான் இருக்கும். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளார்[2], என்று குறிப்பிட்டாலும், அவை வெளியிடப் படவில்ல. ‘தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான  கவுன்சிலிங்கில்  44 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை[3].  35 கல்லூரியில் ஒற்றை இலக்கங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்க்க நடந்துள்ளது[4]. ஆக மொத்தம் 75 கல்லூரிகளில் நிலைமை இப்படியுள்ளது. ஒரு மாணவர் கூட சேராத கல்லூரிகள் மற்றும் குறைவாக மாணவர்கள் உள்ள கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கங்களை பெற்றிருக்கிறோம்[5]. ஏற்கெனவே கடந்த ஆண்டுகளிலும் இதே நிலைதான் இருந்து வந்தது. பிறகு, அதே கல்லூரிகள் மறுபடியும் கவுன்சிலிங்கிற்கு எப்படி அனுமட்தி கொடுக்கப் பட்டது என்பதையும் கவனிக்கலாம். தற்போது நேரில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது[6]. இதுவரை நடக்கவில்லையா, பார்க்காமலேயே அனுமதி கொடுக்கப் பட்டதா போன்ற கேள்விகளும் எழுகின்றன.

2022 நிலை தான் 2023லும் தொடர்கிறது: மேலும் எங்களுக்கு திருப்தி அளிக்காவிட்டால் வரும் கல்வி ஆண்டில் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முற்றிலுமாக நிறுத்தப்படும்’ என்று வேல்ராஜ் கூறியுள்ளார்[7]. அதாவது இந்த கல்வியாண்டு 2023-24க்கு அனுமதி உண்டு என்றாகிறது. பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருவதாக காரணம் கூறப்படுகிறது[8].  இதுவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியதாகிறது. கல்லூரிகளில் வசதி இல்லை என்பதாலா அல்லது, படித்தும் வேலை கிடைக்கவில்லை, சரியான சம்பளம் இல்லை போன்ற காரணங்களால், அவ்வாறு நடைபெறுகிறதா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது. இன்னொரு பக்கம் கல்லூரி என்ற பெயரில் எந்த விதமான வசதியும் இல்லாமல் வெறுமனே கட்டிடங்களையும் வைத்திருக்கும்  கல்லூரிகளில் தான் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது[9]. பிறகு, அத்தகைய “கல்லூரிகளுக்கு” எப்படி அனுமதி கொடுத்து, அங்கீகாரம் கொடுக்கப் பட்டது என்பதையும் கவனிக்கலாம். ஆக, அந்த உண்மையும் தெரிந்து தான் உள்ளது[10].

75,000, 65,000 என்று சீட்டுகள் எப்படி காலியாக இருக்க முடியும்?: பொறியியல் படிப்புகள் சேர்க்கைக்கு பொதுப் பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 28 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெற்றது. இதையடுத்து துணை கலந்தாய்வு மூலம் காலியான இடங்கள் நிரப்பப்பட்டன. ஒட்டு மொத்தமாக 440 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,60,780 இடங்களில் 54,000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன[11]. மூன்று சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு, 95,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைத்தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 84,812ஆக இருந்தது[12]. ஆக 2022ல் 75,968 மற்றும் 2023ல் 65,780 இடங்கள் காலியாக இருக்கின்றன என்று தெரிகிறது. பிறகு, இது யார் குற்றம் என்று சொல்ல வேண்டியுளளது. படிக்க ஆசையுள்ள மாணவ-மாணவியருக்கு மார்க் உள்ள போதும், சீட் கிடைக்கவில்லை என்ற என்ன காரணம் என்று சொல்லியே ஆகவேண்டும்.

அந்த 79 கல்லூரிகள் எவை, விவரங்கள் என்ன?[13]: உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும்[14], 35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன[15]. ஏன் பெயர்கள்-விவரங்கள் குற்ப்பிடப் படவில்லை?[16]

  1. அந்த 44 பொறியியல் கல்லூரிகள் எவை?
  2. அந்த  35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது என்றால் அவை எவை?
  3. அவற்றின் பெயர்கள் ஏன் குறிப்பிடப் படவில்லை.
  4. லட்சங்களில் பீஸ் / கட்டணம் என்றெல்லாம் செலவழித்துப் படிக்க வைக்கும் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப் பட வேண்டிய அவசியம் உள்ளது.
  5. கல்வியில் நிச்சயம் மோசடிகள் இருக்கக் கூடாது.
  6. கல்வியில் மோசடி, ஊழல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

© வேதபிரகாஷ்

18-12-2023


[1] காமதேனு, 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லைதுணைவேந்தர் சொன்ன அதிர்ச்சி தகவல்!, Updated on: 17 Dec 2023, 11:15 am

[2] https://kamadenu.hindutamil.in/education/not-a-single-student-got-admission-in-44-engineering-colleges

[3] தினத்தந்தி, தமிழகத்தில் 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லைஅண்ணா பல்கலை. துணைவேந்தர் பேட்டி, டிசம்பர் 16, 5:45 pm

[4] https://www.dailythanthi.com/News/State/out-of-44-engineering-colleges-in-tamil-nadu-not-a-single-student-got-admission-anna-university-vice-chancellor-interview-1086377

[5] தினகரன், தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை: அண்ணா பல்கலை. துணைவேந்தர் பேட்டி, December 16, 2023, 6:28 pm..

[6] https://www.dinakaran.com/tamilnadu_college__engineering_student_affairs_anna_university/ – google_vignette

[7] தமிழ்.வெப்.துனியா, 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.. தமிழகத்திற்கு வந்த சோதனை..!, Written By Mahendran Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (17:17 IST).

[8] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/no-students-in-44-engineering-college-at-tamilnadu-123121600068_1.html

[9] செய்திபுனல், 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லைவெளியான பகீர் தகவல்!,

[10] https://www.seithipunal.com/tamilnadu/single-students-not-joined-in-44-colleges

[11] தீக்கதிர், 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை, நமது நிருபர் டிசம்பர் 18, 2023

[12]https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/not-a-single-student-got-admission-in-44-engineering-colleges

[13] நியூஸ்.தமிழ், “44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை” – அண்ணா பல்கலைகழக  துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் பேட்டி..!, by Web EditorDecember 17, 2023.

[14] https://news7tamil.live/in-44-engineering-colleges-not-a-single-student-joined-anna-university-vice-chancellor-r-velraj-interview.html – google_vignette

[15] பத்திரிக்கை.காம், ஒரு மாணவர் கூட சேராத 44 தமிழக பொறியியல் கல்லூரிகள், DEC 16, 2023.

[16] https://patrikai.com/in-44-tn-egg-colleges-not-even-a-single-student-admitted/

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! அரசியல்வாதிகளின் பேச்சுகள்! (2)

ஜூலை 24, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! அரசியல்வாதிகளின் பேச்சுகள்! (2)

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-public-lecture-political.jpg

உள்ளூர் அறிஞர்கள் கௌரவிக்கப் பட்டனர்: முதல் நாளில், மலேசியாவில் குழந்தை இலக்கியம் என்ற தலைப்பில் பாப்பாவின் காவலர் கவிஞர் முரசு நெடுமாறன் உரையாற்றினார். குறிப்பாக பள்ளி குழந்தைகளிடையே கவிதை மூலம் எப்படி தமிழை வளர்த்திருக்கிறோம் என்பதை அழகாக எடுத்துரைத்தார்[1]. கவிஞர் முரசு நெடுமாறன், சிலாங்கூர் மாநில முன்னாள் க. முருகன் ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பிக்கப் பட்டனர். மலேசியாவைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் இராஜேந்திரன், மாநாட்டிற்கான செயலாளர் முனைவர் கிருஷ்ணன் மணியம் ஆகியோர் உட்பட பல பிரமுகர்களும் அரசு சார்பற்ற இயக்கங்களை சேர்ந்தவர்களும் மற்றும் பொது மக்களும் திரளாக வந்திருந்து சிறப்பித்தனர்[2]. உள்ளூர் ஊடகங்கள் இவற்றைப் பற்றி செய்திகள் வெளியிட்டுள்ளன. பிறகு பேசியவர்கள் தமிழ் இலக்கியம், வைணவம், சைவம் பற்றியெல்லாம் பேசினர். ஆனால், அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்த போது, மாநாட்டின் போக்கு திசைத் திரும்பியது எனலாம்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-thiruma-speaking-1.jpg

பிரிவினைவாதம் பேசப் பட்டது: மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள திருமாவளவன் பேசியதாவது[3]: மரபு சார்ந்த கலாச்சார உரிமைகளை பாதுகாக்க உலகத் தமிழ் மாநாடு முனையும். தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வலிமை வாய்ந்தது மாநாடு. தமிழ்த் தேசியம் என்பது மொழி, இன உணர்வு மட்டுமல்ல. அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டம் தமிழ்த் தேசியம். மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான். அவற்றைக் கடந்து தேசிய இனம் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மதம் அடையாளத்தை விட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது என்று கூறினார்[4]. இம் மாநாட்டின் பொது அரங்கில் மலேசிய நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்கு ‘வளர்ச்சி நோக்கில் தமிழ்’ எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முதல்நாள் மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-audience.jpg

கல்விசார், படிப்பு சம்பந்தப் பட்ட, ஆராய்ச்சி-கட்டுரைகள் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை: ஆய்வு அமர்வுகள், ஆய்வு கட்டுரைகள், விவரங்கள், வாசிப்புகள் பற்றிய செய்திகளைக் காணவில்லை. கல்விசார், படிப்பு சம்பந்தப் பட்ட, ஆராய்ச்சி-கட்டுரைகள் என்பது பற்றி மூச்சுக் கூட விட காணோம். மாநாட்டிற்குச் சென்றவர்களும், சமூக ஊடகங்களில் “நான் மாநாட்டிற்குச் சென்றேன்,” என்று புகைப்படங்கள் போட்டுக் கொண்டாலும், கட்டுரைப் படித்தேன், கேள்விகள் கேட்டார்கள், நான் பதில் சொன்னேன் என்றவாறு இல்லாமல், ஏதோ சுற்றுலா சென்றேன் பாணியில் தான் இருந்தது. ஆய்வுக்கட்டுரைகள் பற்றிய பட்டியல், தலைப்புகள், விவரங்களைக் காணோம் கலந்து கொண்டவர்களும் அவ்விவரங்களைப் பகிர்வதாகத் தெரியவில்லை. பெர்ணாம் என்ற இணைதளம் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலரின் வாசிப்புகள் தான் பதிவாகியுள்ளன (சைவம், வைணவம், சித்த மருத்துவம், பிள்ளைத் தமிழ், தோல்சீலை முதலியன).  சில கட்டுரைகள் நன்றாக இருந்தன. மற்றபடி, பெரும்பாலான மற்ற ஆய்வுக்கட்டுரைகள் அரைத்த மாவை அரைக்கும் என்பார்களே அந்த பாணியில் தான் இருந்தன.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia.more-politicians.2.jpg

அரசியல்வாதிகளை அழைத்து அரசியல் இல்லாமல் பேசுங்கள் என்று சொல்லப் பட்டது:. ஆனால், அவர்கள் எல்லோருமே அரசியல் தான் பேசினர், வீடியோவும் உள்ளது. அரசியல் மாநாடாக மாறிய நிலையில், தமிழ் தேசியம் போர்வையில், பிரிவினைவாதம் தான் பேசப்பட்டது. வேல்முருகன், தாமஸ், திருமாவளவன், ஶ்ரீகாந்த் [பீஜேபி], சுப.வீரபாண்டியன், நக்கீரன் கோபால், இலானி, நிறைமதி [சீனர்], கடைசியாக கே.வீரமணி, என்று அதிகமாக, அரசியல் தான் நிறைய பேசப்பட்டது. தமிழ் தேசியம், பார்ப்பனியம், வர்ணம், தமிழ்-சமஸ்கிருதம், சமஸ்கிருத ஆதிக்கம், ஆரியன்–திராவிடன் பண்பாட்டு படையெடுப்பு, என்றெல்லாம் பேசப் பட்டது. வெண்பா, ஆசிரியபா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பா முதலியவற்றிற்கு திரிபு விளக்கமும் கொடுக்கப் பட்டது. இதனால், தமிழுக்கு, தமிழ் ஆராய்ச்சிக்கு, தமிழ் மேன்பாட்டிற்கு எந்த பிரயோஜனும் இல்லை. பெரும்பாலான நேரம் இவ்வாறு அரசியல், பேசியதையே பேசியது, ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் என்று தான் சென்றது. ஊர் சுற்றிப் பார்க்க வந்தவர், அவரவர் வேலைகளுக்கு சென்றனர். சாப்பிடும் நேரதிற்கு வந்து விடுவர்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-velmurugan.jpg

மொழி, தேசம், தேசியம், நாடு, ஒன்றியம் என்று குழப்பவாதங்களை வைக்கும் குழப்பவாதிகள்: வேல்முருகன் தமிழ் தேசியம் என்று, பிரிவினைவாதம் பேசியது வேடிக்கையாக இருந்தது. முன்பு, கம்யூனிஸவாதிகள், பிறகு தமிழீழ ஆதரவாளர்கள், அதற்கும் பிறகு தமிழக பிரிவினைவாதிகள், மொழியை வைத்து, மொழிவாறான தேசிய இனங்கள் என்று பேசி குழப்பி வந்தார்கள். அதாவது ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தேசம் உள்ளது, அந்தமொழிவாரி தேசம் போற்றப் பட வேண்டும். அந்த தேசியம், இந்திய தேசியம் வேறு. எப்படி பலமொழி பேசும் தேசியங்கள், இந்திய நாட்டில் ஒன்றியத்தில் சேர்ந்திருக்கின்றனவோ, அதே போல சுயநிர்ணய உரிமையோடு, ஒவ்வொரு தேசமும் பிரிய உரிமை உண்டு என்றெல்லாம் குழப்பவாதங்களில் ஈடுபட்டனர். நாடு, தேசம், தேயம், இடம் போன்ற சொற்கள், ஒரு இடத்தைத் தான் குறிப்பிட்டன. அதை அறிந்தும் இவர்கள் திரிபுவாதம் செய்து வருகிறார்கள். அவையெல்லாம் கருணாநிதி போன்றோரே அடக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. இப்பொழுது, மறுபடியும் திமுக ஒன்றியம், திராவிட மாடல், திராவிட ஸ்டாக் என்றெல்லாம் பேசி வருவதால், இந்த குழப்பவாதிகளுக்கு தைரியம் வந்து, அவ்வாறே முன்பு போல, பிரிவினைவாதம் பேச ஆரம்பித்து விட்டனர். ஆக இந்து வேல்முருகன் போன்றோருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-srikanth.jpg

வலதுசாரிகளின் பலவீனம், ஒற்றுமையின்மை மற்றும் பழமைவாதம்: ஶ்ரீகாந்த் என்ற பிஜேபி இந்தியதேசத்துடன் பேசினாலும், மற்றவர்கள் கொஞ்சம் பேசினாலும், எடுபடவில்லை. இவரும் கி.ஆ.பே.வின் பெயரன் என்ற முறையில் இருக்கிறார். நக்கீரன் கோபாலுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். இடதுசாரிகள், திக-திமுகவினர் ஒன்றாக வந்திருந்த நிலையில், வலதுசாரிக்கள் இங்கு வாய்கிழிய பேசினாலும், அங்கு யாரையும் காணோம். “இந்திய தேசியமும், தமிழ் தேசியமும்” என்று பேசி, அவர்களின் முகத்திரையைக் கிழிக்க ஆளில்லை; “தமிழ் தேசியமும், திராவிட தேசியமும்,” என்று கட்டுரை வாசிக்கவும் திராணி இல்லை. ஆனால், இங்கு, திராவிட மாயை, பெரியாரின் ம்ச்றுபக்கம் என்றெல்லாம் பேசுவார்கள், எழுதுவார்கள், புத்தகங்களும் போடுவார்கள். ”முகநூலில் கம்பு சுற்றுவதோடு சரி, இம்மாதிரியான, கருத்துருவாக்கும், தாக்கம் கொண்ட அல்லது ஏற்படுத்தும் கருத்தரங்களில் கலந்து கொள்வதில்லை.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-srikanth-next-to-gopal.jpg

