Archive for the ‘மனதில் பதித்துக் கொள்ளுதல்’ Category

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணிநீக்கம் (1)

நவம்பர் 19, 2023

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணிநீக்கம் (1)

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிசெலவினங்கள் மூலம் ஆரம்பித்த கல்விஊழல்: கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, கடலூா் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதி, நியமனம், செலவினங்கள் பற்றிய விவரங்கள்-விவகாரங்கள் திருப்தியற்ற நிலையிலே இருந்தது. பல ஆடிட் / தணிக்கைக் குழுக்களின் சோதனைகளில் பணம் சரியாக கையாளப் படவில்லை மற்றும் செலவினங்கள் முறையாக கணக்குகளில் கொண்டுவரவில்லை-வரப்படவில்லை என்றெல்லாம் அறிக்கைகள் வெளிவந்தன. பணம் வாங்கிக் கொண்டு, ஆயிரக்ககணக்கில் வேலை நியமனம் செய்யப்பட்டது முதல் பலவித ஊழல்களும் மலிந்துள்ளன. பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் எனச் சுமார் 12,000 பேர் பணியாற்றிவருகின்றனர்[1]. நிர்வாகக் குளறுபடி மற்றும் அளவுக்கு அதிகமான ஊழியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது பல்கலைக்கழகம்[2]. ஒரு கட்டத்தில் ஊழியர்களுக்கே சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கருதி, 2013-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை ஏற்று, தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார்.

தமிழக அரசு கட்டுப்பாட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: நிதி நெருக்கடி, நிதி முறைகேடுகள் காரணமாக, கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. பல்கலைக்கழக நிர்வாகியாக தற்போதைய தலைமைச் செயலா் ஷிவ்தாஸ் மீனாவை 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-இல் தமிழக அரசு நியமனம் செய்து, அவா் உடனடியாகப் பொறுப்பேற்றார். பின்னா், தமிழக அரசு உயா் கல்வித் துறை மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர சட்டப் பேரவையில் புதிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. தொடா்ந்து, பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாகி ஷிவ்தாஸ் மீனாவால் பல்வேறு கல்வி, நிதி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதையடுத்து பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் எனச் சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்கள், தமிழகத்திலுள்ள மற்ற கல்லூரிகளுக்கும், வேறு துறைகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்[3].  தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் தணிக்கைக்குழு ஆய்வு மேற்கொண்டபோது, போதுமான கல்வித் தகுதி இல்லாமல் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத அலுவலர் என 200-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிவது தெரியவந்தது[4]

2023ல் 56 உதவிப் பேராசிரியா்கள் பணி நீக்கம் அறிவிப்பு ஆணை: மேலும், பல்கலைக்கழகத்தில் அரசு விதிமுறைகளின்படி பணி நியமனம் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு[5], உயா் கல்வித் துறைக்கு அவா் அறிக்கை சமா்ப்பித்தார்[6].. அதன்படி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் 56 உதவிப் பேராசிரியா்கள் அடிப்படை கல்வித் தகுதி மற்றும் அரசு தகுதி விதிமுறைகளைப் பின்பற்றாமல் பணியாற்றி வந்ததாகக் கூறி[7], தமிழக அரசு உயா் கல்வித் துறை பரிந்துரையின்பேரில், அவா்களை பணி நீக்கம் செய்து பதிவாளா் (பொ) ஆா்.சிங்காரவேலு வியாழக்கிழமை 16-11-2023 உத்தரவு பிறப்பித்தார்[8]. பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றி வரும் 18 பேருக்கும்[9], வெளிக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் 38 பேருக்கும் உத்தரவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்[10].

புகழ் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலை: உலகெங்கும் அண்ணாமலையில் படித்தவர்கள் உள்ளனர். பண்டித மணி கதிரேசன் செட்டியார் போன்ற சிறந்த தமிழ் அறிஞர்கள் தலைமையில் தமிழ் ஆராய்ச்சி ஜொலித்தது. பல அறிய படைப்புகள் வெளிவந்தன. தண்டபாணி தேசிகர் ரங்காச்சாரி போன்றோர் இசைக்கல்லூரியை அலங்கரித்தனர். சர் சி பி ராமஸ்வாமி ஐயர் போன்றோர் துணைவேந்தர்களாக பணியாற்றினார். அந்த பல்கலைக்கா இந்த நிலைமை. பொது உடைமையாக்கி நாசப்படுத்தி விட்டார்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் போதிய தகுதி இல்லாத காரணத்தால் பேராசிரியர்கள் 58 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போலி கல்விச் சான்றிதழ்களை வழங்கி பணியாற்றி வந்ததாக எழுந்த புகாரின் பேரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுதைய உயர்க்கல்வித்துறை அமைச்சறின் ஆதரவு: இந்நிலையில் உயர்க்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்[11]. விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யுஜிசி விதிமுறைகளின்படி, உதவிப் பேராசிரியர்கள் நெட் அல்லது ஸ்லெட் தகுதித் தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது பி.எச்.டி படிப்பை முடித்திருக்க வேண்டும்[12]. ஆனால் அந்த தகுதிகள் எதுவும் இல்லாதவர்கள் உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தகுதி குறைவான பேராசிரியர்கள் குறித்து 2019ஆம் ஆண்டில் சிண்டிகேட் குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது[13]. நீதிமன்றமும் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கவில்லை. இப்போது துணை வேந்தர் பணி நீக்கம் செய்துள்ளார்[14]. இது வரவேற்கத்தக்கது. இதற்கு யாரும் பொறுப்பல்ல. 10 ஆண்டுகளாக அவர்கள் தகுதியை மீறி சலுகையை அனுபவித்து உள்ளார்கள். தகுதி குறைவானவர்கள் பணி நியமனம் செய்யப்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் வருங்காலத்தில் தங்களின் தகுதிக்கேற்ற வகையிலான அரசுப் பணிகளுக்கு விண்ணப்பித்தால் அரசு அதனை பரிசீலிக்கும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கல்வி ஊழல்உருவானஉருவாக்கப் பட்ட நிலைவிதம்: ஊழலில் கல்வி, கல்வித்துறை, கல்வி பாடங்கள், கல்வி நெறிமுறை அல்லது கல்வியில் ஊழல் என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களாக இருந்தது. கல்வி தெய்வமாக, தெய்வீகமாகக்  கருதப் பட்டதால் அத்தகைய உரிய ஸ்தானம் கொடுக்கப் பட்டு மதிக்கப் பட்டது. இருந்தாலும் சமீப காலங்களில் கல்வி வியாபாரம் மயமாக்கப்பட்டதால் அந்த விளைவின் உச்சத்தில், “கல்வி ஊழல்” நடந்து வருகிறது. விடுதலைக்குப் பிறகு அரசியல் நுழைவு, ஆளும் அரசியல்வாதிகளின் தாக்கத்தாலும், அரசியல்வாதிகள் மற்றும் சித்தாந்த வாதிகளின் திரிபுகளாலும் கல்வி பாடத்திட்டங்கள் புத்தகங்கள் மற்றும் பாடங்களை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் விற்பனர்கள் என்று எல்லாமே அரசியலுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலை உண்டாயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக அத்தகைய “கல்வி ஊழல்” என்பது ஆரம்பிக்க வைக்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

18-11-2023.


