Archive for the ‘மனத்தில் ஏற்றல்’ Category

பச்சையப்பன் மற்றும் கல்லூரி மாணவர்கள் ரூட்-தல பிரச்சினை – கல், சோடா பாட்டில், பீர் பாட்டில்களை வீசி,உருட்டு கட்டை தாக்குதல், கைது முதலியன (2)

பிப்ரவரி 15, 2024

பச்சையப்பன் மற்றும் கல்லூரி மாணவர்கள் ரூட்தல பிரச்சினை – கல், சோடா பாட்டில், பீர் பாட்டில்களை வீசி, உருட்டுகட்டை தாக்குதல், கைது முதலியன (2)

கல், சோடா பாட்டில், பீர் பாட்டில்களை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கினர்.  உருட்டுகட்டையாலும் தாக்கிக்கொண்டனர்: இவையெல்லாம் எப்படி உடனடியாக இவர்களுக்குக் கிடைக்கும் என்று தெரியவில்லை. மாறாக, இவர்கள் ஏற்கெனவே வைத்திருந்தனர் எனும் பொழுது, அத்தகைய வன்முறைக்குத் தயாராக இருந்தனர் என்றாகிறடு. இதில் சில மாணவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. மாணவர்களின் மோதலை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து வேறு ரெயில் பெட்டியில் ஏறினர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மாணவர்கள் மோதல் பற்றி அறிந்ததும் பெரம்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். ரயில் நடைமேடையில் நடந்த இந்த மோதல்சம்பவம், பயணியரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கிக் கொண்டதால், ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினரால் அவர்களை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை. என்றாலும், இதனால், மாணவர்களின் வன்முறை அதிகமாகும், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கருதியிருக்கலாம்.

சிசிடிவி கேமராவில் பதிவை வைத்து கைது, வழக்குப் பதிவு: உடனே மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் 3 மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வன்முறை சம்பவம், ‘சிசிடிவி கேமரா’வில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோவை ஆய்வு செய்து, மோதலில் ஈடுபட்ட இரண்டு கல்லுாரிகளைச் சேர்ந்த 60 மாணவர்கள் மீது, ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்[1]. இது தொடர்பாக இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரு கல்லூரிகளைச் சேர்ந்த 60 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் பெரம்பூர் ரயில்வே போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்[2]. மேலும் மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர்[3]. மற்ற மாணவர்களைத் தீவிரமாகத் தேடும் பணி நடைபெற்று வருகிறது[4]. சட்டத்தை மீறி பொது சொத்தை நாசப் படுத்துவது, அமைதியை குளைப்பது என்பதெல்லாம் படிக்கும் மாணவர்களுக்கு உரிய குணங்கள் அல்ல.

வன்முறையில் ஈடுபட்ட 60 மாணவர்களையும் நிரந்தரமாக நீக்க பரிந்துரை செய்த போலீஸ்: ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., ரமேஷ் கூறியதாவது[5]: “இந்த மோதலில் ஈடுபட்ட 60 மாணவர்களையும் நிரந்தரமாக நீக்க பரிந்துரை செய்து, இரண்டு கல்லுாரிகளின் முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம். சென்னை புறநகரில், 50க்கும் மேற்பட்ட பிரதான கல்லுாரிகள் இருக்கின்றன. ஆனால், ஒரு சில கல்லுாரி மாணவர்கள்அடிக்கடி மோதிக் கொள்வது நல்லதல்ல. பல முறை பிடித்துஎச்சரிக்கை விடுத்தும், அவர்கள் பொது இடங்களில் ஒழுங்கு முறைகளை பின்பற்றுவதில்லை. இனி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” இவ்வாறு அவர் கூறினார்[6]. பொறுப்புடன் தான் இதை சொல்லி இருக்கிறார், போலீஸ் அதிகாரி என்பது மட்டுமில்லாமல் ஒரு தந்தை என்ற முறையிலும் கூறியிருக்கிறார் என்பதை நன்றாக கவனிக்கலாம். இதே போன்ற பொறுப்பு இந்த மாணவர்களின் தாய்-தந்தையர்களுக்கும் இருக்க வேண்டும்.

