Archive for the ‘அடியாட்கள்’ Category

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! அரசியல்வாதிகளின் பேச்சுகள்! (2)

ஜூலை 24, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! அரசியல்வாதிகளின் பேச்சுகள்! (2)

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-public-lecture-political.jpg

உள்ளூர் அறிஞர்கள் கௌரவிக்கப் பட்டனர்: முதல் நாளில், மலேசியாவில் குழந்தை இலக்கியம் என்ற தலைப்பில் பாப்பாவின் காவலர் கவிஞர் முரசு நெடுமாறன் உரையாற்றினார். குறிப்பாக பள்ளி குழந்தைகளிடையே கவிதை மூலம் எப்படி தமிழை வளர்த்திருக்கிறோம் என்பதை அழகாக எடுத்துரைத்தார்[1]. கவிஞர் முரசு நெடுமாறன், சிலாங்கூர் மாநில முன்னாள் க. முருகன் ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பிக்கப் பட்டனர். மலேசியாவைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் இராஜேந்திரன், மாநாட்டிற்கான செயலாளர் முனைவர் கிருஷ்ணன் மணியம் ஆகியோர் உட்பட பல பிரமுகர்களும் அரசு சார்பற்ற இயக்கங்களை சேர்ந்தவர்களும் மற்றும் பொது மக்களும் திரளாக வந்திருந்து சிறப்பித்தனர்[2]. உள்ளூர் ஊடகங்கள் இவற்றைப் பற்றி செய்திகள் வெளியிட்டுள்ளன. பிறகு பேசியவர்கள் தமிழ் இலக்கியம், வைணவம், சைவம் பற்றியெல்லாம் பேசினர். ஆனால், அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்த போது, மாநாட்டின் போக்கு திசைத் திரும்பியது எனலாம்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-thiruma-speaking-1.jpg

பிரிவினைவாதம் பேசப் பட்டது: மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள திருமாவளவன் பேசியதாவது[3]: மரபு சார்ந்த கலாச்சார உரிமைகளை பாதுகாக்க உலகத் தமிழ் மாநாடு முனையும். தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வலிமை வாய்ந்தது மாநாடு. தமிழ்த் தேசியம் என்பது மொழி, இன உணர்வு மட்டுமல்ல. அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டம் தமிழ்த் தேசியம். மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான். அவற்றைக் கடந்து தேசிய இனம் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மதம் அடையாளத்தை விட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது என்று கூறினார்[4]. இம் மாநாட்டின் பொது அரங்கில் மலேசிய நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்கு ‘வளர்ச்சி நோக்கில் தமிழ்’ எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முதல்நாள் மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-audience.jpg

கல்விசார், படிப்பு சம்பந்தப் பட்ட, ஆராய்ச்சி-கட்டுரைகள் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை: ஆய்வு அமர்வுகள், ஆய்வு கட்டுரைகள், விவரங்கள், வாசிப்புகள் பற்றிய செய்திகளைக் காணவில்லை. கல்விசார், படிப்பு சம்பந்தப் பட்ட, ஆராய்ச்சி-கட்டுரைகள் என்பது பற்றி மூச்சுக் கூட விட காணோம். மாநாட்டிற்குச் சென்றவர்களும், சமூக ஊடகங்களில் “நான் மாநாட்டிற்குச் சென்றேன்,” என்று புகைப்படங்கள் போட்டுக் கொண்டாலும், கட்டுரைப் படித்தேன், கேள்விகள் கேட்டார்கள், நான் பதில் சொன்னேன் என்றவாறு இல்லாமல், ஏதோ சுற்றுலா சென்றேன் பாணியில் தான் இருந்தது. ஆய்வுக்கட்டுரைகள் பற்றிய பட்டியல், தலைப்புகள், விவரங்களைக் காணோம் கலந்து கொண்டவர்களும் அவ்விவரங்களைப் பகிர்வதாகத் தெரியவில்லை. பெர்ணாம் என்ற இணைதளம் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலரின் வாசிப்புகள் தான் பதிவாகியுள்ளன (சைவம், வைணவம், சித்த மருத்துவம், பிள்ளைத் தமிழ், தோல்சீலை முதலியன).  சில கட்டுரைகள் நன்றாக இருந்தன. மற்றபடி, பெரும்பாலான மற்ற ஆய்வுக்கட்டுரைகள் அரைத்த மாவை அரைக்கும் என்பார்களே அந்த பாணியில் தான் இருந்தன.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia.more-politicians.2.jpg

அரசியல்வாதிகளை அழைத்து அரசியல் இல்லாமல் பேசுங்கள் என்று சொல்லப் பட்டது:. ஆனால், அவர்கள் எல்லோருமே அரசியல் தான் பேசினர், வீடியோவும் உள்ளது. அரசியல் மாநாடாக மாறிய நிலையில், தமிழ் தேசியம் போர்வையில், பிரிவினைவாதம் தான் பேசப்பட்டது. வேல்முருகன், தாமஸ், திருமாவளவன், ஶ்ரீகாந்த் [பீஜேபி], சுப.வீரபாண்டியன், நக்கீரன் கோபால், இலானி, நிறைமதி [சீனர்], கடைசியாக கே.வீரமணி, என்று அதிகமாக, அரசியல் தான் நிறைய பேசப்பட்டது. தமிழ் தேசியம், பார்ப்பனியம், வர்ணம், தமிழ்-சமஸ்கிருதம், சமஸ்கிருத ஆதிக்கம், ஆரியன்–திராவிடன் பண்பாட்டு படையெடுப்பு, என்றெல்லாம் பேசப் பட்டது. வெண்பா, ஆசிரியபா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பா முதலியவற்றிற்கு திரிபு விளக்கமும் கொடுக்கப் பட்டது. இதனால், தமிழுக்கு, தமிழ் ஆராய்ச்சிக்கு, தமிழ் மேன்பாட்டிற்கு எந்த பிரயோஜனும் இல்லை. பெரும்பாலான நேரம் இவ்வாறு அரசியல், பேசியதையே பேசியது, ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் என்று தான் சென்றது. ஊர் சுற்றிப் பார்க்க வந்தவர், அவரவர் வேலைகளுக்கு சென்றனர். சாப்பிடும் நேரதிற்கு வந்து விடுவர்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-velmurugan.jpg

மொழி, தேசம், தேசியம், நாடு, ஒன்றியம் என்று குழப்பவாதங்களை வைக்கும் குழப்பவாதிகள்: வேல்முருகன் தமிழ் தேசியம் என்று, பிரிவினைவாதம் பேசியது வேடிக்கையாக இருந்தது. முன்பு, கம்யூனிஸவாதிகள், பிறகு தமிழீழ ஆதரவாளர்கள், அதற்கும் பிறகு தமிழக பிரிவினைவாதிகள், மொழியை வைத்து, மொழிவாறான தேசிய இனங்கள் என்று பேசி குழப்பி வந்தார்கள். அதாவது ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தேசம் உள்ளது, அந்தமொழிவாரி தேசம் போற்றப் பட வேண்டும். அந்த தேசியம், இந்திய தேசியம் வேறு. எப்படி பலமொழி பேசும் தேசியங்கள், இந்திய நாட்டில் ஒன்றியத்தில் சேர்ந்திருக்கின்றனவோ, அதே போல சுயநிர்ணய உரிமையோடு, ஒவ்வொரு தேசமும் பிரிய உரிமை உண்டு என்றெல்லாம் குழப்பவாதங்களில் ஈடுபட்டனர். நாடு, தேசம், தேயம், இடம் போன்ற சொற்கள், ஒரு இடத்தைத் தான் குறிப்பிட்டன. அதை அறிந்தும் இவர்கள் திரிபுவாதம் செய்து வருகிறார்கள். அவையெல்லாம் கருணாநிதி போன்றோரே அடக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. இப்பொழுது, மறுபடியும் திமுக ஒன்றியம், திராவிட மாடல், திராவிட ஸ்டாக் என்றெல்லாம் பேசி வருவதால், இந்த குழப்பவாதிகளுக்கு தைரியம் வந்து, அவ்வாறே முன்பு போல, பிரிவினைவாதம் பேச ஆரம்பித்து விட்டனர். ஆக இந்து வேல்முருகன் போன்றோருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-srikanth.jpg

