மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் கைதுக்குப் பிறகு சமூகவியல் / மனோதத்துவ துறை பேராசிரியர் கைது – புகார், குற்றங்கள் ஒன்றுதான்!
மார்ச் 2023லேயே புகார் கொடுக்கப் பட்டது: மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதுரை காமராஜ் பல்கலை சமூகவியல் துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டார்[1]. மதுரை, மாடக்குளத்தைச் சேர்ந்தவர் சி. கருப்பையா, 60 (Madurai Kamaraj University Psychology department head C Karuppaiah); வயது 52 என்றெல்லாம் சில ஊடகங்கள் குறிப்பிடுவது வேடிக்கஈயாக இருக்கிறது. காமராஜ் பல்கலை சமூகவியல் / மனோதத்துவ துறை பேராசிரியராக பணிபுரிந்து மார்ச்சில் ஓய்வு பெற்றார்[2]. மனோதத்துவ பேராசிரியர் என்றால், மாணவ-மாணவியருக்கு, இவரால் பல நன்மைகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், திராவிட மாடலில் இவ்வாறு திசைத் திரும்பி, வேலியே பயிரை மெய்ந்த உண்மையாகி விட்டது போலும். கல்வியாண்டு முடியும் 2023 ஜூன் மாதம் வரை, இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது[3]. புகார்கள் உள்ள நபருக்கு அவ்வாறு பதவி நீட்டிப்பு கொடுத்தது ஏன் என்று தெரியவில்லை. உளவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பல்கலையில் புகார் அளிக்கப்பட்டது[4].
முதலில் கொடுத்த புகார்கள் கண்டுகொள்ளப் படவில்லை: இவர் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சில மாணவியர் புகார் அளித்தனர்[5]. அதன்படி இன்ஸ்பெக்டர் முத்துமணி, விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார்[6]. காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கருப்பையா மீது மாணவிகள் சிலர் குற்றம்சாட்டி வந்தனர்[7]. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பல்கலைகழகத்தில் 04-04-2023 அன்று புகார் அளித்தும் பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவிகள் குற்றம்சாட்டினர்[8]. இதனிடையே மதுரை சரக டிஐஜி பொன்னியை சந்தித்து மாணவிகள் புகார் அளித்தனர்[9]. இவ்வாறு பிடிஐ பாணியில் தான், எல்லா ஊடகங்களும் இச்செய்தியை வெளியிட்டே ஆகவேண்டும் என்ற ரீதியில் வெளியிட்டாலும், எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. மிக சமீபத்தைய கலாக்ஷேத்திரா போல பொங்கவில்லை. இதுதான், பத்திரிகா தர்மத்தின் மிகப் பெரிய மர்மமாக இருக்கிறது எனலாம்.
04-04-2023 அன்றும் புகார் கொடுக்கப் பட்டது: இந்தியன் எக்ஸ்பிரஸ் இதைப் பற்றி தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுளளது. அதாவது, அவ்வாறு செய்திகள் வெளிவந்தாலும், இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாகிறது. இதில் அரசியல் இருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால், கலாக்ஷேத்திராவிற்கு குதித்தவர்கள், இதை கண்டு கொள்ளவில்லை போலும்! அந்த SFI உதலிய போராளிகளும், வீராதி-வீரர்களும் கண்டுகொள்லவில்லை, கொதித்தெழவில்லை, “நக்கீரனும்” மயக்கத்தில் ஆழ்ந்துவிட்டான் போலிருக்கிறது. அதை காமக்ஷேத்திரம் என்றெல்லாம் வர்ணித்தவர்கள், இங்கு அமைதியாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தமிழ் என்றாலோ, பெயர் என்றாலோ, யதுகை-மோனை என்றாலோ, தமிழ்-தமிழ் என்று அரற்றுபவர்களும் நிதர்சனத்தை அறிந்தும் அறியாதவர் போலிருக்கிறார். காமம் கூட ஆளுக்கு ஆள், இடத்திற்கு இடம், ஜாதிக்கு ஜாதி என்று மாறும் போலிருக்கிறது. இருப்பினும் பாதிக்கப் பட்ட மாணவியர், பெண்கள் புகார் கொடுக்கத் தான் செய்கின்றனர்.
10-04-2023 அன்று மறுபடியும் புகார்: கருப்பையா மீது ஒரு மாதமாக பல்கலை நிர்வாகத்திற்கு தொடர்ந்து, ‘ஆன்லைனில்’ புகார்கள் வந்தன. மார்ச் 2023லேயே புகார்கள் எழுந்தன. அதில், ‘மாணவியரிடம் மிக ஆபாசமாக பேசுகிறார்[10]. “ஏய்… நீ ரொம்ப அழகா இருக்க… உன் ஜீன்ஸ் பேன்ட் சைஸ் என்ன, ஒல்லியாக இருக்கும் பெண்களை தான் பசங்க விரும்புவாங்க...’ என, தொடர்ந்து சர்ச்சையாக பேசி வந்துள்ளார்[11]. அத்தகைய ஆதாரங்கள் கூட போதவில்லையா என்று தெரியவில்லை. முதுகலை மாணவி ஒருவருக்கு இ-மெயில் மூலம் ‘செக்ஸ் டார்ச்சர்’ கொடுத்துள்ளார். அப்படியென்றால் சைபர் சட்டம், விதிகள் மூலமாகவே இவர் மீது உடனடி நடவடிக்கை எடுத்திருக்கலாம். மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கடந்த வாரம் 04-04-2023 அன்று புகார் அளித்தனா்[12]. ஆனால், பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை[13]. அதாவது கமிட்டி போட்டாகி விட்டது என்று சாக்கு சொல்லி தப்பித்துக் கொள்ளும். ஆனால், இதெல்லாம் தாமதப்படுத்தப் படும் யுக்திகள் என்று எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான்.
மாணவிகளை பேராசிரியா் கருப்பையா புகாரை திரும்பப் பெறுமாறு மிரட்டினாராம்: இதற்கிடையில் புகார் அளித்த மாணவிகளை பேராசிரியா் கருப்பையா புகாரை திரும்பப் பெறுமாறு மிரட்டினாராம்[14]. இதுவும் அதே பாணியில் நடந்தது எனலாம். ஊடகங்களும் இதை கண்டுகொள்ளவில்லை. இதிலுள்ள பிரச்சினை, மர்மம், அரசியல் அல்லது என்னது தடுக்கிறது, வித்தியாசமாக செயல்பட வைக்கிறது என்பது தெரியவில்லை. அதை வெளிப்படுத்த தயங்குவதும் புரியவில்லை. ஏனெனில், புகார் வாபஸ் என்றால், எல்லாமே மறைந்து விடுகிறது, அவரும் புனிதர் ஆகி விடுகிறார். ஆனால், பாதிப்பு மாணவியர்களிடம் தான் இருக்கும். பாலியல் புகார்களை விசாரிக்கும் ஐ.சி.சி., கமிட்டி விசாரணை நடத்தியது[15]. இதெல்லாம் விஷகா கமிட்டியின் படி நடப்புதான். பாதிக்கப்பட்ட மாணவி, தென் மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க்கிடம் புகார் அளித்தார். கருப்பையாவை சமயநல்லுார் மகளிர் போலீசார் 19-04-2023 அன்று கைது செய்தனர்.
