Archive for the ‘சென்னை பல்கலைக்கழம்’ Category

பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.ஏ., முடித்தவர்கள் சரித்திரம் – வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது–பிரச்சினை, பின்னணி என்ன? (1)

ஏப்ரல் 14, 2024

பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.., முடித்தவர்கள் சரித்திரம்வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது பிரச்சினை, பின்னணி என்ன? (1)

தொல்லியல் படிப்பிற்கு திடீர் மவுசு ஏன்?: கீழடி அகழாய்வுக்குப் பிறகு, தொல்லியல் திடீஎன்று பிரபலமாகி, எல்லோரையும் உசுப்பேற்றியுள்ளது போலிருக்கிறது. 2000 வரை 10-15 பேரே சேர்ந்து படிக்கும் துறைக்கு, இன்று அதிகமாகவே விண்ணப்பித்து வருகிறார்கள். வருடா வருடம் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. படிப்புப் பற்றியும் அதிக விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன[1]. உதவித் தொகையுடன் படிக்கலா, அரசு அழைப்புப் போன்ற செய்திகளும் உண்டு[2]. இதுவரை தமிழ், வரலாறு, தொல்லியல் முதலான பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவா்கள் மட்டுமே முதுநிலைப் பட்டயப் படிப்புக்கு தோ்ந்தெடுக்கப்பட்டு வந்த நிலையில், வளா்ந்து வரும் தொழில்நுட்பம், பன்முகத் தன்மை வாய்ந்த தொல்லியல் போக்குகள் முதலியவற்றைக் கருத்தில்கொண்டு இனி முதுகலை, முதுநிலைஅறிவியல், முதுநிலை பொறியியலில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவா்களும் முதுநிலை தொல்லியல் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது[3]. இதையும் யாரும் எதிர்க்கவில்லை.

தொல்லியல் படிப்பிற்கு பொறியியல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: பொறியியல் மாணவர்கள் எதற்கு இபடிப்பிற்கு வரவேண்டும் என்று யாரும் கேட்கவில்லை, எதிர்க்கவில்லை, தடுக்கவில்லை. இந்த தோ்வில் தோ்ச்சி பெறுபவா்கள் மாதம் ரூ.5,000 கல்வி உதவித் தொகையுடன் படிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விரிவான தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெறும் மாணவா்கள் தொல்லியல் மட்டுமின்றி அருங்காட்சியகங்கள், சுற்றுலா மற்றும் கோயில்கள் உள்ளிட்ட மரபுசார் இடங்களின் பாதுகாப்பு மற்றும் கல்விப் புலத்திலும் சிறப்பாகச் செயல்படமுடியும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்[4]. ஒரு பக்கம் தமிழகத்தில் 1000 வருடங்களுக்கு முந்தைய கோவில்கள் எவ்வாறு கவனிப்பார் இல்லாமல் சிதிலமடைந்து கிடக்கின்றன மற்றும் இருக்கும் கோவில்களிலும் நாத்திகம்-சித்தாந்தம் பேசு அரசுகளால் சேதமடைந்து வருகின்றன என்பதும் தெரிந்த விசயமே. அந்நிலையில் புராதக சின்னங்கள், கோவில்கள், கட்டிடங்கள் இவற்றை பாதுகாக்க, புதிய படிப்புகளை, துறைகளை உண்டாகலாம். அதே போல எம்.ஏ-தொல்லியலுக்கும் ஐ.டி என்று பலதுறை பட்டயம் பெற்ற மாணவர்கள் எல்லாம் சேர்ந்து வருகிறார்கள். இது படிப்பிற்காக போட்டியா அல்லது வேலைக்காக போட்டியா என்று புரியவில்லை. ஏதோ அர்ச்சகர் வேலைக்கு போட்டி போன்று, ஒரு பிரமிப்பை உண்டாக்கி வருவது தெரிகிறது.

தொல்லியல் பட்டதாரிகள் சரித்திர வேலைக்கு விண்ணப்பிக்கலாகாதா?: இருப்பினும், அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள, இணையில்லாத கல்வி பட்டியல் குறித்த அரசாணையால், சென்னை பல்கலையில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை படிப்பை முடித்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்[5]என்று செய்தி வந்துள்ளது. பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் வரையறைக்கு உட்பட்டு, எந்தெந்த படிப்புகள் எந்தெந்த படிப்புகளுக்கு இணையில்லாதவை என்பது குறித்து, பிப்ரவரி மாதம் 2024 வல்லுனர் குழு ஆலோசித்தது[6]. அந்தக்குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. அதில், தாவரவியல், வரலாற்று துறை படிப்புகளுக்கு இணையில்லாத படிப்புகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. அதாவது, சென்னை பல்கலையால் வழங்கப்படும் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் எம்.ஏ., பட்டம், எம்.ஏ., வரலாறு பட்டத்துக்கு இணையானது இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.., முடித்தவர்கள் சரித்திரம்வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது: இதனால், வரலாற்றுத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு, சென்னை பல்கலையில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.ஏ., முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை பல்கலையில், எம்.ஏ., பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் பட்டம் பெற்றவர்கள் கூறியதாவது: “தற்போது, ஆசிரியர் தேர்வாணையம் வரலாற்றுத்துறை பேராசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு, சென்னை பல்கலையில் எம்.ஏ., பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் பட்டம் பெற்று, பிஎச்.டி., ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளோரும் விண்ணப்பிக்க முடியாத வகையில், புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய, மாநில தொல்லியல் துறைகளிலும், வரலாறு சார்ந்த கல்வித்துறையிலும், சென்னை பல்கலையில் படித்தோர் தான் அதிகளவில் சாதித்துள்ளனர்.”