வலதுசாரிகளின் பலவீனம், ஒற்றுமையின்மை மற்றும் பழமைவாதம்: ஶ்ரீகாந்த் என்ற பிஜேபி இந்தியதேசத்துடன் பேசினாலும், மற்றவர்கள் கொஞ்சம் பேசினாலும், எடுபடவில்லை. இவரும் கி.ஆ.பே.வின் பெயரன் என்ற முறையில் இருக்கிறார். நக்கீரன் கோபாலுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். இடதுசாரிகள், திக-திமுகவினர் ஒன்றாக வந்திருந்த நிலையில், வலதுசாரிக்கள் இங்கு வாய்கிழிய பேசினாலும், அங்கு யாரையும் காணோம். “இந்திய தேசியமும், தமிழ் தேசியமும்” என்று பேசி, அவர்களின் முகத்திரையைக் கிழிக்க ஆளில்லை; “தமிழ் தேசியமும், திராவிட தேசியமும்,” என்று கட்டுரை வாசிக்கவும் திராணி இல்லை. ஆனால், இங்கு, திராவிட மாயை, பெரியாரின் ம்ச்றுபக்கம் என்றெல்லாம் பேசுவார்கள், எழுதுவார்கள், புத்தகங்களும் போடுவார்கள். ”முகநூலில் கம்பு சுற்றுவதோடு சரி, இம்மாதிரியான, கருத்துருவாக்கும், தாக்கம் கொண்ட அல்லது ஏற்படுத்தும் கருத்தரங்களில் கலந்து கொள்வதில்லை.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-srikanth-next-to-gopal.jpg

வலது சாரிகளின் ரகசிய கருத்தரங்கங்கள்: மத்திய அரசு ஆதரவு மற்றும் நிதியுதவியுடன் நடத்தப் படும் கருத்தரங்கங்கள், மாநாடுகள் என்று இவர்களே கலந்து கொண்டு, குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இலக்கிய விழா என்று கொண்டாட ஆரம்பித்தாலும், ஏதோ ரகசியமாக நடத்துவது போல நடத்துகிறார்கள்[5]. எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லை. சுமார் 50-100 என்றிருந்தால், அவர்களுக்குள் அகிர்ந்து கொண்டு, கூடி விலம்பரப் படுத்திக் கொள்கிறார்கள். மற்ற படி, பொது ஊடகங்களில் அதைப் பற்றி எந்த தகவலும் வருவதில்லை. இதனால், லட்சக்கணக்கில் பணம் செலவழித்தாலும், சித்தாந்த ரீதியில் ஆட்களுக்கு பயிறிசி அளிப்பதில்லை, தயார் செய்வதும் இல்லை. அனுபவம் கொண்ட, ஆராய்ச்சியாளர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. தெரிந்தும் ஓரங்கட்டுகிறார்கள் இதனால் தான், தங்களது பலத்தையுமிழந்து, எதிர்சித்தாந்திகளின் பலத்தை மறைமுகமாக வளர்க்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

24-07-2023


இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-senator-saraswati.jpg

[1] வணக்கம் மலேசியா, பேராளர்கள்பார்வையாளர்கள்திரளாககலந்துகொண்ட 11-வதுஉலகத்தமிழாராய்ச்சிமாநாடு, 21-07-2023.

[2]https://vanakkammalaysia.com.my/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/

[3] நியூஸ்7தமிழ், தேசியஇனஅடையாளத்தைவலுப்படுத்தவேண்டும்! – உலகமலேசியதமிழ்மாநாட்டில்தொல்.திருமாவளவன்பேச்சு!, by Web EditorJuly 21, 2023

[4] https://news7tamil.live/even-if-divided-by-politics-religion-and-cultural-identities-the-national-identity-should-be-strengthened-thol-thirumavalavan.html

[5]  பாண்டி-லிட்-பெஸ்ட் என்றெல்லாம் நடத்துகிறார்கள், ஆனால், விவரங்கள் தெரிவதில்லை. அவர்களுக்கே தெரியாத அளவில் கூட நடக்கிறது.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-vips.jpg



11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! (1)

ஜூலை 24, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! (1)

உலகம் முழுவதும் பரவியஉலகத் தமிழ் மாநாடுபிரச்சினை: 21-07-2023 அன்று தொடங்கும் 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கான ஏற்பாட்டுக்  குழுக் கூட்டம், மஇகா துணைத் தலைவர் எம். சரவணனுக்கு முதலில் அந்த நிகழ்வில் பேச இடமளிக்கப்படாததால், கிட்டத்தட்ட அடிதடியில் முடிந்தது[1]. Pakatan Harapan-MIC meeting என்பதே அரசியல் கூட்டணி என்று தெரிகிறது. பிரதமர் அன்வார் இப்ராகிமின் முக்கிய உரையைத் தொடர்ந்து சர்வதேச மாநாட்டில் அமைச்சர் மட்டுமே உரையாற்றுவார் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், சரவணனுக்கு ஏன் இடம் கொடுக்கக் கூடாது என்ற வாதம் எழுந்தது. அதனால் அப்பிரச்சினை ஏற்பட்டது[2]. மனிதவள மேம்பாட்டு அமைச்சர் சிவகுமார் [Sivakumar Varatharaju Naidu] IATRன் தலைவராக நியமிக்கப் பட்டதற்கும் எதிர்ப்பு மொழிரீதியில் என்றும் வெளிப்பட்டது[3].  அதாவது அவர் தெலுங்கர், தமிழர் கிடையாது என்ற வாதம் வைக்கப் பட்டது. தமிழ் வல்லுனர்களுக்கு சிவகுமாரைத் தெரியாது, அவருக்கு தமிழ் இலக்கியம் முதலியனவும் தெரியாது என்றெல்லாம் விமர்சனம் செய்யப் பட்டது[4]. இவ்வகையான மொழிவெறி இக்காலத்திலும் இவர்களிடம் இருப்பது திகைப்பாகவே இருக்கிறது. இந்தியாவில் ந்தியரை, தென்னிந்தியரை ஏன் தமிழரைக் கூடப் பிரித்து வருகின்றனர் என்றால் அயல்நாட்டிலும் அத்தகைய பிரிவினைவாதங்கள் இக்குழுக்கள் வைப்பதை கவனிக்கலாம்.

பல இடங்களை தேசங்களைக் கடத்து வந்த மாநாடு: முன்னரே இம்மாநாடு எங்கு நடத்தப் பட வேண்டும் என்ற பெரிய பிரச்சினையும் இருந்தது. ஷார்ஜா, சிங்கப்பூர், மலேசியா என்றெல்லாம் விவாதிக்கப் பட்டு, சென்னை என்று நடந்தது[5]. போதாகறைக்கு, சென்னையில் ஜூலை 7 முதல் 9 வரை 11ம் உலகத் தமிழ் மாநாடு என்று நடந்து விட்டது[6]. ஒவ்வொரு நிலையிலும் சச்சரவு, முரண்பாடு, சண்டை, புகார் என்றெல்லாம் எழுந்து அடங்கி விட்டன. நிதி, நிதியுதவி, நிதி பற்றாகுறை என்றெல்லாம் காரணங்கள் குறிப்பிட்டாலும், அதனையும் மீறி எதுவோ செயல்படுவது தெரிந்தது. இருப்பினும், இப்பிரச்சினை கோலாலம்பூருக்கு சென்று அங்கு அரசியலாகவே மாறி விட்டது. அழைப்பிதழ் கொடுக்கும் விசயத்தில் கூட அரசியல் தான், பெரும்பாலான அழைக்கப் பட்டவர்கள் திக-திமுகவினர் தான். அவர்களது இணைதள போட்டோக்களே சான்றாக உள்ளன.  அரசியல் பிரச்சினை பெரிதாக்க வேண்டாம் என்ற ரீதியில் தான் தமிழ்நாட்டிலிருந்து தலைவர்கள் வராமல், பிரதிநிதிகள் போல மற்றவர்களை அனுப்பியுள்ளனர். ஸ்டாலின் முதல் எடப்பாடி வரை வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர். அதிமுக சார்பில் வைகை செல்வன் கலந்து கொண்டு பேசினார். அதே போல வந்தவர்கள் மேடையில் பேசினர்.

