Archive for the ‘கற்றல்’ Category

பச்சையப்பன் மற்றும் கல்லூரி மாணவர்கள் ரூட்-தல பிரச்சினையில் மோதல், அடிதடி, கைது முதலியன (1)

பிப்ரவரி 15, 2024

பச்சையப்பன் மற்றும் கல்லூரி மாணவர்கள் ரூட்தல பிரச்சினையில் மோதல், அடிதடி, கைது முதலியன (1)

பல உயர்ந்தவகளை உருவாக்கியது பச்சையப்பன் கல்லூரி: சென்னையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக திகழும் பச்சையப்பன் கல்லூரி, 1842-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் எதிர்ப்பையும் மீறி தமிழ்நாட்டில் தனியாரால் தொடங்கப்பட்ட முதல் கல்லூரி என்ற பெயரைப் பெற்றதாகும். வள்ளல் பச்சையப்ப முதலியாரின் (1754-1794) ஆசைப்படி பள்ளியாக உருவாக்கப்பட்டு, 1889-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியாக தரம் உயர்ந்தது. அதிலிருந்து தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றும் முக்கிய தலைவர்கள் உருவாகும் இடமாக பச்சையப்பன் கல்லூரி மாறியது. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பெயர் வாங்கிக் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் சி. என். அண்ணாதுரை தொடங்கி, க. அன்பழகன், நெடுஞ்செழியன், துரைமுருகன், கணிதமேதை ராமானுஜம், பம்மல் சம்பந்த முதலியார், தமிழறிஞர் மு.வரதராசனார், ஆர். எஸ். மனோகர், எனப் பட்டியல் நீண்டு, நா. பார்த்தசாரதி, கவிஞர் வைரமுத்து நா. முத்துக்குமார் என தொடர்ந்துகொண்டே போகும். தவிர, விளையாட்டு வீரர்கள், சிறந்த மருத்துவர், பொறியாளர், அரசு அதிகாரிகள் என்றும் பலர் இருக்கிறார்கள்.

அரசியலால் ஒழுக்கம் சிதைந்து சீரழிந்த கல்லூரி: மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட எண்ணற்ற தேசிய தலைவர்களும் வந்து உரையாற்றிய இடமாக திகழ்ந்த பச்சையப்பன் கல்லூரி, லட்சக்கணக்கான மாணவர்களை சமூகத்திற்குக் கொடுத்திருக்கிறது. அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், கவிஞர்கள், பேராசிரியர்களை உருவாக்கியது, ஏழை எளிய மாணவர்கள் பலர் பயின்று, தங்கள் வாழ்க்கையில் கல்வியின் ஒளி கண்ட பச்சையப்பன் கல்லூரி, தற்போதோ தலைகீழ் நிலைமையைக் கண்டு தவித்து வருவதே நிதர்சனம். முன்பெல்லாம் பச்சையப்பன் கல்லூரி என்ற பெயரைக் கேட்டு மரியாதை செலுத்திய தமிழ் மக்கள், இப்போது முகம் சுழிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது. இரண்டு நிலைமைகளுக்கும் காரணம் அதில் படித்த மாணவர்களின் நடவடிக்கைகள் என்பதே வேடிக்கையான விஷயம்[1]. பிற கல்லூரி மாணவர்களுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் மோதல், அரசுப் பேருந்துகளில் ரூட் தல விவகாரம், கல்லூரியின் நிர்வாகத்திலும் பேராசிரியர் நியமனங்களில் முறைகேடு என, பெயர்போன கல்லூரியின் பெயர் நாளுக்கு நாள் பின்னுக்குப் போய்க்கொண்டிருக்கிறது[2].

மாநிலக் கல்லூரியும் அப்படியே; சென்னை மாநிலக் கல்லூரி (Presidency College), தமிழ்நாட்டில், சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கல்லூரி சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னோடி என்ப்படுகின்றது. இக்கல்லூரி ஹயர் பர்டன் பவல் எனும் கணிதவியல் பேராசிரியரால் 1840 இல் திறக்கப்பட்டது. சிறந்த முன்னாள் மாணவர்கள் பட்டியலில் சிலர்:

தி. முத்துச்சாமி அய்யர் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி

ச. வெ. இராமன் – அறிவியலாளர்

சுப்பிரமணியன் சந்திரசேகர் – இயற்பியலாளர்

எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன் – கணிதவியலாளர்

சிதம்பரம் சுப்பிரமணியம் – முன்னாள் மத்திய அமைச்சர்

ம. சிங்காரவேலர் – விடுதலைப் போராட்ட வீரர்

நெ. து. சுந்தரவடிவேலு – சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்

சாலை இளந்திரையன் – எழுத்தாளர் – தமிழறிஞர்

சாலினி இளந்திரையன் – எழுத்தாளர்

அப்துல் ஹமீத் கான் முன்னாள் மேயர்

எம். எஸ். கிருஷ்ணன் புவியியலாளர்

ரூட்டு-தல பிரச்சினை: சென்னையில் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வருகிறது[3]. அவர்கள் பஸ், ரெயில் நிலையங்களில் கோஷ்டிகளாக மோதிக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகின்றன[4]. ரூட்டு தல பிரச்சினையே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மோதலில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் கைது செய்தும், எச்சரித்தும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் மாணவர்களிடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்று காலையும் மின்சார ரெயிலில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி 14-02-2024 அன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தது. “சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரயில் ஒன்று நேற்று பிற்பகல் சென்றுள்ளது.” என்கிறது நக்கீரன்[5]. “இந்த ரயிலில் மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த ஏராளமன மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். அதன்படி இந்த ரயில் பட்டரவாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. அப்போது அங்கு காத்திருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களால் தாக்கியுள்ளனர்[6]. பதிலுக்கு மாநிலக் கல்லூரி மாணவர்களும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.”

ரெயிலில், ரெயில் நிலையத்தில் வன்முறை கூடாது; காலை நேரம் என்பதால் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது[7]. இதில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரியில் படிக்கும் திருத்தணி, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயணம் செய்தனர்[8]. பட்டரைவாக்கம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தபோது ஒரு பெட்டியில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது[9]. திடீரென்று ஏற்பட வாய்ப்பில்லை, மாறாக, அவர்கள் திட்டமிட்டே செய்திருக்கக் கூடும். இருப்பினும், ஆயிரக் கணக்கான, பொது மக்கள் பயணிக்கும் ரெயிலில், ரெயில் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டது, சட்டத்தை மீறியகுற்றமாகும். அவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர்[10]. இதனை கண்டு ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்[11]. இதற்குள் பட்டரைவாக்கம் ரெயில் நிலையத்தை அடைந்ததும் மின்சார ரெயில் நின்றது[12]. உடனே ரெயிலில் இருந்து இறங்கிய பச்சயைப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். மேலும் கல், சோடா பாட்டில், பீர் பாட்டில்களை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கினர்.  உருட்டுகட்டையாலும் தாக்கிக்கொண்டனர்.

© வேதபிரகாஷ்

15-02-2024


[1] குமுதம், பல ஜாம்பவான்களை உருவாக்கிய கல்லூரிக்கு இந்த நிலைமையா? வைரலாகும் வன்முறை, Feb 14, 2024 – 15:11  Feb 14, 2024 – 17:58.

[2] https://kumudam.com/Violence-Culture-rising-on-Pachaiyappas-college-student

[3] மாலைமுரசு, பீர் பாட்டிலை வீசி மாணவர்கள் மோதல்கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்க ரெயில்வே போலீசார் கடிதம், Byமாலை மலர், 14 பிப்ரவரி 2024 12:55 PM.

[4] https://www.maalaimalar.com/news/state/tamil-news-students-clash-at-railway-station-703119

[5] நக்கீரன், கல்லூரி மாணவர்கள் மோதல்; 60 பேர் மீது வழக்குப்பதிவு!, செய்திப்பிரிவு,

 Published on 14/02/2024 | Edited on 14/02/2024

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/college-students-incident-case-against-60-people

[7] தமிழ்.ஏபிபி.லைவ், Train Violence : மின்சார ரயிலில் மோசமாக தாக்கிக்கொண்ட மாணவர்கள்! சென்னையில் பயங்கரம்!, By : சுகுமாறன் |PUBLISHED AT : 14 FEB 2024 08:09 PM (IST),  Updated at : 14 Feb 2024.

[8] https://tamil.abplive.com/news/chennai/chennai-college-students-fight-with-bottles-stones-patravakkam-railway-station-chennai-passenger-train-167549

[9] இடிவிபாரத், பீர் பாட்டிலை வீசி மாணவர்கள் மோதல்.. ரணகளமான பட்டரவாக்கம் ரயில் நிலையம்– 60 பேர் மீது வழக்குப்பதிவு!, By ETV Bharat,  Tamil Nadu Desk. 14 Feb 2024.

[10] https://www.etvbharat.com/ta/!state/route-thala-clash-between-two-college-students-in-pattaravakkam-railway-station-tns24021403819

[11] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், சென்னை: பீர் பாட்டில் வீசி மாணவர்கள் மோதல்.. கலவர பூமியான ரயில் நிலையம்.. 3 பேரை அலேக்காக தூக்கிய போலீஸ்!, Raghupati R, First Published Feb 14, 2024, 7:55 PM IST, Last Updated Feb 14, 2024, 7:55 PM IST.

[12] https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/at-the-chennai-train-station-students-from-two-city-colleges-fight-throw-stones-and-three-held-rag-s8uo2r

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணி நீக்கத்தினால் கல்வித் திறன் மேன்படுமா, ஊழல் குறையுமா? (2)

நவம்பர் 19, 2023

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணிநீக்கத்தினால் கல்வித்திறன் மேன்படுமா, ஊழல் குறையுமா?  (2)

பணத்தினால் கல்வித்துறையில் எதனை அல்லது எதையும் சாதிக்கலாம்: கல்வியில் ஊழல் என்பது நினைத்துப் பார்க்க முடியாத்து என்று இருந்தது. ஆனால், இப்பொழுது நாறுகிறது.

  • முதலில் “கல்வி ஊழல்” என்பது பணம் இல்லாத பலன்களை மட்டுமே எதிர்பார்த்து நடந்து கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது பணம் தான் பிரதானமாக இருப்பதினால் பணத்தினால் எதையும் வாங்கிவிடலாம்,
  • “எதையும்” அதாவது கல்வியில் படிக்காமலேயே டிகிரி சர்டிபிகேட், சான்றிதழ், மார்க் லிஸ்ட், முதலிய பெற்று விடலாம்,  
  • அது மட்டும் இல்லாமல் பணத்திற்கு ஏற்ப இப்பொழுது அவற்றை பெறலாம், தேவைக்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்,
  • இல்லை தமக்கு பதிலாக ஒருவரை வைத்துக் கூட தேர்வு எழுதப்படலாம்.,
  • தேர்வு எழுதி வைத்துக் கொள்ளலாம், பாஸ் ஆகலாம்,
  • அதன்படியே சான்றிதழ் பெறலாம்
  • இவரெல்லாம் கூட மறைந்து, பிறகு அத்தகைய போலி அல்லது அதர்மமுறையில் பெறப்பட்ட சான்றிதழ்களை வைத்துக்கொண்டு வேலைக்கு செல்வது
  • அதிலும் என்ன புண்ணியமாக மிகச் சிறப்பாக நினைத்து வரப்படுகின்ற ஆசிரியர் வேலைகளுக்கு அத்தகைய அநியாயமான சான்றிதழ்களை கொடுத்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது

பிறகு அத்தகைய ஆசிரியர்கள் எவ்வாறு ஒழுக்கத்துடன், நியாயத்துடன், தர்மத்துடன் இருப்பார்கள், நடந்து கொள்வார்கள்.

யோக்கியம் இல்லாதவர்கள் கல்வித்துறையில் இருப்பதற்கு யார் காரணம்?: சமீபகாலமாக நடந்த முறைகேடுகளில் இரண்டு முறைகேடுகள், கல்வித் துறையின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கியுள்ளன[1].  அமைச்சர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்துவரும் நிலையில், ஊழலற்ற, நேர்மையான அடுத்த தலைமுறையை உருவாக்கவேண்டிய மாபெரும் பொறுப்பு கல்வித் துறைக்கு உண்டு[2], என்றெல்லாம் பேசவேண்டிய நிலை வந்து விட்டது. “கல்வித்துறை” என்றால் என்ன, அதில் உள்ளவர்கள் ஹகுதியுள்ளவர்களா என்று யோசிக்க வேண்டும். இன்று “சினிமாக்காரர்கள்,” கெட்ட-பஷை பேசுபவர்கள், யோக்கியதை இல்லாதவர்கள் உறிப்பினர்களாக இருக்கின்றனர். ஊழல்களில் சம்பந்தப்பட்ட துணைவேந்தர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாலும்,

  • அதற்கு அவர்கள் மட்டும்தான் காரணமா?
  • இந்த அளவுக்குக் கல்வித் துறையில் ஊழல் பெருக என்ன காரணம்?
  • ஒரு பல்கலைக் கழக துணைவேந்தர் தனியாக தவறு செய்ய முடியாது. கூட இருக்கும் பதிவாளர், டீன், சூப்பரவசைர்கள், வினாத்தாள் திருத்துபவர்கள், கணக்கர்கள் என சகலரையும் அதில் இணைத்தே செய்ய முடியும்![3]
  • லஞ்சம் வாங்குவது ஒரு பெருங்குற்றமல்ல என்ற மனநிலைக்கு அவர்கள் செல்வதற்கு என்ன காரணம்?
  • ஒழுக்கத்தை கற்க வேண்டிய இடத்தில் மாணவர்கள் ஊழலை கற்று வெளியேறுகின்றனர்[4]

ஒட்டுமொத்தக் கல்வித் துறையே பணம் சார்ந்த ஒன்றாக மாறிவிட்ட சூழலையும் இதனுடன் சேர்த்துப் பார்க்கவேண்டியுள்ளது.

