Archive for the ‘மனோபாவம்’ Category

பச்சையப்பன் மற்றும் கல்லூரி மாணவர்கள் ரூட்-தல பிரச்சினை – கல், சோடா பாட்டில், பீர் பாட்டில்களை வீசி,உருட்டு கட்டை தாக்குதல், கைது முதலியன (2)

பிப்ரவரி 15, 2024

பச்சையப்பன் மற்றும் கல்லூரி மாணவர்கள் ரூட்தல பிரச்சினை – கல், சோடா பாட்டில், பீர் பாட்டில்களை வீசி, உருட்டுகட்டை தாக்குதல், கைது முதலியன (2)

கல், சோடா பாட்டில், பீர் பாட்டில்களை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கினர்.  உருட்டுகட்டையாலும் தாக்கிக்கொண்டனர்: இவையெல்லாம் எப்படி உடனடியாக இவர்களுக்குக் கிடைக்கும் என்று தெரியவில்லை. மாறாக, இவர்கள் ஏற்கெனவே வைத்திருந்தனர் எனும் பொழுது, அத்தகைய வன்முறைக்குத் தயாராக இருந்தனர் என்றாகிறடு. இதில் சில மாணவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. மாணவர்களின் மோதலை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து வேறு ரெயில் பெட்டியில் ஏறினர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மாணவர்கள் மோதல் பற்றி அறிந்ததும் பெரம்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். ரயில் நடைமேடையில் நடந்த இந்த மோதல்சம்பவம், பயணியரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கிக் கொண்டதால், ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினரால் அவர்களை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை. என்றாலும், இதனால், மாணவர்களின் வன்முறை அதிகமாகும், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கருதியிருக்கலாம்.

சிசிடிவி கேமராவில் பதிவை வைத்து கைது, வழக்குப் பதிவு: உடனே மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் 3 மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வன்முறை சம்பவம், ‘சிசிடிவி கேமரா’வில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோவை ஆய்வு செய்து, மோதலில் ஈடுபட்ட இரண்டு கல்லுாரிகளைச் சேர்ந்த 60 மாணவர்கள் மீது, ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்[1]. இது தொடர்பாக இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரு கல்லூரிகளைச் சேர்ந்த 60 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் பெரம்பூர் ரயில்வே போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்[2]. மேலும் மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர்[3]. மற்ற மாணவர்களைத் தீவிரமாகத் தேடும் பணி நடைபெற்று வருகிறது[4]. சட்டத்தை மீறி பொது சொத்தை நாசப் படுத்துவது, அமைதியை குளைப்பது என்பதெல்லாம் படிக்கும் மாணவர்களுக்கு உரிய குணங்கள் அல்ல.

வன்முறையில் ஈடுபட்ட 60 மாணவர்களையும் நிரந்தரமாக நீக்க பரிந்துரை செய்த போலீஸ்: ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., ரமேஷ் கூறியதாவது[5]: “இந்த மோதலில் ஈடுபட்ட 60 மாணவர்களையும் நிரந்தரமாக நீக்க பரிந்துரை செய்து, இரண்டு கல்லுாரிகளின் முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம். சென்னை புறநகரில், 50க்கும் மேற்பட்ட பிரதான கல்லுாரிகள் இருக்கின்றன. ஆனால், ஒரு சில கல்லுாரி மாணவர்கள்அடிக்கடி மோதிக் கொள்வது நல்லதல்ல. பல முறை பிடித்துஎச்சரிக்கை விடுத்தும், அவர்கள் பொது இடங்களில் ஒழுங்கு முறைகளை பின்பற்றுவதில்லை. இனி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” இவ்வாறு அவர் கூறினார்[6]. பொறுப்புடன் தான் இதை சொல்லி இருக்கிறார், போலீஸ் அதிகாரி என்பது மட்டுமில்லாமல் ஒரு தந்தை என்ற முறையிலும் கூறியிருக்கிறார் என்பதை நன்றாக கவனிக்கலாம். இதே போன்ற பொறுப்பு இந்த மாணவர்களின் தாய்-தந்தையர்களுக்கும் இருக்க வேண்டும்.

தினமும் மணவர்கள் ஒழுங்காக வகுப்புகளில் உட்கார்ந்து பாடம் கேட்டாலே, பாதி பிரச்சினை தீர்ந்து விடும்: முதலில் படிக்கும் கல்வி நிறுவனங்களில் அதாவது பள்ளி கல்லூரிகளில் அவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். இப்பொழுது எல்லாம் மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பதில்லை, வகுப்பில் கூட ஒழுங்காக இருப்பதில்லை. பாடம் சொல்லிக் கொடுக்கின்ற வேளையில், நேரங்களில் வெளியில் உட்காருவது, சுற்றி வருவது என்றெல்லாம் செய்து வருகிறார்கள். ஒரு 50 பேர் இருந்தால், ஒரு 10 மாணவர்கள் தான் வகுப்பில் உட்கார்ந்து பாடங்களை கேட்கிறார்கள். மற்றவர்கள் ஊரைச் சுற்றி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அந்த 10 மாணவர்களையும் வகுப்புக்கு செல்ல விடாமல் முயற்சிகளையும் செய்து வருகிறார்கள் என்பதும் தெரிந்த விஷயமாக இருக்கிறது. ஆகவே இத்தகைய ஒழுங்கீனங்களை முதலில் மாணவர்கள் விலக்கிக் கொள்ள வேண்டும். அட்டென்டென்ஸ் / தினசரி வருகை, குறைந்த பட்சம் மதிப்பெண் கொடுப்பது, போன்ற சலுகைகளால், ஏதோ தண்டம் கட்டிவிட்டால், பரீட்சை எழுதி விடலாம், டிகிரி / பட்டம் கிடைத்து விடும் என்பதால், வகுப்பிற்கு செல்ல வேண்டும் என்ற போக்கும் மாறி விட்டது.

சினிமா, ஊடகங்கள் ஒழுன்கீனங்களுக்குக் காரணம்; இப்பொழுதெல்லாம் பிரச்சனை, பிரச்சினையின் மூல காரணம், அது எவ்வாறு உருவாகிறது, அதை தவிர்ப்பது எப்படி என்பதெல்லாம் விட்டுவிட்டு, வேறு வகையில் விளக்கம் கொடுத்து, ஒரு நிலையில அதனை நியாயப்படுத்தும் முறைக்கு கூட இன்றைய சித்தாந்தவாதிகள், அரசியல்வாதிகள், ஏன் மனோதத்துவ ஆலோசர்கள் கூட செய்து வருகிறார்கள். சமூக கட்டுப்பாடு, கல்வி நிலையங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், பொது இடங்களில் எப்படி ஒழுங்காக இருக்க வேண்டும் முதலியவற்றை எல்லாம் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவற்றை, மாணவர்கள் மீறும் பொழுது உடனடியாக அவர்கள் கட்டுப்படுத்தப்படுத்தப் பட வேண்டும். அறிவுரை அல்லது தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இல்லை என்றால், அவர்கள் செய்வதெல்லாம் சரி, ஏற்றுக் கொள்ளப் பட்டவை என்ற மனநிலை வரும்பொழுதும், மற்ற ஊடகங்கள் சினிமா போன்றவற்றில் வருகின்ற வன்முறை காட்சிகள், அடிதடி சண்டைகள் முதலியவற்றைல்லாம் வீட்டில் கூட உட்கார்ந்து மற்ற நண்பர்கள் குடும்பத்தினர், மற்றும் பெரியவர்களுடன் கூட பார்க்கும் பொழுது இதெல்லாம் ஒரு சாதாரணமான விஷயமாகிவிட்டது என்ற மனநிலை உண்டாகலாம். சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது என்பதை கூட இக்கால சிறுவர்கள் இளைஞர்கள் மற்றவர்கள் நினைக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முதலில் அத்தகைய போக்கை மாற்றவேண்டும்.

கல்வியில் ஒழுங்கீனம் ஏற்பட்டால், சமூக்சமே சீரழிந்து விடும்; பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் முதலியவற்றில் வரைமுறை, சட்டதிட்டம் என்றெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியம் உள்ளது. அதேபோல கல்வி கற்பிக்கும் ஒவ்வொரு துறை தலைவர், பேராசிரியர், விரிவுரையாளர் என்று பாடம் எடுக்கும் மற்றவர்களும் அத்தகைய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். ஆனால் இப்பொழுது எல்லாம் ஒவ்வொரு பல்கலைக்கழகம் கல்லூரிகளில் துணைவேந்தர் முதல் பணியாற்றம் மற்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள், போதிக்கும் ஆசிரியர்கள் என்று வரும்பொழுது, அவர்கள் மீதும் ஒழுங்கீனங்கள், சட்டமீறல்கள், ஊழல் என்று, குற்றச்சாட்டுகள் அடிக்கடி வருகின்றன. இவையெல்லாம் ஊடகங்களிலும் விவரங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனால், அங்கு படிக்கும் மாணவர்களுக்கும், அவர்கள் மீதான மரியாதை குறைந்து வர்கிறது. துறை தலைவர் பேராசிரியர் போன்றவர்களே, இப்படி இருக்கிறார்கள், இவர்களிடம் நமக்கு எப்படி ஒழுங்காக பாடம் சொல்லிக் கொடுப்பது என்ற ஒரு மன போக்கும் உண்டாகும். இந்த நிலையில், மன நிலையில் சென்று பதியும் பொழுது, இருக்கும் கொஞ்சம் மரியாதையும் பயமும் கூட போய்விடும் / போய் விடுகிறது. அந்நிலையில் இவர்களே அந்த வன்முறைகளில் விடுகிறார்கள் இதனால் தான் படிப்பு மற்றும் கல்வித் துறை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் குறைந்து கொண்டு, மற்ற காரியங்கள், ஒழுங்கீனங்கள், வன்முறைகள் என்று பல சமூக தீவிரவாத செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

© வேதபிரகாஷ்

15-02-2024


[1] தினகரன், மாணவர்கள் மோதல்: போலீஸ் வழக்குப்பதிவு, February 14, 2024, 8:04 am.

