Archive for the ‘தடுப்பூசி மருந்து’ Category

103 பேர் கைது – தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? கண்டு பிடிப்பது, தீர்வு எப்படி? (3)

ஏப்ரல் 26, 2023

103 பேர் கைதுதமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? கண்டுபிடிப்பது தீர்வு எப்படி? (3)

70 ஆண்டுகளாக மருத்துவர்களாக செயல்பட்ட மருத்துவர் அல்லாதவர்: போலி டாக்டர், மருத்துவர் என்பது தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளாக மோசடி நடந்து வருகிறது. எப்படி அரசியல் ரீதியில் டாக்டர் பட்டம் போட்டுக் கொண்டு பவனி வருகிறார்கள் மற்றும் பவனி வர ஆசைப் படுகிறார்களோ, அதே போல, பலர், டாக்டராக ஸ்டெதாஸ்கோப்புடன் மருத்துவ வேலை செய்ய தயாராகி விடுகிறார்கள். முன்னர் டாக்டரிடம் “கம்பௌன்டர்” ஆக வேலை பார்த்தவர்களும், பிறகு, நர்ஸ் அல்லது ஓரளவுக்கு அனுபவம் உள்ள நர்ஸ் போன்றவர்கள் தாங்களே டாக்டர் போன்று செயல்பட்டது, செயல்படுவது தெரிந்த விசயமே. அவசரத்திற்கு என்று சில நேரங்களில் அவ்வாறு செய்தது, பிறகு, நிரந்தரமாக அதே வேலையை செய்வது என்று தொடர்கின்றனர். டாக்டரை விட, இவர்கள் பீஸும் குறைவாக வாங்குவதால், கண்டு கொள்ளாமல் காலம் ஓடுகிறது. புதியதாக வருபவர்களுக்கு, இந்த விவரமும் தெரியாது, எம்.பி.பி.எஸ் என்று போட்டுக் கொண்டால், உண்மையான டாக்டர் என்று நம்பித்தான் சிகிச்சைப் பெற்று செல்கிறார்கள். யாராவது அவர்களது சான்றிதழ்களைக் கேட்டு ஆராய்ந்தால் மாட்டிக் கொள்வார்கள். அதுவரை தொழில் அமோகமாகத்தான் சென்றுக் கொண்டிருக்கும். பெரும்பாலாக, கதை அப்படித்தான் ஓடியுள்ளது.

கொரோனா காலத்தில் போலி டாக்டர்கள் அதிகமானது: தமிழகத்தில் பல்வேறு இடங்களில்  கிளினிக் அமைத்து போலி டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதாக புகார் எழுந்தது[1].   கரோனா காலத்தில் டாக்டர்களுக்கும் கிராக்கி ஜாஸ்தியாகியது. டாக்டர்களுக்கே கொரோனா வந்து இறந்த போது, மக்கள் மற்றவர்களிடமும் செல்ல ஆரம்பித்தார்கள். அதாவது, சித்தா, ஆயுர்வேதம் எனும் மற்ற நாட்டு வைத்தியர்களிடமும் செல்ல ஆரம்பித்தார்கள். அவர்களிடம், சித்தா-ஆயுர்வேத படிப்பு சான்றிதழ் கூட இருக்காது. இருப்பினும், மருத்துவத்தை கரைத்துக் குடித்ததைப் போல பேசி, சொற்பொழிவு செய்து, விளம்பரங்கள் மூலம் வியாபாரம் செய்து, பிறகு ஒரு நிலையில், ஹீலர்-மருத்துவர், இயற்கை வைத்தியர் என்றெல்லாம் போர்ட் போட்டுக் கொண்டு, ஒரு நிலையில், டாக்டராகி விடுகிறார். டிவி செனல்களில் சுயவிளம்பரம் செய்துகொள்ளும் அளவிற்கு  பணத்தையும் சம்பாதிக்கின்றனர்.பணம் சேர-சேர, கிளிக் வைத்து, நடை-உடை மாறி, எல்லாமே மாறி விடுகின்றன. இதனால், அரசு அமைப்புகளுக்கும் போலி மருத்துவர்களைக் கண்டுபிடிக்க கஷ்டமாகிறது.

ஒரு தனிமனித புகாரிலிருந்து பிரச்சினை கிளம்பியதா?: சமீபத்தில் எலும்பு முறிவு சிகிச்சை விவகாரத்தில், பொகழ் பெற்ற மருத்துவ மனையில், சிலர், படிப்பு-பட்டம் இல்லாமல் மருத்துவம் பார்த்ததால் பிரச்சினை ஏற்பட்டது என்று புகார் செய்யப் பட்டது. ஆனால், இரண்டு தரப்பிலும் முரண்பட்ட புகார்கள் எழுந்தன. இருப்பினும், எம்பிபிஎஸ் பட்டம் இல்லாமல், மற்ற படிப்பு படித்து, சிகிச்சை செய்தது அறியப் பட்டது. தவிர, வெளிநாடுகளில் படித்து அவை இந்திய எம்பிபிஎஸ் பட்டத்திற்கு சமமானதல்ல, ஏர்புடையது அல்ல என்று முடிவு செய்யப்பட்டது. அந்நிலையிலும், பல மருத்துவப் படிப்புகளுக்கு, இந்தியாவில் அங்கீகாரம் இல்லாமல் போயின மற்றும் சிகிச்சைக்கு வருபவர் எண்ணிக்கையும் மிக கணிசமாக குறைந்தது. இருப்பினும், தேவை என்ற நிலையில் அப்போலி வைத்தியர் இருக்கத்தான் செய்கின்றனர்.

நீதிமன்ற உத்தரவின் படி, நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது: போலி மருத்துவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க நேஷனல் மெடிக்கல் கமிஷன் சட்டம் 2019 பிரிவு 34 மற்றும் 54-ன் படி தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுத்துவருகிறது[2].  பிராக்டிஸ் செய்யும் சந்தேகத்திற்குள்ளான, மருத்துவ்ர்களின் சான்றிதழ்கள் மறைமுகமாக மற்றும் நேரிடையாக பரிசோதிக்கப் பட்டது. அப்பொழுது தான், போலி மருத்துவர்கள் பலர் அடையாளம் கண்டறியப் பட்டனர். தமிழகம் முழுவதும் 18 நாட்கள் நடைபெற்ற சோதனைகளில், முறையாக அனுமதி பெறாமல் மருத்துவம் பார்த்து வந்த 103 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்[3]. இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவராக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவ படிப்பு தகுதி இல்லாமல், அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது[4].

போலீஸ் நடவடிக்கையும் சேர்ந்தது: இதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்[5]. அதன்படி, கடந்த 18 நாட்களாக மாநிலம் முழுவதும் காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்[6]. இதில், 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்[7]. மேலும், உரிய அனுமதி இல்லாமல் மருத்துவம் பார்த்து வருவோரை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்[8]. இது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது[9].

கைது செய்யப் பட்ட விவரங்கள்: அதனடிப்படையில், தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல், இந்தியமருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில், மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது சுகாதாரத் துறை இணை இயக்குனர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும்படி அணைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, அவர்கள் உத்தரவிட்டிருந்தார்[10].  இதனையடுத்து. கடந்த 18 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் தமிழ்நாடு முழுவதும் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்[11]. திருவாரூரில் 12 பேரும், தஞ்சாவூர் மற்றும் சேலத்தில் 10 பேரும், திருவள்ளூரில் 9 பேரும், பெரம்பலூரில் 8 பேரும், திண்டுக்கல்லில் 6, தேனி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டையில் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது[12].

© வேதபிரகாஷ்

25-4-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Doctors Fradulence : கடந்த 18 நாட்களில் மட்டும் இத்தனை போலி மருத்துவர்கள் கைதா..? காவல்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்!, By: முகேஷ் | Updated at : 24 Apr 2023 09:03 PM (IST).

[2] https://tamil.abplive.com/news/tamil-nadu/police-informed-103-fake-doctors-have-arrested-in-tamil-nadu-in-the-last-18-days-113557

[3] தினத்தந்தி, 18 நாட்கள் 103 போலி டாக்டர்கள் கைதுதொடரும் டிஜிபியின் எச்சரிக்கை, By தந்தி டிவி, 25 ஏப்ரல் 2023 7:03 AM

[4] https://www.thanthitv.com/latest-news/18-days-103-fake-doctors-arrested-continued-dgps-warning-182154 – :~:text=%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88,%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.

