Archive for the ‘செல்வம்’ Category

எஸ்.ஆர்.எம். நிறுவனங்களில் வருமானதுதுறை ரெய்டு; கணக்கில் வராத பணம் பறிமுதல்!

ஜூன் 20, 2013

 எஸ்.ஆர்.எம். நிறுவனங்களில் வருமானதுதுறை ரெய்டு; கணக்கில் வராத பணம் பறிமுதல்!

 SRM Chairman office, Veerasamy Pillai street

எஸ்.ஆர்.எம். நிறுவனங்களில் வருமானத்துறை விசாரணைப் பிரிவு ரெய்டு: மருத்துவம், பல்-மருத்துவம், தொழிஸ்நுட்பம், திரைப்படம் தயாரித்தல், பேருந்து, ஊடகம், ஹோடல், பொழுதுபோக்கு என பற்பல துறைகளில் இறங்கி பெரிய அதிபராகி இருக்கிறார் டி. ஆர். பச்சமுத்து. எஸ். ஆர். எம் குழுமத்திற்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள்,  புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை நிறுவனம்-அலுவலகங்கள், வேந்தர் மூவிஸ் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவை உள்ளன. கல்வி மற்றும் புதிய தலைமுறை என்ற பத்திரிக்கைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களில் மற்ற கல்லுரிகளில்  இந்தாண்டிற்கான சேர்க்கை தற்போது  நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் 18-06-2013 காலை 7.45 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்[1].

Nightingale Higher Secondary schoolஇந்தியா முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை: சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்திற்கு இன்று 18-06-2013, 7 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் விரைந்து சோதனையில் ஈடுப்பட்டனர்[2]. குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்ததால் ரெய்ட் நடத்தப்படுவதாக ஒரு அதிகாரி கூறினார்[3]. மாணவர் சேர்க்கையில் நடைபெறும் குளறுபடிகளினால், புகார் கொடுக்கப்பட்டுள்ளது[4]. 19ம் தேதியும் தொடர்ந்த ஆய்வில் கணக்கில் வராத ரூ.6.75 கோடி பணம் பிடிப்பட்டுள்ளது. 250ற்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் திருச்சி, பெங்களூரு, சோன்பெட் (ஹரியானா), தில்லி என்று இந்தியா முழுவதிலும் பங்கு கொண்டுள்ளனர். இதுதவிர எஸ்.ஆர்.எம்.டிரான்ஸ்போர்ட் வடபழனி அலுவலகம், மருத்துவமனையின் மேற்கு மாம்பலம் அலுவலகம் போன்ற இடங்களில் இந்த சோதனை நடந்தது. ஒரே நேரத்தில் சுமார் 20 இடங்களில் நடந்த சோதனையில் ஒவ்வொரு இடத்திலும் 4 அதிகாரிகள் தலைமையில் 15 பேர் பங்கேற்றனர். சுமார் 4 மணி நேரம் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்றது. ஆனால், புதிய தலைமுறையில் மட்டும் நள்ளிரவைத்தாண்டியும் சோதனை தொடர்ந்து நடந்தது[5] என்று சத்தியம்டிவி தெரிவித்துக் கொள்கிறது.

SRM University Vadapalani campusபச்சமுத்து வீடுகளில் சோதனை: சென்னை அசோக்நகரில் உள்ள எஸ்.ஆர்.எம் குழும தலைவர் பச்சமுத்து வீடு (வளசரவாக்கம் ஜானகி நகர் பிரகாசம் சாலை), தி.நகரில் உள்ள வேந்தர்  மூவிஸ் அலுவலகம், காட்டாங்கொளத்தூரில் உள்ள கல்வி நிறுவனம் மற்றும் வளசரவாக்கம், வடபழனி, ராமாபுரம், கிண்டியில் உள்ள  அந்நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் ஹோட்டல்கள், ராயப்பேட்டையில் உள்ள அவரது உறவினர்  உட்பட 40-45 மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையில் சோதனையில் ஈடுபட்டனர்[6]. மேலும், திருச்சியில் உள்ள  அவரது  மருத்துவ கல்லூரி, ஹோட்டல் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர்  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்[7]. இதில், 30 பேர் கொண்ட  வருமானத்துறை அதிகாரிகள் சோதனையில்  ஈடுபட்டனர்.

