Archive for the ‘மசோதா’ Category

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, திராவிட மாடல் கல்வித்துறையை அரசியலாக்கி சீர்கெடுக்கிறது! (4)

மே 7, 2022

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, திராவிட மாடல் கல்வித்துறையை அரசியலாக்கி சீர்கெடுக்கிறது! (4)

சட்ட பல்கலைக்கழகத்தில் தகுதியற்ற பேராசிரியர்களை பதவியில் அமர்த்தப் பட்ட ஊழல்: சென்னையில் உள்ள தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் தகுதியற்ற பேராசிரியர்களை பதவியில் இருந்து நீக்க உத்தரவிடக்கோரி, பேராசிரியர் சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்[1]. இவ்வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசியர்கள், ஊழியர்கள் அனைவரும் தங்களது கல்வித்தகுதி மற்றும் பணிநியமன விதிமுறைகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்[2]. ஒவ்வொரு பேராசியரின் ஆவணங்களும் தனித்தனியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களின் பணிநியமன ஆணைகள், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டுள்ளதா எனவும், விருப்பத்தின் அடிப்படையில் பணி வழங்கப்பட்டிருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும்  நீதிபதி சுப்ரமணியம் தெரிவித்தார்[3]. ‘வகுப்பில் மாணவர்கள் பேராசிரியர்களை மதிப்பதில்லை எனும் பொது குற்றச்சாட்டு நிலவி வருகிறது. பேராசிரியர்களுக்கு தகுதியில்லை என்றால், அவர்களால் முறையாக வகுப்புகளை நடத்த முடியாது. அப்படியிருந்தால் அவர்களை மாணவர்கள் எப்படி மதிப்பார்கள்?’ என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

கொரோனா காலத்தில் தொடரும் ஊழல்கள்: பெரியார் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட தொலைதூர கல்வி மைய மாணவர்களுக்கு மே 15-ந் தேதி 2019 (இன்னும் இரண்டுநாட்கள்தான் உள்ளன) தேர்வுகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை எழும்பியிருக்கிறது[4]. இதற்குப் பின்னணியை ஆராய்ந்தபோதுதான் துணைவேந்தரின் புத்தக பிரிண்டிங் ஊழலும் அம்பலமாகிறது[5]. புத்தகங்கள் இல்லாமலேயே தேர்வுக்கு படித்து எப்படி தேர்ச்சி பெறமுடியும்? அப்படி தேர்ச்சிபெற்றவர் அரசுப்பணியில் எப்படி நேர்மையுடன் செயல்படுவார்? 2022ல் கேரளா மையங்களில் னினா-விடைத் தாள்கள் மாற்றப் பட்டு, மற்றவர்களை வைத்து எழுதுவிக்கச் செய்து, பாஸ் செய்ய ரூ. 3.5 கோடிகள் பெற்றதாக செய்திகள் வந்தன[6]. அதாவது, கொரோனா காலத்தைப் பயன்படுத்தி, ஆ:ள்மாறாட்டம் செய்து, அத்தகைய ஊழல்களை செய்துள்ளனர்[7].

2018 ஊழலை 2022ல் நக்கீரன் கிளறுவது ஏன்?: பாமக ராமதாஸ், வள்ளி ஊழலை தனது  அறிக்கையில் வெளியிய, அதை விகடன், “துணைவேந்தர் வள்ளியின் ஊழல் ராஜ்ஜியம்! – அன்னை தெரசா பல்கலை முறைகேட்டை அம்பலப்படுத்தும் ராமதாஸ்” என்று தலைப்பிட்டு வெளியிட்டது[8]. பிறகு, மேலும் விவரங்களை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டப் பிறகு, ஊடகங்கள் அதைப் பறிய செய்திகளை வெளியிட்டன[9]. நக்கீரனில் இப்பொழுது, இந்த விவரத்தை  அதிமுகவுடன் இணைத்து கதையை வெளியிட்டுள்ளது[10]. பழையக் கதையை, இப்பொழுது விவரிக்க முயன்றுள்ளது.  காளிமுத்து, ரவிச்சந்திரன், வள்ளி, சந்தில் பாலாஜி என்று புகைப் படங்களைப் போட்டு விவரிக்கின்றது. ஆனால், 25 பேருக்கும் மேலாக ஊழலில் சிக்கியுள்ள பல்கலை துணைவேந்தர்கள் பற்றியும் இதே மாதிரி கதைகள் எழுதலாமே? கோடிகளுக்கு அதிபதிகள் ஆகி, பல வீடுகள் வாங்கி, வியாபாரங்களில் முதலீடு செய்து ஜாலியாக காலம் தள்ளி வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து விட்டதால் மட்டும் ஊழல் நின்றுவிடப் போவதில்லை. இன்னும் தொடரத்தான் போகிறது. இதில் திராவிடக் கட்சிகள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள், தெளிவாகவும் செயல்படுகிறார்கள். பழைய-தொடர்ந்து வரும் சிஸ்டம் அப்படியே தான் இருக்கும். வேண்டுமானால், சில மாறுதல்களைச் செய்யலாம்.