வலது சாரிகளின் ரகசிய கருத்தரங்கங்கள்: மத்திய அரசு ஆதரவு மற்றும் நிதியுதவியுடன் நடத்தப் படும் கருத்தரங்கங்கள், மாநாடுகள் என்று இவர்களே கலந்து கொண்டு, குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இலக்கிய விழா என்று கொண்டாட ஆரம்பித்தாலும், ஏதோ ரகசியமாக நடத்துவது போல நடத்துகிறார்கள்[5]. எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லை. சுமார் 50-100 என்றிருந்தால், அவர்களுக்குள் அகிர்ந்து கொண்டு, கூடி விலம்பரப் படுத்திக் கொள்கிறார்கள். மற்ற படி, பொது ஊடகங்களில் அதைப் பற்றி எந்த தகவலும் வருவதில்லை. இதனால், லட்சக்கணக்கில் பணம் செலவழித்தாலும், சித்தாந்த ரீதியில் ஆட்களுக்கு பயிறிசி அளிப்பதில்லை, தயார் செய்வதும் இல்லை. அனுபவம் கொண்ட, ஆராய்ச்சியாளர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. தெரிந்தும் ஓரங்கட்டுகிறார்கள் இதனால் தான், தங்களது பலத்தையுமிழந்து, எதிர்சித்தாந்திகளின் பலத்தை மறைமுகமாக வளர்க்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

24-07-2023


இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-senator-saraswati.jpg

[1] வணக்கம் மலேசியா, பேராளர்கள்பார்வையாளர்கள்திரளாககலந்துகொண்ட 11-வதுஉலகத்தமிழாராய்ச்சிமாநாடு, 21-07-2023.

[2]https://vanakkammalaysia.com.my/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/

[3] நியூஸ்7தமிழ், தேசியஇனஅடையாளத்தைவலுப்படுத்தவேண்டும்! – உலகமலேசியதமிழ்மாநாட்டில்தொல்.திருமாவளவன்பேச்சு!, by Web EditorJuly 21, 2023

[4] https://news7tamil.live/even-if-divided-by-politics-religion-and-cultural-identities-the-national-identity-should-be-strengthened-thol-thirumavalavan.html

[5]  பாண்டி-லிட்-பெஸ்ட் என்றெல்லாம் நடத்துகிறார்கள், ஆனால், விவரங்கள் தெரிவதில்லை. அவர்களுக்கே தெரியாத அளவில் கூட நடக்கிறது.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-vips.jpg



11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது–அதன் ஆராய்ச்சி நிலைப் பற்றிய விவரங்கள் (7)

ஜூலை 11, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது அதன் ஆராய்ச்சி நிலைப் பற்றிய விவரங்கள் (7)

இரும்பு காலம் பற்றிய கருத்து: ஆய்வரங்கத்தின் முதல் அமர்வில், புதுச்சேரி பல்கலை பேராசிரியர் ராஜன் பேசியதாவது[1]: “இந்தியா முழுக்க பிராகிருத மொழி பயன்பாட்டிற்கு வந்தது. அதற்கு முன், தமிழகத்தில் தமிழி எழுத்துகள் புழக்கத்தில் இருந்தன. அதனால்தான், தமிழகத்தில் பிராகிருத கல்வெட்டுகள் இல்லை. தமிழர்களின் வரலாற்றை முழுமையாக சொல்ல முடியாது. காரணம், சங்க இலக்கியத்தில் அனைத்து கூறுகளும் சொல்லப்படவில்லை. அகழாய்வில் பயன்படா பொருட்களே அதிகளவில் கிடைக்கின்றன. கல்வெட்டு, காசுகளும், பொதுமக்களின் வாழ்வியலை முழுமையாக சொல்லவில்லை. என்றாலும், உலகின் முன்னேறிய சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததை, இந்த ஆய்வுகளால் அறிய முடிகிறது. தமிழகத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கடல்வழி வணிகம் சிறந்திருந்தது. இங்கு, எழுத்தறிவு மிக்க சமூகம் வாழ்ந்திருந்தது. நெல்லை நாற்றுவிட்டு நடும் பழக்கம், 2,700 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. இவற்றைவிட முக்கியமாக, உலகத்திற்கே இரும்பை அறிமுகம் செய்தவன் தமிழனாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரம், மேட்டூர் அருகே உள்ள தெலுங்கன்குடியில் கிடைத்த இரும்பு வாள் நிரூபித்துள்ளது. அதாவது, சிந்துவெளியில் செம்பை பயன்படுத்திய காலத்தில், தமிழர்கள் இரும்பை பயன்படுத்தி உள்ளனர். அதற்கான தரவுகளை சேகரிக்கும் வகையில், சிந்துவெளி மற்றும் தமிழ் நிலத்தில் கிடைத்துள்ள குறியீடுகளை ஆய்வு செய்து வருகிறோம்,” இவ்வாறு அவர் பேசினார்[2].

அரைத்த மாவை அரைக்கும் பாணியில் ஆய்வுக்கட்டுரைகள்: பட்டியலிடப்பட்ட தாள்கள் தாள்களின் தரத்தை வெளிப்படுத்தின. பெரும்பாலான தாள்கள் மறுவடிவமைக்கும் வகையைச் சேர்ந்தவை, அதே விஷயங்களை மீண்டும் மீண்டும் அரைத்த மாவை அரைக்கும் பாணியில் கூறுகின்றன.

  • தொல்காப்பியர் நோக்கில் வள்ளுவம்
  • திருக்குறள், திருவள்ளுவர் முதலியன… – தற்போதைய வாழ்க்கை முறைக்கான நடைமுறை வழிகாட்டி, இது போன்ற திருக்குறள் பற்றிய பல ஆவணங்கள்.
  • தனிநாயகம் பிள்ளை……
  • தமிழை விரைவாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்வது எப்படி
  • திரு.வி.கல்யாணசுந்தரனார், மயிலை சீனி வேங்கடசாமி (அவர் மீது பல ஆவணங்கள்) முதலியன,
  • சங்க இலக்கியம்……..பற்றி…
  • சிலப்பதிகாரம் பற்றி – பல தாள்கள்
  • சங்க இலக்கியம்
  • சித்த, சித்த மருத்துவம்

இதில் புதியதாக எந்த விசயத்தையும்சொல்ல காணோம்.

எப்படியாவது ஒரு ஆய்வுக்கட்டுரையை கொடுத்தே ஆகவேண்டும் என்ற வெறியில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் படுகின்றன: ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுப்பது, தலைப்பை ஆராய்ச்சி செய்தல், திட்டமிடல் மற்றும் எழுதுதல் என்பது இல்லை. வலைத்தளங்கள், கல்வி கட்டுரைகள், புத்தகங்கள், கலைக்களஞ்சியம், நேர்காணல்கள், இணையத்தில் தனிப்பட்ட கட்டுரைகள் (வலைப்பதிவுகள்) என்பதெல்லாம் இல்லாமல், “கட்-அன்ட்-பேஸ்ட்” முறையிலேயே செல்கின்றனர். கட்டுரையின் வடிவத்தில் தர்க்கரீதியான விமர்சன வாதங்களை முன்வைப்பதில்லை, தீர்மானமாக முடிவை வைத்துக் கொண்டு இந்த வேலை நடக்கிறது. பகுப்பாய்வு கட்டுரைகள், என்று சொல்லிக் கொண்டாலும், எந்த ஒரு முக்கியமான பிரச்சினையில் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொண்டு வரும் போக்கில் விசயங்களைச் சொவ்தில்லை. ஆராய்ச்சியின் பொருள் சர்ச்சைக்குரியதாக இருப்பதும் இல்லை, அந்த அளவுக்கு கஷ்டப்படுவதும் இல்லை, உழைப்புடன் முனைவதும் இல்லை. சொந்த கருத்துக்களைத் தெரிவித்து, ஆதாரங்களுடன் எழுதும் கட்டுரையாளர்கள் சிலரே. நேரடி மேற்கோள்கள், நீண்ட மேற்கோள்களைத் தவிர்க்காமல், அவற்றை அவ்வாறே எடுத்தாள்கின்றனர்.

