Archive for the ‘தமிழ்ப் பல்கலைக்கழகம்’ Category

தமிழ்வழி / தமிழ் மீடியம் தொழிற்நுட்ப / இஞ்சினியரிங் பாடப் படிப்புகள் வெ ற்றியா, தோல்வியா? (1)

ஜூன் 27, 2023

தமிழ்வழி / தமிழ் மீடியம் தொழிற்நுட்ப / இஞ்சினியரிங் பாடப் படிப்புகள் வெ ற்றியா, தோல்வியா? (1)

தேவை என்றால் வைத்துக் கொள்கிறோம் இல்லை என்றால் நீக்கி விடுகிறோம்: சமீபத்தில் பள்ளி-கல்லூரி பாடப் புத்தகங்களில், சில பிரிவுகள், தலைப்புகள், தொகுப்புகள் முதலியன சேர்க்கப் படுதல் / நீக்கப் படுதல் பற்றி அரசியல் ரீதியிலான சர்ச்சைகள் எழுப்பப் பட்டு விவாதிக்கப் படுகின்றன. கொரோனா காலத்தில் 2020-2021, இது அதிகமாக நடந்தது. பரீட்சை இல்லாமல் பாஸ் / ஆல்பாஸ் என்ற நிலைகளும் இருந்தன. கடந்த 70 ஆண்டுகளில், உலகம் முழுவதும், விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் ரீதியில் நடைமுறை வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கேற்ற முறையில், மனிதர்கள், வீடுகள், வீடுகளில் உபயோகப் படுத்தப் படும் பொருட்கள், தெருக்கள், நகரங்கள், பேருந்துகள் என்று எல்லாமே மாறி விட்டன. தேவை என்றால் வைத்துக் கொள்கிறோம் இல்லை என்றால் நீக்கி விடுகிறோம். அதே போல பாடப் பிரிவுகள், தலைப்புகள் தொகுப்புகள் முதலியன அவற்றில் உள்ள விவரங்கள் தேவையா-இல்லையா என தீர்மானித்து நீக்கப் படுகின்றன. 

நன்றாக இல்லை என்றால் மாற்றத்தான் செய்கிறார்கள்: ஒரு பள்ளி / கல்லூரி என்று சேர்ந்து, நன்றாக இல்லை என்றால், அந்த பள்ளி / கல்லூரி விட்டு, வேறு பள்ளி / கல்லூரி என்று சேர்ந்து விடுகிறார்கள். பல நேரங்களில் ஆசிரியர்களே சிலபஸில் (syllabus) உள்ளவற்றை குறிப்பிட்ட கலகட்டத்தில் போதிக்க முடியாமல் போகும் நிலை ஏற்படுகிறது.  அப்பொழுது, ஒன்று அவை பரீட்சைக்கு நீக்கப் படுகின்ற, இல்லை சாய்ஸில் (choice) விட்டுவிடுங்கள் என்று அறிவுருத்தப் படுகிறது. இதில் எத்தகைய உள்நோக்கத்தையும் கற்பிக்க முடியாது.  இவையெல்லாம் எல்லா பள்ளி / கல்லூரிகளிலும் நடந்து கொண்டுதான் வருகின்றன.  அரசியல்வாதிகள் ஆட்சி மாறும் பொழுது, தங்களது தலைவர்கள் பற்றி படிக்க வேண்டும் என்ற சித்தாந்த ரீதியில் பாடங்களை நுழைக்கும் பொழுது தான் பிரச்சினை வருகிறது. ஆட்சி மாறும் பொழுது, அவர்கள் முந்தைய  படப் பிரிவுகளை நீக்கி தங்களது தலைவர்கள் பற்றிய பாடங்களை நுழைக்கிறர்கள். இது சுழற்சியில் நடந்து வருகிறது எனலாம்.