மத்திய அரசு மோதல் கல்வித் துறையை சீரழிக்கும்: பெரியார், அண்ணா, கருணாநிதி சொன்னார்கள் என்று பாடங்களில் புகுத்தலாம். திராவிடியன் மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக, முழுமையாக, எல்லாப் பிரச்சினைகளையும் வைத்து, கடந்த 70 வருட திராவிடத்துவ தாக்கத்தை வைத்து, சமூகத்தை ஆராய்ந்தால், குற்றங்கள் தான் பலவிதங்களில் பெருகி வந்துள்ளன, வருகின்றன. கல்வித் துறை சீரழிவுகளே, மாணவ-மாணவியர் ஒழுங்கீன, சமூகவிரோத மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது, திகைப்படையச் செய்கிறது. அடிப்பது, கொல்வது என்ற அளவுக்கு வந்து விட்டது. முதலில் இவற்றை சரிசெய்யப் பார்க்காமல், மத்திய அரசு மோதல் என்று வைத்துக் கொண்டு காலத்தைத் தள்ளினால், எல்லாமே சீரழிந்து விடும். மத்திய அரசு நிதியுதவி, ஆதரவு, முதலியன எல்லா மாநிலங்களையும் இணைந்து வருவது. இந்தியாவில், பாரதத்தில் இந்தியர் ஒன்றாகத்தான் செயல்பட வேண்டும். அவ்வாறுதான் 5000 வருடங்களுக்கும்மேலாக இருந்து வந்துள்ளது. இப்பொழுது போல, சில மாநிலங்கள், அரசியல்வாதிகள் ஒற்றுமையில்லாமல் போகும் போது, வெளியிலிருந்து ஆபத்து வருகிறது. அதைத்தான், இந்த திராவிடன் மாடல் எல்லாம் செய்து வருகிறது.

  1. மாமூல், கையூட்டு, கமிஷன், லஞ்சம், கவனிப்பு, வந்து பார்க்கிறேன்…… இவற்றையெல்லாம் ஏன் இந்துத்துவ வாதி எதிர்ப்பதில்லை?
  2. திராவிட கட்சிகள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், சரி, இந்துத்துவ வாதிகள், தூய்மை, நியாயம், தர்மம் பேசுபவர்கள் அப்படி இருக்கலாமா?
  3. ஶ்ரீராமகிருஷ்ண பரம ஹம்ஸர், மனத்தளவில் நினைக்கின்ற ஒரு சிறிய அதர்ம சிந்தனைக் கூட பெரிய பாவம் என்கிறார்! பிறகு, ஊழலைக் கொல்ல வேண்டாமோ?
  4. தூய நினைவுகள் தூய்மையாக்குகின்றன, அது உடலையும் கட்டுப் படுத்துகின்றன, அமைதி-ஆரோக்கியம், ஆயுள் கொடுக்கின்றன!
  5. உடல் என்றுமே தனக்கு ஒவ்வாததை வெளியேத் தள்ளி விடுகிறது – தூவாரங்கள் மூலம் அவை நடந்து கொண்டே இருக்கின்றன. ஊழல்கள் அகலுகின்றன!
  6. குடும்பம், சமூகம், ஊர், நகரம், நாடு..முதலியனற்றிலும் இருக்கின்ற ஒவ்வாத ஊழலை, எந்த விதத்தில் இருந்தாலும், நீக்கிவிட வேண்டும்.
  7. நோயாளிகள் சாகிறார்கள், பாலங்கள் விழுகின்றன, மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள், வாகனங்கள் எரிகின்றன இவையெல்லாமும் ஊழல்கள் தான்!
  8. மக்களைப் போலத்தான் ஆள்பவன் இருப்பான் (यथा प्रजा तथा राजा) எனும் போது, யார் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் எனஅறிந்து கொள்ளலாம்!
  9. தூய்மை என்று வாயினால் சொன்னால் மட்டும் போதாது, சொல்பவனின் எல்லா துவாரங்களும் தூய்மையாக இருக்க வேண்டும், இல்லை நாறிவிடும்!
  10. அசுத்தங்களில், அக்கிரமங்களில், அதர்மங்களில் அத்வைதம் எடுபடாது, துவைதம், விசிஷ்டாதுவைவதம் என்று தான் செல்ல வேண்டியிருக்கும்!

© வேதபிரகாஷ்

07-05-2022


[1] முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். 2016-17-ம் ஆண்டு மாணவர் சேர்க்கையின்போது தான் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

[2] மாலைமலர், சட்ட பல்கலைக்கழக ஊழல்: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய பேராசிரியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு, பதிவு: பிப்ரவரி 02, 2019 13:47 IST

[3] https://www.maalaimalar.com/news/district/2019/02/02134734/1225775/Law-university-scam-HC-asks-staff-to-produce-affidavit.vpf

[4] நக்கீரன், படிக்காமலேயே தேர்வு எழுதும் 16,000 மாணவர்கள்! பின்னணியில் புத்தக பிரிண்டிங் ஊழல்!, மனோசௌந்தர், Published on 13/05/2019 (18:35) | Edited on 13/05/2019 (18:41).

[5] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/16000-students-going-write-examination-without-book-periyar-university

[6] பாலிமர் செய்தி, மதுரை காமராஜர் பல்கலையில் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க ரூ.3.5 கோடி லஞ்சம் பெற்றதாக புகார், ஆகஸ்ட்.8, 2020, 51:16 மதியம்.

[7] https://www.polimernews.com/dnews/117208

[8] விகடன், துணைவேந்தர் வள்ளியின் ஊழல் ராஜ்ஜியம்! – அன்னை தெரசா பல்கலை முறைகேட்டை அம்பலப்படுத்தும் ராமதாஸ், அஸ்வினி.சி, Published:03 Aug 2018 12 PMUpdated:03 Aug 2018 12 PM

[9] https://www.vikatan.com/government-and-politics/politics/132887-ramadoss-about-mother-therasa-university-scam

[10] நக்கீரன், துணைவேந்தர் பதவியில் துஷ்பிரயோகம், தோண்டத் தோண்ட ஊழல், மே. 4-6-2022, பக்கம்.30-32.

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, 2018ல் ஊழல் பற்றிய பாமக அறிக்கைகள் செய்திகள் ஆகின, ஆனால், எடுத்த நடவடிக்கைகள் தெரியவில்லை! (3)

மே 7, 2022

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, 2018ல் ஊழல் பற்றிய பாமக அறிக்கைகள் செய்திகள் ஆகின, ஆனால், எடுத்த நடவடிக்கைகள் தெரியவில்லை! (3)

அண்ணா முதல் பாரதியார் வரை, பல்கொள்ளைக்கழகங்களின் கதை!: இப்படி தலைப்பிட்டு, 2018ல் விகடன் பதிவு செய்துள்ளது[1]. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணம் பாதாளம் வரைக்கும் பாய்கிறது. இன்றைக்குக் கல்வியின் தரத்தைத் தாழ்ந்த தரத்துக்குக் கொண்டுபோய்விட்டார்கள்[2]. பணம் கொடுத்தால் பட்டம் வாங்கலாம் என்கிற நிலைமை பல்கலைக்கழகங்களில் உண்டு என்பது ஊரறிந்த உண்மையாகப் போய்விட்டது[3]. கல்விதான் இப்படியென்றால் பேராசிரியர்கள் பணியிடங்கள்முதல் துணைவேந்தர் பதவிவரைக்கும் பணம் இருந்தால் மட்டுமே போதும் என்கிற தகுதியைப் பெற்றிருக்கிறது. இந்த ஊழலுக்கு, ஊனும் உடலுமாக இருப்பவர்கள் உயர்கல்வித் துறை அமைச்சர், கல்லூரிகளின் இயக்குநர்கள், செனட் கமிட்டி துணைவேந்தர்கள் தேர்வுக் குழுவினர். இவை எல்லாவற்றையும்விட ஆளுநர் அலுவலகம் வரைக்கும் லஞ்சம் நீண்டுகொண்டே போகிறது[4]. அந்த அளவுக்குத் தமிழகத்தில், கல்வி பணத்துக்காக விற்கப்படும் பெட்டிக்கடைகள்போல் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் புரோக்கர்களை வைத்திருப்பது கொடுமையிலும் கொடுமையான விஷயம். கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் கைது நடவடிக்கைக்குப் பிறகாவது பல்கலைக்கழகங்கள் சுத்தம் செய்யப்படுமா என்பது அனைவரது கேள்வியாக இருக்கிறது.

சுபாஷ் சந்திரபோஸ் என்பவரின் விவரங்கள்: ஊழல் புகாருக்குள்ளான ஒருவரை துணைவேந்தராக நியமிக்க தேர்வுக்குழு பரிந்துரைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் 29-05-2018 அன்று விடுத்துள்ள அறிக்கையில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் சுப்பையாவின் பதவிக்காலம் வரும் திங்கட்கிழமையுடன் முடிவடையும் நிலையில், புதிய துணைவேந்தராக நியமிப்பதற்காக மூன்று பேரின் பட்டியல் பல்கலைக்கழக வேந்தர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது[5]. அவர்களில் ஊழல் புகாருக்குள்ளான சுபாஷ் சந்திரபோஸ் துணைவேந்தராக நியமிக்க தேர்வுக்குழு பரிந்துரைத்திருப்பது கண்டிக்கத்தக்கது[6]. அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயின்று திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த் துறை  பேராசிரியராக பணியாற்றிய அவர், 1998-2001 காலத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றினார். அப்போது பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர் பணிக்கான ஸ்லெட் எனப்படும் மாநில அளவிலான தகுதித் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாகவும், பலரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் குற்றச்சாற்றுகள் எழுந்தன. அந்தக் குற்றச்சாற்றுகளுக்கு ஆளான முனைவர் சுபாஷ் சந்திர போஸ் தான் இப்போது அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துனைவேந்தராக நியமிக்கப்படவுள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

