Archive for the ‘நினைவ கொள்ளுதல்’ Category

தமிழ்வழி / தமிழ் மீடியம் தொழிற்நுட்ப / இஞ்சினியரிங் பாடப் படிப்புகள் வெ ற்றியா, தோல்வியா? (1)

ஜூன் 27, 2023

தமிழ்வழி / தமிழ் மீடியம் தொழிற்நுட்ப / இஞ்சினியரிங் பாடப் படிப்புகள் வெ ற்றியா, தோல்வியா? (1)

தேவை என்றால் வைத்துக் கொள்கிறோம் இல்லை என்றால் நீக்கி விடுகிறோம்: சமீபத்தில் பள்ளி-கல்லூரி பாடப் புத்தகங்களில், சில பிரிவுகள், தலைப்புகள், தொகுப்புகள் முதலியன சேர்க்கப் படுதல் / நீக்கப் படுதல் பற்றி அரசியல் ரீதியிலான சர்ச்சைகள் எழுப்பப் பட்டு விவாதிக்கப் படுகின்றன. கொரோனா காலத்தில் 2020-2021, இது அதிகமாக நடந்தது. பரீட்சை இல்லாமல் பாஸ் / ஆல்பாஸ் என்ற நிலைகளும் இருந்தன. கடந்த 70 ஆண்டுகளில், உலகம் முழுவதும், விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் ரீதியில் நடைமுறை வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கேற்ற முறையில், மனிதர்கள், வீடுகள், வீடுகளில் உபயோகப் படுத்தப் படும் பொருட்கள், தெருக்கள், நகரங்கள், பேருந்துகள் என்று எல்லாமே மாறி விட்டன. தேவை என்றால் வைத்துக் கொள்கிறோம் இல்லை என்றால் நீக்கி விடுகிறோம். அதே போல பாடப் பிரிவுகள், தலைப்புகள் தொகுப்புகள் முதலியன அவற்றில் உள்ள விவரங்கள் தேவையா-இல்லையா என தீர்மானித்து நீக்கப் படுகின்றன. 

நன்றாக இல்லை என்றால் மாற்றத்தான் செய்கிறார்கள்: ஒரு பள்ளி / கல்லூரி என்று சேர்ந்து, நன்றாக இல்லை என்றால், அந்த பள்ளி / கல்லூரி விட்டு, வேறு பள்ளி / கல்லூரி என்று சேர்ந்து விடுகிறார்கள். பல நேரங்களில் ஆசிரியர்களே சிலபஸில் (syllabus) உள்ளவற்றை குறிப்பிட்ட கலகட்டத்தில் போதிக்க முடியாமல் போகும் நிலை ஏற்படுகிறது.  அப்பொழுது, ஒன்று அவை பரீட்சைக்கு நீக்கப் படுகின்ற, இல்லை சாய்ஸில் (choice) விட்டுவிடுங்கள் என்று அறிவுருத்தப் படுகிறது. இதில் எத்தகைய உள்நோக்கத்தையும் கற்பிக்க முடியாது.  இவையெல்லாம் எல்லா பள்ளி / கல்லூரிகளிலும் நடந்து கொண்டுதான் வருகின்றன.  அரசியல்வாதிகள் ஆட்சி மாறும் பொழுது, தங்களது தலைவர்கள் பற்றி படிக்க வேண்டும் என்ற சித்தாந்த ரீதியில் பாடங்களை நுழைக்கும் பொழுது தான் பிரச்சினை வருகிறது. ஆட்சி மாறும் பொழுது, அவர்கள் முந்தைய  படப் பிரிவுகளை நீக்கி தங்களது தலைவர்கள் பற்றிய பாடங்களை நுழைக்கிறர்கள். இது சுழற்சியில் நடந்து வருகிறது எனலாம்.

இந்திய உணர்வுகளுக்கு எதிரான பாடங்கள்: தவிர மார்க்சீய, முகமதிய, முகலாய சித்தாந்திகள் என்று ஜே.என்.யூ (JNU), ஏ.எம்.யூ (AMU), டி.யூ (DU) என்று பல பல்கலைக் கழகத்தவர் என்.சி.இ.ஆர்.டி (NCERT), யு.ஜி.சி (UGC) என்று பல கல்வித் துறைகளில் ஆதிக்கம் செல்லுத்தி, பாடப் பிரிவுகளை திணித்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலும், இந்தியாவிற்கு எதிரான சீத்தந்தம் கொண்டவையாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, இந்தியா என்ற நாடே இல்லை, இந்தியர்களுக்கு கல்வி போன்றவை போதித்தது ஆங்கிகேயர் தாம், இப்பொழுதுள்ள நவீன எந்திரங்கள் முதலியவை அந்நியர் கொடுத்தது தான் அவர்களாக எதையும் செய்யவில்லை போன்றவை, இக்கால இந்தியாவுக்கு முரண்பாடாக இருக்கிறது. ஏனெனில் நிச்சயமாக இந்தியா பல்லாண்டுகளாக தன்னிறைவு கொண்ட நாடாக இருந்து வந்துள்ளது. அந்நியர் தாம், இந்தியாவில் பாலும் தேனும் ஓடுகின்றன என்று ஆசைப் பட்டு வந்தனர். ஆக, அத்தகைய பாடப் பிரிவுகள் இன்றைய கால கட்டத்திற்கு ஒவ்வாததாக-தேவையில்லாததாக உள்ளது. அத்தகைய பிரிவுகளை நீக்கும் போது, ஏன், யார் எதிர்க்கிறார்கள் என்பதையும் கவனிக்கலாம்.