தினமும் மணவர்கள் ஒழுங்காக வகுப்புகளில் உட்கார்ந்து பாடம் கேட்டாலே, பாதி பிரச்சினை தீர்ந்து விடும்: முதலில் படிக்கும் கல்வி நிறுவனங்களில் அதாவது பள்ளி கல்லூரிகளில் அவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். இப்பொழுது எல்லாம் மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பதில்லை, வகுப்பில் கூட ஒழுங்காக இருப்பதில்லை. பாடம் சொல்லிக் கொடுக்கின்ற வேளையில், நேரங்களில் வெளியில் உட்காருவது, சுற்றி வருவது என்றெல்லாம் செய்து வருகிறார்கள். ஒரு 50 பேர் இருந்தால், ஒரு 10 மாணவர்கள் தான் வகுப்பில் உட்கார்ந்து பாடங்களை கேட்கிறார்கள். மற்றவர்கள் ஊரைச் சுற்றி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அந்த 10 மாணவர்களையும் வகுப்புக்கு செல்ல விடாமல் முயற்சிகளையும் செய்து வருகிறார்கள் என்பதும் தெரிந்த விஷயமாக இருக்கிறது. ஆகவே இத்தகைய ஒழுங்கீனங்களை முதலில் மாணவர்கள் விலக்கிக் கொள்ள வேண்டும். அட்டென்டென்ஸ் / தினசரி வருகை, குறைந்த பட்சம் மதிப்பெண் கொடுப்பது, போன்ற சலுகைகளால், ஏதோ தண்டம் கட்டிவிட்டால், பரீட்சை எழுதி விடலாம், டிகிரி / பட்டம் கிடைத்து விடும் என்பதால், வகுப்பிற்கு செல்ல வேண்டும் என்ற போக்கும் மாறி விட்டது.

சினிமா, ஊடகங்கள் ஒழுன்கீனங்களுக்குக் காரணம்; இப்பொழுதெல்லாம் பிரச்சனை, பிரச்சினையின் மூல காரணம், அது எவ்வாறு உருவாகிறது, அதை தவிர்ப்பது எப்படி என்பதெல்லாம் விட்டுவிட்டு, வேறு வகையில் விளக்கம் கொடுத்து, ஒரு நிலையில அதனை நியாயப்படுத்தும் முறைக்கு கூட இன்றைய சித்தாந்தவாதிகள், அரசியல்வாதிகள், ஏன் மனோதத்துவ ஆலோசர்கள் கூட செய்து வருகிறார்கள். சமூக கட்டுப்பாடு, கல்வி நிலையங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், பொது இடங்களில் எப்படி ஒழுங்காக இருக்க வேண்டும் முதலியவற்றை எல்லாம் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவற்றை, மாணவர்கள் மீறும் பொழுது உடனடியாக அவர்கள் கட்டுப்படுத்தப்படுத்தப் பட வேண்டும். அறிவுரை அல்லது தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இல்லை என்றால், அவர்கள் செய்வதெல்லாம் சரி, ஏற்றுக் கொள்ளப் பட்டவை என்ற மனநிலை வரும்பொழுதும், மற்ற ஊடகங்கள் சினிமா போன்றவற்றில் வருகின்ற வன்முறை காட்சிகள், அடிதடி சண்டைகள் முதலியவற்றைல்லாம் வீட்டில் கூட உட்கார்ந்து மற்ற நண்பர்கள் குடும்பத்தினர், மற்றும் பெரியவர்களுடன் கூட பார்க்கும் பொழுது இதெல்லாம் ஒரு சாதாரணமான விஷயமாகிவிட்டது என்ற மனநிலை உண்டாகலாம். சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது என்பதை கூட இக்கால சிறுவர்கள் இளைஞர்கள் மற்றவர்கள் நினைக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முதலில் அத்தகைய போக்கை மாற்றவேண்டும்.