2018-நிலைஊழல் செய்த துணைவேந்தர்கள் கைதாகாமல் பணியில் தொடர்கிறார்கள்: தமிழ்நாட்டில் அதிக ஊழல்கள் நடைபெற்ற முதல் 5 பல்கலைக்கழகங்கள் அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம் ஆகியவை தான். ஜி. ஜேம்ஸ் பிச்சை, முந்தைய துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக் கழகம், மற்றும் சி. சுவாமிநாதன், முந்தைய துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக் கழகம், மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன[7]. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை[8]. பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் ஜேம்ஸ் பிச்சை செய்த ஊழல்களும், அதன்மூலம் குவித்த சொத்துகளும் கணக்கிலடங்காதவை[9]. பாரதியார், பெரியார் ஆகிய இரு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக பணியாற்றிய முனைவர் சுவாமிநாதன் உரிய தகுதி இல்லாமலேயே அந்தப் பதவிகளுக்கு வந்தவர். இரு பல்கலைக்கழகங்களிலும் ஊழல் செய்வதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர். அதற்காக புதிய, புதிய வழிமுறைகளைக் கண்டறிந்தவர்[10]. இவருடைய ஊழலுக்கு உடந்தையாக இருந்து சிக்கிக் கொண்டதால் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவர் மீது ஏராளமான வழக்குகளை கையூட்டுத் தடுப்புப் பிரிவு பதிவு செய்திருக்கிறது. எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகங்களில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக அவரது வீட்டில் மத்திய வருமானவரித்துறை சோதனை நடத்தியது. ஆனாலும், அவர் இன்னும் பணியில் நீடிக்கிறார்.

தகுதியற்றவர்கள் தேர்தெடுக்கப் படுவதற்கு காரணம்பல்கலை ஊழல் பற்றி பாலகுருசாமி (2018)[11]: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியது[12], “பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஊழல் என்பது இன்றுநேற்று..நடைபெறும் ஊழல் அல்ல. கடந்த பத்து வருடங்களாகப் பல்கலைக்கழகங்களில் ஊழல் நடைபெற்றுவருகிறது. அதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை புகார் மனுவை ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறேன். ஆனால், இதுவரை அந்தக் கடிதத்தின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கணபதி ஒருவர் மட்டுமே ஊழல் செய்துவிடவில்லை. நிறைய துணைவேந்தர்கள் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். அவர்களைக் களையெடுக்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. கணபதியின் வழக்கை மையமாகவைத்தே அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, துணைவேந்தர்களைத் தேர்வுசெய்யக்கூடிய பல்கலைகழகத் தேர்வுக் கமிட்டியில் நேர்மையான ஆட்களை நியமிக்க வேண்டும்.தேர்வுக் கமிட்டியில்  இருப்பவர்களே ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, எப்படி நேர்மையான துணைவேந்தர்களை அவர்கள்  தேர்வுசெய்வார்கள்?

© வேதபிரகாஷ்

07-05-2022


[1] விகடன், அழகப்பா இது அழகாப்பா?” – அண்ணா முதல் பாரதியார் வரை, பல்கொள்ளைக் கழகங்களின் கதை! பகுதி-2, பாலமுருகன். தெ, Published:15 Feb 2018 4 PM; Updated:16 Feb 2018 1 AM.

[2] https://www.vikatan.com/news/education/116515-a-report-on-scam-in-karaikudi-alagappa-university-university-scam-series-part-2

[3] விகடன், “எண்ணியது முடிய காசு வேண்டும்அண்ணா முதல் பாரதியார் வரை, பல்கொள்ளைக் கழகங்களின் கதை! பகுதி-1, குருபிரசாத், Published:08 Feb 2018 1 PM; Updated:08 Feb 2018 4 PM.

[4] https://www.vikatan.com/arts/cartoon/115830-story-about-coimbatore-bharathiar-university

[5] தினமணி, அழகப்பா பல்கலை: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவரை துணைவேந்தராக நியமிப்பதா?, By DIN  |   Published On : 30th May 2018 11:34 AM  |   Last Updated : 30th May 2018 04:08 PM.

[6]https://www.dinamani.com/tamilnadu/2018/may/30/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE-2929827.html

[7] Times of India, As corruption cases idle, higher education slips into old, bad ways, TNN / Jul 28, 2019, 10:50 IST

[8] Bharathiar University’s former VCs G James Pitchai and C Swaminathan also have corruption cases pending against them. But, no action has been initiated against them so far.

https://timesofindia.indiatimes.com/city/chennai/as-corruption-cases-idle-higher-edu-slips-into-old-bad-ways/articleshow/70414522.cms

[9] மாலைமலர், ஊழல் புகாரில் சிக்கிய துணைவேந்தர்களை கைது செய்ய வேண்டும்ராமதாஸ், பதிவு: மார்ச் 26, 2018 11:10 ISTமாற்றம்: மார்ச் 26, 2018 11:11 IST

[10] https://www.maalaimalar.com/news/district/2018/03/26111043/1153189/Ramadoss-says-Corruption-scandal-caught-Vice-Chancellor.vpf

[11] விகடன், தகுதி இல்லாதவர்கள் தேர்வு செய்யப்படுவதே ஊழலுக்குக் காரணம்!” – பல்கலைக்கழக ஊழல் குறித்து கல்வியாளர்கள், கா . புவனேஸ்வரி, Published:07 Feb 2018 5 PMUpdated:07 Feb 2018 6 PM.

