Archive for the ‘புஷ்பம் கலைக் கல்லூரி’ Category

லட்சங்களில் பணமோசடி –கல்லூரிகளில் எப்படி நடக்கிறது? கல்விக் கூடங்களில் மோசமான ஊழல்கள் நடப்பது ஏன்?

ஓகஸ்ட் 6, 2022

லட்சங்களில் பணமோசடி –கல்லூரிகளில் எப்படி நடக்கிறது? கல்விக் கூடங்களில் மோசமான ஊழல்கள் நடப்பது ஏன்?

பூண்டி புஷ்பம் கலைக் கல்லூரி நிர்வாகத்தினர் மீது வழக்கு பதிவு: தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் புஷ்பம் கலைக் கல்லூரி 1956-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி, மறைந்த துளசி அய்யா வாண்டையார் இந்தக் கல்லூரியினை நிர்வகித்து வந்தார்[1]. ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வி அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் கல்லூரியைச் செயல்படுத்தினார்[2]. இந்தக் கல்லூரியில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்றிருக்கின்றனர். அரசு அறிவித்த கட்டணத்தைத் தாண்டி ஒரு பைசாகூட கூடுதலாக வசூலிக்காத கல்லூரி என்ற பெயரைப் பெற்றதுடன், கட்டணம் வசூலிக்காமல் பல மாணவர்களைப் படிக்க வைத்து உருவாக்கியவர் என்பதால் துளசி அய்யா வாண்டையாரை கல்வி வள்ளல் என்றே பலரும் அழைத்தனர். அவர் மறைவுக்குப் பிறகு அவர் மகன் கிருஷ்ணசாமி பொறுப்பேற்று கல்லூரியை நிர்வகித்து வருகிறார். கிருஷ்ணசாமி காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவர் டி.டி.வி.தினகரனின் சம்பந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்தவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது ஏன்?: மறைந்த துளசி அய்யா வாண்டையார்மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகாரை அடுத்து, போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். பொதுவாக, இறந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை…[3] அப்படியே, வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் திடீரென இறந்துவிட்டால், அவர்மீதான குற்ற வழக்குகள் அனைத்தும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு விடும்..[4] ஆனால், இறந்துதபான பூண்டி வாண்டைர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. இதற்கு என்ன பின்னணி காரணம் என்ன? மேலே குறிப்பிடப் பட்டுள்ள படி, கிருஷ்ணசாமி காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவர் டி.டி.வி.தினகரனின் சம்பந்தி என்பதால், அரசியல் ரீதியிலான நடவடிக்கை என்றும் விவாதிக்கலாம். ஆனால், கல்விக் கூடங்களில் எந்த விதத்திலும் ஊழலை ஏற்றுக் கொள்ள முடியாது. இப்பொழுது, கொலை, தற்கொலை, பாலியல் சதாய்ப்பு, கொள்ளை, பணம் கையாடல் என்று ஏகப் பட்ட குற்றங்கள் கல்விக் கூடங்களில் நடந்து வருகின்றன.

27-07-2022 அன்று வழக்கு பதிவு செய்யப் பட்டது: எப்படி ஐந்தாண்டுகள் கழித்து, திடீரென்றனிந்த நடவடிக்கை எடுக்கப் படுகிறது, இது வரை யாருக்கும் தெரியாமல் இருக்கிறது போன்ற விசயங்கள் மர்மமாக இருக்கின்றன. பொதுவாக, உதவி பேராசிரியர் நியமங்களில், எல்லா கல்லூரிகள் மற்று பல்கலைக் கழகங்களில் ஒரு விதமான, பண பரிவர்த்தனை நடந்து கொண்டிருக்கிறது, அப்பதவிகள் விற்கப் படுகின்றன என்பது போன்ற செய்திகளும் வந்துள்ளன. போதாகுறைக்கு, இப்பொழுது, அடிக்கடி பாலியல் தொல்லை, தற்கொலை போன்றவையும் நட்ட ஆரம்பித்துள்ளன. கள்ளக்குறிச்சி கலவரம், இதில் திகைப்பான விசயமாக இருக்கிறது. தஞ்சாவூா் அருகே அரசு உதவி பெறும் கல்லூரியில் பேராசிரியா்கள் பணி நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகக் கூறி 7 போ் மீது ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் அண்மையில் வழக்குப் பதிவு செய்தனா்[5]. இதுகுறித்து தஞ்சாவூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் பிரிவு ஆய்வாளா் வெ. சசிகலா பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருப்பது[6]:

செய்துள்ள முதல் தகவல் அறிக்கை கூறுவது:  “தஞ்சாவூா் அருகே பூண்டியில் உள்ள . வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 உதவிப் பேராசிரியா்கள் பணி நியமனத்தின்போது இன சுழற்சி முறையைப் பின்பற்றாமல், சில உதவிப் பேராசிரியா்கள் பணி நியமனம் செய்யப்பட்டனா்[7]. இவா்களில், வேதியியல் துறை உதவிப் பேராசிரியா் எஸ்.கே. தியாகராஜன், தாவரவியல் துறை உதவிப் பேராசிரியா் சி. கற்பகசுந்தரி ஆகியோர் பணியில் சேருவதற்காக தாங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் என்பதை மறைத்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் என்பதற்கு இணையான சீா்மரபினா் என்ற போலி ஜாதி சான்றிதழை உருவாக்கி அளித்து, அரசை ஏமாற்றி . வீரையா நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் பணி நியமனம் பெற்றனா்[8]. இதன்மூலம், இருவரும் 2017, ஜூன் 16 ஆம் தேதி முதல் 2020, அக்டோபா் 30 ஆம் தேதி வரை மொத்தம் ரூ. 54.99 லட்சம் ஊதியமாகப் பெற்று தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா்[9].

லஞ்சங்களில் பண மோசடி: இந்த ஜாதி சான்றிதழ்களின் உண்மை தன்மையைச் சரிபாrக்காமல் இப்பணி நியமனத்துக்கு அப்போதைய மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் தி. அறிவுடைநம்பி ஒப்புதல் அளித்தார்[10]. மேலும், 4 உதவிப் பேராசிரியா்கள் ஆய்வுப் படிப்புக்காகச் சென்றபோது, அவா்களுக்கு பதிலாக 4 போ் தோ்வு செய்யப்பட்டு, 2015, நவம்பா் 3 ஆம் தேதி முதல் 2017, நவம்பா் 2 ஆம் தேதி வரை 24 மாதங்கள் பணிபுரிய நியமிக்கப்பட்டனா். இவா்களில், இயற்பியல் துறைக்காக நியமிக்கப்பட்ட உதவிப் பேராசிரியா் 2016, ஜனவரி 14 ஆம் தேதிக்கு பிறகு பணிக்கு வரவில்லை. இவா் பணிக்கு வராத காலத்தில், வருகைப் பதிவேட்டில் அவரது பெயருக்கு நேராக வேறு நபா் மூலம் சுருக்கொப்பம் இடப்பட்டுள்ளது. இவா் கல்லூரிக்கு வராததை கல்லூரி கண்காணிப்பாளா் துரைராஜன், கல்லூரி முதல்வா் எஸ். உதயகுமார், கணக்காளா் குமரரேஷ் ஆகியோர் மறைத்து பொய் அறிக்கையைப் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அனுப்பி ரூ. 11.68 லட்சம் கையாடல் செய்தனா்”. இதுகுறித்து அறிவுடைநம்பி, துரைராஜன், எஸ். உதயகுமார், எஸ்.கே. தியாகராஜன், சி. கற்பகசுந்தரி, கே.ஆா். குமரேஷ் உள்பட 7 போ் மீது ஜூலை, 27ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

© வேதபிரகாஷ்

06-08-2022


[1] விகடன், பேராசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடுதஞ்சை பூண்டி கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு ,போலீஸார் விசாரணை!, கே.குணசீலன், Published:Yesterday at 8 PMUpdated:Yesterday at 8 PM

[2] https://www.vikatan.com/government-and-politics/crime/vigilance-investigation-at-tanjore-poondi-college – :~:text=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2C%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%202015,%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.

[3] “பூண்டி” துளசி அய்யா வாண்டையார் மீது வழக்கு பதிந்த போலீஸ்.. அப்படியே அதிர்ந்த தஞ்சாவூர்.. என்னாச்சு By Hemavandhana Published: Saturday, August 6, 2022, 13:50 [IST]

[4] https://tamil.oneindia.com/news/thanjavur/is-it-true-and-vigilance-investigation-at-tanjore-poondi-college-case-against-thulasi-vandayar-469626.html

[5] தினமணி, பூண்டி புஷ்பம் கல்லூரியில் பேராசிரியா்கள் பணி நியமனத்தில் முறைகேடு: 7 போ் மீது வழக்கு, By DIN  |   Published On : 06th August 2022 01:08 AM  |   Last Updated : 06th August 2022 01:08 AM.

[6] https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2022/aug/06/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-3893630.html

[7] தினமலர், பூண்டி புஷ்பம் கல்லூரியில் முறைகேடு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு,  Added : ஆக 05, 2022  23:04

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3093213

[9] பாலிமர்.நியூஸ், பூண்டி துளசிய்யா வாண்டையார் மீது போலீஸ் மோசடி வழக்கு! பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு, August 06, 2022 06;36;42 AM.

[10] https://www.polimernews.com/dnews/184724