தமிழ் என்று சொல்லிக் கொண்டே பிரிவினைவாதம் வளர்த்து சண்டைப்போட்டுக் கொள்ளும் கூட்டங்கள்: மொத்தத்தில், “தமிழர்” என்று சொல்லிக் கொள்வதில், அடையாளம் காணுவதில், இப்பொழுது, சில சித்தாந்திகள் எழுப்பும் பிரச்சினையான யார் திராவிடன், யார் தமிழன் போன்ற அர்த்தமில்லாத விசயங்களை இதிலும் நுழைப்பது போலிருக்கிறது. தமிழன் – திராவிடன் அடையாளங்களைத் தாண்டி அப்படி என்ன வேலை செய்கிறது என்பது ரகசியமாகத் தான் உள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில், “தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர் கிடையாது,” என்று பேச ஆரம்பித்து விட்டனர். அப்படியென்றால், தமிழன் என்பதற்கு என்ன தகுதிகளை, சரத்துகளை வைப்பார்கள் என்று தெரியவில்லை. சென்னை மாநாட்டிற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், சிலர் இரண்டிலும் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்-தமிழ் தேசிய, தமிழ் இன, தமிழின தேசியவாத, சுயயாட்சி, சுய-உரிமை என்றெல்லாம் ஆந்தைகள் போல இருந்து, பச்சோந்திகளாக பேசி திரிகின்றனர். பிரிவினைவாதத்தைத் தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

21-07-2023 வெள்ளிக்கிழமை முதல் நாள்: கோலாலம்பூர், ஜூலை 21- மலேசியாவில் இன்று (21.7.2023) 11 ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசிய நட்டுப்பண், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல், மாநாட்டுப் பாடலுடன் கோலாலம்பூரில் எழுச்சியுடன் தொடங்கியது[7]. மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் இன்று (21.7.2023) முதல் 3 நாள்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் (International Association for Tamil Research) 11ஆம் மாநாடு நடைபெற்றது[8]. ஜூலை 21, 22, 23 ஆகிய மூன்று நாள் மாநாட்டினை மலேசிய நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் 23-07-2023 அன்று தொடங்கி வைத்தார். பலருக்கு அழைப்பிதழ் பலவிதமாக அனுப்பப் பட்டது[9]. தமிழ்நாடு, இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், பொது நல செயற்பாட்டாளர்கள், கல்லூரி – பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் என பல தரப்பினரும் பங்கேற்று, ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து உரையாற்றுகிறார்கள்[10].  முதல் நாளான 21.7.2023 அன்று தொடக்க விழாவில் மலேசிய நாட்டின் துணை அமைச்சர் சரஸ்வதி, மலேசிய இந்திய காங்கிரஸ் தேசிய துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இணையக்  காலகட்டத்தில் தமிழ்மொழி என்ற கருப்பொருளை மையமாக வைத்து மாநாடு  நடைபெறுகிறது.

முன் வரிசையில் அல்லது முன்னணியில் அரசியல்வாதிகள்: தொடக்க விழா அரங்கில், அரசியல்வாதிகள் அதிகமாகவே இருந்தனர். அவர்கள், அவர்களாகவே வந்தனரா, வரவழைக்கப் பட்டனரா என்று தெரியவில்லை.

  1. திராவிடர் கழகம் கி.வீரமணி,
  2. தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்,
  3. மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா,
  4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் சி.மகேந்திரன்,
  5. இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மதுக்கூர் இராமலிங்கம்,
  6. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி (சி.பி.எம்.),
  7. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் செந்திலதிபன்,
  8. ‘நக்கீரன்’ கோபால்,
  9. தமிழ்த் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன்,
  10. கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் மற்றும்

கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பலர் பங்கேற்றனர்.

பொது விவரங்கள்: மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் தொடங்கியது. பியர்ல் இன்டர்நேசனல் விடுதியில், தங்கியவர் எல்லோரும் காலை உணவை முடித்துக் கொண்ட பின்பு, பேருந்துகள் மூலம் அரங்கிற்கு சென்றனர். 9.45 மணி அளவில் நிகழ்ச்சிகள் தொடங்கின – கடவுள் வாழ்த்து, மலேசிய நாட்டுப் பண்,  தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். அடுத்து வரிசையாகச் சொற்பொழிவுகள் அரங்கேறின. மலேசியத் தமிழ் அறிஞர்களும், இந்தியத் தமிழ் அறிஞர்கள், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முன்னணியினர் வரிசையாகச் சொற்பொழிவு ஆற்றினர். பகல் உணவு, மாலைச் சிற்றுண்டி, இரவு உணவு எல்லாம் அங்கேயே ஏற்பாடு செய்து இருந்தனர். இது ஒரு பங்கேற்றவரின் விவரம். நிறைவாக, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் 40 நிமிடங்கள் சிறப்புரை ஆற்றிய பிறகு, இன்றைய நிகழ்வுகள் நிறைவு பெற்றன. மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை, ஆடல், பாடல்கள். 8 மணிக்கு விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

© வேதபிரகாஷ்

24-07-2023


[1] Free Malaysia Today, Altercation at PH-MIC meeting over who’ll speak at world Tamil conference, K. Parkaran – 20 Jul 2023, 9:57 pm.

[2] https://www.freemalaysiatoday.com/category/nation/2023/07/20/altercation-at-ph-mic-meeting-over-wholl-speak-at-world-tamil-conference/

[3] Focus – Malaysia, Tamils disappointed as Sivakumar, a Telugu, is appointed International Tamil Conference chairman, By Contributor – Tamil Vaanan, 13/07/2023.

[4] https://focusmalaysia.my/tamils-disappointed-as-sivakumar-a-telugu-is-appointed-international-tamil-conference-chairman/

[5]  இவை பற்றியெல்லாம் எற்கெனவே விவரமாக முந்தைய பிளாக்குகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

[6]  இதைப் பற்றியும் விவரமாக எனது முந்தைய பிளாக்குகளில் படித்துத் தெரிந்து கொள்ளலாம். ஊடகங்கள் இவ்விசயங்களில் மௌனமாக இருப்பது தான் ஆச்சரியமாக-திகைப்பாக இருக்கிறது.

[7] நியூஸ்.டி.எம், 11-வது உலகத்தமிழ் மாநாடு மலேசியாவில் தொடங்கியது..!, By: Newstm Admin, Sat, 22 Jul 2023.

[8] https://newstm.in/tamilnadu/11th-world-tamil-conference-begins-in-malaysia/cid11656242.htm

[9] நியூஸ்.லங்காஶ்ரீ, மலேசியாவில் 11ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: பிரபலங்களுக்கு பறந்த அழைப்பு, Malaysia, Tamil,  By Nandhini..

[10] https://news.lankasri.com/article/11th-world-tamil-research-conference-in-malaysia-1687942005

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர், சிங்கப்பூரிலிருந்து சென்னை என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (3)

மே 3, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுசார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர், சிங்கப்பூரிலிருந்து சென்னை என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (3)

02-05-2023 ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பப் பட்ட ஈ-மெயில்:

அன்புள்ள அறிஞருக்கு,  

வணக்கம்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மய்ய நிர்வாகக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க காத்திருந்தமைக்கு நன்றி.

நாம் முன்னர் அறிவித்த படி பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு ஏற்ற பல்வேறு இடங்களை பார்வையிட்டோம். அதன் அடிப்படையில் உலகில் உள்ள அனைவரும் எளிதாக வந்து செல்லும் வகையிலான இடத்தினை கண்டறிந்துள்ளோம். மாநாடு நடைபெறவிருக்கும் இடத்தினை உறுதி செய்யும் இறுதிக்கட்ட பணிகளை செய்து வருகிறோம். வருகின்ற வாரத்தில் தேர்வு செய்த இடத்தையும் மேலும் விவரங்களையும் பகிர்ந்து கொள்கிறோம்.   மாநாட்டிற்கு தொடர்ந்து உங்கள் ஆதரவையும் பங்கேற்பையும் எதிர்பார்க்கிறோம்.

மாநாடு ஏற்பாடுகள் தொடர்பான மேலதிக விவரங்களுக்கு organizing-committee@icsts11.org என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.  

நன்றி .  

அன்புடன்

ஆய்வுக்குழு,
பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு  

தமிழறிஞர்களுக்குள் சச்சரவு ஏன்?: தமிழ் பெயரில் உண்மையில் ஆராய்ச்சி, போன்றவை விடுத்து, எப்படியெல்லாம் வியாபாரம் செய்யலாம் என்று தமிழகம் மட்டுமல்லாது அயல்நாடுகளில் வாழும் “தமிழர்களும்மரசியல் செய்வது தெரிகிறது. இதனால், உண்மையான தமிழ் வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர் மற்றும் விற்பன்னர்களுக்கு சங்கடம், பிரச்சினை ஏன் குழப்பமும் ஏற்படுகிறது. அரசியலோடு, சித்தாந்தம், எல்லை கடந்த மற்ற விருப்பு-வெறுப்புகள் முதலியவையும் இவற்றுடன் சேர்கின்றன.  “தமிழறிஞர்களுக்குள் சச்சரவு” என்று குறிப்பிடுவதே[1] தகுதியற்றது, தேவையற்றது மற்றும் விலக்கத் தக்கது எனலாம்[2]. அதிகாரம், செல்வாக்கு, வியாபாரம், அரசியல் முதலியவை இல்லை என்றால், மாநாடு நடத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை எனலாம். கருணாநிதி காலத்திலேயே, இத்தகைய மாநாடு நடத்தும் விவகாரம் பிரச்சினை, சர்ச்சை மற்றும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. நொபூரா கராஷிமா போன்றோர், தமிழகத்தில் அரசியல் ரீதியில் நடத்தப் படும் மாநாடு, “உலகத் தமிழ் மாநாடு” இல்லை மற்றும் தாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் அறிவித்தனர்.

மாரிமுத்து வெர்சஸ் பொன் வைக்கோ போட்டி ஏன்?: உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, சென்னையில் நடத்த திட்டமிடப்படுகிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில், இதுவரை பத்து மாநாடுகள் நடந்துள்ளன. பத்தாவது மாநாடு, சிகாகோவில் நடந்தது. அதில், 11வது மாநாட்டை, சிங்கப்பூரில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், உலக தமிழ் ஆராய்ச்சி மன்ற தலைவர் பொன்னவைக்கோ தலைமையில் ஒரு குழு சிங்கப்பூரிலும், முன்னாள் தலைவர் மாரிமுத்து தலைமையில் ஒரு குழு மலேஷியாவிலும், 11வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதாக அறிவித்து, பணிகளை செய்து வருகின்றன. இது, தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அறிஞர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது[3]. இந்நிலையில், பொன்னவைக்கோ தலைமையிலான குழு, ஜூன் 16, 17, 18 ஆகிய தேதிகளில், சென்னை, கிண்டி, அண்ணா பல்கலை வளாகத்தில், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டு, அரசின் அனுமதியை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது[4].

தமிழக அரசு உயர் அதிகாரிகள், இரு குழுக்களையும் இணைந்தது, ஒரே மாநாடாக நடத்தும்படி அறிவுரை: உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, இரண்டு இடங்களில் நடத்த திட்ட மிட்டுள்ள குழுக்களை இணைக்கும் முயற்சியில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, பொன்னவைக்கோ தலைமையிலான குழு, ஜூன், 16, 17, 18ம் தேதிகளில் சென்னையில் நடத்தவும்; டான் மாரிமுத்து தலைமையிலான குழு, ஜூலை, 20, 21,22 ஆகிய தேதிகளில் மலேஷியாவில் நடத்தவும் தயாராகி வருகின்றன[5]. இதுகுறித்த செய்தியும், ஒரே மாநாடாக நடத்த வேண்டிய அவசியம் மற்றும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தினமலர் நாளிதழில் கடந்த மாதம் ஏப்ரல் செய்தி வெளியானது. இந்நிலையில், தமிழக அரசு உயர் அதிகாரிகள், இரு குழுக்களையும் இணைந்தது, ஒரே மாநாடாக நடத்தும்படி, பொன் வைக்கோ தலைமையிலான குழுவினரிடம் அறிவுறுத்தினர்[6].

பொன் வைக்கோ, மாரிமுத்துவுக்கு எழுதியுள்ள கடிதம்: இதையடுத்து, பொன் வைக்கோ, மாரிமுத்துவுக்கு எழுதியுள்ள கடிதம்: “உலகத் தமிழ் ஆராய்ச்சி 11வது மாநாட்டை, ஒரே குழுவாக இணைந்து நடத்த, தமிழக அரசு விரும்புகிறது. அதனால், எங்களின் குழு, உங்கள் தலைமையை ஏற்று மாநாட்டை நடத்த சம்மதிக்கிறது. எங்களிடம் இதுவரை, 1,057 ஆய்வுச் சுருக்கங்களும், 450 ஆய்வுத் தாள்களும் வந்துள்ளன. அவற்றில், 200 ஆய்வுத் தாள்களை பேராசிரியர் மருதநாயகம் தேர்வு செய்துள்ளார். அந்த ஆய்வாளர்கள், கட்டுரைகளை வாசிப்பர். அவர்களுக்கும், எங்களின் நிர்வாக குழு உறுப்பினர்கள், 10 பேருக்கும், மலேஷியாவில் உணவு, தங்குமிடம், சுற்றுலா தலங்களைக் காணும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆறு கூட்ட அரங்கங்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், நாங்கள் மாநாட்டுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்,”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது சுமார் 250 பேருக்கு “மலேஷியாவில் உணவு, தங்குமிடம், சுற்றுலா தலங்களைக் காணும் ஏற்பாடுகளை செய்தால்” பொன் வைக்கோ, “ மாநாட்டுக்கு முழு ஒத்துழைப்பு ” தருவார், இல்லையென்றால், “இல்லை,” அதாவது, சென்னையில் நடத்தப் படும்.

மாநாடு சென்னையிலா, மலேசியாவிலா?: இதில் இடம் மட்டுமல்லாது, ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் நிலை என்னவாயிற்று என்று தெரியவில்லை. சார்ஜா, சிங்கப்பூர், மலேசியா என்று ஆய்வுக் கட்டுரைகளை வாங்கி வைத்துளளனர்.ளாந்த ஈ-காபிகளை வைத்திருப்பவர்களுக்குக் கொண்டாட்டம் தான். இப்பொழுதெல்லாம், இதுதான் பெரிய வியாபாரமாகி விட்டது. மாநாடு பெயரில் போலி வெசைட், பணம் வசூல், ஆய்வுக் கட்டுரைக்கு ஆயிரம்-இரண்டாயிரம் வசூல் என்றெல்லாம் நடத்தும் கூட்டங்களும் இவர்களது ஆசியோடு உலா வருகின்றன. அத்தகைய அறிவுக்கொள்ளை கூட்டங்கள், இவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப் படங்களையும் இணைதளத்தில் போட்டு, தூண்டில் போட்டு வளைத்து வருகின்றனர், வசூல் செய்கின்றனர். ஆய்வுகட்டுரை விசயத்தில், பொன் வைக்கோ குழுவினர் பாரபட்சத்துடன் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. வந்த கட்டுரைகளை காப்பி அடித்து உபயோகப் படுத்தவும் கூடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், சிலர், வெளிப்படையாகவே இ-மெயிலில் அத்தகைய பிரச்சினையை எழுப்பியுளளனர். ஆனால், தமிழாராய்ச்சியாளர்களுக்கு “பிளாஜியாரிஸம்” என்பது, டீ-காபி குடிப்பது போன்றது. டீ குடித்துக் கொண்டே காபி குடிப்பதில் வல்லவர்கள். இதனால் தான், தரமும் குறைந்து வருகிறது. குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

03-05-2023


[1] தினமலர், தமிழறிஞர்களுக்குள் சச்சரவு: நடக்குமா உலகத் தமிழ் மாநாடு?, Added : ஏப் 05, 2023  06:57

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3285547

[3] தினமலர், சென்னையில் உலகத் தமிழ் மாநாடு?, பதிவு செய்த நாள்: ஏப் 07,2023 05:50

[4]  https://m.dinamalar.com/detail.php?id=3287252

[5] தினமலர், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு குழுக்களை இணைக்க அரசு முயற்சி, பதிவு செய்த நாள்: மே 02,2023 01:49; https://m.dinamalar.com/detail.php?id=3309489

[6] https://m.dinamalar.com/detail.php?id=3309489

ஆசிரியர்களிடம் கட்டிப்பிடி சண்டை-சச்சரவு-அதிதடி ஏன், கற்பித்தல் முதலியவற்றில் கவனம் இல்லாது மற்ற காரியங்களில் ஈடுபடும் போக்கு ஏன்? (1):

ஏப்ரல் 15, 2023

ஆசிரியர்களிடம் கட்டிப்பிடி சண்டை-சச்சரவு-அதிதடி ஏன், கற்பித்தல் முதலியவற்றில் கவனம் இல்லாது மற்ற காரியங்களில் ஈடுபடும் போக்கு ஏன்? (1):

