Archive for the ‘பல்கலைக்கழக ஊழல்’ Category

பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.ஏ., முடித்தவர்கள் சரித்திரம் – வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது–பிரச்சினை, பின்னணி என்ன? (2)

ஏப்ரல் 14, 2024

பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.., முடித்தவர்கள் சரித்திரம்வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது பிரச்சினை, பின்னணி என்ன? (2)

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொல்லியல் துறை: கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொல்லியல் துறைக்கு அடித்தளமிட்டவர் 1911இல் துணைவேந்தராக இருந்த அசுதோஷ் முகர்ஜி. இங்கு கற்கால வரலாறு, கல்வெட்டு, நாணயவியல், கட்டிடக்கலை, சிற்பக்கலை எனத் தொல்லியலோடு தொடர்புடைய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்தியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான சென்னைப் பல்கலைக்கழகம் 1961 முதல் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் படிப்பை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட நிலையில் வழங்கிவருகிறது. கற்கால வரலாறு, தொல்லியல் அகழாய்வு நெறிமுறைகள், கட்டிட, சிற்பக்கலை, கல்வெட்டுக்கள் பற்றிய பாடப்பிரிவு, நாணயவியல், அருங்காட்சியகவியல், ஆழ்கடல் ஆய்வுகள் தொடர்பான பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் முறையான அகழாய்வுப் பயிற்சி வழங்கப்படுகிறது.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் முதலியன: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைத் தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், ஆழ்கடல் ஆய்வுத்துறை, கட்டிடக்கலைத் துறை எனத் தொல்லியல் சார்ந்த அனைத்துப் பாடப்பிரிவுகளையும் வழங்குகிறது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஓராண்டு தொல்லியல், கல்வெட்டியல் பட்டயப் படிப்பையும், பண்டைய வரலாறு, தொல்லியல் பாடத்தில் முனைவர் பட்டத்தையும், ஆறு மாத தொல்லியல் பொருட்கள் பாதுகாப்பு தொழில்நுட்பம் சார்ந்த சான்றிதழ் படிப்பையும் வழங்குகிறது. சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஓராண்டு கவ்வெட்டியல்பாடத்தை வழங்குகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இரண்டு வருட தொல்லியல் படிப்பை உதவித் தொகையுடன் வழங்குகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகை அவர்கள் மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள மிகப் பெரிய வாய்ப்பாக அமையும்.

மற்ற கல்வி நிறுவனங்கள்: பல்கலைக்கழகங்கள் தவிர்த்துப் பல கல்லூரிகள் தொல்லியல் பாடத்தை இளங்கலை, முதுகலை அளவிலும் வழங்குகின்றன. நாகப்பட்டினத்தில் உள்ள பூம்புகார் கல்லூரி ஓராண்டு கட்டிடக்கலை, சிற்பக்கலை பாடப்பிரிவில் இந்தியாவில் இருந்த பல்வேறு கட்டிடக்கலை அமைப்புகளை விளக்கும் வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மாமல்லபுரத்தில் உள்ள கட்டிட, சிற்பக்கலை கல்லூரியும் மாணவர்களுக்கு இளங்கலையில் நுண்கலைப் பட்டத்தை வழங்குகிறது. சென்னையில் உள்ள சென்னை கிறித்துவக் கல்லூரி இளநிலைக் கல்வியில் தொல்லியல் பாடத்தை வழங்குகிறது. இக்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட வரலாற்றின் மறுபக்கத்தை தொல்லியல் கல்வியின் மூலம் அறிவியல்பூர்வமான முறையில் அகழ்ந்தெடுத்து உலகுக்குப் பறைசாற்றுகின்றன. தொல்லியல் என்பது அனைத்துத் துறைகளையும் இணைத்துச் செய்யப்பட வேண்டிய ஆய்வுத் தளமாகும். ஆகையால் பல்துறை அறிஞர்களும் ஆர்வத்தோடு தொல்லியலைக் கற்றால் உலகின் தொன்மை வாய்ந்தவர்கள் இந்தியர்கள் என்பது புலப்படும். குறிப்பாக உலகின் தொன்மையாள மொழிக்கும், வரலாற்றுக்கும் சொந்தக்காரர்களான தமிழர்கள் தங்கள் வரலாற்றின் வளமையை உணரவும் போற்றவும் மிகப்பெரும் வாய்ப்பாக அமையும்.

சரித்திரப் பாடத்தில்-பட்டப் படிப்பில் வித்தியாசம் ஏன்?: சரித்திரம் படித்தவர்கள் தொல்லியல் வேலைக்குவர முடியாது என்றால், அதே போல தொல்லியல் படித்தவர்களும் சரித்திர வேலைக்குச் செல்ல முடியாது. ஜே,என்.யூவில் இடைக்கால சரித்திரம் பட்டம் பெற்றவருக்கும் இந்த ஆணை பொறுந்தும். பிறகு, ஜே,என்.யூ இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுகின்றதா? அதனிடம் ஏன் பழங்கால இந்தியாவுக்கு துறை-படிப்பு இல்லை என்று யாருகேட்டதாகத் தெரியவில்லை. இப்பொழுதெல்லாம், புதிய படிப்புகள் படித்தால் வேலை கிடைக்கும் என்ற எண்ணம் வலுத்துள்ளது. அதனால், ஒருவேளை இப்படியெல்லாம் பல்கலைக் கழகங்களில் துறைகளை ஆரம்பிக்கலாம். சரித்திரப் படிக்க ஆளில்லை, சரித்திரத் துறையே மூடப் படுகிறது என்றெல்லாம் கூட நடந்தேறியுள்ளது. அதற்கும் முறையான எதிர்ப்பு ஒன்றும் இல்லை. சுற்றுலா, பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு, ஓட்டல்-கேடரிங் மேனேஜ்மென்ட் என்றெல்லாம் மாறி வருகின்றதை கவனிக்கலாம், அதாவது, சரித்திரம் இவற்றுடன் சேர்த்து அல்லது அவற்றை சரித்திரத்துடன் சேர்த்து, படிப்புகளை உருவாக்குகிறார்கள்.