[1] தினமணி, அண்ணாமலைப் பல்கலை.யில் 56 உதவிப் பேராசிரியா்கள் பணி நீக்கம், By DIN  |   Published On : 17th November 2023 12:32 AM  |   Last Updated : 17th November 2023 12:32 AM.

[2] https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2023/nov/17/56-assistant-professors-sacked-in-annamalai-university-4107136.html

[3] விகடன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் டிஸ்மிஸ்பின்னணி என்ன?!, ஜெ.முருகன், Published: 17-11-2023 at 1 PMUpdated: 17-11-2023 at 1 PM.

[4] https://www.vikatan.com/government-and-politics/politics/higher-education-department-has-dismissed-56-professors-without-adequate-educational-qualification-in-annamalai-university

[5] தமிழ்.வெப்.துனியா, அண்ணாமலை பல்கலையின் 56 பேராசிரியர்கள் பணி நீக்கமா? பரபரப்பு தகவல்..!, Written By Mahendran Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (15:08 IST).

[6] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/56-professors-dismiss-in-annamalai-university-123111600061_1.html

[7] தினமலர், அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் 58 பேர் டிஸ்மிஸ், பதிவு செய்த நாள்: நவ 16,2023 14:25

[8]  https://m.dinamalar.com/detail.php?id=3482745

[9] தினத்தந்தி, 56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம்சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அதிரடி, 16 Nov 2023 9:28 PM.

[10] https://www.dailythanthi.com/News/State/56-assistant-professors-sacked-chidambaram-annamalai-university-takes-action-1082995

[11] தமிழ்.சமயம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. போராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன்? அமைச்சர் பொன்முடி பரபரப்பு விளக்கம்!, Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 17 Nov 2023, 3:51 pm

[12] https://tamil.samayam.com/latest-news/state-news/minister-ponmudi-reveals-the-reason-why-annamalai-university-56-assistant-professors-dismissed/articleshow/105289709.cms

[13] தமிழ்.இந்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம்: உரிய கல்வித் தகுதி இல்லாததால் நடவடிக்கை செய்திப்பிரிவு, Last Updated : 17 Nov, 2023 05:58 AM.

[14] https://www.hindutamil.in/news/tamilnadu/1154731-chidambaram-annamalai-university-sacks-56-assistant-professors.html

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் கைதுக்குப் பிறகு சமூகவியல் / மனோதத்துவ துறை பேராசிரியர் கைது – புகார், குற்றங்கள் ஒன்றுதான்!

ஏப்ரல் 21, 2023

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் கைதுக்குப் பிறகு சமூகவியல் / மனோதத்துவ துறை பேராசிரியர் கைது – புகார், குற்றங்கள் ஒன்றுதான்!

மார்ச் 2023லேயே புகார் கொடுக்கப் பட்டது: மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதுரை காமராஜ் பல்கலை சமூகவியல் துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டார்[1]. மதுரை, மாடக்குளத்தைச் சேர்ந்தவர் சி. கருப்பையா, 60 (Madurai Kamaraj University Psychology department head C Karuppaiah); வயது 52 என்றெல்லாம் சில ஊடகங்கள் குறிப்பிடுவது வேடிக்கஈயாக இருக்கிறது. காமராஜ் பல்கலை சமூகவியல் / மனோதத்துவ துறை பேராசிரியராக பணிபுரிந்து மார்ச்சில் ஓய்வு பெற்றார்[2]. மனோதத்துவ பேராசிரியர் என்றால், மாணவ-மாணவியருக்கு, இவரால் பல நன்மைகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், திராவிட மாடலில் இவ்வாறு திசைத் திரும்பி, வேலியே பயிரை மெய்ந்த உண்மையாகி விட்டது போலும். கல்வியாண்டு முடியும் 2023 ஜூன் மாதம் வரை, இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது[3]. புகார்கள் உள்ள நபருக்கு அவ்வாறு பதவி நீட்டிப்பு கொடுத்தது ஏன் என்று தெரியவில்லை. உளவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பல்கலையில் புகார் அளிக்கப்பட்டது[4].

முதலில் கொடுத்த புகார்கள் கண்டுகொள்ளப் படவில்லை: இவர் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சில மாணவியர் புகார் அளித்தனர்[5]. அதன்படி இன்ஸ்பெக்டர் முத்துமணி, விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார்[6]. காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கருப்பையா மீது மாணவிகள் சிலர் குற்றம்சாட்டி வந்தனர்[7]. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பல்கலைகழகத்தில் 04-04-2023 அன்று புகார் அளித்தும் பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவிகள் குற்றம்சாட்டினர்[8]. இதனிடையே மதுரை சரக டிஐஜி பொன்னியை சந்தித்து மாணவிகள் புகார் அளித்தனர்[9]. இவ்வாறு பிடிஐ பாணியில் தான், எல்லா ஊடகங்களும் இச்செய்தியை வெளியிட்டே ஆகவேண்டும் என்ற ரீதியில் வெளியிட்டாலும், எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. மிக சமீபத்தைய கலாக்ஷேத்திரா போல பொங்கவில்லை. இதுதான், பத்திரிகா தர்மத்தின் மிகப் பெரிய மர்மமாக இருக்கிறது எனலாம்.

04-04-2023 அன்றும் புகார் கொடுக்கப் பட்டது: இந்தியன் எக்ஸ்பிரஸ் இதைப் பற்றி தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுளளது. அதாவது, அவ்வாறு செய்திகள் வெளிவந்தாலும், இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாகிறது. இதில் அரசியல் இருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால், கலாக்ஷேத்திராவிற்கு குதித்தவர்கள், இதை கண்டு கொள்ளவில்லை போலும்! அந்த SFI உதலிய போராளிகளும், வீராதி-வீரர்களும் கண்டுகொள்லவில்லை, கொதித்தெழவில்லை, “நக்கீரனும்” மயக்கத்தில் ஆழ்ந்துவிட்டான் போலிருக்கிறது. அதை காமக்ஷேத்திரம் என்றெல்லாம் வர்ணித்தவர்கள், இங்கு அமைதியாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தமிழ் என்றாலோ, பெயர் என்றாலோ, யதுகை-மோனை என்றாலோ, தமிழ்-தமிழ் என்று அரற்றுபவர்களும் நிதர்சனத்தை அறிந்தும் அறியாதவர் போலிருக்கிறார். காமம் கூட ஆளுக்கு ஆள், இடத்திற்கு இடம், ஜாதிக்கு ஜாதி என்று மாறும் போலிருக்கிறது. இருப்பினும் பாதிக்கப் பட்ட மாணவியர், பெண்கள் புகார் கொடுக்கத் தான் செய்கின்றனர்.