The house of T.R. Pachamuthu at Valasarawakkamவேந்தர் மூவிஸ் அலுவலகத்தில் சோதனை: வேந்தர் மூவிஸ் அலுவலகத்தில் ரெய்ட் நடந்தபோது அதன் ஒரு பார்ட்னர் செவ்வாய்கிழமைலிருந்து காணாமல் போய்விட்டார். சமீபத்தில் எதிர் நீச்சல், தில்லுமுள்ளு போன்ற படங்களை இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருந்தது. ரெயிடுகளில் கிடைத்த ஆவணங்களை வைத்துப் பார்க்கும் போது, வாங்கப்பட்ட கொடைப்பணம், அதிக அளவில் செலவு செய்யப்பட்டுள்ளது போல காண்பித்து, மீதமுள்ளள பணத்தை டிரஸ்டுகளுக்கு திருப்பி விட்டது தெரியவருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வருமானத்தை மறைத்து, வருமான வரியை குறைத்துக் காட்ட இம்முறை கையாளப்பட்டதாகத் தெரிகிறது. நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன[8].

P Ravi, Sugabogananda Pachamuthuமார்ச் மாதத்தில் சிபிஐ விசாரணை: கடந்த ஜனவரியில் டாக்டர் எஸ். முருகேஷன் என்பவர் ரூ.25 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டார். இவர் SRM Dental Collegeன் டீன் ஆவார்[9]. கடந்த மார்ச் மாதத்தில், மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் “நன்கொடை பணம்” வாங்கியதற்காக, சிபிஐ விசாரணை செய்யும் நிலையில், டி.ஆர். பச்சமுத்து மற்றும் அவரது மகன் ரவி (T.R. Pachamuthu, and his son, Ravi Pachamuthu) பெயில் பெற்றனர்[10]. இப்பொழுது ரெயிட் நடக்கும் நிலையில் இருவரும் காணப்படவில்லை. ஊடகங்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளன[11]. இதற்கும் ஒன்றிற்கொன்று சம்பந்தம் உள்ளதா அல்லது இவற்றிற்கும் இப்பொழுதுள்ள ரெயிடுகளுக்கும் தொடர்புள்ளதா என்று ஆராய வேண்டியுள்ளது.

TR pachamuthu SRMபழைய நண்பர்களை மறந்து,  புதியநண்பர்களை உருவாக்கிக் கொண்டார்: 1960களிலிருந்து, கடின உழைப்பில் உயர்ந்த பச்சமுத்து, பணம் வந்ததுடன் மாறித்தான் போனார். அதனால், பழைய நண்பர்களை மறக்க / ஒதுக்க ஆரம்பித்தார். ஆனால், புதிய நண்பர்கள் அவருக்காக உழைப்பது போல காட்டிக் கொண்டு, தாங்களும் தங்களை உயர்த்திக் கொண்டனர். மார்ச் 2005ல் அப்படியொரு புகாரை அவரே அளித்தார். தனக்குக் கீழ் வேலை செய்துவந்த சுப்ரமணியம் என்ற ஆடிட்டர், சில ஆவணங்களை உபயோகித்து, ரூ.2.5 கோடி மோசடி செய்ததாக பச்சமுத்து புகார் கொடித்தார்.

Auditor arrested on cheating chargeBy Our Staff Reporter; Thursday, Mar 31, 2005http://www.hindu.com/2005/03/31/stories/2005033112710300.htmCHENNAI, MARCH 30. The police have arrested the auditor of Valliammal Society, which runs the SRM Groups of Institutions, following a complaint by the society’s chairman T.R. Pachamuthu.

Mr. Pachamuthu told police that his auditor of over a decade, Subramaniam, had cheated him by misusing the institution’s property documents to get loans from private financiers of over Rs.2.5 crores. Speaking to The Hindu over phone, Mr. Pachaimuthu said the signatures in the promissory notes that Mr. Subramaniam had handed over to the financiers could either be forged or signed by him by mistake. “He has been managing the finances of my institutions for more than a decade and I trusted him. He might have tricked me into signing some of the papers,” he said.