இந்திய உணர்வுகளுக்கு எதிரான பாடங்கள்: தவிர மார்க்சீய, முகமதிய, முகலாய சித்தாந்திகள் என்று ஜே.என்.யூ (JNU), ஏ.எம்.யூ (AMU), டி.யூ (DU) என்று பல பல்கலைக் கழகத்தவர் என்.சி.இ.ஆர்.டி (NCERT), யு.ஜி.சி (UGC) என்று பல கல்வித் துறைகளில் ஆதிக்கம் செல்லுத்தி, பாடப் பிரிவுகளை திணித்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலும், இந்தியாவிற்கு எதிரான சீத்தந்தம் கொண்டவையாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, இந்தியா என்ற நாடே இல்லை, இந்தியர்களுக்கு கல்வி போன்றவை போதித்தது ஆங்கிகேயர் தாம், இப்பொழுதுள்ள நவீன எந்திரங்கள் முதலியவை அந்நியர் கொடுத்தது தான் அவர்களாக எதையும் செய்யவில்லை போன்றவை, இக்கால இந்தியாவுக்கு முரண்பாடாக இருக்கிறது. ஏனெனில் நிச்சயமாக இந்தியா பல்லாண்டுகளாக தன்னிறைவு கொண்ட நாடாக இருந்து வந்துள்ளது. அந்நியர் தாம், இந்தியாவில் பாலும் தேனும் ஓடுகின்றன என்று ஆசைப் பட்டு வந்தனர். ஆக, அத்தகைய பாடப் பிரிவுகள் இன்றைய கால கட்டத்திற்கு ஒவ்வாததாக-தேவையில்லாததாக உள்ளது. அத்தகைய பிரிவுகளை நீக்கும் போது, ஏன், யார் எதிர்க்கிறார்கள் என்பதையும் கவனிக்கலாம்.

காமர்ஸ் (commerce) / கணிதம் (Mathematics) போன்ற படிப்புகளுக்கு கிராக்கி அதிகமாவதேன்?: அந்நிலையில் தமிழகத்தில் இப்பிரச்சினை எழுந்துள்ளதை கவனிக்கலாம். அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள, சில பாடப்பிரிவுகளை நீக்கி, புதிய பாடப்பிரிவு துவங்கப்படும்,” என, சட்டசபையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார்[1]. தமிழகத்தைப் பொறுத்த வரையில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் படிக்க லட்சங்களில் டொனேஷன் கொடுத்தால் தான் இடம் கொடுக்கும், 90% மார்க் எடுத்தால் கூட கிடைக்காது. அந்நிலையில் ஜே.இ.இ (JEE) / இஞ்சினியரிங் இன்ட்ரென்ஸ் (All India Engineering Entrance Examinaions), நீட் (NEET) ஏன்றெல்லாம் வந்த பொது, கல்வி-வியாபாரம் போகிறதே என்று, தனியார் கல்லுரி கோஷ்டிகள் அரசியல்வாதிகள் மூலம் எதிர்க்க ஆரம்பித்தனர். காமர்ஸ் (commerce) / கணிதம் (Mathematics) போன்ற படிப்புகளுக்கு என்றைக்கும் தேவையுள்ளது, அந்நிலையில், அதன் முக்கியத்துவத்தை அறிந்த மாணவ-மாணவியர் அப்படிப்புகளை எடுத்துப் படிக்க ஆரம்பிக்கின்றனர். முடிவுகள் சாதகமாக இருந்து வேலை கிடைக்கும் பொழுது, மற்ரவர்களும் அப்படிப்புகளுக்கு செல்கிகின்றனர். இதனால் தான் அப்படிப்புகளுக்கு கிராக்கி ஏற்படுகின்றன.

 

உள்ள ஒரு சில பாடப்பிரிவுகளை நீக்கி, புதிய பாடப்பிரிவு துவங்கப்படும்: அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள ஒரு சில பாடப்பிரிவுகளை நீக்கி, புதிய பாடப்பிரிவு துவங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்[2].  மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 12 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளை நீக்கிவிட்டு, புதிய பாடப்பிரிவுகளை சேர்க்க கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து அரசுக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு சில கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் இடையே வரவேற்பு இல்லாத, மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பாடப்பிரிவுகளை மட்டும் நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தேவையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அதிகமுள்ள புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார்.

