Posts Tagged ‘பாலியல் தொல்லை’

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் கைதுக்குப் பிறகு சமூகவியல் / மனோதத்துவ துறை பேராசிரியர் கைது – புகார், குற்றங்கள் ஒன்றுதான்!

ஏப்ரல் 21, 2023

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் கைதுக்குப் பிறகு சமூகவியல் / மனோதத்துவ துறை பேராசிரியர் கைது – புகார், குற்றங்கள் ஒன்றுதான்!

மார்ச் 2023லேயே புகார் கொடுக்கப் பட்டது: மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதுரை காமராஜ் பல்கலை சமூகவியல் துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டார்[1]. மதுரை, மாடக்குளத்தைச் சேர்ந்தவர் சி. கருப்பையா, 60 (Madurai Kamaraj University Psychology department head C Karuppaiah); வயது 52 என்றெல்லாம் சில ஊடகங்கள் குறிப்பிடுவது வேடிக்கஈயாக இருக்கிறது. காமராஜ் பல்கலை சமூகவியல் / மனோதத்துவ துறை பேராசிரியராக பணிபுரிந்து மார்ச்சில் ஓய்வு பெற்றார்[2]. மனோதத்துவ பேராசிரியர் என்றால், மாணவ-மாணவியருக்கு, இவரால் பல நன்மைகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், திராவிட மாடலில் இவ்வாறு திசைத் திரும்பி, வேலியே பயிரை மெய்ந்த உண்மையாகி விட்டது போலும். கல்வியாண்டு முடியும் 2023 ஜூன் மாதம் வரை, இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது[3]. புகார்கள் உள்ள நபருக்கு அவ்வாறு பதவி நீட்டிப்பு கொடுத்தது ஏன் என்று தெரியவில்லை. உளவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பல்கலையில் புகார் அளிக்கப்பட்டது[4].

முதலில் கொடுத்த புகார்கள் கண்டுகொள்ளப் படவில்லை: இவர் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சில மாணவியர் புகார் அளித்தனர்[5]. அதன்படி இன்ஸ்பெக்டர் முத்துமணி, விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார்[6]. காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கருப்பையா மீது மாணவிகள் சிலர் குற்றம்சாட்டி வந்தனர்[7]. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பல்கலைகழகத்தில் 04-04-2023 அன்று புகார் அளித்தும் பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவிகள் குற்றம்சாட்டினர்[8]. இதனிடையே மதுரை சரக டிஐஜி பொன்னியை சந்தித்து மாணவிகள் புகார் அளித்தனர்[9]. இவ்வாறு பிடிஐ பாணியில் தான், எல்லா ஊடகங்களும் இச்செய்தியை வெளியிட்டே ஆகவேண்டும் என்ற ரீதியில் வெளியிட்டாலும், எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. மிக சமீபத்தைய கலாக்ஷேத்திரா போல பொங்கவில்லை. இதுதான், பத்திரிகா தர்மத்தின் மிகப் பெரிய மர்மமாக இருக்கிறது எனலாம்.

04-04-2023 அன்றும் புகார் கொடுக்கப் பட்டது: இந்தியன் எக்ஸ்பிரஸ் இதைப் பற்றி தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுளளது. அதாவது, அவ்வாறு செய்திகள் வெளிவந்தாலும், இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாகிறது. இதில் அரசியல் இருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால், கலாக்ஷேத்திராவிற்கு குதித்தவர்கள், இதை கண்டு கொள்ளவில்லை போலும்! அந்த SFI உதலிய போராளிகளும், வீராதி-வீரர்களும் கண்டுகொள்லவில்லை, கொதித்தெழவில்லை, “நக்கீரனும்” மயக்கத்தில் ஆழ்ந்துவிட்டான் போலிருக்கிறது. அதை காமக்ஷேத்திரம் என்றெல்லாம் வர்ணித்தவர்கள், இங்கு அமைதியாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தமிழ் என்றாலோ, பெயர் என்றாலோ, யதுகை-மோனை என்றாலோ, தமிழ்-தமிழ் என்று அரற்றுபவர்களும் நிதர்சனத்தை அறிந்தும் அறியாதவர் போலிருக்கிறார். காமம் கூட ஆளுக்கு ஆள், இடத்திற்கு இடம், ஜாதிக்கு ஜாதி என்று மாறும் போலிருக்கிறது. இருப்பினும் பாதிக்கப் பட்ட மாணவியர், பெண்கள் புகார் கொடுக்கத் தான் செய்கின்றனர்.

10-04-2023 அன்று மறுபடியும் புகார்: கருப்பையா மீது ஒரு மாதமாக பல்கலை நிர்வாகத்திற்கு தொடர்ந்து, ‘ஆன்லைனில்’ புகார்கள் வந்தன. மார்ச் 2023லேயே புகார்கள் எழுந்தன. அதில், ‘மாணவியரிடம் மிக ஆபாசமாக பேசுகிறார்[10]. “ஏய்நீ ரொம்ப அழகா இருக்கஉன் ஜீன்ஸ் பேன்ட் சைஸ் என்ன, ஒல்லியாக இருக்கும் பெண்களை தான் பசங்க விரும்புவாங்க...’ என, தொடர்ந்து சர்ச்சையாக பேசி வந்துள்ளார்[11]. அத்தகைய ஆதாரங்கள் கூட போதவில்லையா என்று தெரியவில்லை. முதுகலை மாணவி ஒருவருக்கு இ-மெயில் மூலம் ‘செக்ஸ் டார்ச்சர்’ கொடுத்துள்ளார். அப்படியென்றால் சைபர் சட்டம், விதிகள் மூலமாகவே இவர் மீது உடனடி நடவடிக்கை எடுத்திருக்கலாம். மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கடந்த வாரம் 04-04-2023 அன்று புகார் அளித்தனா்[12]. ஆனால், பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை[13]. அதாவது கமிட்டி போட்டாகி விட்டது என்று சாக்கு சொல்லி தப்பித்துக் கொள்ளும். ஆனால், இதெல்லாம் தாமதப்படுத்தப் படும் யுக்திகள் என்று எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான்.

மாணவிகளை பேராசிரியா் கருப்பையா புகாரை திரும்பப் பெறுமாறு மிரட்டினாராம்: இதற்கிடையில் புகார் அளித்த மாணவிகளை பேராசிரியா் கருப்பையா புகாரை திரும்பப் பெறுமாறு மிரட்டினாராம்[14]. இதுவும் அதே பாணியில் நடந்தது எனலாம். ஊடகங்களும் இதை கண்டுகொள்ளவில்லை. இதிலுள்ள பிரச்சினை, மர்மம், அரசியல் அல்லது என்னது தடுக்கிறது, வித்தியாசமாக செயல்பட வைக்கிறது என்பது தெரியவில்லை. அதை வெளிப்படுத்த தயங்குவதும் புரியவில்லை. ஏனெனில், புகார் வாபஸ் என்றால், எல்லாமே மறைந்து விடுகிறது, அவரும் புனிதர் ஆகி விடுகிறார். ஆனால், பாதிப்பு மாணவியர்களிடம் தான் இருக்கும். பாலியல் புகார்களை விசாரிக்கும் ஐ.சி.சி., கமிட்டி விசாரணை நடத்தியது[15]. இதெல்லாம் விஷகா கமிட்டியின் படி நடப்புதான். பாதிக்கப்பட்ட மாணவி, தென் மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க்கிடம் புகார் அளித்தார். கருப்பையாவை சமயநல்லுார் மகளிர் போலீசார் 19-04-2023 அன்று கைது செய்தனர்.

31-03-2023 அன்று வரலாற்றுத்துறை பேராசிரியர் சண்முகராஜா கைதானது: இந்த பல்கலையில் வரலாற்றுத்துறை பேராசிரியர் சண்முகராஜா, மார்ச் 31ல் பாலியல் புகாரில் கைதான நிலையில், தற்போது இவர் கைதாகி உள்ளார்[16]. கருப்பையா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்[17]. மாணவியை சாதிப்பெயரை வைத்தும், உருவத்தை வைத்தும் கிண்டல் கேலி செய்ததால் நாகமலை புதுக்கோட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உதவி பேராசிரியர் சண்முகராஜா மாணவியைத் தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசியது உண்மை எனத் தெரியவந்தது[18]. அதனைத் தொடர்ந்து நாகமலை புதுக்கோட்டை போலீஸார், சண்முகராஜா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.முன்னதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளைத் தவறாகப் பேசியதாகக் கூறி, பேராசிரியர் சண்முகநாதன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்[19]. சில நாட்களுக்கு முன்பு மதுரை மத்தியச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். தற்போது மீண்டும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[20].

© வேதபிரகாஷ்

20-04-2023


[1] தினமலர், மாணவியருக்கு பாலியல் தொல்லை; காமராஜ் பல்கலை பேராசிரியர் கைது, பதிவு செய்த நாள்: ஏப் 19,2023 05:23

[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3297967

[3] தமிழ்.இந்து,  மாணவிகளிடம் தவறாக பேசியதாக மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் கைது, செய்திப்பிரிவு, Published : 19 Apr 2023 06:12 AM; Last Updated : 19 Apr 2023 06:12 AM.

[4] https://www.hindutamil.in/news/crime/977807-madurai-kamaraj-university-professor-arrested.html

[5] தினத்தந்தி, மதுரையில் மாணவிக்கு பாலியல் தொல்லை; பல்கலைக்கழக பேராசிரியர் அதிரடி கைது, ஏப்ரல் 19, 2:14 am.

[6] https://www.dailythanthi.com/News/State/student-sexually-harassed-in-madurai-university-professor-arrested-945905?infinitescroll=1

[7] தினகரன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மதுரை பல்கலை பேராசிரியர் கைது, April 19, 2023, 1:39 am

[8] குமுதம், மதுரை: கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைபோலீஸில் வசமாகச் சிக்கிய பேராசிரியர், kumudam | POLITICS| Updated: Apr 19, 2023

[9] https://www.kumudam.com/news/politics/55084

[10] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உன்னோட சைஸ் என்ன? டபுள் மீனிங் பேச்சு.. மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியர்.!, First Published Apr 19, 2023, 8:22 AM IST

[11] https://tamil.asianetnews.com/gallery/crime/sexual-harassment-of-female-students-madurai-kamaraj-university-professor-arrested-rtcdbs

[12] Nw Indian Express, Madurai Kamaraj University Psychology HoD held for sexual harassment, Published: 19th April 2023 06:36 AM  |   Last Updated: 19th April 2023 06:36 AM

[13] https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/apr/19/madurai-kamaraj-universitypsychology-hod-held-for-sexual-harassment-2567304.html

[14] தினமணி, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: காமராஜா் பல்கலை. பேராசிரியா் கைது, By DIN  |   Published On : 19th April 2023 12:00 AM  |   Last Updated : 19th April 2023 12:00 AM.

[15] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2023/apr/19/sexual-harassment-of-female-students-kamaraj-university-professor-arrested-3993154.html

[16] கூடல்.காம், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் கைது!, April 19, 2023

[17] https://koodal.com/news/2023/04/19/madurai-kamaraj-university-psychology-hod-arrested-for-sexual-harassment/

[18] கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மாணவிகளிடம் உதவி பேராசிரியர் சண்முகராஜா தரக்குறைவாகப் பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நேரில் வந்து சண்டுகராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

[19] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Crime: மாணவிகளுக்கு பாலியல் தொல்லைஅடுத்தடுத்து சிக்கிக் கொள்ளும் பேராசிரியர்கள்!, Suriyakumar Jayabalan, 19 April 2023, 8:29 IST.

