Archive for the ‘திறமையற்ற ஆசிரியர்’ Category

பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.ஏ., முடித்தவர்கள் சரித்திரம் – வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது–பிரச்சினை, பின்னணி என்ன? (2)

ஏப்ரல் 14, 2024

பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.., முடித்தவர்கள் சரித்திரம்வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது பிரச்சினை, பின்னணி என்ன? (2)

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொல்லியல் துறை: கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொல்லியல் துறைக்கு அடித்தளமிட்டவர் 1911இல் துணைவேந்தராக இருந்த அசுதோஷ் முகர்ஜி. இங்கு கற்கால வரலாறு, கல்வெட்டு, நாணயவியல், கட்டிடக்கலை, சிற்பக்கலை எனத் தொல்லியலோடு தொடர்புடைய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்தியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான சென்னைப் பல்கலைக்கழகம் 1961 முதல் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் படிப்பை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட நிலையில் வழங்கிவருகிறது. கற்கால வரலாறு, தொல்லியல் அகழாய்வு நெறிமுறைகள், கட்டிட, சிற்பக்கலை, கல்வெட்டுக்கள் பற்றிய பாடப்பிரிவு, நாணயவியல், அருங்காட்சியகவியல், ஆழ்கடல் ஆய்வுகள் தொடர்பான பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் முறையான அகழாய்வுப் பயிற்சி வழங்கப்படுகிறது.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் முதலியன: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைத் தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், ஆழ்கடல் ஆய்வுத்துறை, கட்டிடக்கலைத் துறை எனத் தொல்லியல் சார்ந்த அனைத்துப் பாடப்பிரிவுகளையும் வழங்குகிறது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஓராண்டு தொல்லியல், கல்வெட்டியல் பட்டயப் படிப்பையும், பண்டைய வரலாறு, தொல்லியல் பாடத்தில் முனைவர் பட்டத்தையும், ஆறு மாத தொல்லியல் பொருட்கள் பாதுகாப்பு தொழில்நுட்பம் சார்ந்த சான்றிதழ் படிப்பையும் வழங்குகிறது. சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஓராண்டு கவ்வெட்டியல்பாடத்தை வழங்குகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இரண்டு வருட தொல்லியல் படிப்பை உதவித் தொகையுடன் வழங்குகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகை அவர்கள் மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள மிகப் பெரிய வாய்ப்பாக அமையும்.

மற்ற கல்வி நிறுவனங்கள்: பல்கலைக்கழகங்கள் தவிர்த்துப் பல கல்லூரிகள் தொல்லியல் பாடத்தை இளங்கலை, முதுகலை அளவிலும் வழங்குகின்றன. நாகப்பட்டினத்தில் உள்ள பூம்புகார் கல்லூரி ஓராண்டு கட்டிடக்கலை, சிற்பக்கலை பாடப்பிரிவில் இந்தியாவில் இருந்த பல்வேறு கட்டிடக்கலை அமைப்புகளை விளக்கும் வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மாமல்லபுரத்தில் உள்ள கட்டிட, சிற்பக்கலை கல்லூரியும் மாணவர்களுக்கு இளங்கலையில் நுண்கலைப் பட்டத்தை வழங்குகிறது. சென்னையில் உள்ள சென்னை கிறித்துவக் கல்லூரி இளநிலைக் கல்வியில் தொல்லியல் பாடத்தை வழங்குகிறது. இக்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட வரலாற்றின் மறுபக்கத்தை தொல்லியல் கல்வியின் மூலம் அறிவியல்பூர்வமான முறையில் அகழ்ந்தெடுத்து உலகுக்குப் பறைசாற்றுகின்றன. தொல்லியல் என்பது அனைத்துத் துறைகளையும் இணைத்துச் செய்யப்பட வேண்டிய ஆய்வுத் தளமாகும். ஆகையால் பல்துறை அறிஞர்களும் ஆர்வத்தோடு தொல்லியலைக் கற்றால் உலகின் தொன்மை வாய்ந்தவர்கள் இந்தியர்கள் என்பது புலப்படும். குறிப்பாக உலகின் தொன்மையாள மொழிக்கும், வரலாற்றுக்கும் சொந்தக்காரர்களான தமிழர்கள் தங்கள் வரலாற்றின் வளமையை உணரவும் போற்றவும் மிகப்பெரும் வாய்ப்பாக அமையும்.

சரித்திரப் பாடத்தில்-பட்டப் படிப்பில் வித்தியாசம் ஏன்?: சரித்திரம் படித்தவர்கள் தொல்லியல் வேலைக்குவர முடியாது என்றால், அதே போல தொல்லியல் படித்தவர்களும் சரித்திர வேலைக்குச் செல்ல முடியாது. ஜே,என்.யூவில் இடைக்கால சரித்திரம் பட்டம் பெற்றவருக்கும் இந்த ஆணை பொறுந்தும். பிறகு, ஜே,என்.யூ இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுகின்றதா? அதனிடம் ஏன் பழங்கால இந்தியாவுக்கு துறை-படிப்பு இல்லை என்று யாருகேட்டதாகத் தெரியவில்லை. இப்பொழுதெல்லாம், புதிய படிப்புகள் படித்தால் வேலை கிடைக்கும் என்ற எண்ணம் வலுத்துள்ளது. அதனால், ஒருவேளை இப்படியெல்லாம் பல்கலைக் கழகங்களில் துறைகளை ஆரம்பிக்கலாம். சரித்திரப் படிக்க ஆளில்லை, சரித்திரத் துறையே மூடப் படுகிறது என்றெல்லாம் கூட நடந்தேறியுள்ளது. அதற்கும் முறையான எதிர்ப்பு ஒன்றும் இல்லை. சுற்றுலா, பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு, ஓட்டல்-கேடரிங் மேனேஜ்மென்ட் என்றெல்லாம் மாறி வருகின்றதை கவனிக்கலாம், அதாவது, சரித்திரம் இவற்றுடன் சேர்த்து அல்லது அவற்றை சரித்திரத்துடன் சேர்த்து, படிப்புகளை உருவாக்குகிறார்கள்.

நன்றாக படிக்கும் மாணவர்களைப் பற்றி கவலைக் கிடையாது: நன்றாக படிக்கும் மாணவர்களைப் பற்றி கவலைக் கிடையாது. அவர்கள் எப்படியாவது, எந்த படிப்பு, துறை படித்தாலும் முன்னுக்கு வந்துவிடுகிறார்கள், வேலைக்குச் சென்று விடுகிறார்கள். ஆனால், 50% பெறுபவர்கள் கஷ்டப் படுகிறார்கள். மேலும், ஆங்கிலம் தெரியாத நிலையும் பலரை பாதிக்கிறது. அதைப் பற்றியும் பெரும்பாலோர் கண்டு கொள்ளவதில்லை. எப்படியாவது அரசு வேலை கிடைத்து விட்டால், போதும், பிறகு அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம் போன்ற மனப்பாங்கும் உள்ளது. இந்த வேலைக்கு, இந்த ஆண்டில் விளம்பரம் வரப்போகிறது, அதனால், அதற்குள் டிகிரி / பட்டயம் பெற்று தயாராகி விடவேண்டும் என்ற திட்டத்துடனும் படிக்க சேர்கின்றனர். அத்தகைய விவரம் தெரிந்தவர்கள், விவரமானவர்கள் அமைதியாக வேலைக்குச் சென்று விடுகின்றனர். மற்றவர்கள் முழிக்கின்றனர், திகைக்கின்றனர். போட்டியில் தம்மையும் அறியாமல் பின்னே தங்க நேரிடுகிறது.

