Archive for the ‘அடங்காபிடாரித்தனம்’ Category

பொறியியல் கல்லூரிகளின் தரம், போதிக்கும் திறன் மற்றும் கட்டுமானம் முதலியவற்றைப் பற்றி, ஏன் விவரங்கள் மறைக்கப் படுகின்றன?

திசெம்பர் 18, 2023

பொறியியல் கல்லூரிகளின் தரம், போதிக்கும் திறன் மற்றும் கட்டுமானம் முதலியவற்றைப் பற்றி, ஏன் விவரங்கள் மறைக்கப் படுகின்றன?

கல்லூரிகளில் முதலீடு செய்பவர்கள் ஏன் தரத்தைப் பற்றி கவலைப் படுவதில்லை?: பொறியியல் கல்லூரிகளின் தரம், போதிக்கும் திறன் மற்றும் கட்டுமானம் முதலியவற்றைப் பற்றி, கடந்த 25 வருடங்களாக, நிறைய விசயங்கள் அலசப் பட்டு, எடுத்துக் காட்டியாகி விட்டது. பணத்தை கோடிகளில் போட்டு, கோடிகளில் அள்ள வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், நிறைய கல்லூரிகள் உருவாக்கப் படுகின்றன. அரசியல்வாதிகள் தமது பணத்தை முதலீடு செய்வது போல இத்தகைய கல்லூரிகளை உருவாக்கி வருகிறார்கள். ஆனால், தேவையான கட்டுமானங்கள், சோதனைக் கூடங்கள், ஒவ்வொரு பாடத்தையும் போதிக்க தகுதியான ஞானம் கொண்ட ஆசிரியர்கள் என்றெல்லாம் இல்லாமலேயே இவர்கள் கல்லூரிகளை ஆரம்பிக்கிறார்கள். இதனால், கல்லூரிகளில் வகுப்பறைகள் இல்லை, ஆசிரியர்கள் இல்லை, சோதனைக் கூடங்கள் இல்லை என்று தரமற்ற முறையில்  மாணவ-மாணவியரை ஏமாற்றி வருகிறார்கள்.

இதில் எந்த மாடல் பின்பற்றப் படுகிறது?: அட்மிசன் நேரத்தில் டொனேஷன் வாங்கி. கோடிகளை வசூலித்து, அதன் மூலம் கொஞ்சம்-கொஞ்சமாகக் கட்டலாம் போன்ற திட்டங்களுடனும் ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் –ஜேப்பியார், பச்சமுத்து [பாரிவேந்தர்], ஏ.சி.சண்முகம் இதர மைனாரிடி மாடல்களை பின்பற்ற முயல்கிறார்கள். அவர்கள் எல்லாம் மாட்டிக் கொண்டாலும், ஒரு நிலையில் தரத்தை உயர்த்திக் கொண்டார்கள், நிலைத்து நிற்கிறார்கள். ஆனால், வெறுங்கையால் முழம் போடலாம் என்ற எண்ணங்களுடம்-திட்டங்களுடன் செயல்படுகிறவர்கள், எந்த தரமுமில்லாமல், மாணவ-மாணவியரை ஏமாற்றி வருகிறார்கள். பல குடும்பங்களை நாசமாக்கி வருகிறார்கள். ஏனெனில், அவர்களது பெற்றோர் வீட்டை, நிலத்தை, சொத்தை விற்று தமது குழந்தைகளை படிக்க ஆசைப் பட்டு லஞ்சங்களில் பணத்தைக் கொடுக்கிறார்கள். ஆனால், இந்த முதலைகள் அப்படியே முழுங்கி ஏப்பமிட்டு வருகின்றன..

44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை: தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும், 35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது என்றும் வெளியாகி இருக்கும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[1], என்று ஊடகத்தினர் குறிப்பிட்டாலும், கடந்த 20-30 ஆண்டுகளாக நடந்து வரும் செயல்பாடுகளிலிருந்து, அவற்றிற்கு உண்மை நிலை தெரிந்து தான் இருக்கும். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளார்[2], என்று குறிப்பிட்டாலும், அவை வெளியிடப் படவில்ல. ‘தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான  கவுன்சிலிங்கில்  44 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை[3].  35 கல்லூரியில் ஒற்றை இலக்கங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்க்க நடந்துள்ளது[4]. ஆக மொத்தம் 75 கல்லூரிகளில் நிலைமை இப்படியுள்ளது. ஒரு மாணவர் கூட சேராத கல்லூரிகள் மற்றும் குறைவாக மாணவர்கள் உள்ள கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கங்களை பெற்றிருக்கிறோம்[5]. ஏற்கெனவே கடந்த ஆண்டுகளிலும் இதே நிலைதான் இருந்து வந்தது. பிறகு, அதே கல்லூரிகள் மறுபடியும் கவுன்சிலிங்கிற்கு எப்படி அனுமட்தி கொடுக்கப் பட்டது என்பதையும் கவனிக்கலாம். தற்போது நேரில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது[6]. இதுவரை நடக்கவில்லையா, பார்க்காமலேயே அனுமதி கொடுக்கப் பட்டதா போன்ற கேள்விகளும் எழுகின்றன.

2022 நிலை தான் 2023லும் தொடர்கிறது: மேலும் எங்களுக்கு திருப்தி அளிக்காவிட்டால் வரும் கல்வி ஆண்டில் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முற்றிலுமாக நிறுத்தப்படும்’ என்று வேல்ராஜ் கூறியுள்ளார்[7]. அதாவது இந்த கல்வியாண்டு 2023-24க்கு அனுமதி உண்டு என்றாகிறது. பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருவதாக காரணம் கூறப்படுகிறது[8].  இதுவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியதாகிறது. கல்லூரிகளில் வசதி இல்லை என்பதாலா அல்லது, படித்தும் வேலை கிடைக்கவில்லை, சரியான சம்பளம் இல்லை போன்ற காரணங்களால், அவ்வாறு நடைபெறுகிறதா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது. இன்னொரு பக்கம் கல்லூரி என்ற பெயரில் எந்த விதமான வசதியும் இல்லாமல் வெறுமனே கட்டிடங்களையும் வைத்திருக்கும்  கல்லூரிகளில் தான் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது[9]. பிறகு, அத்தகைய “கல்லூரிகளுக்கு” எப்படி அனுமதி கொடுத்து, அங்கீகாரம் கொடுக்கப் பட்டது என்பதையும் கவனிக்கலாம். ஆக, அந்த உண்மையும் தெரிந்து தான் உள்ளது[10].

75,000, 65,000 என்று சீட்டுகள் எப்படி காலியாக இருக்க முடியும்?: பொறியியல் படிப்புகள் சேர்க்கைக்கு பொதுப் பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 28 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெற்றது. இதையடுத்து துணை கலந்தாய்வு மூலம் காலியான இடங்கள் நிரப்பப்பட்டன. ஒட்டு மொத்தமாக 440 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,60,780 இடங்களில் 54,000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன[11]. மூன்று சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு, 95,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைத்தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 84,812ஆக இருந்தது[12]. ஆக 2022ல் 75,968 மற்றும் 2023ல் 65,780 இடங்கள் காலியாக இருக்கின்றன என்று தெரிகிறது. பிறகு, இது யார் குற்றம் என்று சொல்ல வேண்டியுளளது. படிக்க ஆசையுள்ள மாணவ-மாணவியருக்கு மார்க் உள்ள போதும், சீட் கிடைக்கவில்லை என்ற என்ன காரணம் என்று சொல்லியே ஆகவேண்டும்.

அந்த 79 கல்லூரிகள் எவை, விவரங்கள் என்ன?[13]: உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும்[14], 35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன[15]. ஏன் பெயர்கள்-விவரங்கள் குற்ப்பிடப் படவில்லை?[16]

  1. அந்த 44 பொறியியல் கல்லூரிகள் எவை?
  2. அந்த  35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது என்றால் அவை எவை?
  3. அவற்றின் பெயர்கள் ஏன் குறிப்பிடப் படவில்லை.
  4. லட்சங்களில் பீஸ் / கட்டணம் என்றெல்லாம் செலவழித்துப் படிக்க வைக்கும் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப் பட வேண்டிய அவசியம் உள்ளது.
  5. கல்வியில் நிச்சயம் மோசடிகள் இருக்கக் கூடாது.
  6. கல்வியில் மோசடி, ஊழல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

© வேதபிரகாஷ்

18-12-2023


[1] காமதேனு, 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லைதுணைவேந்தர் சொன்ன அதிர்ச்சி தகவல்!, Updated on: 17 Dec 2023, 11:15 am

[2] https://kamadenu.hindutamil.in/education/not-a-single-student-got-admission-in-44-engineering-colleges

[3] தினத்தந்தி, தமிழகத்தில் 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லைஅண்ணா பல்கலை. துணைவேந்தர் பேட்டி, டிசம்பர் 16, 5:45 pm

[4] https://www.dailythanthi.com/News/State/out-of-44-engineering-colleges-in-tamil-nadu-not-a-single-student-got-admission-anna-university-vice-chancellor-interview-1086377

[5] தினகரன், தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை: அண்ணா பல்கலை. துணைவேந்தர் பேட்டி, December 16, 2023, 6:28 pm..

[6] https://www.dinakaran.com/tamilnadu_college__engineering_student_affairs_anna_university/ – google_vignette

[7] தமிழ்.வெப்.துனியா, 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.. தமிழகத்திற்கு வந்த சோதனை..!, Written By Mahendran Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (17:17 IST).

[8] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/no-students-in-44-engineering-college-at-tamilnadu-123121600068_1.html

[9] செய்திபுனல், 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லைவெளியான பகீர் தகவல்!,

[10] https://www.seithipunal.com/tamilnadu/single-students-not-joined-in-44-colleges

[11] தீக்கதிர், 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை, நமது நிருபர் டிசம்பர் 18, 2023

[12]https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/not-a-single-student-got-admission-in-44-engineering-colleges

[13] நியூஸ்.தமிழ், “44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை” – அண்ணா பல்கலைகழக  துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் பேட்டி..!, by Web EditorDecember 17, 2023.

[14] https://news7tamil.live/in-44-engineering-colleges-not-a-single-student-joined-anna-university-vice-chancellor-r-velraj-interview.html – google_vignette

[15] பத்திரிக்கை.காம், ஒரு மாணவர் கூட சேராத 44 தமிழக பொறியியல் கல்லூரிகள், DEC 16, 2023.

[16] https://patrikai.com/in-44-tn-egg-colleges-not-even-a-single-student-admitted/

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! அரசியல்வாதிகளின் பேச்சுகள்! (2)

ஜூலை 24, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! அரசியல்வாதிகளின் பேச்சுகள்! (2)

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-public-lecture-political.jpg

உள்ளூர் அறிஞர்கள் கௌரவிக்கப் பட்டனர்: முதல் நாளில், மலேசியாவில் குழந்தை இலக்கியம் என்ற தலைப்பில் பாப்பாவின் காவலர் கவிஞர் முரசு நெடுமாறன் உரையாற்றினார். குறிப்பாக பள்ளி குழந்தைகளிடையே கவிதை மூலம் எப்படி தமிழை வளர்த்திருக்கிறோம் என்பதை அழகாக எடுத்துரைத்தார்[1]. கவிஞர் முரசு நெடுமாறன், சிலாங்கூர் மாநில முன்னாள் க. முருகன் ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பிக்கப் பட்டனர். மலேசியாவைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் இராஜேந்திரன், மாநாட்டிற்கான செயலாளர் முனைவர் கிருஷ்ணன் மணியம் ஆகியோர் உட்பட பல பிரமுகர்களும் அரசு சார்பற்ற இயக்கங்களை சேர்ந்தவர்களும் மற்றும் பொது மக்களும் திரளாக வந்திருந்து சிறப்பித்தனர்[2]. உள்ளூர் ஊடகங்கள் இவற்றைப் பற்றி செய்திகள் வெளியிட்டுள்ளன. பிறகு பேசியவர்கள் தமிழ் இலக்கியம், வைணவம், சைவம் பற்றியெல்லாம் பேசினர். ஆனால், அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்த போது, மாநாட்டின் போக்கு திசைத் திரும்பியது எனலாம்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-thiruma-speaking-1.jpg

பிரிவினைவாதம் பேசப் பட்டது: மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள திருமாவளவன் பேசியதாவது[3]: மரபு சார்ந்த கலாச்சார உரிமைகளை பாதுகாக்க உலகத் தமிழ் மாநாடு முனையும். தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வலிமை வாய்ந்தது மாநாடு. தமிழ்த் தேசியம் என்பது மொழி, இன உணர்வு மட்டுமல்ல. அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டம் தமிழ்த் தேசியம். மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான். அவற்றைக் கடந்து தேசிய இனம் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மதம் அடையாளத்தை விட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது என்று கூறினார்[4]. இம் மாநாட்டின் பொது அரங்கில் மலேசிய நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்கு ‘வளர்ச்சி நோக்கில் தமிழ்’ எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முதல்நாள் மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-audience.jpg

கல்விசார், படிப்பு சம்பந்தப் பட்ட, ஆராய்ச்சி-கட்டுரைகள் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை: ஆய்வு அமர்வுகள், ஆய்வு கட்டுரைகள், விவரங்கள், வாசிப்புகள் பற்றிய செய்திகளைக் காணவில்லை. கல்விசார், படிப்பு சம்பந்தப் பட்ட, ஆராய்ச்சி-கட்டுரைகள் என்பது பற்றி மூச்சுக் கூட விட காணோம். மாநாட்டிற்குச் சென்றவர்களும், சமூக ஊடகங்களில் “நான் மாநாட்டிற்குச் சென்றேன்,” என்று புகைப்படங்கள் போட்டுக் கொண்டாலும், கட்டுரைப் படித்தேன், கேள்விகள் கேட்டார்கள், நான் பதில் சொன்னேன் என்றவாறு இல்லாமல், ஏதோ சுற்றுலா சென்றேன் பாணியில் தான் இருந்தது. ஆய்வுக்கட்டுரைகள் பற்றிய பட்டியல், தலைப்புகள், விவரங்களைக் காணோம் கலந்து கொண்டவர்களும் அவ்விவரங்களைப் பகிர்வதாகத் தெரியவில்லை. பெர்ணாம் என்ற இணைதளம் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலரின் வாசிப்புகள் தான் பதிவாகியுள்ளன (சைவம், வைணவம், சித்த மருத்துவம், பிள்ளைத் தமிழ், தோல்சீலை முதலியன).  சில கட்டுரைகள் நன்றாக இருந்தன. மற்றபடி, பெரும்பாலான மற்ற ஆய்வுக்கட்டுரைகள் அரைத்த மாவை அரைக்கும் என்பார்களே அந்த பாணியில் தான் இருந்தன.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia.more-politicians.2.jpg

அரசியல்வாதிகளை அழைத்து அரசியல் இல்லாமல் பேசுங்கள் என்று சொல்லப் பட்டது:. ஆனால், அவர்கள் எல்லோருமே அரசியல் தான் பேசினர், வீடியோவும் உள்ளது. அரசியல் மாநாடாக மாறிய நிலையில், தமிழ் தேசியம் போர்வையில், பிரிவினைவாதம் தான் பேசப்பட்டது. வேல்முருகன், தாமஸ், திருமாவளவன், ஶ்ரீகாந்த் [பீஜேபி], சுப.வீரபாண்டியன், நக்கீரன் கோபால், இலானி, நிறைமதி [சீனர்], கடைசியாக கே.வீரமணி, என்று அதிகமாக, அரசியல் தான் நிறைய பேசப்பட்டது. தமிழ் தேசியம், பார்ப்பனியம், வர்ணம், தமிழ்-சமஸ்கிருதம், சமஸ்கிருத ஆதிக்கம், ஆரியன்–திராவிடன் பண்பாட்டு படையெடுப்பு, என்றெல்லாம் பேசப் பட்டது. வெண்பா, ஆசிரியபா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பா முதலியவற்றிற்கு திரிபு விளக்கமும் கொடுக்கப் பட்டது. இதனால், தமிழுக்கு, தமிழ் ஆராய்ச்சிக்கு, தமிழ் மேன்பாட்டிற்கு எந்த பிரயோஜனும் இல்லை. பெரும்பாலான நேரம் இவ்வாறு அரசியல், பேசியதையே பேசியது, ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் என்று தான் சென்றது. ஊர் சுற்றிப் பார்க்க வந்தவர், அவரவர் வேலைகளுக்கு சென்றனர். சாப்பிடும் நேரதிற்கு வந்து விடுவர்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-velmurugan.jpg

மொழி, தேசம், தேசியம், நாடு, ஒன்றியம் என்று குழப்பவாதங்களை வைக்கும் குழப்பவாதிகள்: வேல்முருகன் தமிழ் தேசியம் என்று, பிரிவினைவாதம் பேசியது வேடிக்கையாக இருந்தது. முன்பு, கம்யூனிஸவாதிகள், பிறகு தமிழீழ ஆதரவாளர்கள், அதற்கும் பிறகு தமிழக பிரிவினைவாதிகள், மொழியை வைத்து, மொழிவாறான தேசிய இனங்கள் என்று பேசி குழப்பி வந்தார்கள். அதாவது ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தேசம் உள்ளது, அந்தமொழிவாரி தேசம் போற்றப் பட வேண்டும். அந்த தேசியம், இந்திய தேசியம் வேறு. எப்படி பலமொழி பேசும் தேசியங்கள், இந்திய நாட்டில் ஒன்றியத்தில் சேர்ந்திருக்கின்றனவோ, அதே போல சுயநிர்ணய உரிமையோடு, ஒவ்வொரு தேசமும் பிரிய உரிமை உண்டு என்றெல்லாம் குழப்பவாதங்களில் ஈடுபட்டனர். நாடு, தேசம், தேயம், இடம் போன்ற சொற்கள், ஒரு இடத்தைத் தான் குறிப்பிட்டன. அதை அறிந்தும் இவர்கள் திரிபுவாதம் செய்து வருகிறார்கள். அவையெல்லாம் கருணாநிதி போன்றோரே அடக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. இப்பொழுது, மறுபடியும் திமுக ஒன்றியம், திராவிட மாடல், திராவிட ஸ்டாக் என்றெல்லாம் பேசி வருவதால், இந்த குழப்பவாதிகளுக்கு தைரியம் வந்து, அவ்வாறே முன்பு போல, பிரிவினைவாதம் பேச ஆரம்பித்து விட்டனர். ஆக இந்து வேல்முருகன் போன்றோருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-srikanth.jpg

வலதுசாரிகளின் பலவீனம், ஒற்றுமையின்மை மற்றும் பழமைவாதம்: ஶ்ரீகாந்த் என்ற பிஜேபி இந்தியதேசத்துடன் பேசினாலும், மற்றவர்கள் கொஞ்சம் பேசினாலும், எடுபடவில்லை. இவரும் கி.ஆ.பே.வின் பெயரன் என்ற முறையில் இருக்கிறார். நக்கீரன் கோபாலுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். இடதுசாரிகள், திக-திமுகவினர் ஒன்றாக வந்திருந்த நிலையில், வலதுசாரிக்கள் இங்கு வாய்கிழிய பேசினாலும், அங்கு யாரையும் காணோம். “இந்திய தேசியமும், தமிழ் தேசியமும்” என்று பேசி, அவர்களின் முகத்திரையைக் கிழிக்க ஆளில்லை; “தமிழ் தேசியமும், திராவிட தேசியமும்,” என்று கட்டுரை வாசிக்கவும் திராணி இல்லை. ஆனால், இங்கு, திராவிட மாயை, பெரியாரின் ம்ச்றுபக்கம் என்றெல்லாம் பேசுவார்கள், எழுதுவார்கள், புத்தகங்களும் போடுவார்கள். ”முகநூலில் கம்பு சுற்றுவதோடு சரி, இம்மாதிரியான, கருத்துருவாக்கும், தாக்கம் கொண்ட அல்லது ஏற்படுத்தும் கருத்தரங்களில் கலந்து கொள்வதில்லை.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-srikanth-next-to-gopal.jpg

வலது சாரிகளின் ரகசிய கருத்தரங்கங்கள்: மத்திய அரசு ஆதரவு மற்றும் நிதியுதவியுடன் நடத்தப் படும் கருத்தரங்கங்கள், மாநாடுகள் என்று இவர்களே கலந்து கொண்டு, குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இலக்கிய விழா என்று கொண்டாட ஆரம்பித்தாலும், ஏதோ ரகசியமாக நடத்துவது போல நடத்துகிறார்கள்[5]. எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லை. சுமார் 50-100 என்றிருந்தால், அவர்களுக்குள் அகிர்ந்து கொண்டு, கூடி விலம்பரப் படுத்திக் கொள்கிறார்கள். மற்ற படி, பொது ஊடகங்களில் அதைப் பற்றி எந்த தகவலும் வருவதில்லை. இதனால், லட்சக்கணக்கில் பணம் செலவழித்தாலும், சித்தாந்த ரீதியில் ஆட்களுக்கு பயிறிசி அளிப்பதில்லை, தயார் செய்வதும் இல்லை. அனுபவம் கொண்ட, ஆராய்ச்சியாளர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. தெரிந்தும் ஓரங்கட்டுகிறார்கள் இதனால் தான், தங்களது பலத்தையுமிழந்து, எதிர்சித்தாந்திகளின் பலத்தை மறைமுகமாக வளர்க்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

24-07-2023


இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-senator-saraswati.jpg

[1] வணக்கம் மலேசியா, பேராளர்கள்பார்வையாளர்கள்திரளாககலந்துகொண்ட 11-வதுஉலகத்தமிழாராய்ச்சிமாநாடு, 21-07-2023.