காமர்ஸ் (commerce) / கணிதம் (Mathematics) போன்ற படிப்புகளுக்கு கிராக்கி அதிகமாவதேன்?: அந்நிலையில் தமிழகத்தில் இப்பிரச்சினை எழுந்துள்ளதை கவனிக்கலாம். அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள, சில பாடப்பிரிவுகளை நீக்கி, புதிய பாடப்பிரிவு துவங்கப்படும்,” என, சட்டசபையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார்[1]. தமிழகத்தைப் பொறுத்த வரையில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் படிக்க லட்சங்களில் டொனேஷன் கொடுத்தால் தான் இடம் கொடுக்கும், 90% மார்க் எடுத்தால் கூட கிடைக்காது. அந்நிலையில் ஜே.இ.இ (JEE) / இஞ்சினியரிங் இன்ட்ரென்ஸ் (All India Engineering Entrance Examinaions), நீட் (NEET) ஏன்றெல்லாம் வந்த பொது, கல்வி-வியாபாரம் போகிறதே என்று, தனியார் கல்லுரி கோஷ்டிகள் அரசியல்வாதிகள் மூலம் எதிர்க்க ஆரம்பித்தனர். காமர்ஸ் (commerce) / கணிதம் (Mathematics) போன்ற படிப்புகளுக்கு என்றைக்கும் தேவையுள்ளது, அந்நிலையில், அதன் முக்கியத்துவத்தை அறிந்த மாணவ-மாணவியர் அப்படிப்புகளை எடுத்துப் படிக்க ஆரம்பிக்கின்றனர். முடிவுகள் சாதகமாக இருந்து வேலை கிடைக்கும் பொழுது, மற்ரவர்களும் அப்படிப்புகளுக்கு செல்கிகின்றனர். இதனால் தான் அப்படிப்புகளுக்கு கிராக்கி ஏற்படுகின்றன.

 

உள்ள ஒரு சில பாடப்பிரிவுகளை நீக்கி, புதிய பாடப்பிரிவு துவங்கப்படும்: அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள ஒரு சில பாடப்பிரிவுகளை நீக்கி, புதிய பாடப்பிரிவு துவங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்[2].  மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 12 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளை நீக்கிவிட்டு, புதிய பாடப்பிரிவுகளை சேர்க்க கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து அரசுக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு சில கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் இடையே வரவேற்பு இல்லாத, மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பாடப்பிரிவுகளை மட்டும் நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தேவையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அதிகமுள்ள புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார்.

விஞ்ஞானம்-தொழிற்நுட்பப் படிப்புகளில் சர்ச்சை: அதன்படி சேந்தமங்கலம், லால்குடி, வேப்பந்தட்டை, கடலாடி, சத்தியமங்கலம், பரமக்குடி, மாதனுார், கூடலுார், கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணித படிப்பில் சேர்க்கை எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனால் அந்த கல்லூரிகள் தேவைக்கேற்ப கணினி அறிவியல், தமிழ், உயிர் தொழில்நுட்பவியல், வணிக நிர்வாகவியல், தாவரவியல், பொருளியல் ஆகிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. திட்டமலை அரசுக் கல்லூரியில் ஆங்கிலவழி கணித பாடப்பிரிவையும், நாகலாபுரம் அரசுக் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவையும் தமிழ் வழிக்கு மாற்றி கொள்ளலாம். மொடக்குறிச்சி அரசுக் கல்லூரியில் இயற்பியலுக்குப் பதிலாக விலங்கியல் பாடப்பிரிவு தொடங்கலாம். புதிய பாடப்பிரிவுகளுக்கு அந்தந்த பல்கலைக்கழகங்களில் கல்லூரிகள் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், அரசு மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி அனைத்து படிப்புகள் குறித்தும் விளக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்தின் முக்கியத்துவமும் தெரியும். ஒவ்வொரு பாடத்திலும் ஆர்வம் வரும்.

