Archive for the ‘திராவிடன்’ Category

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அதிரடி கைது, உடனடியாக ஜாமீனில் விடுதலை! (1)

திசெம்பர் 27, 2023

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அதிரடி கைது, உடனடியாக ஜாமீனில் விடுதலை! (1)

 

பல்கலைக்கழக ஊழல்கள், கைதுகள் சகஜமாகி விட்டன: தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுவதும், துணைவேந்தர்கள் கைதாவது என்பதெல்லாம் சகஜமாகி விட்டன. கல்வி, கல்வித் துறை, அல்கலைக் கழகம் என்றெல்லாம் வரும்பொழுது, ஏதோ ஒரு கோவில், புனிதமான இடம் என்றெல்லாம் மதிப்பு, மரியாதை, கௌரவம் என்றெல்லாம் இருந்தது. ஆனால், இப்பொழுதோ, ஏதோ செல்லக் கூடாத இடத்திற்கு செல்கிறோமோ, போனால் பிரச்சினை வருமோ அல்லது இருக்கும் பிரச்சினை பெரிதாகி விடுமோ என்ற அச்சமான சிந்தனைகளும் வருகின்றன. தமிழகத்தில் கடந்த 50-70 ஆண்டுகளில் கல்வியில் சிறந்தவர்கள் பெயரில் எதாவது பல்கலைக் கழகம் இருக்கிறதோ இல்லையோ, வரிசையாக, அண்ணா, கருணாநிதி, பெரியார், எம்லிஆர், ஜெயலலிதா என்று முதலமைச்சர்கள் பெயரில் உள்ளன. பிறகு, காந்தி, ராஜிவ் காந்தி, இந்திரா காந்தி, அம்பேத்கர் என்றும் உள்ளன. இவ்வாறு தான், சேலம் அருகே கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் உள்ளது[1]. இதன் கீழ் 120-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இயங்கி வருகிறது[2].

 

தொடந்து துணைவேந்தர்கள் கைது செய்யப் படுவது: தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஊழல் என்பது புதிதல்ல, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இரண்டு முன்னாள் துணைவேந்தர்கள் 2018 ஆம் ஆண்டில் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குநரகத்தால் (டிவிஏசி) [Directorate of Vigilance and Anti-Corruption (DVAC).] கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பதிவு செய்யப்பட்டனர். அதே ஆண்டில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, உதவிப் பேராசிரியர் பணியை முறைப்படுத்துவதற்காக ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். இங்கு, கடந்த 3 ஆண்டுகளில் 141 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பணிக்கும் ரூ.30 லட்சம் முதல் ரூ.55 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. கையூட்டு பெறப்பட்ட பணிக்கு தகுதியான பலர் விண்ணப்பித்திருந்தாலும் கூட, தகுதியற்ற பலர் தான் போலிச்சான்றிதழ் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர், இப்படி புகார்களும் செய்திகளும் வெளிவந்தன. பிப்ரவரி 28, 2016, ஓய்வு பெறும் நாளில், உதவி தாளாளர் சி. பெரியசாமி [Deputy Regitrar C Periyaswamy] சஸ்பென்ட் செய்யப்பட்டதாக, சுவாமிநாதன், துணைவேந்தர் [Dr S Swaminathan, Vice Chancellor] அறிவித்தது, திகிலடையச் செய்தது.

 

 2010 முதல் 2023 வரை பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊழல்: 2013-15 காலத்தில் செலவிற்கு என்று ரூ. 35 லட்சம் எடுத்துக் கொண்டதாகவும், ஆனால், இதுவரை கணக்குக் கொடுக்கவில்லை என்று குற்றம் சொல்லப்பட்டது[3]. அவர் கணக்கு காட்டாவிட்டால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப் படும் என்று அறிவித்தார். அவரது இடைக்கால நீக்கம் விலக்கிக் கொள்ளப் பட்டது என்ற செய்தி வந்தாலும், அந்த போலி ரசீதுகள் விவகாரம் என்னாயிற்று என்று சொல்லப்படவில்லை. போராட்டத்தாலும், முத்துச்செழியன், துணைவேந்தர் ஓய்வு பெற்றதால் அவர் மூன்று பேருக்க்கு வேலைமாற்றம் செய்ய பிறப்பித்த ஆணையை ரத்து செய்ததாலும், ஒப்புக் கொண்டு ரத்தானது என்று குறிப்பிட்டுள்ளது. “தி.இந்து” 2013 செய்தியை நவம்பர் 2016ல் திருத்தியுள்ள நிலையும் நிலைமை விளக்கப்படவில்லை[4]. உள்-மற்றும்-வெளி தணிகைக் குழுக்களின் அறிக்கைக்கள் கூட ஆவணங்கள் சரி பார்த்து மற்றும் கொடுத்த உரிய பதில்-விளக்கங்களை வைத்துத் தான் முடிவெடுப்பர், தமது, தணிக்கை-எதிர்ப்புகளை முடிவுக்கு எடுத்து வருவர். ஆனால், செய்திகள் பொது மக்களின் முன் வந்த பிறகு, காரணம் வெளியிடப்படாமல் இருப்பது, எதையோ மறைப்பதைப் போலத்தான் உள்ளது.

 

2021ல் பதவிக்கு வந்த ஜெகநாடன் மீது ஆரம்பத்திலிருந்தே புகார்: இந்த பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெகநாதன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்[5]. வந்ததிலிருந்தே அவருக்கு கை அரித்துக் கொண்டே இருந்தது போலும்[6]. சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது[7].  அந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை[8]. 2010லிருந்து நடக்கும் ஊழல் விவகாரங்களைக் கவனித்தால், இதுவும் அந்த வகையில் சேர்ந்து விடும் போலிருக்கிறது. சமீபத்தில் பணியாளர்கள் நிரப்புவதில் சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீடு பின்பற்றாதது, பல்கலைக்கழக பேராசிரியர் ஆராய்ச்சி படிப்பு மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன[9].  இதற்கெல்லாம் காரணம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பில் இருந்து வரும் பல்கலைக்கழக துணைவேந்த ஜெகநாதன் என்பது வெளிப்படையாக இருந்தும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை[10]. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருந்து நல்ல சேவை செய்தால் சரி, இத்தகைய ஊழல் செய்தாலும், அதிகாரம் சிறந்து விடுகிறது போலும். ஏற்கனவே 12 வகையான முறைகேடுகள் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்த, கடந்த ஜனவரி மாதம் 2023 தமிழக அரசு உயர்நிலை குழுவை அமைத்தது. அதன் பெயரில், உயர்நிலைக் குழுவினர் பெரியார் பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தினர்.

 

ஒரே மாதிரியான செய்தி- தலைப்புகள் வேறு: பாலியல் விசாரணை கமிட்டி போல, இத்தகைய விசாரணை கமிட்டிகளும் பெயரளவில், ஏதோ விசாரணை செய்து, விவகாரங்களை அமுக்கத் தான் பார்க்கிறது. கடந்த ஆண்டுகளில் நடந்த இதே போன்ற விவகாரங்கள், செய்திகள், மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒரே மாதிரியான முடிவுகளைத் தான் கவனிக்க முடிகிறது. இப்பொழுதும் அதே பாணியில் தான் செய்திகள் வெளிவந்துள்ளன. தலைப்புகள் தான், ஏதோ அவரவர்கள் பெரிதாக புலன் விசாரணை செய்து, எதையோ புதியதாகக் கண்டு பிடித்து விட்டால் போல, வகைவகையா போட்டு, அரைத்த மாவையே அரைத்துள்ளனர்:

Ø  துணைவேந்தர் அதிரடி கைது![11]

Ø  பெரியார் பல்கலைக் கழகம் துணைவேந்தர் அதிரடி கைது![12]

Ø  சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது![13]

Ø  துணைவேந்தர் அதிரடி கைது! காரணம் என்ன?[14],

Ø  பெரியார் பல்கலை. துணைவேந்தர் துணைவேந்தர் அதிரடி கைது! காரணம் என்ன?[15],

Ø  முறைகேட்டில் ஈடுபட்ட பெரியார் பல்கலை. துணைவேந்தர்… அதிரடியாக கைது செய்த காவல்துறை – பின்னணி என்ன ?[16],

Ø  அரசு ஆவணங்களை முறைகேடாக தயாரித்து அரசு பணத்தை தவறாக செலவிட்டதாக புகார்… துணைவேந்தர் கைது![17],

Ø  அரசு ஆவணங்களை முறைகேடாக தயாரித்து அரசு பணத்தை தவறாக செலவிட்டதாக புகார்… பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது![18]

Ø  முறைகேடு வழக்கில் கைதான பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு நிபந்தனை ஜாமின்![19],

Ø  சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் 7 நாட்கள் ஜாமீனில் விடுவிப்பு, 

Ø  காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்![20],

 

© வேதபிரகாஷ்

27-12-2023


[1] தினத்தந்தி, சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் 7 நாட்கள் ஜாமீனில் விடுவிப்பு,  டிசம்பர் 27, 8:25 am

[2] https://www.dailythanthi.com/News/State/salem-periyar-university-vice-chancellor-jagannathan-released-on-bail-for-7-days-1087524

[3] Salem Periyar University here has suspened its Deputy Regitrar C Periyaswamy on his retirement day on charges of misappropriation of funds to the tune of Rs 35, university sources said today.
Dr S Swaminathan, Vice Chancellor of the university said Periyaswamy used to withdraw amount from the university funds for making arrangements for examinations. But he has not provided accounts regarding the expenditure for the Rs 35 lakh he has withdran from 2013-15 till February 28. He was suspended on his retirement day. Unless proper accounts were given or reimburse the amount, crimial case will be booked against him, Swaminathan said.

Business Stanard, Deputy registrar suspendedPress Trust of India  |  Salem Last Updated at March 1, 2015 14:46 IST.

http://www.business-standard.com/article/pti-stories/deputy-registrar-suspended-115030100332_1.html

[4] The suspension of Head of the Physics Department and former Vice-Chancellor in-charge of Periyar University V. Krishnakumar has been revoked by the five-member Vice-Chancellor Convenor Committee (VCCC) on Friday.  He was placed under suspension by former Vice-Chancellor K. Muthuchelian in an order signed by him on September 6, the day before his last day in office as VC, following which there were protests condemning the suspension. On Friday, the VCCC members met on the varsity premises for their first sitting after the tenure of the former VC ended. The order that was signed by all members of the committee was handed over to Mr. Krishnakumar, after which he joined duty immediately. It stated that he had been reinstated to his original position. Members of the struggle committee, who organised the demonstrations, claimed that the VCCC members reportedly agreed to consider their other demand seeking cancellation of the transfer orders issued to three non-teaching staff by Mr. Muthuchelian towards the end of his tenure. They added that based on these developments they had decided to end their agitations on Friday.

The Hindu, Suspension of former V-C in-charge of Periyar University revokedSTAFF REPORTER, SALEM:, SEPTEMBER 14, 2013 09:37 IST;  UPDATED: NOVEMBER 11, 2016 05:47 IST.UPDATED: NOVEMBER 11, 2016 05:47 IST

http://www.thehindu.com/news/national/tamil-nadu/Suspension-of-former-V-C-in-charge-of-Periyar-University-revoked/article11868701.ece

[5] ஏபிபி.லைவ், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அதிரடி கைது! காரணம் என்ன?,,By: சதீஷ் குமார்,  Published at : 26 Dec 2023 05:58 PM (IST)| Updated at : 26 Dec 2023 06:24 PM (IST).

[6] https://tamil.abplive.com/news/tamil-nadu/vice-chancellor-of-salem-periyar-university-arrested-158048

[7] தினமணி, பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது!, By DIN  |   Published On : 26th December 2023 05:56 PM  |   Last Updated : 26th December 2023 07:59 PM.

[8] https://www.dinamani.com/tamilnadu/2023/dec/26/selam-periyar-university-vice-chancellor-arrested-4128966.html

[9] ஜெயாடிவி, அரசு ஆவணங்களை முறைகேடாக தயாரித்து அரசு பணத்தை தவறாக செலவிட்டதாக புகார்சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் அதிரடி கைது, Dec 27 2023 10:43 AM.

[10] http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_238677.html

[11] தமிழ்.வெப்துனியா, சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது, Written By Sinoj, Last Updated: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (18:22 IST).

[12]  https://tamil.webdunia.com/article/regional-tamil-news/salem-periyar-university-vice-chancellor-arrested-today-123122600075_1.html

[13] நியூஸ்.7.தமிழ், சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது!, by Web Editor, December 26, 2023.

[14] https://news7tamil.live/salem-periyar-university-vice-chancellor-arrested.html

[15] கலைஞர்.செய்திகள், முறைகேட்டில் ஈடுபட்ட பெரியார் பல்கலை. துணைவேந்தர்அதிரடியாக கைது செய்த காவல்துறைபின்னணி என்ன ?, KL Reshma, Updated on : 26 December 2023, 07:31 PM

[16] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2023/12/26/periyar-university-vice-chancellor-jagannathan-arrested-in-salem

[17] இ.டிவி.பாரத், காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்!, Last Updated: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (16:27 IST).