ஆசிரியர்களிடம் சண்டை-சச்சரவு-அதிதடி ஏன்?: தமிழக பள்ளி ஆசிரியர்களிடம் அடிக்கடி வாக்குவாதம், வாடா-போடா பேச்சுகள், கெட்ட வார்த்தைகள் பேசுவது, திட்டுவது, சண்டை போடுவது, அடித்துக் கொள்வது, கட்டிப் புரண்டு சண்டை போடுவது, ஓடி-ஓடி அடித்துக் கொள்வது, என்றெல்லாம் சகஜமாகி விட்டன. போதாகுறைக்கு செல்போன் வசதியும் வந்து விட்டதால், புகைப் படங்கள், வீடியோக்கள் எல்லாம் உலா வர ஆரம்பித்து விட்டன. பெரும்பாலும் மத்தியஸ்தம் செய்து, விசயங்களை-விவகாரங்களை அமுக்கி விடுவது என்ற ரீதியில் தான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இருப்பினும், பணம், அந்தஸ்து, கௌரவம், அரசியல் போன்ற காரணிகளால் சில ஆசிரியர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. “நானா-நீயா” அல்லது “நீயா-நானா-”, ஒன்டிக்கு ஒன்டி வாடா பார்த்து விடுவோம் என்ற ரீதியில் செல்லும் பொழுது, இவையெல்லாம் அரங்கேறி, செய்திகளாகி, உலா வர ஆரம்பிக்கின்றன. இதனால், சஸ்பெண்ட், இடமாற்றம், ஜாதிப் பிரச்சினை என்றால் வழக்குகள் என்றெல்லாம் வந்து விடுகின்றன.

ஏப்ரல் 2023 – வேதியியல் ஆசிரியர் இயற்பியல் ஆசிரியர் இடையே சண்டை: திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அருகே குனிச்சியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,200 மாணவ – மாணவியர் படிக்கின்றனர்; 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பள்ளியில் கடந்த மாதம், 29ல் கால அட்டவணை தயாரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் குழந்தைசாமி, 55, தலைமை வகித்தார். அப்போது, வேதியியல் ஆசிரியர் சின்னமணி, 45, இயற்பியல் ஆசிரியர் கோவிந்தசாமி, 43, ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆபாசமாக பேசி, கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்[1]. அரை மணி நேரம் நடந்த சண்டை குறித்த ‘வீடியோ’ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது[2]. அதன் அடிப்படையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் சின்னமணி, கோவிந்தசாமி ஆகியோரை, ‘சஸ்பெண்ட்’ செய்து நேற்று உத்தரவிட்டார்[3]. மேலும், விளக்கம் கேட்டு, தலைமை ஆசிரியர் குழந்தைசாமிக்கு, ‘மெமேோ’ கொடுக்கப்பட்டுள்ளது[4].

ஜூலை 2022 – வெட்டன் விடுதி, புதுக்கோட்டைமுன்விரோதம்: ஆலங்குடி அருகே வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டிப் புரண்டு சண்டை போட்ட இரண்டு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்[5]. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 500 மாணவ – மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளியில் ஆங்கில ஆசிரியர் சந்தோஷ் 47 தமிழ் ஆசிரியர் தமிழ்ச்செல்வன் 49 ஆகியோர் இடையே நீண்ட காலமாக முன்விரோதம் இருந்துள்ளது[6]. இதை ஆங்கிலம்-தமிழ் மோதல் என்று எடுத்துக் கொள்ள முடியாது. நல்லவேளை, இந்தி டீச்சர்-தமிழ்-டீச்சர் என்று இல்லை, பிறகு, அத்தகைஅ சண்டை, வேஊ விதமாகியிருக்கும். அந்த “நீண்ட காலமாக முன்விரோதம்” விளக்கப் படவில்லை, பிறகு, அவர்கள் ஏன் ஒரே இடத்தில் போஸ்டிங் போடவேண்டும் போன்ற விவரங்களும் மர்மமாக இருக்கின்றன. இருப்பினும்ளூடகக் காரர்களையே ஈர்த்துள்ள்தால், இவ்விசயம் ஊடகங்களில் அதிகமாகவே செய்தியாக வெளி வந்தள்ளது. இரு நாட்களுக்கு முன் மதிய உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் இரண்டு ஆசிரியர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கட்டிப்புரண்டு சண்டையிட்டனர்[7]. சக ஆசிரியர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்துஅனுப்பினர்[8]. இது குறித்து பள்ளிக்கு சென்று விசாரணை நடத்திய புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரிகள் சந்தோஷ் தமிழ்செல்வனை வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டனர்[9]. படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களே இவ்வாறு தாக்கிக் கொள்வது அதிர்ச்சியக இருந்தது[10].

ஜனவரி 2022 – தலைமை ஆசிரியருக்கும் மாற்றுத் திறனாளி ஆசிரியருக்கும் சண்டை:  திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்துள்ள கடலாடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சற்றுவட்டார பகுதிகளில் இருந்து 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து படித்து வருகின்றனர். மேலும் இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாடங்களை எடுத்து  வருகின்றனர்.  இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக அண்ணாமலை என்பவர்  பணிபுரிந்து வருகிறார். பின்னர்  இந்த  பள்ளியில் மாற்றுத் திறனாளி ஆசிரியர் செழியன் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், தலைமை ஆசிரியருக்கும் இடையே பல மாதங்களாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது[11]. நேற்று  அவர்களுக்குள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருவரிடையே ஏற்பட்ட பிரச்னை  வாக்குவாதமாக மாறியுள்ளது. திடீரென இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.  அப்போது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்து கொண்டும் கீழே விழுந்தும் தாக்கி கொண்டனர்[12]. பின்னர் அவர்களை மற்ற ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். அதனைத் தொடர்ந்து  இருவரும் தாக்கிக்  கொண்டதை   யாரோ  அவர்களுடைய தொலைபேசியில்  வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பரவ விட்டனர். இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் மற்றும் மற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  அதாவது ஆசிரியர்கள் எந்த நிலையில் இருந்தாலும், சச்சரவு ஓய்வதில்லை, சண்டையிலும் முடிவதையும் கட்டுப் படுத்தமுடியாத நிலையும் ஏற்பட்டு விடுகிறது.

சட்டையை பிடித்து மோதலில் ஈடுப்பட்டு ஒழுங்கினமாக நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்: மேலும் இச்சம்பவம்  குறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வத்திடம் பேசிய போது, “ஆசிரியர்கள் தாக்கி கொண்ட சம்பவம் குறித்து போளூர் கல்வி மாவட்ட அதிகாரி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. கல்வி மாவட்ட அதிகாரி விசாரணை அறிக்கையை எங்களிடம்  சமர்ப்பித்த பின்னரே எதற்காக அவர்கள் தாக்கி கொண்டனர் என்பது தெரியவரும். அவர்களில் யார்  மீது தவறு  என்பது தெரியவந்தபிறகே   நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.இந்நிலையில் போளூர் மாவட்ட கல்வி அலுவலர் தயாளன் பள்ளிக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார் பின்னர் விசாரணை தொடர்பானா அறிக்கையை முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வத்திடம் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் பள்ளியில் சட்டையை பிடித்து மோதலில் ஈடுப்பட்டு ஒழுங்கினமாக நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் அண்ணாமலை மற்றும் மாற்று திறனாளி ஆசிரியர் செழியன் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் ஆகிய மூன்று நபர்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே பள்ளியில் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

© வேதபிரகாஷ்

14-04-2023


[1] தினமலர், பள்ளியில் கட்டிப்புரண்டு சண்டை இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட், பதிவு செய்த நாள்: ஏப் 14,2023 01:01; https://m.dinamalar.com/detail.php?id=3293447

[2] https://m.dinamalar.com/detail.php?id=3293447

[3] செய்திசோலை, பள்ளி ஆலோசனை கூட்டத்தில்…. கட்டிப்புரண்டு சண்டை போட்ட ஆசிரியர்கள்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!, jyothi priya, April 13, 2023.

[4] https://www.seithisolai.com/teachers-suspended-3.php

[5] தினமலர், கட்டிப்புரண்டு சண்டை2 ஆசிரியர்கள் மாற்றம், பதிவு செய்த நாள்: ஜூலை 09, 2022 01:37…

[6] https://m.dinamalar.com/detail.php?id=3072259

[7] தினத்தந்தி, அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியரும் தமிழ் ஆசிரியரும் கட்டி புரண்டு சண்டை, ஜூலை 6, 7:05 pm

[8] https://www.dailythanthi.com/News/State/an-english-teacher-and-a-tamil-teacher-have-a-fight-in-a-government-school-739193?infinitescroll=1

[9] காமதேனு, பள்ளியிலேயே ஆசிரியர்கள் கட்டிப்புரண்டு சண்டைதெறித்து ஓடிய மாணவர்கள்: அதிரடி காட்டிய அதிகாரி, Updated on : 6 Jul, 2022, 7:20 pm

[10] https://kamadenu.hindutamil.in/national/clash-among-students-government-school-teachers-job-transfer

[11] தமிழ்.ஏபிபி.லைவ், Watch Video: அரசுப்பள்ளியில் கட்டி புரண்டு சண்டை போட்ட ஆசிரியர், தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட், By: V.வினோத் | Updated at : 30 Jan 2022 07:17 AM (IST); Published at : 30 Jan 2022 08:21 AM (IST).

[12] https://tamil.abplive.com/crime/whatch-video-viral-on-video-websites-attacked-by-teachers-at-kataladi-government-school-37513

காதலி காதலனை ஆட்கள் வைத்து கடத்தி, அடித்தது, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியது, பிறகு கைதானது! கொடேஷன் கேங்-கேரளா மாடல்(2)

ஏப்ரல் 13, 2023

காதலி காதலனை ஆட்கள் வைத்து கடத்தி, அடித்தது, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியது, பிறகு கைதானது! கொடேஷன் கேங்-கேரளா மாடல்(2)

 

காதலை முறித்துக் கொள் என்றதை ஒப்புக் கொள்ளாதலால், ஆட்களை வைத்து லக்ஷ்மி பிரியா சிவராமை அடித்தது: இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியா, தனது காதலன் அமுல் மற்றும் நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து மாணவனை கடந்த ஏப்ரல் 5ம் தேதி காரில் கடத்தி உள்ளனர். அந்த அளவுக்கு அவள் ரௌடியிசத்திற்கும் இறங்கியிருக்கிறாள். இது, தீய சகவாசமா, வேறு வகையான நட்பா, தொடர்பா என்றெல்லாம் தெரியவில்லை. அதே போல, இவளுடைய பெற்றோர், அவர்கள் இதில் ஏன் கண்டு கொள்லாமல் இருக்கிறார்கள் போன்ற விவரங்களும் தெரியவில்லை. ஒரு ஊடகம், லக்ஷ்மி பிரியாவின் தாயாரும் கைது செய்யப் பட்டிருக்கிறார் என்கிறது[1]. காரில் வைத்து பேசி பார்த்திருக்கிறார்கள் என்பதை விட, மிரட்டியிருக்கிறார்கள். ஆனால் அந்த மாணவன் உறுதியாக இருந்ததால், ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியாவின் நண்பர்கள் மாணவனை சரமாரியாக அடிக்க ஆரம்பித்துள்ளனர். வழியில், ஆலப்புழாவில் நிறுத்தி, வாலிபரின் தங்கச் சங்கிலி, விலை உயர்ந்த மொபைல் போன் மற்றும் பணத்தை பறித்திருக்கிறார்கள். இதெல்லாம் காதல், காதல் முறிப்பு, காதல் பிரிப்பு, கட்டப் பஞ்சாயத்து போன்ற காரியங்களையும் மிஞ்சுவதாக இருக்கின்றன. பிறகு, அவர்கள், இத்தகைய வேலைகளை செய்யும் ரௌடிகளாக இருந்திருக்க வேண்டும். பின்னர், மாணவனை எர்ணாகுளம் தம்மனம் அருகே உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த கும்பல் அவரை அங்கேயே கட்டி வைத்து அடித்துள்ளனர். பின்னர் மாணவனின் ஆடைகளை அவிழ்த்து, மொபைல் போனில் வீடியோவும் எடுத்துள்ளனர்,” என மாணவனின் தந்தை கூறினார்.

 

அவர்கள் காதலர்கள் அல்ல; அவர் ஆபாச வீடியோக்களை அனுப்பினார், மகளைத் துன்புறுத்தினான்: மனோரமா செய்தியிடம் பேசிய லக்ஷ்மிபிரியாவின் தாயார், அந்த இளைஞனுடன் தனது மகளுக்கு தொடர்பு இல்லை என்று கூறினார். “இருவரும் நண்பர்கள். இருப்பினும், பின்னர் அவர் அவளை வாய்மொழியாகத் துன்புறுத்தத் தொடங்கினான், மேலும் அவரது தொலைபேசிக்கு ஆபாச வீடியோக்களையும் அனுப்பினார். அவர் தனது பிரச்சனையிலிருந்து விடுபட உதவுமாறு தனது நண்பர்களைக் கேட்பது பற்றி என்னிடம் கூறினான்,” என்று லட்சுமிப்ரியாவின் தாயார் கூறினார். மேலும், அந்த இளைஞரை தாக்குவதற்கு லட்சுமிபிரியா எந்த கும்பலையும் நியமிக்கவில்லை என்றார். “இளைஞரை அடித்தது அவளுடைய நண்பர்கள்தான், என் மகள் அல்ல. அவள் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டாள். லட்சுமி திறமையான மாணவி. சந்தேகம் இருந்தால் அவளுடைய ஆசிரியர்களிடம் கேட்கலாம்,” என்று அவர் கூறினார். இருப்பினும், இந்த அம்மா எல்லா நிகழ்வுகளுக்காகவும் வருந்துவதைக் காண வேண்டியதில்லை, அதில் அவரது மகள் நிச்சயமாக ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். பள்ளியில் ஒரு பையனுடனும், கல்லூரியில் ஒரு பையனுடனும் காதல் விவகாரங்களில் ஈடுபடும் படிப்பைத் தவிர, அவளோ அல்லது அவளது கணவனோ தங்கள் மகளின் செயல்பாடுகள் குறித்து எச்சரித்தார்களா என்பதும் அறியப்படுகிறது. இயற்கையாகவே, ஒவ்வொரு தாயும் தனது மகள் மற்றும் மகனை மட்டுமே பாதுகாப்பார்கள், ஆனால், அவள் ஏன் அவளுடைய நடத்தை, செயல்பாடுகள் மற்றும் காதல் விவகாரங்களை கண்காணிக்கக்கூடாது. அவளுடைய தவறான நடத்தைக்கு எதிராக அவள் நடவடிக்கை எடுக்க விரும்பினால், அவள் அவளுக்கு அறிவுரை சொல்லலாம், கட்டுப்படுத்தலாம் மற்றும் சரிபார்த்திருக்கலாம்.

 

போலீஸார் லக்ஷ்மி பிரியாவை கைது செய்தது: அந்த வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டியதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன. ஒரு ஆணின் வீடியோவை வெளியிட்டால் என்னாகும் என்று இனிமேல் தான் யோசிக்க வேண்டியுள்ளது. பெண்ணின் மானம் போகும் என்பது போல, ஒரு இளம் வாலிபனுக்கு என்னாகும் என்று ஆராய வேண்டியள்ளது. இது பற்றி மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார், எர்ணாகுளத்தை சேர்ந்த லட்சுமி பிரியாவின் காதலன் அமலை முதலில் கைது செய்தனர். அதன்பின்னர் லட்சுமி பிரியாவை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது தோழி வீட்டில் வைத்து கைது செய்தனர். இதனிடையே மொத்தம் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் லட்சுமி பிரியாவின் நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். லக்ஷ்மி பிரியாவின் தாயார், தன் மகளுக்கும் அந்த பையன் / அமலுக்கும் எந்த உறவு இல்லை என்கிறார்[2]. நண்பர்களாக இருக்கும் பொழுது, சில வீடியோக்களை அனுப்பி மிரட்டி வந்துள்ளான். அவன் சகவாசத்திலிருந்து விலகிச் செல்லவும் அவளின் நண்பர்கள் அறிவுருத்தியுள்ளனர், என்கிறார்[3].

 

‘மகனை விடுவிக்க முக்கிய குற்றவாளி மீட்கும் தொகை கேட்டார்’: தனது மகனை விடுவிக்க லட்சுமிபிரியா பணம் கேட்டதாக இளைஞரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இது விவகாரங்களில் மிகவும் ஆபத்தானது. சிறுமியும் அவரது நண்பர்களும் தனது மகனை கொடூரமாக தாக்கியதை அவர் வெளிப்படுத்தினார். பின்னர் அருகில் உள்ள கடையில் இருந்து மதுபானம் வாங்குவதற்காக கொள்ளையர்கள் பணத்தை எடுத்து சென்றனர். தாக்கியவர்களில் ஒருவர் பீர் பாட்டிலை சிவராமின் தலையில் தாக்கினார். காவல்துறை அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதால், மருத்துவர்களின் அறிக்கையிலிருந்து இவை அனைத்தையும் சரிபார்க்க முடியும். அதிர்ச்சியில் துடிக்கும் வகையில் மொபைல் போன் சார்ஜர் வயர்கள் நாக்கில் வைக்கப்பட்டு கொடுமை தொடர்ந்தது. இந்த கொடூர செயல்களை அந்த இளம் கல்லூரி மாணவி ஒப்புக்கொண்டது பொருத்தமற்றது மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், அவருக்கு கஞ்சா கொடுக்க அக்குழு முடிவு செய்தது. பின்னர் லெக்ஷ்மிபிரியா அவரை உடை கழற்றி வீடியோ எடுக்கும்படி குழுவை வற்புறுத்தினார். இதுவும் விவரிக்க முடியாதது, ஏன் இது போன்ற வீடியோ தேவை என்று தெரியவில்லை. இருவரும் உறவுமுறையில் இல்லை என்றும் அவர் கூறினார். காருக்குள் வைத்து அடித்து உதைத்தனர்.அவரது ரூ.20,000/- மதிப்புள்ள தங்கச் சங்கிலி, கைக்கடிகாரம் மற்றும் ரூ.5,000/- பணத்தைக் கறுப்புத் துணியால் முகத்தை மறைத்துக்கொண்டு திருடிச் சென்றனர். அங்கிருந்து பழைய வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மீண்டும் தாக்கப்பட்டார், இந்த முறை, அவர்கள் அவரை தாக்குவதற்கு கனமான தடியைப் பயன்படுத்தி அவரை தாக்கினர் மற்றும் மின்சார அதிர்ச்சியையும் கொடுத்தனர். அந்த சித்திரவதையின் வீடியோ அவர்களிடம் உள்ளது. இந்த கொடூரத்தின் அதிர்ச்சியில் இருந்து என் மகன் இன்னும் மீளவில்லை, “என்று தந்தை கூறினார். லட்சுமி பிரியா குடும்பத்தினர் பணத்தை கொடுத்து பிரச்னையை தீர்த்துக்கொள்ள விரும்பியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சிவாவின் தந்தையிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கின்றனர்.

 

© வேதபிரகாஷ்

12-04-2023


[1] The mother of Lakshmi Priya, who was arrested about the incident, said, “Her daughter Lakshmi Priya and the student who was attacked are of the same age, they were friends and there was no romance between them. However, the student has alleged that he forced her to fall in love with her, abused her on her cell phone and harassed her by sending vulgar videos.

https://india.postsen.com/News/399178.html

[2] Talking to Manorama News, Lakshmipriya’s mother said her daughter was not in a relationship with the young man.  “Both of them were friends. However, he later started verbally harassing her and even sent lewd videos to her phone. She had told me about asking her friends to help her get rid of his trouble,” said Lakshmipriya’s mother.

Malayala Manorama, Youth manhandled, dumped naked on road; ex-girlfriend arrested, Onmanorama Staff Published: April 11, 2023 11:13 AM IST Updated: April 11, 2023 08:29 PM IST.

[3] https://www.onmanorama.com/news/kerala/2023/04/11/man-attacked-exgirlfriend-arrested-ernakulam.html

காதலி காதலனை ஆட்கள் வைத்து கடத்தி, அடித்தது, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியது, பிறகு கைதானது! கேரளா மாடல் (1)

ஏப்ரல் 13, 2023

காதலி காதலனை ஆட்கள் வைத்து கடத்தி, அடித்தது, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியது, பிறகு கைதானது! கேரளா மாடல் (1)

மேற்கத்தியமயமாக்கல் முதல் அமெரிக்கமயமாக்கல் வரை: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நடத்தை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. நவீனத்துவம், மேற்கத்தியமயமாக்கல் என்ற போர்வையில், இப்போது அமெரிக்கமயமாக்கல் என்றதையும் சேர்த்துக் கொள்ளலாம், ஏனெனில். அவர்களில் பெரும்பாலோர் அத்தகைய நடை, உடை, உணவு, பானங்கள் மற்றும் போதைப்பொருள் உட்பட பிற அனைத்து இழிவான கவர்ச்சிகளுக்கும் திசைதிருப்பப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக,. பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிறரும் இதுபோன்ற நடத்தையை அனுமதித்துள்ளனர் அல்லது மாணவர்கள் தங்கள் காதல் போதைப்பொருள் மற்றும் இது போன்ற பிற கீழ்த்தரமான செயல்கள் பற்றி தெரிவிக்காமல், செய்து வருகின்றனர் எனலாம். மாணவிகளும், ஆண் மாணவர்களும் ஒன்றாகச் சென்று கைகோர்த்துக்கொண்டு செல்வது, மற்றவர்களுக்கு முன்னால் ஒருவரையொருவர் கட்டித்தழுவுவதை எல்லோரும் பார்த்து வருகிறார்கள். சில கல்வி வளாகங்களில் முத்தமிடுவதும் பொதுவானது, இதுபோன்ற காட்சிகளைப் பார்க்க நேர்ந்தால், பெற்றோர்கள் என்ன நினைப்பார்கள் என்பது தெரியவில்லை. சமீப நாட்களாக கேரள மாணவர்கள் இப்படிப்பட்ட குணாதிசயங்களை வெளிப்படுத்தி வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

 

கேரளாவின் குற்றங்கள் செய்யும் கூலிப்படை கும்பல்கள்: ‘கூலிப்படை கும்பல்கள்’ அனைத்து சாதிகள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் அனைத்து பொருளாதார வகுப்புகளையும் கொண்டவை; அவர்கள் நன்கு குறிப்பிடப்பட்ட படிநிலைகள், நடத்தை நெறிமுறைகள் மற்றும் செயல்பாட்டு முறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். அவர்கள் நன்கு ஆயுதம் ஏந்தியவர்கள் மற்றும் காவல்துறை, நீதித்துறை மற்றும் அரசியல் கட்சிகளுடன் நன்கு தொடர்புள்ளவர்கள். அவர்களுக்கு கேரளா மற்றும் இந்தியாவிற்கு வெளியேயும் மற்ற அனைத்து வகையான சட்டவிரோத மற்றும் குற்றப் போக்குகளுடனும் தொடர்புகள் உள்ளன. கேரளாவில் உள்ள ஊடகங்கள் இந்த நாட்களில் ஒரு குழப்பத்தில் உள்ளன. இக்கும்பல்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் அவற்றின் தாக்கம், கைவிடப்பட்ட காவியப் போர்க்களங்களில் வீழ்ந்த மாவீரர்களின் உடல்களின் மீது தீய ஆவிகள் நடனமாடுவது போல, ‘மேற்கோள் கும்பல்’, இப்போது மலையாளிகளின் இறந்த அரசியல் வீரத்தின் மீது நடனமாடுகிறது. திடீரென்று, ஊடகங்கள் எல்லா இடங்களிலும் இருப்பதைக் கண்டுபிடித்து, ஒவ்வொரு விதமான தகராறையும் தீர்த்துக் கொள்கின்றன. சட்டம் மற்றும் ஒழுங்குக்கான நிறுவனங்கள் மெதுவாக, ‘கூலிப்ப்டை கும்பல்களின்’ துணைகளாக அல்லது பதிப்புகளாக மாறி வருகின்றன. மக்களை அச்சுறுத்தும் ‘மேற்கோள் கும்பல்’களின் திறமை வளர்ந்து வருவதில் அரசியல் கட்சிகளுக்கும், அவற்றுக்குள் இருக்கும் கோஷ்டிகளுக்கும் இடையிலான போட்டி முக்கியமானது. சமீபத்திய ஆண்டுகளில் விரைவான வளர்ச்சியைப் பதிவு செய்த கேரளப் பொருளாதாரத்தின் துறைகளில் ஒன்றான ரியல் எஸ்டேட் கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கு அரசியல் கட்சிகள், அதிகாரத்துவம் ஆகியவற்றின் விருப்பத்தால் பெரிதும் உதவியிருக்கிறது என்பதற்கு சமீபத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன. மற்றும் அனைத்து நிலைகளிலும் சட்டம் ஒழுங்கு இயந்திரங்கள் அனைத்து வகையான உரிமை மீறல்களுக்கு எதிராக கண்மூடித்தனமாக இருக்க வேண்டும். மணல் மற்றும் குவாரி மாஃபியாவால் அச்சுறுத்தல்கள், பெரிய மற்றும் சிறிய உடல்ரீதியான வன்முறைகள் மற்றும் கொலைகள் கூட அடிக்கடி செய்திகள் வருகின்றன. தெருக்களிலும் சந்தைகளிலும் வழக்கமான குண்டர் கும்பல்களைத் தவிர, அவர்கள் ஒரு குறிப்பிட்ட விலையில் குற்றவியல் மற்றும் வன்முறை இயல்புடைய ‘தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை’ வழங்குகிறார்கள். இத்தகைய கும்பலை லக்ஷ்மி பிரியா உபயோகித்தது தான் இப்பொழுதைய பதைக்க வைக்கும் விவகாரம்.

அறியா பள்ளிக் காதலும், விபரீத கல்லூரி காதலும்: இப்பொழுதெல்லாம் பள்ளிகளிலேயே மாணவ-மாணவியர்களிடம் காதல் வந்து விடுகிறது. உண்மையில் அது காதல் இல்லாமல் இருந்தாலும், நவீனத்துவ மாயைகளில் சிக்கித் தவிக்கும், இந்திய மாணவ பருவம் படிப்பையும் தாண்டி செயல்பட்டு வருகின்றது. மேற்கத்தைய நாகரிகத்தின் உச்சத்தில், செக்ஸிலும் ஊறி திளைக்க ஆரம்பித்து விட்டது. கல்லூரி-பல்கலைக் கழகங்களில் கேட்கவே வேண்டாம். 50%-ற்கும் மேலான மாணவ-மாணவியர்கள் தொட்டுப் பேசிக் கொண்டும், கைகளைக் கோர்த்துக் கொண்டு திரிந்தும், சினிமாக்களுக்கும் சென்று வருகிறார்கள். மெத்தப் படித்த, கடவுளின் தேசம் என்று சொலிக் கொள்ளும் கேரளாவில், இத்தகைய எல்லாமும் சேர்ந்து நடந்திருப்பது செய்தியாக வந்துள்ளது. படிக்கும் ஒரு இளம் பெண் இவ்வாறெல்லாம் செய்வாளா என்றுதான், மற்ற பெற்றோர், உற்றோர், பெரியவர்கள், பள்ளி-கல்லூரி வட்டாரங்கள் திகைத்து நிற்கின்றன.

லக்ஷ்மி பிரியா பள்ளிப் பருவத்திலிருந்து சிவராமை காதலித்து வந்தது: கேரளாவில் நண்பர்களுடன் சேர்ந்து காதலனை கடத்திய 19 வயது காதலி, நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்[1]. இந்த சம்பவம் திருவனந்தபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[2].  இச்செய்தி எல்லா ஊடகங்களிலும் வெலிவந்தள்ளது எனலாம். ஏனெனில், இது பிஞ்சில் பழுத்த விவகாரம் மட்டுமல்லாது, ஒரு இளம்பெண்ணே இத்தகைய காதல், கருமாந்திரம், கடத்தல், நிர்வாண வீடியோ என்றெல்லாம் செய்திருப்பது, உச்சத்தின் உச்சமாகி விட்டது. இது தொடர்பாக போலீசாரும், பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையும் கூறுகையில்[3], “திருவனந்தபுரம் அருகே வர்கலா பகுதியில் அயிரூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் / சிவராம் ஒருவரும், செருன்னியூரைச் சேர்ந்த லட்சுமி பிரியா (19 வயது) என்பவரும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்திருக்கிறார்கள்[4]. பள்ளி பருவத்திற்கு பின்னர் கல்லூரியில் படிக்க விரும்பிய லட்சுமி பிரியா கல்லூரி படிப்பிற்காக எர்ணாகுளம் சென்றுள்ளார்[5]. எர்ணாகுளத்தில் ஒரு கல்லூரியில் பிசிஏ பயின்று வந்துள்ளார்[6]. அங்கு அமல் என்ற இளைஞருடன் லட்சுமி பிரியாவிற்கு நட்பு ஏற்பட்டுள்ளது[7].

கல்லூரிக்கு சென்றபோது லக்ஷ்மி பிரியா இன்னொருவனை காதலித்தது: இந்த நட்பு பின்னர் காதலாக மாறியது[8]. இதுவே அப்பெண்ணின் வக்கிரத்தைக் காட்டுகிறது. ஒரு பெண், இளம்பெண் என்ற நிலையில், முதல் காதலை அந்த அளவுக்கு கொச்சைப் படுத்த மாட்டாள். தனது காதலனையும் மறந்திருக்க மாட்டாள். இதனிடையே திருவனந்தபுரம் வர்குலாவைச் சேர்ந்த மாணவனும் லட்சுமி பிரியாவை காதலித்தே வந்துள்ளார்[9], என்று செய்திகள் கூறுகின்றன. அதாவது அவன் தனது காதலில் உறுதியாக இருந்து, அவளையே நேசித்து வருகிறான். லட்சுமி பிரியாவோ தனது முன்னாள் காதலனை கழட்டிவிட முடிவு செய்திருக்கிறார்[10]. இருவரும் உறவை முறித்துக் கொள்ளலாம் என அவரிடம் லட்சுமி பிரியா பேசி பார்த்திருக்கிறார்[11]. ஆக, காதலைக் கூட பேரம் பேசியிருக்கிறாள். இதிலிருந்தே, அவளது வக்கிரம் இன்னும் உச்சத்தில் ஏறுகிறது. ஆனால் அந்த மாணவன் உறுதியாகவே இருந்துள்ளார்[12].

© வேதபிரகாஷ்

12-04-2023


[1] தமிழ்.ஒன்.இந்தியா, காதலனை கடத்திய காதலி, நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்தது ஏன்? தந்தை பகீர் தகவல், By Velmurugan P, Updated: Wednesday, April 12, 2023, 13:18 [IST].

[2] https://tamil.oneindia.com/thiruvananthapuram/ernakulam-collage-student-held-in-kerala-over-kidnap-torture-of-ex-lover-506919.html

[3] விகடன், இளைஞரைக் கடத்தி நிர்வாணமாக வீடியோ எடுத்து, தாக்கிய இளம்பெண்! – காதலைக் கைவிட மறுத்ததால் ஆத்திரம், சிந்து ஆர், Published:Yesterday at 9 PMUpdated:Yesterday at 9 PM.

[4] https://www.vikatan.com/crime/youth-manhandled-dumped-naked-on-road-ex-girlfriend-arrested-in-kerala

[5] NEWS18-TAMIL, காதலை கைவிட மறுத்த காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி… – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்,  LAST UPDATED: APRIL 12, 2023, 07:34 IST; THIRUVANANTHAPURAM,   REPORTED BY :சஜயகுமார்; PUBLISHED BY : RAMPRASATH H.

[6] https://tamil.news18.com/amp/national/thiruvananthapuram-varakala-college-student-arrested-in-the-incident-of-stripping-and-attacking-a-youth-936833.html

[7] ராஜ்.தமிழ்.செய்தி, 2-வது காதலனுக்காக முதல் காதலனை நிர்வாணம் ஆக்கிய காதலி! பகீர் சம்பவம்!, April 12, 2022

[8] https://rajnewstamil.com/kerala-girl-kidnapped-her-1st-lover/

[9] தினத்தந்தி, பள்ளி காதல் கல்லூரியில் நுழைந்ததும் ட்விஸ்ட்..நிர்வாண வீடியோ எடுத்து சித்திரவதைகாதலனுக்கு காதலி நிகழ்த்திய கொடூரம்..என்ன தான் நடந்தது? பகீர் பின்னணி, By தந்தி டிவி 12 ஏப்ரல் 2023 5:36 AM.

[10] https://www.thanthitv.com/latest-news/love-issue-kerala-179496

[11] பாலிமர் செய்தி, காதலை கைவிட மறுத்த முன்னாள் காதலனை புதிய ஆண் நண்பருடன் சேர்ந்து நிர்வாணப் படுத்தி வீடியோ எடுத்த காதலி கைது, April 11. 2023; 06:477:02 PM.

[12] https://www.polimernews.com/dnews/200721