Archive for the ‘சிங்கப்பூர்’ Category

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது–அதன் ஆராய்ச்சி நிலைப் பற்றிய விவரங்கள் (7)

ஜூலை 11, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது அதன் ஆராய்ச்சி நிலைப் பற்றிய விவரங்கள் (7)

இரும்பு காலம் பற்றிய கருத்து: ஆய்வரங்கத்தின் முதல் அமர்வில், புதுச்சேரி பல்கலை பேராசிரியர் ராஜன் பேசியதாவது[1]: “இந்தியா முழுக்க பிராகிருத மொழி பயன்பாட்டிற்கு வந்தது. அதற்கு முன், தமிழகத்தில் தமிழி எழுத்துகள் புழக்கத்தில் இருந்தன. அதனால்தான், தமிழகத்தில் பிராகிருத கல்வெட்டுகள் இல்லை. தமிழர்களின் வரலாற்றை முழுமையாக சொல்ல முடியாது. காரணம், சங்க இலக்கியத்தில் அனைத்து கூறுகளும் சொல்லப்படவில்லை. அகழாய்வில் பயன்படா பொருட்களே அதிகளவில் கிடைக்கின்றன. கல்வெட்டு, காசுகளும், பொதுமக்களின் வாழ்வியலை முழுமையாக சொல்லவில்லை. என்றாலும், உலகின் முன்னேறிய சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததை, இந்த ஆய்வுகளால் அறிய முடிகிறது. தமிழகத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கடல்வழி வணிகம் சிறந்திருந்தது. இங்கு, எழுத்தறிவு மிக்க சமூகம் வாழ்ந்திருந்தது. நெல்லை நாற்றுவிட்டு நடும் பழக்கம், 2,700 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. இவற்றைவிட முக்கியமாக, உலகத்திற்கே இரும்பை அறிமுகம் செய்தவன் தமிழனாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரம், மேட்டூர் அருகே உள்ள தெலுங்கன்குடியில் கிடைத்த இரும்பு வாள் நிரூபித்துள்ளது. அதாவது, சிந்துவெளியில் செம்பை பயன்படுத்திய காலத்தில், தமிழர்கள் இரும்பை பயன்படுத்தி உள்ளனர். அதற்கான தரவுகளை சேகரிக்கும் வகையில், சிந்துவெளி மற்றும் தமிழ் நிலத்தில் கிடைத்துள்ள குறியீடுகளை ஆய்வு செய்து வருகிறோம்,” இவ்வாறு அவர் பேசினார்[2].

அரைத்த மாவை அரைக்கும் பாணியில் ஆய்வுக்கட்டுரைகள்: பட்டியலிடப்பட்ட தாள்கள் தாள்களின் தரத்தை வெளிப்படுத்தின. பெரும்பாலான தாள்கள் மறுவடிவமைக்கும் வகையைச் சேர்ந்தவை, அதே விஷயங்களை மீண்டும் மீண்டும் அரைத்த மாவை அரைக்கும் பாணியில் கூறுகின்றன.

  • தொல்காப்பியர் நோக்கில் வள்ளுவம்
  • திருக்குறள், திருவள்ளுவர் முதலியன… – தற்போதைய வாழ்க்கை முறைக்கான நடைமுறை வழிகாட்டி, இது போன்ற திருக்குறள் பற்றிய பல ஆவணங்கள்.
  • தனிநாயகம் பிள்ளை……
  • தமிழை விரைவாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்வது எப்படி
  • திரு.வி.கல்யாணசுந்தரனார், மயிலை சீனி வேங்கடசாமி (அவர் மீது பல ஆவணங்கள்) முதலியன,
  • சங்க இலக்கியம்……..பற்றி…
  • சிலப்பதிகாரம் பற்றி – பல தாள்கள்
  • சங்க இலக்கியம்
  • சித்த, சித்த மருத்துவம்

இதில் புதியதாக எந்த விசயத்தையும்சொல்ல காணோம்.