[20] https://tamil.hindustantimes.com/tamilnadu/madurai-kamaraj-university-professor-has-been-arrested-for-harassing-college-girls-131681872719405.html

வலசை அகழாய்வு விடுதி பிரச்சினைக்கு சென்று, பாலியல் தொல்லையாகி, ஜாதியமாக்கப் படும் விவகாரமாகும் சென்னை பல்கலை மாணவர்கள் விவகாரம் –  அரசியலுடன் வெளிப்பட்ட விதம், பின்னணி மர்மங்கள் (8)

மார்ச் 24, 2021

வலசை அகழாய்வு விடுதி பிரச்சினைக்கு சென்று, பாலியல் தொல்லையாகி, ஜாதியமாக்கப் படும் விவகாரமாகும் சென்னை பல்கலை மாணவர்கள் விவகாரம் –  அரசியலுடன் வெளிப்பட்ட விதம், பின்னணி மர்மங்கள் (8)

தன்னை பற்றி பாலியல் புகார் கூறியதால் கையை அறுத்து மாணவி தற்கொலை முயற்சி: சென்னை பல்கலையில் பரபரப்பு – தினகரனில் வந்த செய்தி[1]: சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள், தங்களுக்கு குறைந்த மதிப்பெண் வழங்கப்பட்டதை கண்டித்து, பல்கலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், அதன்படி மதிப்பெண் வழக்காததால், மீண்டும் பல்கலை நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். அதில் 4 பேர் நேற்று பல்கலை நிர்வாகத்தால் சஸ்ெபண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், தொல்லியல் துறையை சேர்ந்த மாணவி ஒருவர் மீது, பாலியல் அத்துமீறல் என்ற வகையில் அந்த துறையின் தலைவர் பல்கலை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அவமானம் தாங்காமல் நேற்று முன்தினம் திடீரென கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணரவர்கள், அந்த மாணவியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று காலை அந்த மாணவி மீண்டும் பல்கலைக் கழகத்திற்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றார். தகவலறிந்த மாணவியின் பெற்றோர், சென்னை வந்து பல்கலைக் கழகத்தில் இருந்த மாணவியை பார்க்க முயன்றனர். ஆனால், அங்கு இருந்த போலீசார் பெற்றோரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும், அந்த போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்களை இழுத்து பல்கலை நுழைவாயிலுக்கு வெளியில் தள்ளினர். இதனால், பல்கலை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது[2].

ஜாதிய பிரச்சினையாக்க முயலும் போராட்ட மாணவர்கள்: ஊடகங்கள், நிர்வாகம் சார்பில் இதுகுறித்து கேட்க சென்றால் பலவிதமான காரணங்களை கூறி வந்தனர். அதில்,

1. பாதிக்கப்பட்ட மாணவி தேர்ச்சி அடையாததால் போலியான ஒரு பாலியல் புகாரை துறைத்தலைவர் மீது வைத்திருக்கிறார் என்பதும்,

2. சாதி இந்து மாணவர்கள் சேர்ந்து துறைத்தலைவரை சாதி ரீதியாக இழிவுபடுத்தினார்கள் என்பதும்,

3. ஆதிக்க சாதி பேராசிரியர்கள் இணைந்து மாணவர்களின் போராட்டத்தை தூண்டிவிட்டு ஒடுக்கப்பட்ட துறைத்தலைவர் மீது போலியாக ஒரு புகாரை அளித்துள்ளார்கள் என்பதும், தெரிவதாக, போராட்டம் செய்யும் மாணவர் குறிப்பிடுகிறார். மேலும், இதற்கு, அம்மாணவர் கொடுக்கும் விளக்கம்: “சாதியை வைத்து தப்பிக்க பார்க்கும் துறைத்தலைவர் சௌந்தரராஜன்!  – மாணவர்களின் இந்த ஐந்து நாள் போராட்டம் என்பது மாணவியிடம் அவர் தகாத முறையில் நடந்துக்கொண்டார் என்பது தான். ஆனால் துறைத்தலைவர் அதுகுறித்து எவ்வித கருத்தும் சொல்லாமல் சாதியை வைத்து தப்பிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இன்று வரையிலும் துறைத்தலைவர் மாணவர்கள் மீது அளித்துள்ள புகார் என்னவென்பதை நிர்வாகமோ அந்த நிர்வாகம் இதற்கு முன் அமைத்த கமிட்டியிலோ கூட விசாரிக்கப்படவில்லை. அதனை மாணவர்களுக்கு தெரியபடுத்தவும் இல்லை. ஆனால் தொடர்ச்சியாக ‘சாதி இந்துக்களான மாணவர்கள் சிலர் சாதி ரீதியாக இவரை விமர்சித்ததாக’ ஒரு தவறான தகவலை சமூக வலைதளங்களில் சுற்றலில் விட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு யார் இப்படி ஒரு தகவலை தெரிவித்தார்கள் என தெரியவில்லை. இதுவரை பதிவாளரோ மற்ற நிர்வாகிகளோ கடந்த ஐந்து நாட்களில் ஒருமுறை கூட எங்களிடம் இதுகுறித்து கேட்கவோ விசாரிக்கவோ இல்லை. அதோடு போராடும் மாணவர்களில் அனைத்து சமூக மாணவர்களுமே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இல்லை.  ஆனால் “The New Indian Express” இதழில் இவ்வாறு செய்தி வெளியாகியுள்ளது[3]. அதுவும் ஒரு பல்கலைக்கழக நிர்வாகி அதனை கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”. இங்கும் வெளியிட்டுள்ள செய்தியை சிறிது மாற்றி விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது[4].

விக்கி கண்ணன், “இந்துராம்,” மவுண்ட் ரோட்மஹாவிஷ்ணு பற்றி குறிப்பிடுவது: “பொதுவாகவே ‘தி இந்து’ N.ராம் கும்பல்கள் அதிகார வர்க்கத்துடன் இணைந்தே செய்தி வெளியிட்டு லாபம் அடைவார்கள் என்பது நாம் ஈழப்பிரச்சனையில் இருந்தே கண்கூடாக கண்டு வரும் உண்மை. இப்போது, “மாணவர்கள் மார்க் கேட்டு போராடியதால் தான் சஸ்பென்ட் செய்யப்பட்டார்கள்” என நிர்வாகத்திடம் கேட்டதை மட்டுமே செய்தியாக வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மாணவர்களை அலைபேசி மூலம் அழைத்து கேட்டதை மட்டும் பத்திரிக்கையில் பதிவு செய்யவே இல்லை. நாசுக்காக அதனை தவிர்த்திருக்கிறார்கள்,” இவ்வாறு குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. என்.ராம் ஒரு கம்யூனிஸ்ட், திமுக ஆதரவாளர் (அவர்கள் வீட்டுப் பெண் தயாநிதி மாறனின் மனைவி) மற்றும் கத்தோலிக்க சார்புடையவர் (இப்பொழுது அவருடைய மனைவி, மரியம் சாண்டி). ஆகவே, ஒட்டு மொத்த, கம்யூனிஸ்ட் வகையறாக்கள், முஸ்லிம்களுடன், பெரியாரிஸ-அம்பேத்கர் போர்வையில் வரும் போதும், “இந்து ராம்,” ஆதரிக்கவில்லை என்றால், இதில் விசயமே இல்லை என்றாகிறது. ஒருவேளை ஜாதிப் பிரச்சினையாக்கி, குழப்பத்தை உண்டாக்க முயற்சிக்கும் போக்கும் உள்ளது என்றாகிறது. இதற்கெல்லாம், பல்கலைக் கழகத்தில் உள்ளவர்கள் சளைத்தவர்கள் அல்ல. ஆகவே, இவர்கள் வேறொரு திட்டத்துடன் செயல் பட்டு வருகிறார்கள் என்றாகிறது. இங்கு குறிப்பிட்ட விடைட் தாள்கள் இன்னொரு துறைத் தலைவர் திருத்தி மதிப்பெண்கள் கொடுத்துள்ளதாகவும்[5], அதற்கு, தொல்லியல் துறைத் தலைவரை இலக்காக்கி இருப்பதாகவும், மாணவர்கள் சொல்வதில் உண்மை இல்லை என்றும் ஒரு அதிகாரி சொன்னார் என்று இந்து செய்தி வெளியிட்டுள்ளது[6].

8-5 மாணவர்கள் இவ்வாறு கலாட்டா செய்வதின் மர்மம், பின்னணி என்ன?: விடுதி பிரச்சினை, மதிப்பெண் பிரச்சினையாகி, வாக்குவாதம்-மோதலில் முடிந்து, தள்ளுமுள்ளு பாலியல் சதாய்ப்பு என்றாகி, இப்பொழுது “தலித்,” ஜாதியம், மேல் ஜாதி மற்ற ஜாதி எனெல்லாம் வந்து முடிந்துள்ளது.  ஆகவே, இவர்கள் பின்னணியில் யாரோ, எந்த அமைப்போ-இயக்கங்களோ இருக்கின்றன என்றாகிறது. ஒரு வேளை, இப்பொழுது இலக்கில் உள்ளவர், எஸ்.சி, பட்டியல் இனத்தவர் இல்லை என்றால், வேறு மாதிரி போயிருக்கும். ஒரு பார்ப்பனர் என்றால், கேட்கவே வேண்டாம், தேர்தல் பிரச்சாரத்திற்கு தீனி போட்டிருக்கும். இப்பொழுதே, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, நாங்கள் வந்தால் கிடைக்கும் என்றெல்லாம், பிரச்சாரத்தில் பேசி வருகிறாற்கள். பிறகு, இது உண்மை என்றால், சும்மாவா விருப்பார்கள். ஆனால், யாரும் இதனை சீண்டுவதாகஹ் தெரியவில்லை. ஒருவேளை தேர்தலை வைத்து கலாட்டா செய்து, ஊடகங்களை ஈர்த்து வருவது, குறிப்பிட்ட கட்சிக்கு உதவ செய்யும் திட்டமாக இருக்கிறது போலும். நெருப்பு வைத்தாலும், எண்ணை ஊற்றினாலும், பற்றியும் கொள்ளமல் இருப்பது தான் வேடிக்கை. படிப்பு தவிர, மற்ற எல்லாம் விவரிக்கப் படுவது, வருத்தமான விசயம் தான்!

© வேதபிரகாஷ்

24-03-2021


[1] தினகரன், தன்னை பற்றி பாலியல் புகார் கூறியதால் கையை அறுத்து மாணவி தற்கொலை முயற்சி: சென்னை பல்கலையில் பரபரப்பு, 2021-03-22@ 01:07:17

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=665012

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=665012

[3] New Indian Express, Students protest sex abuse, UoM suspends five for ‘dirtying’ lawns, Published: 21st March 2021 03:58 AM | Last Updated: 21st March 2021 03:58 AM By Sushmitha RamakrishnanExpress News Service.

[4] A top varsity official said that the students had “dirtied” the lawns, and had not taken permission for protesting. “Further, the teacher against whom they lodged a complaint is from a Scheduled Caste. He is often targeted by some students,” the official said, and added that the complainant had passed the external exam but failed the internals. “The university refused to pass her in internals as she had fallen behind on assignments. This became a bitter fight between the students and the teacher,” the official claimed.

https://www.newindianexpress.com/cities/chennai/2021/mar/21/students-protest-sex-abuse-uom-suspends-five-for-dirtying-lawns-2279471.html

[5] The Hindu, 5 students of Madras University suspended, SPECIAL CORRESPONDENTCHENNAI, MARCH 21, 2021 04:25 IST; UPDATED: MARCH 21, 2021 04:26 IST

[6]  A senior official said the activities of the students and their behaviour with the university officials had forced them to take the decision. “The students were assessed by another professor in the department but the HoD was being targeted. Besides, the students were behaving rudely with the professor, which the committee found unacceptable. There was no truth in the students’ allegation,” the official said.

https://www.thehindu.com/news/cities/chennai/5-students-of-madras-university-suspended/article34122203.ece

வலசை அகழாய்வு விடுதி பிரச்சினைக்கு சென்று, பாலியல் தொல்லையாகி, ஜாதியமாக்கப் படும் விவகாரமாகும் சென்னை பல்கலை மாணவர்கள் விவகாரம் –  அரசியலுடன் வெளிப்படும் போக்கு (7)

மார்ச் 24, 2021

வலசை அகழாய்வு விடுதி பிரச்சினைக்கு சென்று, பாலியல் தொல்லையாகி, ஜாதியமாக்கப் படும் விவகாரமாகும் சென்னை பல்கலை மாணவர்கள் விவகாரம் –  அரசியலுடன் வெளிப்படும் போக்கு (7)

20-03-2021 (சனிக்கிழமை): மார்ச் 20 அன்றுபோராட்டத்தில் ஈடுபட்ட 4 மாணவர்கள், 1 மாணவி என 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.  மூன்று மாணவர்கள் எப்படி தப்பித்துக் கொண்டார்கள்!

21-03-2021 (ஞாயிற்றுக்கிழமை): இந்தப் பின்னணியில்தான், ஞாயிற்றுக்கிழமை காலை (21-03-2021) அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவரை மீட்டு இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றியிருக்கின்றனர்.

22-03-2021 (திங்கட்கிழமை): மார்ச் 22 அன்று மாணவர்கள் 5 பேரும் போலீஸாரால் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அதாவது, ஒரே நாளில் அந்த மாணவி மருத்துவமனையிலிருந்து வெளியே வந்து, போராட்டத்திற்கு தயாராகி விட்டார். அதனால், போலீஸ் நடவடிக்கையும் தொடர்ந்துள்ளது.

