பச்சையப்பன் மற்றும் கல்லூரி மாணவர்கள் ரூட்-தல பிரச்சினையில் மோதல், அடிதடி, கைது முதலியன (1)

பச்சையப்பன் மற்றும் கல்லூரி மாணவர்கள் ரூட்தல பிரச்சினையில் மோதல், அடிதடி, கைது முதலியன (1)

பல உயர்ந்தவகளை உருவாக்கியது பச்சையப்பன் கல்லூரி: சென்னையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக திகழும் பச்சையப்பன் கல்லூரி, 1842-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் எதிர்ப்பையும் மீறி தமிழ்நாட்டில் தனியாரால் தொடங்கப்பட்ட முதல் கல்லூரி என்ற பெயரைப் பெற்றதாகும். வள்ளல் பச்சையப்ப முதலியாரின் (1754-1794) ஆசைப்படி பள்ளியாக உருவாக்கப்பட்டு, 1889-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியாக தரம் உயர்ந்தது. அதிலிருந்து தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றும் முக்கிய தலைவர்கள் உருவாகும் இடமாக பச்சையப்பன் கல்லூரி மாறியது. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பெயர் வாங்கிக் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் சி. என். அண்ணாதுரை தொடங்கி, க. அன்பழகன், நெடுஞ்செழியன், துரைமுருகன், கணிதமேதை ராமானுஜம், பம்மல் சம்பந்த முதலியார், தமிழறிஞர் மு.வரதராசனார், ஆர். எஸ். மனோகர், எனப் பட்டியல் நீண்டு, நா. பார்த்தசாரதி, கவிஞர் வைரமுத்து நா. முத்துக்குமார் என தொடர்ந்துகொண்டே போகும். தவிர, விளையாட்டு வீரர்கள், சிறந்த மருத்துவர், பொறியாளர், அரசு அதிகாரிகள் என்றும் பலர் இருக்கிறார்கள்.

அரசியலால் ஒழுக்கம் சிதைந்து சீரழிந்த கல்லூரி: மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட எண்ணற்ற தேசிய தலைவர்களும் வந்து உரையாற்றிய இடமாக திகழ்ந்த பச்சையப்பன் கல்லூரி, லட்சக்கணக்கான மாணவர்களை சமூகத்திற்குக் கொடுத்திருக்கிறது. அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், கவிஞர்கள், பேராசிரியர்களை உருவாக்கியது, ஏழை எளிய மாணவர்கள் பலர் பயின்று, தங்கள் வாழ்க்கையில் கல்வியின் ஒளி கண்ட பச்சையப்பன் கல்லூரி, தற்போதோ தலைகீழ் நிலைமையைக் கண்டு தவித்து வருவதே நிதர்சனம். முன்பெல்லாம் பச்சையப்பன் கல்லூரி என்ற பெயரைக் கேட்டு மரியாதை செலுத்திய தமிழ் மக்கள், இப்போது முகம் சுழிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது. இரண்டு நிலைமைகளுக்கும் காரணம் அதில் படித்த மாணவர்களின் நடவடிக்கைகள் என்பதே வேடிக்கையான விஷயம்[1]. பிற கல்லூரி மாணவர்களுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் மோதல், அரசுப் பேருந்துகளில் ரூட் தல விவகாரம், கல்லூரியின் நிர்வாகத்திலும் பேராசிரியர் நியமனங்களில் முறைகேடு என, பெயர்போன கல்லூரியின் பெயர் நாளுக்கு நாள் பின்னுக்குப் போய்க்கொண்டிருக்கிறது[2].

மாநிலக் கல்லூரியும் அப்படியே; சென்னை மாநிலக் கல்லூரி (Presidency College), தமிழ்நாட்டில், சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கல்லூரி சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னோடி என்ப்படுகின்றது. இக்கல்லூரி ஹயர் பர்டன் பவல் எனும் கணிதவியல் பேராசிரியரால் 1840 இல் திறக்கப்பட்டது. சிறந்த முன்னாள் மாணவர்கள் பட்டியலில் சிலர்:

