Archive for the ‘சனாதனம்’ Category

புத்தகங்களிலிருந்தும் சனாதனத்தை நீக்குவோம் – கல்வி அமைச்சரின் அறிக்கை அரசியலா, படிப்பிலும் மூக்கை நுழைக்கும் போக்கா, கல்வித்துறை சீரழியும் பாதைக்கு செல்கிறதா?

செப்ரெம்பர் 27, 2023

புத்தகங்களிலிருந்தும் சனாதனத்தை நீக்குவோம் – கல்வி அமைச்சரின் அறிக்கை அரசியலா, படிப்பிலும் மூக்கை நுழைக்கும் போக்கா, கல்வித்துறை சீரழியும் பாதைக்கு செல்கிறதா?

சனாதன பற்றிய சர்ச்சை: சனாதனம் குறித்து இடம்பெற்றுள்ள பள்ளி பாடப்புத்தகம் அடுத்தாண்டு மாற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இப்பொழுது 26-09-2023 அன்று அறிவித்துள்ளார். இம்மாதம் முதல் வாரத்திலிருந்து, உதயநிதி பேசிய இந்துவிரோத, சனாதன ஒழிப்புப் பேச்சு, தமிழகம் மற்றுமல்லாது, இந்தியா முழுவதும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. ஒரு பக்கம், உதயநிதிக்கு ஒன்றும் தெரியாது, உளறியிருக்கிறார் போன்ற கருத்தை வெளிப்படுத்தினாலும், தொடர்ந்து அவர் பேசி வருவது, பல நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. சென்னையில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி [02-09-2023] நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மலேரியா, டெங்கு போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளது தெரிந்த விசயமே. இது நாடு முழுவதும் பெரும் எதிர்வினையை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்து அமைப்பினர் மற்றும் பாஜக கடுமையான கண்டன கணைகளை வீசனர். போலீஸில் புகார், நீதிமன்றங்களில் வழக்குகள் என்றும் நிலுவையில் உள்ளது.

தமிழக அரசின் பாடபுத்தகத்தில் சனாதனத்தைப் பற்றிய விளக்கம் காணபடுகிறது: இந்நிலையில், 12 ஆம் வகுப்பு அறவியலும் இந்தியப் பண்பாடும் என்ற புத்தகத்தில் 58 ஆவது பக்கத்தில் சனாதனம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது[1]. இந்தியப் பண்பாடும் சமயங்களும் என அமைந்த பாடத்தில் இந்து என்னும் சொல்லின் பொருள் என கொடுக்கப்பட்ட பத்தியில் சனாதனம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது[2]. அதில், “இந்து அல்லது ‘ஹிந்து’ என்ற சொல்லை ஹிம்+து எனப்பிரிக்கலாம்[3]. ஹிம் – ஹிம்சையில், து–துக்கிப்பவன் எனப் பொருள்படும்[4]. ஓர் உயிர் எந்த காரணத்தினாலாவது துயரப்படுவதாக இருந்தால், அத்துயரத்தைத் தனக்கேற்பட்ட துயரமாகக் கருதி, அகற்ற முன் வருபவனே இந்து ஆவான். அப்பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும். இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

சனாதன தருமம்‘, வர்ணாசிரம தர்மம் முதலியன:  ‘சனாதன தருமம்‘ என்றால் ‘அழிவில்லாத நிலையான அறம்’ எனப்படும். இது வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால் ’வேத சமயம்’ என்றும், வேதநெறிகளையும் சாத்திரங்களையும் மையமாகக் கொண்டுள்ளதால் வைதீக சமயம் எனவும் அழைக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 59 ஆவது பக்கத்தில் இந்து தர்மம் எனும் தலைப்பில் சமூகக் கடமைகள் (வர்ணாசிரம தர்மம்) எனும் உபதலைப்பில், “இந்துசமயம் ஒவ்வொரு மனிதனும் அவன் சார்ந்துள்ள சமூகத்திற்கெனச் சில கடமைகளை ஆற்றவேண்டும் எனக் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையில் சமூகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவையாவன பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆவார். இவை சமூகத்திற்கான தொழில் கடமைகளேயாகும். இவற்றில் உயர்வு தாழ்வு கிடையாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் வெளியிடப் பட்டது, ஆனால் 2023லும் தொடர்கிறது: இத்தகைய வாக்கியங்கள் 2019ல் வெளியான முதல் பதிப்பிலும், அதனைத் தொடர்ந்து வெளியான 2020 மற்றும் 2022 திருத்தப்பட்ட பதிப்புகளிலும் இடம்பெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் முதல் பதிப்பு வெளியாகி இருப்பினும் கடைசியாக வந்துள்ள பதிப்பின் போது ஆட்சியில் இருந்தது திமுக என்பது குறிப்பிடத்தக்கது. திமுக அரசும் தமிழக அமைச்சர்களும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருகையில் அரசின் பாடத்திட்டத்தில் சனாதன தர்மம் என்பது அழிவில்லாத நிலையான அறம் என குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதை பிஜேபி தலைவர் அண்ணாமலை எடுத்துக் காட்டினார்[5]. பாட புத்தகத்தில் அண்ணாமலை குறிபிட்ட சனாதன தர்மத்தை பற்றிய வரிகள் அடுத்த கல்வியாண்டில் நீக்கப்படும். சுட்டிக்காட்டிய அண்ணாமலைக்கு நன்றி, என்று. – தமிழ்நாடு பாடநூல் தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்[6].

