Archive for the ‘க.பாஸ்கரன்’ Category

தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்: முறைகேடு, ஊழல், கல்வித்துறை சீர்கேடு, தமிழகத்தின் நிலை!

நவம்பர் 22, 2019

தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்: முறைகேடு, ஊழல், கல்வித்துறை சீர்கேடு, தமிழகத்தின் நிலை!

Tanjore University accused, implicated etc

இணை பேராசிரியர்கள் பணி நியமனம்போராட்டம் முதல் நீதிமன்றம் வரை: தமிழ் வளர்ச்சிக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் தொடங்கப் பட்டது, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம். கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் முதல் 2018 ஆகஸ்டு 5 வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜி பாஸ்கரன் பதவி வகித்தார்[1]. அப்போது பேராசிரியர்கள். இணை பேராசிரியர்கள் பணி நியமனம் செய்வதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன[2]. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் துணைவேந்தர் க.பாஸ்கரன், முன்னாள் பதிவாளர் ச.முத்துக்குமார் உட்பட 4 பேர் மீது கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்[3].

Vikatan, October 2019

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 10 பேராசிரியர்கள், 11 இணைப் பேராசிரியர்கள் என மொத்தம் 21 பேர், 2017 மே மாதத்தில் நியமனம் செய்யப்பட்டனர்[4]. இந்த நியமனத்தில் முறைகேடுகள், விதிமீறல்கள் நடந்ததாக புகார்கள் எழுந்தன[5]. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்னாள் பேராசிரியர் முருகேசன், சமூக ஆர்வலர் நெடுஞ்செழியன் ஆகியோர் வழக்கு தொடுத்தனர்[6]. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டது.

Irregularities in appointment of professors-1

ஊழல் செய்வதும்பல்கலைகளில் ஒன்றாகி விட்டதோ?: இதனை விசாரித்த நீதிமன்றம், ‘‘ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணைக்கு அனுமதி கோரும் கடிதத்தின்மீது, 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’’ என அதிரடியாக உத்தரவிட்டது[7]. இதையடுத்தே அக்டோபர் 9-ம் தேதியும், 12-ம் தேதியும் அடுத்தடுத்து கூட்டம் நடத்திய சிண்டிகேட், ஒருவழியாக விசாரணைக்கு அனுமதி அளித்தது. இதுகுறித்து வழக்கறிஞர் நெடுஞ்செழியனிடம் பேசினோம். ‘‘பணி நியமன முறைகேட்டில் அப்போதைய துணைவேந்தர் .பாஸ்கரன், பதிவாளராக இருந்த முத்துக்குமரன், அவரின் நேர்முக உதவியாளராக இருந்த சக்தி சரவணன், தொலைநிலைக்கல்வி இயக்குநர் .பாஸ்கரன் ஆகியோர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முத்துக்குமரனும் சக்தி சரவணனும் தற்போது அரசுப்பணியில் தொடர்வதால், இவர்களிடம் அடுத்தகட்ட விசாரணை செய்ய சிண்டிகேட் குழுவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியது. அவர்கள் உள்நோக்கத்துடன் தாமதப்படுத்தவே, நீதிமன்றத்தை நாடினோம். நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகாவது, விசாரணை முறையாக நடக்கும் என்று நம்புகிறோம்,” என்றார்[8]. முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரனிடம் பேசினோம். ‘‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார். பணி நியமனங்களில் அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. ஒரு சிலரின் விருப்பு வெறுப்புக்கு நான் பலிகடா ஆக்கப்படுகிறேன்,’’ என்றார்.

Irregularities in appointment of professors-2

தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணைதேர்ந்தெடுக்கப்பட்ட 21 பேரும் தகுதியற்றவர்கள்: இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். தேர்ந்தெடுக்கப்பட்ட 21 பேரும் தகுதியற்றவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.  இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 பேர் தகுதியற்றவர்கள் என தெரியவந்தது. இவர்களுக்கு நேர்முக தேர்வில் தேர்வுக்குழு உறுப்பினர்கள் அதிக மதிப்பெண்களை வழங்கியுள்ளனர். நேர்முக தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக 10 பேரிடம் ₹15 லட்சம் முதல் ₹40 லட்சம் வரை லஞ்சம்  பெற முயற்சித்துள்ளனர்[9]. இதைத் தொடர்ந்து,

  • முன்னாள் துணைவேந்தர் க.பாஸ்கரன்,
  • முன்னாள் பதிவாளர் ச. முத்துக்குமார்,
  • முன்னாள் பதிவாளரின் நேர்முக உதவியாளர் ஜி.சக்தி சரவணன்,
  • தொலைநிலைக் கல்வி முன்னாள் இயக்குநர் என்.பாஸ்கரன்

ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 120(பி) (குற்றச் சதி), 409 (நம்பிக்கை மோசடி), 420 (ஏமாற்றி நேர்மையின்றி பொருளைப் பெறுதல் அல்லது கொடுக்கும்படி செய்தல்), 467 (போலி ஆவணங்கள் தயாரித்தல்), 471 (பொய்யாகப் புனையப்பட்டு உண்மையானதாக உபயோகம் செய்தல்), ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7-ன் கீழ் (அரசு ஊழியர் சட்டவிரோதமாகப் பணம் பெறுதல்), 13(1) (சி), (13(1)(டி), 13(2) ஆகிய பிரிவுகளில் தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த 14-ம் தேதி வழக்கு பதிவு செய்தார்[10].