துறைத் தலைவர் செளந்தரராஜனிடம் இது குறித்த விளக்கத்தைப் பெற தொடர்புகொண்டபோது, அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.

22-03-2021 அன்று பல அரசியல் அமைப்புகள் ஆர்பட்டம் என்று அறிவித்தது: விக்கி கண்ணன் பதிவு செய்தது, “சென்னைப் பல்கலைக்கழக பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் (APSC), அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் (ATSA), இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI), இஸ்லாமிய மாணவர்கள் கூட்டமைப்பு (SIO Tamilnadu) போன்ற பலதரப்பட்ட மாணவரமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA), தமிழ்நாடு பெண்கள் இயக்கம் (TWM), மனிதி போன்ற மகளிர் அமைப்புகளும் தங்களது ஆதரவை தெரிவித்திருக்கின்றன.

இந்நிலையில் இன்று (22.03.2021) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) மற்றும் இந்திய மாணவர் சங்கம் (SFI) போன்ற இடதுசாரி அமைப்புகள் காலை 10 மணியளவில் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில்கண்டனப் போராட்டம்அறிவித்திருக்கின்றன.

பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைசார் மாணவர்களும், மாணவரமைப்புகளும், மகளிர் அமைப்புகளும் பொதுமக்களும் கலந்துக்கொண்டு இப்போராட்டத்திற்கு ஆதரவளியுங்கள்.

மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்!!” வினவு தளத்தில், RSYFன் கடிதமும் போராட்டத்தைக் குறிப்பிடுகிறது.

CPIM மாவட்ட செயலாளர் போராட்டத்திற்கு 22-03-2021 அன்று அழைப்பு விடுத்தது:

விக்கி கண்ணன் என்ற போராட்டத்தில் கலந்து கொள்ளும் மாணவர், முகநூலில், அவ்வப்போது / உடனுக்குடன் முகநூலில், சில விவரங்களை பதிவு செய்து வருகிறார். அதில், “சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நீதி கேட்டு போராடி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற SFI & AIDWA தோழர்கள் மீது காவல்துறை கொடூரத் தாக்குதல்.. கைது..

12 தோழர்களுக்கு கடுமையான காயம்..

பெண் தோழர்களின் ஆடைகளை பொதுவெளியில் கலைந்து ஆபாச அருவருக்கத்தக்க பேச்சு..

திருவல்லிக்கேணி துணை ஆணையர் சரவணன் இன்ஸ்பெக்டர் சீதாராமன் தலைமையில் காவல்துறை நடத்திய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை கண்டித்து.. சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி இன்று (மார்ச் 22) மாலை 5.00 மணிக்கு வாலாஜா ரோடு திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆணையர் அலுவலகம் முன்பு *மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகை போராட்டம்.*

அநீதிக்கெதிராய்

ஆர்ப்பரித்து வாரீர்!

தோழமையுடன்

ஜி.செல்வா

CPIM மாவட்ட செயலாளர்,” என்றுள்ளது. இதெல்லாம் அரசியலாக்கப் பட்ட நிலையை காட்டுகிறது.

வாலாஜா ரோடில் கம்யூனிஸ இயக்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது, போலீஸார் அப்புறப் படுத்தியது[1]: நியூஸ் 18 தமிழ்நாடு வீடியோ எவ்வாறு குறிப்பிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆர்பாட்டம் செய்தார்கள், போலீஸார் வந்து அப்புறப் படுத்த முயற்சித்தார்கள், அப்பொழுது, பிடிவாதமாக படுத்துக் கொண்டு வராமல் இருக்க செய்தார்கள், வலுக்கட்டாயமாக, போலீஸார் அவர்களை தள்ளிக் கொண்டு, வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள், கல்யாண மண்டபத்தில் தங்க வைத்தார்கள், அங்கும் வீடியோ மூலம் பெட்டி கொடுத்தார்கள், சமூக வலைதளங்களில் பரப்பினார்கள் என்றெல்லாம் தெரிகிறது[2]. அந்த பெண்கள் பிடிவாதமாக படுத்தது, வீழ்ந்தது முதலிய செயல்கள், அசாதரணமாக இருந்தன. இதற்கெல்லாம் கூட பயிற்சி கொடுப்பார்கள் போலிருக்கிறது. மேற்கு வங்களாத்தில், பெண்கள் இவ்வாறெல்லாம் ஆர்பாட்டம் செய்வது வழக்கம், அவை வீடியொக்களில் வரும். மேலும் இவையெல்லாம், வாலாஜா ரோட் பக்கம் நடந்துள்ளது. போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்தார்கள் என்றாகிறது.

மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட், மாவோயிஸ்ட், இஸ்லாமிய, அம்பேத்கரியபெரியாரிஸ, கம்யுனிஸ்ட் மகளிர் அமைப்புகள் ஒன்றாக வருவது ஏன்?: இங்கு, சென்னைப் பல்கலைக்கழக பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் (APSC), அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் (ATSA), இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI), இஸ்லாமிய மாணவர்கள் கூட்டமைப்பு (SIO Tamilnadu) போன்ற பலதரப்பட்ட மாணவரமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA), தமிழ்நாடு பெண்கள் இயக்கம் (TWM), மனிதி போன்ற மகளிர் அமைப்புகளும் தங்களது ஆதரவை தெரிவித்திருக்கின்றன,” என்பதை கவனிக்க வேண்டும்.

  1. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் (APSC),
  2. அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் (ATSA),
  3. இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI),
  4. இஸ்லாமிய மாணவர்கள் கூட்டமைப்பு (SIO Tamilnadu)
  5. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA),
  6. தமிழ்நாடு பெண்கள் இயக்கம் (TWM), மனிதி போன்ற மகளிர் அமைப்புகள்

மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட், மாவோயிஸ்ட், இஸ்லாமிய, அம்பேத்கரிய-பெரியாரிஸ, கம்யுனிஸ்ட் மகளிர் அமைப்புகள் ஒன்றாக வருவதும் திகைப்பாக இருக்கிறது. பிடோபைல் குற்றங்கள் நிறையவே நடந்துள்ளன, நடந்து வருகின்றன. ஆனால், அதௌப் பற்றி ஊடகங்கள் மற்றும் இந்த அமைப்புகள் கண்டு கொள்வதில்லை. “போராடிய மாணவி மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றவாளி சௌந்திரராஜன், தலித் போர்வைக்குள் ஒளிந்துகொள்ள அனுமதிக்காமல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். நிரந்தர பணி நீக்கம் செய்!,” என்று மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு, தமிழ்நாடு, தனது 22-03-2021 தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை கவனிக்கலாம்[3]. ஒருவேளை அவர் எஸ்.சி / பட்டியல் இனத்தவர் இல்லாமல், வேறு ஜாதியாக இருந்தால் என்ன வாயிருக்கும்? ஆகவே, ஏதோ பிரச்சினையை இப்படி, மாற்றி-மாற்றி திசைத் திருப்ப இவை நடக்கின்றன என்று தோன்றுகிறது.

© வேதபிரகாஷ்

24-03-2021


[1] நியூஸ் 18 தமிழ்நாடு, சென்னைப் பல்கலை மாணவி தற்கொலை முயற்சிவிஸ்ரூபம் எடுக்கும் போராட்டம். Crime Time, Mar 22, 2021.

[2] https://www.youtube.com/watch?v=vl-dxnIZIM8

[3] வினவு, சென்னை பல்கலை: உரிமைக்காகப் போராடிய தொல்லியல் துறை மாணவர்களை கைது || புமாஇமு கண்டனம், By புமாஇமு -March 23, 2021

சென்னை பல்கலை : உரிமைக்காகப் போராடிய தொல்லியல் துறை மாணவர்களை கைது || புமாஇமு கண்டனம்

வலசை அகழாய்வு விடுதி பிரச்சினைக்கு சென்று, பாலியல் தொல்லையாகி, ஜாதியமாக்கப் படும் விவகாரமாகும் சென்னை பல்கலை மாணவர்கள் விவகாரம் (6)

மார்ச் 24, 2021

வலசை அகழாய்வு விடுதி பிரச்சினைக்கு சென்று, பாலியல் தொல்லையாகி, ஜாதியமாக்கப் படும் விவகாரமாகும் சென்னை பல்கலை மாணவர்கள் விவகாரம் (6)

விகடன் இப்பிரச்சினை பற்றி இவ்வாறாக செய்தி வெளியிட்டுள்ளது[1]: விகடன் இப்பொழுது செய்தியாக வெளியிட்டுள்ளது, “மதிப்பெண் வழங்கலில் பாரபட்சம், மாணவியிடம் தவறாக நடந்துகொண்டது ஆகிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்துப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இணைந்து உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். தேர்வு முடிவுகளில் குளறுபடி, முறையிட்ட மாணவி மீது தாக்குதல் எனத் துறைத் தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவந்தனர். இந்தப் போராட்டத்தின் உச்சமாக 21-03-2021 அன்று பாதிக்கப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். 22-03-2021 அன்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போலீஸாரால் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என சென்னைப் பல்கலைக்கழகத்தை சர்ச்சைகள் சூழ்ந்துள்ளன”. சரி, மாணவி எப்படி தற்கொலைக்கு முயன்று, ஆஸ்பத்திரில் அட்மிட் ஆகி, ஒரே நாளில், வெளியே வந்து போராட்டத்திற்கு தயாரானார் என்று விசாரிக்கவில்லையே? அகழாய்வு செய்யும் இவர்களுக்கு, எப்படி இத்தகைய யுக்திகள் வந்தன என்று தெரியவில்லை!

தொல்லியதுறையில் படிக்கும் 80 மாணவர்களில் 5 பேர் ஆர்பாட்டங்களில் ஈடுபடுவது: விகடன் தொடர்கிறது[2], “தமிழகத்தில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே தொல்லியல் படிப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. பட்ட மேற்படிப்பான இதில் நுழைவுத் தேர்வுகள் மூலமாகவே மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இத்துறையின் தலைவராகப் பேராசிரியர் செளந்தரராஜன் பணியாற்றிவருகிறார். தொல்லியல் துறையில், மொத்தம் 80 மாணவர்கள் படித்துவருகின்றனர். அவர்களில் 25 மாணவர்கள் இறுதியாண்டு பயில்கின்றனர்”. ஆக 80 பேரில் இந்த 8 அல்லது 5 பேருக்குத் தான் இத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன போலும்!

குறிப்பிட்ட சில மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வில் தோல்வியடைந்தது: விகடனின் நிருபர் சு. அருண் பிரசாத், தொடர்வது, “கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகியிருக்கிறது. இதில் குறிப்பிட்ட சில மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வில் தோல்வியடைந்திருக்கின்றனர். அதிர்ச்சியடைந்த அந்த மாணவர்கள் மறுகூட்டலுக்காக விண்ணப்பித்திருக்கின்றனர். மறுகூட்டலுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு மட்டுமல்லாது, வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மறுகூட்டல் செய்வதாக பல்கலைக்கழக நிர்வாகம் தனியாக குழு ஒன்றை அமைத்திருக்கிறது”. ஆக இது என்ன பிரச்சினையோ?

வாக்குவாதம் தாக்குதலில் முடிந்ததாம்: விகடனின் நிருபர் சு. அருண் பிரசாத், தொடர்ந்து வர்ணிப்பது, “முதலில் விண்ணப்பித்த மாணவர்கள், மறுகூட்டலுக்குப் பிறகு மிகப்பெரிய மதிப்பெண் வேறுபாட்டில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். ஆனால், மற்ற மாணவர்களின் மறுகூட்டல் முடிவுகள், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குப் பிறகும் வெளியிடப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மாணவர்கள் சிலர் துறைத் தலைவர் செளந்தரராஜனிடம் சென்று முறையிட்டிருக்கின்றனர். அப்போது வாக்குவாதம் முற்றி தாக்குதல் வரைச் சென்றிருக்கிறது”. நிருபருக்கு விசயம் தெரியாதா என்ன, அதுதான் ஆங்கில ஊடகங்களிலேயே இந்து, எக்ஸ்பிரஸ், டெக்கான் ஹெரால்ட் என்று வந்தி விட்டதே? தூண்டப் பட்டது யார், தூண்டியவர்கள் யார், பாதிக்கப் படுவது யார் என்றெல்லாம் கவனிக்க வேண்டும்.