கல்வியில் ஒழுங்கீனம் ஏற்பட்டால், சமூக்சமே சீரழிந்து விடும்; பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் முதலியவற்றில் வரைமுறை, சட்டதிட்டம் என்றெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியம் உள்ளது. அதேபோல கல்வி கற்பிக்கும் ஒவ்வொரு துறை தலைவர், பேராசிரியர், விரிவுரையாளர் என்று பாடம் எடுக்கும் மற்றவர்களும் அத்தகைய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். ஆனால் இப்பொழுது எல்லாம் ஒவ்வொரு பல்கலைக்கழகம் கல்லூரிகளில் துணைவேந்தர் முதல் பணியாற்றம் மற்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள், போதிக்கும் ஆசிரியர்கள் என்று வரும்பொழுது, அவர்கள் மீதும் ஒழுங்கீனங்கள், சட்டமீறல்கள், ஊழல் என்று, குற்றச்சாட்டுகள் அடிக்கடி வருகின்றன. இவையெல்லாம் ஊடகங்களிலும் விவரங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனால், அங்கு படிக்கும் மாணவர்களுக்கும், அவர்கள் மீதான மரியாதை குறைந்து வர்கிறது. துறை தலைவர் பேராசிரியர் போன்றவர்களே, இப்படி இருக்கிறார்கள், இவர்களிடம் நமக்கு எப்படி ஒழுங்காக பாடம் சொல்லிக் கொடுப்பது என்ற ஒரு மன போக்கும் உண்டாகும். இந்த நிலையில், மன நிலையில் சென்று பதியும் பொழுது, இருக்கும் கொஞ்சம் மரியாதையும் பயமும் கூட போய்விடும் / போய் விடுகிறது. அந்நிலையில் இவர்களே அந்த வன்முறைகளில் விடுகிறார்கள் இதனால் தான் படிப்பு மற்றும் கல்வித் துறை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் குறைந்து கொண்டு, மற்ற காரியங்கள், ஒழுங்கீனங்கள், வன்முறைகள் என்று பல சமூக தீவிரவாத செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

© வேதபிரகாஷ்

15-02-2024


[1] தினகரன், மாணவர்கள் மோதல்: போலீஸ் வழக்குப்பதிவு, February 14, 2024, 8:04 am.

[2] https://www.dinakaran.com/students_clash_police_case_filed/

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ரயில் நிலையத்தில் பீர் பாட்டில் வீசி மோதல்: மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்க ரயில்வே போலீசார் கடிதம்,WebDesk, 14 Feb 2024 13:32 IST.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/railway-police-letter-to-2-college-to-sack-students-involved-in-clash-3749132

[5] தினமலர், 60 பேரை டிஸ்மிஸ் செய்ய ரயில்வே போலீஸ் பரிந்துரை, மாற்றம் செய்த நாள்: பிப் 15,2024 08:02

[6] https://m.dinamalar.com/detail.php?id=3551322

ஆன்–லைன் மூலம் பாட போதனை, கற்றல், மனத்தில் ஏற்றல், பயிற்சி பெறுதல், தேர்வு எழுதுதல் சாத்தியமா? [2]

ஏப்ரல் 16, 2020

ஆன்லைன் மூலம் பாட போதனை, கற்றல், மனத்தில் ஏற்றல், பயிற்சி பெறுதல், தேர்வு எழுதுதல் சாத்தியமா? [2]