[2] https://www.dinakaran.com/students_clash_police_case_filed/

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ரயில் நிலையத்தில் பீர் பாட்டில் வீசி மோதல்: மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்க ரயில்வே போலீசார் கடிதம்,WebDesk, 14 Feb 2024 13:32 IST.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/railway-police-letter-to-2-college-to-sack-students-involved-in-clash-3749132

[5] தினமலர், 60 பேரை டிஸ்மிஸ் செய்ய ரயில்வே போலீஸ் பரிந்துரை, மாற்றம் செய்த நாள்: பிப் 15,2024 08:02

[6] https://m.dinamalar.com/detail.php?id=3551322

உரிய கல்வி தகுதிகளை பூர்த்தி செய்யாமல் முனைவர் / பிஎச்.டி பட்டம் பெற்றது எப்படி?

ஜூலை 6, 2023

உரிய கல்வி தகுதிகளை பூர்த்தி செய்யாமல் முனைவர் / பிஎச்.டி பட்டம் பெற்றது எப்படி?

2023 ஜூலைஉதவி பேராசிரியர் முருகேசன் தொடுத்த வழக்கு: உரிய கல்வி தகுதி இல்லாதவருக்கு முனைவர் பட்டம் வழங்கியதாக எழுந்த புகார் குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை பல்கலைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்கலையில், தண்டபாணி என்பவர், ‘திருவாசக பக்தி கோட்பாடு’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி படிப்புக்கு சேர்ந்தார். இவருக்கு, உலகநாத நாராயணசாமி அரசு கல்லுாரி தமிழ் துறை உதவி பேராசிரியர் முருகேசன் என்பவர் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தண்டபாணி முனைவர் பட்டம் பெற்றார். அவர், உரிய கல்வி தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை என்பதால், அவரது முனைவர் பட்டத்தை திரும்ப பெற வேண்டும் என, சென்னை பல்கலைக்கு, உதவி பேராசிரியர் முருகேசன் கடிதம் எழுதினார். அதன் மீது நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

04-07-2023 நான்கு வாரங்களில் சென்னை பல்கலை அறிக்கை தாக்க நீதிமன்றம் உத்தரவு: வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, உதவி பேராசிரியர் முருகேசன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபீக் அடங்கிய அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு[1]: “சென்னை பல்கலை, 164 ஆண்டுகள் பழமையானது. முனைவர் படிப்புக்கு விண்ணப்பித்தவரின் தகுதியை சரிபார்க்க தவறியது, பல்கலையின் அக்கறையின்மையை காட்டுகிறது. தண்டபாணியின் தகுதியை ஆய்வு செய்யாமல், முனைவர் படிப்புக்கு சேர்த்தது, அதிர்ச்சி அளிக்கிறது. முனைவர் பட்டம் என்பது உச்சபட்ச கல்வி தகுதியாக கருதப்படும் நிலையில், அதை வழங்கும் கல்வி நிறுவனங்கள் மெத்தனப்போக்குடன் இருக்கக்கூடாது. கடின உழைப்பால் பட்டம் பெறக்கூடிய முனைவர்களை சந்தேகிக்கும் வகையில், பல்கலைகள் செயல்படுவதை சகித்துக் கொள்ள முடியாது. எனவே, மனுதாரர் முருகேசன் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் விசாரித்து, நான்கு வாரங்களில் சென்னை பல்கலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது[2].

2021ல் முன்னர் ஆண்டை விட இரு மடங்கு பதிவு ஆனது: பல்கலைக்கழகங்களில் உதவி பேராசியர் பணியிடங்களுக்கு முனைவர் படிப்பு கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ள நிலையிலும், அதிக வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படுவதால், சென்னை பல்கலைக்கழம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகளில் முனைவர் படிப்பிற்கு பதிவு செய்து உள்ளவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்து உள்ளது[3]. 2019ஆம் ஆண்டில் 406 என்ற அளவில் இருந்த பதிவு, 2021ஆம் ஆண்டில் 859 ஆக அதிகரித்து உள்ளது[4]. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ், 5 ஆயிரம் அறிஞர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

2022- இதழ்களில் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை: முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள், முன்னணி ஆய்வு இதழ்களில் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டும் என்ற விதிமுறை பல ஆண்டுகளாக அமலில் உள்ளது.ஆனால் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான ஆய்விதழ்களில் 75% மாணவர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதில்லை என்ற தகவலை ஆய்வின் மூலம் யுஜிசி கண்டறிந்துள்ளது[5]. மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐஐடி-களில் முனைவர் பட்டம் பயிலும் 2,573 மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் ஐஐடியில் முனைவர் பட்டம் பயிலும் சில மாணவர்கள் தரமான ஆய்விதழ்களில் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை தொடர்ந்து பிரசுரிப்பதும் யுஜிசி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் சமர்ப்பிப்பதன் வாயிலாக, பின்நாட்களில் காப்புரிமை பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பான்மையான ஆராய்ச்சி மாணவர்கள் தரமான ஆய்வு இதழ்களில் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதில்லை என்று தெரியவந்துள்ளதால் இந்த நடைமுறையை மாற்ற பல்கலைக்கழக மானியக் குழு முடிவெடுத்தது. அதன்படி, மாணவர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் சமர்ப்பிப்பது கட்டாயம் இல்லை என்று நாடு முழுவதும் விரைவில் புதிய விதிமுறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு முடிவெடுத்துள்ளது[6].

காசு கொடுத்து ஆய்வுகட்டுரை பதிப்பித்துக் கொண்டால் கிரிடெட் கிடைக்குமா?: அதாவது, ஆய்வுகட்டுரைகள் பதிப்பிக்க, ISBN, UGC care List என்றெல்லாம் எண்கள் வாங்கி வைத்துக் கொண்டு, ஒரு பேப்பருக்கு, ரூ.1000/- / 2000/- என்று வாங்கிக் கொண்டு, “International Journal………” என்றெல்லாம் பெயரை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வருகிறார்கள். இங்கிலீஷ் / ஆங்கிலம் தெரியாமல் கூட, காசு கொடுத்து, பேப்பர் எழுத வைத்து, பதிப்பித்துக் கொண்டு கிரிடெட் வாங்கிக் கொள்கிறார்கள். இத்தகைய ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இம்முறை கொண்டு வரப் படுகிறது. இதனால், போலி “International Journal………”-களுக்கு வழியில்லாமல் போய் விடும். உண்மையான ஆராய்ச்சி தன்மை, கட்டுரை எழுதும் நபர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆராய்ச்சியில் போலித் தன்மை வரும்பொழுது, எல்லா விதமான போலிகளும் வருகின்றன. காசு கொடுத்தால் வாங்கி விடலாம் என்ற நிலைமையும் வருகிறது.

2016-17 பிஎச்டி நிபுணர் குழு / ரிவீய்வு கமிட்டி/ சரிபார்த்தல் குழு: சென்னை பல்கலைக் கழகம் தமிழ்நாட்டில் மிக பழமை வாய்ந்ததாகும். இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பி.எச்.டி. டாக்டர் பட்டத்துக்கு ஆய்வு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்களில் பலர் ஆய்வு முடித்து வெளியேறுகிறார்கள். ஆனால், அவர்கள் செய்த ஆய்வு முறையாக நடக்கவில்லை. தரம் குறைந்த நிலையில் அவை உள்ளன என்று இப்போது தெரிய வந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பி.எச்.டி. ஆராய்ச்சிகள் எப்படி நடைபெற வேண்டும் என்று பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அவற்றை சென்னை பல்கலைக்கழகம் முறையாக பின்பற்றவில்லை. மாணவர்கள் சமர்ப்பிக்கும் பி.எச்.டி. ஆராய்ச்சி கட்டுரைகளை (திசிஸ்) வெளி பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழக பேராசிரியர்களை கொண்ட நிபுணர் குழு ஆய்வு செய்வது வழக்கம். அவ்வாறு 2016-17-ம் கல்வி ஆண்டில் பி.எச்.டி. முடித்து சமர்ப்பித்த 600 ஆய்வு கட்டுரைகளை இந்த நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது.

முறைப்படி ஆராய்ச்சி நடக்கவில்லை, அறிக்கை சமர்ப்பிக்கப் படவில்லை: இந்த குழுவில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களை சேர்ந்த நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் இதுவரை 100 கட்டுரைகளை ஆய்வு செய்து முடித்துள்ளனர். அவற்றில் பல கட்டுரைகள் முறையாக ஆய்வு செய்து தயாரிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. மேலும் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் ஆய்வு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. படிப்பவர்களை ஆய்வு செய்வதற்காக டாக்டரல் கமிட்டி என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும். அதில் 3 பேராசிரியர்களும், ஒரு துறை சார்ந்த நிபுணரும் இருப்பார்கள். அவர்கள் குறிப்பிட்ட காலவரையரையில் அந்த மாணவர்களின் தரத்தை ஆய்வு செய்வார்கள். பி.எச்.டி. ரெகுலர் படிப்பில் இருப்பவர்களை 6 மாதத்துக்கு ஒரு தடவையும், பகுதி நேர படிப்பில் இருப்பவர்களை ஆண்டுக்கு ஒரு முறை அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வை முடித்து அவர்கள் அறிக்கையும் தர வேண்டும்.

நிபுணர் குழு பல்வேறு குறைபாடுகள் இருப்பதை கண்டுபிடித்தது: ஆனால், சென்னை பல்கலைக்கழகத்தில் டாக்டரல் கமிட்டி முறையான ஆய்வுகளை செய்யவில்லை. பல மாணவர்கள் டாக்டரல் கமிட்டி ஆய்வு செய்யாமலேயே தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து இருக்கிறார்கள். ஆராய்ச்சி கட்டுரைகளை 3 வெளி பேராசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அதில் ஒருவர் வெளி பல்கலைக்கழகத்தை சேர்ந்தவராகவும், மற்றொருவர் வெளி மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்தவராகவும், இன்னொருவர் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை நிவர்த்தி செய்ய சொல்வார்கள். அந்த விதிமுறைகளும் சரியாக பின்பற்றப்படவில்லை. இவ்வாறு பல்வேறு குறைபாடுகள் இருப்பதை நிபுணர் குழு கண்டுபிடித்துள்ளது.

மேற்பார்வை சரியாக நடக்கவில்லை: சென்னை பல்கலைக் கழகத்தில் 2016 ஜனவரி முதல் 2017 வரை மே வரை துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. இதனாலும் பல்வேறு குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக துணை வேந்தர் துரைசாமியிடம் கேட்டபோது, பி.எச்.டி. படிப்பவர்கள் குறைந்தது 2 ஆய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டும். தேசிய மாநாடுகளில் 4 ஆண்டுக்குள் பங்கேற்க வேண்டும். 5-வது ஆண்டில் டீன் அல்லது மூத்த பேராசிரியர்கள் டாக்டரல் கமிட்டியில் இடம்பெற்று இருப்பார்கள். மாணவர்களின் ஆய்வு செயல்பாடு சரியில்லை என்றால் அவர்களை படிப்பை விட்டு செல்லும்படி அறிவுறுத்தப்படுவார்கள் என்று கூறினார். நிபுணர் குழு ஆய்வு குறித்து மூத்த பேராசிரியர் ஒருவர் கூறும் போது[7], “300 பக்கங்கள் கொண்ட ஒரு பி.எச்.டி. ஆய்வு கட்டுரையை முறையாக ஆய்வு செய்வதாக இருந்தால் 3 மாதங்கள் வரை ஆகும். ஆனால், நிபுணர் குழுவினர் சில கட்டுரைகளை ஒரு வாரத்தில் ஆய்வு செய்து முடிவை சொல்லி இருக்கிறார்கள். சில கட்டுரைகளை ஒரு நாளிலேயே ஆய்வு செய்து முடிவை கூறி இருக்கிறார்கள். இது, கேலிக்கூத்தாக உள்ளது,” என்று கூறினார்[8].

© வேதபிரகாஷ்

05-07-2023


[1] தினமலர், உரிய கல்வி தகுதியின்றி முனைவர் பட்டம் அறிக்கை தர சென்னை பல்கலைக்கு உத்தரவு, Added : ஜூலை 05, 2023  02:12

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3366772

[3] டைம்ஸ்.ஆப்.இந்தியா, சென்னைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் (PhD) படிப்பிற்கான பதிவு இரண்டு ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரிப்பு, Feb 8, 2022, 18:12 IST

[4] https://timesofindia.indiatimes.com/tamil/phd-registrations-in-madras-university-double-in-2-years/articleshow/89432150.cms

[5] தினத்தந்தி, பி.எச்.டி. மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் பிரசுரிக்க கட்டாயம் இல்லைபல்கலை. மானியக் குழு, தினத்தந்தி, Sep 28, 1:59 pm (Updated: Sep 28, 4:16 pm)

[6] https://www.dailythanthi.com/News/State/phd-students-are-not-required-to-publish-research-papers-in-research-journals-university-grant-committee-802885

[7] மாலைமலர், சென்னை பல்கலைக்கழகத்தில் தரமில்லாத பி.எச்.டி. – ஆய்வு நிபுணர்குழு சோதனையில் கண்டுபிடிப்பு, Byமாலை மலர்25 பிப்ரவரி 2018 4:56 PM (Updated: 25 பிப்ரவரி 2018 4:56 PM).

[8] https://www.maalaimalar.com/news/district/2018/02/25165654/1147704/Substandard-PHD-study-at-Madras-University.vpf

காதலி காதலனை ஆட்கள் வைத்து கடத்தி, அடித்தது, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியது, பிறகு கைதானது! கொடேஷன் கேங்-கேரளா மாடல்(2)

ஏப்ரல் 13, 2023

காதலி காதலனை ஆட்கள் வைத்து கடத்தி, அடித்தது, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியது, பிறகு கைதானது! கொடேஷன் கேங்-கேரளா மாடல்(2)

 

காதலை முறித்துக் கொள் என்றதை ஒப்புக் கொள்ளாதலால், ஆட்களை வைத்து லக்ஷ்மி பிரியா சிவராமை அடித்தது: இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியா, தனது காதலன் அமுல் மற்றும் நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து மாணவனை கடந்த ஏப்ரல் 5ம் தேதி காரில் கடத்தி உள்ளனர். அந்த அளவுக்கு அவள் ரௌடியிசத்திற்கும் இறங்கியிருக்கிறாள். இது, தீய சகவாசமா, வேறு வகையான நட்பா, தொடர்பா என்றெல்லாம் தெரியவில்லை. அதே போல, இவளுடைய பெற்றோர், அவர்கள் இதில் ஏன் கண்டு கொள்லாமல் இருக்கிறார்கள் போன்ற விவரங்களும் தெரியவில்லை. ஒரு ஊடகம், லக்ஷ்மி பிரியாவின் தாயாரும் கைது செய்யப் பட்டிருக்கிறார் என்கிறது[1]. காரில் வைத்து பேசி பார்த்திருக்கிறார்கள் என்பதை விட, மிரட்டியிருக்கிறார்கள். ஆனால் அந்த மாணவன் உறுதியாக இருந்ததால், ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியாவின் நண்பர்கள் மாணவனை சரமாரியாக அடிக்க ஆரம்பித்துள்ளனர். வழியில், ஆலப்புழாவில் நிறுத்தி, வாலிபரின் தங்கச் சங்கிலி, விலை உயர்ந்த மொபைல் போன் மற்றும் பணத்தை பறித்திருக்கிறார்கள். இதெல்லாம் காதல், காதல் முறிப்பு, காதல் பிரிப்பு, கட்டப் பஞ்சாயத்து போன்ற காரியங்களையும் மிஞ்சுவதாக இருக்கின்றன. பிறகு, அவர்கள், இத்தகைய வேலைகளை செய்யும் ரௌடிகளாக இருந்திருக்க வேண்டும். பின்னர், மாணவனை எர்ணாகுளம் தம்மனம் அருகே உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த கும்பல் அவரை அங்கேயே கட்டி வைத்து அடித்துள்ளனர். பின்னர் மாணவனின் ஆடைகளை அவிழ்த்து, மொபைல் போனில் வீடியோவும் எடுத்துள்ளனர்,” என மாணவனின் தந்தை கூறினார்.

 

அவர்கள் காதலர்கள் அல்ல; அவர் ஆபாச வீடியோக்களை அனுப்பினார், மகளைத் துன்புறுத்தினான்: மனோரமா செய்தியிடம் பேசிய லக்ஷ்மிபிரியாவின் தாயார், அந்த இளைஞனுடன் தனது மகளுக்கு தொடர்பு இல்லை என்று கூறினார். “இருவரும் நண்பர்கள். இருப்பினும், பின்னர் அவர் அவளை வாய்மொழியாகத் துன்புறுத்தத் தொடங்கினான், மேலும் அவரது தொலைபேசிக்கு ஆபாச வீடியோக்களையும் அனுப்பினார். அவர் தனது பிரச்சனையிலிருந்து விடுபட உதவுமாறு தனது நண்பர்களைக் கேட்பது பற்றி என்னிடம் கூறினான்,” என்று லட்சுமிப்ரியாவின் தாயார் கூறினார். மேலும், அந்த இளைஞரை தாக்குவதற்கு லட்சுமிபிரியா எந்த கும்பலையும் நியமிக்கவில்லை என்றார். “இளைஞரை அடித்தது அவளுடைய நண்பர்கள்தான், என் மகள் அல்ல. அவள் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டாள். லட்சுமி திறமையான மாணவி. சந்தேகம் இருந்தால் அவளுடைய ஆசிரியர்களிடம் கேட்கலாம்,” என்று அவர் கூறினார். இருப்பினும், இந்த அம்மா எல்லா நிகழ்வுகளுக்காகவும் வருந்துவதைக் காண வேண்டியதில்லை, அதில் அவரது மகள் நிச்சயமாக ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். பள்ளியில் ஒரு பையனுடனும், கல்லூரியில் ஒரு பையனுடனும் காதல் விவகாரங்களில் ஈடுபடும் படிப்பைத் தவிர, அவளோ அல்லது அவளது கணவனோ தங்கள் மகளின் செயல்பாடுகள் குறித்து எச்சரித்தார்களா என்பதும் அறியப்படுகிறது. இயற்கையாகவே, ஒவ்வொரு தாயும் தனது மகள் மற்றும் மகனை மட்டுமே பாதுகாப்பார்கள், ஆனால், அவள் ஏன் அவளுடைய நடத்தை, செயல்பாடுகள் மற்றும் காதல் விவகாரங்களை கண்காணிக்கக்கூடாது. அவளுடைய தவறான நடத்தைக்கு எதிராக அவள் நடவடிக்கை எடுக்க விரும்பினால், அவள் அவளுக்கு அறிவுரை சொல்லலாம், கட்டுப்படுத்தலாம் மற்றும் சரிபார்த்திருக்கலாம்.

 

போலீஸார் லக்ஷ்மி பிரியாவை கைது செய்தது: அந்த வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டியதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன. ஒரு ஆணின் வீடியோவை வெளியிட்டால் என்னாகும் என்று இனிமேல் தான் யோசிக்க வேண்டியுள்ளது. பெண்ணின் மானம் போகும் என்பது போல, ஒரு இளம் வாலிபனுக்கு என்னாகும் என்று ஆராய வேண்டியள்ளது. இது பற்றி மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார், எர்ணாகுளத்தை சேர்ந்த லட்சுமி பிரியாவின் காதலன் அமலை முதலில் கைது செய்தனர். அதன்பின்னர் லட்சுமி பிரியாவை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது தோழி வீட்டில் வைத்து கைது செய்தனர். இதனிடையே மொத்தம் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் லட்சுமி பிரியாவின் நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். லக்ஷ்மி பிரியாவின் தாயார், தன் மகளுக்கும் அந்த பையன் / அமலுக்கும் எந்த உறவு இல்லை என்கிறார்[2]. நண்பர்களாக இருக்கும் பொழுது, சில வீடியோக்களை அனுப்பி மிரட்டி வந்துள்ளான். அவன் சகவாசத்திலிருந்து விலகிச் செல்லவும் அவளின் நண்பர்கள் அறிவுருத்தியுள்ளனர், என்கிறார்[3].