விடுதி கட்டணம் எதிர்ப்பு போராட்டம்ஆரம்பம்: விகடனின் நிருபர் சு. அருண் பிரசாத், சொல்வது, “இந்த நிகழ்வின் பின்னணி குறித்து முழுமையாக அறியப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவரிடம் பேசினேன். “இது ஒரு தனித்த போராட்டம் அல்ல; கடந்த ஜனவரி மாதம் விடுதிக் கட்டணத்துக்கு எதிராக நாங்கள் நடத்தி, வெற்றி பெற்ற போராட்டத்தின் தொடர்ச்சிதான் இது. கொரோனா ஊரடங்கில் மாணவர்கள் அனைவரும், விடுதியைக் காலி செய்துவிட்டு ஊருக்குச் சென்றுவிட்ட நிலையில், ஒவ்வொரு மாதத்துக்கும் 4,500 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டது. இதை ரத்து செய்யக் கோரி அப்போது போராட்டம் நடத்தினோம். அனைத்துத் துறைகளிலிருந்து மாணவர்கள் பரவலாகக் கலந்துகொண்ட அந்தப் போராட்டத்துக்குச் செல்லக்கூடாது என்று ஒவ்வொரு துறைத் தலைவர்களிடம் இருந்தும் நெருக்கடி வந்தது. இதனால் சிலர் பாதியிலேயே விலகிக் கொண்டனர். இருந்தபோதிலும், தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவால், நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை ரத்து செய்தது”.

சில மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தது: விகடனின் நிருபர் சு. அருண் பிரசாத், தொடர்ந்து விளக்கியது, “இந்தப் பின்னணியில் தான் செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகவிருந்தது. பல்கலைக்கழக இணையதளம், மின்னஞ்சல், அறிவிப்புப் பலகை என மூன்று வழிகளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போதைய முடிவுகள் இந்த வழிகளில் வெளியாகவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்து துறையில் தொடர்பு கொண்டு பேசினோம். தொலைபேசி வாயிலாக, வார்த்தை மூலமாகவே தேர்வு முடிவுகளைச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டனர். நன்றாகப் படிக்கும் நாங்கள் ஃபெயிலாக்கப் பட்டிருக்கிறோம் என்பதை அறிந்தோம். இதுவரை ஒருமுறைகூட ஃபெயிலாகி இருக்காத நாங்கள் இதனால் அதிர்ச்சியடைந்தோம்,” என்றார் அம்மாணவர்.”

மறுகூட்டலில் 8 மாணவர்கள் தேறியது: விகடனின் நிருபர் சு. அருண் பிரசாத், கூறுவது, “தேர்வு முடிவுகளில் குளறுபடி இருக்கிறது என்று பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட 8 மாணவர்கள் முறையிட்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து மறுகூட்டலுக்கான குழு ஒன்றை நிர்வாகம் அமைத்திருக்கிறது. இந்த 8 மாணவர்களுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த வகுப்புக்கும் மறுகூட்டல் நடத்தப்பட்டு, இரண்டு வாரங்களில் முடிவுகள் வெளியிடப்படும் என்று அந்தக் குழு கூறியிருக்கிறது. முதல்கட்டமாக 8 மாணவர்களுக்கு மறுகூட்டல் செய்து முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. மறுகூட்டலில் மிகப் பெரிய மதிப்பெண் வேறுபாட்டில் 8 பேரும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்”. இதைத் தொடர்ந்து இரண்டு வாரம் கடந்தும் ஒட்டுமொத்த மாணவர்களுக்குமான மறுகூட்டல் முடிவுகள் வெளிவராத நிலையில், இதுகுறித்து துறைத் தலைவர் செளந்தரராஜனைச் சந்தித்து மாணவர்கள் சிலர் முறையிட்டிருக்கின்றனர்.

எப்படி வாக்குவாதம் கலாட்டாவில் முடிந்ததுமாற்றிச் சொல்லும் போக்கு: விகடனின் நிருபர் சு. அருண் பிரசாத், கூறுவது, “துறைத் தலைவர் செளந்தரராஜன் மிக மோசமாக எங்களை எதிர்கொண்டார்; வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகளால் எங்களைத் திட்டினார்; அறையிலிருந்து உடனடியாக வெளியேறும்படி கத்தினார். ஒரு மாணவியிடம் நடந்துகொள்ளக் கூடாத வகையில், அந்த மாணவியின் மீது பலவந்தமாக மோதி வெளியில் தள்ள முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியும் நாங்களும், ‘நீங்கள் எல்லை மீறிக் கொண்டிருக்கிறீர்கள். இப்படியெல்லாம் எங்களிடம் நடந்துகொள்ளக் கூடாதுஎன்று கூறினோம். எதையும் சட்டை செய்யாத அவர் மீண்டும் மீண்டும் அப்படியே செய்தார்; இப்படி நடந்துகொண்டதற்காக துறைத் தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் அறைக்கு முன் அமர்ந்து போராடினோம். அறையிலிருந்து வெளியேறும்போது, எங்களில் ஒருவரை மிதித்துவிட்டு வெளியேறினார்,” என்று மாணவர்களில் ஒருவர் அங்கு நடந்தவற்றை விவரிக்கிறார்”. இது முந்தைய  வர்ணனைகளிலிருந்து மாறுபட்டிருப்பதை கவனிக்கலாம்.

© வேதபிரகாஷ்

24-03-2021


[1] விகடன், மாணவி மீது பாலியல் தாக்குதல்எல்லை மீறினாரா பேராசிரியர்? சிக்கலில் சென்னைப் பல்கலைக்கழகம்!, சு. அருண் பிரசாத், Published: 23-03-2021 at 8 AM; Updated: 23-03-2021  at 8 AM.

[2] https://www.vikatan.com/social-affairs/madras-university-students-protest-against-hod?fbclid=IwAR3uKvMdoXvb7rCywpKmAbpmBCAJ3ES39Qt2yJ-mf469KZBwtQNgZkuQXHI

சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை, வலசை அகழ்வாய்வு, மாணவ-மாணவியர்களின் ஆர்பாட்டம் – உள்ளிருப்பு போராட்டம் – விடுதி பிரச்சினை முதல் பாலியல் புகார் வரை – ஊடகங்களின் வர்ணனை! அரசியலாக்கப் படும் முறை (5)

மார்ச் 20, 2021

சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை, வலசை அகழ்வாய்வு, மாணவமாணவியர்களின் ஆர்பாட்டம்உள்ளிருப்பு போராட்டம்விடுதி பிரச்சினை முதல் பாலியல் புகார் வரைஊடகங்களின் வர்ணனை! அரசியலாக்கப் படும் முறை (5)

பத்திரிக்கையாளர் சந்திப்புகடிதங்கள், வீடியோக்கள், செய்திகள் தயாரிப்பு என்று தொடர்வது: “மாணவர்களை ஒருமையில் பேசும் நபர். கேட்டால் நிர்வாக ஊழியர் என்கிறார்,” போன்ற வீடியோக்கள், இப்பிரச்சினையை பெரிதாக்க முயல்வது தெரிகிறது. பிறகு, அவர்களின் கடிதமும் வெளியிடப் பட்டுள்ளது: 18-03-2021 பற்றிய பகுதி:

“ஒரு மணிநேரம் 20 நிமிடம் நடந்த விசாரணையில், பேரா.சௌந்திரராஜனை எப்படியெல்லாம் காப்பாற்றலாம் என்று, பாதிக்கப்பட்ட மாணவி மீதுதான் குற்றம் என்று சித்தரிக்கும் வகையில் டிசைன் டிசைனாக, சாந்தகுமாரி, ரீட்டா ஜான், சசிகலா, உசைன், சம்பூரணி உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் பேசியுள்ளனர். இந்த குரூப்பில் டூப்பாக மாணவர்கள் தரப்பு என்று நிர்வாகமே நியமித்துள்ள ஆய்வு மாணவி உமா மகேஸ்வரியும் செயல்பட்டுள்ளார்.

உதாரணமாக, பாதிக்கப்பட்டவரின் தரப்பை முழுமையாக கேட்டறியாமல், மாணவியை குற்றவாளியைப்போல் நடத்தி, அதட்டி மிரட்டி, பிரச்சனையை ஊத்திமூட முயற்சித்துள்ளார் நாட்டாமை சாந்தகுமாரி. அதுமட்டுமின்றி, பேரா.சௌந்திரராஜன் வேண்டுமென்றே மார்பகத்தில் மூன்றுமுறை கைவைக்கவில்லை, போகிற போக்கில் அது நடந்துவிட்டது, இதை நீங்கள் தவறாக சித்தரிக்கிறீர்கள் என்று தீர்ப்பையும் வழங்கியுள்ளனர் மைனர்குஞ்சு கட்டப்பஞ்சாயத்தின் நாட்டாமைகள்.

மேலும், கமிட்டியில் இருந்த உசைன் பாதிக்கப்பட்ட மாணவியைப் பார்த்து, “செக்ஸூவல் ஹராஸ்மண்ட் கம்ப்ளைண்ட் குடுத்துட்டு, குடும்பத்தைவிட்டுட்டு பாய்ஸோட நைட்ல உட்காருவது சரியா?,” என்று கிரிமினல் தனமாக கேட்டுள்ளார். பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேரா.சௌந்திரராஜனை தண்டிக்க துப்பிலாத உசைன் போன்ற ஜால்ராக்கள், பாதிக்கப்பட்ட மாணவியையும், அவரோடு போராட்டத்தில் உள்ள மாணவர்களின் கேரக்டரையும் தவறாக சித்தரித்து தனது அல்ப்ப புத்தியை காட்டியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, இந்த பாலியல் அத்துமீறலை நேரில் பார்த்த சாட்சியங்களான மாணவர்களை அழைத்து பேசாத கமிட்டியினர், பேரா.சௌந்திரராஜன் செட்-அப் செய்து கூட்டி வந்த, சம்பவ இடத்திலேயே இல்லாதவர்களை சாட்சியங்களாக விசாரித்துள்ளனர். இந்த கமிட்டியின் கமிட்டி உறுப்பினர்கள் எவ்வாறு, பாதிக்கப்பட்ட மாணவியின் பிரச்சனையையே கேட்காமல், கேடுகெட்ட தனமாக பேரா.சௌந்தரராஜனுக்கு ஆதரவாக நடந்துகொண்டார்கள் என்பதை நீண்ட பட்டியலே போடலாம்.

இவ்வளவு அநீதிகளும் அட்டுழியங்களும் எங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பகல் இரண்டு இரவுகளை கடந்து எங்களுடைய போராட்டம் சென்று கொண்டிருக்கிறது. எங்களது குரலை நசுக்கும் வேலையைத்தான் பேரா.சௌந்திரராஜனும், பல்கலைக்கழக நிர்வாகமும் செய்து கொண்டிருக்கின்றனர். எங்களுடைய கோரிக்கையே, தவறுமேல்தவறு செய்து கொண்டிருக்கும் பேரா.சௌந்திரராஜனால் எங்களைப்போல் இன்னொரு மாணவரும், மாணவியும் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான்.