கணித பட்டப்படிப்பையும் தொடர்ந்து நடத்தவேண்டும். புதிய பட்டப்படிப்புகளை நிச்சயம் அறிமுகம் செய்ய வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதற்காக பட்டப்படிப்புகளை நிறுத்தக்கூடாது. ஏனெனில் தற்போது அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த மாணவர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து மாணவர்கள் படிப்பதை அரசுதான் உறுதி செய்ய வேண்டும். கணிதப் படிப்பை புறக்கணிப்பது வரும் காலங்களில் உயர்கல்வியில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு கணிதம்தான் அடிப்படை. எனவே, கணிதம் கற்றலை இனிமையாக மாற்றுதல், கணிதம் படிப்பவர்களுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கணிதம் படிப்பதை தமிழக அரசு உறுதிசெய்ய முடியும். எனவே மாணவர்களுக்கு அரசு நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், சலுகைகளை அதிகரித்து மாணவர்கள் அதிகம் கற்பதை ஊக்குவிக்க வேண்டும்.

தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம்: அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளன[3]. இது வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது[4]. பொறியியல் படிப்புகளைத் தமிழ் வழியிலும் மாணவர்கள் படிப்பதற்கு முந்தைய திமுக ஆட்சியில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நடவடிக்கை எடுக்கப்பட்டது[5]. முதலில் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட சில பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் வழங்கப்பட்டன[6]. அதன்பிறகு பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளிலும் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் 16 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பாக உறுப்பு கல்லூரிகளாக இயங்கி வருகின்றன[7]. ஆனால், இவற்றில் சேரும் மாணவ-மாணவியர் ஒரு சிலரே. மேலும் தமிழில் படிப்பதால் வேலை கிடைக்கும் சிக்கலும் உள்ளது. இதனால், இப்படிப்புகளைப் படிக்க யாரும் வராத நிலையும் உண்டாகிறது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது[8]. அதன்படி ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி உள்ளிட்ட 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன[9].

© வேதபிரகாஷ்

27-06-2023


[1] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Govt. College : 12 அரசு கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவுகள் நீக்கம் ஏன்? அரசு ஆவண செய்ய கல்வியாளர்கள் வலியுறுத்தல், Priyadarshini R, Jun 18, 2023 10:43 AM IST.

[2] https://tamil.hindustantimes.com/tamilnadu/12-why-are-core-subjects-removed-in-government-colleges-the-government-insists-that-educators-should-document-131687064678098.html

[3] காமதேனு, தமிழ் வழி பாடப்பிரிவுகள் 11 கல்லூரிகளில் நீக்கம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழகம், காமதேனு, Updated on : 25 May, 2023, 10:55 am.

[4] https://kamadenu.hindutamil.in/national/tamil-medium-courses-abolished-in-11-colleges-anna-university-notice

[5] தினத்தந்தி, #BREAKING || “தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிக நீக்கம்” – அண்ணா பல்கலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு , By தந்தி டிவி 25 மே 2023 10:11 AM

[6]  https://www.thanthitv.com/latest-news/breaking-temporary-cancellation-of-tamil-medium-courses-important-notice-issued-by-anna-university-188390

[7] தினமலர், தமிழ்வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம், மாற்றம் செய்த நாள்: மே 25,2023 11:43

[8] https://m.dinamalar.com/detail.php?id=3330087

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கம்; அண்ணா பல்கலை. அறிவிப்பு, Written by WebDesk, May 25, 2023 11:43 IST

ஆன்–லைன் மூலம் பாட போதனை, கற்றல், மனத்தில் ஏற்றல், பயிற்சி பெறுதல், தேர்வு எழுதுதல் சாத்தியமா? [2]

ஏப்ரல் 16, 2020

ஆன்லைன் மூலம் பாட போதனை, கற்றல், மனத்தில் ஏற்றல், பயிற்சி பெறுதல், தேர்வு எழுதுதல் சாத்தியமா? [2]

e-learning to rescue The Pioneer, 08-04-020

ஆன்லைன் பாடம் நடத்தும் செயல்பாடுகள்: இது இன்னும் செயல்படுத்தவில்லை என்றாலும், அரசுமுறையில் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஊடகங்கள் தத்தமக்கு தெரிந்த படி உசுப்பேற்ற ஆரம்பித்து விட்டார்கள். ஆன்–லைன் வித்தகர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவரவர்களுக்கு ஏற்ற முறையில், ஆலோசனை கூற ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு, இதை வைத்து வியாபாரம் செய்யலாம், என்ற உள்நோக்கமும் உள்ளது. அதனால், நிதர்சனமாக, நடைமுறையில் நிலவரம் என்ன, பிரச்சினைகள் என்ன, அவற்றை சமாளிப்பது எப்படி போன்றவற்றைப் பற்றி கவலைப் படவில்லை. ஏதோ ஆன்–லைன் மூலம், அனைத்தயும் சாதித்து விடலாம் என்ற போக்கில், கற்பனையில் மிதக்கிறார்கள்! அதற்கேற்றப் படி, ஆலோசனைகள், குறிப்புகள், யுக்திகள் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், இருக்கும் ஆசிரியர்களால், அவ்வாறு ஆன்–லைன் மூலம் பாடம் எடுக்க தயாராக உள்ளார்களா, அவர்களால் முடியுமா என்பது பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. இந்த ஆன்–லைன் போதனை, பாடம் நடத்துதல், ஒருவழியாகத் தான் இருக்கும். வகுப்புகளிலேயே மாணவ-மாணவர்கள் பாடம் எடுக்கும் போது, சிரத்தையாக கவனிப்பதில்லை அல்லது ஆசிரியர்களால் ஒழுங்காக பாடம் எடுக்க முடிவதில்லை போன்ற பிரச்சினைகள் உள்ளன. நேரிடையாக பாடம் எடுக்கும் போதே அப்பிரச்சினைகள் இருக்கும் போது, இப்பொழுது ர்ப்படி சமாளிப்பார்கள் என்று பார்க்க வேண்டும்.