தமிழக அரசு தவறான அரசாணையை வெளியிட்டுள்ளது:. “தமிழகத்தில் நடந்துள்ள பல்வேறு அகழாய்வுகளை அவர்களே திறம்பட செய்து, புதிய வரலாற்றுக்கு துணை புரிந்துள்ளனர். அதேபோல், நாணயம், கல்வெட்டு, சுவடிகள் உள்ளிட்டவற்றையும் ஆராய்ந்து, புதிய வரலாற்றை எழுதி உள்ளனர். தொல்லியல் துறை வேலைவாய்ப்புகளுக்கு வரலாற்று துறையினர் விண்ணப்பிக்கும் தகுதி பெற்றுள்ள நிலையில், வரலாற்றுத்துறை வேலைவாய்ப்புக்கு தொல்லியல் துறையினர் விண்ணப்பிக்க முடியாத வகையில், தமிழக அரசு தவறான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதனால், வரலாறு பாடத்திட்டத்தில் உள்ள பண்டைய வரலாறு, தொல்லியல் குறித்த பாடங்களை நடத்த முடியாத சூழல் ஏற்படுவதுடன், சென்னை பல்கலையில் படித்து அகழாய்வுகளை செய்து, பல வரலாற்று நுால்களை எழுதிய, தகுதியும் திறமையும் உள்ள நுாற்றுக்கணக்கான கல்வியாளர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும். இது, தொல்லியல் படிப்பை முடித்தோருக்கும், படிப்போருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேசமயம், தஞ்சை தமிழ் பல்கலையில் தொல்லியல் படிப்பை முடித்தவர்கள், வரலாற்றுத் துறை பணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்படவில்லை. இது பாரபட்சமான அரசாணையாக உள்ளது. இதை மாற்றி, பழைய நடைமுறையை தொடர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொல்லியல் படிப்பின் முக்கியத்துவம்: வரலாற்றுத் தொன்மையை ஆதாரபூர்வமாக நிறுவுவதற்கு அடிப்படைத் தரவுகளாக இருப்பவை தொல்லியல் எச்சங்களே. அத்தகைய தொல்லியல் கல்வியை இந்தியாவில் 30-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கற்பிக்கின்றன[7]. குறிப்பாகப் பல்கலைக்கழகங்கள் முதுகலை, இளங்கலை, பட்டயப் படிப்புகளில் பண்டைய வரலாறு, தொல்லியல், கலாச்சாரம், தொல்லியல், அருங்காட்சியகவியல், பாதுகாப்புத் தொழில்நுட்பம் போன்ற படிப்புகளை வழங்குகின்றன[8]. குறிப்பாக டெக்கான் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் 1939 முதல் பண்டைய இந்திய வரலாறு, தொல்லியல் பாடப்பிரிவுகளில் முதுகலை தொடங்கி முனைவர் பட்டம் வரை வழங்கிவருகிறது. மேலும், கணிணி வழியில் ஆய்வுகள், தொல்லியல் பொருட்களை வேதியியல் பகுப்பாய்வு செய்வது, புதைபடிவ ஆய்வியல், தொல்லுயிரியல் ஆய்வுகள், மகரந்தவியல் ஆய்வுகள் எனத் தொல்லியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய ஆய்வகங்களுடன் மிகச் சிறந்த தொல்லியல் ஆய்வுக் கல்வியை வழங்குகிறது. புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர்களான சங்காலியா, வசந்த் சிண்டே, சாந்தி பப்பூ போன்ற ஆய்வாளர்களை நாட்டுக்கு வழங்கியது டெக்கான் பல்கலைக்கழகம்.

© வேதபிரகாஷ்

14-04-2024


[1] டமிழ்.ஏபிபி.லைவ், Archaeology Museology: தொல்லியல் படிப்புகளை உதவித் தொகையுடன் படிக்கலாம்: அரசு அழைப்புவிவரம், By : மாய நிலா,  PUBLISHED AT : 02 JUL 2023 05:12 PM (IST)| Updated at : 02 Jul 2023 05:12 PM (IST).

[2] https://tamil.abplive.com/education/tamil-nadu-institute-of-archaeology-and-museology-pgda-pgde-pdhmm-2023-2025-know-how-to-apply-126471

[3] தினமணி, புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொல்லியல்பட்டயப் படிப்புக்கு 320 போ் விண்ணப்பம், Published on: 30 ஆகஸ்ட் 2020, 3:46 am; Updated on: 30 ஆகஸ்ட் 2020, 3:46 am.

[4]https://www.dinamani.com/tamilnadu/2020/Aug/29/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-320-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-3457057.html

[5] தினமலர், சென்னை பல்கலை தொல்லியல் பட்டம் பெற்றவர்களுக்கு சிக்கல், UPDATED : ஏப் 10, 2024 03:34 AM; ADDED : ஏப் 10, 2024 03:34 AM.

[6] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-chennai-university-archeology-graduates-have-a-problem–/3596966

[7] தமிழ்.இந்து, 30+ பல்கலை.கள், 40+ கல்லூரிகள்… – ‘தொல்லியல்படிப்புகளில் தடம் பதிக்க விருப்பமா?, செய்திப்பிரிவு, Published : 18 Nov 2023 07:07 PM; Last Updated : 18 Nov 2023 07:07 PM. . இனியன் | தொடர்புக்க்கு initnou@gmail.com

[8] https://www.hindutamil.in/news/education/1155300-there-are-30-plus-universities-fot-archaeology-courses.html

திருவள்ளுவர் பல்கலைக் கழகம் -டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக் கழகம் தோற்றமும், மறைவும் – தொடர்ந்து நடந்து வரும் ஊழல்கள், என்ன சம்பந்தம்?

செப்ரெம்பர் 17, 2023

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் தோற்றமும், மறைவும்தொடர்ந்து நடந்து வரும் ஊழல்கள், என்ன சம்பந்தம்?

05-09-2023 திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஊழல், ஊழல்புகார்கள் பற்றி விசாரணை: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஊழல், ஊழல்புகார்கள், போராட்டங்கள் என்று நடந்து கொண்டிருப்பது[1]. அந்த திருவள்ளுவர் பெயருக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது[2]. வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்காட்டிலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2015ல் நடந்த ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்[3]. ஆனால், பல விவரங்கள் பொது மக்களிடமிருந்து மறைக்கப் படுகின்றன. இதில், பல்கலைக்கழகத்தில், 112 கோடி ரூபாய் அளவிற்கு நிதி நிர்வாக முறைகேடு நடந்ததாகவும், பல்கலைக்கழகத்திற்கு கொள்முதல் செய்த, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, தமிழ்நாடு ஒப்பந்த வெளிப்படுத்த தன்மை சட்டத்தை மீறி, பல்கலைக்கழகத்திற்கு பண இழப்பு ஏற்படுத்தியது மற்றும் பல்கலைக்கழக தேர்வு முறைகேடு உள்ளிட்டவைகள் குறித்து புகார் அளிக்கப்பட்டது[4]. அதன் அடிப்படையில் 05-09-2023 அன்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை கூடுதல் செயலர் இளங்கோ ஹென்றி தாஸ் விசாரணை நடத்தினார்[5]. விவரங்கள் என்னவென்று தெரியவில்லை. மேலும், மனுதாரரான முன்னாள் பேராசிரியர் இளங்கோவனிடம் விசாரணை நடத்தப்பட்டது[6]. இங்கும் விவரங்கள் தெரிவிக்கப் படவில்லை. பிடிஐ பாணியில் ஊடகங்களில் ஒருசில வரிகளில் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.

02-08-2023 – திருவள்ளுவர் பல்கலையில் ஏராளமான முறைகேடு; பேராசிரியர்கள், ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!:  02-08-2023 அன்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் அதிகளவில் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி ஊழியர்கள் மற்றும் உறுப்புக் கல்லூரி பேராசிரியர்கள் பறை இசைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[7]. பல்கலைக்கழகத்தில் லஞ்சம், முறைகேடுகள் அதிகரித்து விட்டதாகவும், இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழு விசாரணை நடத்தி 12 மாதங்களாகியும் இதுவரை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றும், உடனடியாக அந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தனர்[8].

டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் தோற்றமும், மறைவும்: அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா 2021 பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த கல்வியாண்டு முதலில் புதிய டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கப்பட்டது. ஆனால், மாநில சட்டமன்றத் தேர்தலின் காரணமாக இந்தத் திட்டம் தாமதமானது, பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் முடிக்கப்படவில்லை. தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்ததன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 05ஆம் நாள் இதற்கான சட்ட முன்வரைவினை உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் தாக்கல் செய்தார். இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக முனைவர் எஸ். அன்பழகன் மார்ச் 01 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இப்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட கலை அறிவியல் கல்லூரிகள் வரும். வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் உயர் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்ததும், இப்பல்கலைக்கழகம் மூடப்பட்டது: அப்போதைய அ.தி.மு.க அரசு. அந்த நேரம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த துரைமுருகன், “திருவள்ளுவர் பல்கலைக்கழகம் நான் கொண்டுவந்தது. அதை எந்தக் காரணத்துக்காகவும் பிரிக்கவிட மாட்டேன். புதிதாக வேண்டுமானால், பல்கலைக்கழகத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்’’ என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இம்மாவட்டங்களில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் பிரிக்கப் பட்டன. முழுமையாக செயல்படாமல் இருந்த இப்பல்கலைக்கழகம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இதற்கான சட்டமுன்வடிவானது ”2021ம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் திருத்தம் மற்றும் நீக்கறவு சட்டம்” என்பதை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். இந்தநிலையில், தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, ஜெயலலிதா பல்கலைக்கழகம் முடக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அ.தி.மு.க தலைவர்கள் கொந்தளிக்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும்விதமாக, துணை வேந்தரைத் தவிர்த்து மற்ற அனைத்துப் பொறுப்புகளுமே காலியாகத்தான் வைக்கப்பட்டிருக்கின்றன[9].  பொது மக்கள், “பல்கலைக்கழகத்தைப் பிரித்ததில், தி.மு.வுக்குக் கோபமில்லை. ஜெயலலிதா பெயர் சூட்டியிருப்பதுதான் பிடிக்கவில்லை. ஏட்டிக்குப் போட்டியாக, கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் மாற்றப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. இரண்டு கட்சிகளுக்குமான அரசியல் காழ்ப்புணர்ச்சியால், மூன்று மாவட்டங்களிலுள்ள கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விதான் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்,’’ என்கிறனர்[10].

குற்றங்கள், சீரழிவுகள் டிவி-சீரியல் போன்று காண்பிக்கப் படுகின்றன: இவையெல்லாம் தனித்தனி செய்திகளாக இருந்தாலும், சம்பந்தம் இருக்கிறது. ஒரு பல்கலைக் கழகம் ஆரம்பிப்பது என்பது சாதாரணமான விசயம் கிடையாது, அதிலும் முதலமைச்சர் பெயரில் ஆரம்பித்து உடனே மூடு விழா செய்யப் படுவது, அதிலும் அசாதாரணமன விசயம் ஆகும். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதனை செய்துள்ளது. அதிமுகவும் அதை பெரிதாக எதிர்த்ததாகத்தெரியவில்லை[11]. ஆனால், திமுக-அதிமுக கட்சிகளுக்குள் இருக்கும் விருப்பு-வெறுப்பு, போட்டி-பொறாமை முதலியவற்றிற்கும் மேலாக ஏதோ ஒன்று இருப்பது தெரிகிறது[12]. கல்வியை சக்காக வைத்துக் கொண்டு அரசியல் செய்து, பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை மறைக்க முடியாது. திடீரென்று தமிழக்த்தில் எல்லா பல்கலைக்கழகங்களில் ஊழல் ஏற்பட்டுள்ளது,ஏற்படுகிறது, கைது, விசாரணை, வழக்கு என்றெல்லாம் நடந்து ஒண்டிருப்பதை கவனித்து வர முடிகிறது. பிறகு, இந்த நடவடிக்கைகளில்,செயல்பாடுகளில், பலநிலைகளில் செலவழிக்கப் பட்ட கோடிக்கணக்கான பணத்தைப் பற்றி யார் கவலைப் படுவது? பொதுவாக மக்கள் அரசியலைக் கூட இன்று, டிவி-சீரியல் போன்று பார்க்க ஆரம்பித்து விட்டனர். அதில் நடக்கும் குற்றங்கள் முதலியவை பார்த்து-பார்த்து,கேட்டு-கேட்டு மரத்துப் போகிறது. அவை மறக்கவும் படுகின்றன.

© வேதபிரகாஷ்

17-09-2023


[1] தினத்தந்தி, முறைகேடுகள் தொடர்பாக உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் விசாரணை , செப்டம்பர் 5, 11:19 pm

[2] https://www.dailythanthi.com/News/State/higher-education-additional-secretary-inquiry-into-irregularities-1046282

[3] மாலைமலர், முறைகேடு நடந்ததாக புகார்: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் விசாரணை, ByMaalaimalar .5 செப்டம்பர் 2023 1:32 PM.

[4] https://www.maalaimalar.com/news/state/allegation-of-malpractice-investigation-by-additional-secretary-department-of-higher-education-thiruvalluvar-university-658795

[5] தினமலர், திருவள்ளுவர் பல்கலை.,யில் ஊழல்: அதிகாரி விசாரணை, செப்டம்பர், 07,2023,09:13 IST

[6] https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=58971&cat=1

[7] இடிவி.பாரத், திருவள்ளுவர் பல்கலையில் ஏராளமான முறைகேடு; பேராசிரியர்கள், ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!,Published: Aug 3, 2023, 6:38 AM.

[8] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/vellore/thiruvalluvar-university-teaching-and-non-teaching-staffs-protest-against-administration/tamil-nadu20230803063809297297569

[9] விகடன், பெயர் சர்ச்சையால் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்குகிறதா தி.மு.?! – என்ன நடக்கிறது?, லோகேஸ்வரன்.கோ, ச.வெங்கடேசன், Published:23 Jul 2021 5 PM; Updated:23 Jul 2021 5 PM.

[10] https://www.vikatan.com/government-and-politics/is-dmk-government-closing-jayalalitha-university

[11] The Fedearal, Closure of Jayalalithaa Univ, fallout of rivalry between Dravidian parties?, N Vinoth Kumar, 2 Sept 2021 6:55 PM  (Updated:2 Sept 2021 7:07 PM).