சனாதனம் என்றால் என்ன? –பள்ளி புத்தகத்தில் சனாதன பாடம்: தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளி பாடநூலில் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு இரண்டு வாரங்களுக்கு முன்னர் மேலெழுந்திருந்தது சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் பேசிய நிலையில், அரசு வெளியிட்ட பள்ளி புத்தகத்தில் சனாதனம் குறித்த பாடம் இருந்தது பெரும் விவாதப் பொருளானது. 12 ஆம் வகுப்பிற்கான “அறிவியலும் இந்தியப் பண்பாடும்” என்னும் புத்தகத்தில் வேதகால பண்பாடு என்னும் பாடத்தில் சனாதனம் குறித்து பாடம் இடம்பெற்றுள்ளது. 12 ஆம் வகுப்பிற்கான பாடப்புத்தகத்தில் சனாதனம் என்றால் என்ன? என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்து மதம் என்பதை சனாதனம் என்று கூறுவாரும் உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சனாதனம் என்றால், அழிவில்லாத அறம் என்று பொருள் என 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அதிமுக காலத்தில் பாடப்புத்தகத்தில் இருந்து சனாதனம் திமுக காலத்தில் தொடர்ந்தது ஏன்?: ஏற்கெனவே பாடபுத்தகத்தில் உள்ளது என்றால், அதற்கான ஆசிரியர் குழு உட்கார்ந்து, படித்து, பிறகு தான் எழுதியிருப்பார்கள். அந்நிலையில், நாளைக்கு அவர்களும் தாங்கள் எழுதியது சரியானது தான் என்று ஆதாரங்களைக் காட்டலாம். எனவே இவற்றையெல்லாம் மீறி, திமுக அரசு செயல்படுமா என்று கவனிக்க வேண்டும். சோஷியல் மீடியாக்களில் இது தொடர்பான வாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், “இந்த புத்தகம் கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் அச்சடிக்கப்பட்டது[7]. எனவே தமிழக அரசு இதனை மாற்ற வேண்டும்” என்றும் கோரிக்கைகள் எழுந்தன[8]. யார் கோரிக்கைகளை வைத்தனர், அவர்கள் என்ன பாடத்தை எழுதியவர்களை பெரிய ஆசிரியர்களா, பண்டிதர்களா என்பதை சரிபார்க்க வேண்டும். தமிழ்நாடு அமைச்சர்களும் சனாதன எதிர்ப்பில் உறுதியாக இருக்கின்றனர்[9], என்று சில ஊடகங்கள் எழுதி வந்தாலும், ஸ்டாலின் இதைப் பற்றி பேசவில்லை. மாறாக, டி.ஆர்.பாலு கண்டித்திருக்கிறார்.

பாடப்புத்தகத்தில் இருந்து சனாதனம் நீக்கம்?: இந்நிலையில் சென்னையில் தமிழோடு விளையாடு என்ற தமிழ் மொழி விளையாட்டு நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்[10]. அப்பொழுது ஊடகத்தினர் இப்பிரச்சினையை எழுப்பினர்[11]. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடப்புத்தகம் மாற்றப்படுகிறது என்றார்[12]. அதன்படி, கடந்த 2018 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புத்தகத்தில் சனாதனம் குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது என்று கூறினார்[13]. அதாவது, வழக்கம் போல முந்தை அரசு என்ற பாணியில் பேசியுள்ளது தெரிகிறது[14]. அடுத்தாண்டு இந்த புத்தகங்கள் மாற்றப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 2018ல் கொண்டு வரப் பட்டது என்றால், 2023ல் மாற்றப் பட்டிருக்க வேண்டும். ஆனால், மாற்றப் படவில்லை. அதாவது, அபொழுது அத்தகைய எண்ணமும் இல்லை, திட்டமும் இல்லை. இப்பொழுது, அரசியல் ஆகப்ப்பட்டு விட்டதால், அத்தகைய நிலை வலுக்கட்டாயமாக எழுப்பப் பட்டுள்ளது. இருப்பினும், அவ்வாறு பாடங்களை மாற்ற முடியுமா என்ற கேள்வியும் எழுகின்றது. உரிய கல்வியாளர்கள், அறிஞர்கள் தலையிட்டு இத்தகைய முயற்சிகளைத் தடுக்க வேண்டும், என்.சி.ஆர்.டி பாடங்களை மாற்றுகிறது என்றால், எதிர்ப்பு தெரிவிக்கப் படுகிறது. இப்பொழுது என்னாகும் என்று கவனிக்க வேண்டும்.  

© வேதபிரகாஷ்

27-09-2023


[1]  புதியதலைமுறை, 12ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சனாதனம்; சுட்டிக்காட்டி சேகர்பாபு,உதயநிதிக்கு அட்வைஸ் சொன்ன அண்ணாமலை!,  Angeshwar G, Published on : 12 Sep 2023, 8:41 pm.

[2] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/texts-about-sanathanam-in-12th-lesson-annamalai-advised-udhayanidhi

[3] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Sanathanam: ‘சனாதனம் என்றால் அறம்!’ அரசின் பாடபுத்தகத்தால் வெடித்தது சர்ச்சை!, Kathiravan V • HT Tamil, Sep 12, 2023 04:04 PM IST.

[4] https://tamil.hindustantimes.com/tamilnadu/controversy-over-tamil-nadu-governments-textbook-on-sanathanam-131694514389887.html

[5] ஆசிரியர்.3,சனாதன தர்மத்தை பற்றிய வரிகள் அடுத்த கல்வியாண்டில் நீக்கப்படும்தமிழ்நாடு,  asiriyar3  September 15, 2023  TEXT BOOKS,

[6]  http://www.asiriyar.net/2023/09/blog-post_15.html

[7] தமிழ்.நியூஸ்.18, பாடப்புத்தகத்தில் இருந்து சனாதனம் நீக்கம்? – அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு, First published: September 26, 2023, 21:41 IST;  LAST UPDATED : SEPTEMBER 26, 2023, 21:49 IST.

[8] https://tamil.news18.com/tamil-nadu/sanathanam-syllabus-in-school-book-will-change-next-year-1171913.html – gsc.tab=0

[9] தமிழ்,ஒன்.இந்தியா, தமிழக பாடபுத்தகத்தில் சனாதன கருத்துக்கள்.. எப்போது மாற்றப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம், By Halley Karthik, Published: Tuesday, September 26, 2023, 19:38 [IST]

[10] https://tamil.oneindia.com/news/chennai/minister-anbil-mahesh-has-said-that-sanatana-concepts-in-textbooks-will-be-removed-next-year-542665.html

[11] மின்னம்பலம், சனாதனம் குறித்த பாடம் நீக்கப்படுமா? – அன்பில் மகேஷ் பதில்,செப்டம்பர்.27, 2023. 10.03

[12] https://minnambalam.com/political-news/lesson-about-sanathanam-is-removed-anbil-mahesh/

[13] தமிழ்.எக்ஸாம், தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம்அமைச்சர் அறிவிப்பு!, By Sivarangani -September 27, 2023.

[14] https://tamil.examsdaily.in/tamilnadu-school-students-syllabus-changed-from-next-year/

அரசியல்

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது – திருமாவளவன் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு ! (4)

ஜூலை 26, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது – திருமாவளவன் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு ! (4)

3-R, RRR, பற்றி மலேசிய முதல்வர் உறுதியாக இருக்கிறார்: மலேசிய பிரதமர் [3-R, RRR, Religion, Race, Royalty] விசயங்களில் யாரும் மற்றவர்களை தாழ்வாகப் பேசக் கூடாது என்று உறுதியாக இருக்கிறார், அதை பலமுறை எடுத்தும் காட்டியுள்ளார். ஆகையால், துவேசப் பேச்சுகளுக்கு மலேசியாவில் இடமில்லை. அந்நிலையில், நாத்திகம், பகுத்தறிவு, பெரியாரிஸம் என்று இதுவரை பேசி வந்தவர்களுக்கு இனி மலேசியாவில் அவ்வாறு பேச முடியாத நிலை உருவாகியிருக்கிறது. மொழி என்று வைத்துக் கொண்டாலும், அதை வைத்து முன்னேற வழிவகுக்க வேண்டுமேயன்றி, மொழிவெறியாக்கி, அதனை மதம், சித்தாந்தம், அரசியல் இவற்றுடன் சேர்த்து பிரச்சினை உண்டாக்கலாகாது. என்ன வேண்டுமானாலும்பேசி, நாத்திகம், பகுத்தறிவு, பெரியாரிஸம் என்று தப்பித்துக் கொள்ள முடியாது. மற்றவர்களின் உணர்வுகளை, உரிமைகளை மதித்தாக வேண்டும். இதனால், அத்தகைய சித்தாந்திகள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை உண்டாகியுள்ளது.

அரசியல்வாதிகள் பிஜேபி-எதிர்ப்பை இந்துதுவேசமாக மாற்றுவது: தமிழகத்தை சேர்ந்த பாஜக எதிர்ப்பு நிலை அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் தற்போது பெரும் சிக்கலை இந்தியாவில் எதிர்கொள்வது மட்டுமல்ல உலக தமிழர்கள் இடையேயும் எதிர்கொண்டு இருப்பது பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. பிஜேபி-எதிர்ப்பு பெரும்பாலான நிலைகளில் இந்துவிரோதமாகி, இந்து துவேசமாகி, வெறுப்புப் பேச்ச்களில் முகின்றன. இங்குதான் சட்டமீறல்களும் வருகின்றன. புகார்கள் கொடுக்கப் பட்டு வழக்குகள் பதிவான்றன.ஆனால், தங்களது அரசியல் ஆதிக்கம் மூலம், அப்படியே அமுக்கப் பட்டு, தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால், இப்பொழுது மக்களுக்கு விழிப்புணர்வு வந்து விட்டது. செக்யூலரிஸ அரசாங்கம் எனும்பொழுது, அவ்வாறு ஏன் இந்துமதத்திற்கு மட்டும் விரோதமாக பேசி வருகிறார்கள் என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். தொடர்ச்சியாக வீரமணி, திண்டுக்கல் லியோனி அவரை தொடர்ந்து திருமாவளவன் ஆகிய மூவரும் அடுத்தடுத்து குறிப்பிட்ட கால இடைவேளையில் மலேஷிய தமிழர்கள் இடையே எதிர்ப்பை சந்தித்து இருப்பது அதன் பின்னணியில் என்ன என்ற தகவல்தான் தற்போது ஒட்டுமொத்த திராவிட ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

2019ல் திக- வீரமணி நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டது: 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24 -ம் தேதி திராவிட கழக தலைவர் வீரமணி தலைமையில் மலேஷியாவில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது அப்போது தொடர்ச்சியாக இந்து மதத்தை விமர்சனம் செய்யும் வீரமணி மலேஷியாவில் கால் வைக்க கூடாது எனவும், அப்படி வைத்தால் மத மோதல் உண்டாகும் எந்த மதத்தையும் தவறாக பேசாத மலேஷிய மக்கள் வாழும் இடத்தில் வீரமணி வந்தால் ஒற்றுமை குறையும் என மலேசியா உள்துறை அமைச்சகத்தில் இந்து தர்ம சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட உடனடியாக வீரமணி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை திராவிட சித்தாந்தம் பேசுவோருக்கு உண்டாக்கியது, இதையடுத்து மலேஷியா சென்ற திண்டுக்கல் லியோனி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்ட நேரத்தை கடந்து உள்ளே வர  அவரை வாசலில் நிற்க வைத்து மலேஷியா தமிழர்கள் வெளுத்து வாங்கினர், தமிழ்நாட்டில் இருந்து வாய் கிழிய ஊருக்கு மேடை மேடையில் நின்று கொண்டு உபதேசம் செய்வது ஆனால் நேரில் பார்த்தால் உங்கள் லட்சணம் தெரிகிறது? குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்றால் நீங்கள் எதற்கு மலேஷியா வருகிறீர்கள் என வெளுத்து வாங்கினர்[1]. அந்த வீடியோ இணையத்தில் TNNEWS24 வெளியிட பெரும் பரபரப்பு தமிழகத்தில் உண்டானது இதையடுத்து திண்டுக்கல் லியோனி விளக்கம் கொடுக்கும் நிலைக்கு சென்றது தமிழக அரசியல் சூழல்[2].

2023ல் திருமாவின் பேச்சிற்கு பலத்த எதிர்ப்பு: இந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய தாக்கம் ஓய்வதற்குள் சில நாட்கள் முன்னர் திருமாவளவன் மலேஷியாவில் பேச சென்று கடும் எதிர்ப்பை சந்தித்து வந்து இருக்கிறார் அதிலும் மதம் குறித்து திருமாவளவன் பேச நிறுத்துடா என கிளம்பிய எதிர்ப்பு பெரும் பின்னடைவை திருமாவளவனுக்கு கொடுத்து இருக்கிறது. திருமாவளவன் மேடையில் பேசும் போது “தமிழ்த் தேசியம் என்பது மொழி, இன உணர்வு மட்டுமல்ல. அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டம்.” என்றார். “மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான். அவற்றைக் கடந்து தேசிய இனம் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மதம் அடையாளத்தை விட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது.” என்றும் அவர் கூறினார். அப்போது மதம் குறித்து திருமாவளவன் பேசியதற்கு அரங்கில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மேடையில் இருந்து பாதியில் கிளம்பினார் திருமாவளவன்.

திருமாவின் சனாதனம் புரிதல் தவறானது: அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தனது வீடியோ பேட்டியில், அருமையாக திருமாவளவனின் பேச்சைக் கண்டித்து விளக்கம் கொடுதுள்ளார். “அவருடைய கருத்தே தவறானது. வெறுப்பு பிரச்சாரம் கூடாது என்பது ஏற்கத்தக்கது. ஆனால் அதே வெறுப்புப் பேச்சை, கடல்கடந்து வந்து ஒருமதத்திற்கு எதிராக தொடர்ந்து பேசுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவருடைய அரசியல்-கட்சி சித்தாந்தத்தை தமிழாராய்ச்சி மாநாட்டில் பேசுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். சனாதனம் என்றால் அவருக்குப் புரியவில்லை என்பது தான் எனது கருத்து. சனாதனம் என்பது நாங்கள் புரிந்து கொண்டது அனைவரும் சமம். அனைவருக்கும் பொதுவானது இப்பூமி.., எல்லோரும் இறைவனின் குழந்தைகள் தான். எல்லோரும் ஒரு தருமம், அறத்தின் அடிப்படையில் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது தான்  நாங்கள் புரிந்து கொண்ட சனாதனம். நாங்கள் புரிந்து கொண்ட இந்து சமயம். பக்தி மார்க்கத்துடன் நாங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர் இங்கு வந்து ஒரு தவறான கருத்தை, தவறான இடத்தில், தவறான நோக்கத்தில் முன்வைத்ததை நாங்கள் ஏற்கமுடியாது. அதற்கு இங்கு மலேசியாவிலேயே பெருங்கண்டனம் உருவாகியுள்ளது. அவர் தமிழ்நாட்டில் என்ன அரசியலையும் செய்து கொள்ளட்டும், ஆனால், இங்கு இனிமேல் வந்தால் அத்தகைய வெறுப்பு அரசியல் உமிழவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்….பாலியிலும் இந்துக்கள் இருக்கிறார்கள் அங்கெல்லாம் ஜாதியம் இல்லை. இந்தியாவில் அரசியல்வாதிகளால் தான் அது ஊக்குவிக்கப் படுகிறது. எனவே இந்திய அரசியலை இங்கே கொண்டு வரவேண்டாம் என்று விளக்கினார்.  மலேசியாவில் இருக்கும் தமிழர்கள் எல்லோருமே ஒன்றாக, ஒரே குடும்பம் போல, ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றாம். இங்கு [தமிழக] அரசியல் மற்றும் மதம் ரீதியில் எந்த பிரசினையும் தேவையில்லை. அது அவருடைய கருத்தாக இருக்கலாம், ஆனால், எங்களுக்கு உடன்பாடு இல்லை. அவ்வாறு அவர் [ஒரு மதத்திற்கு எதிராகப்] பேசியிருக்கக் கூடாது.