 

‘மகனை விடுவிக்க முக்கிய குற்றவாளி மீட்கும் தொகை கேட்டார்’: தனது மகனை விடுவிக்க லட்சுமிபிரியா பணம் கேட்டதாக இளைஞரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இது விவகாரங்களில் மிகவும் ஆபத்தானது. சிறுமியும் அவரது நண்பர்களும் தனது மகனை கொடூரமாக தாக்கியதை அவர் வெளிப்படுத்தினார். பின்னர் அருகில் உள்ள கடையில் இருந்து மதுபானம் வாங்குவதற்காக கொள்ளையர்கள் பணத்தை எடுத்து சென்றனர். தாக்கியவர்களில் ஒருவர் பீர் பாட்டிலை சிவராமின் தலையில் தாக்கினார். காவல்துறை அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதால், மருத்துவர்களின் அறிக்கையிலிருந்து இவை அனைத்தையும் சரிபார்க்க முடியும். அதிர்ச்சியில் துடிக்கும் வகையில் மொபைல் போன் சார்ஜர் வயர்கள் நாக்கில் வைக்கப்பட்டு கொடுமை தொடர்ந்தது. இந்த கொடூர செயல்களை அந்த இளம் கல்லூரி மாணவி ஒப்புக்கொண்டது பொருத்தமற்றது மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், அவருக்கு கஞ்சா கொடுக்க அக்குழு முடிவு செய்தது. பின்னர் லெக்ஷ்மிபிரியா அவரை உடை கழற்றி வீடியோ எடுக்கும்படி குழுவை வற்புறுத்தினார். இதுவும் விவரிக்க முடியாதது, ஏன் இது போன்ற வீடியோ தேவை என்று தெரியவில்லை. இருவரும் உறவுமுறையில் இல்லை என்றும் அவர் கூறினார். காருக்குள் வைத்து அடித்து உதைத்தனர்.அவரது ரூ.20,000/- மதிப்புள்ள தங்கச் சங்கிலி, கைக்கடிகாரம் மற்றும் ரூ.5,000/- பணத்தைக் கறுப்புத் துணியால் முகத்தை மறைத்துக்கொண்டு திருடிச் சென்றனர். அங்கிருந்து பழைய வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மீண்டும் தாக்கப்பட்டார், இந்த முறை, அவர்கள் அவரை தாக்குவதற்கு கனமான தடியைப் பயன்படுத்தி அவரை தாக்கினர் மற்றும் மின்சார அதிர்ச்சியையும் கொடுத்தனர். அந்த சித்திரவதையின் வீடியோ அவர்களிடம் உள்ளது. இந்த கொடூரத்தின் அதிர்ச்சியில் இருந்து என் மகன் இன்னும் மீளவில்லை, “என்று தந்தை கூறினார். லட்சுமி பிரியா குடும்பத்தினர் பணத்தை கொடுத்து பிரச்னையை தீர்த்துக்கொள்ள விரும்பியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சிவாவின் தந்தையிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கின்றனர்.

 

© வேதபிரகாஷ்

12-04-2023


[1] The mother of Lakshmi Priya, who was arrested about the incident, said, “Her daughter Lakshmi Priya and the student who was attacked are of the same age, they were friends and there was no romance between them. However, the student has alleged that he forced her to fall in love with her, abused her on her cell phone and harassed her by sending vulgar videos.

https://india.postsen.com/News/399178.html

[2] Talking to Manorama News, Lakshmipriya’s mother said her daughter was not in a relationship with the young man.  “Both of them were friends. However, he later started verbally harassing her and even sent lewd videos to her phone. She had told me about asking her friends to help her get rid of his trouble,” said Lakshmipriya’s mother.

Malayala Manorama, Youth manhandled, dumped naked on road; ex-girlfriend arrested, Onmanorama Staff Published: April 11, 2023 11:13 AM IST Updated: April 11, 2023 08:29 PM IST.

[3] https://www.onmanorama.com/news/kerala/2023/04/11/man-attacked-exgirlfriend-arrested-ernakulam.html

தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? கண்டு பிடிப்பது, தீர்வு எப்படி? (2)

ஏப்ரல் 12, 2023

தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? கண்டுபிடிப்பது, தீர்வு எப்படி? (2)

கைது செய்யப்படும் போலி மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் சொற்பம்தான்[1]: டாக்டர் டி.முஹம்மது கிஸார் என்பவர் ழுதிய கட்டுரை கீழே அப்படியே கொடுக்கப் பட்டுள்ளது. தலைப்புகள் மட்டும் சில சேர்க்கப் பட்டுள்லன. அவ்வப்போது `போலி டாக்டர் கைது’ என்ற செய்திகளைக் கடந்து செல்வோம். மருத்துவமே படிக்காமல் `டாக்டர்’ எனக் கூறிக்கொண்டு சிகிச்சை அளிக்கும்போது பாதிப்பு ஏற்படும் நிலையில், அவர்கள் வெளிச்சத்துக்கு வருகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், கைது செய்யப்படும் போலி மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் சொற்பம்தான். இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் மட்டும் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன[2]. மருத்துவமே படிக்காமல் கிளினிக் அல்லது மருத்துவமனை நடத்துபவர்களே போலி டாக்டர்கள். ஏதாவது ஒரு மருத்துவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து, அனுபவ அடிப்படையில் மருத்துவம் பார்ப்பவர்கள். `பாராமெடிக்கல்’ என்னும் மருத்துவம் சார்ந்த பணிகளைச் செய்யும் நர்ஸ்கள், ஆயாக்கள், மருந்தாளுநர்கள் போன்றோரும் சிகிச்சையளிக்கின்றனர்.

டாக்டர் படிப்பு படித்து, ஹவுஸ் சர்ஜன் பயிற்சி முடித்தபிறகே டாக்டராக முடியும்: மருத்துவர் என்று சொல்லப்படுபவர், நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன், நோயின் தன்மையைக் கண்டறிந்து பலவழிகளில் ஆய்வு செய்வார். அத்துடன் அந்த நோயைக் கண்டறிந்து (Diagnose) உறுதிப்படுத்தியபிறகே மருந்துகளைப் பரிந்துரைப்பார். குறிப்பாக, மருந்து மாத்திரைகளைப் பரிந்துரைப்பதற்குமுன், அவை உடலில் எப்படிச் செயல்படும், மருந்து உடலுக்குள் சென்றதும் எப்படி வினை புரியும், பக்கவிளைவுகள் இல்லாமல் எப்படி மருந்து கொடுப்பது என்றெல்லாம் ஆராய்வார். இதுபோன்று மருந்து அறிவியல் சார்ந்த விஷயங்களை நன்றாக அறிந்தபிறகே ஒரு மருத்துவரால் நோயாளிக்கு மருந்துகளைப் பரிந்துரைக்க இயலும். இவையெல்லாம் அனுபவத்தில் வர வாய்ப்பில்லை. மருத்துவக் கல்லூரிகளில் படித்து ஹவுஸ் சர்ஜன் பயிற்சி முடித்தபிறகே, இந்த மருத்துவ அறிவைப் பெறமுடியும்.

அலோபதி மருத்துவம் படிக்காதவர் (ஆயுர்வேதம்) முதலியன, அம்முறை பின்பற்றலாகாது: இதேபோல் மாற்று மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி போன்ற துறைகளில் படித்துப் பட்டம் படித்தவர்கள், அலோபதி சிகிச்சை அளிப்பதும்கூட ஒருவகையில் போலி மருத்துவத்தின் கீழ்தான் சேரும். ஆம், இவர்களுக்கு அலோபதி முறை மருத்துவம் பற்றித் தெரியாது. அதுபோல, அலோபதி மருத்துவர்கள் மாற்றுமுறை சிகிச்சை அளிப்பதும்கூட குற்றமே. காரணம், அலோபதி மருத்துவர்களுக்கு மாற்றுமுறை மருத்துவம், அதுபற்றிய மருந்து அறிவியல் தெரியாது. இவைதவிர அலோபதி மற்றும் மாற்று மருத்துவமுறை எதுவும் பயிலாமல், அனுமதி பெறாத நிறுவனங்களில் சில மாதங்களோ அல்லது சில வருடங்களோ படித்துச் சான்றிதழ் (சர்டிஃபிகேட் கோர்ஸ்) பெற்றுவிட்டு, தானும் ஒரு மருத்துவர் என்று சிகிச்சை அளிப்பதும் போலி மருத்துவமே. இன்றையசூழலில் இதுபோன்ற போலி மருத்துவர்கள் அதிகம் உள்ளனர்.

பதிவு செய்த பிறகே மருத்துத் தொழில் பின்பற்ற முடியும்: அதேநேரத்தில் எத்தகைய படிப்பு படித்தாலும், ஒரு மருத்துவர் என்பவர் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே அவரால் சிகிச்சை அளிக்கமுடியும். அலோபதி மருத்துவர்கூட படித்து விட்டு, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல், பதிவு எண் பெறாமல் மருத்துவச் சிகிச்சை செய்வது குற்றமே. உதாரணமாக ரஷ்யா, உக்ரைன், ஜார்ஜியா, சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் மருத்துவத் தொழில் செய்வார்கள். அவர்கள், இந்தியாவில் எப்.எம்.ஜி.ஈ (Foreign Medical Graduate Screening Exam-  FMGE) என்னும் ஸ்கிரீனிங் தேர்வு எழுதி அதில் தேர்ச்சிபெற்று, அதன்பிறகு ஒரு வருடம் அரசு அங்கீகாரம்பெற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி எடுக்கவேண்டும். அத்துடன் மருத்துவ கவுன்சிலின் பதிவு எண் பெற்றபிறகே இந்தியாவில் மருத்துவம் செய்யமுடியும்.

ரஷ்யா போன்ற நாடுகளில் படித்து, அங்கீகாரம் இல்லாத படிப்புகளை போட்டுக் கொண்டு மருத்துவம் செயலாகாது: ரஷ்யா போன்ற சில நாடுகளில் எம்.டி (MD) பட்டம் பெற்றாலும் அவர்கள் இங்கே எம்.பி.பி.எஸ் மருத்துவராகவே கருதப்படுவார்கள் என்ற நிபந்தனையுடன்தான் மருத்துவ கவுன்சில் அவர்களைப் பதிவு செய்கிறது. காரணம், அவர்கள் எம்.பி.பி.எஸ் முடிக்காமலே எம்.டி படிக்கும் வசதி சில நாடுகளில் உள்ளது. அலோபதி மருத்துவப் பட்டமான எம்.பி.பி.எஸ் பெற்ற மருத்துவர்கள்கூட தன் பெயருக்குப் பின், தேர்ச்சி பெறாத அல்லது மருத்துவ கவுன்சிலில் அங்கீகாரம் இல்லாத டிகிரிகளைப் போட்டுக்கொண்டு சிகிச்சை அளிக்கிறார்கள். இதுவும் ஒருவகையில் போலி மருத்துவமே, இதுவும் குற்றமே.