பச்சமுத்து பாரிவேந்தர் ஆன கதை: பச்சமுத்து திடீரென்று தன்னை “பாரிவேந்தர்” என்று கூறிக்கொண்டு, பிஓஸ்டர்கள் அடுத்து, விழாக்கள் நடத்த ஆரம்பித்தார். இவையெல்லாம் 1960களில் இருந்த இன்றும் வாழ்ந்து வரும் பழைய நண்பர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், பச்சமுத்து அத்தகைய விளம்பரங்களுக்கு ஆசைப்படுபவர் அல்ல. அப்படியென்றால், ஒன்று அவரே மாறியிருக்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு கூட்டம் அவரை மாற்றிருக்கவேண்டும்[12]. சமீபத்தைய திரைப்பட முதலீடுகள், தொடர்புகள் அவர்களை தூரத்தில் எடுத்துச் சென்று விட்டது. சங்கர், “நண்பன்” திரைப்படத்தில் “பாரிவேந்தர்ரென்ற பெயரை அறிவும், முயற்சியும், ஒழுக்கமும் இல்லா ஒரு பாத்திரத்திற்கு அப்பெயரைச் சூட்டியதால், பேராசிரியர் க.நெடுஞ்செழியன்[13] என்பவர் கண்டித்து “விடுதலையில்” எழுதியுள்ளார். “பேராசிரியர் பச்சமுத்து உழைப்பின் குறியீடு. முயற்சியின் வடிவம். ஆல்போல் தழைத்து அருகுபோல் வேர்விட்டு வளர்ந்துவரும் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர். ஓர் அரசியல் கட்சியின் நிறு வனர். மணிமேகலை அமுதசுரபியைக் கொண்டு, காணார், கேளார், கால் முடப்பட்டோர் பேணுநரின்றிப் பிணியால் வாடியோர் ஆகியோருக்குச் செய்த அறங் களைப் போல, இன்று ஆயிரக்கணக்கான ஏழை, எளியோருக்கு வாழ்வளிக்கும் வள்ளல் பாரிவேந்தர் என அவரை மற்றவர்கள், அவரால் பயன்பெறும் மக்கள் அழைத்து மகிழ்கின்றனர். விருதுக்கு ஏற்ப வாழும் வாழ்க்கை அவரின் வாழ்க்கை. அவரைச் சிறுமைப்படுத்துவது தனிமனித அவதூறாகும் இது மன்னிக்க முடியாத குற்றமே!”, என்று முடித்துள்ளார்[14]. இதெல்லாம், அரசியல், சித்தாந்தம், ஜாதி முதலியவை கலந்துள்ள பிரச்சினை போன்று தெரிகிறது.

வேதபிரகாஷ்

20-06-2013


[8] According to the sources, the searches were also conducted in the premises of Vendhar Movies and TV news channel ‘Puthiya Thalaimurai’. One of the partners of Vendhar Movies is absconding since Tuesday. The recent hits of Vendhar Movies are Ethir Neechal and Thillu Mullu. The search led to confiscation of documents which indicated receipt of donations, inflated expenditure, diverting funds of trusts and evasion of income tax for the last few years. Jewels have been seized and kept in sealed conditions.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/it-raid-on-srm-group-yields-unaccounted-cash-of-rs-675-crore/article4830954.ece

[9] Pushpa Narayan & A Selvaraj, Dental council member held for taking Rs 25L bribe, Times of India, TNN Jan 9, 2013 –  A dental surgeon, who is a member of the Dental Council of India (DCI) and dean of a leading university, and three others were arrested by the CBI for taking a bribe of 25 lakh from a self-financing medical college. CBI officials said the college had paid the surgeon to get the council’s permission to start postgraduate dental courses this year. The others arrested include an administrative officer of the college that sought permission, a former legislator and a tout. Sleuths said the management of Adi Parasakthi Dental College in Melmaruvathur had given 25 lakh to Dr S Murukesan at his private clinic in Royapettah to start MDS courses. DCI is the regulatory authority for dental education. On Tuesday, CBI officials raided his clinic and seized 25 lakh cash. “During inquiry he confessed the money was given to him by officials of Adhi Parasakthi Dental College,” an official said. The college currently admits 100 students for its BDS course. Dr S Murukesan is also dean (in-charge) of SRM Dental College. CBI also arrested Adi Parasakthi college administrative officer K Ramabadhran and former AIADMK MLA of Arcot T Palani.

http://articles.timesofindia.indiatimes.com/2013-01-09/chennai/36236943_1_cbi-officials-dental-council-postgraduate-dental-courses

[13] பகடிக்குரிய பெயரா பாரிவேந்தர்?, விடுதலை, வியாழன், 26 ஜனவரி 2012 , பேராசிரியர் க.நெடுஞ்செழியன் என்றிருந்தாலும், எழுதியவர் “சங்கர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.