Archive for the ‘பாடம்’ Category

பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.ஏ., முடித்தவர்கள் சரித்திரம் – வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது–பிரச்சினை, பின்னணி என்ன? (2)

ஏப்ரல் 14, 2024

பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.., முடித்தவர்கள் சரித்திரம்வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது பிரச்சினை, பின்னணி என்ன? (2)

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொல்லியல் துறை: கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொல்லியல் துறைக்கு அடித்தளமிட்டவர் 1911இல் துணைவேந்தராக இருந்த அசுதோஷ் முகர்ஜி. இங்கு கற்கால வரலாறு, கல்வெட்டு, நாணயவியல், கட்டிடக்கலை, சிற்பக்கலை எனத் தொல்லியலோடு தொடர்புடைய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்தியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான சென்னைப் பல்கலைக்கழகம் 1961 முதல் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் படிப்பை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட நிலையில் வழங்கிவருகிறது. கற்கால வரலாறு, தொல்லியல் அகழாய்வு நெறிமுறைகள், கட்டிட, சிற்பக்கலை, கல்வெட்டுக்கள் பற்றிய பாடப்பிரிவு, நாணயவியல், அருங்காட்சியகவியல், ஆழ்கடல் ஆய்வுகள் தொடர்பான பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் முறையான அகழாய்வுப் பயிற்சி வழங்கப்படுகிறது.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் முதலியன: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைத் தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், ஆழ்கடல் ஆய்வுத்துறை, கட்டிடக்கலைத் துறை எனத் தொல்லியல் சார்ந்த அனைத்துப் பாடப்பிரிவுகளையும் வழங்குகிறது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஓராண்டு தொல்லியல், கல்வெட்டியல் பட்டயப் படிப்பையும், பண்டைய வரலாறு, தொல்லியல் பாடத்தில் முனைவர் பட்டத்தையும், ஆறு மாத தொல்லியல் பொருட்கள் பாதுகாப்பு தொழில்நுட்பம் சார்ந்த சான்றிதழ் படிப்பையும் வழங்குகிறது. சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஓராண்டு கவ்வெட்டியல்பாடத்தை வழங்குகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இரண்டு வருட தொல்லியல் படிப்பை உதவித் தொகையுடன் வழங்குகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகை அவர்கள் மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள மிகப் பெரிய வாய்ப்பாக அமையும்.

மற்ற கல்வி நிறுவனங்கள்: பல்கலைக்கழகங்கள் தவிர்த்துப் பல கல்லூரிகள் தொல்லியல் பாடத்தை இளங்கலை, முதுகலை அளவிலும் வழங்குகின்றன. நாகப்பட்டினத்தில் உள்ள பூம்புகார் கல்லூரி ஓராண்டு கட்டிடக்கலை, சிற்பக்கலை பாடப்பிரிவில் இந்தியாவில் இருந்த பல்வேறு கட்டிடக்கலை அமைப்புகளை விளக்கும் வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மாமல்லபுரத்தில் உள்ள கட்டிட, சிற்பக்கலை கல்லூரியும் மாணவர்களுக்கு இளங்கலையில் நுண்கலைப் பட்டத்தை வழங்குகிறது. சென்னையில் உள்ள சென்னை கிறித்துவக் கல்லூரி இளநிலைக் கல்வியில் தொல்லியல் பாடத்தை வழங்குகிறது. இக்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட வரலாற்றின் மறுபக்கத்தை தொல்லியல் கல்வியின் மூலம் அறிவியல்பூர்வமான முறையில் அகழ்ந்தெடுத்து உலகுக்குப் பறைசாற்றுகின்றன. தொல்லியல் என்பது அனைத்துத் துறைகளையும் இணைத்துச் செய்யப்பட வேண்டிய ஆய்வுத் தளமாகும். ஆகையால் பல்துறை அறிஞர்களும் ஆர்வத்தோடு தொல்லியலைக் கற்றால் உலகின் தொன்மை வாய்ந்தவர்கள் இந்தியர்கள் என்பது புலப்படும். குறிப்பாக உலகின் தொன்மையாள மொழிக்கும், வரலாற்றுக்கும் சொந்தக்காரர்களான தமிழர்கள் தங்கள் வரலாற்றின் வளமையை உணரவும் போற்றவும் மிகப்பெரும் வாய்ப்பாக அமையும்.

