Archive for the ‘மருத்துவம்’ Category

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது – திருமாவளவன் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு ! (4)

ஜூலை 26, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது – திருமாவளவன் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு ! (4)

3-R, RRR, பற்றி மலேசிய முதல்வர் உறுதியாக இருக்கிறார்: மலேசிய பிரதமர் [3-R, RRR, Religion, Race, Royalty] விசயங்களில் யாரும் மற்றவர்களை தாழ்வாகப் பேசக் கூடாது என்று உறுதியாக இருக்கிறார், அதை பலமுறை எடுத்தும் காட்டியுள்ளார். ஆகையால், துவேசப் பேச்சுகளுக்கு மலேசியாவில் இடமில்லை. அந்நிலையில், நாத்திகம், பகுத்தறிவு, பெரியாரிஸம் என்று இதுவரை பேசி வந்தவர்களுக்கு இனி மலேசியாவில் அவ்வாறு பேச முடியாத நிலை உருவாகியிருக்கிறது. மொழி என்று வைத்துக் கொண்டாலும், அதை வைத்து முன்னேற வழிவகுக்க வேண்டுமேயன்றி, மொழிவெறியாக்கி, அதனை மதம், சித்தாந்தம், அரசியல் இவற்றுடன் சேர்த்து பிரச்சினை உண்டாக்கலாகாது. என்ன வேண்டுமானாலும்பேசி, நாத்திகம், பகுத்தறிவு, பெரியாரிஸம் என்று தப்பித்துக் கொள்ள முடியாது. மற்றவர்களின் உணர்வுகளை, உரிமைகளை மதித்தாக வேண்டும். இதனால், அத்தகைய சித்தாந்திகள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை உண்டாகியுள்ளது.

அரசியல்வாதிகள் பிஜேபி-எதிர்ப்பை இந்துதுவேசமாக மாற்றுவது: தமிழகத்தை சேர்ந்த பாஜக எதிர்ப்பு நிலை அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் தற்போது பெரும் சிக்கலை இந்தியாவில் எதிர்கொள்வது மட்டுமல்ல உலக தமிழர்கள் இடையேயும் எதிர்கொண்டு இருப்பது பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. பிஜேபி-எதிர்ப்பு பெரும்பாலான நிலைகளில் இந்துவிரோதமாகி, இந்து துவேசமாகி, வெறுப்புப் பேச்ச்களில் முகின்றன. இங்குதான் சட்டமீறல்களும் வருகின்றன. புகார்கள் கொடுக்கப் பட்டு வழக்குகள் பதிவான்றன.ஆனால், தங்களது அரசியல் ஆதிக்கம் மூலம், அப்படியே அமுக்கப் பட்டு, தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால், இப்பொழுது மக்களுக்கு விழிப்புணர்வு வந்து விட்டது. செக்யூலரிஸ அரசாங்கம் எனும்பொழுது, அவ்வாறு ஏன் இந்துமதத்திற்கு மட்டும் விரோதமாக பேசி வருகிறார்கள் என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். தொடர்ச்சியாக வீரமணி, திண்டுக்கல் லியோனி அவரை தொடர்ந்து திருமாவளவன் ஆகிய மூவரும் அடுத்தடுத்து குறிப்பிட்ட கால இடைவேளையில் மலேஷிய தமிழர்கள் இடையே எதிர்ப்பை சந்தித்து இருப்பது அதன் பின்னணியில் என்ன என்ற தகவல்தான் தற்போது ஒட்டுமொத்த திராவிட ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

2019ல் திக- வீரமணி நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டது: 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24 -ம் தேதி திராவிட கழக தலைவர் வீரமணி தலைமையில் மலேஷியாவில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது அப்போது தொடர்ச்சியாக இந்து மதத்தை விமர்சனம் செய்யும் வீரமணி மலேஷியாவில் கால் வைக்க கூடாது எனவும், அப்படி வைத்தால் மத மோதல் உண்டாகும் எந்த மதத்தையும் தவறாக பேசாத மலேஷிய மக்கள் வாழும் இடத்தில் வீரமணி வந்தால் ஒற்றுமை குறையும் என மலேசியா உள்துறை அமைச்சகத்தில் இந்து தர்ம சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட உடனடியாக வீரமணி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை திராவிட சித்தாந்தம் பேசுவோருக்கு உண்டாக்கியது, இதையடுத்து மலேஷியா சென்ற திண்டுக்கல் லியோனி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்ட நேரத்தை கடந்து உள்ளே வர  அவரை வாசலில் நிற்க வைத்து மலேஷியா தமிழர்கள் வெளுத்து வாங்கினர், தமிழ்நாட்டில் இருந்து வாய் கிழிய ஊருக்கு மேடை மேடையில் நின்று கொண்டு உபதேசம் செய்வது ஆனால் நேரில் பார்த்தால் உங்கள் லட்சணம் தெரிகிறது? குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்றால் நீங்கள் எதற்கு மலேஷியா வருகிறீர்கள் என வெளுத்து வாங்கினர்[1]. அந்த வீடியோ இணையத்தில் TNNEWS24 வெளியிட பெரும் பரபரப்பு தமிழகத்தில் உண்டானது இதையடுத்து திண்டுக்கல் லியோனி விளக்கம் கொடுக்கும் நிலைக்கு சென்றது தமிழக அரசியல் சூழல்[2].

2023ல் திருமாவின் பேச்சிற்கு பலத்த எதிர்ப்பு: இந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய தாக்கம் ஓய்வதற்குள் சில நாட்கள் முன்னர் திருமாவளவன் மலேஷியாவில் பேச சென்று கடும் எதிர்ப்பை சந்தித்து வந்து இருக்கிறார் அதிலும் மதம் குறித்து திருமாவளவன் பேச நிறுத்துடா என கிளம்பிய எதிர்ப்பு பெரும் பின்னடைவை திருமாவளவனுக்கு கொடுத்து இருக்கிறது. திருமாவளவன் மேடையில் பேசும் போது “தமிழ்த் தேசியம் என்பது மொழி, இன உணர்வு மட்டுமல்ல. அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டம்.” என்றார். “மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான். அவற்றைக் கடந்து தேசிய இனம் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மதம் அடையாளத்தை விட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது.” என்றும் அவர் கூறினார். அப்போது மதம் குறித்து திருமாவளவன் பேசியதற்கு அரங்கில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மேடையில் இருந்து பாதியில் கிளம்பினார் திருமாவளவன்.

திருமாவின் சனாதனம் புரிதல் தவறானது: அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தனது வீடியோ பேட்டியில், அருமையாக திருமாவளவனின் பேச்சைக் கண்டித்து விளக்கம் கொடுதுள்ளார். “அவருடைய கருத்தே தவறானது. வெறுப்பு பிரச்சாரம் கூடாது என்பது ஏற்கத்தக்கது. ஆனால் அதே வெறுப்புப் பேச்சை, கடல்கடந்து வந்து ஒருமதத்திற்கு எதிராக தொடர்ந்து பேசுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவருடைய அரசியல்-கட்சி சித்தாந்தத்தை தமிழாராய்ச்சி மாநாட்டில் பேசுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். சனாதனம் என்றால் அவருக்குப் புரியவில்லை என்பது தான் எனது கருத்து. சனாதனம் என்பது நாங்கள் புரிந்து கொண்டது அனைவரும் சமம். அனைவருக்கும் பொதுவானது இப்பூமி.., எல்லோரும் இறைவனின் குழந்தைகள் தான். எல்லோரும் ஒரு தருமம், அறத்தின் அடிப்படையில் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது தான்  நாங்கள் புரிந்து கொண்ட சனாதனம். நாங்கள் புரிந்து கொண்ட இந்து சமயம். பக்தி மார்க்கத்துடன் நாங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர் இங்கு வந்து ஒரு தவறான கருத்தை, தவறான இடத்தில், தவறான நோக்கத்தில் முன்வைத்ததை நாங்கள் ஏற்கமுடியாது. அதற்கு இங்கு மலேசியாவிலேயே பெருங்கண்டனம் உருவாகியுள்ளது. அவர் தமிழ்நாட்டில் என்ன அரசியலையும் செய்து கொள்ளட்டும், ஆனால், இங்கு இனிமேல் வந்தால் அத்தகைய வெறுப்பு அரசியல் உமிழவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்….பாலியிலும் இந்துக்கள் இருக்கிறார்கள் அங்கெல்லாம் ஜாதியம் இல்லை. இந்தியாவில் அரசியல்வாதிகளால் தான் அது ஊக்குவிக்கப் படுகிறது. எனவே இந்திய அரசியலை இங்கே கொண்டு வரவேண்டாம் என்று விளக்கினார்.  மலேசியாவில் இருக்கும் தமிழர்கள் எல்லோருமே ஒன்றாக, ஒரே குடும்பம் போல, ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றாம். இங்கு [தமிழக] அரசியல் மற்றும் மதம் ரீதியில் எந்த பிரசினையும் தேவையில்லை. அது அவருடைய கருத்தாக இருக்கலாம், ஆனால், எங்களுக்கு உடன்பாடு இல்லை. அவ்வாறு அவர் [ஒரு மதத்திற்கு எதிராகப்] பேசியிருக்கக் கூடாது.

முனைவர் ராஜேந்திரனின் விளக்கம்: இதே போல முனைவர் ராஜேந்திரனும் அருமையான விளக்கம் அளித்துள்ளார்[3]. “ஒரு நாட்டுக்கு செல்லும்போது அந்நாட்டின் பாரம்பரியம் என்ன, அங்குள்ள சிக்கல்கள் என்ன என்பதை புரிந்து கொண்டு செயல்படுவது தான், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்என்பது. இந்த மாநாட்டில் பேசிய, 99.99 சதவீத வெளிநாட்டவர்கள் அதை கடைபிடித்தனர். ஆனால், ஒரு சிலர் மதத்தை தாழ்த்தி பேசுகின்றனர். மலேஷியாவை சேர்ந்த ஒருவர், எங்கள் மதத்தை பற்றி இழிவுபடுத்தி பேசுகின்றனர் என, காவல்துறையில் புகார் அளித்திருந்தால், அப்படி பேசியவர்கள் வீடு திரும்பியிருக்க முடியாது. மலேஷிய சிறையில் தான் இருந்திருக்க வேண்டும். மலேஷியாவில் மதம், நாடு, இனம் பற்றி தவறாக பேசுபவர்களுக்கு, இம்மியளவும் இடம் கொடுக்க மாட்டோம் என, பிரதமர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள நண்பர்கள் அங்கே உள்ள அரசியல் குப்பைகளை வந்து இங்கே கொட்ட வேண்டாம். அனைவருக்கும் பொதுவான தமிழை எப்படி மேம்படுத்துவது பற்றி மட்டுமே பேச வேண்டும். மாறாக அரசியல், மதம் பற்றி பேசினால் விபரீதமான விளைவுகள் ஏற்படும்,” இவ்வாறு அவர் பேசினார்[4].

அரசியல் தவித்திருந்தால் மாநாடு நன்றாக இருந்திருக்கும்: அன்று அரங்கத்தில் இருந்தவர்களுள் யாரும் புகார் அளிக்கவில்லை, அப்படி புகார் செய்திருந்தால், அவர்கள், [திருமாவளவன்] வீடு திரும்பியிருக்க முடியாது,…சிறையில் இருந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் எடுத்துக் காட்டினார். மூன்று 3 R-களைத் தொடவே கூடாது, பிரதமர் இதன் மீது கைவைத்தால், இம்மி அளவு கூட இடம் கொடுக்க மாட்டேன் என்று பலமுறை சொல்லியிருக்கிறார், நேற்றும் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் இருந்த நண்பர்கள் பெரிய ஆட்களாக இருக்கலாம், பிரச்சினைகள் இருக்கலாம், ஆனால், அங்கிருந்து வந்து குப்பைகளை இங்கு கொட்டவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இங்கு தமிழை எவ்வாறு உயர்த்தலாம், பெரிய அளவில் எடுத்துச் செல்லலாம் என்பது பற்றி பேச வேண்டும். அதை விடுத்து அரசியல் பேசுவது அந்த அளவுக்கு பொருத்தமாக இருக்காது.. இப்படி தொடர்ச்சியாக மலேஷியா தமிழர்கள் இந்து மதம் குறித்து நேரடியாக அல்லது மறைமுகமாக விமர்சனம் செய்யும் நபர்களை சுளுக்கு எடுத்து அனுப்புவதால் அவர்கள் “குட்டி மோடி ரசிகராக மாறி விட்டார்கள்” என்று TNNEWS24 குறிப்பிட்டாலும், அங்கிருப்பவர்களுக்கும் இந்து என்ற உணர்வு இருக்கத்தான் செய்யும். போதாத குறைக்கு இலங்கை தமிழர்களும் மோடிக்கு ஆதரவாக பேச தொடங்கி இருப்பதால் தமிழகத்தில் இருந்து இனி மலேஷியா பயணமே வேண்டாம் என முக்கிய அமைச்சரான இளம் வாரிசு தொடங்கி பலரும் முடிவு செய்து விட்டார்களாம் என்று TNNEWS24 கூறுகிறது.

© வேதபிரகாஷ்

26-07-2023


[1] மலேசியா, மலேசியாவா வேண்டவே வேண்டாம் சாமி தெறித்து ஓடும் முக்கிய அமைச்சர்கள்…!, BY WEB TEAM,  JULY 25, 2023.