போலி மருத்துவர்களை எப்படி அடையாளம் காண்பது?: போலி மருத்துவர்களில் பெரும்பாலானோர் தங்களது லெட்டர்பேடிலோ அல்லது கிளினிக் போர்டிலோ தங்கள் பெயரைப் பயன்படுத்தாமல் கிளினிக் பெயரை மட்டுமே பயன்படுத்துவார்கள். ஒருவேளை அதில் தங்கள் பெயரைப் போட்டால், பெயருக்குப் பின்னால் மருத்துவக் கவுன்சில் பதிவு எண் மற்றும் படித்த டிகிரியைப் போட மாட்டார்கள். ஒரு சிலர் இறந்துபோன மருத்துவர்கள் அல்லது இந்தியாவில் பல  ஆண்டுகளாக இல்லாத மருத்துவர்களின் பெயர் மற்றும் பதிவு எண்ணைப் பயன்படுத்தி போலி மருத்துவம் செய்கிறார்கள். இன்னும் சிலர், தங்களுக்குத் தெரிந்த,வேறு இடத்தில் பணிபுரியும் மருத்துவர்களின் பெயர்களையும், மருத்துவ கவுன்சில் பதிவு எண்ணையும் பயன்படுத்தி, மருத்துவத் தொழில் செய்கின்றனர். இது தண்டனைக்குரிய ஆள்மாறாட்ட கிரிமினல் குற்றமாகும்.

கண்டுபிடிக்க எளிய வழிகள்!: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், போலி மருத்துவர்களை அடையாளம் காண எளிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. உங்கள் பகுதியில் இருக்கும் மருத்துவரின் லெட்டர்பேடிலோ அல்லது பெயர்ப்பலகையிலோ உள்ள மருத்துவ எண், பதிவு எண், மருத்துவர் பெயர், படித்த பட்டங்கள் ஆகியவற்றைக் குறித்துக்கொண்டு கீழ்க்கண்டவாறு உங்கள் மொபைல்போனிலிருந்து குறுஞ்செய்தி அனுப்புங்கள். மெசேஜ் அனுப்பும் பகுதிக்குச் சென்று `TNMC (Space) REGNO (Space) பதிவு எண்’ டைப் செய்து `56767′ என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். உடனடியாக மருத்துவ கவுன்சிலிலிருந்து அந்தப் பதிவெண்ணைக் கொண்ட மருத்துவர் மருத்துவ கவுன்சிலால் அங்கீகாரம் பெற்ற பட்டங்கள் உள்ளிட்ட விவரங்களுடன் ஒரு பதில் வரும். உதாரணமாக, `TNMC REGNO 53065′ என்று டைப் செய்து `56767′ என்ற எண்ணுக்கு அனுப்பினால் `Doctor Name: MOHAMED KIZHAR IRSHATH DOWLATH M.B.B.S., D.C.H’ என்று பதில் வரும். அதை வைத்து அவர் உண்மையான மருத்துவரா, அவர் தனது பெயருக்குப் பின்னால் பயன்படுத்தும் படிப்புகள், அவர் படித்த படிப்பு மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டப் படிப்புதானா என்பதை அறிந்து அந்த மருத்துவரின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளலாம். சில உண்மையான மருத்துவர்கள்கூட `MBBS’ மட்டும் படித்துவிட்டு தங்களை பல்வேறு துறையின் சிறப்பு மருத்துவர் என்று போலி மருத்துவம் செய்வார்கள். அவர்களைப் பற்றிய விவரங்களை இந்தக் குறுஞ்செய்தி மூலம் கண்டுபிடித்து விடலாம்.

டாக்டர்களுக்கு ஸ்மார்ட் போர்டு (Smart Board) முறை: போலி மருத்துவர்களில் சிலர், வேறு மருத்துவரின் பெயர் மற்றும் பதிவு எண்ணைப் பயன்படுத்துவதை இந்தமுறை மூலம் கண்டுபிடிக்க முடியாது. இதற்கும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் புதிய வழிமுறையைக் கொண்டுவரவிருக்கிறது. அதாவது டாக்டர்களுக்கு ஸ்மார்ட் போர்டு என்னும் முறையைக் கொண்டுவருகிறது. பதிவு பெற்ற மருத்துவர்கள், குறிப்பிட்ட தொகை செலுத்தி இந்த போர்டைப் பெற்று தங்கள் கிளினிக்கில் வைக்க வேண்டும். அதில் மருத்துவரின் பெயர், பதிவு எண், அவரது டிகிரி, மருத்துவரின் புகைப்படம் போன்றவை இருக்கும். இதன்மூலம் ஆள்மாறாட்டம் செய்து போலி மருத்துவம் செய்பவர்களைக் கண்டுபிடித்துவிடலாம். இந்த போர்டில் ஒரு ஹோலோகிராம் (Hologram) இருக்கும். நமது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து இந்த இந்த ஹோலோகிராமுடன் ஒப்பிட்டுப் போலி மருத்துவரைக் கண்டுபிடித்துவிடலாம். இந்த ஸ்மார்ட் போர்டு திட்டம் மருத்துவ கவுன்சிலில் அங்கீகாரம்பெற்ற மருத்துவருக்கு மட்டுமே கொடுக்கப்படும். இது இன்னும் முழுஅளவில் நடைமுறைக்கு வராவிட்டாலும் இன்னும் சில மாதங்களில் வந்துவிடும். இதுபற்றி மேலும் விவரம் அறிய http://tnmedicalcouncil.org என்ற இணையதளத்துக்குச் சென்று பார்க்கலாம். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி, பட்டப் படிப்புகள் பற்றிய விவரங்களை அறிய http://www.mciindia.org என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

போலி டாக்டர்களால் ஏற்படும் ஆபத்துகள்!: போலி மருத்துவர்களுக்கு மருத்துவத்தின் அடிப்படை அறிவியலான உடல் கூறியல் (Anatomy),  உடல் செயலியல் (physiology), உயிர் வேதியியல் (Bio Chemistry), மருந்தியல் ( (Pharmacology), நோய்க்குறியியல் (Pathology),  நுண்ணுயிரியல் (Micro Biology) போன்றவை அறவே தெரியாது. அத்துடன் மருத்துவ அறிவியல் படிப்புகளின் அடிப்படைகளும் அவர்களுக்குத் தெரியாது. இவை எதுவும் தெரியாமல் அனுபவ அடிப்படையில் மட்டுமே மருத்துவம் செய்வதால் நோயாளிகளின் உடல்நிலை பாதிக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் கொடுக்கும் தவறான மருந்துகளால் நாள்பட்ட நோய்களான சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். சிலநேரங்களில் மரணம்கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வேதபிரகாஷ்

12-04-2023


[1] விகடன்,   போலி மருத்துவரைக் கண்டுபிடிப்பது எப்படி?- எளிய வழிமுறைகள்! , டாக்டர் டி.முஹம்மது கிஸார், Published: 04 Dec 2018 12 PM; Updated:04 Dec 2018 12 PM.

[2] https://www.vikatan.com/health/medicine/143756-how-to-find-fake-doctor

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (2)

ஏப்ரல் 5, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுசார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (2)

சிங்கப்பூருக்கு மாறியது ஏன்?: இந்த உலகத் தமிழ் மாநாடு நடைபெறவுள்ளதை 2022 இல் நியூஸ் 7 தமிழ் முதலாவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது[1] என்று பிப்ரவரி 2023ல் செய்தி வெளியிட்டாலும், இச்செய்தி ஏற்கெனவே ஆறு மாதங்களுக்கு முன்னரே தினமலரில் வெளிவந்து விட்டது[2]. அதாவது, இதைப் பற்றி அத்தனை பரபாரப்பு, தாக்கம் ஏற்படுத்த வேண்டும் போன்ற முயற்சிகளும் நடந்து கொன்டிருக்கின்றன. சென்னை-உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு, அடுத்த ஆண்டு ஜூன் 16 முதல் 18 வரை, சிங்கப்பூரில் நடக்க உள்ளது[3]. மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது[4]. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டான்ஶ்ரீ மாரிமுத்து சென்னையில் நேரில் சந்தித்து மலேசியாவில் நடைபெற இருக்கும் 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்தித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொண்டார்[5]. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் ஜூலை மாதம் மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது[6]. ஆக மலேசியவில் நடத்தப் படுவது உறுதியானது என்று தெரிகிறது. பிறகு, மறுபடியும் அது சிங்கப்பூருக்கு ஏன் மாறியது என்பதைக் கவனிக்க வேண்டும்.

அரசியலா, ஆதரவா, சித்தாந்தமாநடப்பது என்ன?: அரசியல் அல்லது அரசு நிறுவனங்களின் ஆதரவில் நடைபெற்ற கடந்த சில மாநாடுகளைப் போலன்றி, இந்த மாநாட்டை ‘மில்லேனியல் தமிழ்’ அமைப்பும் அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றமுமே நடத்தும் என்று திரு பொன்னவைக்கோ கூறினார். இம்மாநாட்டின் ஆய்வுக்குழு ஆலோசகராகவும் ஏற்பாட்டுக்குழு உதவியாளராகவும் உள்ள முனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மி, ஆய்வு நோக்கில் அமைந்த கட்டுரைகளே தேர்வுசெய்யப்படுகின்றன என்றும் இளையர்களுக்கான அங்கங்களும் இம்மாநாட்டில் இடம்பெறும் என்றும் சொன்னார்.இந்நிலையில், இத்தகைய ஆய்வு மாநாட்டைத் தமிழ் அறிஞர்கள் ஒன்றிணைந்து ஒத்த நோக்குடன் ஒரே இடத்தில் நடத்துவதே சிறப்பு என்று சிங்கப்பூர் பெருமக்கள் கருதுகிறார்கள்.சிங்கப்பூரில் அரசாங்கம், தமிழ்ப் பட்டக்கல்வி பயிற்றுவிக்கும் இரண்டு பல்கலைக்கழகங்கள், கிட்டத்தட்ட 40 தமிழ் அமைப்புகள், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஆகியவற்றின் துணையும் ஆதரவும் இல்லாமல் சிங்கப்பூரில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த முடியாது[7]. நாளடைவில் ஒரு திருவிழாவாக மாறி, அதன் உச்சமாக தற்போது இரு பிரிவுகளாகப் பிரிந்து போட்டி போடும் நிலைக்கு வந்துவிட்டது தமிழ்மொழியின் சாபக்கேடு என்றுதான் கூற வேண்டும் என்று சிங்கப்பூரின் கல்வியாளர்கள், தமிழ் செயல்பாட்டாளர்கள் பலரும் கவலை தெரிவித்தனர்[8]. தமிழ்… இந்த மூன்றெழுத்து இல்லாமல் நாம் இல்லை. அந்த மூன்று எழுத்து இல்லாமல் தமிழக அரசியலே இல்லை. அந்த அளவுக்கு பாமரனில் இருந்து பார்லிமென்ட் வரை மொழி உணர்வின் தாக்கம் ஏதோ ஒருவிதத்தில் இன்றும் இருந்து கொண்டுதான் வருகிறது[9]. அதன் தாக்கத்தின் எதிரொலிப்பாகத்தான் 300க்கும் மேற்பட்ட பாஜக எம்பிக்களை எதிர்த்து “தமிழ் வாழ்க” என்று நாடாளுமன்றத்தில் நம்மால் குரல் கொடுக்க முடிந்திருக்கிறது[10]

