Archive for the ‘டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம்’ Category

திருவள்ளுவர் பல்கலைக் கழகம் -டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக் கழகம் தோற்றமும், மறைவும் – தொடர்ந்து நடந்து வரும் ஊழல்கள், என்ன சம்பந்தம்?

செப்ரெம்பர் 17, 2023

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் தோற்றமும், மறைவும்தொடர்ந்து நடந்து வரும் ஊழல்கள், என்ன சம்பந்தம்?

05-09-2023 திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஊழல், ஊழல்புகார்கள் பற்றி விசாரணை: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஊழல், ஊழல்புகார்கள், போராட்டங்கள் என்று நடந்து கொண்டிருப்பது[1]. அந்த திருவள்ளுவர் பெயருக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது[2]. வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்காட்டிலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2015ல் நடந்த ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்[3]. ஆனால், பல விவரங்கள் பொது மக்களிடமிருந்து மறைக்கப் படுகின்றன. இதில், பல்கலைக்கழகத்தில், 112 கோடி ரூபாய் அளவிற்கு நிதி நிர்வாக முறைகேடு நடந்ததாகவும், பல்கலைக்கழகத்திற்கு கொள்முதல் செய்த, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, தமிழ்நாடு ஒப்பந்த வெளிப்படுத்த தன்மை சட்டத்தை மீறி, பல்கலைக்கழகத்திற்கு பண இழப்பு ஏற்படுத்தியது மற்றும் பல்கலைக்கழக தேர்வு முறைகேடு உள்ளிட்டவைகள் குறித்து புகார் அளிக்கப்பட்டது[4]. அதன் அடிப்படையில் 05-09-2023 அன்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை கூடுதல் செயலர் இளங்கோ ஹென்றி தாஸ் விசாரணை நடத்தினார்[5]. விவரங்கள் என்னவென்று தெரியவில்லை. மேலும், மனுதாரரான முன்னாள் பேராசிரியர் இளங்கோவனிடம் விசாரணை நடத்தப்பட்டது[6]. இங்கும் விவரங்கள் தெரிவிக்கப் படவில்லை. பிடிஐ பாணியில் ஊடகங்களில் ஒருசில வரிகளில் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.

02-08-2023 – திருவள்ளுவர் பல்கலையில் ஏராளமான முறைகேடு; பேராசிரியர்கள், ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!:  02-08-2023 அன்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் அதிகளவில் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி ஊழியர்கள் மற்றும் உறுப்புக் கல்லூரி பேராசிரியர்கள் பறை இசைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[7]. பல்கலைக்கழகத்தில் லஞ்சம், முறைகேடுகள் அதிகரித்து விட்டதாகவும், இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழு விசாரணை நடத்தி 12 மாதங்களாகியும் இதுவரை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றும், உடனடியாக அந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தனர்[8].

டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் தோற்றமும், மறைவும்: அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா 2021 பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த கல்வியாண்டு முதலில் புதிய டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கப்பட்டது. ஆனால், மாநில சட்டமன்றத் தேர்தலின் காரணமாக இந்தத் திட்டம் தாமதமானது, பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் முடிக்கப்படவில்லை. தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்ததன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 05ஆம் நாள் இதற்கான சட்ட முன்வரைவினை உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் தாக்கல் செய்தார். இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக முனைவர் எஸ். அன்பழகன் மார்ச் 01 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இப்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட கலை அறிவியல் கல்லூரிகள் வரும். வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் உயர் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்ததும், இப்பல்கலைக்கழகம் மூடப்பட்டது: அப்போதைய அ.தி.மு.க அரசு. அந்த நேரம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த துரைமுருகன், “திருவள்ளுவர் பல்கலைக்கழகம் நான் கொண்டுவந்தது. அதை எந்தக் காரணத்துக்காகவும் பிரிக்கவிட மாட்டேன். புதிதாக வேண்டுமானால், பல்கலைக்கழகத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்’’ என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இம்மாவட்டங்களில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் பிரிக்கப் பட்டன. முழுமையாக செயல்படாமல் இருந்த இப்பல்கலைக்கழகம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இதற்கான சட்டமுன்வடிவானது ”2021ம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் திருத்தம் மற்றும் நீக்கறவு சட்டம்” என்பதை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். இந்தநிலையில், தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, ஜெயலலிதா பல்கலைக்கழகம் முடக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அ.தி.மு.க தலைவர்கள் கொந்தளிக்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும்விதமாக, துணை வேந்தரைத் தவிர்த்து மற்ற அனைத்துப் பொறுப்புகளுமே காலியாகத்தான் வைக்கப்பட்டிருக்கின்றன[9].  பொது மக்கள், “பல்கலைக்கழகத்தைப் பிரித்ததில், தி.மு.வுக்குக் கோபமில்லை. ஜெயலலிதா பெயர் சூட்டியிருப்பதுதான் பிடிக்கவில்லை. ஏட்டிக்குப் போட்டியாக, கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் மாற்றப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. இரண்டு கட்சிகளுக்குமான அரசியல் காழ்ப்புணர்ச்சியால், மூன்று மாவட்டங்களிலுள்ள கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விதான் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்,’’ என்கிறனர்[10].

குற்றங்கள், சீரழிவுகள் டிவி-சீரியல் போன்று காண்பிக்கப் படுகின்றன: இவையெல்லாம் தனித்தனி செய்திகளாக இருந்தாலும், சம்பந்தம் இருக்கிறது. ஒரு பல்கலைக் கழகம் ஆரம்பிப்பது என்பது சாதாரணமான விசயம் கிடையாது, அதிலும் முதலமைச்சர் பெயரில் ஆரம்பித்து உடனே மூடு விழா செய்யப் படுவது, அதிலும் அசாதாரணமன விசயம் ஆகும். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதனை செய்துள்ளது. அதிமுகவும் அதை பெரிதாக எதிர்த்ததாகத்தெரியவில்லை[11]. ஆனால், திமுக-அதிமுக கட்சிகளுக்குள் இருக்கும் விருப்பு-வெறுப்பு, போட்டி-பொறாமை முதலியவற்றிற்கும் மேலாக ஏதோ ஒன்று இருப்பது தெரிகிறது[12]. கல்வியை சக்காக வைத்துக் கொண்டு அரசியல் செய்து, பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை மறைக்க முடியாது. திடீரென்று தமிழக்த்தில் எல்லா பல்கலைக்கழகங்களில் ஊழல் ஏற்பட்டுள்ளது,ஏற்படுகிறது, கைது, விசாரணை, வழக்கு என்றெல்லாம் நடந்து ஒண்டிருப்பதை கவனித்து வர முடிகிறது. பிறகு, இந்த நடவடிக்கைகளில்,செயல்பாடுகளில், பலநிலைகளில் செலவழிக்கப் பட்ட கோடிக்கணக்கான பணத்தைப் பற்றி யார் கவலைப் படுவது? பொதுவாக மக்கள் அரசியலைக் கூட இன்று, டிவி-சீரியல் போன்று பார்க்க ஆரம்பித்து விட்டனர். அதில் நடக்கும் குற்றங்கள் முதலியவை பார்த்து-பார்த்து,கேட்டு-கேட்டு மரத்துப் போகிறது. அவை மறக்கவும் படுகின்றன.

© வேதபிரகாஷ்

17-09-2023


[1] தினத்தந்தி, முறைகேடுகள் தொடர்பாக உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் விசாரணை , செப்டம்பர் 5, 11:19 pm

[2] https://www.dailythanthi.com/News/State/higher-education-additional-secretary-inquiry-into-irregularities-1046282

[3] மாலைமலர், முறைகேடு நடந்ததாக புகார்: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் விசாரணை, ByMaalaimalar .5 செப்டம்பர் 2023 1:32 PM.

[4] https://www.maalaimalar.com/news/state/allegation-of-malpractice-investigation-by-additional-secretary-department-of-higher-education-thiruvalluvar-university-658795

[5] தினமலர், திருவள்ளுவர் பல்கலை.,யில் ஊழல்: அதிகாரி விசாரணை, செப்டம்பர், 07,2023,09:13 IST

[6] https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=58971&cat=1

[7] இடிவி.பாரத், திருவள்ளுவர் பல்கலையில் ஏராளமான முறைகேடு; பேராசிரியர்கள், ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!,Published: Aug 3, 2023, 6:38 AM.

[8] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/vellore/thiruvalluvar-university-teaching-and-non-teaching-staffs-protest-against-administration/tamil-nadu20230803063809297297569

[9] விகடன், பெயர் சர்ச்சையால் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்குகிறதா தி.மு.?! – என்ன நடக்கிறது?, லோகேஸ்வரன்.கோ, ச.வெங்கடேசன், Published:23 Jul 2021 5 PM; Updated:23 Jul 2021 5 PM.

[10] https://www.vikatan.com/government-and-politics/is-dmk-government-closing-jayalalitha-university

[11] The Fedearal, Closure of Jayalalithaa Univ, fallout of rivalry between Dravidian parties?, N Vinoth Kumar, 2 Sept 2021 6:55 PM  (Updated:2 Sept 2021 7:07 PM).

[12] https://thefederal.com/states/south/tamil-nadu/closure-of-jayalalithaa-univ-fallout-of-rivalry-between-dravidian-parties/