எந்த ஆராய்ச்சிநெறிமுறையும் பின்பற்றப் படுவதில்லை: இப்பொழுதைய ஆராய்ச்சிநெறிமுறை, தரக்கட்டுப்பாடு, விதிகள், மென்பொருளால் சரிபார்க்கும்முறை முதலியவற்றை வைத்து சரிபார்த்தால், எத்தனை ஒழுங்கானவை என்று தீர்வாகும் என்பதும் நோக்கத் தக்கது. இருப்பினும், இவர்கள் தலைப்புகளை மாற்றி, சில வர்களை வெட்டி-ஒட்டி கட்டுரை என்று தயாரித்து, வாசிக்க வந்து விடுகின்றனர். கட்டுரைகளை தேர்வு செய்பவர்களும் எந்த தரத்தையும் சரிபார்ப்பதில்லை, தெரிந்தவர்களா, நண்பர்கள் பரிந்துரைத்தார்களா என்று பார்த்து தேர்வு செய்கிறார்கள். அவர்களே ஒப்புக் கொண்டபடி, பெயர்களை வைத்துக் கொண்டு கூட, சில கட்டுரைகளை ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.

09-07-2023 அன்று அவசரஅவசரமாக முடிந்த மாநாடு: குதிரை முன் வண்டிகல்வி அமர்வுகள் நிறைவடையும் முன் விழா நடைபெற்றது: ஆய்வுக்கட்டுரை அமர்வுகள் முடிவடைவதற்கு முன்பு நிறைவு விழா நடைபெற்றது. ஜூலை 9 ஆம் தேதி, ஆய்வுக் கட்டுரை வழங்குபவர்கள் தங்கள் நிலையைக் கேட்டறிந்து காத்துக் கொண்டிருந்தனர், காலை 9.00 மணி முதல் அறைகள் காலியாக இருந்ததாலும், யாரும் சரியாக பதிலளிக்காததாலும், ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கரவர்கள் சென்று வந்து கொண்டிருந்தனர். ஆய்வுக்கட்டுரை வாசிப்பு / கல்வி அமர்வுகள் குறித்து முற்றிலும் குழப்பம் ஏற்பட்டது. பின்னர், முதலில் பாராட்டு விழா நடைபெறும் என்றும், பின்னர் காலை 10.30 மணி 11 மணிக்கு தாள் வாசிப்பு நிகழ்ச்சி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சாளர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தனர், நேரம் கடந்துவிட்டதால் ஆய்வுக்கட்டுரை வழங்குபவர்கள் கவலையடைந்தனர். பின்னர், பிரிவுத் தலைவர்கள் அறைகளுக்குச் சென்று அமர்வுகளைத் தொடங்க ஆரம்பித்தனர். துரதிர்ஷ்டவசமாக, இந்த முரண்பாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் வாசிப்பவர்களுக்கு 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதித்தனர். மேலும், 10-15 நபர்கள் இல்லை, அவர்களில் பெரும்பாலோர் கட்டுரை வழங்குபவர்களாக இருந்தனர். வழக்கம் போல கட்டுரை வாசிப்பவர் ஆசிட்டுவிட்டு போய்விட்டார்கள்.. நிச்சயமாக, அமர்வுகளைத் தொடங்க அமைப்பாளர்கள் மற்றும் பிரிவுத் தலைவர்கள் தரப்பில் இரண்டு மணி நேரம் ஏற்கெனவே தாமதம் ஏற்பட்டது. எப்படியோ, பேப்பர் வாசிப்பு அமர்வுகள் முடிந்து, மதிய உணவுக்குப் பிறகு பிரதிநிதிகள் நகரத் தொடங்கினர். இதனால், மூன்று நாள் சர்வதேச தமிழ் மாநாடு மேலே விவரிக்கப்பட்டபடி இரண்டரை நாட்களில் முடிக்கப்பட்டது.

மலேசியாவின் போட்டியாளர் கூற்று: சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில், கடந்த 7, 8, 9ம் தேதிகளில், உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சார்பில், 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தது[3]. அடுத்த மாநாட்டை, 2025ல் சிங்கப்பூரில் நடத்த திட்டமிட்டுள்ளனர்[4]. 1968ல் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற 2வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை விட, 11வது மாநாடு செம்மஞ்சேரியில் உள்ள ஆசிய ஆய்வுக் கழகத்தில் ஒரு கல்வி நிகழ்வாக நடைபெற்றது, என்று பொன்னவைக்கொ தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், ஏதோ நடத்த வேண்டுமே என்று நடத்தியாகி விட்டது. இதே ஜூலையில் இரண்டாவது சந்திப்பு. பெரும் ஆரவாரத்துடனும், பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்புடனும் நடைபெறும் என்று சொல்லப் படுகிறது. இந்த மாநாட்டுக்கு மாநில அரசிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஐஏடிஆர் உறுப்பினர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த அரசர் அருளாளரையும் அதிபராகத் தேர்ந்தெடுத்தனர். இதற்கிடையில், 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் ஜூலை 21 முதல் 23 வரை நடைபெறும் என பேராசிரியர் டி.மாரிமுத்து தலைமையிலான மற்றொரு குழு அறிவித்துள்ளது. அவர் இணைய யுகத்தில் தமிழ் மொழி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இதில் கவனம் செலுத்தப்படும் என்கிறார்.

© வேதபிரகாஷ்

11-07-2023

.


[1] தினமலர், சிந்துவெளி காலத்திலேயே இரும்பு பயன்பாட்டில் இருந்தது, பதிவு செய்த நாள்: ஜூலை 08,2023 01:54.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3369634

[3] தினமலர், நிறைவு பெற்றது உலக தமிழாராய்ச்சி மாநாடு, Added : ஜூலை 11, 2023  04:37

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3372482

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது–அதன் நிலைப் பற்றிய விவரங்கள் (6)

ஜூலை 11, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது அதன் நிலைப் பற்றிய விவரங்கள் (6)

அதிரடிகளுடன் ஆரம்பித்து அமைதியாக முடிந்த மாநாடு: சென்னையில் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி 3 நாட்கள் மாநாடு 7ம்தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. நடக்கிறது. இதில், 20 நாடுகளிலிருந்து 200 தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்றதாக சொல்லப் படுகிறது. ஆனால், வந்துள்ளவர்கள் ஏற்கெனவே பரிச்சயம் ஆனவர்கள் தாம். ஏதோ சுற்றுலாவுக்கு வந்தது போல வந்துள்ளனர்.. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் இதுவரை 10 மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் 7ம்தேதி தொடங்கி 9ம் தேதி வரை சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடக்கிறது. இது தொடர்பாக உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மு.பொன்னவைக்கோ, துணைத் தலைவர் இ.சுந்தரமூர்த்தி, மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜி. ஜான்சாமுவேல், பொதுச் செயலாளர் உலகநாயகி பழனி ஆகியோர் சென்னை பல்கலைக்கழகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது[1]: “மாநாட்டை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு..ஸ்டாலினிடம் அனுமதி கேட்டுள்ளோம். ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம்.மாநாட்டின் நிறைவு நாளில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன,” இவ்வாறு அவர்கள் கூறினர்[2]. ஆனால், முதலமைச்சர் வரவில்லை. பொதுவாக, இந்த மாநாடு நடப்பதே தெரியாமல் தான் இருக்கிறது.