சரித்திரப் பாடத்தில்-பட்டப் படிப்பில் வித்தியாசம் ஏன்?: சரித்திரம் படித்தவர்கள் தொல்லியல் வேலைக்குவர முடியாது என்றால், அதே போல தொல்லியல் படித்தவர்களும் சரித்திர வேலைக்குச் செல்ல முடியாது. ஜே,என்.யூவில் இடைக்கால சரித்திரம் பட்டம் பெற்றவருக்கும் இந்த ஆணை பொறுந்தும். பிறகு, ஜே,என்.யூ இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுகின்றதா? அதனிடம் ஏன் பழங்கால இந்தியாவுக்கு துறை-படிப்பு இல்லை என்று யாருகேட்டதாகத் தெரியவில்லை. இப்பொழுதெல்லாம், புதிய படிப்புகள் படித்தால் வேலை கிடைக்கும் என்ற எண்ணம் வலுத்துள்ளது. அதனால், ஒருவேளை இப்படியெல்லாம் பல்கலைக் கழகங்களில் துறைகளை ஆரம்பிக்கலாம். சரித்திரப் படிக்க ஆளில்லை, சரித்திரத் துறையே மூடப் படுகிறது என்றெல்லாம் கூட நடந்தேறியுள்ளது. அதற்கும் முறையான எதிர்ப்பு ஒன்றும் இல்லை. சுற்றுலா, பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு, ஓட்டல்-கேடரிங் மேனேஜ்மென்ட் என்றெல்லாம் மாறி வருகின்றதை கவனிக்கலாம், அதாவது, சரித்திரம் இவற்றுடன் சேர்த்து அல்லது அவற்றை சரித்திரத்துடன் சேர்த்து, படிப்புகளை உருவாக்குகிறார்கள்.

நன்றாக படிக்கும் மாணவர்களைப் பற்றி கவலைக் கிடையாது: நன்றாக படிக்கும் மாணவர்களைப் பற்றி கவலைக் கிடையாது. அவர்கள் எப்படியாவது, எந்த படிப்பு, துறை படித்தாலும் முன்னுக்கு வந்துவிடுகிறார்கள், வேலைக்குச் சென்று விடுகிறார்கள். ஆனால், 50% பெறுபவர்கள் கஷ்டப் படுகிறார்கள். மேலும், ஆங்கிலம் தெரியாத நிலையும் பலரை பாதிக்கிறது. அதைப் பற்றியும் பெரும்பாலோர் கண்டு கொள்ளவதில்லை. எப்படியாவது அரசு வேலை கிடைத்து விட்டால், போதும், பிறகு அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம் போன்ற மனப்பாங்கும் உள்ளது. இந்த வேலைக்கு, இந்த ஆண்டில் விளம்பரம் வரப்போகிறது, அதனால், அதற்குள் டிகிரி / பட்டயம் பெற்று தயாராகி விடவேண்டும் என்ற திட்டத்துடனும் படிக்க சேர்கின்றனர். அத்தகைய விவரம் தெரிந்தவர்கள், விவரமானவர்கள் அமைதியாக வேலைக்குச் சென்று விடுகின்றனர். மற்றவர்கள் முழிக்கின்றனர், திகைக்கின்றனர். போட்டியில் தம்மையும் அறியாமல் பின்னே தங்க நேரிடுகிறது.

காலப்போக்கில் மாறும் / காலாவதியாகும் பாடங்கள்: கல்வியாளர்களில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் கலை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு, பாகுபாடு மற்றும் போட்டி ஆகியவை மறக்கமுடியாததாகவும், காலப்போக்கில் தொடர்கின்றன. சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் கலைப் பாடங்கள் மற்ற பாடங்களைக் காட்டிலும் தாழ்ந்தவையாகக் கருதப்பட்டன. இதனால் சில மாணவர்கள் பி.ஏ. (ஹானர்ஸ்) மற்றும் / அல்லது வழக்கறிஞர்களாக ஆக சட்டம் போன்ற படிப்புகளைப் படித்தனர். இல்லையெனில், கலைப் பட்டதாரிகள் அலுவலகம் மற்றும் நிர்வாகப் பணிகளுக்குச் சென்றனர். அக்காலகட்டத்தில், எழுத்தர் பணிக்கு அத்தகைய அனுபவம் தேவைப்பட்டதால் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து அவசியமானது. எனவே, 1980கள் வரை, டைப்ரைட்டர் நிறுவனங்கள் காலை அல்லது மாலையில் ஒரு மணி நேர நேரத்தைப் பெறுவதற்கு வேலை தேடுபவர்களுடன் பிஸியாக இருந்தன. இன்றும் தட்டச்சு மற்றும் கணினி தட்டச்சு ஆகியவை எழுத்தர் பணிக்கு வலியுறுத்தப்படுகின்றன அல்லது கட்டாயமாக்கப்பட்டுள்ளன. கணினிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அவை இயந்திர தட்டச்சுப்பொறிகள் கிட்டத்தட்ட உபயோகமில்லாதவையாகி ஸ்கிராப்பாக விற்கப்பட்டன. எலெக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் தட்டச்சுப்பொறிகளும் கூட அதே நிலையை அடைந்தன.

வகுப்பறையில் திறமை தீர்மானிக்கப் படும்: அதுபோல சரித்திரம் போன்ற கலைசார் படிப்புகள் வேலை எனும்பொழுது, மதிப்பிழந்து வருகின்றன. அதிலும் ஆங்கிலம் எழுத-படிக்க-பேச சரியாக வராது என்றால், அலுவலகங்களில் வேலை செய்வது கடினமாகி விடுகிறது. அந்நிலையில் உதவி / துணை பேராசிரியர் பதவிக்குச் சென்றால், அவர்கள் எப்படி பாடங்கள் நடத்துவர், போதிப்பர், விளக்குவர் என்று தெரியவில்லை., ஆகவே, நிச்சயம் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும், தயார் படுத்திக் கொண்டு, சவல்களை சம்மாளிக்க வேண்டும். தங்களது வேலைக்கு உகந்தவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். வெறும்பட்டங்கள் / சான்றிதழ்கள் உதவாது, வேலை செய்யும் விதம் தான் அவர்களின் உண்மையான தகுதி, திறமை முதலியவற்றை வெளிப்படுத்தும். ஏனெனில், வகுப்பறையில் பாடத்தை போதிக்கும் பொழுது, ஏமாற்ற முடியாது. மாணவர்கள் தராதரத்தை கண்டு பிடித்து விடுவார்கள், கண்டு கொள்வார்கள், மதிக்க மாட்டார்கள்.

© வேதபிரகாஷ்

14-04-2024

ஆசிரியர்களிடம் கட்டிப்பிடி சண்டை-சச்சரவு-அதிதடி ஏன், கற்பித்தல் முதலியவற்றில் கவனம் இல்லாது மற்ற காரியங்களில் ஈடுபடும் போக்கு ஏன்? (1):

ஏப்ரல் 15, 2023

ஆசிரியர்களிடம் கட்டிப்பிடி சண்டை-சச்சரவு-அதிதடி ஏன், கற்பித்தல் முதலியவற்றில் கவனம் இல்லாது மற்ற காரியங்களில் ஈடுபடும் போக்கு ஏன்? (1):

ஆசிரியர்களிடம் சண்டை-சச்சரவு-அதிதடி ஏன்?: தமிழக பள்ளி ஆசிரியர்களிடம் அடிக்கடி வாக்குவாதம், வாடா-போடா பேச்சுகள், கெட்ட வார்த்தைகள் பேசுவது, திட்டுவது, சண்டை போடுவது, அடித்துக் கொள்வது, கட்டிப் புரண்டு சண்டை போடுவது, ஓடி-ஓடி அடித்துக் கொள்வது, என்றெல்லாம் சகஜமாகி விட்டன. போதாகுறைக்கு செல்போன் வசதியும் வந்து விட்டதால், புகைப் படங்கள், வீடியோக்கள் எல்லாம் உலா வர ஆரம்பித்து விட்டன. பெரும்பாலும் மத்தியஸ்தம் செய்து, விசயங்களை-விவகாரங்களை அமுக்கி விடுவது என்ற ரீதியில் தான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இருப்பினும், பணம், அந்தஸ்து, கௌரவம், அரசியல் போன்ற காரணிகளால் சில ஆசிரியர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. “நானா-நீயா” அல்லது “நீயா-நானா-”, ஒன்டிக்கு ஒன்டி வாடா பார்த்து விடுவோம் என்ற ரீதியில் செல்லும் பொழுது, இவையெல்லாம் அரங்கேறி, செய்திகளாகி, உலா வர ஆரம்பிக்கின்றன. இதனால், சஸ்பெண்ட், இடமாற்றம், ஜாதிப் பிரச்சினை என்றால் வழக்குகள் என்றெல்லாம் வந்து விடுகின்றன.

ஏப்ரல் 2023 – வேதியியல் ஆசிரியர் இயற்பியல் ஆசிரியர் இடையே சண்டை: திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அருகே குனிச்சியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,200 மாணவ – மாணவியர் படிக்கின்றனர்; 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பள்ளியில் கடந்த மாதம், 29ல் கால அட்டவணை தயாரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் குழந்தைசாமி, 55, தலைமை வகித்தார். அப்போது, வேதியியல் ஆசிரியர் சின்னமணி, 45, இயற்பியல் ஆசிரியர் கோவிந்தசாமி, 43, ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆபாசமாக பேசி, கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்[1]. அரை மணி நேரம் நடந்த சண்டை குறித்த ‘வீடியோ’ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது[2]. அதன் அடிப்படையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் சின்னமணி, கோவிந்தசாமி ஆகியோரை, ‘சஸ்பெண்ட்’ செய்து நேற்று உத்தரவிட்டார்[3]. மேலும், விளக்கம் கேட்டு, தலைமை ஆசிரியர் குழந்தைசாமிக்கு, ‘மெமேோ’ கொடுக்கப்பட்டுள்ளது[4].

ஜூலை 2022 – வெட்டன் விடுதி, புதுக்கோட்டைமுன்விரோதம்: ஆலங்குடி அருகே வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டிப் புரண்டு சண்டை போட்ட இரண்டு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்[5]. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 500 மாணவ – மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளியில் ஆங்கில ஆசிரியர் சந்தோஷ் 47 தமிழ் ஆசிரியர் தமிழ்ச்செல்வன் 49 ஆகியோர் இடையே நீண்ட காலமாக முன்விரோதம் இருந்துள்ளது[6]. இதை ஆங்கிலம்-தமிழ் மோதல் என்று எடுத்துக் கொள்ள முடியாது. நல்லவேளை, இந்தி டீச்சர்-தமிழ்-டீச்சர் என்று இல்லை, பிறகு, அத்தகைஅ சண்டை, வேஊ விதமாகியிருக்கும். அந்த “நீண்ட காலமாக முன்விரோதம்” விளக்கப் படவில்லை, பிறகு, அவர்கள் ஏன் ஒரே இடத்தில் போஸ்டிங் போடவேண்டும் போன்ற விவரங்களும் மர்மமாக இருக்கின்றன. இருப்பினும்ளூடகக் காரர்களையே ஈர்த்துள்ள்தால், இவ்விசயம் ஊடகங்களில் அதிகமாகவே செய்தியாக வெளி வந்தள்ளது. இரு நாட்களுக்கு முன் மதிய உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் இரண்டு ஆசிரியர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கட்டிப்புரண்டு சண்டையிட்டனர்[7]. சக ஆசிரியர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்துஅனுப்பினர்[8]. இது குறித்து பள்ளிக்கு சென்று விசாரணை நடத்திய புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரிகள் சந்தோஷ் தமிழ்செல்வனை வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டனர்[9]. படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களே இவ்வாறு தாக்கிக் கொள்வது அதிர்ச்சியக இருந்தது[10].

ஜனவரி 2022 – தலைமை ஆசிரியருக்கும் மாற்றுத் திறனாளி ஆசிரியருக்கும் சண்டை:  திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்துள்ள கடலாடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சற்றுவட்டார பகுதிகளில் இருந்து 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து படித்து வருகின்றனர். மேலும் இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாடங்களை எடுத்து  வருகின்றனர்.  இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக அண்ணாமலை என்பவர்  பணிபுரிந்து வருகிறார். பின்னர்  இந்த  பள்ளியில் மாற்றுத் திறனாளி ஆசிரியர் செழியன் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், தலைமை ஆசிரியருக்கும் இடையே பல மாதங்களாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது[11]. நேற்று  அவர்களுக்குள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருவரிடையே ஏற்பட்ட பிரச்னை  வாக்குவாதமாக மாறியுள்ளது. திடீரென இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.  அப்போது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்து கொண்டும் கீழே விழுந்தும் தாக்கி கொண்டனர்[12]. பின்னர் அவர்களை மற்ற ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். அதனைத் தொடர்ந்து  இருவரும் தாக்கிக்  கொண்டதை   யாரோ  அவர்களுடைய தொலைபேசியில்  வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பரவ விட்டனர். இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் மற்றும் மற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  அதாவது ஆசிரியர்கள் எந்த நிலையில் இருந்தாலும், சச்சரவு ஓய்வதில்லை, சண்டையிலும் முடிவதையும் கட்டுப் படுத்தமுடியாத நிலையும் ஏற்பட்டு விடுகிறது.

சட்டையை பிடித்து மோதலில் ஈடுப்பட்டு ஒழுங்கினமாக நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்: மேலும் இச்சம்பவம்  குறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வத்திடம் பேசிய போது, “ஆசிரியர்கள் தாக்கி கொண்ட சம்பவம் குறித்து போளூர் கல்வி மாவட்ட அதிகாரி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. கல்வி மாவட்ட அதிகாரி விசாரணை அறிக்கையை எங்களிடம்  சமர்ப்பித்த பின்னரே எதற்காக அவர்கள் தாக்கி கொண்டனர் என்பது தெரியவரும். அவர்களில் யார்  மீது தவறு  என்பது தெரியவந்தபிறகே   நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.இந்நிலையில் போளூர் மாவட்ட கல்வி அலுவலர் தயாளன் பள்ளிக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார் பின்னர் விசாரணை தொடர்பானா அறிக்கையை முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வத்திடம் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் பள்ளியில் சட்டையை பிடித்து மோதலில் ஈடுப்பட்டு ஒழுங்கினமாக நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் அண்ணாமலை மற்றும் மாற்று திறனாளி ஆசிரியர் செழியன் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் ஆகிய மூன்று நபர்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே பள்ளியில் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

© வேதபிரகாஷ்

14-04-2023


[1] தினமலர், பள்ளியில் கட்டிப்புரண்டு சண்டை இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட், பதிவு செய்த நாள்: ஏப் 14,2023 01:01; https://m.dinamalar.com/detail.php?id=3293447

[2] https://m.dinamalar.com/detail.php?id=3293447

[3] செய்திசோலை, பள்ளி ஆலோசனை கூட்டத்தில்…. கட்டிப்புரண்டு சண்டை போட்ட ஆசிரியர்கள்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!, jyothi priya, April 13, 2023.

[4] https://www.seithisolai.com/teachers-suspended-3.php

[5] தினமலர், கட்டிப்புரண்டு சண்டை2 ஆசிரியர்கள் மாற்றம், பதிவு செய்த நாள்: ஜூலை 09, 2022 01:37…

[6] https://m.dinamalar.com/detail.php?id=3072259

[7] தினத்தந்தி, அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியரும் தமிழ் ஆசிரியரும் கட்டி புரண்டு சண்டை, ஜூலை 6, 7:05 pm

[8] https://www.dailythanthi.com/News/State/an-english-teacher-and-a-tamil-teacher-have-a-fight-in-a-government-school-739193?infinitescroll=1

[9] காமதேனு, பள்ளியிலேயே ஆசிரியர்கள் கட்டிப்புரண்டு சண்டைதெறித்து ஓடிய மாணவர்கள்: அதிரடி காட்டிய அதிகாரி, Updated on : 6 Jul, 2022, 7:20 pm

[10] https://kamadenu.hindutamil.in/national/clash-among-students-government-school-teachers-job-transfer

[11] தமிழ்.ஏபிபி.லைவ், Watch Video: அரசுப்பள்ளியில் கட்டி புரண்டு சண்டை போட்ட ஆசிரியர், தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட், By: V.வினோத் | Updated at : 30 Jan 2022 07:17 AM (IST); Published at : 30 Jan 2022 08:21 AM (IST).

[12] https://tamil.abplive.com/crime/whatch-video-viral-on-video-websites-attacked-by-teachers-at-kataladi-government-school-37513