[5] மாலைமலர், தமிழகம் முழுவதும் போலி டாக்டர்கள் கைது எண்ணிக்கை 103 ஆக உயர்வு, Byமாலை மலர்25 ஏப்ரல் 2023 8:33 AM

[6] https://www.maalaimalar.com/news/district/fake-doctors-arrested-increased-across-tn-600916

[7] தினமலர், போலி டாக்டர்கள் 103 பேர் கைது, பதிவு செய்த நாள்: ஏப் 25,2023 08:06

[8] https://m.dinamalar.com/detail.php?id=3303534

[9] பத்திரிக்கை.காம், தமிழகம் முழுவதும் 103 போலி டாக்டர்கள் கைது, APR 25, 2023

[10] https://patrikai.com/103-fake-doctors-arrested/

[11] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், போலி டாக்டர்களை பொறி வைத்து பிடித்த போலீஸ்.! 103 பேர் கைதுஎந்த மாவட்டத்தில் அதிக போலி மருத்துவர்கள் தெரியுமா?, Ajmal Khan; First Published Apr 25, 2023, 8:50 AM IST; Last Updated Apr 25, 2023, 11:01 AM IST

[12]  https://tamil.asianetnews.com/tamilnadu/103-fake-doctors-arrested-across-tamil-nadu-rtnimi

தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? (1)

ஏப்ரல் 12, 2023

தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? (1)

போலி டாக்டர்கள் கைது: தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவ தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் நன்னிலம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்[1]. இந்த சோதனையில் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கியும், ஊசி போட்டும் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்களை கண்டறிந்தனர்[2]. இது தொடர்பாக மாப்பிள்ளைகுப்பம் பகுதியைச் சேர்ந்த செந்தில், கொல்லுங்மாங்குடியைச் சேர்ந்த சிவக்குமார், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், நாச்சிகுளம் கல்யாண சுந்தரம் உள்ளிட்ட 10 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்து விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்[3].

தொடர்ந்து நடவடிக்கை; இதுபோன்று, கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஓமலூரில் மருத்துவம் படிக்காமலே ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த இரண்டு போலி மருத்துவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்[4]. இதனிடையே, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவர் ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக வரும் பொது மக்களுக்கு அதிக அளவு உள்ள டோஸ் மருந்து செலுத்துவதாக மருத்துவதுறைக்கு புகார் வந்தது. இது தொடர்பாக ஊரக மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குனர் சாந்தி கொட்டாயூரில் உள்ள கொட்டாயூர் கிராமத்தில் முனுசாமி என்பவரது கிளினிக்கில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது உரிய ஆவணங்கள் இன்றியும், முறையாக மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி மருத்துவர் முனுசாமியை கைது செய்தனர்.

10 நாட்களில் 71 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது: தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த 10 நாட்களில் 71 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்[5]. கேரளா, ஆந்திராவில் மருத்துவராக பயில்வதற்கான விதிகள் வேறாக இருப்பதால், சிலர் தமிழ்நாட்டு விதிகளுக்கு உட்படாமல் தேனி, திருவள்ளூர் உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் மருத்துவராக பயில்வதாக புகார்கள் வந்துள்ளன[6]. மாவட்ட சுகாதார இணை இயக்குநர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டு, காவல்துறை உதவியுடன் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மருத்துவம் பயிலாமல், இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல், மருத்துவத் தொழில் செய்து வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, தேனி உட்பட எல்லையோர மாவட்டங்களில் இதுவரை 71 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சித்த மருத்துவர் அல்லோபதி மருத்துவம் பார்ப்பது: சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி தாலுகாவில் தின்னப்பட்டி ரயில் நிலையம்  உள்ளது. இந்த ரயில்வே நிலையம் அருகில் போலி மருத்துவர் ஒருவர் கிளினிக் வைத்து நடத்தி வருவதாக சுகாதாரத்துறையினருக்கு புகார் வந்தது[7]. தகவலின்பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தீவட்டிப்பட்டி போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்[8]. அப்பொழுது சித்த மருத்துவம் படித்துவிட்டு ஓமலூர் ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆண்டரஸ் கிளினிக் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், அங்கிருந்து மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