தமிழறிஞர்களுக்குள் சச்சரவு: நடக்குமா உலகத் தமிழ் மாநாடு?: தமிழறிஞர்களுக்குள் புதுப்புது சச்சரவுகள் கிளம்புவதால், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது[11]. அமெரிக்காவின் சிகாகோ நகரில், 2019 ஜன., 29 முதல் பிப்., 1 வரை, பத்தாவது உலகத்தமிழ் மாநாடு, டத்தோ மாரிமுத்து தலைமையில் நடந்தது. மாநாட்டின் நிறைவு நாளில், அடுத்த மாநாட்டை, 2023 ஜூலையில், ஐக்கிய அமீரகத்தின் தலைநகர் சார்ஜாவில், பொன்ன வைக்கோ தலைமையில் நடத்துவதாக அறிவித்தனர். இதையடுத்து, பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சியாளர்கள் தமிழ் மொழி, இலக்கணம், கலை, பண்பாடு, கணினி உள்ளிட்ட தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சார்ஜாவுக்குப் பதில், மலேஷியாவில் நடத்தப் போவதாக, டத்தோ மாரிமுத்து உள்ளிட்டோர் அறிவித்து உள்ளனர். இதை ஏற்காத பொன்னவைக்கோ தலைமையிலான அணியினர், சிங்கப்பூரில் நடத்தப் போவதாக அறிவித்து கட்டுரைகள் பெறுகின்றனர். மாநாடு நடத்துவோர், இரண்டு குழுக்களாக இருப்பது தெரியாத ஆய்வாளர்கள், இரண்டு குழுவிடமும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்டுரைகளை அனுப்பி உள்ளனர்[12]. இதுகுறித்து, தமிழறிஞர்கள் கூறியதாவது: பல நாடுகளில் உள்ள தமிழர்களை உணர்வால் இணைத்து, உயர்த்துவதற்காகத் தான், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், தமிழறிஞர்களுக்குள் ஒற்றுமை இல்லை. கட்சி சார்ந்தும், ஆட்சி சார்ந்தும் முடிவெடுக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, உலகத் தமிழ் மாநாடு நடத்த திட்டமிட்டதை, அப்போதைய உலகத் தமிழாராய்ச்சி மன்ற பொறுப்பாளர்கள் ஏற்கவில்லை. இதனால் தான், அவர் ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாடு’ என, கோவையில் நடத்தினார்.

ஆய்வுக் கட்டுரைகள் பெறுவதில், பரிசீலினை செய்வதில், ஏற்பதில் குளறுபடிகள்: சென்ற ஆண்டிலிருந்து சார்ஜா, மலேசியா என்று அறிவித்துக் கொண்டு, பல்லாயிரக் கணக்கில் ஆய்வுக்கட்டுரைகள் பெறப் பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அறிவித்துப் பெற்றதால், அவை பல இடங்களில் பதிவாகி உள்ளன.  இருப்பினும் ஆய்வுக் கட்டுரைகள் பெறுவதில், பரிசீலினை செய்வதில், ஏற்பதில், பலநிலைகளில் குளறுபடிகள் நடந்துள்ளன. முதலில் சிறந்த கட்டுரையாளர்களுக்கு சிங்கப்பூர் சென்றுவர இலவசம் என்றெல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தது. இதனால், பல்கலைக்கழகங்களிருந்து ஆராய்ச்சியாளர்கள் மிதத் தரமான ஆய்ழுக்கட்டுரைகளை அனுப்பியுள்ளனர். முதலில் ஏற்றுக் கொள்ளப் பட்டு, இப்பொழுது நிராகரிக்கப் பட்டுள்ளது. அதாவது “பார்வையாளர்களாக” வந்து கொள்ளல்லாம் என்று நிராகரிப்பு மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால், அத்தகைய மிதத் தரமான ஆய்ழுக்கட்டுரைகள் மற்றவர்கள் உபயோகப் படுத்துவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இப்பொழுது மாநாடு நடத்துவதில் இம்மோசடி பெருமளவில் நடக்கின்றது, மாணவி-மாணவியர்களுக்கு அக்கட்டுரைகள் விற்கப் படுகின்றன. இதனால், “பிளேஜியாரிஸம்” என்ற ஞானத் திருட்டு, விசயக் கொள்ளை, படிப்புத் திருட்டு அதிகமாகி வருகிறது. ஆகவே, இத்தகையோர் அவ்வாறான மோசடிகள் நடக்காது என்று வாக்குறுதி கொடுக்கவேண்டும்.

நிதிபெறுதலும், செலவழித்தலும், தமிழ் வளர்த்தலும்: இதுபோல், பல முரண்பாடுகள் நீடித்த நிலையில், தற்போது, பல கூறுகளாக அறிஞர்கள் பிரிந்துள்ளது வேதனை அளிக்கிறது. இந்த மாநாட்டை, மத்திய அரசின் கீழ் செயல்படும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ் இருக்கைகள் அமைந்துள்ள உலகப் பல்கலைகள், தமிழ் பல்கலை உள்ளிட்ட, தமிழக அரசு நிறுவனங்கள் இணைந்து நடத்த வேண்டும். அப்போது தான், அயல்நாடுகளில் மாநாடு நடத்துவதற்கான அனுமதியும், நிதியும் கிடைக்கும். மேலும், தமிழ் இருக்கைகள், தமிழ் பல்கலை, செம்மொழி நிறுவனத்தில் பல ஆய்வாளர்கள் உள்ளதால், உலகத் தமிழர்களை ஒருங்கிணைப்பதும் எளிதாக இருக்கும். இந்தாண்டு, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸாமில் உள்ள கவுஹாத்தி பல்கலையில் மாநாட்டை நடத்தலாம். இதனால், அங்குள்ள தமிழ்த் துறையும் வளரும். இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகள் இணைந்து, தமிழறிஞர்களுடன் பேசி, புதிய அமைப்பை ஏற்படுத்தி, மாநாட்டுக்கான பணிகளைத் துவக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

© வேதபிரகாஷ்

05-04-2023


[1] தினமலர், உலக தமிழாராய்ச்சி மாநாடு 2023ல் சிங்கப்பூரில் நடக்கிறது, மாற்றம் செய்த நாள்: செப் 25,2022 03:01; https://m.dinamalar.com/detail.php?id=3130639

[2] https://m.dinamalar.com/detail.php?id=3130639

[3] தினபூமி, மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு சனிக்கிழமை, 4 மார்ச் 2023

[4] https://www.thinaboomi.com/2023/03/04/194601.html

[5] கல்கி, உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெற உள்ளது!, கல்கி டெஸ்க், Published on : 22 Feb, 2023, 7:22 pm

[6] https://kalkionline.com/news/world/the-world-tamil-conference-will-be-held-in-malaysia-in-july

[7] தமிழ்.முரசு, உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: சிறந்த கல்வியாளர்கள் சேர்ந்து நடத்துவதே சிறப்பு, லதா 31 Oct 2022 13:13 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Oct 2022 15:42

[8] https://www.tamilmurasu.com.sg/singapore/story20221031-98833

[9] நக்கீரன், உலகத் தமிழ் மாநாடுகளும்அது கடந்து வந்த பாதையும்..., சுதாகர், Published on 05/07/2019 (12:12) | Edited on 05/07/2019 (12:43).

[10] https://www.nakkheeran.in/special-articles/special-article/10th-world-tamil-conference

[11] தினமலர், தமிழறிஞர்களுக்குள் சச்சரவு: நடக்குமா உலகத் தமிழ் மாநாடு?, – நமது நிருபர் –பதிவு செய்த நாள்: ஏப் 05,2023 06:57; https://m.dinamalar.com/detail.php?id=3285547

[12] https://m.dinamalar.com/detail.php?id=3285547

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, 2018ல் ஊழல் பற்றிய பாமக அறிக்கைகள் செய்திகள் ஆகின, ஆனால், எடுத்த நடவடிக்கைகள் தெரியவில்லை! (3)

மே 7, 2022

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, 2018ல் ஊழல் பற்றிய பாமக அறிக்கைகள் செய்திகள் ஆகின, ஆனால், எடுத்த நடவடிக்கைகள் தெரியவில்லை! (3)

அண்ணா முதல் பாரதியார் வரை, பல்கொள்ளைக்கழகங்களின் கதை!: இப்படி தலைப்பிட்டு, 2018ல் விகடன் பதிவு செய்துள்ளது[1]. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணம் பாதாளம் வரைக்கும் பாய்கிறது. இன்றைக்குக் கல்வியின் தரத்தைத் தாழ்ந்த தரத்துக்குக் கொண்டுபோய்விட்டார்கள்[2]. பணம் கொடுத்தால் பட்டம் வாங்கலாம் என்கிற நிலைமை பல்கலைக்கழகங்களில் உண்டு என்பது ஊரறிந்த உண்மையாகப் போய்விட்டது[3]. கல்விதான் இப்படியென்றால் பேராசிரியர்கள் பணியிடங்கள்முதல் துணைவேந்தர் பதவிவரைக்கும் பணம் இருந்தால் மட்டுமே போதும் என்கிற தகுதியைப் பெற்றிருக்கிறது. இந்த ஊழலுக்கு, ஊனும் உடலுமாக இருப்பவர்கள் உயர்கல்வித் துறை அமைச்சர், கல்லூரிகளின் இயக்குநர்கள், செனட் கமிட்டி துணைவேந்தர்கள் தேர்வுக் குழுவினர். இவை எல்லாவற்றையும்விட ஆளுநர் அலுவலகம் வரைக்கும் லஞ்சம் நீண்டுகொண்டே போகிறது[4]. அந்த அளவுக்குத் தமிழகத்தில், கல்வி பணத்துக்காக விற்கப்படும் பெட்டிக்கடைகள்போல் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் புரோக்கர்களை வைத்திருப்பது கொடுமையிலும் கொடுமையான விஷயம். கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் கைது நடவடிக்கைக்குப் பிறகாவது பல்கலைக்கழகங்கள் சுத்தம் செய்யப்படுமா என்பது அனைவரது கேள்வியாக இருக்கிறது.