நன்றாக படிக்கும் மாணவர்களைப் பற்றி கவலைக் கிடையாது: நன்றாக படிக்கும் மாணவர்களைப் பற்றி கவலைக் கிடையாது. அவர்கள் எப்படியாவது, எந்த படிப்பு, துறை படித்தாலும் முன்னுக்கு வந்துவிடுகிறார்கள், வேலைக்குச் சென்று விடுகிறார்கள். ஆனால், 50% பெறுபவர்கள் கஷ்டப் படுகிறார்கள். மேலும், ஆங்கிலம் தெரியாத நிலையும் பலரை பாதிக்கிறது. அதைப் பற்றியும் பெரும்பாலோர் கண்டு கொள்ளவதில்லை. எப்படியாவது அரசு வேலை கிடைத்து விட்டால், போதும், பிறகு அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம் போன்ற மனப்பாங்கும் உள்ளது. இந்த வேலைக்கு, இந்த ஆண்டில் விளம்பரம் வரப்போகிறது, அதனால், அதற்குள் டிகிரி / பட்டயம் பெற்று தயாராகி விடவேண்டும் என்ற திட்டத்துடனும் படிக்க சேர்கின்றனர். அத்தகைய விவரம் தெரிந்தவர்கள், விவரமானவர்கள் அமைதியாக வேலைக்குச் சென்று விடுகின்றனர். மற்றவர்கள் முழிக்கின்றனர், திகைக்கின்றனர். போட்டியில் தம்மையும் அறியாமல் பின்னே தங்க நேரிடுகிறது.

காலப்போக்கில் மாறும் / காலாவதியாகும் பாடங்கள்: கல்வியாளர்களில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் கலை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு, பாகுபாடு மற்றும் போட்டி ஆகியவை மறக்கமுடியாததாகவும், காலப்போக்கில் தொடர்கின்றன. சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் கலைப் பாடங்கள் மற்ற பாடங்களைக் காட்டிலும் தாழ்ந்தவையாகக் கருதப்பட்டன. இதனால் சில மாணவர்கள் பி.ஏ. (ஹானர்ஸ்) மற்றும் / அல்லது வழக்கறிஞர்களாக ஆக சட்டம் போன்ற படிப்புகளைப் படித்தனர். இல்லையெனில், கலைப் பட்டதாரிகள் அலுவலகம் மற்றும் நிர்வாகப் பணிகளுக்குச் சென்றனர். அக்காலகட்டத்தில், எழுத்தர் பணிக்கு அத்தகைய அனுபவம் தேவைப்பட்டதால் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து அவசியமானது. எனவே, 1980கள் வரை, டைப்ரைட்டர் நிறுவனங்கள் காலை அல்லது மாலையில் ஒரு மணி நேர நேரத்தைப் பெறுவதற்கு வேலை தேடுபவர்களுடன் பிஸியாக இருந்தன. இன்றும் தட்டச்சு மற்றும் கணினி தட்டச்சு ஆகியவை எழுத்தர் பணிக்கு வலியுறுத்தப்படுகின்றன அல்லது கட்டாயமாக்கப்பட்டுள்ளன. கணினிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அவை இயந்திர தட்டச்சுப்பொறிகள் கிட்டத்தட்ட உபயோகமில்லாதவையாகி ஸ்கிராப்பாக விற்கப்பட்டன. எலெக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் தட்டச்சுப்பொறிகளும் கூட அதே நிலையை அடைந்தன.

வகுப்பறையில் திறமை தீர்மானிக்கப் படும்: அதுபோல சரித்திரம் போன்ற கலைசார் படிப்புகள் வேலை எனும்பொழுது, மதிப்பிழந்து வருகின்றன. அதிலும் ஆங்கிலம் எழுத-படிக்க-பேச சரியாக வராது என்றால், அலுவலகங்களில் வேலை செய்வது கடினமாகி விடுகிறது. அந்நிலையில் உதவி / துணை பேராசிரியர் பதவிக்குச் சென்றால், அவர்கள் எப்படி பாடங்கள் நடத்துவர், போதிப்பர், விளக்குவர் என்று தெரியவில்லை., ஆகவே, நிச்சயம் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும், தயார் படுத்திக் கொண்டு, சவல்களை சம்மாளிக்க வேண்டும். தங்களது வேலைக்கு உகந்தவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். வெறும்பட்டங்கள் / சான்றிதழ்கள் உதவாது, வேலை செய்யும் விதம் தான் அவர்களின் உண்மையான தகுதி, திறமை முதலியவற்றை வெளிப்படுத்தும். ஏனெனில், வகுப்பறையில் பாடத்தை போதிக்கும் பொழுது, ஏமாற்ற முடியாது. மாணவர்கள் தராதரத்தை கண்டு பிடித்து விடுவார்கள், கண்டு கொள்வார்கள், மதிக்க மாட்டார்கள்.

© வேதபிரகாஷ்

14-04-2024

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அதிரடி கைது, உடனடியாக ஜாமீனில் விடுதலை! (2)

திசெம்பர் 27, 2023

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அதிரடி கைது, உடனடியாக ஜாமீனில் விடுதலை! (2)

 

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் போலீசாரால் கைது: போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது மற்றும் அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த புகாரில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்[1]. பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாக புகார் அளித்தார்[2]. அப்படியென்றால் கையும்-களவுமாக மாட்டிக் கொண்டார் என்றாகிறது. அவர் அளித்த புகாரின் படி சேலம் கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்[3]. இதனையடுத்து, அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது, தனி நிறுவனங்கள் துவங்கியது மோசடி, கூட்டுச்சதி, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. அதன் பிறகு, முறையாக துணைவேந்தர் ஜெகநாதனை போலீசார் கைது செய்தனர்[4].

 

நிறுவனம் நடத்தி மோசடிகளில் ஈடுபட்டது: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டார்[5]. பிறகு மாஜிஸ்ட்ரேடின் முன்பு எடுத்துச் செல்லப் பட்டார் என்ற விவகாரங்கள் குறிப்பிடப் படவில்லை என்றாலும், நடந்தேரின. விசாரணையில், துணைவேந்தராக உள்ள ஜெகநாதன் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து பூட்டர் [Periyar University Technology Entrepreneurship and Research Foundation (PUTER Foundation)] என்ற தனி நிறுவனத்தை துவக்கியது தெரியவந்துள்ளது[6]. பல்வேறு நபர்களை பங்குதாரராக இந்த பவுண்டேஷனில் இணைத்து தனி நிறுவனத்தை தொடங்கினார். இது தவிர, தங்கவேல் உள்பட 3 பேர் இணைந்து ‘அப்டெக்கான் போரம்’ என்ற மற்றொரு அமைப்பையும் தொடங்கி உள்ளனர். இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் பாதிக்கப்படும். இவர்கள் மூன்று பேரும் பெரியார் பல்கலைக்கழக சட்டப்பிரிவு 19-இன் படி பொது ஊழியர்களாக கருதப்படுகிறார்கள்.

