Archive for the ‘சிறுவர் செக்ஸ்’ Category

கூட்டுக் கற்பழிப்பு செய்வது எப்படி? இன்ஸ்டாகிராமில் விவாதிக்கும் பெரிய இடத்துப் பள்ளிப் பிள்ளைகள்! வழக்கு பதிவு, என்னாகுமோ? பெற்றோர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் [2]

மே 20, 2020

கூட்டுக் கற்பழிப்பு செய்வது எப்படி? இன்ஸ்டாகிராமில் விவாதிக்கும் பெரிய இடத்துப் பள்ளிப் பிள்ளைகள்! வழக்கு பதிவு, என்னாகுமோ? பெற்றோர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் [2]

Delhi school boys discuss gange rape thru Instagram - 2 TV debate

பெற்றோர்கள் பலர் இன்டெர்நெட் பற்றி தெரியாமல் இருப்பது: உயிர்களின் அடிப்படைத் தேவையே உணவும், இனப்பெருக்கமும்தான். அந்தந்த வயதில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து பெற்றோர்களே முன்வந்து, குழந்தைகளிடம் பேசி அவர்களை வழிநடத்தலாம். பெற்றோர்களே தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு குழந்தைகளைக் கவனிக்காமல் விடுவதும், பிள்ளைகள் எங்கே போகிறார்கள், என்ன செய்கிறார்கள், மொபைலை எப்படி பயன்படுத்துகிறார்கள் என எதுவுமே தெரியாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். தவறு நடந்த பின் ரியாக்‌ஷன்கள் கொடுப்பதுதான் நாம் செய்துகொண்டிருக்கும் மிகப்பெரிய தவறு. அடுத்து தவறு செய்துவிட்டாலும் கூட தண்டனை, தகாத வார்த்தைகள் என போகாமல் சரியான முறையில் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து வழிநடத்த வேண்டும்…’’ என்று முடித்த மன நல நிபுணர் எஸ்.வந்தனாவைத் தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் சைபர் கிரைம் துறைப் பேராசிரியர் லதா சுப்பிரமணியன் பேச ஆரம்பித்தார். ‘‘குழந்தைகளைத் தன்வசப்படுத்தி அவர்களை பொம்மை போல் ஆட்டுவிக்க ஆன்லைனில் தனி குழுக்களே இயங்கிக் கொண்டிருக்கின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, பெண்கள், ஆண்கள் என யாவரும் இவர்களிடம் தப்பிப்பதில்லை. குழந்தைகள் எதற்கும் தங்களைச் சுலபமாக மாற்றிக்கொள்வார்கள்.

Bois locker Admn arrested, The Pioneer, 07-05-2020

நடந்த பிறகு, ஐடியா கொடுக்க வரும் வல்லுனர்கள்: முதலில் உங்கள் மொபைலில் பாஸ்வோர்ட் போட்டு லாக் செய்வதை விடுங்கள். பிள்ளைகளிடம் ஓபனாக இருங்கள்; கண்காணியுங்கள். கணினிகளில் உள்ள கேமராக்களை சீல் செய்யுங்கள். திடீரென மொபைலில் அதிக நேரம் செலவிடுகிறார்கள், கணினி முன்பே உட்காந்திருக்கிறார்கள் எனில் அவர்களின் ஸ்கிரீன் டைம், பயன்பாட்டு தளங்கள், எல்லாவற்றையும் கவனிப்பில் கொண்டு வாருங்கள். இந்த தளம், இந்த கேம் ஏன் உனக்கு இவ்வளவு பிடித்திருக்கிறது என பேசுங்கள். குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் சின்ன நண்பர்கள் சந்திப்பு போல் ஏற்படுத்தி பிள்ளைகளின் நண்பர்களையும் உங்களுக்கு நண்பர்கள் ஆக்குங்கள். அடுத்த சந்திப்பில் வரும் புதிய நண்பர்களை அக்கறையுடன் கண்காணியுங்கள். எந்தெந்த நண்பர்கள் என்னென்ன டிவைஸ்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை எல்லாம் கவனிப்பதும் அவசியம். முதலில் நீங்கள் டிக்டாக்கில் கட்டிப்பிடித்து ஆடுவதையும், முகநூலில் நான் வாங்கிய புதுப்புடவை என பகிர்வதையும் விட்டாலே குழந்தைகள் நம்மைப் பார்த்து திருந்துவார்கள்…’’ என்றார் லதா சுப்பிரமணியன்.‘‘சமூக வலைத்தளங்கள் பொறுப்பாக இருக்கலாம். நாம் போடுகிற ஒரு ஸ்டேட்டஸில் இருக்கும் பாடலோ, காட்சியோ யாரோ ஒருவருக்கு உரிமையானது என கண்டறிந்து நீக்கும் அளவுக்கு கண்காணிக்கும் தொழில்நுட்பம் இருக்கையில் ஒரு நபர் மைனரா மேஜரா எனப் பார்க்கலாமே! குறைந்த பட்சம் நபரின் ஐடி, அல்லது பெற்றோர்களின் ஐடி கொடுத்தால் மட்டுமே ஒரு சமூக வலைத்தளத்தில் கணக்குத் தொடங்க முடியும் என்னும் வரைமுறையை கொண்டு வரலாமே.