விஞ்ஞானம்-தொழிற்நுட்பப் படிப்புகளில் சர்ச்சை: அதன்படி சேந்தமங்கலம், லால்குடி, வேப்பந்தட்டை, கடலாடி, சத்தியமங்கலம், பரமக்குடி, மாதனுார், கூடலுார், கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணித படிப்பில் சேர்க்கை எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனால் அந்த கல்லூரிகள் தேவைக்கேற்ப கணினி அறிவியல், தமிழ், உயிர் தொழில்நுட்பவியல், வணிக நிர்வாகவியல், தாவரவியல், பொருளியல் ஆகிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. திட்டமலை அரசுக் கல்லூரியில் ஆங்கிலவழி கணித பாடப்பிரிவையும், நாகலாபுரம் அரசுக் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவையும் தமிழ் வழிக்கு மாற்றி கொள்ளலாம். மொடக்குறிச்சி அரசுக் கல்லூரியில் இயற்பியலுக்குப் பதிலாக விலங்கியல் பாடப்பிரிவு தொடங்கலாம். புதிய பாடப்பிரிவுகளுக்கு அந்தந்த பல்கலைக்கழகங்களில் கல்லூரிகள் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், அரசு மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி அனைத்து படிப்புகள் குறித்தும் விளக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்தின் முக்கியத்துவமும் தெரியும். ஒவ்வொரு பாடத்திலும் ஆர்வம் வரும்.

கணித பட்டப்படிப்பையும் தொடர்ந்து நடத்தவேண்டும். புதிய பட்டப்படிப்புகளை நிச்சயம் அறிமுகம் செய்ய வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதற்காக பட்டப்படிப்புகளை நிறுத்தக்கூடாது. ஏனெனில் தற்போது அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த மாணவர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து மாணவர்கள் படிப்பதை அரசுதான் உறுதி செய்ய வேண்டும். கணிதப் படிப்பை புறக்கணிப்பது வரும் காலங்களில் உயர்கல்வியில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு கணிதம்தான் அடிப்படை. எனவே, கணிதம் கற்றலை இனிமையாக மாற்றுதல், கணிதம் படிப்பவர்களுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கணிதம் படிப்பதை தமிழக அரசு உறுதிசெய்ய முடியும். எனவே மாணவர்களுக்கு அரசு நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், சலுகைகளை அதிகரித்து மாணவர்கள் அதிகம் கற்பதை ஊக்குவிக்க வேண்டும்.

தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம்: அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளன[3]. இது வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது[4]. பொறியியல் படிப்புகளைத் தமிழ் வழியிலும் மாணவர்கள் படிப்பதற்கு முந்தைய திமுக ஆட்சியில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நடவடிக்கை எடுக்கப்பட்டது[5]. முதலில் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட சில பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் வழங்கப்பட்டன[6]. அதன்பிறகு பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளிலும் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் 16 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பாக உறுப்பு கல்லூரிகளாக இயங்கி வருகின்றன[7]. ஆனால், இவற்றில் சேரும் மாணவ-மாணவியர் ஒரு சிலரே. மேலும் தமிழில் படிப்பதால் வேலை கிடைக்கும் சிக்கலும் உள்ளது. இதனால், இப்படிப்புகளைப் படிக்க யாரும் வராத நிலையும் உண்டாகிறது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது[8]. அதன்படி ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி உள்ளிட்ட 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன[9].

© வேதபிரகாஷ்

27-06-2023


[1] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Govt. College : 12 அரசு கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவுகள் நீக்கம் ஏன்? அரசு ஆவண செய்ய கல்வியாளர்கள் வலியுறுத்தல், Priyadarshini R, Jun 18, 2023 10:43 AM IST.

[2] https://tamil.hindustantimes.com/tamilnadu/12-why-are-core-subjects-removed-in-government-colleges-the-government-insists-that-educators-should-document-131687064678098.html

[3] காமதேனு, தமிழ் வழி பாடப்பிரிவுகள் 11 கல்லூரிகளில் நீக்கம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழகம், காமதேனு, Updated on : 25 May, 2023, 10:55 am.