காலப்போக்கில் மாறும் / காலாவதியாகும் பாடங்கள்: கல்வியாளர்களில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் கலை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு, பாகுபாடு மற்றும் போட்டி ஆகியவை மறக்கமுடியாததாகவும், காலப்போக்கில் தொடர்கின்றன. சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் கலைப் பாடங்கள் மற்ற பாடங்களைக் காட்டிலும் தாழ்ந்தவையாகக் கருதப்பட்டன. இதனால் சில மாணவர்கள் பி.ஏ. (ஹானர்ஸ்) மற்றும் / அல்லது வழக்கறிஞர்களாக ஆக சட்டம் போன்ற படிப்புகளைப் படித்தனர். இல்லையெனில், கலைப் பட்டதாரிகள் அலுவலகம் மற்றும் நிர்வாகப் பணிகளுக்குச் சென்றனர். அக்காலகட்டத்தில், எழுத்தர் பணிக்கு அத்தகைய அனுபவம் தேவைப்பட்டதால் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து அவசியமானது. எனவே, 1980கள் வரை, டைப்ரைட்டர் நிறுவனங்கள் காலை அல்லது மாலையில் ஒரு மணி நேர நேரத்தைப் பெறுவதற்கு வேலை தேடுபவர்களுடன் பிஸியாக இருந்தன. இன்றும் தட்டச்சு மற்றும் கணினி தட்டச்சு ஆகியவை எழுத்தர் பணிக்கு வலியுறுத்தப்படுகின்றன அல்லது கட்டாயமாக்கப்பட்டுள்ளன. கணினிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அவை இயந்திர தட்டச்சுப்பொறிகள் கிட்டத்தட்ட உபயோகமில்லாதவையாகி ஸ்கிராப்பாக விற்கப்பட்டன. எலெக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் தட்டச்சுப்பொறிகளும் கூட அதே நிலையை அடைந்தன.

வகுப்பறையில் திறமை தீர்மானிக்கப் படும்: அதுபோல சரித்திரம் போன்ற கலைசார் படிப்புகள் வேலை எனும்பொழுது, மதிப்பிழந்து வருகின்றன. அதிலும் ஆங்கிலம் எழுத-படிக்க-பேச சரியாக வராது என்றால், அலுவலகங்களில் வேலை செய்வது கடினமாகி விடுகிறது. அந்நிலையில் உதவி / துணை பேராசிரியர் பதவிக்குச் சென்றால், அவர்கள் எப்படி பாடங்கள் நடத்துவர், போதிப்பர், விளக்குவர் என்று தெரியவில்லை., ஆகவே, நிச்சயம் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும், தயார் படுத்திக் கொண்டு, சவல்களை சம்மாளிக்க வேண்டும். தங்களது வேலைக்கு உகந்தவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். வெறும்பட்டங்கள் / சான்றிதழ்கள் உதவாது, வேலை செய்யும் விதம் தான் அவர்களின் உண்மையான தகுதி, திறமை முதலியவற்றை வெளிப்படுத்தும். ஏனெனில், வகுப்பறையில் பாடத்தை போதிக்கும் பொழுது, ஏமாற்ற முடியாது. மாணவர்கள் தராதரத்தை கண்டு பிடித்து விடுவார்கள், கண்டு கொள்வார்கள், மதிக்க மாட்டார்கள்.

© வேதபிரகாஷ்

14-04-2024

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணி நீக்கத்தினால் கல்வித் திறன் மேன்படுமா, ஊழல் குறையுமா? (2)

நவம்பர் 19, 2023

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணிநீக்கத்தினால் கல்வித்திறன் மேன்படுமா, ஊழல் குறையுமா?  (2)

பணத்தினால் கல்வித்துறையில் எதனை அல்லது எதையும் சாதிக்கலாம்: கல்வியில் ஊழல் என்பது நினைத்துப் பார்க்க முடியாத்து என்று இருந்தது. ஆனால், இப்பொழுது நாறுகிறது.