31-03-2023 அன்று வரலாற்றுத்துறை பேராசிரியர் சண்முகராஜா கைதானது: இந்த பல்கலையில் வரலாற்றுத்துறை பேராசிரியர் சண்முகராஜா, மார்ச் 31ல் பாலியல் புகாரில் கைதான நிலையில், தற்போது இவர் கைதாகி உள்ளார்[16]. கருப்பையா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்[17]. மாணவியை சாதிப்பெயரை வைத்தும், உருவத்தை வைத்தும் கிண்டல் கேலி செய்ததால் நாகமலை புதுக்கோட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உதவி பேராசிரியர் சண்முகராஜா மாணவியைத் தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசியது உண்மை எனத் தெரியவந்தது[18]. அதனைத் தொடர்ந்து நாகமலை புதுக்கோட்டை போலீஸார், சண்முகராஜா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.முன்னதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளைத் தவறாகப் பேசியதாகக் கூறி, பேராசிரியர் சண்முகநாதன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்[19]. சில நாட்களுக்கு முன்பு மதுரை மத்தியச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். தற்போது மீண்டும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[20].
© வேதபிரகாஷ்
20-04-2023
[1] தினமலர், மாணவியருக்கு பாலியல் தொல்லை; காமராஜ் பல்கலை பேராசிரியர் கைது, பதிவு செய்த நாள்: ஏப் 19,2023 05:23
[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3297967
[3] தமிழ்.இந்து, மாணவிகளிடம் தவறாக பேசியதாக மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் கைது, செய்திப்பிரிவு, Published : 19 Apr 2023 06:12 AM; Last Updated : 19 Apr 2023 06:12 AM.
[4] https://www.hindutamil.in/news/crime/977807-madurai-kamaraj-university-professor-arrested.html
[5] தினத்தந்தி, மதுரையில் மாணவிக்கு பாலியல் தொல்லை; பல்கலைக்கழக பேராசிரியர் அதிரடி கைது, ஏப்ரல் 19, 2:14 am.
[6] https://www.dailythanthi.com/News/State/student-sexually-harassed-in-madurai-university-professor-arrested-945905?infinitescroll=1
[7] தினகரன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மதுரை பல்கலை பேராசிரியர் கைது, April 19, 2023, 1:39 am
[8] குமுதம், மதுரை: கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை– போலீஸில் வசமாகச் சிக்கிய பேராசிரியர், kumudam | POLITICS| Updated: Apr 19, 2023
[9] https://www.kumudam.com/news/politics/55084
[10] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உன்னோட சைஸ் என்ன? டபுள் மீனிங் பேச்சு.. மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியர்.!, First Published Apr 19, 2023, 8:22 AM IST
[11] https://tamil.asianetnews.com/gallery/crime/sexual-harassment-of-female-students-madurai-kamaraj-university-professor-arrested-rtcdbs
[12] Nw Indian Express, Madurai Kamaraj University Psychology HoD held for sexual harassment, Published: 19th April 2023 06:36 AM | Last Updated: 19th April 2023 06:36 AM
[13] https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/apr/19/madurai-kamaraj-universitypsychology-hod-held-for-sexual-harassment-2567304.html
[14] தினமணி, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: காமராஜா் பல்கலை. பேராசிரியா் கைது, By DIN | Published On : 19th April 2023 12:00 AM | Last Updated : 19th April 2023 12:00 AM.
[15] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2023/apr/19/sexual-harassment-of-female-students-kamaraj-university-professor-arrested-3993154.html
[16] கூடல்.காம், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் கைது!, April 19, 2023
[17] https://koodal.com/news/2023/04/19/madurai-kamaraj-university-psychology-hod-arrested-for-sexual-harassment/
[18] கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மாணவிகளிடம் உதவி பேராசிரியர் சண்முகராஜா தரக்குறைவாகப் பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நேரில் வந்து சண்டுகராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[19] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Crime: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – அடுத்தடுத்து சிக்கிக் கொள்ளும் பேராசிரியர்கள்!, Suriyakumar Jayabalan, 19 April 2023, 8:29 IST.
[20] https://tamil.hindustantimes.com/tamilnadu/madurai-kamaraj-university-professor-has-been-arrested-for-harassing-college-girls-131681872719405.html