Delhi school boys discuss gange rape thru Instagram - 4
படிப்பு பற்றிய தாழ்ந்த கருத்தை உருவாக்கும் போக்கு: கல்வி ஒரு காலத்தில் புனிதமாக பார்க்கப்பட்டது. கல்வியுடன் இணைந்தே நேர்மை, அந்தக் கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் மேல் மதிப்பு, அந்தக் கல்வியைக் கொடுத்த பெற்றோர்களுக்கு மதிப்பு பெண்கள் மீதான மதிப்பு என பலவிதமாக பொறுப்புகள் சேர்ந்தே வளர்ந்தன. கல்வியைச் சரியாக எடுத்துக்கொண்டாலே ஒரு மனிதன் பண்பட்டு விடுவான்.படிப்பு என்றால் வெறும் டிகிரி மட்டுமே அல்ல. நமக்கு என்ன பிடிக்குமோ அதை தீவிரமாகப் படிப்பது. மார்க் ஸூகர்பெர்க், ஸ்டீவ் ஜாப்ஸ், சச்சின், ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாம் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்கள் என தவறான எண்ணம் உருவாக ஆரம்பித்துவிட்டது. மார்க், ஸ்டீவ் ஜாப்ஸுக்கு கணினி, சச்சினுக்கு கிரிக்கெட், ரஹ்மானுக்கு இசை, இதுவும் கூட படிப்புதான். ஏதேனும் ஒரு நல்ல திறமை மேல் ஆர்வம் சென்றாலே தீய எண்ணங்கள் எழாது. கல்வி மீதான மதிப்பு இல்லாமைதான் ஆசிரியர், பெற்றோர்கள், உறவுகள், குடும்பம், பெண்கள் என எதன் மீதும் மதிப்பில்லாமல் போவதும் சொற்ப ஆனந்தம் கொடுக்கும் மொபைல் மீது மனம் சென்று விடுவதும். இந்த நிலை மாறினால்தான் மாணவர்களின் வாழ்க்கை முறையிலும் மாற்றம் வரும்…’’ அழுத்தமாக சொல்கிறார் கல்வி ஆலோசகர் மற்றும் ஃபியூச்சர் காரிடர் நிர்வாக இயக்குநரான தாமோதரன்.

Bois locker Admn arrested, The Hindustan Times, 07-05-2020

இந்தி சினிமா முதல் சமூக வலைதளம் வரை ஆபாசம், கொக்கோகம் நிலை மாறுமா?: இந்தி மற்றும் போஜ்பூரி போன்ற மொழிகளில் வரும் சினிமாக்கள், அவற்றில் வரும் நடகஜ்க் காட்சிகள், பாடல்கள் எல்லாமே செக்ஸ்-வக்கிரத்துடன் கொண்டவைதான். மிகவும் மோசமான, ஆபாச, கொக்கோக அரைகுறை நடனங்கள், விலங்குகள் போன்று ஊர்ந்து வருவது, ஒரு ஆடும் பெண்ணை 50-100 பேர்கள் சுற்றி வந்து, ஏதோ அகப்பட்ட விலங்கை கடிப்பது போன்ற காட்சிகள், இவையெல்லாம், பள்ளி மாணவர்களை உசுப்பேற்றிவிடும் வகையில் தான் உள்ளன. இவற்றையெல்லம் எதிர்த்து யாரும் பேசுவதில்லை. வடவிந்தியாவில், அதிகமாக “இந்துத்துவம்” பேசும் பொழுது, இத்தகைய விசயங்களில் “ஸ்வச்ச பாரத்” அதிகமாக வேலை செய்திருக்க வேண்டும். “பேடி பசவோ” எங்கு ஏன் சரிவர வேலை செய்யவில்லை என்று தெரியவில்லை. அதிகாரம், கொள்கைகள் முதலியவற்றில், வடவிந்தியர் ஆதிக்கம் செல்லுத்தும் போது, இத்தகைய விசயங்களில், அவர்கள் இரட்டை வேடம் போடுவர்தாகவேத் தெரிகிறது. “பெண்மை” எனும் போது, அதிகமாக சப்தம் வருவது, இங்கு தான் என்று தெரிகிறது, ஆனால், இவ்விசயங்களில் ஆரம்பித்து விட்டுவிடுவது போன்ற நிலைதான் உள்ளது. இவ்விசயத்தில் மாட்டிக் கொண்டவர்கள் எல்லோரும் பணக்கார வீட்டு பையன்கள். அரசியக் ஆதரவும் இருக்கிறது. பிறகு, வழக்கு எப்படி நடக்கும் என்று தெரியவில்லை.

Delhi school boys discuss gange rape thru Instagram - 3

பெற்றோரை, பெரியவர்களை, ஆசிரியர்களை மதிக்காத சமூகம் உருப்படாது: தில்லி உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல் இதனை தானாக [suo motu (on his own)] வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க ஆணயிட்டார்[1]. மே.3ம் தேதி FIR போடப்பட்டு, சம்பந்தப் பட்ட பையன் கைது செய்யப் பட்டுள்ளான்[2]. இதில் தொடர்புள்ள 20 பேரும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளனர்[3]. சைபர் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கான வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது[4]. டில்லியின் பணக்கார வீட்டு பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாய்ஸ் லாக்கர் ரூம் வழக்கின் விசாரணையை வேகப்படுத்துமாறு போலீசுக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது[5]. இதேபோல பெண்கள் குழு ஒன்றில் ஆண்களை பற்றி பேசிய உரையாடல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளவும் போலீஸாருக்கு கோரிக்கைகள் எழுந்துவரும் சூழலில், ஆண், பெண் பேதமின்றி இளைய தலைமுறையை இணையம் காவு வாங்கி வருவது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது[7]. வழக்கம் போல, இப்பொழுது, எல்லோரும் அறிவுரை கூற ஆரம்பித்து விட்டனர். மின் அச்சு என்று எல்லா துறைகளிலும் பெண்கள் தன்னிச்சைப் படி தான், சுதந்திரமாக உள்ளனர். கற்பைப் பற்றி கேவலமான கருத்துகளை எல்லாம் சொல்லியாகி விட்டது. அந்நிலையில், நல்லதை போதிக்க ஆளில்லை. இருந்தால், அவர்களையும் கிண்டல் செய்யும் முறையில் தான் ஊடகக் காரர்கள் இருக்கிறார்கள். இந்திய நாட்டு கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் என்றால் ஏளனம் பேசுகிறார்கள். பாரம்பரியங்கள் மீறப் படுகின்றன. பெரியவர்களுக்கு மரியாதைக் கொடுப்பதில்லை. இவ்வாறு இருக்கும் நிலையில், பள்ளி மாணவர்களுக்குயார் அறிவுரை கூறுவார்கள், கூறினால், எத்தனை மாணவ-மாணவியர் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

19-05-2020

Bois locker Admn arrested, Asian age, 07-05-2020

[1]   India.com, ‘Bois Locker Room’: Admin of Instagram Chat Group Arrested, Devices of Identified Members Seized, News Desk, lEdited by Shubhangi Gupta, Published: May 6, 2020 4:19 PM IST

[2] Advocates urged to direct the authorities concerned to register FIRs for the alleged offences, punishable under the Protection of Children from Sexual Offences Act, the Information and Technology Act and the Indian Penal Code, against the perpetrators and initiate investigation in the matter at the earliest. An FIR was lodged by the police on May 3 and a juvenile has been apprehended in connection with the matter.

https://www.india.com/news/india/bois-locker-room-admin-of-instagram-chat-group-arrested-devices-of-identified-members-seized-4021564/

[3] TheLogicalIndian, Spine-chilling details of the boys’ conversation have shocked netizens and yet again raised questions on the safety of women in India. Sumanti Sen (Digital Journalist) India | 4 May 2020 / Updated : May.5, 2020.

[4] https://thelogicalindian.com/news/boys-locker-room-group-20915

[5] தினமலர், பாய்ஸ் லாக்கர் ரூம் வழக்கை விரைந்து முடியுங்கள்: டில்லி ஐகோர்ட், Updated : மே 19, 2020 11:35 | Added : மே 19, 2020 09:53.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2542116&Print=1

[6] நக்கீரன், நேற்று பாய்ஸ் லாக்கர் ரூம்இன்று கேர்ள்ஸ் லாக்கர் ரூம்இளைய தலைமுறையை காவு வாங்கும் இணையம், Published on 05/05/2020 (17:37) | Edited on 05/05/2020 (18:01)

[7] https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/bois-locker-room-and-girls-locker-room-issue