Archive for the ‘போலி’ Category

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணிநீக்கம் (1)

நவம்பர் 19, 2023

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணிநீக்கம் (1)

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிசெலவினங்கள் மூலம் ஆரம்பித்த கல்விஊழல்: கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, கடலூா் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதி, நியமனம், செலவினங்கள் பற்றிய விவரங்கள்-விவகாரங்கள் திருப்தியற்ற நிலையிலே இருந்தது. பல ஆடிட் / தணிக்கைக் குழுக்களின் சோதனைகளில் பணம் சரியாக கையாளப் படவில்லை மற்றும் செலவினங்கள் முறையாக கணக்குகளில் கொண்டுவரவில்லை-வரப்படவில்லை என்றெல்லாம் அறிக்கைகள் வெளிவந்தன. பணம் வாங்கிக் கொண்டு, ஆயிரக்ககணக்கில் வேலை நியமனம் செய்யப்பட்டது முதல் பலவித ஊழல்களும் மலிந்துள்ளன. பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் எனச் சுமார் 12,000 பேர் பணியாற்றிவருகின்றனர்[1]. நிர்வாகக் குளறுபடி மற்றும் அளவுக்கு அதிகமான ஊழியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது பல்கலைக்கழகம்[2]. ஒரு கட்டத்தில் ஊழியர்களுக்கே சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கருதி, 2013-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை ஏற்று, தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார்.

தமிழக அரசு கட்டுப்பாட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: நிதி நெருக்கடி, நிதி முறைகேடுகள் காரணமாக, கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. பல்கலைக்கழக நிர்வாகியாக தற்போதைய தலைமைச் செயலா் ஷிவ்தாஸ் மீனாவை 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-இல் தமிழக அரசு நியமனம் செய்து, அவா் உடனடியாகப் பொறுப்பேற்றார். பின்னா், தமிழக அரசு உயா் கல்வித் துறை மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர சட்டப் பேரவையில் புதிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. தொடா்ந்து, பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாகி ஷிவ்தாஸ் மீனாவால் பல்வேறு கல்வி, நிதி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதையடுத்து பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் எனச் சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்கள், தமிழகத்திலுள்ள மற்ற கல்லூரிகளுக்கும், வேறு துறைகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்[3].  தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் தணிக்கைக்குழு ஆய்வு மேற்கொண்டபோது, போதுமான கல்வித் தகுதி இல்லாமல் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத அலுவலர் என 200-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிவது தெரியவந்தது[4]

2023ல் 56 உதவிப் பேராசிரியா்கள் பணி நீக்கம் அறிவிப்பு ஆணை: மேலும், பல்கலைக்கழகத்தில் அரசு விதிமுறைகளின்படி பணி நியமனம் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு[5], உயா் கல்வித் துறைக்கு அவா் அறிக்கை சமா்ப்பித்தார்[6].. அதன்படி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் 56 உதவிப் பேராசிரியா்கள் அடிப்படை கல்வித் தகுதி மற்றும் அரசு தகுதி விதிமுறைகளைப் பின்பற்றாமல் பணியாற்றி வந்ததாகக் கூறி[7], தமிழக அரசு உயா் கல்வித் துறை பரிந்துரையின்பேரில், அவா்களை பணி நீக்கம் செய்து பதிவாளா் (பொ) ஆா்.சிங்காரவேலு வியாழக்கிழமை 16-11-2023 உத்தரவு பிறப்பித்தார்[8]. பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றி வரும் 18 பேருக்கும்[9], வெளிக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் 38 பேருக்கும் உத்தரவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்[10].

புகழ் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலை: உலகெங்கும் அண்ணாமலையில் படித்தவர்கள் உள்ளனர். பண்டித மணி கதிரேசன் செட்டியார் போன்ற சிறந்த தமிழ் அறிஞர்கள் தலைமையில் தமிழ் ஆராய்ச்சி ஜொலித்தது. பல அறிய படைப்புகள் வெளிவந்தன. தண்டபாணி தேசிகர் ரங்காச்சாரி போன்றோர் இசைக்கல்லூரியை அலங்கரித்தனர். சர் சி பி ராமஸ்வாமி ஐயர் போன்றோர் துணைவேந்தர்களாக பணியாற்றினார். அந்த பல்கலைக்கா இந்த நிலைமை. பொது உடைமையாக்கி நாசப்படுத்தி விட்டார்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் போதிய தகுதி இல்லாத காரணத்தால் பேராசிரியர்கள் 58 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போலி கல்விச் சான்றிதழ்களை வழங்கி பணியாற்றி வந்ததாக எழுந்த புகாரின் பேரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுதைய உயர்க்கல்வித்துறை அமைச்சறின் ஆதரவு: இந்நிலையில் உயர்க்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்[11]. விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யுஜிசி விதிமுறைகளின்படி, உதவிப் பேராசிரியர்கள் நெட் அல்லது ஸ்லெட் தகுதித் தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது பி.எச்.டி படிப்பை முடித்திருக்க வேண்டும்[12]. ஆனால் அந்த தகுதிகள் எதுவும் இல்லாதவர்கள் உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தகுதி குறைவான பேராசிரியர்கள் குறித்து 2019ஆம் ஆண்டில் சிண்டிகேட் குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது[13]. நீதிமன்றமும் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கவில்லை. இப்போது துணை வேந்தர் பணி நீக்கம் செய்துள்ளார்[14]. இது வரவேற்கத்தக்கது. இதற்கு யாரும் பொறுப்பல்ல. 10 ஆண்டுகளாக அவர்கள் தகுதியை மீறி சலுகையை அனுபவித்து உள்ளார்கள். தகுதி குறைவானவர்கள் பணி நியமனம் செய்யப்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் வருங்காலத்தில் தங்களின் தகுதிக்கேற்ற வகையிலான அரசுப் பணிகளுக்கு விண்ணப்பித்தால் அரசு அதனை பரிசீலிக்கும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கல்வி ஊழல்உருவானஉருவாக்கப் பட்ட நிலைவிதம்: ஊழலில் கல்வி, கல்வித்துறை, கல்வி பாடங்கள், கல்வி நெறிமுறை அல்லது கல்வியில் ஊழல் என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களாக இருந்தது. கல்வி தெய்வமாக, தெய்வீகமாகக்  கருதப் பட்டதால் அத்தகைய உரிய ஸ்தானம் கொடுக்கப் பட்டு மதிக்கப் பட்டது. இருந்தாலும் சமீப காலங்களில் கல்வி வியாபாரம் மயமாக்கப்பட்டதால் அந்த விளைவின் உச்சத்தில், “கல்வி ஊழல்” நடந்து வருகிறது. விடுதலைக்குப் பிறகு அரசியல் நுழைவு, ஆளும் அரசியல்வாதிகளின் தாக்கத்தாலும், அரசியல்வாதிகள் மற்றும் சித்தாந்த வாதிகளின் திரிபுகளாலும் கல்வி பாடத்திட்டங்கள் புத்தகங்கள் மற்றும் பாடங்களை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் விற்பனர்கள் என்று எல்லாமே அரசியலுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலை உண்டாயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக அத்தகைய “கல்வி ஊழல்” என்பது ஆரம்பிக்க வைக்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

18-11-2023.


[1] தினமணி, அண்ணாமலைப் பல்கலை.யில் 56 உதவிப் பேராசிரியா்கள் பணி நீக்கம், By DIN  |   Published On : 17th November 2023 12:32 AM  |   Last Updated : 17th November 2023 12:32 AM.