[4] https://kamadenu.hindutamil.in/national/tamil-medium-courses-abolished-in-11-colleges-anna-university-notice

[5] தினத்தந்தி, #BREAKING || “தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிக நீக்கம்” – அண்ணா பல்கலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு , By தந்தி டிவி 25 மே 2023 10:11 AM

[6]  https://www.thanthitv.com/latest-news/breaking-temporary-cancellation-of-tamil-medium-courses-important-notice-issued-by-anna-university-188390

[7] தினமலர், தமிழ்வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம், மாற்றம் செய்த நாள்: மே 25,2023 11:43

[8] https://m.dinamalar.com/detail.php?id=3330087

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கம்; அண்ணா பல்கலை. அறிவிப்பு, Written by WebDesk, May 25, 2023 11:43 IST

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, 2018ல் பாமக ஊழல் பற்றிய அறிக்கைகள் செய்திகள் ஆகின (2)

மே 7, 2022

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, பல்கலை ஊழல்கள் அதிகமாவது ஏன்? 2018ல் பாமக அறிக்கைகள் செய்திகள் ஆகின (2)

பாமகவின் 20018 பல்கலை ஊழல்கள் பற்றிய அறிக்கைகள்: பாமக தலைவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தமிழக பல்கலைக் கழகங்களில் நடக்கும் ஊழல்களைப் பற்றி அறிக்கைகள் வெளியிட்டனர். இவை, நாளிதழ்களில் செய்திகளாக வெளிவந்தன. ஆனால், பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை. இப்பொழுது 2022ல் துணைவேந்தர்கள், அவர்கள் சம்பந்தப் பட்ட வழக்குகள் நிலுவையில் தான் உள்ளன. CBCID, IT மற்ற துறைகள் முதலில் ரெயிட் செய்ததுடன் நிறுத்திக் கொண்டது போல உள்ளது. பொது மக்களுக்கு, ஒன்றும் தெரியவில்லை, தெரிவதில்லை. ஆனால், அவர்களது மகன், மகள்கள் கல்லூரிகளில், பல்கலைக்ககழகங்களில் படிக்கின்றனர், கல்வி பெறுகின்றனர். ஆனால், போதிக்கும் வர்க்கம், பாடம் சொல்லிக் கொடுக்கும் பேராசிரியர்கள் இவ்வாறு ஊழல்களில் சிக்கும்போது, படிக்கும் மாணவ-மாணவியர்கைன் நிலை என்னாவது? அவர்களும் மனோதத்துவ முறையில் பாதிக்கத் தானே செய்வார்கள். என்னடா இது, இந்த ஆளிடம் நாம் படிக்க வேண்டிய நிலை வந்து விட்டதே என்று நினைத்துத் தான் பார்ப்பார்கள்.

2018ல் பல்கலைக் கழகங்களில் நடக்கும் ஊழலை விசாரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை: இது பல நாளிதழ்களில் அப்படியே வெளிவந்துள்ளன. இதில் தான் வள்ளியின் ஊழல் பற்றிய விவரம் வருகிறது. ஆனால், நக்கீரனில் இப்பொழுது, இந்த விவரத்தை  அதிமுகவுடன் இணைத்து கதையை வெளியிட்டுள்ளது[1]. தமிழ் பல்கலை கழகம் மற்றும் அன்னை தெரசா பல்கலை கழகம் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்[2]. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஊழல்களும், அத்துமீறலும் இன்னும் கொடுமையானவை எனவும் துணைவேந்தர் வள்ளி, பதிவாளர் சுகந்தி ஆகிய இருவரும் சசிகலா உறவினர்கள் என்ற உரிமையில் பல்கலைக்கழக வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் தங்களின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மட்டும் எடுத்து வருவதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்[3].   அவர்களின் ஊழலுக்கு துணையாக இருந்த பொருளாதாரத்துறை பேராசிரியர் கலைமதிக்கு இரு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி[4], துணைவேந்தரின் கல்வி ஆலோசகர் என்ற பொறுப்பில் அமர்த்தியுள்ளதாகவும் அதைப்பயன்படுத்திக் கொண்டு கலைமதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள விரிவாக்க மையத்தையும், தொலைதூரக் கல்வி மையத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஆட்டிப்படைத்து வருவதாகவும் கூறப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்[5].