சுயநிதிக் கல்லூரிகளின் வருகையில்கல்வி ஊழல் ஆரம்பித்தது: 1985-களில் சுயநிதிக் கல்லூரிகளின் வருகை ஆரம்பித்தது. அப்போதுதான் கல்வி வியாபாரமும் ஆரம்பமானது என்று கருத்துத் தெரிவிப்பது, அரசியல்வாதிகள் அதில் முதலீடு செய்ததனால் தான் என்ற உண்மையினை மறைக்கின்றனர். “அந்தக் காலகட்டத்தில் கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் நியமனத்தில் பங்குவகித்தனர். அப்போதும் சிறு சிறு பிரச்னைகள்  எழும். அதை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் எதிர்க்கப் பட்டுள்ளது,” என்று நாஜுக்காக குறிப்பிட்டுக் கொண்டாலும், ஊழல், ஊழல் தான், அதனை நியாயப் படுத்த முடியாது. ஆனால், அப்போது நடைபெறும் ஊழல்களைவிட பல மடங்கு மோசமான முறைகேடுகள் இப்போது நடைபெறுகின்றன, என்றும் ஒப்பீடு செய்ய முடியாது. கல்வி வியாபாரிகள் ஒருபக்கமும், வேலையை ஏலம்விடும் வியாபாரிகள் மறுபக்கமும் உள்ளனர். குறிப்பாக, அரசு வேலைகளை நம்பி தமிழ்நாடு தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் வாரியம் (TRB) மூலம் நடத்தப்படும் தேர்வுகளை எழுதிவிட்டு, ஏழை மக்கள் பலர்  வேலைவாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஊழல் மூலம் அவர்களது வாய்ப்பு பறிக்கப்படுகிறது. உயர்கல்வித் துறையின் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தொடங்கி இந்நாள் அமைச்சர் அன்பழகன் வரை உயர்கல்வித் துறையில் உரிய நடவடிக்கை எடுத்தார்களா என்பது கேள்விக்குறியே!

இதுவரை நடந்துள்ள கைதுகள் முதலியன: பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை, கைதானவர்கள் எதைப் பற்றியும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. இந்து அறநிலையத்துறை கைதுகள் போலத்தான் இதுவும் இருக்கிறது.கைதானவர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை.

  1. பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தற்கொலை செய்துகொண்டார். அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது.
  2. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வித் துறையில் ஊழல் நடைபெற்றது குறித்த செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகின.
  3. அரசு உதவி பெறும் கல்லூரிகளில், கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற நியமனங்களில் ஊழல் நடைபெற்றது குறித்து, ஆசிரியர் சங்கங்கள் போராடிவருகின்றன.
  4. பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனத்தில் நடைபெற்ற கோடிக்கணக்கான ரூபாய் ஊழல்தான் வெளியே வந்துள்ளன.
  5. துணைவேந்தர்கள் பலர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
  6. எஸ்.ஆர்.எம் கல்லூரியின் மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு குறித்தும் விவகாரங்கள் தெரிய வந் துள்ளன.

ஆசிரியர் பணிகள்விற்கவாங்கப் படுகின்றனவா?: துணைவேந்தர் பணி நியமனத்தில் கல்வியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு  ஊடகங்கள் கருத்துத் தெரிவித்தன. சமூகச் செயற்பாட்டாளர் பாலம் நாராயணன், இதற்காக வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு முன்னரே தனியார் மருத்துவக் கல்லூரியான பள்ளிக் கல்வி தொடங்கி பல்கலைக்கழகக் கல்வி வரை அனைத்து ஆசிரியர்  பணி நியமனங்களிலும் ஊழல் நடைபெற்றால், எப்படிப்பட்ட கல்வியை நாம் மாணவர்களுக்கு அளிக்கப்போகிறோம்? இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அரசு, பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவந்தாலும், ஆசிரியர் பணிகள் ஏலம்விடப்பட்டுக் கொண்டிருக்கும்போது அவை எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தும்? தனியார் கல்லூரியின் கட்டணக் கொள்ளையும் அரசு நிறுவனங்களின் ஊழலும் கல்வியை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இல்லாமல் செய்துவருகின்றன. பாரதியார் பல்கலைக்கழகம் மட்டுமன்றி, கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்துத் துணைவேந்தர் பணி நியமனங்களிலும் அரசு தலையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ஆசிரியர்உதவி பேராசிரியர்பேராசிரியர் பணம் கொடுத்து வாங்கப்படும் பதவிகளா?: எல்லா அரசுப் பணி நியமனங்களிலும் பணம் கொடுத்தால்தான் பதவி என்பதை வெளிப்படையாக அனைத்து மக்களும் பேசிக்கொள்கின்றனர். ஆசிரியர் பணி நியமனங்களிலும், துணைவேந்தர் பணி நியமனங்களிலும் என்ன மாதிரியான வெளிப்படைத்தன்மை இருக்கிறது? எதன் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுகிறது என்பது பற்றிய உண்மைத்தன்மையே இல்லை. இங்கு நடைபெறும் ஊழல் என்பது, வெறுமனே துணைவேந்தர் மட்டுமே சம்பந்தப்பட்டது கிடையாது; இது ஒரு பெரிய அங்கம்போல் செயல்படுகிறது. இதன் பின்னால் அரசியல்வாதிகள், அதிகாரிகள் எனப் பலர் இருப்பர். கல்வித் துறை, கடந்த பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதிக்கும் துறையாக மாறியிருக்கிறது. இதை ஊடகங்களும் பொதுமக்களும் பெரும் விவாதமாக மாற்றினால் மட்டுமே இந்தப் போக்கை மாற்ற முடியும்.

கல்விவியாபாரத்தால், கல்விஊழல் உண்டானதா?: கல்வி-கல்லூரி முதலாளிகளாக பல பணக்காரர்கள் வந்துவிட்ட கல்வித் துறை முழுக்கவே வியாபார மயமாகிவிட்டது. கிராமப்புற மாணவர்களும் ஏழை மாணவர்கள் பலரும் அரசுக் கல்லூரியை மட்டுமே நம்பி உயர்கல்வியை நோக்கிப் பயணிக்கின்றனர். பல்கலைக்கழகங்களில் நடக்கும் இதுபோன்ற ஊழல்கள், கல்வித் துறையின் மீதும் ஆசிரியர்கள் மீதும் உள்ள மதிப்பைக்  கெடுத்துவிடுகின்றன; `கல்வியின் மூலம் மட்டுமே தனக்கான வாழ்வை மீட்க முடியும், சமூகத்தில் நல்ல நிலையை எட்ட முடியும்’ என நம்பும் பல லட்சம் மாணவர்களையும் பெற்றோர்களையும் நம்பிக்கை இழக்கச் செய்கின்றன. இதுபோன்ற முறைகேடுகளைக் களையும் வகையில்  அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், ஒரு தலைமுறையே பாதிக்கும் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்!

© வேதபிரகாஷ்

18-11-2023.


[1] விகடன், கல்வித் துறையில் ஊழல்பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவந்தால் மட்டும் போதுமாதீர்வு என்ன?!, சக்தி தமிழ்ச்செல்வன், Published: 05 Feb 2018 7 PM; Updated:05 Feb 2018 7 PM.

[2] https://www.vikatan.com/education/115542-educational-activists-view-about-bharathiyar-university-vice-chancellors-corruption

[3] சாவித்திரி கண்ணன், ஊழலில் ஊறித் திளைக்கும் உயர்கல்வித் துறை!, அறம் இணைய இதழ், October 24, 2022.

[4] https://aramonline.in/10997/corruption-in-higher-education/

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணிநீக்கம் (1)

நவம்பர் 19, 2023

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணிநீக்கம் (1)

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிசெலவினங்கள் மூலம் ஆரம்பித்த கல்விஊழல்: கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, கடலூா் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதி, நியமனம், செலவினங்கள் பற்றிய விவரங்கள்-விவகாரங்கள் திருப்தியற்ற நிலையிலே இருந்தது. பல ஆடிட் / தணிக்கைக் குழுக்களின் சோதனைகளில் பணம் சரியாக கையாளப் படவில்லை மற்றும் செலவினங்கள் முறையாக கணக்குகளில் கொண்டுவரவில்லை-வரப்படவில்லை என்றெல்லாம் அறிக்கைகள் வெளிவந்தன. பணம் வாங்கிக் கொண்டு, ஆயிரக்ககணக்கில் வேலை நியமனம் செய்யப்பட்டது முதல் பலவித ஊழல்களும் மலிந்துள்ளன. பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் எனச் சுமார் 12,000 பேர் பணியாற்றிவருகின்றனர்[1]. நிர்வாகக் குளறுபடி மற்றும் அளவுக்கு அதிகமான ஊழியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது பல்கலைக்கழகம்[2]. ஒரு கட்டத்தில் ஊழியர்களுக்கே சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கருதி, 2013-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை ஏற்று, தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார்.

தமிழக அரசு கட்டுப்பாட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: நிதி நெருக்கடி, நிதி முறைகேடுகள் காரணமாக, கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. பல்கலைக்கழக நிர்வாகியாக தற்போதைய தலைமைச் செயலா் ஷிவ்தாஸ் மீனாவை 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-இல் தமிழக அரசு நியமனம் செய்து, அவா் உடனடியாகப் பொறுப்பேற்றார். பின்னா், தமிழக அரசு உயா் கல்வித் துறை மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர சட்டப் பேரவையில் புதிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. தொடா்ந்து, பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாகி ஷிவ்தாஸ் மீனாவால் பல்வேறு கல்வி, நிதி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதையடுத்து பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் எனச் சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்கள், தமிழகத்திலுள்ள மற்ற கல்லூரிகளுக்கும், வேறு துறைகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்[3].  தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் தணிக்கைக்குழு ஆய்வு மேற்கொண்டபோது, போதுமான கல்வித் தகுதி இல்லாமல் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத அலுவலர் என 200-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிவது தெரியவந்தது[4]

2023ல் 56 உதவிப் பேராசிரியா்கள் பணி நீக்கம் அறிவிப்பு ஆணை: மேலும், பல்கலைக்கழகத்தில் அரசு விதிமுறைகளின்படி பணி நியமனம் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு[5], உயா் கல்வித் துறைக்கு அவா் அறிக்கை சமா்ப்பித்தார்[6].. அதன்படி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் 56 உதவிப் பேராசிரியா்கள் அடிப்படை கல்வித் தகுதி மற்றும் அரசு தகுதி விதிமுறைகளைப் பின்பற்றாமல் பணியாற்றி வந்ததாகக் கூறி[7], தமிழக அரசு உயா் கல்வித் துறை பரிந்துரையின்பேரில், அவா்களை பணி நீக்கம் செய்து பதிவாளா் (பொ) ஆா்.சிங்காரவேலு வியாழக்கிழமை 16-11-2023 உத்தரவு பிறப்பித்தார்[8]. பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றி வரும் 18 பேருக்கும்[9], வெளிக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் 38 பேருக்கும் உத்தரவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்[10].

புகழ் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலை: உலகெங்கும் அண்ணாமலையில் படித்தவர்கள் உள்ளனர். பண்டித மணி கதிரேசன் செட்டியார் போன்ற சிறந்த தமிழ் அறிஞர்கள் தலைமையில் தமிழ் ஆராய்ச்சி ஜொலித்தது. பல அறிய படைப்புகள் வெளிவந்தன. தண்டபாணி தேசிகர் ரங்காச்சாரி போன்றோர் இசைக்கல்லூரியை அலங்கரித்தனர். சர் சி பி ராமஸ்வாமி ஐயர் போன்றோர் துணைவேந்தர்களாக பணியாற்றினார். அந்த பல்கலைக்கா இந்த நிலைமை. பொது உடைமையாக்கி நாசப்படுத்தி விட்டார்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் போதிய தகுதி இல்லாத காரணத்தால் பேராசிரியர்கள் 58 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போலி கல்விச் சான்றிதழ்களை வழங்கி பணியாற்றி வந்ததாக எழுந்த புகாரின் பேரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுதைய உயர்க்கல்வித்துறை அமைச்சறின் ஆதரவு: இந்நிலையில் உயர்க்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்[11]. விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யுஜிசி விதிமுறைகளின்படி, உதவிப் பேராசிரியர்கள் நெட் அல்லது ஸ்லெட் தகுதித் தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது பி.எச்.டி படிப்பை முடித்திருக்க வேண்டும்[12]. ஆனால் அந்த தகுதிகள் எதுவும் இல்லாதவர்கள் உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தகுதி குறைவான பேராசிரியர்கள் குறித்து 2019ஆம் ஆண்டில் சிண்டிகேட் குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது[13]. நீதிமன்றமும் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கவில்லை. இப்போது துணை வேந்தர் பணி நீக்கம் செய்துள்ளார்[14]. இது வரவேற்கத்தக்கது. இதற்கு யாரும் பொறுப்பல்ல. 10 ஆண்டுகளாக அவர்கள் தகுதியை மீறி சலுகையை அனுபவித்து உள்ளார்கள். தகுதி குறைவானவர்கள் பணி நியமனம் செய்யப்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் வருங்காலத்தில் தங்களின் தகுதிக்கேற்ற வகையிலான அரசுப் பணிகளுக்கு விண்ணப்பித்தால் அரசு அதனை பரிசீலிக்கும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கல்வி ஊழல்உருவானஉருவாக்கப் பட்ட நிலைவிதம்: ஊழலில் கல்வி, கல்வித்துறை, கல்வி பாடங்கள், கல்வி நெறிமுறை அல்லது கல்வியில் ஊழல் என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களாக இருந்தது. கல்வி தெய்வமாக, தெய்வீகமாகக்  கருதப் பட்டதால் அத்தகைய உரிய ஸ்தானம் கொடுக்கப் பட்டு மதிக்கப் பட்டது. இருந்தாலும் சமீப காலங்களில் கல்வி வியாபாரம் மயமாக்கப்பட்டதால் அந்த விளைவின் உச்சத்தில், “கல்வி ஊழல்” நடந்து வருகிறது. விடுதலைக்குப் பிறகு அரசியல் நுழைவு, ஆளும் அரசியல்வாதிகளின் தாக்கத்தாலும், அரசியல்வாதிகள் மற்றும் சித்தாந்த வாதிகளின் திரிபுகளாலும் கல்வி பாடத்திட்டங்கள் புத்தகங்கள் மற்றும் பாடங்களை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் விற்பனர்கள் என்று எல்லாமே அரசியலுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலை உண்டாயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக அத்தகைய “கல்வி ஊழல்” என்பது ஆரம்பிக்க வைக்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

18-11-2023.


[1] தினமணி, அண்ணாமலைப் பல்கலை.யில் 56 உதவிப் பேராசிரியா்கள் பணி நீக்கம், By DIN  |   Published On : 17th November 2023 12:32 AM  |   Last Updated : 17th November 2023 12:32 AM.

[2] https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2023/nov/17/56-assistant-professors-sacked-in-annamalai-university-4107136.html

[3] விகடன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் டிஸ்மிஸ்பின்னணி என்ன?!, ஜெ.முருகன், Published: 17-11-2023 at 1 PMUpdated: 17-11-2023 at 1 PM.

[4] https://www.vikatan.com/government-and-politics/politics/higher-education-department-has-dismissed-56-professors-without-adequate-educational-qualification-in-annamalai-university

[5] தமிழ்.வெப்.துனியா, அண்ணாமலை பல்கலையின் 56 பேராசிரியர்கள் பணி நீக்கமா? பரபரப்பு தகவல்..!, Written By Mahendran Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (15:08 IST).

[6] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/56-professors-dismiss-in-annamalai-university-123111600061_1.html

[7] தினமலர், அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் 58 பேர் டிஸ்மிஸ், பதிவு செய்த நாள்: நவ 16,2023 14:25

[8]  https://m.dinamalar.com/detail.php?id=3482745

[9] தினத்தந்தி, 56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம்சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அதிரடி, 16 Nov 2023 9:28 PM.

[10] https://www.dailythanthi.com/News/State/56-assistant-professors-sacked-chidambaram-annamalai-university-takes-action-1082995

[11] தமிழ்.சமயம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. போராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன்? அமைச்சர் பொன்முடி பரபரப்பு விளக்கம்!, Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 17 Nov 2023, 3:51 pm

[12] https://tamil.samayam.com/latest-news/state-news/minister-ponmudi-reveals-the-reason-why-annamalai-university-56-assistant-professors-dismissed/articleshow/105289709.cms

[13] தமிழ்.இந்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம்: உரிய கல்வித் தகுதி இல்லாததால் நடவடிக்கை செய்திப்பிரிவு, Last Updated : 17 Nov, 2023 05:58 AM.

[14] https://www.hindutamil.in/news/tamilnadu/1154731-chidambaram-annamalai-university-sacks-56-assistant-professors.html

போன்–பே, கூகுள்-பே மூலம் எழை மாணவர்களிடம் லஞ்சம் பெறுவது திராவிட மாடலா, அத்தகைய பேராசிரியர்கள், முதல்வர்கள் திராவிட ஸ்டாக்குகளா?

செப்ரெம்பர் 28, 2023

போன்–பே, கூகுள்-பே மூலம் எழை மாணவர்களிடம் லஞ்சம் பெறுவது திராவிட மாடலா, அத்தகைய பேராசிரியர்கள், முதல்வர்கள் திராவிட ஸ்டாக்குகளா?

உதகை அரசு கல்லூரியில் எல்லாவித ஊழல்களும் மலிந்துள்ளது ஏன்?: நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு கலைக்கல்லூரி 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது[1]. இந்த கல்லூரியில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்[2]. இக்கல்லூரியில் பணியாற்றும் சில பேராசிரியர்கள் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்ததாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சை எழுந்த நிலையில், சில பேராசிரியர்கள் பெண் பேராசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் புகார் எழுந்தது[3]போலிச் சான்றிதழ், பாலியல் தொல்லை என அடுத்தடுத்த புகார்களில் சிக்கிய ஊட்டி அரசு கலைக் கல்லூரி, இப்போது மாணவர்களிடம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது[4]. ஊட்டி அரசு கலைக் கல்லூரியில், நான்காயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனர்[5]. இந்த நிலையில், மாணவர் சேர்க்கை, துறை மாற்றம், மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட விஷயங்களில் கல்லூரிப் பேராசிரியர்கள் சிலர் மாணவர்களிடம் லஞ்சம் பெறுவதாக கூகுள் பே ஸ்க்ரீன் ஷாட் மற்றும் ஆடியோ ஆதாரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது[6].

பழங்குடிகள் போன்ற மாணவர்களிடமே லஞ்சம் வாங்கும் மாடலை என்னவென்பது?: உயர்கல்விக்கான வசதி வாய்ப்புகளை, குறைவாகக்கொண்டிருக்கும் மலை மாவட்டமான நீலகிரியில், அரசுக் கல்லூரிகளை நம்பியே பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர்[7]. அதிலும் குறிப்பாக, பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஊட்டி அரசு கலைக் கல்லூரி, மாவட்டத்தின் முக்கிய கல்லூரியாக இருந்துவருகிறது[8]. பிறகு, “பாரதியார்” பெயரை வைத்துக் கொண்டாலும் சமத்துவம், சமநீதி, சமூகநீதி என்பதெல்லாம் கிடைக்காது போலும். பழங்குடிகள், தோட்டத் தொழிலாளர்கள் என வறுமையான பின்னணியைக்கொண்ட முதல் தலைமுறை மாணவ, மாணவிகள் அதிகம் பயின்றுவருகின்றனர். இந்தக் கல்லூரியின் முதல்வராக அருள் அந்தோணி கடந்த ஜூன் மாதம் 2022 பொறுப்பேற்றுக்கொண்டார்.‌ இந்த அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை, துறை மாறுதல், தங்கும் விடுதி வசதி போன்றவற்றுக்கு மாணவ, மாணவிகளிடம் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் சிலர் ஆயிரக்கணக்கில் லஞ்சமாகப் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன[9]. அப்படியென்றால் அருள் அந்தோணி வந்தவுடன் அதிகமானதா என்ற கேள்வியும் எழுகின்றது. மேலும், லஞ்சம் வாங்கியதற்கான ஆடியோ, ஸ்க்ரீன் ஷாட் எனச் சில ஆதாரங்கள் இணையத்தில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின[10].

வாட்ஸ்-அப், ஊடகம், லஞ்ச செய்தி பரவியது: இவற்றை அடிப்படையாகக்கொண்டு ஜூனியர் விகடன் இதழில் வாட்ஸ்அப் கூகுள் பே வழியே லஞ்சம்! – மாணவர்களிடம் பணம் பறித்த பேராசிரியர்கள்?’ என்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்டிருந்தனர். ஆனால், அதிலும் வியாபாரம் தான் மேலோங்குகிறது. அக்க்கட்டுரை “பிரீமியம்” காசு கொடுத்தால் தான் படிக்க முடியும் என்கிறார்கள். அப்படியென்றால், அதுவும் ஒருவித லஞ்சம் எனலாம். இந்த நிலையில், ஜூனியர் விகடன் கட்டுரையின் எதிரொலியாக, கல்லூரி கல்வி இயக்கத்தின் கோவை மண்டல இணை இயக்குநர் கலைச்செல்வி தலைமையில், ஊழல் புகார் குறித்து விசாரணை நடைபெற்றது, என்று அவ்வூடகம் பெருமைப் பட்டுக் கொள்கிறது. இந்த நிலையில், ஆதிதிராவிடர் மாணவர்களை அரசு தங்கும் விடுதியில் சேர்க்க, கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியாகி, பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

மாணவர்கள் சொல்வது: இந்த வீடியோ குறித்துப் பேசிய கல்லூரி மாணவர்கள் சிலர், “நடப்பு கல்வியாண்டில் ஊட்டி கல்லூரியில் ஏகப்பட்ட ஊழல் நடந்திருக்கிறது[11]. அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்திருக்கிறார்கள்[12]. பலருக்கு ரசீதும் கொடுக்கவில்லை. ஆதிதிராவிட மாணவர்களுக்கான ஹாஸ்டல் வசதிக்கு 10,000 ரூபாய் வரை வாங்கியிருக்கிறார்கள். ஒரு மாணவரிடம் 3,000 ரூபாய் கவரில் வாங்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. முதல்வர் மட்டுமல்ல, பேராசிரியர்கள் சிலரும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். முறையான விசாரணை நடத்தினால் பலரும் சிக்குவார்கள்” என்றனர். இந்த லஞ்சப் புகார் குறித்து ஊட்டி அரசு கலைக் கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி, “மாணவர்களின் கல்விக் கட்டணத்தை கவரில் வாங்கினேன். லஞ்சம் எனச் சொல்கிறார்கள்,” எனத் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கோவை மண்டல இணை இயக்குநர் கலைச்செல்வி, “கல்லூரியில் நடைபெறும் லஞ்சப் புகார் குறித்து ஏற்கெனவே விசாரணை நடைபெற்றுவருகிறது. தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ குறித்தும் விசாரணை நடத்தப்படும்” என்றார்.

நடவடிக்கை எடுக்கப் பட்டது என்ன?: ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுக் கல்லூரியில், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் லஞ்சம் வாங்கியதாக அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள் சர்ச்சையைக் கிளப்பின.  இக்கல்லூரியில் பணியாற்றும் தாவரவியல் பேராசிரியர் ரவி என்பவர், மாணவர்கள் வேறு துறைக்கு மாறி செல்ல 5 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது[13]. இது தொடர்பாக மாணவர்கள் அவருடன் பேசிய செல்போன் உரையாடல்கள் மற்றும் ஜி பே செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்[14]. ஆகவே, இனி வேறு வழியில்லை என்ற நிலையில், விசாரணை தொடர்ந்தது. விவகாரம் பெரிதாகாமல் இருக்க வேண்டும் என்பதால், இங்கேயே இதனை சரிகட்ட முயற்சி மேற்கொள்ளப் பட்டது போலும். சாதாரண வழி, “பணியிடை மாற்றம்,” சஸ்பெண்ட் முதலியன.

டெக்னோலாஜி வளர்ந்தால், ஊழலும் அதே போல வளர்கிறது:  மாணவர்களிடமே பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் விசாரணை மேற்கொள்ளப் பட்டது[15]. கல்லூரியின் முதல்வரும், இணைப் பேராசிரியர் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்[16]. இவையெல்லாம் வழக்கமான செய்திகளாகி விட்டன[17]. ஒருசில நாட்களில் மறக்கப்படும்[18]. இவர்களுக்கு எப்படித் தான் ஏழை மாணவர்களிட கூட லஞ்சம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது என்று தெரியவில்லை. இதைப் பற்றி விசாரித்த பிறகு, செல்போன் மற்றும், பணபரிமாற்றம் முதலியவை மெய்ப்பிக்கப் பட்டன. தனால், மாணவர்களின் பணம் அவர்களுக்குச் சென்றுள்ளது என்பதும் மெய்ப்பிக்கப் பட்டது. ஆக, இத்தகைய “பே” போன்ற மின்பரிமாற்றங்களும் லஞ்சத்திற்கு உபயோகப் படும் மற்றும் நன்றாக மாட்டிக் கொள்வார்கள் என்றும் தெரிகிறது. இருப்பினும் மெத்தப் படித்த முதல்வர், பேராசிரியர் போன்ரோர் இத்தகைய கல்வி-ஊழல்களில் ஊறியிருப்பது, இதிலும் லஞ்சம் வாங்குவது எல்லாம், மிகப் பெரிய கோரமான குற்றங்களாகவே தெரிகின்றன.

© வேதபிரகாஷ்

28-09-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் பணம் கேட்கும் வீடியோ வைரல்: கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை, By: பிரசாந்த் | Published at : 28 Sep 2023 11:34 AM (IST). Updated at : 28 Sep 2023 11:34 AM (IST).

[2] https://tamil.abplive.com/news/coimbatore/education-department-officials-investigating-the-video-of-ooty-government-arts-college-principal-asking-money-142521

[3] ஜீ.நியூஸ், Crime In Tamil Nadu | மாணவர்களிடம் 5000 – 20000 ரூபாய் வரை லஞ்சம் பெற்ற பேராசிரியர், Written by – Shiva Murugesan | Last Updated : Sep 22, 2023, 01:13 PM IST

[4] https://zeenews.india.com/tamil/tamil-nadu/omg-professor-who-took-bribes-of-rs-5000-to-20000-from-college-students-464903

[5] விகடன், வாட்ஸ்அப், கூகுள் பே வழியே லஞ்சம்! – மாணவர்களிடம் பணம் பறித்த பேராசிரியர்கள்?, சதீஸ் ராமசாமி, கே.அருண், Published: 20 Sep 2023 12 AM; Updated: 20 Sep 2023 12 AM;

[6] https://www.vikatan.com/crime/money/professors-bribery-from-students

[7] தினமலர், மாணவர்களிடம் பணம் வசூலித்ததாக புகார் :அரசு கலை கல்லூரியில் விசாரணை, பதிவு செய்த நாள்: செப் 22,2023 22:46.