e-learning to rescue The Pioneer, 08-04-020

ஆன்லைன் பாடம் நடத்தும் செயல்பாடுகள்: இது இன்னும் செயல்படுத்தவில்லை என்றாலும், அரசுமுறையில் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஊடகங்கள் தத்தமக்கு தெரிந்த படி உசுப்பேற்ற ஆரம்பித்து விட்டார்கள். ஆன்–லைன் வித்தகர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவரவர்களுக்கு ஏற்ற முறையில், ஆலோசனை கூற ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு, இதை வைத்து வியாபாரம் செய்யலாம், என்ற உள்நோக்கமும் உள்ளது. அதனால், நிதர்சனமாக, நடைமுறையில் நிலவரம் என்ன, பிரச்சினைகள் என்ன, அவற்றை சமாளிப்பது எப்படி போன்றவற்றைப் பற்றி கவலைப் படவில்லை. ஏதோ ஆன்–லைன் மூலம், அனைத்தயும் சாதித்து விடலாம் என்ற போக்கில், கற்பனையில் மிதக்கிறார்கள்! அதற்கேற்றப் படி, ஆலோசனைகள், குறிப்புகள், யுக்திகள் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், இருக்கும் ஆசிரியர்களால், அவ்வாறு ஆன்–லைன் மூலம் பாடம் எடுக்க தயாராக உள்ளார்களா, அவர்களால் முடியுமா என்பது பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. இந்த ஆன்–லைன் போதனை, பாடம் நடத்துதல், ஒருவழியாகத் தான் இருக்கும். வகுப்புகளிலேயே மாணவ-மாணவர்கள் பாடம் எடுக்கும் போது, சிரத்தையாக கவனிப்பதில்லை அல்லது ஆசிரியர்களால் ஒழுங்காக பாடம் எடுக்க முடிவதில்லை போன்ற பிரச்சினைகள் உள்ளன. நேரிடையாக பாடம் எடுக்கும் போதே அப்பிரச்சினைகள் இருக்கும் போது, இப்பொழுது ர்ப்படி சமாளிப்பார்கள் என்று பார்க்க வேண்டும்.

Learning online TOI, 03-04-2020

போதித்தல்-கற்றல்-நினைவாற்றல்-தேர்வு முதலியவை: போதித்தல்-கற்றல் முறைகளில் மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்-ஆசிரியைகள் முதலியோருக்குண்டான பல காரணிகள் செயல் படுகின்றன. இதில் கற்றல் என்ற விசயத்தில் பொதுவாக உள்ளவை முக்கியமானவை.

  1. கற்றல், கற்றுக் கொள்ளுதல் – இதற்கு வம்சாவளி மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகள் காரணமாக அமைகின்றன. தொடர்ந்த-தொடர்ந்து பயிற்சிகளால் சரி செய்யலாம், சமன் செய்யலாம், சரி-சமன் செய்யலாம்.,
  2. மனதில் பதித்துக் கொள்ளுதல் – கடந்த கால அறிவு, புரிந்து கொள்ளும் தன்மை. தெரிந்த விசயங்களிலிருந்து, தெரியாத விசயகளை அறிந்து கொள்ளுதல்,
  3. அதனை வெளிப்படுத்துதல் – எந்த அளவுக்கு புரிதல் உள்ளது, புரிந்து கொள்ளப் பட்டுள்ளது, தவறான புரிதலை மாற்றுவது,
  4. அத்தகைய நினைவாற்றலின் தன்மை – புரிந்தவை ஞாபகத்திற்கு உடனே வருகின்றனவா, நேரம் தாழ்ந்து வருகின்றனவா,
  5. வெளிப்படுத்தியதை சீராக-கோர்வையாக எழுதுதல் – இது தொடர்ந்து சிந்திக்கும் ஆற்றல், பயிற்சி முதலியவற்றல் சீரமைக்கலாம்,
  6. தேர்வுக்கு தயார் படுத்துதல் – குறைந்த ஆற்றல் கொண்ட குழந்தைகளுக்கு அதிகமான சிரத்தையுடன் முன்னுக்குக் கொண்டுவருவது கடமையாகிறது.
  7. எழுதும் தன்மை, திறமை – இதற்கும் பயிற்சி தேவை,
  8. அச்சப்படாமல்-குழம்பாமல் கேட்ட கேள்விகளுக்கு, முறையாக எழுதுதல்,
  9. எப்படி எழுதினால் மதிப்பெண் கிடைக்கும், தேவையில்லாமல் எழுதுவதை தவிர்ப்பது.
  10. இவற்றையெல்லாம் வெற்றிகரமாக முடிக்க சிறந்த மனம்-உடல் ஆரோக்கியம் தேவைப் படுகிறது. அவற்றையும் பெற்றோர், உற்றோர், மற்றோர், அரசு முதலியவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

என்று பல விசயங்கள் இவற்றில் உள்ளன. “விகாஸ்பீடியாவில்” இவற்றைப் பற்றியெல்லாம், அருமையாக, தமிழில் கொடுத்துள்ளார்கள்[1]. அவற்றை, எல்லோரும் படிக்கவேண்டும்.