Learning online TOI, 03-04-2020

போதித்தல்-கற்றல்-நினைவாற்றல்-தேர்வு முதலியவை: போதித்தல்-கற்றல் முறைகளில் மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்-ஆசிரியைகள் முதலியோருக்குண்டான பல காரணிகள் செயல் படுகின்றன. இதில் கற்றல் என்ற விசயத்தில் பொதுவாக உள்ளவை முக்கியமானவை.

  1. கற்றல், கற்றுக் கொள்ளுதல் – இதற்கு வம்சாவளி மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகள் காரணமாக அமைகின்றன. தொடர்ந்த-தொடர்ந்து பயிற்சிகளால் சரி செய்யலாம், சமன் செய்யலாம், சரி-சமன் செய்யலாம்.,
  2. மனதில் பதித்துக் கொள்ளுதல் – கடந்த கால அறிவு, புரிந்து கொள்ளும் தன்மை. தெரிந்த விசயங்களிலிருந்து, தெரியாத விசயகளை அறிந்து கொள்ளுதல்,
  3. அதனை வெளிப்படுத்துதல் – எந்த அளவுக்கு புரிதல் உள்ளது, புரிந்து கொள்ளப் பட்டுள்ளது, தவறான புரிதலை மாற்றுவது,
  4. அத்தகைய நினைவாற்றலின் தன்மை – புரிந்தவை ஞாபகத்திற்கு உடனே வருகின்றனவா, நேரம் தாழ்ந்து வருகின்றனவா,
  5. வெளிப்படுத்தியதை சீராக-கோர்வையாக எழுதுதல் – இது தொடர்ந்து சிந்திக்கும் ஆற்றல், பயிற்சி முதலியவற்றல் சீரமைக்கலாம்,
  6. தேர்வுக்கு தயார் படுத்துதல் – குறைந்த ஆற்றல் கொண்ட குழந்தைகளுக்கு அதிகமான சிரத்தையுடன் முன்னுக்குக் கொண்டுவருவது கடமையாகிறது.
  7. எழுதும் தன்மை, திறமை – இதற்கும் பயிற்சி தேவை,
  8. அச்சப்படாமல்-குழம்பாமல் கேட்ட கேள்விகளுக்கு, முறையாக எழுதுதல்,
  9. எப்படி எழுதினால் மதிப்பெண் கிடைக்கும், தேவையில்லாமல் எழுதுவதை தவிர்ப்பது.
  10. இவற்றையெல்லாம் வெற்றிகரமாக முடிக்க சிறந்த மனம்-உடல் ஆரோக்கியம் தேவைப் படுகிறது. அவற்றையும் பெற்றோர், உற்றோர், மற்றோர், அரசு முதலியவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

என்று பல விசயங்கள் இவற்றில் உள்ளன. “விகாஸ்பீடியாவில்” இவற்றைப் பற்றியெல்லாம், அருமையாக, தமிழில் கொடுத்துள்ளார்கள்[1]. அவற்றை, எல்லோரும் படிக்கவேண்டும்.

Changes introduced by online coaching The Hindu Tamil 17-03-2020

பள்ளி மாணவமாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லமுடியாத நிலையில், கீழ்கண்ட நிதர்சன நிலைகளை அரசு, பள்ளி அதிகாரம், ம்ற்றவர்கள் யோசித்துப் பார்த்துள்ளனரா?:

  1. பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவர்களிடம் எத்தனை பேரிடத்தில் டெஸ்க்-டாப், லேப்-டாப், ஸ்மார்ட் போன் இருக்கிறது.
  2. இன்டெர்நெட் வசதிகளுடன் இருக்கிறது. நன்றாக உபயோகப் படுத்தத் தெரியும்.
  3. மின்சார சப்ளை தொடர்ந்து, தடை இல்லாமல், எல்லா கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ளது.
  4. இன்டெர்நெட் வசதி, சப்ளை நன்றாக வேலை செய்கிறது.
  5. பிரென்டர் போன்ற வசதிகள் உள்ளன.
  6. அப்லோட் செய்யும் வசதி உள்ளது, வீட்டில் மாணவ-மாணவர்களுக்கு உதவ பெற்றோர், மற்றோர் உள்ளனர்.

இப்பொழுது, தினம்-தினம் உணவிற்காக பாடுபடுவதே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஏழை, கீழ்தட்டு-நடுத்தர மக்களுக்கு உணவு பிரச்சினை பெரிதாக உள்ளது. அந்நிலையில், இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாது என்றாகிறது.

