Archive for the ‘கொள்ளையன்’ Category

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர், சிங்கப்பூரிலிருந்து சென்னை என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (3)

மே 3, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுசார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர், சிங்கப்பூரிலிருந்து சென்னை என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (3)

02-05-2023 ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பப் பட்ட ஈ-மெயில்:

அன்புள்ள அறிஞருக்கு,  

வணக்கம்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மய்ய நிர்வாகக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க காத்திருந்தமைக்கு நன்றி.

நாம் முன்னர் அறிவித்த படி பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு ஏற்ற பல்வேறு இடங்களை பார்வையிட்டோம். அதன் அடிப்படையில் உலகில் உள்ள அனைவரும் எளிதாக வந்து செல்லும் வகையிலான இடத்தினை கண்டறிந்துள்ளோம். மாநாடு நடைபெறவிருக்கும் இடத்தினை உறுதி செய்யும் இறுதிக்கட்ட பணிகளை செய்து வருகிறோம். வருகின்ற வாரத்தில் தேர்வு செய்த இடத்தையும் மேலும் விவரங்களையும் பகிர்ந்து கொள்கிறோம்.   மாநாட்டிற்கு தொடர்ந்து உங்கள் ஆதரவையும் பங்கேற்பையும் எதிர்பார்க்கிறோம்.

மாநாடு ஏற்பாடுகள் தொடர்பான மேலதிக விவரங்களுக்கு organizing-committee@icsts11.org என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.  

நன்றி .  

அன்புடன்

ஆய்வுக்குழு,
பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு  

தமிழறிஞர்களுக்குள் சச்சரவு ஏன்?: தமிழ் பெயரில் உண்மையில் ஆராய்ச்சி, போன்றவை விடுத்து, எப்படியெல்லாம் வியாபாரம் செய்யலாம் என்று தமிழகம் மட்டுமல்லாது அயல்நாடுகளில் வாழும் “தமிழர்களும்மரசியல் செய்வது தெரிகிறது. இதனால், உண்மையான தமிழ் வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர் மற்றும் விற்பன்னர்களுக்கு சங்கடம், பிரச்சினை ஏன் குழப்பமும் ஏற்படுகிறது. அரசியலோடு, சித்தாந்தம், எல்லை கடந்த மற்ற விருப்பு-வெறுப்புகள் முதலியவையும் இவற்றுடன் சேர்கின்றன.  “தமிழறிஞர்களுக்குள் சச்சரவு” என்று குறிப்பிடுவதே[1] தகுதியற்றது, தேவையற்றது மற்றும் விலக்கத் தக்கது எனலாம்[2]. அதிகாரம், செல்வாக்கு, வியாபாரம், அரசியல் முதலியவை இல்லை என்றால், மாநாடு நடத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை எனலாம். கருணாநிதி காலத்திலேயே, இத்தகைய மாநாடு நடத்தும் விவகாரம் பிரச்சினை, சர்ச்சை மற்றும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. நொபூரா கராஷிமா போன்றோர், தமிழகத்தில் அரசியல் ரீதியில் நடத்தப் படும் மாநாடு, “உலகத் தமிழ் மாநாடு” இல்லை மற்றும் தாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் அறிவித்தனர்.

மாரிமுத்து வெர்சஸ் பொன் வைக்கோ போட்டி ஏன்?: உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, சென்னையில் நடத்த திட்டமிடப்படுகிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில், இதுவரை பத்து மாநாடுகள் நடந்துள்ளன. பத்தாவது மாநாடு, சிகாகோவில் நடந்தது. அதில், 11வது மாநாட்டை, சிங்கப்பூரில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், உலக தமிழ் ஆராய்ச்சி மன்ற தலைவர் பொன்னவைக்கோ தலைமையில் ஒரு குழு சிங்கப்பூரிலும், முன்னாள் தலைவர் மாரிமுத்து தலைமையில் ஒரு குழு மலேஷியாவிலும், 11வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதாக அறிவித்து, பணிகளை செய்து வருகின்றன. இது, தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அறிஞர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது[3]. இந்நிலையில், பொன்னவைக்கோ தலைமையிலான குழு, ஜூன் 16, 17, 18 ஆகிய தேதிகளில், சென்னை, கிண்டி, அண்ணா பல்கலை வளாகத்தில், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டு, அரசின் அனுமதியை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது[4].