[12] https://thefederal.com/states/south/tamil-nadu/closure-of-jayalalithaa-univ-fallout-of-rivalry-between-dravidian-parties/

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது–அதன் ஆராய்ச்சி நிலைப் பற்றிய விவரங்கள் (7)

ஜூலை 11, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது அதன் ஆராய்ச்சி நிலைப் பற்றிய விவரங்கள் (7)

இரும்பு காலம் பற்றிய கருத்து: ஆய்வரங்கத்தின் முதல் அமர்வில், புதுச்சேரி பல்கலை பேராசிரியர் ராஜன் பேசியதாவது[1]: “இந்தியா முழுக்க பிராகிருத மொழி பயன்பாட்டிற்கு வந்தது. அதற்கு முன், தமிழகத்தில் தமிழி எழுத்துகள் புழக்கத்தில் இருந்தன. அதனால்தான், தமிழகத்தில் பிராகிருத கல்வெட்டுகள் இல்லை. தமிழர்களின் வரலாற்றை முழுமையாக சொல்ல முடியாது. காரணம், சங்க இலக்கியத்தில் அனைத்து கூறுகளும் சொல்லப்படவில்லை. அகழாய்வில் பயன்படா பொருட்களே அதிகளவில் கிடைக்கின்றன. கல்வெட்டு, காசுகளும், பொதுமக்களின் வாழ்வியலை முழுமையாக சொல்லவில்லை. என்றாலும், உலகின் முன்னேறிய சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததை, இந்த ஆய்வுகளால் அறிய முடிகிறது. தமிழகத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கடல்வழி வணிகம் சிறந்திருந்தது. இங்கு, எழுத்தறிவு மிக்க சமூகம் வாழ்ந்திருந்தது. நெல்லை நாற்றுவிட்டு நடும் பழக்கம், 2,700 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. இவற்றைவிட முக்கியமாக, உலகத்திற்கே இரும்பை அறிமுகம் செய்தவன் தமிழனாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரம், மேட்டூர் அருகே உள்ள தெலுங்கன்குடியில் கிடைத்த இரும்பு வாள் நிரூபித்துள்ளது. அதாவது, சிந்துவெளியில் செம்பை பயன்படுத்திய காலத்தில், தமிழர்கள் இரும்பை பயன்படுத்தி உள்ளனர். அதற்கான தரவுகளை சேகரிக்கும் வகையில், சிந்துவெளி மற்றும் தமிழ் நிலத்தில் கிடைத்துள்ள குறியீடுகளை ஆய்வு செய்து வருகிறோம்,” இவ்வாறு அவர் பேசினார்[2].

அரைத்த மாவை அரைக்கும் பாணியில் ஆய்வுக்கட்டுரைகள்: பட்டியலிடப்பட்ட தாள்கள் தாள்களின் தரத்தை வெளிப்படுத்தின. பெரும்பாலான தாள்கள் மறுவடிவமைக்கும் வகையைச் சேர்ந்தவை, அதே விஷயங்களை மீண்டும் மீண்டும் அரைத்த மாவை அரைக்கும் பாணியில் கூறுகின்றன.

  • தொல்காப்பியர் நோக்கில் வள்ளுவம்
  • திருக்குறள், திருவள்ளுவர் முதலியன… – தற்போதைய வாழ்க்கை முறைக்கான நடைமுறை வழிகாட்டி, இது போன்ற திருக்குறள் பற்றிய பல ஆவணங்கள்.
  • தனிநாயகம் பிள்ளை……
  • தமிழை விரைவாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்வது எப்படி
  • திரு.வி.கல்யாணசுந்தரனார், மயிலை சீனி வேங்கடசாமி (அவர் மீது பல ஆவணங்கள்) முதலியன,
  • சங்க இலக்கியம்……..பற்றி…
  • சிலப்பதிகாரம் பற்றி – பல தாள்கள்
  • சங்க இலக்கியம்
  • சித்த, சித்த மருத்துவம்

இதில் புதியதாக எந்த விசயத்தையும்சொல்ல காணோம்.

எப்படியாவது ஒரு ஆய்வுக்கட்டுரையை கொடுத்தே ஆகவேண்டும் என்ற வெறியில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் படுகின்றன: ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுப்பது, தலைப்பை ஆராய்ச்சி செய்தல், திட்டமிடல் மற்றும் எழுதுதல் என்பது இல்லை. வலைத்தளங்கள், கல்வி கட்டுரைகள், புத்தகங்கள், கலைக்களஞ்சியம், நேர்காணல்கள், இணையத்தில் தனிப்பட்ட கட்டுரைகள் (வலைப்பதிவுகள்) என்பதெல்லாம் இல்லாமல், “கட்-அன்ட்-பேஸ்ட்” முறையிலேயே செல்கின்றனர். கட்டுரையின் வடிவத்தில் தர்க்கரீதியான விமர்சன வாதங்களை முன்வைப்பதில்லை, தீர்மானமாக முடிவை வைத்துக் கொண்டு இந்த வேலை நடக்கிறது. பகுப்பாய்வு கட்டுரைகள், என்று சொல்லிக் கொண்டாலும், எந்த ஒரு முக்கியமான பிரச்சினையில் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொண்டு வரும் போக்கில் விசயங்களைச் சொவ்தில்லை. ஆராய்ச்சியின் பொருள் சர்ச்சைக்குரியதாக இருப்பதும் இல்லை, அந்த அளவுக்கு கஷ்டப்படுவதும் இல்லை, உழைப்புடன் முனைவதும் இல்லை. சொந்த கருத்துக்களைத் தெரிவித்து, ஆதாரங்களுடன் எழுதும் கட்டுரையாளர்கள் சிலரே. நேரடி மேற்கோள்கள், நீண்ட மேற்கோள்களைத் தவிர்க்காமல், அவற்றை அவ்வாறே எடுத்தாள்கின்றனர்.

எந்த ஆராய்ச்சிநெறிமுறையும் பின்பற்றப் படுவதில்லை: இப்பொழுதைய ஆராய்ச்சிநெறிமுறை, தரக்கட்டுப்பாடு, விதிகள், மென்பொருளால் சரிபார்க்கும்முறை முதலியவற்றை வைத்து சரிபார்த்தால், எத்தனை ஒழுங்கானவை என்று தீர்வாகும் என்பதும் நோக்கத் தக்கது. இருப்பினும், இவர்கள் தலைப்புகளை மாற்றி, சில வர்களை வெட்டி-ஒட்டி கட்டுரை என்று தயாரித்து, வாசிக்க வந்து விடுகின்றனர். கட்டுரைகளை தேர்வு செய்பவர்களும் எந்த தரத்தையும் சரிபார்ப்பதில்லை, தெரிந்தவர்களா, நண்பர்கள் பரிந்துரைத்தார்களா என்று பார்த்து தேர்வு செய்கிறார்கள். அவர்களே ஒப்புக் கொண்டபடி, பெயர்களை வைத்துக் கொண்டு கூட, சில கட்டுரைகளை ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.