[2] https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2023/nov/17/56-assistant-professors-sacked-in-annamalai-university-4107136.html

[3] விகடன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் டிஸ்மிஸ்பின்னணி என்ன?!, ஜெ.முருகன், Published: 17-11-2023 at 1 PMUpdated: 17-11-2023 at 1 PM.

[4] https://www.vikatan.com/government-and-politics/politics/higher-education-department-has-dismissed-56-professors-without-adequate-educational-qualification-in-annamalai-university

[5] தமிழ்.வெப்.துனியா, அண்ணாமலை பல்கலையின் 56 பேராசிரியர்கள் பணி நீக்கமா? பரபரப்பு தகவல்..!, Written By Mahendran Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (15:08 IST).

[6] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/56-professors-dismiss-in-annamalai-university-123111600061_1.html

[7] தினமலர், அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் 58 பேர் டிஸ்மிஸ், பதிவு செய்த நாள்: நவ 16,2023 14:25

[8]  https://m.dinamalar.com/detail.php?id=3482745

[9] தினத்தந்தி, 56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம்சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அதிரடி, 16 Nov 2023 9:28 PM.

[10] https://www.dailythanthi.com/News/State/56-assistant-professors-sacked-chidambaram-annamalai-university-takes-action-1082995

[11] தமிழ்.சமயம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. போராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன்? அமைச்சர் பொன்முடி பரபரப்பு விளக்கம்!, Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 17 Nov 2023, 3:51 pm

[12] https://tamil.samayam.com/latest-news/state-news/minister-ponmudi-reveals-the-reason-why-annamalai-university-56-assistant-professors-dismissed/articleshow/105289709.cms

[13] தமிழ்.இந்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம்: உரிய கல்வித் தகுதி இல்லாததால் நடவடிக்கை செய்திப்பிரிவு, Last Updated : 17 Nov, 2023 05:58 AM.

[14] https://www.hindutamil.in/news/tamilnadu/1154731-chidambaram-annamalai-university-sacks-56-assistant-professors.html

103 பேர் கைது – தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? கண்டு பிடிப்பது, தீர்வு எப்படி? (3)

ஏப்ரல் 26, 2023

103 பேர் கைதுதமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? கண்டுபிடிப்பது தீர்வு எப்படி? (3)

70 ஆண்டுகளாக மருத்துவர்களாக செயல்பட்ட மருத்துவர் அல்லாதவர்: போலி டாக்டர், மருத்துவர் என்பது தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளாக மோசடி நடந்து வருகிறது. எப்படி அரசியல் ரீதியில் டாக்டர் பட்டம் போட்டுக் கொண்டு பவனி வருகிறார்கள் மற்றும் பவனி வர ஆசைப் படுகிறார்களோ, அதே போல, பலர், டாக்டராக ஸ்டெதாஸ்கோப்புடன் மருத்துவ வேலை செய்ய தயாராகி விடுகிறார்கள். முன்னர் டாக்டரிடம் “கம்பௌன்டர்” ஆக வேலை பார்த்தவர்களும், பிறகு, நர்ஸ் அல்லது ஓரளவுக்கு அனுபவம் உள்ள நர்ஸ் போன்றவர்கள் தாங்களே டாக்டர் போன்று செயல்பட்டது, செயல்படுவது தெரிந்த விசயமே. அவசரத்திற்கு என்று சில நேரங்களில் அவ்வாறு செய்தது, பிறகு, நிரந்தரமாக அதே வேலையை செய்வது என்று தொடர்கின்றனர். டாக்டரை விட, இவர்கள் பீஸும் குறைவாக வாங்குவதால், கண்டு கொள்ளாமல் காலம் ஓடுகிறது. புதியதாக வருபவர்களுக்கு, இந்த விவரமும் தெரியாது, எம்.பி.பி.எஸ் என்று போட்டுக் கொண்டால், உண்மையான டாக்டர் என்று நம்பித்தான் சிகிச்சைப் பெற்று செல்கிறார்கள். யாராவது அவர்களது சான்றிதழ்களைக் கேட்டு ஆராய்ந்தால் மாட்டிக் கொள்வார்கள். அதுவரை தொழில் அமோகமாகத்தான் சென்றுக் கொண்டிருக்கும். பெரும்பாலாக, கதை அப்படித்தான் ஓடியுள்ளது.

கொரோனா காலத்தில் போலி டாக்டர்கள் அதிகமானது: தமிழகத்தில் பல்வேறு இடங்களில்  கிளினிக் அமைத்து போலி டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதாக புகார் எழுந்தது[1].   கரோனா காலத்தில் டாக்டர்களுக்கும் கிராக்கி ஜாஸ்தியாகியது. டாக்டர்களுக்கே கொரோனா வந்து இறந்த போது, மக்கள் மற்றவர்களிடமும் செல்ல ஆரம்பித்தார்கள். அதாவது, சித்தா, ஆயுர்வேதம் எனும் மற்ற நாட்டு வைத்தியர்களிடமும் செல்ல ஆரம்பித்தார்கள். அவர்களிடம், சித்தா-ஆயுர்வேத படிப்பு சான்றிதழ் கூட இருக்காது. இருப்பினும், மருத்துவத்தை கரைத்துக் குடித்ததைப் போல பேசி, சொற்பொழிவு செய்து, விளம்பரங்கள் மூலம் வியாபாரம் செய்து, பிறகு ஒரு நிலையில், ஹீலர்-மருத்துவர், இயற்கை வைத்தியர் என்றெல்லாம் போர்ட் போட்டுக் கொண்டு, ஒரு நிலையில், டாக்டராகி விடுகிறார். டிவி செனல்களில் சுயவிளம்பரம் செய்துகொள்ளும் அளவிற்கு  பணத்தையும் சம்பாதிக்கின்றனர்.பணம் சேர-சேர, கிளிக் வைத்து, நடை-உடை மாறி, எல்லாமே மாறி விடுகின்றன. இதனால், அரசு அமைப்புகளுக்கும் போலி மருத்துவர்களைக் கண்டுபிடிக்க கஷ்டமாகிறது.

ஒரு தனிமனித புகாரிலிருந்து பிரச்சினை கிளம்பியதா?: சமீபத்தில் எலும்பு முறிவு சிகிச்சை விவகாரத்தில், பொகழ் பெற்ற மருத்துவ மனையில், சிலர், படிப்பு-பட்டம் இல்லாமல் மருத்துவம் பார்த்ததால் பிரச்சினை ஏற்பட்டது என்று புகார் செய்யப் பட்டது. ஆனால், இரண்டு தரப்பிலும் முரண்பட்ட புகார்கள் எழுந்தன. இருப்பினும், எம்பிபிஎஸ் பட்டம் இல்லாமல், மற்ற படிப்பு படித்து, சிகிச்சை செய்தது அறியப் பட்டது. தவிர, வெளிநாடுகளில் படித்து அவை இந்திய எம்பிபிஎஸ் பட்டத்திற்கு சமமானதல்ல, ஏர்புடையது அல்ல என்று முடிவு செய்யப்பட்டது. அந்நிலையிலும், பல மருத்துவப் படிப்புகளுக்கு, இந்தியாவில் அங்கீகாரம் இல்லாமல் போயின மற்றும் சிகிச்சைக்கு வருபவர் எண்ணிக்கையும் மிக கணிசமாக குறைந்தது. இருப்பினும், தேவை என்ற நிலையில் அப்போலி வைத்தியர் இருக்கத்தான் செய்கின்றனர்.

நீதிமன்ற உத்தரவின் படி, நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது: போலி மருத்துவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க நேஷனல் மெடிக்கல் கமிஷன் சட்டம் 2019 பிரிவு 34 மற்றும் 54-ன் படி தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுத்துவருகிறது[2].  பிராக்டிஸ் செய்யும் சந்தேகத்திற்குள்ளான, மருத்துவ்ர்களின் சான்றிதழ்கள் மறைமுகமாக மற்றும் நேரிடையாக பரிசோதிக்கப் பட்டது. அப்பொழுது தான், போலி மருத்துவர்கள் பலர் அடையாளம் கண்டறியப் பட்டனர். தமிழகம் முழுவதும் 18 நாட்கள் நடைபெற்ற சோதனைகளில், முறையாக அனுமதி பெறாமல் மருத்துவம் பார்த்து வந்த 103 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்[3]. இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவராக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவ படிப்பு தகுதி இல்லாமல், அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது[4].

போலீஸ் நடவடிக்கையும் சேர்ந்தது: இதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்[5]. அதன்படி, கடந்த 18 நாட்களாக மாநிலம் முழுவதும் காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்[6]. இதில், 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்[7]. மேலும், உரிய அனுமதி இல்லாமல் மருத்துவம் பார்த்து வருவோரை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்[8]. இது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது[9].

கைது செய்யப் பட்ட விவரங்கள்: அதனடிப்படையில், தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல், இந்தியமருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில், மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது சுகாதாரத் துறை இணை இயக்குனர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும்படி அணைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, அவர்கள் உத்தரவிட்டிருந்தார்[10].  இதனையடுத்து. கடந்த 18 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் தமிழ்நாடு முழுவதும் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்[11]. திருவாரூரில் 12 பேரும், தஞ்சாவூர் மற்றும் சேலத்தில் 10 பேரும், திருவள்ளூரில் 9 பேரும், பெரம்பலூரில் 8 பேரும், திண்டுக்கல்லில் 6, தேனி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டையில் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது[12].

© வேதபிரகாஷ்

25-4-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Doctors Fradulence : கடந்த 18 நாட்களில் மட்டும் இத்தனை போலி மருத்துவர்கள் கைதா..? காவல்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்!, By: முகேஷ் | Updated at : 24 Apr 2023 09:03 PM (IST).

[2] https://tamil.abplive.com/news/tamil-nadu/police-informed-103-fake-doctors-have-arrested-in-tamil-nadu-in-the-last-18-days-113557

[3] தினத்தந்தி, 18 நாட்கள் 103 போலி டாக்டர்கள் கைதுதொடரும் டிஜிபியின் எச்சரிக்கை, By தந்தி டிவி, 25 ஏப்ரல் 2023 7:03 AM

[4] https://www.thanthitv.com/latest-news/18-days-103-fake-doctors-arrested-continued-dgps-warning-182154 – :~:text=%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88,%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.

[5] மாலைமலர், தமிழகம் முழுவதும் போலி டாக்டர்கள் கைது எண்ணிக்கை 103 ஆக உயர்வு, Byமாலை மலர்25 ஏப்ரல் 2023 8:33 AM

[6] https://www.maalaimalar.com/news/district/fake-doctors-arrested-increased-across-tn-600916

[7] தினமலர், போலி டாக்டர்கள் 103 பேர் கைது, பதிவு செய்த நாள்: ஏப் 25,2023 08:06

[8] https://m.dinamalar.com/detail.php?id=3303534

[9] பத்திரிக்கை.காம், தமிழகம் முழுவதும் 103 போலி டாக்டர்கள் கைது, APR 25, 2023

[10] https://patrikai.com/103-fake-doctors-arrested/

[11] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், போலி டாக்டர்களை பொறி வைத்து பிடித்த போலீஸ்.! 103 பேர் கைதுஎந்த மாவட்டத்தில் அதிக போலி மருத்துவர்கள் தெரியுமா?, Ajmal Khan; First Published Apr 25, 2023, 8:50 AM IST; Last Updated Apr 25, 2023, 11:01 AM IST

[12]  https://tamil.asianetnews.com/tamilnadu/103-fake-doctors-arrested-across-tamil-nadu-rtnimi

தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? கண்டு பிடிப்பது, தீர்வு எப்படி? (2)

ஏப்ரல் 12, 2023

தமிழகத்தில் போலி டாக்டர்கள் / மருத்துவர்கள் இருப்பது, கைது செய்யப் படுவது ஏன்? கண்டுபிடிப்பது, தீர்வு எப்படி? (2)

கைது செய்யப்படும் போலி மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் சொற்பம்தான்[1]: டாக்டர் டி.முஹம்மது கிஸார் என்பவர் ழுதிய கட்டுரை கீழே அப்படியே கொடுக்கப் பட்டுள்ளது. தலைப்புகள் மட்டும் சில சேர்க்கப் பட்டுள்லன. அவ்வப்போது `போலி டாக்டர் கைது’ என்ற செய்திகளைக் கடந்து செல்வோம். மருத்துவமே படிக்காமல் `டாக்டர்’ எனக் கூறிக்கொண்டு சிகிச்சை அளிக்கும்போது பாதிப்பு ஏற்படும் நிலையில், அவர்கள் வெளிச்சத்துக்கு வருகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், கைது செய்யப்படும் போலி மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் சொற்பம்தான். இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் மட்டும் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன[2]. மருத்துவமே படிக்காமல் கிளினிக் அல்லது மருத்துவமனை நடத்துபவர்களே போலி டாக்டர்கள். ஏதாவது ஒரு மருத்துவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து, அனுபவ அடிப்படையில் மருத்துவம் பார்ப்பவர்கள். `பாராமெடிக்கல்’ என்னும் மருத்துவம் சார்ந்த பணிகளைச் செய்யும் நர்ஸ்கள், ஆயாக்கள், மருந்தாளுநர்கள் போன்றோரும் சிகிச்சையளிக்கின்றனர்.

டாக்டர் படிப்பு படித்து, ஹவுஸ் சர்ஜன் பயிற்சி முடித்தபிறகே டாக்டராக முடியும்: மருத்துவர் என்று சொல்லப்படுபவர், நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன், நோயின் தன்மையைக் கண்டறிந்து பலவழிகளில் ஆய்வு செய்வார். அத்துடன் அந்த நோயைக் கண்டறிந்து (Diagnose) உறுதிப்படுத்தியபிறகே மருந்துகளைப் பரிந்துரைப்பார். குறிப்பாக, மருந்து மாத்திரைகளைப் பரிந்துரைப்பதற்குமுன், அவை உடலில் எப்படிச் செயல்படும், மருந்து உடலுக்குள் சென்றதும் எப்படி வினை புரியும், பக்கவிளைவுகள் இல்லாமல் எப்படி மருந்து கொடுப்பது என்றெல்லாம் ஆராய்வார். இதுபோன்று மருந்து அறிவியல் சார்ந்த விஷயங்களை நன்றாக அறிந்தபிறகே ஒரு மருத்துவரால் நோயாளிக்கு மருந்துகளைப் பரிந்துரைக்க இயலும். இவையெல்லாம் அனுபவத்தில் வர வாய்ப்பில்லை. மருத்துவக் கல்லூரிகளில் படித்து ஹவுஸ் சர்ஜன் பயிற்சி முடித்தபிறகே, இந்த மருத்துவ அறிவைப் பெறமுடியும்.