1532 மாணவிகளிடம் லஞ்சம் வாங்கியது: பகுதி நேர எம்.பில் படிப்பு பயிலும் 1532 மாணவிகளிடம் வாய்மொழித் தேர்வு நடத்தாமலேயே, நடத்தியதாகக் கூறி மதிப்பெண் வழங்க[6] மொத்தம் ரூ.30 லட்சம் கையூட்டு வசூலித்திருப்பதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளதாகவும் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் நியமனத்திலும் பெருமளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது[7]. பல்கலைக்கழகங்கள் ஊழல் கழகங்களாக மாறி வருவது தமிழகத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமையும் என்பதால்  இந்த இரு பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர் நியமனங்கள், தொலைதூரக் கல்வி, பகுதிநேரக் கல்வி ஆகியவற்றில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் பற்றி விசாரணை நடத்த ஆணையிடப்பட வேண்டும் என தனது அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் மீது ஊழல் குற்றச்சாற்றுகள் தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகின்றன. பணியாளர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை போன்றது பொதுவான குற்றச்சாட்டு ஆகும். கல்வித் தகுதியோ, திறமையோ முக்கியமல்ல, ரூ.50 லட்சம் கொடுத்தால் பேராசிரியர் பதவியும், ரூ.30 லட்சம் கொடுத்தால் உதவிப் பேராசிரியர் பதவியும் வழங்கப் படுவதாக பல்கலைக்கழக ஆசிரியர்களும், ஆய்வு மாணவர்களும் வெளிப்படையாக குற்றஞ்சாற்றியுள்ளதாகவும் அக்குற்றச்சாற்றுகள் உண்மை என்பதற்கு ஆதாரங்களும் உள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

2018ல் தெரசா பல்கலை செட் தேர்வில் முறைகேடு: இந்நிலையில், நேற்று தமிழ்நாடு நெட்-செட் சங்கத்தின் தலைவர் மதுசூதனன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அன்னை தெரசா பல்கலைக் கழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக செட் தேர்வு நடத்தி முடித்துள்ளதாகவும் வெளிப்படையான முறையில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிட பல்கலைக் கழக நிர்வாகம் மறுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி 2018ல் நடைபெற்ற செட் 2018 தேர்வில் முதல் தாளில் கேட்கப்பட்ட 50 கேள்விகளில், 43 கேள்விகள் முந்தைய நெட் தேர்வுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும்  எனவே, முதல் தாளை திரும்பவும் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்[8]. இந்தத் தேர்வு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுவதால், செட் தேர்வு நடைமுறைகளை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை கண்காணிப்பு செய்திட ஆளுநர் உத்தரவிட வேண்டும் எனவும் அரசு கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம், சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் நியமனங்கள் மற்றும் உறுப்பு கல்லூரி ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் நியமனத்தில் யுஜிசி விதிமுறைகளை பின்பற்றி நெட், செட் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நியமனம் செய்யும் வகையிலும் ஆளுநர் உத்தரவிடவேண்டும் என்றும் குறிப்பிட்டார்[9].

UGC ஒப்புதல், அங்கீகாரம் இல்லாமல், பல படிப்புகள் நடத்தி, பட்டங்கள் கொடுத்து, இளைஞர்களை ஏமாற்றி வருகின்றன. 2016லேயே அவை முறையற்றது, அங்கீகாரம் அற்றது எனு அரசு அறிவித்தது[10]. இதன் மூலமும் பெரிய அளவில் ஊழல் நடைபெறுகிறது. பல மாநிலங்களில் சென்டர்கள் வைத்தல், விண்ணப்பங்கள் ஏற்றல், வகுப்புகள் நடத்துதல், நோட்ஸ் கொடுத்தல் போன்ற நாடகங்கள் மூலம் இந்த ஊழல் பதப் படுத்தப் படுகிறது. தொலைத்தூர பட்டங்கள் எல்லாம், பொதுவாக ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. அயல்நாடுகளில் இதை கண்டுகொள்வதே இல்லை. பெரும்பாலான இந்த பல்கலைக்  கழகங்களை “போலி பல்கலை” லிஸ்டில் வைத்துள்ளனர் என்பது கவனிக்கத் தக்கது.

© வேதபிரகாஷ் 07-05-2022


[1] நக்கீரன், துணைவேந்தர் பதவியில் துஷ்பிரயோகம், தோண்டத் தோண்ட ஊழல், மே. 4-6-2022, பக்கம்.30-32.