[2] https://www.tnnews24air.com/posts/Malaysia-dont-ask-for-Sami–important-latest-tamil-current-update

[3] தினமலர், தமிழக அரசியல் குப்பையை மலேஷியாவில் கொட்ட வேண்டாம் திருமாவளவன் பேச்சுக்கு எதிர்ப்பு, மாற்றம் செய்த நாள்: ஜூலை 26,2023 05:48

,https://m.dinamalar.com/detail.php?id=3386470

[4] https://m.dinamalar.com/detail.php?id=3386470

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! அரசியல்வாதிகளின் பேச்சுகள்! (2)

ஜூலை 24, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! அரசியல்வாதிகளின் பேச்சுகள்! (2)

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-public-lecture-political.jpg

உள்ளூர் அறிஞர்கள் கௌரவிக்கப் பட்டனர்: முதல் நாளில், மலேசியாவில் குழந்தை இலக்கியம் என்ற தலைப்பில் பாப்பாவின் காவலர் கவிஞர் முரசு நெடுமாறன் உரையாற்றினார். குறிப்பாக பள்ளி குழந்தைகளிடையே கவிதை மூலம் எப்படி தமிழை வளர்த்திருக்கிறோம் என்பதை அழகாக எடுத்துரைத்தார்[1]. கவிஞர் முரசு நெடுமாறன், சிலாங்கூர் மாநில முன்னாள் க. முருகன் ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பிக்கப் பட்டனர். மலேசியாவைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் இராஜேந்திரன், மாநாட்டிற்கான செயலாளர் முனைவர் கிருஷ்ணன் மணியம் ஆகியோர் உட்பட பல பிரமுகர்களும் அரசு சார்பற்ற இயக்கங்களை சேர்ந்தவர்களும் மற்றும் பொது மக்களும் திரளாக வந்திருந்து சிறப்பித்தனர்[2]. உள்ளூர் ஊடகங்கள் இவற்றைப் பற்றி செய்திகள் வெளியிட்டுள்ளன. பிறகு பேசியவர்கள் தமிழ் இலக்கியம், வைணவம், சைவம் பற்றியெல்லாம் பேசினர். ஆனால், அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்த போது, மாநாட்டின் போக்கு திசைத் திரும்பியது எனலாம்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-thiruma-speaking-1.jpg

பிரிவினைவாதம் பேசப் பட்டது: மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள திருமாவளவன் பேசியதாவது[3]: மரபு சார்ந்த கலாச்சார உரிமைகளை பாதுகாக்க உலகத் தமிழ் மாநாடு முனையும். தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வலிமை வாய்ந்தது மாநாடு. தமிழ்த் தேசியம் என்பது மொழி, இன உணர்வு மட்டுமல்ல. அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டம் தமிழ்த் தேசியம். மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான். அவற்றைக் கடந்து தேசிய இனம் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மதம் அடையாளத்தை விட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது என்று கூறினார்[4]. இம் மாநாட்டின் பொது அரங்கில் மலேசிய நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்கு ‘வளர்ச்சி நோக்கில் தமிழ்’ எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முதல்நாள் மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-audience.jpg

கல்விசார், படிப்பு சம்பந்தப் பட்ட, ஆராய்ச்சி-கட்டுரைகள் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை: ஆய்வு அமர்வுகள், ஆய்வு கட்டுரைகள், விவரங்கள், வாசிப்புகள் பற்றிய செய்திகளைக் காணவில்லை. கல்விசார், படிப்பு சம்பந்தப் பட்ட, ஆராய்ச்சி-கட்டுரைகள் என்பது பற்றி மூச்சுக் கூட விட காணோம். மாநாட்டிற்குச் சென்றவர்களும், சமூக ஊடகங்களில் “நான் மாநாட்டிற்குச் சென்றேன்,” என்று புகைப்படங்கள் போட்டுக் கொண்டாலும், கட்டுரைப் படித்தேன், கேள்விகள் கேட்டார்கள், நான் பதில் சொன்னேன் என்றவாறு இல்லாமல், ஏதோ சுற்றுலா சென்றேன் பாணியில் தான் இருந்தது. ஆய்வுக்கட்டுரைகள் பற்றிய பட்டியல், தலைப்புகள், விவரங்களைக் காணோம் கலந்து கொண்டவர்களும் அவ்விவரங்களைப் பகிர்வதாகத் தெரியவில்லை. பெர்ணாம் என்ற இணைதளம் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலரின் வாசிப்புகள் தான் பதிவாகியுள்ளன (சைவம், வைணவம், சித்த மருத்துவம், பிள்ளைத் தமிழ், தோல்சீலை முதலியன).  சில கட்டுரைகள் நன்றாக இருந்தன. மற்றபடி, பெரும்பாலான மற்ற ஆய்வுக்கட்டுரைகள் அரைத்த மாவை அரைக்கும் என்பார்களே அந்த பாணியில் தான் இருந்தன.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia.more-politicians.2.jpg

அரசியல்வாதிகளை அழைத்து அரசியல் இல்லாமல் பேசுங்கள் என்று சொல்லப் பட்டது:. ஆனால், அவர்கள் எல்லோருமே அரசியல் தான் பேசினர், வீடியோவும் உள்ளது. அரசியல் மாநாடாக மாறிய நிலையில், தமிழ் தேசியம் போர்வையில், பிரிவினைவாதம் தான் பேசப்பட்டது. வேல்முருகன், தாமஸ், திருமாவளவன், ஶ்ரீகாந்த் [பீஜேபி], சுப.வீரபாண்டியன், நக்கீரன் கோபால், இலானி, நிறைமதி [சீனர்], கடைசியாக கே.வீரமணி, என்று அதிகமாக, அரசியல் தான் நிறைய பேசப்பட்டது. தமிழ் தேசியம், பார்ப்பனியம், வர்ணம், தமிழ்-சமஸ்கிருதம், சமஸ்கிருத ஆதிக்கம், ஆரியன்–திராவிடன் பண்பாட்டு படையெடுப்பு, என்றெல்லாம் பேசப் பட்டது. வெண்பா, ஆசிரியபா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பா முதலியவற்றிற்கு திரிபு விளக்கமும் கொடுக்கப் பட்டது. இதனால், தமிழுக்கு, தமிழ் ஆராய்ச்சிக்கு, தமிழ் மேன்பாட்டிற்கு எந்த பிரயோஜனும் இல்லை. பெரும்பாலான நேரம் இவ்வாறு அரசியல், பேசியதையே பேசியது, ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் என்று தான் சென்றது. ஊர் சுற்றிப் பார்க்க வந்தவர், அவரவர் வேலைகளுக்கு சென்றனர். சாப்பிடும் நேரதிற்கு வந்து விடுவர்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-velmurugan.jpg

மொழி, தேசம், தேசியம், நாடு, ஒன்றியம் என்று குழப்பவாதங்களை வைக்கும் குழப்பவாதிகள்: வேல்முருகன் தமிழ் தேசியம் என்று, பிரிவினைவாதம் பேசியது வேடிக்கையாக இருந்தது. முன்பு, கம்யூனிஸவாதிகள், பிறகு தமிழீழ ஆதரவாளர்கள், அதற்கும் பிறகு தமிழக பிரிவினைவாதிகள், மொழியை வைத்து, மொழிவாறான தேசிய இனங்கள் என்று பேசி குழப்பி வந்தார்கள். அதாவது ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தேசம் உள்ளது, அந்தமொழிவாரி தேசம் போற்றப் பட வேண்டும். அந்த தேசியம், இந்திய தேசியம் வேறு. எப்படி பலமொழி பேசும் தேசியங்கள், இந்திய நாட்டில் ஒன்றியத்தில் சேர்ந்திருக்கின்றனவோ, அதே போல சுயநிர்ணய உரிமையோடு, ஒவ்வொரு தேசமும் பிரிய உரிமை உண்டு என்றெல்லாம் குழப்பவாதங்களில் ஈடுபட்டனர். நாடு, தேசம், தேயம், இடம் போன்ற சொற்கள், ஒரு இடத்தைத் தான் குறிப்பிட்டன. அதை அறிந்தும் இவர்கள் திரிபுவாதம் செய்து வருகிறார்கள். அவையெல்லாம் கருணாநிதி போன்றோரே அடக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. இப்பொழுது, மறுபடியும் திமுக ஒன்றியம், திராவிட மாடல், திராவிட ஸ்டாக் என்றெல்லாம் பேசி வருவதால், இந்த குழப்பவாதிகளுக்கு தைரியம் வந்து, அவ்வாறே முன்பு போல, பிரிவினைவாதம் பேச ஆரம்பித்து விட்டனர். ஆக இந்து வேல்முருகன் போன்றோருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-srikanth.jpg

வலதுசாரிகளின் பலவீனம், ஒற்றுமையின்மை மற்றும் பழமைவாதம்: ஶ்ரீகாந்த் என்ற பிஜேபி இந்தியதேசத்துடன் பேசினாலும், மற்றவர்கள் கொஞ்சம் பேசினாலும், எடுபடவில்லை. இவரும் கி.ஆ.பே.வின் பெயரன் என்ற முறையில் இருக்கிறார். நக்கீரன் கோபாலுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். இடதுசாரிகள், திக-திமுகவினர் ஒன்றாக வந்திருந்த நிலையில், வலதுசாரிக்கள் இங்கு வாய்கிழிய பேசினாலும், அங்கு யாரையும் காணோம். “இந்திய தேசியமும், தமிழ் தேசியமும்” என்று பேசி, அவர்களின் முகத்திரையைக் கிழிக்க ஆளில்லை; “தமிழ் தேசியமும், திராவிட தேசியமும்,” என்று கட்டுரை வாசிக்கவும் திராணி இல்லை. ஆனால், இங்கு, திராவிட மாயை, பெரியாரின் ம்ச்றுபக்கம் என்றெல்லாம் பேசுவார்கள், எழுதுவார்கள், புத்தகங்களும் போடுவார்கள். ”முகநூலில் கம்பு சுற்றுவதோடு சரி, இம்மாதிரியான, கருத்துருவாக்கும், தாக்கம் கொண்ட அல்லது ஏற்படுத்தும் கருத்தரங்களில் கலந்து கொள்வதில்லை.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-srikanth-next-to-gopal.jpg

வலது சாரிகளின் ரகசிய கருத்தரங்கங்கள்: மத்திய அரசு ஆதரவு மற்றும் நிதியுதவியுடன் நடத்தப் படும் கருத்தரங்கங்கள், மாநாடுகள் என்று இவர்களே கலந்து கொண்டு, குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இலக்கிய விழா என்று கொண்டாட ஆரம்பித்தாலும், ஏதோ ரகசியமாக நடத்துவது போல நடத்துகிறார்கள்[5]. எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லை. சுமார் 50-100 என்றிருந்தால், அவர்களுக்குள் அகிர்ந்து கொண்டு, கூடி விலம்பரப் படுத்திக் கொள்கிறார்கள். மற்ற படி, பொது ஊடகங்களில் அதைப் பற்றி எந்த தகவலும் வருவதில்லை. இதனால், லட்சக்கணக்கில் பணம் செலவழித்தாலும், சித்தாந்த ரீதியில் ஆட்களுக்கு பயிறிசி அளிப்பதில்லை, தயார் செய்வதும் இல்லை. அனுபவம் கொண்ட, ஆராய்ச்சியாளர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. தெரிந்தும் ஓரங்கட்டுகிறார்கள் இதனால் தான், தங்களது பலத்தையுமிழந்து, எதிர்சித்தாந்திகளின் பலத்தை மறைமுகமாக வளர்க்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

24-07-2023


இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-senator-saraswati.jpg

[1] வணக்கம் மலேசியா, பேராளர்கள்பார்வையாளர்கள்திரளாககலந்துகொண்ட 11-வதுஉலகத்தமிழாராய்ச்சிமாநாடு, 21-07-2023.

[2]https://vanakkammalaysia.com.my/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/

[3] நியூஸ்7தமிழ், தேசியஇனஅடையாளத்தைவலுப்படுத்தவேண்டும்! – உலகமலேசியதமிழ்மாநாட்டில்தொல்.திருமாவளவன்பேச்சு!, by Web EditorJuly 21, 2023

[4] https://news7tamil.live/even-if-divided-by-politics-religion-and-cultural-identities-the-national-identity-should-be-strengthened-thol-thirumavalavan.html

[5]  பாண்டி-லிட்-பெஸ்ட் என்றெல்லாம் நடத்துகிறார்கள், ஆனால், விவரங்கள் தெரிவதில்லை. அவர்களுக்கே தெரியாத அளவில் கூட நடக்கிறது.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-vips.jpg



11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது–அதன் ஆராய்ச்சி நிலைப் பற்றிய விவரங்கள் (7)

ஜூலை 11, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது அதன் ஆராய்ச்சி நிலைப் பற்றிய விவரங்கள் (7)

இரும்பு காலம் பற்றிய கருத்து: ஆய்வரங்கத்தின் முதல் அமர்வில், புதுச்சேரி பல்கலை பேராசிரியர் ராஜன் பேசியதாவது[1]: “இந்தியா முழுக்க பிராகிருத மொழி பயன்பாட்டிற்கு வந்தது. அதற்கு முன், தமிழகத்தில் தமிழி எழுத்துகள் புழக்கத்தில் இருந்தன. அதனால்தான், தமிழகத்தில் பிராகிருத கல்வெட்டுகள் இல்லை. தமிழர்களின் வரலாற்றை முழுமையாக சொல்ல முடியாது. காரணம், சங்க இலக்கியத்தில் அனைத்து கூறுகளும் சொல்லப்படவில்லை. அகழாய்வில் பயன்படா பொருட்களே அதிகளவில் கிடைக்கின்றன. கல்வெட்டு, காசுகளும், பொதுமக்களின் வாழ்வியலை முழுமையாக சொல்லவில்லை. என்றாலும், உலகின் முன்னேறிய சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததை, இந்த ஆய்வுகளால் அறிய முடிகிறது. தமிழகத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கடல்வழி வணிகம் சிறந்திருந்தது. இங்கு, எழுத்தறிவு மிக்க சமூகம் வாழ்ந்திருந்தது. நெல்லை நாற்றுவிட்டு நடும் பழக்கம், 2,700 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. இவற்றைவிட முக்கியமாக, உலகத்திற்கே இரும்பை அறிமுகம் செய்தவன் தமிழனாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரம், மேட்டூர் அருகே உள்ள தெலுங்கன்குடியில் கிடைத்த இரும்பு வாள் நிரூபித்துள்ளது. அதாவது, சிந்துவெளியில் செம்பை பயன்படுத்திய காலத்தில், தமிழர்கள் இரும்பை பயன்படுத்தி உள்ளனர். அதற்கான தரவுகளை சேகரிக்கும் வகையில், சிந்துவெளி மற்றும் தமிழ் நிலத்தில் கிடைத்துள்ள குறியீடுகளை ஆய்வு செய்து வருகிறோம்,” இவ்வாறு அவர் பேசினார்[2].

அரைத்த மாவை அரைக்கும் பாணியில் ஆய்வுக்கட்டுரைகள்: பட்டியலிடப்பட்ட தாள்கள் தாள்களின் தரத்தை வெளிப்படுத்தின. பெரும்பாலான தாள்கள் மறுவடிவமைக்கும் வகையைச் சேர்ந்தவை, அதே விஷயங்களை மீண்டும் மீண்டும் அரைத்த மாவை அரைக்கும் பாணியில் கூறுகின்றன.

  • தொல்காப்பியர் நோக்கில் வள்ளுவம்
  • திருக்குறள், திருவள்ளுவர் முதலியன… – தற்போதைய வாழ்க்கை முறைக்கான நடைமுறை வழிகாட்டி, இது போன்ற திருக்குறள் பற்றிய பல ஆவணங்கள்.
  • தனிநாயகம் பிள்ளை……
  • தமிழை விரைவாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்வது எப்படி
  • திரு.வி.கல்யாணசுந்தரனார், மயிலை சீனி வேங்கடசாமி (அவர் மீது பல ஆவணங்கள்) முதலியன,
  • சங்க இலக்கியம்……..பற்றி…
  • சிலப்பதிகாரம் பற்றி – பல தாள்கள்
  • சங்க இலக்கியம்
  • சித்த, சித்த மருத்துவம்

இதில் புதியதாக எந்த விசயத்தையும்சொல்ல காணோம்.

எப்படியாவது ஒரு ஆய்வுக்கட்டுரையை கொடுத்தே ஆகவேண்டும் என்ற வெறியில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் படுகின்றன: ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுப்பது, தலைப்பை ஆராய்ச்சி செய்தல், திட்டமிடல் மற்றும் எழுதுதல் என்பது இல்லை. வலைத்தளங்கள், கல்வி கட்டுரைகள், புத்தகங்கள், கலைக்களஞ்சியம், நேர்காணல்கள், இணையத்தில் தனிப்பட்ட கட்டுரைகள் (வலைப்பதிவுகள்) என்பதெல்லாம் இல்லாமல், “கட்-அன்ட்-பேஸ்ட்” முறையிலேயே செல்கின்றனர். கட்டுரையின் வடிவத்தில் தர்க்கரீதியான விமர்சன வாதங்களை முன்வைப்பதில்லை, தீர்மானமாக முடிவை வைத்துக் கொண்டு இந்த வேலை நடக்கிறது. பகுப்பாய்வு கட்டுரைகள், என்று சொல்லிக் கொண்டாலும், எந்த ஒரு முக்கியமான பிரச்சினையில் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொண்டு வரும் போக்கில் விசயங்களைச் சொவ்தில்லை. ஆராய்ச்சியின் பொருள் சர்ச்சைக்குரியதாக இருப்பதும் இல்லை, அந்த அளவுக்கு கஷ்டப்படுவதும் இல்லை, உழைப்புடன் முனைவதும் இல்லை. சொந்த கருத்துக்களைத் தெரிவித்து, ஆதாரங்களுடன் எழுதும் கட்டுரையாளர்கள் சிலரே. நேரடி மேற்கோள்கள், நீண்ட மேற்கோள்களைத் தவிர்க்காமல், அவற்றை அவ்வாறே எடுத்தாள்கின்றனர்.

