Archive for the ‘ஆன்லைன்’ Category

பொறியியல் கல்லூரிகளின் தரம், போதிக்கும் திறன் மற்றும் கட்டுமானம் முதலியவற்றைப் பற்றி, ஏன் விவரங்கள் மறைக்கப் படுகின்றன?

திசெம்பர் 18, 2023

பொறியியல் கல்லூரிகளின் தரம், போதிக்கும் திறன் மற்றும் கட்டுமானம் முதலியவற்றைப் பற்றி, ஏன் விவரங்கள் மறைக்கப் படுகின்றன?

கல்லூரிகளில் முதலீடு செய்பவர்கள் ஏன் தரத்தைப் பற்றி கவலைப் படுவதில்லை?: பொறியியல் கல்லூரிகளின் தரம், போதிக்கும் திறன் மற்றும் கட்டுமானம் முதலியவற்றைப் பற்றி, கடந்த 25 வருடங்களாக, நிறைய விசயங்கள் அலசப் பட்டு, எடுத்துக் காட்டியாகி விட்டது. பணத்தை கோடிகளில் போட்டு, கோடிகளில் அள்ள வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், நிறைய கல்லூரிகள் உருவாக்கப் படுகின்றன. அரசியல்வாதிகள் தமது பணத்தை முதலீடு செய்வது போல இத்தகைய கல்லூரிகளை உருவாக்கி வருகிறார்கள். ஆனால், தேவையான கட்டுமானங்கள், சோதனைக் கூடங்கள், ஒவ்வொரு பாடத்தையும் போதிக்க தகுதியான ஞானம் கொண்ட ஆசிரியர்கள் என்றெல்லாம் இல்லாமலேயே இவர்கள் கல்லூரிகளை ஆரம்பிக்கிறார்கள். இதனால், கல்லூரிகளில் வகுப்பறைகள் இல்லை, ஆசிரியர்கள் இல்லை, சோதனைக் கூடங்கள் இல்லை என்று தரமற்ற முறையில்  மாணவ-மாணவியரை ஏமாற்றி வருகிறார்கள்.

இதில் எந்த மாடல் பின்பற்றப் படுகிறது?: அட்மிசன் நேரத்தில் டொனேஷன் வாங்கி. கோடிகளை வசூலித்து, அதன் மூலம் கொஞ்சம்-கொஞ்சமாகக் கட்டலாம் போன்ற திட்டங்களுடனும் ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் –ஜேப்பியார், பச்சமுத்து [பாரிவேந்தர்], ஏ.சி.சண்முகம் இதர மைனாரிடி மாடல்களை பின்பற்ற முயல்கிறார்கள். அவர்கள் எல்லாம் மாட்டிக் கொண்டாலும், ஒரு நிலையில் தரத்தை உயர்த்திக் கொண்டார்கள், நிலைத்து நிற்கிறார்கள். ஆனால், வெறுங்கையால் முழம் போடலாம் என்ற எண்ணங்களுடம்-திட்டங்களுடன் செயல்படுகிறவர்கள், எந்த தரமுமில்லாமல், மாணவ-மாணவியரை ஏமாற்றி வருகிறார்கள். பல குடும்பங்களை நாசமாக்கி வருகிறார்கள். ஏனெனில், அவர்களது பெற்றோர் வீட்டை, நிலத்தை, சொத்தை விற்று தமது குழந்தைகளை படிக்க ஆசைப் பட்டு லஞ்சங்களில் பணத்தைக் கொடுக்கிறார்கள். ஆனால், இந்த முதலைகள் அப்படியே முழுங்கி ஏப்பமிட்டு வருகின்றன..

44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை: தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும், 35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது என்றும் வெளியாகி இருக்கும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[1], என்று ஊடகத்தினர் குறிப்பிட்டாலும், கடந்த 20-30 ஆண்டுகளாக நடந்து வரும் செயல்பாடுகளிலிருந்து, அவற்றிற்கு உண்மை நிலை தெரிந்து தான் இருக்கும். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளார்[2], என்று குறிப்பிட்டாலும், அவை வெளியிடப் படவில்ல. ‘தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான  கவுன்சிலிங்கில்  44 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை[3].  35 கல்லூரியில் ஒற்றை இலக்கங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்க்க நடந்துள்ளது[4]. ஆக மொத்தம் 75 கல்லூரிகளில் நிலைமை இப்படியுள்ளது. ஒரு மாணவர் கூட சேராத கல்லூரிகள் மற்றும் குறைவாக மாணவர்கள் உள்ள கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கங்களை பெற்றிருக்கிறோம்[5]. ஏற்கெனவே கடந்த ஆண்டுகளிலும் இதே நிலைதான் இருந்து வந்தது. பிறகு, அதே கல்லூரிகள் மறுபடியும் கவுன்சிலிங்கிற்கு எப்படி அனுமட்தி கொடுக்கப் பட்டது என்பதையும் கவனிக்கலாம். தற்போது நேரில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது[6]. இதுவரை நடக்கவில்லையா, பார்க்காமலேயே அனுமதி கொடுக்கப் பட்டதா போன்ற கேள்விகளும் எழுகின்றன.

2022 நிலை தான் 2023லும் தொடர்கிறது: மேலும் எங்களுக்கு திருப்தி அளிக்காவிட்டால் வரும் கல்வி ஆண்டில் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முற்றிலுமாக நிறுத்தப்படும்’ என்று வேல்ராஜ் கூறியுள்ளார்[7]. அதாவது இந்த கல்வியாண்டு 2023-24க்கு அனுமதி உண்டு என்றாகிறது. பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருவதாக காரணம் கூறப்படுகிறது[8].  இதுவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியதாகிறது. கல்லூரிகளில் வசதி இல்லை என்பதாலா அல்லது, படித்தும் வேலை கிடைக்கவில்லை, சரியான சம்பளம் இல்லை போன்ற காரணங்களால், அவ்வாறு நடைபெறுகிறதா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது. இன்னொரு பக்கம் கல்லூரி என்ற பெயரில் எந்த விதமான வசதியும் இல்லாமல் வெறுமனே கட்டிடங்களையும் வைத்திருக்கும்  கல்லூரிகளில் தான் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது[9]. பிறகு, அத்தகைய “கல்லூரிகளுக்கு” எப்படி அனுமதி கொடுத்து, அங்கீகாரம் கொடுக்கப் பட்டது என்பதையும் கவனிக்கலாம். ஆக, அந்த உண்மையும் தெரிந்து தான் உள்ளது[10].

75,000, 65,000 என்று சீட்டுகள் எப்படி காலியாக இருக்க முடியும்?: பொறியியல் படிப்புகள் சேர்க்கைக்கு பொதுப் பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 28 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெற்றது. இதையடுத்து துணை கலந்தாய்வு மூலம் காலியான இடங்கள் நிரப்பப்பட்டன. ஒட்டு மொத்தமாக 440 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,60,780 இடங்களில் 54,000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன[11]. மூன்று சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு, 95,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைத்தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 84,812ஆக இருந்தது[12]. ஆக 2022ல் 75,968 மற்றும் 2023ல் 65,780 இடங்கள் காலியாக இருக்கின்றன என்று தெரிகிறது. பிறகு, இது யார் குற்றம் என்று சொல்ல வேண்டியுளளது. படிக்க ஆசையுள்ள மாணவ-மாணவியருக்கு மார்க் உள்ள போதும், சீட் கிடைக்கவில்லை என்ற என்ன காரணம் என்று சொல்லியே ஆகவேண்டும்.

அந்த 79 கல்லூரிகள் எவை, விவரங்கள் என்ன?[13]: உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும்[14], 35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன[15]. ஏன் பெயர்கள்-விவரங்கள் குற்ப்பிடப் படவில்லை?[16]

  1. அந்த 44 பொறியியல் கல்லூரிகள் எவை?
  2. அந்த  35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது என்றால் அவை எவை?
  3. அவற்றின் பெயர்கள் ஏன் குறிப்பிடப் படவில்லை.
  4. லட்சங்களில் பீஸ் / கட்டணம் என்றெல்லாம் செலவழித்துப் படிக்க வைக்கும் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப் பட வேண்டிய அவசியம் உள்ளது.
  5. கல்வியில் நிச்சயம் மோசடிகள் இருக்கக் கூடாது.
  6. கல்வியில் மோசடி, ஊழல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

© வேதபிரகாஷ்

18-12-2023


[1] காமதேனு, 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லைதுணைவேந்தர் சொன்ன அதிர்ச்சி தகவல்!, Updated on: 17 Dec 2023, 11:15 am

[2] https://kamadenu.hindutamil.in/education/not-a-single-student-got-admission-in-44-engineering-colleges

[3] தினத்தந்தி, தமிழகத்தில் 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லைஅண்ணா பல்கலை. துணைவேந்தர் பேட்டி, டிசம்பர் 16, 5:45 pm

[4] https://www.dailythanthi.com/News/State/out-of-44-engineering-colleges-in-tamil-nadu-not-a-single-student-got-admission-anna-university-vice-chancellor-interview-1086377

[5] தினகரன், தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை: அண்ணா பல்கலை. துணைவேந்தர் பேட்டி, December 16, 2023, 6:28 pm..

[6] https://www.dinakaran.com/tamilnadu_college__engineering_student_affairs_anna_university/ – google_vignette

[7] தமிழ்.வெப்.துனியா, 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.. தமிழகத்திற்கு வந்த சோதனை..!, Written By Mahendran Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (17:17 IST).

[8] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/no-students-in-44-engineering-college-at-tamilnadu-123121600068_1.html

[9] செய்திபுனல், 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லைவெளியான பகீர் தகவல்!,

[10] https://www.seithipunal.com/tamilnadu/single-students-not-joined-in-44-colleges

[11] தீக்கதிர், 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை, நமது நிருபர் டிசம்பர் 18, 2023

[12]https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/not-a-single-student-got-admission-in-44-engineering-colleges

[13] நியூஸ்.தமிழ், “44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை” – அண்ணா பல்கலைகழக  துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் பேட்டி..!, by Web EditorDecember 17, 2023.

[14] https://news7tamil.live/in-44-engineering-colleges-not-a-single-student-joined-anna-university-vice-chancellor-r-velraj-interview.html – google_vignette

[15] பத்திரிக்கை.காம், ஒரு மாணவர் கூட சேராத 44 தமிழக பொறியியல் கல்லூரிகள், DEC 16, 2023.

[16] https://patrikai.com/in-44-tn-egg-colleges-not-even-a-single-student-admitted/

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (2)

ஏப்ரல் 5, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுசார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (2)

சிங்கப்பூருக்கு மாறியது ஏன்?: இந்த உலகத் தமிழ் மாநாடு நடைபெறவுள்ளதை 2022 இல் நியூஸ் 7 தமிழ் முதலாவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது[1] என்று பிப்ரவரி 2023ல் செய்தி வெளியிட்டாலும், இச்செய்தி ஏற்கெனவே ஆறு மாதங்களுக்கு முன்னரே தினமலரில் வெளிவந்து விட்டது[2]. அதாவது, இதைப் பற்றி அத்தனை பரபாரப்பு, தாக்கம் ஏற்படுத்த வேண்டும் போன்ற முயற்சிகளும் நடந்து கொன்டிருக்கின்றன. சென்னை-உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு, அடுத்த ஆண்டு ஜூன் 16 முதல் 18 வரை, சிங்கப்பூரில் நடக்க உள்ளது[3]. மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது[4]. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டான்ஶ்ரீ மாரிமுத்து சென்னையில் நேரில் சந்தித்து மலேசியாவில் நடைபெற இருக்கும் 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்தித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொண்டார்[5]. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் ஜூலை மாதம் மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது[6]. ஆக மலேசியவில் நடத்தப் படுவது உறுதியானது என்று தெரிகிறது. பிறகு, மறுபடியும் அது சிங்கப்பூருக்கு ஏன் மாறியது என்பதைக் கவனிக்க வேண்டும்.