[18] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/salem/periyar-university-vc-jeganathan-appear-in-police-station/tamil-nadu20231227144630270270512

[19] ஜீ.நியூஸ், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைதுமுழு பின்னணி என்ன?,     Written by – Sudharsan G | Last Updated : Dec 26, 2023, 07:35 PM IST

[20] https://zeenews.india.com/tamil/tamil-nadu/salem-periyar-university-vice-chancellor-jaganathan-arrested-check-here-for-shocking-details-480000

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணி நீக்கத்தினால் கல்வித் திறன் மேன்படுமா, ஊழல் குறையுமா? (2)

நவம்பர் 19, 2023

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணிநீக்கத்தினால் கல்வித்திறன் மேன்படுமா, ஊழல் குறையுமா?  (2)

பணத்தினால் கல்வித்துறையில் எதனை அல்லது எதையும் சாதிக்கலாம்: கல்வியில் ஊழல் என்பது நினைத்துப் பார்க்க முடியாத்து என்று இருந்தது. ஆனால், இப்பொழுது நாறுகிறது.

  • முதலில் “கல்வி ஊழல்” என்பது பணம் இல்லாத பலன்களை மட்டுமே எதிர்பார்த்து நடந்து கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது பணம் தான் பிரதானமாக இருப்பதினால் பணத்தினால் எதையும் வாங்கிவிடலாம்,
  • “எதையும்” அதாவது கல்வியில் படிக்காமலேயே டிகிரி சர்டிபிகேட், சான்றிதழ், மார்க் லிஸ்ட், முதலிய பெற்று விடலாம்,  
  • அது மட்டும் இல்லாமல் பணத்திற்கு ஏற்ப இப்பொழுது அவற்றை பெறலாம், தேவைக்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்,
  • இல்லை தமக்கு பதிலாக ஒருவரை வைத்துக் கூட தேர்வு எழுதப்படலாம்.,
  • தேர்வு எழுதி வைத்துக் கொள்ளலாம், பாஸ் ஆகலாம்,
  • அதன்படியே சான்றிதழ் பெறலாம்
  • இவரெல்லாம் கூட மறைந்து, பிறகு அத்தகைய போலி அல்லது அதர்மமுறையில் பெறப்பட்ட சான்றிதழ்களை வைத்துக்கொண்டு வேலைக்கு செல்வது
  • அதிலும் என்ன புண்ணியமாக மிகச் சிறப்பாக நினைத்து வரப்படுகின்ற ஆசிரியர் வேலைகளுக்கு அத்தகைய அநியாயமான சான்றிதழ்களை கொடுத்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது

பிறகு அத்தகைய ஆசிரியர்கள் எவ்வாறு ஒழுக்கத்துடன், நியாயத்துடன், தர்மத்துடன் இருப்பார்கள், நடந்து கொள்வார்கள்.

யோக்கியம் இல்லாதவர்கள் கல்வித்துறையில் இருப்பதற்கு யார் காரணம்?: சமீபகாலமாக நடந்த முறைகேடுகளில் இரண்டு முறைகேடுகள், கல்வித் துறையின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கியுள்ளன[1].  அமைச்சர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்துவரும் நிலையில், ஊழலற்ற, நேர்மையான அடுத்த தலைமுறையை உருவாக்கவேண்டிய மாபெரும் பொறுப்பு கல்வித் துறைக்கு உண்டு[2], என்றெல்லாம் பேசவேண்டிய நிலை வந்து விட்டது. “கல்வித்துறை” என்றால் என்ன, அதில் உள்ளவர்கள் ஹகுதியுள்ளவர்களா என்று யோசிக்க வேண்டும். இன்று “சினிமாக்காரர்கள்,” கெட்ட-பஷை பேசுபவர்கள், யோக்கியதை இல்லாதவர்கள் உறிப்பினர்களாக இருக்கின்றனர். ஊழல்களில் சம்பந்தப்பட்ட துணைவேந்தர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாலும்,

  • அதற்கு அவர்கள் மட்டும்தான் காரணமா?
  • இந்த அளவுக்குக் கல்வித் துறையில் ஊழல் பெருக என்ன காரணம்?
  • ஒரு பல்கலைக் கழக துணைவேந்தர் தனியாக தவறு செய்ய முடியாது. கூட இருக்கும் பதிவாளர், டீன், சூப்பரவசைர்கள், வினாத்தாள் திருத்துபவர்கள், கணக்கர்கள் என சகலரையும் அதில் இணைத்தே செய்ய முடியும்![3]
  • லஞ்சம் வாங்குவது ஒரு பெருங்குற்றமல்ல என்ற மனநிலைக்கு அவர்கள் செல்வதற்கு என்ன காரணம்?
  • ஒழுக்கத்தை கற்க வேண்டிய இடத்தில் மாணவர்கள் ஊழலை கற்று வெளியேறுகின்றனர்[4]

ஒட்டுமொத்தக் கல்வித் துறையே பணம் சார்ந்த ஒன்றாக மாறிவிட்ட சூழலையும் இதனுடன் சேர்த்துப் பார்க்கவேண்டியுள்ளது.

சுயநிதிக் கல்லூரிகளின் வருகையில்கல்வி ஊழல் ஆரம்பித்தது: 1985-களில் சுயநிதிக் கல்லூரிகளின் வருகை ஆரம்பித்தது. அப்போதுதான் கல்வி வியாபாரமும் ஆரம்பமானது என்று கருத்துத் தெரிவிப்பது, அரசியல்வாதிகள் அதில் முதலீடு செய்ததனால் தான் என்ற உண்மையினை மறைக்கின்றனர். “அந்தக் காலகட்டத்தில் கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் நியமனத்தில் பங்குவகித்தனர். அப்போதும் சிறு சிறு பிரச்னைகள்  எழும். அதை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் எதிர்க்கப் பட்டுள்ளது,” என்று நாஜுக்காக குறிப்பிட்டுக் கொண்டாலும், ஊழல், ஊழல் தான், அதனை நியாயப் படுத்த முடியாது. ஆனால், அப்போது நடைபெறும் ஊழல்களைவிட பல மடங்கு மோசமான முறைகேடுகள் இப்போது நடைபெறுகின்றன, என்றும் ஒப்பீடு செய்ய முடியாது. கல்வி வியாபாரிகள் ஒருபக்கமும், வேலையை ஏலம்விடும் வியாபாரிகள் மறுபக்கமும் உள்ளனர். குறிப்பாக, அரசு வேலைகளை நம்பி தமிழ்நாடு தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் வாரியம் (TRB) மூலம் நடத்தப்படும் தேர்வுகளை எழுதிவிட்டு, ஏழை மக்கள் பலர்  வேலைவாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஊழல் மூலம் அவர்களது வாய்ப்பு பறிக்கப்படுகிறது. உயர்கல்வித் துறையின் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தொடங்கி இந்நாள் அமைச்சர் அன்பழகன் வரை உயர்கல்வித் துறையில் உரிய நடவடிக்கை எடுத்தார்களா என்பது கேள்விக்குறியே!

இதுவரை நடந்துள்ள கைதுகள் முதலியன: பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை, கைதானவர்கள் எதைப் பற்றியும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. இந்து அறநிலையத்துறை கைதுகள் போலத்தான் இதுவும் இருக்கிறது.கைதானவர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை.

  1. பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தற்கொலை செய்துகொண்டார். அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது.
  2. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வித் துறையில் ஊழல் நடைபெற்றது குறித்த செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகின.
  3. அரசு உதவி பெறும் கல்லூரிகளில், கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற நியமனங்களில் ஊழல் நடைபெற்றது குறித்து, ஆசிரியர் சங்கங்கள் போராடிவருகின்றன.
  4. பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனத்தில் நடைபெற்ற கோடிக்கணக்கான ரூபாய் ஊழல்தான் வெளியே வந்துள்ளன.
  5. துணைவேந்தர்கள் பலர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
  6. எஸ்.ஆர்.எம் கல்லூரியின் மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு குறித்தும் விவகாரங்கள் தெரிய வந் துள்ளன.

ஆசிரியர் பணிகள்விற்கவாங்கப் படுகின்றனவா?: துணைவேந்தர் பணி நியமனத்தில் கல்வியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு  ஊடகங்கள் கருத்துத் தெரிவித்தன. சமூகச் செயற்பாட்டாளர் பாலம் நாராயணன், இதற்காக வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு முன்னரே தனியார் மருத்துவக் கல்லூரியான பள்ளிக் கல்வி தொடங்கி பல்கலைக்கழகக் கல்வி வரை அனைத்து ஆசிரியர்  பணி நியமனங்களிலும் ஊழல் நடைபெற்றால், எப்படிப்பட்ட கல்வியை நாம் மாணவர்களுக்கு அளிக்கப்போகிறோம்? இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அரசு, பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவந்தாலும், ஆசிரியர் பணிகள் ஏலம்விடப்பட்டுக் கொண்டிருக்கும்போது அவை எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தும்? தனியார் கல்லூரியின் கட்டணக் கொள்ளையும் அரசு நிறுவனங்களின் ஊழலும் கல்வியை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இல்லாமல் செய்துவருகின்றன. பாரதியார் பல்கலைக்கழகம் மட்டுமன்றி, கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்துத் துணைவேந்தர் பணி நியமனங்களிலும் அரசு தலையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ஆசிரியர்உதவி பேராசிரியர்பேராசிரியர் பணம் கொடுத்து வாங்கப்படும் பதவிகளா?: எல்லா அரசுப் பணி நியமனங்களிலும் பணம் கொடுத்தால்தான் பதவி என்பதை வெளிப்படையாக அனைத்து மக்களும் பேசிக்கொள்கின்றனர். ஆசிரியர் பணி நியமனங்களிலும், துணைவேந்தர் பணி நியமனங்களிலும் என்ன மாதிரியான வெளிப்படைத்தன்மை இருக்கிறது? எதன் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுகிறது என்பது பற்றிய உண்மைத்தன்மையே இல்லை. இங்கு நடைபெறும் ஊழல் என்பது, வெறுமனே துணைவேந்தர் மட்டுமே சம்பந்தப்பட்டது கிடையாது; இது ஒரு பெரிய அங்கம்போல் செயல்படுகிறது. இதன் பின்னால் அரசியல்வாதிகள், அதிகாரிகள் எனப் பலர் இருப்பர். கல்வித் துறை, கடந்த பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதிக்கும் துறையாக மாறியிருக்கிறது. இதை ஊடகங்களும் பொதுமக்களும் பெரும் விவாதமாக மாற்றினால் மட்டுமே இந்தப் போக்கை மாற்ற முடியும்.

கல்விவியாபாரத்தால், கல்விஊழல் உண்டானதா?: கல்வி-கல்லூரி முதலாளிகளாக பல பணக்காரர்கள் வந்துவிட்ட கல்வித் துறை முழுக்கவே வியாபார மயமாகிவிட்டது. கிராமப்புற மாணவர்களும் ஏழை மாணவர்கள் பலரும் அரசுக் கல்லூரியை மட்டுமே நம்பி உயர்கல்வியை நோக்கிப் பயணிக்கின்றனர். பல்கலைக்கழகங்களில் நடக்கும் இதுபோன்ற ஊழல்கள், கல்வித் துறையின் மீதும் ஆசிரியர்கள் மீதும் உள்ள மதிப்பைக்  கெடுத்துவிடுகின்றன; `கல்வியின் மூலம் மட்டுமே தனக்கான வாழ்வை மீட்க முடியும், சமூகத்தில் நல்ல நிலையை எட்ட முடியும்’ என நம்பும் பல லட்சம் மாணவர்களையும் பெற்றோர்களையும் நம்பிக்கை இழக்கச் செய்கின்றன. இதுபோன்ற முறைகேடுகளைக் களையும் வகையில்  அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், ஒரு தலைமுறையே பாதிக்கும் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்!

© வேதபிரகாஷ்

18-11-2023.


[1] விகடன், கல்வித் துறையில் ஊழல்பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவந்தால் மட்டும் போதுமாதீர்வு என்ன?!, சக்தி தமிழ்ச்செல்வன், Published: 05 Feb 2018 7 PM; Updated:05 Feb 2018 7 PM.

[2] https://www.vikatan.com/education/115542-educational-activists-view-about-bharathiyar-university-vice-chancellors-corruption

[3] சாவித்திரி கண்ணன், ஊழலில் ஊறித் திளைக்கும் உயர்கல்வித் துறை!, அறம் இணைய இதழ், October 24, 2022.

[4] https://aramonline.in/10997/corruption-in-higher-education/

போன்–பே, கூகுள்-பே மூலம் எழை மாணவர்களிடம் லஞ்சம் பெறுவது திராவிட மாடலா, அத்தகைய பேராசிரியர்கள், முதல்வர்கள் திராவிட ஸ்டாக்குகளா?

செப்ரெம்பர் 28, 2023

போன்–பே, கூகுள்-பே மூலம் எழை மாணவர்களிடம் லஞ்சம் பெறுவது திராவிட மாடலா, அத்தகைய பேராசிரியர்கள், முதல்வர்கள் திராவிட ஸ்டாக்குகளா?

உதகை அரசு கல்லூரியில் எல்லாவித ஊழல்களும் மலிந்துள்ளது ஏன்?: நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு கலைக்கல்லூரி 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது[1]. இந்த கல்லூரியில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்[2]. இக்கல்லூரியில் பணியாற்றும் சில பேராசிரியர்கள் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்ததாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சை எழுந்த நிலையில், சில பேராசிரியர்கள் பெண் பேராசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் புகார் எழுந்தது[3]போலிச் சான்றிதழ், பாலியல் தொல்லை என அடுத்தடுத்த புகார்களில் சிக்கிய ஊட்டி அரசு கலைக் கல்லூரி, இப்போது மாணவர்களிடம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது[4]. ஊட்டி அரசு கலைக் கல்லூரியில், நான்காயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனர்[5]. இந்த நிலையில், மாணவர் சேர்க்கை, துறை மாற்றம், மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட விஷயங்களில் கல்லூரிப் பேராசிரியர்கள் சிலர் மாணவர்களிடம் லஞ்சம் பெறுவதாக கூகுள் பே ஸ்க்ரீன் ஷாட் மற்றும் ஆடியோ ஆதாரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது[6].