எந்த ஆராய்ச்சிநெறிமுறையும் பின்பற்றப் படுவதில்லை: இப்பொழுதைய ஆராய்ச்சிநெறிமுறை, தரக்கட்டுப்பாடு, விதிகள், மென்பொருளால் சரிபார்க்கும்முறை முதலியவற்றை வைத்து சரிபார்த்தால், எத்தனை ஒழுங்கானவை என்று தீர்வாகும் என்பதும் நோக்கத் தக்கது. இருப்பினும், இவர்கள் தலைப்புகளை மாற்றி, சில வர்களை வெட்டி-ஒட்டி கட்டுரை என்று தயாரித்து, வாசிக்க வந்து விடுகின்றனர். கட்டுரைகளை தேர்வு செய்பவர்களும் எந்த தரத்தையும் சரிபார்ப்பதில்லை, தெரிந்தவர்களா, நண்பர்கள் பரிந்துரைத்தார்களா என்று பார்த்து தேர்வு செய்கிறார்கள். அவர்களே ஒப்புக் கொண்டபடி, பெயர்களை வைத்துக் கொண்டு கூட, சில கட்டுரைகளை ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.

09-07-2023 அன்று அவசரஅவசரமாக முடிந்த மாநாடு: குதிரை முன் வண்டிகல்வி அமர்வுகள் நிறைவடையும் முன் விழா நடைபெற்றது: ஆய்வுக்கட்டுரை அமர்வுகள் முடிவடைவதற்கு முன்பு நிறைவு விழா நடைபெற்றது. ஜூலை 9 ஆம் தேதி, ஆய்வுக் கட்டுரை வழங்குபவர்கள் தங்கள் நிலையைக் கேட்டறிந்து காத்துக் கொண்டிருந்தனர், காலை 9.00 மணி முதல் அறைகள் காலியாக இருந்ததாலும், யாரும் சரியாக பதிலளிக்காததாலும், ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கரவர்கள் சென்று வந்து கொண்டிருந்தனர். ஆய்வுக்கட்டுரை வாசிப்பு / கல்வி அமர்வுகள் குறித்து முற்றிலும் குழப்பம் ஏற்பட்டது. பின்னர், முதலில் பாராட்டு விழா நடைபெறும் என்றும், பின்னர் காலை 10.30 மணி 11 மணிக்கு தாள் வாசிப்பு நிகழ்ச்சி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சாளர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தனர், நேரம் கடந்துவிட்டதால் ஆய்வுக்கட்டுரை வழங்குபவர்கள் கவலையடைந்தனர். பின்னர், பிரிவுத் தலைவர்கள் அறைகளுக்குச் சென்று அமர்வுகளைத் தொடங்க ஆரம்பித்தனர். துரதிர்ஷ்டவசமாக, இந்த முரண்பாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் வாசிப்பவர்களுக்கு 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதித்தனர். மேலும், 10-15 நபர்கள் இல்லை, அவர்களில் பெரும்பாலோர் கட்டுரை வழங்குபவர்களாக இருந்தனர். வழக்கம் போல கட்டுரை வாசிப்பவர் ஆசிட்டுவிட்டு போய்விட்டார்கள்.. நிச்சயமாக, அமர்வுகளைத் தொடங்க அமைப்பாளர்கள் மற்றும் பிரிவுத் தலைவர்கள் தரப்பில் இரண்டு மணி நேரம் ஏற்கெனவே தாமதம் ஏற்பட்டது. எப்படியோ, பேப்பர் வாசிப்பு அமர்வுகள் முடிந்து, மதிய உணவுக்குப் பிறகு பிரதிநிதிகள் நகரத் தொடங்கினர். இதனால், மூன்று நாள் சர்வதேச தமிழ் மாநாடு மேலே விவரிக்கப்பட்டபடி இரண்டரை நாட்களில் முடிக்கப்பட்டது.

மலேசியாவின் போட்டியாளர் கூற்று: சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில், கடந்த 7, 8, 9ம் தேதிகளில், உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சார்பில், 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தது[3]. அடுத்த மாநாட்டை, 2025ல் சிங்கப்பூரில் நடத்த திட்டமிட்டுள்ளனர்[4]. 1968ல் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற 2வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை விட, 11வது மாநாடு செம்மஞ்சேரியில் உள்ள ஆசிய ஆய்வுக் கழகத்தில் ஒரு கல்வி நிகழ்வாக நடைபெற்றது, என்று பொன்னவைக்கொ தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், ஏதோ நடத்த வேண்டுமே என்று நடத்தியாகி விட்டது. இதே ஜூலையில் இரண்டாவது சந்திப்பு. பெரும் ஆரவாரத்துடனும், பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்புடனும் நடைபெறும் என்று சொல்லப் படுகிறது. இந்த மாநாட்டுக்கு மாநில அரசிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஐஏடிஆர் உறுப்பினர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த அரசர் அருளாளரையும் அதிபராகத் தேர்ந்தெடுத்தனர். இதற்கிடையில், 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் ஜூலை 21 முதல் 23 வரை நடைபெறும் என பேராசிரியர் டி.மாரிமுத்து தலைமையிலான மற்றொரு குழு அறிவித்துள்ளது. அவர் இணைய யுகத்தில் தமிழ் மொழி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இதில் கவனம் செலுத்தப்படும் என்கிறார்.

© வேதபிரகாஷ்

11-07-2023

.


[1] தினமலர், சிந்துவெளி காலத்திலேயே இரும்பு பயன்பாட்டில் இருந்தது, பதிவு செய்த நாள்: ஜூலை 08,2023 01:54.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3369634

[3] தினமலர், நிறைவு பெற்றது உலக தமிழாராய்ச்சி மாநாடு, Added : ஜூலை 11, 2023  04:37

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3372482

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது–அதன் நிலைப் பற்றிய விவரங்கள் (6)

ஜூலை 11, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது அதன் நிலைப் பற்றிய விவரங்கள் (6)

அதிரடிகளுடன் ஆரம்பித்து அமைதியாக முடிந்த மாநாடு: சென்னையில் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி 3 நாட்கள் மாநாடு 7ம்தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. நடக்கிறது. இதில், 20 நாடுகளிலிருந்து 200 தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்றதாக சொல்லப் படுகிறது. ஆனால், வந்துள்ளவர்கள் ஏற்கெனவே பரிச்சயம் ஆனவர்கள் தாம். ஏதோ சுற்றுலாவுக்கு வந்தது போல வந்துள்ளனர்.. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் இதுவரை 10 மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் 7ம்தேதி தொடங்கி 9ம் தேதி வரை சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடக்கிறது. இது தொடர்பாக உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மு.பொன்னவைக்கோ, துணைத் தலைவர் இ.சுந்தரமூர்த்தி, மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜி. ஜான்சாமுவேல், பொதுச் செயலாளர் உலகநாயகி பழனி ஆகியோர் சென்னை பல்கலைக்கழகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது[1]: “மாநாட்டை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு..ஸ்டாலினிடம் அனுமதி கேட்டுள்ளோம். ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம்.மாநாட்டின் நிறைவு நாளில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன,” இவ்வாறு அவர்கள் கூறினர்[2]. ஆனால், முதலமைச்சர் வரவில்லை. பொதுவாக, இந்த மாநாடு நடப்பதே தெரியாமல் தான் இருக்கிறது.

ஆய்வுக்கட்டுரை வாசிப்பு பற்றிய விவரணம்: வழக்கம் போல[3], “உலகமெல்லாம் தமிழோசை பரவ வேண்டும் என்பது இந்த மாநாட்டின் மையப்பொருளாக உள்ளது. தமிழ்மொழி, இலக்கியம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டில், இந்தியாவில் இருந்து மட்டுமின்றி ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் பங்கேற்கின்றனர். தமிழின் தொன்மை, தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம், தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல், சமூகவியல், மொழி பெயர்ப்பியல், மொழியியல் என பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர். மொத்தம் 200 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. மாநாட்டில் புத்தகக் கண்காட்சி, நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மு.பொன்ன வைக்கோ, துணைத் தலைவர் .சுந்தரமூர்த்தி, மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜி.ஜான்சாமுவேல், பொதுச் செயலாளர் உலகநாயகி பழனி, டாக்டர் பத்மினி உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்,” என்று ஊடகங்களுக்குக் கொடுக்கப் பட்ட குறிப்பு கூறுகிறது[4].

பொன்.வைகோமாரிமுத்து பிரச்சினை: பொன்.வைகோ-மாரிமுத்து பிரச்சினை இன்னும் முடிந்த பாடில்லை போலிருக்கிறது[5]. “2019ல் சிகாகோவில் நடந்த 10வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது, நான் ஐஏடிஆர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், முந்தைய தலைவர் மாரிமுத்து தான் தலைவர் என்று கூறிக்கொண்டு மாநாட்டை நடத்த முயற்சிக்கிறார். அது செல்லாத ஒன்றாக இருக்கும்,” என்று பொன்னவைக்கோ மேலும் கூறினார்[6]. ஆக இங்கும் பதவி-போட்டி முதலியன இருக்கிறது போலும். இருப்பினும், இம்மாநாடு சிக்கல்களுடன், முராபாடுகளுடன் தான் நடக்கிறது. ஏற்கெனவே, ஜான் சாமுவேலுக்கும, ஜான் ஜேக்கப் என்பவருக்கும் பிர்ச்சினை இருக்கிறது[7]. சென்னையைச் சேர்ந்த, தாம்சன் ஜேக்கப் என்பவர், “பல குற்றங்களில் சிக்கியுள்ள ஜான் சாமுவேல் எப்படி இம்மாநாட்டை நடத்த முடியும்,” என்று சென்னை பல்கலை துணைவேந்தருக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்[8]. இதைப் பற்றியெல்லாம் தனியாக ஏற்கெனவே விளக்கி பிளாக் போட்டுள்ளேன். இப்படி, எல்லா நிலைகளிலும் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, கல்வி-நெறிமுறை, ஆராய்ச்சி முதலிய கோணங்களில் இவர்களால் எப்படிகவனத்தைச் செல்லுத்த முடியும். மேலும் கூட அரசியலையும் வைத்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

07-07-2023 – அரசியல்வாதிகள் அரசியல் பேசியது: துவக்க விழாவில், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், ”பைபிளில் வரும், சங்கீதக்காரர்களின் பண்புகள், தமிழர்களின் பண்புகளுடன் ஒத்து போகின்றன. எழுத்தாளர் டால்ஸ்டாய் தமிழ் மொழியை நேசித்தார். ”மதம் பரப்ப வந்த கிறிஸ்துவர்கள் கூட, தமிழை படித்து, வியந்து, தமிழுக்காக தொண்டு செய்துள்ளனர்,” என்றார். இவர் இப்படி ஏதோ கிருத்துவ பிரசங்கி போல பேசியது, பலருக்கு திகைப்பாக இருந்தது. பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஆர்.என். ‘சிலர்’ தமிழ் மொழியின் பெருமையை இழிவுபடுத்துகின்றனர் என்று ரவி முதலியோரையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் தமிழை போற்றுவது போல, தூற்றுகிறார்கள் என்றார். “தமிழ் மொழிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தமிழ் மொழியை சொந்தம் கொண்டாடுவதும், தமிழ் மொழிக்கு ஆதரவாக உயிர் தியாகம் செய்தவர்களை இழிவு படுத்துவதும் மாற்றுக் கருத்துகளை கூறி, இது போன்ற மாநாடுகள் (உலகத் தமிழாராய்ச்சி) அவசியம். இதுபோன்ற சதிகாரர்களிடம் இருந்து தமிழ் மொழியைக் காக்க மாநாடு நடத்தப்படும்” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அழைப்பிதழ்-1

மோடி எதிர்ப்பு- முதலியன இம்மாநாட்டிற்குத் தேவையா?: இரண்டு வருடங்களாக சண்டை, சச்சரவு, முரண்பட்ட அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரை சேகரிப்பு, பறிப்பு, முதலியன நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ்-என்ற பெயரில் மொழிப்பற்றையும் தாண்டிய நிலையில் செயல்பட்டு, பல ஆய்வுக் கட்டுரைகள் நிராகரிக்கப் பட்டன. ஆராய்ச்சி நெறிமுறை, தரம் எல்லாம் காற்றில் பறக்க விடப் பட்டன. முதலில் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டு, முழுகட்டுரையும் பெறப் பட்டு, பிறகு, “நேரமில்லை” என்று நிராகரிக்கப் பட்டுள்ளன. ஆனால், இந்த மூன்று நாட்களில் வாசிக்கப் பட்ட பெரும்பான்மையான கட்டுரைகளில் விசயமே இல்லாமல், அரைத்த மாவையே அரைத்துள்ளார்கள். இதற்குத் தான் இவ்வாளவு ஆர்பாட்டம் செய்துள்ளர்கள். போதாகுறைக்கு மைனாரிட்டி மந்திரி, கமிட்டி உறுப்பினர் என்றெல்லாம் அழைக்கப் பட்டு, அவர்கள் பிரதமந்திரி-கவர்னர் பற்றி பேசி, அரசியலாக்கினர். மாநாட்டின் தன்மையினையே கெடுத்தனர் எனலாம். இருப்பினும், மத அடிப்படைவாதியான ஜான் சாமுவேல் போன்றோர் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. இத்தகைய அரசியலால் இவர்களுக்கு என்ன பயன் கிட்டப் போகிறது என்று தெரியவில்லை.

மாநாட்டில் ஆராய்ச்சி போக்கு: உண்மையிலேயே தமிழுக்காக பாடுபடுகிறார்கள் என்றால், சரித்திர ஆதாரமில்லாத பழங்கதைகளை பேசாமல், ஆரிய-திராவிட இனவாத கட்டுக் கதைகள், முதலியவற்றை விடுத்து, ஆதாரங்களுடன் கட்டுரைகள் எழுதப் படவேண்டும். பாரதம் / இந்தியாவிலிருந்து ஏதோ தனியாக தோன்றியது போன்ற பொய்மைவாதங்களை விடுத்து, சங்க இலக்கியங்கள் சொல்வதையாவது வைத்துக் கொண்டு ஆராய வேண்டும். பெரியாரிஸம், நாத்திகம், இந்துவிரோதம், இந்தியவிரோதம், பிரிவினைவாதம் என்ற போக்கிலேயே ஆராய்ச்சிகள் நடந்தால், “குமரிக் கண்டம் போன்று” குறுகிய வட்டத்தில் அடைக்கப் பட்டு, மறைந்து விடும். இறையனாரு, நக்கீரரும், அப்பாதுரையும் கூட காப்பாற்ற முடியாது. இப்பொழுது கூட ஆய்வுக்கட்டுரை தொகுப்பு கொடுக்காமல், “குமரிக் கண்டம்” என்ற சிறு புத்தகம் கொடுக்கப் பட்டுள்ளது.     

© வேதபிரகாஷ்

11-07-2023


[1] மாலைமலர், சென்னையில் ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது: 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, By மாலை மலர், 6 ஜூன் 2023 12:53 PM.