10-04-2023 அன்று மறுபடியும் புகார்: கருப்பையா மீது ஒரு மாதமாக பல்கலை நிர்வாகத்திற்கு தொடர்ந்து, ‘ஆன்லைனில்’ புகார்கள் வந்தன. மார்ச் 2023லேயே புகார்கள் எழுந்தன. அதில், ‘மாணவியரிடம் மிக ஆபாசமாக பேசுகிறார்[10]. “ஏய்நீ ரொம்ப அழகா இருக்கஉன் ஜீன்ஸ் பேன்ட் சைஸ் என்ன, ஒல்லியாக இருக்கும் பெண்களை தான் பசங்க விரும்புவாங்க...’ என, தொடர்ந்து சர்ச்சையாக பேசி வந்துள்ளார்[11]. அத்தகைய ஆதாரங்கள் கூட போதவில்லையா என்று தெரியவில்லை. முதுகலை மாணவி ஒருவருக்கு இ-மெயில் மூலம் ‘செக்ஸ் டார்ச்சர்’ கொடுத்துள்ளார். அப்படியென்றால் சைபர் சட்டம், விதிகள் மூலமாகவே இவர் மீது உடனடி நடவடிக்கை எடுத்திருக்கலாம். மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கடந்த வாரம் 04-04-2023 அன்று புகார் அளித்தனா்[12]. ஆனால், பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை[13]. அதாவது கமிட்டி போட்டாகி விட்டது என்று சாக்கு சொல்லி தப்பித்துக் கொள்ளும். ஆனால், இதெல்லாம் தாமதப்படுத்தப் படும் யுக்திகள் என்று எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான்.

மாணவிகளை பேராசிரியா் கருப்பையா புகாரை திரும்பப் பெறுமாறு மிரட்டினாராம்: இதற்கிடையில் புகார் அளித்த மாணவிகளை பேராசிரியா் கருப்பையா புகாரை திரும்பப் பெறுமாறு மிரட்டினாராம்[14]. இதுவும் அதே பாணியில் நடந்தது எனலாம். ஊடகங்களும் இதை கண்டுகொள்ளவில்லை. இதிலுள்ள பிரச்சினை, மர்மம், அரசியல் அல்லது என்னது தடுக்கிறது, வித்தியாசமாக செயல்பட வைக்கிறது என்பது தெரியவில்லை. அதை வெளிப்படுத்த தயங்குவதும் புரியவில்லை. ஏனெனில், புகார் வாபஸ் என்றால், எல்லாமே மறைந்து விடுகிறது, அவரும் புனிதர் ஆகி விடுகிறார். ஆனால், பாதிப்பு மாணவியர்களிடம் தான் இருக்கும். பாலியல் புகார்களை விசாரிக்கும் ஐ.சி.சி., கமிட்டி விசாரணை நடத்தியது[15]. இதெல்லாம் விஷகா கமிட்டியின் படி நடப்புதான். பாதிக்கப்பட்ட மாணவி, தென் மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க்கிடம் புகார் அளித்தார். கருப்பையாவை சமயநல்லுார் மகளிர் போலீசார் 19-04-2023 அன்று கைது செய்தனர்.

31-03-2023 அன்று வரலாற்றுத்துறை பேராசிரியர் சண்முகராஜா கைதானது: இந்த பல்கலையில் வரலாற்றுத்துறை பேராசிரியர் சண்முகராஜா, மார்ச் 31ல் பாலியல் புகாரில் கைதான நிலையில், தற்போது இவர் கைதாகி உள்ளார்[16]. கருப்பையா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்[17]. மாணவியை சாதிப்பெயரை வைத்தும், உருவத்தை வைத்தும் கிண்டல் கேலி செய்ததால் நாகமலை புதுக்கோட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உதவி பேராசிரியர் சண்முகராஜா மாணவியைத் தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசியது உண்மை எனத் தெரியவந்தது[18]. அதனைத் தொடர்ந்து நாகமலை புதுக்கோட்டை போலீஸார், சண்முகராஜா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.முன்னதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளைத் தவறாகப் பேசியதாகக் கூறி, பேராசிரியர் சண்முகநாதன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்[19]. சில நாட்களுக்கு முன்பு மதுரை மத்தியச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். தற்போது மீண்டும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[20].

© வேதபிரகாஷ்

20-04-2023


[1] தினமலர், மாணவியருக்கு பாலியல் தொல்லை; காமராஜ் பல்கலை பேராசிரியர் கைது, பதிவு செய்த நாள்: ஏப் 19,2023 05:23

[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3297967

[3] தமிழ்.இந்து,  மாணவிகளிடம் தவறாக பேசியதாக மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் கைது, செய்திப்பிரிவு, Published : 19 Apr 2023 06:12 AM; Last Updated : 19 Apr 2023 06:12 AM.

[4] https://www.hindutamil.in/news/crime/977807-madurai-kamaraj-university-professor-arrested.html

[5] தினத்தந்தி, மதுரையில் மாணவிக்கு பாலியல் தொல்லை; பல்கலைக்கழக பேராசிரியர் அதிரடி கைது, ஏப்ரல் 19, 2:14 am.

[6] https://www.dailythanthi.com/News/State/student-sexually-harassed-in-madurai-university-professor-arrested-945905?infinitescroll=1

[7] தினகரன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மதுரை பல்கலை பேராசிரியர் கைது, April 19, 2023, 1:39 am

[8] குமுதம், மதுரை: கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைபோலீஸில் வசமாகச் சிக்கிய பேராசிரியர், kumudam | POLITICS| Updated: Apr 19, 2023

[9] https://www.kumudam.com/news/politics/55084

[10] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உன்னோட சைஸ் என்ன? டபுள் மீனிங் பேச்சு.. மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியர்.!, First Published Apr 19, 2023, 8:22 AM IST

[11] https://tamil.asianetnews.com/gallery/crime/sexual-harassment-of-female-students-madurai-kamaraj-university-professor-arrested-rtcdbs

[12] Nw Indian Express, Madurai Kamaraj University Psychology HoD held for sexual harassment, Published: 19th April 2023 06:36 AM  |   Last Updated: 19th April 2023 06:36 AM

[13] https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/apr/19/madurai-kamaraj-universitypsychology-hod-held-for-sexual-harassment-2567304.html

[14] தினமணி, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: காமராஜா் பல்கலை. பேராசிரியா் கைது, By DIN  |   Published On : 19th April 2023 12:00 AM  |   Last Updated : 19th April 2023 12:00 AM.