அரசியலா, ஆதரவா, சித்தாந்தமாநடப்பது என்ன?: அரசியல் அல்லது அரசு நிறுவனங்களின் ஆதரவில் நடைபெற்ற கடந்த சில மாநாடுகளைப் போலன்றி, இந்த மாநாட்டை ‘மில்லேனியல் தமிழ்’ அமைப்பும் அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றமுமே நடத்தும் என்று திரு பொன்னவைக்கோ கூறினார். இம்மாநாட்டின் ஆய்வுக்குழு ஆலோசகராகவும் ஏற்பாட்டுக்குழு உதவியாளராகவும் உள்ள முனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மி, ஆய்வு நோக்கில் அமைந்த கட்டுரைகளே தேர்வுசெய்யப்படுகின்றன என்றும் இளையர்களுக்கான அங்கங்களும் இம்மாநாட்டில் இடம்பெறும் என்றும் சொன்னார்.இந்நிலையில், இத்தகைய ஆய்வு மாநாட்டைத் தமிழ் அறிஞர்கள் ஒன்றிணைந்து ஒத்த நோக்குடன் ஒரே இடத்தில் நடத்துவதே சிறப்பு என்று சிங்கப்பூர் பெருமக்கள் கருதுகிறார்கள்.சிங்கப்பூரில் அரசாங்கம், தமிழ்ப் பட்டக்கல்வி பயிற்றுவிக்கும் இரண்டு பல்கலைக்கழகங்கள், கிட்டத்தட்ட 40 தமிழ் அமைப்புகள், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஆகியவற்றின் துணையும் ஆதரவும் இல்லாமல் சிங்கப்பூரில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த முடியாது[7]. நாளடைவில் ஒரு திருவிழாவாக மாறி, அதன் உச்சமாக தற்போது இரு பிரிவுகளாகப் பிரிந்து போட்டி போடும் நிலைக்கு வந்துவிட்டது தமிழ்மொழியின் சாபக்கேடு என்றுதான் கூற வேண்டும் என்று சிங்கப்பூரின் கல்வியாளர்கள், தமிழ் செயல்பாட்டாளர்கள் பலரும் கவலை தெரிவித்தனர்[8]. தமிழ்… இந்த மூன்றெழுத்து இல்லாமல் நாம் இல்லை. அந்த மூன்று எழுத்து இல்லாமல் தமிழக அரசியலே இல்லை. அந்த அளவுக்கு பாமரனில் இருந்து பார்லிமென்ட் வரை மொழி உணர்வின் தாக்கம் ஏதோ ஒருவிதத்தில் இன்றும் இருந்து கொண்டுதான் வருகிறது[9]. அதன் தாக்கத்தின் எதிரொலிப்பாகத்தான் 300க்கும் மேற்பட்ட பாஜக எம்பிக்களை எதிர்த்து “தமிழ் வாழ்க” என்று நாடாளுமன்றத்தில் நம்மால் குரல் கொடுக்க முடிந்திருக்கிறது[10]

தமிழறிஞர்களுக்குள் சச்சரவு: நடக்குமா உலகத் தமிழ் மாநாடு?: தமிழறிஞர்களுக்குள் புதுப்புது சச்சரவுகள் கிளம்புவதால், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது[11]. அமெரிக்காவின் சிகாகோ நகரில், 2019 ஜன., 29 முதல் பிப்., 1 வரை, பத்தாவது உலகத்தமிழ் மாநாடு, டத்தோ மாரிமுத்து தலைமையில் நடந்தது. மாநாட்டின் நிறைவு நாளில், அடுத்த மாநாட்டை, 2023 ஜூலையில், ஐக்கிய அமீரகத்தின் தலைநகர் சார்ஜாவில், பொன்ன வைக்கோ தலைமையில் நடத்துவதாக அறிவித்தனர். இதையடுத்து, பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சியாளர்கள் தமிழ் மொழி, இலக்கணம், கலை, பண்பாடு, கணினி உள்ளிட்ட தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சார்ஜாவுக்குப் பதில், மலேஷியாவில் நடத்தப் போவதாக, டத்தோ மாரிமுத்து உள்ளிட்டோர் அறிவித்து உள்ளனர். இதை ஏற்காத பொன்னவைக்கோ தலைமையிலான அணியினர், சிங்கப்பூரில் நடத்தப் போவதாக அறிவித்து கட்டுரைகள் பெறுகின்றனர். மாநாடு நடத்துவோர், இரண்டு குழுக்களாக இருப்பது தெரியாத ஆய்வாளர்கள், இரண்டு குழுவிடமும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்டுரைகளை அனுப்பி உள்ளனர்[12]. இதுகுறித்து, தமிழறிஞர்கள் கூறியதாவது: பல நாடுகளில் உள்ள தமிழர்களை உணர்வால் இணைத்து, உயர்த்துவதற்காகத் தான், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், தமிழறிஞர்களுக்குள் ஒற்றுமை இல்லை. கட்சி சார்ந்தும், ஆட்சி சார்ந்தும் முடிவெடுக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, உலகத் தமிழ் மாநாடு நடத்த திட்டமிட்டதை, அப்போதைய உலகத் தமிழாராய்ச்சி மன்ற பொறுப்பாளர்கள் ஏற்கவில்லை. இதனால் தான், அவர் ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாடு’ என, கோவையில் நடத்தினார்.

ஆய்வுக் கட்டுரைகள் பெறுவதில், பரிசீலினை செய்வதில், ஏற்பதில் குளறுபடிகள்: சென்ற ஆண்டிலிருந்து சார்ஜா, மலேசியா என்று அறிவித்துக் கொண்டு, பல்லாயிரக் கணக்கில் ஆய்வுக்கட்டுரைகள் பெறப் பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அறிவித்துப் பெற்றதால், அவை பல இடங்களில் பதிவாகி உள்ளன.  இருப்பினும் ஆய்வுக் கட்டுரைகள் பெறுவதில், பரிசீலினை செய்வதில், ஏற்பதில், பலநிலைகளில் குளறுபடிகள் நடந்துள்ளன. முதலில் சிறந்த கட்டுரையாளர்களுக்கு சிங்கப்பூர் சென்றுவர இலவசம் என்றெல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தது. இதனால், பல்கலைக்கழகங்களிருந்து ஆராய்ச்சியாளர்கள் மிதத் தரமான ஆய்ழுக்கட்டுரைகளை அனுப்பியுள்ளனர். முதலில் ஏற்றுக் கொள்ளப் பட்டு, இப்பொழுது நிராகரிக்கப் பட்டுள்ளது. அதாவது “பார்வையாளர்களாக” வந்து கொள்ளல்லாம் என்று நிராகரிப்பு மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால், அத்தகைய மிதத் தரமான ஆய்ழுக்கட்டுரைகள் மற்றவர்கள் உபயோகப் படுத்துவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இப்பொழுது மாநாடு நடத்துவதில் இம்மோசடி பெருமளவில் நடக்கின்றது, மாணவி-மாணவியர்களுக்கு அக்கட்டுரைகள் விற்கப் படுகின்றன. இதனால், “பிளேஜியாரிஸம்” என்ற ஞானத் திருட்டு, விசயக் கொள்ளை, படிப்புத் திருட்டு அதிகமாகி வருகிறது. ஆகவே, இத்தகையோர் அவ்வாறான மோசடிகள் நடக்காது என்று வாக்குறுதி கொடுக்கவேண்டும்.

நிதிபெறுதலும், செலவழித்தலும், தமிழ் வளர்த்தலும்: இதுபோல், பல முரண்பாடுகள் நீடித்த நிலையில், தற்போது, பல கூறுகளாக அறிஞர்கள் பிரிந்துள்ளது வேதனை அளிக்கிறது. இந்த மாநாட்டை, மத்திய அரசின் கீழ் செயல்படும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ் இருக்கைகள் அமைந்துள்ள உலகப் பல்கலைகள், தமிழ் பல்கலை உள்ளிட்ட, தமிழக அரசு நிறுவனங்கள் இணைந்து நடத்த வேண்டும். அப்போது தான், அயல்நாடுகளில் மாநாடு நடத்துவதற்கான அனுமதியும், நிதியும் கிடைக்கும். மேலும், தமிழ் இருக்கைகள், தமிழ் பல்கலை, செம்மொழி நிறுவனத்தில் பல ஆய்வாளர்கள் உள்ளதால், உலகத் தமிழர்களை ஒருங்கிணைப்பதும் எளிதாக இருக்கும். இந்தாண்டு, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸாமில் உள்ள கவுஹாத்தி பல்கலையில் மாநாட்டை நடத்தலாம். இதனால், அங்குள்ள தமிழ்த் துறையும் வளரும். இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகள் இணைந்து, தமிழறிஞர்களுடன் பேசி, புதிய அமைப்பை ஏற்படுத்தி, மாநாட்டுக்கான பணிகளைத் துவக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

© வேதபிரகாஷ்

05-04-2023


[1] தினமலர், உலக தமிழாராய்ச்சி மாநாடு 2023ல் சிங்கப்பூரில் நடக்கிறது, மாற்றம் செய்த நாள்: செப் 25,2022 03:01; https://m.dinamalar.com/detail.php?id=3130639

[2] https://m.dinamalar.com/detail.php?id=3130639

[3] தினபூமி, மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு சனிக்கிழமை, 4 மார்ச் 2023

[4] https://www.thinaboomi.com/2023/03/04/194601.html

[5] கல்கி, உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெற உள்ளது!, கல்கி டெஸ்க், Published on : 22 Feb, 2023, 7:22 pm

[6] https://kalkionline.com/news/world/the-world-tamil-conference-will-be-held-in-malaysia-in-july

[7] தமிழ்.முரசு, உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: சிறந்த கல்வியாளர்கள் சேர்ந்து நடத்துவதே சிறப்பு, லதா 31 Oct 2022 13:13 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Oct 2022 15:42

[8] https://www.tamilmurasu.com.sg/singapore/story20221031-98833

[9] நக்கீரன், உலகத் தமிழ் மாநாடுகளும்அது கடந்து வந்த பாதையும்..., சுதாகர், Published on 05/07/2019 (12:12) | Edited on 05/07/2019 (12:43).

[10] https://www.nakkheeran.in/special-articles/special-article/10th-world-tamil-conference

[11] தினமலர், தமிழறிஞர்களுக்குள் சச்சரவு: நடக்குமா உலகத் தமிழ் மாநாடு?, – நமது நிருபர் –பதிவு செய்த நாள்: ஏப் 05,2023 06:57; https://m.dinamalar.com/detail.php?id=3285547

[12] https://m.dinamalar.com/detail.php?id=3285547

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (1)

ஏப்ரல் 5, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுசார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (1)

உலகத் தமிழ் மாநாடு, உலகத் தமிழர் மாநாடு, முதலியன:தமிழ்-தமிழ் என்று பேசிக் கொண்டும், தமிழைக் காப்பேன் என்று அரற்றிக் கொண்டும், தமிழ் எங்கள் உயிர், தமிழின் உயிர், உயிரின் மூச்சு, மூச்சின் உச்சம் என்றெல்லாமும் கத்திக் கொண்டும் காசிருந்தால் மேடைப் போட்டு, புத்தகம் போட்டு, விழா நடத்தி, காலம் தள்ளிக் கொண்டே இருக்கலாம். திக-திமுக மற்ற திராவிட வகையெறாக்களில் இதைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளலாம், பாடமும் படிக்கலாம். ஏதாவது விமர்சனம் செய்தால், “தமிழின் எதிரி, தமிழர்களின் துரோகி, தமிழனத்தின் கோடாரிக் காம்பு,” போன்ற வசைகளும் எழும். இப்படியாக உலகத் தமிழ் மாநாடு நடத்துகிறேன் என்று பல சங்கங்கள், அமைப்புகள், இயக்கங்கள், கூட்டங்கள், குழுக்கள் கிளம்பியுள்ளனர்.