[8] https://m.dinamalar.com/detail.php?id=3438048

[9] விகடன், மாணவர்களை விடுதியில் சேர்க்க லஞ்சம் வாங்கினாரா ஊட்டி அரசுக் கல்லூரி முதல்வர்?- வீடியோவும் விளக்கமும், சதீஸ் ராமசாமி, கே.அருண், Published: 27-09-2023 at 7 PM; Updated: 27-09-2023  at 7 PM.

[10] https://www.vikatan.com/crime/ooty-arts-college-principal-video-controversy

[11] தமிழ்.ஒன்.இந்தியா, ஹாஸ்டலில் சேர ரூ.10,000 லஞ்சம்.. பரவிய ஷாக் வீடியோ! உதகை அரசு கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்!, By Vignesh Selvaraj Published: Thursday, September 28, 2023, 12:20 [IST]

[12] https://tamil.oneindia.com/news/nilgiris/government-college-principal-and-professor-suspended-for-getting-bribe-from-students-543133.html

[13] காமதேனு, மாணவர்களிடம் லஞ்சம்பேராசிரியர் மீது பரபரப்பு புகார்!, Updated on: 23 Sep 2023, 7:45 pm.

[14] https://kamadenu.hindutamil.in/crime-corner/bribe-complaint-on-government-college-professor

[15] நக்கீரன், மாணவர்களிடம் 10,000 ரூபாய் லஞ்சம் பெற்ற கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 28/09/2023 (12:21) | Edited on 28/09/2023 (12:37)

[16] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/college-principal-suspended-accepting-rs-10-bribe-students

[17] தமிழ்வெப்துனியா, லஞ்சம் பெற்ற புகாரில் கல்லூரி முதல்வர், பேராசிரியர் சஸ்பெண்ட், வியாழன், 28 செப்டம்பர் 2023, 14;!2 IST.

[18] https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/college-principal-professor-suspended-on-bribe-complaint-123092800043_1.html

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! (1)

ஜூலை 24, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! (1)

உலகம் முழுவதும் பரவியஉலகத் தமிழ் மாநாடுபிரச்சினை: 21-07-2023 அன்று தொடங்கும் 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கான ஏற்பாட்டுக்  குழுக் கூட்டம், மஇகா துணைத் தலைவர் எம். சரவணனுக்கு முதலில் அந்த நிகழ்வில் பேச இடமளிக்கப்படாததால், கிட்டத்தட்ட அடிதடியில் முடிந்தது[1]. Pakatan Harapan-MIC meeting என்பதே அரசியல் கூட்டணி என்று தெரிகிறது. பிரதமர் அன்வார் இப்ராகிமின் முக்கிய உரையைத் தொடர்ந்து சர்வதேச மாநாட்டில் அமைச்சர் மட்டுமே உரையாற்றுவார் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், சரவணனுக்கு ஏன் இடம் கொடுக்கக் கூடாது என்ற வாதம் எழுந்தது. அதனால் அப்பிரச்சினை ஏற்பட்டது[2]. மனிதவள மேம்பாட்டு அமைச்சர் சிவகுமார் [Sivakumar Varatharaju Naidu] IATRன் தலைவராக நியமிக்கப் பட்டதற்கும் எதிர்ப்பு மொழிரீதியில் என்றும் வெளிப்பட்டது[3].  அதாவது அவர் தெலுங்கர், தமிழர் கிடையாது என்ற வாதம் வைக்கப் பட்டது. தமிழ் வல்லுனர்களுக்கு சிவகுமாரைத் தெரியாது, அவருக்கு தமிழ் இலக்கியம் முதலியனவும் தெரியாது என்றெல்லாம் விமர்சனம் செய்யப் பட்டது[4]. இவ்வகையான மொழிவெறி இக்காலத்திலும் இவர்களிடம் இருப்பது திகைப்பாகவே இருக்கிறது. இந்தியாவில் ந்தியரை, தென்னிந்தியரை ஏன் தமிழரைக் கூடப் பிரித்து வருகின்றனர் என்றால் அயல்நாட்டிலும் அத்தகைய பிரிவினைவாதங்கள் இக்குழுக்கள் வைப்பதை கவனிக்கலாம்.

பல இடங்களை தேசங்களைக் கடத்து வந்த மாநாடு: முன்னரே இம்மாநாடு எங்கு நடத்தப் பட வேண்டும் என்ற பெரிய பிரச்சினையும் இருந்தது. ஷார்ஜா, சிங்கப்பூர், மலேசியா என்றெல்லாம் விவாதிக்கப் பட்டு, சென்னை என்று நடந்தது[5]. போதாகறைக்கு, சென்னையில் ஜூலை 7 முதல் 9 வரை 11ம் உலகத் தமிழ் மாநாடு என்று நடந்து விட்டது[6]. ஒவ்வொரு நிலையிலும் சச்சரவு, முரண்பாடு, சண்டை, புகார் என்றெல்லாம் எழுந்து அடங்கி விட்டன. நிதி, நிதியுதவி, நிதி பற்றாகுறை என்றெல்லாம் காரணங்கள் குறிப்பிட்டாலும், அதனையும் மீறி எதுவோ செயல்படுவது தெரிந்தது. இருப்பினும், இப்பிரச்சினை கோலாலம்பூருக்கு சென்று அங்கு அரசியலாகவே மாறி விட்டது. அழைப்பிதழ் கொடுக்கும் விசயத்தில் கூட அரசியல் தான், பெரும்பாலான அழைக்கப் பட்டவர்கள் திக-திமுகவினர் தான். அவர்களது இணைதள போட்டோக்களே சான்றாக உள்ளன.  அரசியல் பிரச்சினை பெரிதாக்க வேண்டாம் என்ற ரீதியில் தான் தமிழ்நாட்டிலிருந்து தலைவர்கள் வராமல், பிரதிநிதிகள் போல மற்றவர்களை அனுப்பியுள்ளனர். ஸ்டாலின் முதல் எடப்பாடி வரை வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர். அதிமுக சார்பில் வைகை செல்வன் கலந்து கொண்டு பேசினார். அதே போல வந்தவர்கள் மேடையில் பேசினர்.

தமிழ் என்று சொல்லிக் கொண்டே பிரிவினைவாதம் வளர்த்து சண்டைப்போட்டுக் கொள்ளும் கூட்டங்கள்: மொத்தத்தில், “தமிழர்” என்று சொல்லிக் கொள்வதில், அடையாளம் காணுவதில், இப்பொழுது, சில சித்தாந்திகள் எழுப்பும் பிரச்சினையான யார் திராவிடன், யார் தமிழன் போன்ற அர்த்தமில்லாத விசயங்களை இதிலும் நுழைப்பது போலிருக்கிறது. தமிழன் – திராவிடன் அடையாளங்களைத் தாண்டி அப்படி என்ன வேலை செய்கிறது என்பது ரகசியமாகத் தான் உள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில், “தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர் கிடையாது,” என்று பேச ஆரம்பித்து விட்டனர். அப்படியென்றால், தமிழன் என்பதற்கு என்ன தகுதிகளை, சரத்துகளை வைப்பார்கள் என்று தெரியவில்லை. சென்னை மாநாட்டிற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், சிலர் இரண்டிலும் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்-தமிழ் தேசிய, தமிழ் இன, தமிழின தேசியவாத, சுயயாட்சி, சுய-உரிமை என்றெல்லாம் ஆந்தைகள் போல இருந்து, பச்சோந்திகளாக பேசி திரிகின்றனர். பிரிவினைவாதத்தைத் தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

21-07-2023 வெள்ளிக்கிழமை முதல் நாள்: கோலாலம்பூர், ஜூலை 21- மலேசியாவில் இன்று (21.7.2023) 11 ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசிய நட்டுப்பண், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல், மாநாட்டுப் பாடலுடன் கோலாலம்பூரில் எழுச்சியுடன் தொடங்கியது[7]. மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் இன்று (21.7.2023) முதல் 3 நாள்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் (International Association for Tamil Research) 11ஆம் மாநாடு நடைபெற்றது[8]. ஜூலை 21, 22, 23 ஆகிய மூன்று நாள் மாநாட்டினை மலேசிய நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் 23-07-2023 அன்று தொடங்கி வைத்தார். பலருக்கு அழைப்பிதழ் பலவிதமாக அனுப்பப் பட்டது[9]. தமிழ்நாடு, இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், பொது நல செயற்பாட்டாளர்கள், கல்லூரி – பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் என பல தரப்பினரும் பங்கேற்று, ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து உரையாற்றுகிறார்கள்[10].  முதல் நாளான 21.7.2023 அன்று தொடக்க விழாவில் மலேசிய நாட்டின் துணை அமைச்சர் சரஸ்வதி, மலேசிய இந்திய காங்கிரஸ் தேசிய துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இணையக்  காலகட்டத்தில் தமிழ்மொழி என்ற கருப்பொருளை மையமாக வைத்து மாநாடு  நடைபெறுகிறது.

முன் வரிசையில் அல்லது முன்னணியில் அரசியல்வாதிகள்: தொடக்க விழா அரங்கில், அரசியல்வாதிகள் அதிகமாகவே இருந்தனர். அவர்கள், அவர்களாகவே வந்தனரா, வரவழைக்கப் பட்டனரா என்று தெரியவில்லை.

  1. திராவிடர் கழகம் கி.வீரமணி,
  2. தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்,
  3. மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா,
  4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் சி.மகேந்திரன்,
  5. இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மதுக்கூர் இராமலிங்கம்,
  6. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி (சி.பி.எம்.),
  7. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் செந்திலதிபன்,
  8. ‘நக்கீரன்’ கோபால்,
  9. தமிழ்த் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன்,
  10. கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் மற்றும்

கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பலர் பங்கேற்றனர்.

பொது விவரங்கள்: மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் தொடங்கியது. பியர்ல் இன்டர்நேசனல் விடுதியில், தங்கியவர் எல்லோரும் காலை உணவை முடித்துக் கொண்ட பின்பு, பேருந்துகள் மூலம் அரங்கிற்கு சென்றனர். 9.45 மணி அளவில் நிகழ்ச்சிகள் தொடங்கின – கடவுள் வாழ்த்து, மலேசிய நாட்டுப் பண்,  தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். அடுத்து வரிசையாகச் சொற்பொழிவுகள் அரங்கேறின. மலேசியத் தமிழ் அறிஞர்களும், இந்தியத் தமிழ் அறிஞர்கள், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முன்னணியினர் வரிசையாகச் சொற்பொழிவு ஆற்றினர். பகல் உணவு, மாலைச் சிற்றுண்டி, இரவு உணவு எல்லாம் அங்கேயே ஏற்பாடு செய்து இருந்தனர். இது ஒரு பங்கேற்றவரின் விவரம். நிறைவாக, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் 40 நிமிடங்கள் சிறப்புரை ஆற்றிய பிறகு, இன்றைய நிகழ்வுகள் நிறைவு பெற்றன. மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை, ஆடல், பாடல்கள். 8 மணிக்கு விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

© வேதபிரகாஷ்

24-07-2023


[1] Free Malaysia Today, Altercation at PH-MIC meeting over who’ll speak at world Tamil conference, K. Parkaran – 20 Jul 2023, 9:57 pm.

[2] https://www.freemalaysiatoday.com/category/nation/2023/07/20/altercation-at-ph-mic-meeting-over-wholl-speak-at-world-tamil-conference/

[3] Focus – Malaysia, Tamils disappointed as Sivakumar, a Telugu, is appointed International Tamil Conference chairman, By Contributor – Tamil Vaanan, 13/07/2023.

[4] https://focusmalaysia.my/tamils-disappointed-as-sivakumar-a-telugu-is-appointed-international-tamil-conference-chairman/

[5]  இவை பற்றியெல்லாம் எற்கெனவே விவரமாக முந்தைய பிளாக்குகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

[6]  இதைப் பற்றியும் விவரமாக எனது முந்தைய பிளாக்குகளில் படித்துத் தெரிந்து கொள்ளலாம். ஊடகங்கள் இவ்விசயங்களில் மௌனமாக இருப்பது தான் ஆச்சரியமாக-திகைப்பாக இருக்கிறது.

[7] நியூஸ்.டி.எம், 11-வது உலகத்தமிழ் மாநாடு மலேசியாவில் தொடங்கியது..!, By: Newstm Admin, Sat, 22 Jul 2023.

[8] https://newstm.in/tamilnadu/11th-world-tamil-conference-begins-in-malaysia/cid11656242.htm

[9] நியூஸ்.லங்காஶ்ரீ, மலேசியாவில் 11ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: பிரபலங்களுக்கு பறந்த அழைப்பு, Malaysia, Tamil,  By Nandhini..