தி. முத்துச்சாமி அய்யர் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி

ச. வெ. இராமன் – அறிவியலாளர்

சுப்பிரமணியன் சந்திரசேகர் – இயற்பியலாளர்

எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன் – கணிதவியலாளர்

சிதம்பரம் சுப்பிரமணியம் – முன்னாள் மத்திய அமைச்சர்

ம. சிங்காரவேலர் – விடுதலைப் போராட்ட வீரர்

நெ. து. சுந்தரவடிவேலு – சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்

சாலை இளந்திரையன் – எழுத்தாளர் – தமிழறிஞர்

சாலினி இளந்திரையன் – எழுத்தாளர்

அப்துல் ஹமீத் கான் முன்னாள் மேயர்

எம். எஸ். கிருஷ்ணன் புவியியலாளர்

ரூட்டு-தல பிரச்சினை: சென்னையில் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வருகிறது[3]. அவர்கள் பஸ், ரெயில் நிலையங்களில் கோஷ்டிகளாக மோதிக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகின்றன[4]. ரூட்டு தல பிரச்சினையே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மோதலில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் கைது செய்தும், எச்சரித்தும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் மாணவர்களிடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்று காலையும் மின்சார ரெயிலில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி 14-02-2024 அன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தது. “சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரயில் ஒன்று நேற்று பிற்பகல் சென்றுள்ளது.” என்கிறது நக்கீரன்[5]. “இந்த ரயிலில் மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த ஏராளமன மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். அதன்படி இந்த ரயில் பட்டரவாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. அப்போது அங்கு காத்திருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களால் தாக்கியுள்ளனர்[6]. பதிலுக்கு மாநிலக் கல்லூரி மாணவர்களும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.”

ரெயிலில், ரெயில் நிலையத்தில் வன்முறை கூடாது; காலை நேரம் என்பதால் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது[7]. இதில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரியில் படிக்கும் திருத்தணி, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயணம் செய்தனர்[8]. பட்டரைவாக்கம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தபோது ஒரு பெட்டியில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது[9]. திடீரென்று ஏற்பட வாய்ப்பில்லை, மாறாக, அவர்கள் திட்டமிட்டே செய்திருக்கக் கூடும். இருப்பினும், ஆயிரக் கணக்கான, பொது மக்கள் பயணிக்கும் ரெயிலில், ரெயில் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டது, சட்டத்தை மீறியகுற்றமாகும். அவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர்[10]. இதனை கண்டு ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்[11]. இதற்குள் பட்டரைவாக்கம் ரெயில் நிலையத்தை அடைந்ததும் மின்சார ரெயில் நின்றது[12]. உடனே ரெயிலில் இருந்து இறங்கிய பச்சயைப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். மேலும் கல், சோடா பாட்டில், பீர் பாட்டில்களை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கினர்.  உருட்டுகட்டையாலும் தாக்கிக்கொண்டனர்.

© வேதபிரகாஷ்

15-02-2024


[1] குமுதம், பல ஜாம்பவான்களை உருவாக்கிய கல்லூரிக்கு இந்த நிலைமையா? வைரலாகும் வன்முறை, Feb 14, 2024 – 15:11  Feb 14, 2024 – 17:58.

[2] https://kumudam.com/Violence-Culture-rising-on-Pachaiyappas-college-student

[3] மாலைமுரசு, பீர் பாட்டிலை வீசி மாணவர்கள் மோதல்கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்க ரெயில்வே போலீசார் கடிதம், Byமாலை மலர், 14 பிப்ரவரி 2024 12:55 PM.

[4] https://www.maalaimalar.com/news/state/tamil-news-students-clash-at-railway-station-703119

[5] நக்கீரன், கல்லூரி மாணவர்கள் மோதல்; 60 பேர் மீது வழக்குப்பதிவு!, செய்திப்பிரிவு,

 Published on 14/02/2024 | Edited on 14/02/2024

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/college-students-incident-case-against-60-people

[7] தமிழ்.ஏபிபி.லைவ், Train Violence : மின்சார ரயிலில் மோசமாக தாக்கிக்கொண்ட மாணவர்கள்! சென்னையில் பயங்கரம்!, By : சுகுமாறன் |PUBLISHED AT : 14 FEB 2024 08:09 PM (IST),  Updated at : 14 Feb 2024.

[8] https://tamil.abplive.com/news/chennai/chennai-college-students-fight-with-bottles-stones-patravakkam-railway-station-chennai-passenger-train-167549

[9] இடிவிபாரத், பீர் பாட்டிலை வீசி மாணவர்கள் மோதல்.. ரணகளமான பட்டரவாக்கம் ரயில் நிலையம்– 60 பேர் மீது வழக்குப்பதிவு!, By ETV Bharat,  Tamil Nadu Desk. 14 Feb 2024.

[10] https://www.etvbharat.com/ta/!state/route-thala-clash-between-two-college-students-in-pattaravakkam-railway-station-tns24021403819

[11] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், சென்னை: பீர் பாட்டில் வீசி மாணவர்கள் மோதல்.. கலவர பூமியான ரயில் நிலையம்.. 3 பேரை அலேக்காக தூக்கிய போலீஸ்!, Raghupati R, First Published Feb 14, 2024, 7:55 PM IST, Last Updated Feb 14, 2024, 7:55 PM IST.

[12] https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/at-the-chennai-train-station-students-from-two-city-colleges-fight-throw-stones-and-three-held-rag-s8uo2r

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக