Archive for the ‘சர்ச்சை’ Category

மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கற்களை வீசி மோதல்–பொது மக்களுக்கு தொந்தரவு, அச்சுருத்தல்!

ஒக்ரோபர் 11, 2023

மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கற்களை வீசி மோதல் பொது மக்களுக்கு தொந்தரவு, அச்சுருத்தல்!

சென்னை கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏன்: சென்னையில் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அடிக்கடி பேருந்து மற்றும் ரயில்களில் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏற்கனவே பெரம்பூர், பேசின் பிரிட்ஜ், கடற்கரை ரயில் நிலையங்களில் இரண்டு கல்லூரிகளின் மாணவர்கள் மோதிய வழக்குகளில் சில மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். படிக்கும், படிக்க வருகின்ற மாணவர்கள் இவ்வாறு வன்முறையில் ஈடுபடுவது தொடர்ந்து நடந்து 1970களிலிருந்து வருகிறது. மாணவர்களை ஒரு அளவுக்கு மீறி அரசியலில் ஈடுபட வைப்பதினாலும், கல்லூரி-பல்கலைக் கழகங்களில் அரசிய கட்சி சார்பு இயக்கங்கள், அமைப்புகள் வைத்து மாணவர்களைப் பிரிப்பதாலும், அவ்வாறே அவ்வளாகங்களில் தேர்தல்கள் நடத்துவதாலும் இத்தகைய விளைவுகள் ஏர்படுகின்றன. முதலில் கம்யூனிஸ்டு, பிறகு திராவிட கட்சிகள் இத்தகைய வேலைகளில் இறங்கின, சிறந்தன. பிறகு மற்ற கட்சிகளும் சேர்ந்து கொண்டன.

ஒழுக்கம், கட்டுப்பாடு முதலியவை குறைவதால் ஏற்படும் விளைவுகள்: இதனை, தீர ஆராயமல் அல்லது அறிந்தும் அறியாதது போல கடந்து செல்வதால் தான், வன்முறைகள் அதிகமாகின்றன, தொடர்கின்றன. ஒழுக்கம் இல்லாமை, பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் இருப்பது, பெற்றோர்களை மதிக்காமல் இருப்பது, மேனாட்டு நாகரிகம்-சினிமா பாணிகளில், வக்கிரம், சண்டை, அடிதடி, வன்முறை என்று இறங்குவது முதலியவை அச்சீர்கேடுகளின் அடையாளங்கள் மற்றும் விளைவுகளாகவும் இருக்கின்றன. ஆக, மாணவ-மாணவிகளிடம் பிரச்சினைகள் ஏற்படுவது உள் மற்றும் வெளிப்பிரச்சினைகள் என்று அடையாளம் காட்டலாம். பொதுவாக தார்மீக சிந்தனைகள் குறைவது, பெற்றோர்களுக்கு மதிப்பு கொடுக்காதது, அவர்கள் பேச்சு கேட்காதது, பல வழிகளில் அவர்களை ஏமாற்றுவது (ஹாஸ்டலில் படிக்கும் மாணவ-மாணவிகள்), பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்காதது,………………என்ற விஷயங்களும் வருகின்றன.

