Archive for the ‘ராஜ்குமார்’ Category

ஹீலர் பாஸ்கர், சித்தர் தணிகாசலம் மற்றும் மருந்து தயாரிப்பாளர் சிவநேசன்: தமிழகத்தில் மருந்து, சிகிச்சை மற்றும் நோய்-தீர்ப்பு போர்வையில் நடப்பது என்ன? உண்மை நிலை என்ன?

மே 9, 2020

ஹீலர் பாஸ்கர், சித்தர் தணிகாசலம் மற்றும் மருந்து தயாரிப்பாளர் சிவநேசன்: தமிழகத்தில் மருந்து, சிகிச்சை மற்றும் நோய்தீர்ப்பு போர்வையில் நடப்பது என்ன? உண்மை நிலை என்ன?

Baskar, Thanikachalam, Sivanesan

ஹீலர் பாஸ்கர், சித்தர் தணிகாசலம் போன்றவர்கள் போல் அல்லாது, பரிசோதனையில் இறங்கிய மருந்து உற்பத்தியாளர்கள்: தமிழகத்தில் எப்பொழுதுமே, எந்த நோய் வந்தாலும், அதனை தீர்க்க முடியும் என்று மருந்தை சொல்ல ஆரம்பித்து விடுவர். ஏதாவது ஒரு கஷாயத்தைக் குடி என்பவர். இதற்கெல்லாம் கிளினிகல் பரிசோதனை உள்ளதா, செய்யப் பட்டதா, இந்திய மருத்துவம் மற்றும் மருந்தியல் ரீதியில் [Clinical results] அத்தாட்சி சான்றிதழ் [IP] பெற்றுள்ளதா என்பது போன்ற கவலையே இல்லை. ஊடகங்களும் அதற்கு பெரிதாக விளம்பரம் கொடுக்கும், உடனே குறிப்பிட்ட நபர்கள் வியாபாரத்தை ஆரம்பித்து விடுவர். கடந்த மார்ச் மாதத்தில், இதே விவகாரத்தில் ஹீலர் பாஸ்கர் கைது எய்யப் பட்டு, பிணையில் வெளியே வந்துள்ளார். இதே விவகாரகத்தில், சென்ற புதன்கிழமை 06-05-2020 அன்று காலையில் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் போலி மருத்துவர் தணிகாசலம் கைது செய்யப்பட்டார். அந்நிலையில், அதே கொரோனாவுக்கு மருந்து கண்டு பிக்கும் முயற்சியில், பரிசோதனை செய்யும் முயசியில், ஒருவர் இறந்துள்ளது திகைப்பாக உள்ளது. முன்னர் இருவர், சோதனை, பரிசோதனை பற்றி கவலைப் படவில்லை.

ஸுஜத இஒடெச்

சுஜாதா பயோடெக் நிறுவனத்தின் சிவநேசன் ஆராய்ச்சியில் இறங்கியது: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சுஜாதா பயோடெக் நிறுவனம், பிரபல மூலிகை மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் பொது மேலாளராகவும் மருந்தாளுனராகவும் பணியாற்றி வந்தவர் சிவனேசன் (வயது 47)[1]. இந்த நிறுவனம் இயற்கை மற்றும் ஆயுர்வேத பொருட்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம்தான், நிவாரண் 90 என்ற பிரபல மருந்தை தயாரிக்கிறது. வெல்வெட் ஹெர்பல் ஷாம்பு, மெமரி விட்டா போன்றவையும், இந்த நிறுவன தயாரிப்புதான். 20 ஆண்டுகளுக்கும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த சிவனேசன் பல்வேறு மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளார்[2]. பெருங்குடியைச் சேர்ந்தவர். வேதியியல் துறையில், முதுகலை படிப்பு முடித்தவர். சுஜாதா நிறுவனத்தில் இவர் 27 ஆண்டுகளாக பணியில் இருந்தவர்[3]. நிவாரண் 90 தயாரிக்கும் தொழிற்சாலை, உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூரில் உள்ளது[4]. பொதுவாக அங்குதான் சிவநேசன் இருப்பார்[5]. ஆனால், சென்னை வந்த சிவநேசன், ஊரடங்கால், காசிப்பூர் நிறுவனத்திற்கு திரும்ப முடியவில்லை[6]. இந்த நிலையில்தான், கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கலாம் என நிறுவன உரிமையாளர் டாக்டர் ராஜ்குமார் முடிவு செய்து, அதை சிவநேசனிடம் கூறியுள்ளார்.

Dr Rajkumar with Rosaiah-Sujatha Biotec

சோடியம் நைட்ரேட் வைத்து கொரோனா எதிர்ப்பு மருந்து கண்டுபிடித்தது: இந்நிலையில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சிவனேசன் ஈடுபட ஆரம்பித்தார்[7]. ஆய்வில், வெடி பொருட்கள் தயாரிக்கவும் இறைச்சி, பொருட்களை பதப்படுத்தவும் பயன்படுத்தப்படும் சோடியம் நைட்ரேட் உடன் சில மூலக்கூறுகளைச் சேர்த்தால் அதன் மூலம் கிடைக்கும் கரைசல் ரத்த உற்பத்தியைப் பெருக்கும் என்று இருவரும் நம்பியதாக கூறப்படுகிறது[8]. சோடியம் நைட்ரேட் மூலம் நைட்ரிக் ஆக்சைடு தயாரித்தால் கொரோனா நோயை கட்டுப்படுத்தும், அதை மருந்தாக மாற்றினால், மருந்து கிடைக்கும் என்று நம்பினர்[9]. இதற்கான பாரிஸ் கார்னரிலிருந்து சோடியம் நைட்ரேட் வாங்கி வந்து, அதை கலந்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு மருந்தை உருவாக்கி உள்ளார்[10]. இதற்கான மூலக்கூறுகள் வேதியியல் நிபுணர் சிவநேசன் கண்காணிப்பில் தான் நடக்கும். இதன் அடிப்படையில் ஏற்கனவே உள்ள மூலக்கூறுகளை வைத்து மேலும் சில மருந்து பொருட்கள் சேர்த்து கொரோனாவுக்கான மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக சோடியம் நைட்ரேட் வாங்கி வந்து அதன் மூலம் புதிய வேதியியல் கரைசலை உருவாக்கியதாக கூறப்படுகிறது[11]. இந்நிறுவனத்தில் எந்த மருந்து தயாரித்தாலும், அதை சிவநேசன் தான் முதலில் உட்கொண்டு சுயபரிசோதனையில் ஈடுபடுவார்[12].

K. Sivanesan, The pharmacist-cum-production manager

08-05-2020 அன்று மருந்தை உட்கொண்டு, சுயபரிசோதனை செய்து கொண்டது: இதையடுத்து 08-05-2020, வியாழக்கிழமை அன்று அந்த மருந்தை நிறுவன உரிமையாளரான டாக்டர் ராஜ் குமாரின் ஜி.என். செட்டி சாலையில் உள்ள வீட்டில் வைத்து சோதனை செய்ய முயற்சித்துள்ளனர். சமைல் அறையில் தயாரித்த அந்த கலவையை சோதிக்க முயன்றனர். முதலில் டாக்டர் ராஜ் குமார் மருந்தை சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார். ஆனால், 10 நிமிடங்களில் அவர் சுய நினைவுக்கு திரும்பியுள்ளார். இந்த மருந்து கரைசலை குறைவாக உட்கொண்டதால், ராஜ்குமார் சிகிச்சைக்கு பிறகு நலமடைந்துள்ளார். இதனால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது, மருந்தை பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கை வந்துள்ளது. சிவனேசனும் மருந்தை உட்கொண்டுள்ளார். அவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். ஆனால் அவர் மயக்க நிலையில் இருந்து மீளவில்லை. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிவனேசன் உயிரிழந்தார்.  இன்னொரு செய்தி, இருவரையும் மருத்துவ மனைக்குக் கூட்டிச் சென்றனர், அங்கு முதலில் ராஜ்குமார் நினைஉக்கு வந்தார், ஆனால், சிவநேசன் இறந்தார் என்று கூறுகிறது.

Sujatha biotech killed, DM, 09-05-2020

போலீஸ் வழக்கு பதிவு முதலியன: இந்நிறுவனத்தில் எந்த மருந்து தயாரித்தாலும், அதை சிவநேசன்தான் உட்கொண்டு சுயபரிசோதனையில் ஈடுபடுவது வழக்கமாம்[13]. எனவே இந்த மருந்தையும் உட்கொண்டு, ராஜ்குமாருக்கும் கொடுத்ததாக கூறப்படுகிறது[14].கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்க உலகமெங்கும் பல நாடுகளில் விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். சரியான வழிமுறை இல்லாத காரணத்தாலும் ஆர்வ மிகுதியாலும் உயிரிழப்பு நடந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மருந்தாளுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருந்து தயாரிப்பில் சிவனேசனுடன் டாக்டர் ராஜ் குமாரும் இணைந்து செயல்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. சிவனேசனுக்கு சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகும். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