பழங்குடிகள் போன்ற மாணவர்களிடமே லஞ்சம் வாங்கும் மாடலை என்னவென்பது?: உயர்கல்விக்கான வசதி வாய்ப்புகளை, குறைவாகக்கொண்டிருக்கும் மலை மாவட்டமான நீலகிரியில், அரசுக் கல்லூரிகளை நம்பியே பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர்[7]. அதிலும் குறிப்பாக, பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஊட்டி அரசு கலைக் கல்லூரி, மாவட்டத்தின் முக்கிய கல்லூரியாக இருந்துவருகிறது[8]. பிறகு, “பாரதியார்” பெயரை வைத்துக் கொண்டாலும் சமத்துவம், சமநீதி, சமூகநீதி என்பதெல்லாம் கிடைக்காது போலும். பழங்குடிகள், தோட்டத் தொழிலாளர்கள் என வறுமையான பின்னணியைக்கொண்ட முதல் தலைமுறை மாணவ, மாணவிகள் அதிகம் பயின்றுவருகின்றனர். இந்தக் கல்லூரியின் முதல்வராக அருள் அந்தோணி கடந்த ஜூன் மாதம் 2022 பொறுப்பேற்றுக்கொண்டார்.‌ இந்த அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை, துறை மாறுதல், தங்கும் விடுதி வசதி போன்றவற்றுக்கு மாணவ, மாணவிகளிடம் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் சிலர் ஆயிரக்கணக்கில் லஞ்சமாகப் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன[9]. அப்படியென்றால் அருள் அந்தோணி வந்தவுடன் அதிகமானதா என்ற கேள்வியும் எழுகின்றது. மேலும், லஞ்சம் வாங்கியதற்கான ஆடியோ, ஸ்க்ரீன் ஷாட் எனச் சில ஆதாரங்கள் இணையத்தில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின[10].

வாட்ஸ்-அப், ஊடகம், லஞ்ச செய்தி பரவியது: இவற்றை அடிப்படையாகக்கொண்டு ஜூனியர் விகடன் இதழில் வாட்ஸ்அப் கூகுள் பே வழியே லஞ்சம்! – மாணவர்களிடம் பணம் பறித்த பேராசிரியர்கள்?’ என்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்டிருந்தனர். ஆனால், அதிலும் வியாபாரம் தான் மேலோங்குகிறது. அக்க்கட்டுரை “பிரீமியம்” காசு கொடுத்தால் தான் படிக்க முடியும் என்கிறார்கள். அப்படியென்றால், அதுவும் ஒருவித லஞ்சம் எனலாம். இந்த நிலையில், ஜூனியர் விகடன் கட்டுரையின் எதிரொலியாக, கல்லூரி கல்வி இயக்கத்தின் கோவை மண்டல இணை இயக்குநர் கலைச்செல்வி தலைமையில், ஊழல் புகார் குறித்து விசாரணை நடைபெற்றது, என்று அவ்வூடகம் பெருமைப் பட்டுக் கொள்கிறது. இந்த நிலையில், ஆதிதிராவிடர் மாணவர்களை அரசு தங்கும் விடுதியில் சேர்க்க, கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியாகி, பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

மாணவர்கள் சொல்வது: இந்த வீடியோ குறித்துப் பேசிய கல்லூரி மாணவர்கள் சிலர், “நடப்பு கல்வியாண்டில் ஊட்டி கல்லூரியில் ஏகப்பட்ட ஊழல் நடந்திருக்கிறது[11]. அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்திருக்கிறார்கள்[12]. பலருக்கு ரசீதும் கொடுக்கவில்லை. ஆதிதிராவிட மாணவர்களுக்கான ஹாஸ்டல் வசதிக்கு 10,000 ரூபாய் வரை வாங்கியிருக்கிறார்கள். ஒரு மாணவரிடம் 3,000 ரூபாய் கவரில் வாங்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. முதல்வர் மட்டுமல்ல, பேராசிரியர்கள் சிலரும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். முறையான விசாரணை நடத்தினால் பலரும் சிக்குவார்கள்” என்றனர். இந்த லஞ்சப் புகார் குறித்து ஊட்டி அரசு கலைக் கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி, “மாணவர்களின் கல்விக் கட்டணத்தை கவரில் வாங்கினேன். லஞ்சம் எனச் சொல்கிறார்கள்,” எனத் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கோவை மண்டல இணை இயக்குநர் கலைச்செல்வி, “கல்லூரியில் நடைபெறும் லஞ்சப் புகார் குறித்து ஏற்கெனவே விசாரணை நடைபெற்றுவருகிறது. தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ குறித்தும் விசாரணை நடத்தப்படும்” என்றார்.

நடவடிக்கை எடுக்கப் பட்டது என்ன?: ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுக் கல்லூரியில், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் லஞ்சம் வாங்கியதாக அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள் சர்ச்சையைக் கிளப்பின.  இக்கல்லூரியில் பணியாற்றும் தாவரவியல் பேராசிரியர் ரவி என்பவர், மாணவர்கள் வேறு துறைக்கு மாறி செல்ல 5 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது[13]. இது தொடர்பாக மாணவர்கள் அவருடன் பேசிய செல்போன் உரையாடல்கள் மற்றும் ஜி பே செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்[14]. ஆகவே, இனி வேறு வழியில்லை என்ற நிலையில், விசாரணை தொடர்ந்தது. விவகாரம் பெரிதாகாமல் இருக்க வேண்டும் என்பதால், இங்கேயே இதனை சரிகட்ட முயற்சி மேற்கொள்ளப் பட்டது போலும். சாதாரண வழி, “பணியிடை மாற்றம்,” சஸ்பெண்ட் முதலியன.

டெக்னோலாஜி வளர்ந்தால், ஊழலும் அதே போல வளர்கிறது:  மாணவர்களிடமே பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் விசாரணை மேற்கொள்ளப் பட்டது[15]. கல்லூரியின் முதல்வரும், இணைப் பேராசிரியர் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்[16]. இவையெல்லாம் வழக்கமான செய்திகளாகி விட்டன[17]. ஒருசில நாட்களில் மறக்கப்படும்[18]. இவர்களுக்கு எப்படித் தான் ஏழை மாணவர்களிட கூட லஞ்சம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது என்று தெரியவில்லை. இதைப் பற்றி விசாரித்த பிறகு, செல்போன் மற்றும், பணபரிமாற்றம் முதலியவை மெய்ப்பிக்கப் பட்டன. தனால், மாணவர்களின் பணம் அவர்களுக்குச் சென்றுள்ளது என்பதும் மெய்ப்பிக்கப் பட்டது. ஆக, இத்தகைய “பே” போன்ற மின்பரிமாற்றங்களும் லஞ்சத்திற்கு உபயோகப் படும் மற்றும் நன்றாக மாட்டிக் கொள்வார்கள் என்றும் தெரிகிறது. இருப்பினும் மெத்தப் படித்த முதல்வர், பேராசிரியர் போன்ரோர் இத்தகைய கல்வி-ஊழல்களில் ஊறியிருப்பது, இதிலும் லஞ்சம் வாங்குவது எல்லாம், மிகப் பெரிய கோரமான குற்றங்களாகவே தெரிகின்றன.

© வேதபிரகாஷ்

28-09-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் பணம் கேட்கும் வீடியோ வைரல்: கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை, By: பிரசாந்த் | Published at : 28 Sep 2023 11:34 AM (IST). Updated at : 28 Sep 2023 11:34 AM (IST).

[2] https://tamil.abplive.com/news/coimbatore/education-department-officials-investigating-the-video-of-ooty-government-arts-college-principal-asking-money-142521

[3] ஜீ.நியூஸ், Crime In Tamil Nadu | மாணவர்களிடம் 5000 – 20000 ரூபாய் வரை லஞ்சம் பெற்ற பேராசிரியர், Written by – Shiva Murugesan | Last Updated : Sep 22, 2023, 01:13 PM IST

[4] https://zeenews.india.com/tamil/tamil-nadu/omg-professor-who-took-bribes-of-rs-5000-to-20000-from-college-students-464903

[5] விகடன், வாட்ஸ்அப், கூகுள் பே வழியே லஞ்சம்! – மாணவர்களிடம் பணம் பறித்த பேராசிரியர்கள்?, சதீஸ் ராமசாமி, கே.அருண், Published: 20 Sep 2023 12 AM; Updated: 20 Sep 2023 12 AM;

[6] https://www.vikatan.com/crime/money/professors-bribery-from-students

[7] தினமலர், மாணவர்களிடம் பணம் வசூலித்ததாக புகார் :அரசு கலை கல்லூரியில் விசாரணை, பதிவு செய்த நாள்: செப் 22,2023 22:46.

[8] https://m.dinamalar.com/detail.php?id=3438048

[9] விகடன், மாணவர்களை விடுதியில் சேர்க்க லஞ்சம் வாங்கினாரா ஊட்டி அரசுக் கல்லூரி முதல்வர்?- வீடியோவும் விளக்கமும், சதீஸ் ராமசாமி, கே.அருண், Published: 27-09-2023 at 7 PM; Updated: 27-09-2023  at 7 PM.

[10] https://www.vikatan.com/crime/ooty-arts-college-principal-video-controversy

[11] தமிழ்.ஒன்.இந்தியா, ஹாஸ்டலில் சேர ரூ.10,000 லஞ்சம்.. பரவிய ஷாக் வீடியோ! உதகை அரசு கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்!, By Vignesh Selvaraj Published: Thursday, September 28, 2023, 12:20 [IST]

[12] https://tamil.oneindia.com/news/nilgiris/government-college-principal-and-professor-suspended-for-getting-bribe-from-students-543133.html

[13] காமதேனு, மாணவர்களிடம் லஞ்சம்பேராசிரியர் மீது பரபரப்பு புகார்!, Updated on: 23 Sep 2023, 7:45 pm.

[14] https://kamadenu.hindutamil.in/crime-corner/bribe-complaint-on-government-college-professor

[15] நக்கீரன், மாணவர்களிடம் 10,000 ரூபாய் லஞ்சம் பெற்ற கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 28/09/2023 (12:21) | Edited on 28/09/2023 (12:37)

[16] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/college-principal-suspended-accepting-rs-10-bribe-students

[17] தமிழ்வெப்துனியா, லஞ்சம் பெற்ற புகாரில் கல்லூரி முதல்வர், பேராசிரியர் சஸ்பெண்ட், வியாழன், 28 செப்டம்பர் 2023, 14;!2 IST.

[18] https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/college-principal-professor-suspended-on-bribe-complaint-123092800043_1.html

புத்தகங்களிலிருந்தும் சனாதனத்தை நீக்குவோம் – கல்வி அமைச்சரின் அறிக்கை அரசியலா, படிப்பிலும் மூக்கை நுழைக்கும் போக்கா, கல்வித்துறை சீரழியும் பாதைக்கு செல்கிறதா?

செப்ரெம்பர் 27, 2023

புத்தகங்களிலிருந்தும் சனாதனத்தை நீக்குவோம் – கல்வி அமைச்சரின் அறிக்கை அரசியலா, படிப்பிலும் மூக்கை நுழைக்கும் போக்கா, கல்வித்துறை சீரழியும் பாதைக்கு செல்கிறதா?

சனாதன பற்றிய சர்ச்சை: சனாதனம் குறித்து இடம்பெற்றுள்ள பள்ளி பாடப்புத்தகம் அடுத்தாண்டு மாற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இப்பொழுது 26-09-2023 அன்று அறிவித்துள்ளார். இம்மாதம் முதல் வாரத்திலிருந்து, உதயநிதி பேசிய இந்துவிரோத, சனாதன ஒழிப்புப் பேச்சு, தமிழகம் மற்றுமல்லாது, இந்தியா முழுவதும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. ஒரு பக்கம், உதயநிதிக்கு ஒன்றும் தெரியாது, உளறியிருக்கிறார் போன்ற கருத்தை வெளிப்படுத்தினாலும், தொடர்ந்து அவர் பேசி வருவது, பல நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. சென்னையில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி [02-09-2023] நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மலேரியா, டெங்கு போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளது தெரிந்த விசயமே. இது நாடு முழுவதும் பெரும் எதிர்வினையை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்து அமைப்பினர் மற்றும் பாஜக கடுமையான கண்டன கணைகளை வீசனர். போலீஸில் புகார், நீதிமன்றங்களில் வழக்குகள் என்றும் நிலுவையில் உள்ளது.

