பச்சையப்பன் மற்றும் கல்லூரி மாணவர்கள் ரூட்-தல பிரச்சினை – கல், சோடா பாட்டில், பீர் பாட்டில்களை வீசி,உருட்டு கட்டை தாக்குதல், கைது முதலியன (2)

பச்சையப்பன் மற்றும் கல்லூரி மாணவர்கள் ரூட்தல பிரச்சினை – கல், சோடா பாட்டில், பீர் பாட்டில்களை வீசி, உருட்டுகட்டை தாக்குதல், கைது முதலியன (2)

கல், சோடா பாட்டில், பீர் பாட்டில்களை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கினர்.  உருட்டுகட்டையாலும் தாக்கிக்கொண்டனர்: இவையெல்லாம் எப்படி உடனடியாக இவர்களுக்குக் கிடைக்கும் என்று தெரியவில்லை. மாறாக, இவர்கள் ஏற்கெனவே வைத்திருந்தனர் எனும் பொழுது, அத்தகைய வன்முறைக்குத் தயாராக இருந்தனர் என்றாகிறடு. இதில் சில மாணவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. மாணவர்களின் மோதலை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து வேறு ரெயில் பெட்டியில் ஏறினர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மாணவர்கள் மோதல் பற்றி அறிந்ததும் பெரம்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். ரயில் நடைமேடையில் நடந்த இந்த மோதல்சம்பவம், பயணியரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கிக் கொண்டதால், ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினரால் அவர்களை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை. என்றாலும், இதனால், மாணவர்களின் வன்முறை அதிகமாகும், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கருதியிருக்கலாம்.

சிசிடிவி கேமராவில் பதிவை வைத்து கைது, வழக்குப் பதிவு: உடனே மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் 3 மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வன்முறை சம்பவம், ‘சிசிடிவி கேமரா’வில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோவை ஆய்வு செய்து, மோதலில் ஈடுபட்ட இரண்டு கல்லுாரிகளைச் சேர்ந்த 60 மாணவர்கள் மீது, ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்[1]. இது தொடர்பாக இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரு கல்லூரிகளைச் சேர்ந்த 60 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் பெரம்பூர் ரயில்வே போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்[2]. மேலும் மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர்[3]. மற்ற மாணவர்களைத் தீவிரமாகத் தேடும் பணி நடைபெற்று வருகிறது[4]. சட்டத்தை மீறி பொது சொத்தை நாசப் படுத்துவது, அமைதியை குளைப்பது என்பதெல்லாம் படிக்கும் மாணவர்களுக்கு உரிய குணங்கள் அல்ல.

வன்முறையில் ஈடுபட்ட 60 மாணவர்களையும் நிரந்தரமாக நீக்க பரிந்துரை செய்த போலீஸ்: ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., ரமேஷ் கூறியதாவது[5]: “இந்த மோதலில் ஈடுபட்ட 60 மாணவர்களையும் நிரந்தரமாக நீக்க பரிந்துரை செய்து, இரண்டு கல்லுாரிகளின் முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம். சென்னை புறநகரில், 50க்கும் மேற்பட்ட பிரதான கல்லுாரிகள் இருக்கின்றன. ஆனால், ஒரு சில கல்லுாரி மாணவர்கள்அடிக்கடி மோதிக் கொள்வது நல்லதல்ல. பல முறை பிடித்துஎச்சரிக்கை விடுத்தும், அவர்கள் பொது இடங்களில் ஒழுங்கு முறைகளை பின்பற்றுவதில்லை. இனி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” இவ்வாறு அவர் கூறினார்[6]. பொறுப்புடன் தான் இதை சொல்லி இருக்கிறார், போலீஸ் அதிகாரி என்பது மட்டுமில்லாமல் ஒரு தந்தை என்ற முறையிலும் கூறியிருக்கிறார் என்பதை நன்றாக கவனிக்கலாம். இதே போன்ற பொறுப்பு இந்த மாணவர்களின் தாய்-தந்தையர்களுக்கும் இருக்க வேண்டும்.

தினமும் மணவர்கள் ஒழுங்காக வகுப்புகளில் உட்கார்ந்து பாடம் கேட்டாலே, பாதி பிரச்சினை தீர்ந்து விடும்: முதலில் படிக்கும் கல்வி நிறுவனங்களில் அதாவது பள்ளி கல்லூரிகளில் அவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். இப்பொழுது எல்லாம் மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பதில்லை, வகுப்பில் கூட ஒழுங்காக இருப்பதில்லை. பாடம் சொல்லிக் கொடுக்கின்ற வேளையில், நேரங்களில் வெளியில் உட்காருவது, சுற்றி வருவது என்றெல்லாம் செய்து வருகிறார்கள். ஒரு 50 பேர் இருந்தால், ஒரு 10 மாணவர்கள் தான் வகுப்பில் உட்கார்ந்து பாடங்களை கேட்கிறார்கள். மற்றவர்கள் ஊரைச் சுற்றி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அந்த 10 மாணவர்களையும் வகுப்புக்கு செல்ல விடாமல் முயற்சிகளையும் செய்து வருகிறார்கள் என்பதும் தெரிந்த விஷயமாக இருக்கிறது. ஆகவே இத்தகைய ஒழுங்கீனங்களை முதலில் மாணவர்கள் விலக்கிக் கொள்ள வேண்டும். அட்டென்டென்ஸ் / தினசரி வருகை, குறைந்த பட்சம் மதிப்பெண் கொடுப்பது, போன்ற சலுகைகளால், ஏதோ தண்டம் கட்டிவிட்டால், பரீட்சை எழுதி விடலாம், டிகிரி / பட்டம் கிடைத்து விடும் என்பதால், வகுப்பிற்கு செல்ல வேண்டும் என்ற போக்கும் மாறி விட்டது.