மாணவிகளும் எல்லைகளைக் கடந்து நடந்து கொள்வது: போதாகுறைக்கு மாணவிகளும் சீர்கெட்டு அலைகின்றனர், வெளிப்படையாக சிகரெட் பிடிப்பது, குடிப்பது,மாணவர்களுடன் தொட்டுப் பேசுவது, கைக் கோர்த்துக் கொண்டு சுற்றுவது, என்றெல்லாம் சர்வசகஜமாக நடந்து வருகின்றன. பெற்றோர், உற்றோர், மற்றோர் பார்த்தால் துடித்து விடுவர், அந்த அளவுக்கு மாணவிகள் நடந்து கொள்கின்றனர். பெண்மை, பெண்கள் உரிமைகள் என்ற ரீதியிலும், மாணவிகள் ஆடை, நடவடிக்கை, நடப்பு, முதலிய விவகாரங்களில் எல்லைகளை மீறுகிறார்கள். கல்லூரி-பல்கலைக்கழகங்களில் படிக்கும் பொழுது, படிப்பு-சம்பந்தமாக என்றும் வெளியே சென்று வருகிறார்கள். அந்நிலைகளில் ஆசிரியர்களே வரம்பு மீறும் நிலைகள், வழக்குகளில் முடிந்துள்ளன. ஆனால், இங்கு பாதிப்பு மாணவிகளுக்குத் தான் அதிகம். இழந்ததை மீண்டும் பெற முடியாது.

மாநிலக்கல்லுாரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களை தாக்கியது: அரக்கோணத்தில் இருந்து சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி சென்னை வந்த மின்சார ரயில், 9-10-2023 அன்று காலை 9:15 மணியளவில் பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில் நிலையம் வந்தது[1]. இதெல்லாம் தினமும் நடக்கும் நிகழ்ச்சி தான். அப்போது ரயிலில் பயணம் செய்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் திடீரென மின்சார ரயிலில் இருந்து கீழே இறங்கினர்[2].  ஒரு பெட்டியில் இருந்த மாநிலக்கல்லுாரி மாணவர்கள் சிலர், அடுத்த பெட்டிக்கு சென்றனர்[3]. அங்கு இருந்த பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களை கண்டதும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டியின் மீது கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தினர்[4]. இதெல்லாம் நிச்சயமாக பிறகு தெரிந்த விசயங்கள் தான்ச்ரெயிலில் ஏறும் பொழுதே, எந்தெந்த கல்லூரி என்று அடையாளப் படுத்த முடியாது. இதனையடுத்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் பதிலுக்கு கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தினர்[5]. இதனால், அந்தப் பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது[6]. ஆக, இவ்விரு கல்லூரி மாணவர்களுக்கு ஏற்கெனவே முன் விரொதம் இருக்கிறது என்று தெரிகிறது. பிறகு, அதை ஏன் தீர்க்கப் படவில்லை என்று தெரியவில்லை.

சகபயணிகளை அச்சுருத்தும் கல்லெறியும் பயங்கரவாதம்: சுமார் 40க்கும் மேற்பட்ட மாநில கல்லூரி மாணவர்கள் பெரம்பூர் லோகோ நடைபாதையில் ஓடிச் சென்று தொடர்ந்து கற்களை வீசி எறிந்ததால் பொதுமக்கள் மற்றும் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அச்சமடைந்தனர்[7]. ரெயில்வே டிராக்கில் இருக்கும் கற்கள் வீசப் பட்டன என்பதை கவனிக்க வேண்டும். இதில் கல்லூரி மாணவர்கள் சிலர் லேசாக காயங்களுடன் உயிர் தப்பினர்[8]. இதனால் ரயில் நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது.  இதனால் பிற பயணியர் அச்சத்தில் அலறியடித்து பெட்டிக்குள் பதுங்கினர்[9]; உடனடியாக ரயிலில் பயணம் செய்த பொதுமக்கள் மின்சார ரயிலின் கதவுகளை மூட முயற்சி செய்தனர்[10]. ஆனால் கதவுகளை மூட முடியாததால் ரயில் பெட்டிக்குள் உள்ளே சென்று ஒளிந்து கொண்டனர். சிலர் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். சில நிமிடங்களில் ரயில் புறப்படவே, மாணவர்கள் கலைந்து சென்றனர். இதெல்லாம் சக பயணிகளுக்கு அளிக்கும் மிகப் பெரிய அச்சுருத்தல், பயங்கரவாத செயலும் ஆகும். இவர்களுக்கும், காஷ்மீரத்தில் கெல்லெறியும் ஜிஹாதிகளுக்கும் வித்தியாசம் இல்லை.