தமிழக அரசின் பாடபுத்தகத்தில் சனாதனத்தைப் பற்றிய விளக்கம் காணபடுகிறது: இந்நிலையில், 12 ஆம் வகுப்பு அறவியலும் இந்தியப் பண்பாடும் என்ற புத்தகத்தில் 58 ஆவது பக்கத்தில் சனாதனம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது[1]. இந்தியப் பண்பாடும் சமயங்களும் என அமைந்த பாடத்தில் இந்து என்னும் சொல்லின் பொருள் என கொடுக்கப்பட்ட பத்தியில் சனாதனம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது[2]. அதில், “இந்து அல்லது ‘ஹிந்து’ என்ற சொல்லை ஹிம்+து எனப்பிரிக்கலாம்[3]. ஹிம் – ஹிம்சையில், து–துக்கிப்பவன் எனப் பொருள்படும்[4]. ஓர் உயிர் எந்த காரணத்தினாலாவது துயரப்படுவதாக இருந்தால், அத்துயரத்தைத் தனக்கேற்பட்ட துயரமாகக் கருதி, அகற்ற முன் வருபவனே இந்து ஆவான். அப்பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும். இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

சனாதன தருமம்‘, வர்ணாசிரம தர்மம் முதலியன:  ‘சனாதன தருமம்‘ என்றால் ‘அழிவில்லாத நிலையான அறம்’ எனப்படும். இது வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால் ’வேத சமயம்’ என்றும், வேதநெறிகளையும் சாத்திரங்களையும் மையமாகக் கொண்டுள்ளதால் வைதீக சமயம் எனவும் அழைக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 59 ஆவது பக்கத்தில் இந்து தர்மம் எனும் தலைப்பில் சமூகக் கடமைகள் (வர்ணாசிரம தர்மம்) எனும் உபதலைப்பில், “இந்துசமயம் ஒவ்வொரு மனிதனும் அவன் சார்ந்துள்ள சமூகத்திற்கெனச் சில கடமைகளை ஆற்றவேண்டும் எனக் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையில் சமூகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவையாவன பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆவார். இவை சமூகத்திற்கான தொழில் கடமைகளேயாகும். இவற்றில் உயர்வு தாழ்வு கிடையாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் வெளியிடப் பட்டது, ஆனால் 2023லும் தொடர்கிறது: இத்தகைய வாக்கியங்கள் 2019ல் வெளியான முதல் பதிப்பிலும், அதனைத் தொடர்ந்து வெளியான 2020 மற்றும் 2022 திருத்தப்பட்ட பதிப்புகளிலும் இடம்பெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் முதல் பதிப்பு வெளியாகி இருப்பினும் கடைசியாக வந்துள்ள பதிப்பின் போது ஆட்சியில் இருந்தது திமுக என்பது குறிப்பிடத்தக்கது. திமுக அரசும் தமிழக அமைச்சர்களும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருகையில் அரசின் பாடத்திட்டத்தில் சனாதன தர்மம் என்பது அழிவில்லாத நிலையான அறம் என குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதை பிஜேபி தலைவர் அண்ணாமலை எடுத்துக் காட்டினார்[5]. பாட புத்தகத்தில் அண்ணாமலை குறிபிட்ட சனாதன தர்மத்தை பற்றிய வரிகள் அடுத்த கல்வியாண்டில் நீக்கப்படும். சுட்டிக்காட்டிய அண்ணாமலைக்கு நன்றி, என்று. – தமிழ்நாடு பாடநூல் தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்[6].

சனாதனம் என்றால் என்ன? –பள்ளி புத்தகத்தில் சனாதன பாடம்: தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளி பாடநூலில் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு இரண்டு வாரங்களுக்கு முன்னர் மேலெழுந்திருந்தது சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் பேசிய நிலையில், அரசு வெளியிட்ட பள்ளி புத்தகத்தில் சனாதனம் குறித்த பாடம் இருந்தது பெரும் விவாதப் பொருளானது. 12 ஆம் வகுப்பிற்கான “அறிவியலும் இந்தியப் பண்பாடும்” என்னும் புத்தகத்தில் வேதகால பண்பாடு என்னும் பாடத்தில் சனாதனம் குறித்து பாடம் இடம்பெற்றுள்ளது. 12 ஆம் வகுப்பிற்கான பாடப்புத்தகத்தில் சனாதனம் என்றால் என்ன? என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்து மதம் என்பதை சனாதனம் என்று கூறுவாரும் உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சனாதனம் என்றால், அழிவில்லாத அறம் என்று பொருள் என 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அதிமுக காலத்தில் பாடப்புத்தகத்தில் இருந்து சனாதனம் திமுக காலத்தில் தொடர்ந்தது ஏன்?: ஏற்கெனவே பாடபுத்தகத்தில் உள்ளது என்றால், அதற்கான ஆசிரியர் குழு உட்கார்ந்து, படித்து, பிறகு தான் எழுதியிருப்பார்கள். அந்நிலையில், நாளைக்கு அவர்களும் தாங்கள் எழுதியது சரியானது தான் என்று ஆதாரங்களைக் காட்டலாம். எனவே இவற்றையெல்லாம் மீறி, திமுக அரசு செயல்படுமா என்று கவனிக்க வேண்டும். சோஷியல் மீடியாக்களில் இது தொடர்பான வாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், “இந்த புத்தகம் கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் அச்சடிக்கப்பட்டது[7]. எனவே தமிழக அரசு இதனை மாற்ற வேண்டும்” என்றும் கோரிக்கைகள் எழுந்தன[8]. யார் கோரிக்கைகளை வைத்தனர், அவர்கள் என்ன பாடத்தை எழுதியவர்களை பெரிய ஆசிரியர்களா, பண்டிதர்களா என்பதை சரிபார்க்க வேண்டும். தமிழ்நாடு அமைச்சர்களும் சனாதன எதிர்ப்பில் உறுதியாக இருக்கின்றனர்[9], என்று சில ஊடகங்கள் எழுதி வந்தாலும், ஸ்டாலின் இதைப் பற்றி பேசவில்லை. மாறாக, டி.ஆர்.பாலு கண்டித்திருக்கிறார்.

பாடப்புத்தகத்தில் இருந்து சனாதனம் நீக்கம்?: இந்நிலையில் சென்னையில் தமிழோடு விளையாடு என்ற தமிழ் மொழி விளையாட்டு நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்[10]. அப்பொழுது ஊடகத்தினர் இப்பிரச்சினையை எழுப்பினர்[11]. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடப்புத்தகம் மாற்றப்படுகிறது என்றார்[12]. அதன்படி, கடந்த 2018 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புத்தகத்தில் சனாதனம் குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது என்று கூறினார்[13]. அதாவது, வழக்கம் போல முந்தை அரசு என்ற பாணியில் பேசியுள்ளது தெரிகிறது[14]. அடுத்தாண்டு இந்த புத்தகங்கள் மாற்றப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 2018ல் கொண்டு வரப் பட்டது என்றால், 2023ல் மாற்றப் பட்டிருக்க வேண்டும். ஆனால், மாற்றப் படவில்லை. அதாவது, அபொழுது அத்தகைய எண்ணமும் இல்லை, திட்டமும் இல்லை. இப்பொழுது, அரசியல் ஆகப்ப்பட்டு விட்டதால், அத்தகைய நிலை வலுக்கட்டாயமாக எழுப்பப் பட்டுள்ளது. இருப்பினும், அவ்வாறு பாடங்களை மாற்ற முடியுமா என்ற கேள்வியும் எழுகின்றது. உரிய கல்வியாளர்கள், அறிஞர்கள் தலையிட்டு இத்தகைய முயற்சிகளைத் தடுக்க வேண்டும், என்.சி.ஆர்.டி பாடங்களை மாற்றுகிறது என்றால், எதிர்ப்பு தெரிவிக்கப் படுகிறது. இப்பொழுது என்னாகும் என்று கவனிக்க வேண்டும்.  

© வேதபிரகாஷ்

27-09-2023


[1]  புதியதலைமுறை, 12ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சனாதனம்; சுட்டிக்காட்டி சேகர்பாபு,உதயநிதிக்கு அட்வைஸ் சொன்ன அண்ணாமலை!,  Angeshwar G, Published on : 12 Sep 2023, 8:41 pm.

[2] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/texts-about-sanathanam-in-12th-lesson-annamalai-advised-udhayanidhi

[3] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Sanathanam: ‘சனாதனம் என்றால் அறம்!’ அரசின் பாடபுத்தகத்தால் வெடித்தது சர்ச்சை!, Kathiravan V • HT Tamil, Sep 12, 2023 04:04 PM IST.

[4] https://tamil.hindustantimes.com/tamilnadu/controversy-over-tamil-nadu-governments-textbook-on-sanathanam-131694514389887.html

[5] ஆசிரியர்.3,சனாதன தர்மத்தை பற்றிய வரிகள் அடுத்த கல்வியாண்டில் நீக்கப்படும்தமிழ்நாடு,  asiriyar3  September 15, 2023  TEXT BOOKS,

[6]  http://www.asiriyar.net/2023/09/blog-post_15.html

[7] தமிழ்.நியூஸ்.18, பாடப்புத்தகத்தில் இருந்து சனாதனம் நீக்கம்? – அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு, First published: September 26, 2023, 21:41 IST;  LAST UPDATED : SEPTEMBER 26, 2023, 21:49 IST.

[8] https://tamil.news18.com/tamil-nadu/sanathanam-syllabus-in-school-book-will-change-next-year-1171913.html – gsc.tab=0

[9] தமிழ்,ஒன்.இந்தியா, தமிழக பாடபுத்தகத்தில் சனாதன கருத்துக்கள்.. எப்போது மாற்றப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம், By Halley Karthik, Published: Tuesday, September 26, 2023, 19:38 [IST]

[10] https://tamil.oneindia.com/news/chennai/minister-anbil-mahesh-has-said-that-sanatana-concepts-in-textbooks-will-be-removed-next-year-542665.html

[11] மின்னம்பலம், சனாதனம் குறித்த பாடம் நீக்கப்படுமா? – அன்பில் மகேஷ் பதில்,செப்டம்பர்.27, 2023. 10.03

[12] https://minnambalam.com/political-news/lesson-about-sanathanam-is-removed-anbil-mahesh/

[13] தமிழ்.எக்ஸாம், தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம்அமைச்சர் அறிவிப்பு!, By Sivarangani -September 27, 2023.

[14] https://tamil.examsdaily.in/tamilnadu-school-students-syllabus-changed-from-next-year/

அரசியல்

திருவள்ளுவர் பல்கலைக் கழகம் -டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக் கழகம் தோற்றமும், மறைவும் – தொடர்ந்து நடந்து வரும் ஊழல்கள், என்ன சம்பந்தம்?

செப்ரெம்பர் 17, 2023

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் தோற்றமும், மறைவும்தொடர்ந்து நடந்து வரும் ஊழல்கள், என்ன சம்பந்தம்?

05-09-2023 திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஊழல், ஊழல்புகார்கள் பற்றி விசாரணை: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஊழல், ஊழல்புகார்கள், போராட்டங்கள் என்று நடந்து கொண்டிருப்பது[1]. அந்த திருவள்ளுவர் பெயருக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது[2]. வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்காட்டிலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2015ல் நடந்த ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்[3]. ஆனால், பல விவரங்கள் பொது மக்களிடமிருந்து மறைக்கப் படுகின்றன. இதில், பல்கலைக்கழகத்தில், 112 கோடி ரூபாய் அளவிற்கு நிதி நிர்வாக முறைகேடு நடந்ததாகவும், பல்கலைக்கழகத்திற்கு கொள்முதல் செய்த, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, தமிழ்நாடு ஒப்பந்த வெளிப்படுத்த தன்மை சட்டத்தை மீறி, பல்கலைக்கழகத்திற்கு பண இழப்பு ஏற்படுத்தியது மற்றும் பல்கலைக்கழக தேர்வு முறைகேடு உள்ளிட்டவைகள் குறித்து புகார் அளிக்கப்பட்டது[4]. அதன் அடிப்படையில் 05-09-2023 அன்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை கூடுதல் செயலர் இளங்கோ ஹென்றி தாஸ் விசாரணை நடத்தினார்[5]. விவரங்கள் என்னவென்று தெரியவில்லை. மேலும், மனுதாரரான முன்னாள் பேராசிரியர் இளங்கோவனிடம் விசாரணை நடத்தப்பட்டது[6]. இங்கும் விவரங்கள் தெரிவிக்கப் படவில்லை. பிடிஐ பாணியில் ஊடகங்களில் ஒருசில வரிகளில் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.

02-08-2023 – திருவள்ளுவர் பல்கலையில் ஏராளமான முறைகேடு; பேராசிரியர்கள், ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!:  02-08-2023 அன்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் அதிகளவில் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி ஊழியர்கள் மற்றும் உறுப்புக் கல்லூரி பேராசிரியர்கள் பறை இசைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[7]. பல்கலைக்கழகத்தில் லஞ்சம், முறைகேடுகள் அதிகரித்து விட்டதாகவும், இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழு விசாரணை நடத்தி 12 மாதங்களாகியும் இதுவரை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றும், உடனடியாக அந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தனர்[8].

டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் தோற்றமும், மறைவும்: அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா 2021 பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த கல்வியாண்டு முதலில் புதிய டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கப்பட்டது. ஆனால், மாநில சட்டமன்றத் தேர்தலின் காரணமாக இந்தத் திட்டம் தாமதமானது, பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் முடிக்கப்படவில்லை. தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்ததன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 05ஆம் நாள் இதற்கான சட்ட முன்வரைவினை உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் தாக்கல் செய்தார். இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக முனைவர் எஸ். அன்பழகன் மார்ச் 01 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இப்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட கலை அறிவியல் கல்லூரிகள் வரும். வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் உயர் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்ததும், இப்பல்கலைக்கழகம் மூடப்பட்டது: அப்போதைய அ.தி.மு.க அரசு. அந்த நேரம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த துரைமுருகன், “திருவள்ளுவர் பல்கலைக்கழகம் நான் கொண்டுவந்தது. அதை எந்தக் காரணத்துக்காகவும் பிரிக்கவிட மாட்டேன். புதிதாக வேண்டுமானால், பல்கலைக்கழகத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்’’ என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இம்மாவட்டங்களில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் பிரிக்கப் பட்டன. முழுமையாக செயல்படாமல் இருந்த இப்பல்கலைக்கழகம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இதற்கான சட்டமுன்வடிவானது ”2021ம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் திருத்தம் மற்றும் நீக்கறவு சட்டம்” என்பதை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். இந்தநிலையில், தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, ஜெயலலிதா பல்கலைக்கழகம் முடக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அ.தி.மு.க தலைவர்கள் கொந்தளிக்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும்விதமாக, துணை வேந்தரைத் தவிர்த்து மற்ற அனைத்துப் பொறுப்புகளுமே காலியாகத்தான் வைக்கப்பட்டிருக்கின்றன[9].  பொது மக்கள், “பல்கலைக்கழகத்தைப் பிரித்ததில், தி.மு.வுக்குக் கோபமில்லை. ஜெயலலிதா பெயர் சூட்டியிருப்பதுதான் பிடிக்கவில்லை. ஏட்டிக்குப் போட்டியாக, கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் மாற்றப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. இரண்டு கட்சிகளுக்குமான அரசியல் காழ்ப்புணர்ச்சியால், மூன்று மாவட்டங்களிலுள்ள கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விதான் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்,’’ என்கிறனர்[10].

குற்றங்கள், சீரழிவுகள் டிவி-சீரியல் போன்று காண்பிக்கப் படுகின்றன: இவையெல்லாம் தனித்தனி செய்திகளாக இருந்தாலும், சம்பந்தம் இருக்கிறது. ஒரு பல்கலைக் கழகம் ஆரம்பிப்பது என்பது சாதாரணமான விசயம் கிடையாது, அதிலும் முதலமைச்சர் பெயரில் ஆரம்பித்து உடனே மூடு விழா செய்யப் படுவது, அதிலும் அசாதாரணமன விசயம் ஆகும். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதனை செய்துள்ளது. அதிமுகவும் அதை பெரிதாக எதிர்த்ததாகத்தெரியவில்லை[11]. ஆனால், திமுக-அதிமுக கட்சிகளுக்குள் இருக்கும் விருப்பு-வெறுப்பு, போட்டி-பொறாமை முதலியவற்றிற்கும் மேலாக ஏதோ ஒன்று இருப்பது தெரிகிறது[12]. கல்வியை சக்காக வைத்துக் கொண்டு அரசியல் செய்து, பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை மறைக்க முடியாது. திடீரென்று தமிழக்த்தில் எல்லா பல்கலைக்கழகங்களில் ஊழல் ஏற்பட்டுள்ளது,ஏற்படுகிறது, கைது, விசாரணை, வழக்கு என்றெல்லாம் நடந்து ஒண்டிருப்பதை கவனித்து வர முடிகிறது. பிறகு, இந்த நடவடிக்கைகளில்,செயல்பாடுகளில், பலநிலைகளில் செலவழிக்கப் பட்ட கோடிக்கணக்கான பணத்தைப் பற்றி யார் கவலைப் படுவது? பொதுவாக மக்கள் அரசியலைக் கூட இன்று, டிவி-சீரியல் போன்று பார்க்க ஆரம்பித்து விட்டனர். அதில் நடக்கும் குற்றங்கள் முதலியவை பார்த்து-பார்த்து,கேட்டு-கேட்டு மரத்துப் போகிறது. அவை மறக்கவும் படுகின்றன.

© வேதபிரகாஷ்

17-09-2023


[1] தினத்தந்தி, முறைகேடுகள் தொடர்பாக உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் விசாரணை , செப்டம்பர் 5, 11:19 pm

[2] https://www.dailythanthi.com/News/State/higher-education-additional-secretary-inquiry-into-irregularities-1046282

[3] மாலைமலர், முறைகேடு நடந்ததாக புகார்: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் விசாரணை, ByMaalaimalar .5 செப்டம்பர் 2023 1:32 PM.

[4] https://www.maalaimalar.com/news/state/allegation-of-malpractice-investigation-by-additional-secretary-department-of-higher-education-thiruvalluvar-university-658795

[5] தினமலர், திருவள்ளுவர் பல்கலை.,யில் ஊழல்: அதிகாரி விசாரணை, செப்டம்பர், 07,2023,09:13 IST

[6] https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=58971&cat=1

[7] இடிவி.பாரத், திருவள்ளுவர் பல்கலையில் ஏராளமான முறைகேடு; பேராசிரியர்கள், ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!,Published: Aug 3, 2023, 6:38 AM.

[8] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/vellore/thiruvalluvar-university-teaching-and-non-teaching-staffs-protest-against-administration/tamil-nadu20230803063809297297569

[9] விகடன், பெயர் சர்ச்சையால் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்குகிறதா தி.மு.?! – என்ன நடக்கிறது?, லோகேஸ்வரன்.கோ, ச.வெங்கடேசன், Published:23 Jul 2021 5 PM; Updated:23 Jul 2021 5 PM.

[10] https://www.vikatan.com/government-and-politics/is-dmk-government-closing-jayalalitha-university

[11] The Fedearal, Closure of Jayalalithaa Univ, fallout of rivalry between Dravidian parties?, N Vinoth Kumar, 2 Sept 2021 6:55 PM  (Updated:2 Sept 2021 7:07 PM).

[12] https://thefederal.com/states/south/tamil-nadu/closure-of-jayalalithaa-univ-fallout-of-rivalry-between-dravidian-parties/

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது – திருமாவளவன் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு ! (4)

ஜூலை 26, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது – திருமாவளவன் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு ! (4)

3-R, RRR, பற்றி மலேசிய முதல்வர் உறுதியாக இருக்கிறார்: மலேசிய பிரதமர் [3-R, RRR, Religion, Race, Royalty] விசயங்களில் யாரும் மற்றவர்களை தாழ்வாகப் பேசக் கூடாது என்று உறுதியாக இருக்கிறார், அதை பலமுறை எடுத்தும் காட்டியுள்ளார். ஆகையால், துவேசப் பேச்சுகளுக்கு மலேசியாவில் இடமில்லை. அந்நிலையில், நாத்திகம், பகுத்தறிவு, பெரியாரிஸம் என்று இதுவரை பேசி வந்தவர்களுக்கு இனி மலேசியாவில் அவ்வாறு பேச முடியாத நிலை உருவாகியிருக்கிறது. மொழி என்று வைத்துக் கொண்டாலும், அதை வைத்து முன்னேற வழிவகுக்க வேண்டுமேயன்றி, மொழிவெறியாக்கி, அதனை மதம், சித்தாந்தம், அரசியல் இவற்றுடன் சேர்த்து பிரச்சினை உண்டாக்கலாகாது. என்ன வேண்டுமானாலும்பேசி, நாத்திகம், பகுத்தறிவு, பெரியாரிஸம் என்று தப்பித்துக் கொள்ள முடியாது. மற்றவர்களின் உணர்வுகளை, உரிமைகளை மதித்தாக வேண்டும். இதனால், அத்தகைய சித்தாந்திகள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை உண்டாகியுள்ளது.

அரசியல்வாதிகள் பிஜேபி-எதிர்ப்பை இந்துதுவேசமாக மாற்றுவது: தமிழகத்தை சேர்ந்த பாஜக எதிர்ப்பு நிலை அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் தற்போது பெரும் சிக்கலை இந்தியாவில் எதிர்கொள்வது மட்டுமல்ல உலக தமிழர்கள் இடையேயும் எதிர்கொண்டு இருப்பது பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. பிஜேபி-எதிர்ப்பு பெரும்பாலான நிலைகளில் இந்துவிரோதமாகி, இந்து துவேசமாகி, வெறுப்புப் பேச்ச்களில் முகின்றன. இங்குதான் சட்டமீறல்களும் வருகின்றன. புகார்கள் கொடுக்கப் பட்டு வழக்குகள் பதிவான்றன.ஆனால், தங்களது அரசியல் ஆதிக்கம் மூலம், அப்படியே அமுக்கப் பட்டு, தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால், இப்பொழுது மக்களுக்கு விழிப்புணர்வு வந்து விட்டது. செக்யூலரிஸ அரசாங்கம் எனும்பொழுது, அவ்வாறு ஏன் இந்துமதத்திற்கு மட்டும் விரோதமாக பேசி வருகிறார்கள் என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். தொடர்ச்சியாக வீரமணி, திண்டுக்கல் லியோனி அவரை தொடர்ந்து திருமாவளவன் ஆகிய மூவரும் அடுத்தடுத்து குறிப்பிட்ட கால இடைவேளையில் மலேஷிய தமிழர்கள் இடையே எதிர்ப்பை சந்தித்து இருப்பது அதன் பின்னணியில் என்ன என்ற தகவல்தான் தற்போது ஒட்டுமொத்த திராவிட ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

2019ல் திக- வீரமணி நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டது: 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24 -ம் தேதி திராவிட கழக தலைவர் வீரமணி தலைமையில் மலேஷியாவில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது அப்போது தொடர்ச்சியாக இந்து மதத்தை விமர்சனம் செய்யும் வீரமணி மலேஷியாவில் கால் வைக்க கூடாது எனவும், அப்படி வைத்தால் மத மோதல் உண்டாகும் எந்த மதத்தையும் தவறாக பேசாத மலேஷிய மக்கள் வாழும் இடத்தில் வீரமணி வந்தால் ஒற்றுமை குறையும் என மலேசியா உள்துறை அமைச்சகத்தில் இந்து தர்ம சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட உடனடியாக வீரமணி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை திராவிட சித்தாந்தம் பேசுவோருக்கு உண்டாக்கியது, இதையடுத்து மலேஷியா சென்ற திண்டுக்கல் லியோனி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்ட நேரத்தை கடந்து உள்ளே வர  அவரை வாசலில் நிற்க வைத்து மலேஷியா தமிழர்கள் வெளுத்து வாங்கினர், தமிழ்நாட்டில் இருந்து வாய் கிழிய ஊருக்கு மேடை மேடையில் நின்று கொண்டு உபதேசம் செய்வது ஆனால் நேரில் பார்த்தால் உங்கள் லட்சணம் தெரிகிறது? குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்றால் நீங்கள் எதற்கு மலேஷியா வருகிறீர்கள் என வெளுத்து வாங்கினர்[1]. அந்த வீடியோ இணையத்தில் TNNEWS24 வெளியிட பெரும் பரபரப்பு தமிழகத்தில் உண்டானது இதையடுத்து திண்டுக்கல் லியோனி விளக்கம் கொடுக்கும் நிலைக்கு சென்றது தமிழக அரசியல் சூழல்[2].

2023ல் திருமாவின் பேச்சிற்கு பலத்த எதிர்ப்பு: இந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய தாக்கம் ஓய்வதற்குள் சில நாட்கள் முன்னர் திருமாவளவன் மலேஷியாவில் பேச சென்று கடும் எதிர்ப்பை சந்தித்து வந்து இருக்கிறார் அதிலும் மதம் குறித்து திருமாவளவன் பேச நிறுத்துடா என கிளம்பிய எதிர்ப்பு பெரும் பின்னடைவை திருமாவளவனுக்கு கொடுத்து இருக்கிறது. திருமாவளவன் மேடையில் பேசும் போது “தமிழ்த் தேசியம் என்பது மொழி, இன உணர்வு மட்டுமல்ல. அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டம்.” என்றார். “மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான். அவற்றைக் கடந்து தேசிய இனம் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மதம் அடையாளத்தை விட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது.” என்றும் அவர் கூறினார். அப்போது மதம் குறித்து திருமாவளவன் பேசியதற்கு அரங்கில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மேடையில் இருந்து பாதியில் கிளம்பினார் திருமாவளவன்.

திருமாவின் சனாதனம் புரிதல் தவறானது: அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தனது வீடியோ பேட்டியில், அருமையாக திருமாவளவனின் பேச்சைக் கண்டித்து விளக்கம் கொடுதுள்ளார். “அவருடைய கருத்தே தவறானது. வெறுப்பு பிரச்சாரம் கூடாது என்பது ஏற்கத்தக்கது. ஆனால் அதே வெறுப்புப் பேச்சை, கடல்கடந்து வந்து ஒருமதத்திற்கு எதிராக தொடர்ந்து பேசுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவருடைய அரசியல்-கட்சி சித்தாந்தத்தை தமிழாராய்ச்சி மாநாட்டில் பேசுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். சனாதனம் என்றால் அவருக்குப் புரியவில்லை என்பது தான் எனது கருத்து. சனாதனம் என்பது நாங்கள் புரிந்து கொண்டது அனைவரும் சமம். அனைவருக்கும் பொதுவானது இப்பூமி.., எல்லோரும் இறைவனின் குழந்தைகள் தான். எல்லோரும் ஒரு தருமம், அறத்தின் அடிப்படையில் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது தான்  நாங்கள் புரிந்து கொண்ட சனாதனம். நாங்கள் புரிந்து கொண்ட இந்து சமயம். பக்தி மார்க்கத்துடன் நாங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர் இங்கு வந்து ஒரு தவறான கருத்தை, தவறான இடத்தில், தவறான நோக்கத்தில் முன்வைத்ததை நாங்கள் ஏற்கமுடியாது. அதற்கு இங்கு மலேசியாவிலேயே பெருங்கண்டனம் உருவாகியுள்ளது. அவர் தமிழ்நாட்டில் என்ன அரசியலையும் செய்து கொள்ளட்டும், ஆனால், இங்கு இனிமேல் வந்தால் அத்தகைய வெறுப்பு அரசியல் உமிழவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்….பாலியிலும் இந்துக்கள் இருக்கிறார்கள் அங்கெல்லாம் ஜாதியம் இல்லை. இந்தியாவில் அரசியல்வாதிகளால் தான் அது ஊக்குவிக்கப் படுகிறது. எனவே இந்திய அரசியலை இங்கே கொண்டு வரவேண்டாம் என்று விளக்கினார்.  மலேசியாவில் இருக்கும் தமிழர்கள் எல்லோருமே ஒன்றாக, ஒரே குடும்பம் போல, ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றாம். இங்கு [தமிழக] அரசியல் மற்றும் மதம் ரீதியில் எந்த பிரசினையும் தேவையில்லை. அது அவருடைய கருத்தாக இருக்கலாம், ஆனால், எங்களுக்கு உடன்பாடு இல்லை. அவ்வாறு அவர் [ஒரு மதத்திற்கு எதிராகப்] பேசியிருக்கக் கூடாது.

முனைவர் ராஜேந்திரனின் விளக்கம்: இதே போல முனைவர் ராஜேந்திரனும் அருமையான விளக்கம் அளித்துள்ளார்[3]. “ஒரு நாட்டுக்கு செல்லும்போது அந்நாட்டின் பாரம்பரியம் என்ன, அங்குள்ள சிக்கல்கள் என்ன என்பதை புரிந்து கொண்டு செயல்படுவது தான், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்என்பது. இந்த மாநாட்டில் பேசிய, 99.99 சதவீத வெளிநாட்டவர்கள் அதை கடைபிடித்தனர். ஆனால், ஒரு சிலர் மதத்தை தாழ்த்தி பேசுகின்றனர். மலேஷியாவை சேர்ந்த ஒருவர், எங்கள் மதத்தை பற்றி இழிவுபடுத்தி பேசுகின்றனர் என, காவல்துறையில் புகார் அளித்திருந்தால், அப்படி பேசியவர்கள் வீடு திரும்பியிருக்க முடியாது. மலேஷிய சிறையில் தான் இருந்திருக்க வேண்டும். மலேஷியாவில் மதம், நாடு, இனம் பற்றி தவறாக பேசுபவர்களுக்கு, இம்மியளவும் இடம் கொடுக்க மாட்டோம் என, பிரதமர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள நண்பர்கள் அங்கே உள்ள அரசியல் குப்பைகளை வந்து இங்கே கொட்ட வேண்டாம். அனைவருக்கும் பொதுவான தமிழை எப்படி மேம்படுத்துவது பற்றி மட்டுமே பேச வேண்டும். மாறாக அரசியல், மதம் பற்றி பேசினால் விபரீதமான விளைவுகள் ஏற்படும்,” இவ்வாறு அவர் பேசினார்[4].

அரசியல் தவித்திருந்தால் மாநாடு நன்றாக இருந்திருக்கும்: அன்று அரங்கத்தில் இருந்தவர்களுள் யாரும் புகார் அளிக்கவில்லை, அப்படி புகார் செய்திருந்தால், அவர்கள், [திருமாவளவன்] வீடு திரும்பியிருக்க முடியாது,…சிறையில் இருந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் எடுத்துக் காட்டினார். மூன்று 3 R-களைத் தொடவே கூடாது, பிரதமர் இதன் மீது கைவைத்தால், இம்மி அளவு கூட இடம் கொடுக்க மாட்டேன் என்று பலமுறை சொல்லியிருக்கிறார், நேற்றும் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் இருந்த நண்பர்கள் பெரிய ஆட்களாக இருக்கலாம், பிரச்சினைகள் இருக்கலாம், ஆனால், அங்கிருந்து வந்து குப்பைகளை இங்கு கொட்டவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இங்கு தமிழை எவ்வாறு உயர்த்தலாம், பெரிய அளவில் எடுத்துச் செல்லலாம் என்பது பற்றி பேச வேண்டும். அதை விடுத்து அரசியல் பேசுவது அந்த அளவுக்கு பொருத்தமாக இருக்காது.. இப்படி தொடர்ச்சியாக மலேஷியா தமிழர்கள் இந்து மதம் குறித்து நேரடியாக அல்லது மறைமுகமாக விமர்சனம் செய்யும் நபர்களை சுளுக்கு எடுத்து அனுப்புவதால் அவர்கள் “குட்டி மோடி ரசிகராக மாறி விட்டார்கள்” என்று TNNEWS24 குறிப்பிட்டாலும், அங்கிருப்பவர்களுக்கும் இந்து என்ற உணர்வு இருக்கத்தான் செய்யும். போதாத குறைக்கு இலங்கை தமிழர்களும் மோடிக்கு ஆதரவாக பேச தொடங்கி இருப்பதால் தமிழகத்தில் இருந்து இனி மலேஷியா பயணமே வேண்டாம் என முக்கிய அமைச்சரான இளம் வாரிசு தொடங்கி பலரும் முடிவு செய்து விட்டார்களாம் என்று TNNEWS24 கூறுகிறது.

© வேதபிரகாஷ்

26-07-2023


[1] மலேசியா, மலேசியாவா வேண்டவே வேண்டாம் சாமி தெறித்து ஓடும் முக்கிய அமைச்சர்கள்…!, BY WEB TEAM,  JULY 25, 2023.

[2] https://www.tnnews24air.com/posts/Malaysia-dont-ask-for-Sami–important-latest-tamil-current-update

[3] தினமலர், தமிழக அரசியல் குப்பையை மலேஷியாவில் கொட்ட வேண்டாம் திருமாவளவன் பேச்சுக்கு எதிர்ப்பு, மாற்றம் செய்த நாள்: ஜூலை 26,2023 05:48

,https://m.dinamalar.com/detail.php?id=3386470

[4] https://m.dinamalar.com/detail.php?id=3386470

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது- ஆரம்பம் முதல் முடிவு வரை அரசியல் தான்! (3)

ஜூலை 24, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்ததுஆரம்பம் முதல் முடிவு வரை அரசியல் தான்! (3)

திருமா வளவன் தமிழ் தேசிய பேச்சு, எதிர்ப்பு: இம்மாநாட்டை கண்டுகொள்ளாத தமிழக ஊடகங்கள் திருமாவளவனுக்கு மட்டும் கொடுக்கும் முக்கிய்த்துவம் அல்லது விளம்பரம் ஆச்சரியத்தை அளிக்கிறது. அந்த செய்திகள் அலசப்படுகின்றன. இவ்விழாவில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இருந்தார்[1]. வழக்கம் போல திருமா வளவன், தமிழ் தேசியம், சனாதனம் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்[2]. அதாவது ஏகபட்ட அரசியல்வாதிகள் அழைக்கப் பட்டுள்ளதில், இவரும் ஒருவர். “மரபு சார்ந்த கலாச்சார உரிமைகளை பாதுகாக்க உலகத் தமிழ் மாநாடு முனையும். தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வலிமை வாய்ந்தது மாநாடு. தமிழ்த் தேசியம் என்பது மொழி, இன உணர்வு மட்டுமல்ல. அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டம் தமிழ்த் தேசியம். மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான்[3]. அவற்றைக் கடந்து தேசிய இனம் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மதம் அடையாளத்தை விட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது,” என்று கூறினார்[4].

Thiruma honoured for his “wonderful” speech…………

இஸ்லாம்கிறிஸ்தவம் ஒப்பிட்டு இந்து மதத்தை விமர்சித்துப் பேசியது: தத்துவம்-சமத்துவம் என்று விளக்கம் கொடுத்த போது, இஸ்லாத்தில், கிறிஸ்துவத்தில் சமத்துவம்-சகோதரத்துவம் இருக்கிறது ஆனால், இந்து மதத்தில், சனாதனத்தில், அந்த தத்துவத்தின் படி சமத்துவம் இல்லை, சகோதரத்துவம் இல்லை என்றெல்லாம் பேசினார். இஸ்லாம்-கிறிஸ்தவம் என்றால் மதம், மசூதி-சர்ச் என்றால் இன்ஸ்டிடுஷன். ஆனால், இந்துமதத்தில் அப்படியில்லை. அப்பொழுது மேடையில் அவர் தமிழ் தேசியம் குறித்து பேசினார்[5]. அதில் தமிழ் தேசியம் என்ற பெயரில் மதவாதம், இனவாதம் கூடாது என்று கூறியிருந்தார்[6]. அப்படி அவர் பேசி முடித்து மேடையை விட்டு இறங்கிய சில நொடிகளில் ‘டேய் நிப்பாட்ரா’ என்று திருமாவளவனுக்கு எதிராக சிலர் குரல் எழுப்பினர்[7]. ‘நீ பேசிய தலைப்பே சரியில்லை’ என்று அவரை சத்தம் போட்டு பேசியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது[8]. அதன் பின்னர் விழா ஏற்பாடு செய்திருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தவர்களை சமாதானப்படுத்த முற்பட்டார்கள்[9]. பின்பு திருமாவளவன் எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து வெளியே சென்றனர்[10]. சிறிது சலசலப்புகளுடன் மாநாட்டின் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார் திருமாவளவன்.

22-07-2023 சனிக்கிழமை: நாளை நடைபெறுகின்ற மாநாட்டின் இரண்டாம் நாள் (22.7.2023) நிகழ்வில் மலேசியப் பிரதமர் தொடங்கி வைத்திட உள்ள அமர்வில் சிறப்பு அழைப்பாளராகவும் வீரமணி பங்கேற்றார், என்று தமிழக ஊடகங்கள் தவறாகக் குறிப்பிடுகின்றன.. அவருடன் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச்செயலாளர்  ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் மலேசிய திராவிடர் கழகம், மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம், பெரியார் பன்னாட்டமைப்புப் பொறுப்பாளர்களும்   மாநாட்டில் கலந்துகொள்கின்றனர் என்று “விடுதலை” கூறுகிறது. அதனால், திக-போன்ற கட்சியினர் அதிக அளவில் கலந்து கொண்டனர் என்று தெரிகிறது. ஆய்வு கட்டுரைகள் வாசிக்கப் பட்டன. முன்பே குறிப்பிட்டபடி, 500 கட்டுரைகள் வந்திருந்தாலும், சுமார் 20-25 கட்டுரைகள் தான் ஆராய்ச்சி நெறிமுறைகளுடன் இருந்தன. மற்றவை ஏதோ மாநாட்டிற்கு என்று அவசர-அவசரமாக தயார் செய்து கொண்டு வந்தது போன்று தான் இருந்தது.

Malaysian PM officially inaugurated the Conference and spoke on the occasion….

PM appreciated that different politicians had come together there at the conference….

23-07-2023 ஞாயிற்றுக் கிழமை: மலேசிய பிரதமர் மாநாட்டணதிகாரப் பூர்வமாகத் துவக்கி வைத்தார். அதாவது, முடிவுநாளில், துவக்கி வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நிதியுதவியை அறிவித்து, தமிழ் இலக்கியங்களை மலேசிய மொழியில் மொழிபெயெற்க வேண்டும் என்றார். மாநாட்டிற்கு 10 லட்சம் ரிங்கெட்டை மானியமாக அறிவித்தார். 2000 பேர் கலந்து கொண்டனர்[11].  மொத்தம் 550 கட்டுரைகள் வாசிக்கப் பட்டுள்ளதாகவும்[12], அவை ஓம்ஸ் அறக்கட்டளை, மலேசிய பண்பாட்டுக் கழகம் மற்ற சமூக அமைப்புகள் ஆய்ந்து அவற்றை வெளியிடுவதைப் பற்றி ஆலோசிக்கும் என்று சொல்லப் படுகிறது[13]. அரசியல், மொழிப்பற்று [வெறி], இனம், போன்ற காரணிகளால், கட்டுரைகள் வேறுவிதமான விளக்கங்களால் விலகிச் சென்றிருப்பதை கவனிக்கலாம். அரசியல்வாதிகளின் பேச்சு, ஆராய்ச்சி ரீதியில் இல்லாமல், மக்களைப் பிரிக்கும் போகில் தான் உள்ளது. அவை அச்சில் ஏறினால், அவர்களது உண்மைத் தன்மையினையும் தெரிந்து கொள்ளலாம். 21ம் நூற்றாண்டிலும் இத்தகைய கட்டுக்கதைகளான மொழி, இனம், ஆரியன், திராவிடன் என்றெல்லாம் பேசிக் கொண்டு காலம் தள்ளும் ஆட்கள் இருப்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவருமான சிவகுமார் உரை: மலேசிய அரசு மற்றும் ஏற்பாட்டுக் குழு சார்பாக, 11ஆவது உலகத் ஆராய்ச்சி மாநாட்டின் வெற்றியை பதிவு செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று மனிதவள அமைச்சரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவருமான வ சிவகுமார் தெரிவித்தார்[14]. “இந்த வருடம் மலேசிய நாட்டில் 11 ஆம் உலக ஆராய்ச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தியதை எண்ணி நாங்கள் பெருமிதம் அடைகிறோம். இதற்கு முன்பு நடந்த மாநாடுகளைக் காட்டிலும் 2023 ஆம் ஆண்டில் நடைபெறும் இந்த மாநாடு மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கும். அதே வேளையில், ஒரு புது சகாப்தத்தையும் தொடக்கி உள்ளது. சுமார் 3,000 தமிழறிஞர்கள் பங்கேற்று, 501 ஆராய்ச்சியின் படைப்புகள் இந்த அரங்கில் சமர்பிக்கப்பட்டன. இதை தவிர்த்து, இலட்சக்கணக்கான ஒன்லைன் பார்வையாளர்கள் இந்த மாநாட்டை கண்டு களித்தனர். இதுவே இந்த மாநாட்டின் மிக பெரிய வெற்றியாகும். இது மாநாட்டின் கடைசி நாள் என்றாலும், மாநாட்டு செயல்முறை இன்னும் முடிவடையவில்லை. இன்னும் சில படிகள் செய்யப்பட வேண்டும். இம்மாநாட்டின் மையக் கருப்பொருளானஇணைய யுகத்தில் தமிழ்என்ற தலைப்பில், இலக்கியவாதிகள், மொழியியலாளர்கள் மற்றும் பலர் தமிழர்களின் தொன்மை, தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் நாகரிகம் குறித்த தங்கள் கண்டுபிடிப்புகளை ஆய்வுக் கட்டுரைகளில் சமர்ப்பித்தனர். ஆய்வாளர்கள் அறிவுபூர்வமாக சமர்ப்பித்த கட்டுரைகளை அனைத்தும் உங்கள் செவிகளுக்கும் சிந்தனைக்கும் விருந்தாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்,” என்று உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்[15].

இனி வரும் மாநாடுகளில் அரசியல் இல்லாமல் இருப்பதாக: மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கஷ்டப்பட்டு குறுகிய காலத்தில் எல்லாவற்றையும் திருப்திகரமாக செய்துள்ளனர். அப்படியே தமிழ், தமிழாராய்ச்சி, ஆராய்ச்சி-நெறிமுறை என்று சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், அரசியல் கலப்பினால், மாநாட்டு ஏற்பாட்டாளர்கள், அவர்களுக்குள் இருக்கும் அரசியல்வாதிகள், வரவேற்கப் பட்ட அரசியல்வாதிகள், என்று எல்லோருமே ஒவ்வொரு நிலையில் பிரச்சினையைக் கிளப்பியுள்ளனர். பிரதமர் பேசும் பொழுது, எல்லா மாறுபட்ட கட்சியினர் ஒன்றாக வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை, அரசியல்வாதிகளாள் சலசலப்புகள், பிரச்சினைகள், கைகலப்புகள் முதலியவை உண்டாகின. இருப்பினும் அனைவற்றையும் அடக்கிக் கொண்டு மாநாடு நடந்து முடிந்துள்ளது. இனிமேல், அடுத்த மாநாடுகளிலிருந்து அரசியல், அரசியல்வாதிகள், கட்சிகள் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால், எல்லாவற்றிற்கும் நல்லது, உன்னதமானது.

© வேதபிரகாஷ்

24-07-2023


[1] தினமலர், திருமாவளவன் பேச்சுக்கு எதிர்ப்பு, பதிவு செய்த நாள்: ஜூலை 22,2023 01:45

[2] https://m.dinamalar.com/detail.php?id=3382814

[3] நியூஸ்.7.தமிழ், தேசிய இன அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும்! – உலக மலேசிய தமிழ் மாநாட்டில் தொல்.திருமாவளவன் பேச்சு!, by Web EditorJuly 21, 2023

[4] https://news7tamil.live/even-if-divided-by-politics-religion-and-cultural-identities-the-national-identity-should-be-strengthened-thol-thirumavalavan.html

[5] திருமாவளவன் பேச்சுக்கு எதிர்ப்பு: மலேசிய உலக தமிழ் மாநாட்டில் சலசலப்பு!, Manikanda Prabu, First Published Jul 23, 2023, 3:29 PM IST;  Last Updated Jul 23, 2023, 3:29 PM IST.

[6] https://tamil.asianetnews.com/tamilnadu/uproar-at-malaysian-world-tamil-conference-counter-stand-to-thirumavalavan-speech-ry8uel

[7] பாலிமர்.செய்தி, மலேசியாவில் திருமா பேச்சுக்கு எதிர்ப்புக் குரல்….! தமிழ் தேசிய சர்ச்சை……!, ஜூலை 23, 2023 08:53:44 காலை.

[8] https://www.polimernews.com/dnews/205989

[9] தமிழ்.ஸ்பார்க்.காம், டேய் நிப்பாட்ராநீ பேசுறதே சரியில்ல., திருமாவளவனுக்கு எதிராக மலேசியாவில் வெடித்த குரல்.!!, Sun, 23 Jul 2023 11:14:37 IST Author by Priya

[10] https://www.tamilspark.com/tamilnadu/voice-rise-against-to-thirumavalavan-in-malaysia

[11] பெர்னாமா.காம், 11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை பிரதமர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார், 23-07-2023, 12.10 மாலை.

https://www.bernama.com/tam/news.php?id=2208933

[12] பெர்னாமா.காம், 11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவு விழா, 23-07-2023, 07:19 PM

[13]  https://www.bernama.com/tam/news.php?id=2209142

[14] தினத்தந்தி.மலேசியா, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தது புதிய சகாப்தமாகும்! மனிதவள அமைச்சர் சிவகுமார் பெருமிதம் , Updated: July 23, 2023; July 23, 2023; https://thinathanthi.my/?p=5697

[15] https://thinathanthi.my/?p=5697

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! அரசியல்வாதிகளின் பேச்சுகள்! (2)

ஜூலை 24, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! அரசியல்வாதிகளின் பேச்சுகள்! (2)

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-public-lecture-political.jpg

உள்ளூர் அறிஞர்கள் கௌரவிக்கப் பட்டனர்: முதல் நாளில், மலேசியாவில் குழந்தை இலக்கியம் என்ற தலைப்பில் பாப்பாவின் காவலர் கவிஞர் முரசு நெடுமாறன் உரையாற்றினார். குறிப்பாக பள்ளி குழந்தைகளிடையே கவிதை மூலம் எப்படி தமிழை வளர்த்திருக்கிறோம் என்பதை அழகாக எடுத்துரைத்தார்[1]. கவிஞர் முரசு நெடுமாறன், சிலாங்கூர் மாநில முன்னாள் க. முருகன் ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பிக்கப் பட்டனர். மலேசியாவைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் இராஜேந்திரன், மாநாட்டிற்கான செயலாளர் முனைவர் கிருஷ்ணன் மணியம் ஆகியோர் உட்பட பல பிரமுகர்களும் அரசு சார்பற்ற இயக்கங்களை சேர்ந்தவர்களும் மற்றும் பொது மக்களும் திரளாக வந்திருந்து சிறப்பித்தனர்[2]. உள்ளூர் ஊடகங்கள் இவற்றைப் பற்றி செய்திகள் வெளியிட்டுள்ளன. பிறகு பேசியவர்கள் தமிழ் இலக்கியம், வைணவம், சைவம் பற்றியெல்லாம் பேசினர். ஆனால், அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்த போது, மாநாட்டின் போக்கு திசைத் திரும்பியது எனலாம்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-thiruma-speaking-1.jpg

பிரிவினைவாதம் பேசப் பட்டது: மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள திருமாவளவன் பேசியதாவது[3]: மரபு சார்ந்த கலாச்சார உரிமைகளை பாதுகாக்க உலகத் தமிழ் மாநாடு முனையும். தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வலிமை வாய்ந்தது மாநாடு. தமிழ்த் தேசியம் என்பது மொழி, இன உணர்வு மட்டுமல்ல. அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டம் தமிழ்த் தேசியம். மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான். அவற்றைக் கடந்து தேசிய இனம் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மதம் அடையாளத்தை விட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது என்று கூறினார்[4]. இம் மாநாட்டின் பொது அரங்கில் மலேசிய நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்கு ‘வளர்ச்சி நோக்கில் தமிழ்’ எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முதல்நாள் மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-audience.jpg

கல்விசார், படிப்பு சம்பந்தப் பட்ட, ஆராய்ச்சி-கட்டுரைகள் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை: ஆய்வு அமர்வுகள், ஆய்வு கட்டுரைகள், விவரங்கள், வாசிப்புகள் பற்றிய செய்திகளைக் காணவில்லை. கல்விசார், படிப்பு சம்பந்தப் பட்ட, ஆராய்ச்சி-கட்டுரைகள் என்பது பற்றி மூச்சுக் கூட விட காணோம். மாநாட்டிற்குச் சென்றவர்களும், சமூக ஊடகங்களில் “நான் மாநாட்டிற்குச் சென்றேன்,” என்று புகைப்படங்கள் போட்டுக் கொண்டாலும், கட்டுரைப் படித்தேன், கேள்விகள் கேட்டார்கள், நான் பதில் சொன்னேன் என்றவாறு இல்லாமல், ஏதோ சுற்றுலா சென்றேன் பாணியில் தான் இருந்தது. ஆய்வுக்கட்டுரைகள் பற்றிய பட்டியல், தலைப்புகள், விவரங்களைக் காணோம் கலந்து கொண்டவர்களும் அவ்விவரங்களைப் பகிர்வதாகத் தெரியவில்லை. பெர்ணாம் என்ற இணைதளம் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலரின் வாசிப்புகள் தான் பதிவாகியுள்ளன (சைவம், வைணவம், சித்த மருத்துவம், பிள்ளைத் தமிழ், தோல்சீலை முதலியன).  சில கட்டுரைகள் நன்றாக இருந்தன. மற்றபடி, பெரும்பாலான மற்ற ஆய்வுக்கட்டுரைகள் அரைத்த மாவை அரைக்கும் என்பார்களே அந்த பாணியில் தான் இருந்தன.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia.more-politicians.2.jpg

அரசியல்வாதிகளை அழைத்து அரசியல் இல்லாமல் பேசுங்கள் என்று சொல்லப் பட்டது:. ஆனால், அவர்கள் எல்லோருமே அரசியல் தான் பேசினர், வீடியோவும் உள்ளது. அரசியல் மாநாடாக மாறிய நிலையில், தமிழ் தேசியம் போர்வையில், பிரிவினைவாதம் தான் பேசப்பட்டது. வேல்முருகன், தாமஸ், திருமாவளவன், ஶ்ரீகாந்த் [பீஜேபி], சுப.வீரபாண்டியன், நக்கீரன் கோபால், இலானி, நிறைமதி [சீனர்], கடைசியாக கே.வீரமணி, என்று அதிகமாக, அரசியல் தான் நிறைய பேசப்பட்டது. தமிழ் தேசியம், பார்ப்பனியம், வர்ணம், தமிழ்-சமஸ்கிருதம், சமஸ்கிருத ஆதிக்கம், ஆரியன்–திராவிடன் பண்பாட்டு படையெடுப்பு, என்றெல்லாம் பேசப் பட்டது. வெண்பா, ஆசிரியபா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பா முதலியவற்றிற்கு திரிபு விளக்கமும் கொடுக்கப் பட்டது. இதனால், தமிழுக்கு, தமிழ் ஆராய்ச்சிக்கு, தமிழ் மேன்பாட்டிற்கு எந்த பிரயோஜனும் இல்லை. பெரும்பாலான நேரம் இவ்வாறு அரசியல், பேசியதையே பேசியது, ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் என்று தான் சென்றது. ஊர் சுற்றிப் பார்க்க வந்தவர், அவரவர் வேலைகளுக்கு சென்றனர். சாப்பிடும் நேரதிற்கு வந்து விடுவர்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-velmurugan.jpg

மொழி, தேசம், தேசியம், நாடு, ஒன்றியம் என்று குழப்பவாதங்களை வைக்கும் குழப்பவாதிகள்: வேல்முருகன் தமிழ் தேசியம் என்று, பிரிவினைவாதம் பேசியது வேடிக்கையாக இருந்தது. முன்பு, கம்யூனிஸவாதிகள், பிறகு தமிழீழ ஆதரவாளர்கள், அதற்கும் பிறகு தமிழக பிரிவினைவாதிகள், மொழியை வைத்து, மொழிவாறான தேசிய இனங்கள் என்று பேசி குழப்பி வந்தார்கள். அதாவது ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தேசம் உள்ளது, அந்தமொழிவாரி தேசம் போற்றப் பட வேண்டும். அந்த தேசியம், இந்திய தேசியம் வேறு. எப்படி பலமொழி பேசும் தேசியங்கள், இந்திய நாட்டில் ஒன்றியத்தில் சேர்ந்திருக்கின்றனவோ, அதே போல சுயநிர்ணய உரிமையோடு, ஒவ்வொரு தேசமும் பிரிய உரிமை உண்டு என்றெல்லாம் குழப்பவாதங்களில் ஈடுபட்டனர். நாடு, தேசம், தேயம், இடம் போன்ற சொற்கள், ஒரு இடத்தைத் தான் குறிப்பிட்டன. அதை அறிந்தும் இவர்கள் திரிபுவாதம் செய்து வருகிறார்கள். அவையெல்லாம் கருணாநிதி போன்றோரே அடக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. இப்பொழுது, மறுபடியும் திமுக ஒன்றியம், திராவிட மாடல், திராவிட ஸ்டாக் என்றெல்லாம் பேசி வருவதால், இந்த குழப்பவாதிகளுக்கு தைரியம் வந்து, அவ்வாறே முன்பு போல, பிரிவினைவாதம் பேச ஆரம்பித்து விட்டனர். ஆக இந்து வேல்முருகன் போன்றோருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-srikanth.jpg

வலதுசாரிகளின் பலவீனம், ஒற்றுமையின்மை மற்றும் பழமைவாதம்: ஶ்ரீகாந்த் என்ற பிஜேபி இந்தியதேசத்துடன் பேசினாலும், மற்றவர்கள் கொஞ்சம் பேசினாலும், எடுபடவில்லை. இவரும் கி.ஆ.பே.வின் பெயரன் என்ற முறையில் இருக்கிறார். நக்கீரன் கோபாலுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். இடதுசாரிகள், திக-திமுகவினர் ஒன்றாக வந்திருந்த நிலையில், வலதுசாரிக்கள் இங்கு வாய்கிழிய பேசினாலும், அங்கு யாரையும் காணோம். “இந்திய தேசியமும், தமிழ் தேசியமும்” என்று பேசி, அவர்களின் முகத்திரையைக் கிழிக்க ஆளில்லை; “தமிழ் தேசியமும், திராவிட தேசியமும்,” என்று கட்டுரை வாசிக்கவும் திராணி இல்லை. ஆனால், இங்கு, திராவிட மாயை, பெரியாரின் ம்ச்றுபக்கம் என்றெல்லாம் பேசுவார்கள், எழுதுவார்கள், புத்தகங்களும் போடுவார்கள். ”முகநூலில் கம்பு சுற்றுவதோடு சரி, இம்மாதிரியான, கருத்துருவாக்கும், தாக்கம் கொண்ட அல்லது ஏற்படுத்தும் கருத்தரங்களில் கலந்து கொள்வதில்லை.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-srikanth-next-to-gopal.jpg

வலது சாரிகளின் ரகசிய கருத்தரங்கங்கள்: மத்திய அரசு ஆதரவு மற்றும் நிதியுதவியுடன் நடத்தப் படும் கருத்தரங்கங்கள், மாநாடுகள் என்று இவர்களே கலந்து கொண்டு, குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இலக்கிய விழா என்று கொண்டாட ஆரம்பித்தாலும், ஏதோ ரகசியமாக நடத்துவது போல நடத்துகிறார்கள்[5]. எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லை. சுமார் 50-100 என்றிருந்தால், அவர்களுக்குள் அகிர்ந்து கொண்டு, கூடி விலம்பரப் படுத்திக் கொள்கிறார்கள். மற்ற படி, பொது ஊடகங்களில் அதைப் பற்றி எந்த தகவலும் வருவதில்லை. இதனால், லட்சக்கணக்கில் பணம் செலவழித்தாலும், சித்தாந்த ரீதியில் ஆட்களுக்கு பயிறிசி அளிப்பதில்லை, தயார் செய்வதும் இல்லை. அனுபவம் கொண்ட, ஆராய்ச்சியாளர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. தெரிந்தும் ஓரங்கட்டுகிறார்கள் இதனால் தான், தங்களது பலத்தையுமிழந்து, எதிர்சித்தாந்திகளின் பலத்தை மறைமுகமாக வளர்க்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

24-07-2023


இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-senator-saraswati.jpg

[1] வணக்கம் மலேசியா, பேராளர்கள்பார்வையாளர்கள்திரளாககலந்துகொண்ட 11-வதுஉலகத்தமிழாராய்ச்சிமாநாடு, 21-07-2023.

[2]https://vanakkammalaysia.com.my/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/

[3] நியூஸ்7தமிழ், தேசியஇனஅடையாளத்தைவலுப்படுத்தவேண்டும்! – உலகமலேசியதமிழ்மாநாட்டில்தொல்.திருமாவளவன்பேச்சு!, by Web EditorJuly 21, 2023

[4] https://news7tamil.live/even-if-divided-by-politics-religion-and-cultural-identities-the-national-identity-should-be-strengthened-thol-thirumavalavan.html

[5]  பாண்டி-லிட்-பெஸ்ட் என்றெல்லாம் நடத்துகிறார்கள், ஆனால், விவரங்கள் தெரிவதில்லை. அவர்களுக்கே தெரியாத அளவில் கூட நடக்கிறது.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-vips.jpg



11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! (1)

ஜூலை 24, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! (1)

உலகம் முழுவதும் பரவியஉலகத் தமிழ் மாநாடுபிரச்சினை: 21-07-2023 அன்று தொடங்கும் 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கான ஏற்பாட்டுக்  குழுக் கூட்டம், மஇகா துணைத் தலைவர் எம். சரவணனுக்கு முதலில் அந்த நிகழ்வில் பேச இடமளிக்கப்படாததால், கிட்டத்தட்ட அடிதடியில் முடிந்தது[1]. Pakatan Harapan-MIC meeting என்பதே அரசியல் கூட்டணி என்று தெரிகிறது. பிரதமர் அன்வார் இப்ராகிமின் முக்கிய உரையைத் தொடர்ந்து சர்வதேச மாநாட்டில் அமைச்சர் மட்டுமே உரையாற்றுவார் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், சரவணனுக்கு ஏன் இடம் கொடுக்கக் கூடாது என்ற வாதம் எழுந்தது. அதனால் அப்பிரச்சினை ஏற்பட்டது[2]. மனிதவள மேம்பாட்டு அமைச்சர் சிவகுமார் [Sivakumar Varatharaju Naidu] IATRன் தலைவராக நியமிக்கப் பட்டதற்கும் எதிர்ப்பு மொழிரீதியில் என்றும் வெளிப்பட்டது[3].  அதாவது அவர் தெலுங்கர், தமிழர் கிடையாது என்ற வாதம் வைக்கப் பட்டது. தமிழ் வல்லுனர்களுக்கு சிவகுமாரைத் தெரியாது, அவருக்கு தமிழ் இலக்கியம் முதலியனவும் தெரியாது என்றெல்லாம் விமர்சனம் செய்யப் பட்டது[4]. இவ்வகையான மொழிவெறி இக்காலத்திலும் இவர்களிடம் இருப்பது திகைப்பாகவே இருக்கிறது. இந்தியாவில் ந்தியரை, தென்னிந்தியரை ஏன் தமிழரைக் கூடப் பிரித்து வருகின்றனர் என்றால் அயல்நாட்டிலும் அத்தகைய பிரிவினைவாதங்கள் இக்குழுக்கள் வைப்பதை கவனிக்கலாம்.

பல இடங்களை தேசங்களைக் கடத்து வந்த மாநாடு: முன்னரே இம்மாநாடு எங்கு நடத்தப் பட வேண்டும் என்ற பெரிய பிரச்சினையும் இருந்தது. ஷார்ஜா, சிங்கப்பூர், மலேசியா என்றெல்லாம் விவாதிக்கப் பட்டு, சென்னை என்று நடந்தது[5]. போதாகறைக்கு, சென்னையில் ஜூலை 7 முதல் 9 வரை 11ம் உலகத் தமிழ் மாநாடு என்று நடந்து விட்டது[6]. ஒவ்வொரு நிலையிலும் சச்சரவு, முரண்பாடு, சண்டை, புகார் என்றெல்லாம் எழுந்து அடங்கி விட்டன. நிதி, நிதியுதவி, நிதி பற்றாகுறை என்றெல்லாம் காரணங்கள் குறிப்பிட்டாலும், அதனையும் மீறி எதுவோ செயல்படுவது தெரிந்தது. இருப்பினும், இப்பிரச்சினை கோலாலம்பூருக்கு சென்று அங்கு அரசியலாகவே மாறி விட்டது. அழைப்பிதழ் கொடுக்கும் விசயத்தில் கூட அரசியல் தான், பெரும்பாலான அழைக்கப் பட்டவர்கள் திக-திமுகவினர் தான். அவர்களது இணைதள போட்டோக்களே சான்றாக உள்ளன.  அரசியல் பிரச்சினை பெரிதாக்க வேண்டாம் என்ற ரீதியில் தான் தமிழ்நாட்டிலிருந்து தலைவர்கள் வராமல், பிரதிநிதிகள் போல மற்றவர்களை அனுப்பியுள்ளனர். ஸ்டாலின் முதல் எடப்பாடி வரை வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர். அதிமுக சார்பில் வைகை செல்வன் கலந்து கொண்டு பேசினார். அதே போல வந்தவர்கள் மேடையில் பேசினர்.

தமிழ் என்று சொல்லிக் கொண்டே பிரிவினைவாதம் வளர்த்து சண்டைப்போட்டுக் கொள்ளும் கூட்டங்கள்: மொத்தத்தில், “தமிழர்” என்று சொல்லிக் கொள்வதில், அடையாளம் காணுவதில், இப்பொழுது, சில சித்தாந்திகள் எழுப்பும் பிரச்சினையான யார் திராவிடன், யார் தமிழன் போன்ற அர்த்தமில்லாத விசயங்களை இதிலும் நுழைப்பது போலிருக்கிறது. தமிழன் – திராவிடன் அடையாளங்களைத் தாண்டி அப்படி என்ன வேலை செய்கிறது என்பது ரகசியமாகத் தான் உள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில், “தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர் கிடையாது,” என்று பேச ஆரம்பித்து விட்டனர். அப்படியென்றால், தமிழன் என்பதற்கு என்ன தகுதிகளை, சரத்துகளை வைப்பார்கள் என்று தெரியவில்லை. சென்னை மாநாட்டிற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், சிலர் இரண்டிலும் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்-தமிழ் தேசிய, தமிழ் இன, தமிழின தேசியவாத, சுயயாட்சி, சுய-உரிமை என்றெல்லாம் ஆந்தைகள் போல இருந்து, பச்சோந்திகளாக பேசி திரிகின்றனர். பிரிவினைவாதத்தைத் தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

21-07-2023 வெள்ளிக்கிழமை முதல் நாள்: கோலாலம்பூர், ஜூலை 21- மலேசியாவில் இன்று (21.7.2023) 11 ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசிய நட்டுப்பண், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல், மாநாட்டுப் பாடலுடன் கோலாலம்பூரில் எழுச்சியுடன் தொடங்கியது[7]. மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் இன்று (21.7.2023) முதல் 3 நாள்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் (International Association for Tamil Research) 11ஆம் மாநாடு நடைபெற்றது[8]. ஜூலை 21, 22, 23 ஆகிய மூன்று நாள் மாநாட்டினை மலேசிய நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் 23-07-2023 அன்று தொடங்கி வைத்தார். பலருக்கு அழைப்பிதழ் பலவிதமாக அனுப்பப் பட்டது[9]. தமிழ்நாடு, இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், பொது நல செயற்பாட்டாளர்கள், கல்லூரி – பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் என பல தரப்பினரும் பங்கேற்று, ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து உரையாற்றுகிறார்கள்[10].  முதல் நாளான 21.7.2023 அன்று தொடக்க விழாவில் மலேசிய நாட்டின் துணை அமைச்சர் சரஸ்வதி, மலேசிய இந்திய காங்கிரஸ் தேசிய துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இணையக்  காலகட்டத்தில் தமிழ்மொழி என்ற கருப்பொருளை மையமாக வைத்து மாநாடு  நடைபெறுகிறது.

முன் வரிசையில் அல்லது முன்னணியில் அரசியல்வாதிகள்: தொடக்க விழா அரங்கில், அரசியல்வாதிகள் அதிகமாகவே இருந்தனர். அவர்கள், அவர்களாகவே வந்தனரா, வரவழைக்கப் பட்டனரா என்று தெரியவில்லை.

  1. திராவிடர் கழகம் கி.வீரமணி,
  2. தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்,
  3. மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா,
  4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் சி.மகேந்திரன்,
  5. இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மதுக்கூர் இராமலிங்கம்,
  6. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி (சி.பி.எம்.),
  7. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் செந்திலதிபன்,
  8. ‘நக்கீரன்’ கோபால்,
  9. தமிழ்த் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன்,
  10. கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் மற்றும்

கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பலர் பங்கேற்றனர்.

பொது விவரங்கள்: மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் தொடங்கியது. பியர்ல் இன்டர்நேசனல் விடுதியில், தங்கியவர் எல்லோரும் காலை உணவை முடித்துக் கொண்ட பின்பு, பேருந்துகள் மூலம் அரங்கிற்கு சென்றனர். 9.45 மணி அளவில் நிகழ்ச்சிகள் தொடங்கின – கடவுள் வாழ்த்து, மலேசிய நாட்டுப் பண்,  தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். அடுத்து வரிசையாகச் சொற்பொழிவுகள் அரங்கேறின. மலேசியத் தமிழ் அறிஞர்களும், இந்தியத் தமிழ் அறிஞர்கள், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முன்னணியினர் வரிசையாகச் சொற்பொழிவு ஆற்றினர். பகல் உணவு, மாலைச் சிற்றுண்டி, இரவு உணவு எல்லாம் அங்கேயே ஏற்பாடு செய்து இருந்தனர். இது ஒரு பங்கேற்றவரின் விவரம். நிறைவாக, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் 40 நிமிடங்கள் சிறப்புரை ஆற்றிய பிறகு, இன்றைய நிகழ்வுகள் நிறைவு பெற்றன. மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை, ஆடல், பாடல்கள். 8 மணிக்கு விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

© வேதபிரகாஷ்

24-07-2023


[1] Free Malaysia Today, Altercation at PH-MIC meeting over who’ll speak at world Tamil conference, K. Parkaran – 20 Jul 2023, 9:57 pm.

[2] https://www.freemalaysiatoday.com/category/nation/2023/07/20/altercation-at-ph-mic-meeting-over-wholl-speak-at-world-tamil-conference/

[3] Focus – Malaysia, Tamils disappointed as Sivakumar, a Telugu, is appointed International Tamil Conference chairman, By Contributor – Tamil Vaanan, 13/07/2023.

[4] https://focusmalaysia.my/tamils-disappointed-as-sivakumar-a-telugu-is-appointed-international-tamil-conference-chairman/

[5]  இவை பற்றியெல்லாம் எற்கெனவே விவரமாக முந்தைய பிளாக்குகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

[6]  இதைப் பற்றியும் விவரமாக எனது முந்தைய பிளாக்குகளில் படித்துத் தெரிந்து கொள்ளலாம். ஊடகங்கள் இவ்விசயங்களில் மௌனமாக இருப்பது தான் ஆச்சரியமாக-திகைப்பாக இருக்கிறது.

[7] நியூஸ்.டி.எம், 11-வது உலகத்தமிழ் மாநாடு மலேசியாவில் தொடங்கியது..!, By: Newstm Admin, Sat, 22 Jul 2023.

[8] https://newstm.in/tamilnadu/11th-world-tamil-conference-begins-in-malaysia/cid11656242.htm

[9] நியூஸ்.லங்காஶ்ரீ, மலேசியாவில் 11ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: பிரபலங்களுக்கு பறந்த அழைப்பு, Malaysia, Tamil,  By Nandhini..

[10] https://news.lankasri.com/article/11th-world-tamil-research-conference-in-malaysia-1687942005