[2] https://www.maalaimalar.com/news/state/7th-july-11th-world-tamil-research-conference-begins-in-chennai-618795

[3] தினகரன், 7ம்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது 11வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு: 200 தமிழறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்பு, July 5, 2023, 1:30 am

[4] https://www.dinakaran.com/3_days_from_7th_research_conference_participation_of_poets/

[5] Times of India, 55 years on, Tamil research conference returns to city, A Ragu Raman / TNN / Updated: Jul 7, 2023, 09:16 IST

[6] “During the 10th World Tamil Research Conference in Chicago in 2019, I was elected as the president of IATR. But, the previous president Marimuthu is still claiming that he is the president and trying to conduct the conference. It will be an invalid one,” Ponnavaikko added.

https://timesofindia.indiatimes.com/city/chennai/55-years-on-tamil-research-conference-returns-to-city/articleshow/101558597.cms?from=mdr

[7] தினமலர்,உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சீர்குலைக்க சதி?..,பதிவு செய்த நாள்: Added : ஜூன் 13, 2023  00:33; https://www.dinamalar.com/news_detail.asp?id=3346006

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3346006

தமிழ்வழி / தமிழ் மீடியம் தொழிற்நுட்ப / இஞ்சினியரிங் பாடப் படிப்புகள் வெ ற்றியா, தோல்வியா? (2)

ஜூன் 27, 2023

தமிழ்வழி / தமிழ் மீடியம் தொழிற்நுட்ப / இஞ்சினியரிங் பாடப் படிப்புகள் வெ ற்றியா, தோல்வியா? (2)

அரசியல்வாதிகளின் எதிர்ப்பு: மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது . மேலும் 6 உறுப்பு கல்லூரிகளில் ஆங்கில வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகள் நீக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்புகள் குவிந்தன. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர், தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் நிறுத்தப்படுவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர் . தமிழ் வழிக் கல்வி பாடப்பிரிவுகள் கற்பிப்பது நிறுத்தப்பட்டதாக வெளியான அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் . அரசியல்வாதிகள் சேர்ந்து கொண்டு அரசியல் செய்வதைக் கவனிக்கலாம், ஏனெனில், இன்றைக்கு எல்லக் கட்சிக்காரர்களும் இஞ்சினியரிங் கல்லூரி வைத்திருக்கிறார்கள்.

கல்வி வியாபாரம் பாதிப்பதால் தான் இந்த நாடகம்: அது வியாபாரமாகி விட்டதால், 30 ஆண்டுகளில் கொடிக் கட்டிப் பறக்கிறது. இதில் மத்திய-மாநில அரசுகளின் ஆதரவு, அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு, அதிகாரிகளின் அனுமதிகள் என்று பல காரணிகள் உள்ளன. ஆக, இதில் எல்லோருமே செக்யூலரிஸத் தனமாக, ஒத்துழைத்து சம்பாதித்துக் கொள்வார்கள். இஞ்னியங்கை தமிழில் படிப்பது என்பது சித்தாந்தமாக இருக்கலாம், ஆனால், நடைமுறையில் ஒத்து வராது. ஆங்கிலத்தில் இஞ்னியங்கைப் படித்தவர்களுக்கே வேலை கிடைப்பதில்லை, ரூ 10,000/- என்றெல்லாம் வேலைக்குச் சென்று வருகிறார்கள். இதில் வேறு டிராப்-அவுட் கேஸுகள் (drop out cases) நிறையவே உள்ளன. ஆக, இஞ்னியங் திறந்து நடத்துபவர்களும் சேரும் எண்ணிக்கையும் குறைந்து மூடப் பட்ட நிலையும் ஏற்பட்டுள்ளது.அந்நிலையில் தமிழில் நடத்துவது என்பதெல்லாம் உபயோகமற்றது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது. எனவே, இனி படிப்புத் தரம், போதனா திறமை, கல்லூரிகளின் நெறிமுறை என்று நன்றாக இருந்தால் தான் மாணவர்கள் சேர்வார்கள். லட்சங்களில் காசு வாங்கிக் கொண்டு அவையெல்லாம் இல்லையென்றால், நிச்சயமாக காசு கொடுத்தவர்க கேட்பார்கள், இல்லை கெட்ட பேர் கிடக்கும், சேர்க்கை குறையும். பிறகு மூடவேண்டிய நிலைமை உண்டாகும்.

தமிழக கல்வி-திட்டமும், பிரச்சினைகளும் அதன் செயல்பாட்டு உண்மைகளும்: தமிழகக் கல்விதிட்டம் எப்பெயரில் அழைக்கப் பட்டாலும், அதனை ஆராய வேண்டியுள்ளது.

  1. சமச்சீர் கல்வியும் அதன் செயல்பாட்டு உண்மைகளும்: சமம், சமன் என்று பேசி, எல்லோரையும் சமத்தில் விட்டுவிடாலாம் என்றும், இக்கல்வி திட்டத்தால் எல்லோரும் “கல்வி-சமத்துவம்” ஏற்பட்டுவிடும் என்பதைப் போல பிரமிப்பை, மாயையை அரசு, அரசு-சார் நிறுவனங்கள், சம்பந்தப் பட்ட அதிகாரிகள், குறிப்பாக ஓய்வு பெற்றவர்கள் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். ஏனெனில் அவர்களுக்கு பலன் கிடைக்கிறது. இப்புத்தகங்கள் எழுத, அச்சடிக்க, விற்க்க அவர்களுள் பலருக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம், பலன் பெறலாம். ஆனால், உண்மையில் வருங்கால மாணவர்களுக்கு என்ன பயன் என்பதனை நாம் கவனிக்கவேண்டும். மேலும், இப்பொழுது, “திராவிட மாடல்” என்கிறார்கள், எனவே அதையும் இதில் சேர்த்துக் கொண்டால் எப்படியிருக்கும் என்று கவனிக்கலாம்.
  2. கல்வித்துறை அரசியல்-சித்தாந்தக் கட்டுப்பாடுகளினின்று விடுபட்டு சுதந்திரமாக இயங்கவேண்டும்: இது தமிழகத்தில் சாத்தியமில்லை, ஏனெனில் அத்தகைய பொறுப்புள்ளவர்கள், பொறுப்பானவர்கள் என்றுமே தங்களை அவ்வாறுக் காட்டிக் கொண்டதில்லை. இருபெரும் அரசியல் கட்சிகள், அதன் தலைவர்களின் அடிவருடிகளாகத் தான் செயல் பட்டு வந்திருக்கிறார்கள். கல்வித் துறை மற்றும் அது சம்பந்தப் பட்ட அனைவரும் அரசியல்வாதிகள் பரிந்துரை பெயரில் தான் நியமிக்கப் படுகின்றனர். உண்மையான திறமை, தகுதி, படிப்பு, கடந்த கால சாதிப்புகள் முதலியவற்றைக் கவனித்தில் கொண்டு நியமிக்கப் படுவதில்லை. பிறகு எப்படி அமூல் படுத்தப் படும் “கல்வி திட்டம்” சமமாக இருக்கும்? பாரபட்சமின்றி, அரசியல்-சித்தாந்த நுழைவு, பிரச்சாரம், ஆதரவு, தொந்தரவு இல்லாமல் இருக்கும் அல்லது தொடர்புடைய அவர்கள் நடந்து கொள்ளமுடியுமா? என்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
  3. கடந்த கால மற்றும் இக்கால ஆள்பவர்களின் கல்வித்துறையில் உள்ள “மூக்கு நுழைப்புகள்”: மூக்கை நுழைக்காத முதல்வர்களோ, ஆளும் வர்க்கமோ தமிழ்நாட்டில் உண்டோ? இப்போதைய முதல்வர் ஏற்கெனவே முதுநிலையில் பெரியார், அண்ணா முதலியவைப் பற்றி பட்டப் படிப்புகள் இருக்கும் என்று அறிவித்துள்ளார். இது தொடரும் என்பது “தமிழக திராவிட அரசியல் பாரம்பரிய மாண்பு”. பிறகு ஒவ்வொரு முதலமைச்சர் பற்றிய பாடங்களும் சேர்ந்து கொண்டே போகும். இப்பொழுது, நடிகர்கள் பற்றிய பாடங்களும் சேர்க்கப் படுகின்றன. இதனை எந்த பல்கலைக்கழக வேந்தனும் / வெந்தவனும் ஒன்றும் செய்துவிடமுடியாது, மாறாக தினமும் புகழ்-பாட்டு பாடிகொண்டிருப்பான் அல்லது அதனால் என்னென்ன நன்மைகள், படித்தால் எங்கெல்லாம் வேலை கிடைக்கும் என்று விவரித்துக் கொண்டிருப்பான். அதற்காக சிறப்புக் கூட்டங்கள், மாநாடுகள், பட்டிமன்றங்ளும் நடைபெறும். பிறகு ராமானுஜம், சி.வி.ராமன், போஸ் என்றெல்லாம் கூறினால் யார் என்று தான் கேட்பார்கள்?
  4. பாடதிட்டம் காட்டும் அத்தகைய பாரபட்சம், சித்தாந்த நுழைவுகள்: அப்பொழுது, “பொது பாடதிட்ட வரைவு-2009” என்று தமிழில் வெளியிட்டாறர்கள். “சமூக அறிவியல்” பாடத்திற்கு மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை என்று கொடுதிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் உள்லதற்கும் தமிழில் இப்பொழுது கொடுக்கப் பட்டுள்ள வரைவிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. “ஆரிய-திராவிட” பிரச்சினைத் தவிர, இடைக்கால வரலாற்றில், தேவைக்கு அதிகமாக முகலாயர் / முஸ்லீம் ஆதிக்கம், அவர்களது செயல்பாடுகள், தாக்கம், என பல……….. சூஃபித்துவம் பற்றி அதிகமான தலைப்புகள், ……………இதெல்லாம் எதற்காக என்று அவர்கள்தாம் (“வரைவு” எழுதியவர்கள்) விளக்கவேண்டும்! இவ்வாறாக இப்பொழுது, கீழடி என்று ஆரம்பித்து, சிந்துசமவெளி திராவிடர் நாகரிகமே என்று முடிவாக பாடங்களை சேர்த்துள்ளனர்.
  5. நுழைவு தேர்வு ரத்து: தொழில் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவு தேர்வு இல்லை என்பது மறைமுகமாக, தனியார் கல்லூரிகள், நிகர் பல்கலைகழகங்களுக்கு உதவவேயன்றி, நன்கு படிக்கும் ஆனால் பொருளாதார வசதி இல்லாத மாணவர்களுக்கு உதவுவதாக இல்லை. பணம் உள்ளவர்கள் மதிப்பெண்கள் இலாமல் இருந்தாலும், பணம் மூலம் தனக்குப் பிடித்தமான துறை / படிப்பு வாங்கிக் கொள்கிறான், தனக்கேற்ற வசதியான கல்லூரியையும் தேந்தெடுத்துக் கொள்கிறான். ஆனால், காசு இல்லாத அதிக மதிப்பெண்கள் பெற்ற மற்றவர்கள் ஒன்று படிப்பையே மறந்துவிட வேண்டும் இல்லை கடன் வாங்கி படிக்கவேண்டும், இல்லை இருக்கின்ற வீடு, மனை, நிலம் இவற்றை விற்றுவிடவேண்டும். இந்த நிலை 2023லும் தொடர்கிறது, எந்த மாற்றமும் இல்லை. நன்றாகப் படிப்பவன் தன் வழியில் சென்று விடுகிறான், அவ்வாறே மற்றவர்கள் தத்தம் வழிகளில் சென்று விடுகிறார்கள்.
  6. சமச்சீர்கல்வி, சி.பி.எஸ்.இ ஒன்றாகுமா? இனிமேல் சமச்சீர்கல்வி, சி.பி.எஸ்.இ. என இரு பாடத்திட்டங்கள் மட்டுமே இருக்கும் எனும்போது, இத்திட்டம் “சி.பி.எஸ்.இ” இணையாக இருக்குமா, உள்ளதா என்று எடுத்துக் காட்டுவதில்லை. “பாடவரைவை”ப் பார்த்தால் அவ்வாறாக இல்லை. சுருக்கமாகச் சொலவதானால் அறிவியல் பாடங்கள் நிச்சயமாக “சி.பி.எஸ்.இ” பாடதிட்டத்திற்கு ஈடாகாது. மத்திய அரசு ஐ.ஏ.எஸ் (Civil Services Examinations) எழுத பிரயோஜனப் படாது. இதனால், தமிழக மாணவ-மாணவியர் மற்ற போட்டித் தேர்வுகளிலும் குறைவாகவே தேர்வாகின்றனர். மேலும், அதற்கு எதிராக பிரச்சாரம் செய்வதால், பலர் எழுதாமலே இருக்கின்றனர், சந்தர்ப்பத்தை, பலனை இழந்து வருகின்றனர்.
  7. ஆசிரியர்களுக்கு திறனாய்வு தேர்வு: மாணவர்களுக்கே நுழைவு தேர்வு வேண்டாம் எனும்போது, எதற்கு ஆசிரியர்களுக்கு திறனாய்வு தேர்வு? அவர்களது “திறனை” எதற்காக “ஆய்வு” செய்யவேண்டும்? ஏற்கெனவே அந்த “திறன்” உள்ளது என்றதால்தானே அவர்கள் “ஆசிரியர்களாக” நியமிக்கப் பட்டர்கள், “ஆசிரியர்களாக” உள்ளர்கள்! பிறகு ஏன் இந்த “தரக் கட்டுப்பாடு”? ஏன் அவர்களது திறன் / திறமை மீது சந்தேகம் வந்து விட்டது? 2009ல் ஆரம்பித்த இவை இப்பொழுது நிறுத்தப் பட்டுள்ளன. 2011ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்றும் தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
  8. மாணவர்களுக்கு திறனாய்வு வேண்டாம், ஆசிரியர்களுக்கு வேண்டுமா? நுழைவு தேர்வேத் தேவையில்லை என்றாகிவிட்டப் பிறகு எதற்கு இந்த சடங்குகள்? ஏற்கெனவே உள்ள ஆசிரியர்கள்தாம் தங்களது “திறமைகளை”க் காட்டப் போகின்றனர். குறுகிய காலத்தில் எப்படி அவர்கள் அத்தகைய “சமச்சீர்” யுக்திகளைப் பெறமுடியும்?
  9. கிராமப்புற மாணவர்கள் ஐஐடியில் சேர முடியாத நிலை: இது ஒரு பொய், கட்டுக்கதை. கிராமப்புற மாணவர்களும் சேரலாம், படித்தால். அத்தகைய படிக்கும் நிலை இல்லையென்றால், ஏன் இல்லை இத்தனை ஆண்டுகள் ஆட்சிற்கு பிறகும் என்று கேள்வி கேட்க வேண்டும். “கோடிகள்” கிராமங்களுக்குச் செல்கின்றனவே, அவை எங்கு மறைகின்றன, அக்கிராமங்களை மேன்படுத்தாமல்? ஊழலை ஒழிக்காமல், இத்தகைய “வார்த்தை ஜாலங்கள்” ஒன்றும் சமத்துவத்தை ஏற்படுத்திவிடாது. நீட்டுக்கு எதிராகவும் இத்தகைய பிரச்சாரம் செய்யப் பட்டு வருகிறது. ஆனால், கிராமப் புற மாணவர்களும் தேர்வு பெற்று வந்துள்ளனர். சமீப தேர்வு முடிவுகள் இதனை எடுத்துக் காட்டுகின்றன.
  10. ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி அனைவருக்கும் சீரான கல்வி கிடைக்க இத்திட்டம் தேவை: இதைவிட பெரிய புளுகு உலகத்திலேயே இருக்கமுடியாது. எதற்கு இப்படி பச்சையாக புளுகவேண்டும்? “லட்சங்கள்” கொடுக்காமல், இப்பொழுது படிப்பே இல்லையே? இன்றும் படிக்கும் மாணவர்கள்தாம் தாங்கள் விரும்பியமுறையில் படிக்க முடிவதில்லை. டாக்ரராகவேண்டும் என்று அறிவுத்திறமையுடன் பல லட்ச மாணவர்கள் இருந்தும், லசங்கள் இல்லாமல் அவர்களால் மருத்தும் படிக்க் வாய்ப்பில்லாமல் போகிறது. 90% கீழேயுள்ளவர்களுக்கும் இடம் கிடைப்பதில்லை, ஆனால் லட்சங்கள் உள்ள “ஜஸ்ட் பாஸ்’ வகையறாக்கள் “டாக்டரா”கிறார்கள். வாழ்க்கையில் கண்கூடாக பார்க்கும் நிகழ்ச்சி. எங்கேயுள்ளது “சமத்துவம்”, “சமச்சீர்” அங்கே? வார்த்தை-ஜாலங்கள் அவர்களுக்கு போய்விட்ட கலத்தைத் திருப்பி கிடைக்கச் செய்யுமா?
  11. அறிவியல் வளர்ச்சியும் பாடதிட்டமும்: அறிவியல் வளர்ச்சிற்கேற்றபடி பாடதிட்டம் இருக்கவேண்டும் என்ற கருத்து ஏற்புடையதே. ஆனால், பழைய பாடதிட்டத்தில் படித்த அல்லது அவ்வாறு படிக்காமலேயே (அதாவது நிர்ணயிக்கப் பட்ட குறைந்தப் பட்ச கல்வித் தகுதியுடன்) ஆசிரியர்களாக நியமிக்கப் பட்டவர்கள் எவ்வாறு, அத்தகைய “அறிவியல் வளர்ச்சிக்கு” ஈடு கொடுக்கப் போகிறார்கள்?
  12. மாணவர்கள் எதிர்கொள்ளவேண்டிய உண்மை நிலை: படித்துவிட்டு மாணவர்கள் வெளியே வரும்போது போட்டியைத்தான் எதிர்கொள்கிறார்கள். அங்கு நிச்சயமாக அவரவர் திறமையில் அவர்களது எதிர்காலம் அமைகிறது. அங்கு “சமம்”, “சீர்” என்றெல்லாம் இருக்கலாம், ஆனால், அவர்களது திறமை, சாமர்த்தியம் மூலமாக அத்தகைய பந்தயங்களில் வெற்றிப் பெற வேண்டியிருக்கும்.