[15] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2023/apr/19/sexual-harassment-of-female-students-kamaraj-university-professor-arrested-3993154.html

[16] கூடல்.காம், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் கைது!, April 19, 2023

[17] https://koodal.com/news/2023/04/19/madurai-kamaraj-university-psychology-hod-arrested-for-sexual-harassment/

[18] கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மாணவிகளிடம் உதவி பேராசிரியர் சண்முகராஜா தரக்குறைவாகப் பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நேரில் வந்து சண்டுகராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

[19] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Crime: மாணவிகளுக்கு பாலியல் தொல்லைஅடுத்தடுத்து சிக்கிக் கொள்ளும் பேராசிரியர்கள்!, Suriyakumar Jayabalan, 19 April 2023, 8:29 IST.

[20] https://tamil.hindustantimes.com/tamilnadu/madurai-kamaraj-university-professor-has-been-arrested-for-harassing-college-girls-131681872719405.html

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, 2018ல் ஊழல் பற்றிய பாமக அறிக்கைகள் செய்திகள் ஆகின, ஆனால், எடுத்த நடவடிக்கைகள் தெரியவில்லை! (3)

மே 7, 2022

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, 2018ல் ஊழல் பற்றிய பாமக அறிக்கைகள் செய்திகள் ஆகின, ஆனால், எடுத்த நடவடிக்கைகள் தெரியவில்லை! (3)

அண்ணா முதல் பாரதியார் வரை, பல்கொள்ளைக்கழகங்களின் கதை!: இப்படி தலைப்பிட்டு, 2018ல் விகடன் பதிவு செய்துள்ளது[1]. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணம் பாதாளம் வரைக்கும் பாய்கிறது. இன்றைக்குக் கல்வியின் தரத்தைத் தாழ்ந்த தரத்துக்குக் கொண்டுபோய்விட்டார்கள்[2]. பணம் கொடுத்தால் பட்டம் வாங்கலாம் என்கிற நிலைமை பல்கலைக்கழகங்களில் உண்டு என்பது ஊரறிந்த உண்மையாகப் போய்விட்டது[3]. கல்விதான் இப்படியென்றால் பேராசிரியர்கள் பணியிடங்கள்முதல் துணைவேந்தர் பதவிவரைக்கும் பணம் இருந்தால் மட்டுமே போதும் என்கிற தகுதியைப் பெற்றிருக்கிறது. இந்த ஊழலுக்கு, ஊனும் உடலுமாக இருப்பவர்கள் உயர்கல்வித் துறை அமைச்சர், கல்லூரிகளின் இயக்குநர்கள், செனட் கமிட்டி துணைவேந்தர்கள் தேர்வுக் குழுவினர். இவை எல்லாவற்றையும்விட ஆளுநர் அலுவலகம் வரைக்கும் லஞ்சம் நீண்டுகொண்டே போகிறது[4]. அந்த அளவுக்குத் தமிழகத்தில், கல்வி பணத்துக்காக விற்கப்படும் பெட்டிக்கடைகள்போல் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் புரோக்கர்களை வைத்திருப்பது கொடுமையிலும் கொடுமையான விஷயம். கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் கைது நடவடிக்கைக்குப் பிறகாவது பல்கலைக்கழகங்கள் சுத்தம் செய்யப்படுமா என்பது அனைவரது கேள்வியாக இருக்கிறது.

சுபாஷ் சந்திரபோஸ் என்பவரின் விவரங்கள்: ஊழல் புகாருக்குள்ளான ஒருவரை துணைவேந்தராக நியமிக்க தேர்வுக்குழு பரிந்துரைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் 29-05-2018 அன்று விடுத்துள்ள அறிக்கையில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் சுப்பையாவின் பதவிக்காலம் வரும் திங்கட்கிழமையுடன் முடிவடையும் நிலையில், புதிய துணைவேந்தராக நியமிப்பதற்காக மூன்று பேரின் பட்டியல் பல்கலைக்கழக வேந்தர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது[5]. அவர்களில் ஊழல் புகாருக்குள்ளான சுபாஷ் சந்திரபோஸ் துணைவேந்தராக நியமிக்க தேர்வுக்குழு பரிந்துரைத்திருப்பது கண்டிக்கத்தக்கது[6]. அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயின்று திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த் துறை  பேராசிரியராக பணியாற்றிய அவர், 1998-2001 காலத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றினார். அப்போது பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர் பணிக்கான ஸ்லெட் எனப்படும் மாநில அளவிலான தகுதித் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாகவும், பலரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் குற்றச்சாற்றுகள் எழுந்தன. அந்தக் குற்றச்சாற்றுகளுக்கு ஆளான முனைவர் சுபாஷ் சந்திர போஸ் தான் இப்போது அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துனைவேந்தராக நியமிக்கப்படவுள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

2018-நிலைஊழல் செய்த துணைவேந்தர்கள் கைதாகாமல் பணியில் தொடர்கிறார்கள்: தமிழ்நாட்டில் அதிக ஊழல்கள் நடைபெற்ற முதல் 5 பல்கலைக்கழகங்கள் அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம் ஆகியவை தான். ஜி. ஜேம்ஸ் பிச்சை, முந்தைய துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக் கழகம், மற்றும் சி. சுவாமிநாதன், முந்தைய துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக் கழகம், மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன[7]. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை[8]. பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் ஜேம்ஸ் பிச்சை செய்த ஊழல்களும், அதன்மூலம் குவித்த சொத்துகளும் கணக்கிலடங்காதவை[9]. பாரதியார், பெரியார் ஆகிய இரு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக பணியாற்றிய முனைவர் சுவாமிநாதன் உரிய தகுதி இல்லாமலேயே அந்தப் பதவிகளுக்கு வந்தவர். இரு பல்கலைக்கழகங்களிலும் ஊழல் செய்வதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர். அதற்காக புதிய, புதிய வழிமுறைகளைக் கண்டறிந்தவர்[10]. இவருடைய ஊழலுக்கு உடந்தையாக இருந்து சிக்கிக் கொண்டதால் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவர் மீது ஏராளமான வழக்குகளை கையூட்டுத் தடுப்புப் பிரிவு பதிவு செய்திருக்கிறது. எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகங்களில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக அவரது வீட்டில் மத்திய வருமானவரித்துறை சோதனை நடத்தியது. ஆனாலும், அவர் இன்னும் பணியில் நீடிக்கிறார்.

