Archive for the ‘திரைப்படம் மற்றும் மின்னணு ஊடக ஆய்வு மையம்’ Category

நேற்று நிர்மலா இன்று கர்ண மகாராசன் என்றால், நேற்று கிறிஸ்துவக் கல்லூரி, இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகமா? தொடரும் பாலியல் சதாய்ப்புகள், குற்றங்கள்!

ஓகஸ்ட் 25, 2019

நேற்று நிர்மலா இன்று கர்ண மகாராசன் என்றால், நேற்று கிறிஸ்துவக் கல்லூரி, இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகமா? தொடரும் பாலியல் சதாய்ப்புகள், குற்றங்கள்!

Karna Maharajan- forced retiredment

தமிழக பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் பாலியல் குற்றங்களால் நாறுவதேன்?: இப்பொழுதெல்லாம், தமிழகபல்கலைக்கழகங்கள் ஊழல் அல்லது பாலியல் தொல்லை என்று அத்தகைய விவகாரங்களால் நாறி வருகின்றன. கல்வித்துறை சீர்கேடு அடைந்து வருவது தெரிகிறது. ஆசிரியர், விரிவுரையாளர், துணை பேராசிரியர் தேர்வுகளில், தேர்ச்சி அடையாதவர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனும் போது, அத்தகையோர், கல்வி-அல்லாத விவகாரங்களில் தங்களது மனங்களைச் செல்லுத்துகிறார்கள் என்று தெரிகிறது. மாணவியர் படிக்கும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில், இத்தகைய பாலியல் தொல்லை போன்ற விவகாரங்கள் தொடர்ந்து வருவது, மிகக் கேவலமான விசயமாகும். அந்நிலையில் பெற்றோர், மற்றோர் கவலைப்படத்தான் செய்வர். 23-08-2019 அன்று கிருத்துவ கல்லூரி தீர்ப்பில், பெண்-வக்கீல்கள், இனி அத்தகைய வழக்குகள், நீதிபதி வைத்தியநாதன் முன்பு செல்லக் கூடாது என்று கடிதம் அளித்தனராம். இப்பொழுது, இவ்விவகாரத்தில் என்ன செய்வார்கள். மேலும், பாதிக்கப் பட்ட பெண்ணிற்கு ஆதரவாக இல்லாமல், மறைமுகமாக, அந்த பலிகடா ஆன பெண்களுக்கு எதிராக, இவர்கள் வேலை செய்வதைக் கவனிக்கலாம்.

Karna Maharajan- FB-1

நேற்று நிர்மலா இன்று கர்ண மகாராசன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன: கேரள கல்லூரியில் பணியாற்றும் பெண் பேராசிரியர் ஒருவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் பிஹெச்டி படிப்பில் சேர்ந்தார்[1].  டிசம்பர் 7, 2018 அன்று அம்மாணவி புகார் கொடுத்தார். ஏற்கனவே பேராசிரியர் நிர்மலாதேவி தொடர்பான சர்ச்சை ஏற்பட்ட நிலையில் அதில் அடிபட்ட பேராசிரியர் கர்ண மகாராஜனின் [Professor K Karnamaharajan , who was also the Head of Centre for Film and Electronic Media Studies Department.] மீது மாணவி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது[2]. வருகை பதிவு குறித்து ஆராய்ச்சி மாணவியிடம் விளக்கம் கேட்டதால், தம் மீது பொய்யான பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் கர்ண மகாராஜன் விளக்கமளித்துள்ளார்[3]. தம் மீதான பாலியல் புகார் குறித்து, பல்கலைக்கழக விசாரணை குழுவிடம் விளக்கமளித்த கர்ண மகாராஜன், ஆராய்ச்சி மாணவியின் வருகைப்பதிவேட்டில் முறைகேடு நடந்திருப்பதால், அது குறித்து மாணவியிடம் விசாரித்தபோது தம் மீது களங்கம் விளைவிக்கும் வகையில் புகார் அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மாதர் சங்க நிர்வாகிகள் என் மீது அவதூறாக நேற்று நிர்மலா இன்று கர்ண மகாராசன் என போஸ்டர் ஒட்டினர்[4].

ௐஊ ௷இல்ம் ஈன்ச்டிடுடெ- ஃபசிலிடிஎச்

டிசம்பர் 2018ல் மாணவி கொடுத்த புகார்: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், திரைப்படம் மற்றும் மின்னணு ஊடக ஆய்வு மையத்தில் பயிலும் ஆய்வு மாணவி, தன்னுடைய ஆய்வு வழிகாட்டியான பேராசிரியர் கர்ண மகாராஜன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து, பல்கலைக்கழக பதிவாளரிடம் கடந்த 2018 டிசம்பர் மாதம் புகார் அளித்திருந்தார்.

  1. முன் தேதியிட்டு பிஎச்டி பதிவு செய்ய ரூ 2 லட்சம் வாங்கிக் கொண்டார்.
  2. டிபன் சாப்பிட தனியாக அழைத்தார்.
  3. விடுப்பில் இருக்கும் போது, தன்னுடைய பிஎச்டி பதிவை ரத்து செய்தார்.
  4. ஆறு மாதங்களாக தன்னை தொடர்ந்தார்.
  5. தான் எஸ்.சி என்பதால், காலம் தாழ்த்துகிறார்கள்.

என்று புகார்களை அடுக்கினார். அதன் பேரில் விசாரணை நடத்துவதற்காக பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியை வசந்தி தலைமையில், இளைஞர் நலத்துறை பேராசிரியை ஜெயபாரதி, பல்கலைக்கழக நிர்வாகப்பிரிவு அலுவலர்கள் செல்வி, அன்புச்செல்வன் உள்ளிட்டோர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர், குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர் கர்ண மகாராஜன், புகார் அளித்த மாணவி மற்றும் திரைப்படம் மற்றும் மின்னணு ஊடக ஆய்வு மைய பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மின்னணு ஊடக மையத்தில் பயிலும் மாணவ- மாணவியர், ஆய்வு மாணவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி பல்கலைக்கழக பதிவாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

Karna Maharajan- FB-3

புகார் சட்டப் பட்டவர் துணை முதல்வர் பதவிக்கு விண்ணப்பித்தது: இந்த அறிக்கையில் பேராசிரியர் கர்ண மகாராஜன் மீதான புகாரில் உண்மை உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூட்டத்தில் பேராசிரியர் கர்ண மகாராஜன் மீது நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கடந்த 6 மாதங்களாக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகார் கொடுத்து இரண்டு மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் பதவிக்கு, பேராசிரியர் கர்ண மகாராஜன் அண்மையில்  விண்ணப்பித்திருந்தார்[5]. இது பல்கலைக்கழக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது[6].  இதுதான் பிரச்சினையா, அல்லது, வேறு விவகாரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. இப்பல்கலைக்கழக விவகாரங்களில் பல உண்மைகள் மறைக்கப் படுகின்றன என்பது தெரிகிறது. நிர்மலா தேவி விவகாரமும், மூடி மறைக்கு போக்கில் தான் செல்கிறது.

Karna Maharajan- FB-2

ஆகஸ்ட் 2019ல் கட்டாய ஓய்வு கொடுக்கப் பட்டது: இந்நிலையில் காமராசர் பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஆட்சிக்குழு கூட்டம் திடீரென நேற்று கூட்டப்பட்டது[7]. இதில் துணைவேந்தர் மு.கிருஷ்ணன் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்[8]. இக்கூட்டத்தில், ஆராய்ச்சி மாணவி அளித்த பாலியல் புகார் உறுதி செய்யப்பட்டதால் பேராசிரியர் கர்ண மகாராஜனை பணியில் இருந்து கட்டாய ஓய்வில் அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது[9]. 22-08-2019 அன்று எடுக்கப் பட்ட தீமானத்தை கவர்னருக்கு அனுப்ப, அவர் அதனை ஏற்றுக் கொண்டார். அதன்படி, பணி நீக்கம் செய்யப் பட்டார்[10]. காமராசர் பல்கலைக்கழக வரலாற்றில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் பேராசிரியர் மீது எடுக்கப்பட்டுள்ள முதல் நடவடிக்கை இது என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன[11]. இருப்பினும், இவர் மேல் முறையீடு செல்வார் முதலிய விவகாரங்களும் உள்ளன.  இப்பொழுது அவர் மதுரை கிளை, மெட்ராஸ் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார் என்று செய்தி வந்துள்ளது.

Karna Maharajan- forced retiredment, action taken

பல விவகாரங்கள் இருப்பது உரிமையா, தொழில் தர்மமா, வேறு பின்னணியா?: மதுரைப் பல்கலைக் கழக பாலியல் புகார்கள்-குற்றகள், நிர்மலா தேவி விவகாரங்கள், கவர்னர் மீதே அவதூறு விளைவிக்கும் வகையில் தோன்றிய செய்திகள், சில குறிப்பிட்ட வழக்கறிஞர்கள் இவ்விவகாரங்களில் நுழைந்து, நிர்மலா தேவி கம்பனிக்கு உதவி நீதிமன்றத்தில் ஆஜராவது போன்றவற்றை கவனித்தால், இதன் பின்னணியில் உள்ள மற்ற குற்றங்களை மறாஇக்கத் தான், சம்பந்தப் பட்டவர்கள் மொத்தமாக சேர்ந்து, வேலை செய்கிறார்கள் என்று தெரிகிறது. இதில் ஜல்லிக் கட்டு, கூடங்குளம், நாடார் புத்தக விவகாரங்கள் எல்லாமே அடங்கியுள்ளன.வழக்கறிஞர்கள், இவற்றையெல்லாம், தங்களது தொழில் தர்மம் என்று கூறலாம் ஆனால், “கோட்சேவுக்கே” இவர் தான் ஆஜரானார் என்று கிண்டலடித்ததை ஞாபகம் வைத்து கொள்ளலாம். ஏனெனில், அது பொய், ஆனால் இது நிஜம். ஆகவே, இவர்களது உள்நோக்கம், உருமையின் படி வாதாடுவதா, குற்றவாளிகளை விடுவிப்பதா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

24-08-2019

Karna Maharajan- forced retiredment, action taken-2

[1] தமிழ்.ஒன்.இந்தியா, மாணவிக்கு பாலியல் தொல்லை.. பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு.. மதுரை பல்கலை. வரலாற்றில் முதல்முறை!, By Bahanya | Updated: Saturday, August 24, 2019, 9:24 [IST]

[2] https://tamil.oneindia.com/news/madurai/voluntary-retirement-given-to-madurai-kamarajar-university-professor-karna-maharajan-360988.html

[3] நியூஸ்.7, தன் மீது பொய்யான குற்றச்சாட்டு அளிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் கர்ண மகாராஜன் விளக்கம்!, December 19, 2018, Posted By : Manojb

[4] https://ns7.tv/ta/bd112h

[5] ஏசியா.நியூஸ், படிக்க வந்த இடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் .. – கட்டாய ஓய்வு கொடுத்து மதுரை பல்கலைக்கழகம் அதிரடி.., Published 24, Aug 2019, 4:22 PM IST.

[6] https://tamil.asianetnews.com/crime/madurai-univesity-has-taken-action-against-lecturer-who-misbehaved-with-a-lady-student-pwqm74

[7] புதியதலைமுறை, மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு, Web Team, Published : 24 Aug, 2019 11:50 am

[8] http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/70202-madurai-kamaraj-university-dismissed-professor-karnamaharajan.html

[9] தினத்தந்தி, மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு , பதிவு: ஆகஸ்ட் 24,  2019 11:04 AM

[10] The decision was announced during a special syndicate meeting held on Thursday. The complaint was against Professor K Karnamaharajan, who was also the Head of Centre for Film and Electronic Media Studies Department. The Madurai Kamaraj University (MKU) Syndicate has dismissed a professor for allegedly sexually harassing a research scholar after the Internal Complaints Committee of the varsity recommended for the action, which was ratified by Governor Banwarilal Purohit.

[11] https://www.dailythanthi.com/News/State/2019/08/24110451/Madurai-Kamarasa-University-Research-student-harassment.vpf