எப்படியாவது ஒரு ஆய்வுக்கட்டுரையை கொடுத்தே ஆகவேண்டும் என்ற வெறியில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் படுகின்றன: ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுப்பது, தலைப்பை ஆராய்ச்சி செய்தல், திட்டமிடல் மற்றும் எழுதுதல் என்பது இல்லை. வலைத்தளங்கள், கல்வி கட்டுரைகள், புத்தகங்கள், கலைக்களஞ்சியம், நேர்காணல்கள், இணையத்தில் தனிப்பட்ட கட்டுரைகள் (வலைப்பதிவுகள்) என்பதெல்லாம் இல்லாமல், “கட்-அன்ட்-பேஸ்ட்” முறையிலேயே செல்கின்றனர். கட்டுரையின் வடிவத்தில் தர்க்கரீதியான விமர்சன வாதங்களை முன்வைப்பதில்லை, தீர்மானமாக முடிவை வைத்துக் கொண்டு இந்த வேலை நடக்கிறது. பகுப்பாய்வு கட்டுரைகள், என்று சொல்லிக் கொண்டாலும், எந்த ஒரு முக்கியமான பிரச்சினையில் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொண்டு வரும் போக்கில் விசயங்களைச் சொவ்தில்லை. ஆராய்ச்சியின் பொருள் சர்ச்சைக்குரியதாக இருப்பதும் இல்லை, அந்த அளவுக்கு கஷ்டப்படுவதும் இல்லை, உழைப்புடன் முனைவதும் இல்லை. சொந்த கருத்துக்களைத் தெரிவித்து, ஆதாரங்களுடன் எழுதும் கட்டுரையாளர்கள் சிலரே. நேரடி மேற்கோள்கள், நீண்ட மேற்கோள்களைத் தவிர்க்காமல், அவற்றை அவ்வாறே எடுத்தாள்கின்றனர்.

எந்த ஆராய்ச்சிநெறிமுறையும் பின்பற்றப் படுவதில்லை: இப்பொழுதைய ஆராய்ச்சிநெறிமுறை, தரக்கட்டுப்பாடு, விதிகள், மென்பொருளால் சரிபார்க்கும்முறை முதலியவற்றை வைத்து சரிபார்த்தால், எத்தனை ஒழுங்கானவை என்று தீர்வாகும் என்பதும் நோக்கத் தக்கது. இருப்பினும், இவர்கள் தலைப்புகளை மாற்றி, சில வர்களை வெட்டி-ஒட்டி கட்டுரை என்று தயாரித்து, வாசிக்க வந்து விடுகின்றனர். கட்டுரைகளை தேர்வு செய்பவர்களும் எந்த தரத்தையும் சரிபார்ப்பதில்லை, தெரிந்தவர்களா, நண்பர்கள் பரிந்துரைத்தார்களா என்று பார்த்து தேர்வு செய்கிறார்கள். அவர்களே ஒப்புக் கொண்டபடி, பெயர்களை வைத்துக் கொண்டு கூட, சில கட்டுரைகளை ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.

09-07-2023 அன்று அவசரஅவசரமாக முடிந்த மாநாடு: குதிரை முன் வண்டிகல்வி அமர்வுகள் நிறைவடையும் முன் விழா நடைபெற்றது: ஆய்வுக்கட்டுரை அமர்வுகள் முடிவடைவதற்கு முன்பு நிறைவு விழா நடைபெற்றது. ஜூலை 9 ஆம் தேதி, ஆய்வுக் கட்டுரை வழங்குபவர்கள் தங்கள் நிலையைக் கேட்டறிந்து காத்துக் கொண்டிருந்தனர், காலை 9.00 மணி முதல் அறைகள் காலியாக இருந்ததாலும், யாரும் சரியாக பதிலளிக்காததாலும், ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கரவர்கள் சென்று வந்து கொண்டிருந்தனர். ஆய்வுக்கட்டுரை வாசிப்பு / கல்வி அமர்வுகள் குறித்து முற்றிலும் குழப்பம் ஏற்பட்டது. பின்னர், முதலில் பாராட்டு விழா நடைபெறும் என்றும், பின்னர் காலை 10.30 மணி 11 மணிக்கு தாள் வாசிப்பு நிகழ்ச்சி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சாளர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தனர், நேரம் கடந்துவிட்டதால் ஆய்வுக்கட்டுரை வழங்குபவர்கள் கவலையடைந்தனர். பின்னர், பிரிவுத் தலைவர்கள் அறைகளுக்குச் சென்று அமர்வுகளைத் தொடங்க ஆரம்பித்தனர். துரதிர்ஷ்டவசமாக, இந்த முரண்பாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் வாசிப்பவர்களுக்கு 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதித்தனர். மேலும், 10-15 நபர்கள் இல்லை, அவர்களில் பெரும்பாலோர் கட்டுரை வழங்குபவர்களாக இருந்தனர். வழக்கம் போல கட்டுரை வாசிப்பவர் ஆசிட்டுவிட்டு போய்விட்டார்கள்.. நிச்சயமாக, அமர்வுகளைத் தொடங்க அமைப்பாளர்கள் மற்றும் பிரிவுத் தலைவர்கள் தரப்பில் இரண்டு மணி நேரம் ஏற்கெனவே தாமதம் ஏற்பட்டது. எப்படியோ, பேப்பர் வாசிப்பு அமர்வுகள் முடிந்து, மதிய உணவுக்குப் பிறகு பிரதிநிதிகள் நகரத் தொடங்கினர். இதனால், மூன்று நாள் சர்வதேச தமிழ் மாநாடு மேலே விவரிக்கப்பட்டபடி இரண்டரை நாட்களில் முடிக்கப்பட்டது.

மலேசியாவின் போட்டியாளர் கூற்று: சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில், கடந்த 7, 8, 9ம் தேதிகளில், உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சார்பில், 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தது[3]. அடுத்த மாநாட்டை, 2025ல் சிங்கப்பூரில் நடத்த திட்டமிட்டுள்ளனர்[4]. 1968ல் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற 2வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை விட, 11வது மாநாடு செம்மஞ்சேரியில் உள்ள ஆசிய ஆய்வுக் கழகத்தில் ஒரு கல்வி நிகழ்வாக நடைபெற்றது, என்று பொன்னவைக்கொ தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், ஏதோ நடத்த வேண்டுமே என்று நடத்தியாகி விட்டது. இதே ஜூலையில் இரண்டாவது சந்திப்பு. பெரும் ஆரவாரத்துடனும், பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்புடனும் நடைபெறும் என்று சொல்லப் படுகிறது. இந்த மாநாட்டுக்கு மாநில அரசிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஐஏடிஆர் உறுப்பினர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த அரசர் அருளாளரையும் அதிபராகத் தேர்ந்தெடுத்தனர். இதற்கிடையில், 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் ஜூலை 21 முதல் 23 வரை நடைபெறும் என பேராசிரியர் டி.மாரிமுத்து தலைமையிலான மற்றொரு குழு அறிவித்துள்ளது. அவர் இணைய யுகத்தில் தமிழ் மொழி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இதில் கவனம் செலுத்தப்படும் என்கிறார்.

© வேதபிரகாஷ்

11-07-2023

.


[1] தினமலர், சிந்துவெளி காலத்திலேயே இரும்பு பயன்பாட்டில் இருந்தது, பதிவு செய்த நாள்: ஜூலை 08,2023 01:54.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3369634

[3] தினமலர், நிறைவு பெற்றது உலக தமிழாராய்ச்சி மாநாடு, Added : ஜூலை 11, 2023  04:37

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3372482

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் என்ன பிரச்சினை? தாம்சன் ஜேக்கப் ஜான் சாமுவேல் பற்றி எழுதிய புகார் கடிதம் மற்றும் சதி என்று பின்னவரின் அறிக்கை (5)

ஜூன் 13, 2023

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் என்ன பிரச்சினை? தாம்சன் ஜேக்கப் ஜான் சாமுவேல் பற்றி எழுதிய புகார் கடிதம் மற்றும் சதி என்று பின்னவரின் அறிக்கை (5)

தாம்சன் ஜேக்கப் என்பவர், இந்த மாநாட்டை சீர்குலைக்கும் வகையில், அவதுாறு கருத்துகளை பரப்புகிறார்: உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சீர்குலைக்க சதி நடப்பதாக, மாநாட்டின் பொறுப்பாளர் ஜான் சாமுவேல் கூறி உள்ளார்[1]. இதுகுறித்து, அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை[2]: “சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில், அடுத்த மாதம், 7ம் தேதி முதல், 9ம் தேதி வரை 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடக்க உள்ளது. இதில், 25 நாடுகளைச் சேர்ந்த, 25க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டை பொறுப்பேற்று நடத்தும் நான், அரை நுாற்றாண்டாக தமிழ் பணி புரிகிறேன். ஆசியவியல் நிறுவனம், 42 ஆண்டுகளாக தமிழாய்வு பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில், தாம்சன் ஜேக்கப் என்பவர், இந்த மாநாட்டை சீர்குலைக்கும் வகையில், அவதுாறு கருத்துகளை பரப்புகிறார்[3]. இதை முறியடிக்க வேண்டும்,” இவ்வாறு, ஜான் சாமுவேல் கூறியுள்ளார்[4].

ஜான் சாமுவேல் யார், தாம்சன் ஜேக்கப் யார்?: ஜான் சாமுவேல், ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி, உலகத் தமிழாராய்ச்சி மாநாடு எல்லாம் எப்பொழுதுமே சர்ச்சைகளில் ஊறிவைகளாகத் தான் இருக்கின்றன. இப்பொழுது மாநாட்டை எங்கே நடத்துவது பிரச்சினை, போட்டி, முதலியவை சார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் என்றெல்லாம் சென்ற பிறகு, செம்மஞ்சேரிக்கு வந்து சேர்ந்துள்ளது. என்ற ஆசியவியல் நிறுவனத்தின் மீது எழுந்துள்ள சர்ச்சைகளால், 11வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு சிக்கல் எழுந்துள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மைய நிர்வாகக்குழு, 11ம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடத்த உள்ளதாக, கடந்த ஜூன் 3ம் தேதி, சென்னை பல்கலையில் அறிவித்தது. இப்பொழுது தாம்சன் ஜேக்கப் என்று ஒருவர் கிளம்பியுள்ளார். இவர், யார் என்று தெரியவில்லை, ஆனால், ஜான் சமுவேலுக்கு நன்றாகத் தெரியும் போலிருக்கிறது. அவருக்கும் இவரை நன்றாகவேத் தெரிந்திருக்கிறது. பழைய விவரங்களை அப்படியே கூறுகின்றார்.

தாம்சன் ஜேக்கப் ஜான் சாமுவேல் பற்றி எழுதிய புகார் கடிதம்: இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த, தாம்சன் ஜேக்கப் என்பவர், சென்னை பல்கலை துணைவேந்தருக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்[5]. அதில் கூறப்பட்டுள்ளதாவது[6]: “ஆசியவியல் நிறுவனத்தில், 11வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடக்க உள்ளதாக, சென்னை பல்கலையில் நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம், சரியான ஆண்டறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்காததால், சென்னை பதிவுத் துறை தலைவர் மற்றும் சங்கங்களின் பொறுப்பாளர் அதன் பதிவை ரத்து செய்துள்ளார். அது, தற்போது செயல்பாட்டில் இல்லை. மேலும், மாநாட்டு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜான் சாமுவேல் என்பவர், மத்திய அரசின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டு, செங்கல்பட்டு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் சிறைத்தண்டனை பெற்றவர். அதாவது, மாநாட்டை நடத்தும் நபர் மீதும் மற்றும் இடத்தின் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவாகிவுள்ள நிலையில், எந்த அடிப்படையில், இந்த மாநாட்டுக்கான கூட்டத்துக்கு அனுமதி அளித்தீர்கள். இதுகுறித்து, உயர்கல்வித் துறை செயலரோ, அமைச்சரோ ஒப்புதல் அளித்துள்ளனரா? அப்படி இருந்தால், அதன் விபரங்களை சமர்ப்பிக்கவும்,” இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. கடிதத்தின் நகல்களை கவர்னர், உயர்கல்வி துறை அமைச்சர், செயலர் ஆகியோருக்கும் அனுப்பி உள்ளார்.

தமிழ், தமிழ் மாநாட்டின் பெயரால் ஏன் இந்த புகார், முதலியன?: ஊழலுக்கு மேல் ஊழல், புகாருக்கு மேல் புகார், பரஸ்பர புகார்கள், குற்றச்சாட்டுகள், அறிக்கைகள் இவையெல்லாம் இத்தகைய பெரிய பண்டிதர்களிடம், மேதைகளிடம், புலவர்களிம் ஏன் இருக்கின்றன. சாதாரண மாணவர்கள் இவர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள். ஒரு பக்கம் தமிழ்-தமிழ், தமிழ் தான் உயிர் போன்ற பேச்சுகள், கூச்சல்கள், கோஷங்கள்…, இன்னொரு பக்கம் அதே தமிழின் பெயரால் வசவுகள், திட்டுகள், தூற்றுதல் முதலியனவும் வாடிக்கையாக இருக்கின்றன. ஏற்கனவே, அண்ணா பல்கலையில், அங்கீகாரம் இல்லாத நிறுவனத்தால் வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் குறித்தும், அதில் முன்னாள் நீதிபதி பங்கேற்றது குறித்தும், துணைவேந்தர் மீது குற்றச்சாட்டும், சர்ச்சையும் எழுந்த நிலையில், தற்போது, சென்னை பல்கலையிலும், அதுபோன்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டம்…………………………….

நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை[7]: 1974ஆம் ஆண்டு ஜனவரி 3 முதல் 10 வரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, அங்கு பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டுள்ளது. இறுதி தினமான ஜனவரி 10, 1974 இல் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒன்பது அல்லது பதினொரு பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்திய குழப்ப நிலையினால் மரணம் அடைந்தனர். காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட இக்குழப்பத்தினால் நிகழ்ந்த வாகன விபத்துகள், இந்தக் குழப்பங்களினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட இதய வலி என்பன இந்த மரணங்களுக்குக் காரணமாயின.

© வேதபிரகாஷ்

13-06-2023


[1]. தினமலர்,உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சீர்குலைக்க சதி?..,பதிவு செய்த நாள்: Added : ஜூன் 13, 2023  00:33; https://www.dinamalar.com/news_detail.asp?id=3346006

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3346006

[3] தினமலர்,உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சீர்குலைக்க சதி?..,பதிவு செய்த நாள்: ஜூன் 13,2023 05:10

[4] https://m.dinamalar.com/detail.php?id=3346432

[5] தினமலர்,ஆசியவியல் நிறுவன சர்ச்சையால் உலகத்தமிழ் மாநாட்டுக்கு சிக்கல், மாற்றம் செய்த நாள்: ஜூன் 11,2023 00:36;

[6] https://m.dinamalar.com/detail.php?id=3344344

[7] நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை, https://ta.wikipedia.org/wiki/1974_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (1)

ஏப்ரல் 5, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுசார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (1)

உலகத் தமிழ் மாநாடு, உலகத் தமிழர் மாநாடு, முதலியன:தமிழ்-தமிழ் என்று பேசிக் கொண்டும், தமிழைக் காப்பேன் என்று அரற்றிக் கொண்டும், தமிழ் எங்கள் உயிர், தமிழின் உயிர், உயிரின் மூச்சு, மூச்சின் உச்சம் என்றெல்லாமும் கத்திக் கொண்டும் காசிருந்தால் மேடைப் போட்டு, புத்தகம் போட்டு, விழா நடத்தி, காலம் தள்ளிக் கொண்டே இருக்கலாம். திக-திமுக மற்ற திராவிட வகையெறாக்களில் இதைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளலாம், பாடமும் படிக்கலாம். ஏதாவது விமர்சனம் செய்தால், “தமிழின் எதிரி, தமிழர்களின் துரோகி, தமிழனத்தின் கோடாரிக் காம்பு,” போன்ற வசைகளும் எழும். இப்படியாக உலகத் தமிழ் மாநாடு நடத்துகிறேன் என்று பல சங்கங்கள், அமைப்புகள், இயக்கங்கள், கூட்டங்கள், குழுக்கள் கிளம்பியுள்ளனர்.

  • உலகத் தமிழ் மாநாடு,
  • உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,
  • அனைத்துலகத் தமிழ் மாநாடு,
  • உலகத் தமிழர் மாநாடு,
  • உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாடு,
  • இன்னும் பல இருக்கின்றன……

பிறகு திருக்குறளை வைத்து ஏகப்பட்ட கூட்டங்கள் கிளம்பி விட்டன. இவற்றில் 90% ஊரைச் சுற்றிப் பார்க்கும் கூட்டம் தான். மூன்று முதல் ஐந்து-ஆறு நாட்கள் இருக்க இடம், மூன்று வேளை சாப்பாடு கட்டாயம் கிடைக்கும் என்ற போர்வையில் தான் சுற்றுலா திட்டம் போடப் பட்டு, ஆட்கள் கூட்டம் சேருகிறது. இதில் பல நிலைகளில் பலர் வியாபாரமும் செய்து, பணம் சம்பாதிக்கின்றனர். விசா, விமான டிக்கெட் வாங்குவது, உள்ளூர் சுற்றிப் பார்ப்பது என்று பலவழிகளில் வியாபாரம் நடந்து வருகிறது. ஏனெனில் ஏஜென்டுகளுக்கு, ஏஜென்டாக செயல்படுகிறவர்களுக்கு எல்ல நிலைகளிலும் கமிஷன் கிடைக்கிறது. இப்படி மாநாடுகள் நடத்துகிறவர்கள் அல்லது சம்பந்தப் படுபவர்கள் சுற்றுலா ஏஜென்டாகவே மாறி வியாபாரத்தை ஆரம்பித்து விடுகிறார்.

மாநாடுகள் சுற்றுலாவுக்கு உபயோகப் படுத்தப் பட்டு, வியாபாரமாகின்றது: ஹோட்டலில் தங்கி, குளித்து சாப்பிட்டு ஊர் சுற்றக் கிளம்பி விடுவர். மதியம் உணவுக்கு வந்து விடுவர். தூரமாக இருப்பின், இரவு உணவுக்குக் கட்டாயம் வந்து விடுவர். அந்த ஏஜென்டே எல்லாம் செய்து விடுவார். ஆக, தமிழுக்காக, மாநாட்டில் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்பவர் 10 பேர் கூட் இருக்க மாட்டார்கள். இதில் என்ன வேடிக்கை அல்லது வருத்தப் படவேண்டிய விசயம் என்றால், அத்தகைய, முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்தால், அவற்றை ஒதுக்கி விடுவர். பிறகு, அவற்றை காப்பி அடிக்காமல் இருந்தால் சரி. ப்பொழுதெல்லாம், இதற்கும் “எதிக்ஸ்” என்றெல்லாம் பேசப் படுகிறது. ஆனால், அதிலும் அவர்கள் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் ஆயிரகணக்கில் மின்னஞ்சல்களில் பெறப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சேகரிப்பவர்கள் என்ன செய்கிறார்கள், செய்வார்கள் என்று தெரியவில்லை. ஒழுங்காக, ஒழுக்கமாக, ஆராய்ச்சி தர்மத்தைப் பின்பற்றுவார்களா, இல்லை, ஜாலியாக-தாராளமாக “கட்-அன்ட்-பேஸ்ட்” அல்லது “காபி-அன்ட்-பேஸ்ட்” செய்து பிழைப்பார்களா, வியாபாரம் செய்வர்களா என்பதெல்லாம் ஆராய வேண்டியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில், அவர்கள் தமிழ்-தமிழாராய்ச்சி முதலியவற்றில் என்ன-எதனை சாதித்தார்கள் என்று தெரியவில்லை. மென்பொருளின் சாதனை நடந்துள்ளது, இல்லையென்றா இப்படி தமிழில் தட்டச்சு செய்ய முடியாது. இப்பொழுது, அதற்கும் கூகுள் டிரான்ஸ்டேட் வந்து விட்டது. முரட்டுத் தனமான மொழிபெயர்ப்பு நடந்து கொண்டிருக்கிறது.

1966 முதல் 2023 வரை: உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், மொழி வளர்ச்சிக்காகவும் நடைபெறும் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை மாதம் 2023 நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் கவனிப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். உலகத் தமிழறிஞர்களை ஒன்று சேர்த்து அவர்களது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்தவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் திட்டமிட்டது. இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய 1966-ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 10 உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இருப்பினும், இவை அரசியல் சார்ந்து நடந்ததாகவே அறியப் படுகின்றது. மேலும், “மொழிப்பற்று” போர்வையில், உணர்ச்சிப் பூர்வமான உபன்யாசங்கள், பாஷணங்கள் மற்றும் கதாகாலக்ஷேபங்கள் புரிந்ததும் தெரிகிறது. கல்வி, படிப்பு மற்றும் போதனை போன்றவற்றிற்குப் பதிலாக சித்தாந்த உச்சங்களின் எல்லைகளில் அவை பலியானதும் புரிகின்றது.

மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த 2,500 தமிழறிஞர்கள், இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் ரூபாய் 25 கோடி செலவு: இந்நிலையில், 11ஆவது உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெறுகிறது. உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தால் 1966 முதல் நடத்தப்பட்டு வரும் உலகத் தமிழ் மாநாடு இதுவரை தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, தஞ்சாவூரில் இலங்கை, மலேசியா, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் மொரிசியசிலும் நடைபெற்றுள்ளது. இந்த உலகத் தமிழ் மாநாட்டில் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், மொழி வளர்ச்சிக்காகவும் நடைபெறும் மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன், தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 3 நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,500 தமிழறிஞர்கள், இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர். சுமார் ரூபாய் 25 கோடி செலவில் நடைபெறவிருந்தது.  இப்பொழுது மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு மாறியுள்ளது. சரி இவ்வாறு கோடிகளில் செலவு செய்து தமிழுக்கு என்னவாகப் போகிறது? இதுவரை 10 மாநாடுகள் நடந்திருப்பதால் 200 கோடிகளும் செலவாகி இருக்கலாம். ஆனால், கடந்த காலங்களில் தமிழ் புலவர்கள், பண்டிதர்கள் கவிஞர் போன்றோர் செய்ததில் 1% ஆவது தமிழுக்கு சேவை செய்திருப்பார்களா? அல்லது அவ்வாறு செய்தேன் என்பதற்கு எதையாவது காண்பிர்ப்பார்களா?

சார்ஜாவிலிருந்து மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வரை: இந்த உலகத்தமிழ் மாநாட்டில் சார்ஜாவில் 2023 ஜூலையில் நடைபெறுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது[1]. இணைதள குழுக்களில் அதிகமாகவே பேச-பகிரப் பட்டன. இதற்கான மாநாட்டு விவரங்கள் அடங்கிய அழைப்பிதழ், அமைப்புகள், அமர்வுகள், அதற்கான அறிக்கைகள் எல்லாம் தயாராகியது[2]. ஆய்வுக்கட்டுரைகள் எல்லாம் மின்னஞ்சல்கள் மூலம் ஏற்கப்பட்டன. சென்னையில் ரு நிறுவனம், இதே போல பலருக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்து, ஆய்வுக்கட்டுரை ஏற்க பணம் கட்ட வேண்டும் என்று கூட ஆரம்பித்தார். ஆனால், சார்ஜாவில் நடத்த முடியாமல் போனது அல்லது இயலவில்லை அல்லது காரணம் அறிவிக்க முடியவில்லை என்பது அமைதியாகி விட்டது[3]. தயார் செய்யப் பட்ட, அச்சிடப் பட்ட / வெளியான எல்லா ஆவணங்களும் வீணாகின[4]. இந்நிலையில், சில நிர்வாக காரணங்களினால் சார்ஜாவுக்கு பதிலாக மலேசியாவில் ஜூலை 21 – 23 வரை மலேயா பல்கலை வளாகத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது[5]. இங்கும் “அதிகார பூர்வமான அறிவிப்பு” என்பதனைக் கவனிக்கலாம். ஏற்கனவே மூன்று உலகத் தமிழ் மாநாடுகள் மலேசியாவில் நடைபெற்றுள்ளது[6]அப்படியென்றால் ஆன்காவது முறை ஏற்பார்களா என்ற கேள்வி எழுகிறது.

© வேதபிரகாஷ்

05-04-2023


[1] தினகரன், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில் 2023-ம் ஆண்டு ஜூலையில் நடைபெறும், June 7, 2022, 5:25 pm.

[2] https://www.dinakaran.com/11%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/

[3] வீரகேசரி, சார்ஜாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, Published By: VISHNU, 23 JUN, 2022 | 02:41 PM; https://www.virakesari.lk/article/130046

[4] https://www.virakesari.lk/article/130046

[5] தமிழ்.நியூஸ்.7, மலேசியாவில் 11-வது உலகத்தமிழ் மாநாடு; ஜூலை மாதம் நடைபெறுவதாக தகவல், by Yuthi, February 22, 2023 04.78

[6] https://news7tamil.live/11th-world-tamil-conference-in-malaysia-it-is-reported-to-be-held-in-july.html