  • முதலில் “கல்வி ஊழல்” என்பது பணம் இல்லாத பலன்களை மட்டுமே எதிர்பார்த்து நடந்து கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது பணம் தான் பிரதானமாக இருப்பதினால் பணத்தினால் எதையும் வாங்கிவிடலாம்,
  • “எதையும்” அதாவது கல்வியில் படிக்காமலேயே டிகிரி சர்டிபிகேட், சான்றிதழ், மார்க் லிஸ்ட், முதலிய பெற்று விடலாம்,  
  • அது மட்டும் இல்லாமல் பணத்திற்கு ஏற்ப இப்பொழுது அவற்றை பெறலாம், தேவைக்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்,
  • இல்லை தமக்கு பதிலாக ஒருவரை வைத்துக் கூட தேர்வு எழுதப்படலாம்.,
  • தேர்வு எழுதி வைத்துக் கொள்ளலாம், பாஸ் ஆகலாம்,
  • அதன்படியே சான்றிதழ் பெறலாம்
  • இவரெல்லாம் கூட மறைந்து, பிறகு அத்தகைய போலி அல்லது அதர்மமுறையில் பெறப்பட்ட சான்றிதழ்களை வைத்துக்கொண்டு வேலைக்கு செல்வது
  • அதிலும் என்ன புண்ணியமாக மிகச் சிறப்பாக நினைத்து வரப்படுகின்ற ஆசிரியர் வேலைகளுக்கு அத்தகைய அநியாயமான சான்றிதழ்களை கொடுத்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது

பிறகு அத்தகைய ஆசிரியர்கள் எவ்வாறு ஒழுக்கத்துடன், நியாயத்துடன், தர்மத்துடன் இருப்பார்கள், நடந்து கொள்வார்கள்.

யோக்கியம் இல்லாதவர்கள் கல்வித்துறையில் இருப்பதற்கு யார் காரணம்?: சமீபகாலமாக நடந்த முறைகேடுகளில் இரண்டு முறைகேடுகள், கல்வித் துறையின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கியுள்ளன[1].  அமைச்சர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்துவரும் நிலையில், ஊழலற்ற, நேர்மையான அடுத்த தலைமுறையை உருவாக்கவேண்டிய மாபெரும் பொறுப்பு கல்வித் துறைக்கு உண்டு[2], என்றெல்லாம் பேசவேண்டிய நிலை வந்து விட்டது. “கல்வித்துறை” என்றால் என்ன, அதில் உள்ளவர்கள் ஹகுதியுள்ளவர்களா என்று யோசிக்க வேண்டும். இன்று “சினிமாக்காரர்கள்,” கெட்ட-பஷை பேசுபவர்கள், யோக்கியதை இல்லாதவர்கள் உறிப்பினர்களாக இருக்கின்றனர். ஊழல்களில் சம்பந்தப்பட்ட துணைவேந்தர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாலும்,

  • அதற்கு அவர்கள் மட்டும்தான் காரணமா?
  • இந்த அளவுக்குக் கல்வித் துறையில் ஊழல் பெருக என்ன காரணம்?
  • ஒரு பல்கலைக் கழக துணைவேந்தர் தனியாக தவறு செய்ய முடியாது. கூட இருக்கும் பதிவாளர், டீன், சூப்பரவசைர்கள், வினாத்தாள் திருத்துபவர்கள், கணக்கர்கள் என சகலரையும் அதில் இணைத்தே செய்ய முடியும்![3]
  • லஞ்சம் வாங்குவது ஒரு பெருங்குற்றமல்ல என்ற மனநிலைக்கு அவர்கள் செல்வதற்கு என்ன காரணம்?
  • ஒழுக்கத்தை கற்க வேண்டிய இடத்தில் மாணவர்கள் ஊழலை கற்று வெளியேறுகின்றனர்[4]

ஒட்டுமொத்தக் கல்வித் துறையே பணம் சார்ந்த ஒன்றாக மாறிவிட்ட சூழலையும் இதனுடன் சேர்த்துப் பார்க்கவேண்டியுள்ளது.