Changes introduced by online coaching The Hindu Tamil 17-03-2020

பள்ளி மாணவமாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லமுடியாத நிலையில், கீழ்கண்ட நிதர்சன நிலைகளை அரசு, பள்ளி அதிகாரம், ம்ற்றவர்கள் யோசித்துப் பார்த்துள்ளனரா?:

  1. பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவர்களிடம் எத்தனை பேரிடத்தில் டெஸ்க்-டாப், லேப்-டாப், ஸ்மார்ட் போன் இருக்கிறது.
  2. இன்டெர்நெட் வசதிகளுடன் இருக்கிறது. நன்றாக உபயோகப் படுத்தத் தெரியும்.
  3. மின்சார சப்ளை தொடர்ந்து, தடை இல்லாமல், எல்லா கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ளது.
  4. இன்டெர்நெட் வசதி, சப்ளை நன்றாக வேலை செய்கிறது.
  5. பிரென்டர் போன்ற வசதிகள் உள்ளன.
  6. அப்லோட் செய்யும் வசதி உள்ளது, வீட்டில் மாணவ-மாணவர்களுக்கு உதவ பெற்றோர், மற்றோர் உள்ளனர்.

இப்பொழுது, தினம்-தினம் உணவிற்காக பாடுபடுவதே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஏழை, கீழ்தட்டு-நடுத்தர மக்களுக்கு உணவு பிரச்சினை பெரிதாக உள்ளது. அந்நிலையில், இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாது என்றாகிறது.

Class conducted through whatsup- assam tribune, - 20-03-2020

நடைமுறையில் எழும் கேள்விகள்: 2020-2021 வருடத்தைய கல்வி, படிப்பு, ஆசிரியர் போதனை, தேர்வு, பயிற்சி, வேலை முதலிய விசயங்களில் பல கேள்விகள் எழுகின்றன!