Tanjore University accused, implicated etc-2
பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (யுஜிசி) விதிகள் கடைபிடிக்கப்படவில்லை – நேர்முகத் தேர்வுக்கு முன்பாக 10 பேரிடம் தலா ரூ.15 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை பணம் பெற முயற்சி நடந்துள்ளது: இந்நிலையில், இந்த முதல் தகவல் அறிக்கை கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மற்றும் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 21 பேரில் பலருக்கு போதிய முதுகலை ஆசிரியர் அனுபவம் இல்லை. பலர் முனைவர் பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டுநராகச் செயல்படவில்லை. மேலும், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (யுஜிசி) விதிகள் கடைபிடிக்கப்படவில்லை. நேர்முகத் தேர்வில் தேர்வுக் குழு உறுப்பினர்கள் அவர்களுக்கு அதிகப்படியான மதிப்பெண்களை வழங்கியுள்ளனர். நேர்முகத் தேர்வுக்கு முன்பாக 10 பேரிடம் தலா ரூ.15 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை பணம் பெற முயற்சி நடந்துள்ளது[11]. இதேபோல, தமிழ்ப் பல்கலைக்கழக விதிகளை மீறி, 70 ஆசிரியரல்லாத பணியிடங்களில் தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளது[12]. இவர்களுக்கான ஊதியம் அரசு நிதியுதவி மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி வருவாயில் இருந்து வழங்கப்படுகிறது. இதனால் நிதி இழப்பு ஏற்படுவது விசாரணையில் தெரியவந்தது.தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட இவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதியம் வழங்கப்படுவதால், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிதி நல்கையில் இழப்பு ஏற்படுகிறது என்பன போன்ற விவரங்கள் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

PhD for rs 5 lacs, 11-09-2019

பாஸ்கரன் தலைமறைவு- தேவையா?: இந்நிலையில் முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரனை போலீசார் தேடி வருகின்றனர்[13]. தலைமறைவானதாக கூறப்படுகிறது[14]. அந்த அளவில் கேவலப்படுவது அசிங்கமாகத்தான் உள்ளது. மேலே விகடன் நிருபரிடம் பேசியதை மறுபடியும் படித்துப் பாருங்கள். முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரனிடம் பேசினோம். ‘‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார். பணி நியமனங்களில் அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. ஒரு சிலரின் விருப்பு வெறுப்புக்கு நான் பலிகடா ஆக்கப்படுகிறேன்,’’ என்றார். இந்த வீராப்பு இருந்தால், மறைய வேண்டிய அவசியம் இல்லை. படிப்பு-கல்வித்துறை போன்ற விசய்ங்களில் கூட இவ்வாறு, ஆரம்பத்திலிருந்து, கடைசி வரை ஊழல் என்றிருந்தால், போதிக்கும் ஆசிரியர்களிடம் என்ன ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும்?

© வேதபிரகாஷ்

22-11-2019.

Tanjore University accused, implicated etc-3

[1] தினமலர், பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு: முன்னாள் துணைவேந்தர் மீது வழக்கு,Updated : நவ 19, 2019 16:58 | Added : நவ 19, 2019 16:24.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2415128

[3] தமிழ்.இந்து, தமிழ்ப் பல்கலை. பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு புகார்: முன்னாள் துணைவேந்தர் உட்பட 4 பேர் மீது வழக்குகண்காணிப்பு, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கை, Published : 20 Nov 2019 09:58 AM; Last Updated : 20 Nov 2019 02:40 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/526138-tamilnadu-university.html

[5] பத்திரிக்கை.காம், தஞ்சை தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் மீது வழக்கு, by A.T.S Pandian, Posted on November 20, 2019 at 10:22 am

[6] https://www.patrikai.com/irregularities-in-the-appointment-of-professors-case-against-former-tanjore-tamil-university-vice-chancellor/

[7] விகடன், வெளிவருமா தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முறைகேடு?, கு. ராமகிருஷ்ணன், ம.அரவிந்த் Published:23 Oct 2019 5 AMUpdated:23 Oct 2019 5 AM.

[8] https://www.vikatan.com/news/corruption/thanjavur-tamil-university-scam-issue

[9]  தினகரன், தமிழ் பல்கலை பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு மாஜி துணைவேந்தர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு: ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி, 2019-11-20@ 00:35:57.

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=542255

[11] தினமலர், மாஜிதுணைவேந்தர் மீது வழக்கு, Added : நவ 20, 2019 06:41

[12] https://www.dinamalar.com/news_detail.asp?id=2415769

[13] புதிய தலைமுறை, தமிழ் பல்கலை. பேராசிரியர்கள் நியமன முறைகேடு வழக்கில் தேடப்படும் முன்னாள் துணைவேந்தர் தலைமறைவு, Nov 20, 2019

[14] https://www.polimernews.com/amp/news-article.php?id=89557&cid=10