எனவே, இதுபோன்ற பாலியல் அத்துமீறல்களை ஆதரிக்கும் கமிட்டியை நியமிக்காமல், இவர்களை தவிர்த்த நேர்மையான பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர் பிரதிநிதிகள் கொண்ட கமிட்டியை அமைத்து விசாரிக்குமாறு கோருகிறோம். மேலும், ஃபெயில் ஆக்கியது முதல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது வரை கல்விச் செயல்பாட்டுக்கே முற்றிலும் தகுதியில்லாத பேரா.சௌந்திரராஜனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

இப்படிக்கு

பாதிக்கப்பட்ட தொல்லியல்துறை மாணவர்கள்,

சென்னைப் பல்கலைக்கழகம்

சேப்பாக்கம் வளாகம்

தொடர்புக்கு: 96001 62343

நடக்கும், நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்தால், பற்பல கேள்விகள் எழுகின்றன: நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்து, உள்ளவற்றை படித்து-சரிபார்த்து, எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நிலையில், சிந்தித்து, கீழ்கண்ட விசயங்கள் தொகுக்கப் படுகின்றன:

  1. முதுகலை படிப்பு, ஆராய்ச்சி என்று பல்கலைப் படிப்பு படிக்க வரும் மாணவ-மாணவியர், ஏன், எவ்வாறு, இதற்காக இவ்வாறு திசை மாறுகின்றனர்?
  2. அனுமதி கிடைப்பதே கடினமாக உள்ள நிலையில், அனுமதி கிடைத்தப் பிறகு, வகுப்பு, பாடம், படிப்பு, ஆராய்ச்சி என்றில்லாமல், ஏன் இத்தகைய ஆர்பாட்டம்-போராட்டம் முதலியவற்றில் ஈடுபடுகின்றனர்?
  3. உண்மையில் விடுதி, கட்டணம், மெஸ், சாப்பாடு…போன்ற பிரச்சினைகள் என்றால், பல்கலைக் கழக நிர்வாகம் அவற்றை பூர்த்தி செய்திருக்க வேண்டும். நூறாண்டுகளுக்கும் மேலாக நடக்கும் பல்கலைக் கழகத்திற்கு, இதெல்லாம், ஒரு பிரச்சினையாகவே இருக்க முடியாது.
  4. கொரோனா காலம் எனும் போது, உரிய வசதிகளை பல்கலைக் கழக நிர்வாகம் செய்திருக்க வேண்டும்.
  5. சென்னை பல்கலைக் கழகம் போன்ற உலக பிரசித்தி பெற்ற பல்கலைக் கழகங்கள் ஏன் உரிய பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், முதலியோரை உடனுக்கு உடன் நியமிக்காமல், காலியான இடங்களை வைத்து, ஒன்று, இரண்டு, மூன்று என்று பல ஆண்டுகளாக செயல்பட வேண்டும்?
  6. அரசியல் சார்ந்த மாணவ இயக்கங்கள், மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் முதலியோரைப் பிரிக்கும் வகையில் ஏன் அனுமதிக்கப் படவேண்டும்?
  7. பல்கலை துறை ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று, துறை ஆசிரியர்களே, முன்பு மாணவர்கள் தாக்கியபோது போராடி-ஆர்பாட்டம் செய்திருக்கிறார்கள்.
  8. பிறகு “அம்பேத்கர்-பெரியார் ஸ்டெடி சர்கிள்” போன்ற தீவிரக் கொள்கைகள், சித்தாந்தங்கள் கொண்ட குழுக்களால், மாணவ-மாணவியர்களிடையே அமைதி குலைக்கும் போக்கு ஏற்பட்டுள்ளது, ஏற்படுகிறது.
  9. படிப்பில் மட்டும் கவனம், சிரத்தை வைத்துக் கொண்டால், இத்தகைய பிரச்சினைகள் எழாது.
  10. மேலும், மாணவ-மாணவியர்களின் பெற்றோர், உற்றோர், மற்றோர் இத்தகைய விசயங்களில் கண்டுகொள்ளாதது போல தெரிகிறது. உண்மையில் அவர்களுக்குத் தெரியுமா, அறிவிக்கப் படுகிறதா என்று தெரியவில்லை.
  11. நிச்சயமாக, மாணவ-மாணவியர், இரவுகளில் அவ்வாறு தங்கி போராடுவதை யாரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள், விரும்ப மாட்டார்கள். பிறகு, அவை – அத்தகைய நிகழ்வுகள் “உள்ளிருப்புப் போராட்டங்கள்,”………எப்படி, எவ்வாறு, ஏன் நடந்து கொண்டிருக்கின்றன?
  12. எனவே, இவையெல்லாம் நடப்பது படிப்பு, பாடம், பாடதிட்டம், புத்தகங்கள், போதனை, பயிற்சி, ஆராய்ச்சி,……..முதலியவற்றைத் தாண்டிய நிலையில் வேறெதற்கோ சம்பந்தப் பட்டவர்கள் ஈடுபடுகிறார்கள் என்று தெரிகிறது.
  13. விளம்பரம், பிரச்சாரம், பிரபலம், போன்ற காரணங்களுக்காக, எதையோ சாதிக்கிறோம், போராடுகிறோம் என்று ஒரு மனநிலையோடு, உணர்ச்சிப் பூர்வமாக செயல்படுவது தான் தெரிகிறது. முகநூலில் வருவது, பிறகு குறிப்பிட்ட இணைதள ஊடகங்களில் வருவது, பிறகு பிரபல ஊடகங்களில் செய்திகளாக மாறுவது, வருவது, ஒரு முறையினைக் காட்டுகிறது.
  14. உணர்ச்சிப் பூர்வமான பேச்சுகள், தூண்டும் வாதங்கள், தொடர்ந்து செய்யும் விவாதங்கள், வாய்-சண்டைகள், தான் என்ற அகம்பாவத்துடன் செயல்படும் போக்கு, எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது போன்ற தோரணைகள்,……………………. முதலியன சரியான போக்காகத் தெரியவில்லை.
  15.  திட்டமிட்டு புகைப் படங்கள் – வீடியோக்கள் எடுப்பது, ஊடகங்களுடன் தொடர்புகள் வைத்துக் கொண்டு, இத்தகைய பிரச்சினைகளை விளம்பரம் படுத்துவது, படிப்படியாக திசைத் திரும்பி அல்லது திசைத் திருப்பி, வக்கிர-வன்ம குற்றச் சாட்டுகள், பரஸ்பர குற்றச் சாட்டுகள், முதலியவற்றை வைப்பது, தொடர்ந்து அவற்றை நீட்டிப்பது, ஒருதலைப் பட்சமாக ஒரு நிகழ்வை, நபர்களை விமர்சிப்பது, தாக்குவது முதலியன சொல்லி வைத்து செய்பவை போன்று உள்ளன, சரியான போக்காகத் தெரியவில்லை.
  16. சம்பந்தப் பட்டவர்கள், பெற்றோர், உற்றோர், மற்றோர் முதலியோர் பேசித் தீர்க்க வேண்டிய விசயங்களை பிரச்சினை ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. மனிதநிலை தவறுகள் மற்றும் மனப்பாங்குடன் பழி வாங்க வேண்டும் போன்ற மனோபாவங்கள் இருந்தால், அவற்றை மாற்றியாக வேண்டும்.
  17. மக்களை ஒன்று சேர்ப்பது என்பது தான் கடினம், பிரிப்பது சுலபமான செயல் தான்.

© வேதபிரகாஷ்

20-03-2021

அம்பேத்கர் பெரியார் ஸ்டெடி சர்கிள் என்ற அமைப்பு, சர்ச்சைக்குரிய வேலைகளை செய்து வருகிறது. மாணா-மாணவியர்களைப் பிரிக்கிறது.
இங்கு போராடும் மாணவர்கள் மற்றவர்களுடன் சண்டை போடுவது முதலியவற்றில் ஈடுபடுவது தெர்கிறது.
ஊடகங்கள் சரிபார்த்து செய்திகளை வெளியிடுவதில்லை என்பதற்கு, இது ஒரு உதாரணம். வகுப்பில் அந்த சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி நடந்ததாகக் குறிப்பிடுகிறது.

சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை, வலசை அகழ்வாய்வு, மாணவ-மாணவியர்களின் ஆர்பாட்டம் – உள்ளிருப்பு போராட்டம் – விடுதி பிரச்சினை முதல் பாலியல் புகார் வரை – ஊடகங்களின் வர்ணனை! அரசியலாக்கப் படும் முறை (4)

மார்ச் 20, 2021

சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை, வலசை அகழ்வாய்வு, மாணவமாணவியர்களின் ஆர்பாட்டம்உள்ளிருப்பு போராட்டம்விடுதி பிரச்சினை முதல் பாலியல் புகார் வரைஊடகங்களின் வர்ணனை! அரசியலாக்கப் படும் முறை (4)

18-03-2021 அன்று நடந்த விசாரணை கமிட்டி கூட்டம்: Ms.மோஹன சுந்தரி என்ற இரண்டாம் ஆண்டு மாணவி, பண்டைய இந்திய சரித்திரம் மற்றும் தொல்லியல் துறை, மெட்ராஸ் யுனிவர்சிடி, அளித்த புகாரின் பெயரில், 18-03-2021 அன்று மாலை 3.30க்கு விசாரணை கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் கீழ்கண்டவர்களுக்கு கலந்து கொள்ள, Dr. ரீட்டா ஜான், பௌதிகவியல் துறை, துறை பேராசிரியர்-தலைமை மற்றும் விசாரணை கமிட்டி தலைமை, என்பவரால் அழைப்பு விடுக்கப் பட்டது.

  1. Dr. எஸ்.சசிகலா, துணை பேராசிரியர், கணினித் துறை
  2. Dr. ஷைக் மொஹம்மது ஹுஸைன், துறை பேராசிரியர்-தலைமை, புவியியல்
  3. Dr. ஏ. சம்பூர்ணம், துணை பதிவாளர்
  4. Ms. எஸ். சுஜாதா, பிரிவு அதிகாரி
  5. Ms. உமா மஹேஸ்வரி, ஆய்வாளர், பௌதிகவியல் துறை
  6. Dr. கே.சாந்தகுமாரி, வழக்கறிஞர், சென்னை உயர்நீதி மன்றம்.

புகார் அளித்த Ms.மோஹன சுந்தரியும் கலந்து கொண்டார். கூடுதல் பற்றிய விவரங்கள் வெளியிடப் படவில்லை.

20-03-2021 தந்தி வீடியோமாணவர்களின் போராட்டம் பற்றிய வீடியோக்கள் சுற்றில் வந்து விட்டன[1]: மூன்றாம் நாள் இரவிலும் தொடரும் மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம்..! என்று “அம்பேத்கர்-பெரியார் ஸ்டெடி சர்கிள்” முகநூலில் பதிவு செய்தது. தந்தி டிவியின் வீடியோ பதிவின் கீழுள்ள விவரம்[2], “சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகாரளித்து, பாதிக்கப்பட்ட மாணவி உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்சென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறை இறுதி ஆண்டு மாணவி ஒருவர், தனது துறைத் தலைவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகாரளித்துள்ளார். மதிப்பெண் வழங்காமல் புறக்கணித்ததாக கூறும் மாணவி, அதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, இருமுறை பாலியல் ரீதியாக உடலில் தொட்டு சீண்டியதாக குற்றம்சாட்டியுள்ளார். இதேபோல், மாணவ, மாணவிகள் பலருக்கு மதிப்பெண் வழங்காமல் தொந்தரவு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே, புகாரளித்த தன்னை, குற்றவாளிபோல் பாவிப்பதாக கண்ணீர்விடும் மாணவி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். மாணவிக்கு ஆதரவாக திரண்டுள்ள சக மாணவ மாணவிகள், தொல்லியல் துறை தலைவரை பணியிடை நீக்கம் செய்யுமாறு பல்கலைக் கழக வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்”.

19-03-2021 அன்று செக்ஸூவல் ஹராஸ்மண்ட் கமிட்டியின் விசாரணையை ரத்து செய்யக்கோரி கொடுத்த கடிதம்: 18-03-2021 அன்று விசாரணை கமிட்டி கூட்டம் நடந்த பிறகு, பாலியல் அத்துமீறலை ஆதரிக்கும் செக்ஸூவல் ஹராஸ்மண்ட் கமிட்டியின் விசாரணையை ரத்து செய்யக்கோரி இன்று மதியம் பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு அளிக்கப்பட்ட கடிதம் என்று “அம்பேத்கர்-பெரியார் ஸ்டெடி சர்கிள்” முகநூலில் பதிவு செய்யப் பட்டுள்ளது. அதில் கையெழுத்து முதலியன இல்லை. அதாவது உண்மையில் அத்தகைய அல்லது வேறு கடிதம் கொடுக்கப் பட்டதா இல்லை என்று தெரியவுல்லை. ஆகவே, இது பின் யோசிக்கப் பட்டு, செய்த காரியம் போலுள்ளது. ஏனெனில், புகார் கொடுத்த மாணவி கலந்து கொண்டுள்ளார்.  இந்த மாணவர்களின் நோக்கம் என்ன என்று முழுமையாகத் தெரியவில்லை. விடுதி அறை, மெஸ், கட்டணம், மார்க், கிரேட், வலசை, அகழாய்வு, நடுகல், சாம்பல் மேடு, 4440 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம், இப்பொழுது, துறைத் தலைவருடன் வாக்குவாதம், சண்டை, கேரோ, பாலியல் தாக்குதல் என்று மாறிக் கொண்டே இருக்கின்றன.