உதவியாளராக வேலை பார்த்து மருத்துவர் ஆனது: மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு ராஜபாண்டி 39. மதுரை மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரரான இவருக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டது. இதற்காக கடந்த மார்ச் 27 ல் வில்லாபுரத்தில் சிவா வர்மா கிளினிக்கிற்கு சென்றார். அவருக்கு சிவசுப்பிரமணி சிகிச்சை அளித்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராஜபாண்டி மயங்கினார். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் இறந்தார். சிவசுப்பிரமணி மீது நடவடிக்கை கோரி ராஜபாண்டி மனைவி கண்மணி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். சிவசுப்பிரமணி தனது பெயருக்கு பின்னால் எம்.டி., என்று குறிப்பிட்டிருந்ததால் அவரது மருத்துவ சான்றுகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய மருத்துவ துறைக்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் பரிந்துரைத்தார். மருத்துவக்குழு ஆய்வு செய்ததில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டைச் சேர்ந்த இவர் 9ம் வகுப்பு தேர்வில் இருமுறை தேர்ச்சி பெறாமலும், பிறகு பிளஸ் 2 தொழிற்பாடப்பிரிவில் சேர்ந்து படித்து திருத்தணி, திருவள்ளூரில் எலக்ட்ரீசியனாக வேலை செய்ததும் தெரிந்தது. அதில் போதிய வருமானம் கிடைக்காததால், மதுரை பகுதியில் தலைச்சுமையாக ஜவுளி விற்றார். அதிலும் வருமானம் கிடைக்காத நிலையில், சித்த வைத்தியம் பார்த்த ராமலிங்க சுவாமி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் ‘எடுபிடி’ யாக வேலைக்கு சேர்ந்து, சிகிச்சை அளிப்பதை பார்த்து பார்த்து தொழில் கற்றுக்கொண்டார். பின்னர் போலியாக பீகாரில் சித்த வைத்தியத்திற்கு சான்று பெற்று 10 ஆண்டுகளாக வில்லாபுரத்தில் மருத்துவ தொழில் செய்து வந்துள்ளார். இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த ஒருவரின் அங்கீகார எண்ணை பயன்படுத்தி கிளினிக் நடத்தி வந்துள்ளார்[9]. போலீஸ்காரர் ராஜபாண்டி இறந்த வழக்கில், மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் சிவசுப்பிரமணியை 07-04-2023 அன்று இன்ஸ்பெக்டர் பார்த்திபன் கைது செய்தார்[10].  10-04-2023 அன்று, கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புரசம்பட்டி கிராமத்தில் வீட்டில் 12ஆம் வகுப்பு படித்து, மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் பெரியசாமி என்பவரை குளித்தலை போலீசார் கைது செய்தனர்[11].

தீர்வு என்ன – என்ன செய்ய வேண்டும்? முன்பெல்லாம் மருத்துவ சிகிச்சை இலவசமாகத்தான் இருந்தது. இந்திய ராஜாக்கள் ஆண்ட போது, எல்லாமே இலவசமாகத்தான் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் அம்முறை மாற்றப்பட்டபோது, மாறியபோது, பல சீர்கேடுகள் ஏற்பட்டதில், இதுவும் ஒன்று எனலாம். இப்பொழுதுள்ள முறையில் மருத்துவ படிப்பு முதல் சிகிச்சை வரை பணம் தான் பிரதானம் என்ற நிலையுள்ளது. இந்நிலையை மாற்ற வேண்டும்.