  1. பாடதிட்டங்களின் படி, செயல்முறை வகுப்புகள், பயிற்சிகள் நடக்குமா, அல்லது அவசர-அவசரமாக முடிப்பார்களா, சமரசம் செய்து கொள்வார்களா தெரியவில்லை! அதாவது, முழு பாடதிட்டத்தை முடிக்க முடியுமா என்று தெரியவில்லை.
  1. எட்டாவது வரை எல்லாம் பாஸ் என்றால், பத்தாவது வரை அவ்வாறு செய்ய வேண்டும் போன்ற ஆலோசனைகள் எழுப்பப்படுகின்றன[2]. ஆனால், இவையெல்லாம், கல்வித் தரனை பாதிக்கும்.
  1. மேற்படிப்பு, குறிப்பாக அயல்நாட்டு படிப்பு கனவுகள் மொத்தமாகத் தகர்ந்து விடும் நிலையில் இருக்கின்றன, முயற்சி, பணம் ………..விரயமாகலாம்! அந்நிய பல்கலைக் கழகங்கள் இந்திய மாணவர்களுக்குக் காத்திருக்குமா அல்லது இது உலகளாவிய பிரச்சினையாக இருப்பதால், மாற்றிக் கொள்வார்களா என்று தெரியவில்லை. அத்தகையோருக்கு ஒரு கல்வியாண்டு விரயமாகலாம்.
  1. தொழிற்துறை படிப்புகள்E / B.Tech படித்த மாணவர்களுக்கு, தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பது, மேலும் கஷ்டமாகும்! இல்லை, இவ்வாண்டு, கொஞ்சம் சலுகை ரீதியில் கவனிக்கப் படவேண்டும். இருப்பினும், “கேம்பஸ் இன்டெர்வியூ” –வை மறந்து விட வேண்டியதுதான். இருக்கின்ற தொழிற்சாலைகள் திறந்தால் தான், வேலை வாய்ப்பு பற்றி சிந்திக்கலாம்.
  1. ICSE, CBEC போன்றவை 2020-2021 கல்வியாண்டின் பாடதிட்டத்தி படி, பாடங்களை ஆன்-லைனில் போதிக்க ஆரம்பித்து விட்டனர்.
  1. அரசு பள்ளிகளும் இதே யுக்தியை பின்பற்ற ஆரம்பித்துள்ளன. பொதிகை டிவியில் பாடங்கள் ஒலி-ஒலிபரப்பு நடக்கின்றன. தனியார் தொலைகாட்சிகளும் இதனை செய்ய வேண்டும்.
  1. ஆனால், 2019-2020 கல்வியாண்டின் தேர்வு எப்பொழுது நடக்கும் என்று தெரியவில்லை, பரீட்சை அட்டவணயும் அறிவிக்கப் படவில்லை!
  1. நான்காவது படிக்கும் குழந்தைகளுக்கு வீடியோ பாடம் அனுப்பி, படிக்க சொல்கிறார்கள், கேள்விகளுக்கு பதில் கேட்கிறார்கள்! பெற்றோர்களையும் பங்கு கொள்ளுங்கள் என்று வற்புருத்துகிறார்கள், இது எல்லா குடும்பங்களுக்கும் ஒத்து வருமா என்று கவனிக்க வேண்டும். இதனால், பெற்றோர்களுக்கு அதற்கேற்ற முறையில் தவமைத்துக் கொள்ள பாடங்கள் நடத்தப் படுகின்றன, கற்றுக் கொண்டு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
  1. சரி தேர்வை யார் எழுதுவார்கள்? ஆன்லைனில் எழுதலாமா, பெற்றொர்களே எழுதலாமா? இல்லை இதற்கெல்லாம் டியூஷன் தேவையா? இதையெல்லாம் யார் கண்காணிப்பது. ஆன்லைனில் எழுத வேண்டும் என்றால், கண்காணிப்புக்கு, மறுபடியும் மாணவர்கள் எப்படி ஒரு இடத்திற்கு வர முடியும்.
  1. இப்படி ஏகப் பட்ட நடைமுறைப் பிரச்சினைகள், அசாத்தியங்கள் முதலியன இருந்தாலும், ஏதோ கடமைக்கு செட்ய வேண்டும் என்ற ரீதியில், அதிரடியாக, அறிக்கைகள், சுற்றறிக்கைகள், செய்திகள், முதலியவை ஆரம்பித்து விட்டன.

©  வேதபிரகாஷ்

15-04-2020

Children learn online, Midday, 01-04-2020-2

[1] https://ta.vikaspedia.in/education/b86b9abbfbb0bbfbafbb0bcdb95bb3bcd-baab95bc1ba4bbf/baebc1ba9bcdbaabb3bcdbb3bbfb95bcd-b95bb2bcdbb5bbfbafbbfbb2bcd-b86b9abbfbb0bbfbafbb0bcdb95bb3bbfba9bcd-baaba3bbfb95bb3bcd-1/b95bb1bcdbb1bb2bcd-b95bb1bcdbaabbfba4bcdba4bb2bcd-b9abbfbb1baabcdbaabbeb95-ba8bbfb95bb4-b86b9abbfbb0bbfbafbb0bc1b95bcdb95bbeba9-b9abbfbb2-baabb0bbfba8bcdba4bc1bb0bc8b95bb3bcd

[2] இதில் அரசியல்வாதிகள் நுழைந்து கருத்துகளை சொல்லி, அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஏனெனில், அவர்களுக்கு கல்வி, கல்வி தரன் பற்றி கவலைப் படுவதில்லை.