தகுதியற்றவர்கள் தேர்தெடுக்கப் படுவதற்கு காரணம்பல்கலை ஊழல் பற்றி பாலகுருசாமி (2018)[11]: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியது[12], “பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஊழல் என்பது இன்றுநேற்று..நடைபெறும் ஊழல் அல்ல. கடந்த பத்து வருடங்களாகப் பல்கலைக்கழகங்களில் ஊழல் நடைபெற்றுவருகிறது. அதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை புகார் மனுவை ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறேன். ஆனால், இதுவரை அந்தக் கடிதத்தின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கணபதி ஒருவர் மட்டுமே ஊழல் செய்துவிடவில்லை. நிறைய துணைவேந்தர்கள் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். அவர்களைக் களையெடுக்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. கணபதியின் வழக்கை மையமாகவைத்தே அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, துணைவேந்தர்களைத் தேர்வுசெய்யக்கூடிய பல்கலைகழகத் தேர்வுக் கமிட்டியில் நேர்மையான ஆட்களை நியமிக்க வேண்டும்.தேர்வுக் கமிட்டியில்  இருப்பவர்களே ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, எப்படி நேர்மையான துணைவேந்தர்களை அவர்கள்  தேர்வுசெய்வார்கள்?

© வேதபிரகாஷ்

07-05-2022


[1] விகடன், அழகப்பா இது அழகாப்பா?” – அண்ணா முதல் பாரதியார் வரை, பல்கொள்ளைக் கழகங்களின் கதை! பகுதி-2, பாலமுருகன். தெ, Published:15 Feb 2018 4 PM; Updated:16 Feb 2018 1 AM.

[2] https://www.vikatan.com/news/education/116515-a-report-on-scam-in-karaikudi-alagappa-university-university-scam-series-part-2

[3] விகடன், “எண்ணியது முடிய காசு வேண்டும்அண்ணா முதல் பாரதியார் வரை, பல்கொள்ளைக் கழகங்களின் கதை! பகுதி-1, குருபிரசாத், Published:08 Feb 2018 1 PM; Updated:08 Feb 2018 4 PM.

[4] https://www.vikatan.com/arts/cartoon/115830-story-about-coimbatore-bharathiar-university

[5] தினமணி, அழகப்பா பல்கலை: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவரை துணைவேந்தராக நியமிப்பதா?, By DIN  |   Published On : 30th May 2018 11:34 AM  |   Last Updated : 30th May 2018 04:08 PM.

[6]https://www.dinamani.com/tamilnadu/2018/may/30/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE-2929827.html

[7] Times of India, As corruption cases idle, higher education slips into old, bad ways, TNN / Jul 28, 2019, 10:50 IST

[8] Bharathiar University’s former VCs G James Pitchai and C Swaminathan also have corruption cases pending against them. But, no action has been initiated against them so far.

https://timesofindia.indiatimes.com/city/chennai/as-corruption-cases-idle-higher-edu-slips-into-old-bad-ways/articleshow/70414522.cms

[9] மாலைமலர், ஊழல் புகாரில் சிக்கிய துணைவேந்தர்களை கைது செய்ய வேண்டும்ராமதாஸ், பதிவு: மார்ச் 26, 2018 11:10 ISTமாற்றம்: மார்ச் 26, 2018 11:11 IST

[10] https://www.maalaimalar.com/news/district/2018/03/26111043/1153189/Ramadoss-says-Corruption-scandal-caught-Vice-Chancellor.vpf

[11] விகடன், தகுதி இல்லாதவர்கள் தேர்வு செய்யப்படுவதே ஊழலுக்குக் காரணம்!” – பல்கலைக்கழக ஊழல் குறித்து கல்வியாளர்கள், கா . புவனேஸ்வரி, Published:07 Feb 2018 5 PMUpdated:07 Feb 2018 6 PM.

[12] https://www.vikatan.com/government-and-politics/corruption/115761-educationist-shares-their-concern-over-choosing-vice-chancellors-for-university

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, 2018ல் பாமக ஊழல் பற்றிய அறிக்கைகள் செய்திகள் ஆகின (2)

மே 7, 2022

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, பல்கலை ஊழல்கள் அதிகமாவது ஏன்? 2018ல் பாமக அறிக்கைகள் செய்திகள் ஆகின (2)

பாமகவின் 20018 பல்கலை ஊழல்கள் பற்றிய அறிக்கைகள்: பாமக தலைவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தமிழக பல்கலைக் கழகங்களில் நடக்கும் ஊழல்களைப் பற்றி அறிக்கைகள் வெளியிட்டனர். இவை, நாளிதழ்களில் செய்திகளாக வெளிவந்தன. ஆனால், பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை. இப்பொழுது 2022ல் துணைவேந்தர்கள், அவர்கள் சம்பந்தப் பட்ட வழக்குகள் நிலுவையில் தான் உள்ளன. CBCID, IT மற்ற துறைகள் முதலில் ரெயிட் செய்ததுடன் நிறுத்திக் கொண்டது போல உள்ளது. பொது மக்களுக்கு, ஒன்றும் தெரியவில்லை, தெரிவதில்லை. ஆனால், அவர்களது மகன், மகள்கள் கல்லூரிகளில், பல்கலைக்ககழகங்களில் படிக்கின்றனர், கல்வி பெறுகின்றனர். ஆனால், போதிக்கும் வர்க்கம், பாடம் சொல்லிக் கொடுக்கும் பேராசிரியர்கள் இவ்வாறு ஊழல்களில் சிக்கும்போது, படிக்கும் மாணவ-மாணவியர்கைன் நிலை என்னாவது? அவர்களும் மனோதத்துவ முறையில் பாதிக்கத் தானே செய்வார்கள். என்னடா இது, இந்த ஆளிடம் நாம் படிக்க வேண்டிய நிலை வந்து விட்டதே என்று நினைத்துத் தான் பார்ப்பார்கள்.

2018ல் பல்கலைக் கழகங்களில் நடக்கும் ஊழலை விசாரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை: இது பல நாளிதழ்களில் அப்படியே வெளிவந்துள்ளன. இதில் தான் வள்ளியின் ஊழல் பற்றிய விவரம் வருகிறது. ஆனால், நக்கீரனில் இப்பொழுது, இந்த விவரத்தை  அதிமுகவுடன் இணைத்து கதையை வெளியிட்டுள்ளது[1]. தமிழ் பல்கலை கழகம் மற்றும் அன்னை தெரசா பல்கலை கழகம் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்[2]. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஊழல்களும், அத்துமீறலும் இன்னும் கொடுமையானவை எனவும் துணைவேந்தர் வள்ளி, பதிவாளர் சுகந்தி ஆகிய இருவரும் சசிகலா உறவினர்கள் என்ற உரிமையில் பல்கலைக்கழக வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் தங்களின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மட்டும் எடுத்து வருவதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்[3].   அவர்களின் ஊழலுக்கு துணையாக இருந்த பொருளாதாரத்துறை பேராசிரியர் கலைமதிக்கு இரு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி[4], துணைவேந்தரின் கல்வி ஆலோசகர் என்ற பொறுப்பில் அமர்த்தியுள்ளதாகவும் அதைப்பயன்படுத்திக் கொண்டு கலைமதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள விரிவாக்க மையத்தையும், தொலைதூரக் கல்வி மையத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஆட்டிப்படைத்து வருவதாகவும் கூறப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்[5].

1532 மாணவிகளிடம் லஞ்சம் வாங்கியது: பகுதி நேர எம்.பில் படிப்பு பயிலும் 1532 மாணவிகளிடம் வாய்மொழித் தேர்வு நடத்தாமலேயே, நடத்தியதாகக் கூறி மதிப்பெண் வழங்க[6] மொத்தம் ரூ.30 லட்சம் கையூட்டு வசூலித்திருப்பதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளதாகவும் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் நியமனத்திலும் பெருமளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது[7]. பல்கலைக்கழகங்கள் ஊழல் கழகங்களாக மாறி வருவது தமிழகத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமையும் என்பதால்  இந்த இரு பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர் நியமனங்கள், தொலைதூரக் கல்வி, பகுதிநேரக் கல்வி ஆகியவற்றில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் பற்றி விசாரணை நடத்த ஆணையிடப்பட வேண்டும் என தனது அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் மீது ஊழல் குற்றச்சாற்றுகள் தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகின்றன. பணியாளர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை போன்றது பொதுவான குற்றச்சாட்டு ஆகும். கல்வித் தகுதியோ, திறமையோ முக்கியமல்ல, ரூ.50 லட்சம் கொடுத்தால் பேராசிரியர் பதவியும், ரூ.30 லட்சம் கொடுத்தால் உதவிப் பேராசிரியர் பதவியும் வழங்கப் படுவதாக பல்கலைக்கழக ஆசிரியர்களும், ஆய்வு மாணவர்களும் வெளிப்படையாக குற்றஞ்சாற்றியுள்ளதாகவும் அக்குற்றச்சாற்றுகள் உண்மை என்பதற்கு ஆதாரங்களும் உள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

2018ல் தெரசா பல்கலை செட் தேர்வில் முறைகேடு: இந்நிலையில், நேற்று தமிழ்நாடு நெட்-செட் சங்கத்தின் தலைவர் மதுசூதனன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அன்னை தெரசா பல்கலைக் கழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக செட் தேர்வு நடத்தி முடித்துள்ளதாகவும் வெளிப்படையான முறையில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிட பல்கலைக் கழக நிர்வாகம் மறுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி 2018ல் நடைபெற்ற செட் 2018 தேர்வில் முதல் தாளில் கேட்கப்பட்ட 50 கேள்விகளில், 43 கேள்விகள் முந்தைய நெட் தேர்வுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும்  எனவே, முதல் தாளை திரும்பவும் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்[8]. இந்தத் தேர்வு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுவதால், செட் தேர்வு நடைமுறைகளை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை கண்காணிப்பு செய்திட ஆளுநர் உத்தரவிட வேண்டும் எனவும் அரசு கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம், சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் நியமனங்கள் மற்றும் உறுப்பு கல்லூரி ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் நியமனத்தில் யுஜிசி விதிமுறைகளை பின்பற்றி நெட், செட் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நியமனம் செய்யும் வகையிலும் ஆளுநர் உத்தரவிடவேண்டும் என்றும் குறிப்பிட்டார்[9].

UGC ஒப்புதல், அங்கீகாரம் இல்லாமல், பல படிப்புகள் நடத்தி, பட்டங்கள் கொடுத்து, இளைஞர்களை ஏமாற்றி வருகின்றன. 2016லேயே அவை முறையற்றது, அங்கீகாரம் அற்றது எனு அரசு அறிவித்தது[10]. இதன் மூலமும் பெரிய அளவில் ஊழல் நடைபெறுகிறது. பல மாநிலங்களில் சென்டர்கள் வைத்தல், விண்ணப்பங்கள் ஏற்றல், வகுப்புகள் நடத்துதல், நோட்ஸ் கொடுத்தல் போன்ற நாடகங்கள் மூலம் இந்த ஊழல் பதப் படுத்தப் படுகிறது. தொலைத்தூர பட்டங்கள் எல்லாம், பொதுவாக ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. அயல்நாடுகளில் இதை கண்டுகொள்வதே இல்லை. பெரும்பாலான இந்த பல்கலைக்  கழகங்களை “போலி பல்கலை” லிஸ்டில் வைத்துள்ளனர் என்பது கவனிக்கத் தக்கது.

© வேதபிரகாஷ் 07-05-2022


[1] நக்கீரன், துணைவேந்தர் பதவியில் துஷ்பிரயோகம், தோண்டத் தோண்ட ஊழல், மே. 4-6-2022, பக்கம்.30-32.

[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், அடுத்தடுத்து வெளிவரும் துணைவேந்தர்களின் அடாவடிகள்…! பாரதியார் பல்கலை தொடர்ந்து தமிழ் மற்றும் அன்னை தெராசா பல்கலை கழக ஊழல்…! , First Published Feb 16, 2018, 4:05 PM IST, Last Updated Sep 19, 2018, 1:58 AM IST.

[3] https://tamil.asianetnews.com/tamilnadu/tamil-and-mother-teresas-corruption-scandal

[4] தினசரி செய்திகள், பாரதியார், பெரியார், தெரசா, தஞ்சை தமிழ்ப் பல்கலை என தொடரும் ஊழல்கள்! விசாரணைக்கு அன்புமணி கோரிக்கை!, FEBRUARY 15, 2018 2:54 PM.

[5] https://dhinasari.com/local-news/25227-investigations-should-be-do-for-corruption-is-universities-anbumani-ramadass.html

[6] தினகரன், அன்னை தெரசா பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவதில் ஊழல்: அன்புமணி குற்றச்சாட்டு, 12:52 am Aug 04, 2018 | dotcom@dinakaran.com(Editor)

[7] https://m.dinakaran.com/article/news-detail/425584

[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், செட் தேர்வு நேர்மையாக நடக்கல? – வசமாக சிக்கும் அன்னை தெரெசா பல்கலை கழகம்..!,  First Published Mar 12, 2018, 2:39 PM ISTLast Updated Sep 19, 2018, 2:03 AM IST .

[9] https://tamil.asianetnews.com/tamilnadu/complimentary-complaints-on-mother-teresa-university

[10] MINISTER OF STATE IN THE MINISTRY OF HUMAN RESOURCE DEVELOPMENT, Govt of India,   (Dr. MAHENDRA NATH PANDEY)

(a) to (d): The University Grants Commission (UGC) has informed that it has withdrawn the recognition of two universities namely: )…….