[2]https://vanakkammalaysia.com.my/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/

[3] நியூஸ்7தமிழ், தேசியஇனஅடையாளத்தைவலுப்படுத்தவேண்டும்! – உலகமலேசியதமிழ்மாநாட்டில்தொல்.திருமாவளவன்பேச்சு!, by Web EditorJuly 21, 2023

[4] https://news7tamil.live/even-if-divided-by-politics-religion-and-cultural-identities-the-national-identity-should-be-strengthened-thol-thirumavalavan.html

[5]  பாண்டி-லிட்-பெஸ்ட் என்றெல்லாம் நடத்துகிறார்கள், ஆனால், விவரங்கள் தெரிவதில்லை. அவர்களுக்கே தெரியாத அளவில் கூட நடக்கிறது.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-vips.jpg



11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது–அதன் ஆராய்ச்சி நிலைப் பற்றிய விவரங்கள் (7)

ஜூலை 11, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது அதன் ஆராய்ச்சி நிலைப் பற்றிய விவரங்கள் (7)

இரும்பு காலம் பற்றிய கருத்து: ஆய்வரங்கத்தின் முதல் அமர்வில், புதுச்சேரி பல்கலை பேராசிரியர் ராஜன் பேசியதாவது[1]: “இந்தியா முழுக்க பிராகிருத மொழி பயன்பாட்டிற்கு வந்தது. அதற்கு முன், தமிழகத்தில் தமிழி எழுத்துகள் புழக்கத்தில் இருந்தன. அதனால்தான், தமிழகத்தில் பிராகிருத கல்வெட்டுகள் இல்லை. தமிழர்களின் வரலாற்றை முழுமையாக சொல்ல முடியாது. காரணம், சங்க இலக்கியத்தில் அனைத்து கூறுகளும் சொல்லப்படவில்லை. அகழாய்வில் பயன்படா பொருட்களே அதிகளவில் கிடைக்கின்றன. கல்வெட்டு, காசுகளும், பொதுமக்களின் வாழ்வியலை முழுமையாக சொல்லவில்லை. என்றாலும், உலகின் முன்னேறிய சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததை, இந்த ஆய்வுகளால் அறிய முடிகிறது. தமிழகத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கடல்வழி வணிகம் சிறந்திருந்தது. இங்கு, எழுத்தறிவு மிக்க சமூகம் வாழ்ந்திருந்தது. நெல்லை நாற்றுவிட்டு நடும் பழக்கம், 2,700 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. இவற்றைவிட முக்கியமாக, உலகத்திற்கே இரும்பை அறிமுகம் செய்தவன் தமிழனாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரம், மேட்டூர் அருகே உள்ள தெலுங்கன்குடியில் கிடைத்த இரும்பு வாள் நிரூபித்துள்ளது. அதாவது, சிந்துவெளியில் செம்பை பயன்படுத்திய காலத்தில், தமிழர்கள் இரும்பை பயன்படுத்தி உள்ளனர். அதற்கான தரவுகளை சேகரிக்கும் வகையில், சிந்துவெளி மற்றும் தமிழ் நிலத்தில் கிடைத்துள்ள குறியீடுகளை ஆய்வு செய்து வருகிறோம்,” இவ்வாறு அவர் பேசினார்[2].

அரைத்த மாவை அரைக்கும் பாணியில் ஆய்வுக்கட்டுரைகள்: பட்டியலிடப்பட்ட தாள்கள் தாள்களின் தரத்தை வெளிப்படுத்தின. பெரும்பாலான தாள்கள் மறுவடிவமைக்கும் வகையைச் சேர்ந்தவை, அதே விஷயங்களை மீண்டும் மீண்டும் அரைத்த மாவை அரைக்கும் பாணியில் கூறுகின்றன.

  • தொல்காப்பியர் நோக்கில் வள்ளுவம்
  • திருக்குறள், திருவள்ளுவர் முதலியன… – தற்போதைய வாழ்க்கை முறைக்கான நடைமுறை வழிகாட்டி, இது போன்ற திருக்குறள் பற்றிய பல ஆவணங்கள்.
  • தனிநாயகம் பிள்ளை……
  • தமிழை விரைவாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்வது எப்படி
  • திரு.வி.கல்யாணசுந்தரனார், மயிலை சீனி வேங்கடசாமி (அவர் மீது பல ஆவணங்கள்) முதலியன,
  • சங்க இலக்கியம்……..பற்றி…
  • சிலப்பதிகாரம் பற்றி – பல தாள்கள்
  • சங்க இலக்கியம்
  • சித்த, சித்த மருத்துவம்

இதில் புதியதாக எந்த விசயத்தையும்சொல்ல காணோம்.

எப்படியாவது ஒரு ஆய்வுக்கட்டுரையை கொடுத்தே ஆகவேண்டும் என்ற வெறியில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் படுகின்றன: ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுப்பது, தலைப்பை ஆராய்ச்சி செய்தல், திட்டமிடல் மற்றும் எழுதுதல் என்பது இல்லை. வலைத்தளங்கள், கல்வி கட்டுரைகள், புத்தகங்கள், கலைக்களஞ்சியம், நேர்காணல்கள், இணையத்தில் தனிப்பட்ட கட்டுரைகள் (வலைப்பதிவுகள்) என்பதெல்லாம் இல்லாமல், “கட்-அன்ட்-பேஸ்ட்” முறையிலேயே செல்கின்றனர். கட்டுரையின் வடிவத்தில் தர்க்கரீதியான விமர்சன வாதங்களை முன்வைப்பதில்லை, தீர்மானமாக முடிவை வைத்துக் கொண்டு இந்த வேலை நடக்கிறது. பகுப்பாய்வு கட்டுரைகள், என்று சொல்லிக் கொண்டாலும், எந்த ஒரு முக்கியமான பிரச்சினையில் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொண்டு வரும் போக்கில் விசயங்களைச் சொவ்தில்லை. ஆராய்ச்சியின் பொருள் சர்ச்சைக்குரியதாக இருப்பதும் இல்லை, அந்த அளவுக்கு கஷ்டப்படுவதும் இல்லை, உழைப்புடன் முனைவதும் இல்லை. சொந்த கருத்துக்களைத் தெரிவித்து, ஆதாரங்களுடன் எழுதும் கட்டுரையாளர்கள் சிலரே. நேரடி மேற்கோள்கள், நீண்ட மேற்கோள்களைத் தவிர்க்காமல், அவற்றை அவ்வாறே எடுத்தாள்கின்றனர்.

எந்த ஆராய்ச்சிநெறிமுறையும் பின்பற்றப் படுவதில்லை: இப்பொழுதைய ஆராய்ச்சிநெறிமுறை, தரக்கட்டுப்பாடு, விதிகள், மென்பொருளால் சரிபார்க்கும்முறை முதலியவற்றை வைத்து சரிபார்த்தால், எத்தனை ஒழுங்கானவை என்று தீர்வாகும் என்பதும் நோக்கத் தக்கது. இருப்பினும், இவர்கள் தலைப்புகளை மாற்றி, சில வர்களை வெட்டி-ஒட்டி கட்டுரை என்று தயாரித்து, வாசிக்க வந்து விடுகின்றனர். கட்டுரைகளை தேர்வு செய்பவர்களும் எந்த தரத்தையும் சரிபார்ப்பதில்லை, தெரிந்தவர்களா, நண்பர்கள் பரிந்துரைத்தார்களா என்று பார்த்து தேர்வு செய்கிறார்கள். அவர்களே ஒப்புக் கொண்டபடி, பெயர்களை வைத்துக் கொண்டு கூட, சில கட்டுரைகளை ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.

09-07-2023 அன்று அவசரஅவசரமாக முடிந்த மாநாடு: குதிரை முன் வண்டிகல்வி அமர்வுகள் நிறைவடையும் முன் விழா நடைபெற்றது: ஆய்வுக்கட்டுரை அமர்வுகள் முடிவடைவதற்கு முன்பு நிறைவு விழா நடைபெற்றது. ஜூலை 9 ஆம் தேதி, ஆய்வுக் கட்டுரை வழங்குபவர்கள் தங்கள் நிலையைக் கேட்டறிந்து காத்துக் கொண்டிருந்தனர், காலை 9.00 மணி முதல் அறைகள் காலியாக இருந்ததாலும், யாரும் சரியாக பதிலளிக்காததாலும், ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கரவர்கள் சென்று வந்து கொண்டிருந்தனர். ஆய்வுக்கட்டுரை வாசிப்பு / கல்வி அமர்வுகள் குறித்து முற்றிலும் குழப்பம் ஏற்பட்டது. பின்னர், முதலில் பாராட்டு விழா நடைபெறும் என்றும், பின்னர் காலை 10.30 மணி 11 மணிக்கு தாள் வாசிப்பு நிகழ்ச்சி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சாளர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தனர், நேரம் கடந்துவிட்டதால் ஆய்வுக்கட்டுரை வழங்குபவர்கள் கவலையடைந்தனர். பின்னர், பிரிவுத் தலைவர்கள் அறைகளுக்குச் சென்று அமர்வுகளைத் தொடங்க ஆரம்பித்தனர். துரதிர்ஷ்டவசமாக, இந்த முரண்பாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் வாசிப்பவர்களுக்கு 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதித்தனர். மேலும், 10-15 நபர்கள் இல்லை, அவர்களில் பெரும்பாலோர் கட்டுரை வழங்குபவர்களாக இருந்தனர். வழக்கம் போல கட்டுரை வாசிப்பவர் ஆசிட்டுவிட்டு போய்விட்டார்கள்.. நிச்சயமாக, அமர்வுகளைத் தொடங்க அமைப்பாளர்கள் மற்றும் பிரிவுத் தலைவர்கள் தரப்பில் இரண்டு மணி நேரம் ஏற்கெனவே தாமதம் ஏற்பட்டது. எப்படியோ, பேப்பர் வாசிப்பு அமர்வுகள் முடிந்து, மதிய உணவுக்குப் பிறகு பிரதிநிதிகள் நகரத் தொடங்கினர். இதனால், மூன்று நாள் சர்வதேச தமிழ் மாநாடு மேலே விவரிக்கப்பட்டபடி இரண்டரை நாட்களில் முடிக்கப்பட்டது.