 

பாமக தொடர்ந்து இத்தகைய ஊழல்கள் பற்றி அறிக்கை வெளியிட்டு வருவது: முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் இது குறித்து தெரிவிக்கையில்[7], “பெரியார் பல்கலைக்கழகத்தை அதன் துணைவேந்தரும், கூட்டாளிகளும் கூறுபோட்டு விற்றுக் கொண்டிருக்கின்றனர். பெரியார் பல்கலைக்கழகத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர். பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டே அதில் புதிய நிறுவனத்தை தொடங்குவது சட்டவிரோதம். இதற்காகவே துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியும்,” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது[8]. இருப்பினும், அரசியல் கலந்து விட்டது, அதில் திராவிடக் கட்சிகளின் பங்கு உள்ளது என்றால் அமுக்கித்தான் வாசிப்பார்கள்.

 

கைதானவர் உடனடியாக ஜாமீன் பெற்று வீடு திரும்பியவர்: பின்னர் நீதிபதி தினேஷ்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், துணை வேந்தர் ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி விடுவித்தார்[9]. இத்தனை புகார்கள் இருந்டாலும், ஜாமீன் எப்படி வழங்கப் பட்டடு என்பது தெரியவில்லை. இவர் வெளியே இருந்தால், ஆதாரங்கள் எல்லாவற்றையும் அழித்து விடமாட்டாரா, அத்தகைய பிரச்சினை இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. மேலும், சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் 7 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்றும், அனுமதியின்றி வெளியூருக்கு செல்லக்கூடாது என்றும், காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்[10]. இவையெல்லாம் சாதாரண கன்டிசன்கள் தான்.

 

திராவிடத்துவத்தில்பெரியாரிஸத்தில் ஊழல், சொகுசு வாழ்க்கை, தற்கொலை, இறப்பு: மனித உயிர் மிகவும் அபூர்வமானது, புனிதமானது, அதனை எடுக்க-எடுத்துக் கொள்ள யாருக்கும் உரிமையில்லை. என்னத்தான் நாத்திகம், பெரியாரிஸம் எல்லாம் பேசினாலும், வாழத்தான் அவர்களுக்கும் ஆசையுள்ளது, அதிலும், அனுபவித்து வாழவேண்டும் என்ற பேராசை உள்ளது. ஆகவே, உண்மையில் அவர்கள் இறப்பிற்கு அஞ்சினாலும், இறப்பதற்கு விரும்புவதில்லை. ஆத்மா, உயிர், மூச்சு, உயிர் உடலிலா, மூச்சிலா, மூளையிலா, இதயத்திலா என்றெல்லாம், மண்டையைக் குடைந்து கொள்ளாமல், வாழத்தான் இரும்புகிறார்கள். அந்நிலையில் ஊழலுக்கு பயப்படாதவர்கள், ஊழலில் சிக்கிவிடுவோம் என்று பயப்படுகிறார்களா என்று தெரியவில்லை. சாவுக்கே சாவு கொடுப்போம் என்ற ரீதியில் அளப்பவர்கள், ஊழலுக்கே ஊழல் கொடுத்து, ஊழல் செய்து, உழல வைத்து விடுவோம் என்று சொல்லாமலா இருப்பர்? இருப்பினும் கல்வி என்பதால், இனிமேலாவது, அதில் ஊழலை நீக்கி, சுத்தமாக்கி, ஒழுங்கான-ஒழுக்கமான படிப்பை போதித்தால், இனி உருவாகும் மாணவ-மாணவிகள் மக்களுக்கு, சமூகத்திற்கு, நாட்டிற்கு உகந்தவர்களாக இருப்பர். இதை மனத்தில் வைத்துக் கொண்டாவது, திராவிடத்துவவாதிகள், ஊழல் விற்பன்னர்கள் முதலியோர் திருந்த வேண்டும், தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். சாவதை விட, ஒழுங்காக வாழலாம், மக்கள் பாராட்டுவார்கள்.

© வேதபிரகாஷ்

27-12-2023


[1] தினமலர், ஊழல் புகாரில் சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது, மாற்றம் செய்த நாள்: டிச 26,2023 17:39.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3512935

[3] தமிழ்.ஒன்.இந்தியா, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் கைது.. 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு!, By Vignesh Selvaraj Updated: Tuesday, December 26, 2023, 20:50 [IST].

[4] https://tamil.oneindia.com/news/salem/salem-periyar-university-vice-chancellor-jeganathan-arrested-569307.html

[5] தமிழ்.இந்து, நிறுவனம் நடத்தி முறைகேடு: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது, செய்திப்பிரிவு, Published : 27 Dec 2023 05:19 AM, Last Updated : 27 Dec 2023 05:19 AM.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/1174506-salem-periyar-university-vice-chancellor-arrested-on-corruption.html

[7] நக்கீரன், பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 26/12/2023 | Edited on 26/12/2023

[8] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/periyar-university-vice-chancellor-issue

[9] தமிழ்.நியூஸ்.18, முறைகேடு வழக்கில் கைதான பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு நிபந்தனை ஜாமின்!, FIRST PUBLISHED : DECEMBER 27, 2023, 9:49 AM IST, LAST UPDATED : DECEMBER 27, 2023, 9:49 AM IST.

[10] https://tamil.news18.com/tamil-nadu/conditional-bail-for-periyar-university-vice-chancellor-1286758.html

பொறியியல் கல்லூரிகளின் தரம், போதிக்கும் திறன் மற்றும் கட்டுமானம் முதலியவற்றைப் பற்றி, ஏன் விவரங்கள் மறைக்கப் படுகின்றன?

திசெம்பர் 18, 2023

பொறியியல் கல்லூரிகளின் தரம், போதிக்கும் திறன் மற்றும் கட்டுமானம் முதலியவற்றைப் பற்றி, ஏன் விவரங்கள் மறைக்கப் படுகின்றன?