[12] https://www.vikatan.com/government-and-politics/corruption/115761-educationist-shares-their-concern-over-choosing-vice-chancellors-for-university

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, 2018ல் பாமக ஊழல் பற்றிய அறிக்கைகள் செய்திகள் ஆகின (2)

மே 7, 2022

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, பல்கலை ஊழல்கள் அதிகமாவது ஏன்? 2018ல் பாமக அறிக்கைகள் செய்திகள் ஆகின (2)

பாமகவின் 20018 பல்கலை ஊழல்கள் பற்றிய அறிக்கைகள்: பாமக தலைவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தமிழக பல்கலைக் கழகங்களில் நடக்கும் ஊழல்களைப் பற்றி அறிக்கைகள் வெளியிட்டனர். இவை, நாளிதழ்களில் செய்திகளாக வெளிவந்தன. ஆனால், பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை. இப்பொழுது 2022ல் துணைவேந்தர்கள், அவர்கள் சம்பந்தப் பட்ட வழக்குகள் நிலுவையில் தான் உள்ளன. CBCID, IT மற்ற துறைகள் முதலில் ரெயிட் செய்ததுடன் நிறுத்திக் கொண்டது போல உள்ளது. பொது மக்களுக்கு, ஒன்றும் தெரியவில்லை, தெரிவதில்லை. ஆனால், அவர்களது மகன், மகள்கள் கல்லூரிகளில், பல்கலைக்ககழகங்களில் படிக்கின்றனர், கல்வி பெறுகின்றனர். ஆனால், போதிக்கும் வர்க்கம், பாடம் சொல்லிக் கொடுக்கும் பேராசிரியர்கள் இவ்வாறு ஊழல்களில் சிக்கும்போது, படிக்கும் மாணவ-மாணவியர்கைன் நிலை என்னாவது? அவர்களும் மனோதத்துவ முறையில் பாதிக்கத் தானே செய்வார்கள். என்னடா இது, இந்த ஆளிடம் நாம் படிக்க வேண்டிய நிலை வந்து விட்டதே என்று நினைத்துத் தான் பார்ப்பார்கள்.

2018ல் பல்கலைக் கழகங்களில் நடக்கும் ஊழலை விசாரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை: இது பல நாளிதழ்களில் அப்படியே வெளிவந்துள்ளன. இதில் தான் வள்ளியின் ஊழல் பற்றிய விவரம் வருகிறது. ஆனால், நக்கீரனில் இப்பொழுது, இந்த விவரத்தை  அதிமுகவுடன் இணைத்து கதையை வெளியிட்டுள்ளது[1]. தமிழ் பல்கலை கழகம் மற்றும் அன்னை தெரசா பல்கலை கழகம் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்[2]. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஊழல்களும், அத்துமீறலும் இன்னும் கொடுமையானவை எனவும் துணைவேந்தர் வள்ளி, பதிவாளர் சுகந்தி ஆகிய இருவரும் சசிகலா உறவினர்கள் என்ற உரிமையில் பல்கலைக்கழக வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் தங்களின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மட்டும் எடுத்து வருவதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்[3].   அவர்களின் ஊழலுக்கு துணையாக இருந்த பொருளாதாரத்துறை பேராசிரியர் கலைமதிக்கு இரு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி[4], துணைவேந்தரின் கல்வி ஆலோசகர் என்ற பொறுப்பில் அமர்த்தியுள்ளதாகவும் அதைப்பயன்படுத்திக் கொண்டு கலைமதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள விரிவாக்க மையத்தையும், தொலைதூரக் கல்வி மையத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஆட்டிப்படைத்து வருவதாகவும் கூறப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்[5].

1532 மாணவிகளிடம் லஞ்சம் வாங்கியது: பகுதி நேர எம்.பில் படிப்பு பயிலும் 1532 மாணவிகளிடம் வாய்மொழித் தேர்வு நடத்தாமலேயே, நடத்தியதாகக் கூறி மதிப்பெண் வழங்க[6] மொத்தம் ரூ.30 லட்சம் கையூட்டு வசூலித்திருப்பதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளதாகவும் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் நியமனத்திலும் பெருமளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது[7]. பல்கலைக்கழகங்கள் ஊழல் கழகங்களாக மாறி வருவது தமிழகத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமையும் என்பதால்  இந்த இரு பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர் நியமனங்கள், தொலைதூரக் கல்வி, பகுதிநேரக் கல்வி ஆகியவற்றில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் பற்றி விசாரணை நடத்த ஆணையிடப்பட வேண்டும் என தனது அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் மீது ஊழல் குற்றச்சாற்றுகள் தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகின்றன. பணியாளர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை போன்றது பொதுவான குற்றச்சாட்டு ஆகும். கல்வித் தகுதியோ, திறமையோ முக்கியமல்ல, ரூ.50 லட்சம் கொடுத்தால் பேராசிரியர் பதவியும், ரூ.30 லட்சம் கொடுத்தால் உதவிப் பேராசிரியர் பதவியும் வழங்கப் படுவதாக பல்கலைக்கழக ஆசிரியர்களும், ஆய்வு மாணவர்களும் வெளிப்படையாக குற்றஞ்சாற்றியுள்ளதாகவும் அக்குற்றச்சாற்றுகள் உண்மை என்பதற்கு ஆதாரங்களும் உள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

2018ல் தெரசா பல்கலை செட் தேர்வில் முறைகேடு: இந்நிலையில், நேற்று தமிழ்நாடு நெட்-செட் சங்கத்தின் தலைவர் மதுசூதனன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அன்னை தெரசா பல்கலைக் கழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக செட் தேர்வு நடத்தி முடித்துள்ளதாகவும் வெளிப்படையான முறையில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிட பல்கலைக் கழக நிர்வாகம் மறுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி 2018ல் நடைபெற்ற செட் 2018 தேர்வில் முதல் தாளில் கேட்கப்பட்ட 50 கேள்விகளில், 43 கேள்விகள் முந்தைய நெட் தேர்வுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும்  எனவே, முதல் தாளை திரும்பவும் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்[8]. இந்தத் தேர்வு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுவதால், செட் தேர்வு நடைமுறைகளை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை கண்காணிப்பு செய்திட ஆளுநர் உத்தரவிட வேண்டும் எனவும் அரசு கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம், சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் நியமனங்கள் மற்றும் உறுப்பு கல்லூரி ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் நியமனத்தில் யுஜிசி விதிமுறைகளை பின்பற்றி நெட், செட் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நியமனம் செய்யும் வகையிலும் ஆளுநர் உத்தரவிடவேண்டும் என்றும் குறிப்பிட்டார்[9].

UGC ஒப்புதல், அங்கீகாரம் இல்லாமல், பல படிப்புகள் நடத்தி, பட்டங்கள் கொடுத்து, இளைஞர்களை ஏமாற்றி வருகின்றன. 2016லேயே அவை முறையற்றது, அங்கீகாரம் அற்றது எனு அரசு அறிவித்தது[10]. இதன் மூலமும் பெரிய அளவில் ஊழல் நடைபெறுகிறது. பல மாநிலங்களில் சென்டர்கள் வைத்தல், விண்ணப்பங்கள் ஏற்றல், வகுப்புகள் நடத்துதல், நோட்ஸ் கொடுத்தல் போன்ற நாடகங்கள் மூலம் இந்த ஊழல் பதப் படுத்தப் படுகிறது. தொலைத்தூர பட்டங்கள் எல்லாம், பொதுவாக ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. அயல்நாடுகளில் இதை கண்டுகொள்வதே இல்லை. பெரும்பாலான இந்த பல்கலைக்  கழகங்களை “போலி பல்கலை” லிஸ்டில் வைத்துள்ளனர் என்பது கவனிக்கத் தக்கது.

© வேதபிரகாஷ் 07-05-2022


[1] நக்கீரன், துணைவேந்தர் பதவியில் துஷ்பிரயோகம், தோண்டத் தோண்ட ஊழல், மே. 4-6-2022, பக்கம்.30-32.

[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், அடுத்தடுத்து வெளிவரும் துணைவேந்தர்களின் அடாவடிகள்…! பாரதியார் பல்கலை தொடர்ந்து தமிழ் மற்றும் அன்னை தெராசா பல்கலை கழக ஊழல்…! , First Published Feb 16, 2018, 4:05 PM IST, Last Updated Sep 19, 2018, 1:58 AM IST.

[3] https://tamil.asianetnews.com/tamilnadu/tamil-and-mother-teresas-corruption-scandal

[4] தினசரி செய்திகள், பாரதியார், பெரியார், தெரசா, தஞ்சை தமிழ்ப் பல்கலை என தொடரும் ஊழல்கள்! விசாரணைக்கு அன்புமணி கோரிக்கை!, FEBRUARY 15, 2018 2:54 PM.

[5] https://dhinasari.com/local-news/25227-investigations-should-be-do-for-corruption-is-universities-anbumani-ramadass.html

[6] தினகரன், அன்னை தெரசா பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவதில் ஊழல்: அன்புமணி குற்றச்சாட்டு, 12:52 am Aug 04, 2018 | dotcom@dinakaran.com(Editor)

[7] https://m.dinakaran.com/article/news-detail/425584

[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், செட் தேர்வு நேர்மையாக நடக்கல? – வசமாக சிக்கும் அன்னை தெரெசா பல்கலை கழகம்..!,  First Published Mar 12, 2018, 2:39 PM ISTLast Updated Sep 19, 2018, 2:03 AM IST .

[9] https://tamil.asianetnews.com/tamilnadu/complimentary-complaints-on-mother-teresa-university

[10] MINISTER OF STATE IN THE MINISTRY OF HUMAN RESOURCE DEVELOPMENT, Govt of India,   (Dr. MAHENDRA NATH PANDEY)

(a) to (d): The University Grants Commission (UGC) has informed that it has withdrawn the recognition of two universities namely: )…….

The UGC has not agreed to continue the recognition of following Universities namely:

(i) Mother Teresa Women’s University, Tamil Nadu;

(ii) Tamil Nadu Agriculture University, Tamil Nadu;

(iii) Tamil University, Tamil Nadu; (iv) Periyar

University, Tamil Nadu;

 (v) Bharathiar University, Tamil Nadu;

(vi) Alagappa University, Tamilnadu. Cancellation of Affiliation of Universities

Chandrappa Shri B.N.QUESTION NO. 3479 ANSWERED ON  08.08.2016.

http://164.100.47.194/Loksabha/Members/QResult16.aspx?qref=39293

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா – பல்கலை ஊழல்கள் அதிகமாவது ஏன்? (1)

மே 7, 2022

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, பல்கலை ஊழல்கள் அதிகமாவது ஏன்? (1)

திமுக, பல்கலை ஊழல், துணைவேந்தர் நியமனம்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன், பத்திய அரசுடன் பல விசயங்களில் மோதல்களில் ஈடுபட்டுள்ளது. முக்கியமாக பல்கலைக் கழக  துணைவேந்தர் நியமிப்பதில், தாங்களே அதை செய்வோம் என்று முனைந்துள்ளது. மசோதாவும் போட்டு ஆர்பாட்டம் செய்து வருகிறது. ஆனால், கவர்னர் துணைவேந்தர் நியமிப்பதில், கடந்த ஆண்டுகளில் ஊழல் குறைந்திருப்பது தெரிகிறது. அதாவது, மேலே சில நிலைகளில் இல்லாமல் இருந்தாலும், நியமனத்திற்குப் பிறகு, பாரம்பரியமாக இருக்கும் ஊழியர், அதிகாரிகள், ஏஜென்டுகள் பழையபடி தங்களது வேலைகளை செய்து தான் வருகிறார்கள். உதாரணத்திற்கு, கக்கூஸ் கட்டுவது, ரிப்பேர் செய்வது, புதுபிப்பது போன்றவற்றில் கூட ஊழல் செய்து வருகிறார்கள். வருடாவருடம் இவ்வேலைகளை செய்வதாக கணக்குக் காட்டி லட்சங்களை சுருட்டுகின்றனர். மற்றவற்றைப் பற்றி கேட்கவேண்டாம். இதில் வெட்கப் படக் கூடிய விசயம் என்னவென்றால், பல பல்கலைக் கழகங்களில் ஒழுங்கான கக்கூஸே இல்லை. இருந்தாலும், முறையாக சுத்தமாக வைத்திருப்பதில்லை. மெயின் பில்டிங் / துணைவேந்தர் கட்டிடம் போன்றவற்றில் மட்டும் இருப்பவை சுத்தமாக இருக்கும்.

பல்கலை ஊழல்களை மறந்து, துணைவேந்தரை நியமிக்க அவசரம் ஏன், மசோதா ஏன்?: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் மாநில அரசின் பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநரால் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநரே துணைவேந்தர்களை தேர்வு செய்து நியமித்ததால், பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்தநிலையில் தமிழக சட்டபேரவையில் ஏற்கனவே சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 13 பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான சட்டத்திருத்த மசோதாக்களை சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி 04-05-2022 அன்று அறிமுகம் செய்தார்[1]. இந்த மசோதாவிற்கு அதிமுக மற்றும் பாஜக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்தநிலையில் மீண்டும் சட்ட பேரவையில் சட்டபல்கலை கழக துணை வேந்தரை நியமிக்கும் வகையிலான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது[2].

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் ஊழல்கள் பல மலிந்துள்ள நிலையில் முதலமைச்சரே துணைவேந்தரை நியமிப்பார் என்ற மசோதா[3]: நீதிமன்றங்களிலும் வழக்குகள் நிலுவியில் உள்ளன. ஆந்நிலையில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை முதலமைச்சர் நியமிப்பதற்கான அதிகாரம் அளிப்பதற்கான திருத்த சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டசபையில் 05-05-2022 அன்று தாக்கல் செய்தார்[4]. இருக்கின்ற ஊழல்களை சரிசெய்யாமல், செய்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல், தண்டிக்காமல், இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. 27 தரமற்ற, தகுதியற்றவர்கள் பேராசிரியர்களாக பணியாற்றுவதாக, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில் உள்ளதை, நீதிபடி 2019ல் எடுத்துக் காட்டினார்[5]. சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும், அங்கு பாடம் எடுப்பவர்கள் தகுதியுடன், பாடம் எடுக்கும் திறமை, ஞானம் இருக்க வேண்டும்[6]. அப்பாடங்களைக் கேட்டு, படித்து, பரீட்சை எழுது, பட்டத்துடன் வெளி வரும் மாணவர்களுக்கு, சட்டங்கள்-விதிகள், மனுதயாரித்து, தாக்கல் செய்தல், வாதிடும் தன்மை முதலியவை எல்லாம் இருக்க வேண்டும். வெறும் பி.எச் / எம்.எல் பட்டத்தினாலோ, பார் கவுன்சில் உறுப்பினர் என்பதாலோ திறமை, புகழ் வந்து விடாது. ஆனால், 70% மாணவர்கள் தரமில்லாமல், ஆங்கிலம் பேசத் தெரியாமல் பாஸ் ஆகித் தான் வெளியே வருகிறார்கள்.,