The UGC has not agreed to continue the recognition of following Universities namely:

(i) Mother Teresa Women’s University, Tamil Nadu;

(ii) Tamil Nadu Agriculture University, Tamil Nadu;

(iii) Tamil University, Tamil Nadu; (iv) Periyar

University, Tamil Nadu;

 (v) Bharathiar University, Tamil Nadu;

(vi) Alagappa University, Tamilnadu. Cancellation of Affiliation of Universities

Chandrappa Shri B.N.QUESTION NO. 3479 ANSWERED ON  08.08.2016.

http://164.100.47.194/Loksabha/Members/QResult16.aspx?qref=39293

ஆன்–லைன் மூலம் பாட போதனை, கற்றல், மனத்தில் ஏற்றல், பயிற்சி பெறுதல், தேர்வு எழுதுதல் சாத்தியமா? [2]

ஏப்ரல் 16, 2020

ஆன்லைன் மூலம் பாட போதனை, கற்றல், மனத்தில் ஏற்றல், பயிற்சி பெறுதல், தேர்வு எழுதுதல் சாத்தியமா? [2]

e-learning to rescue The Pioneer, 08-04-020

ஆன்லைன் பாடம் நடத்தும் செயல்பாடுகள்: இது இன்னும் செயல்படுத்தவில்லை என்றாலும், அரசுமுறையில் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஊடகங்கள் தத்தமக்கு தெரிந்த படி உசுப்பேற்ற ஆரம்பித்து விட்டார்கள். ஆன்–லைன் வித்தகர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவரவர்களுக்கு ஏற்ற முறையில், ஆலோசனை கூற ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு, இதை வைத்து வியாபாரம் செய்யலாம், என்ற உள்நோக்கமும் உள்ளது. அதனால், நிதர்சனமாக, நடைமுறையில் நிலவரம் என்ன, பிரச்சினைகள் என்ன, அவற்றை சமாளிப்பது எப்படி போன்றவற்றைப் பற்றி கவலைப் படவில்லை. ஏதோ ஆன்–லைன் மூலம், அனைத்தயும் சாதித்து விடலாம் என்ற போக்கில், கற்பனையில் மிதக்கிறார்கள்! அதற்கேற்றப் படி, ஆலோசனைகள், குறிப்புகள், யுக்திகள் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், இருக்கும் ஆசிரியர்களால், அவ்வாறு ஆன்–லைன் மூலம் பாடம் எடுக்க தயாராக உள்ளார்களா, அவர்களால் முடியுமா என்பது பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. இந்த ஆன்–லைன் போதனை, பாடம் நடத்துதல், ஒருவழியாகத் தான் இருக்கும். வகுப்புகளிலேயே மாணவ-மாணவர்கள் பாடம் எடுக்கும் போது, சிரத்தையாக கவனிப்பதில்லை அல்லது ஆசிரியர்களால் ஒழுங்காக பாடம் எடுக்க முடிவதில்லை போன்ற பிரச்சினைகள் உள்ளன. நேரிடையாக பாடம் எடுக்கும் போதே அப்பிரச்சினைகள் இருக்கும் போது, இப்பொழுது ர்ப்படி சமாளிப்பார்கள் என்று பார்க்க வேண்டும்.

Learning online TOI, 03-04-2020

போதித்தல்-கற்றல்-நினைவாற்றல்-தேர்வு முதலியவை: போதித்தல்-கற்றல் முறைகளில் மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்-ஆசிரியைகள் முதலியோருக்குண்டான பல காரணிகள் செயல் படுகின்றன. இதில் கற்றல் என்ற விசயத்தில் பொதுவாக உள்ளவை முக்கியமானவை.

  1. கற்றல், கற்றுக் கொள்ளுதல் – இதற்கு வம்சாவளி மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகள் காரணமாக அமைகின்றன. தொடர்ந்த-தொடர்ந்து பயிற்சிகளால் சரி செய்யலாம், சமன் செய்யலாம், சரி-சமன் செய்யலாம்.,
  2. மனதில் பதித்துக் கொள்ளுதல் – கடந்த கால அறிவு, புரிந்து கொள்ளும் தன்மை. தெரிந்த விசயங்களிலிருந்து, தெரியாத விசயகளை அறிந்து கொள்ளுதல்,
  3. அதனை வெளிப்படுத்துதல் – எந்த அளவுக்கு புரிதல் உள்ளது, புரிந்து கொள்ளப் பட்டுள்ளது, தவறான புரிதலை மாற்றுவது,
  4. அத்தகைய நினைவாற்றலின் தன்மை – புரிந்தவை ஞாபகத்திற்கு உடனே வருகின்றனவா, நேரம் தாழ்ந்து வருகின்றனவா,
  5. வெளிப்படுத்தியதை சீராக-கோர்வையாக எழுதுதல் – இது தொடர்ந்து சிந்திக்கும் ஆற்றல், பயிற்சி முதலியவற்றல் சீரமைக்கலாம்,
  6. தேர்வுக்கு தயார் படுத்துதல் – குறைந்த ஆற்றல் கொண்ட குழந்தைகளுக்கு அதிகமான சிரத்தையுடன் முன்னுக்குக் கொண்டுவருவது கடமையாகிறது.
  7. எழுதும் தன்மை, திறமை – இதற்கும் பயிற்சி தேவை,
  8. அச்சப்படாமல்-குழம்பாமல் கேட்ட கேள்விகளுக்கு, முறையாக எழுதுதல்,
  9. எப்படி எழுதினால் மதிப்பெண் கிடைக்கும், தேவையில்லாமல் எழுதுவதை தவிர்ப்பது.
  10. இவற்றையெல்லாம் வெற்றிகரமாக முடிக்க சிறந்த மனம்-உடல் ஆரோக்கியம் தேவைப் படுகிறது. அவற்றையும் பெற்றோர், உற்றோர், மற்றோர், அரசு முதலியவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

என்று பல விசயங்கள் இவற்றில் உள்ளன. “விகாஸ்பீடியாவில்” இவற்றைப் பற்றியெல்லாம், அருமையாக, தமிழில் கொடுத்துள்ளார்கள்[1]. அவற்றை, எல்லோரும் படிக்கவேண்டும்.