  • உலகத் தமிழ் மாநாடு,
  • உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,
  • அனைத்துலகத் தமிழ் மாநாடு,
  • உலகத் தமிழர் மாநாடு,
  • உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாடு,
  • இன்னும் பல இருக்கின்றன……

பிறகு திருக்குறளை வைத்து ஏகப்பட்ட கூட்டங்கள் கிளம்பி விட்டன. இவற்றில் 90% ஊரைச் சுற்றிப் பார்க்கும் கூட்டம் தான். மூன்று முதல் ஐந்து-ஆறு நாட்கள் இருக்க இடம், மூன்று வேளை சாப்பாடு கட்டாயம் கிடைக்கும் என்ற போர்வையில் தான் சுற்றுலா திட்டம் போடப் பட்டு, ஆட்கள் கூட்டம் சேருகிறது. இதில் பல நிலைகளில் பலர் வியாபாரமும் செய்து, பணம் சம்பாதிக்கின்றனர். விசா, விமான டிக்கெட் வாங்குவது, உள்ளூர் சுற்றிப் பார்ப்பது என்று பலவழிகளில் வியாபாரம் நடந்து வருகிறது. ஏனெனில் ஏஜென்டுகளுக்கு, ஏஜென்டாக செயல்படுகிறவர்களுக்கு எல்ல நிலைகளிலும் கமிஷன் கிடைக்கிறது. இப்படி மாநாடுகள் நடத்துகிறவர்கள் அல்லது சம்பந்தப் படுபவர்கள் சுற்றுலா ஏஜென்டாகவே மாறி வியாபாரத்தை ஆரம்பித்து விடுகிறார்.

மாநாடுகள் சுற்றுலாவுக்கு உபயோகப் படுத்தப் பட்டு, வியாபாரமாகின்றது: ஹோட்டலில் தங்கி, குளித்து சாப்பிட்டு ஊர் சுற்றக் கிளம்பி விடுவர். மதியம் உணவுக்கு வந்து விடுவர். தூரமாக இருப்பின், இரவு உணவுக்குக் கட்டாயம் வந்து விடுவர். அந்த ஏஜென்டே எல்லாம் செய்து விடுவார். ஆக, தமிழுக்காக, மாநாட்டில் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்பவர் 10 பேர் கூட் இருக்க மாட்டார்கள். இதில் என்ன வேடிக்கை அல்லது வருத்தப் படவேண்டிய விசயம் என்றால், அத்தகைய, முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்தால், அவற்றை ஒதுக்கி விடுவர். பிறகு, அவற்றை காப்பி அடிக்காமல் இருந்தால் சரி. ப்பொழுதெல்லாம், இதற்கும் “எதிக்ஸ்” என்றெல்லாம் பேசப் படுகிறது. ஆனால், அதிலும் அவர்கள் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் ஆயிரகணக்கில் மின்னஞ்சல்களில் பெறப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சேகரிப்பவர்கள் என்ன செய்கிறார்கள், செய்வார்கள் என்று தெரியவில்லை. ஒழுங்காக, ஒழுக்கமாக, ஆராய்ச்சி தர்மத்தைப் பின்பற்றுவார்களா, இல்லை, ஜாலியாக-தாராளமாக “கட்-அன்ட்-பேஸ்ட்” அல்லது “காபி-அன்ட்-பேஸ்ட்” செய்து பிழைப்பார்களா, வியாபாரம் செய்வர்களா என்பதெல்லாம் ஆராய வேண்டியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில், அவர்கள் தமிழ்-தமிழாராய்ச்சி முதலியவற்றில் என்ன-எதனை சாதித்தார்கள் என்று தெரியவில்லை. மென்பொருளின் சாதனை நடந்துள்ளது, இல்லையென்றா இப்படி தமிழில் தட்டச்சு செய்ய முடியாது. இப்பொழுது, அதற்கும் கூகுள் டிரான்ஸ்டேட் வந்து விட்டது. முரட்டுத் தனமான மொழிபெயர்ப்பு நடந்து கொண்டிருக்கிறது.

1966 முதல் 2023 வரை: உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், மொழி வளர்ச்சிக்காகவும் நடைபெறும் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை மாதம் 2023 நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் கவனிப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். உலகத் தமிழறிஞர்களை ஒன்று சேர்த்து அவர்களது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்தவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் திட்டமிட்டது. இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய 1966-ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 10 உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இருப்பினும், இவை அரசியல் சார்ந்து நடந்ததாகவே அறியப் படுகின்றது. மேலும், “மொழிப்பற்று” போர்வையில், உணர்ச்சிப் பூர்வமான உபன்யாசங்கள், பாஷணங்கள் மற்றும் கதாகாலக்ஷேபங்கள் புரிந்ததும் தெரிகிறது. கல்வி, படிப்பு மற்றும் போதனை போன்றவற்றிற்குப் பதிலாக சித்தாந்த உச்சங்களின் எல்லைகளில் அவை பலியானதும் புரிகின்றது.

மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த 2,500 தமிழறிஞர்கள், இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் ரூபாய் 25 கோடி செலவு: இந்நிலையில், 11ஆவது உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெறுகிறது. உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தால் 1966 முதல் நடத்தப்பட்டு வரும் உலகத் தமிழ் மாநாடு இதுவரை தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, தஞ்சாவூரில் இலங்கை, மலேசியா, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் மொரிசியசிலும் நடைபெற்றுள்ளது. இந்த உலகத் தமிழ் மாநாட்டில் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், மொழி வளர்ச்சிக்காகவும் நடைபெறும் மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன், தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 3 நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,500 தமிழறிஞர்கள், இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர். சுமார் ரூபாய் 25 கோடி செலவில் நடைபெறவிருந்தது.  இப்பொழுது மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு மாறியுள்ளது. சரி இவ்வாறு கோடிகளில் செலவு செய்து தமிழுக்கு என்னவாகப் போகிறது? இதுவரை 10 மாநாடுகள் நடந்திருப்பதால் 200 கோடிகளும் செலவாகி இருக்கலாம். ஆனால், கடந்த காலங்களில் தமிழ் புலவர்கள், பண்டிதர்கள் கவிஞர் போன்றோர் செய்ததில் 1% ஆவது தமிழுக்கு சேவை செய்திருப்பார்களா? அல்லது அவ்வாறு செய்தேன் என்பதற்கு எதையாவது காண்பிர்ப்பார்களா?

சார்ஜாவிலிருந்து மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வரை: இந்த உலகத்தமிழ் மாநாட்டில் சார்ஜாவில் 2023 ஜூலையில் நடைபெறுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது[1]. இணைதள குழுக்களில் அதிகமாகவே பேச-பகிரப் பட்டன. இதற்கான மாநாட்டு விவரங்கள் அடங்கிய அழைப்பிதழ், அமைப்புகள், அமர்வுகள், அதற்கான அறிக்கைகள் எல்லாம் தயாராகியது[2]. ஆய்வுக்கட்டுரைகள் எல்லாம் மின்னஞ்சல்கள் மூலம் ஏற்கப்பட்டன. சென்னையில் ரு நிறுவனம், இதே போல பலருக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்து, ஆய்வுக்கட்டுரை ஏற்க பணம் கட்ட வேண்டும் என்று கூட ஆரம்பித்தார். ஆனால், சார்ஜாவில் நடத்த முடியாமல் போனது அல்லது இயலவில்லை அல்லது காரணம் அறிவிக்க முடியவில்லை என்பது அமைதியாகி விட்டது[3]. தயார் செய்யப் பட்ட, அச்சிடப் பட்ட / வெளியான எல்லா ஆவணங்களும் வீணாகின[4]. இந்நிலையில், சில நிர்வாக காரணங்களினால் சார்ஜாவுக்கு பதிலாக மலேசியாவில் ஜூலை 21 – 23 வரை மலேயா பல்கலை வளாகத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது[5]. இங்கும் “அதிகார பூர்வமான அறிவிப்பு” என்பதனைக் கவனிக்கலாம். ஏற்கனவே மூன்று உலகத் தமிழ் மாநாடுகள் மலேசியாவில் நடைபெற்றுள்ளது[6]அப்படியென்றால் ஆன்காவது முறை ஏற்பார்களா என்ற கேள்வி எழுகிறது.

© வேதபிரகாஷ்

05-04-2023


[1] தினகரன், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில் 2023-ம் ஆண்டு ஜூலையில் நடைபெறும், June 7, 2022, 5:25 pm.

[2] https://www.dinakaran.com/11%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/

[3] வீரகேசரி, சார்ஜாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, Published By: VISHNU, 23 JUN, 2022 | 02:41 PM; https://www.virakesari.lk/article/130046

[4] https://www.virakesari.lk/article/130046

[5] தமிழ்.நியூஸ்.7, மலேசியாவில் 11-வது உலகத்தமிழ் மாநாடு; ஜூலை மாதம் நடைபெறுவதாக தகவல், by Yuthi, February 22, 2023 04.78

[6] https://news7tamil.live/11th-world-tamil-conference-in-malaysia-it-is-reported-to-be-held-in-july.html

தமிழக பல்கலைக் கழகங்களில் கல்வி சீரழியும் நிலை – தேர்வுகளில் குளறுபடி, வினாதாள்களில் குழப்பம் மற்றும் திருத்துவதில் முறையற்றத் தன்மை! (2)

பிப்ரவரி 23, 2023

தமிழக பல்கலைக் கழகங்களில் கல்வி சீரழியும் நிலைதேர்வுகளில் குளறுபடி, வினாதாள்களில் குழப்பம் மற்றும் திருத்துவதில் முறையற்றத் தன்மை! (2)

2022- நவம்பர்சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள்: சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 131 இணைப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. சென்னை பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வில் குளறுபடி ஏற்பட்டதால் 18-11-2022 அன்று நடைபெறவிருந்த தமிழ் தேர்வு ரத்து செய்யப்பட்டது[1]. சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கலை அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடந்து வந்தன[2]. 18-11-2022 அன்று 2ம் ஆண்டு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு, மூன்றாவது செமஸ்டர் தமிழ் தேர்வு நடைபெற இருந்தது. ஆனால், மாணவர்களுக்கு 4வது செமஸ்டருக்கான கடந்த ஆண்டு வினாத்தாள் வழங்கப்பட்டது. அதில் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் தவறுதலாகவும், அது வேறு பருவப் பாடங்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனால் தோ்வுக்கு தயார் நிலையில் வந்திருந்த மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். தொடர்ந்து மாணவர்கள் தேர்வறைகளில் இருந்து வெளியேறிய நிலையில், வினாத்தாள் மாறியது குறித்து விசாரணை நடத்த தொழில்நுட்பக் கல்வி ஆணையர் லட்சுமி பிரியா உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைத்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதிதாக தேர்வு நடத்தப்படும் என பல்கலைக் கழகம் தெரிவித்து உள்ளது[3]. மேலும் வினாத்தாள் மாறியது குறித்த விசாரணை அறிக்கையை 2 மாதங்களுக்குள் அளிக்கவும் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது[4]

ஏதோ காரணங்களுக்காக தேர்வு எழுத முடியாதவர்களை தனியாக எழுதவைக்கும் முறை: இல மாணவர்கள் உடல் நலம் சரியில்லை, குடும்பத்தில் இறப்பு, நல்லது-கெட்டது போன்ற நிலை என்று குறிப்பிட்ட தேதிகளில் தேர்வு  எழுத முடியாத நிலை ஏற்ப்டுகிறது. தேர்வுகளை எப்பொழுது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம், குறிப்பாக எல்லோருக்கும் நடத்தப் படும் பொழுது, பங்கு கொள்ளாமல் இருந்தால், தனியாக வரவழைக்கப் பட்டு, ஒரு நாளில் அவ்வாறு வராதவர்களுக்கு தேர்வு நடத்தப் படுவது சகஜமாகி விட்டது. அந்நிலையில் பொதுவாக அதே வினாதாள் கொடுக்கப் பட்டு எழுதுவிக்கப் படுகிறது. முன்பெல்லாம், அடுத்த பரீட்சை வரும் பொழுது, மற்றவர்களுடன் உட்கார வைக்கப் பட்டு, அதே னினாதாள் கொடுக்கப் பட்ட், முறையான கண்காணிப்புடன் எழுத வைக்கப் பட்ட நிலை இருந்தது. இப்பொழுது, இவ்வாறு தனியாக  வரவழைக்கப் பட்டு, எழுதுவிக்கப்படும் பொழுது, முறையற்ற நிகழ்வுகள் ஏற்படலாம்.  கண்காணிப்பு இல்லை என்றால், எளிதாக காப்பி அடித்து அல்லது செல்போன் உதவியுடன் எழுதலாம். இருக்கும் ஒரே கண்காணிப்பாளரே உதவலாம். அவர்கள் இருவர் மட்டும் இருக்கும் பட்சத்தில் என்ன நடந்தது என்பது அவர்கள் இருவருக்கும் தான் தெரியும்.

அம்முறையே ஊழலுக்கு வழிவகுத்து பணம் சம்பாதிக்க உபயோகப் படுத்தப் படுவது: ஆக, இத்தகைய முறையை வாடிக்கையாக மாற்றிக் கொண்டு, இதில் ஊழல் ரீதியில் பணம், ஆதாயம், போன்ற பேரங்களுடன் தேர்வுகள் நடத்தப் படலாம். வேண்டிய அளவுக்கு மதிப்பெண்களும் போடலாம். அம்முறையே ஊழலுக்கு வழிவகுத்து பணம் சம்பாதிக்க உபயோகப் படுத்தப் படுகிறது. அவ்வாறு நடக்க ஆரம்பித்து விட்டது என்பது தான் உண்மை. முன்னர், மந்திரி, எம்.பி, எம்.எல்.ஏ, போன்ற விஐபிக்களுக்கு பின்பற்றப் பட்டு வந்த நிலை இப்பொழுது, இவ்வாறான “தேர்ந்தெடுக்கப் பட்ட” அல்ல செல்லப் பிள்ளைகளுக்கு உபயோகப் படுத்தப் படுகிறது. இம்முறையைப் பின்பற்றலாம் என்று தெரிந்த மாணவர்கள் தாம், வகுப்புகளுக்கும் ஒழுங்காக வருவதில்லை. அல்கலைக்கழக / கல்லூரி வளகங்களில் சுற்றிக் கொண்டிருப்பது, டீ-காபி குடிக்கச் செல்கிறேன் / ரெஸ்ட் ரூம் செல்கிறேன் என்று வெளியே சென்று வராமல் இருப்பது, உடன் மற்ற மாணவர்களையும் கூட்டிச் செல்வது போன்ற அடாவடித் தனங்களும் நடந்தேறி வருகின்றன.

எல்லாவற்றிற்கும் சார்ட் கட் / குறுக்கு வழி ஏற்படுத்தப் பட்டுள்ளது: அட்டென்டென்ஸ் இல்லை என்றால் அதற்கும் “பெனால்டி பீஸ்” கட்டி விட்டு, பரீட்சை எழுதலாம் என்ற முறையும் செயல்பட்டு வருகிறது. இதனால், கல்வியில் நாட்டமில்லாதவர், பணக்காரப் பையன்கள், எப்படியும் பாசாகி விடலாம் என்று தைரியமாக இருப்பவர்கள், சார்ட் கட் / குறுக்கு வழிகளை பின்பற்றுகின்றனர். இப்படி, ஒவ்வொரு நிலையிலும் முறையற்ற வழிகள் பின்பற்றப் படும் பொழுது, கல்வித் தரம், படிப்புத் தன்மை, ஓதித்தல்-கற்றல் என்ற எல்லாவற்றிலும் தொய்வு ஏற்படுகின்றது. ஒழுங்காக பாடம் எடுக்க வருகின்ற ஆசிரியர்களுக்கும் தொந்தரவு ஏற்படுகின்றது. ஏனெனில், அவர்கள் சில நேரங்களில் ஏதோ / தேவையற்ற காரணங்களுக்காக, “வகுப்பிற்கு செல்லாதே, எங்கள் கூட வா” என்று வற்புருத்தும் போக்கும் காணப்படுகிறது. இதனால், ஒழுங்காக தினமும் படிக்க வரும் மாணவர்கள் பாதிக்கப் படுகின்றனர்.

படிப்பை உதாசீனப் படுத்தி எப்படியாகிலும் பாசாகி விடலாம் என்றிருப்பவர்களிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது: இவ்வாறு நடந்து கொள்ளும் ஆணவ-மாணவியர்களிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது. ஒரு பக்கம் பெரியவர்களுக்கு மதிப்பு தருவதில்லை. பெண்களுக்கு மரியாதை கொடுப்பதே இல்லை. பெற்றோரிடம் உண்மையாக இருப்பதில்லை. சகோதரர்களிடம் இணக்கமாக இல்லை. அவர்களின் ஏக்க-துக்கங்களையெல்லாம் குறித்து அக்கறையே இல்லை. என்றெல்லாம் புலம்புவதும் தெரிகிறது[5]. அக்கம்பக்கம் குறித்த பயமில்லை. சமூகம் தொடர்பான புரிதலே இல்லை. இப்படிப்பட்ட கட்டமைப்புடன் இருக்கிற இன்றைய தலைமுறையினர், பெரியவர்களையும் பெண்களையும் புரிந்துகொள்ளாமல் மிகக் கேவலமாக இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள், என்றெல்லாம் தொடர்கிறது. குறிப்பாக, பெண்களை வெறும் போகப்பொருளாக நினைத்தைதையும் கடந்து, அவர்களின் உடலையும் உடைமைகளையும் பறித்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இப்போது இருக்கிற நவீன சாதனங்களின் துணையுடன், படமெடுத்து, வீடியோ எடுத்து, ப்ளாக்மெயில் செய்து, மிரட்டி, அடித்து, உதைத்து, பெண்களை வதைத்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கே, வீடும் சமூகமும் பெண்களை மதிப்பது குறித்து கற்றுக்கொடுக்கவே இல்லை என்பதுதான் வேதனை[6].

இப்படியும் நடந்துள்ளது: உதாரணத்திற்கு இது ஒடுக்கப் படுகிறது. பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது, பிளஸ் 1 மாணவர் ஒருவர் தனது, நண்பர்களுடன் சிகரெட் பிடித்து, மாணவிகள் முகத்தில் புகை விட்டு கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது[7]. சம்பந்தப்பட்ட மாணவரை அழைத்து சென்று, இதுபோன்ற பழக்கங்களில் ஈடுபட்டால், பள்ளி வகுப்பறைகளில் சேர்க்க மாட்டோம், பெற்றோர்களிடம் தெரிவித்து டிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்து அடித்ததாக கூறப்படுகிறது[8].  பாதிக்கப்பட்ட மாணவன் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால், நான்கு ஆசிரியர்கள் சஸ்பெண்ட்  செய்யப்பட்டனர். இதில், பாதிக்கப்பட்ட மாணவி ஆசிரியர்களிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். மாணவன் புகை பிடித்து மாணவி மீது ஊதிய விவகாரத்தில் ஆசிரியர்கள் சஸ்பெண்ட்  செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மாணவமாணவியர் தொட்டுப் பேசி, கட்டிப் பிடிக்கும் கலாச்சாரத்தை யாரும் கண்டிப்பதில்லை: இப்படியெல்லாம் எடுத்துக் காட்டினாலும், பல்கலை-கல்லூரி வளாகங்களில் மாணவியர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம். மாணவி-மாணவர்கள் பேசிக் கொள்வது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தொட்டு, அடித்துப் பேசும் மாணவி-மாணவர்களை சகஜமாக காணலாம். தோள்மேல் கை போட்டுக் கொண்டு, மடியில் படுக்கும் நிலைகளையும் காணலாம். இவையெல்லாம் சுரணையற்றத் தன்மையா, காதலா, மோகமா, அனைத்தையும் கடந்த நிலையா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய முடியாது. பெற்றோர் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற கவலைக் கூட அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருந்தால், நிச்சயமாக, அத்து மீறி எந்த மாணவியும் நடந்து கொள்ள மாட்டாள், தன் மீது இன்னொரு மாணவன் கை வைக்க அனுமதிக்க மாட்டாள்.  பார்க்கும் சக-மாணவி-மாணவர்கள் ஆசிரியர்கள் முதலியோரும் தட்டிக் கேட்பதில்லை, கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

23-02-2023.


[1] தினத்தந்தி, பேப்பர் கொடுத்தாலே எழுதமாட்டோம்..இதுல பேப்பர் மாத்தி கொடுத்துட்டாங்க…” – சென்னை பல்கலை.யில், By தந்தி டிவி 18 நவம்பர் 2022 4:15 PM

[2] https://www.thanthitv.com/latest-news/chennai-university-149394

[3] தினமணி, சென்னை பல்கலை.யில் வினாத்தாள் குளறுபடி: விசாரணைக்குழு அமைப்பு, By DIN  |   Published On : 19th November 2022 06:02 PM  |   Last Updated : 19th November 2022 06:07 PM.

[4] https://www.dinamani.com/tamilnadu/2022/nov/19/university-of-madras-exam-issues-3952354.html

[5] தமிழ்.இந்து, ஒழுக்கம் போதிக்கும் கல்வி வருமா?, செய்திப்பிரிவு, Published : 15 Apr 2019 02:36 PM, Last Updated : 15 Apr 2019 02:36 PM.

[6] https://www.hindutamil.in/news/opinion/columns/161748-.html

[7] தினகரன், மாணவன் புகை பிடித்து மாணவி மீது ஊதிய விவகாரம் ஆசிரியர்கள், சஸ்பெண்ட் கண்டித்து மாணவர்கள் சாலை மறியல், 2022-09-27@ 14:15:20

[8] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=802627

சென்னைப் பல்கலைக் கழக ஆன்லைன் தேர்வு மோசடி, ஐந்து பேர் சஸ்பெண்ட்–பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது?

ஒக்ரோபர் 24, 2022

சென்னைப் பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வு மோசடி, ஐந்து பேர் சஸ்பெண்ட் பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது?

கொரோனா காலத்தில் கண்டுபிடிக்கப் பட்ட ஆன்லைன் தேர்வு முதலியனவும், மோசடிகளும்: கொரோனா தொற்று பரவலால் ஊரடங்கு அமலான நிலையில், 2020ல் தமிழகத்தில் உள்ள பல்கலை மற்றும் கல்லுாரிகளில், பட்டப் படிப்பு மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. அரியர் உட்பட அனைத்து தேர்வுகளையும், வீட்டில் இருந்தே எழுத அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இதை பயன் படுத்திக் கொன்டு, ஒரு கூம்பல் மோசடியில் ஈடுபட்டு, பணம் சம்பாதிக்கத் திட்டம் போட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு எழுதும் முறையில் உள்ள நடைமுறை பலவீனங்களைப் பயன்படுத்துக் கொண்டு, ஆள்மாறாட்டம், பார்த்து எழுதுதல், போன்றவற்றில் ஈடுபட்டு தேர்வுகளில் மோசடி செய்துள்ளனர். ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தார்கள் என்று மட்டுமே நினைத்திருந்த வேளையில் சென்னை பல்கலைக் கழக தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

தொலைதூரக் கல்வி மூலம் பயின்று 20 ஆண்டுகளுக்கும் மேல் அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத சென்னை பல்கலைக் கழகம் வாய்பு அளித்தது: 2020ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஆன்லைன் செமஸ்டர் தேர்வில், தொலைதூரக் கல்வி மூலம் பயின்று 20 ஆண்டுகளுக்கும் மேல் அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத சென்னை பல்கலைக் கழகம் வாய்பு அளித்தது. இதுவே ஒரு பெரிய மோசடி எனலாம், ஏனெனில், நிச்சயமாக குறைந்த பட்சம் அவர்கலுக்கு 40 ஆண்டு வயதாகி இருக்க வேண்டும். பிறகு, அந்நிலையில் அவர் பட்டம் பெற்று என்ன சாதிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. அதாவது, யாருக்கோ திடீரென்று அத்தகைய பட்டங்கள் தேவைப் படுகின்றன. அவர்களுக்கு தோதுவாக, ழ்த்தகைய விளம்பரம் வெளிவந்தது என்பது திண்ணம். விடுவார்களா, அவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும் அத்தகைய விலம்பரம் வரும், சந்தார்ப்பம் வரும். பிறகு என்ன, ஜாலியாக வேட்டையாடுவது தான். பணம் இருந்தால் போதும்.