[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், அடுத்தடுத்து வெளிவரும் துணைவேந்தர்களின் அடாவடிகள்…! பாரதியார் பல்கலை தொடர்ந்து தமிழ் மற்றும் அன்னை தெராசா பல்கலை கழக ஊழல்…! , First Published Feb 16, 2018, 4:05 PM IST, Last Updated Sep 19, 2018, 1:58 AM IST.

[3] https://tamil.asianetnews.com/tamilnadu/tamil-and-mother-teresas-corruption-scandal

[4] தினசரி செய்திகள், பாரதியார், பெரியார், தெரசா, தஞ்சை தமிழ்ப் பல்கலை என தொடரும் ஊழல்கள்! விசாரணைக்கு அன்புமணி கோரிக்கை!, FEBRUARY 15, 2018 2:54 PM.

[5] https://dhinasari.com/local-news/25227-investigations-should-be-do-for-corruption-is-universities-anbumani-ramadass.html

[6] தினகரன், அன்னை தெரசா பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவதில் ஊழல்: அன்புமணி குற்றச்சாட்டு, 12:52 am Aug 04, 2018 | dotcom@dinakaran.com(Editor)

[7] https://m.dinakaran.com/article/news-detail/425584

[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், செட் தேர்வு நேர்மையாக நடக்கல? – வசமாக சிக்கும் அன்னை தெரெசா பல்கலை கழகம்..!,  First Published Mar 12, 2018, 2:39 PM ISTLast Updated Sep 19, 2018, 2:03 AM IST .

[9] https://tamil.asianetnews.com/tamilnadu/complimentary-complaints-on-mother-teresa-university

[10] MINISTER OF STATE IN THE MINISTRY OF HUMAN RESOURCE DEVELOPMENT, Govt of India,   (Dr. MAHENDRA NATH PANDEY)

(a) to (d): The University Grants Commission (UGC) has informed that it has withdrawn the recognition of two universities namely: )…….

The UGC has not agreed to continue the recognition of following Universities namely:

(i) Mother Teresa Women’s University, Tamil Nadu;

(ii) Tamil Nadu Agriculture University, Tamil Nadu;

(iii) Tamil University, Tamil Nadu; (iv) Periyar

University, Tamil Nadu;

 (v) Bharathiar University, Tamil Nadu;

(vi) Alagappa University, Tamilnadu. Cancellation of Affiliation of Universities

Chandrappa Shri B.N.QUESTION NO. 3479 ANSWERED ON  08.08.2016.

http://164.100.47.194/Loksabha/Members/QResult16.aspx?qref=39293

தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்: முறைகேடு, ஊழல், கல்வித்துறை சீர்கேடு, தமிழகத்தின் நிலை!

நவம்பர் 22, 2019

தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்: முறைகேடு, ஊழல், கல்வித்துறை சீர்கேடு, தமிழகத்தின் நிலை!

Tanjore University accused, implicated etc

இணை பேராசிரியர்கள் பணி நியமனம்போராட்டம் முதல் நீதிமன்றம் வரை: தமிழ் வளர்ச்சிக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் தொடங்கப் பட்டது, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம். கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் முதல் 2018 ஆகஸ்டு 5 வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜி பாஸ்கரன் பதவி வகித்தார்[1]. அப்போது பேராசிரியர்கள். இணை பேராசிரியர்கள் பணி நியமனம் செய்வதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன[2]. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் துணைவேந்தர் க.பாஸ்கரன், முன்னாள் பதிவாளர் ச.முத்துக்குமார் உட்பட 4 பேர் மீது கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்[3].

Vikatan, October 2019

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 10 பேராசிரியர்கள், 11 இணைப் பேராசிரியர்கள் என மொத்தம் 21 பேர், 2017 மே மாதத்தில் நியமனம் செய்யப்பட்டனர்[4]. இந்த நியமனத்தில் முறைகேடுகள், விதிமீறல்கள் நடந்ததாக புகார்கள் எழுந்தன[5]. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்னாள் பேராசிரியர் முருகேசன், சமூக ஆர்வலர் நெடுஞ்செழியன் ஆகியோர் வழக்கு தொடுத்தனர்[6]. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டது.