  1. மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக்கப் படவேண்டும். நூற்றுக்கு ஐந்து என்ற விகிதத்தில் மருத்துவர்கள் இருக்க வேண்டும். இல்லை, உணவு சுத்தமாக ஆரோக்யமாக இருக்க வேண்டும். உணவு கலப்படம் முதலியவற்றைப் போக்க வேண்டும்.
  2. மருத்துவர்கள் தங்களது பொதுநல சேவை, தார்மீக எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  3. பணம் சம்பாதிக்க வேண்டும், ஆஸ்பத்திரி கட்ட வேண்டும் என்ற லாபநோக்கில் இருக்கும் போது, அவர்களால் நிச்சயமாக தங்களது மருத்துவத் தொழிலை நியாமாக செய்ய முடியாது.
  4. அரசு / பொது மருத்துவ மனைகள் அதிகமாக்கப் பட வேண்டும். நகரங்களைத் தவிர, நகர் புறங்கள், கிராமங்களில் மருத்துவ மனைகள் அதிகமாக்கப் படவேண்டும்.
  5. டாக்டர்கள் மாதத்திற்கு ஒருதடவை அங்கு சென்று மக்களுக்கு இலவசமாக சேவை செய்ய வேண்டும். கம்பெனிகள் அதற்கு “ஸ்பான்சர்” செய்ய வேண்டும்.
  6. மருந்துகள், பரிசோதனைகள், சோதனைகள் முதலியவற்றின் விலை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அல்லது அரசு அதற்கு விலை நிர்ணயிக்க வேண்டும். இதில் ஏகப்பட்ட ஊழல்கள் / மோசடிகள் / வரியேய்ப்புகள் நடந்து வருகின்றன. அவற்றை முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.
  7. ஆயுர்வேத, சித்தா, யுனானி முறைகளிலும் நவீனமுறைகளைப் பின்பற்றி, மக்களுக்கு உபயோகமாக செயல்படுத்த வேண்டும். “கிளினிகல்” முறைகள் பின்பற்றப்படவேண்டும். நோயாளிகளின் “மருத்துவ சிகிச்சை சரித்திரம்” (கேஸ் ஹிஸ்டரி) பாதுகாக்கப்படவேண்டும்.
  8. முதலில் மருத்துவப் படிப்பு என்பது பணக்காரர்களுக்கு அல்லது லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால் தான் சீட் கிடைக்கும் என்ற நிலையினையும் மாற்ற வேண்டும்.
  9. படிக்க வேண்டும் என்ற ஆசை, மனப்பாங்கு, தகுந்த பாவம் உள்ளவர்களை நுழைவு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப் படலாம். அப்பொழுது அந்த பணபலம் குறையும்.
  10. சேவை எண்ணம் இல்லாமல், மருத்துவத் தொழில் செய்ய முடியாது, ஆகவே, அத்தகைய எண்ணம் இல்லாதோர், மருத்துவத் தொழிலுக்கு வராமல் இருப்பதே நல்லது.

© வேதபிரகாஷ்

12-04-2023


[1] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், Thiruvarur: திருவாரூரில் ஷாக்.. ஒரே நாளில் 10 போலி மருத்துவர்கள் அதிரடி கைது!, Karthikeyan S, 08 April 2023, 12:34 IST.

[2] https://tamil.hindustantimes.com/tamilnadu/10-fake-doctors-arrested-in-thiruvarur-131680936986089.html

[3] தமிழ்.நியூஸ்.18, 10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைதுதமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை…!, NEWS18 TAMIL, First published: April 11, 2023, 19:11 IST, LAST UPDATED : APRIL 11, 2023, 19:11 IST.

[4] https://tamil.news18.com/tamil-nadu/72-fake-doctors-arrested-in-last-10-days-by-tamil-nadu-police-936421.html

[5] தினத்தந்தி, தினத்தந்தி, 10 நாளில் 71 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது, By தந்தி டிவி, 12 ஏப்ரல் 2023 7:24 AM.

[6] https://www.thanthitv.com/latest-news/71-fake-doctors-were-identified-and-arrested-in-10-days-179511

[7] நியூஸ்7தமிழ், சேலம் அருகே போலி மருத்துவர் கைது!, —கோ. சிவசங்கரன், by Web Editor, April 10, 2023

[8] https://news7tamil.live/omalur-duplicate-doctor-arrest.html

[9] தினமலர், பார்த்த அனுபவத்தில் வைத்தியம் பார்த்த போலி மருத்துவர் கைது: சுளுக்கு எடுத்த போலீஸ்காரர் இறந்த வழக்கில் திருப்பம், பதிவு செய்த நாள்: ஏப் 08,2023 00:02

[10]  https://m.dinamalar.com/detail.php?id=3287827

[11] தமிழ்.ஏபிபி.லைவ், கரூர்: குளித்தலை அருகே கிராமத்து வீட்டில் மருத்துவம்போலி மருத்துவர் கைது, By: பிரபாகரன் வீரமலை | Published at : 11 Apr 2023 02:11 PM (IST), Updated at : 11 Apr 2023 02:11 PM (IST)

https://tamil.abplive.com/crime/karur-news-medicine-at-karur-village-house-fake-doctor-arrested-tnn-111254

ஹீலர் பாஸ்கர், சித்தர் தணிகாசலம் மற்றும் மருந்து தயாரிப்பாளர் சிவநேசன்: தமிழகத்தில் மருந்து, சிகிச்சை மற்றும் நோய்-தீர்ப்பு போர்வையில் நடப்பது என்ன? உண்மை நிலை என்ன?

மே 9, 2020

ஹீலர் பாஸ்கர், சித்தர் தணிகாசலம் மற்றும் மருந்து தயாரிப்பாளர் சிவநேசன்: தமிழகத்தில் மருந்து, சிகிச்சை மற்றும் நோய்தீர்ப்பு போர்வையில் நடப்பது என்ன? உண்மை நிலை என்ன?