09-07-2023 அன்று அவசரஅவசரமாக முடிந்த மாநாடு: குதிரை முன் வண்டிகல்வி அமர்வுகள் நிறைவடையும் முன் விழா நடைபெற்றது: ஆய்வுக்கட்டுரை அமர்வுகள் முடிவடைவதற்கு முன்பு நிறைவு விழா நடைபெற்றது. ஜூலை 9 ஆம் தேதி, ஆய்வுக் கட்டுரை வழங்குபவர்கள் தங்கள் நிலையைக் கேட்டறிந்து காத்துக் கொண்டிருந்தனர், காலை 9.00 மணி முதல் அறைகள் காலியாக இருந்ததாலும், யாரும் சரியாக பதிலளிக்காததாலும், ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கரவர்கள் சென்று வந்து கொண்டிருந்தனர். ஆய்வுக்கட்டுரை வாசிப்பு / கல்வி அமர்வுகள் குறித்து முற்றிலும் குழப்பம் ஏற்பட்டது. பின்னர், முதலில் பாராட்டு விழா நடைபெறும் என்றும், பின்னர் காலை 10.30 மணி 11 மணிக்கு தாள் வாசிப்பு நிகழ்ச்சி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சாளர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தனர், நேரம் கடந்துவிட்டதால் ஆய்வுக்கட்டுரை வழங்குபவர்கள் கவலையடைந்தனர். பின்னர், பிரிவுத் தலைவர்கள் அறைகளுக்குச் சென்று அமர்வுகளைத் தொடங்க ஆரம்பித்தனர். துரதிர்ஷ்டவசமாக, இந்த முரண்பாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் வாசிப்பவர்களுக்கு 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதித்தனர். மேலும், 10-15 நபர்கள் இல்லை, அவர்களில் பெரும்பாலோர் கட்டுரை வழங்குபவர்களாக இருந்தனர். வழக்கம் போல கட்டுரை வாசிப்பவர் ஆசிட்டுவிட்டு போய்விட்டார்கள்.. நிச்சயமாக, அமர்வுகளைத் தொடங்க அமைப்பாளர்கள் மற்றும் பிரிவுத் தலைவர்கள் தரப்பில் இரண்டு மணி நேரம் ஏற்கெனவே தாமதம் ஏற்பட்டது. எப்படியோ, பேப்பர் வாசிப்பு அமர்வுகள் முடிந்து, மதிய உணவுக்குப் பிறகு பிரதிநிதிகள் நகரத் தொடங்கினர். இதனால், மூன்று நாள் சர்வதேச தமிழ் மாநாடு மேலே விவரிக்கப்பட்டபடி இரண்டரை நாட்களில் முடிக்கப்பட்டது.

மலேசியாவின் போட்டியாளர் கூற்று: சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில், கடந்த 7, 8, 9ம் தேதிகளில், உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சார்பில், 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தது[3]. அடுத்த மாநாட்டை, 2025ல் சிங்கப்பூரில் நடத்த திட்டமிட்டுள்ளனர்[4]. 1968ல் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற 2வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை விட, 11வது மாநாடு செம்மஞ்சேரியில் உள்ள ஆசிய ஆய்வுக் கழகத்தில் ஒரு கல்வி நிகழ்வாக நடைபெற்றது, என்று பொன்னவைக்கொ தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், ஏதோ நடத்த வேண்டுமே என்று நடத்தியாகி விட்டது. இதே ஜூலையில் இரண்டாவது சந்திப்பு. பெரும் ஆரவாரத்துடனும், பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்புடனும் நடைபெறும் என்று சொல்லப் படுகிறது. இந்த மாநாட்டுக்கு மாநில அரசிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஐஏடிஆர் உறுப்பினர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த அரசர் அருளாளரையும் அதிபராகத் தேர்ந்தெடுத்தனர். இதற்கிடையில், 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் ஜூலை 21 முதல் 23 வரை நடைபெறும் என பேராசிரியர் டி.மாரிமுத்து தலைமையிலான மற்றொரு குழு அறிவித்துள்ளது. அவர் இணைய யுகத்தில் தமிழ் மொழி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இதில் கவனம் செலுத்தப்படும் என்கிறார்.

© வேதபிரகாஷ்

11-07-2023

.


[1] தினமலர், சிந்துவெளி காலத்திலேயே இரும்பு பயன்பாட்டில் இருந்தது, பதிவு செய்த நாள்: ஜூலை 08,2023 01:54.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3369634

[3] தினமலர், நிறைவு பெற்றது உலக தமிழாராய்ச்சி மாநாடு, Added : ஜூலை 11, 2023  04:37

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3372482

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது–அதன் நிலைப் பற்றிய விவரங்கள் (6)

ஜூலை 11, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது அதன் நிலைப் பற்றிய விவரங்கள் (6)

அதிரடிகளுடன் ஆரம்பித்து அமைதியாக முடிந்த மாநாடு: சென்னையில் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி 3 நாட்கள் மாநாடு 7ம்தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. நடக்கிறது. இதில், 20 நாடுகளிலிருந்து 200 தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்றதாக சொல்லப் படுகிறது. ஆனால், வந்துள்ளவர்கள் ஏற்கெனவே பரிச்சயம் ஆனவர்கள் தாம். ஏதோ சுற்றுலாவுக்கு வந்தது போல வந்துள்ளனர்.. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் இதுவரை 10 மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் 7ம்தேதி தொடங்கி 9ம் தேதி வரை சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடக்கிறது. இது தொடர்பாக உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மு.பொன்னவைக்கோ, துணைத் தலைவர் இ.சுந்தரமூர்த்தி, மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜி. ஜான்சாமுவேல், பொதுச் செயலாளர் உலகநாயகி பழனி ஆகியோர் சென்னை பல்கலைக்கழகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது[1]: “மாநாட்டை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு..ஸ்டாலினிடம் அனுமதி கேட்டுள்ளோம். ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம்.மாநாட்டின் நிறைவு நாளில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன,” இவ்வாறு அவர்கள் கூறினர்[2]. ஆனால், முதலமைச்சர் வரவில்லை. பொதுவாக, இந்த மாநாடு நடப்பதே தெரியாமல் தான் இருக்கிறது.

ஆய்வுக்கட்டுரை வாசிப்பு பற்றிய விவரணம்: வழக்கம் போல[3], “உலகமெல்லாம் தமிழோசை பரவ வேண்டும் என்பது இந்த மாநாட்டின் மையப்பொருளாக உள்ளது. தமிழ்மொழி, இலக்கியம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டில், இந்தியாவில் இருந்து மட்டுமின்றி ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் பங்கேற்கின்றனர். தமிழின் தொன்மை, தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம், தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல், சமூகவியல், மொழி பெயர்ப்பியல், மொழியியல் என பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர். மொத்தம் 200 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. மாநாட்டில் புத்தகக் கண்காட்சி, நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மு.பொன்ன வைக்கோ, துணைத் தலைவர் .சுந்தரமூர்த்தி, மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜி.ஜான்சாமுவேல், பொதுச் செயலாளர் உலகநாயகி பழனி, டாக்டர் பத்மினி உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்,” என்று ஊடகங்களுக்குக் கொடுக்கப் பட்ட குறிப்பு கூறுகிறது[4].

பொன்.வைகோமாரிமுத்து பிரச்சினை: பொன்.வைகோ-மாரிமுத்து பிரச்சினை இன்னும் முடிந்த பாடில்லை போலிருக்கிறது[5]. “2019ல் சிகாகோவில் நடந்த 10வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது, நான் ஐஏடிஆர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், முந்தைய தலைவர் மாரிமுத்து தான் தலைவர் என்று கூறிக்கொண்டு மாநாட்டை நடத்த முயற்சிக்கிறார். அது செல்லாத ஒன்றாக இருக்கும்,” என்று பொன்னவைக்கோ மேலும் கூறினார்[6]. ஆக இங்கும் பதவி-போட்டி முதலியன இருக்கிறது போலும். இருப்பினும், இம்மாநாடு சிக்கல்களுடன், முராபாடுகளுடன் தான் நடக்கிறது. ஏற்கெனவே, ஜான் சாமுவேலுக்கும, ஜான் ஜேக்கப் என்பவருக்கும் பிர்ச்சினை இருக்கிறது[7]. சென்னையைச் சேர்ந்த, தாம்சன் ஜேக்கப் என்பவர், “பல குற்றங்களில் சிக்கியுள்ள ஜான் சாமுவேல் எப்படி இம்மாநாட்டை நடத்த முடியும்,” என்று சென்னை பல்கலை துணைவேந்தருக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்[8]. இதைப் பற்றியெல்லாம் தனியாக ஏற்கெனவே விளக்கி பிளாக் போட்டுள்ளேன். இப்படி, எல்லா நிலைகளிலும் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, கல்வி-நெறிமுறை, ஆராய்ச்சி முதலிய கோணங்களில் இவர்களால் எப்படிகவனத்தைச் செல்லுத்த முடியும். மேலும் கூட அரசியலையும் வைத்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

07-07-2023 – அரசியல்வாதிகள் அரசியல் பேசியது: துவக்க விழாவில், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், ”பைபிளில் வரும், சங்கீதக்காரர்களின் பண்புகள், தமிழர்களின் பண்புகளுடன் ஒத்து போகின்றன. எழுத்தாளர் டால்ஸ்டாய் தமிழ் மொழியை நேசித்தார். ”மதம் பரப்ப வந்த கிறிஸ்துவர்கள் கூட, தமிழை படித்து, வியந்து, தமிழுக்காக தொண்டு செய்துள்ளனர்,” என்றார். இவர் இப்படி ஏதோ கிருத்துவ பிரசங்கி போல பேசியது, பலருக்கு திகைப்பாக இருந்தது. பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஆர்.என். ‘சிலர்’ தமிழ் மொழியின் பெருமையை இழிவுபடுத்துகின்றனர் என்று ரவி முதலியோரையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் தமிழை போற்றுவது போல, தூற்றுகிறார்கள் என்றார். “தமிழ் மொழிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தமிழ் மொழியை சொந்தம் கொண்டாடுவதும், தமிழ் மொழிக்கு ஆதரவாக உயிர் தியாகம் செய்தவர்களை இழிவு படுத்துவதும் மாற்றுக் கருத்துகளை கூறி, இது போன்ற மாநாடுகள் (உலகத் தமிழாராய்ச்சி) அவசியம். இதுபோன்ற சதிகாரர்களிடம் இருந்து தமிழ் மொழியைக் காக்க மாநாடு நடத்தப்படும்” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அழைப்பிதழ்-1

மோடி எதிர்ப்பு- முதலியன இம்மாநாட்டிற்குத் தேவையா?: இரண்டு வருடங்களாக சண்டை, சச்சரவு, முரண்பட்ட அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரை சேகரிப்பு, பறிப்பு, முதலியன நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ்-என்ற பெயரில் மொழிப்பற்றையும் தாண்டிய நிலையில் செயல்பட்டு, பல ஆய்வுக் கட்டுரைகள் நிராகரிக்கப் பட்டன. ஆராய்ச்சி நெறிமுறை, தரம் எல்லாம் காற்றில் பறக்க விடப் பட்டன. முதலில் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டு, முழுகட்டுரையும் பெறப் பட்டு, பிறகு, “நேரமில்லை” என்று நிராகரிக்கப் பட்டுள்ளன. ஆனால், இந்த மூன்று நாட்களில் வாசிக்கப் பட்ட பெரும்பான்மையான கட்டுரைகளில் விசயமே இல்லாமல், அரைத்த மாவையே அரைத்துள்ளார்கள். இதற்குத் தான் இவ்வாளவு ஆர்பாட்டம் செய்துள்ளர்கள். போதாகுறைக்கு மைனாரிட்டி மந்திரி, கமிட்டி உறுப்பினர் என்றெல்லாம் அழைக்கப் பட்டு, அவர்கள் பிரதமந்திரி-கவர்னர் பற்றி பேசி, அரசியலாக்கினர். மாநாட்டின் தன்மையினையே கெடுத்தனர் எனலாம். இருப்பினும், மத அடிப்படைவாதியான ஜான் சாமுவேல் போன்றோர் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. இத்தகைய அரசியலால் இவர்களுக்கு என்ன பயன் கிட்டப் போகிறது என்று தெரியவில்லை.

மாநாட்டில் ஆராய்ச்சி போக்கு: உண்மையிலேயே தமிழுக்காக பாடுபடுகிறார்கள் என்றால், சரித்திர ஆதாரமில்லாத பழங்கதைகளை பேசாமல், ஆரிய-திராவிட இனவாத கட்டுக் கதைகள், முதலியவற்றை விடுத்து, ஆதாரங்களுடன் கட்டுரைகள் எழுதப் படவேண்டும். பாரதம் / இந்தியாவிலிருந்து ஏதோ தனியாக தோன்றியது போன்ற பொய்மைவாதங்களை விடுத்து, சங்க இலக்கியங்கள் சொல்வதையாவது வைத்துக் கொண்டு ஆராய வேண்டும். பெரியாரிஸம், நாத்திகம், இந்துவிரோதம், இந்தியவிரோதம், பிரிவினைவாதம் என்ற போக்கிலேயே ஆராய்ச்சிகள் நடந்தால், “குமரிக் கண்டம் போன்று” குறுகிய வட்டத்தில் அடைக்கப் பட்டு, மறைந்து விடும். இறையனாரு, நக்கீரரும், அப்பாதுரையும் கூட காப்பாற்ற முடியாது. இப்பொழுது கூட ஆய்வுக்கட்டுரை தொகுப்பு கொடுக்காமல், “குமரிக் கண்டம்” என்ற சிறு புத்தகம் கொடுக்கப் பட்டுள்ளது.     

© வேதபிரகாஷ்

11-07-2023


[1] மாலைமலர், சென்னையில் ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது: 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, By மாலை மலர், 6 ஜூன் 2023 12:53 PM.

[2] https://www.maalaimalar.com/news/state/7th-july-11th-world-tamil-research-conference-begins-in-chennai-618795

[3] தினகரன், 7ம்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது 11வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு: 200 தமிழறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்பு, July 5, 2023, 1:30 am

[4] https://www.dinakaran.com/3_days_from_7th_research_conference_participation_of_poets/

[5] Times of India, 55 years on, Tamil research conference returns to city, A Ragu Raman / TNN / Updated: Jul 7, 2023, 09:16 IST

[6] “During the 10th World Tamil Research Conference in Chicago in 2019, I was elected as the president of IATR. But, the previous president Marimuthu is still claiming that he is the president and trying to conduct the conference. It will be an invalid one,” Ponnavaikko added.

https://timesofindia.indiatimes.com/city/chennai/55-years-on-tamil-research-conference-returns-to-city/articleshow/101558597.cms?from=mdr

[7] தினமலர்,உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சீர்குலைக்க சதி?..,பதிவு செய்த நாள்: Added : ஜூன் 13, 2023  00:33; https://www.dinamalar.com/news_detail.asp?id=3346006

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3346006

உரிய கல்வி தகுதிகளை பூர்த்தி செய்யாமல் முனைவர் / பிஎச்.டி பட்டம் பெற்றது எப்படி?

ஜூலை 6, 2023

உரிய கல்வி தகுதிகளை பூர்த்தி செய்யாமல் முனைவர் / பிஎச்.டி பட்டம் பெற்றது எப்படி?

2023 ஜூலைஉதவி பேராசிரியர் முருகேசன் தொடுத்த வழக்கு: உரிய கல்வி தகுதி இல்லாதவருக்கு முனைவர் பட்டம் வழங்கியதாக எழுந்த புகார் குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை பல்கலைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்கலையில், தண்டபாணி என்பவர், ‘திருவாசக பக்தி கோட்பாடு’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி படிப்புக்கு சேர்ந்தார். இவருக்கு, உலகநாத நாராயணசாமி அரசு கல்லுாரி தமிழ் துறை உதவி பேராசிரியர் முருகேசன் என்பவர் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தண்டபாணி முனைவர் பட்டம் பெற்றார். அவர், உரிய கல்வி தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை என்பதால், அவரது முனைவர் பட்டத்தை திரும்ப பெற வேண்டும் என, சென்னை பல்கலைக்கு, உதவி பேராசிரியர் முருகேசன் கடிதம் எழுதினார். அதன் மீது நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

04-07-2023 நான்கு வாரங்களில் சென்னை பல்கலை அறிக்கை தாக்க நீதிமன்றம் உத்தரவு: வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, உதவி பேராசிரியர் முருகேசன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபீக் அடங்கிய அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு[1]: “சென்னை பல்கலை, 164 ஆண்டுகள் பழமையானது. முனைவர் படிப்புக்கு விண்ணப்பித்தவரின் தகுதியை சரிபார்க்க தவறியது, பல்கலையின் அக்கறையின்மையை காட்டுகிறது. தண்டபாணியின் தகுதியை ஆய்வு செய்யாமல், முனைவர் படிப்புக்கு சேர்த்தது, அதிர்ச்சி அளிக்கிறது. முனைவர் பட்டம் என்பது உச்சபட்ச கல்வி தகுதியாக கருதப்படும் நிலையில், அதை வழங்கும் கல்வி நிறுவனங்கள் மெத்தனப்போக்குடன் இருக்கக்கூடாது. கடின உழைப்பால் பட்டம் பெறக்கூடிய முனைவர்களை சந்தேகிக்கும் வகையில், பல்கலைகள் செயல்படுவதை சகித்துக் கொள்ள முடியாது. எனவே, மனுதாரர் முருகேசன் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் விசாரித்து, நான்கு வாரங்களில் சென்னை பல்கலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது[2].

2021ல் முன்னர் ஆண்டை விட இரு மடங்கு பதிவு ஆனது: பல்கலைக்கழகங்களில் உதவி பேராசியர் பணியிடங்களுக்கு முனைவர் படிப்பு கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ள நிலையிலும், அதிக வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படுவதால், சென்னை பல்கலைக்கழம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகளில் முனைவர் படிப்பிற்கு பதிவு செய்து உள்ளவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்து உள்ளது[3]. 2019ஆம் ஆண்டில் 406 என்ற அளவில் இருந்த பதிவு, 2021ஆம் ஆண்டில் 859 ஆக அதிகரித்து உள்ளது[4]. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ், 5 ஆயிரம் அறிஞர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

2022- இதழ்களில் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை: முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள், முன்னணி ஆய்வு இதழ்களில் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டும் என்ற விதிமுறை பல ஆண்டுகளாக அமலில் உள்ளது.ஆனால் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான ஆய்விதழ்களில் 75% மாணவர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதில்லை என்ற தகவலை ஆய்வின் மூலம் யுஜிசி கண்டறிந்துள்ளது[5]. மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐஐடி-களில் முனைவர் பட்டம் பயிலும் 2,573 மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் ஐஐடியில் முனைவர் பட்டம் பயிலும் சில மாணவர்கள் தரமான ஆய்விதழ்களில் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை தொடர்ந்து பிரசுரிப்பதும் யுஜிசி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் சமர்ப்பிப்பதன் வாயிலாக, பின்நாட்களில் காப்புரிமை பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பான்மையான ஆராய்ச்சி மாணவர்கள் தரமான ஆய்வு இதழ்களில் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதில்லை என்று தெரியவந்துள்ளதால் இந்த நடைமுறையை மாற்ற பல்கலைக்கழக மானியக் குழு முடிவெடுத்தது. அதன்படி, மாணவர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் சமர்ப்பிப்பது கட்டாயம் இல்லை என்று நாடு முழுவதும் விரைவில் புதிய விதிமுறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு முடிவெடுத்துள்ளது[6].

காசு கொடுத்து ஆய்வுகட்டுரை பதிப்பித்துக் கொண்டால் கிரிடெட் கிடைக்குமா?: அதாவது, ஆய்வுகட்டுரைகள் பதிப்பிக்க, ISBN, UGC care List என்றெல்லாம் எண்கள் வாங்கி வைத்துக் கொண்டு, ஒரு பேப்பருக்கு, ரூ.1000/- / 2000/- என்று வாங்கிக் கொண்டு, “International Journal………” என்றெல்லாம் பெயரை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வருகிறார்கள். இங்கிலீஷ் / ஆங்கிலம் தெரியாமல் கூட, காசு கொடுத்து, பேப்பர் எழுத வைத்து, பதிப்பித்துக் கொண்டு கிரிடெட் வாங்கிக் கொள்கிறார்கள். இத்தகைய ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இம்முறை கொண்டு வரப் படுகிறது. இதனால், போலி “International Journal………”-களுக்கு வழியில்லாமல் போய் விடும். உண்மையான ஆராய்ச்சி தன்மை, கட்டுரை எழுதும் நபர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆராய்ச்சியில் போலித் தன்மை வரும்பொழுது, எல்லா விதமான போலிகளும் வருகின்றன. காசு கொடுத்தால் வாங்கி விடலாம் என்ற நிலைமையும் வருகிறது.