சுயநிதிக் கல்லூரிகளின் வருகையில்கல்வி ஊழல் ஆரம்பித்தது: 1985-களில் சுயநிதிக் கல்லூரிகளின் வருகை ஆரம்பித்தது. அப்போதுதான் கல்வி வியாபாரமும் ஆரம்பமானது என்று கருத்துத் தெரிவிப்பது, அரசியல்வாதிகள் அதில் முதலீடு செய்ததனால் தான் என்ற உண்மையினை மறைக்கின்றனர். “அந்தக் காலகட்டத்தில் கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் நியமனத்தில் பங்குவகித்தனர். அப்போதும் சிறு சிறு பிரச்னைகள்  எழும். அதை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் எதிர்க்கப் பட்டுள்ளது,” என்று நாஜுக்காக குறிப்பிட்டுக் கொண்டாலும், ஊழல், ஊழல் தான், அதனை நியாயப் படுத்த முடியாது. ஆனால், அப்போது நடைபெறும் ஊழல்களைவிட பல மடங்கு மோசமான முறைகேடுகள் இப்போது நடைபெறுகின்றன, என்றும் ஒப்பீடு செய்ய முடியாது. கல்வி வியாபாரிகள் ஒருபக்கமும், வேலையை ஏலம்விடும் வியாபாரிகள் மறுபக்கமும் உள்ளனர். குறிப்பாக, அரசு வேலைகளை நம்பி தமிழ்நாடு தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் வாரியம் (TRB) மூலம் நடத்தப்படும் தேர்வுகளை எழுதிவிட்டு, ஏழை மக்கள் பலர்  வேலைவாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஊழல் மூலம் அவர்களது வாய்ப்பு பறிக்கப்படுகிறது. உயர்கல்வித் துறையின் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தொடங்கி இந்நாள் அமைச்சர் அன்பழகன் வரை உயர்கல்வித் துறையில் உரிய நடவடிக்கை எடுத்தார்களா என்பது கேள்விக்குறியே!

இதுவரை நடந்துள்ள கைதுகள் முதலியன: பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை, கைதானவர்கள் எதைப் பற்றியும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. இந்து அறநிலையத்துறை கைதுகள் போலத்தான் இதுவும் இருக்கிறது.கைதானவர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை.

  1. பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தற்கொலை செய்துகொண்டார். அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது.
  2. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வித் துறையில் ஊழல் நடைபெற்றது குறித்த செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகின.
  3. அரசு உதவி பெறும் கல்லூரிகளில், கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற நியமனங்களில் ஊழல் நடைபெற்றது குறித்து, ஆசிரியர் சங்கங்கள் போராடிவருகின்றன.
  4. பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனத்தில் நடைபெற்ற கோடிக்கணக்கான ரூபாய் ஊழல்தான் வெளியே வந்துள்ளன.
  5. துணைவேந்தர்கள் பலர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
  6. எஸ்.ஆர்.எம் கல்லூரியின் மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு குறித்தும் விவகாரங்கள் தெரிய வந் துள்ளன.