பல தொலைதூரக் கல்வி நிறுவனங்கள், எந்த பட்டப் படிப்பிலும் சேராத மாணவர்களை, தேர்வு எழுத வைத்துள்ளனர்: சென்னை பல்கலைக் கழகத்தின் அறிவிப்பை பயன்படுத்தி அரியர் மாணவர்கள் பலரும் ஆன்லைனில் தேர்வு எழுதினர். ஆனால் இந்த அறிவிப்பை முறைகேடாக பயன்படுத்த முயன்ற பல தொலைதூரக் கல்வி நிறுவனங்கள், எந்த பட்டப் படிப்பிலும் சேராத மாணவர்களை, தேர்வு எழுத வைத்துள்ளனர். பட்டப்படிப்பில் சேராமலும், படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற 117 மாணவர்கள் தற்போது சிக்கியுள்ளனர். ப்படியெல்லாம் நடக்க முடியுமா, நடக்குமா என்றெல்லாம் யாரும் கேட்க முடியாது. திராவிட ஆன்சியில் என்னவெண்டுமானாலும் நடக்கும். ஆன்லைன் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து, தொலைதூரக் கல்வி மூலம் தேர்வு எழுதியவர்கள் விவரங்களை சென்னை பல்கலைக் கழகம் ஆய்வு செய்தது. அதில், 117 பேருக்கு செமஸ்டர் கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றில் மாறுபட்ட தகவல்கள் இருந்ததால் படிக்காமலேயே பட்டம் பெற முயன்றவர்கள் சிக்கிக்கொண்டனர்[1].

ஆன்லைன் தேர்வை முறைகேடாக பயன்படுத்திய தொலைதூரக் கல்வி நிறுவனங்கள், படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற ஒவ்வொருவரிடமும் தலா மூன்று லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது[2]. இவ்வாறு யார், எப்படி, எந்த விதமாக வசூல் செய்யப் பட்டது, நம்பியவர் எவ்வாறு பணம் செல்லுத்தினர் என்பவையெல்லாம் மர்மமாக இருக்கின்றன. சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு மூலம் 116 போலி மாணவர்கள் பட்டம் பெற முயன்ற மோசடி தொடர்பாக பல்கலைக்கழக உதவி பதிவாளர்கள் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்[3]. கொரோனா ஊரடங்கின்போது சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி பிரிவு நடத்திய தேர்வில் சிலர் பல்கலைக்கழகத்தில் சேராமலேயே கடைசி நேரத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்து வீட்டில் இருந்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது[4]. இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில் மோசடி நடந்தது உறுதியானது.

ஐந்து பேர் கொண்ட குழு விசாரிக்க அமைக்கப் பட்டது: இதையடுத்து சம்பந்தப்பட்ட தேர்வர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க துணைவேந்த்தர் கௌரி உத்தரவிட்டார்[5]. மேலும் இந்த மோசடி குறித்து விசாரிக்க பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தின் சட்டபடிப்புகள் துறை இயக்குனர் சொக்கலிங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது[6].

  1. சி. சொக்கலிங்கம் [C Chokkalingam, director of legal studies],
  2. பி. வேணுகோபால் [B Venugopal, head of legal studies department],
  3. சிட்டி அன்னபூர்ணா[Chitti Annapurna, head of Hindi department],
  4. டி. சத்தியவான் [D Sathiyavan, head of department of Econometrics], and
  5. வி. இளங்கோவன் [ V Elangovan, dean (academics)], in January to probe the issue.

இந்தக்குழு தேர்வர், சேர்க்கை மையத்தினர், பல்கலைக்கழக ஊழியர்கள், தேர்வுத்துறையினரிடம் விசாரணை நடத்தினர்[7]. இதன் முடிவில் 116 பேர் போலி மாணவர்களாக தேர்வெழுதி ஆல்பாஸ் முறையில் பட்டம் பெற முயன்றதும், இதற்கு பல்கலைக்கழக ஊழியர்கள் உடந்தையாக இருந்ததும் உறுதியானது[8]. மறுபடியும் குறிப்பிடப் பட வேண்டியது என்னவென்றால், விசாரணை அறிக்கையின் எந்த விவரமும் வெளியிடப் படவில்லை. பொதுமக்கள் மற்ரும் கல்வித் தரம், படிப்பு-ஒழுக்கம் முதலியவற்றுடன் சம்பந்தமுள்ள இவ்விவகாரங்களை ஏன் மூடி மறைக்கப் படுகின்றன என்பதும் மர்மமாகவே இருக்கின்றன. நிர்மலா தேவி விவகாரம், முன்னர் தினம்தினம் பேசப் பட்டது, செய்திகள் வெளுத்து வாங்கிக் கொன்டிருந்தன, ஆனால், பிறகு அப்படியே கப்சிப் என்று அடங்கி விட்டன.

ஐந்து பேர் சஸ்பெண்ட் ஆனது, சிக்கிக் கொண்டது யார்?: இதையடுத்து மோசடியில் தொடர்புடைய 2 பதிவாளர்கள் உட்பட 5 பேரை –

  1. தமிழ்வாணன், உதவி பதிவாளர் [Tamilvanan, (assistant registrar)]
  2. மோகன்குமார், உதவி பதிவாளர் [N Mohankumar, (retired assistant registrar) ]
  3. எழிலரசி, உதவி பிரிவு அதிகாரி [Ezhilarasi, (assistant section officer)]
  4. சாந்தகுமார், உதவி பிரிவு அதிகாரி [Santhakumar (retired section officer)]
  5. ஜான் வெஸ்லின் உதவியாளர் [John Weslyn (attender)]

சஸ்பெண்ட் செய்ய விசாரணை குழு பரிந்துரை செய்தது[9]. இதையடுத்து அந்த 5 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், விசயங்கள் அத்துடன் அமைதியாகி விட்டது. பிறகு, மாட்டிக் கொண்டவர்களை பாதுகாக்க யார் இருக்கின்றனர், அவர்களின் “காட்-பாதர்கள்” யார் என்று ஆராய வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

23-10-2022.


[1] ஏபிபி.லைவ், சென்னை பல்கலை., ஆன்லைன் தேர்வு மோசடி – 5 அதிகாரிகள் சஸ்பென்ட் செய்ய பரிந்துரை, By: கபில் ரமேஷ், சென்னை செய்தியாளர் | Updated at : 11 Oct 2022 04:51 PM (IST), Published at : 11 Oct 2022 04:51 PM (IST)

[2] https://tamil.abplive.com/education/5-officers-involved-in-madras-university-online-exam-scam-recommended-to-be-suspended-78349

[3] மாலைமலர், சென்னை பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வு மோசடிஉடந்தையாக இருந்த 5 அதிகாரிகள் சஸ்பெண்டு, ByMaalaimalar10 அக்டோபர் 2022 12:16 PM.

[4] மாலைமலர், சென்னை பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வு மோசடிஉடந்தையாக இருந்த 5 அதிகாரிகள் சஸ்பெண்டு, ByMaalaimalar10 அக்டோபர் 2022 12:16 PM.

[5] https://www.maalaimalar.com/news/state/tamil-news-online-exam-cheating-case-5-officers-suspended-522357

[6] தினகரன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக 5 பேர் சஸ்பெண்ட்: சென்னை பல்கலைக்கழகம் அதிரடி, 2022-10-10@ 12:06:40.

[7]  https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=805547

[8] தினமலர், சென்னை பல்கலைஆன்லைன்தேர்வு மோசடி: உதவி பதிவாளர்கள் உட்பட 5 பேர்சஸ்பெண்ட்!’, Added : அக் 10, 2022  03:22.

[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=3141846

கூட்டுக் கற்பழிப்பு செய்வது எப்படி? இன்ஸ்டாகிராமில் விவாதிக்கும் பெரிய இடத்துப் பள்ளிப் பிள்ளைகள்! வழக்கு பதிவு, என்னாகுமோ? பெற்றோர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் [2]

மே 20, 2020

கூட்டுக் கற்பழிப்பு செய்வது எப்படி? இன்ஸ்டாகிராமில் விவாதிக்கும் பெரிய இடத்துப் பள்ளிப் பிள்ளைகள்! வழக்கு பதிவு, என்னாகுமோ? பெற்றோர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் [2]

Delhi school boys discuss gange rape thru Instagram - 2 TV debate

பெற்றோர்கள் பலர் இன்டெர்நெட் பற்றி தெரியாமல் இருப்பது: உயிர்களின் அடிப்படைத் தேவையே உணவும், இனப்பெருக்கமும்தான். அந்தந்த வயதில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து பெற்றோர்களே முன்வந்து, குழந்தைகளிடம் பேசி அவர்களை வழிநடத்தலாம். பெற்றோர்களே தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு குழந்தைகளைக் கவனிக்காமல் விடுவதும், பிள்ளைகள் எங்கே போகிறார்கள், என்ன செய்கிறார்கள், மொபைலை எப்படி பயன்படுத்துகிறார்கள் என எதுவுமே தெரியாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். தவறு நடந்த பின் ரியாக்‌ஷன்கள் கொடுப்பதுதான் நாம் செய்துகொண்டிருக்கும் மிகப்பெரிய தவறு. அடுத்து தவறு செய்துவிட்டாலும் கூட தண்டனை, தகாத வார்த்தைகள் என போகாமல் சரியான முறையில் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து வழிநடத்த வேண்டும்…’’ என்று முடித்த மன நல நிபுணர் எஸ்.வந்தனாவைத் தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் சைபர் கிரைம் துறைப் பேராசிரியர் லதா சுப்பிரமணியன் பேச ஆரம்பித்தார். ‘‘குழந்தைகளைத் தன்வசப்படுத்தி அவர்களை பொம்மை போல் ஆட்டுவிக்க ஆன்லைனில் தனி குழுக்களே இயங்கிக் கொண்டிருக்கின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, பெண்கள், ஆண்கள் என யாவரும் இவர்களிடம் தப்பிப்பதில்லை. குழந்தைகள் எதற்கும் தங்களைச் சுலபமாக மாற்றிக்கொள்வார்கள்.

Bois locker Admn arrested, The Pioneer, 07-05-2020

நடந்த பிறகு, ஐடியா கொடுக்க வரும் வல்லுனர்கள்: முதலில் உங்கள் மொபைலில் பாஸ்வோர்ட் போட்டு லாக் செய்வதை விடுங்கள். பிள்ளைகளிடம் ஓபனாக இருங்கள்; கண்காணியுங்கள். கணினிகளில் உள்ள கேமராக்களை சீல் செய்யுங்கள். திடீரென மொபைலில் அதிக நேரம் செலவிடுகிறார்கள், கணினி முன்பே உட்காந்திருக்கிறார்கள் எனில் அவர்களின் ஸ்கிரீன் டைம், பயன்பாட்டு தளங்கள், எல்லாவற்றையும் கவனிப்பில் கொண்டு வாருங்கள். இந்த தளம், இந்த கேம் ஏன் உனக்கு இவ்வளவு பிடித்திருக்கிறது என பேசுங்கள். குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் சின்ன நண்பர்கள் சந்திப்பு போல் ஏற்படுத்தி பிள்ளைகளின் நண்பர்களையும் உங்களுக்கு நண்பர்கள் ஆக்குங்கள். அடுத்த சந்திப்பில் வரும் புதிய நண்பர்களை அக்கறையுடன் கண்காணியுங்கள். எந்தெந்த நண்பர்கள் என்னென்ன டிவைஸ்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை எல்லாம் கவனிப்பதும் அவசியம். முதலில் நீங்கள் டிக்டாக்கில் கட்டிப்பிடித்து ஆடுவதையும், முகநூலில் நான் வாங்கிய புதுப்புடவை என பகிர்வதையும் விட்டாலே குழந்தைகள் நம்மைப் பார்த்து திருந்துவார்கள்…’’ என்றார் லதா சுப்பிரமணியன்.‘‘சமூக வலைத்தளங்கள் பொறுப்பாக இருக்கலாம். நாம் போடுகிற ஒரு ஸ்டேட்டஸில் இருக்கும் பாடலோ, காட்சியோ யாரோ ஒருவருக்கு உரிமையானது என கண்டறிந்து நீக்கும் அளவுக்கு கண்காணிக்கும் தொழில்நுட்பம் இருக்கையில் ஒரு நபர் மைனரா மேஜரா எனப் பார்க்கலாமே! குறைந்த பட்சம் நபரின் ஐடி, அல்லது பெற்றோர்களின் ஐடி கொடுத்தால் மட்டுமே ஒரு சமூக வலைத்தளத்தில் கணக்குத் தொடங்க முடியும் என்னும் வரைமுறையை கொண்டு வரலாமே.