Irregularities in appointment of professors-1

ஊழல் செய்வதும்பல்கலைகளில் ஒன்றாகி விட்டதோ?: இதனை விசாரித்த நீதிமன்றம், ‘‘ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணைக்கு அனுமதி கோரும் கடிதத்தின்மீது, 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’’ என அதிரடியாக உத்தரவிட்டது[7]. இதையடுத்தே அக்டோபர் 9-ம் தேதியும், 12-ம் தேதியும் அடுத்தடுத்து கூட்டம் நடத்திய சிண்டிகேட், ஒருவழியாக விசாரணைக்கு அனுமதி அளித்தது. இதுகுறித்து வழக்கறிஞர் நெடுஞ்செழியனிடம் பேசினோம். ‘‘பணி நியமன முறைகேட்டில் அப்போதைய துணைவேந்தர் .பாஸ்கரன், பதிவாளராக இருந்த முத்துக்குமரன், அவரின் நேர்முக உதவியாளராக இருந்த சக்தி சரவணன், தொலைநிலைக்கல்வி இயக்குநர் .பாஸ்கரன் ஆகியோர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முத்துக்குமரனும் சக்தி சரவணனும் தற்போது அரசுப்பணியில் தொடர்வதால், இவர்களிடம் அடுத்தகட்ட விசாரணை செய்ய சிண்டிகேட் குழுவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியது. அவர்கள் உள்நோக்கத்துடன் தாமதப்படுத்தவே, நீதிமன்றத்தை நாடினோம். நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகாவது, விசாரணை முறையாக நடக்கும் என்று நம்புகிறோம்,” என்றார்[8]. முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரனிடம் பேசினோம். ‘‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார். பணி நியமனங்களில் அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. ஒரு சிலரின் விருப்பு வெறுப்புக்கு நான் பலிகடா ஆக்கப்படுகிறேன்,’’ என்றார்.

Irregularities in appointment of professors-2

தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணைதேர்ந்தெடுக்கப்பட்ட 21 பேரும் தகுதியற்றவர்கள்: இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். தேர்ந்தெடுக்கப்பட்ட 21 பேரும் தகுதியற்றவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.  இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 பேர் தகுதியற்றவர்கள் என தெரியவந்தது. இவர்களுக்கு நேர்முக தேர்வில் தேர்வுக்குழு உறுப்பினர்கள் அதிக மதிப்பெண்களை வழங்கியுள்ளனர். நேர்முக தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக 10 பேரிடம் ₹15 லட்சம் முதல் ₹40 லட்சம் வரை லஞ்சம்  பெற முயற்சித்துள்ளனர்[9]. இதைத் தொடர்ந்து,

  • முன்னாள் துணைவேந்தர் க.பாஸ்கரன்,
  • முன்னாள் பதிவாளர் ச. முத்துக்குமார்,
  • முன்னாள் பதிவாளரின் நேர்முக உதவியாளர் ஜி.சக்தி சரவணன்,
  • தொலைநிலைக் கல்வி முன்னாள் இயக்குநர் என்.பாஸ்கரன்

ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 120(பி) (குற்றச் சதி), 409 (நம்பிக்கை மோசடி), 420 (ஏமாற்றி நேர்மையின்றி பொருளைப் பெறுதல் அல்லது கொடுக்கும்படி செய்தல்), 467 (போலி ஆவணங்கள் தயாரித்தல்), 471 (பொய்யாகப் புனையப்பட்டு உண்மையானதாக உபயோகம் செய்தல்), ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7-ன் கீழ் (அரசு ஊழியர் சட்டவிரோதமாகப் பணம் பெறுதல்), 13(1) (சி), (13(1)(டி), 13(2) ஆகிய பிரிவுகளில் தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த 14-ம் தேதி வழக்கு பதிவு செய்தார்[10].

Tanjore University accused, implicated etc-2
பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (யுஜிசி) விதிகள் கடைபிடிக்கப்படவில்லை – நேர்முகத் தேர்வுக்கு முன்பாக 10 பேரிடம் தலா ரூ.15 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை பணம் பெற முயற்சி நடந்துள்ளது: இந்நிலையில், இந்த முதல் தகவல் அறிக்கை கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மற்றும் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 21 பேரில் பலருக்கு போதிய முதுகலை ஆசிரியர் அனுபவம் இல்லை. பலர் முனைவர் பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டுநராகச் செயல்படவில்லை. மேலும், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (யுஜிசி) விதிகள் கடைபிடிக்கப்படவில்லை. நேர்முகத் தேர்வில் தேர்வுக் குழு உறுப்பினர்கள் அவர்களுக்கு அதிகப்படியான மதிப்பெண்களை வழங்கியுள்ளனர். நேர்முகத் தேர்வுக்கு முன்பாக 10 பேரிடம் தலா ரூ.15 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை பணம் பெற முயற்சி நடந்துள்ளது[11]. இதேபோல, தமிழ்ப் பல்கலைக்கழக விதிகளை மீறி, 70 ஆசிரியரல்லாத பணியிடங்களில் தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளது[12]. இவர்களுக்கான ஊதியம் அரசு நிதியுதவி மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி வருவாயில் இருந்து வழங்கப்படுகிறது. இதனால் நிதி இழப்பு ஏற்படுவது விசாரணையில் தெரியவந்தது.தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட இவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதியம் வழங்கப்படுவதால், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிதி நல்கையில் இழப்பு ஏற்படுகிறது என்பன போன்ற விவரங்கள் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

PhD for rs 5 lacs, 11-09-2019

பாஸ்கரன் தலைமறைவு- தேவையா?: இந்நிலையில் முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரனை போலீசார் தேடி வருகின்றனர்[13]. தலைமறைவானதாக கூறப்படுகிறது[14]. அந்த அளவில் கேவலப்படுவது அசிங்கமாகத்தான் உள்ளது. மேலே விகடன் நிருபரிடம் பேசியதை மறுபடியும் படித்துப் பாருங்கள். முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரனிடம் பேசினோம். ‘‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார். பணி நியமனங்களில் அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. ஒரு சிலரின் விருப்பு வெறுப்புக்கு நான் பலிகடா ஆக்கப்படுகிறேன்,’’ என்றார். இந்த வீராப்பு இருந்தால், மறைய வேண்டிய அவசியம் இல்லை. படிப்பு-கல்வித்துறை போன்ற விசய்ங்களில் கூட இவ்வாறு, ஆரம்பத்திலிருந்து, கடைசி வரை ஊழல் என்றிருந்தால், போதிக்கும் ஆசிரியர்களிடம் என்ன ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும்?

© வேதபிரகாஷ்

22-11-2019.

Tanjore University accused, implicated etc-3

[1] தினமலர், பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு: முன்னாள் துணைவேந்தர் மீது வழக்கு,Updated : நவ 19, 2019 16:58 | Added : நவ 19, 2019 16:24.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2415128

[3] தமிழ்.இந்து, தமிழ்ப் பல்கலை. பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு புகார்: முன்னாள் துணைவேந்தர் உட்பட 4 பேர் மீது வழக்குகண்காணிப்பு, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கை, Published : 20 Nov 2019 09:58 AM; Last Updated : 20 Nov 2019 02:40 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/526138-tamilnadu-university.html

[5] பத்திரிக்கை.காம், தஞ்சை தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் மீது வழக்கு, by A.T.S Pandian, Posted on November 20, 2019 at 10:22 am

[6] https://www.patrikai.com/irregularities-in-the-appointment-of-professors-case-against-former-tanjore-tamil-university-vice-chancellor/

[7] விகடன், வெளிவருமா தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முறைகேடு?, கு. ராமகிருஷ்ணன், ம.அரவிந்த் Published:23 Oct 2019 5 AMUpdated:23 Oct 2019 5 AM.

[8] https://www.vikatan.com/news/corruption/thanjavur-tamil-university-scam-issue

[9]  தினகரன், தமிழ் பல்கலை பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு மாஜி துணைவேந்தர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு: ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி, 2019-11-20@ 00:35:57.

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=542255

[11] தினமலர், மாஜிதுணைவேந்தர் மீது வழக்கு, Added : நவ 20, 2019 06:41

[12] https://www.dinamalar.com/news_detail.asp?id=2415769

[13] புதிய தலைமுறை, தமிழ் பல்கலை. பேராசிரியர்கள் நியமன முறைகேடு வழக்கில் தேடப்படும் முன்னாள் துணைவேந்தர் தலைமறைவு, Nov 20, 2019

[14] https://www.polimernews.com/amp/news-article.php?id=89557&cid=10