கல்லூரிகளில் முதலீடு செய்பவர்கள் ஏன் தரத்தைப் பற்றி கவலைப் படுவதில்லை?: பொறியியல் கல்லூரிகளின் தரம், போதிக்கும் திறன் மற்றும் கட்டுமானம் முதலியவற்றைப் பற்றி, கடந்த 25 வருடங்களாக, நிறைய விசயங்கள் அலசப் பட்டு, எடுத்துக் காட்டியாகி விட்டது. பணத்தை கோடிகளில் போட்டு, கோடிகளில் அள்ள வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், நிறைய கல்லூரிகள் உருவாக்கப் படுகின்றன. அரசியல்வாதிகள் தமது பணத்தை முதலீடு செய்வது போல இத்தகைய கல்லூரிகளை உருவாக்கி வருகிறார்கள். ஆனால், தேவையான கட்டுமானங்கள், சோதனைக் கூடங்கள், ஒவ்வொரு பாடத்தையும் போதிக்க தகுதியான ஞானம் கொண்ட ஆசிரியர்கள் என்றெல்லாம் இல்லாமலேயே இவர்கள் கல்லூரிகளை ஆரம்பிக்கிறார்கள். இதனால், கல்லூரிகளில் வகுப்பறைகள் இல்லை, ஆசிரியர்கள் இல்லை, சோதனைக் கூடங்கள் இல்லை என்று தரமற்ற முறையில்  மாணவ-மாணவியரை ஏமாற்றி வருகிறார்கள்.

இதில் எந்த மாடல் பின்பற்றப் படுகிறது?: அட்மிசன் நேரத்தில் டொனேஷன் வாங்கி. கோடிகளை வசூலித்து, அதன் மூலம் கொஞ்சம்-கொஞ்சமாகக் கட்டலாம் போன்ற திட்டங்களுடனும் ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் –ஜேப்பியார், பச்சமுத்து [பாரிவேந்தர்], ஏ.சி.சண்முகம் இதர மைனாரிடி மாடல்களை பின்பற்ற முயல்கிறார்கள். அவர்கள் எல்லாம் மாட்டிக் கொண்டாலும், ஒரு நிலையில் தரத்தை உயர்த்திக் கொண்டார்கள், நிலைத்து நிற்கிறார்கள். ஆனால், வெறுங்கையால் முழம் போடலாம் என்ற எண்ணங்களுடம்-திட்டங்களுடன் செயல்படுகிறவர்கள், எந்த தரமுமில்லாமல், மாணவ-மாணவியரை ஏமாற்றி வருகிறார்கள். பல குடும்பங்களை நாசமாக்கி வருகிறார்கள். ஏனெனில், அவர்களது பெற்றோர் வீட்டை, நிலத்தை, சொத்தை விற்று தமது குழந்தைகளை படிக்க ஆசைப் பட்டு லஞ்சங்களில் பணத்தைக் கொடுக்கிறார்கள். ஆனால், இந்த முதலைகள் அப்படியே முழுங்கி ஏப்பமிட்டு வருகின்றன..

44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை: தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும், 35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது என்றும் வெளியாகி இருக்கும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[1], என்று ஊடகத்தினர் குறிப்பிட்டாலும், கடந்த 20-30 ஆண்டுகளாக நடந்து வரும் செயல்பாடுகளிலிருந்து, அவற்றிற்கு உண்மை நிலை தெரிந்து தான் இருக்கும். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளார்[2], என்று குறிப்பிட்டாலும், அவை வெளியிடப் படவில்ல. ‘தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான  கவுன்சிலிங்கில்  44 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை[3].  35 கல்லூரியில் ஒற்றை இலக்கங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்க்க நடந்துள்ளது[4]. ஆக மொத்தம் 75 கல்லூரிகளில் நிலைமை இப்படியுள்ளது. ஒரு மாணவர் கூட சேராத கல்லூரிகள் மற்றும் குறைவாக மாணவர்கள் உள்ள கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கங்களை பெற்றிருக்கிறோம்[5]. ஏற்கெனவே கடந்த ஆண்டுகளிலும் இதே நிலைதான் இருந்து வந்தது. பிறகு, அதே கல்லூரிகள் மறுபடியும் கவுன்சிலிங்கிற்கு எப்படி அனுமட்தி கொடுக்கப் பட்டது என்பதையும் கவனிக்கலாம். தற்போது நேரில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது[6]. இதுவரை நடக்கவில்லையா, பார்க்காமலேயே அனுமதி கொடுக்கப் பட்டதா போன்ற கேள்விகளும் எழுகின்றன.

2022 நிலை தான் 2023லும் தொடர்கிறது: மேலும் எங்களுக்கு திருப்தி அளிக்காவிட்டால் வரும் கல்வி ஆண்டில் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முற்றிலுமாக நிறுத்தப்படும்’ என்று வேல்ராஜ் கூறியுள்ளார்[7]. அதாவது இந்த கல்வியாண்டு 2023-24க்கு அனுமதி உண்டு என்றாகிறது. பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருவதாக காரணம் கூறப்படுகிறது[8].  இதுவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியதாகிறது. கல்லூரிகளில் வசதி இல்லை என்பதாலா அல்லது, படித்தும் வேலை கிடைக்கவில்லை, சரியான சம்பளம் இல்லை போன்ற காரணங்களால், அவ்வாறு நடைபெறுகிறதா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது. இன்னொரு பக்கம் கல்லூரி என்ற பெயரில் எந்த விதமான வசதியும் இல்லாமல் வெறுமனே கட்டிடங்களையும் வைத்திருக்கும்  கல்லூரிகளில் தான் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது[9]. பிறகு, அத்தகைய “கல்லூரிகளுக்கு” எப்படி அனுமதி கொடுத்து, அங்கீகாரம் கொடுக்கப் பட்டது என்பதையும் கவனிக்கலாம். ஆக, அந்த உண்மையும் தெரிந்து தான் உள்ளது[10].

75,000, 65,000 என்று சீட்டுகள் எப்படி காலியாக இருக்க முடியும்?: பொறியியல் படிப்புகள் சேர்க்கைக்கு பொதுப் பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 28 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெற்றது. இதையடுத்து துணை கலந்தாய்வு மூலம் காலியான இடங்கள் நிரப்பப்பட்டன. ஒட்டு மொத்தமாக 440 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,60,780 இடங்களில் 54,000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன[11]. மூன்று சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு, 95,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைத்தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 84,812ஆக இருந்தது[12]. ஆக 2022ல் 75,968 மற்றும் 2023ல் 65,780 இடங்கள் காலியாக இருக்கின்றன என்று தெரிகிறது. பிறகு, இது யார் குற்றம் என்று சொல்ல வேண்டியுளளது. படிக்க ஆசையுள்ள மாணவ-மாணவியருக்கு மார்க் உள்ள போதும், சீட் கிடைக்கவில்லை என்ற என்ன காரணம் என்று சொல்லியே ஆகவேண்டும்.