மலேசியாவின் போட்டியாளர் கூற்று: சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில், கடந்த 7, 8, 9ம் தேதிகளில், உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சார்பில், 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தது[3]. அடுத்த மாநாட்டை, 2025ல் சிங்கப்பூரில் நடத்த திட்டமிட்டுள்ளனர்[4]. 1968ல் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற 2வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை விட, 11வது மாநாடு செம்மஞ்சேரியில் உள்ள ஆசிய ஆய்வுக் கழகத்தில் ஒரு கல்வி நிகழ்வாக நடைபெற்றது, என்று பொன்னவைக்கொ தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், ஏதோ நடத்த வேண்டுமே என்று நடத்தியாகி விட்டது. இதே ஜூலையில் இரண்டாவது சந்திப்பு. பெரும் ஆரவாரத்துடனும், பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்புடனும் நடைபெறும் என்று சொல்லப் படுகிறது. இந்த மாநாட்டுக்கு மாநில அரசிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஐஏடிஆர் உறுப்பினர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த அரசர் அருளாளரையும் அதிபராகத் தேர்ந்தெடுத்தனர். இதற்கிடையில், 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் ஜூலை 21 முதல் 23 வரை நடைபெறும் என பேராசிரியர் டி.மாரிமுத்து தலைமையிலான மற்றொரு குழு அறிவித்துள்ளது. அவர் இணைய யுகத்தில் தமிழ் மொழி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இதில் கவனம் செலுத்தப்படும் என்கிறார்.

© வேதபிரகாஷ்

11-07-2023

.


[1] தினமலர், சிந்துவெளி காலத்திலேயே இரும்பு பயன்பாட்டில் இருந்தது, பதிவு செய்த நாள்: ஜூலை 08,2023 01:54.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3369634

[3] தினமலர், நிறைவு பெற்றது உலக தமிழாராய்ச்சி மாநாடு, Added : ஜூலை 11, 2023  04:37

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3372482

ஆசிரியர்களிடம் கட்டிப்பிடி சண்டை-சச்சரவு-அதிதடி ஏன், கற்பித்தல் முதலியவற்றில் கவனம் இல்லாது மற்ற காரியங்களில் ஈடுபடும் போக்கு ஏன்? (1):

ஏப்ரல் 15, 2023

ஆசிரியர்களிடம் கட்டிப்பிடி சண்டை-சச்சரவு-அதிதடி ஏன், கற்பித்தல் முதலியவற்றில் கவனம் இல்லாது மற்ற காரியங்களில் ஈடுபடும் போக்கு ஏன்? (1):

ஆசிரியர்களிடம் சண்டை-சச்சரவு-அதிதடி ஏன்?: தமிழக பள்ளி ஆசிரியர்களிடம் அடிக்கடி வாக்குவாதம், வாடா-போடா பேச்சுகள், கெட்ட வார்த்தைகள் பேசுவது, திட்டுவது, சண்டை போடுவது, அடித்துக் கொள்வது, கட்டிப் புரண்டு சண்டை போடுவது, ஓடி-ஓடி அடித்துக் கொள்வது, என்றெல்லாம் சகஜமாகி விட்டன. போதாகுறைக்கு செல்போன் வசதியும் வந்து விட்டதால், புகைப் படங்கள், வீடியோக்கள் எல்லாம் உலா வர ஆரம்பித்து விட்டன. பெரும்பாலும் மத்தியஸ்தம் செய்து, விசயங்களை-விவகாரங்களை அமுக்கி விடுவது என்ற ரீதியில் தான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இருப்பினும், பணம், அந்தஸ்து, கௌரவம், அரசியல் போன்ற காரணிகளால் சில ஆசிரியர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. “நானா-நீயா” அல்லது “நீயா-நானா-”, ஒன்டிக்கு ஒன்டி வாடா பார்த்து விடுவோம் என்ற ரீதியில் செல்லும் பொழுது, இவையெல்லாம் அரங்கேறி, செய்திகளாகி, உலா வர ஆரம்பிக்கின்றன. இதனால், சஸ்பெண்ட், இடமாற்றம், ஜாதிப் பிரச்சினை என்றால் வழக்குகள் என்றெல்லாம் வந்து விடுகின்றன.

ஏப்ரல் 2023 – வேதியியல் ஆசிரியர் இயற்பியல் ஆசிரியர் இடையே சண்டை: திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அருகே குனிச்சியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,200 மாணவ – மாணவியர் படிக்கின்றனர்; 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பள்ளியில் கடந்த மாதம், 29ல் கால அட்டவணை தயாரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் குழந்தைசாமி, 55, தலைமை வகித்தார். அப்போது, வேதியியல் ஆசிரியர் சின்னமணி, 45, இயற்பியல் ஆசிரியர் கோவிந்தசாமி, 43, ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆபாசமாக பேசி, கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்[1]. அரை மணி நேரம் நடந்த சண்டை குறித்த ‘வீடியோ’ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது[2]. அதன் அடிப்படையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் சின்னமணி, கோவிந்தசாமி ஆகியோரை, ‘சஸ்பெண்ட்’ செய்து நேற்று உத்தரவிட்டார்[3]. மேலும், விளக்கம் கேட்டு, தலைமை ஆசிரியர் குழந்தைசாமிக்கு, ‘மெமேோ’ கொடுக்கப்பட்டுள்ளது[4].

ஜூலை 2022 – வெட்டன் விடுதி, புதுக்கோட்டைமுன்விரோதம்: ஆலங்குடி அருகே வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டிப் புரண்டு சண்டை போட்ட இரண்டு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்[5]. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 500 மாணவ – மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளியில் ஆங்கில ஆசிரியர் சந்தோஷ் 47 தமிழ் ஆசிரியர் தமிழ்ச்செல்வன் 49 ஆகியோர் இடையே நீண்ட காலமாக முன்விரோதம் இருந்துள்ளது[6]. இதை ஆங்கிலம்-தமிழ் மோதல் என்று எடுத்துக் கொள்ள முடியாது. நல்லவேளை, இந்தி டீச்சர்-தமிழ்-டீச்சர் என்று இல்லை, பிறகு, அத்தகைஅ சண்டை, வேஊ விதமாகியிருக்கும். அந்த “நீண்ட காலமாக முன்விரோதம்” விளக்கப் படவில்லை, பிறகு, அவர்கள் ஏன் ஒரே இடத்தில் போஸ்டிங் போடவேண்டும் போன்ற விவரங்களும் மர்மமாக இருக்கின்றன. இருப்பினும்ளூடகக் காரர்களையே ஈர்த்துள்ள்தால், இவ்விசயம் ஊடகங்களில் அதிகமாகவே செய்தியாக வெளி வந்தள்ளது. இரு நாட்களுக்கு முன் மதிய உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் இரண்டு ஆசிரியர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கட்டிப்புரண்டு சண்டையிட்டனர்[7]. சக ஆசிரியர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்துஅனுப்பினர்[8]. இது குறித்து பள்ளிக்கு சென்று விசாரணை நடத்திய புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரிகள் சந்தோஷ் தமிழ்செல்வனை வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டனர்[9]. படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களே இவ்வாறு தாக்கிக் கொள்வது அதிர்ச்சியக இருந்தது[10].

ஜனவரி 2022 – தலைமை ஆசிரியருக்கும் மாற்றுத் திறனாளி ஆசிரியருக்கும் சண்டை:  திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்துள்ள கடலாடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சற்றுவட்டார பகுதிகளில் இருந்து 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து படித்து வருகின்றனர். மேலும் இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாடங்களை எடுத்து  வருகின்றனர்.  இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக அண்ணாமலை என்பவர்  பணிபுரிந்து வருகிறார். பின்னர்  இந்த  பள்ளியில் மாற்றுத் திறனாளி ஆசிரியர் செழியன் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், தலைமை ஆசிரியருக்கும் இடையே பல மாதங்களாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது[11]. நேற்று  அவர்களுக்குள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருவரிடையே ஏற்பட்ட பிரச்னை  வாக்குவாதமாக மாறியுள்ளது. திடீரென இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.  அப்போது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்து கொண்டும் கீழே விழுந்தும் தாக்கி கொண்டனர்[12]. பின்னர் அவர்களை மற்ற ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். அதனைத் தொடர்ந்து  இருவரும் தாக்கிக்  கொண்டதை   யாரோ  அவர்களுடைய தொலைபேசியில்  வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பரவ விட்டனர். இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் மற்றும் மற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  அதாவது ஆசிரியர்கள் எந்த நிலையில் இருந்தாலும், சச்சரவு ஓய்வதில்லை, சண்டையிலும் முடிவதையும் கட்டுப் படுத்தமுடியாத நிலையும் ஏற்பட்டு விடுகிறது.

சட்டையை பிடித்து மோதலில் ஈடுப்பட்டு ஒழுங்கினமாக நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்: மேலும் இச்சம்பவம்  குறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வத்திடம் பேசிய போது, “ஆசிரியர்கள் தாக்கி கொண்ட சம்பவம் குறித்து போளூர் கல்வி மாவட்ட அதிகாரி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. கல்வி மாவட்ட அதிகாரி விசாரணை அறிக்கையை எங்களிடம்  சமர்ப்பித்த பின்னரே எதற்காக அவர்கள் தாக்கி கொண்டனர் என்பது தெரியவரும். அவர்களில் யார்  மீது தவறு  என்பது தெரியவந்தபிறகே   நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.இந்நிலையில் போளூர் மாவட்ட கல்வி அலுவலர் தயாளன் பள்ளிக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார் பின்னர் விசாரணை தொடர்பானா அறிக்கையை முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வத்திடம் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் பள்ளியில் சட்டையை பிடித்து மோதலில் ஈடுப்பட்டு ஒழுங்கினமாக நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் அண்ணாமலை மற்றும் மாற்று திறனாளி ஆசிரியர் செழியன் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் ஆகிய மூன்று நபர்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே பள்ளியில் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

© வேதபிரகாஷ்

14-04-2023


[1] தினமலர், பள்ளியில் கட்டிப்புரண்டு சண்டை இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட், பதிவு செய்த நாள்: ஏப் 14,2023 01:01; https://m.dinamalar.com/detail.php?id=3293447

[2] https://m.dinamalar.com/detail.php?id=3293447

[3] செய்திசோலை, பள்ளி ஆலோசனை கூட்டத்தில்…. கட்டிப்புரண்டு சண்டை போட்ட ஆசிரியர்கள்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!, jyothi priya, April 13, 2023.