ஆய்வுக்கட்டுரை வாசிப்பு பற்றிய விவரணம்: வழக்கம் போல[3], “உலகமெல்லாம் தமிழோசை பரவ வேண்டும் என்பது இந்த மாநாட்டின் மையப்பொருளாக உள்ளது. தமிழ்மொழி, இலக்கியம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டில், இந்தியாவில் இருந்து மட்டுமின்றி ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் பங்கேற்கின்றனர். தமிழின் தொன்மை, தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம், தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல், சமூகவியல், மொழி பெயர்ப்பியல், மொழியியல் என பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர். மொத்தம் 200 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. மாநாட்டில் புத்தகக் கண்காட்சி, நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மு.பொன்ன வைக்கோ, துணைத் தலைவர் .சுந்தரமூர்த்தி, மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜி.ஜான்சாமுவேல், பொதுச் செயலாளர் உலகநாயகி பழனி, டாக்டர் பத்மினி உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்,” என்று ஊடகங்களுக்குக் கொடுக்கப் பட்ட குறிப்பு கூறுகிறது[4].

பொன்.வைகோமாரிமுத்து பிரச்சினை: பொன்.வைகோ-மாரிமுத்து பிரச்சினை இன்னும் முடிந்த பாடில்லை போலிருக்கிறது[5]. “2019ல் சிகாகோவில் நடந்த 10வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது, நான் ஐஏடிஆர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், முந்தைய தலைவர் மாரிமுத்து தான் தலைவர் என்று கூறிக்கொண்டு மாநாட்டை நடத்த முயற்சிக்கிறார். அது செல்லாத ஒன்றாக இருக்கும்,” என்று பொன்னவைக்கோ மேலும் கூறினார்[6]. ஆக இங்கும் பதவி-போட்டி முதலியன இருக்கிறது போலும். இருப்பினும், இம்மாநாடு சிக்கல்களுடன், முராபாடுகளுடன் தான் நடக்கிறது. ஏற்கெனவே, ஜான் சாமுவேலுக்கும, ஜான் ஜேக்கப் என்பவருக்கும் பிர்ச்சினை இருக்கிறது[7]. சென்னையைச் சேர்ந்த, தாம்சன் ஜேக்கப் என்பவர், “பல குற்றங்களில் சிக்கியுள்ள ஜான் சாமுவேல் எப்படி இம்மாநாட்டை நடத்த முடியும்,” என்று சென்னை பல்கலை துணைவேந்தருக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்[8]. இதைப் பற்றியெல்லாம் தனியாக ஏற்கெனவே விளக்கி பிளாக் போட்டுள்ளேன். இப்படி, எல்லா நிலைகளிலும் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, கல்வி-நெறிமுறை, ஆராய்ச்சி முதலிய கோணங்களில் இவர்களால் எப்படிகவனத்தைச் செல்லுத்த முடியும். மேலும் கூட அரசியலையும் வைத்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

07-07-2023 – அரசியல்வாதிகள் அரசியல் பேசியது: துவக்க விழாவில், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், ”பைபிளில் வரும், சங்கீதக்காரர்களின் பண்புகள், தமிழர்களின் பண்புகளுடன் ஒத்து போகின்றன. எழுத்தாளர் டால்ஸ்டாய் தமிழ் மொழியை நேசித்தார். ”மதம் பரப்ப வந்த கிறிஸ்துவர்கள் கூட, தமிழை படித்து, வியந்து, தமிழுக்காக தொண்டு செய்துள்ளனர்,” என்றார். இவர் இப்படி ஏதோ கிருத்துவ பிரசங்கி போல பேசியது, பலருக்கு திகைப்பாக இருந்தது. பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஆர்.என். ‘சிலர்’ தமிழ் மொழியின் பெருமையை இழிவுபடுத்துகின்றனர் என்று ரவி முதலியோரையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் தமிழை போற்றுவது போல, தூற்றுகிறார்கள் என்றார். “தமிழ் மொழிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தமிழ் மொழியை சொந்தம் கொண்டாடுவதும், தமிழ் மொழிக்கு ஆதரவாக உயிர் தியாகம் செய்தவர்களை இழிவு படுத்துவதும் மாற்றுக் கருத்துகளை கூறி, இது போன்ற மாநாடுகள் (உலகத் தமிழாராய்ச்சி) அவசியம். இதுபோன்ற சதிகாரர்களிடம் இருந்து தமிழ் மொழியைக் காக்க மாநாடு நடத்தப்படும்” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அழைப்பிதழ்-1

மோடி எதிர்ப்பு- முதலியன இம்மாநாட்டிற்குத் தேவையா?: இரண்டு வருடங்களாக சண்டை, சச்சரவு, முரண்பட்ட அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரை சேகரிப்பு, பறிப்பு, முதலியன நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ்-என்ற பெயரில் மொழிப்பற்றையும் தாண்டிய நிலையில் செயல்பட்டு, பல ஆய்வுக் கட்டுரைகள் நிராகரிக்கப் பட்டன. ஆராய்ச்சி நெறிமுறை, தரம் எல்லாம் காற்றில் பறக்க விடப் பட்டன. முதலில் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டு, முழுகட்டுரையும் பெறப் பட்டு, பிறகு, “நேரமில்லை” என்று நிராகரிக்கப் பட்டுள்ளன. ஆனால், இந்த மூன்று நாட்களில் வாசிக்கப் பட்ட பெரும்பான்மையான கட்டுரைகளில் விசயமே இல்லாமல், அரைத்த மாவையே அரைத்துள்ளார்கள். இதற்குத் தான் இவ்வாளவு ஆர்பாட்டம் செய்துள்ளர்கள். போதாகுறைக்கு மைனாரிட்டி மந்திரி, கமிட்டி உறுப்பினர் என்றெல்லாம் அழைக்கப் பட்டு, அவர்கள் பிரதமந்திரி-கவர்னர் பற்றி பேசி, அரசியலாக்கினர். மாநாட்டின் தன்மையினையே கெடுத்தனர் எனலாம். இருப்பினும், மத அடிப்படைவாதியான ஜான் சாமுவேல் போன்றோர் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. இத்தகைய அரசியலால் இவர்களுக்கு என்ன பயன் கிட்டப் போகிறது என்று தெரியவில்லை.

மாநாட்டில் ஆராய்ச்சி போக்கு: உண்மையிலேயே தமிழுக்காக பாடுபடுகிறார்கள் என்றால், சரித்திர ஆதாரமில்லாத பழங்கதைகளை பேசாமல், ஆரிய-திராவிட இனவாத கட்டுக் கதைகள், முதலியவற்றை விடுத்து, ஆதாரங்களுடன் கட்டுரைகள் எழுதப் படவேண்டும். பாரதம் / இந்தியாவிலிருந்து ஏதோ தனியாக தோன்றியது போன்ற பொய்மைவாதங்களை விடுத்து, சங்க இலக்கியங்கள் சொல்வதையாவது வைத்துக் கொண்டு ஆராய வேண்டும். பெரியாரிஸம், நாத்திகம், இந்துவிரோதம், இந்தியவிரோதம், பிரிவினைவாதம் என்ற போக்கிலேயே ஆராய்ச்சிகள் நடந்தால், “குமரிக் கண்டம் போன்று” குறுகிய வட்டத்தில் அடைக்கப் பட்டு, மறைந்து விடும். இறையனாரு, நக்கீரரும், அப்பாதுரையும் கூட காப்பாற்ற முடியாது. இப்பொழுது கூட ஆய்வுக்கட்டுரை தொகுப்பு கொடுக்காமல், “குமரிக் கண்டம்” என்ற சிறு புத்தகம் கொடுக்கப் பட்டுள்ளது.     

© வேதபிரகாஷ்

11-07-2023


[1] மாலைமலர், சென்னையில் ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது: 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, By மாலை மலர், 6 ஜூன் 2023 12:53 PM.

[2] https://www.maalaimalar.com/news/state/7th-july-11th-world-tamil-research-conference-begins-in-chennai-618795

[3] தினகரன், 7ம்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது 11வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு: 200 தமிழறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்பு, July 5, 2023, 1:30 am

[4] https://www.dinakaran.com/3_days_from_7th_research_conference_participation_of_poets/

[5] Times of India, 55 years on, Tamil research conference returns to city, A Ragu Raman / TNN / Updated: Jul 7, 2023, 09:16 IST

[6] “During the 10th World Tamil Research Conference in Chicago in 2019, I was elected as the president of IATR. But, the previous president Marimuthu is still claiming that he is the president and trying to conduct the conference. It will be an invalid one,” Ponnavaikko added.

https://timesofindia.indiatimes.com/city/chennai/55-years-on-tamil-research-conference-returns-to-city/articleshow/101558597.cms?from=mdr

[7] தினமலர்,உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சீர்குலைக்க சதி?..,பதிவு செய்த நாள்: Added : ஜூன் 13, 2023  00:33; https://www.dinamalar.com/news_detail.asp?id=3346006

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3346006

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (2)

ஏப்ரல் 5, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுசார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (2)

சிங்கப்பூருக்கு மாறியது ஏன்?: இந்த உலகத் தமிழ் மாநாடு நடைபெறவுள்ளதை 2022 இல் நியூஸ் 7 தமிழ் முதலாவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது[1] என்று பிப்ரவரி 2023ல் செய்தி வெளியிட்டாலும், இச்செய்தி ஏற்கெனவே ஆறு மாதங்களுக்கு முன்னரே தினமலரில் வெளிவந்து விட்டது[2]. அதாவது, இதைப் பற்றி அத்தனை பரபாரப்பு, தாக்கம் ஏற்படுத்த வேண்டும் போன்ற முயற்சிகளும் நடந்து கொன்டிருக்கின்றன. சென்னை-உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு, அடுத்த ஆண்டு ஜூன் 16 முதல் 18 வரை, சிங்கப்பூரில் நடக்க உள்ளது[3]. மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது[4]. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டான்ஶ்ரீ மாரிமுத்து சென்னையில் நேரில் சந்தித்து மலேசியாவில் நடைபெற இருக்கும் 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்தித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொண்டார்[5]. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் ஜூலை மாதம் மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது[6]. ஆக மலேசியவில் நடத்தப் படுவது உறுதியானது என்று தெரிகிறது. பிறகு, மறுபடியும் அது சிங்கப்பூருக்கு ஏன் மாறியது என்பதைக் கவனிக்க வேண்டும்.

அரசியலா, ஆதரவா, சித்தாந்தமாநடப்பது என்ன?: அரசியல் அல்லது அரசு நிறுவனங்களின் ஆதரவில் நடைபெற்ற கடந்த சில மாநாடுகளைப் போலன்றி, இந்த மாநாட்டை ‘மில்லேனியல் தமிழ்’ அமைப்பும் அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றமுமே நடத்தும் என்று திரு பொன்னவைக்கோ கூறினார். இம்மாநாட்டின் ஆய்வுக்குழு ஆலோசகராகவும் ஏற்பாட்டுக்குழு உதவியாளராகவும் உள்ள முனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மி, ஆய்வு நோக்கில் அமைந்த கட்டுரைகளே தேர்வுசெய்யப்படுகின்றன என்றும் இளையர்களுக்கான அங்கங்களும் இம்மாநாட்டில் இடம்பெறும் என்றும் சொன்னார்.இந்நிலையில், இத்தகைய ஆய்வு மாநாட்டைத் தமிழ் அறிஞர்கள் ஒன்றிணைந்து ஒத்த நோக்குடன் ஒரே இடத்தில் நடத்துவதே சிறப்பு என்று சிங்கப்பூர் பெருமக்கள் கருதுகிறார்கள்.சிங்கப்பூரில் அரசாங்கம், தமிழ்ப் பட்டக்கல்வி பயிற்றுவிக்கும் இரண்டு பல்கலைக்கழகங்கள், கிட்டத்தட்ட 40 தமிழ் அமைப்புகள், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஆகியவற்றின் துணையும் ஆதரவும் இல்லாமல் சிங்கப்பூரில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த முடியாது[7]. நாளடைவில் ஒரு திருவிழாவாக மாறி, அதன் உச்சமாக தற்போது இரு பிரிவுகளாகப் பிரிந்து போட்டி போடும் நிலைக்கு வந்துவிட்டது தமிழ்மொழியின் சாபக்கேடு என்றுதான் கூற வேண்டும் என்று சிங்கப்பூரின் கல்வியாளர்கள், தமிழ் செயல்பாட்டாளர்கள் பலரும் கவலை தெரிவித்தனர்[8]. தமிழ்… இந்த மூன்றெழுத்து இல்லாமல் நாம் இல்லை. அந்த மூன்று எழுத்து இல்லாமல் தமிழக அரசியலே இல்லை. அந்த அளவுக்கு பாமரனில் இருந்து பார்லிமென்ட் வரை மொழி உணர்வின் தாக்கம் ஏதோ ஒருவிதத்தில் இன்றும் இருந்து கொண்டுதான் வருகிறது[9]. அதன் தாக்கத்தின் எதிரொலிப்பாகத்தான் 300க்கும் மேற்பட்ட பாஜக எம்பிக்களை எதிர்த்து “தமிழ் வாழ்க” என்று நாடாளுமன்றத்தில் நம்மால் குரல் கொடுக்க முடிந்திருக்கிறது[10]

தமிழறிஞர்களுக்குள் சச்சரவு: நடக்குமா உலகத் தமிழ் மாநாடு?: தமிழறிஞர்களுக்குள் புதுப்புது சச்சரவுகள் கிளம்புவதால், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது[11]. அமெரிக்காவின் சிகாகோ நகரில், 2019 ஜன., 29 முதல் பிப்., 1 வரை, பத்தாவது உலகத்தமிழ் மாநாடு, டத்தோ மாரிமுத்து தலைமையில் நடந்தது. மாநாட்டின் நிறைவு நாளில், அடுத்த மாநாட்டை, 2023 ஜூலையில், ஐக்கிய அமீரகத்தின் தலைநகர் சார்ஜாவில், பொன்ன வைக்கோ தலைமையில் நடத்துவதாக அறிவித்தனர். இதையடுத்து, பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சியாளர்கள் தமிழ் மொழி, இலக்கணம், கலை, பண்பாடு, கணினி உள்ளிட்ட தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சார்ஜாவுக்குப் பதில், மலேஷியாவில் நடத்தப் போவதாக, டத்தோ மாரிமுத்து உள்ளிட்டோர் அறிவித்து உள்ளனர். இதை ஏற்காத பொன்னவைக்கோ தலைமையிலான அணியினர், சிங்கப்பூரில் நடத்தப் போவதாக அறிவித்து கட்டுரைகள் பெறுகின்றனர். மாநாடு நடத்துவோர், இரண்டு குழுக்களாக இருப்பது தெரியாத ஆய்வாளர்கள், இரண்டு குழுவிடமும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்டுரைகளை அனுப்பி உள்ளனர்[12]. இதுகுறித்து, தமிழறிஞர்கள் கூறியதாவது: பல நாடுகளில் உள்ள தமிழர்களை உணர்வால் இணைத்து, உயர்த்துவதற்காகத் தான், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், தமிழறிஞர்களுக்குள் ஒற்றுமை இல்லை. கட்சி சார்ந்தும், ஆட்சி சார்ந்தும் முடிவெடுக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, உலகத் தமிழ் மாநாடு நடத்த திட்டமிட்டதை, அப்போதைய உலகத் தமிழாராய்ச்சி மன்ற பொறுப்பாளர்கள் ஏற்கவில்லை. இதனால் தான், அவர் ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாடு’ என, கோவையில் நடத்தினார்.