Delhi school boys discuss gange rape thru Instagram - 4
படிப்பு பற்றிய தாழ்ந்த கருத்தை உருவாக்கும் போக்கு: கல்வி ஒரு காலத்தில் புனிதமாக பார்க்கப்பட்டது. கல்வியுடன் இணைந்தே நேர்மை, அந்தக் கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் மேல் மதிப்பு, அந்தக் கல்வியைக் கொடுத்த பெற்றோர்களுக்கு மதிப்பு பெண்கள் மீதான மதிப்பு என பலவிதமாக பொறுப்புகள் சேர்ந்தே வளர்ந்தன. கல்வியைச் சரியாக எடுத்துக்கொண்டாலே ஒரு மனிதன் பண்பட்டு விடுவான்.படிப்பு என்றால் வெறும் டிகிரி மட்டுமே அல்ல. நமக்கு என்ன பிடிக்குமோ அதை தீவிரமாகப் படிப்பது. மார்க் ஸூகர்பெர்க், ஸ்டீவ் ஜாப்ஸ், சச்சின், ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாம் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்கள் என தவறான எண்ணம் உருவாக ஆரம்பித்துவிட்டது. மார்க், ஸ்டீவ் ஜாப்ஸுக்கு கணினி, சச்சினுக்கு கிரிக்கெட், ரஹ்மானுக்கு இசை, இதுவும் கூட படிப்புதான். ஏதேனும் ஒரு நல்ல திறமை மேல் ஆர்வம் சென்றாலே தீய எண்ணங்கள் எழாது. கல்வி மீதான மதிப்பு இல்லாமைதான் ஆசிரியர், பெற்றோர்கள், உறவுகள், குடும்பம், பெண்கள் என எதன் மீதும் மதிப்பில்லாமல் போவதும் சொற்ப ஆனந்தம் கொடுக்கும் மொபைல் மீது மனம் சென்று விடுவதும். இந்த நிலை மாறினால்தான் மாணவர்களின் வாழ்க்கை முறையிலும் மாற்றம் வரும்…’’ அழுத்தமாக சொல்கிறார் கல்வி ஆலோசகர் மற்றும் ஃபியூச்சர் காரிடர் நிர்வாக இயக்குநரான தாமோதரன்.

Bois locker Admn arrested, The Hindustan Times, 07-05-2020

இந்தி சினிமா முதல் சமூக வலைதளம் வரை ஆபாசம், கொக்கோகம் நிலை மாறுமா?: இந்தி மற்றும் போஜ்பூரி போன்ற மொழிகளில் வரும் சினிமாக்கள், அவற்றில் வரும் நடகஜ்க் காட்சிகள், பாடல்கள் எல்லாமே செக்ஸ்-வக்கிரத்துடன் கொண்டவைதான். மிகவும் மோசமான, ஆபாச, கொக்கோக அரைகுறை நடனங்கள், விலங்குகள் போன்று ஊர்ந்து வருவது, ஒரு ஆடும் பெண்ணை 50-100 பேர்கள் சுற்றி வந்து, ஏதோ அகப்பட்ட விலங்கை கடிப்பது போன்ற காட்சிகள், இவையெல்லாம், பள்ளி மாணவர்களை உசுப்பேற்றிவிடும் வகையில் தான் உள்ளன. இவற்றையெல்லம் எதிர்த்து யாரும் பேசுவதில்லை. வடவிந்தியாவில், அதிகமாக “இந்துத்துவம்” பேசும் பொழுது, இத்தகைய விசயங்களில் “ஸ்வச்ச பாரத்” அதிகமாக வேலை செய்திருக்க வேண்டும். “பேடி பசவோ” எங்கு ஏன் சரிவர வேலை செய்யவில்லை என்று தெரியவில்லை. அதிகாரம், கொள்கைகள் முதலியவற்றில், வடவிந்தியர் ஆதிக்கம் செல்லுத்தும் போது, இத்தகைய விசயங்களில், அவர்கள் இரட்டை வேடம் போடுவர்தாகவேத் தெரிகிறது. “பெண்மை” எனும் போது, அதிகமாக சப்தம் வருவது, இங்கு தான் என்று தெரிகிறது, ஆனால், இவ்விசயங்களில் ஆரம்பித்து விட்டுவிடுவது போன்ற நிலைதான் உள்ளது. இவ்விசயத்தில் மாட்டிக் கொண்டவர்கள் எல்லோரும் பணக்கார வீட்டு பையன்கள். அரசியக் ஆதரவும் இருக்கிறது. பிறகு, வழக்கு எப்படி நடக்கும் என்று தெரியவில்லை.

Delhi school boys discuss gange rape thru Instagram - 3

பெற்றோரை, பெரியவர்களை, ஆசிரியர்களை மதிக்காத சமூகம் உருப்படாது: தில்லி உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல் இதனை தானாக [suo motu (on his own)] வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க ஆணயிட்டார்[1]. மே.3ம் தேதி FIR போடப்பட்டு, சம்பந்தப் பட்ட பையன் கைது செய்யப் பட்டுள்ளான்[2]. இதில் தொடர்புள்ள 20 பேரும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளனர்[3]. சைபர் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கான வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது[4]. டில்லியின் பணக்கார வீட்டு பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாய்ஸ் லாக்கர் ரூம் வழக்கின் விசாரணையை வேகப்படுத்துமாறு போலீசுக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது[5]. இதேபோல பெண்கள் குழு ஒன்றில் ஆண்களை பற்றி பேசிய உரையாடல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளவும் போலீஸாருக்கு கோரிக்கைகள் எழுந்துவரும் சூழலில், ஆண், பெண் பேதமின்றி இளைய தலைமுறையை இணையம் காவு வாங்கி வருவது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது[7]. வழக்கம் போல, இப்பொழுது, எல்லோரும் அறிவுரை கூற ஆரம்பித்து விட்டனர். மின் அச்சு என்று எல்லா துறைகளிலும் பெண்கள் தன்னிச்சைப் படி தான், சுதந்திரமாக உள்ளனர். கற்பைப் பற்றி கேவலமான கருத்துகளை எல்லாம் சொல்லியாகி விட்டது. அந்நிலையில், நல்லதை போதிக்க ஆளில்லை. இருந்தால், அவர்களையும் கிண்டல் செய்யும் முறையில் தான் ஊடகக் காரர்கள் இருக்கிறார்கள். இந்திய நாட்டு கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் என்றால் ஏளனம் பேசுகிறார்கள். பாரம்பரியங்கள் மீறப் படுகின்றன. பெரியவர்களுக்கு மரியாதைக் கொடுப்பதில்லை. இவ்வாறு இருக்கும் நிலையில், பள்ளி மாணவர்களுக்குயார் அறிவுரை கூறுவார்கள், கூறினால், எத்தனை மாணவ-மாணவியர் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

19-05-2020

Bois locker Admn arrested, Asian age, 07-05-2020

[1]   India.com, ‘Bois Locker Room’: Admin of Instagram Chat Group Arrested, Devices of Identified Members Seized, News Desk, lEdited by Shubhangi Gupta, Published: May 6, 2020 4:19 PM IST

[2] Advocates urged to direct the authorities concerned to register FIRs for the alleged offences, punishable under the Protection of Children from Sexual Offences Act, the Information and Technology Act and the Indian Penal Code, against the perpetrators and initiate investigation in the matter at the earliest. An FIR was lodged by the police on May 3 and a juvenile has been apprehended in connection with the matter.

https://www.india.com/news/india/bois-locker-room-admin-of-instagram-chat-group-arrested-devices-of-identified-members-seized-4021564/

[3] TheLogicalIndian, Spine-chilling details of the boys’ conversation have shocked netizens and yet again raised questions on the safety of women in India. Sumanti Sen (Digital Journalist) India | 4 May 2020 / Updated : May.5, 2020.

[4] https://thelogicalindian.com/news/boys-locker-room-group-20915

[5] தினமலர், பாய்ஸ் லாக்கர் ரூம் வழக்கை விரைந்து முடியுங்கள்: டில்லி ஐகோர்ட், Updated : மே 19, 2020 11:35 | Added : மே 19, 2020 09:53.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2542116&Print=1

[6] நக்கீரன், நேற்று பாய்ஸ் லாக்கர் ரூம்இன்று கேர்ள்ஸ் லாக்கர் ரூம்இளைய தலைமுறையை காவு வாங்கும் இணையம், Published on 05/05/2020 (17:37) | Edited on 05/05/2020 (18:01)

[7] https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/bois-locker-room-and-girls-locker-room-issue

ஆன்–லைன் மூலம் பாட போதனை, கற்றல், மனத்தில் ஏற்றல், பயிற்சி பெறுதல், தேர்வு எழுதுதல் சாத்தியமா? [2]

ஏப்ரல் 16, 2020

ஆன்லைன் மூலம் பாட போதனை, கற்றல், மனத்தில் ஏற்றல், பயிற்சி பெறுதல், தேர்வு எழுதுதல் சாத்தியமா? [2]

e-learning to rescue The Pioneer, 08-04-020

ஆன்லைன் பாடம் நடத்தும் செயல்பாடுகள்: இது இன்னும் செயல்படுத்தவில்லை என்றாலும், அரசுமுறையில் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஊடகங்கள் தத்தமக்கு தெரிந்த படி உசுப்பேற்ற ஆரம்பித்து விட்டார்கள். ஆன்–லைன் வித்தகர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவரவர்களுக்கு ஏற்ற முறையில், ஆலோசனை கூற ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு, இதை வைத்து வியாபாரம் செய்யலாம், என்ற உள்நோக்கமும் உள்ளது. அதனால், நிதர்சனமாக, நடைமுறையில் நிலவரம் என்ன, பிரச்சினைகள் என்ன, அவற்றை சமாளிப்பது எப்படி போன்றவற்றைப் பற்றி கவலைப் படவில்லை. ஏதோ ஆன்–லைன் மூலம், அனைத்தயும் சாதித்து விடலாம் என்ற போக்கில், கற்பனையில் மிதக்கிறார்கள்! அதற்கேற்றப் படி, ஆலோசனைகள், குறிப்புகள், யுக்திகள் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், இருக்கும் ஆசிரியர்களால், அவ்வாறு ஆன்–லைன் மூலம் பாடம் எடுக்க தயாராக உள்ளார்களா, அவர்களால் முடியுமா என்பது பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. இந்த ஆன்–லைன் போதனை, பாடம் நடத்துதல், ஒருவழியாகத் தான் இருக்கும். வகுப்புகளிலேயே மாணவ-மாணவர்கள் பாடம் எடுக்கும் போது, சிரத்தையாக கவனிப்பதில்லை அல்லது ஆசிரியர்களால் ஒழுங்காக பாடம் எடுக்க முடிவதில்லை போன்ற பிரச்சினைகள் உள்ளன. நேரிடையாக பாடம் எடுக்கும் போதே அப்பிரச்சினைகள் இருக்கும் போது, இப்பொழுது ர்ப்படி சமாளிப்பார்கள் என்று பார்க்க வேண்டும்.

Learning online TOI, 03-04-2020

போதித்தல்-கற்றல்-நினைவாற்றல்-தேர்வு முதலியவை: போதித்தல்-கற்றல் முறைகளில் மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்-ஆசிரியைகள் முதலியோருக்குண்டான பல காரணிகள் செயல் படுகின்றன. இதில் கற்றல் என்ற விசயத்தில் பொதுவாக உள்ளவை முக்கியமானவை.

  1. கற்றல், கற்றுக் கொள்ளுதல் – இதற்கு வம்சாவளி மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகள் காரணமாக அமைகின்றன. தொடர்ந்த-தொடர்ந்து பயிற்சிகளால் சரி செய்யலாம், சமன் செய்யலாம், சரி-சமன் செய்யலாம்.,
  2. மனதில் பதித்துக் கொள்ளுதல் – கடந்த கால அறிவு, புரிந்து கொள்ளும் தன்மை. தெரிந்த விசயங்களிலிருந்து, தெரியாத விசயகளை அறிந்து கொள்ளுதல்,
  3. அதனை வெளிப்படுத்துதல் – எந்த அளவுக்கு புரிதல் உள்ளது, புரிந்து கொள்ளப் பட்டுள்ளது, தவறான புரிதலை மாற்றுவது,
  4. அத்தகைய நினைவாற்றலின் தன்மை – புரிந்தவை ஞாபகத்திற்கு உடனே வருகின்றனவா, நேரம் தாழ்ந்து வருகின்றனவா,
  5. வெளிப்படுத்தியதை சீராக-கோர்வையாக எழுதுதல் – இது தொடர்ந்து சிந்திக்கும் ஆற்றல், பயிற்சி முதலியவற்றல் சீரமைக்கலாம்,
  6. தேர்வுக்கு தயார் படுத்துதல் – குறைந்த ஆற்றல் கொண்ட குழந்தைகளுக்கு அதிகமான சிரத்தையுடன் முன்னுக்குக் கொண்டுவருவது கடமையாகிறது.
  7. எழுதும் தன்மை, திறமை – இதற்கும் பயிற்சி தேவை,
  8. அச்சப்படாமல்-குழம்பாமல் கேட்ட கேள்விகளுக்கு, முறையாக எழுதுதல்,
  9. எப்படி எழுதினால் மதிப்பெண் கிடைக்கும், தேவையில்லாமல் எழுதுவதை தவிர்ப்பது.
  10. இவற்றையெல்லாம் வெற்றிகரமாக முடிக்க சிறந்த மனம்-உடல் ஆரோக்கியம் தேவைப் படுகிறது. அவற்றையும் பெற்றோர், உற்றோர், மற்றோர், அரசு முதலியவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

என்று பல விசயங்கள் இவற்றில் உள்ளன. “விகாஸ்பீடியாவில்” இவற்றைப் பற்றியெல்லாம், அருமையாக, தமிழில் கொடுத்துள்ளார்கள்[1]. அவற்றை, எல்லோரும் படிக்கவேண்டும்.

Changes introduced by online coaching The Hindu Tamil 17-03-2020

பள்ளி மாணவமாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லமுடியாத நிலையில், கீழ்கண்ட நிதர்சன நிலைகளை அரசு, பள்ளி அதிகாரம், ம்ற்றவர்கள் யோசித்துப் பார்த்துள்ளனரா?:

  1. பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவர்களிடம் எத்தனை பேரிடத்தில் டெஸ்க்-டாப், லேப்-டாப், ஸ்மார்ட் போன் இருக்கிறது.
  2. இன்டெர்நெட் வசதிகளுடன் இருக்கிறது. நன்றாக உபயோகப் படுத்தத் தெரியும்.
  3. மின்சார சப்ளை தொடர்ந்து, தடை இல்லாமல், எல்லா கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ளது.
  4. இன்டெர்நெட் வசதி, சப்ளை நன்றாக வேலை செய்கிறது.
  5. பிரென்டர் போன்ற வசதிகள் உள்ளன.
  6. அப்லோட் செய்யும் வசதி உள்ளது, வீட்டில் மாணவ-மாணவர்களுக்கு உதவ பெற்றோர், மற்றோர் உள்ளனர்.

இப்பொழுது, தினம்-தினம் உணவிற்காக பாடுபடுவதே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஏழை, கீழ்தட்டு-நடுத்தர மக்களுக்கு உணவு பிரச்சினை பெரிதாக உள்ளது. அந்நிலையில், இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாது என்றாகிறது.

Class conducted through whatsup- assam tribune, - 20-03-2020

நடைமுறையில் எழும் கேள்விகள்: 2020-2021 வருடத்தைய கல்வி, படிப்பு, ஆசிரியர் போதனை, தேர்வு, பயிற்சி, வேலை முதலிய விசயங்களில் பல கேள்விகள் எழுகின்றன!

  1. பாடதிட்டங்களின் படி, செயல்முறை வகுப்புகள், பயிற்சிகள் நடக்குமா, அல்லது அவசர-அவசரமாக முடிப்பார்களா, சமரசம் செய்து கொள்வார்களா தெரியவில்லை! அதாவது, முழு பாடதிட்டத்தை முடிக்க முடியுமா என்று தெரியவில்லை.
  1. எட்டாவது வரை எல்லாம் பாஸ் என்றால், பத்தாவது வரை அவ்வாறு செய்ய வேண்டும் போன்ற ஆலோசனைகள் எழுப்பப்படுகின்றன[2]. ஆனால், இவையெல்லாம், கல்வித் தரனை பாதிக்கும்.
  1. மேற்படிப்பு, குறிப்பாக அயல்நாட்டு படிப்பு கனவுகள் மொத்தமாகத் தகர்ந்து விடும் நிலையில் இருக்கின்றன, முயற்சி, பணம் ………..விரயமாகலாம்! அந்நிய பல்கலைக் கழகங்கள் இந்திய மாணவர்களுக்குக் காத்திருக்குமா அல்லது இது உலகளாவிய பிரச்சினையாக இருப்பதால், மாற்றிக் கொள்வார்களா என்று தெரியவில்லை. அத்தகையோருக்கு ஒரு கல்வியாண்டு விரயமாகலாம்.
  1. தொழிற்துறை படிப்புகள்E / B.Tech படித்த மாணவர்களுக்கு, தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பது, மேலும் கஷ்டமாகும்! இல்லை, இவ்வாண்டு, கொஞ்சம் சலுகை ரீதியில் கவனிக்கப் படவேண்டும். இருப்பினும், “கேம்பஸ் இன்டெர்வியூ” –வை மறந்து விட வேண்டியதுதான். இருக்கின்ற தொழிற்சாலைகள் திறந்தால் தான், வேலை வாய்ப்பு பற்றி சிந்திக்கலாம்.
  1. ICSE, CBEC போன்றவை 2020-2021 கல்வியாண்டின் பாடதிட்டத்தி படி, பாடங்களை ஆன்-லைனில் போதிக்க ஆரம்பித்து விட்டனர்.
  1. அரசு பள்ளிகளும் இதே யுக்தியை பின்பற்ற ஆரம்பித்துள்ளன. பொதிகை டிவியில் பாடங்கள் ஒலி-ஒலிபரப்பு நடக்கின்றன. தனியார் தொலைகாட்சிகளும் இதனை செய்ய வேண்டும்.
  1. ஆனால், 2019-2020 கல்வியாண்டின் தேர்வு எப்பொழுது நடக்கும் என்று தெரியவில்லை, பரீட்சை அட்டவணயும் அறிவிக்கப் படவில்லை!
  1. நான்காவது படிக்கும் குழந்தைகளுக்கு வீடியோ பாடம் அனுப்பி, படிக்க சொல்கிறார்கள், கேள்விகளுக்கு பதில் கேட்கிறார்கள்! பெற்றோர்களையும் பங்கு கொள்ளுங்கள் என்று வற்புருத்துகிறார்கள், இது எல்லா குடும்பங்களுக்கும் ஒத்து வருமா என்று கவனிக்க வேண்டும். இதனால், பெற்றோர்களுக்கு அதற்கேற்ற முறையில் தவமைத்துக் கொள்ள பாடங்கள் நடத்தப் படுகின்றன, கற்றுக் கொண்டு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
  1. சரி தேர்வை யார் எழுதுவார்கள்? ஆன்லைனில் எழுதலாமா, பெற்றொர்களே எழுதலாமா? இல்லை இதற்கெல்லாம் டியூஷன் தேவையா? இதையெல்லாம் யார் கண்காணிப்பது. ஆன்லைனில் எழுத வேண்டும் என்றால், கண்காணிப்புக்கு, மறுபடியும் மாணவர்கள் எப்படி ஒரு இடத்திற்கு வர முடியும்.
  1. இப்படி ஏகப் பட்ட நடைமுறைப் பிரச்சினைகள், அசாத்தியங்கள் முதலியன இருந்தாலும், ஏதோ கடமைக்கு செட்ய வேண்டும் என்ற ரீதியில், அதிரடியாக, அறிக்கைகள், சுற்றறிக்கைகள், செய்திகள், முதலியவை ஆரம்பித்து விட்டன.

©  வேதபிரகாஷ்

15-04-2020

Children learn online, Midday, 01-04-2020-2

[1] https://ta.vikaspedia.in/education/b86b9abbfbb0bbfbafbb0bcdb95bb3bcd-baab95bc1ba4bbf/baebc1ba9bcdbaabb3bcdbb3bbfb95bcd-b95bb2bcdbb5bbfbafbbfbb2bcd-b86b9abbfbb0bbfbafbb0bcdb95bb3bbfba9bcd-baaba3bbfb95bb3bcd-1/b95bb1bcdbb1bb2bcd-b95bb1bcdbaabbfba4bcdba4bb2bcd-b9abbfbb1baabcdbaabbeb95-ba8bbfb95bb4-b86b9abbfbb0bbfbafbb0bc1b95bcdb95bbeba9-b9abbfbb2-baabb0bbfba8bcdba4bc1bb0bc8b95bb3bcd

[2] இதில் அரசியல்வாதிகள் நுழைந்து கருத்துகளை சொல்லி, அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஏனெனில், அவர்களுக்கு கல்வி, கல்வி தரன் பற்றி கவலைப் படுவதில்லை.