Class conducted through whatsup- assam tribune, - 20-03-2020

நடைமுறையில் எழும் கேள்விகள்: 2020-2021 வருடத்தைய கல்வி, படிப்பு, ஆசிரியர் போதனை, தேர்வு, பயிற்சி, வேலை முதலிய விசயங்களில் பல கேள்விகள் எழுகின்றன!

  1. பாடதிட்டங்களின் படி, செயல்முறை வகுப்புகள், பயிற்சிகள் நடக்குமா, அல்லது அவசர-அவசரமாக முடிப்பார்களா, சமரசம் செய்து கொள்வார்களா தெரியவில்லை! அதாவது, முழு பாடதிட்டத்தை முடிக்க முடியுமா என்று தெரியவில்லை.
  1. எட்டாவது வரை எல்லாம் பாஸ் என்றால், பத்தாவது வரை அவ்வாறு செய்ய வேண்டும் போன்ற ஆலோசனைகள் எழுப்பப்படுகின்றன[2]. ஆனால், இவையெல்லாம், கல்வித் தரனை பாதிக்கும்.
  1. மேற்படிப்பு, குறிப்பாக அயல்நாட்டு படிப்பு கனவுகள் மொத்தமாகத் தகர்ந்து விடும் நிலையில் இருக்கின்றன, முயற்சி, பணம் ………..விரயமாகலாம்! அந்நிய பல்கலைக் கழகங்கள் இந்திய மாணவர்களுக்குக் காத்திருக்குமா அல்லது இது உலகளாவிய பிரச்சினையாக இருப்பதால், மாற்றிக் கொள்வார்களா என்று தெரியவில்லை. அத்தகையோருக்கு ஒரு கல்வியாண்டு விரயமாகலாம்.
  1. தொழிற்துறை படிப்புகள்E / B.Tech படித்த மாணவர்களுக்கு, தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பது, மேலும் கஷ்டமாகும்! இல்லை, இவ்வாண்டு, கொஞ்சம் சலுகை ரீதியில் கவனிக்கப் படவேண்டும். இருப்பினும், “கேம்பஸ் இன்டெர்வியூ” –வை மறந்து விட வேண்டியதுதான். இருக்கின்ற தொழிற்சாலைகள் திறந்தால் தான், வேலை வாய்ப்பு பற்றி சிந்திக்கலாம்.
  1. ICSE, CBEC போன்றவை 2020-2021 கல்வியாண்டின் பாடதிட்டத்தி படி, பாடங்களை ஆன்-லைனில் போதிக்க ஆரம்பித்து விட்டனர்.
  1. அரசு பள்ளிகளும் இதே யுக்தியை பின்பற்ற ஆரம்பித்துள்ளன. பொதிகை டிவியில் பாடங்கள் ஒலி-ஒலிபரப்பு நடக்கின்றன. தனியார் தொலைகாட்சிகளும் இதனை செய்ய வேண்டும்.
  1. ஆனால், 2019-2020 கல்வியாண்டின் தேர்வு எப்பொழுது நடக்கும் என்று தெரியவில்லை, பரீட்சை அட்டவணயும் அறிவிக்கப் படவில்லை!
  1. நான்காவது படிக்கும் குழந்தைகளுக்கு வீடியோ பாடம் அனுப்பி, படிக்க சொல்கிறார்கள், கேள்விகளுக்கு பதில் கேட்கிறார்கள்! பெற்றோர்களையும் பங்கு கொள்ளுங்கள் என்று வற்புருத்துகிறார்கள், இது எல்லா குடும்பங்களுக்கும் ஒத்து வருமா என்று கவனிக்க வேண்டும். இதனால், பெற்றோர்களுக்கு அதற்கேற்ற முறையில் தவமைத்துக் கொள்ள பாடங்கள் நடத்தப் படுகின்றன, கற்றுக் கொண்டு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
  1. சரி தேர்வை யார் எழுதுவார்கள்? ஆன்லைனில் எழுதலாமா, பெற்றொர்களே எழுதலாமா? இல்லை இதற்கெல்லாம் டியூஷன் தேவையா? இதையெல்லாம் யார் கண்காணிப்பது. ஆன்லைனில் எழுத வேண்டும் என்றால், கண்காணிப்புக்கு, மறுபடியும் மாணவர்கள் எப்படி ஒரு இடத்திற்கு வர முடியும்.
  1. இப்படி ஏகப் பட்ட நடைமுறைப் பிரச்சினைகள், அசாத்தியங்கள் முதலியன இருந்தாலும், ஏதோ கடமைக்கு செட்ய வேண்டும் என்ற ரீதியில், அதிரடியாக, அறிக்கைகள், சுற்றறிக்கைகள், செய்திகள், முதலியவை ஆரம்பித்து விட்டன.