பல்கலைக் கழகங்களுக்கு மத்திய அரசிடமிருந்து நிதியுதவு கிடைக்கின்றது: உண்மையில் பல்கலைக் கழகங்களுக்கு, மத்தியாரசிடமிருந்து, கோடிகள் கிடைக்கின்றன. தவிர கட்டுமானம், ஆராய்ச்சி போன்றவற்றிற்கும் நிதியுதவி கிடக்கிறது. இத்தகைய நிதிகளை முறையாகப் பயன்படுத்தாமல் தான் ஊழல் செய்து மாட்டிக் கொள்கின்றனர், தப்பித்துக் கொள்கின்றனர். ஒரு கட்டிடம் கட்ட ஒரு கோடி என்றால், 30 லட்சம் வரை கமிஷன் அதாவது ஊழலில் பட்டுவாடா செய்யப் படுகிறது. பில்டிங் கான்ட்ரேக்டர், தனக்கு கொஞ்சம் வைத்துக் கொண்டு, மீததத்தை துணிவேந்தர், தாளாளர், துணைத் தலைவர் என்று பட்டுவாடா செய்கிறார். இப்படித்தான் 1970களிலிருந்து நடந்து வருகிறது. இது ஒரு நிலைநிறுத்தப் பட்ட நிறுவனத்துவ ஊழலாகி விட்டது. இதில் திராவிக் கட்சிகளில் விதிவிலக்கல்ல. தொடர்ந்து தான் நடைபெற்று வருகிறது. இதனால் தான் கவர்னர் ஒழுங்காக இருக்கும் பொழுது, ஊழல் குறைகிறது. கொடுக்கப் படும் பணம் முறையாக அந்த வேலைகளுக்குச் செல்கிறது. ஆனால், 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் பிஜேபி அரசு சார்பில் நியமிக்கப் பட்ட கவர்னர்கள் ஒழுங்காக இஉந்தனர். தனால், ஊழல் செய்ய வழிகள் குறைக்கப் பட்டன. அது மாநில அரசுகளுக்குப் பிடிக்கவில்லை, இதனால் தான் புரோஹித் மீது ஆரம்பத்திலிருந்தே பிரச்சாரம் செய்யப் பட்டது. நக்கீரன் மூலம் சேற்றை வாறி இரைக்கப் பட்டது. ஆனால் அவர் பொறுமையாக தனது கடமைகளை செய்து முடித்தார். இப்பொழுது ரவி என்ற போலீஸ் அதிகாரி கவர்னராக நியமிக்கப் பட்டுள்ளார். இது திமுகவுக்குப் பிடிக்கவில்லை. இதனால், கவர்னர் எதிர்ப்பு போராட்டம், தினம்-தினம் பல உருவங்களில் வெளிப்பட்டு வருகின்றது.

2016ல் தமிழக பத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் போயஸ் தோட்டத்தில் சசிகலாவை சந்தித்தது: 2016ல் தமிழ்நாட்டிலுள்ள பத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் சசிகலாவை சந்தித்துள்ளனர்[7]. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைந்து விட்ட நிலையில், அவரது வழியில் அதிமுகவைத் தலைமையேற்று நடத்தும்படி வலியுறுத்தியதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆரில் செய்தி வெளியாகியுள்ளது[8]. பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், இதை கேள்வி கேட்டுள்ளார். எந்த அதிகாரப் பொறுப்பிலும், பதவியிலும் இல்லாத திருமதி. சசிகலாவை சந்தித்தது தொடர்பாக துணைவேந்தர்களிடையே எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை ஆகும். இச்சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்து கடந்த வாரம் ஓய்வுபெற்ற வணங்காமுடி, ‘‘தமிழகத்தில் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் இச்சந்திப்பு நிகழ்த்தப்பட்டது. பல்கலைக்கழகங்களுக்கு அரசு அதிகாரிகள் உதவி வழங்கியுள்ளனர். அதனால் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டியது அவசியம் என நாங்கள் கருதினோம். அதனால் தான் திருமதி. சசிகலாவை சந்தித்தோம்,’’ என்று கூறியிருக்கிறார். இந்தக் கருத்து முழுக்க முழுக்க அரசியல்மயமானதும், பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பணி விதிகளுக்கு எதிரானதுமாகும்.

© வேதபிரகாஷ் 07-05-2022


[1] தமிழ்.ஏசியாநெட், ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் தமிழக அரசு…! சட்டப் பல்கலை. துணை வேந்தரை, முதலமைச்சரே நியமிக்க அதிகாரம், Ajmal Khan, Chennai, First Published May 5, 2022, 12:26 PM IST; Last Updated May 5, 2022, 12:26 PM IST.

[2] https://tamil.asianetnews.com/politics/the-chief-minister-has-the-power-to-appoint-a-vice-chancellor-to-the-tamil-nadu-law-university-rbedxo

[3] மாலைமலர், அம்பேத்கர் சட்ட பல்கலை. துணைவேந்தரை முதல்அமைச்சர் நியமிப்பதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல், பதிவு: மே 05, 2022 16:17 IST

[4] https://www.maalaimalar.com/news/district/2022/05/05161729/3740044/tamil-news-Ambedkar-Law-University-Bill-to-amend-law.vpf

[5] The judge Justice S. M. Subramaniamsaid P. Vanangamudi, former Vice Chancellor of Tamil Nadu Dr.Ambedkar Law University filed a counter affidavit stating that nearly about 27 professors were not qualified and the details, qualifications and other relevant particulars were provided in the counter affidavit.

https://www.deccanchronicle.com/nation/current-affairs/050119/unqualified-profs-in-law-colleges-madras-high-court-wants-details.html

[6] DECCAN CHRONICLE, Unqualified professors in law colleges: Madras high court wants details, PublishedJan 5, 2019, 1:36 am ISTUpdatedJan 5, 2019, 2:40 am.

[7]  தமிழ்.இந்து, அதிமுகவுக்கு தலைமையேற்க சசிகலாவை சந்தித்து துணைவேந்தர்கள்  கெஞ்சுவதா?- அன்புமணி கண்டனம், செய்திப்பிரிவு, Last Updated : 21 Dec, 2016 03:30 PM

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/91007-.html