அரசியல் கட்சிகள் தலைவர்கள் சந்திப்பு: “போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக திராவிடர் விடுதலைக் கழகத்தை சேர்ந்த தென் சென்னை மாவட்ட செயலார் உமாபதி மற்றும் ஜெயப்பிரகாஷ், முத்துராஜ், கண்ணியப்பன் ஆகியோர் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். அவர்களுக்கு எங்களது நன்றிகள். தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று “அம்பேத்கர்-பெரியார் ஸ்டெடி சர்கிள்”  வெளியிட்டுள்ளதை போராடும் மாணவ-மாணவியர் மறுக்கவில்லை. அதாவது, சித்தாந்தம் மற்றும் அரசியல் நுழைவுகளை அவர்கள் எதிர்க்கவில்லை என்று தெரிகிறது. மேலும், “அம்பேத்கர்-பெரியார் ஸ்டெடி சர்கிள்”, விக்கி கண்ணன் போன்றவர்களின் பதிவுகள், அத்தகைய சித்தாந்தம் மற்றும் அரசியல் சார்புகளை வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. இவற்றையெல்லாம் உடனுக்கு உடன் அந்திமழை, வினவு போன்ற தீவிரவாத மார்க்சிஸ்ட்-மாவோயிஸ்ட் இணைதளங்கள் வெளியிட்டு வருவதும் நோக்கத் தக்கது[3]. ஒரு பக்கம் பல்கலைக் கழக வகுப்புகள், தினசரி நிகழ்வுகள், துறை ஆராய்ச்சி கூட்டங்கள் என்றெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, இப்பிரச்சினை தான், பிரதானமானது என்பது போல இவை எடுத்துக் காட்ட முயல்கின்றன.

சென்னை பல்கலைக் கழகத்தில் திக-தலைவர்கள் கூட்டங்கள் நிறையவே நடந்துள்ளன: கே. வீரமணி, சுப.வீரபாண்டியன், தியாகு, அருள்மொழி,… போன்றோர் அடிக்கடி சென்னை பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்யப் படும் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்கள். “சென்னை பல்கலைக் கழகத்தில், இந்திய வரலாற்றுத் துறை சார்பில், பேராசிரியர் கருணானந்தத்தின் புத்தவியல் மற்றும் திராவிடவியல் அறக்கட்டளைச் சொற்பொழிவு 2020 – 2021 நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்வில், திராவிட இயக்கத்தின் சமூகச் சட்டங்கள் என்ற தலைப்பில், கழக பொதுச்செயலாளர் தோழர்விடுதலை இராசேந்திரன்அவர்கள்  உரையாற்றவுள்ளார். 05.03.2021 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணியளவில்  சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ளது. தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்,” என்றது இம்மாத – மார்ச்.5, ஆரம்பத்தில் நடந்த நிகழ்ச்சி. இவ்வாறு தொடர்ந்து அரசியல் மயமாக்கு போக்கும் காணப்படுகிறது. கல்வி போர்வையில் சித்தாந்தம் நுழைவதால், ஆசிரியர், மாணவர் மற்றும் இதர அதிகாரிகள், ஊழியர் என்று எல்லோருமே அத்தகைய சார்புடைய ஆட்களாக மாறும் போது, நடைமுறையில், அது, அவர்களது மனங்களில் வேலை செய்து கொண்டிருக்கும். அவை தான், நாளைக்கு பிரச்சினைகளாக மாறுகின்றன. இங்கும், ஹாஸ்டல், மெஸ், பில், கட்டணம் என்று ஆரம்பித்து, தேர்வு, விடைதாள், திருத்தம், மதிப்பெண், என்றெல்லாம் மாறி, இப்பொழுது பாலியல் தொந்தரவு என்றாகியுள்ளது.

குறைகூறும் விமர்சனங்கள் தொடர்கின்றன: “பேராசிரியர் பாலியல் அத்துமீறல்: இரவு முழுக்க போராட்டம் நடத்திய மாணவர்கள்! பாதிக்கப்பட்டவரின் தரப்பை முழுமையாக கேட்டறியாமல், மாணவியை குற்றவாளியைப்போல் நடத்தி, அதட்டி மிரட்டி, பிரச்சனையை ஊத்திமூட முயற்சித்துள்ளார் நாட்டாமை சாந்தகுமாரி. அதுமட்டுமின்றி, பேரா.சௌந்திரராஜன் வேண்டுமென்றே மார்பகத்தில் மூன்றுமுறை கைவைக்கவில்லை, போகிற போக்கில் அது நடந்துவிட்டது, இதை நீங்கள் தவறாக சித்தரிக்கிறீர்கள் என்று தீர்ப்பையும் வழங்கியுள்ளனர் மைனர்குஞ்சு கட்டப்பஞ்சாயத்தின் நாட்டாமைகள்,” என்றெல்லாம் பதிவுகள் செய்யப் பட்டுள்ளன. 18-03-2021 அன்று அப்படி நடந்தது, கலந்து கொண்டவர்களுக்குத் தான் தெரியும். பிறகு, இவர்கள் எப்படி எல்லாம் தெரிந்தது போல இவ்வாறு விமர்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை. 19-03-2021 அன்று செக்ஸூவல் ஹராஸ்மண்ட் கமிட்டியின் விசாரணையை ரத்து செய்யக்கோரி கடிதம் கொடுத்த பிறகு, இவை ஏன் என்பது புதிராகத்தான் உள்ளது.

© வேதபிரகாஷ்

20-03-2021


[1] தந்தி.டிவி, ஆபாசமாக தொட்டு பேசுகிறார் : குற்றவாளிபோல் நடத்துகின்றனர்” – மாணவி கண்ணீர், Mar 20, 2021.

[2] https://www.youtube.com/watch?v=lBNT-ntSu4Y

[3] அந்திமழை, பேராசிரியர் பாலியல் அத்துமீறல்: இரவு முழுக்க போராட்டம் நடத்திய மாணவர்கள்!, Posted : வெள்ளிக்கிழமை,   மார்ச்   19 , 2021  11:29:24 IST.

http://andhimazhai.com/news/view/-professor-sexual-assault-madras-university-students-protest-19-03-2021.html?fbclid=IwAR1aPBoxRW_ZIKvN-nFIu-KlT7wSv6uMTO3YLd4wJ-N8MMsJneJP7mHA3bQ

சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை, வலசை அகழ்வாய்வு, மாணவ-மாணவியர்களின் ஆர்பாட்டம் – உள்ளிருப்பு போராட்டம் – விடுதி பிரச்சினை முதல் பாலியல் புகார் வரை – ஊடகங்களின் வர்ணனை! (3)

மார்ச் 19, 2021

சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை, வலசை அகழ்வாய்வு, மாணவமாணவியர்களின் ஆர்பாட்டம்உள்ளிருப்பு போராட்டம் – விடுதி பிரச்சினை முதல் பாலியல் புகார் வரைஊடகங்களின் வர்ணனை! (3)

அந்த 8 மாணவர்களின் பிரச்சினை என்ன?: ஏற்கனவே கடந்த மாதம் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் 8 மாணவர்களை பெயில் ஆக்கியமைக்காக போராடியபோதும் கமிட்டி அமைத்தது பல்கலைக்கழக நிர்வாகம். அந்த கமிட்டி தலைமையில் மூன்றாம் நபர் விடைத்தாள்களை திருத்தினார். 8 மாணவர்களும் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்தார்கள். எனில் மாணவர்கள் சொன்ன புகார் சரியானது என முடிவானது. ஆனால் துறைத்தலைவர் மீது எந்த நடவடிக்கையை எடுத்தது கமிட்டி? அல்லது நிர்வாகம்? எதுவுமே இல்லை. அதுவும் போக 8 மாணவர்கள் தேர்ச்சி அடைந்த பின் மொத்த வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களும் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதையும் அந்த கமிட்டி ஏற்றது. ஆனால் முடிவுகள் ஒரு மாதம் ஆகியும் வெளியாகவில்லை. அதனை வெளியிடகோரி சென்ற மாணவிக்கு தான் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. மாணவர்களுக்கு அடிவிழுந்துள்ளது. அப்படியானால் இந்த கமிட்டியின் தேவை தான் என்ன? கமிட்டியின் ஆலோசனையை நிர்வாகத்தின் வழிகாட்டலை துறைத்தலைவர் சௌந்தரராஜன் எந்தளவிற்கு மதித்திருக்கிறார்? அவர் மதிக்காமல் மீண்டும் மீண்டும் தவறு செய்துக்கொண்டு இருக்கிறார். நிர்வாகம் மீண்டும் மீண்டும் கமிட்டி அமைத்து காப்பாற்றிக்கொண்டே இருக்கிறது. இந்த கமிட்டியை புறக்கணித்ததால் கமிட்டியில் இருந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர்கள் அனைவரது வீட்டிற்கும் அழைப்பு சென்றிருக்கிறது. பெற்றோர்களிடம் சொல்லி போராட்ட மாணவர்களை கமிட்டிக்கு வருமாறு அழைக்கிறார்கள். போராட்ட மாணவி ஒருவரது தந்தை,’ எனது மகள் அறிவுப்பூர்வமாக யோசிக்கும் வயதையும் திறனையும் பெற்றிருக்கிறாள்’. இவ்வாறு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பதிலளித்திருக்கிறார்.

ஊடக அறம் என்றால் என்னவென்பது இப்போது தான் அனுபவபூர்வமாக புரிகிறதுஎன்று ஊடகங்களை விமர்சித்தது: இப்பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? துறைத்தலைவர் சௌந்தரராஜன் மீது கடுமையான நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் எடுக்கவில்லை எனில் சட்டரீதியான வழியிலும் நீதிக்கேட்டு போராட மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். ஊடகங்கள் நேற்றில் இருந்து படையெடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு ஊடகத்திற்கும் குறைந்தது பத்து நிமிடங்கள் நின்று நிதானமாக பதிலளிக்கிறார்கள் போராட்ட மாணவர்கள். அனைத்தையும் கேட்டு பதிவு செய்துக்கொண்டு செல்பவர்கள் செய்தியை போடுவதே இல்லை (ஒருசில ஊடகங்களை தவிர). இதனை கேட்டால் தேர்தல் நேரமாம். இதற்கு வராமலேயே இருந்திருந்தால் கூட எங்களுக்கு நேரமும் சக்தியும் மிஞ்சும். ஊடக அறம் என்றால் என்னவென்பது இப்போது தான் அனுபவபூர்வமாக புரிகிறது.

முகநநூல் முதல் வீடியோ வரை விளம்பரம் தேடுவது மாணவ-மாணவியர்களது யுக்தியா, இதனால், யாருக்கு என பலன்?: விக்கி கண்ணன் என்ற மாணவரும், முகநூலில் இதைப் பற்றி பதிவுகள் செய்து வருவது, கவனிக்கத் தக்கது[1]. “தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் அரசியல் துறை மாணவர்கள் எங்களது போராட்டத்திற்கு ஆதரவாக வந்து அமர்ந்தனர். பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைசார் மாணவர்களையும் எங்களது போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு பாதிக்கப்பட்ட மாணவி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்”. அப்பையென்றால், இப்பிரச்சினைக்கு ஊடக விளம்பரம், விவகார பரப்பு, பிரச்சாரம் போன்றவை ஏன் தேவைப் படுகிறது? இதனால், மாணவ-மாணவியர், தொல்துறை துறை, துறைத் தலைவர், மற்ற ஆசிரியர்கள், பல்கலை அதிகாரிகள், சம்பந்த பட்டவர்கள் முதலியோருக்கு, அத்தகைய பிரச்சாரம்-பரப்புகளினால் என்ன லாபம், ஆதாயம்? முன்பு தாங்கள் வலசையில் அகழ்வாய்வில் இதை கண்டுபிடித்தோம், அதை கண்டுபிடித்தோம் என்று அறிவித்தார்கள். பிறகு, செய்திகள், வீடியோக்கள் என்று உலா வர ஆரம்பித்தன. ஆனால், இப்பொழுதே, வேறு விதமாக மாறியுள்ளது.

தொல்லியல் துறை மாணவர்களின் அறிக்கையும், ஊடக செய்திகள் ஆனது: இதை “தொல்லியல் துறை மாணவர்களின் அறிக்கை” என்று இணைதள ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[2]. சில மிக கடுமையான வார்த்தைகள் (குற்றவாளியான சுந்தரராஜன் குற்றவாளி சுந்தரராஜன்) கூட உபயோகப் படுத்தியுள்ளன[3]. சில ஊடகங்கள், எதையும் விசாரிக்காமல், அந்த “அறிக்கை”யினையே செய்தி போல வெளியிட்டுள்ளது[4]. நியூஸ்.18 மட்டும், “இதுகுறித்து விளக்கம் அறிய பேராசிரியர் சௌந்தரராஜனை தொடர்பு கொண்டபோது, ஏற்கனவே மதிப்பெண் விவகாரத்தில் தனக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனையை மனதில் வைத்து, மாணவர்கள் தன் மீது அபாண்டமாக பழி சுமத்தி, தன் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி முடித்துக்கொண்டார்”,[5]என்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன் பின்னணியில், இடதுசாரி, தீவிரமான இடதுசாரி மற்ற குழுக்கள் (Periyar-Ambedkar Study Circle, Revolutionary Students Youth Front, RSFY) இருப்பது தெரிகிறது. படிக்கின்ற மாணவ-மாணவியர் இவ்வாறு தீவிரமாக போராட்டம் என்ற முறையில் ஈடுபடுவது திகைப்பாக இருக்கிறது. இவர்கள் உண்மையிலேயே தங்கும் விடுதி / ஹாஸ்டல் பிரச்சினை போன்றவற்றிற்கு ஆர்பாட்டம் செய்கின்றார்களா அல்லது, அப்பிரச்சினை தேர்வு, வினாத்தாள் என்று மாறி, இப்பொழுது, பாலியல் தொல்லை என்று முடிந்துள்ளதா என்று தெரியவில்லை.

படிப்பு, ஆராய்ச்சி, அகழாய்வு என்றெல்லாம் நடக்கிறதா இல்லை தகராறு நடக்கிறதா?: பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இத்துறை மாணவர்கள் வலசை, குடியாத்தத்தில் அகழாய்வு செய்து கொண்டிருந்ததாக செய்திகள் பரபரப்பாக வந்து கொண்டிருந்தன. ஜினு கோஷி மற்றும் இதர மாணவர்கள் பேட்டி கொடுப்பது, வீடியோக்களில் தங்களது கருத்தைக் கூறுவது என்று தொடர்ந்தன. துறைத்தலைவர் பேட்டி, கருத்து இது வரை வெளியிட்டதாகத் தெரியவில்லை. ஆனால், துறைத் தலைவர் மற்ற விரிவுரையாளர்கள், முதலாண்டு மாணவர்கள், முதலியோர் அங்கு வந்து சென்றுள்ளதாகத் தெரிகிறது. தவிர, அங்கிருந்த இரண்டாம் ஆண்டு மாணவ-மாணவியர்களின் உறவினர்கள், நண்பர்கள் என்றெல்லாம் வந்துள்ளனர். மார்க்ஸிய காந்தி போன்றோர் வந்து சென்றதாக, தெரிகிறது. அதாவது, படிப்பு, ஆராய்ச்சி, அகழாய்வு என்றெல்லாம் நடந்து கொண்டிருக்கின்ற அதே நேரத்தில், இப்பிரச்சின்னைகளும் நடக்கின்றன என்பது வியப்பாக இருக்குறது. மேலும் குறிப்பிட்ட மாணவ-மாணவியர்கள் லலசையிலும், சென்னை பல்கலை வளாகத்திலும் இருப்பது, அவர்கள் அங்கும் இங்கும் வந்து சென்றது தெரிகிறது.

© வேதபிரகாஷ்

19-03-2021


[1] https://www.facebook.com/Vicky.Kannan.29

[2] அந்திமழை, சென்னைப் பல்கலைக்கழகம்: பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!, Posted : வியாழக்கிழமை,   மார்ச்   18 , 2021  12:45:33 IST.

[3] http://andhimazhai.com/news/view/university-of-madrasi-students-protest-against-the-department-head-who-was-involved-in-sexual-harassment-18-03-2021.html

[4] Madras Review,சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் சௌந்தரராஜனை பதவி நீக்கக் கோரும் மாணவர்கள்,  Madras March 17, 2021.

[5] நியூஸ்.18, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மீது மாணவர்கள் குற்றச்சாட்டு…!, NEWS18; LAST UPDATED : MARCH 18, 2021, 18:03 IST.

https://tamil.news18.com/news/tamil-nadu/madras-university-students-protest-against-archaeology-department-hod-for-sexual-harassment-vin-430253.html

சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை, வலசை அகழ்வாய்வு, மாணவ-மாணவியர்களின் ஆர்பாட்டம் – உள்ளிருப்பு போராட்டம் – விடுதி பிரச்சினை முதல் பாலியல் புகார் வரை! (2)

மார்ச் 19, 2021

சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை, வலசை அகழ்வாய்வு, மாணவமாணவியர்களின் ஆர்பாட்டம்உள்ளிருப்பு போராட்டம் – விடுதி பிரச்சினை முதல் பாலியல் புகார் வரை! (2)

உள்ளிருப்பு போராட்டம்பிரவரிலிருந்து மார்ச் 2021 வரை: மாணவர்களை தாக்கியும், மாணவியிடம் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்ட சென்னைப் பல்கலைக்கழக பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் இணை பேராசிரியரும் பொறுப்பு துறைத்தலைவருமான திரு சௌந்தரராஜனை பணி நீக்கம் செய்யக்கோரி துறைசார் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்[1]. தற்சமயம் அகழாய்வுப் பணிகள் முடிவடைந்து கடந்த இரண்டு நாட்களாக எங்களது திருத்தப்பட்ட மதிப்பெண்களை அறிந்துகொள்ள எங்களது துறையை அணுகியபோது ஒரு நாள் முழுவதும் மதிப்பெண்களை சொல்லாமல் “அங்கே போய் பார், இங்கே போய் பார்” என்று அலைக்கழித்தனர்[2]. நேற்று மீண்டும் அனைவரும் சென்று காலை முதல் மாலைவரை மதிப்பெண்களை கேட்டு உணவருந்தக்கூட செல்லாமல் துறையிலேயே நின்றோம். அப்போது பல்கலைக்கழக சார்ஜென்ட் துறைத்தலைவரை பதிவாளரை பார்க்க அழைத்து சென்றார். அதன் பிறகு மதிப்பெண்களை வாய்வழியாக அதுவும் வெறும் GRADE ஆக கூறினார்கள். அதில் அனைவருமே தேர்ச்சி அடைந்திருந்தோம்.

மதிப்பெண், கிரேடிங் விவகாரம், வாக்குவாதத்தில் ஏன் முடிய வேண்டும்?: எங்களது மதிப்பெண்களை வழக்கமாக பல்கலைக்கழகத்தின் விதிப்படி INTERNAL, மற்றும் EXTERNAL என பிரித்து அறிவிப்பு பலகையில் போடுங்கள் என்று கூறியதற்கு –

  1. எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துறை தலைவர் சௌந்தரராஜன் எங்களை நோக்கி, “உன் இஷ்ட மயிருக்கெல்லாம் பண்ண முடியாது, எழவெடுத்தவனுங்களா, பொறுக்கி ரௌடிங்களா வெளிய போங்கடா,” என்று மேலும் பல தகாத வார்த்தைகளில் திட்டி மாணவர்கள் இருவரை அராஜகமாக இடித்து தள்ளி அடிக்க வந்தார்.
  2. உடனிருந்த சக மாணவி ஒருவரிடம் தகாத முறையில் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டார்.
  3. அம்மாணவியும் நாங்களும் எதிர்த்து கேட்கவே உடனே எங்களை வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
  4. தொல்லியல் துறை தலைவர் சௌந்தரராஜன் அவர்கள் மாணவர்களிடம் இழிவாகவும், அராஜகப் போக்குடனும் நடந்துகொண்டது பல்கலைக்கழக பதிவாளருக்கு தெரியும்.
  5. ஆனால், இது தொடர்பாக அவர் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.
  6. தற்போது மகளிர் வன்கொடுமை தடுப்பு பிரிவு, பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளருக்கு புகார் அளித்துள்ளோம்.
  7. இன்று காலை முதலே மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகிறோம். பொறுப்பு துறைத்தலைவர் திரு சௌந்தரராஜன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்.

இவ்வாறு மாணவர்கள் சொல்வது இருக்கிறது. ஆனால், மறுபக்கம் என்ன, உண்மையில், என்ன நடந்தது, துறைத் தலைவர் அறையில் அத்தகைய தகராறு நடந்ததா இல்லையா என்று தெரியவில்லை.

உண்மையில் என்ன நடந்தது?: இப்பொழுது, ஊடகங்கள் மற்றும் மாணவ-மாணவியர் தரப்பில் சொல்லப்பட்ட, சொல்லப் படுகின்றவை தவிர வேறெந்த விவரங்களும் தெரியவில்லை:

  1. அந்த – மாணவ-மாணவியர் துறைத் தலைவரை எங்கு, என்று, எத்தனை மணிக்கு சந்தித்தனர்?
  2. துறை வகுப்பு அறையிலா, துறைத் தலைவர் அறையிலா?
  3. வாக்குவாதம் ஏன் வரவேண்டும், துறைத் தலைவருக்கு ஏன் கோபம் வர வேண்டும்?
  4. “…………மேலும் பல தகாத வார்த்தைகளில் திட்டி மாணவர்கள் இருவரை அராஜகமாக இடித்து தள்ளி அடிக்க வந்தார்,” என்றால், அடித்தாரா இல்லையா?.
  5. உடனிருந்த சக மாணவி ஒருவரிடம் தகாத முறையில் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டார்,” என்றால், யார்-யார் இருந்தது?
  6. அம்மாணவியும் நாங்களும் எதிர்த்து கேட்கவே உடனே எங்களை வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு வெளியே சென்றுவிட்டார்,” என்றால், அவரை “கேரோ” (Gherao) மாதிரி செய்தனரா?
  7. எதற்காக அவர் வெளியே செல்ல வேண்டும்?
  8. அவரைத் தவிர அறையில் வேறு யாரும் இல்லையா?

இப்படி பல கேள்விகள் எழுகின்றன. எனவே, இரு பக்கமும் விசயங்களை அறிந்து, ஆராய வேண்டியுள்ளது. ஒருதலை பட்சமாக யார்மீதும், எதையும் சொல்ல முடியாது. படிக்க வந்த மாணவர்கள் நிச்சயமாக, படிப்பையும் மீறிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது அவர்களது பேச்சு, தோரணை, செயல்பாடு, உபயோகப் படுத்தப் படும் வார்த்தைகள் முதலியற்றின் மூலம் தெரிகின்றன.

விசாரணை கமிட்டியை மதிக்காதது, “கண் துடைப்பு என்றது: இன்று இரண்டாவது நாளாக எங்கள் போராட்டம் தொடர்கிறது. நேற்று இரவு 9.50 மணிக்கு பதிவாளர் எங்களிடம் வந்து, ‘கமிட்டி அமைக்கிறோம். நாளை காலை 11 மணிக்கு வாருங்கள்’ என்றார். ஆனால் ‘கமிட்டி’ என்பதே கண்துடைப்பு தான் என்பதை மாணவர்கள் அறிந்தே இருந்தனர். அதிலும் பதிவாளர் கொடுத்த கடிதத்தில் Enquiry Committee என்றே குறிப்பிட்டிருந்தனர். அதிலும் மாணவர்களுக்கு எதிராக துறைத்தலைவர் திரு சௌந்தரராஜனும் புகார் அளித்துள்ளதாக வாய்வழியாக கூறினார் பதிவாளர். திரு சௌந்தரராஜன் மீது மாணவியளித்த வன்கொடுமை புகாருக்கு கமிட்டி அமைத்திருந்தால் மட்டுமே வருவோம் என போராட்ட மாணவர்கள் உறுதியுடன் இருந்தனர்.  இத்தகைய ஒரு தரப்பு விவகாரங்கள் வியப்பாக இருக்கின்றன. மாணவர்களுக்கு, ஏற்கெனவே, பல்கலைக் கழக நிர்வாகம், அதிகாரிகள் முதலியோர் மீது நம்பிக்கை இல்லாதது போலத் தான்,அவர்களது கருத்து வெளிப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் என்ற நிலை தாண்டி, மற்றவர்களுக்கு இப்படித்தான் வேலை செய்ய வேண்டும் என்று வற்புருத்துதல், எங்கள் இஷ்டத்திற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது போன்ற காரியங்களும் திகைக்க வைக்கின்றன.

கமிட்டி அமைத்திருக்கிறோம் என்று அழைப்பது மாணவர்களை ஏமாற்றும் யுக்தி:  இன்று காலை பதிவாளர் வந்தவுடன் இது Joint Committee என்றார். ஆனால் அவர் இரவு அளித்த கடிதத்தில் enquiry committee என்றிருந்தது. பிறகு கமிட்டி மீட்டிங் வர சொல்லி சிண்டிகேட் நபர்களும் பதிவாளரின் உதவியாளரும் வந்து அழைத்தார்கள். முறையாக கடிதமும் கொடுக்கப்படவில்லை, கமிட்டியும் எதற்காக அமைத்திருக்கிறார்கள் என கூறவில்லை. பல்கலைக்கழக மகளிர் வன்கொடுமை பிரிவு தலைமை திருமதி ரீட்டா ஜான் அவர்கள் புகாரளித்து இரண்டு நாட்கள் ஆகியும் பாதிக்கப்பட்ட மாணவியை நேரில் அழைத்து விசாரிக்கவில்லை. இந்நிலையில் கமிட்டி அமைத்திருக்கிறோம் என்று அழைப்பது மாணவர்களை ஏமாற்றும் யுக்தி.  மாணவர்கள், அதாவது பாதிக்கப் பட்ட அந்த 8-மாணவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. சாதாரண படிப்பு சம்பந்தப் பட்ட பிரச்சினையை அசாதரமான பிரச்சினையாக்க முயல்கின்றனரா என்றும் தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

19-03-2021


[1] கலைஞர் செய்திகள், “மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட துறைத் தலைவர்” : சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!, Prem Kumar, Updated on : 18 March 2021, 01:48 PM.