© வேதபிரகாஷ்
27-06-2023

தமிழ்வழி / தமிழ் மீடியம் தொழிற்நுட்ப / இஞ்சினியரிங் பாடப் படிப்புகள் வெ ற்றியா, தோல்வியா? (1)

ஜூன் 27, 2023

தமிழ்வழி / தமிழ் மீடியம் தொழிற்நுட்ப / இஞ்சினியரிங் பாடப் படிப்புகள் வெ ற்றியா, தோல்வியா? (1)

தேவை என்றால் வைத்துக் கொள்கிறோம் இல்லை என்றால் நீக்கி விடுகிறோம்: சமீபத்தில் பள்ளி-கல்லூரி பாடப் புத்தகங்களில், சில பிரிவுகள், தலைப்புகள், தொகுப்புகள் முதலியன சேர்க்கப் படுதல் / நீக்கப் படுதல் பற்றி அரசியல் ரீதியிலான சர்ச்சைகள் எழுப்பப் பட்டு விவாதிக்கப் படுகின்றன. கொரோனா காலத்தில் 2020-2021, இது அதிகமாக நடந்தது. பரீட்சை இல்லாமல் பாஸ் / ஆல்பாஸ் என்ற நிலைகளும் இருந்தன. கடந்த 70 ஆண்டுகளில், உலகம் முழுவதும், விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் ரீதியில் நடைமுறை வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கேற்ற முறையில், மனிதர்கள், வீடுகள், வீடுகளில் உபயோகப் படுத்தப் படும் பொருட்கள், தெருக்கள், நகரங்கள், பேருந்துகள் என்று எல்லாமே மாறி விட்டன. தேவை என்றால் வைத்துக் கொள்கிறோம் இல்லை என்றால் நீக்கி விடுகிறோம். அதே போல பாடப் பிரிவுகள், தலைப்புகள் தொகுப்புகள் முதலியன அவற்றில் உள்ள விவரங்கள் தேவையா-இல்லையா என தீர்மானித்து நீக்கப் படுகின்றன. 

நன்றாக இல்லை என்றால் மாற்றத்தான் செய்கிறார்கள்: ஒரு பள்ளி / கல்லூரி என்று சேர்ந்து, நன்றாக இல்லை என்றால், அந்த பள்ளி / கல்லூரி விட்டு, வேறு பள்ளி / கல்லூரி என்று சேர்ந்து விடுகிறார்கள். பல நேரங்களில் ஆசிரியர்களே சிலபஸில் (syllabus) உள்ளவற்றை குறிப்பிட்ட கலகட்டத்தில் போதிக்க முடியாமல் போகும் நிலை ஏற்படுகிறது.  அப்பொழுது, ஒன்று அவை பரீட்சைக்கு நீக்கப் படுகின்ற, இல்லை சாய்ஸில் (choice) விட்டுவிடுங்கள் என்று அறிவுருத்தப் படுகிறது. இதில் எத்தகைய உள்நோக்கத்தையும் கற்பிக்க முடியாது.  இவையெல்லாம் எல்லா பள்ளி / கல்லூரிகளிலும் நடந்து கொண்டுதான் வருகின்றன.  அரசியல்வாதிகள் ஆட்சி மாறும் பொழுது, தங்களது தலைவர்கள் பற்றி படிக்க வேண்டும் என்ற சித்தாந்த ரீதியில் பாடங்களை நுழைக்கும் பொழுது தான் பிரச்சினை வருகிறது. ஆட்சி மாறும் பொழுது, அவர்கள் முந்தைய  படப் பிரிவுகளை நீக்கி தங்களது தலைவர்கள் பற்றிய பாடங்களை நுழைக்கிறர்கள். இது சுழற்சியில் நடந்து வருகிறது எனலாம்.

இந்திய உணர்வுகளுக்கு எதிரான பாடங்கள்: தவிர மார்க்சீய, முகமதிய, முகலாய சித்தாந்திகள் என்று ஜே.என்.யூ (JNU), ஏ.எம்.யூ (AMU), டி.யூ (DU) என்று பல பல்கலைக் கழகத்தவர் என்.சி.இ.ஆர்.டி (NCERT), யு.ஜி.சி (UGC) என்று பல கல்வித் துறைகளில் ஆதிக்கம் செல்லுத்தி, பாடப் பிரிவுகளை திணித்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலும், இந்தியாவிற்கு எதிரான சீத்தந்தம் கொண்டவையாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, இந்தியா என்ற நாடே இல்லை, இந்தியர்களுக்கு கல்வி போன்றவை போதித்தது ஆங்கிகேயர் தாம், இப்பொழுதுள்ள நவீன எந்திரங்கள் முதலியவை அந்நியர் கொடுத்தது தான் அவர்களாக எதையும் செய்யவில்லை போன்றவை, இக்கால இந்தியாவுக்கு முரண்பாடாக இருக்கிறது. ஏனெனில் நிச்சயமாக இந்தியா பல்லாண்டுகளாக தன்னிறைவு கொண்ட நாடாக இருந்து வந்துள்ளது. அந்நியர் தாம், இந்தியாவில் பாலும் தேனும் ஓடுகின்றன என்று ஆசைப் பட்டு வந்தனர். ஆக, அத்தகைய பாடப் பிரிவுகள் இன்றைய கால கட்டத்திற்கு ஒவ்வாததாக-தேவையில்லாததாக உள்ளது. அத்தகைய பிரிவுகளை நீக்கும் போது, ஏன், யார் எதிர்க்கிறார்கள் என்பதையும் கவனிக்கலாம்.

காமர்ஸ் (commerce) / கணிதம் (Mathematics) போன்ற படிப்புகளுக்கு கிராக்கி அதிகமாவதேன்?: அந்நிலையில் தமிழகத்தில் இப்பிரச்சினை எழுந்துள்ளதை கவனிக்கலாம். அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள, சில பாடப்பிரிவுகளை நீக்கி, புதிய பாடப்பிரிவு துவங்கப்படும்,” என, சட்டசபையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார்[1]. தமிழகத்தைப் பொறுத்த வரையில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் படிக்க லட்சங்களில் டொனேஷன் கொடுத்தால் தான் இடம் கொடுக்கும், 90% மார்க் எடுத்தால் கூட கிடைக்காது. அந்நிலையில் ஜே.இ.இ (JEE) / இஞ்சினியரிங் இன்ட்ரென்ஸ் (All India Engineering Entrance Examinaions), நீட் (NEET) ஏன்றெல்லாம் வந்த பொது, கல்வி-வியாபாரம் போகிறதே என்று, தனியார் கல்லுரி கோஷ்டிகள் அரசியல்வாதிகள் மூலம் எதிர்க்க ஆரம்பித்தனர். காமர்ஸ் (commerce) / கணிதம் (Mathematics) போன்ற படிப்புகளுக்கு என்றைக்கும் தேவையுள்ளது, அந்நிலையில், அதன் முக்கியத்துவத்தை அறிந்த மாணவ-மாணவியர் அப்படிப்புகளை எடுத்துப் படிக்க ஆரம்பிக்கின்றனர். முடிவுகள் சாதகமாக இருந்து வேலை கிடைக்கும் பொழுது, மற்ரவர்களும் அப்படிப்புகளுக்கு செல்கிகின்றனர். இதனால் தான் அப்படிப்புகளுக்கு கிராக்கி ஏற்படுகின்றன.

 

உள்ள ஒரு சில பாடப்பிரிவுகளை நீக்கி, புதிய பாடப்பிரிவு துவங்கப்படும்: அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள ஒரு சில பாடப்பிரிவுகளை நீக்கி, புதிய பாடப்பிரிவு துவங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்[2].  மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 12 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளை நீக்கிவிட்டு, புதிய பாடப்பிரிவுகளை சேர்க்க கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து அரசுக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு சில கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் இடையே வரவேற்பு இல்லாத, மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பாடப்பிரிவுகளை மட்டும் நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தேவையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அதிகமுள்ள புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார்.

விஞ்ஞானம்-தொழிற்நுட்பப் படிப்புகளில் சர்ச்சை: அதன்படி சேந்தமங்கலம், லால்குடி, வேப்பந்தட்டை, கடலாடி, சத்தியமங்கலம், பரமக்குடி, மாதனுார், கூடலுார், கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணித படிப்பில் சேர்க்கை எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனால் அந்த கல்லூரிகள் தேவைக்கேற்ப கணினி அறிவியல், தமிழ், உயிர் தொழில்நுட்பவியல், வணிக நிர்வாகவியல், தாவரவியல், பொருளியல் ஆகிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. திட்டமலை அரசுக் கல்லூரியில் ஆங்கிலவழி கணித பாடப்பிரிவையும், நாகலாபுரம் அரசுக் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவையும் தமிழ் வழிக்கு மாற்றி கொள்ளலாம். மொடக்குறிச்சி அரசுக் கல்லூரியில் இயற்பியலுக்குப் பதிலாக விலங்கியல் பாடப்பிரிவு தொடங்கலாம். புதிய பாடப்பிரிவுகளுக்கு அந்தந்த பல்கலைக்கழகங்களில் கல்லூரிகள் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், அரசு மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி அனைத்து படிப்புகள் குறித்தும் விளக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்தின் முக்கியத்துவமும் தெரியும். ஒவ்வொரு பாடத்திலும் ஆர்வம் வரும்.

கணித பட்டப்படிப்பையும் தொடர்ந்து நடத்தவேண்டும். புதிய பட்டப்படிப்புகளை நிச்சயம் அறிமுகம் செய்ய வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதற்காக பட்டப்படிப்புகளை நிறுத்தக்கூடாது. ஏனெனில் தற்போது அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த மாணவர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து மாணவர்கள் படிப்பதை அரசுதான் உறுதி செய்ய வேண்டும். கணிதப் படிப்பை புறக்கணிப்பது வரும் காலங்களில் உயர்கல்வியில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு கணிதம்தான் அடிப்படை. எனவே, கணிதம் கற்றலை இனிமையாக மாற்றுதல், கணிதம் படிப்பவர்களுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கணிதம் படிப்பதை தமிழக அரசு உறுதிசெய்ய முடியும். எனவே மாணவர்களுக்கு அரசு நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், சலுகைகளை அதிகரித்து மாணவர்கள் அதிகம் கற்பதை ஊக்குவிக்க வேண்டும்.

தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம்: அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளன[3]. இது வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது[4]. பொறியியல் படிப்புகளைத் தமிழ் வழியிலும் மாணவர்கள் படிப்பதற்கு முந்தைய திமுக ஆட்சியில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நடவடிக்கை எடுக்கப்பட்டது[5]. முதலில் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட சில பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் வழங்கப்பட்டன[6]. அதன்பிறகு பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளிலும் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் 16 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பாக உறுப்பு கல்லூரிகளாக இயங்கி வருகின்றன[7]. ஆனால், இவற்றில் சேரும் மாணவ-மாணவியர் ஒரு சிலரே. மேலும் தமிழில் படிப்பதால் வேலை கிடைக்கும் சிக்கலும் உள்ளது. இதனால், இப்படிப்புகளைப் படிக்க யாரும் வராத நிலையும் உண்டாகிறது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது[8]. அதன்படி ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி உள்ளிட்ட 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன[9].

© வேதபிரகாஷ்

27-06-2023


[1] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Govt. College : 12 அரசு கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவுகள் நீக்கம் ஏன்? அரசு ஆவண செய்ய கல்வியாளர்கள் வலியுறுத்தல், Priyadarshini R, Jun 18, 2023 10:43 AM IST.

[2] https://tamil.hindustantimes.com/tamilnadu/12-why-are-core-subjects-removed-in-government-colleges-the-government-insists-that-educators-should-document-131687064678098.html

[3] காமதேனு, தமிழ் வழி பாடப்பிரிவுகள் 11 கல்லூரிகளில் நீக்கம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழகம், காமதேனு, Updated on : 25 May, 2023, 10:55 am.