ஆய்வுக் கட்டுரைகள் பெறுவதில், பரிசீலினை செய்வதில், ஏற்பதில் குளறுபடிகள்: சென்ற ஆண்டிலிருந்து சார்ஜா, மலேசியா என்று அறிவித்துக் கொண்டு, பல்லாயிரக் கணக்கில் ஆய்வுக்கட்டுரைகள் பெறப் பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அறிவித்துப் பெற்றதால், அவை பல இடங்களில் பதிவாகி உள்ளன.  இருப்பினும் ஆய்வுக் கட்டுரைகள் பெறுவதில், பரிசீலினை செய்வதில், ஏற்பதில், பலநிலைகளில் குளறுபடிகள் நடந்துள்ளன. முதலில் சிறந்த கட்டுரையாளர்களுக்கு சிங்கப்பூர் சென்றுவர இலவசம் என்றெல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தது. இதனால், பல்கலைக்கழகங்களிருந்து ஆராய்ச்சியாளர்கள் மிதத் தரமான ஆய்ழுக்கட்டுரைகளை அனுப்பியுள்ளனர். முதலில் ஏற்றுக் கொள்ளப் பட்டு, இப்பொழுது நிராகரிக்கப் பட்டுள்ளது. அதாவது “பார்வையாளர்களாக” வந்து கொள்ளல்லாம் என்று நிராகரிப்பு மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால், அத்தகைய மிதத் தரமான ஆய்ழுக்கட்டுரைகள் மற்றவர்கள் உபயோகப் படுத்துவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இப்பொழுது மாநாடு நடத்துவதில் இம்மோசடி பெருமளவில் நடக்கின்றது, மாணவி-மாணவியர்களுக்கு அக்கட்டுரைகள் விற்கப் படுகின்றன. இதனால், “பிளேஜியாரிஸம்” என்ற ஞானத் திருட்டு, விசயக் கொள்ளை, படிப்புத் திருட்டு அதிகமாகி வருகிறது. ஆகவே, இத்தகையோர் அவ்வாறான மோசடிகள் நடக்காது என்று வாக்குறுதி கொடுக்கவேண்டும்.

நிதிபெறுதலும், செலவழித்தலும், தமிழ் வளர்த்தலும்: இதுபோல், பல முரண்பாடுகள் நீடித்த நிலையில், தற்போது, பல கூறுகளாக அறிஞர்கள் பிரிந்துள்ளது வேதனை அளிக்கிறது. இந்த மாநாட்டை, மத்திய அரசின் கீழ் செயல்படும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ் இருக்கைகள் அமைந்துள்ள உலகப் பல்கலைகள், தமிழ் பல்கலை உள்ளிட்ட, தமிழக அரசு நிறுவனங்கள் இணைந்து நடத்த வேண்டும். அப்போது தான், அயல்நாடுகளில் மாநாடு நடத்துவதற்கான அனுமதியும், நிதியும் கிடைக்கும். மேலும், தமிழ் இருக்கைகள், தமிழ் பல்கலை, செம்மொழி நிறுவனத்தில் பல ஆய்வாளர்கள் உள்ளதால், உலகத் தமிழர்களை ஒருங்கிணைப்பதும் எளிதாக இருக்கும். இந்தாண்டு, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸாமில் உள்ள கவுஹாத்தி பல்கலையில் மாநாட்டை நடத்தலாம். இதனால், அங்குள்ள தமிழ்த் துறையும் வளரும். இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகள் இணைந்து, தமிழறிஞர்களுடன் பேசி, புதிய அமைப்பை ஏற்படுத்தி, மாநாட்டுக்கான பணிகளைத் துவக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

© வேதபிரகாஷ்

05-04-2023


[1] தினமலர், உலக தமிழாராய்ச்சி மாநாடு 2023ல் சிங்கப்பூரில் நடக்கிறது, மாற்றம் செய்த நாள்: செப் 25,2022 03:01; https://m.dinamalar.com/detail.php?id=3130639

[2] https://m.dinamalar.com/detail.php?id=3130639

[3] தினபூமி, மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு சனிக்கிழமை, 4 மார்ச் 2023

[4] https://www.thinaboomi.com/2023/03/04/194601.html

[5] கல்கி, உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெற உள்ளது!, கல்கி டெஸ்க், Published on : 22 Feb, 2023, 7:22 pm

[6] https://kalkionline.com/news/world/the-world-tamil-conference-will-be-held-in-malaysia-in-july

[7] தமிழ்.முரசு, உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: சிறந்த கல்வியாளர்கள் சேர்ந்து நடத்துவதே சிறப்பு, லதா 31 Oct 2022 13:13 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Oct 2022 15:42

[8] https://www.tamilmurasu.com.sg/singapore/story20221031-98833

[9] நக்கீரன், உலகத் தமிழ் மாநாடுகளும்அது கடந்து வந்த பாதையும்..., சுதாகர், Published on 05/07/2019 (12:12) | Edited on 05/07/2019 (12:43).

[10] https://www.nakkheeran.in/special-articles/special-article/10th-world-tamil-conference

[11] தினமலர், தமிழறிஞர்களுக்குள் சச்சரவு: நடக்குமா உலகத் தமிழ் மாநாடு?, – நமது நிருபர் –பதிவு செய்த நாள்: ஏப் 05,2023 06:57; https://m.dinamalar.com/detail.php?id=3285547

[12] https://m.dinamalar.com/detail.php?id=3285547

பிஎச்.டி விற்பனை: காசுக்கு ஏற்றப்படி, சான்றிதழ் – கல்விதரங்கெடுவது, சீரழிவது!

செப்ரெம்பர் 12, 2019

பிஎச்.டி விற்பனை: காசுக்கு ஏற்றப்படி, சான்றிதழ் – கல்விதரங்கெடுவது, சீரழிவது!

PhD for rs 5 lacs, 11-09-2019

போன் மூலம் நடக்கும் பிஎச்.டி வியாபார பேரம்: தமிழகத்தில் 5 லட்சத்துக்கு விரும்பிய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்றுத்தருவதாக செல்போனில் அழைப்பு விடுத்து வருவது கல்வியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது[1]. அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். மத்திய அல்லது மாநில அரசு நடத்தும் தகுதித்தேர்வில் ேதர்ச்சி (நெட், செட்), அல்லது முனைவர் பட்டம் (பிஎச்டி) உதவி பேராசிரியர் பணிக்கான கல்வித்தகுதியாகும். சமீபத்தில், மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 2,340 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், திடீரென விண்ணப்ப பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி முனைவர் பட்டத்துடன் பணி நியமனம் பெற்றுத்தர ஒரு கும்பல் உயர் கல்வித்துறை அலுவலகங்களில் முகாமிட்டுள்ளது[2].

PhD for sale

ரூ.5 லட்சம் கொடுத்தால், எந்த பல்கலை, எந்த பிரிவு வேண்டுமானாலும் பிச்.டி கிடைக்கும்: இது ஒருபுறம் இருக்க, 5 லட்சம் கொடுத்தால் போதும், தமிழகத்தின் எந்த பல்கலைக்கழகத்திலும் விரும்பிய பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்றுத்தருவதாக, டெலிபோன் மூலம் அழைப்பு விடுத்து வருகின்றனர். இருதினங்களுக்கு முன்பு தர்மபுரியைச் சேர்ந்த வாலிபருக்கு வந்த அழைப்பில் பேசிய இளம்பெண், தான் சென்னை சேலையூரிலிருந்து பேசுவதாகவும், பிஎச்டி அட்மிஷன் பெற்றுத்தருவதாகவும் கூறுகிறார். தொடர்ந்து, பாரதிதாசன், பாரதியார் என தமிழகத்தில் எந்த பல்கலைக்கழகத்தில் வேண்டுமானாலும், பிஎச்டி பட்டம் பெற்றுத்தருகிறோம். உங்களுக்கு விரும்பிய பிரிவில் தலைப்பை கூறினாலோ, அல்லது நாங்கள் வழங்கும் தலைப்பை தேர்வு செய்து தெரிவித்தாலோ போதும். ஆய்வுக்கட்டுரைகளை நாங்களே தயார் செய்து, அதனை வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்றுத்தருகிறோம். இதற்கு 5 முதல் 6 லட்சம் வரை வழங்கினால் மட்டும் போதும் என அழைப்பு விடுக்கிறார். இந்த உரையாடல் தற்போது வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது.

Bogud doctorates Tamilnadu

பாஸ்ட் புட் ரேஞ்சில் பிஎச்.டி வியாபாரம்: இது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: முனைவர் பட்டம் என்பது பலரது லட்சிய கனவுகளில் ஒன்று. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அதன் தரம் குறைந்து வருகிறது. தங்களுக்கு விருப்பமான பிரிவை தேர்வு செய்து, தகுதிவாய்ந்த பேராசிரியரை வழிகாட்டியாகக்கொண்டு, ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். பின்னர், வழிகாட்டி பேராசிரியர் மற்றும் கல்வியாளர்களின் பரிசீலனைகளை கடந்து, ஆய்வின் முடிவுகளை வெளியிட வேண்டும். குறைந்தது 3 முதல் அதிக பட்சம் 6 ஆண்டுகள் வரை கூட, பிஎச்டி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால்,சமீபகாலமாக கல்வி வழிகாட்டி மையங்கள் என்ற பெயரில் ஆங்காங்கே தொடங்கப்பட்டுள்ள நிறுவனங்கள், அவர்களாகவே போன் செய்து, எம்பில், பிஎச்டி என ஆசைைய தூண்டி பணம் பறிக்கும் நடவடிக்ைககளை மேற்கொண்டு வருகின்றன.

Doctorates given for 10,000 bible institute

ஆய்வுக்கட்டுரைகளில் நடக்கும் ஊழல், மோசடி: இறுதியில் பெயர் தெரியாத பல்கலைக்கழக சான்றிதழ்களை வழங்கிவிடுகின்றன. இதற்கு பேராசிரியர்கள் பலரும் துணையாக இருந்து வருவதுதான் வேதனை. பணம் கொடுத்து வாங்கும் சான்றிதழை வைத்து பணியில் சேருபவர்களால், தரமான மாணவர்களை எவ்வாறு உருவாக்க முடியும்? எனவே மாநிலம் முழுவதும் உள்ள கல்வி வழிகாட்டி மையங்களை முறைப்படுத்த வேண்டும். இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஆனால், உண்மையில், இவர்களுக்கும், இதில் பங்கு உள்ளது. IHC, KHC, OHC, SIHC, TNHC, APHC, AIOC, முதலிய மாநாடுகள், காங்கிரஸுக்கு வரும் ஆய்வுக்கட்டுரைகளை தாராளமாக உபயோகப் படுத்திக் கொள்கிறார்கள்.

Meghalaya PhD sale

மேகாலயா பல்கலையில் பிஎச்டி பட்டத்துக்கு ரூ2-5 லட்சம்: மேகாலயாவில் உள்ள சிஎம்ஜே பல்கலைக்கழகம், ஏராளமானோருக்கு பணத்தை வாங்கிக் கொண்டு பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்கியிருப்பது தெரிய வந்துள்ளது[3]. ஒவ்வொரு பட்டப்படிப்பு சான்றிதழுக்கும் ஒவ்வொரு விலை வைத்து விற்பனை செய்திருக்கும் சிஎம்ஜே பல்கலைக்கழகத்தின் மூலம், நாக்பூரைச் சேர்ந்த பலர், போலி சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகப்படியான பிஎச்டி டிகிரியை வழங்கும் பல்கலைக்கழகமாக விளங்கி வந்த சிஎம்ஜே, 2 முதல் 5 லட்சங்களைப் பெற்றுக் கொண்டு இவ்வாறு பிஎச்டி டிகிரியை வழங்கி வந்துள்ளதை அம்மாநில காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்[4]. பணி நியமனம், பதவி உயர்வு போன்றவற்றுக்காக பலர் இதுபோன்ற போலி சான்றிதழைப் பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.

Bogus PhD 2008

போலி பி.எச்.டிக்கள் உருவாகும் விதம்: தலைப்பை மட்டும் மாற்றி, மற்றவர்களின் பி.எச்.டி கட்டுரைகளை அப்படியே ஈயடிச்சாம் காப்பியை விட மோசமாகக் கொடுக்கிறர்கள். அதாவது, தலைப்பு அட்டையை / காகிதத்தை மாற்றி தங்களது என்று ஆய்வுக்கட்டுரையைக் கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்லாது “தங்களது பி.எச்.டி ஆய்வுக்கட்டுரையை காப்பியடித்து இன்னவர் எழுதியுள்ளார் / ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார்” என்று வருடத்திற்கு 12 புகார்களும் வருகின்றன. அதாவது மாதத்திற்கு ஒரு புகார்! எப்படி பார்த்தாலும், கொடுக்கப்பட்டுள்ள பி.எச்.டிக்கள் ஏற்கெனவே ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டதைப் போன்றேயுள்ளன என்று ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். அதுமட்டுமல்லாது, மற்ற பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி ஆய்வுக்கட்டுரை / ஆய்வுரை சமர்ப்பிக்கும் போது, மிகவும் மோசமான நிலை தென்படுகிராது என்று மேற்பார்வையாளர்கள், வழிகாட்டிகள் மற்ற சம்பந்தப்பட்ட முனைவர்கள், பேராசிரியர்கள் அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறார்கள். ஆய்வு மாணவர்கள் மற்றவர்களின் ஆய்வுக்க் கட்டுரைகளை புரிந்து கொள்வதற்கு படிக்கலாமே தவிர மற்றபடி இவ்வாறு வெட்கம் இல்லாமல் அப்படியே ஈயடிச்சாம் காப்பி அல்லது வெட்டி-ஒட்டும் வேலை செய்வது மிகவும் கேவலமானது.

First post, Ph.d for sale

ஏஜென்டுகள், புரோக்கர்கள் வேலை செய்யும் விதம்: தில்லி போன்ற நகரங்களில், இது வியாபாரம் ஆகி விட்டது. இதற்கும் புரோக்கர், ஏஜென்ட் போறோர் அங்கங்கு இருந்து கொண்டு வேலை செய்கின்றனர்[5]. துணை ஆசிரியர் வேலைக்கு, பிச்.டி அவசியம் என்ற சரத்து வந்ததிலிருந்து, இந்த மோசடி அதிகமாகியுள்ளது. எந்த படிப்பு, எந்த தலைப்பு வேண்டுமானாலும், சொன்னால் போதும், 100, 200 பக்களுக்கு தயார் செய்து கொடுக்கிறார்கள். அதற்கேற்றப் படி 50,000/- முதல் 5,000,000 வரை பணம் வாங்கிக் கொள்கிரார்கள்[6]. குறிப்பாக சரித்திரம், சமூகவியல், பொருளாதாரம், பெண்ணியம், ஊடகவியல், இதழியல், போன்ற துறைகளை உருவாக்கிக் கொண்டு, அதில் மாணவர்களை வைத்துக் கொண்டு, எச்.ஓ.டி.யிலிருந்து, பியூன் வரை வேலை செய்கிறார்கள். போதாகுறைக்கு, கருத்தரங்கம், செமினார், மாநாடு, முதையவற்றை நடத்தி, அவற்றின் மூலம் வரும் ஆய்வுக் கட்டுரைகளை சேகரித்து, மாற்றி எழுதி, ஆய்வுக் கட்டுரைகளை உருவாக்குகிறார்கள். போதாகுறைக்கு சிடி, ஈ-மெயில் மூலம் வரும் ஆய்வுக்கட்டுரகளை அப்படியே உபயோகித்துக் கொள்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

11-09-2019

PhD for sale Krala Hindi prachar sabha 2011

[1] தினகரன், 5 லட்சத்துக்கு விரும்பிய பல்கலையில் முனைவர் பட்டம்: செல்போன் அழைப்பால் கல்வியாளர்கள் கடும் அதிர்ச்சி, 2019-09-11@ 00:18:04

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525113

 

[3] தினமணி, மேகாலயா பல்கலையில் பிஎச்டி பட்டத்துக்கு ரூ2-5 லட்சம், By dn | Published on : 04th June 2013 11:14 AM

[4] https://www.dinamani.com/latest-news/2013/jun/04/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF–689869.html

[5] FirstPost, PhD thesis for sale! Available at a corner store near IIT-D and JNU, May 05, 2015 12:33:36 IST

[6]  https://www.firstpost.com/living/phd-thesis-sale-available-corner-store-near-iit-d-jnu-2226956.html