©  வேதபிரகாஷ்

15-04-2020

Children learn online, Midday, 01-04-2020-2

[1] https://ta.vikaspedia.in/education/b86b9abbfbb0bbfbafbb0bcdb95bb3bcd-baab95bc1ba4bbf/baebc1ba9bcdbaabb3bcdbb3bbfb95bcd-b95bb2bcdbb5bbfbafbbfbb2bcd-b86b9abbfbb0bbfbafbb0bcdb95bb3bbfba9bcd-baaba3bbfb95bb3bcd-1/b95bb1bcdbb1bb2bcd-b95bb1bcdbaabbfba4bcdba4bb2bcd-b9abbfbb1baabcdbaabbeb95-ba8bbfb95bb4-b86b9abbfbb0bbfbafbb0bc1b95bcdb95bbeba9-b9abbfbb2-baabb0bbfba8bcdba4bc1bb0bc8b95bb3bcd

[2] இதில் அரசியல்வாதிகள் நுழைந்து கருத்துகளை சொல்லி, அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஏனெனில், அவர்களுக்கு கல்வி, கல்வி தரன் பற்றி கவலைப் படுவதில்லை.

ஆன்–லைன் மூலம் பாட போதனை, கற்றல், பயிற்சி பெறுதல், தேர்வு எழுதுதல் சாத்தியமா? [1]

ஏப்ரல் 16, 2020

ஆன்லைன் மூலம் பாட போதனை, கற்றல், பயிற்சி பெறுதல், தேர்வு எழுதுதல் சாத்தியமா? [1]

Online, Lessons broadcast thrrough DD, Tamil Hindu, 15-04-2020

பல்கலைக்கழக மானியக்குழு ஆன்லைனில் பாடம் நடத்துவது குறித்த வழங்கிய ஆலோசனை: நாடு முழுவதும் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கல்லூரிகள் அனைத்தும் வருகிற 14-ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கின்றன. ஆன் லைனில் கற்றல் கற்பித்தலைத் தொடருமாறு கல்லூரி, பல்கலைக்கழகங்களை யுஜிசி, ஏஐசிடிஇ போன்ற அமைப்புகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்த காலகட்டங்களில் மாணவர்களின் கற்றல், கற்பித்தலில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்கலைக்கழக மானியக்குழு ஆன்-லைனில் பாடம் நடத்துவது குறித்த ஆலோசனையை வழங்கியது[1]. அதன்படி, சென்னை பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சமீபத்தில் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது[2]. அதில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறனை ஆன்-லைன் மூலம் நடத்தி முடிக்கவும், செமஸ்டர் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையிலும் பாடம் எடுக்கவும் பேராசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்[3]. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது[4]. அதிலும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகளை மே மாதம் 15-ந் தேதி வரை மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது இப்பொழுது மே 3 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. பள்ளிகளிலும் +2 மாணவர்களுக்கு நடத்தப் படுகின்றன[5].

online classes, web links, Dinamani, 15-04-2020

விட்டிலிருந்தே கற்றல், டிஜிட்டல் புத்தகங்கள் முதலியன: மேலும், மாணவா்கள் தாங்களே ஆன் லைனில் கற்றலைத் தொடரும் வகையில், விடியோ விரிவுரைகள், டிஜிட்டல் புத்தகங்கள் இடம்பெற்றிருக்கும் சில வலைதளங்களை கட்டணம் எதுவும் இன்றி பயன்படுத்திக் கொள்ளவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு மீண்டும் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவா்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் அமைப்புகள், உயா் கல்வி நிறுவனங்கள் சார்பில் ஆன்லைன் கற்றல், கற்பித்தலை வழங்கும் 41 வலைதளங்களின் விவரங்களை ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில்) வெளியிட்டுள்ளது[6]. இந்த வலைதளங்களில் பள்ளி ஆரம்பக் கல்வி முதல் அனைத்துத் துறை சார்ந்த முதுநிலை பட்டப்படிப்புகள் வரையிலான டிஜிட்டல் பாட புத்தகங்கள், விடியோ வகுப்புகள், பாட கலந்துரையாடல் விடியோக்கள் எனப் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தையும் மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே படித்தும், பார்த்தும் பயன்பெற முடியும்[7], என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