[4] https://www.seithisolai.com/teachers-suspended-3.php

[5] தினமலர், கட்டிப்புரண்டு சண்டை2 ஆசிரியர்கள் மாற்றம், பதிவு செய்த நாள்: ஜூலை 09, 2022 01:37…

[6] https://m.dinamalar.com/detail.php?id=3072259

[7] தினத்தந்தி, அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியரும் தமிழ் ஆசிரியரும் கட்டி புரண்டு சண்டை, ஜூலை 6, 7:05 pm

[8] https://www.dailythanthi.com/News/State/an-english-teacher-and-a-tamil-teacher-have-a-fight-in-a-government-school-739193?infinitescroll=1

[9] காமதேனு, பள்ளியிலேயே ஆசிரியர்கள் கட்டிப்புரண்டு சண்டைதெறித்து ஓடிய மாணவர்கள்: அதிரடி காட்டிய அதிகாரி, Updated on : 6 Jul, 2022, 7:20 pm

[10] https://kamadenu.hindutamil.in/national/clash-among-students-government-school-teachers-job-transfer

[11] தமிழ்.ஏபிபி.லைவ், Watch Video: அரசுப்பள்ளியில் கட்டி புரண்டு சண்டை போட்ட ஆசிரியர், தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட், By: V.வினோத் | Updated at : 30 Jan 2022 07:17 AM (IST); Published at : 30 Jan 2022 08:21 AM (IST).

[12] https://tamil.abplive.com/crime/whatch-video-viral-on-video-websites-attacked-by-teachers-at-kataladi-government-school-37513

காதலி காதலனை ஆட்கள் வைத்து கடத்தி, அடித்தது, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியது, பிறகு கைதானது! கொடேஷன் கேங்-கேரளா மாடல்(2)

ஏப்ரல் 13, 2023

காதலி காதலனை ஆட்கள் வைத்து கடத்தி, அடித்தது, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியது, பிறகு கைதானது! கொடேஷன் கேங்-கேரளா மாடல்(2)

 

காதலை முறித்துக் கொள் என்றதை ஒப்புக் கொள்ளாதலால், ஆட்களை வைத்து லக்ஷ்மி பிரியா சிவராமை அடித்தது: இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியா, தனது காதலன் அமுல் மற்றும் நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து மாணவனை கடந்த ஏப்ரல் 5ம் தேதி காரில் கடத்தி உள்ளனர். அந்த அளவுக்கு அவள் ரௌடியிசத்திற்கும் இறங்கியிருக்கிறாள். இது, தீய சகவாசமா, வேறு வகையான நட்பா, தொடர்பா என்றெல்லாம் தெரியவில்லை. அதே போல, இவளுடைய பெற்றோர், அவர்கள் இதில் ஏன் கண்டு கொள்லாமல் இருக்கிறார்கள் போன்ற விவரங்களும் தெரியவில்லை. ஒரு ஊடகம், லக்ஷ்மி பிரியாவின் தாயாரும் கைது செய்யப் பட்டிருக்கிறார் என்கிறது[1]. காரில் வைத்து பேசி பார்த்திருக்கிறார்கள் என்பதை விட, மிரட்டியிருக்கிறார்கள். ஆனால் அந்த மாணவன் உறுதியாக இருந்ததால், ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியாவின் நண்பர்கள் மாணவனை சரமாரியாக அடிக்க ஆரம்பித்துள்ளனர். வழியில், ஆலப்புழாவில் நிறுத்தி, வாலிபரின் தங்கச் சங்கிலி, விலை உயர்ந்த மொபைல் போன் மற்றும் பணத்தை பறித்திருக்கிறார்கள். இதெல்லாம் காதல், காதல் முறிப்பு, காதல் பிரிப்பு, கட்டப் பஞ்சாயத்து போன்ற காரியங்களையும் மிஞ்சுவதாக இருக்கின்றன. பிறகு, அவர்கள், இத்தகைய வேலைகளை செய்யும் ரௌடிகளாக இருந்திருக்க வேண்டும். பின்னர், மாணவனை எர்ணாகுளம் தம்மனம் அருகே உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த கும்பல் அவரை அங்கேயே கட்டி வைத்து அடித்துள்ளனர். பின்னர் மாணவனின் ஆடைகளை அவிழ்த்து, மொபைல் போனில் வீடியோவும் எடுத்துள்ளனர்,” என மாணவனின் தந்தை கூறினார்.

 

அவர்கள் காதலர்கள் அல்ல; அவர் ஆபாச வீடியோக்களை அனுப்பினார், மகளைத் துன்புறுத்தினான்: மனோரமா செய்தியிடம் பேசிய லக்ஷ்மிபிரியாவின் தாயார், அந்த இளைஞனுடன் தனது மகளுக்கு தொடர்பு இல்லை என்று கூறினார். “இருவரும் நண்பர்கள். இருப்பினும், பின்னர் அவர் அவளை வாய்மொழியாகத் துன்புறுத்தத் தொடங்கினான், மேலும் அவரது தொலைபேசிக்கு ஆபாச வீடியோக்களையும் அனுப்பினார். அவர் தனது பிரச்சனையிலிருந்து விடுபட உதவுமாறு தனது நண்பர்களைக் கேட்பது பற்றி என்னிடம் கூறினான்,” என்று லட்சுமிப்ரியாவின் தாயார் கூறினார். மேலும், அந்த இளைஞரை தாக்குவதற்கு லட்சுமிபிரியா எந்த கும்பலையும் நியமிக்கவில்லை என்றார். “இளைஞரை அடித்தது அவளுடைய நண்பர்கள்தான், என் மகள் அல்ல. அவள் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டாள். லட்சுமி திறமையான மாணவி. சந்தேகம் இருந்தால் அவளுடைய ஆசிரியர்களிடம் கேட்கலாம்,” என்று அவர் கூறினார். இருப்பினும், இந்த அம்மா எல்லா நிகழ்வுகளுக்காகவும் வருந்துவதைக் காண வேண்டியதில்லை, அதில் அவரது மகள் நிச்சயமாக ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். பள்ளியில் ஒரு பையனுடனும், கல்லூரியில் ஒரு பையனுடனும் காதல் விவகாரங்களில் ஈடுபடும் படிப்பைத் தவிர, அவளோ அல்லது அவளது கணவனோ தங்கள் மகளின் செயல்பாடுகள் குறித்து எச்சரித்தார்களா என்பதும் அறியப்படுகிறது. இயற்கையாகவே, ஒவ்வொரு தாயும் தனது மகள் மற்றும் மகனை மட்டுமே பாதுகாப்பார்கள், ஆனால், அவள் ஏன் அவளுடைய நடத்தை, செயல்பாடுகள் மற்றும் காதல் விவகாரங்களை கண்காணிக்கக்கூடாது. அவளுடைய தவறான நடத்தைக்கு எதிராக அவள் நடவடிக்கை எடுக்க விரும்பினால், அவள் அவளுக்கு அறிவுரை சொல்லலாம், கட்டுப்படுத்தலாம் மற்றும் சரிபார்த்திருக்கலாம்.

 

போலீஸார் லக்ஷ்மி பிரியாவை கைது செய்தது: அந்த வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டியதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன. ஒரு ஆணின் வீடியோவை வெளியிட்டால் என்னாகும் என்று இனிமேல் தான் யோசிக்க வேண்டியுள்ளது. பெண்ணின் மானம் போகும் என்பது போல, ஒரு இளம் வாலிபனுக்கு என்னாகும் என்று ஆராய வேண்டியள்ளது. இது பற்றி மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார், எர்ணாகுளத்தை சேர்ந்த லட்சுமி பிரியாவின் காதலன் அமலை முதலில் கைது செய்தனர். அதன்பின்னர் லட்சுமி பிரியாவை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது தோழி வீட்டில் வைத்து கைது செய்தனர். இதனிடையே மொத்தம் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் லட்சுமி பிரியாவின் நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். லக்ஷ்மி பிரியாவின் தாயார், தன் மகளுக்கும் அந்த பையன் / அமலுக்கும் எந்த உறவு இல்லை என்கிறார்[2]. நண்பர்களாக இருக்கும் பொழுது, சில வீடியோக்களை அனுப்பி மிரட்டி வந்துள்ளான். அவன் சகவாசத்திலிருந்து விலகிச் செல்லவும் அவளின் நண்பர்கள் அறிவுருத்தியுள்ளனர், என்கிறார்[3].

 

‘மகனை விடுவிக்க முக்கிய குற்றவாளி மீட்கும் தொகை கேட்டார்’: தனது மகனை விடுவிக்க லட்சுமிபிரியா பணம் கேட்டதாக இளைஞரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இது விவகாரங்களில் மிகவும் ஆபத்தானது. சிறுமியும் அவரது நண்பர்களும் தனது மகனை கொடூரமாக தாக்கியதை அவர் வெளிப்படுத்தினார். பின்னர் அருகில் உள்ள கடையில் இருந்து மதுபானம் வாங்குவதற்காக கொள்ளையர்கள் பணத்தை எடுத்து சென்றனர். தாக்கியவர்களில் ஒருவர் பீர் பாட்டிலை சிவராமின் தலையில் தாக்கினார். காவல்துறை அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதால், மருத்துவர்களின் அறிக்கையிலிருந்து இவை அனைத்தையும் சரிபார்க்க முடியும். அதிர்ச்சியில் துடிக்கும் வகையில் மொபைல் போன் சார்ஜர் வயர்கள் நாக்கில் வைக்கப்பட்டு கொடுமை தொடர்ந்தது. இந்த கொடூர செயல்களை அந்த இளம் கல்லூரி மாணவி ஒப்புக்கொண்டது பொருத்தமற்றது மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், அவருக்கு கஞ்சா கொடுக்க அக்குழு முடிவு செய்தது. பின்னர் லெக்ஷ்மிபிரியா அவரை உடை கழற்றி வீடியோ எடுக்கும்படி குழுவை வற்புறுத்தினார். இதுவும் விவரிக்க முடியாதது, ஏன் இது போன்ற வீடியோ தேவை என்று தெரியவில்லை. இருவரும் உறவுமுறையில் இல்லை என்றும் அவர் கூறினார். காருக்குள் வைத்து அடித்து உதைத்தனர்.அவரது ரூ.20,000/- மதிப்புள்ள தங்கச் சங்கிலி, கைக்கடிகாரம் மற்றும் ரூ.5,000/- பணத்தைக் கறுப்புத் துணியால் முகத்தை மறைத்துக்கொண்டு திருடிச் சென்றனர். அங்கிருந்து பழைய வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மீண்டும் தாக்கப்பட்டார், இந்த முறை, அவர்கள் அவரை தாக்குவதற்கு கனமான தடியைப் பயன்படுத்தி அவரை தாக்கினர் மற்றும் மின்சார அதிர்ச்சியையும் கொடுத்தனர். அந்த சித்திரவதையின் வீடியோ அவர்களிடம் உள்ளது. இந்த கொடூரத்தின் அதிர்ச்சியில் இருந்து என் மகன் இன்னும் மீளவில்லை, “என்று தந்தை கூறினார். லட்சுமி பிரியா குடும்பத்தினர் பணத்தை கொடுத்து பிரச்னையை தீர்த்துக்கொள்ள விரும்பியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சிவாவின் தந்தையிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கின்றனர்.

 

© வேதபிரகாஷ்

12-04-2023


[1] The mother of Lakshmi Priya, who was arrested about the incident, said, “Her daughter Lakshmi Priya and the student who was attacked are of the same age, they were friends and there was no romance between them. However, the student has alleged that he forced her to fall in love with her, abused her on her cell phone and harassed her by sending vulgar videos.

https://india.postsen.com/News/399178.html

[2] Talking to Manorama News, Lakshmipriya’s mother said her daughter was not in a relationship with the young man.  “Both of them were friends. However, he later started verbally harassing her and even sent lewd videos to her phone. She had told me about asking her friends to help her get rid of his trouble,” said Lakshmipriya’s mother.

Malayala Manorama, Youth manhandled, dumped naked on road; ex-girlfriend arrested, Onmanorama Staff Published: April 11, 2023 11:13 AM IST Updated: April 11, 2023 08:29 PM IST.

[3] https://www.onmanorama.com/news/kerala/2023/04/11/man-attacked-exgirlfriend-arrested-ernakulam.html

வலசை அகழாய்வு விடுதி பிரச்சினைக்கு சென்று, பாலியல் தொல்லையாகி, ஜாதியமாக்கப் படும் விவகாரமாகும் சென்னை பல்கலை மாணவர்கள் விவகாரம் (6)

மார்ச் 24, 2021

வலசை அகழாய்வு விடுதி பிரச்சினைக்கு சென்று, பாலியல் தொல்லையாகி, ஜாதியமாக்கப் படும் விவகாரமாகும் சென்னை பல்கலை மாணவர்கள் விவகாரம் (6)

விகடன் இப்பிரச்சினை பற்றி இவ்வாறாக செய்தி வெளியிட்டுள்ளது[1]: விகடன் இப்பொழுது செய்தியாக வெளியிட்டுள்ளது, “மதிப்பெண் வழங்கலில் பாரபட்சம், மாணவியிடம் தவறாக நடந்துகொண்டது ஆகிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்துப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இணைந்து உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். தேர்வு முடிவுகளில் குளறுபடி, முறையிட்ட மாணவி மீது தாக்குதல் எனத் துறைத் தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவந்தனர். இந்தப் போராட்டத்தின் உச்சமாக 21-03-2021 அன்று பாதிக்கப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். 22-03-2021 அன்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போலீஸாரால் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என சென்னைப் பல்கலைக்கழகத்தை சர்ச்சைகள் சூழ்ந்துள்ளன”. சரி, மாணவி எப்படி தற்கொலைக்கு முயன்று, ஆஸ்பத்திரில் அட்மிட் ஆகி, ஒரே நாளில், வெளியே வந்து போராட்டத்திற்கு தயாரானார் என்று விசாரிக்கவில்லையே? அகழாய்வு செய்யும் இவர்களுக்கு, எப்படி இத்தகைய யுக்திகள் வந்தன என்று தெரியவில்லை!

தொல்லியதுறையில் படிக்கும் 80 மாணவர்களில் 5 பேர் ஆர்பாட்டங்களில் ஈடுபடுவது: விகடன் தொடர்கிறது[2], “தமிழகத்தில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே தொல்லியல் படிப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. பட்ட மேற்படிப்பான இதில் நுழைவுத் தேர்வுகள் மூலமாகவே மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இத்துறையின் தலைவராகப் பேராசிரியர் செளந்தரராஜன் பணியாற்றிவருகிறார். தொல்லியல் துறையில், மொத்தம் 80 மாணவர்கள் படித்துவருகின்றனர். அவர்களில் 25 மாணவர்கள் இறுதியாண்டு பயில்கின்றனர்”. ஆக 80 பேரில் இந்த 8 அல்லது 5 பேருக்குத் தான் இத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன போலும்!

குறிப்பிட்ட சில மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வில் தோல்வியடைந்தது: விகடனின் நிருபர் சு. அருண் பிரசாத், தொடர்வது, “கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகியிருக்கிறது. இதில் குறிப்பிட்ட சில மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வில் தோல்வியடைந்திருக்கின்றனர். அதிர்ச்சியடைந்த அந்த மாணவர்கள் மறுகூட்டலுக்காக விண்ணப்பித்திருக்கின்றனர். மறுகூட்டலுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு மட்டுமல்லாது, வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மறுகூட்டல் செய்வதாக பல்கலைக்கழக நிர்வாகம் தனியாக குழு ஒன்றை அமைத்திருக்கிறது”. ஆக இது என்ன பிரச்சினையோ?

வாக்குவாதம் தாக்குதலில் முடிந்ததாம்: விகடனின் நிருபர் சு. அருண் பிரசாத், தொடர்ந்து வர்ணிப்பது, “முதலில் விண்ணப்பித்த மாணவர்கள், மறுகூட்டலுக்குப் பிறகு மிகப்பெரிய மதிப்பெண் வேறுபாட்டில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். ஆனால், மற்ற மாணவர்களின் மறுகூட்டல் முடிவுகள், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குப் பிறகும் வெளியிடப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மாணவர்கள் சிலர் துறைத் தலைவர் செளந்தரராஜனிடம் சென்று முறையிட்டிருக்கின்றனர். அப்போது வாக்குவாதம் முற்றி தாக்குதல் வரைச் சென்றிருக்கிறது”. நிருபருக்கு விசயம் தெரியாதா என்ன, அதுதான் ஆங்கில ஊடகங்களிலேயே இந்து, எக்ஸ்பிரஸ், டெக்கான் ஹெரால்ட் என்று வந்தி விட்டதே? தூண்டப் பட்டது யார், தூண்டியவர்கள் யார், பாதிக்கப் படுவது யார் என்றெல்லாம் கவனிக்க வேண்டும்.

விடுதி கட்டணம் எதிர்ப்பு போராட்டம்ஆரம்பம்: விகடனின் நிருபர் சு. அருண் பிரசாத், சொல்வது, “இந்த நிகழ்வின் பின்னணி குறித்து முழுமையாக அறியப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவரிடம் பேசினேன். “இது ஒரு தனித்த போராட்டம் அல்ல; கடந்த ஜனவரி மாதம் விடுதிக் கட்டணத்துக்கு எதிராக நாங்கள் நடத்தி, வெற்றி பெற்ற போராட்டத்தின் தொடர்ச்சிதான் இது. கொரோனா ஊரடங்கில் மாணவர்கள் அனைவரும், விடுதியைக் காலி செய்துவிட்டு ஊருக்குச் சென்றுவிட்ட நிலையில், ஒவ்வொரு மாதத்துக்கும் 4,500 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டது. இதை ரத்து செய்யக் கோரி அப்போது போராட்டம் நடத்தினோம். அனைத்துத் துறைகளிலிருந்து மாணவர்கள் பரவலாகக் கலந்துகொண்ட அந்தப் போராட்டத்துக்குச் செல்லக்கூடாது என்று ஒவ்வொரு துறைத் தலைவர்களிடம் இருந்தும் நெருக்கடி வந்தது. இதனால் சிலர் பாதியிலேயே விலகிக் கொண்டனர். இருந்தபோதிலும், தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவால், நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை ரத்து செய்தது”.

சில மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தது: விகடனின் நிருபர் சு. அருண் பிரசாத், தொடர்ந்து விளக்கியது, “இந்தப் பின்னணியில் தான் செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகவிருந்தது. பல்கலைக்கழக இணையதளம், மின்னஞ்சல், அறிவிப்புப் பலகை என மூன்று வழிகளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போதைய முடிவுகள் இந்த வழிகளில் வெளியாகவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்து துறையில் தொடர்பு கொண்டு பேசினோம். தொலைபேசி வாயிலாக, வார்த்தை மூலமாகவே தேர்வு முடிவுகளைச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டனர். நன்றாகப் படிக்கும் நாங்கள் ஃபெயிலாக்கப் பட்டிருக்கிறோம் என்பதை அறிந்தோம். இதுவரை ஒருமுறைகூட ஃபெயிலாகி இருக்காத நாங்கள் இதனால் அதிர்ச்சியடைந்தோம்,” என்றார் அம்மாணவர்.”

மறுகூட்டலில் 8 மாணவர்கள் தேறியது: விகடனின் நிருபர் சு. அருண் பிரசாத், கூறுவது, “தேர்வு முடிவுகளில் குளறுபடி இருக்கிறது என்று பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட 8 மாணவர்கள் முறையிட்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து மறுகூட்டலுக்கான குழு ஒன்றை நிர்வாகம் அமைத்திருக்கிறது. இந்த 8 மாணவர்களுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த வகுப்புக்கும் மறுகூட்டல் நடத்தப்பட்டு, இரண்டு வாரங்களில் முடிவுகள் வெளியிடப்படும் என்று அந்தக் குழு கூறியிருக்கிறது. முதல்கட்டமாக 8 மாணவர்களுக்கு மறுகூட்டல் செய்து முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. மறுகூட்டலில் மிகப் பெரிய மதிப்பெண் வேறுபாட்டில் 8 பேரும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்”. இதைத் தொடர்ந்து இரண்டு வாரம் கடந்தும் ஒட்டுமொத்த மாணவர்களுக்குமான மறுகூட்டல் முடிவுகள் வெளிவராத நிலையில், இதுகுறித்து துறைத் தலைவர் செளந்தரராஜனைச் சந்தித்து மாணவர்கள் சிலர் முறையிட்டிருக்கின்றனர்.

எப்படி வாக்குவாதம் கலாட்டாவில் முடிந்ததுமாற்றிச் சொல்லும் போக்கு: விகடனின் நிருபர் சு. அருண் பிரசாத், கூறுவது, “துறைத் தலைவர் செளந்தரராஜன் மிக மோசமாக எங்களை எதிர்கொண்டார்; வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகளால் எங்களைத் திட்டினார்; அறையிலிருந்து உடனடியாக வெளியேறும்படி கத்தினார். ஒரு மாணவியிடம் நடந்துகொள்ளக் கூடாத வகையில், அந்த மாணவியின் மீது பலவந்தமாக மோதி வெளியில் தள்ள முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியும் நாங்களும், ‘நீங்கள் எல்லை மீறிக் கொண்டிருக்கிறீர்கள். இப்படியெல்லாம் எங்களிடம் நடந்துகொள்ளக் கூடாதுஎன்று கூறினோம். எதையும் சட்டை செய்யாத அவர் மீண்டும் மீண்டும் அப்படியே செய்தார்; இப்படி நடந்துகொண்டதற்காக துறைத் தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் அறைக்கு முன் அமர்ந்து போராடினோம். அறையிலிருந்து வெளியேறும்போது, எங்களில் ஒருவரை மிதித்துவிட்டு வெளியேறினார்,” என்று மாணவர்களில் ஒருவர் அங்கு நடந்தவற்றை விவரிக்கிறார்”. இது முந்தைய  வர்ணனைகளிலிருந்து மாறுபட்டிருப்பதை கவனிக்கலாம்.

© வேதபிரகாஷ்

24-03-2021


[1] விகடன், மாணவி மீது பாலியல் தாக்குதல்எல்லை மீறினாரா பேராசிரியர்? சிக்கலில் சென்னைப் பல்கலைக்கழகம்!, சு. அருண் பிரசாத், Published: 23-03-2021 at 8 AM; Updated: 23-03-2021  at 8 AM.

[2] https://www.vikatan.com/social-affairs/madras-university-students-protest-against-hod?fbclid=IwAR3uKvMdoXvb7rCywpKmAbpmBCAJ3ES39Qt2yJ-mf469KZBwtQNgZkuQXHI

சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை, வலசை அகழ்வாய்வு, மாணவ-மாணவியர்களின் ஆர்பாட்டம் – உள்ளிருப்பு போராட்டம் – விடுதி பிரச்சினை முதல் பாலியல் புகார் வரை – ஊடகங்களின் வர்ணனை! (3)

மார்ச் 19, 2021

சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை, வலசை அகழ்வாய்வு, மாணவமாணவியர்களின் ஆர்பாட்டம்உள்ளிருப்பு போராட்டம் – விடுதி பிரச்சினை முதல் பாலியல் புகார் வரைஊடகங்களின் வர்ணனை! (3)

அந்த 8 மாணவர்களின் பிரச்சினை என்ன?: ஏற்கனவே கடந்த மாதம் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் 8 மாணவர்களை பெயில் ஆக்கியமைக்காக போராடியபோதும் கமிட்டி அமைத்தது பல்கலைக்கழக நிர்வாகம். அந்த கமிட்டி தலைமையில் மூன்றாம் நபர் விடைத்தாள்களை திருத்தினார். 8 மாணவர்களும் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்தார்கள். எனில் மாணவர்கள் சொன்ன புகார் சரியானது என முடிவானது. ஆனால் துறைத்தலைவர் மீது எந்த நடவடிக்கையை எடுத்தது கமிட்டி? அல்லது நிர்வாகம்? எதுவுமே இல்லை. அதுவும் போக 8 மாணவர்கள் தேர்ச்சி அடைந்த பின் மொத்த வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களும் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதையும் அந்த கமிட்டி ஏற்றது. ஆனால் முடிவுகள் ஒரு மாதம் ஆகியும் வெளியாகவில்லை. அதனை வெளியிடகோரி சென்ற மாணவிக்கு தான் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. மாணவர்களுக்கு அடிவிழுந்துள்ளது. அப்படியானால் இந்த கமிட்டியின் தேவை தான் என்ன? கமிட்டியின் ஆலோசனையை நிர்வாகத்தின் வழிகாட்டலை துறைத்தலைவர் சௌந்தரராஜன் எந்தளவிற்கு மதித்திருக்கிறார்? அவர் மதிக்காமல் மீண்டும் மீண்டும் தவறு செய்துக்கொண்டு இருக்கிறார். நிர்வாகம் மீண்டும் மீண்டும் கமிட்டி அமைத்து காப்பாற்றிக்கொண்டே இருக்கிறது. இந்த கமிட்டியை புறக்கணித்ததால் கமிட்டியில் இருந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர்கள் அனைவரது வீட்டிற்கும் அழைப்பு சென்றிருக்கிறது. பெற்றோர்களிடம் சொல்லி போராட்ட மாணவர்களை கமிட்டிக்கு வருமாறு அழைக்கிறார்கள். போராட்ட மாணவி ஒருவரது தந்தை,’ எனது மகள் அறிவுப்பூர்வமாக யோசிக்கும் வயதையும் திறனையும் பெற்றிருக்கிறாள்’. இவ்வாறு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பதிலளித்திருக்கிறார்.

ஊடக அறம் என்றால் என்னவென்பது இப்போது தான் அனுபவபூர்வமாக புரிகிறதுஎன்று ஊடகங்களை விமர்சித்தது: இப்பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? துறைத்தலைவர் சௌந்தரராஜன் மீது கடுமையான நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் எடுக்கவில்லை எனில் சட்டரீதியான வழியிலும் நீதிக்கேட்டு போராட மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். ஊடகங்கள் நேற்றில் இருந்து படையெடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு ஊடகத்திற்கும் குறைந்தது பத்து நிமிடங்கள் நின்று நிதானமாக பதிலளிக்கிறார்கள் போராட்ட மாணவர்கள். அனைத்தையும் கேட்டு பதிவு செய்துக்கொண்டு செல்பவர்கள் செய்தியை போடுவதே இல்லை (ஒருசில ஊடகங்களை தவிர). இதனை கேட்டால் தேர்தல் நேரமாம். இதற்கு வராமலேயே இருந்திருந்தால் கூட எங்களுக்கு நேரமும் சக்தியும் மிஞ்சும். ஊடக அறம் என்றால் என்னவென்பது இப்போது தான் அனுபவபூர்வமாக புரிகிறது.

முகநநூல் முதல் வீடியோ வரை விளம்பரம் தேடுவது மாணவ-மாணவியர்களது யுக்தியா, இதனால், யாருக்கு என பலன்?: விக்கி கண்ணன் என்ற மாணவரும், முகநூலில் இதைப் பற்றி பதிவுகள் செய்து வருவது, கவனிக்கத் தக்கது[1]. “தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் அரசியல் துறை மாணவர்கள் எங்களது போராட்டத்திற்கு ஆதரவாக வந்து அமர்ந்தனர். பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைசார் மாணவர்களையும் எங்களது போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு பாதிக்கப்பட்ட மாணவி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்”. அப்பையென்றால், இப்பிரச்சினைக்கு ஊடக விளம்பரம், விவகார பரப்பு, பிரச்சாரம் போன்றவை ஏன் தேவைப் படுகிறது? இதனால், மாணவ-மாணவியர், தொல்துறை துறை, துறைத் தலைவர், மற்ற ஆசிரியர்கள், பல்கலை அதிகாரிகள், சம்பந்த பட்டவர்கள் முதலியோருக்கு, அத்தகைய பிரச்சாரம்-பரப்புகளினால் என்ன லாபம், ஆதாயம்? முன்பு தாங்கள் வலசையில் அகழ்வாய்வில் இதை கண்டுபிடித்தோம், அதை கண்டுபிடித்தோம் என்று அறிவித்தார்கள். பிறகு, செய்திகள், வீடியோக்கள் என்று உலா வர ஆரம்பித்தன. ஆனால், இப்பொழுதே, வேறு விதமாக மாறியுள்ளது.

தொல்லியல் துறை மாணவர்களின் அறிக்கையும், ஊடக செய்திகள் ஆனது: இதை “தொல்லியல் துறை மாணவர்களின் அறிக்கை” என்று இணைதள ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[2]. சில மிக கடுமையான வார்த்தைகள் (குற்றவாளியான சுந்தரராஜன் குற்றவாளி சுந்தரராஜன்) கூட உபயோகப் படுத்தியுள்ளன[3]. சில ஊடகங்கள், எதையும் விசாரிக்காமல், அந்த “அறிக்கை”யினையே செய்தி போல வெளியிட்டுள்ளது[4]. நியூஸ்.18 மட்டும், “இதுகுறித்து விளக்கம் அறிய பேராசிரியர் சௌந்தரராஜனை தொடர்பு கொண்டபோது, ஏற்கனவே மதிப்பெண் விவகாரத்தில் தனக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனையை மனதில் வைத்து, மாணவர்கள் தன் மீது அபாண்டமாக பழி சுமத்தி, தன் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி முடித்துக்கொண்டார்”,[5]என்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன் பின்னணியில், இடதுசாரி, தீவிரமான இடதுசாரி மற்ற குழுக்கள் (Periyar-Ambedkar Study Circle, Revolutionary Students Youth Front, RSFY) இருப்பது தெரிகிறது. படிக்கின்ற மாணவ-மாணவியர் இவ்வாறு தீவிரமாக போராட்டம் என்ற முறையில் ஈடுபடுவது திகைப்பாக இருக்கிறது. இவர்கள் உண்மையிலேயே தங்கும் விடுதி / ஹாஸ்டல் பிரச்சினை போன்றவற்றிற்கு ஆர்பாட்டம் செய்கின்றார்களா அல்லது, அப்பிரச்சினை தேர்வு, வினாத்தாள் என்று மாறி, இப்பொழுது, பாலியல் தொல்லை என்று முடிந்துள்ளதா என்று தெரியவில்லை.

படிப்பு, ஆராய்ச்சி, அகழாய்வு என்றெல்லாம் நடக்கிறதா இல்லை தகராறு நடக்கிறதா?: பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இத்துறை மாணவர்கள் வலசை, குடியாத்தத்தில் அகழாய்வு செய்து கொண்டிருந்ததாக செய்திகள் பரபரப்பாக வந்து கொண்டிருந்தன. ஜினு கோஷி மற்றும் இதர மாணவர்கள் பேட்டி கொடுப்பது, வீடியோக்களில் தங்களது கருத்தைக் கூறுவது என்று தொடர்ந்தன. துறைத்தலைவர் பேட்டி, கருத்து இது வரை வெளியிட்டதாகத் தெரியவில்லை. ஆனால், துறைத் தலைவர் மற்ற விரிவுரையாளர்கள், முதலாண்டு மாணவர்கள், முதலியோர் அங்கு வந்து சென்றுள்ளதாகத் தெரிகிறது. தவிர, அங்கிருந்த இரண்டாம் ஆண்டு மாணவ-மாணவியர்களின் உறவினர்கள், நண்பர்கள் என்றெல்லாம் வந்துள்ளனர். மார்க்ஸிய காந்தி போன்றோர் வந்து சென்றதாக, தெரிகிறது. அதாவது, படிப்பு, ஆராய்ச்சி, அகழாய்வு என்றெல்லாம் நடந்து கொண்டிருக்கின்ற அதே நேரத்தில், இப்பிரச்சின்னைகளும் நடக்கின்றன என்பது வியப்பாக இருக்குறது. மேலும் குறிப்பிட்ட மாணவ-மாணவியர்கள் லலசையிலும், சென்னை பல்கலை வளாகத்திலும் இருப்பது, அவர்கள் அங்கும் இங்கும் வந்து சென்றது தெரிகிறது.

© வேதபிரகாஷ்

19-03-2021


[1] https://www.facebook.com/Vicky.Kannan.29

[2] அந்திமழை, சென்னைப் பல்கலைக்கழகம்: பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!, Posted : வியாழக்கிழமை,   மார்ச்   18 , 2021  12:45:33 IST.

[3] http://andhimazhai.com/news/view/university-of-madrasi-students-protest-against-the-department-head-who-was-involved-in-sexual-harassment-18-03-2021.html

[4] Madras Review,சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் சௌந்தரராஜனை பதவி நீக்கக் கோரும் மாணவர்கள்,  Madras March 17, 2021.

[5] நியூஸ்.18, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மீது மாணவர்கள் குற்றச்சாட்டு…!, NEWS18; LAST UPDATED : MARCH 18, 2021, 18:03 IST.

https://tamil.news18.com/news/tamil-nadu/madras-university-students-protest-against-archaeology-department-hod-for-sexual-harassment-vin-430253.html

சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை, வலசை அகழ்வாய்வு, மாணவ-மாணவியர்களின் ஆர்பாட்டம் – உள்ளிருப்பு போராட்டம் – விடுதி பிரச்சினை முதல் பாலியல் புகார் வரை! (2)

மார்ச் 19, 2021

சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை, வலசை அகழ்வாய்வு, மாணவமாணவியர்களின் ஆர்பாட்டம்உள்ளிருப்பு போராட்டம் – விடுதி பிரச்சினை முதல் பாலியல் புகார் வரை! (2)

உள்ளிருப்பு போராட்டம்பிரவரிலிருந்து மார்ச் 2021 வரை: மாணவர்களை தாக்கியும், மாணவியிடம் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்ட சென்னைப் பல்கலைக்கழக பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் இணை பேராசிரியரும் பொறுப்பு துறைத்தலைவருமான திரு சௌந்தரராஜனை பணி நீக்கம் செய்யக்கோரி துறைசார் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்[1]. தற்சமயம் அகழாய்வுப் பணிகள் முடிவடைந்து கடந்த இரண்டு நாட்களாக எங்களது திருத்தப்பட்ட மதிப்பெண்களை அறிந்துகொள்ள எங்களது துறையை அணுகியபோது ஒரு நாள் முழுவதும் மதிப்பெண்களை சொல்லாமல் “அங்கே போய் பார், இங்கே போய் பார்” என்று அலைக்கழித்தனர்[2]. நேற்று மீண்டும் அனைவரும் சென்று காலை முதல் மாலைவரை மதிப்பெண்களை கேட்டு உணவருந்தக்கூட செல்லாமல் துறையிலேயே நின்றோம். அப்போது பல்கலைக்கழக சார்ஜென்ட் துறைத்தலைவரை பதிவாளரை பார்க்க அழைத்து சென்றார். அதன் பிறகு மதிப்பெண்களை வாய்வழியாக அதுவும் வெறும் GRADE ஆக கூறினார்கள். அதில் அனைவருமே தேர்ச்சி அடைந்திருந்தோம்.

மதிப்பெண், கிரேடிங் விவகாரம், வாக்குவாதத்தில் ஏன் முடிய வேண்டும்?: எங்களது மதிப்பெண்களை வழக்கமாக பல்கலைக்கழகத்தின் விதிப்படி INTERNAL, மற்றும் EXTERNAL என பிரித்து அறிவிப்பு பலகையில் போடுங்கள் என்று கூறியதற்கு –

  1. எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துறை தலைவர் சௌந்தரராஜன் எங்களை நோக்கி, “உன் இஷ்ட மயிருக்கெல்லாம் பண்ண முடியாது, எழவெடுத்தவனுங்களா, பொறுக்கி ரௌடிங்களா வெளிய போங்கடா,” என்று மேலும் பல தகாத வார்த்தைகளில் திட்டி மாணவர்கள் இருவரை அராஜகமாக இடித்து தள்ளி அடிக்க வந்தார்.
  2. உடனிருந்த சக மாணவி ஒருவரிடம் தகாத முறையில் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டார்.
  3. அம்மாணவியும் நாங்களும் எதிர்த்து கேட்கவே உடனே எங்களை வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
  4. தொல்லியல் துறை தலைவர் சௌந்தரராஜன் அவர்கள் மாணவர்களிடம் இழிவாகவும், அராஜகப் போக்குடனும் நடந்துகொண்டது பல்கலைக்கழக பதிவாளருக்கு தெரியும்.
  5. ஆனால், இது தொடர்பாக அவர் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.
  6. தற்போது மகளிர் வன்கொடுமை தடுப்பு பிரிவு, பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளருக்கு புகார் அளித்துள்ளோம்.
  7. இன்று காலை முதலே மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகிறோம். பொறுப்பு துறைத்தலைவர் திரு சௌந்தரராஜன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்.

இவ்வாறு மாணவர்கள் சொல்வது இருக்கிறது. ஆனால், மறுபக்கம் என்ன, உண்மையில், என்ன நடந்தது, துறைத் தலைவர் அறையில் அத்தகைய தகராறு நடந்ததா இல்லையா என்று தெரியவில்லை.

உண்மையில் என்ன நடந்தது?: இப்பொழுது, ஊடகங்கள் மற்றும் மாணவ-மாணவியர் தரப்பில் சொல்லப்பட்ட, சொல்லப் படுகின்றவை தவிர வேறெந்த விவரங்களும் தெரியவில்லை:

  1. அந்த – மாணவ-மாணவியர் துறைத் தலைவரை எங்கு, என்று, எத்தனை மணிக்கு சந்தித்தனர்?
  2. துறை வகுப்பு அறையிலா, துறைத் தலைவர் அறையிலா?
  3. வாக்குவாதம் ஏன் வரவேண்டும், துறைத் தலைவருக்கு ஏன் கோபம் வர வேண்டும்?
  4. “…………மேலும் பல தகாத வார்த்தைகளில் திட்டி மாணவர்கள் இருவரை அராஜகமாக இடித்து தள்ளி அடிக்க வந்தார்,” என்றால், அடித்தாரா இல்லையா?.
  5. உடனிருந்த சக மாணவி ஒருவரிடம் தகாத முறையில் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டார்,” என்றால், யார்-யார் இருந்தது?
  6. அம்மாணவியும் நாங்களும் எதிர்த்து கேட்கவே உடனே எங்களை வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு வெளியே சென்றுவிட்டார்,” என்றால், அவரை “கேரோ” (Gherao) மாதிரி செய்தனரா?
  7. எதற்காக அவர் வெளியே செல்ல வேண்டும்?
  8. அவரைத் தவிர அறையில் வேறு யாரும் இல்லையா?

இப்படி பல கேள்விகள் எழுகின்றன. எனவே, இரு பக்கமும் விசயங்களை அறிந்து, ஆராய வேண்டியுள்ளது. ஒருதலை பட்சமாக யார்மீதும், எதையும் சொல்ல முடியாது. படிக்க வந்த மாணவர்கள் நிச்சயமாக, படிப்பையும் மீறிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது அவர்களது பேச்சு, தோரணை, செயல்பாடு, உபயோகப் படுத்தப் படும் வார்த்தைகள் முதலியற்றின் மூலம் தெரிகின்றன.

விசாரணை கமிட்டியை மதிக்காதது, “கண் துடைப்பு என்றது: இன்று இரண்டாவது நாளாக எங்கள் போராட்டம் தொடர்கிறது. நேற்று இரவு 9.50 மணிக்கு பதிவாளர் எங்களிடம் வந்து, ‘கமிட்டி அமைக்கிறோம். நாளை காலை 11 மணிக்கு வாருங்கள்’ என்றார். ஆனால் ‘கமிட்டி’ என்பதே கண்துடைப்பு தான் என்பதை மாணவர்கள் அறிந்தே இருந்தனர். அதிலும் பதிவாளர் கொடுத்த கடிதத்தில் Enquiry Committee என்றே குறிப்பிட்டிருந்தனர். அதிலும் மாணவர்களுக்கு எதிராக துறைத்தலைவர் திரு சௌந்தரராஜனும் புகார் அளித்துள்ளதாக வாய்வழியாக கூறினார் பதிவாளர். திரு சௌந்தரராஜன் மீது மாணவியளித்த வன்கொடுமை புகாருக்கு கமிட்டி அமைத்திருந்தால் மட்டுமே வருவோம் என போராட்ட மாணவர்கள் உறுதியுடன் இருந்தனர்.  இத்தகைய ஒரு தரப்பு விவகாரங்கள் வியப்பாக இருக்கின்றன. மாணவர்களுக்கு, ஏற்கெனவே, பல்கலைக் கழக நிர்வாகம், அதிகாரிகள் முதலியோர் மீது நம்பிக்கை இல்லாதது போலத் தான்,அவர்களது கருத்து வெளிப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் என்ற நிலை தாண்டி, மற்றவர்களுக்கு இப்படித்தான் வேலை செய்ய வேண்டும் என்று வற்புருத்துதல், எங்கள் இஷ்டத்திற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது போன்ற காரியங்களும் திகைக்க வைக்கின்றன.

கமிட்டி அமைத்திருக்கிறோம் என்று அழைப்பது மாணவர்களை ஏமாற்றும் யுக்தி:  இன்று காலை பதிவாளர் வந்தவுடன் இது Joint Committee என்றார். ஆனால் அவர் இரவு அளித்த கடிதத்தில் enquiry committee என்றிருந்தது. பிறகு கமிட்டி மீட்டிங் வர சொல்லி சிண்டிகேட் நபர்களும் பதிவாளரின் உதவியாளரும் வந்து அழைத்தார்கள். முறையாக கடிதமும் கொடுக்கப்படவில்லை, கமிட்டியும் எதற்காக அமைத்திருக்கிறார்கள் என கூறவில்லை. பல்கலைக்கழக மகளிர் வன்கொடுமை பிரிவு தலைமை திருமதி ரீட்டா ஜான் அவர்கள் புகாரளித்து இரண்டு நாட்கள் ஆகியும் பாதிக்கப்பட்ட மாணவியை நேரில் அழைத்து விசாரிக்கவில்லை. இந்நிலையில் கமிட்டி அமைத்திருக்கிறோம் என்று அழைப்பது மாணவர்களை ஏமாற்றும் யுக்தி.  மாணவர்கள், அதாவது பாதிக்கப் பட்ட அந்த 8-மாணவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. சாதாரண படிப்பு சம்பந்தப் பட்ட பிரச்சினையை அசாதரமான பிரச்சினையாக்க முயல்கின்றனரா என்றும் தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

19-03-2021


[1] கலைஞர் செய்திகள், “மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட துறைத் தலைவர்” : சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!, Prem Kumar, Updated on : 18 March 2021, 01:48 PM.

[2] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/03/18/chennai-university-department-head-sexually-abuses-a-women-student