முனைவர் ராஜேந்திரனின் விளக்கம்: இதே போல முனைவர் ராஜேந்திரனும் அருமையான விளக்கம் அளித்துள்ளார்[3]. “ஒரு நாட்டுக்கு செல்லும்போது அந்நாட்டின் பாரம்பரியம் என்ன, அங்குள்ள சிக்கல்கள் என்ன என்பதை புரிந்து கொண்டு செயல்படுவது தான், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்என்பது. இந்த மாநாட்டில் பேசிய, 99.99 சதவீத வெளிநாட்டவர்கள் அதை கடைபிடித்தனர். ஆனால், ஒரு சிலர் மதத்தை தாழ்த்தி பேசுகின்றனர். மலேஷியாவை சேர்ந்த ஒருவர், எங்கள் மதத்தை பற்றி இழிவுபடுத்தி பேசுகின்றனர் என, காவல்துறையில் புகார் அளித்திருந்தால், அப்படி பேசியவர்கள் வீடு திரும்பியிருக்க முடியாது. மலேஷிய சிறையில் தான் இருந்திருக்க வேண்டும். மலேஷியாவில் மதம், நாடு, இனம் பற்றி தவறாக பேசுபவர்களுக்கு, இம்மியளவும் இடம் கொடுக்க மாட்டோம் என, பிரதமர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள நண்பர்கள் அங்கே உள்ள அரசியல் குப்பைகளை வந்து இங்கே கொட்ட வேண்டாம். அனைவருக்கும் பொதுவான தமிழை எப்படி மேம்படுத்துவது பற்றி மட்டுமே பேச வேண்டும். மாறாக அரசியல், மதம் பற்றி பேசினால் விபரீதமான விளைவுகள் ஏற்படும்,” இவ்வாறு அவர் பேசினார்[4].

அரசியல் தவித்திருந்தால் மாநாடு நன்றாக இருந்திருக்கும்: அன்று அரங்கத்தில் இருந்தவர்களுள் யாரும் புகார் அளிக்கவில்லை, அப்படி புகார் செய்திருந்தால், அவர்கள், [திருமாவளவன்] வீடு திரும்பியிருக்க முடியாது,…சிறையில் இருந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் எடுத்துக் காட்டினார். மூன்று 3 R-களைத் தொடவே கூடாது, பிரதமர் இதன் மீது கைவைத்தால், இம்மி அளவு கூட இடம் கொடுக்க மாட்டேன் என்று பலமுறை சொல்லியிருக்கிறார், நேற்றும் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் இருந்த நண்பர்கள் பெரிய ஆட்களாக இருக்கலாம், பிரச்சினைகள் இருக்கலாம், ஆனால், அங்கிருந்து வந்து குப்பைகளை இங்கு கொட்டவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இங்கு தமிழை எவ்வாறு உயர்த்தலாம், பெரிய அளவில் எடுத்துச் செல்லலாம் என்பது பற்றி பேச வேண்டும். அதை விடுத்து அரசியல் பேசுவது அந்த அளவுக்கு பொருத்தமாக இருக்காது.. இப்படி தொடர்ச்சியாக மலேஷியா தமிழர்கள் இந்து மதம் குறித்து நேரடியாக அல்லது மறைமுகமாக விமர்சனம் செய்யும் நபர்களை சுளுக்கு எடுத்து அனுப்புவதால் அவர்கள் “குட்டி மோடி ரசிகராக மாறி விட்டார்கள்” என்று TNNEWS24 குறிப்பிட்டாலும், அங்கிருப்பவர்களுக்கும் இந்து என்ற உணர்வு இருக்கத்தான் செய்யும். போதாத குறைக்கு இலங்கை தமிழர்களும் மோடிக்கு ஆதரவாக பேச தொடங்கி இருப்பதால் தமிழகத்தில் இருந்து இனி மலேஷியா பயணமே வேண்டாம் என முக்கிய அமைச்சரான இளம் வாரிசு தொடங்கி பலரும் முடிவு செய்து விட்டார்களாம் என்று TNNEWS24 கூறுகிறது.

© வேதபிரகாஷ்

26-07-2023


[1] மலேசியா, மலேசியாவா வேண்டவே வேண்டாம் சாமி தெறித்து ஓடும் முக்கிய அமைச்சர்கள்…!, BY WEB TEAM,  JULY 25, 2023.

[2] https://www.tnnews24air.com/posts/Malaysia-dont-ask-for-Sami–important-latest-tamil-current-update

[3] தினமலர், தமிழக அரசியல் குப்பையை மலேஷியாவில் கொட்ட வேண்டாம் திருமாவளவன் பேச்சுக்கு எதிர்ப்பு, மாற்றம் செய்த நாள்: ஜூலை 26,2023 05:48

,https://m.dinamalar.com/detail.php?id=3386470

[4] https://m.dinamalar.com/detail.php?id=3386470