CBEC onlie classes, yoga etc Dinamani, 15-04-2020

என்னென்ன வலைதளங்கள்?: தேசிய டிஜிட்டல் நூலகம் என்ற வலைதளத்தில் ஆரம்பக் கல்வி முதல் முதுநிலை படிப்புகள் வரையிலான பாடங்கள் சார்ந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் ஸ்வயம் வலைதளத்தில் 9-ஆம் வகுப்பு முதல் முதுநிலை படிப்பு வரையிலான பாட கலந்துரையாடல் நிகழ்வுகள், விடியோ விரிவுரைகள், பாட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய அறிவுசாா் வலைதளம், உயா் அலைவரிசை வசதியுடன் அனைத்து வகையான ஆராய்ச்சி, ஆராய்ச்சி நிறுவனங்கள் குறித்த தகவல்களைப் பெறும் வசதியைத் தருகிறது. தொழில்நுட்பம் மூலமான கற்றலுக்கான தேசிய திட்ட வலைதளம் மும்பை ஐஐடி, தில்லி ஐஐடி, சென்னை ஐஐடி, கான்பூா் ஐஐடி, குவாஹாட்டி ஐஐடி, ரூா்கி ஐஐடி ஆகிய ஐஐடிக்கள் மூலம் 2003-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பட்டப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவா்கள் அவா்கள் துறை சார்ந்த திறனை மேலும் மேம்படுத்திக் கொள்ள வசதியாக, இந்த வலைதளம் மூலம் பொறியியல், கலை-அறிவியல் துறைகள் சார்ந்த 600-க்கும் அதிகமான ஆன்-லைன் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதுபோல பல வலைதளங்கள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே கற்றலைத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஐஐடிகளுக்கு நிகராக மற்ற கல்வி நிறுவனங்கள் அத்தகைய தொழிற்நுட்ப வசதிகளுடன் தயாராக உள்ளனரா என்று தெரியவில்லை.

Students do not miss, Dinakaran, 16-04-2020

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் கல்வி தொலைக்காட்சி வழியாக தினமும் பாடம் சார்ந்த வீடியோக்கள்: மத்திய அரசு அறிமுகம் செய்த கல்வி வலைதளங்களில் 80 சதவீதம் வரை உயர்கல்வி தொடர்பானதாக உள்ளதாகவும், பள்ளி மாணவர்களுக்கான தீக் ஷா செயலியை செல்போன் வழியாக பயன்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளதாகவும் மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேல்நிலைவகுப்புகளை தவிர இதர அரசுப்பள்ளி மாணவர்களில் பலரிடம் கணினி வசதிகள் இல்லை. எனவே, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் கல்வி தொலைக்காட்சி வழியாக தினமும் பாடம் சார்ந்த வீடியோக்கள் பதிவேற்றப்பட்டன[8]. இவை மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. அதேநேரம் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் இருப்பதால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செல்போன் விளையாட்டுகளில் பிள்ளைகளின் கவனம்மூழ்கிவிடுவதாகவும், தொடர் பொழுதுபோக்கு மனநிலையில் இருந்தால் அவர்களின் கற்றல்திறன் குறையக்கூடும் என பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து வீட்டில் இருந்தேபடியே மாணவர்கள் பாடங்களை கற்கும் வகையில் இணைவழிக் கல்வி வலைதளம் (https://e-learn.tnschools.gov.in/) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் முதல்கட்டமாக 1 முதல்12-ம் வகுப்பு வரையான அனைத்து பாடங்களும் வீடியோ வடிவில் பதிவேற்றப்பட்டுள்ளன. இதை செல்போன் வழியாகவே யாருடைய உதவியும் இன்றி மாணவர்கள் எளிய முறையில் கற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Learning from home, Tribune, 09-04-2020

பதில்களை பதிவேற்றலாம்[9]: இந்த தளத்தை ஆசிரியர்கள், மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தகட்டமாக பாடக்கருத்துகள் தொடர்பாக மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை வலைதளம் மூலம் சேகரித்து பதில்களை பதிவேற்றவும், இதரபாடம் சாராத பொது அறிவு, வரலாற்று நிகழ்வுகள், ஆங்கிலத்தில் தவறின்றி எழுதும் பயிற்சி, அறிவியல் வளர்ச்சி உட்பட இதரகற்றல் அம்சங்கள் சார்ந்த வீடியோக்களும், கல்வியாளர்களின் வழிகாட்டுதல், மனநல ஆலோசனைகள், பள்ளி குழந்தைகளுக் கான கதைகளும் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், செல்போன் வசதியில்லாத மாணவர்கள் தங்கள் வீட்டில் உள்ள கல்வி தொலைக்காட்சி வழியாக கற்றல் பணிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். ஆனால், டிவி, கணினி வசதியுள்ளவர்கள் தாம் இவற்றைப் பார்க்க முடியும். இவற்றைப் பார்க்க பெற்றோர், உதவி செய்ய வேண்டும்[10]. பிறகு இல்லாதர்கள் நிலை பற்றிய கேள்வி எழுகின்றது.

CBSE, ISCE exams postponed, tamil hindu, 20-03-2020

2019-2020 கல்வியாண்டு தேர்வுகள் நடக்குமா?: இதனால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடக்கும்? 2020-21-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும்? என்பது தொடர்பாக மாணவ- மாணவிகள் பெரும் எதிர்பார்ப்பில் காத்து இருக்கின்றனர். இத்தகைய சூழலில், இதுதொடர்பாக ஆலோசித்து முடிவு எடுப்பதற்காக பல்கலைக்கழக மானியக்குழு உரிய முடிவு எடுப்பதற்காக நிபுணர் குழுவை அமைத்து இருக்கிறது. இந்த குழுவுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஆர்.சி.குகட் தலைமை தாங்கி இருக்கிறார். மேலும் இந்த குழுவில் சில உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த குழு ஆலோசித்து, பருவத் தேர்வு மற்றும் 2020-21-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் குறித்தும் சில முடிவுகளை எடுத்து அதனை ஒரு அறிக்கையாக 13-ந் தேதி சமர்ப்பிக்க இருந்தது. அதனை அடிப்படையாக வைத்து பல்கலைக்கழக மானியக்குழு 13-ந் தேதிக்கு பிறகு சில முக்கிய முடிவுகளையும், அறிவிப்புகளையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்பொழுது மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளதால், என்னாகும் என்று தெரியவில்லை. அடுத்த கல்வியாண்டே வந்து விடும் நிலையில் நடைமுறை பிரச்சினைகள் அதிகமாகும்.

