Archive for the ‘கெய்ட்’ Category

பிஎச்.டி விற்பனை: காசுக்கு ஏற்றப்படி, சான்றிதழ் – கல்விதரங்கெடுவது, சீரழிவது!

செப்ரெம்பர் 12, 2019

பிஎச்.டி விற்பனை: காசுக்கு ஏற்றப்படி, சான்றிதழ் – கல்விதரங்கெடுவது, சீரழிவது!

PhD for rs 5 lacs, 11-09-2019

போன் மூலம் நடக்கும் பிஎச்.டி வியாபார பேரம்: தமிழகத்தில் 5 லட்சத்துக்கு விரும்பிய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்றுத்தருவதாக செல்போனில் அழைப்பு விடுத்து வருவது கல்வியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது[1]. அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். மத்திய அல்லது மாநில அரசு நடத்தும் தகுதித்தேர்வில் ேதர்ச்சி (நெட், செட்), அல்லது முனைவர் பட்டம் (பிஎச்டி) உதவி பேராசிரியர் பணிக்கான கல்வித்தகுதியாகும். சமீபத்தில், மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 2,340 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், திடீரென விண்ணப்ப பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி முனைவர் பட்டத்துடன் பணி நியமனம் பெற்றுத்தர ஒரு கும்பல் உயர் கல்வித்துறை அலுவலகங்களில் முகாமிட்டுள்ளது[2].

PhD for sale

ரூ.5 லட்சம் கொடுத்தால், எந்த பல்கலை, எந்த பிரிவு வேண்டுமானாலும் பிச்.டி கிடைக்கும்: இது ஒருபுறம் இருக்க, 5 லட்சம் கொடுத்தால் போதும், தமிழகத்தின் எந்த பல்கலைக்கழகத்திலும் விரும்பிய பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்றுத்தருவதாக, டெலிபோன் மூலம் அழைப்பு விடுத்து வருகின்றனர். இருதினங்களுக்கு முன்பு தர்மபுரியைச் சேர்ந்த வாலிபருக்கு வந்த அழைப்பில் பேசிய இளம்பெண், தான் சென்னை சேலையூரிலிருந்து பேசுவதாகவும், பிஎச்டி அட்மிஷன் பெற்றுத்தருவதாகவும் கூறுகிறார். தொடர்ந்து, பாரதிதாசன், பாரதியார் என தமிழகத்தில் எந்த பல்கலைக்கழகத்தில் வேண்டுமானாலும், பிஎச்டி பட்டம் பெற்றுத்தருகிறோம். உங்களுக்கு விரும்பிய பிரிவில் தலைப்பை கூறினாலோ, அல்லது நாங்கள் வழங்கும் தலைப்பை தேர்வு செய்து தெரிவித்தாலோ போதும். ஆய்வுக்கட்டுரைகளை நாங்களே தயார் செய்து, அதனை வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்றுத்தருகிறோம். இதற்கு 5 முதல் 6 லட்சம் வரை வழங்கினால் மட்டும் போதும் என அழைப்பு விடுக்கிறார். இந்த உரையாடல் தற்போது வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது.

Bogud doctorates Tamilnadu

பாஸ்ட் புட் ரேஞ்சில் பிஎச்.டி வியாபாரம்: இது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: முனைவர் பட்டம் என்பது பலரது லட்சிய கனவுகளில் ஒன்று. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அதன் தரம் குறைந்து வருகிறது. தங்களுக்கு விருப்பமான பிரிவை தேர்வு செய்து, தகுதிவாய்ந்த பேராசிரியரை வழிகாட்டியாகக்கொண்டு, ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். பின்னர், வழிகாட்டி பேராசிரியர் மற்றும் கல்வியாளர்களின் பரிசீலனைகளை கடந்து, ஆய்வின் முடிவுகளை வெளியிட வேண்டும். குறைந்தது 3 முதல் அதிக பட்சம் 6 ஆண்டுகள் வரை கூட, பிஎச்டி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால்,சமீபகாலமாக கல்வி வழிகாட்டி மையங்கள் என்ற பெயரில் ஆங்காங்கே தொடங்கப்பட்டுள்ள நிறுவனங்கள், அவர்களாகவே போன் செய்து, எம்பில், பிஎச்டி என ஆசைைய தூண்டி பணம் பறிக்கும் நடவடிக்ைககளை மேற்கொண்டு வருகின்றன.

Doctorates given for 10,000 bible institute

ஆய்வுக்கட்டுரைகளில் நடக்கும் ஊழல், மோசடி: இறுதியில் பெயர் தெரியாத பல்கலைக்கழக சான்றிதழ்களை வழங்கிவிடுகின்றன. இதற்கு பேராசிரியர்கள் பலரும் துணையாக இருந்து வருவதுதான் வேதனை. பணம் கொடுத்து வாங்கும் சான்றிதழை வைத்து பணியில் சேருபவர்களால், தரமான மாணவர்களை எவ்வாறு உருவாக்க முடியும்? எனவே மாநிலம் முழுவதும் உள்ள கல்வி வழிகாட்டி மையங்களை முறைப்படுத்த வேண்டும். இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஆனால், உண்மையில், இவர்களுக்கும், இதில் பங்கு உள்ளது. IHC, KHC, OHC, SIHC, TNHC, APHC, AIOC, முதலிய மாநாடுகள், காங்கிரஸுக்கு வரும் ஆய்வுக்கட்டுரைகளை தாராளமாக உபயோகப் படுத்திக் கொள்கிறார்கள்.

Meghalaya PhD sale

மேகாலயா பல்கலையில் பிஎச்டி பட்டத்துக்கு ரூ2-5 லட்சம்: மேகாலயாவில் உள்ள சிஎம்ஜே பல்கலைக்கழகம், ஏராளமானோருக்கு பணத்தை வாங்கிக் கொண்டு பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்கியிருப்பது தெரிய வந்துள்ளது[3]. ஒவ்வொரு பட்டப்படிப்பு சான்றிதழுக்கும் ஒவ்வொரு விலை வைத்து விற்பனை செய்திருக்கும் சிஎம்ஜே பல்கலைக்கழகத்தின் மூலம், நாக்பூரைச் சேர்ந்த பலர், போலி சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகப்படியான பிஎச்டி டிகிரியை வழங்கும் பல்கலைக்கழகமாக விளங்கி வந்த சிஎம்ஜே, 2 முதல் 5 லட்சங்களைப் பெற்றுக் கொண்டு இவ்வாறு பிஎச்டி டிகிரியை வழங்கி வந்துள்ளதை அம்மாநில காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்[4]. பணி நியமனம், பதவி உயர்வு போன்றவற்றுக்காக பலர் இதுபோன்ற போலி சான்றிதழைப் பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.

Bogus PhD 2008

போலி பி.எச்.டிக்கள் உருவாகும் விதம்: தலைப்பை மட்டும் மாற்றி, மற்றவர்களின் பி.எச்.டி கட்டுரைகளை அப்படியே ஈயடிச்சாம் காப்பியை விட மோசமாகக் கொடுக்கிறர்கள். அதாவது, தலைப்பு அட்டையை / காகிதத்தை மாற்றி தங்களது என்று ஆய்வுக்கட்டுரையைக் கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்லாது “தங்களது பி.எச்.டி ஆய்வுக்கட்டுரையை காப்பியடித்து இன்னவர் எழுதியுள்ளார் / ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார்” என்று வருடத்திற்கு 12 புகார்களும் வருகின்றன. அதாவது மாதத்திற்கு ஒரு புகார்! எப்படி பார்த்தாலும், கொடுக்கப்பட்டுள்ள பி.எச்.டிக்கள் ஏற்கெனவே ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டதைப் போன்றேயுள்ளன என்று ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். அதுமட்டுமல்லாது, மற்ற பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி ஆய்வுக்கட்டுரை / ஆய்வுரை சமர்ப்பிக்கும் போது, மிகவும் மோசமான நிலை தென்படுகிராது என்று மேற்பார்வையாளர்கள், வழிகாட்டிகள் மற்ற சம்பந்தப்பட்ட முனைவர்கள், பேராசிரியர்கள் அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறார்கள். ஆய்வு மாணவர்கள் மற்றவர்களின் ஆய்வுக்க் கட்டுரைகளை புரிந்து கொள்வதற்கு படிக்கலாமே தவிர மற்றபடி இவ்வாறு வெட்கம் இல்லாமல் அப்படியே ஈயடிச்சாம் காப்பி அல்லது வெட்டி-ஒட்டும் வேலை செய்வது மிகவும் கேவலமானது.

First post, Ph.d for sale

ஏஜென்டுகள், புரோக்கர்கள் வேலை செய்யும் விதம்: தில்லி போன்ற நகரங்களில், இது வியாபாரம் ஆகி விட்டது. இதற்கும் புரோக்கர், ஏஜென்ட் போறோர் அங்கங்கு இருந்து கொண்டு வேலை செய்கின்றனர்[5]. துணை ஆசிரியர் வேலைக்கு, பிச்.டி அவசியம் என்ற சரத்து வந்ததிலிருந்து, இந்த மோசடி அதிகமாகியுள்ளது. எந்த படிப்பு, எந்த தலைப்பு வேண்டுமானாலும், சொன்னால் போதும், 100, 200 பக்களுக்கு தயார் செய்து கொடுக்கிறார்கள். அதற்கேற்றப் படி 50,000/- முதல் 5,000,000 வரை பணம் வாங்கிக் கொள்கிரார்கள்[6]. குறிப்பாக சரித்திரம், சமூகவியல், பொருளாதாரம், பெண்ணியம், ஊடகவியல், இதழியல், போன்ற துறைகளை உருவாக்கிக் கொண்டு, அதில் மாணவர்களை வைத்துக் கொண்டு, எச்.ஓ.டி.யிலிருந்து, பியூன் வரை வேலை செய்கிறார்கள். போதாகுறைக்கு, கருத்தரங்கம், செமினார், மாநாடு, முதையவற்றை நடத்தி, அவற்றின் மூலம் வரும் ஆய்வுக் கட்டுரைகளை சேகரித்து, மாற்றி எழுதி, ஆய்வுக் கட்டுரைகளை உருவாக்குகிறார்கள். போதாகுறைக்கு சிடி, ஈ-மெயில் மூலம் வரும் ஆய்வுக்கட்டுரகளை அப்படியே உபயோகித்துக் கொள்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

11-09-2019

PhD for sale Krala Hindi prachar sabha 2011

[1] தினகரன், 5 லட்சத்துக்கு விரும்பிய பல்கலையில் முனைவர் பட்டம்: செல்போன் அழைப்பால் கல்வியாளர்கள் கடும் அதிர்ச்சி, 2019-09-11@ 00:18:04

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525113

 

[3] தினமணி, மேகாலயா பல்கலையில் பிஎச்டி பட்டத்துக்கு ரூ2-5 லட்சம், By dn | Published on : 04th June 2013 11:14 AM

[4] https://www.dinamani.com/latest-news/2013/jun/04/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF–689869.html

[5] FirstPost, PhD thesis for sale! Available at a corner store near IIT-D and JNU, May 05, 2015 12:33:36 IST

[6]  https://www.firstpost.com/living/phd-thesis-sale-available-corner-store-near-iit-d-jnu-2226956.html