[10] https://news.lankasri.com/article/11th-world-tamil-research-conference-in-malaysia-1687942005

ஆசிரியர்களிடம் கட்டிப்பிடி சண்டை-சச்சரவு-அதிதடி ஏன், கற்பித்தல் முதலியவற்றில் கவனம் இல்லாது மற்ற காரியங்களில் ஈடுபடும் போக்கு ஏன்? ஊழலும் உழலும் கல்வித்துறை (2):

ஏப்ரல் 15, 2023

ஆசிரியர்களிடம் கட்டிப்பிடி சண்டை-சச்சரவு-அதிதடி ஏன், கற்பித்தல் முதலியவற்றில் கவனம் இல்லாது மற்ற காரியங்களில் ஈடுபடும் போக்கு ஏன்? ஊழலும் உழலும் கல்வித்துறை (2):

பிப்ரவரி 2018 – ஆசிரியர்மாணவன் அடிதடிகத்திக் குத்து: கரூரில் பள்ளி மாணவனை உடற்கல்வி ஆசிரியர் கத்தியால் குத்தியதாக புகார் எழுந்துள்ளது[1]. வயிறு, நெஞ்சு ஆகிய பகுதிகளில் காயம்பட்ட மாணவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கரூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவர் ஹிதிக்கூர் ரஹ்மான். கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஹிதிக்கூர் ரஹ்மான் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வத்தின் பேச்சையும் மீறி பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவன் ரஹ்மானுக்கும் உடற்கல்வி ஆசிரியருக்கும் திடீரென பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அப்போது இருவரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டுள்ளனர். அந்த நேரத்தில் ஆசிரியர் பன்னீர்செல்வம், மாணவன் ரஹ்மானை கத்தியால் இடுப்பு, நெஞ்சுப் பகுதியில் குத்தியதாக கூறப்படுகிறது. ஆசிரியருக்கும் கைகளில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது[2]. காயமடைந்த மாணவன் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.,  ஆசிரியர் பன்னீர்செல்வமும் மாணவன் தன்னை கத்தியால் குத்தியதாகக் கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நவம்பர் 2016  ஆங்கில ஆசிரியர் கட்டிப் புரண்டு சண்டை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வடகரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர்கள் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். வடகரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 35 ஆசிரியர், ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். இங்கு ஆசிரியர்கள் ஜாதி ரீதியாக பிரிந்து மாணவர்களிடையே மோதல்களை துாண்டுவதாக பலமுறை திருப்புவனம் போலீசில் புகார் பதிவாகி உள்ளது[3]. நேற்று காலை பள்ளியில் இறை வணக்க கூட்டம் நடந்தது. கூட்டம் நடக்கும் போதே ஆங்கில ஆசிரியர்கள் செல்லப்பாண்டி, சரவணன் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கட்டிப்புரண்டு சண்டையிட்டனர்[4]. சக ஆசிரியர்கள் விலக்கினர். இருவரும் திருப்புவனம் போலீசில் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் செய்துள்ளனர். ஆசிரியர் செல்லப்பாண்டி, மாணவர்களை துாண்டி விட்டு அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்துவதாக புகார் கூறப்பபட்டுள்ளது. சரவணன் என்ற ஆசிரியர் இங்கு கடந்த இரு மாதத்திற்கு முன்பு தான் மாறுதலாகி வந்துள்ளார். தலைமையாசிரியர் அப்துல் ரஹீமிடம் கேட்ட போது, ”இறைவணக்க கூட்டம் நடக்கும் போது நான் மேடையில் இருந்தேன். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பின்னால் சண்டையிட்டுள்ளனர். இறைவணக்க கூட்டம் முடிந்த பிறகு மாணவர்கள் சொல்லித் தான் எனக்கு தெரியும். சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளேன்,” என்றார். மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே அவர்கள் முன்னிலையில் கட்டி புரண்டு சண்டை போட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஊழலில் திளைத்துள்ள ஆசிரியர்களிடம் நியாயம், தர்மம், ஒழுக்கம், நேர்மை எல்லாம் எதிர்பார்க்க முடியும்?: தமிழகத்தில் ஆசிரிய வேலைக்கு லட்சங்களில் லஞ்சம் கொடுத்து சேர்வது திகைப்பாக இருக்கிறது. விசாரித்தபோது, பணத்தைப் போட்டு பணத்தை எடுக்கலாம் போன்று விளக்கம் கொடுக்கப் பட்டது. ஆசிரியராக சேரும் ஒவ்வொருவரும், ஒரு திட்டத்தை வைத்துக் கொண்டே பணத்தைத் தயார் செய்து கொண்டு வேலைக்கு இறங்குகின்றனர். ஏதோ ஷேர் வியாபாரத்தில் முதலீடு செய்யும் முறையில் தான் செயல்படுகிறார்கள். இரண்டு வேலை செய்யலாம், கடை வைத்து வியாபாரம் செய்யலாம், டூரிஸ்ட் கார் / கேப் பிசிசஸ் செய்யலாம், பிரின்டிங் பிரஸ் வைத்து ஆர்டர்கள் வாங்கலாம், இப்படி லிஸ்ட் போட்டு அடுக்குகிறார்கள். பள்ளி, பள்ளிப் பாடம், இன்றைக்கு என்ன வகுப்பு எடுக்க வேண்டும், போன்றவற்றைப் பற்றி கவலைப் படுவதில்லை. இவ்வாறு பணம் பற்றியே யோசித்து செயல் பட்ட்ய் கொண்டிருக்கிறார்கள். பிறகு இவர்களிடம் என்ன நியாயம், தர்மம், ஒழுக்கம், நேர்மை எல்லாம் எதிர்பார்க்க முடியும்?

தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் அடுத்தடுத்து முறைகேடு புகார்கள்: தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் அடுத்தடுத்து முறைகேடு புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன[5]. சில மாதங்களுக்கு முன்பு பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடந்து இருப்பது தெரிய வந்தது[6]. இந்த நிலையில் அதே போன்று ஆசிரியர்கள் தகுதி தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலத்துக்கு  வந்துள்ளது[7]. தமிழக அரசு ஆசிரியர் பணிகளுக்கு ஆண்டுதோறும் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது[8]. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புகிறவர்களுக்கு முதல் தாள் பேப்பரும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புவர்களுக்கு 2-ம் தாள் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த தேர்வு நடத்தப்பட்ட போது மொத்தம் 7 லட்சத்து 53 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினார்கள். அவர்களில் 34 ஆயிரத்து 979 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் ஊழல் நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன.

ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் தேர்வு தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டது: தேர்வு எழுதியவர்களில் பலர் இதுபற்றி புகார் மனுக்களை அளித்தனர். அதன்பேரில் ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் தேர்வு தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டது. 7½ லட்சம் பேர் எழுதிய தேர்வு தாள்களை மீண்டும் திருத்தி அதில் தேர்வானவர்களின் விவரங்களை இணைய தளத்தில் வெளியிட்டனர். அப்போது ஏற்கனவே தேர்வானதாக அறிவிக்கப்பட்டவர்களில் பலரது பெயர் விடுபட்டு இருந்தது. சுமார் 200 ஆசிரியர்கள் அவ்வாறு தேர்வாகாமல் விடுபட்டு இருந்தனர். இதுபற்றி ஆய்வு செய்தபோது அந்த 200 பேர் தேர்வில் முறைகேடுகள் நடந்து இருப்பது தெரிய வந்தது. போலி மதிப்பெண்களை அளித்து அந்த 200 ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டு இருந்தது அம்பலமானது. ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்து பதிவு செய்யப்பட்ட போது மதிப்பெண்களை திருத்தும் தில்லுமுல்லு நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி விரிவாக விசாரணைக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ளவர்களே சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. போலி மதிப்பெண் பெற்று தேர்வு ஆனதாக சந்தேகிக்கப்படும் சுமார் 200 பேரிடம் அதிரடி விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது ஆசிரியர் தகுதி தேர்வில் நடந்த தில்லுமுல்லுகள் முழுமையாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைப் பற்றி பேசுகிறவன் தான் முட்டாளாகிறான், ஒதுக்கப் படுகிறான்.: ஆசிரியர்களே இவ்வாறு இருக்கும் பொழுது, பள்ளி மாணவர்-மாணவியர் நிலை எப்படியிருக்கும்? மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை போதிக்கும் ஆசிரியர்கள் பள்ளிப் பாடங்களில், கற்பிக்கும் நெறிகளில் கவனத்தைச் செல்லுத்தாமல், மற்ற விவகாரங்களில் கவனம் செல்லுத்தி, ஈடுபட்டால், கற்பிக்கும் தருமமே அதர்மமாகி விடுகிறது. ஆனால், கடந்த 70 ஆண்டு திராவிட-திராவிடத்துவ ஆட்சிகள் இதைப் பற்றி கவலைப் படவில்லை. ஆட்சிக்கு வரவேண்டும், அதற்கு ஆசிரியர்களை, ஆசிரியர் வேலைகளை, சேவைகளை பயன்படுத்துக் கொள்ள வேண்டும் என்பதனை திட்டத்துடன் செயல்படுத்தி, அனுபவித்து வருகின்றனர். நிலைக்கப் பட்ட, நிறுவனப் படுத்தப் பட்ட, தொடர்ந்து  நடந்து வரும் அவ்வியாபாரங்களை யாரும் தடுக்க முடியாத நிலைக்கும் சென்று விட்டது எனலாம். இதைப் பற்றி பேசுகிறவன் தான் முட்டாளாகிறான், ஒதுக்கப் படுகிறான்.

© வேதபிரகாஷ்

14-04-2023


[1] புதியதலைமுறை, கட்டிப் புரண்டு சண்டை போட்ட ஆசிரியர், மாணவன், Rasus, Published on: 7 Feb, 2018, 2:41 am.

[2] https://www.puthiyathalaimurai.com/crime/teacher-stabbing-student-in-karur

[3] தினமலர், திருப்புவனம் அருகே அரசு பள்ளியில் ஆசிரியர்கள் கட்டிப்புரண்டு சண்டை : வேடிக்கை பார்த்த மாணவர்கள், Added : நவ 29, 2016  00:16 .

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=1659023

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், 200 ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு அம்பலம்..ஆசிரியர் தகுதி தேர்வில் நடந்தது என்ன?,  Written by WebDesk. Updated: August 30, 2018 12:30 IST.

[6] https://tamil.indianexpress.com/tamilnadu/teacher-eligibility-test-scam/

[7] மாலை மலர், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஊழல் – 200 ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு, By மாலை மலர், 29 ஆகஸ்ட் 2018 12:32 PM (Updated: 29 ஆகஸ்ட் 2018 12:32 PM)

[8] https://www.maalaimalar.com/news/district/2018/08/29123231/1187454/Corruption-in-Teachers-Recruitment-board-200-teachers.vpf?infinitescroll=1

ஆசிரியர்களிடம் கட்டிப்பிடி சண்டை-சச்சரவு-அதிதடி ஏன், கற்பித்தல் முதலியவற்றில் கவனம் இல்லாது மற்ற காரியங்களில் ஈடுபடும் போக்கு ஏன்? (1):

ஏப்ரல் 15, 2023

ஆசிரியர்களிடம் கட்டிப்பிடி சண்டை-சச்சரவு-அதிதடி ஏன், கற்பித்தல் முதலியவற்றில் கவனம் இல்லாது மற்ற காரியங்களில் ஈடுபடும் போக்கு ஏன்? (1):

ஆசிரியர்களிடம் சண்டை-சச்சரவு-அதிதடி ஏன்?: தமிழக பள்ளி ஆசிரியர்களிடம் அடிக்கடி வாக்குவாதம், வாடா-போடா பேச்சுகள், கெட்ட வார்த்தைகள் பேசுவது, திட்டுவது, சண்டை போடுவது, அடித்துக் கொள்வது, கட்டிப் புரண்டு சண்டை போடுவது, ஓடி-ஓடி அடித்துக் கொள்வது, என்றெல்லாம் சகஜமாகி விட்டன. போதாகுறைக்கு செல்போன் வசதியும் வந்து விட்டதால், புகைப் படங்கள், வீடியோக்கள் எல்லாம் உலா வர ஆரம்பித்து விட்டன. பெரும்பாலும் மத்தியஸ்தம் செய்து, விசயங்களை-விவகாரங்களை அமுக்கி விடுவது என்ற ரீதியில் தான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இருப்பினும், பணம், அந்தஸ்து, கௌரவம், அரசியல் போன்ற காரணிகளால் சில ஆசிரியர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. “நானா-நீயா” அல்லது “நீயா-நானா-”, ஒன்டிக்கு ஒன்டி வாடா பார்த்து விடுவோம் என்ற ரீதியில் செல்லும் பொழுது, இவையெல்லாம் அரங்கேறி, செய்திகளாகி, உலா வர ஆரம்பிக்கின்றன. இதனால், சஸ்பெண்ட், இடமாற்றம், ஜாதிப் பிரச்சினை என்றால் வழக்குகள் என்றெல்லாம் வந்து விடுகின்றன.

ஏப்ரல் 2023 – வேதியியல் ஆசிரியர் இயற்பியல் ஆசிரியர் இடையே சண்டை: திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அருகே குனிச்சியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,200 மாணவ – மாணவியர் படிக்கின்றனர்; 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பள்ளியில் கடந்த மாதம், 29ல் கால அட்டவணை தயாரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் குழந்தைசாமி, 55, தலைமை வகித்தார். அப்போது, வேதியியல் ஆசிரியர் சின்னமணி, 45, இயற்பியல் ஆசிரியர் கோவிந்தசாமி, 43, ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆபாசமாக பேசி, கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்[1]. அரை மணி நேரம் நடந்த சண்டை குறித்த ‘வீடியோ’ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது[2]. அதன் அடிப்படையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் சின்னமணி, கோவிந்தசாமி ஆகியோரை, ‘சஸ்பெண்ட்’ செய்து நேற்று உத்தரவிட்டார்[3]. மேலும், விளக்கம் கேட்டு, தலைமை ஆசிரியர் குழந்தைசாமிக்கு, ‘மெமேோ’ கொடுக்கப்பட்டுள்ளது[4].