Baskar, Thanikachalam, Sivanesan

ஹீலர் பாஸ்கர், சித்தர் தணிகாசலம் போன்றவர்கள் போல் அல்லாது, பரிசோதனையில் இறங்கிய மருந்து உற்பத்தியாளர்கள்: தமிழகத்தில் எப்பொழுதுமே, எந்த நோய் வந்தாலும், அதனை தீர்க்க முடியும் என்று மருந்தை சொல்ல ஆரம்பித்து விடுவர். ஏதாவது ஒரு கஷாயத்தைக் குடி என்பவர். இதற்கெல்லாம் கிளினிகல் பரிசோதனை உள்ளதா, செய்யப் பட்டதா, இந்திய மருத்துவம் மற்றும் மருந்தியல் ரீதியில் [Clinical results] அத்தாட்சி சான்றிதழ் [IP] பெற்றுள்ளதா என்பது போன்ற கவலையே இல்லை. ஊடகங்களும் அதற்கு பெரிதாக விளம்பரம் கொடுக்கும், உடனே குறிப்பிட்ட நபர்கள் வியாபாரத்தை ஆரம்பித்து விடுவர். கடந்த மார்ச் மாதத்தில், இதே விவகாரத்தில் ஹீலர் பாஸ்கர் கைது எய்யப் பட்டு, பிணையில் வெளியே வந்துள்ளார். இதே விவகாரகத்தில், சென்ற புதன்கிழமை 06-05-2020 அன்று காலையில் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் போலி மருத்துவர் தணிகாசலம் கைது செய்யப்பட்டார். அந்நிலையில், அதே கொரோனாவுக்கு மருந்து கண்டு பிக்கும் முயற்சியில், பரிசோதனை செய்யும் முயசியில், ஒருவர் இறந்துள்ளது திகைப்பாக உள்ளது. முன்னர் இருவர், சோதனை, பரிசோதனை பற்றி கவலைப் படவில்லை.

ஸுஜத இஒடெச்

சுஜாதா பயோடெக் நிறுவனத்தின் சிவநேசன் ஆராய்ச்சியில் இறங்கியது: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சுஜாதா பயோடெக் நிறுவனம், பிரபல மூலிகை மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் பொது மேலாளராகவும் மருந்தாளுனராகவும் பணியாற்றி வந்தவர் சிவனேசன் (வயது 47)[1]. இந்த நிறுவனம் இயற்கை மற்றும் ஆயுர்வேத பொருட்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம்தான், நிவாரண் 90 என்ற பிரபல மருந்தை தயாரிக்கிறது. வெல்வெட் ஹெர்பல் ஷாம்பு, மெமரி விட்டா போன்றவையும், இந்த நிறுவன தயாரிப்புதான். 20 ஆண்டுகளுக்கும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த சிவனேசன் பல்வேறு மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளார்[2]. பெருங்குடியைச் சேர்ந்தவர். வேதியியல் துறையில், முதுகலை படிப்பு முடித்தவர். சுஜாதா நிறுவனத்தில் இவர் 27 ஆண்டுகளாக பணியில் இருந்தவர்[3]. நிவாரண் 90 தயாரிக்கும் தொழிற்சாலை, உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூரில் உள்ளது[4]. பொதுவாக அங்குதான் சிவநேசன் இருப்பார்[5]. ஆனால், சென்னை வந்த சிவநேசன், ஊரடங்கால், காசிப்பூர் நிறுவனத்திற்கு திரும்ப முடியவில்லை[6]. இந்த நிலையில்தான், கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கலாம் என நிறுவன உரிமையாளர் டாக்டர் ராஜ்குமார் முடிவு செய்து, அதை சிவநேசனிடம் கூறியுள்ளார்.

Dr Rajkumar with Rosaiah-Sujatha Biotec

சோடியம் நைட்ரேட் வைத்து கொரோனா எதிர்ப்பு மருந்து கண்டுபிடித்தது: இந்நிலையில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சிவனேசன் ஈடுபட ஆரம்பித்தார்[7]. ஆய்வில், வெடி பொருட்கள் தயாரிக்கவும் இறைச்சி, பொருட்களை பதப்படுத்தவும் பயன்படுத்தப்படும் சோடியம் நைட்ரேட் உடன் சில மூலக்கூறுகளைச் சேர்த்தால் அதன் மூலம் கிடைக்கும் கரைசல் ரத்த உற்பத்தியைப் பெருக்கும் என்று இருவரும் நம்பியதாக கூறப்படுகிறது[8]. சோடியம் நைட்ரேட் மூலம் நைட்ரிக் ஆக்சைடு தயாரித்தால் கொரோனா நோயை கட்டுப்படுத்தும், அதை மருந்தாக மாற்றினால், மருந்து கிடைக்கும் என்று நம்பினர்[9]. இதற்கான பாரிஸ் கார்னரிலிருந்து சோடியம் நைட்ரேட் வாங்கி வந்து, அதை கலந்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு மருந்தை உருவாக்கி உள்ளார்[10]. இதற்கான மூலக்கூறுகள் வேதியியல் நிபுணர் சிவநேசன் கண்காணிப்பில் தான் நடக்கும். இதன் அடிப்படையில் ஏற்கனவே உள்ள மூலக்கூறுகளை வைத்து மேலும் சில மருந்து பொருட்கள் சேர்த்து கொரோனாவுக்கான மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக சோடியம் நைட்ரேட் வாங்கி வந்து அதன் மூலம் புதிய வேதியியல் கரைசலை உருவாக்கியதாக கூறப்படுகிறது[11]. இந்நிறுவனத்தில் எந்த மருந்து தயாரித்தாலும், அதை சிவநேசன் தான் முதலில் உட்கொண்டு சுயபரிசோதனையில் ஈடுபடுவார்[12].

K. Sivanesan, The pharmacist-cum-production manager

08-05-2020 அன்று மருந்தை உட்கொண்டு, சுயபரிசோதனை செய்து கொண்டது: இதையடுத்து 08-05-2020, வியாழக்கிழமை அன்று அந்த மருந்தை நிறுவன உரிமையாளரான டாக்டர் ராஜ் குமாரின் ஜி.என். செட்டி சாலையில் உள்ள வீட்டில் வைத்து சோதனை செய்ய முயற்சித்துள்ளனர். சமைல் அறையில் தயாரித்த அந்த கலவையை சோதிக்க முயன்றனர். முதலில் டாக்டர் ராஜ் குமார் மருந்தை சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார். ஆனால், 10 நிமிடங்களில் அவர் சுய நினைவுக்கு திரும்பியுள்ளார். இந்த மருந்து கரைசலை குறைவாக உட்கொண்டதால், ராஜ்குமார் சிகிச்சைக்கு பிறகு நலமடைந்துள்ளார். இதனால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது, மருந்தை பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கை வந்துள்ளது. சிவனேசனும் மருந்தை உட்கொண்டுள்ளார். அவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். ஆனால் அவர் மயக்க நிலையில் இருந்து மீளவில்லை. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிவனேசன் உயிரிழந்தார்.  இன்னொரு செய்தி, இருவரையும் மருத்துவ மனைக்குக் கூட்டிச் சென்றனர், அங்கு முதலில் ராஜ்குமார் நினைஉக்கு வந்தார், ஆனால், சிவநேசன் இறந்தார் என்று கூறுகிறது.

Sujatha biotech killed, DM, 09-05-2020

போலீஸ் வழக்கு பதிவு முதலியன: இந்நிறுவனத்தில் எந்த மருந்து தயாரித்தாலும், அதை சிவநேசன்தான் உட்கொண்டு சுயபரிசோதனையில் ஈடுபடுவது வழக்கமாம்[13]. எனவே இந்த மருந்தையும் உட்கொண்டு, ராஜ்குமாருக்கும் கொடுத்ததாக கூறப்படுகிறது[14].கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்க உலகமெங்கும் பல நாடுகளில் விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். சரியான வழிமுறை இல்லாத காரணத்தாலும் ஆர்வ மிகுதியாலும் உயிரிழப்பு நடந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மருந்தாளுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருந்து தயாரிப்பில் சிவனேசனுடன் டாக்டர் ராஜ் குமாரும் இணைந்து செயல்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. சிவனேசனுக்கு சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகும். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

How pharmacist died Tamil Hindu, 09-05-2020

மருந்து, சிகிச்சை போன்றவற்றில் உண்மை இருக்க வேண்டும்: 06-05-2020 அன்று போலி மருத்துவர் கைது, 08-05-2020 அன்று உண்மையான மருத்துவ ஆராய்ச்சியாளர் தானே தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு இறந்தது, முன்னர், ஹீலர் பாஸ்கர் கைதாகி வெளியே வந்தது முதலியன, ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும். தமிழகத்தில், வெறும் தமிழ்-தமிழ் என்றோ, சித்த வைத்தியம் என்றோ சப்தம் போட்டுக் கொண்டிருந்தால் போறாது. மருத்துவ முறையில் பரிசோதித்து, ஆய்ந்து, ஒப்புதல் பெற்று மருந்தை விற்பனைக்கு எடுத்து வரவேண்டும்.  ஆகையால், வெற்றுப் பிரச்சாரம் அல்லது அளவுக்கு மீறிய ஆர்வ மிகுதி முதலியன மருந்து கண்டுபிடிப்புகளுக்கு, நோய் தீர்க்கும் சிகிச்சைகளுக்கு உதவாது.  படிப்படியாக, ஆய்ந்து, சோதித்து, மருந்தை உருவாக்க வேண்டும். அப்பொழுது தான் அது ஏற்புடையதாக இருக்கும். மக்களுக்கு உதவும். ஆர்பாட்டத்தால், மேடை பேச்சுகளால், டிவி-போன்ற கவர்ச்சிகளால் மருந்து வேலை செய்யாது, குணம் ஆகாது. என்றாவது, ஏமாற்றும் முறைகள் வெளிப்படும். எனவே உயிரோடு விளையாடும் போக்கில், போலிகள் எந்த விதத்திலும் நுழையக் கூடாது. இங்கு எத்தகைய உணச்சிகளுக்கும், இடம் கொடுக்கலாகாது.

© வேதபிரகாஷ்

09-05-2020

K. Sivanesan killed, Sujatha Biotech, Chennai - 24

[1] மாலைமலர், விபரீதத்தில் முடிந்த பரிசோதனைகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்ற மருந்தாளுநர் பலி, பதிவு: மே 09, 2020 10:08 IST

[2] https://www.maalaimalar.com/news/district/2020/05/09100828/1500343/GM-of-top-Chennai-biotech-firm-consumes-drug-he-invented.vpf

[3] தமிழ்.முரசு, சோதனை முயற்சி: ஒருவர் பலியானார், 9 May 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 May 2020 09:53.

[4] https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20200509-43740.html

[5] தினமலர், கொரோனா மருந்து ஆராய்ச்சி: சோகத்தில் முடிந்த பரிதாபம், Updated : மே 08, 2020 19:57 | Added : மே 08, 2020 19:54.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2535676

[7] தினத்தந்தி, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி: ‘சோடியம் நைட்ரேட்கரைசலை குடித்த தனியார் நிறுவன மேலாளர் சாவு, பதிவு: மே 09, 2020 04:45 AM.

[8] நியூஸ்.18, கொரோனாவுக்கான மருந்து ஆராய்ச்சி: ரசாயனக் கலவையை குடித்த மருத்துவ வல்லுநர் உயிரிழப்பு..!, NEWS18 TAMIL, LAST UPDATED: MAY 9, 2020, 12:51 PM IST.

[9] https://tamil.news18.com/news/coronavirus-latest-news/coronavirus-chennai-based-ayurvedic-pharmacist-dies-after-drinking-concoction-of-his-own-preparation-289247.html

[10] https://www.dailythanthi.com/News/Districts/2020/05/09043038/Trying-to-find-medicine-for-the-corona-Drinking-sodium.vpf

[11] தமிழ்.சமயம், கொரோனாவுக்கு மருந்து? – சுய பரிசோதனை செய்த தனியார் நிறுவன அதிகாரி பலி!!, Giridharan N | Samayam Tamil, Updated: 09 May 2020, 02:21:00 AM.

[12] https://tamil.samayam.com/latest-news/chennai-news/man-dies-in-chennai-who-trying-to-develop-vaccine-for-coronavirus/articleshow/75629039.cms

[13] தமிழ்.ஒன்.இந்தியா, கொரோனாவுக்கு மருந்து தயாரித்து குடித்து பார்த்த பிரபல மருந்து நிறுவன மேலாளர் பலி.. சென்னையில் சோகம், By Veerakumar, Updated: Saturday, May 9, 2020, 1:14 [IST]

[14] https://tamil.oneindia.com/news/chennai/general-manager-of-a-pharmaceutical-company-in-chennai-take-self-medicine-for-corona-died-384959.html