அலோபதி மருத்துவம் படிக்காதவர் (ஆயுர்வேதம்) முதலியன, அம்முறை பின்பற்றலாகாது: இதேபோல் மாற்று மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி போன்ற துறைகளில் படித்துப் பட்டம் படித்தவர்கள், அலோபதி சிகிச்சை அளிப்பதும்கூட ஒருவகையில் போலி மருத்துவத்தின் கீழ்தான் சேரும். ஆம், இவர்களுக்கு அலோபதி முறை மருத்துவம் பற்றித் தெரியாது. அதுபோல, அலோபதி மருத்துவர்கள் மாற்றுமுறை சிகிச்சை அளிப்பதும்கூட குற்றமே. காரணம், அலோபதி மருத்துவர்களுக்கு மாற்றுமுறை மருத்துவம், அதுபற்றிய மருந்து அறிவியல் தெரியாது. இவைதவிர அலோபதி மற்றும் மாற்று மருத்துவமுறை எதுவும் பயிலாமல், அனுமதி பெறாத நிறுவனங்களில் சில மாதங்களோ அல்லது சில வருடங்களோ படித்துச் சான்றிதழ் (சர்டிஃபிகேட் கோர்ஸ்) பெற்றுவிட்டு, தானும் ஒரு மருத்துவர் என்று சிகிச்சை அளிப்பதும் போலி மருத்துவமே. இன்றையசூழலில் இதுபோன்ற போலி மருத்துவர்கள் அதிகம் உள்ளனர்.

பதிவு செய்த பிறகே மருத்துத் தொழில் பின்பற்ற முடியும்: அதேநேரத்தில் எத்தகைய படிப்பு படித்தாலும், ஒரு மருத்துவர் என்பவர் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே அவரால் சிகிச்சை அளிக்கமுடியும். அலோபதி மருத்துவர்கூட படித்து விட்டு, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல், பதிவு எண் பெறாமல் மருத்துவச் சிகிச்சை செய்வது குற்றமே. உதாரணமாக ரஷ்யா, உக்ரைன், ஜார்ஜியா, சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் மருத்துவத் தொழில் செய்வார்கள். அவர்கள், இந்தியாவில் எப்.எம்.ஜி.ஈ (Foreign Medical Graduate Screening Exam-  FMGE) என்னும் ஸ்கிரீனிங் தேர்வு எழுதி அதில் தேர்ச்சிபெற்று, அதன்பிறகு ஒரு வருடம் அரசு அங்கீகாரம்பெற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி எடுக்கவேண்டும். அத்துடன் மருத்துவ கவுன்சிலின் பதிவு எண் பெற்றபிறகே இந்தியாவில் மருத்துவம் செய்யமுடியும்.

ரஷ்யா போன்ற நாடுகளில் படித்து, அங்கீகாரம் இல்லாத படிப்புகளை போட்டுக் கொண்டு மருத்துவம் செயலாகாது: ரஷ்யா போன்ற சில நாடுகளில் எம்.டி (MD) பட்டம் பெற்றாலும் அவர்கள் இங்கே எம்.பி.பி.எஸ் மருத்துவராகவே கருதப்படுவார்கள் என்ற நிபந்தனையுடன்தான் மருத்துவ கவுன்சில் அவர்களைப் பதிவு செய்கிறது. காரணம், அவர்கள் எம்.பி.பி.எஸ் முடிக்காமலே எம்.டி படிக்கும் வசதி சில நாடுகளில் உள்ளது. அலோபதி மருத்துவப் பட்டமான எம்.பி.பி.எஸ் பெற்ற மருத்துவர்கள்கூட தன் பெயருக்குப் பின், தேர்ச்சி பெறாத அல்லது மருத்துவ கவுன்சிலில் அங்கீகாரம் இல்லாத டிகிரிகளைப் போட்டுக்கொண்டு சிகிச்சை அளிக்கிறார்கள். இதுவும் ஒருவகையில் போலி மருத்துவமே, இதுவும் குற்றமே.

போலி மருத்துவர்களை எப்படி அடையாளம் காண்பது?: போலி மருத்துவர்களில் பெரும்பாலானோர் தங்களது லெட்டர்பேடிலோ அல்லது கிளினிக் போர்டிலோ தங்கள் பெயரைப் பயன்படுத்தாமல் கிளினிக் பெயரை மட்டுமே பயன்படுத்துவார்கள். ஒருவேளை அதில் தங்கள் பெயரைப் போட்டால், பெயருக்குப் பின்னால் மருத்துவக் கவுன்சில் பதிவு எண் மற்றும் படித்த டிகிரியைப் போட மாட்டார்கள். ஒரு சிலர் இறந்துபோன மருத்துவர்கள் அல்லது இந்தியாவில் பல  ஆண்டுகளாக இல்லாத மருத்துவர்களின் பெயர் மற்றும் பதிவு எண்ணைப் பயன்படுத்தி போலி மருத்துவம் செய்கிறார்கள். இன்னும் சிலர், தங்களுக்குத் தெரிந்த,வேறு இடத்தில் பணிபுரியும் மருத்துவர்களின் பெயர்களையும், மருத்துவ கவுன்சில் பதிவு எண்ணையும் பயன்படுத்தி, மருத்துவத் தொழில் செய்கின்றனர். இது தண்டனைக்குரிய ஆள்மாறாட்ட கிரிமினல் குற்றமாகும்.

கண்டுபிடிக்க எளிய வழிகள்!: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், போலி மருத்துவர்களை அடையாளம் காண எளிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. உங்கள் பகுதியில் இருக்கும் மருத்துவரின் லெட்டர்பேடிலோ அல்லது பெயர்ப்பலகையிலோ உள்ள மருத்துவ எண், பதிவு எண், மருத்துவர் பெயர், படித்த பட்டங்கள் ஆகியவற்றைக் குறித்துக்கொண்டு கீழ்க்கண்டவாறு உங்கள் மொபைல்போனிலிருந்து குறுஞ்செய்தி அனுப்புங்கள். மெசேஜ் அனுப்பும் பகுதிக்குச் சென்று `TNMC (Space) REGNO (Space) பதிவு எண்’ டைப் செய்து `56767′ என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். உடனடியாக மருத்துவ கவுன்சிலிலிருந்து அந்தப் பதிவெண்ணைக் கொண்ட மருத்துவர் மருத்துவ கவுன்சிலால் அங்கீகாரம் பெற்ற பட்டங்கள் உள்ளிட்ட விவரங்களுடன் ஒரு பதில் வரும். உதாரணமாக, `TNMC REGNO 53065′ என்று டைப் செய்து `56767′ என்ற எண்ணுக்கு அனுப்பினால் `Doctor Name: MOHAMED KIZHAR IRSHATH DOWLATH M.B.B.S., D.C.H’ என்று பதில் வரும். அதை வைத்து அவர் உண்மையான மருத்துவரா, அவர் தனது பெயருக்குப் பின்னால் பயன்படுத்தும் படிப்புகள், அவர் படித்த படிப்பு மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டப் படிப்புதானா என்பதை அறிந்து அந்த மருத்துவரின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளலாம். சில உண்மையான மருத்துவர்கள்கூட `MBBS’ மட்டும் படித்துவிட்டு தங்களை பல்வேறு துறையின் சிறப்பு மருத்துவர் என்று போலி மருத்துவம் செய்வார்கள். அவர்களைப் பற்றிய விவரங்களை இந்தக் குறுஞ்செய்தி மூலம் கண்டுபிடித்து விடலாம்.

டாக்டர்களுக்கு ஸ்மார்ட் போர்டு (Smart Board) முறை: போலி மருத்துவர்களில் சிலர், வேறு மருத்துவரின் பெயர் மற்றும் பதிவு எண்ணைப் பயன்படுத்துவதை இந்தமுறை மூலம் கண்டுபிடிக்க முடியாது. இதற்கும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் புதிய வழிமுறையைக் கொண்டுவரவிருக்கிறது. அதாவது டாக்டர்களுக்கு ஸ்மார்ட் போர்டு என்னும் முறையைக் கொண்டுவருகிறது. பதிவு பெற்ற மருத்துவர்கள், குறிப்பிட்ட தொகை செலுத்தி இந்த போர்டைப் பெற்று தங்கள் கிளினிக்கில் வைக்க வேண்டும். அதில் மருத்துவரின் பெயர், பதிவு எண், அவரது டிகிரி, மருத்துவரின் புகைப்படம் போன்றவை இருக்கும். இதன்மூலம் ஆள்மாறாட்டம் செய்து போலி மருத்துவம் செய்பவர்களைக் கண்டுபிடித்துவிடலாம். இந்த போர்டில் ஒரு ஹோலோகிராம் (Hologram) இருக்கும். நமது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து இந்த இந்த ஹோலோகிராமுடன் ஒப்பிட்டுப் போலி மருத்துவரைக் கண்டுபிடித்துவிடலாம். இந்த ஸ்மார்ட் போர்டு திட்டம் மருத்துவ கவுன்சிலில் அங்கீகாரம்பெற்ற மருத்துவருக்கு மட்டுமே கொடுக்கப்படும். இது இன்னும் முழுஅளவில் நடைமுறைக்கு வராவிட்டாலும் இன்னும் சில மாதங்களில் வந்துவிடும். இதுபற்றி மேலும் விவரம் அறிய http://tnmedicalcouncil.org என்ற இணையதளத்துக்குச் சென்று பார்க்கலாம். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி, பட்டப் படிப்புகள் பற்றிய விவரங்களை அறிய http://www.mciindia.org என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

போலி டாக்டர்களால் ஏற்படும் ஆபத்துகள்!: போலி மருத்துவர்களுக்கு மருத்துவத்தின் அடிப்படை அறிவியலான உடல் கூறியல் (Anatomy),  உடல் செயலியல் (physiology), உயிர் வேதியியல் (Bio Chemistry), மருந்தியல் ( (Pharmacology), நோய்க்குறியியல் (Pathology),  நுண்ணுயிரியல் (Micro Biology) போன்றவை அறவே தெரியாது. அத்துடன் மருத்துவ அறிவியல் படிப்புகளின் அடிப்படைகளும் அவர்களுக்குத் தெரியாது. இவை எதுவும் தெரியாமல் அனுபவ அடிப்படையில் மட்டுமே மருத்துவம் செய்வதால் நோயாளிகளின் உடல்நிலை பாதிக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் கொடுக்கும் தவறான மருந்துகளால் நாள்பட்ட நோய்களான சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். சிலநேரங்களில் மரணம்கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வேதபிரகாஷ்

12-04-2023


[1] விகடன்,   போலி மருத்துவரைக் கண்டுபிடிப்பது எப்படி?- எளிய வழிமுறைகள்! , டாக்டர் டி.முஹம்மது கிஸார், Published: 04 Dec 2018 12 PM; Updated:04 Dec 2018 12 PM.

[2] https://www.vikatan.com/health/medicine/143756-how-to-find-fake-doctor

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, 2018ல் பாமக ஊழல் பற்றிய அறிக்கைகள் செய்திகள் ஆகின (2)

மே 7, 2022

திமுக துணைவேந்தர் நியமனத்திற்கு ஆசைப்படுவது கல்விதரத்தை உயர்த்தவா, ஊழலைப் பெருக்கவா, பல்கலை ஊழல்கள் அதிகமாவது ஏன்? 2018ல் பாமக அறிக்கைகள் செய்திகள் ஆகின (2)

பாமகவின் 20018 பல்கலை ஊழல்கள் பற்றிய அறிக்கைகள்: பாமக தலைவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தமிழக பல்கலைக் கழகங்களில் நடக்கும் ஊழல்களைப் பற்றி அறிக்கைகள் வெளியிட்டனர். இவை, நாளிதழ்களில் செய்திகளாக வெளிவந்தன. ஆனால், பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை. இப்பொழுது 2022ல் துணைவேந்தர்கள், அவர்கள் சம்பந்தப் பட்ட வழக்குகள் நிலுவையில் தான் உள்ளன. CBCID, IT மற்ற துறைகள் முதலில் ரெயிட் செய்ததுடன் நிறுத்திக் கொண்டது போல உள்ளது. பொது மக்களுக்கு, ஒன்றும் தெரியவில்லை, தெரிவதில்லை. ஆனால், அவர்களது மகன், மகள்கள் கல்லூரிகளில், பல்கலைக்ககழகங்களில் படிக்கின்றனர், கல்வி பெறுகின்றனர். ஆனால், போதிக்கும் வர்க்கம், பாடம் சொல்லிக் கொடுக்கும் பேராசிரியர்கள் இவ்வாறு ஊழல்களில் சிக்கும்போது, படிக்கும் மாணவ-மாணவியர்கைன் நிலை என்னாவது? அவர்களும் மனோதத்துவ முறையில் பாதிக்கத் தானே செய்வார்கள். என்னடா இது, இந்த ஆளிடம் நாம் படிக்க வேண்டிய நிலை வந்து விட்டதே என்று நினைத்துத் தான் பார்ப்பார்கள்.

2018ல் பல்கலைக் கழகங்களில் நடக்கும் ஊழலை விசாரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை: இது பல நாளிதழ்களில் அப்படியே வெளிவந்துள்ளன. இதில் தான் வள்ளியின் ஊழல் பற்றிய விவரம் வருகிறது. ஆனால், நக்கீரனில் இப்பொழுது, இந்த விவரத்தை  அதிமுகவுடன் இணைத்து கதையை வெளியிட்டுள்ளது[1]. தமிழ் பல்கலை கழகம் மற்றும் அன்னை தெரசா பல்கலை கழகம் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்[2]. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஊழல்களும், அத்துமீறலும் இன்னும் கொடுமையானவை எனவும் துணைவேந்தர் வள்ளி, பதிவாளர் சுகந்தி ஆகிய இருவரும் சசிகலா உறவினர்கள் என்ற உரிமையில் பல்கலைக்கழக வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் தங்களின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மட்டும் எடுத்து வருவதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்[3].   அவர்களின் ஊழலுக்கு துணையாக இருந்த பொருளாதாரத்துறை பேராசிரியர் கலைமதிக்கு இரு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி[4], துணைவேந்தரின் கல்வி ஆலோசகர் என்ற பொறுப்பில் அமர்த்தியுள்ளதாகவும் அதைப்பயன்படுத்திக் கொண்டு கலைமதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள விரிவாக்க மையத்தையும், தொலைதூரக் கல்வி மையத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஆட்டிப்படைத்து வருவதாகவும் கூறப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்[5].

1532 மாணவிகளிடம் லஞ்சம் வாங்கியது: பகுதி நேர எம்.பில் படிப்பு பயிலும் 1532 மாணவிகளிடம் வாய்மொழித் தேர்வு நடத்தாமலேயே, நடத்தியதாகக் கூறி மதிப்பெண் வழங்க[6] மொத்தம் ரூ.30 லட்சம் கையூட்டு வசூலித்திருப்பதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளதாகவும் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் நியமனத்திலும் பெருமளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது[7]. பல்கலைக்கழகங்கள் ஊழல் கழகங்களாக மாறி வருவது தமிழகத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமையும் என்பதால்  இந்த இரு பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர் நியமனங்கள், தொலைதூரக் கல்வி, பகுதிநேரக் கல்வி ஆகியவற்றில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் பற்றி விசாரணை நடத்த ஆணையிடப்பட வேண்டும் என தனது அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் மீது ஊழல் குற்றச்சாற்றுகள் தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகின்றன. பணியாளர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை போன்றது பொதுவான குற்றச்சாட்டு ஆகும். கல்வித் தகுதியோ, திறமையோ முக்கியமல்ல, ரூ.50 லட்சம் கொடுத்தால் பேராசிரியர் பதவியும், ரூ.30 லட்சம் கொடுத்தால் உதவிப் பேராசிரியர் பதவியும் வழங்கப் படுவதாக பல்கலைக்கழக ஆசிரியர்களும், ஆய்வு மாணவர்களும் வெளிப்படையாக குற்றஞ்சாற்றியுள்ளதாகவும் அக்குற்றச்சாற்றுகள் உண்மை என்பதற்கு ஆதாரங்களும் உள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

2018ல் தெரசா பல்கலை செட் தேர்வில் முறைகேடு: இந்நிலையில், நேற்று தமிழ்நாடு நெட்-செட் சங்கத்தின் தலைவர் மதுசூதனன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அன்னை தெரசா பல்கலைக் கழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக செட் தேர்வு நடத்தி முடித்துள்ளதாகவும் வெளிப்படையான முறையில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிட பல்கலைக் கழக நிர்வாகம் மறுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி 2018ல் நடைபெற்ற செட் 2018 தேர்வில் முதல் தாளில் கேட்கப்பட்ட 50 கேள்விகளில், 43 கேள்விகள் முந்தைய நெட் தேர்வுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும்  எனவே, முதல் தாளை திரும்பவும் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்[8]. இந்தத் தேர்வு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுவதால், செட் தேர்வு நடைமுறைகளை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை கண்காணிப்பு செய்திட ஆளுநர் உத்தரவிட வேண்டும் எனவும் அரசு கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம், சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் நியமனங்கள் மற்றும் உறுப்பு கல்லூரி ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் நியமனத்தில் யுஜிசி விதிமுறைகளை பின்பற்றி நெட், செட் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நியமனம் செய்யும் வகையிலும் ஆளுநர் உத்தரவிடவேண்டும் என்றும் குறிப்பிட்டார்[9].

UGC ஒப்புதல், அங்கீகாரம் இல்லாமல், பல படிப்புகள் நடத்தி, பட்டங்கள் கொடுத்து, இளைஞர்களை ஏமாற்றி வருகின்றன. 2016லேயே அவை முறையற்றது, அங்கீகாரம் அற்றது எனு அரசு அறிவித்தது[10]. இதன் மூலமும் பெரிய அளவில் ஊழல் நடைபெறுகிறது. பல மாநிலங்களில் சென்டர்கள் வைத்தல், விண்ணப்பங்கள் ஏற்றல், வகுப்புகள் நடத்துதல், நோட்ஸ் கொடுத்தல் போன்ற நாடகங்கள் மூலம் இந்த ஊழல் பதப் படுத்தப் படுகிறது. தொலைத்தூர பட்டங்கள் எல்லாம், பொதுவாக ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. அயல்நாடுகளில் இதை கண்டுகொள்வதே இல்லை. பெரும்பாலான இந்த பல்கலைக்  கழகங்களை “போலி பல்கலை” லிஸ்டில் வைத்துள்ளனர் என்பது கவனிக்கத் தக்கது.

© வேதபிரகாஷ் 07-05-2022


[1] நக்கீரன், துணைவேந்தர் பதவியில் துஷ்பிரயோகம், தோண்டத் தோண்ட ஊழல், மே. 4-6-2022, பக்கம்.30-32.

[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், அடுத்தடுத்து வெளிவரும் துணைவேந்தர்களின் அடாவடிகள்…! பாரதியார் பல்கலை தொடர்ந்து தமிழ் மற்றும் அன்னை தெராசா பல்கலை கழக ஊழல்…! , First Published Feb 16, 2018, 4:05 PM IST, Last Updated Sep 19, 2018, 1:58 AM IST.

[3] https://tamil.asianetnews.com/tamilnadu/tamil-and-mother-teresas-corruption-scandal

[4] தினசரி செய்திகள், பாரதியார், பெரியார், தெரசா, தஞ்சை தமிழ்ப் பல்கலை என தொடரும் ஊழல்கள்! விசாரணைக்கு அன்புமணி கோரிக்கை!, FEBRUARY 15, 2018 2:54 PM.

[5] https://dhinasari.com/local-news/25227-investigations-should-be-do-for-corruption-is-universities-anbumani-ramadass.html

[6] தினகரன், அன்னை தெரசா பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவதில் ஊழல்: அன்புமணி குற்றச்சாட்டு, 12:52 am Aug 04, 2018 | dotcom@dinakaran.com(Editor)

[7] https://m.dinakaran.com/article/news-detail/425584

[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், செட் தேர்வு நேர்மையாக நடக்கல? – வசமாக சிக்கும் அன்னை தெரெசா பல்கலை கழகம்..!,  First Published Mar 12, 2018, 2:39 PM ISTLast Updated Sep 19, 2018, 2:03 AM IST .

[9] https://tamil.asianetnews.com/tamilnadu/complimentary-complaints-on-mother-teresa-university

[10] MINISTER OF STATE IN THE MINISTRY OF HUMAN RESOURCE DEVELOPMENT, Govt of India,   (Dr. MAHENDRA NATH PANDEY)

(a) to (d): The University Grants Commission (UGC) has informed that it has withdrawn the recognition of two universities namely: )…….

The UGC has not agreed to continue the recognition of following Universities namely:

(i) Mother Teresa Women’s University, Tamil Nadu;

(ii) Tamil Nadu Agriculture University, Tamil Nadu;

(iii) Tamil University, Tamil Nadu; (iv) Periyar

University, Tamil Nadu;

 (v) Bharathiar University, Tamil Nadu;

(vi) Alagappa University, Tamilnadu. Cancellation of Affiliation of Universities

Chandrappa Shri B.N.QUESTION NO. 3479 ANSWERED ON  08.08.2016.

http://164.100.47.194/Loksabha/Members/QResult16.aspx?qref=39293

தணிகாசலம் கைது: சித்த மருத்துவம், நோய்மூலம் அறியாத் தன்மை, நெடுங்கால சிகிச்சை முதலியவை ஆபத்து காலங்களில் உதவாது! [1]

மே 8, 2020

தணிகாசலம் கைது: சித்த மருத்துவம், நோய்மூலம் அறியாத் தன்மை, நெடுங்கால சிகிச்சை முதலியவை ஆபத்து காலங்களில் உதவாது! [1]