ஜூலை 2022 – வெட்டன் விடுதி, புதுக்கோட்டைமுன்விரோதம்: ஆலங்குடி அருகே வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டிப் புரண்டு சண்டை போட்ட இரண்டு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்[5]. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 500 மாணவ – மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளியில் ஆங்கில ஆசிரியர் சந்தோஷ் 47 தமிழ் ஆசிரியர் தமிழ்ச்செல்வன் 49 ஆகியோர் இடையே நீண்ட காலமாக முன்விரோதம் இருந்துள்ளது[6]. இதை ஆங்கிலம்-தமிழ் மோதல் என்று எடுத்துக் கொள்ள முடியாது. நல்லவேளை, இந்தி டீச்சர்-தமிழ்-டீச்சர் என்று இல்லை, பிறகு, அத்தகைஅ சண்டை, வேஊ விதமாகியிருக்கும். அந்த “நீண்ட காலமாக முன்விரோதம்” விளக்கப் படவில்லை, பிறகு, அவர்கள் ஏன் ஒரே இடத்தில் போஸ்டிங் போடவேண்டும் போன்ற விவரங்களும் மர்மமாக இருக்கின்றன. இருப்பினும்ளூடகக் காரர்களையே ஈர்த்துள்ள்தால், இவ்விசயம் ஊடகங்களில் அதிகமாகவே செய்தியாக வெளி வந்தள்ளது. இரு நாட்களுக்கு முன் மதிய உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் இரண்டு ஆசிரியர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கட்டிப்புரண்டு சண்டையிட்டனர்[7]. சக ஆசிரியர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்துஅனுப்பினர்[8]. இது குறித்து பள்ளிக்கு சென்று விசாரணை நடத்திய புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரிகள் சந்தோஷ் தமிழ்செல்வனை வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டனர்[9]. படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களே இவ்வாறு தாக்கிக் கொள்வது அதிர்ச்சியக இருந்தது[10].

ஜனவரி 2022 – தலைமை ஆசிரியருக்கும் மாற்றுத் திறனாளி ஆசிரியருக்கும் சண்டை:  திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்துள்ள கடலாடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சற்றுவட்டார பகுதிகளில் இருந்து 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து படித்து வருகின்றனர். மேலும் இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாடங்களை எடுத்து  வருகின்றனர்.  இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக அண்ணாமலை என்பவர்  பணிபுரிந்து வருகிறார். பின்னர்  இந்த  பள்ளியில் மாற்றுத் திறனாளி ஆசிரியர் செழியன் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், தலைமை ஆசிரியருக்கும் இடையே பல மாதங்களாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது[11]. நேற்று  அவர்களுக்குள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருவரிடையே ஏற்பட்ட பிரச்னை  வாக்குவாதமாக மாறியுள்ளது. திடீரென இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.  அப்போது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்து கொண்டும் கீழே விழுந்தும் தாக்கி கொண்டனர்[12]. பின்னர் அவர்களை மற்ற ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். அதனைத் தொடர்ந்து  இருவரும் தாக்கிக்  கொண்டதை   யாரோ  அவர்களுடைய தொலைபேசியில்  வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பரவ விட்டனர். இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் மற்றும் மற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  அதாவது ஆசிரியர்கள் எந்த நிலையில் இருந்தாலும், சச்சரவு ஓய்வதில்லை, சண்டையிலும் முடிவதையும் கட்டுப் படுத்தமுடியாத நிலையும் ஏற்பட்டு விடுகிறது.

சட்டையை பிடித்து மோதலில் ஈடுப்பட்டு ஒழுங்கினமாக நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்: மேலும் இச்சம்பவம்  குறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வத்திடம் பேசிய போது, “ஆசிரியர்கள் தாக்கி கொண்ட சம்பவம் குறித்து போளூர் கல்வி மாவட்ட அதிகாரி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. கல்வி மாவட்ட அதிகாரி விசாரணை அறிக்கையை எங்களிடம்  சமர்ப்பித்த பின்னரே எதற்காக அவர்கள் தாக்கி கொண்டனர் என்பது தெரியவரும். அவர்களில் யார்  மீது தவறு  என்பது தெரியவந்தபிறகே   நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.இந்நிலையில் போளூர் மாவட்ட கல்வி அலுவலர் தயாளன் பள்ளிக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார் பின்னர் விசாரணை தொடர்பானா அறிக்கையை முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வத்திடம் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் பள்ளியில் சட்டையை பிடித்து மோதலில் ஈடுப்பட்டு ஒழுங்கினமாக நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் அண்ணாமலை மற்றும் மாற்று திறனாளி ஆசிரியர் செழியன் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் ஆகிய மூன்று நபர்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே பள்ளியில் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

© வேதபிரகாஷ்

14-04-2023


[1] தினமலர், பள்ளியில் கட்டிப்புரண்டு சண்டை இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட், பதிவு செய்த நாள்: ஏப் 14,2023 01:01; https://m.dinamalar.com/detail.php?id=3293447

[2] https://m.dinamalar.com/detail.php?id=3293447

[3] செய்திசோலை, பள்ளி ஆலோசனை கூட்டத்தில்…. கட்டிப்புரண்டு சண்டை போட்ட ஆசிரியர்கள்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!, jyothi priya, April 13, 2023.

[4] https://www.seithisolai.com/teachers-suspended-3.php

[5] தினமலர், கட்டிப்புரண்டு சண்டை2 ஆசிரியர்கள் மாற்றம், பதிவு செய்த நாள்: ஜூலை 09, 2022 01:37…

[6] https://m.dinamalar.com/detail.php?id=3072259

[7] தினத்தந்தி, அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியரும் தமிழ் ஆசிரியரும் கட்டி புரண்டு சண்டை, ஜூலை 6, 7:05 pm

[8] https://www.dailythanthi.com/News/State/an-english-teacher-and-a-tamil-teacher-have-a-fight-in-a-government-school-739193?infinitescroll=1

[9] காமதேனு, பள்ளியிலேயே ஆசிரியர்கள் கட்டிப்புரண்டு சண்டைதெறித்து ஓடிய மாணவர்கள்: அதிரடி காட்டிய அதிகாரி, Updated on : 6 Jul, 2022, 7:20 pm

[10] https://kamadenu.hindutamil.in/national/clash-among-students-government-school-teachers-job-transfer

[11] தமிழ்.ஏபிபி.லைவ், Watch Video: அரசுப்பள்ளியில் கட்டி புரண்டு சண்டை போட்ட ஆசிரியர், தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட், By: V.வினோத் | Updated at : 30 Jan 2022 07:17 AM (IST); Published at : 30 Jan 2022 08:21 AM (IST).

[12] https://tamil.abplive.com/crime/whatch-video-viral-on-video-websites-attacked-by-teachers-at-kataladi-government-school-37513

தமிழக பல்கலைக் கழகங்களில் கல்வி சீரழியும் நிலை – தேர்வுகளில் குளறுபடி, வினாதாள்களில் குழப்பம் மற்றும் திருத்துவதில் முறையற்றத் தன்மை! (2)

பிப்ரவரி 23, 2023

தமிழக பல்கலைக் கழகங்களில் கல்வி சீரழியும் நிலைதேர்வுகளில் குளறுபடி, வினாதாள்களில் குழப்பம் மற்றும் திருத்துவதில் முறையற்றத் தன்மை! (2)

2022- நவம்பர்சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள்: சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 131 இணைப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. சென்னை பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வில் குளறுபடி ஏற்பட்டதால் 18-11-2022 அன்று நடைபெறவிருந்த தமிழ் தேர்வு ரத்து செய்யப்பட்டது[1]. சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கலை அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடந்து வந்தன[2]. 18-11-2022 அன்று 2ம் ஆண்டு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு, மூன்றாவது செமஸ்டர் தமிழ் தேர்வு நடைபெற இருந்தது. ஆனால், மாணவர்களுக்கு 4வது செமஸ்டருக்கான கடந்த ஆண்டு வினாத்தாள் வழங்கப்பட்டது. அதில் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் தவறுதலாகவும், அது வேறு பருவப் பாடங்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனால் தோ்வுக்கு தயார் நிலையில் வந்திருந்த மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். தொடர்ந்து மாணவர்கள் தேர்வறைகளில் இருந்து வெளியேறிய நிலையில், வினாத்தாள் மாறியது குறித்து விசாரணை நடத்த தொழில்நுட்பக் கல்வி ஆணையர் லட்சுமி பிரியா உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைத்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதிதாக தேர்வு நடத்தப்படும் என பல்கலைக் கழகம் தெரிவித்து உள்ளது[3]. மேலும் வினாத்தாள் மாறியது குறித்த விசாரணை அறிக்கையை 2 மாதங்களுக்குள் அளிக்கவும் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது[4]

ஏதோ காரணங்களுக்காக தேர்வு எழுத முடியாதவர்களை தனியாக எழுதவைக்கும் முறை: இல மாணவர்கள் உடல் நலம் சரியில்லை, குடும்பத்தில் இறப்பு, நல்லது-கெட்டது போன்ற நிலை என்று குறிப்பிட்ட தேதிகளில் தேர்வு  எழுத முடியாத நிலை ஏற்ப்டுகிறது. தேர்வுகளை எப்பொழுது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம், குறிப்பாக எல்லோருக்கும் நடத்தப் படும் பொழுது, பங்கு கொள்ளாமல் இருந்தால், தனியாக வரவழைக்கப் பட்டு, ஒரு நாளில் அவ்வாறு வராதவர்களுக்கு தேர்வு நடத்தப் படுவது சகஜமாகி விட்டது. அந்நிலையில் பொதுவாக அதே வினாதாள் கொடுக்கப் பட்டு எழுதுவிக்கப் படுகிறது. முன்பெல்லாம், அடுத்த பரீட்சை வரும் பொழுது, மற்றவர்களுடன் உட்கார வைக்கப் பட்டு, அதே னினாதாள் கொடுக்கப் பட்ட், முறையான கண்காணிப்புடன் எழுத வைக்கப் பட்ட நிலை இருந்தது. இப்பொழுது, இவ்வாறு தனியாக  வரவழைக்கப் பட்டு, எழுதுவிக்கப்படும் பொழுது, முறையற்ற நிகழ்வுகள் ஏற்படலாம்.  கண்காணிப்பு இல்லை என்றால், எளிதாக காப்பி அடித்து அல்லது செல்போன் உதவியுடன் எழுதலாம். இருக்கும் ஒரே கண்காணிப்பாளரே உதவலாம். அவர்கள் இருவர் மட்டும் இருக்கும் பட்சத்தில் என்ன நடந்தது என்பது அவர்கள் இருவருக்கும் தான் தெரியும்.

அம்முறையே ஊழலுக்கு வழிவகுத்து பணம் சம்பாதிக்க உபயோகப் படுத்தப் படுவது: ஆக, இத்தகைய முறையை வாடிக்கையாக மாற்றிக் கொண்டு, இதில் ஊழல் ரீதியில் பணம், ஆதாயம், போன்ற பேரங்களுடன் தேர்வுகள் நடத்தப் படலாம். வேண்டிய அளவுக்கு மதிப்பெண்களும் போடலாம். அம்முறையே ஊழலுக்கு வழிவகுத்து பணம் சம்பாதிக்க உபயோகப் படுத்தப் படுகிறது. அவ்வாறு நடக்க ஆரம்பித்து விட்டது என்பது தான் உண்மை. முன்னர், மந்திரி, எம்.பி, எம்.எல்.ஏ, போன்ற விஐபிக்களுக்கு பின்பற்றப் பட்டு வந்த நிலை இப்பொழுது, இவ்வாறான “தேர்ந்தெடுக்கப் பட்ட” அல்ல செல்லப் பிள்ளைகளுக்கு உபயோகப் படுத்தப் படுகிறது. இம்முறையைப் பின்பற்றலாம் என்று தெரிந்த மாணவர்கள் தாம், வகுப்புகளுக்கும் ஒழுங்காக வருவதில்லை. அல்கலைக்கழக / கல்லூரி வளகங்களில் சுற்றிக் கொண்டிருப்பது, டீ-காபி குடிக்கச் செல்கிறேன் / ரெஸ்ட் ரூம் செல்கிறேன் என்று வெளியே சென்று வராமல் இருப்பது, உடன் மற்ற மாணவர்களையும் கூட்டிச் செல்வது போன்ற அடாவடித் தனங்களும் நடந்தேறி வருகின்றன.

எல்லாவற்றிற்கும் சார்ட் கட் / குறுக்கு வழி ஏற்படுத்தப் பட்டுள்ளது: அட்டென்டென்ஸ் இல்லை என்றால் அதற்கும் “பெனால்டி பீஸ்” கட்டி விட்டு, பரீட்சை எழுதலாம் என்ற முறையும் செயல்பட்டு வருகிறது. இதனால், கல்வியில் நாட்டமில்லாதவர், பணக்காரப் பையன்கள், எப்படியும் பாசாகி விடலாம் என்று தைரியமாக இருப்பவர்கள், சார்ட் கட் / குறுக்கு வழிகளை பின்பற்றுகின்றனர். இப்படி, ஒவ்வொரு நிலையிலும் முறையற்ற வழிகள் பின்பற்றப் படும் பொழுது, கல்வித் தரம், படிப்புத் தன்மை, ஓதித்தல்-கற்றல் என்ற எல்லாவற்றிலும் தொய்வு ஏற்படுகின்றது. ஒழுங்காக பாடம் எடுக்க வருகின்ற ஆசிரியர்களுக்கும் தொந்தரவு ஏற்படுகின்றது. ஏனெனில், அவர்கள் சில நேரங்களில் ஏதோ / தேவையற்ற காரணங்களுக்காக, “வகுப்பிற்கு செல்லாதே, எங்கள் கூட வா” என்று வற்புருத்தும் போக்கும் காணப்படுகிறது. இதனால், ஒழுங்காக தினமும் படிக்க வரும் மாணவர்கள் பாதிக்கப் படுகின்றனர்.

படிப்பை உதாசீனப் படுத்தி எப்படியாகிலும் பாசாகி விடலாம் என்றிருப்பவர்களிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது: இவ்வாறு நடந்து கொள்ளும் ஆணவ-மாணவியர்களிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது. ஒரு பக்கம் பெரியவர்களுக்கு மதிப்பு தருவதில்லை. பெண்களுக்கு மரியாதை கொடுப்பதே இல்லை. பெற்றோரிடம் உண்மையாக இருப்பதில்லை. சகோதரர்களிடம் இணக்கமாக இல்லை. அவர்களின் ஏக்க-துக்கங்களையெல்லாம் குறித்து அக்கறையே இல்லை. என்றெல்லாம் புலம்புவதும் தெரிகிறது[5]. அக்கம்பக்கம் குறித்த பயமில்லை. சமூகம் தொடர்பான புரிதலே இல்லை. இப்படிப்பட்ட கட்டமைப்புடன் இருக்கிற இன்றைய தலைமுறையினர், பெரியவர்களையும் பெண்களையும் புரிந்துகொள்ளாமல் மிகக் கேவலமாக இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள், என்றெல்லாம் தொடர்கிறது. குறிப்பாக, பெண்களை வெறும் போகப்பொருளாக நினைத்தைதையும் கடந்து, அவர்களின் உடலையும் உடைமைகளையும் பறித்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இப்போது இருக்கிற நவீன சாதனங்களின் துணையுடன், படமெடுத்து, வீடியோ எடுத்து, ப்ளாக்மெயில் செய்து, மிரட்டி, அடித்து, உதைத்து, பெண்களை வதைத்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கே, வீடும் சமூகமும் பெண்களை மதிப்பது குறித்து கற்றுக்கொடுக்கவே இல்லை என்பதுதான் வேதனை[6].

இப்படியும் நடந்துள்ளது: உதாரணத்திற்கு இது ஒடுக்கப் படுகிறது. பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது, பிளஸ் 1 மாணவர் ஒருவர் தனது, நண்பர்களுடன் சிகரெட் பிடித்து, மாணவிகள் முகத்தில் புகை விட்டு கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது[7]. சம்பந்தப்பட்ட மாணவரை அழைத்து சென்று, இதுபோன்ற பழக்கங்களில் ஈடுபட்டால், பள்ளி வகுப்பறைகளில் சேர்க்க மாட்டோம், பெற்றோர்களிடம் தெரிவித்து டிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்து அடித்ததாக கூறப்படுகிறது[8].  பாதிக்கப்பட்ட மாணவன் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால், நான்கு ஆசிரியர்கள் சஸ்பெண்ட்  செய்யப்பட்டனர். இதில், பாதிக்கப்பட்ட மாணவி ஆசிரியர்களிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். மாணவன் புகை பிடித்து மாணவி மீது ஊதிய விவகாரத்தில் ஆசிரியர்கள் சஸ்பெண்ட்  செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மாணவமாணவியர் தொட்டுப் பேசி, கட்டிப் பிடிக்கும் கலாச்சாரத்தை யாரும் கண்டிப்பதில்லை: இப்படியெல்லாம் எடுத்துக் காட்டினாலும், பல்கலை-கல்லூரி வளாகங்களில் மாணவியர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம். மாணவி-மாணவர்கள் பேசிக் கொள்வது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தொட்டு, அடித்துப் பேசும் மாணவி-மாணவர்களை சகஜமாக காணலாம். தோள்மேல் கை போட்டுக் கொண்டு, மடியில் படுக்கும் நிலைகளையும் காணலாம். இவையெல்லாம் சுரணையற்றத் தன்மையா, காதலா, மோகமா, அனைத்தையும் கடந்த நிலையா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய முடியாது. பெற்றோர் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற கவலைக் கூட அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருந்தால், நிச்சயமாக, அத்து மீறி எந்த மாணவியும் நடந்து கொள்ள மாட்டாள், தன் மீது இன்னொரு மாணவன் கை வைக்க அனுமதிக்க மாட்டாள்.  பார்க்கும் சக-மாணவி-மாணவர்கள் ஆசிரியர்கள் முதலியோரும் தட்டிக் கேட்பதில்லை, கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

23-02-2023.


[1] தினத்தந்தி, பேப்பர் கொடுத்தாலே எழுதமாட்டோம்..இதுல பேப்பர் மாத்தி கொடுத்துட்டாங்க…” – சென்னை பல்கலை.யில், By தந்தி டிவி 18 நவம்பர் 2022 4:15 PM

[2] https://www.thanthitv.com/latest-news/chennai-university-149394

[3] தினமணி, சென்னை பல்கலை.யில் வினாத்தாள் குளறுபடி: விசாரணைக்குழு அமைப்பு, By DIN  |   Published On : 19th November 2022 06:02 PM  |   Last Updated : 19th November 2022 06:07 PM.

[4] https://www.dinamani.com/tamilnadu/2022/nov/19/university-of-madras-exam-issues-3952354.html

[5] தமிழ்.இந்து, ஒழுக்கம் போதிக்கும் கல்வி வருமா?, செய்திப்பிரிவு, Published : 15 Apr 2019 02:36 PM, Last Updated : 15 Apr 2019 02:36 PM.

[6] https://www.hindutamil.in/news/opinion/columns/161748-.html

[7] தினகரன், மாணவன் புகை பிடித்து மாணவி மீது ஊதிய விவகாரம் ஆசிரியர்கள், சஸ்பெண்ட் கண்டித்து மாணவர்கள் சாலை மறியல், 2022-09-27@ 14:15:20

[8] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=802627

தமிழக பல்கலைக் கழகங்களில் கல்வி சீரழியும் நிலை – தேர்வுகளில் குளறுபடி, வினாதாள்களில் குழப்பம் மற்றும் திருத்துவதில் முறையற்றத் தன்மை! (1)

பிப்ரவரி 23, 2023

தமிழக பல்கலைக் கழகங்களில் கல்வி சீரழியும் நிலைதேர்வுகளில் குளறுபடி, வினாதாள்களில் குழப்பம் மற்றும் திருத்துவதில் முறையற்றத் தன்மை! (1)

இறந்த பேராசிரியருக்கு பேப்பர் திருத்த அழைப்பு: இறந்தவர்கள் அல்லது இறந்ததாகக் கருதப் பட்டவர் உயிரோடு ஓட்டுப் போட வந்தார் என்றெல்லாம் செய்திகள் படித்திருக்கலாம். ஆங்கிலத்தில் “Dead men tell no tales”  இறந்த நபரால் இனி தகவல்களை -குறிப்பாக மற்றவர்கள் ரகசியமாக வைத்திருக்க விரும்பும் தகவல்களை – வெளிப்படுத்த முடியாது, என்று குறிப்பிடுவார்கள். எமில் ஜோலா (1840-1902), எழுதிய, “இறந்த மனிதர்கள் கதை சொல்லவில்லை” என்ற புத்தகமும் பிரசித்தி பெற்றது. பிறகு, அதே பெயரில் திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. ஆனால், அது திராவிட மாடலில் இப்படியும் இருக்கலாம் போலிருக்கிறது. இறந்த நபருக்கு சிகிச்சை என்று லட்சத்தில் பணம் பிடுங்கும் கதைகளைப் பார்த்திருக்கிறோம். இறந்தவர்கள் ஓட்டு போட்டதாகக் கூட செய்திகள் வந்துள்ளன. இப்பொழுது, இப்படியொரு செய்தி[1]இறந்த பேராசிரியருக்கு பேப்பர் திருத்த அழைப்பு”.

இறந்த பேராசிரியருக்கு பேப்பர் திருத்த திருவள்ளுவர் பல்லை அழைப்பாணை அனுப்பியுள்ளது: கொரோனாவால் இறந்த பேராசிரியருக்கு, கல்லுாரி மாணவர்கள் எழுதிய தேர்வுத்தாளை திருத்தம் செய்ய வருமாறு, திருவள்ளுவர் பல்லை அழைப்பாணை அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[2]. வேலுார் அடுத்த சேர்க்காட்டிலுள்ள திருவள்ளுவர் பல்கலை கட்டுப்பாட்டில், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன[3]. கல்லுாரி மாணவர்களின் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, காட்பாடியிலுள்ள கல்வியியல் கல்லுாரியில் 14-02-2023 தொடங்கியது[4]. இந்நிலையில், வேலுார் ஊரீசு கல்லுாரியில் பணிபுரிந்து வந்த வேதியியல் பேராசிரியர் விஜயகுமார், 2021ல் கொரோனாவால் இறந்த நிலையில், 14-02-2023 அன்று தொடங்கிய விடைத்தாள் திருத்தும் பணிக்கு வருமாறு, அவருக்கு, பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சந்திரன் அழைப்பாணை அனுப்பியுள்ளார்[5].

குடும்பத்தினர் திகைத்து பல்கலைக் கழகத்தினரை விசாரித்தது: அதை கண்ட குடும்பத்தினர் திகைத்துள்ளனர். தொடர்பு கொண்டு கேட்ட போது, ஏதோ தவறு நடந்துள்ளது, விசாரிக்கிறோம் என்று கூறியுள்ளனர்[6]. இந்த நடவடிக்கை, கல்லுாரி பேராசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[7]. “திருவள்ளுவர்” பெயரை வைத்துக் கொண்டு இடயங்கும் இப்பல்கலைக் கழகம், தொடர்ந்து பற்பல சர்ச்சைகள், ஊழல்கள், மரணங்கள் என்று பீடித்து வருவதைக் கவனிக்கலாம். பல்கலை பணி மூப்பு பட்டியலை எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பதற்கு, இது ஒன்றே சாட்சியாக உள்ளது என, கல்லுாரி பேராசிரியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். வழக்கம் போல, கிளர்க் / எழுத்தர் / உதவியாளர் போன்றோரின் தவறு என்று விளக்கம் கொடுத்து அமைதியாகி விடுவர். ஆனால், எவ்வாறு நடந்தது என்று சொல்ல மாட்டார்கள். திருத்திக் கொள்ள மாட்டார்கள், திருந்தவும் மாட்டார்கள்.. எல்லாவற்றிலும் நாங்கள் தான் ஃபர்ஸ்ட் / முதலில் உள்ளோம் என்று இப்பொழுதெல்லாம், “திராவிட ஸ்டாக்குகள்” தம்பட்டம் அடித்துக் கொல்வதைப் பார்க்கிறோம்.

கேள்வித் தாள்களில் குளறுபடிசகஜமப்பா நிலையில் உல்ளது: அதே நேரத்தில், தினம்-தினம் ஊடகங்களில் நினைத்துப் பார்க்க முடியாத, கற்பனைக்கும் எட்டாத நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. இளங்கலை வேதியியல் பயிலும் ஐந்தாம் பருவ மாணவர்களுக்கு பிசிகல் கெமிஸ்ட்ரி தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களில் பெரும்பாலானவை ஆறாம் பருவ பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்[8]. இதில், 2 மதிப்பெண் கொண்டதில் 4 வினாக்களும் 5 மதிப்பெண் கொண்டதில் 2 வினாக்களும் 10 மதிப்பெண் கொண்டதில் 2 வினாக்களும் என ஆறாம் பருவ தேர்வு தொகுப்பிலிருந்து இடம்பெற்றுள்ளது. மேலும், கேள்வி எண் 7-10, 14-15, 19-20 ஆகியவை வேறு பாடத் திட்டத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது[9]. இதேபோன்று கடந்த முறை நடைபெற்ற தேர்விலும் வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

2020ல் ஒரே நாளில் அனைத்து எமஸ்டர் தேர்வுகள்: கொரோனா காலத்தில்வீட்டில் இருந்தே தேர்வுகள் எழுதலாம் என்ற முறை இருந்த பொழுது, பற்பல ஊழல்கள் நடந்தேறியுள்ளன. அதன் தன்மை அறிந்து காசாக்க, பல்கலைக் கழகங்களில் பல கும்பல்கள் திட்டமிட்டு, கல்வியில் ஊழல் செய்துள்ளன. இதனால், படிப்பிற்கே மரியாதை இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. அம்முறை எப்பொழுது வேண்டுமானாலும், எப்படியாகிலும் செயல்படுத்தலாம் என்ற யுக்தியினையும் கற்றுக் கொண்டு விட்டார்கள். இதுகுறுத்து கடலூரைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறும்போது, ‘‘தேர்வுகளை மாணவர்கள் வீட்டில் இருந்தே எழுதலாம் என கூறியுள்ளனர். அரியர் தேர்வுகளைப் பொறுத்தவரை சில மாணவர்கள் ஒரே செமஸ்டரில் 3,4,5 என பாடங்களுக்கான தேர்வு எழுத வேண்டியுள்ளது. பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி ஒரே நாளில் ஒரு மாணவர் செமஸ்டரில் தேர்ச்சி பெறாத அனைத்து பாடங்களுக்கும் தேர்வு எழுத வேண்டியுள்ளது.

ஒரே நாளில் 3 அல்லது நான்கு பாடங்களுக்கு தேர்வு எழுதுவது என்பது சாத்தியமா?[10]: என்பதை பல்கலைக் கழக நிர்வாகம் யோசிக்க வேண்டும். ஒரே நாளில் எழுத வேண்டும் என வற்புறுத்துவதால் அந்த மாணவருக்கு பதில் வேறு மாணவர்கள்தான் தேர்வு எழுதுவார்கள். பிறகு, எதற்காக தேர்வு நடத்த வேண்டும். இது தேர்வு நடைமுறையை கேலிக்கூத்தாக்குவதாக உள்ளது’’ என தெரிவித்தார்[11]. வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் 28 முதல் டிசம்பர் 29ம் தேதி வரை நடந்தன. மொத்தம் 1.5 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வுகள் நடந்த போதே, கேள்வித்தாள்கள் இமெயிலில் அனுப்பப்பட்டது, ஜெராக்ஸ் எடுத்து வினியோகிக்கப்பட்டது என்று குளறுபடிகள் நடந்தன. விடைத் தாள்கள் அனுப்புதல் முதலிவயற்றிலும் மோசடிகள் நடந்துள்ளன. இதில் தான், பலருக்கு “டிகிரி” கிடைக்க ஏற்பாடு செய்யப் பட்டது. லட்சக்கத்தில் விற்பனையும் செய்யப் பட்டது.