How pharmacist died Tamil Hindu, 09-05-2020

மருந்து, சிகிச்சை போன்றவற்றில் உண்மை இருக்க வேண்டும்: 06-05-2020 அன்று போலி மருத்துவர் கைது, 08-05-2020 அன்று உண்மையான மருத்துவ ஆராய்ச்சியாளர் தானே தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு இறந்தது, முன்னர், ஹீலர் பாஸ்கர் கைதாகி வெளியே வந்தது முதலியன, ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும். தமிழகத்தில், வெறும் தமிழ்-தமிழ் என்றோ, சித்த வைத்தியம் என்றோ சப்தம் போட்டுக் கொண்டிருந்தால் போறாது. மருத்துவ முறையில் பரிசோதித்து, ஆய்ந்து, ஒப்புதல் பெற்று மருந்தை விற்பனைக்கு எடுத்து வரவேண்டும்.  ஆகையால், வெற்றுப் பிரச்சாரம் அல்லது அளவுக்கு மீறிய ஆர்வ மிகுதி முதலியன மருந்து கண்டுபிடிப்புகளுக்கு, நோய் தீர்க்கும் சிகிச்சைகளுக்கு உதவாது.  படிப்படியாக, ஆய்ந்து, சோதித்து, மருந்தை உருவாக்க வேண்டும். அப்பொழுது தான் அது ஏற்புடையதாக இருக்கும். மக்களுக்கு உதவும். ஆர்பாட்டத்தால், மேடை பேச்சுகளால், டிவி-போன்ற கவர்ச்சிகளால் மருந்து வேலை செய்யாது, குணம் ஆகாது. என்றாவது, ஏமாற்றும் முறைகள் வெளிப்படும். எனவே உயிரோடு விளையாடும் போக்கில், போலிகள் எந்த விதத்திலும் நுழையக் கூடாது. இங்கு எத்தகைய உணச்சிகளுக்கும், இடம் கொடுக்கலாகாது.

© வேதபிரகாஷ்

09-05-2020

K. Sivanesan killed, Sujatha Biotech, Chennai - 24

[1] மாலைமலர், விபரீதத்தில் முடிந்த பரிசோதனைகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்ற மருந்தாளுநர் பலி, பதிவு: மே 09, 2020 10:08 IST

[2] https://www.maalaimalar.com/news/district/2020/05/09100828/1500343/GM-of-top-Chennai-biotech-firm-consumes-drug-he-invented.vpf

[3] தமிழ்.முரசு, சோதனை முயற்சி: ஒருவர் பலியானார், 9 May 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 May 2020 09:53.

[4] https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20200509-43740.html

[5] தினமலர், கொரோனா மருந்து ஆராய்ச்சி: சோகத்தில் முடிந்த பரிதாபம், Updated : மே 08, 2020 19:57 | Added : மே 08, 2020 19:54.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2535676

[7] தினத்தந்தி, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி: ‘சோடியம் நைட்ரேட்கரைசலை குடித்த தனியார் நிறுவன மேலாளர் சாவு, பதிவு: மே 09, 2020 04:45 AM.

[8] நியூஸ்.18, கொரோனாவுக்கான மருந்து ஆராய்ச்சி: ரசாயனக் கலவையை குடித்த மருத்துவ வல்லுநர் உயிரிழப்பு..!, NEWS18 TAMIL, LAST UPDATED: MAY 9, 2020, 12:51 PM IST.

[9] https://tamil.news18.com/news/coronavirus-latest-news/coronavirus-chennai-based-ayurvedic-pharmacist-dies-after-drinking-concoction-of-his-own-preparation-289247.html

[10] https://www.dailythanthi.com/News/Districts/2020/05/09043038/Trying-to-find-medicine-for-the-corona-Drinking-sodium.vpf

[11] தமிழ்.சமயம், கொரோனாவுக்கு மருந்து? – சுய பரிசோதனை செய்த தனியார் நிறுவன அதிகாரி பலி!!, Giridharan N | Samayam Tamil, Updated: 09 May 2020, 02:21:00 AM.

[12] https://tamil.samayam.com/latest-news/chennai-news/man-dies-in-chennai-who-trying-to-develop-vaccine-for-coronavirus/articleshow/75629039.cms

[13] தமிழ்.ஒன்.இந்தியா, கொரோனாவுக்கு மருந்து தயாரித்து குடித்து பார்த்த பிரபல மருந்து நிறுவன மேலாளர் பலி.. சென்னையில் சோகம், By Veerakumar, Updated: Saturday, May 9, 2020, 1:14 [IST]

[14] https://tamil.oneindia.com/news/chennai/general-manager-of-a-pharmaceutical-company-in-chennai-take-self-medicine-for-corona-died-384959.html