சினிமா, ஊடகங்கள் ஒழுன்கீனங்களுக்குக் காரணம்; இப்பொழுதெல்லாம் பிரச்சனை, பிரச்சினையின் மூல காரணம், அது எவ்வாறு உருவாகிறது, அதை தவிர்ப்பது எப்படி என்பதெல்லாம் விட்டுவிட்டு, வேறு வகையில் விளக்கம் கொடுத்து, ஒரு நிலையில அதனை நியாயப்படுத்தும் முறைக்கு கூட இன்றைய சித்தாந்தவாதிகள், அரசியல்வாதிகள், ஏன் மனோதத்துவ ஆலோசர்கள் கூட செய்து வருகிறார்கள். சமூக கட்டுப்பாடு, கல்வி நிலையங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், பொது இடங்களில் எப்படி ஒழுங்காக இருக்க வேண்டும் முதலியவற்றை எல்லாம் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவற்றை, மாணவர்கள் மீறும் பொழுது உடனடியாக அவர்கள் கட்டுப்படுத்தப்படுத்தப் பட வேண்டும். அறிவுரை அல்லது தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இல்லை என்றால், அவர்கள் செய்வதெல்லாம் சரி, ஏற்றுக் கொள்ளப் பட்டவை என்ற மனநிலை வரும்பொழுதும், மற்ற ஊடகங்கள் சினிமா போன்றவற்றில் வருகின்ற வன்முறை காட்சிகள், அடிதடி சண்டைகள் முதலியவற்றைல்லாம் வீட்டில் கூட உட்கார்ந்து மற்ற நண்பர்கள் குடும்பத்தினர், மற்றும் பெரியவர்களுடன் கூட பார்க்கும் பொழுது இதெல்லாம் ஒரு சாதாரணமான விஷயமாகிவிட்டது என்ற மனநிலை உண்டாகலாம். சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது என்பதை கூட இக்கால சிறுவர்கள் இளைஞர்கள் மற்றவர்கள் நினைக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முதலில் அத்தகைய போக்கை மாற்றவேண்டும்.

கல்வியில் ஒழுங்கீனம் ஏற்பட்டால், சமூக்சமே சீரழிந்து விடும்; பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் முதலியவற்றில் வரைமுறை, சட்டதிட்டம் என்றெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியம் உள்ளது. அதேபோல கல்வி கற்பிக்கும் ஒவ்வொரு துறை தலைவர், பேராசிரியர், விரிவுரையாளர் என்று பாடம் எடுக்கும் மற்றவர்களும் அத்தகைய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். ஆனால் இப்பொழுது எல்லாம் ஒவ்வொரு பல்கலைக்கழகம் கல்லூரிகளில் துணைவேந்தர் முதல் பணியாற்றம் மற்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள், போதிக்கும் ஆசிரியர்கள் என்று வரும்பொழுது, அவர்கள் மீதும் ஒழுங்கீனங்கள், சட்டமீறல்கள், ஊழல் என்று, குற்றச்சாட்டுகள் அடிக்கடி வருகின்றன. இவையெல்லாம் ஊடகங்களிலும் விவரங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனால், அங்கு படிக்கும் மாணவர்களுக்கும், அவர்கள் மீதான மரியாதை குறைந்து வர்கிறது. துறை தலைவர் பேராசிரியர் போன்றவர்களே, இப்படி இருக்கிறார்கள், இவர்களிடம் நமக்கு எப்படி ஒழுங்காக பாடம் சொல்லிக் கொடுப்பது என்ற ஒரு மன போக்கும் உண்டாகும். இந்த நிலையில், மன நிலையில் சென்று பதியும் பொழுது, இருக்கும் கொஞ்சம் மரியாதையும் பயமும் கூட போய்விடும் / போய் விடுகிறது. அந்நிலையில் இவர்களே அந்த வன்முறைகளில் விடுகிறார்கள் இதனால் தான் படிப்பு மற்றும் கல்வித் துறை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் குறைந்து கொண்டு, மற்ற காரியங்கள், ஒழுங்கீனங்கள், வன்முறைகள் என்று பல சமூக தீவிரவாத செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

© வேதபிரகாஷ்

15-02-2024


[1] தினகரன், மாணவர்கள் மோதல்: போலீஸ் வழக்குப்பதிவு, February 14, 2024, 8:04 am.

[2] https://www.dinakaran.com/students_clash_police_case_filed/

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ரயில் நிலையத்தில் பீர் பாட்டில் வீசி மோதல்: மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்க ரயில்வே போலீசார் கடிதம்,WebDesk, 14 Feb 2024 13:32 IST.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/railway-police-letter-to-2-college-to-sack-students-involved-in-clash-3749132

[5] தினமலர், 60 பேரை டிஸ்மிஸ் செய்ய ரயில்வே போலீஸ் பரிந்துரை, மாற்றம் செய்த நாள்: பிப் 15,2024 08:02

[6] https://m.dinamalar.com/detail.php?id=3551322

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக