Archive for the ‘யாழ்’ Category

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் என்ன பிரச்சினை? தாம்சன் ஜேக்கப் ஜான் சாமுவேல் பற்றி எழுதிய புகார் கடிதம் மற்றும் சதி என்று பின்னவரின் அறிக்கை (5)

ஜூன் 13, 2023

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் என்ன பிரச்சினை? தாம்சன் ஜேக்கப் ஜான் சாமுவேல் பற்றி எழுதிய புகார் கடிதம் மற்றும் சதி என்று பின்னவரின் அறிக்கை (5)

தாம்சன் ஜேக்கப் என்பவர், இந்த மாநாட்டை சீர்குலைக்கும் வகையில், அவதுாறு கருத்துகளை பரப்புகிறார்: உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சீர்குலைக்க சதி நடப்பதாக, மாநாட்டின் பொறுப்பாளர் ஜான் சாமுவேல் கூறி உள்ளார்[1]. இதுகுறித்து, அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை[2]: “சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில், அடுத்த மாதம், 7ம் தேதி முதல், 9ம் தேதி வரை 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடக்க உள்ளது. இதில், 25 நாடுகளைச் சேர்ந்த, 25க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டை பொறுப்பேற்று நடத்தும் நான், அரை நுாற்றாண்டாக தமிழ் பணி புரிகிறேன். ஆசியவியல் நிறுவனம், 42 ஆண்டுகளாக தமிழாய்வு பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில், தாம்சன் ஜேக்கப் என்பவர், இந்த மாநாட்டை சீர்குலைக்கும் வகையில், அவதுாறு கருத்துகளை பரப்புகிறார்[3]. இதை முறியடிக்க வேண்டும்,” இவ்வாறு, ஜான் சாமுவேல் கூறியுள்ளார்[4].

ஜான் சாமுவேல் யார், தாம்சன் ஜேக்கப் யார்?: ஜான் சாமுவேல், ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி, உலகத் தமிழாராய்ச்சி மாநாடு எல்லாம் எப்பொழுதுமே சர்ச்சைகளில் ஊறிவைகளாகத் தான் இருக்கின்றன. இப்பொழுது மாநாட்டை எங்கே நடத்துவது பிரச்சினை, போட்டி, முதலியவை சார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் என்றெல்லாம் சென்ற பிறகு, செம்மஞ்சேரிக்கு வந்து சேர்ந்துள்ளது. என்ற ஆசியவியல் நிறுவனத்தின் மீது எழுந்துள்ள சர்ச்சைகளால், 11வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு சிக்கல் எழுந்துள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மைய நிர்வாகக்குழு, 11ம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடத்த உள்ளதாக, கடந்த ஜூன் 3ம் தேதி, சென்னை பல்கலையில் அறிவித்தது. இப்பொழுது தாம்சன் ஜேக்கப் என்று ஒருவர் கிளம்பியுள்ளார். இவர், யார் என்று தெரியவில்லை, ஆனால், ஜான் சமுவேலுக்கு நன்றாகத் தெரியும் போலிருக்கிறது. அவருக்கும் இவரை நன்றாகவேத் தெரிந்திருக்கிறது. பழைய விவரங்களை அப்படியே கூறுகின்றார்.

தாம்சன் ஜேக்கப் ஜான் சாமுவேல் பற்றி எழுதிய புகார் கடிதம்: இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த, தாம்சன் ஜேக்கப் என்பவர், சென்னை பல்கலை துணைவேந்தருக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்[5]. அதில் கூறப்பட்டுள்ளதாவது[6]: “ஆசியவியல் நிறுவனத்தில், 11வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடக்க உள்ளதாக, சென்னை பல்கலையில் நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம், சரியான ஆண்டறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்காததால், சென்னை பதிவுத் துறை தலைவர் மற்றும் சங்கங்களின் பொறுப்பாளர் அதன் பதிவை ரத்து செய்துள்ளார். அது, தற்போது செயல்பாட்டில் இல்லை. மேலும், மாநாட்டு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜான் சாமுவேல் என்பவர், மத்திய அரசின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டு, செங்கல்பட்டு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் சிறைத்தண்டனை பெற்றவர். அதாவது, மாநாட்டை நடத்தும் நபர் மீதும் மற்றும் இடத்தின் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவாகிவுள்ள நிலையில், எந்த அடிப்படையில், இந்த மாநாட்டுக்கான கூட்டத்துக்கு அனுமதி அளித்தீர்கள். இதுகுறித்து, உயர்கல்வித் துறை செயலரோ, அமைச்சரோ ஒப்புதல் அளித்துள்ளனரா? அப்படி இருந்தால், அதன் விபரங்களை சமர்ப்பிக்கவும்,” இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. கடிதத்தின் நகல்களை கவர்னர், உயர்கல்வி துறை அமைச்சர், செயலர் ஆகியோருக்கும் அனுப்பி உள்ளார்.

தமிழ், தமிழ் மாநாட்டின் பெயரால் ஏன் இந்த புகார், முதலியன?: ஊழலுக்கு மேல் ஊழல், புகாருக்கு மேல் புகார், பரஸ்பர புகார்கள், குற்றச்சாட்டுகள், அறிக்கைகள் இவையெல்லாம் இத்தகைய பெரிய பண்டிதர்களிடம், மேதைகளிடம், புலவர்களிம் ஏன் இருக்கின்றன. சாதாரண மாணவர்கள் இவர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள். ஒரு பக்கம் தமிழ்-தமிழ், தமிழ் தான் உயிர் போன்ற பேச்சுகள், கூச்சல்கள், கோஷங்கள்…, இன்னொரு பக்கம் அதே தமிழின் பெயரால் வசவுகள், திட்டுகள், தூற்றுதல் முதலியனவும் வாடிக்கையாக இருக்கின்றன. ஏற்கனவே, அண்ணா பல்கலையில், அங்கீகாரம் இல்லாத நிறுவனத்தால் வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் குறித்தும், அதில் முன்னாள் நீதிபதி பங்கேற்றது குறித்தும், துணைவேந்தர் மீது குற்றச்சாட்டும், சர்ச்சையும் எழுந்த நிலையில், தற்போது, சென்னை பல்கலையிலும், அதுபோன்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டம்…………………………….

நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை[7]: 1974ஆம் ஆண்டு ஜனவரி 3 முதல் 10 வரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, அங்கு பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டுள்ளது. இறுதி தினமான ஜனவரி 10, 1974 இல் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒன்பது அல்லது பதினொரு பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்திய குழப்ப நிலையினால் மரணம் அடைந்தனர். காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட இக்குழப்பத்தினால் நிகழ்ந்த வாகன விபத்துகள், இந்தக் குழப்பங்களினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட இதய வலி என்பன இந்த மரணங்களுக்குக் காரணமாயின.

© வேதபிரகாஷ்

13-06-2023


[1]. தினமலர்,உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சீர்குலைக்க சதி?..,பதிவு செய்த நாள்: Added : ஜூன் 13, 2023  00:33; https://www.dinamalar.com/news_detail.asp?id=3346006

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3346006

[3] தினமலர்,உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சீர்குலைக்க சதி?..,பதிவு செய்த நாள்: ஜூன் 13,2023 05:10

[4] https://m.dinamalar.com/detail.php?id=3346432

[5] தினமலர்,ஆசியவியல் நிறுவன சர்ச்சையால் உலகத்தமிழ் மாநாட்டுக்கு சிக்கல், மாற்றம் செய்த நாள்: ஜூன் 11,2023 00:36;

[6] https://m.dinamalar.com/detail.php?id=3344344

[7] நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை, https://ta.wikipedia.org/wiki/1974_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D