Tamil Siddhar Thanikachalam challenge - allow me as ward boy, I cure all -4

ரத்னா சித்த மருத்துவமனைமருத்துவர் தணிகாசலம்: சென்னை கோயம்பேடு ஜெய் நகர் பகுதியில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையில் மருத்துவம் செய்துவருபவர் தணிகாசலம். இவர் தன்னை சித்த வைத்தியர், இயற்கை வைத்தியர் என்று கூறிக்கொண்டு மருத்துவம் செய்துவந்தார்[1]. தனக்கு அதிகமாக பணம் வந்ததால், தொலைகாட்சிகளில் பேட்டி போன்ற விளம்பரங்கள் கொடுத்து, நோயாளிகளை இழுத்து வந்தார். நோயாளிகளில் சிலர் இவர் மீது, புகாரும் கொடுத்துள்ளனர். சாதாரண நோய்களுக்கு அதிகமாக பீஸ் வாங்குகிறார், மருந்துகளை அதிகமாக விற்று காசைப் பிடுங்குகிறார் போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா நோய் பரவ ஆரம்பித்ததும் அந்த நோய்க்கு தன்னிடம் மருந்து இருப்பதாகக் கூற ஆரம்பித்தார்[2]. தன்னிடம் நோயாளிகளைக் கொடுத்தால், தான் அவர்களைக் குணப்படுத்தி காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்[3]. இது தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு அரசில் உள்ள பலருக்கும் சவால் விடுத்தார் தணிகாசலம்[4]. ஐநா, சீன அரசாங்கம் தன்னை அணுகியது என்றெல்லாம் வீடியோக்களை சுற்றில் விட்டதாகத் தெரிகிறது. தன்னை வார்ட் பாயாக உள்ளே விட்டால், எல்லா கொரோனா நோயாளிகளையும் குணப்படுத்தி விடுவேன் என்றேல்லாம் சவால் விடுத்துள்ளார்.

No clarity in frecommending Siddha medicine, Dinamalar, 25-04-2020-1

கொரோனா நோய்க்கு தீர்வு காணும் வகையில், ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி, யோகா, நேச்சுரோபதி மற்றும் ஹோமியோபதி என, ஆயுஷ் மருத்துவ முறை வல்லுனர்கள் அடங்கிய குழு: தமிழக அரசின், ஆரோக்கியம் திட்டம் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு, உரிய வாய்ப்பு தருவதாக அமையவில்லை’ என, ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். கொரோனா நோய்க்கு தீர்வு காணும் வகையில், ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி, யோகா, நேச்சுரோபதி மற்றும் ஹோமியோபதி என, ஆயுஷ் மருத்துவ முறை வல்லுனர்கள் அடங்கிய குழுவை, தமிழக அரசு அமைத்தது[5]. அந்த குழுவின் பரிந்துரைகளை, தமிழக அரசு, ‘ஆரோக்கியம்’ என்ற பெயரில் திட்டமாக அறிமுகம் செய்தது[6]. அதன்படி, கொரோனா வராமல் தடுக்கும் வகையில், உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு, சில ஆயுஷ் சிகிச்சைகள்; கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து, வீடு திரும்பியோர் உடல் நலம் மேம்பட, சில ஆயுஷ் சிகிச்சைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிகுறி இல்லாமல் லேசாக பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு, கூடுதல் சிகிச்சையாக சித்த மருந்துகள் கொடுக்க அனுமதி உள்ளது. அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும், கூடுதல் சிகிச்சையாக நேச்சுரோபதி வைத்தியங்கள் மற்றும் யோகா பயிற்சி அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறை, பாரம்பரிய மருத்துவ முறைகளை, அலோபதிக்கு பக்கவாத்தியமாக ஆக்குவது போல் உள்ளது என, ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், வல்லுனர் குழுவில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள், ஆரோக்கியம் திட்டத்தில் முழுமையாக சேர்க்கப்படவில்லை என்றும் பாரம்பரிய மருத்துவர்கள் தெரிவித்தனர்.

No clarity in frecommending Siddha medicine, Dinamalar, 25-04-2020-2

இதுகுறித்து, அல்லோபதி அற்ற மருத்துவர்கள் கூறியதாவது: ஆரோக்கியம் திட்டத்தின் அரசாணை, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அரசாணைக்கு முரண்பாடாக உள்ளது.மத்திய அரசின் ஆணைப்படி, உரிய தகவல் அளித்துவிட்டு, ஆயுஷ் மருத்துவர்கள், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். இதுவரை, அலோபதியில் இந்த நோய்க்கு மருந்து இல்லை என, அந்த துறையினர் பகிரங்கமாக தெரிவிக்கின்றனர். மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோருக்கு, ஆதரவு சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில், இதை பூரணமாக போக்க வைத்தியம் உள்ளது. இதை நிரூபிக்க வேண்டுமானால், விருப்பமுள்ள கொரோனா நோயாளிகளுக்கு, பாரம்பரிய சிகிச்சையை, முதன்மை சிகிச்சையாக அளிக்க வேண்டும். நோயாளிகள், அரசு விதிகளின் படி, மருத்துவ மனைகளில் அலோபதியின் ஆதரவு சிகிச்சையை பெற்று வரலாம். சிக்குன் – குனியா மற்றும் டெங்கு நோய்களுக்கு, அலோபதி கைவிரித்த போதிலும், பாரம்பரிய மருத்துவம் தான் தீர்வு கண்டது. அதன்படி ஏற்படுத்தப்பட்ட சிகிச்சை திட்டம் தான், இன்றுவரை தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

Govt notice on Thaniksachalam

பாரம்பரிய மருத்துவ முறையில், ஒவ்வொரு புதிய கிருமிக்கும், தனித்தனியாக மருந்து கண்டறியப்படுவதில்லை[7]: “சீனாவிலும், அவர்களுடைய பாரம்பரிய மருத்துவம் தான், இறப்புகளை கட்டுப்பத்த உதவியது. மாறாக, அலோபதியை மட்டுமே நம்பியுள்ள மேற்கத்திய நாடுகளில் இறப்புகள், பல மடங்கு அதிகமாக உள்ளன. பாரம்பரிய மருத்துவ முறையில், ஒவ்வொரு புதிய கிருமிக்கும், தனித்தனியாக மருந்து கண்டறியப்படுவதில்லை. மாறாக, உடலில் அந்த கிருமி பல்கி பெருகாமல் இருக்க தேவையான சூழலை ஏற்படுத்துவதே முக்கியநோக்கம். அதனால், பொதுவாக ஒரு சில மருந்துகளை, ஒரு நோய்க்கு பரிந்துரை செய்ய முடியும் என்றாலும், ஒவ்வொருவரின் உடல் நிலையையும் பொருத்து, மருந்தின் அளவு, கூட்டு மருந்துகள் என, சில மாற்றங்கள் தேவைப்படும். அதற்கான சுதந்திரத்தை அரசாணை பறிக்கிறது. பாரம்பரிய மருந்துகள் காலம்காலமாக புழக்கத்தில் உள்ளவை. அவற்றால், உயிருக்கு எந்த தீங்கும் வராது. அலோபதியில், கொரோனாவிற்காக உருவாக்கப்பட்டு வரும் மருந்துகள், என்னென்ன எதிர்பாரா விளைவுகளை உருவாக்கும்; நீண்டகாலத்திற்கு பின் அவற்றால் பாதகம் வருமா என்றெல்லாம் தெரியாது.பாரம்பரிய மருத்துவத்தை, கண்மூடித்தனமாக நம்ப வேண்டும் என, நாங்கள் கூறவில்லை. எங்களுக்கு சிகிச்சை சுதந்திரம் அளித்து, உரிய முறையில், நோயாளிகளின் முன்னேற்றம் பற்றிய தரவுகளை அரசு சேகரிக்கட்டும். எங்களுக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டால், உயிர்களை காக்க ஓர் அரிய வாய்ப்பு நம்மை விட்டு விலகிவிடும்,” இவ்வாறு, அவர்கள் கூறினர்[8].