சுபாஷ் சந்திரபோஸ் என்பவரின் விவரங்கள்: ஊழல் புகாருக்குள்ளான ஒருவரை துணைவேந்தராக நியமிக்க தேர்வுக்குழு பரிந்துரைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் 29-05-2018 அன்று விடுத்துள்ள அறிக்கையில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் சுப்பையாவின் பதவிக்காலம் வரும் திங்கட்கிழமையுடன் முடிவடையும் நிலையில், புதிய துணைவேந்தராக நியமிப்பதற்காக மூன்று பேரின் பட்டியல் பல்கலைக்கழக வேந்தர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது[5]. அவர்களில் ஊழல் புகாருக்குள்ளான சுபாஷ் சந்திரபோஸ் துணைவேந்தராக நியமிக்க தேர்வுக்குழு பரிந்துரைத்திருப்பது கண்டிக்கத்தக்கது[6]. அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயின்று திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த் துறை  பேராசிரியராக பணியாற்றிய அவர், 1998-2001 காலத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றினார். அப்போது பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர் பணிக்கான ஸ்லெட் எனப்படும் மாநில அளவிலான தகுதித் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாகவும், பலரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் குற்றச்சாற்றுகள் எழுந்தன. அந்தக் குற்றச்சாற்றுகளுக்கு ஆளான முனைவர் சுபாஷ் சந்திர போஸ் தான் இப்போது அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துனைவேந்தராக நியமிக்கப்படவுள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

2018-நிலைஊழல் செய்த துணைவேந்தர்கள் கைதாகாமல் பணியில் தொடர்கிறார்கள்: தமிழ்நாட்டில் அதிக ஊழல்கள் நடைபெற்ற முதல் 5 பல்கலைக்கழகங்கள் அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம் ஆகியவை தான். ஜி. ஜேம்ஸ் பிச்சை, முந்தைய துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக் கழகம், மற்றும் சி. சுவாமிநாதன், முந்தைய துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக் கழகம், மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன[7]. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை[8]. பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் ஜேம்ஸ் பிச்சை செய்த ஊழல்களும், அதன்மூலம் குவித்த சொத்துகளும் கணக்கிலடங்காதவை[9]. பாரதியார், பெரியார் ஆகிய இரு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக பணியாற்றிய முனைவர் சுவாமிநாதன் உரிய தகுதி இல்லாமலேயே அந்தப் பதவிகளுக்கு வந்தவர். இரு பல்கலைக்கழகங்களிலும் ஊழல் செய்வதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர். அதற்காக புதிய, புதிய வழிமுறைகளைக் கண்டறிந்தவர்[10]. இவருடைய ஊழலுக்கு உடந்தையாக இருந்து சிக்கிக் கொண்டதால் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவர் மீது ஏராளமான வழக்குகளை கையூட்டுத் தடுப்புப் பிரிவு பதிவு செய்திருக்கிறது. எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகங்களில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக அவரது வீட்டில் மத்திய வருமானவரித்துறை சோதனை நடத்தியது. ஆனாலும், அவர் இன்னும் பணியில் நீடிக்கிறார்.

தகுதியற்றவர்கள் தேர்தெடுக்கப் படுவதற்கு காரணம்பல்கலை ஊழல் பற்றி பாலகுருசாமி (2018)[11]: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியது[12], “பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஊழல் என்பது இன்றுநேற்று..நடைபெறும் ஊழல் அல்ல. கடந்த பத்து வருடங்களாகப் பல்கலைக்கழகங்களில் ஊழல் நடைபெற்றுவருகிறது. அதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை புகார் மனுவை ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறேன். ஆனால், இதுவரை அந்தக் கடிதத்தின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கணபதி ஒருவர் மட்டுமே ஊழல் செய்துவிடவில்லை. நிறைய துணைவேந்தர்கள் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். அவர்களைக் களையெடுக்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. கணபதியின் வழக்கை மையமாகவைத்தே அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, துணைவேந்தர்களைத் தேர்வுசெய்யக்கூடிய பல்கலைகழகத் தேர்வுக் கமிட்டியில் நேர்மையான ஆட்களை நியமிக்க வேண்டும்.தேர்வுக் கமிட்டியில்  இருப்பவர்களே ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, எப்படி நேர்மையான துணைவேந்தர்களை அவர்கள்  தேர்வுசெய்வார்கள்?

© வேதபிரகாஷ்

07-05-2022


[1] விகடன், அழகப்பா இது அழகாப்பா?” – அண்ணா முதல் பாரதியார் வரை, பல்கொள்ளைக் கழகங்களின் கதை! பகுதி-2, பாலமுருகன். தெ, Published:15 Feb 2018 4 PM; Updated:16 Feb 2018 1 AM.

[2] https://www.vikatan.com/news/education/116515-a-report-on-scam-in-karaikudi-alagappa-university-university-scam-series-part-2

[3] விகடன், “எண்ணியது முடிய காசு வேண்டும்அண்ணா முதல் பாரதியார் வரை, பல்கொள்ளைக் கழகங்களின் கதை! பகுதி-1, குருபிரசாத், Published:08 Feb 2018 1 PM; Updated:08 Feb 2018 4 PM.

[4] https://www.vikatan.com/arts/cartoon/115830-story-about-coimbatore-bharathiar-university

[5] தினமணி, அழகப்பா பல்கலை: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவரை துணைவேந்தராக நியமிப்பதா?, By DIN  |   Published On : 30th May 2018 11:34 AM  |   Last Updated : 30th May 2018 04:08 PM.

[6]https://www.dinamani.com/tamilnadu/2018/may/30/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE-2929827.html

[7] Times of India, As corruption cases idle, higher education slips into old, bad ways, TNN / Jul 28, 2019, 10:50 IST

[8] Bharathiar University’s former VCs G James Pitchai and C Swaminathan also have corruption cases pending against them. But, no action has been initiated against them so far.

https://timesofindia.indiatimes.com/city/chennai/as-corruption-cases-idle-higher-edu-slips-into-old-bad-ways/articleshow/70414522.cms

[9] மாலைமலர், ஊழல் புகாரில் சிக்கிய துணைவேந்தர்களை கைது செய்ய வேண்டும்ராமதாஸ், பதிவு: மார்ச் 26, 2018 11:10 ISTமாற்றம்: மார்ச் 26, 2018 11:11 IST

[10] https://www.maalaimalar.com/news/district/2018/03/26111043/1153189/Ramadoss-says-Corruption-scandal-caught-Vice-Chancellor.vpf

[11] விகடன், தகுதி இல்லாதவர்கள் தேர்வு செய்யப்படுவதே ஊழலுக்குக் காரணம்!” – பல்கலைக்கழக ஊழல் குறித்து கல்வியாளர்கள், கா . புவனேஸ்வரி, Published:07 Feb 2018 5 PMUpdated:07 Feb 2018 6 PM.

[12] https://www.vikatan.com/government-and-politics/corruption/115761-educationist-shares-their-concern-over-choosing-vice-chancellors-for-university

சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை, வலசை அகழ்வாய்வு, மாணவ-மாணவியர்களின் ஆர்பாட்டம் – உள்ளிருப்பு போராட்டம் – விடுதி பிரச்சினை முதல் பாலியல் புகார் வரை – ஊடகங்களின் வர்ணனை! அரசியலாக்கப் படும் முறை (5)

மார்ச் 20, 2021

சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை, வலசை அகழ்வாய்வு, மாணவமாணவியர்களின் ஆர்பாட்டம்உள்ளிருப்பு போராட்டம்விடுதி பிரச்சினை முதல் பாலியல் புகார் வரைஊடகங்களின் வர்ணனை! அரசியலாக்கப் படும் முறை (5)

பத்திரிக்கையாளர் சந்திப்புகடிதங்கள், வீடியோக்கள், செய்திகள் தயாரிப்பு என்று தொடர்வது: “மாணவர்களை ஒருமையில் பேசும் நபர். கேட்டால் நிர்வாக ஊழியர் என்கிறார்,” போன்ற வீடியோக்கள், இப்பிரச்சினையை பெரிதாக்க முயல்வது தெரிகிறது. பிறகு, அவர்களின் கடிதமும் வெளியிடப் பட்டுள்ளது: 18-03-2021 பற்றிய பகுதி:

“ஒரு மணிநேரம் 20 நிமிடம் நடந்த விசாரணையில், பேரா.சௌந்திரராஜனை எப்படியெல்லாம் காப்பாற்றலாம் என்று, பாதிக்கப்பட்ட மாணவி மீதுதான் குற்றம் என்று சித்தரிக்கும் வகையில் டிசைன் டிசைனாக, சாந்தகுமாரி, ரீட்டா ஜான், சசிகலா, உசைன், சம்பூரணி உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் பேசியுள்ளனர். இந்த குரூப்பில் டூப்பாக மாணவர்கள் தரப்பு என்று நிர்வாகமே நியமித்துள்ள ஆய்வு மாணவி உமா மகேஸ்வரியும் செயல்பட்டுள்ளார்.

உதாரணமாக, பாதிக்கப்பட்டவரின் தரப்பை முழுமையாக கேட்டறியாமல், மாணவியை குற்றவாளியைப்போல் நடத்தி, அதட்டி மிரட்டி, பிரச்சனையை ஊத்திமூட முயற்சித்துள்ளார் நாட்டாமை சாந்தகுமாரி. அதுமட்டுமின்றி, பேரா.சௌந்திரராஜன் வேண்டுமென்றே மார்பகத்தில் மூன்றுமுறை கைவைக்கவில்லை, போகிற போக்கில் அது நடந்துவிட்டது, இதை நீங்கள் தவறாக சித்தரிக்கிறீர்கள் என்று தீர்ப்பையும் வழங்கியுள்ளனர் மைனர்குஞ்சு கட்டப்பஞ்சாயத்தின் நாட்டாமைகள்.