[4] https://kamadenu.hindutamil.in/national/tamil-medium-courses-abolished-in-11-colleges-anna-university-notice

[5] தினத்தந்தி, #BREAKING || “தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிக நீக்கம்” – அண்ணா பல்கலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு , By தந்தி டிவி 25 மே 2023 10:11 AM

[6]  https://www.thanthitv.com/latest-news/breaking-temporary-cancellation-of-tamil-medium-courses-important-notice-issued-by-anna-university-188390

[7] தினமலர், தமிழ்வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம், மாற்றம் செய்த நாள்: மே 25,2023 11:43

[8] https://m.dinamalar.com/detail.php?id=3330087

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கம்; அண்ணா பல்கலை. அறிவிப்பு, Written by WebDesk, May 25, 2023 11:43 IST

103 பேர் கைது – தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? கண்டு பிடிப்பது, தீர்வு எப்படி? (3)

ஏப்ரல் 26, 2023

103 பேர் கைதுதமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? கண்டுபிடிப்பது தீர்வு எப்படி? (3)

70 ஆண்டுகளாக மருத்துவர்களாக செயல்பட்ட மருத்துவர் அல்லாதவர்: போலி டாக்டர், மருத்துவர் என்பது தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளாக மோசடி நடந்து வருகிறது. எப்படி அரசியல் ரீதியில் டாக்டர் பட்டம் போட்டுக் கொண்டு பவனி வருகிறார்கள் மற்றும் பவனி வர ஆசைப் படுகிறார்களோ, அதே போல, பலர், டாக்டராக ஸ்டெதாஸ்கோப்புடன் மருத்துவ வேலை செய்ய தயாராகி விடுகிறார்கள். முன்னர் டாக்டரிடம் “கம்பௌன்டர்” ஆக வேலை பார்த்தவர்களும், பிறகு, நர்ஸ் அல்லது ஓரளவுக்கு அனுபவம் உள்ள நர்ஸ் போன்றவர்கள் தாங்களே டாக்டர் போன்று செயல்பட்டது, செயல்படுவது தெரிந்த விசயமே. அவசரத்திற்கு என்று சில நேரங்களில் அவ்வாறு செய்தது, பிறகு, நிரந்தரமாக அதே வேலையை செய்வது என்று தொடர்கின்றனர். டாக்டரை விட, இவர்கள் பீஸும் குறைவாக வாங்குவதால், கண்டு கொள்ளாமல் காலம் ஓடுகிறது. புதியதாக வருபவர்களுக்கு, இந்த விவரமும் தெரியாது, எம்.பி.பி.எஸ் என்று போட்டுக் கொண்டால், உண்மையான டாக்டர் என்று நம்பித்தான் சிகிச்சைப் பெற்று செல்கிறார்கள். யாராவது அவர்களது சான்றிதழ்களைக் கேட்டு ஆராய்ந்தால் மாட்டிக் கொள்வார்கள். அதுவரை தொழில் அமோகமாகத்தான் சென்றுக் கொண்டிருக்கும். பெரும்பாலாக, கதை அப்படித்தான் ஓடியுள்ளது.

கொரோனா காலத்தில் போலி டாக்டர்கள் அதிகமானது: தமிழகத்தில் பல்வேறு இடங்களில்  கிளினிக் அமைத்து போலி டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதாக புகார் எழுந்தது[1].   கரோனா காலத்தில் டாக்டர்களுக்கும் கிராக்கி ஜாஸ்தியாகியது. டாக்டர்களுக்கே கொரோனா வந்து இறந்த போது, மக்கள் மற்றவர்களிடமும் செல்ல ஆரம்பித்தார்கள். அதாவது, சித்தா, ஆயுர்வேதம் எனும் மற்ற நாட்டு வைத்தியர்களிடமும் செல்ல ஆரம்பித்தார்கள். அவர்களிடம், சித்தா-ஆயுர்வேத படிப்பு சான்றிதழ் கூட இருக்காது. இருப்பினும், மருத்துவத்தை கரைத்துக் குடித்ததைப் போல பேசி, சொற்பொழிவு செய்து, விளம்பரங்கள் மூலம் வியாபாரம் செய்து, பிறகு ஒரு நிலையில், ஹீலர்-மருத்துவர், இயற்கை வைத்தியர் என்றெல்லாம் போர்ட் போட்டுக் கொண்டு, ஒரு நிலையில், டாக்டராகி விடுகிறார். டிவி செனல்களில் சுயவிளம்பரம் செய்துகொள்ளும் அளவிற்கு  பணத்தையும் சம்பாதிக்கின்றனர்.பணம் சேர-சேர, கிளிக் வைத்து, நடை-உடை மாறி, எல்லாமே மாறி விடுகின்றன. இதனால், அரசு அமைப்புகளுக்கும் போலி மருத்துவர்களைக் கண்டுபிடிக்க கஷ்டமாகிறது.

ஒரு தனிமனித புகாரிலிருந்து பிரச்சினை கிளம்பியதா?: சமீபத்தில் எலும்பு முறிவு சிகிச்சை விவகாரத்தில், பொகழ் பெற்ற மருத்துவ மனையில், சிலர், படிப்பு-பட்டம் இல்லாமல் மருத்துவம் பார்த்ததால் பிரச்சினை ஏற்பட்டது என்று புகார் செய்யப் பட்டது. ஆனால், இரண்டு தரப்பிலும் முரண்பட்ட புகார்கள் எழுந்தன. இருப்பினும், எம்பிபிஎஸ் பட்டம் இல்லாமல், மற்ற படிப்பு படித்து, சிகிச்சை செய்தது அறியப் பட்டது. தவிர, வெளிநாடுகளில் படித்து அவை இந்திய எம்பிபிஎஸ் பட்டத்திற்கு சமமானதல்ல, ஏர்புடையது அல்ல என்று முடிவு செய்யப்பட்டது. அந்நிலையிலும், பல மருத்துவப் படிப்புகளுக்கு, இந்தியாவில் அங்கீகாரம் இல்லாமல் போயின மற்றும் சிகிச்சைக்கு வருபவர் எண்ணிக்கையும் மிக கணிசமாக குறைந்தது. இருப்பினும், தேவை என்ற நிலையில் அப்போலி வைத்தியர் இருக்கத்தான் செய்கின்றனர்.

நீதிமன்ற உத்தரவின் படி, நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது: போலி மருத்துவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க நேஷனல் மெடிக்கல் கமிஷன் சட்டம் 2019 பிரிவு 34 மற்றும் 54-ன் படி தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுத்துவருகிறது[2].  பிராக்டிஸ் செய்யும் சந்தேகத்திற்குள்ளான, மருத்துவ்ர்களின் சான்றிதழ்கள் மறைமுகமாக மற்றும் நேரிடையாக பரிசோதிக்கப் பட்டது. அப்பொழுது தான், போலி மருத்துவர்கள் பலர் அடையாளம் கண்டறியப் பட்டனர். தமிழகம் முழுவதும் 18 நாட்கள் நடைபெற்ற சோதனைகளில், முறையாக அனுமதி பெறாமல் மருத்துவம் பார்த்து வந்த 103 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்[3]. இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவராக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவ படிப்பு தகுதி இல்லாமல், அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது[4].

போலீஸ் நடவடிக்கையும் சேர்ந்தது: இதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்[5]. அதன்படி, கடந்த 18 நாட்களாக மாநிலம் முழுவதும் காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்[6]. இதில், 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்[7]. மேலும், உரிய அனுமதி இல்லாமல் மருத்துவம் பார்த்து வருவோரை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்[8]. இது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது[9].

கைது செய்யப் பட்ட விவரங்கள்: அதனடிப்படையில், தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல், இந்தியமருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில், மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது சுகாதாரத் துறை இணை இயக்குனர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும்படி அணைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, அவர்கள் உத்தரவிட்டிருந்தார்[10].  இதனையடுத்து. கடந்த 18 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் தமிழ்நாடு முழுவதும் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்[11]. திருவாரூரில் 12 பேரும், தஞ்சாவூர் மற்றும் சேலத்தில் 10 பேரும், திருவள்ளூரில் 9 பேரும், பெரம்பலூரில் 8 பேரும், திண்டுக்கல்லில் 6, தேனி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டையில் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது[12].

© வேதபிரகாஷ்

25-4-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Doctors Fradulence : கடந்த 18 நாட்களில் மட்டும் இத்தனை போலி மருத்துவர்கள் கைதா..? காவல்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்!, By: முகேஷ் | Updated at : 24 Apr 2023 09:03 PM (IST).

[2] https://tamil.abplive.com/news/tamil-nadu/police-informed-103-fake-doctors-have-arrested-in-tamil-nadu-in-the-last-18-days-113557

[3] தினத்தந்தி, 18 நாட்கள் 103 போலி டாக்டர்கள் கைதுதொடரும் டிஜிபியின் எச்சரிக்கை, By தந்தி டிவி, 25 ஏப்ரல் 2023 7:03 AM

[4] https://www.thanthitv.com/latest-news/18-days-103-fake-doctors-arrested-continued-dgps-warning-182154 – :~:text=%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88,%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.

[5] மாலைமலர், தமிழகம் முழுவதும் போலி டாக்டர்கள் கைது எண்ணிக்கை 103 ஆக உயர்வு, Byமாலை மலர்25 ஏப்ரல் 2023 8:33 AM

[6] https://www.maalaimalar.com/news/district/fake-doctors-arrested-increased-across-tn-600916

[7] தினமலர், போலி டாக்டர்கள் 103 பேர் கைது, பதிவு செய்த நாள்: ஏப் 25,2023 08:06

[8] https://m.dinamalar.com/detail.php?id=3303534

[9] பத்திரிக்கை.காம், தமிழகம் முழுவதும் 103 போலி டாக்டர்கள் கைது, APR 25, 2023

[10] https://patrikai.com/103-fake-doctors-arrested/

[11] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், போலி டாக்டர்களை பொறி வைத்து பிடித்த போலீஸ்.! 103 பேர் கைதுஎந்த மாவட்டத்தில் அதிக போலி மருத்துவர்கள் தெரியுமா?, Ajmal Khan; First Published Apr 25, 2023, 8:50 AM IST; Last Updated Apr 25, 2023, 11:01 AM IST

[12]  https://tamil.asianetnews.com/tamilnadu/103-fake-doctors-arrested-across-tamil-nadu-rtnimi

தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? கண்டு பிடிப்பது, தீர்வு எப்படி? (2)

ஏப்ரல் 12, 2023

தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? கண்டுபிடிப்பது, தீர்வு எப்படி? (2)

கைது செய்யப்படும் போலி மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் சொற்பம்தான்[1]: டாக்டர் டி.முஹம்மது கிஸார் என்பவர் ழுதிய கட்டுரை கீழே அப்படியே கொடுக்கப் பட்டுள்ளது. தலைப்புகள் மட்டும் சில சேர்க்கப் பட்டுள்லன. அவ்வப்போது `போலி டாக்டர் கைது’ என்ற செய்திகளைக் கடந்து செல்வோம். மருத்துவமே படிக்காமல் `டாக்டர்’ எனக் கூறிக்கொண்டு சிகிச்சை அளிக்கும்போது பாதிப்பு ஏற்படும் நிலையில், அவர்கள் வெளிச்சத்துக்கு வருகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், கைது செய்யப்படும் போலி மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் சொற்பம்தான். இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் மட்டும் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன[2]. மருத்துவமே படிக்காமல் கிளினிக் அல்லது மருத்துவமனை நடத்துபவர்களே போலி டாக்டர்கள். ஏதாவது ஒரு மருத்துவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து, அனுபவ அடிப்படையில் மருத்துவம் பார்ப்பவர்கள். `பாராமெடிக்கல்’ என்னும் மருத்துவம் சார்ந்த பணிகளைச் செய்யும் நர்ஸ்கள், ஆயாக்கள், மருந்தாளுநர்கள் போன்றோரும் சிகிச்சையளிக்கின்றனர்.

டாக்டர் படிப்பு படித்து, ஹவுஸ் சர்ஜன் பயிற்சி முடித்தபிறகே டாக்டராக முடியும்: மருத்துவர் என்று சொல்லப்படுபவர், நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன், நோயின் தன்மையைக் கண்டறிந்து பலவழிகளில் ஆய்வு செய்வார். அத்துடன் அந்த நோயைக் கண்டறிந்து (Diagnose) உறுதிப்படுத்தியபிறகே மருந்துகளைப் பரிந்துரைப்பார். குறிப்பாக, மருந்து மாத்திரைகளைப் பரிந்துரைப்பதற்குமுன், அவை உடலில் எப்படிச் செயல்படும், மருந்து உடலுக்குள் சென்றதும் எப்படி வினை புரியும், பக்கவிளைவுகள் இல்லாமல் எப்படி மருந்து கொடுப்பது என்றெல்லாம் ஆராய்வார். இதுபோன்று மருந்து அறிவியல் சார்ந்த விஷயங்களை நன்றாக அறிந்தபிறகே ஒரு மருத்துவரால் நோயாளிக்கு மருந்துகளைப் பரிந்துரைக்க இயலும். இவையெல்லாம் அனுபவத்தில் வர வாய்ப்பில்லை. மருத்துவக் கல்லூரிகளில் படித்து ஹவுஸ் சர்ஜன் பயிற்சி முடித்தபிறகே, இந்த மருத்துவ அறிவைப் பெறமுடியும்.

அலோபதி மருத்துவம் படிக்காதவர் (ஆயுர்வேதம்) முதலியன, அம்முறை பின்பற்றலாகாது: இதேபோல் மாற்று மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி போன்ற துறைகளில் படித்துப் பட்டம் படித்தவர்கள், அலோபதி சிகிச்சை அளிப்பதும்கூட ஒருவகையில் போலி மருத்துவத்தின் கீழ்தான் சேரும். ஆம், இவர்களுக்கு அலோபதி முறை மருத்துவம் பற்றித் தெரியாது. அதுபோல, அலோபதி மருத்துவர்கள் மாற்றுமுறை சிகிச்சை அளிப்பதும்கூட குற்றமே. காரணம், அலோபதி மருத்துவர்களுக்கு மாற்றுமுறை மருத்துவம், அதுபற்றிய மருந்து அறிவியல் தெரியாது. இவைதவிர அலோபதி மற்றும் மாற்று மருத்துவமுறை எதுவும் பயிலாமல், அனுமதி பெறாத நிறுவனங்களில் சில மாதங்களோ அல்லது சில வருடங்களோ படித்துச் சான்றிதழ் (சர்டிஃபிகேட் கோர்ஸ்) பெற்றுவிட்டு, தானும் ஒரு மருத்துவர் என்று சிகிச்சை அளிப்பதும் போலி மருத்துவமே. இன்றையசூழலில் இதுபோன்ற போலி மருத்துவர்கள் அதிகம் உள்ளனர்.

பதிவு செய்த பிறகே மருத்துத் தொழில் பின்பற்ற முடியும்: அதேநேரத்தில் எத்தகைய படிப்பு படித்தாலும், ஒரு மருத்துவர் என்பவர் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே அவரால் சிகிச்சை அளிக்கமுடியும். அலோபதி மருத்துவர்கூட படித்து விட்டு, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல், பதிவு எண் பெறாமல் மருத்துவச் சிகிச்சை செய்வது குற்றமே. உதாரணமாக ரஷ்யா, உக்ரைன், ஜார்ஜியா, சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் மருத்துவத் தொழில் செய்வார்கள். அவர்கள், இந்தியாவில் எப்.எம்.ஜி.ஈ (Foreign Medical Graduate Screening Exam-  FMGE) என்னும் ஸ்கிரீனிங் தேர்வு எழுதி அதில் தேர்ச்சிபெற்று, அதன்பிறகு ஒரு வருடம் அரசு அங்கீகாரம்பெற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி எடுக்கவேண்டும். அத்துடன் மருத்துவ கவுன்சிலின் பதிவு எண் பெற்றபிறகே இந்தியாவில் மருத்துவம் செய்யமுடியும்.

ரஷ்யா போன்ற நாடுகளில் படித்து, அங்கீகாரம் இல்லாத படிப்புகளை போட்டுக் கொண்டு மருத்துவம் செயலாகாது: ரஷ்யா போன்ற சில நாடுகளில் எம்.டி (MD) பட்டம் பெற்றாலும் அவர்கள் இங்கே எம்.பி.பி.எஸ் மருத்துவராகவே கருதப்படுவார்கள் என்ற நிபந்தனையுடன்தான் மருத்துவ கவுன்சில் அவர்களைப் பதிவு செய்கிறது. காரணம், அவர்கள் எம்.பி.பி.எஸ் முடிக்காமலே எம்.டி படிக்கும் வசதி சில நாடுகளில் உள்ளது. அலோபதி மருத்துவப் பட்டமான எம்.பி.பி.எஸ் பெற்ற மருத்துவர்கள்கூட தன் பெயருக்குப் பின், தேர்ச்சி பெறாத அல்லது மருத்துவ கவுன்சிலில் அங்கீகாரம் இல்லாத டிகிரிகளைப் போட்டுக்கொண்டு சிகிச்சை அளிக்கிறார்கள். இதுவும் ஒருவகையில் போலி மருத்துவமே, இதுவும் குற்றமே.

போலி மருத்துவர்களை எப்படி அடையாளம் காண்பது?: போலி மருத்துவர்களில் பெரும்பாலானோர் தங்களது லெட்டர்பேடிலோ அல்லது கிளினிக் போர்டிலோ தங்கள் பெயரைப் பயன்படுத்தாமல் கிளினிக் பெயரை மட்டுமே பயன்படுத்துவார்கள். ஒருவேளை அதில் தங்கள் பெயரைப் போட்டால், பெயருக்குப் பின்னால் மருத்துவக் கவுன்சில் பதிவு எண் மற்றும் படித்த டிகிரியைப் போட மாட்டார்கள். ஒரு சிலர் இறந்துபோன மருத்துவர்கள் அல்லது இந்தியாவில் பல  ஆண்டுகளாக இல்லாத மருத்துவர்களின் பெயர் மற்றும் பதிவு எண்ணைப் பயன்படுத்தி போலி மருத்துவம் செய்கிறார்கள். இன்னும் சிலர், தங்களுக்குத் தெரிந்த,வேறு இடத்தில் பணிபுரியும் மருத்துவர்களின் பெயர்களையும், மருத்துவ கவுன்சில் பதிவு எண்ணையும் பயன்படுத்தி, மருத்துவத் தொழில் செய்கின்றனர். இது தண்டனைக்குரிய ஆள்மாறாட்ட கிரிமினல் குற்றமாகும்.

கண்டுபிடிக்க எளிய வழிகள்!: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், போலி மருத்துவர்களை அடையாளம் காண எளிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. உங்கள் பகுதியில் இருக்கும் மருத்துவரின் லெட்டர்பேடிலோ அல்லது பெயர்ப்பலகையிலோ உள்ள மருத்துவ எண், பதிவு எண், மருத்துவர் பெயர், படித்த பட்டங்கள் ஆகியவற்றைக் குறித்துக்கொண்டு கீழ்க்கண்டவாறு உங்கள் மொபைல்போனிலிருந்து குறுஞ்செய்தி அனுப்புங்கள். மெசேஜ் அனுப்பும் பகுதிக்குச் சென்று `TNMC (Space) REGNO (Space) பதிவு எண்’ டைப் செய்து `56767′ என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். உடனடியாக மருத்துவ கவுன்சிலிலிருந்து அந்தப் பதிவெண்ணைக் கொண்ட மருத்துவர் மருத்துவ கவுன்சிலால் அங்கீகாரம் பெற்ற பட்டங்கள் உள்ளிட்ட விவரங்களுடன் ஒரு பதில் வரும். உதாரணமாக, `TNMC REGNO 53065′ என்று டைப் செய்து `56767′ என்ற எண்ணுக்கு அனுப்பினால் `Doctor Name: MOHAMED KIZHAR IRSHATH DOWLATH M.B.B.S., D.C.H’ என்று பதில் வரும். அதை வைத்து அவர் உண்மையான மருத்துவரா, அவர் தனது பெயருக்குப் பின்னால் பயன்படுத்தும் படிப்புகள், அவர் படித்த படிப்பு மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டப் படிப்புதானா என்பதை அறிந்து அந்த மருத்துவரின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளலாம். சில உண்மையான மருத்துவர்கள்கூட `MBBS’ மட்டும் படித்துவிட்டு தங்களை பல்வேறு துறையின் சிறப்பு மருத்துவர் என்று போலி மருத்துவம் செய்வார்கள். அவர்களைப் பற்றிய விவரங்களை இந்தக் குறுஞ்செய்தி மூலம் கண்டுபிடித்து விடலாம்.

டாக்டர்களுக்கு ஸ்மார்ட் போர்டு (Smart Board) முறை: போலி மருத்துவர்களில் சிலர், வேறு மருத்துவரின் பெயர் மற்றும் பதிவு எண்ணைப் பயன்படுத்துவதை இந்தமுறை மூலம் கண்டுபிடிக்க முடியாது. இதற்கும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் புதிய வழிமுறையைக் கொண்டுவரவிருக்கிறது. அதாவது டாக்டர்களுக்கு ஸ்மார்ட் போர்டு என்னும் முறையைக் கொண்டுவருகிறது. பதிவு பெற்ற மருத்துவர்கள், குறிப்பிட்ட தொகை செலுத்தி இந்த போர்டைப் பெற்று தங்கள் கிளினிக்கில் வைக்க வேண்டும். அதில் மருத்துவரின் பெயர், பதிவு எண், அவரது டிகிரி, மருத்துவரின் புகைப்படம் போன்றவை இருக்கும். இதன்மூலம் ஆள்மாறாட்டம் செய்து போலி மருத்துவம் செய்பவர்களைக் கண்டுபிடித்துவிடலாம். இந்த போர்டில் ஒரு ஹோலோகிராம் (Hologram) இருக்கும். நமது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து இந்த இந்த ஹோலோகிராமுடன் ஒப்பிட்டுப் போலி மருத்துவரைக் கண்டுபிடித்துவிடலாம். இந்த ஸ்மார்ட் போர்டு திட்டம் மருத்துவ கவுன்சிலில் அங்கீகாரம்பெற்ற மருத்துவருக்கு மட்டுமே கொடுக்கப்படும். இது இன்னும் முழுஅளவில் நடைமுறைக்கு வராவிட்டாலும் இன்னும் சில மாதங்களில் வந்துவிடும். இதுபற்றி மேலும் விவரம் அறிய http://tnmedicalcouncil.org என்ற இணையதளத்துக்குச் சென்று பார்க்கலாம். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி, பட்டப் படிப்புகள் பற்றிய விவரங்களை அறிய http://www.mciindia.org என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

போலி டாக்டர்களால் ஏற்படும் ஆபத்துகள்!: போலி மருத்துவர்களுக்கு மருத்துவத்தின் அடிப்படை அறிவியலான உடல் கூறியல் (Anatomy),  உடல் செயலியல் (physiology), உயிர் வேதியியல் (Bio Chemistry), மருந்தியல் ( (Pharmacology), நோய்க்குறியியல் (Pathology),  நுண்ணுயிரியல் (Micro Biology) போன்றவை அறவே தெரியாது. அத்துடன் மருத்துவ அறிவியல் படிப்புகளின் அடிப்படைகளும் அவர்களுக்குத் தெரியாது. இவை எதுவும் தெரியாமல் அனுபவ அடிப்படையில் மட்டுமே மருத்துவம் செய்வதால் நோயாளிகளின் உடல்நிலை பாதிக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் கொடுக்கும் தவறான மருந்துகளால் நாள்பட்ட நோய்களான சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். சிலநேரங்களில் மரணம்கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வேதபிரகாஷ்

12-04-2023


[1] விகடன்,   போலி மருத்துவரைக் கண்டுபிடிப்பது எப்படி?- எளிய வழிமுறைகள்! , டாக்டர் டி.முஹம்மது கிஸார், Published: 04 Dec 2018 12 PM; Updated:04 Dec 2018 12 PM.

[2] https://www.vikatan.com/health/medicine/143756-how-to-find-fake-doctor

தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? (1)

ஏப்ரல் 12, 2023

தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? (1)

போலி டாக்டர்கள் கைது: தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவ தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் நன்னிலம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்[1]. இந்த சோதனையில் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கியும், ஊசி போட்டும் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்களை கண்டறிந்தனர்[2]. இது தொடர்பாக மாப்பிள்ளைகுப்பம் பகுதியைச் சேர்ந்த செந்தில், கொல்லுங்மாங்குடியைச் சேர்ந்த சிவக்குமார், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், நாச்சிகுளம் கல்யாண சுந்தரம் உள்ளிட்ட 10 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்து விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்[3].

தொடர்ந்து நடவடிக்கை; இதுபோன்று, கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஓமலூரில் மருத்துவம் படிக்காமலே ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த இரண்டு போலி மருத்துவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்[4]. இதனிடையே, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவர் ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக வரும் பொது மக்களுக்கு அதிக அளவு உள்ள டோஸ் மருந்து செலுத்துவதாக மருத்துவதுறைக்கு புகார் வந்தது. இது தொடர்பாக ஊரக மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குனர் சாந்தி கொட்டாயூரில் உள்ள கொட்டாயூர் கிராமத்தில் முனுசாமி என்பவரது கிளினிக்கில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது உரிய ஆவணங்கள் இன்றியும், முறையாக மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி மருத்துவர் முனுசாமியை கைது செய்தனர்.

10 நாட்களில் 71 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது: தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த 10 நாட்களில் 71 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்[5]. கேரளா, ஆந்திராவில் மருத்துவராக பயில்வதற்கான விதிகள் வேறாக இருப்பதால், சிலர் தமிழ்நாட்டு விதிகளுக்கு உட்படாமல் தேனி, திருவள்ளூர் உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் மருத்துவராக பயில்வதாக புகார்கள் வந்துள்ளன[6]. மாவட்ட சுகாதார இணை இயக்குநர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டு, காவல்துறை உதவியுடன் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மருத்துவம் பயிலாமல், இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல், மருத்துவத் தொழில் செய்து வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, தேனி உட்பட எல்லையோர மாவட்டங்களில் இதுவரை 71 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சித்த மருத்துவர் அல்லோபதி மருத்துவம் பார்ப்பது: சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி தாலுகாவில் தின்னப்பட்டி ரயில் நிலையம்  உள்ளது. இந்த ரயில்வே நிலையம் அருகில் போலி மருத்துவர் ஒருவர் கிளினிக் வைத்து நடத்தி வருவதாக சுகாதாரத்துறையினருக்கு புகார் வந்தது[7]. தகவலின்பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தீவட்டிப்பட்டி போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்[8]. அப்பொழுது சித்த மருத்துவம் படித்துவிட்டு ஓமலூர் ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆண்டரஸ் கிளினிக் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், அங்கிருந்து மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

உதவியாளராக வேலை பார்த்து மருத்துவர் ஆனது: மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு ராஜபாண்டி 39. மதுரை மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரரான இவருக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டது. இதற்காக கடந்த மார்ச் 27 ல் வில்லாபுரத்தில் சிவா வர்மா கிளினிக்கிற்கு சென்றார். அவருக்கு சிவசுப்பிரமணி சிகிச்சை அளித்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராஜபாண்டி மயங்கினார். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் இறந்தார். சிவசுப்பிரமணி மீது நடவடிக்கை கோரி ராஜபாண்டி மனைவி கண்மணி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். சிவசுப்பிரமணி தனது பெயருக்கு பின்னால் எம்.டி., என்று குறிப்பிட்டிருந்ததால் அவரது மருத்துவ சான்றுகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய மருத்துவ துறைக்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் பரிந்துரைத்தார். மருத்துவக்குழு ஆய்வு செய்ததில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டைச் சேர்ந்த இவர் 9ம் வகுப்பு தேர்வில் இருமுறை தேர்ச்சி பெறாமலும், பிறகு பிளஸ் 2 தொழிற்பாடப்பிரிவில் சேர்ந்து படித்து திருத்தணி, திருவள்ளூரில் எலக்ட்ரீசியனாக வேலை செய்ததும் தெரிந்தது. அதில் போதிய வருமானம் கிடைக்காததால், மதுரை பகுதியில் தலைச்சுமையாக ஜவுளி விற்றார். அதிலும் வருமானம் கிடைக்காத நிலையில், சித்த வைத்தியம் பார்த்த ராமலிங்க சுவாமி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் ‘எடுபிடி’ யாக வேலைக்கு சேர்ந்து, சிகிச்சை அளிப்பதை பார்த்து பார்த்து தொழில் கற்றுக்கொண்டார். பின்னர் போலியாக பீகாரில் சித்த வைத்தியத்திற்கு சான்று பெற்று 10 ஆண்டுகளாக வில்லாபுரத்தில் மருத்துவ தொழில் செய்து வந்துள்ளார். இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த ஒருவரின் அங்கீகார எண்ணை பயன்படுத்தி கிளினிக் நடத்தி வந்துள்ளார்[9]. போலீஸ்காரர் ராஜபாண்டி இறந்த வழக்கில், மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் சிவசுப்பிரமணியை 07-04-2023 அன்று இன்ஸ்பெக்டர் பார்த்திபன் கைது செய்தார்[10].  10-04-2023 அன்று, கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புரசம்பட்டி கிராமத்தில் வீட்டில் 12ஆம் வகுப்பு படித்து, மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் பெரியசாமி என்பவரை குளித்தலை போலீசார் கைது செய்தனர்[11].

தீர்வு என்ன – என்ன செய்ய வேண்டும்? முன்பெல்லாம் மருத்துவ சிகிச்சை இலவசமாகத்தான் இருந்தது. இந்திய ராஜாக்கள் ஆண்ட போது, எல்லாமே இலவசமாகத்தான் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் அம்முறை மாற்றப்பட்டபோது, மாறியபோது, பல சீர்கேடுகள் ஏற்பட்டதில், இதுவும் ஒன்று எனலாம். இப்பொழுதுள்ள முறையில் மருத்துவ படிப்பு முதல் சிகிச்சை வரை பணம் தான் பிரதானம் என்ற நிலையுள்ளது. இந்நிலையை மாற்ற வேண்டும்.

  1. மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக்கப் படவேண்டும். நூற்றுக்கு ஐந்து என்ற விகிதத்தில் மருத்துவர்கள் இருக்க வேண்டும். இல்லை, உணவு சுத்தமாக ஆரோக்யமாக இருக்க வேண்டும். உணவு கலப்படம் முதலியவற்றைப் போக்க வேண்டும்.
  2. மருத்துவர்கள் தங்களது பொதுநல சேவை, தார்மீக எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  3. பணம் சம்பாதிக்க வேண்டும், ஆஸ்பத்திரி கட்ட வேண்டும் என்ற லாபநோக்கில் இருக்கும் போது, அவர்களால் நிச்சயமாக தங்களது மருத்துவத் தொழிலை நியாமாக செய்ய முடியாது.
  4. அரசு / பொது மருத்துவ மனைகள் அதிகமாக்கப் பட வேண்டும். நகரங்களைத் தவிர, நகர் புறங்கள், கிராமங்களில் மருத்துவ மனைகள் அதிகமாக்கப் படவேண்டும்.
  5. டாக்டர்கள் மாதத்திற்கு ஒருதடவை அங்கு சென்று மக்களுக்கு இலவசமாக சேவை செய்ய வேண்டும். கம்பெனிகள் அதற்கு “ஸ்பான்சர்” செய்ய வேண்டும்.
  6. மருந்துகள், பரிசோதனைகள், சோதனைகள் முதலியவற்றின் விலை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அல்லது அரசு அதற்கு விலை நிர்ணயிக்க வேண்டும். இதில் ஏகப்பட்ட ஊழல்கள் / மோசடிகள் / வரியேய்ப்புகள் நடந்து வருகின்றன. அவற்றை முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.
  7. ஆயுர்வேத, சித்தா, யுனானி முறைகளிலும் நவீனமுறைகளைப் பின்பற்றி, மக்களுக்கு உபயோகமாக செயல்படுத்த வேண்டும். “கிளினிகல்” முறைகள் பின்பற்றப்படவேண்டும். நோயாளிகளின் “மருத்துவ சிகிச்சை சரித்திரம்” (கேஸ் ஹிஸ்டரி) பாதுகாக்கப்படவேண்டும்.
  8. முதலில் மருத்துவப் படிப்பு என்பது பணக்காரர்களுக்கு அல்லது லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால் தான் சீட் கிடைக்கும் என்ற நிலையினையும் மாற்ற வேண்டும்.
  9. படிக்க வேண்டும் என்ற ஆசை, மனப்பாங்கு, தகுந்த பாவம் உள்ளவர்களை நுழைவு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப் படலாம். அப்பொழுது அந்த பணபலம் குறையும்.
  10. சேவை எண்ணம் இல்லாமல், மருத்துவத் தொழில் செய்ய முடியாது, ஆகவே, அத்தகைய எண்ணம் இல்லாதோர், மருத்துவத் தொழிலுக்கு வராமல் இருப்பதே நல்லது.