2016-17 பிஎச்டி நிபுணர் குழு / ரிவீய்வு கமிட்டி/ சரிபார்த்தல் குழு: சென்னை பல்கலைக் கழகம் தமிழ்நாட்டில் மிக பழமை வாய்ந்ததாகும். இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பி.எச்.டி. டாக்டர் பட்டத்துக்கு ஆய்வு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்களில் பலர் ஆய்வு முடித்து வெளியேறுகிறார்கள். ஆனால், அவர்கள் செய்த ஆய்வு முறையாக நடக்கவில்லை. தரம் குறைந்த நிலையில் அவை உள்ளன என்று இப்போது தெரிய வந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பி.எச்.டி. ஆராய்ச்சிகள் எப்படி நடைபெற வேண்டும் என்று பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அவற்றை சென்னை பல்கலைக்கழகம் முறையாக பின்பற்றவில்லை. மாணவர்கள் சமர்ப்பிக்கும் பி.எச்.டி. ஆராய்ச்சி கட்டுரைகளை (திசிஸ்) வெளி பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழக பேராசிரியர்களை கொண்ட நிபுணர் குழு ஆய்வு செய்வது வழக்கம். அவ்வாறு 2016-17-ம் கல்வி ஆண்டில் பி.எச்.டி. முடித்து சமர்ப்பித்த 600 ஆய்வு கட்டுரைகளை இந்த நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது.

முறைப்படி ஆராய்ச்சி நடக்கவில்லை, அறிக்கை சமர்ப்பிக்கப் படவில்லை: இந்த குழுவில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களை சேர்ந்த நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் இதுவரை 100 கட்டுரைகளை ஆய்வு செய்து முடித்துள்ளனர். அவற்றில் பல கட்டுரைகள் முறையாக ஆய்வு செய்து தயாரிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. மேலும் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் ஆய்வு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. படிப்பவர்களை ஆய்வு செய்வதற்காக டாக்டரல் கமிட்டி என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும். அதில் 3 பேராசிரியர்களும், ஒரு துறை சார்ந்த நிபுணரும் இருப்பார்கள். அவர்கள் குறிப்பிட்ட காலவரையரையில் அந்த மாணவர்களின் தரத்தை ஆய்வு செய்வார்கள். பி.எச்.டி. ரெகுலர் படிப்பில் இருப்பவர்களை 6 மாதத்துக்கு ஒரு தடவையும், பகுதி நேர படிப்பில் இருப்பவர்களை ஆண்டுக்கு ஒரு முறை அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வை முடித்து அவர்கள் அறிக்கையும் தர வேண்டும்.

நிபுணர் குழு பல்வேறு குறைபாடுகள் இருப்பதை கண்டுபிடித்தது: ஆனால், சென்னை பல்கலைக்கழகத்தில் டாக்டரல் கமிட்டி முறையான ஆய்வுகளை செய்யவில்லை. பல மாணவர்கள் டாக்டரல் கமிட்டி ஆய்வு செய்யாமலேயே தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து இருக்கிறார்கள். ஆராய்ச்சி கட்டுரைகளை 3 வெளி பேராசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அதில் ஒருவர் வெளி பல்கலைக்கழகத்தை சேர்ந்தவராகவும், மற்றொருவர் வெளி மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்தவராகவும், இன்னொருவர் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை நிவர்த்தி செய்ய சொல்வார்கள். அந்த விதிமுறைகளும் சரியாக பின்பற்றப்படவில்லை. இவ்வாறு பல்வேறு குறைபாடுகள் இருப்பதை நிபுணர் குழு கண்டுபிடித்துள்ளது.

மேற்பார்வை சரியாக நடக்கவில்லை: சென்னை பல்கலைக் கழகத்தில் 2016 ஜனவரி முதல் 2017 வரை மே வரை துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. இதனாலும் பல்வேறு குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக துணை வேந்தர் துரைசாமியிடம் கேட்டபோது, பி.எச்.டி. படிப்பவர்கள் குறைந்தது 2 ஆய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டும். தேசிய மாநாடுகளில் 4 ஆண்டுக்குள் பங்கேற்க வேண்டும். 5-வது ஆண்டில் டீன் அல்லது மூத்த பேராசிரியர்கள் டாக்டரல் கமிட்டியில் இடம்பெற்று இருப்பார்கள். மாணவர்களின் ஆய்வு செயல்பாடு சரியில்லை என்றால் அவர்களை படிப்பை விட்டு செல்லும்படி அறிவுறுத்தப்படுவார்கள் என்று கூறினார். நிபுணர் குழு ஆய்வு குறித்து மூத்த பேராசிரியர் ஒருவர் கூறும் போது[7], “300 பக்கங்கள் கொண்ட ஒரு பி.எச்.டி. ஆய்வு கட்டுரையை முறையாக ஆய்வு செய்வதாக இருந்தால் 3 மாதங்கள் வரை ஆகும். ஆனால், நிபுணர் குழுவினர் சில கட்டுரைகளை ஒரு வாரத்தில் ஆய்வு செய்து முடிவை சொல்லி இருக்கிறார்கள். சில கட்டுரைகளை ஒரு நாளிலேயே ஆய்வு செய்து முடிவை கூறி இருக்கிறார்கள். இது, கேலிக்கூத்தாக உள்ளது,” என்று கூறினார்[8].

© வேதபிரகாஷ்

05-07-2023


[1] தினமலர், உரிய கல்வி தகுதியின்றி முனைவர் பட்டம் அறிக்கை தர சென்னை பல்கலைக்கு உத்தரவு, Added : ஜூலை 05, 2023  02:12

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3366772

[3] டைம்ஸ்.ஆப்.இந்தியா, சென்னைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் (PhD) படிப்பிற்கான பதிவு இரண்டு ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரிப்பு, Feb 8, 2022, 18:12 IST

[4] https://timesofindia.indiatimes.com/tamil/phd-registrations-in-madras-university-double-in-2-years/articleshow/89432150.cms

[5] தினத்தந்தி, பி.எச்.டி. மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் பிரசுரிக்க கட்டாயம் இல்லைபல்கலை. மானியக் குழு, தினத்தந்தி, Sep 28, 1:59 pm (Updated: Sep 28, 4:16 pm)

[6] https://www.dailythanthi.com/News/State/phd-students-are-not-required-to-publish-research-papers-in-research-journals-university-grant-committee-802885

[7] மாலைமலர், சென்னை பல்கலைக்கழகத்தில் தரமில்லாத பி.எச்.டி. – ஆய்வு நிபுணர்குழு சோதனையில் கண்டுபிடிப்பு, Byமாலை மலர்25 பிப்ரவரி 2018 4:56 PM (Updated: 25 பிப்ரவரி 2018 4:56 PM).

[8] https://www.maalaimalar.com/news/district/2018/02/25165654/1147704/Substandard-PHD-study-at-Madras-University.vpf