மேலும், கமிட்டியில் இருந்த உசைன் பாதிக்கப்பட்ட மாணவியைப் பார்த்து, “செக்ஸூவல் ஹராஸ்மண்ட் கம்ப்ளைண்ட் குடுத்துட்டு, குடும்பத்தைவிட்டுட்டு பாய்ஸோட நைட்ல உட்காருவது சரியா?,” என்று கிரிமினல் தனமாக கேட்டுள்ளார். பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேரா.சௌந்திரராஜனை தண்டிக்க துப்பிலாத உசைன் போன்ற ஜால்ராக்கள், பாதிக்கப்பட்ட மாணவியையும், அவரோடு போராட்டத்தில் உள்ள மாணவர்களின் கேரக்டரையும் தவறாக சித்தரித்து தனது அல்ப்ப புத்தியை காட்டியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, இந்த பாலியல் அத்துமீறலை நேரில் பார்த்த சாட்சியங்களான மாணவர்களை அழைத்து பேசாத கமிட்டியினர், பேரா.சௌந்திரராஜன் செட்-அப் செய்து கூட்டி வந்த, சம்பவ இடத்திலேயே இல்லாதவர்களை சாட்சியங்களாக விசாரித்துள்ளனர். இந்த கமிட்டியின் கமிட்டி உறுப்பினர்கள் எவ்வாறு, பாதிக்கப்பட்ட மாணவியின் பிரச்சனையையே கேட்காமல், கேடுகெட்ட தனமாக பேரா.சௌந்தரராஜனுக்கு ஆதரவாக நடந்துகொண்டார்கள் என்பதை நீண்ட பட்டியலே போடலாம்.

இவ்வளவு அநீதிகளும் அட்டுழியங்களும் எங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பகல் இரண்டு இரவுகளை கடந்து எங்களுடைய போராட்டம் சென்று கொண்டிருக்கிறது. எங்களது குரலை நசுக்கும் வேலையைத்தான் பேரா.சௌந்திரராஜனும், பல்கலைக்கழக நிர்வாகமும் செய்து கொண்டிருக்கின்றனர். எங்களுடைய கோரிக்கையே, தவறுமேல்தவறு செய்து கொண்டிருக்கும் பேரா.சௌந்திரராஜனால் எங்களைப்போல் இன்னொரு மாணவரும், மாணவியும் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான்.

எனவே, இதுபோன்ற பாலியல் அத்துமீறல்களை ஆதரிக்கும் கமிட்டியை நியமிக்காமல், இவர்களை தவிர்த்த நேர்மையான பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர் பிரதிநிதிகள் கொண்ட கமிட்டியை அமைத்து விசாரிக்குமாறு கோருகிறோம். மேலும், ஃபெயில் ஆக்கியது முதல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது வரை கல்விச் செயல்பாட்டுக்கே முற்றிலும் தகுதியில்லாத பேரா.சௌந்திரராஜனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

இப்படிக்கு

பாதிக்கப்பட்ட தொல்லியல்துறை மாணவர்கள்,

சென்னைப் பல்கலைக்கழகம்

சேப்பாக்கம் வளாகம்

தொடர்புக்கு: 96001 62343

நடக்கும், நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்தால், பற்பல கேள்விகள் எழுகின்றன: நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்து, உள்ளவற்றை படித்து-சரிபார்த்து, எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நிலையில், சிந்தித்து, கீழ்கண்ட விசயங்கள் தொகுக்கப் படுகின்றன:

  1. முதுகலை படிப்பு, ஆராய்ச்சி என்று பல்கலைப் படிப்பு படிக்க வரும் மாணவ-மாணவியர், ஏன், எவ்வாறு, இதற்காக இவ்வாறு திசை மாறுகின்றனர்?
  2. அனுமதி கிடைப்பதே கடினமாக உள்ள நிலையில், அனுமதி கிடைத்தப் பிறகு, வகுப்பு, பாடம், படிப்பு, ஆராய்ச்சி என்றில்லாமல், ஏன் இத்தகைய ஆர்பாட்டம்-போராட்டம் முதலியவற்றில் ஈடுபடுகின்றனர்?
  3. உண்மையில் விடுதி, கட்டணம், மெஸ், சாப்பாடு…போன்ற பிரச்சினைகள் என்றால், பல்கலைக் கழக நிர்வாகம் அவற்றை பூர்த்தி செய்திருக்க வேண்டும். நூறாண்டுகளுக்கும் மேலாக நடக்கும் பல்கலைக் கழகத்திற்கு, இதெல்லாம், ஒரு பிரச்சினையாகவே இருக்க முடியாது.
  4. கொரோனா காலம் எனும் போது, உரிய வசதிகளை பல்கலைக் கழக நிர்வாகம் செய்திருக்க வேண்டும்.
  5. சென்னை பல்கலைக் கழகம் போன்ற உலக பிரசித்தி பெற்ற பல்கலைக் கழகங்கள் ஏன் உரிய பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், முதலியோரை உடனுக்கு உடன் நியமிக்காமல், காலியான இடங்களை வைத்து, ஒன்று, இரண்டு, மூன்று என்று பல ஆண்டுகளாக செயல்பட வேண்டும்?
  6. அரசியல் சார்ந்த மாணவ இயக்கங்கள், மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் முதலியோரைப் பிரிக்கும் வகையில் ஏன் அனுமதிக்கப் படவேண்டும்?
  7. பல்கலை துறை ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று, துறை ஆசிரியர்களே, முன்பு மாணவர்கள் தாக்கியபோது போராடி-ஆர்பாட்டம் செய்திருக்கிறார்கள்.
  8. பிறகு “அம்பேத்கர்-பெரியார் ஸ்டெடி சர்கிள்” போன்ற தீவிரக் கொள்கைகள், சித்தாந்தங்கள் கொண்ட குழுக்களால், மாணவ-மாணவியர்களிடையே அமைதி குலைக்கும் போக்கு ஏற்பட்டுள்ளது, ஏற்படுகிறது.
  9. படிப்பில் மட்டும் கவனம், சிரத்தை வைத்துக் கொண்டால், இத்தகைய பிரச்சினைகள் எழாது.
  10. மேலும், மாணவ-மாணவியர்களின் பெற்றோர், உற்றோர், மற்றோர் இத்தகைய விசயங்களில் கண்டுகொள்ளாதது போல தெரிகிறது. உண்மையில் அவர்களுக்குத் தெரியுமா, அறிவிக்கப் படுகிறதா என்று தெரியவில்லை.
  11. நிச்சயமாக, மாணவ-மாணவியர், இரவுகளில் அவ்வாறு தங்கி போராடுவதை யாரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள், விரும்ப மாட்டார்கள். பிறகு, அவை – அத்தகைய நிகழ்வுகள் “உள்ளிருப்புப் போராட்டங்கள்,”………எப்படி, எவ்வாறு, ஏன் நடந்து கொண்டிருக்கின்றன?
  12. எனவே, இவையெல்லாம் நடப்பது படிப்பு, பாடம், பாடதிட்டம், புத்தகங்கள், போதனை, பயிற்சி, ஆராய்ச்சி,……..முதலியவற்றைத் தாண்டிய நிலையில் வேறெதற்கோ சம்பந்தப் பட்டவர்கள் ஈடுபடுகிறார்கள் என்று தெரிகிறது.
  13. விளம்பரம், பிரச்சாரம், பிரபலம், போன்ற காரணங்களுக்காக, எதையோ சாதிக்கிறோம், போராடுகிறோம் என்று ஒரு மனநிலையோடு, உணர்ச்சிப் பூர்வமாக செயல்படுவது தான் தெரிகிறது. முகநூலில் வருவது, பிறகு குறிப்பிட்ட இணைதள ஊடகங்களில் வருவது, பிறகு பிரபல ஊடகங்களில் செய்திகளாக மாறுவது, வருவது, ஒரு முறையினைக் காட்டுகிறது.
  14. உணர்ச்சிப் பூர்வமான பேச்சுகள், தூண்டும் வாதங்கள், தொடர்ந்து செய்யும் விவாதங்கள், வாய்-சண்டைகள், தான் என்ற அகம்பாவத்துடன் செயல்படும் போக்கு, எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது போன்ற தோரணைகள்,……………………. முதலியன சரியான போக்காகத் தெரியவில்லை.
  15.  திட்டமிட்டு புகைப் படங்கள் – வீடியோக்கள் எடுப்பது, ஊடகங்களுடன் தொடர்புகள் வைத்துக் கொண்டு, இத்தகைய பிரச்சினைகளை விளம்பரம் படுத்துவது, படிப்படியாக திசைத் திரும்பி அல்லது திசைத் திருப்பி, வக்கிர-வன்ம குற்றச் சாட்டுகள், பரஸ்பர குற்றச் சாட்டுகள், முதலியவற்றை வைப்பது, தொடர்ந்து அவற்றை நீட்டிப்பது, ஒருதலைப் பட்சமாக ஒரு நிகழ்வை, நபர்களை விமர்சிப்பது, தாக்குவது முதலியன சொல்லி வைத்து செய்பவை போன்று உள்ளன, சரியான போக்காகத் தெரியவில்லை.
  16. சம்பந்தப் பட்டவர்கள், பெற்றோர், உற்றோர், மற்றோர் முதலியோர் பேசித் தீர்க்க வேண்டிய விசயங்களை பிரச்சினை ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. மனிதநிலை தவறுகள் மற்றும் மனப்பாங்குடன் பழி வாங்க வேண்டும் போன்ற மனோபாவங்கள் இருந்தால், அவற்றை மாற்றியாக வேண்டும்.
  17. மக்களை ஒன்று சேர்ப்பது என்பது தான் கடினம், பிரிப்பது சுலபமான செயல் தான்.

© வேதபிரகாஷ்

20-03-2021

அம்பேத்கர் பெரியார் ஸ்டெடி சர்கிள் என்ற அமைப்பு, சர்ச்சைக்குரிய வேலைகளை செய்து வருகிறது. மாணா-மாணவியர்களைப் பிரிக்கிறது.
இங்கு போராடும் மாணவர்கள் மற்றவர்களுடன் சண்டை போடுவது முதலியவற்றில் ஈடுபடுவது தெர்கிறது.
ஊடகங்கள் சரிபார்த்து செய்திகளை வெளியிடுவதில்லை என்பதற்கு, இது ஒரு உதாரணம். வகுப்பில் அந்த சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி நடந்ததாகக் குறிப்பிடுகிறது.