தமிழக அரசு உயர் அதிகாரிகள், இரு குழுக்களையும் இணைந்தது, ஒரே மாநாடாக நடத்தும்படி அறிவுரை: உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, இரண்டு இடங்களில் நடத்த திட்ட மிட்டுள்ள குழுக்களை இணைக்கும் முயற்சியில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, பொன்னவைக்கோ தலைமையிலான குழு, ஜூன், 16, 17, 18ம் தேதிகளில் சென்னையில் நடத்தவும்; டான் மாரிமுத்து தலைமையிலான குழு, ஜூலை, 20, 21,22 ஆகிய தேதிகளில் மலேஷியாவில் நடத்தவும் தயாராகி வருகின்றன[5]. இதுகுறித்த செய்தியும், ஒரே மாநாடாக நடத்த வேண்டிய அவசியம் மற்றும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தினமலர் நாளிதழில் கடந்த மாதம் ஏப்ரல் செய்தி வெளியானது. இந்நிலையில், தமிழக அரசு உயர் அதிகாரிகள், இரு குழுக்களையும் இணைந்தது, ஒரே மாநாடாக நடத்தும்படி, பொன் வைக்கோ தலைமையிலான குழுவினரிடம் அறிவுறுத்தினர்[6].

பொன் வைக்கோ, மாரிமுத்துவுக்கு எழுதியுள்ள கடிதம்: இதையடுத்து, பொன் வைக்கோ, மாரிமுத்துவுக்கு எழுதியுள்ள கடிதம்: “உலகத் தமிழ் ஆராய்ச்சி 11வது மாநாட்டை, ஒரே குழுவாக இணைந்து நடத்த, தமிழக அரசு விரும்புகிறது. அதனால், எங்களின் குழு, உங்கள் தலைமையை ஏற்று மாநாட்டை நடத்த சம்மதிக்கிறது. எங்களிடம் இதுவரை, 1,057 ஆய்வுச் சுருக்கங்களும், 450 ஆய்வுத் தாள்களும் வந்துள்ளன. அவற்றில், 200 ஆய்வுத் தாள்களை பேராசிரியர் மருதநாயகம் தேர்வு செய்துள்ளார். அந்த ஆய்வாளர்கள், கட்டுரைகளை வாசிப்பர். அவர்களுக்கும், எங்களின் நிர்வாக குழு உறுப்பினர்கள், 10 பேருக்கும், மலேஷியாவில் உணவு, தங்குமிடம், சுற்றுலா தலங்களைக் காணும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆறு கூட்ட அரங்கங்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், நாங்கள் மாநாட்டுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்,”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது சுமார் 250 பேருக்கு “மலேஷியாவில் உணவு, தங்குமிடம், சுற்றுலா தலங்களைக் காணும் ஏற்பாடுகளை செய்தால்” பொன் வைக்கோ, “ மாநாட்டுக்கு முழு ஒத்துழைப்பு ” தருவார், இல்லையென்றால், “இல்லை,” அதாவது, சென்னையில் நடத்தப் படும்.

மாநாடு சென்னையிலா, மலேசியாவிலா?: இதில் இடம் மட்டுமல்லாது, ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் நிலை என்னவாயிற்று என்று தெரியவில்லை. சார்ஜா, சிங்கப்பூர், மலேசியா என்று ஆய்வுக் கட்டுரைகளை வாங்கி வைத்துளளனர்.ளாந்த ஈ-காபிகளை வைத்திருப்பவர்களுக்குக் கொண்டாட்டம் தான். இப்பொழுதெல்லாம், இதுதான் பெரிய வியாபாரமாகி விட்டது. மாநாடு பெயரில் போலி வெசைட், பணம் வசூல், ஆய்வுக் கட்டுரைக்கு ஆயிரம்-இரண்டாயிரம் வசூல் என்றெல்லாம் நடத்தும் கூட்டங்களும் இவர்களது ஆசியோடு உலா வருகின்றன. அத்தகைய அறிவுக்கொள்ளை கூட்டங்கள், இவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப் படங்களையும் இணைதளத்தில் போட்டு, தூண்டில் போட்டு வளைத்து வருகின்றனர், வசூல் செய்கின்றனர். ஆய்வுகட்டுரை விசயத்தில், பொன் வைக்கோ குழுவினர் பாரபட்சத்துடன் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. வந்த கட்டுரைகளை காப்பி அடித்து உபயோகப் படுத்தவும் கூடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், சிலர், வெளிப்படையாகவே இ-மெயிலில் அத்தகைய பிரச்சினையை எழுப்பியுளளனர். ஆனால், தமிழாராய்ச்சியாளர்களுக்கு “பிளாஜியாரிஸம்” என்பது, டீ-காபி குடிப்பது போன்றது. டீ குடித்துக் கொண்டே காபி குடிப்பதில் வல்லவர்கள். இதனால் தான், தரமும் குறைந்து வருகிறது. குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

03-05-2023


[1] தினமலர், தமிழறிஞர்களுக்குள் சச்சரவு: நடக்குமா உலகத் தமிழ் மாநாடு?, Added : ஏப் 05, 2023  06:57

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3285547

[3] தினமலர், சென்னையில் உலகத் தமிழ் மாநாடு?, பதிவு செய்த நாள்: ஏப் 07,2023 05:50

[4]  https://m.dinamalar.com/detail.php?id=3287252

[5] தினமலர், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு குழுக்களை இணைக்க அரசு முயற்சி, பதிவு செய்த நாள்: மே 02,2023 01:49; https://m.dinamalar.com/detail.php?id=3309489

[6] https://m.dinamalar.com/detail.php?id=3309489

ஜே.வி நர்சிங் கல்லூரியில் நடப்பதென்ன?

மே 12, 2010

ஜே.வி நர்சிங் கல்லூரியில் நடப்பதென்ன?

தமிழ்நாடு நர்சுகள் மற்றும் குழந்தை பிறப்பு உதவி செவிலியர்களுக்கான கவுன்சிலின் இணைத்தளம்:

http://www.tamilnadunursingcouncil.com/institution/RInstitutionTNDist.asp

இதன் தலைவியாக உள்ளது: Dr.G.Josephine Registrar, TNNMC.

அந்த இணைத்தளத்தில் வருவதுதான்:

J.V. Institute of Nursing Paramedical Education and Research
16, First Street,
Taylors Estate,
Kodambakkam, Chennai – 24.
Phone – 044-24810088

இதற்கான இணைத்தளம் இது:

http://www.tamilnadunursingcouncil.com/institution/JV/index.htm

எங்களைப் பற்றி, என்று குறிப்பிட்டுள்ளது:

J.V.Educational Trust was founded by Dr.T.V.Srinivasachari, in the year 1990, and has progressed steadily in its pursuit of excellence. The aim of the trust, is to start a group of educational institutions which would provide the means for aspiring students to get good quality education starting from schooling of nursing right through graduate and post – graduate courses.

The Trust aims to provide total quality education with emphasis on value education, life coping and communication skills.

Our Strength is its dedicated team of staff who are highly qualified and motivated. The vision of the trust is to train students and bring out efficient well qualified and dedicated nurses to serve our community.

உள்கட்டமைப்பு வசதி என்று கீழ்காணும் வசதிகள் உள்ளதாக புகைப்படங்கள் போட்டுள்ளார்கள்:

உண்மையிலேயே, இவை இல்லாமலேயே, மாணவிகள் சேர்ந்து விட்டனரா அல்லது வேறு என்ன பிரச்சினை?

RÂVÖŸ SŸpj UÖQ«L· ÚTÖWÖyP• G‡ÙWÖ¦:AWr SŸpj T·¸›¥ ÚRŸ° GµR AÄU‡
R–²SÖ| SŸpj YÖ¡V• UÖ¼¿ H¼TÖ|
: தேர்வு எழுதுவதில் சிக்கல் அதனால் மாற்று ஏற்பாடு நர்சிங் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது என்று இப்பொழுது செய்திகள் வருகின்றன[1]. ÙNÁÛ] ÚLÖP•TÖeL†‡¥ E·[ Ú^.«. SŸpj L¥©¡›¥ ‡£P]Ö¥ RÖeLTyP UÖQ«eh pfoÛN A¸eLÖRÛR Lz†‰•, RjL· AÛ]YÛW• ÚY¿ L¥©¡eh UÖ¼\eÚLÖ¡• Ajh Tzeh• UÖQ«L· ÚS¼¿ ˜Á‡]• SŸpj L°Áp¥ ˜Á“ ÚTÖWÖyP†‡¥ D|TyP]Ÿ. AYŸL· ÚRŸ° Gµ‰Y‡¨• peL¥ H¼TyP‰. CÛR†ÙRÖPŸ‹‰, SŸpj L°Áp¥ T‡YÖ[Ÿ È.Ú^ÖN‘Á UÖQ«LºPÁ ÚTorYÖŸ†ÛR SP†‡]ÖŸ. TÖ‡eLTyP UÖQ«LÛ[ AT¥ÚXÖ SŸpj L¥©¡›¥ ÚRŸ° Gµ‰YR¼h U£†‰Ye L¥©¡ CVeh]£eh AYŸ T¡‹‰ÛW ÙNšRÖŸ. C‹R ŒÛX›¥, Ú^.«. SŸpj UÖQ«L· AWr SŸpj T·¸›¥ ÚRŸ° Gµ‰YR¼h R–²SÖ| SŸpj YÖ¡V• UÖ¼¿ H¼TÖ| ÙNš‰·[‰.

“தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் அங்கீகாரம் பெறப்படாத பாடப்பிரிவுகள் நடத்துவது அம்பலம்[2]: அங்கீகாரம் பெறப்படாத பாடப்பிரிவுகள் நடத்துவதாக சென்னையில் உள்ள ஜே.வி.நர்சிங் கல்லூரி மீது புதிய புகார் வந்துள்ளது. மாணவிகள் பதிவாளரிடம் முறையிட்ட போது அங்கீகாரம் இல்லாத ஒருசில பாடப்பிரிவுகள் நடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது என நர்சிங் கவுன்சில் பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ஜே.வி.நர்சிங் கல்லூரி விடுதியில் போதிய பாதுகாப்பு இல்லை என தெரிவித்தும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நர்சிங் விடுதியில் மாணவியை கட்டிப் போட்டு தாக்கிய கொள்ளையன்[3]: சென்னை கோடம்பாக்கம் ஜே.வி நர்சிங் கல்லூரி மாணவிகள் சாந்தோம் வேலைவாய்ப்பு மையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. மாணவிகளின் போராட்டத்தை போலிசார் வலுக்கட்டாயமாக நிறுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரியில் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லை என மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் உடனே வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்ய வலியுறுத்தியும் மாணவிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாணவிகளை வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்வதாக தமிநாடு நர்சிங் கவுன்சில் உறுதி அளித்திருந்தது.
மர்மமாக கொள்ளையன் நுழைந்தது எப்படி? நர்சிங் மாணவிகள் விடுதியில் புகுந்த கொள்ளையன் மாணவியை கட்டிப் போட்டுவிட்டு தாக்கியதையடுத்து மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கோடம்பாக்கம் ரயில்வே பார்டர் ரோட்டில் உள்ள ஜே.வி. நர்சிங் கல்லூரியில் 68 மாணவிகள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கு மாடியில் அறைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கொள்ளையன் ஒருவர் இங்கே புகுந்தான்[4]. சத்தம் கேட்டு அமலா என்ற எழுந்தார். இதைப் பார்த்த கொள்ளையன் அமலா சுதாரிப்பதற்குள் அவரது வாயில் துணியை அடைத்து கட்டிவிட்டு, கை-கால்களை கட்டிப் போட்ட அந்த கொள்ளையன் அவரை சரமாரியாக தாக்கினான்[5]. இதில் அமலா மயங்கி விழுந்தார். இதையடு்த்து கொள்ளையன் தப்பியோடி விட்டான். அமலாவின் முனகல் சத்தத்தை கேட்டு எழுந்த சக மாணவிகள் அவரை தனியார் மருத்துவமனை யில் சேர்த்தனர்.

மாணவிகள் போராட்டம், மாணவி மயக்கம்!: இச்சம்பவம் தொடர்பாக விடுதி மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர். மேலும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையனைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 50க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்கக அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். திடீரென கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை எதிரே பூந்தமல்லி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு கோஷமிட்டனர், போலீஸ் நிலையமும் முற்றுகையிடப்பட்டது[6]. கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் சாரங்கன் விரைந்து வந்து அவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவிகள் மறியலை கைவிட மறுத்ததால் பெண் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் பூந்தமல்லி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலின்போது ஒரு மாணவி திடீரென மயங்கி விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது.


[1]தினத்தந்தி, 12-05-2010, RÂVÖŸ SŸpj UÖQ«L· ÚTÖWÖyP• G‡ÙWÖ¦: AWr SŸpj T·¸›¥ ÚRŸ° GµR AÄU‡, R–²SÖ| SŸpj YÖ¡V• UÖ¼¿ H¼TÖ|, http://www.dailythanthi.com/article.asp?NewsID=566322&disdate=5/12/2010

[2] தினகரன், தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் அங்கீகாரம் பெறப்படாத பாடப்பிரிவுகள் நடத்துவது அம்பலம் , http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=3555
[3] தட் ஈஸ் தமிள், நர்சிங் விடுதியில் மாணவியை கட்டிப் போட்டு தாக்கிய கொள்ளையன், வியாழக்கிழமை, ஏப்ரல் 29, 2010, 17:43[IST],
http://thatstamil.oneindia.in/news/2010/04/29/robber-attacks-nursing-student-hostel.html<>
[4] http://thatstamil.oneindia.in/news/2010/04/29/robber-attacks-nursing-student-hostel.html

[5] தினகரன், கை-கால்கள் கட்டி மாணவி தாக்கப்படுதல்,  http://www.dinakaran.com/crimedetail.aspx?id=4438&id1=11

[6] http://www.dailythanthi.com/article.asp?NewsID=563706&disdate=4/30/2010