ஆசிரியர் பணிகள்விற்கவாங்கப் படுகின்றனவா?: துணைவேந்தர் பணி நியமனத்தில் கல்வியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு  ஊடகங்கள் கருத்துத் தெரிவித்தன. சமூகச் செயற்பாட்டாளர் பாலம் நாராயணன், இதற்காக வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு முன்னரே தனியார் மருத்துவக் கல்லூரியான பள்ளிக் கல்வி தொடங்கி பல்கலைக்கழகக் கல்வி வரை அனைத்து ஆசிரியர்  பணி நியமனங்களிலும் ஊழல் நடைபெற்றால், எப்படிப்பட்ட கல்வியை நாம் மாணவர்களுக்கு அளிக்கப்போகிறோம்? இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அரசு, பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவந்தாலும், ஆசிரியர் பணிகள் ஏலம்விடப்பட்டுக் கொண்டிருக்கும்போது அவை எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தும்? தனியார் கல்லூரியின் கட்டணக் கொள்ளையும் அரசு நிறுவனங்களின் ஊழலும் கல்வியை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இல்லாமல் செய்துவருகின்றன. பாரதியார் பல்கலைக்கழகம் மட்டுமன்றி, கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்துத் துணைவேந்தர் பணி நியமனங்களிலும் அரசு தலையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ஆசிரியர்உதவி பேராசிரியர்பேராசிரியர் பணம் கொடுத்து வாங்கப்படும் பதவிகளா?: எல்லா அரசுப் பணி நியமனங்களிலும் பணம் கொடுத்தால்தான் பதவி என்பதை வெளிப்படையாக அனைத்து மக்களும் பேசிக்கொள்கின்றனர். ஆசிரியர் பணி நியமனங்களிலும், துணைவேந்தர் பணி நியமனங்களிலும் என்ன மாதிரியான வெளிப்படைத்தன்மை இருக்கிறது? எதன் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுகிறது என்பது பற்றிய உண்மைத்தன்மையே இல்லை. இங்கு நடைபெறும் ஊழல் என்பது, வெறுமனே துணைவேந்தர் மட்டுமே சம்பந்தப்பட்டது கிடையாது; இது ஒரு பெரிய அங்கம்போல் செயல்படுகிறது. இதன் பின்னால் அரசியல்வாதிகள், அதிகாரிகள் எனப் பலர் இருப்பர். கல்வித் துறை, கடந்த பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதிக்கும் துறையாக மாறியிருக்கிறது. இதை ஊடகங்களும் பொதுமக்களும் பெரும் விவாதமாக மாற்றினால் மட்டுமே இந்தப் போக்கை மாற்ற முடியும்.

கல்விவியாபாரத்தால், கல்விஊழல் உண்டானதா?: கல்வி-கல்லூரி முதலாளிகளாக பல பணக்காரர்கள் வந்துவிட்ட கல்வித் துறை முழுக்கவே வியாபார மயமாகிவிட்டது. கிராமப்புற மாணவர்களும் ஏழை மாணவர்கள் பலரும் அரசுக் கல்லூரியை மட்டுமே நம்பி உயர்கல்வியை நோக்கிப் பயணிக்கின்றனர். பல்கலைக்கழகங்களில் நடக்கும் இதுபோன்ற ஊழல்கள், கல்வித் துறையின் மீதும் ஆசிரியர்கள் மீதும் உள்ள மதிப்பைக்  கெடுத்துவிடுகின்றன; `கல்வியின் மூலம் மட்டுமே தனக்கான வாழ்வை மீட்க முடியும், சமூகத்தில் நல்ல நிலையை எட்ட முடியும்’ என நம்பும் பல லட்சம் மாணவர்களையும் பெற்றோர்களையும் நம்பிக்கை இழக்கச் செய்கின்றன. இதுபோன்ற முறைகேடுகளைக் களையும் வகையில்  அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், ஒரு தலைமுறையே பாதிக்கும் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்!

© வேதபிரகாஷ்

18-11-2023.


[1] விகடன், கல்வித் துறையில் ஊழல்பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவந்தால் மட்டும் போதுமாதீர்வு என்ன?!, சக்தி தமிழ்ச்செல்வன், Published: 05 Feb 2018 7 PM; Updated:05 Feb 2018 7 PM.

[2] https://www.vikatan.com/education/115542-educational-activists-view-about-bharathiyar-university-vice-chancellors-corruption

[3] சாவித்திரி கண்ணன், ஊழலில் ஊறித் திளைக்கும் உயர்கல்வித் துறை!, அறம் இணைய இதழ், October 24, 2022.

[4] https://aramonline.in/10997/corruption-in-higher-education/