Changes introduced by online coaching The Hindu Tamil 17-03-2020

பள்ளி மாணவமாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லமுடியாத நிலையில், கீழ்கண்ட நிதர்சன நிலைகளை அரசு, பள்ளி அதிகாரம், ம்ற்றவர்கள் யோசித்துப் பார்த்துள்ளனரா?:

  1. பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவர்களிடம் எத்தனை பேரிடத்தில் டெஸ்க்-டாப், லேப்-டாப், ஸ்மார்ட் போன் இருக்கிறது.
  2. இன்டெர்நெட் வசதிகளுடன் இருக்கிறது. நன்றாக உபயோகப் படுத்தத் தெரியும்.
  3. மின்சார சப்ளை தொடர்ந்து, தடை இல்லாமல், எல்லா கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ளது.
  4. இன்டெர்நெட் வசதி, சப்ளை நன்றாக வேலை செய்கிறது.
  5. பிரென்டர் போன்ற வசதிகள் உள்ளன.
  6. அப்லோட் செய்யும் வசதி உள்ளது, வீட்டில் மாணவ-மாணவர்களுக்கு உதவ பெற்றோர், மற்றோர் உள்ளனர்.

இப்பொழுது, தினம்-தினம் உணவிற்காக பாடுபடுவதே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஏழை, கீழ்தட்டு-நடுத்தர மக்களுக்கு உணவு பிரச்சினை பெரிதாக உள்ளது. அந்நிலையில், இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாது என்றாகிறது.

Class conducted through whatsup- assam tribune, - 20-03-2020

நடைமுறையில் எழும் கேள்விகள்: 2020-2021 வருடத்தைய கல்வி, படிப்பு, ஆசிரியர் போதனை, தேர்வு, பயிற்சி, வேலை முதலிய விசயங்களில் பல கேள்விகள் எழுகின்றன!

  1. பாடதிட்டங்களின் படி, செயல்முறை வகுப்புகள், பயிற்சிகள் நடக்குமா, அல்லது அவசர-அவசரமாக முடிப்பார்களா, சமரசம் செய்து கொள்வார்களா தெரியவில்லை! அதாவது, முழு பாடதிட்டத்தை முடிக்க முடியுமா என்று தெரியவில்லை.
  1. எட்டாவது வரை எல்லாம் பாஸ் என்றால், பத்தாவது வரை அவ்வாறு செய்ய வேண்டும் போன்ற ஆலோசனைகள் எழுப்பப்படுகின்றன[2]. ஆனால், இவையெல்லாம், கல்வித் தரனை பாதிக்கும்.
  1. மேற்படிப்பு, குறிப்பாக அயல்நாட்டு படிப்பு கனவுகள் மொத்தமாகத் தகர்ந்து விடும் நிலையில் இருக்கின்றன, முயற்சி, பணம் ………..விரயமாகலாம்! அந்நிய பல்கலைக் கழகங்கள் இந்திய மாணவர்களுக்குக் காத்திருக்குமா அல்லது இது உலகளாவிய பிரச்சினையாக இருப்பதால், மாற்றிக் கொள்வார்களா என்று தெரியவில்லை. அத்தகையோருக்கு ஒரு கல்வியாண்டு விரயமாகலாம்.
  1. தொழிற்துறை படிப்புகள்E / B.Tech படித்த மாணவர்களுக்கு, தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பது, மேலும் கஷ்டமாகும்! இல்லை, இவ்வாண்டு, கொஞ்சம் சலுகை ரீதியில் கவனிக்கப் படவேண்டும். இருப்பினும், “கேம்பஸ் இன்டெர்வியூ” –வை மறந்து விட வேண்டியதுதான். இருக்கின்ற தொழிற்சாலைகள் திறந்தால் தான், வேலை வாய்ப்பு பற்றி சிந்திக்கலாம்.
  1. ICSE, CBEC போன்றவை 2020-2021 கல்வியாண்டின் பாடதிட்டத்தி படி, பாடங்களை ஆன்-லைனில் போதிக்க ஆரம்பித்து விட்டனர்.
  1. அரசு பள்ளிகளும் இதே யுக்தியை பின்பற்ற ஆரம்பித்துள்ளன. பொதிகை டிவியில் பாடங்கள் ஒலி-ஒலிபரப்பு நடக்கின்றன. தனியார் தொலைகாட்சிகளும் இதனை செய்ய வேண்டும்.
  1. ஆனால், 2019-2020 கல்வியாண்டின் தேர்வு எப்பொழுது நடக்கும் என்று தெரியவில்லை, பரீட்சை அட்டவணயும் அறிவிக்கப் படவில்லை!
  1. நான்காவது படிக்கும் குழந்தைகளுக்கு வீடியோ பாடம் அனுப்பி, படிக்க சொல்கிறார்கள், கேள்விகளுக்கு பதில் கேட்கிறார்கள்! பெற்றோர்களையும் பங்கு கொள்ளுங்கள் என்று வற்புருத்துகிறார்கள், இது எல்லா குடும்பங்களுக்கும் ஒத்து வருமா என்று கவனிக்க வேண்டும். இதனால், பெற்றோர்களுக்கு அதற்கேற்ற முறையில் தவமைத்துக் கொள்ள பாடங்கள் நடத்தப் படுகின்றன, கற்றுக் கொண்டு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
  1. சரி தேர்வை யார் எழுதுவார்கள்? ஆன்லைனில் எழுதலாமா, பெற்றொர்களே எழுதலாமா? இல்லை இதற்கெல்லாம் டியூஷன் தேவையா? இதையெல்லாம் யார் கண்காணிப்பது. ஆன்லைனில் எழுத வேண்டும் என்றால், கண்காணிப்புக்கு, மறுபடியும் மாணவர்கள் எப்படி ஒரு இடத்திற்கு வர முடியும்.
  1. இப்படி ஏகப் பட்ட நடைமுறைப் பிரச்சினைகள், அசாத்தியங்கள் முதலியன இருந்தாலும், ஏதோ கடமைக்கு செட்ய வேண்டும் என்ற ரீதியில், அதிரடியாக, அறிக்கைகள், சுற்றறிக்கைகள், செய்திகள், முதலியவை ஆரம்பித்து விட்டன.

©  வேதபிரகாஷ்

15-04-2020

Children learn online, Midday, 01-04-2020-2

[1] https://ta.vikaspedia.in/education/b86b9abbfbb0bbfbafbb0bcdb95bb3bcd-baab95bc1ba4bbf/baebc1ba9bcdbaabb3bcdbb3bbfb95bcd-b95bb2bcdbb5bbfbafbbfbb2bcd-b86b9abbfbb0bbfbafbb0bcdb95bb3bbfba9bcd-baaba3bbfb95bb3bcd-1/b95bb1bcdbb1bb2bcd-b95bb1bcdbaabbfba4bcdba4bb2bcd-b9abbfbb1baabcdbaabbeb95-ba8bbfb95bb4-b86b9abbfbb0bbfbafbb0bc1b95bcdb95bbeba9-b9abbfbb2-baabb0bbfba8bcdba4bc1bb0bc8b95bb3bcd

[2] இதில் அரசியல்வாதிகள் நுழைந்து கருத்துகளை சொல்லி, அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஏனெனில், அவர்களுக்கு கல்வி, கல்வி தரன் பற்றி கவலைப் படுவதில்லை.