புகார் கொடுக்கப் படவில்லை-கொடுத்தார்கள் போன்ற முரண்பட்ட செய்திகள்: இது குறித்து யாரும் புகார் செய்யவில்லை என்று சில நாளிதழ்கள் குறிப்பிடுகின்றன.. சம்பவம் குறித்து, பெரம்பூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்[11]. இச்சம்பவம் தொடர்பாக பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்[12]. கடந்த அக்டோபர் 5ம் தேதி கடற்கரை ரயில் நிலையத்தில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் வெட்டிக் கொண்ட சம்பவம் அடங்குவதற்குள், பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் மீண்டும் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் ரயில்வே போலீசார், உடனடியாக பெரம்பூர், வியாசர்பாடி ஜீவா, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளுக்கு தகவல் கூறி அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீசாரை உஷார் படுத்தினர்.

நல்வழிக் கல்விக்காக என்ன செய்ய வேண்டும்?: கவுன்சிலிங்-ஆலோசனை, சேர்ப்பதற்கு மட்டும் வைத்துக் கொண்டு, பிறகு மறந்து விடுகின்றனர். ண்மையில் அவர்கள் தங்களுக்கு வருமானம் வரவேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். பெற்றோர், உற்றோர், ஆசிரியர்க்கள், பெரியவர்களை விட இவர்களால் ஒழுக்கம் போதிக்க முடியுமா என்று தெரியவில்லை. இன்றைய காலகட்டங்களில் மாணவ-மாணவியர் பெற்றோர்களின் பேச்சை கேட்காமல் இருப்பதால், கவுன்சிலிங்-ஆலோசனை முறை கல்லூரிகளில் இருக்கவேண்டும். இது கல்லூரி சொந்தக்காரர்கள், முதலீடு செய்தவர்கள், தாளாளர், முதல்வர், படிப்புத்துறைகளின் தலைவர்கள், விரிவுரையாளர்கள் முதல், விடுதி பொறுப்பாளர், பியூன்கள், வேலையாட்கள், செக்யூரிட்டி வறை இருக்க வேண்டும். ஆனால், இதையும் கெடுக்க நிர்வாகித்தினர் முயலக் கூடாது. ஆகவே, –

  • ஆன்மீக வகுப்புகள் (Moral classes) மறுபடியும் நடத்தப் படவேண்டும்.
  • நீதி-நேர்மை-நியாயம் பற்றி வாரம் ஒரு வகுப்பு சேர்க்கப்பட வேண்டும்.
  • தர்மம், ஆன்மீகம், தெய்வ நம்பிக்கை முதலியவை போற்றப் படவேண்டும்.
  • இதில் செக்யூலரிஸம் என்ற போர்வையில் பிரச்சினை ஏற்படுத்தக் கூடாது.
  • நாத்திகம் பெயரில் மனங்களைக் கெடுக்கக் கூடாது.
  • சித்தாந்தங்கள் போர்வையில், மாணவ-மாணவியரின் மனப்பாங்கை சீரழிக்கக் கூடாது.

© வேதபிரகாஷ்

10-10-2023


[1]  தினமலர், ரயில் நிலையத்தில் மாணவர்கள் மோதல்: பயணியர் அலறியடித்து ஓட்டம், பதிவு செய்த நாள்: அக் 10,2023 04:50; https://m.dinamalar.com/detail.php?id=3453466

[2] https://m.dinamalar.com/detail.php?id=3453466

[3] இ.டிவி.பாரத், பெரம்பூர் ரயில் நிலையத்தில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ!, Published: Oct 9, 2023, 8:59 PM

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/clash-between-two-college-students-at-railway-station-in-chennai-public-panicked/tamil-nadu20231009205944631631687

[5] காமதேனு, ரயில் மீது சரமாரி கற்கள் வீச்சு… இருக்கையில் பதுங்கிய பயணிகள்: கல்லூரி மாணவர்கள் அட்டூழியம், Updated on : 09 Oct 2023, 5:53 pm.