Television as career Employment news

 ஆன்லைன் மூலம் பயிற்சி எடுக்கும் செயல்பாடுகள்: கரோனா பிரச்சினையால், பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாகி விட்டது. வீட்டடைப்பு, ஊரடங்கு போன்ற நிலைகளில் தேர்வுகள் நடப்பது கேள்வி குறியாகி விட்டது. சில பள்ளிகளில், ஆசிரியைகள் / ஆசிரியர்கள் ஏதோ உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும் என்ற தோரணையில், வாட்ஸ்-அப்பில், “ஹோம்-வொர்க் / அஸைன்மென்ட்” என்று அனுப்புகின்றனர். சரி, எல்லோரிடத்தில் போன் / மொபைல் இருக்கலாம், ஆனால், ஸ்மார்ட் போன் இருக்கும் என்று சொல்ல முடியாது. அப்படியே இருந்தாலும், இன்டெர்நெட் வசதி இருக்க வேண்டும். டவுன்லோன் செய்தால், பிரின்ட் எடுக்க பிரின்டெர் வசதி தேவை. நிச்சயமாக எல்லோருடைய வீட்டிலும் பிரென்டர் இல்லை. கடைகளுக்குச் சென்று, பிரின்ட் எடுக்க இப்பொழுது நிலைமை சரியில்லை. மீறி எடுத்து விட்டால், பிறகு, அவற்றை பூர்த்தி செய்து, அப்லோட் செய்ய வேண்டுமாம். இதெல்லாம், மத்தியதர மற்றும் அதற்கும் கீழுள்ள குடும்பங்களினால் சாத்தியப் படாது. ஆனால், இப்பொழுது சில பள்ளிகள் அவ்வாறு செய்ய ஆரம்பித்து வருவது திகைப்பாக இருக்கிறது. 130 கோடி மக்கள் வாழும் பாரதத்தில், அனைவருக்கும், அத்தகைய வசதிகள் இருக்கும் என்ற நினைப்பில், யூகத்தில், கற்பனையில் செயல் படுவது, மிக்கத் தவறான கொள்கையாகும். இதனால், வசதிகள் இல்லாதவ்வர்கள் பாதிக்கப் படுவர். தனியார் பளிகளின் போக்கு, நடவடிக்கை எப்படியிருக்கும் என்று தெரியவில்லை.

©  வேதபிரகாஷ்

15-04-2020

No schools, be at home, The Pioneer, 11-04-2020

[1] தினத்தந்தி, கல்லூரி, பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடக்கும்? – 13-ந் தேதிக்கு பிறகு முடிவு தெரியும் , பதிவு: ஏப்ரல் 10, 2020 03:30 AM

[2] https://www.dailythanthi.com/News/State/2020/04/10020111/College-and-university-semester-exams-When-will-that.vpf

[3] தினத்தந்தி, ஆன்லைன் மூலம் வகுப்புகள்சென்னை பல்கலை. துணை வேந்தர் உத்தரவு, பதிவு : ஏப்ரல் 02, 2020, 11:02 PM

[4] https://www.thanthitv.com/News/JustIn/2020/04/02230235/1224021/online-classes-chennai-university.vpf

[5] தினமலர், பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம், Added : ஏப் 02, 2020 00:47
https://www.dinamalar.com/news_detail.asp?id=2513563

[6] தினமணி, வீட்டிலிருந்தபடி கற்றலைத் தொடர உதவும் வலைதளங்கள், By DIN | Published on : 15th April 2020 02:18 AM

[7] https://www.dinamani.com/tamilnadu/2020/apr/15/websites-that-help-you-to-continue-learning-at-home-3400721.html

[8] தமிழ்.இந்து,  தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் இணையவழிக் கல்வி வலைதளம் அறிமுகம்: மாணவர்கள் எளிய முறையில் செல்போன் மூலம் படிக்க ஏற்பாடு, Published : 14 Apr 2020 06:41 AM, Last Updated : 14 Apr 2020 06:41 AM,

[9] https://www.hindutamil.in/news/vetrikodi/news/549413-schoold-education-website-2.html

[10]  டிவி-சீரியல் / செய்திகள் பார்க்கும் பெற்றோர் விட்டுத் தருவார்களா என்று பார்க்க வேண்டும்.