© வேதபிரகாஷ்

12-04-2023


[1] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், Thiruvarur: திருவாரூரில் ஷாக்.. ஒரே நாளில் 10 போலி மருத்துவர்கள் அதிரடி கைது!, Karthikeyan S, 08 April 2023, 12:34 IST.

[2] https://tamil.hindustantimes.com/tamilnadu/10-fake-doctors-arrested-in-thiruvarur-131680936986089.html

[3] தமிழ்.நியூஸ்.18, 10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைதுதமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை…!, NEWS18 TAMIL, First published: April 11, 2023, 19:11 IST, LAST UPDATED : APRIL 11, 2023, 19:11 IST.

[4] https://tamil.news18.com/tamil-nadu/72-fake-doctors-arrested-in-last-10-days-by-tamil-nadu-police-936421.html

[5] தினத்தந்தி, தினத்தந்தி, 10 நாளில் 71 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது, By தந்தி டிவி, 12 ஏப்ரல் 2023 7:24 AM.

[6] https://www.thanthitv.com/latest-news/71-fake-doctors-were-identified-and-arrested-in-10-days-179511

[7] நியூஸ்7தமிழ், சேலம் அருகே போலி மருத்துவர் கைது!, —கோ. சிவசங்கரன், by Web Editor, April 10, 2023

[8] https://news7tamil.live/omalur-duplicate-doctor-arrest.html

[9] தினமலர், பார்த்த அனுபவத்தில் வைத்தியம் பார்த்த போலி மருத்துவர் கைது: சுளுக்கு எடுத்த போலீஸ்காரர் இறந்த வழக்கில் திருப்பம், பதிவு செய்த நாள்: ஏப் 08,2023 00:02

[10]  https://m.dinamalar.com/detail.php?id=3287827

[11] தமிழ்.ஏபிபி.லைவ், கரூர்: குளித்தலை அருகே கிராமத்து வீட்டில் மருத்துவம்போலி மருத்துவர் கைது, By: பிரபாகரன் வீரமலை | Published at : 11 Apr 2023 02:11 PM (IST), Updated at : 11 Apr 2023 02:11 PM (IST)

https://tamil.abplive.com/crime/karur-news-medicine-at-karur-village-house-fake-doctor-arrested-tnn-111254

உச்சநீதி மன்ற தீர்ப்பு, கூடுதல் கட்டண வசூல், கண்கணிக்கும் குழு, தனியார் கல்லூரிகளில் தொடர்ந்து நடக்கும் வசூல் வேட்டை, வஞ்சிக்கப்படும் மாணவ-மாணவியர், வதைக்கப்படும் பெற்றோர்!

ஜனவரி 26, 2016

உச்சநீதி மன்ற தீர்ப்பு, கூடுதல் கட்டண வசூல், கண்கணிக்கும் குழு, தனியார் கல்லூரிகளில் தொடர்ந்து நடக்கும் வசூல் வேட்டை, வஞ்சிக்கப்படும் மாணவமாணவியர், வதைக்கப்படும் பெற்றோர்!

வாசுகி, கலாநிதி, சர்மா - தினகரன் போட்டோ

கல்லூரியின் தாளாளர் வாசுகி சுப்பிரமணியன் தாம்பரம் நீதிமன்றத்தில் 25-01-2016 அன்று சரண்: இப்பொழுது நாடு முழுவதும் மாணவ-மாணவியர் தற்கொலை என்று தான் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஏதோ, திடீரென்று இப்பொழுது தான், இவையெல்லாம் நடப்பது போல ஒரு பிரமையை ஏற்படுத்தி வருகின்றது. போதாகுறைக்கு, முடிந்தால், ஜாதிய பிரச்சினையையும் சேர்க்கலாம் என்று சில ஊடகக்காரர்கள் முயன்று வருகிறார்கள். இப்பிரச்சினையிலும், பெற்றோர்கள் தங்களது மகள்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தங்களது கருத்தைச் சொல்லி வருகின்றனர்[1]. இந்நிலையில், கல்லூரி விரிவுரையாளர் கோடீஸ்வரி, விடுதி வார்டன்கள் லட்சுமி, சுமதி ஆகிய 3 பேரிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தாங்கள் சேர்மென் சொல்லியதைத் தான் செய்து வந்தோம் என்பது போல கூறினர். ஊடகங்களில் மற்றும் அரசியல் ரீதியில் அழுத்தம் அதிகமாகிக் கொண்டு வரும் நிலையில், சரண்டர் ஆவது நல்லது என்ற சட்ட-ஆலோசனையின் படி, கல்லூரியின் தாளாளர் வாசுகி சுப்பிரமணியன் தாம்பரம் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்[2]. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உமாமகேஸ்வரி அக்கல்லூரி தாளாளரை வரும் 28ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்[3]. கலவரம் ஏற்படும் நிலையில் அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் இவ்வாறு டரண்டர் ஆகி சிறையில் பாதுகாப்பாக இருக்கும் முறையினையும் கடைப்டித்து வருகின்றனர்.

MBBS in Tamilnadu - rate fixed in colleges

கூடுதல் கட்டணத்தால் சுரண்டப்படும் சுயநிதி கல்லூரி மாணவர்கள்[4]: “தி இந்து”வும் இப்பொழுது இப்படி செய்தி வெளியிட்டுள்ளது[5]. கடந்த 10 ஆண்டுகளாகவே பரவாலாக பெரும்பாலான தனியார் சுயநிதி கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கூடுதல் கல்விக் கட்டணம், கட்டுமான மேம்பாடு என்ற போர்வையில் வசூலிக்கப்படும் நன்கொடை ஆகியவற்றை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், மாணவிகளின் உறவினர்கள், மற்றும் அவர்களது சக தோழிகள், கல்லூரியில் நிலவும் அவலங்களை விவரித்துள்ளனர். போதிய விரிவுரையாளர்கள் இல்லை, கட்டமைப்பு வசதிகள், நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் கட்டண வசூல், வசூலிக்கப்படும் முழு கட்டணத்துக்கான ரசீது தர நிர்வாகம் மறுப்பது என அடுக்கடுக்கான புகார்களை அவர்கள் கூறுகின்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கட்டண ஒழுங்குமுறை குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனியார் கல்வி நிறுவனங்களில் வசூலிக்கக்கூடிய அதிகபட்ச கட்டணம் எந்த அளவுக்கு இருக்கலாம் என்பதை நிர்ணயிக்கிறது. ஆனால், பெரும்பாலான கல்லூரிகளில் இந்தப் பரிந்துரைகள் காகிதத்தில் மட்டுமே இருக்கின்றன. [ஏன் நடவடிக்கையில் கொண்டுவராமல் இருக்கிறது, யார் தருக்கிறார்கள் முதலியவற்றை விளக்கவில்லை. பாவம், அதெல்லாம் எழுதியவருக்குத் தெரியாது போலும்!]

Engineer vs doctor statistics

பொறியியல் கல்லூரிகளை கண்காணிக்க தொடங்கப்பட்ட கட்டண குறைதீர்ப்பு குழுவும் முற்றிலும் முடங்கிவிட்டதாகவே சொல்ல வேண்டும்[6]: இது ஒருபுறம் என்றால் இத்தகைய விதிமீறல் தொடர்பான புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. இதனால் கூடுதல் கட்டண வசூல் புகார்கள் பல கேட்பாரற்று கிடக்கின்றன. எஸ்.வி.எஸ். கல்லூரி மீது மாணவிகள் விழுப்புரம் ஆட்சியரிடம் கொடுத்த புகாரும்கூட இதேமாதிரிதான் கண்டு கொள்ளப்படாமல் போனது என்பது கவனிக்கத்தக்கது. கட்டணக் கொள்ளைக்கு எதிராக தமிழக அரசு இதுவரை ஒரேஒரு முறை மட்டுமே வலுவான நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று சொல்லலாம். கடந்த 2002-05 காலகட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியாக இ.பாலகுரசாமி இருந்தபோதே சில குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவர் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் கட்டண வசூல் தொடர்பாக அவ்வப்போது அதிரடி சோதனைகளை நடத்தியதோடு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் மாணவர்கள் புகார் அளிப்பதையும் ஊக்குவித்தார். தவறு செய்த கல்லூரிகள் சில அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து துண்டிக்கப்பட்டன. இப்போதெல்லாம் இத்தகைய நடவடிக்கையைப் பார்ப்பது அரிதினும் அரிதாகிவிட்டது. பொறியியல் கல்லூரிகளை கண்காணிக்க தொடங்கப்பட்ட கட்டண குறைதீர்ப்பு குழுவும் முற்றிலும் முடங்கிவிட்டதாகவே சொல்ல வேண்டும். பிறகு மற்ற கல்லூரிகளின் கதியை என்னென்பது? [அவருக்குப் பின்னால் வந்தவர் ஏன் செய்யவில்லை?]

MBBS medical college, money spinning industry

கருத்துகளை சொன்னாலும் நோயின் காரணத்தை மறைக்கின்றனர்[7]: இது தொடர்பாக கல்வியாளர் ஒருவர் கூறும்போது, “கடந்த திமுக ஆட்சியின் போதும், தற்போதைய ஆட்சியின் முதல் பாதியிலும் இந்த கண்காணிப்பு குழு சற்று சுறுசுறுப்பாக இயங்கின. இருந்தாலும், புகார்களின் பேரில் நடவடிக்கை என்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை” என்றார். அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான எம். அனந்தகிருஷ்ணன் கூறும்போது, “பெரும்பாலான கல்லூரிகள் மாநில பல்கலைக்கழகங்களுடன் சார்புடையதாக இருப்பதால் மத்திய கண்காணிப்புக் குழுவின் நேரடி கட்டுப்பாட்டில் இவை வருவதில்லை. அதுமட்டுமல்லாது, சில அரசியல்வாதிகள் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக அங்கீகாரம் பெறுவதில் அழுத்தம் செலுத்துகின்றனர். இதனாலே கூடுதல் ட்டண வசூல் கண்காணிப்புக்கு அப்பாற்பட்டதாக ஆகிவிட்டது” என்றார். அவர் மேலும் கூறும்போது, “இத்தகைய வசூல்வேட்டை நடப்பதற்கு அதிகாரிகள் பாராமுகமே காரணம். நடைபெறும் அவலங்களை கண்டும் காணாமல் அதிகாரிகள் செயல்படுகின்றனர். பொதுமக்களும் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக இணைந்து குரல் கொடுக்கும் அளவுக்கு வலுவான கூட்டியக்கமாக உருவாவதில்லை,” என்றார். ஆகஸ்ட். 2013ல், உச்சநீதி மன்றம் “அனுமதி கட்டண வசூல்” கண்காணிக்கப்படவேண்டும் என்று ஆணையிட்டது[8]. [திராவிடக் கட்சிகள் இவற்றை ஊக்குவிக்கின்றன என்றால், பெரும்பாலோர் இவற்றில் முதலீடு செய்துள்ளார்கள் என்று தெரிகிறது.]

MBBS medical courses, fees - rate fixed in colleges

கல்வி சேவை செய்வது இவர்களின் எண்ணம் இல்லை, கொள்ளயடிப்பதுதான் திட்டம்![9]: சொல்லக்கூடாது, சொன்னால் பலருக்கு கோபம் வரும், எஎனய்யா, பழையதையெல்லாம் கிளறுகிறாய் என்றும் கேட்பார்கள். ஆனால் இப்பொழுது சொல்லவேண்டிய கட்டாயம் வந்துள்ளது. ஏனெனில் இது வாழ்க்கைப் பிரச்சினை. சமூகப் பிரச்சினை, நாட்டுப் பிரச்சினையுக் கூட! இவர்களுக்கு கல்லூரி இல்லை, பல்கலைக்கழகங்கள் இல்லை என்றல் ஒன்றும் ஆகப்போவதில்லை. தங்களிடத்தில் அதிகமாக உள்ளப் பணத்தை, கள்ளப்பணத்தை, கருப்புப் பணத்தை வியாபாரத்தில் முதலீடு செய்வது போல செய்து கருப்பை வெள்ளையாக்கப் பார்க்கிறர்கள். ஆனால் மற்ற்வர்களுக்கு அப்படியில்லையே? யார் இந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களின் சொந்தக் காரர்கள். ஆமாம், நேற்றைய ரவுடிகள்……………, பொறுக்கிகள்………….., சாரயம் காய்ச்சிகள்,………………………………….இத்யாதி முதலியோர்! இன்றைக்கு மாறிவிட்டோம் எனலாம். நன்று, பிறகு ஏன் வெஏறு வழியில் இப்படி கொள்ளையடிக்கிறிர்கள்? நிலத்தை, வீட்டை விற்று/அடமானம் வைத்து, வங்கிகளில் கடன் வாங்கி, பெள்ளைகளைப் படிக்க வைக்கும் பேற்றோரை, இவர்கள் இப்படி வதைக்கலாமா?

© வேதபிரகாஷ்

26-01-2016


[1] http://www.nthvideo.com/svs-college-chairman-vasuki-surrenders-in-tambaram-magistrate-court-thanthi-tv-55414.html

[2] வெப்துனியா, சித்த மருத்துவ கல்லூரி தாளாளர் சரண்: புழல் சிறையில் அடைக்க உத்தரவு, Last Modified: திங்கள், 25 ஜனவரி 2016 (16:51 IST).

[3] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/principal-arrested-case-college-students-suicide-116012500042_1.html

[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8150845.ece

[5] தமிழ்.இந்து, கூடுதல் கட்டணத்தால் சுரண்டப்படும் சுயநிதி கல்லூரி மாணவர்கள், டி.சுரேஷ்குமார், தமிழில்: பாரதி ஆனந்த், Published: January 25, 2016 12:16 ISTUpdated: January 25, 2016 13:11 IST.

[6] தமிழ்.இந்து, கூடுதல் கட்டணத்தால் சுரண்டப்படும் சுயநிதி கல்லூரி மாணவர்கள், டி.சுரேஷ்குமார், தமிழில்: பாரதி ஆனந்த், Published: January 25, 2016 12:16 ISTUpdated: January 25, 2016 13:11 IST.

[7] தமிழ்.இந்து, கூடுதல் கட்டணத்தால் சுரண்டப்படும் சுயநிதி கல்லூரி மாணவர்கள், டி.சுரேஷ்குமார், தமிழில்: பாரதி ஆனந்த், Published: January 25, 2016 12:16 ISTUpdated: January 25, 2016 13:11 IST.

[8] http://articles.economictimes.indiatimes.com/2003-08-14/news/27534275_1_management-quota-common-entrance-capitation-fee

[9]https://academicdegradation.wordpress.com/2010/01/20/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8/