100க்கு 101, 102, 107 என்று மதிப்பெண்கள் போடப்பட்டுள்ளது: இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் காண வந்த மாணவ-மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வு எழுதிய மாணவர்கள் பலர் தேர்வுகளை எழுதாமல் ஆப்சென்ட் ஆன தாகவும், பல மாணவர்களின் பதிவு எண்கள் வேறு படிப்பை படிக்கும் மாணவர்களது எண்களாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவசரம், அவசரமாக மறுநாள் இரவே தேர்வு முடிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், அதிலும் குளறுபடிகள் எதிரொலித்தன. இந்தமுறை பல மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களை காட்டிலும் கூடுதலாக மதிப்பெண்களை வழங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம்.குறிப்பாக, கடலூரில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்சி படிக்கும் 15 பேரின் மதிப்பெண் பட்டியலில், ஒரு பாடத்துக்கு இன்டர்னல் மதிப்பெண் 25 மதிப்பெண்கள் என்றால், எக்ஸ்டெர்னல் மதிப்பெண்கள் 75 ஆகும். ஆனால், எக்ஸ்டெர்னல் மதிப்பெண் 75 மதிப்பெண்களுக்கு மேல் போடப்பட்டு ஒவ்வொரு மாணவனுக்கும் 100க்கு 101, 102, 107 என்று மதிப்பெண்கள் போடப்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

23-02-2023.


[1]  தினமலர், https://www.youtube.com/watch?v=d3EXGrGZzPM

[2] தினமலர், இறந்த பேராசிரியருக்கு பேப்பர் திருத்த அழைப்பு, Added : பிப் 15, 2023 00:56.

[3] https://www.dinamalar.com/news_detail.asp?id=3242414

[4] ஜீநியூஸ், கொரோனாவில் இறந்த பேராசிரியர் விடைத்தாள் திருத்த பல்கலை., அழைப்பு!, Zee Media BureauFeb 15, 2023, 01:00 AM IST.

[5] https://zeenews.india.com/tamil/videos/vellore-thiruvalluvar-university-calls-professor-for-exam-paper-correction-who-died-two-years-ago-432579

[6] இ.டிவி.பாரத், உயிரோடு இல்லாத பேராசிரியர் பேப்பர் திருத்த உத்தரவு; திருவள்ளுவர் பல்கலை. விளக்கம் என்ன?, Published on: February 17, 2023, 6.46 AM IST.

[7] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/vellore/thiruvalluvar-university-claims-death-professor-issue/tamil-nadu20230217064634865865430

[8] இ.டிவி.பாரத், திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வில் குளறுபடி, Published on: December 16, 2020, 5:18 PM IST.

[9] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/cuddalore/mess-in-chemistry-exam-conducted-by-thiruvalluvar-university/tamil-nadu20201216171817709

[10] தமிழ்.இந்து, திருவள்ளுவர் பல்கலை கழகத்தில் கேலிக்கூத்தாக மாறியஅரியர்தேர்வு அட்டவணை ஒரே நாளில் ஒரு மாணவர் 5 தேர்வுகளை எழுதும் விநோதம், வ.செந்தில்குமார், Published : 17 Feb 2021 03:13 AM, Last Updated : 17 Feb 2021 03:13 AM

[11] https://www.hindutamil.in/news/todays-paper/regional02/634513–2.html

தமிழகத்தில் துணைவேந்தர் நியமன ஊழலும், திராவிடக் கட்சிகளும், கல்வி-படிப்புத் துறை தராதரமும், யோக்கியதையும்.

ஒக்ரோபர் 23, 2022

தமிழகத்தில் துணைவேந்தர் நியமன ஊழலும், திராவிடக் கட்சிகளும், கல்விபடிப்புத் துறை தராதரமும், யோக்கியதையும்.

2017 முதல் 2021 வரை திமுகதிமுக ஆட்சிகளும், கவர்னர்களும்: தமிழகத்தில் முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது குழப்பமான அரசியல் சூழ்நிலையில் 2017-ம் ஆண்டு தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார்[1]. பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி அமைந்த பின் பஞ்சாப் கவர்னராக இடமாற்றம் செய்யப்பட்டார்[2]. இவர் ஆளுநராக இருந்த போது பல்வேறு சர்ச்சைகளிலும், குற்றச்சாட்டுகளிலும் சிக்கியுள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சமயத்தில் சூரப்பா உள்பட அவரின் துணைவேந்தர் நியமனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின[3]. தமிழ்நாட்டு பல்கலைக் கழகத்திற்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவரை நியமிப்பதா என கடும் எதிர்ப்புகள் எழுந்தன[4]. திக-திமுக போன்ற கட்சியினர் ஊடகங்கள் மூலம் பலவித எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். பலவிதமான அவதூருகளையும் கிளப்பி வந்தனர். “நக்கீரன்” ஒன்றே உதாராணத்திற்கு சொல்லலாம். 2021ம் ஆண்டு தமிழக புதிய கவர்னாக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார். பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்த காலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றது. திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கல்வித்துறை ஊழல் விபச்சாத்தை விட மோசமானது: பல்கலைக்கழக ஊழல்கள் தமிழகத்திற்கோ, திராவிடக் கட்சிகளுக்கோ புதியதல்ல. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஊழலில் சிக்கியுள்ளன, பல் துணைவேந்தர்கள், தாளாளர்கள் ஊழலில் கைதாகியுள்ளனர், சிலர் மர்மமான நிலைகளில் இறந்துள்ளனர். ஆனால், ஊழல் ஒழிந்த பாடில்லை. துணைவேந்தர் நியமனம், அதிலிருந்து துணை-பேராசிரியர் நியமனம் முதலியவை எல்லாம் எப்படி லட்சங்கள் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்பதெல்லாம் பலமுறை ஊடகங்களில் வெளிவந்துள்ளன. ஆனால், யாருக்கும் இதைப் பற்றி வெட்கப் படுவதோ, கவலைப் படுவதோ இல்லை. இதுவும் நடக்கிறது-அதுவும் நடக்கிறது என்று தான், காலம் போய் கொண்டே இருக்கிறது. படிப்பு-கல்வி, அவற்றின் தரம், நெறிமுறை என்றால் நினைப்பவர்களும் கண்டுகொள்ளாமல் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டு சென்று விடுவார்கள். இத்தகைய ஊழல் விவகாரங்களை, அசிங்கங்களை, ஒதுக்கி விட்டு கடந்து செல்கிறார்கள். கல்வித்துறை ஊழல் விபச்சாத்தை விட மோசமானது என்பது தெரிந்த விவகாரம் ஆகிவிட்டது.

பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் சத்பீர் சிங் கோசலை நியமித்தது தொடர்பாக, பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும் முதல் மந்திரி பகவந்த் மானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது[5]. இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித், அரசியல் சட்டம் தன் கையில் உள்ளது என்றும் தனக்கு யாரும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் கூறினார்[6]. இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பேன். ‘பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை பஞ்சாப் அரசு என்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பஞ்சாப் கவர்னராக நான் நியமிக்கப்படுவதற்கு முன்பு, தமிழககவர்னராக அதாவது 20 பல்கலைக்கழகங்களின் வேந்தராக, 4 ஆண்டு காலம் இருந்துள்ளேன்[7]. எனது பதவிக் காலத்தில் சட்டப்படி 27 துணைவேந்தர்களை நியமித்துள்ளேன்[8]. தமிழகத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி ரூ. 40 கோடி முதல் ரூ. 50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அங்குள்ள கல்வித் துறையை ஒழுங்குபடுத்தியதற்காக தமிழக முதல்வ-மந்திரி மு.க.ஸ்டாலின் என்னைப் பாராட்டினார். அவரிடம் கேளுங்கள். அவரிடமிருந்து பஞ்சாப் அரசு கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். அரசியல் சாசனத்தை பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளேன். அதை யாராலும் தடுக்க முடியாது. நான் என் கடமையைச் செய்யவில்லை என்றால் நான் குற்றவாளியாக உணர்வேன். ஒரு கவர்னரின் பொறுப்பு, அனைவருக்கும் வழிகாட்டுவதும் பல்கலைக்கழகங்களைக் கவனிப்பதுமே. என்ன நடந்தாலும் என் கடமையைச் செய்வேன்’ என்று கூறியுள்ளார் .

துணைவேந்தர் நியமனத்தில் தவறு நடந்திருந்தால் அது ஆளுநரையே சாரும் என்று முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி.அன்பழகன் கூறினார்[9]. முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கேபி.அன்பழகன் நேற்று அளித்த பேட்டி[10]: “பஞ்சாபில் நடந்த ஒரு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை பெற்று நியமனம் செய்ததாக பேசி உள்ளார். துணை வேந்தர் நியமனத்திற்கு ஆளுநர் மட்டுமே கலந்து கொண்டு நேர்காணல் நடத்துகிறார். ஆளுநரே தேர்வு செய்து அறிவிக்கிறார். இதில் அரசுக்கோ, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கோ, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த எனக்கோ எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை. அப்படி இருக்கிறபோது, தமிழகத்தில் தான் பணியாற்றிய காலத்தில் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை பெற்றுக்கொண்டு துணைவேந்தரை நியமனம் செய்த நிலை இருந்தது என இன்றைய பஞ்சாப் ஆளுநர், பேசியது ஏற்ககூடியதாக இல்லை. பஞ்சாபில் அவர் துணைவேந்தரை நியமிக்கும் வாய்ப்பு இல்லை என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தை குறை கூறுவதை ஏற்க முடியாது. துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க முழுக்க ஆளுநரை சார்ந்தது. அதில் எந்த தவறு நடந்தாலும் அந்த காலகட்டத்தில் ஆளுநராக பணியாற்றிய அவரையே சார்ந்தது ஆகும்,”. இவ்வாறு அவர் கூறினார்.

கம்யூனிஸ்டுகளின் போலித்தனம்: இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழ்நாட்டின் ஆளுநராக 4 ஆண்டுகளுக்கு மேலாக பன்வாரிலால் புரோகித் பணியாற்றியுள்ளார்[11]. பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்த காலத்தில் 27 துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதாக கூறியுள்ளார்[12]. அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற உயர் பொறுப்பில் உள்ளவர் கூறும் புகாரை வெறும் செய்தியாக கடந்துவிட முடியாது. பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டை தமிழக அரசு விசாரிக்க வேண்டும். தவறு நடந்திருந்தால் ஊழல் செய்து துணைவேந்தர் பதவிகளில் அமர்ந்துள்ளவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும். துணைவேந்தர் பணி நியமனம் ஊழல் முறைகேடுகளுக்கு இடம்தராத வகையில் அமைந்திட விதிகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கம்யூனிஸ்டுகளையும் யாரும் பொருட்படுத்துவதில்லை, ஏனெனில், இவர்கள் சும்மா பேசிக் கொன்டுதான் இருப்பார்கள். ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதும் தெரிந்த விசயமே.

© வேதபிரகாஷ்

23-10-2022.


[1] தினமலர், தமிழக பல்கலை. துணைவேந்தர் பதவி ரூ. 50 கோடிக்கு விற்பனை: மாஜி கவர்னர் குற்றச்சாட்டு, Updated : அக் 21, 2022  21:22 |  Added : அக் 21, 2022  20:48.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3151495

[3] நியூஸ்.17.தமிழ், தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்பனை ; பன்வாரிலால் புரோஹித், by EZHILARASAN DOctober 22, 2022.

[4] https://news7tamil.live/in-tamil-nadu-the-post-of-vice-chancellor-sold-up-to-rs-50-crores-says-punjab-governor-banwarilal-purohit.html

[5] தினத்தந்தி, தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை விற்பனைபன்வாரிலால் புரோகித் அதிர்ச்சி தகவல், அக்டோபர் 22, 12:59 pm (Updated: அக்டோபர் 22, 1:07 pm).

[6] https://www.dailythanthi.com/News/India/vice-chancellors-post-in-tamil-nadu-for-sale-between-rs-40-crore-rs-50-crore-banwari-lal-purohit-shocking-information-820270

[7] தினமணி, தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ. 50 கோடிக்கு விற்பனை! முன்னாள் ஆளுநர் அதிர்ச்சித் தகவல்!!, By DIN  |   Published On : 22nd October 2022 10:36 AM  |   Last Updated : 22nd October 2022 10:36 AM.

[8] https://www.dinamani.com/india/2022/oct/22/in-tamil-nadu-a-vice-chancellors-post-was-sold-for-rs-40-to-rs-50-crore-banwarilal-purohit-3936820.html

[9] தினகரன், துணைவேந்தர் நியமனத்தில் தவறு நடந்திருந்தால் ஆளுநரையே சாரும்: மாஜி அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி, 2022-10-23@ 01:36:27

[10] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=808808

[11] தமிழ்.ஒன்.இந்தியா, துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்.. பற்றவைத்த பன்வாரிலால் புரோகித்.. விசாரணை தேவை.. முத்தரசன்!, By Yogeshwaran Moorthi Updated: Saturday, October 22, 2022, 17:10 [IST].

[12] https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-government-shoul-investigate-about-banwarilal-purohit-complaint-says-mutharasan-481764.html