[6] https://kamadenu.hindutamil.in/crime-corner/chennai-college-students-clash

[7] தினத்தந்தி, பெரம்பூர் லோகோ ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்; மின்சார ரெயில் மீது கல்வீச்சு, அக்டோபர் 10, 8:49 am

[8] https://www.dailythanthi.com/News/State/college-students-clash-at-perambur-loco-rail-station-stone-pelting-on-electric-train-1069693

[9] மாலைமலர், பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருக்கல்லூரி மாணவர்களிடையே மோதல், By மாலை மலர், 9 அக்டோபர் 2023 2:33 PM

[10] https://www.maalaimalar.com/news/state/tamil-news-2-college-students-conflict-in-perambur-railway-station-672138

[11] தினகரன், பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதல்: சரமாரியாக கற்களை வீசியதால் பயணிகள் அலறல், 01:55 am Oct 10, 2023

[12] https://m.dinakaran.com/article/News_Detail/1232348

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (1)

ஏப்ரல் 5, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுசார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (1)

உலகத் தமிழ் மாநாடு, உலகத் தமிழர் மாநாடு, முதலியன:தமிழ்-தமிழ் என்று பேசிக் கொண்டும், தமிழைக் காப்பேன் என்று அரற்றிக் கொண்டும், தமிழ் எங்கள் உயிர், தமிழின் உயிர், உயிரின் மூச்சு, மூச்சின் உச்சம் என்றெல்லாமும் கத்திக் கொண்டும் காசிருந்தால் மேடைப் போட்டு, புத்தகம் போட்டு, விழா நடத்தி, காலம் தள்ளிக் கொண்டே இருக்கலாம். திக-திமுக மற்ற திராவிட வகையெறாக்களில் இதைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளலாம், பாடமும் படிக்கலாம். ஏதாவது விமர்சனம் செய்தால், “தமிழின் எதிரி, தமிழர்களின் துரோகி, தமிழனத்தின் கோடாரிக் காம்பு,” போன்ற வசைகளும் எழும். இப்படியாக உலகத் தமிழ் மாநாடு நடத்துகிறேன் என்று பல சங்கங்கள், அமைப்புகள், இயக்கங்கள், கூட்டங்கள், குழுக்கள் கிளம்பியுள்ளனர்.

  • உலகத் தமிழ் மாநாடு,
  • உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,
  • அனைத்துலகத் தமிழ் மாநாடு,
  • உலகத் தமிழர் மாநாடு,
  • உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாடு,
  • இன்னும் பல இருக்கின்றன……

பிறகு திருக்குறளை வைத்து ஏகப்பட்ட கூட்டங்கள் கிளம்பி விட்டன. இவற்றில் 90% ஊரைச் சுற்றிப் பார்க்கும் கூட்டம் தான். மூன்று முதல் ஐந்து-ஆறு நாட்கள் இருக்க இடம், மூன்று வேளை சாப்பாடு கட்டாயம் கிடைக்கும் என்ற போர்வையில் தான் சுற்றுலா திட்டம் போடப் பட்டு, ஆட்கள் கூட்டம் சேருகிறது. இதில் பல நிலைகளில் பலர் வியாபாரமும் செய்து, பணம் சம்பாதிக்கின்றனர். விசா, விமான டிக்கெட் வாங்குவது, உள்ளூர் சுற்றிப் பார்ப்பது என்று பலவழிகளில் வியாபாரம் நடந்து வருகிறது. ஏனெனில் ஏஜென்டுகளுக்கு, ஏஜென்டாக செயல்படுகிறவர்களுக்கு எல்ல நிலைகளிலும் கமிஷன் கிடைக்கிறது. இப்படி மாநாடுகள் நடத்துகிறவர்கள் அல்லது சம்பந்தப் படுபவர்கள் சுற்றுலா ஏஜென்டாகவே மாறி வியாபாரத்தை ஆரம்பித்து விடுகிறார்.

மாநாடுகள் சுற்றுலாவுக்கு உபயோகப் படுத்தப் பட்டு, வியாபாரமாகின்றது: ஹோட்டலில் தங்கி, குளித்து சாப்பிட்டு ஊர் சுற்றக் கிளம்பி விடுவர். மதியம் உணவுக்கு வந்து விடுவர். தூரமாக இருப்பின், இரவு உணவுக்குக் கட்டாயம் வந்து விடுவர். அந்த ஏஜென்டே எல்லாம் செய்து விடுவார். ஆக, தமிழுக்காக, மாநாட்டில் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்பவர் 10 பேர் கூட் இருக்க மாட்டார்கள். இதில் என்ன வேடிக்கை அல்லது வருத்தப் படவேண்டிய விசயம் என்றால், அத்தகைய, முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்தால், அவற்றை ஒதுக்கி விடுவர். பிறகு, அவற்றை காப்பி அடிக்காமல் இருந்தால் சரி. ப்பொழுதெல்லாம், இதற்கும் “எதிக்ஸ்” என்றெல்லாம் பேசப் படுகிறது. ஆனால், அதிலும் அவர்கள் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் ஆயிரகணக்கில் மின்னஞ்சல்களில் பெறப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சேகரிப்பவர்கள் என்ன செய்கிறார்கள், செய்வார்கள் என்று தெரியவில்லை. ஒழுங்காக, ஒழுக்கமாக, ஆராய்ச்சி தர்மத்தைப் பின்பற்றுவார்களா, இல்லை, ஜாலியாக-தாராளமாக “கட்-அன்ட்-பேஸ்ட்” அல்லது “காபி-அன்ட்-பேஸ்ட்” செய்து பிழைப்பார்களா, வியாபாரம் செய்வர்களா என்பதெல்லாம் ஆராய வேண்டியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில், அவர்கள் தமிழ்-தமிழாராய்ச்சி முதலியவற்றில் என்ன-எதனை சாதித்தார்கள் என்று தெரியவில்லை. மென்பொருளின் சாதனை நடந்துள்ளது, இல்லையென்றா இப்படி தமிழில் தட்டச்சு செய்ய முடியாது. இப்பொழுது, அதற்கும் கூகுள் டிரான்ஸ்டேட் வந்து விட்டது. முரட்டுத் தனமான மொழிபெயர்ப்பு நடந்து கொண்டிருக்கிறது.

1966 முதல் 2023 வரை: உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், மொழி வளர்ச்சிக்காகவும் நடைபெறும் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை மாதம் 2023 நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் கவனிப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். உலகத் தமிழறிஞர்களை ஒன்று சேர்த்து அவர்களது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்தவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் திட்டமிட்டது. இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய 1966-ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 10 உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இருப்பினும், இவை அரசியல் சார்ந்து நடந்ததாகவே அறியப் படுகின்றது. மேலும், “மொழிப்பற்று” போர்வையில், உணர்ச்சிப் பூர்வமான உபன்யாசங்கள், பாஷணங்கள் மற்றும் கதாகாலக்ஷேபங்கள் புரிந்ததும் தெரிகிறது. கல்வி, படிப்பு மற்றும் போதனை போன்றவற்றிற்குப் பதிலாக சித்தாந்த உச்சங்களின் எல்லைகளில் அவை பலியானதும் புரிகின்றது.

மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த 2,500 தமிழறிஞர்கள், இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் ரூபாய் 25 கோடி செலவு: இந்நிலையில், 11ஆவது உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெறுகிறது. உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தால் 1966 முதல் நடத்தப்பட்டு வரும் உலகத் தமிழ் மாநாடு இதுவரை தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, தஞ்சாவூரில் இலங்கை, மலேசியா, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் மொரிசியசிலும் நடைபெற்றுள்ளது. இந்த உலகத் தமிழ் மாநாட்டில் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், மொழி வளர்ச்சிக்காகவும் நடைபெறும் மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன், தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 3 நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,500 தமிழறிஞர்கள், இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர். சுமார் ரூபாய் 25 கோடி செலவில் நடைபெறவிருந்தது.  இப்பொழுது மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு மாறியுள்ளது. சரி இவ்வாறு கோடிகளில் செலவு செய்து தமிழுக்கு என்னவாகப் போகிறது? இதுவரை 10 மாநாடுகள் நடந்திருப்பதால் 200 கோடிகளும் செலவாகி இருக்கலாம். ஆனால், கடந்த காலங்களில் தமிழ் புலவர்கள், பண்டிதர்கள் கவிஞர் போன்றோர் செய்ததில் 1% ஆவது தமிழுக்கு சேவை செய்திருப்பார்களா? அல்லது அவ்வாறு செய்தேன் என்பதற்கு எதையாவது காண்பிர்ப்பார்களா?

சார்ஜாவிலிருந்து மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வரை: இந்த உலகத்தமிழ் மாநாட்டில் சார்ஜாவில் 2023 ஜூலையில் நடைபெறுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது[1]. இணைதள குழுக்களில் அதிகமாகவே பேச-பகிரப் பட்டன. இதற்கான மாநாட்டு விவரங்கள் அடங்கிய அழைப்பிதழ், அமைப்புகள், அமர்வுகள், அதற்கான அறிக்கைகள் எல்லாம் தயாராகியது[2]. ஆய்வுக்கட்டுரைகள் எல்லாம் மின்னஞ்சல்கள் மூலம் ஏற்கப்பட்டன. சென்னையில் ரு நிறுவனம், இதே போல பலருக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்து, ஆய்வுக்கட்டுரை ஏற்க பணம் கட்ட வேண்டும் என்று கூட ஆரம்பித்தார். ஆனால், சார்ஜாவில் நடத்த முடியாமல் போனது அல்லது இயலவில்லை அல்லது காரணம் அறிவிக்க முடியவில்லை என்பது அமைதியாகி விட்டது[3]. தயார் செய்யப் பட்ட, அச்சிடப் பட்ட / வெளியான எல்லா ஆவணங்களும் வீணாகின[4]. இந்நிலையில், சில நிர்வாக காரணங்களினால் சார்ஜாவுக்கு பதிலாக மலேசியாவில் ஜூலை 21 – 23 வரை மலேயா பல்கலை வளாகத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது[5]. இங்கும் “அதிகார பூர்வமான அறிவிப்பு” என்பதனைக் கவனிக்கலாம். ஏற்கனவே மூன்று உலகத் தமிழ் மாநாடுகள் மலேசியாவில் நடைபெற்றுள்ளது[6]அப்படியென்றால் ஆன்காவது முறை ஏற்பார்களா என்ற கேள்வி எழுகிறது.

© வேதபிரகாஷ்

05-04-2023


[1] தினகரன், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில் 2023-ம் ஆண்டு ஜூலையில் நடைபெறும், June 7, 2022, 5:25 pm.

[2] https://www.dinakaran.com/11%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/

[3] வீரகேசரி, சார்ஜாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, Published By: VISHNU, 23 JUN, 2022 | 02:41 PM; https://www.virakesari.lk/article/130046

[4] https://www.virakesari.lk/article/130046

[5] தமிழ்.நியூஸ்.7, மலேசியாவில் 11-வது உலகத்தமிழ் மாநாடு; ஜூலை மாதம் நடைபெறுவதாக தகவல், by Yuthi, February 22, 2023 04.78

[6] https://news7tamil.live/11th-world-tamil-conference-in-malaysia-it-is-reported-to-be-held-in-july.html