[2] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/03/18/chennai-university-department-head-sexually-abuses-a-women-student

சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை, வலசை அகழ்வாய்வு, மாணவ-மாணவியர்களின் ஆர்பாட்டம் – விடுதி பிரச்சினை முதல் பாலியல் புகார் வரை! (1)

மார்ச் 19, 2021

சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை, வலசை அகழ்வாய்வு, மாணவமாணவியர்களின் ஆர்பாட்டம்விடுதி பிரச்சினை முதல் பாலியல் புகார் வரை! (1)

விடுதி கட்டண எதிர்ப்பு, பாலியல் தொல்லையில் முடிந்தது எப்படி?: தொல்லியல் துறை பேராசிரியர் விடுதி கட்டணத்தை எதிர்த்து போராடிய தனது துறையை சேர்ந்த மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது[1]. இதுகுறித்து விளக்கம் அறிய பேராசிரியர் சௌந்தரராஜனை தொடர்பு கொண்டபோது, ஏற்கனவே மதிப்பெண் விவகாரத்தில் தனக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனையை மனதில் வைத்து, மாணவர்கள் தன் மீது அபாண்டமாக பழி சுமத்தி, தன் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி முடித்துக்கொண்டார்[2]. ஆங்கிலத்தில், “டிடிநெக்ஸ்ட்” (DTNext) என்ற தினத்தந்தி வெளியீட்டில் மட்டும் வந்துள்ளது[3]. 18-03-2021 அன்று விசாரணைக் குழு முன்னர் அவர் ஆஜராக வேண்டும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது[4].  மேல் படிப்பு படிக்க வரும் மாணவர்கள், இவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறார்களா, அதற்கெல்லாம் நேரம் உள்ளதா, மாணவர்-ஆசிரியர் உறவு முறை சரியாக இல்லையா, பெற்றோர்கள் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களா என்று தான் தோன்றுகிறது. ஏதோ படிக்க வந்தால், படிப்பை முடித்து கொண்டு, நிம்மதியாக பட்டத்துடன் வெளியேறினால் போதும் என்ற நிலையில்லாமல், இவ்வாறெல்லாம் பிரச்சினைகள் செய்ய வேண்டுமா அல்லது பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ள வேண்டுமா என்று தெரியவில்லை.

“பாதிக்கப்பட்ட தொல்லியல் துறை மாணவர்கள்,” கொடுத்துள்ள கடிதம்: “பாதிக்கப்பட்ட தொல்லியல் துறை மாணவர்கள்,” கொடுத்துள்ள கடிதம் என்று செய்தியாக, சில இணைதள செய்திகள் வெளிவந்துள்ளன[5]. “சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையில் முதுகலை இரண்டாமாண்டு பயின்று வரும் மாணவர்களாகிய நாங்கள் தற்போது எங்கள் துறை சார்பில் கள அகழாய்வு பணிக்காக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் முகாமிட்டுள்ளோம். இந்நிலையில் கடந்த 12/02/2021 அன்று எங்களுடைய நவம்பர் மாத மூன்றாம் பருவத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இத்தேர்வு முடிவுகள் இணையதளம் வாயிலாகவோ, மின்னஞ்சல் வாயிலாகவோ தெரிவிக்கப்படவில்லை[6].

மாறாக, தொலைபேசி வாயிலாக அலுவலக ஊழியரை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தொலைபேசி வாயிலாக எங்கள் முடிவுகளை கேட்டறிந்தோம். மேலும் இம்முடிவுகள் மதிப்பெண் வாயிலாக அளிக்கப்படாமல் வெறும் குறியீடுகளாகவே (Grade) கூறப்பட்டது.

இதில் சுமார் 8 பேர் தேர்வை நன்கு எழுதியிருந்தும் ஃபெயில் (அரியர்) என்று கூறியதைக் கேட்டு அதிர்ச்சியுற்றோம். குறிப்பாக கடந்த மாதம் 27, 28, 29 ஆகிய நாட்களில் விடுதி கட்டணக் கொள்ளைக்கு எதிராக போராட்டத்தில் பங்கு பெற்ற, அதை ஆதரித்த மாணவர்களுக்கே ஃபெயில் என்ற முடிவு வந்திருந்தது.

இம்முடிவுகள் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று துறைத்தலைவரை நாங்கள் தொடர்பு கொண்டு ஒவ்வொருவரின் Internal மற்றும் External மதிப்பெண்கள் என்ன என்று கேட்டபோது முறையாக பதில் எதுவும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே 14 மாணவர்கள் உடல்நலம் சரியில்லாத நிலையிலும், வேலூரில் அகழாய்வு பணி நடக்கும் இடத்திலிருந்து கிளம்பி வருகிறோம் என்று முறையாக பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் மற்றும் எங்களின் துறைக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டும், அகழாய்வுக்கான பொறுப்பாளரிடமும் தெரிவித்துவிட்டு கிளம்பினோம்.

நேற்று (15-02-2021) பல்கலைகழகத்திற்கு வந்தவுடன் நேரடியாக துறைத் தலைவரான சௌந்தரராஜன் அவர்களை அணுகி விளக்கம் கோரினோம். ஆனால், அவரோ எங்களை உதாசீனப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார். மேலும், எங்கள் மாணவர்களுல் சிவப்பிரகாசத்தை நோக்கி, “நீடீ பார்’ . அதனால அரியர்தான் உனக்கு, உன்னுடைய mail copy வேறாகவும், தபாலில் அனுப்பப்பட்ட ஒரிஜினல் வேறயாவும் இருக்குஎன்று அப்பட்டமாக பொய்யுரைத்தார்.

அப்படியெனில் தேர்வுத்தாளை காட்டுங்கள் எனக் கோரியதற்கு முடியாது என மறுத்துவிட்டார். இதனையடுத்து பதிவாளரை சந்தித்து முறையிட்டபோது அவர் துறைத்தலைவரை வைத்துக்கொண்டு நாளை காலை 10 மணிக்கு உங்கள் அனைவரது தேர்வுத்தாளை திருத்திய சப்ஜெக்ட் ஆசிரியரை கொண்டு உங்கள் மத்தியிலேயே மீண்டும் திருத்துகிறோம் என உத்திரவாதமளித்த நிலையில் நாங்கள் திரும்ப விடுதிக்கு சென்றோம்.

இன்று (16-02-2021) மீண்டும் பதிவாளரின் வார்த்தையை நம்பி துறைத்தலைவரை அணுகியபோது, ஒவ்வொருவரையும் தனித்தனியே அறைக்குள் அழைத்து திருத்திய ஆசிரியர் அல்லாமல் துறையில் உள்ள வேறொரு ஆசிரியரை வைத்து இதுதான் உங்கள் மார்க் பாத்துக்கோங்க என்று சிறிதும் மரியாதையின்றி அதிகாரத்தனமாக நடந்து கொண்டார்.

மேலும், ஃபெயில் செய்த தேர்வுத்தாளை மட்டும் ஒரிஜினல் பேப்பரில் திருத்தாமல் மெயில் காப்பியை Xerox செய்து திருத்தியிருக்கிறார்கள். அதுகூட பென்சில்களால் அழித்து அடித்து திருத்தியிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்று, “எங்கே எங்களுடைய ஒரிஜினல் பேப்பர்?, திருத்திய பேராசிரியரின் கையொப்பம் எங்கே?, ஏன் பென்சிலால் திருத்தியிருக்கிறது?, மார்க்குகள் அழித்து போடப்பட்டுள்ளதுஎன்று கேட்டதற்குஅதெல்லாம் நீ பேசக்கூடாதுநீ ஓவரா பேசுரஎன்று எங்களை மிரட்டினார் துறைத் தலைவர்.

மேலும், சரியாக எழுதியிருந்தும் வெறும் 2 மார்க் 1 மார்க் என்று அளிக்கப்பட்டது ஏன் என்றால் “ ‘கண்டென்ட்இல்லை, எனக்கு சரியா கண்ணு தெரியலைஎன்று மாணவர்களிடம் கதையளக்கிறார். “கண்டென்ட் இல்லையென்றால் எதைவைத்து அளவிடுகிறீர்கள்? Answer key எங்கே?” என்றால் அதற்கும் பதிலில்லை.

இதையடுத்து தற்போது சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாங்கள் பல்கலைக்கழக சேப்பாக்க வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களை அழைத்துப் பேசிய பதிவாளர், “அகழாய்வு பணியை முடித்து 25 நாட்கள் கழித்து வாங்க.. அப்போது பார்த்துக் கொள்ளலாம்; உடனடியாக எதுவும் செய்யமுடியாதுஎன நேற்று அளித்த உத்திரவாதத்தையே மாற்றி மிகவும் அலட்சியமாகப் பேசுகிறார்.

பல்வேறு பொருளாதார சமூக தடைகளிலிருந்து தாண்டிவந்து தற்போதுதான் கல்வி எனும் கனவை நோக்கி வருகிறோம். ஆனால் இதிலும் காரணமற்ற நிர்வாக நெருக்கடிகளும், துறைத்தலைவர் சௌந்தரராஜன் அவர்களின் நாகரீகமற்ற பழிவாங்கும் செயல்பாட்டாலும் எங்களில் சிலர் படிப்பையே விட்டுவிட்டு வெளியேறிவிடலாம் என்னும் மனநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டுள்ளோம்.

தற்சமயம் எங்களது தேர்வுத்தாள்கள் வேறொரு கல்லூரி பேராசிரியர்களால் திருத்தப்பட்டு மதிப்பெண் வழங்கும் வரை நாங்கள் தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவெடுத்து இரவிலும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறோம்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியப்போக்கை கண்டித்தும், தொல்லியல் துறைத்தலைவர் சௌந்தரராஜன் அவர்களின் அதிகாரத் திமிரை கண்டித்தும் எங்களுக்காக அனைத்து கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்களும், பொதுமக்களும் சமூக ஜனநாயக சக்திகளும் ஆதரவு குரலெழுப்ப வேண்டுமென்று இந்த அறிக்கை வாயிலாக உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்”.

இப்படிக்கு,

பாதிக்கப்பட்ட தொல்லியல் துறை மாணவர்கள்,

சென்னை பல்கலைக்கழகம்,

தொடர்புக்கு : 9600162343

இக்கடிதம் அல்லது அறிக்கை அப்படியே செய்தியாக, இணைதள ஊடகங்களில் உலாவந்து கொண்டிருக்கின்றன.

© வேதபிரகாஷ்

19-03-2021


[1] நியூஸ்.18, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மீது மாணவர்கள் குற்றச்சாட்டு…!, NEWS18; LAST UPDATED : MARCH 18, 2021, 18:03 IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/madras-university-students-protest-against-archaeology-department-hod-for-sexual-harassment-vin-430253.html

[3]  DTNext, Madras University students protest assault on female student, demand action against HOD, Published: Mar 18,202112:54 PM

[4] Students of Ancient History and Archaeology in the University of Madras on Thursday (18-03-2021) staged a demonstration demanding action against their head of department (HOD) for allegedly assaulting a female student in his class. The protesters claimed that J Soundararajan had also sexually assaulted a female student during an argument in the class. Students said that several complaints were  lodged with the university authorities against the HOD but no action has been taken yet. University sources confirmed that a complaint was lodged against Soundararajan, who was asked to appear before the inquiry committee on Thursday on the allegations submitted by the students. The protesting students said their stir would continue till action is taken against Soundararajan.

https://www.dtnext.in/News/City/2021/03/18125435/1281478/Madras-University-students-protest-assault-on-female-.vpf

[5] வினவு, சென்னை பல்கலை : மாணவியை பாலியல்ரீதியில் துப்புறுத்திய தொல்லியல் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடு !, செல்வம் -March 18, 2021.

[6] https://www.vinavu.com/2021/03/18/madras-university-hod-archeology-sexual-harassment/