ஆன்–லைன் மூலம் பாட போதனை, கற்றல், பயிற்சி பெறுதல், தேர்வு எழுதுதல் சாத்தியமா? [1]

ஏப்ரல் 16, 2020

ஆன்லைன் மூலம் பாட போதனை, கற்றல், பயிற்சி பெறுதல், தேர்வு எழுதுதல் சாத்தியமா? [1]

Online, Lessons broadcast thrrough DD, Tamil Hindu, 15-04-2020

பல்கலைக்கழக மானியக்குழு ஆன்லைனில் பாடம் நடத்துவது குறித்த வழங்கிய ஆலோசனை: நாடு முழுவதும் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கல்லூரிகள் அனைத்தும் வருகிற 14-ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கின்றன. ஆன் லைனில் கற்றல் கற்பித்தலைத் தொடருமாறு கல்லூரி, பல்கலைக்கழகங்களை யுஜிசி, ஏஐசிடிஇ போன்ற அமைப்புகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்த காலகட்டங்களில் மாணவர்களின் கற்றல், கற்பித்தலில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்கலைக்கழக மானியக்குழு ஆன்-லைனில் பாடம் நடத்துவது குறித்த ஆலோசனையை வழங்கியது[1]. அதன்படி, சென்னை பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சமீபத்தில் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது[2]. அதில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறனை ஆன்-லைன் மூலம் நடத்தி முடிக்கவும், செமஸ்டர் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையிலும் பாடம் எடுக்கவும் பேராசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்[3]. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது[4]. அதிலும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகளை மே மாதம் 15-ந் தேதி வரை மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது இப்பொழுது மே 3 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. பள்ளிகளிலும் +2 மாணவர்களுக்கு நடத்தப் படுகின்றன[5].

online classes, web links, Dinamani, 15-04-2020

விட்டிலிருந்தே கற்றல், டிஜிட்டல் புத்தகங்கள் முதலியன: மேலும், மாணவா்கள் தாங்களே ஆன் லைனில் கற்றலைத் தொடரும் வகையில், விடியோ விரிவுரைகள், டிஜிட்டல் புத்தகங்கள் இடம்பெற்றிருக்கும் சில வலைதளங்களை கட்டணம் எதுவும் இன்றி பயன்படுத்திக் கொள்ளவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு மீண்டும் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவா்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் அமைப்புகள், உயா் கல்வி நிறுவனங்கள் சார்பில் ஆன்லைன் கற்றல், கற்பித்தலை வழங்கும் 41 வலைதளங்களின் விவரங்களை ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில்) வெளியிட்டுள்ளது[6]. இந்த வலைதளங்களில் பள்ளி ஆரம்பக் கல்வி முதல் அனைத்துத் துறை சார்ந்த முதுநிலை பட்டப்படிப்புகள் வரையிலான டிஜிட்டல் பாட புத்தகங்கள், விடியோ வகுப்புகள், பாட கலந்துரையாடல் விடியோக்கள் எனப் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தையும் மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே படித்தும், பார்த்தும் பயன்பெற முடியும்[7], என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

CBEC onlie classes, yoga etc Dinamani, 15-04-2020

என்னென்ன வலைதளங்கள்?: தேசிய டிஜிட்டல் நூலகம் என்ற வலைதளத்தில் ஆரம்பக் கல்வி முதல் முதுநிலை படிப்புகள் வரையிலான பாடங்கள் சார்ந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் ஸ்வயம் வலைதளத்தில் 9-ஆம் வகுப்பு முதல் முதுநிலை படிப்பு வரையிலான பாட கலந்துரையாடல் நிகழ்வுகள், விடியோ விரிவுரைகள், பாட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய அறிவுசாா் வலைதளம், உயா் அலைவரிசை வசதியுடன் அனைத்து வகையான ஆராய்ச்சி, ஆராய்ச்சி நிறுவனங்கள் குறித்த தகவல்களைப் பெறும் வசதியைத் தருகிறது. தொழில்நுட்பம் மூலமான கற்றலுக்கான தேசிய திட்ட வலைதளம் மும்பை ஐஐடி, தில்லி ஐஐடி, சென்னை ஐஐடி, கான்பூா் ஐஐடி, குவாஹாட்டி ஐஐடி, ரூா்கி ஐஐடி ஆகிய ஐஐடிக்கள் மூலம் 2003-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பட்டப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவா்கள் அவா்கள் துறை சார்ந்த திறனை மேலும் மேம்படுத்திக் கொள்ள வசதியாக, இந்த வலைதளம் மூலம் பொறியியல், கலை-அறிவியல் துறைகள் சார்ந்த 600-க்கும் அதிகமான ஆன்-லைன் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதுபோல பல வலைதளங்கள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே கற்றலைத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஐஐடிகளுக்கு நிகராக மற்ற கல்வி நிறுவனங்கள் அத்தகைய தொழிற்நுட்ப வசதிகளுடன் தயாராக உள்ளனரா என்று தெரியவில்லை.

Students do not miss, Dinakaran, 16-04-2020

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் கல்வி தொலைக்காட்சி வழியாக தினமும் பாடம் சார்ந்த வீடியோக்கள்: மத்திய அரசு அறிமுகம் செய்த கல்வி வலைதளங்களில் 80 சதவீதம் வரை உயர்கல்வி தொடர்பானதாக உள்ளதாகவும், பள்ளி மாணவர்களுக்கான தீக் ஷா செயலியை செல்போன் வழியாக பயன்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளதாகவும் மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேல்நிலைவகுப்புகளை தவிர இதர அரசுப்பள்ளி மாணவர்களில் பலரிடம் கணினி வசதிகள் இல்லை. எனவே, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் கல்வி தொலைக்காட்சி வழியாக தினமும் பாடம் சார்ந்த வீடியோக்கள் பதிவேற்றப்பட்டன[8]. இவை மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. அதேநேரம் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் இருப்பதால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செல்போன் விளையாட்டுகளில் பிள்ளைகளின் கவனம்மூழ்கிவிடுவதாகவும், தொடர் பொழுதுபோக்கு மனநிலையில் இருந்தால் அவர்களின் கற்றல்திறன் குறையக்கூடும் என பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து வீட்டில் இருந்தேபடியே மாணவர்கள் பாடங்களை கற்கும் வகையில் இணைவழிக் கல்வி வலைதளம் (https://e-learn.tnschools.gov.in/) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் முதல்கட்டமாக 1 முதல்12-ம் வகுப்பு வரையான அனைத்து பாடங்களும் வீடியோ வடிவில் பதிவேற்றப்பட்டுள்ளன. இதை செல்போன் வழியாகவே யாருடைய உதவியும் இன்றி மாணவர்கள் எளிய முறையில் கற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Learning from home, Tribune, 09-04-2020

பதில்களை பதிவேற்றலாம்[9]: இந்த தளத்தை ஆசிரியர்கள், மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தகட்டமாக பாடக்கருத்துகள் தொடர்பாக மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை வலைதளம் மூலம் சேகரித்து பதில்களை பதிவேற்றவும், இதரபாடம் சாராத பொது அறிவு, வரலாற்று நிகழ்வுகள், ஆங்கிலத்தில் தவறின்றி எழுதும் பயிற்சி, அறிவியல் வளர்ச்சி உட்பட இதரகற்றல் அம்சங்கள் சார்ந்த வீடியோக்களும், கல்வியாளர்களின் வழிகாட்டுதல், மனநல ஆலோசனைகள், பள்ளி குழந்தைகளுக் கான கதைகளும் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், செல்போன் வசதியில்லாத மாணவர்கள் தங்கள் வீட்டில் உள்ள கல்வி தொலைக்காட்சி வழியாக கற்றல் பணிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். ஆனால், டிவி, கணினி வசதியுள்ளவர்கள் தாம் இவற்றைப் பார்க்க முடியும். இவற்றைப் பார்க்க பெற்றோர், உதவி செய்ய வேண்டும்[10]. பிறகு இல்லாதர்கள் நிலை பற்றிய கேள்வி எழுகின்றது.

CBSE, ISCE exams postponed, tamil hindu, 20-03-2020

2019-2020 கல்வியாண்டு தேர்வுகள் நடக்குமா?: இதனால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடக்கும்? 2020-21-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும்? என்பது தொடர்பாக மாணவ- மாணவிகள் பெரும் எதிர்பார்ப்பில் காத்து இருக்கின்றனர். இத்தகைய சூழலில், இதுதொடர்பாக ஆலோசித்து முடிவு எடுப்பதற்காக பல்கலைக்கழக மானியக்குழு உரிய முடிவு எடுப்பதற்காக நிபுணர் குழுவை அமைத்து இருக்கிறது. இந்த குழுவுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஆர்.சி.குகட் தலைமை தாங்கி இருக்கிறார். மேலும் இந்த குழுவில் சில உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த குழு ஆலோசித்து, பருவத் தேர்வு மற்றும் 2020-21-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் குறித்தும் சில முடிவுகளை எடுத்து அதனை ஒரு அறிக்கையாக 13-ந் தேதி சமர்ப்பிக்க இருந்தது. அதனை அடிப்படையாக வைத்து பல்கலைக்கழக மானியக்குழு 13-ந் தேதிக்கு பிறகு சில முக்கிய முடிவுகளையும், அறிவிப்புகளையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்பொழுது மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளதால், என்னாகும் என்று தெரியவில்லை. அடுத்த கல்வியாண்டே வந்து விடும் நிலையில் நடைமுறை பிரச்சினைகள் அதிகமாகும்.

Television as career Employment news

 ஆன்லைன் மூலம் பயிற்சி எடுக்கும் செயல்பாடுகள்: கரோனா பிரச்சினையால், பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாகி விட்டது. வீட்டடைப்பு, ஊரடங்கு போன்ற நிலைகளில் தேர்வுகள் நடப்பது கேள்வி குறியாகி விட்டது. சில பள்ளிகளில், ஆசிரியைகள் / ஆசிரியர்கள் ஏதோ உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும் என்ற தோரணையில், வாட்ஸ்-அப்பில், “ஹோம்-வொர்க் / அஸைன்மென்ட்” என்று அனுப்புகின்றனர். சரி, எல்லோரிடத்தில் போன் / மொபைல் இருக்கலாம், ஆனால், ஸ்மார்ட் போன் இருக்கும் என்று சொல்ல முடியாது. அப்படியே இருந்தாலும், இன்டெர்நெட் வசதி இருக்க வேண்டும். டவுன்லோன் செய்தால், பிரின்ட் எடுக்க பிரின்டெர் வசதி தேவை. நிச்சயமாக எல்லோருடைய வீட்டிலும் பிரென்டர் இல்லை. கடைகளுக்குச் சென்று, பிரின்ட் எடுக்க இப்பொழுது நிலைமை சரியில்லை. மீறி எடுத்து விட்டால், பிறகு, அவற்றை பூர்த்தி செய்து, அப்லோட் செய்ய வேண்டுமாம். இதெல்லாம், மத்தியதர மற்றும் அதற்கும் கீழுள்ள குடும்பங்களினால் சாத்தியப் படாது. ஆனால், இப்பொழுது சில பள்ளிகள் அவ்வாறு செய்ய ஆரம்பித்து வருவது திகைப்பாக இருக்கிறது. 130 கோடி மக்கள் வாழும் பாரதத்தில், அனைவருக்கும், அத்தகைய வசதிகள் இருக்கும் என்ற நினைப்பில், யூகத்தில், கற்பனையில் செயல் படுவது, மிக்கத் தவறான கொள்கையாகும். இதனால், வசதிகள் இல்லாதவ்வர்கள் பாதிக்கப் படுவர். தனியார் பளிகளின் போக்கு, நடவடிக்கை எப்படியிருக்கும் என்று தெரியவில்லை.

©  வேதபிரகாஷ்

15-04-2020

No schools, be at home, The Pioneer, 11-04-2020

[1] தினத்தந்தி, கல்லூரி, பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடக்கும்? – 13-ந் தேதிக்கு பிறகு முடிவு தெரியும் , பதிவு: ஏப்ரல் 10, 2020 03:30 AM

[2] https://www.dailythanthi.com/News/State/2020/04/10020111/College-and-university-semester-exams-When-will-that.vpf

[3] தினத்தந்தி, ஆன்லைன் மூலம் வகுப்புகள்சென்னை பல்கலை. துணை வேந்தர் உத்தரவு, பதிவு : ஏப்ரல் 02, 2020, 11:02 PM

[4] https://www.thanthitv.com/News/JustIn/2020/04/02230235/1224021/online-classes-chennai-university.vpf

[5] தினமலர், பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம், Added : ஏப் 02, 2020 00:47
https://www.dinamalar.com/news_detail.asp?id=2513563

[6] தினமணி, வீட்டிலிருந்தபடி கற்றலைத் தொடர உதவும் வலைதளங்கள், By DIN | Published on : 15th April 2020 02:18 AM

[7] https://www.dinamani.com/tamilnadu/2020/apr/15/websites-that-help-you-to-continue-learning-at-home-3400721.html

[8] தமிழ்.இந்து,  தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் இணையவழிக் கல்வி வலைதளம் அறிமுகம்: மாணவர்கள் எளிய முறையில் செல்போன் மூலம் படிக்க ஏற்பாடு, Published : 14 Apr 2020 06:41 AM, Last Updated : 14 Apr 2020 06:41 AM,

[9] https://www.hindutamil.in/news/vetrikodi/news/549413-schoold-education-website-2.html

[10]  டிவி-சீரியல் / செய்திகள் பார்க்கும் பெற்றோர் விட்டுத் தருவார்களா என்று பார்க்க வேண்டும்.