Thanikachalam started propaganda in Jan 2020 itself

ஜனவரி 2020ல் ஆரம்பிக்கப் பட்ட பிரச்சாரம்: இதற்குள், “சித்தர்” என்ற போர்வையில், நிறைய மருத்துவர்கள் கிளம்பினார்கள். முன்பு எய்ட்ஸ், பன்றி காய்ச்சல் போன்று, கொரோனா நோய்தீர்க்க மருந்து உள்ளது என்று ஆரம்பித்தனர். டிசம்பர் மாதத்தில் சீனாவில் தாக்கம் ஆரம்பித்தவுடன், ஜனவரி இறுதியில், தணிகாசலம் தனது பிரச்சாரத்தைத் துவங்கி விட்டார்[9]. “மூலிகை சாறுகளினால் தயாரிக்கப் பட்ட மருந்து என்னிடம் உள்ளது. அது எல்லாவிதமான வைரஸ்களால் உண்ட்சாக்கும் ஜுவரத்தைப் போக்கும். கரோனா வைரஸ் நீக்க எந்த மருந்தும் கிடையாது. சீனாவில் ஹுவானில் 50 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். எங்களது மூலிகை சாறு திரட்டு டெங்குவை குணப்படுத்துகிறது, பல உடல் பாகங்கள் வேலை செய்யாமல் போகும் நிலை மற்றும் கணையீரல் சுவரம் முதலியவற்றை குணப்படுத்தும்,” என்று பேட்டிக் கொடுத்தார்[10]. இதனால், விசயம் அரசாங்கத் துறைகளுக்குச் சென்றது. உலகத்திலேயே எங்கு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்ற நிலை. அமெரிக்காவிலேயே ஆயிரக் கணக்கில் தினமும் செய்த்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறது. எனவே, உஷரான அரசு, விசாரிக்க ஆரம்பித்தது.

Tail Siddhar Thanikachalam arrested-2

மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாதவர் என்றும் போலி சித்த மருத்துவர்: மைய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாதவர் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள இந்திய மருத்துவத் துறையின் இயக்குனர் காவல்துறையில் புகார் அளித்தார்[11]. இந்த புகார்களை மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் பிரிவு விசாரித்துவந்தது[12]. இந்த நிலையில், புகார் தெரிவிக்கப்பட்ட அன்றே ஒரு வீடியோவை வெளியிட்ட தணிகாசலம் தான் மருந்து கண்டுபிடித்ததற்காக தன்னைக் கைதுசெய்வதென்றால் கைதுசெய்யட்டும் என்று கூறினார்[13]. இவர் மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாதவர் என்றும் போலி சித்த மருத்துவர் என்று தமிழக சுகாதாரத்துறை அண்மையில் அறிக்கையில் தெரிவித்து இருந்தது[14]. இந்திய மருத்துவம் மற்றம் ஹோமியோபதித் துறை மூலம் சென்னை, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் ”கோவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரப் பணிகள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியின்றி தகவல் பரப்புதல் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது,” என்றும் தெரிவிக்கப்பட்டது.

Tamil Siddhar Thanikachalam challenge - hang me -3

போலி சித்தர் தணிகாசலம் கைது: இதற்குப் பிறகு அவரது செல்போன் ‘ஸ்விட்ச் – ஆஃப்’ செய்யப்பட்ட நிலையில் இருந்தது. இந்த நிலையில், புதன்கிழமை 06-05-2-20 அன்று காலையில் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் அவரைக் கைதுசெய்தனர்[15]. அவர் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 54வது பிரிவு, பெருந்தொற்றுப் பரவல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3, இந்திய தண்டனைச் சட்டத்தின் 188வது பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அவர் விரைவில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார். முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டறிந்துவிட்டதாக பேசிவந்த ஒருவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது[16]. அரசு அங்கீகாரம் பெறாத மருத்துவ நிலையம் நடத்திவரும் போலி மருத்துவர் தணிக்காசலம் என்பவர் மீது வழக்கு தொடுக்கவிருப்பதாகக் கூறப்பட்டது[17].

© வேதபிரகாஷ்

07-05-2020

Fake doctor Thanikachalam arrested-1

[1] நக்கீரன், கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பிய சித்த மருத்துவர் தணிகாசலம் கைது!, Published on 06/05/2020 (17:09) | Edited on 06/05/2020 (17:21).

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/corona-virus-issue-siddha-doctor-thanikachalam-arrested

[3] புதியதலைமுறை, கொரோனாவுக்கு மருந்து என வதந்தி பரப்பியதாக தணிகாசலம் கைது, Web Team Published :06,May 2020 01:09 PM

[4] http://www.puthiyathalaimurai.com/newsview/69849/Siddha-doctor-Thanigasalam-held-by-police

[5] மாலைமலர், கொரோனா தடுப்பு மருந்து: சித்தாயுனானி மருத்துவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை, பதிவு: ஏப்ரல் 23, 2020 12:36 IST

[6] https://www.maalaimalar.com/news/district/2020/04/23123638/1447087/Edappadi-Palaniswami-consulting-with-Siddha-and-Ayurveda.vpf

[7] தினமலர், ஆயுர்வேத, சித்த மருந்துகள் பரிந்துரைப்பில் தெளிவில்லை பாரம்பரிய மருத்துவர்கள் புகார், Added : ஏப் 25, 2020 01:44

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2527397

[9] Speaking to ANI, he said: “We have formulated a medicine from an extract of herbs. It is very effective to cure any type of viral fever. Coronavirus has no medicine. In China’s Wuhan where Coronavirus has claimed over 50 lives, experts have no idea how to cure the disease. Our herbal extract medicine is used to treat dengue, multi-organ fever and acute liver fever.”

Times of India, Dr Thanikasalam Veni of Rathna Siddha Hospital in Chennai has 25-year of vast experience in field Siddha and Ayurvedic medicines,ANI January 28, 2020, 13:30 IST

[10] https://health.economictimes.indiatimes.com/news/diagnostics/siddha-doctor-from-tn-claims-to-have-invented-cure-for-coronavirus/73691161

[11] பிபிசி.தமிழ், தணிகாசலம் கைதுகோவிட் – 19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தவரை கைது செய்தது போலீஸ், 6 மே 2020

[12] https://www.bbc.com/tamil/india-52556570

[13] இந்தியன்.எக்ஸ்பிரஸ்.தமிழ், கொரோனா மருந்து தருவதாக கூறிய வைத்தியர் தணிகாசலம் கைது: அரசு அதிரடி,  May 06, 2020 08:54:19 p

https://tamil.indianexpress.com/tamilnadu/fake-siddha-doctor-thanikasalam-arrested-189380/

[14] தமிழ்.ஒன்.இந்தியா, போலி சித்த மருத்துவர் தணிகாசலம் கைது.. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறியவர், By Velmurugan P | Updated: Wednesday, May 6, 2020, 19:52 [IST]

[15] https://tamil.oneindia.com/news/chennai/fake-siddha-doctor-thanikachalam-arrested-by-chennai-police-384668.html

[16] பாலிமர் செய்தி, சதுரங்கவேட்டை சித்தர் தணிகாசலம் கைது ஏன்? பயபுள்ள போலி மருத்துவராம்!, மே.06. 2020. 09.00.19.PM

[17]https://www.polimernews.com/dnews/108667/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F..-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..!