அந்த 79 கல்லூரிகள் எவை, விவரங்கள் என்ன?[13]: உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும்[14], 35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன[15]. ஏன் பெயர்கள்-விவரங்கள் குற்ப்பிடப் படவில்லை?[16]

  1. அந்த 44 பொறியியல் கல்லூரிகள் எவை?
  2. அந்த  35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது என்றால் அவை எவை?
  3. அவற்றின் பெயர்கள் ஏன் குறிப்பிடப் படவில்லை.
  4. லட்சங்களில் பீஸ் / கட்டணம் என்றெல்லாம் செலவழித்துப் படிக்க வைக்கும் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப் பட வேண்டிய அவசியம் உள்ளது.
  5. கல்வியில் நிச்சயம் மோசடிகள் இருக்கக் கூடாது.
  6. கல்வியில் மோசடி, ஊழல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

© வேதபிரகாஷ்

18-12-2023


[1] காமதேனு, 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லைதுணைவேந்தர் சொன்ன அதிர்ச்சி தகவல்!, Updated on: 17 Dec 2023, 11:15 am

[2] https://kamadenu.hindutamil.in/education/not-a-single-student-got-admission-in-44-engineering-colleges

[3] தினத்தந்தி, தமிழகத்தில் 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லைஅண்ணா பல்கலை. துணைவேந்தர் பேட்டி, டிசம்பர் 16, 5:45 pm

[4] https://www.dailythanthi.com/News/State/out-of-44-engineering-colleges-in-tamil-nadu-not-a-single-student-got-admission-anna-university-vice-chancellor-interview-1086377

[5] தினகரன், தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை: அண்ணா பல்கலை. துணைவேந்தர் பேட்டி, December 16, 2023, 6:28 pm..

[6] https://www.dinakaran.com/tamilnadu_college__engineering_student_affairs_anna_university/ – google_vignette

[7] தமிழ்.வெப்.துனியா, 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.. தமிழகத்திற்கு வந்த சோதனை..!, Written By Mahendran Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (17:17 IST).

[8] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/no-students-in-44-engineering-college-at-tamilnadu-123121600068_1.html

[9] செய்திபுனல், 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லைவெளியான பகீர் தகவல்!,

[10] https://www.seithipunal.com/tamilnadu/single-students-not-joined-in-44-colleges

[11] தீக்கதிர், 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை, நமது நிருபர் டிசம்பர் 18, 2023

[12]https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/not-a-single-student-got-admission-in-44-engineering-colleges

[13] நியூஸ்.தமிழ், “44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை” – அண்ணா பல்கலைகழக  துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் பேட்டி..!, by Web EditorDecember 17, 2023.

[14] https://news7tamil.live/in-44-engineering-colleges-not-a-single-student-joined-anna-university-vice-chancellor-r-velraj-interview.html – google_vignette

[15] பத்திரிக்கை.காம், ஒரு மாணவர் கூட சேராத 44 தமிழக பொறியியல் கல்லூரிகள், DEC 16, 2023.

[16] https://patrikai.com/in-44-tn-egg-colleges-not-even-a-single-student-admitted/

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணிநீக்கம் (1)

நவம்பர் 19, 2023

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணிநீக்கம் (1)

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிசெலவினங்கள் மூலம் ஆரம்பித்த கல்விஊழல்: கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, கடலூா் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதி, நியமனம், செலவினங்கள் பற்றிய விவரங்கள்-விவகாரங்கள் திருப்தியற்ற நிலையிலே இருந்தது. பல ஆடிட் / தணிக்கைக் குழுக்களின் சோதனைகளில் பணம் சரியாக கையாளப் படவில்லை மற்றும் செலவினங்கள் முறையாக கணக்குகளில் கொண்டுவரவில்லை-வரப்படவில்லை என்றெல்லாம் அறிக்கைகள் வெளிவந்தன. பணம் வாங்கிக் கொண்டு, ஆயிரக்ககணக்கில் வேலை நியமனம் செய்யப்பட்டது முதல் பலவித ஊழல்களும் மலிந்துள்ளன. பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் எனச் சுமார் 12,000 பேர் பணியாற்றிவருகின்றனர்[1]. நிர்வாகக் குளறுபடி மற்றும் அளவுக்கு அதிகமான ஊழியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது பல்கலைக்கழகம்[2]. ஒரு கட்டத்தில் ஊழியர்களுக்கே சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கருதி, 2013-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை ஏற்று, தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார்.

தமிழக அரசு கட்டுப்பாட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: நிதி நெருக்கடி, நிதி முறைகேடுகள் காரணமாக, கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. பல்கலைக்கழக நிர்வாகியாக தற்போதைய தலைமைச் செயலா் ஷிவ்தாஸ் மீனாவை 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-இல் தமிழக அரசு நியமனம் செய்து, அவா் உடனடியாகப் பொறுப்பேற்றார். பின்னா், தமிழக அரசு உயா் கல்வித் துறை மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர சட்டப் பேரவையில் புதிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. தொடா்ந்து, பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாகி ஷிவ்தாஸ் மீனாவால் பல்வேறு கல்வி, நிதி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதையடுத்து பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் எனச் சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்கள், தமிழகத்திலுள்ள மற்ற கல்லூரிகளுக்கும், வேறு துறைகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்[3].  தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் தணிக்கைக்குழு ஆய்வு மேற்கொண்டபோது, போதுமான கல்வித் தகுதி இல்லாமல் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத அலுவலர் என 200-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிவது தெரியவந்தது[4]

2023ல் 56 உதவிப் பேராசிரியா்கள் பணி நீக்கம் அறிவிப்பு ஆணை: மேலும், பல்கலைக்கழகத்தில் அரசு விதிமுறைகளின்படி பணி நியமனம் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு[5], உயா் கல்வித் துறைக்கு அவா் அறிக்கை சமா்ப்பித்தார்[6].. அதன்படி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் 56 உதவிப் பேராசிரியா்கள் அடிப்படை கல்வித் தகுதி மற்றும் அரசு தகுதி விதிமுறைகளைப் பின்பற்றாமல் பணியாற்றி வந்ததாகக் கூறி[7], தமிழக அரசு உயா் கல்வித் துறை பரிந்துரையின்பேரில், அவா்களை பணி நீக்கம் செய்து பதிவாளா் (பொ) ஆா்.சிங்காரவேலு வியாழக்கிழமை 16-11-2023 உத்தரவு பிறப்பித்தார்[8]. பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றி வரும் 18 பேருக்கும்[9], வெளிக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் 38 பேருக்கும் உத்தரவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்[10].

புகழ் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலை: உலகெங்கும் அண்ணாமலையில் படித்தவர்கள் உள்ளனர். பண்டித மணி கதிரேசன் செட்டியார் போன்ற சிறந்த தமிழ் அறிஞர்கள் தலைமையில் தமிழ் ஆராய்ச்சி ஜொலித்தது. பல அறிய படைப்புகள் வெளிவந்தன. தண்டபாணி தேசிகர் ரங்காச்சாரி போன்றோர் இசைக்கல்லூரியை அலங்கரித்தனர். சர் சி பி ராமஸ்வாமி ஐயர் போன்றோர் துணைவேந்தர்களாக பணியாற்றினார். அந்த பல்கலைக்கா இந்த நிலைமை. பொது உடைமையாக்கி நாசப்படுத்தி விட்டார்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் போதிய தகுதி இல்லாத காரணத்தால் பேராசிரியர்கள் 58 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போலி கல்விச் சான்றிதழ்களை வழங்கி பணியாற்றி வந்ததாக எழுந்த புகாரின் பேரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுதைய உயர்க்கல்வித்துறை அமைச்சறின் ஆதரவு: இந்நிலையில் உயர்க்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்[11]. விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யுஜிசி விதிமுறைகளின்படி, உதவிப் பேராசிரியர்கள் நெட் அல்லது ஸ்லெட் தகுதித் தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது பி.எச்.டி படிப்பை முடித்திருக்க வேண்டும்[12]. ஆனால் அந்த தகுதிகள் எதுவும் இல்லாதவர்கள் உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தகுதி குறைவான பேராசிரியர்கள் குறித்து 2019ஆம் ஆண்டில் சிண்டிகேட் குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது[13]. நீதிமன்றமும் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கவில்லை. இப்போது துணை வேந்தர் பணி நீக்கம் செய்துள்ளார்[14]. இது வரவேற்கத்தக்கது. இதற்கு யாரும் பொறுப்பல்ல. 10 ஆண்டுகளாக அவர்கள் தகுதியை மீறி சலுகையை அனுபவித்து உள்ளார்கள். தகுதி குறைவானவர்கள் பணி நியமனம் செய்யப்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் வருங்காலத்தில் தங்களின் தகுதிக்கேற்ற வகையிலான அரசுப் பணிகளுக்கு விண்ணப்பித்தால் அரசு அதனை பரிசீலிக்கும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கல்வி ஊழல்உருவானஉருவாக்கப் பட்ட நிலைவிதம்: ஊழலில் கல்வி, கல்வித்துறை, கல்வி பாடங்கள், கல்வி நெறிமுறை அல்லது கல்வியில் ஊழல் என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களாக இருந்தது. கல்வி தெய்வமாக, தெய்வீகமாகக்  கருதப் பட்டதால் அத்தகைய உரிய ஸ்தானம் கொடுக்கப் பட்டு மதிக்கப் பட்டது. இருந்தாலும் சமீப காலங்களில் கல்வி வியாபாரம் மயமாக்கப்பட்டதால் அந்த விளைவின் உச்சத்தில், “கல்வி ஊழல்” நடந்து வருகிறது. விடுதலைக்குப் பிறகு அரசியல் நுழைவு, ஆளும் அரசியல்வாதிகளின் தாக்கத்தாலும், அரசியல்வாதிகள் மற்றும் சித்தாந்த வாதிகளின் திரிபுகளாலும் கல்வி பாடத்திட்டங்கள் புத்தகங்கள் மற்றும் பாடங்களை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் விற்பனர்கள் என்று எல்லாமே அரசியலுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலை உண்டாயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக அத்தகைய “கல்வி ஊழல்” என்பது ஆரம்பிக்க வைக்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

18-11-2023.


[1] தினமணி, அண்ணாமலைப் பல்கலை.யில் 56 உதவிப் பேராசிரியா்கள் பணி நீக்கம், By DIN  |   Published On : 17th November 2023 12:32 AM  |   Last Updated : 17th November 2023 12:32 AM.

[2] https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2023/nov/17/56-assistant-professors-sacked-in-annamalai-university-4107136.html

[3] விகடன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் டிஸ்மிஸ்பின்னணி என்ன?!, ஜெ.முருகன், Published: 17-11-2023 at 1 PMUpdated: 17-11-2023 at 1 PM.

[4] https://www.vikatan.com/government-and-politics/politics/higher-education-department-has-dismissed-56-professors-without-adequate-educational-qualification-in-annamalai-university

[5] தமிழ்.வெப்.துனியா, அண்ணாமலை பல்கலையின் 56 பேராசிரியர்கள் பணி நீக்கமா? பரபரப்பு தகவல்..!, Written By Mahendran Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (15:08 IST).

[6] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/56-professors-dismiss-in-annamalai-university-123111600061_1.html

[7] தினமலர், அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் 58 பேர் டிஸ்மிஸ், பதிவு செய்த நாள்: நவ 16,2023 14:25

[8]  https://m.dinamalar.com/detail.php?id=3482745

[9] தினத்தந்தி, 56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம்சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அதிரடி, 16 Nov 2023 9:28 PM.

[10] https://www.dailythanthi.com/News/State/56-assistant-professors-sacked-chidambaram-annamalai-university-takes-action-1082995

[11] தமிழ்.சமயம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. போராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன்? அமைச்சர் பொன்முடி பரபரப்பு விளக்கம்!, Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 17 Nov 2023, 3:51 pm

[12] https://tamil.samayam.com/latest-news/state-news/minister-ponmudi-reveals-the-reason-why-annamalai-university-56-assistant-professors-dismissed/articleshow/105289709.cms

[13] தமிழ்.இந்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம்: உரிய கல்வித் தகுதி இல்லாததால் நடவடிக்கை செய்திப்பிரிவு, Last Updated : 17 Nov, 2023 05:58 AM.

[14] https://www.hindutamil.in/news/tamilnadu/1154731-chidambaram-annamalai-university-sacks-56-assistant-professors.html

திருவள்ளுவர் பல்கலைக் கழகம் -டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக் கழகம் தோற்றமும், மறைவும் – தொடர்ந்து நடந்து வரும் ஊழல்கள், என்ன சம்பந்தம்?

செப்ரெம்பர் 17, 2023

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் தோற்றமும், மறைவும்தொடர்ந்து நடந்து வரும் ஊழல்கள், என்ன சம்பந்தம்?

05-09-2023 திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஊழல், ஊழல்புகார்கள் பற்றி விசாரணை: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஊழல், ஊழல்புகார்கள், போராட்டங்கள் என்று நடந்து கொண்டிருப்பது[1]. அந்த திருவள்ளுவர் பெயருக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது[2]. வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்காட்டிலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2015ல் நடந்த ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்[3]. ஆனால், பல விவரங்கள் பொது மக்களிடமிருந்து மறைக்கப் படுகின்றன. இதில், பல்கலைக்கழகத்தில், 112 கோடி ரூபாய் அளவிற்கு நிதி நிர்வாக முறைகேடு நடந்ததாகவும், பல்கலைக்கழகத்திற்கு கொள்முதல் செய்த, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, தமிழ்நாடு ஒப்பந்த வெளிப்படுத்த தன்மை சட்டத்தை மீறி, பல்கலைக்கழகத்திற்கு பண இழப்பு ஏற்படுத்தியது மற்றும் பல்கலைக்கழக தேர்வு முறைகேடு உள்ளிட்டவைகள் குறித்து புகார் அளிக்கப்பட்டது[4]. அதன் அடிப்படையில் 05-09-2023 அன்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை கூடுதல் செயலர் இளங்கோ ஹென்றி தாஸ் விசாரணை நடத்தினார்[5]. விவரங்கள் என்னவென்று தெரியவில்லை. மேலும், மனுதாரரான முன்னாள் பேராசிரியர் இளங்கோவனிடம் விசாரணை நடத்தப்பட்டது[6]. இங்கும் விவரங்கள் தெரிவிக்கப் படவில்லை. பிடிஐ பாணியில் ஊடகங்களில் ஒருசில வரிகளில் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.

02-08-2023 – திருவள்ளுவர் பல்கலையில் ஏராளமான முறைகேடு; பேராசிரியர்கள், ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!:  02-08-2023 அன்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் அதிகளவில் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி ஊழியர்கள் மற்றும் உறுப்புக் கல்லூரி பேராசிரியர்கள் பறை இசைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[7]. பல்கலைக்கழகத்தில் லஞ்சம், முறைகேடுகள் அதிகரித்து விட்டதாகவும், இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழு விசாரணை நடத்தி 12 மாதங்களாகியும் இதுவரை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றும், உடனடியாக அந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தனர்[8].

டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் தோற்றமும், மறைவும்: அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா 2021 பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த கல்வியாண்டு முதலில் புதிய டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கப்பட்டது. ஆனால், மாநில சட்டமன்றத் தேர்தலின் காரணமாக இந்தத் திட்டம் தாமதமானது, பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் முடிக்கப்படவில்லை. தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்ததன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 05ஆம் நாள் இதற்கான சட்ட முன்வரைவினை உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் தாக்கல் செய்தார். இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக முனைவர் எஸ். அன்பழகன் மார்ச் 01 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இப்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட கலை அறிவியல் கல்லூரிகள் வரும். வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் உயர் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்ததும், இப்பல்கலைக்கழகம் மூடப்பட்டது: அப்போதைய அ.தி.மு.க அரசு. அந்த நேரம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த துரைமுருகன், “திருவள்ளுவர் பல்கலைக்கழகம் நான் கொண்டுவந்தது. அதை எந்தக் காரணத்துக்காகவும் பிரிக்கவிட மாட்டேன். புதிதாக வேண்டுமானால், பல்கலைக்கழகத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்’’ என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இம்மாவட்டங்களில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் பிரிக்கப் பட்டன. முழுமையாக செயல்படாமல் இருந்த இப்பல்கலைக்கழகம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இதற்கான சட்டமுன்வடிவானது ”2021ம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் திருத்தம் மற்றும் நீக்கறவு சட்டம்” என்பதை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். இந்தநிலையில், தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, ஜெயலலிதா பல்கலைக்கழகம் முடக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அ.தி.மு.க தலைவர்கள் கொந்தளிக்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும்விதமாக, துணை வேந்தரைத் தவிர்த்து மற்ற அனைத்துப் பொறுப்புகளுமே காலியாகத்தான் வைக்கப்பட்டிருக்கின்றன[9].  பொது மக்கள், “பல்கலைக்கழகத்தைப் பிரித்ததில், தி.மு.வுக்குக் கோபமில்லை. ஜெயலலிதா பெயர் சூட்டியிருப்பதுதான் பிடிக்கவில்லை. ஏட்டிக்குப் போட்டியாக, கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் மாற்றப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. இரண்டு கட்சிகளுக்குமான அரசியல் காழ்ப்புணர்ச்சியால், மூன்று மாவட்டங்களிலுள்ள கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விதான் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்,’’ என்கிறனர்[10].

குற்றங்கள், சீரழிவுகள் டிவி-சீரியல் போன்று காண்பிக்கப் படுகின்றன: இவையெல்லாம் தனித்தனி செய்திகளாக இருந்தாலும், சம்பந்தம் இருக்கிறது. ஒரு பல்கலைக் கழகம் ஆரம்பிப்பது என்பது சாதாரணமான விசயம் கிடையாது, அதிலும் முதலமைச்சர் பெயரில் ஆரம்பித்து உடனே மூடு விழா செய்யப் படுவது, அதிலும் அசாதாரணமன விசயம் ஆகும். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதனை செய்துள்ளது. அதிமுகவும் அதை பெரிதாக எதிர்த்ததாகத்தெரியவில்லை[11]. ஆனால், திமுக-அதிமுக கட்சிகளுக்குள் இருக்கும் விருப்பு-வெறுப்பு, போட்டி-பொறாமை முதலியவற்றிற்கும் மேலாக ஏதோ ஒன்று இருப்பது தெரிகிறது[12]. கல்வியை சக்காக வைத்துக் கொண்டு அரசியல் செய்து, பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை மறைக்க முடியாது. திடீரென்று தமிழக்த்தில் எல்லா பல்கலைக்கழகங்களில் ஊழல் ஏற்பட்டுள்ளது,ஏற்படுகிறது, கைது, விசாரணை, வழக்கு என்றெல்லாம் நடந்து ஒண்டிருப்பதை கவனித்து வர முடிகிறது. பிறகு, இந்த நடவடிக்கைகளில்,செயல்பாடுகளில், பலநிலைகளில் செலவழிக்கப் பட்ட கோடிக்கணக்கான பணத்தைப் பற்றி யார் கவலைப் படுவது? பொதுவாக மக்கள் அரசியலைக் கூட இன்று, டிவி-சீரியல் போன்று பார்க்க ஆரம்பித்து விட்டனர். அதில் நடக்கும் குற்றங்கள் முதலியவை பார்த்து-பார்த்து,கேட்டு-கேட்டு மரத்துப் போகிறது. அவை மறக்கவும் படுகின்றன.

© வேதபிரகாஷ்

17-09-2023


[1] தினத்தந்தி, முறைகேடுகள் தொடர்பாக உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் விசாரணை , செப்டம்பர் 5, 11:19 pm

[2] https://www.dailythanthi.com/News/State/higher-education-additional-secretary-inquiry-into-irregularities-1046282

[3] மாலைமலர், முறைகேடு நடந்ததாக புகார்: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் விசாரணை, ByMaalaimalar .5 செப்டம்பர் 2023 1:32 PM.

[4] https://www.maalaimalar.com/news/state/allegation-of-malpractice-investigation-by-additional-secretary-department-of-higher-education-thiruvalluvar-university-658795

[5] தினமலர், திருவள்ளுவர் பல்கலை.,யில் ஊழல்: அதிகாரி விசாரணை, செப்டம்பர், 07,2023,09:13 IST

[6] https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=58971&cat=1

[7] இடிவி.பாரத், திருவள்ளுவர் பல்கலையில் ஏராளமான முறைகேடு; பேராசிரியர்கள், ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!,Published: Aug 3, 2023, 6:38 AM.

[8] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/vellore/thiruvalluvar-university-teaching-and-non-teaching-staffs-protest-against-administration/tamil-nadu20230803063809297297569

[9] விகடன், பெயர் சர்ச்சையால் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்குகிறதா தி.மு.?! – என்ன நடக்கிறது?, லோகேஸ்வரன்.கோ, ச.வெங்கடேசன், Published:23 Jul 2021 5 PM; Updated:23 Jul 2021 5 PM.

[10] https://www.vikatan.com/government-and-politics/is-dmk-government-closing-jayalalitha-university

[11] The Fedearal, Closure of Jayalalithaa Univ, fallout of rivalry between Dravidian parties?, N Vinoth Kumar, 2 Sept 2021 6:55 PM  (Updated:2 Sept 2021 7:07 PM).

[12] https://thefederal.com/states/south/tamil-nadu/closure-of-jayalalithaa-univ-fallout-of-rivalry-between-dravidian-parties/

உரிய கல்வி தகுதிகளை பூர்த்தி செய்யாமல் முனைவர் / பிஎச்.டி பட்டம் பெற்றது எப்படி?

ஜூலை 6, 2023

உரிய கல்வி தகுதிகளை பூர்த்தி செய்யாமல் முனைவர் / பிஎச்.டி பட்டம் பெற்றது எப்படி?

2023 ஜூலைஉதவி பேராசிரியர் முருகேசன் தொடுத்த வழக்கு: உரிய கல்வி தகுதி இல்லாதவருக்கு முனைவர் பட்டம் வழங்கியதாக எழுந்த புகார் குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை பல்கலைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்கலையில், தண்டபாணி என்பவர், ‘திருவாசக பக்தி கோட்பாடு’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி படிப்புக்கு சேர்ந்தார். இவருக்கு, உலகநாத நாராயணசாமி அரசு கல்லுாரி தமிழ் துறை உதவி பேராசிரியர் முருகேசன் என்பவர் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தண்டபாணி முனைவர் பட்டம் பெற்றார். அவர், உரிய கல்வி தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை என்பதால், அவரது முனைவர் பட்டத்தை திரும்ப பெற வேண்டும் என, சென்னை பல்கலைக்கு, உதவி பேராசிரியர் முருகேசன் கடிதம் எழுதினார். அதன் மீது நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

04-07-2023 நான்கு வாரங்களில் சென்னை பல்கலை அறிக்கை தாக்க நீதிமன்றம் உத்தரவு: வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, உதவி பேராசிரியர் முருகேசன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபீக் அடங்கிய அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு[1]: “சென்னை பல்கலை, 164 ஆண்டுகள் பழமையானது. முனைவர் படிப்புக்கு விண்ணப்பித்தவரின் தகுதியை சரிபார்க்க தவறியது, பல்கலையின் அக்கறையின்மையை காட்டுகிறது. தண்டபாணியின் தகுதியை ஆய்வு செய்யாமல், முனைவர் படிப்புக்கு சேர்த்தது, அதிர்ச்சி அளிக்கிறது. முனைவர் பட்டம் என்பது உச்சபட்ச கல்வி தகுதியாக கருதப்படும் நிலையில், அதை வழங்கும் கல்வி நிறுவனங்கள் மெத்தனப்போக்குடன் இருக்கக்கூடாது. கடின உழைப்பால் பட்டம் பெறக்கூடிய முனைவர்களை சந்தேகிக்கும் வகையில், பல்கலைகள் செயல்படுவதை சகித்துக் கொள்ள முடியாது. எனவே, மனுதாரர் முருகேசன் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் விசாரித்து, நான்கு வாரங்களில் சென்னை பல்கலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது[2].

2021ல் முன்னர் ஆண்டை விட இரு மடங்கு பதிவு ஆனது: பல்கலைக்கழகங்களில் உதவி பேராசியர் பணியிடங்களுக்கு முனைவர் படிப்பு கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ள நிலையிலும், அதிக வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படுவதால், சென்னை பல்கலைக்கழம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகளில் முனைவர் படிப்பிற்கு பதிவு செய்து உள்ளவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்து உள்ளது[3]. 2019ஆம் ஆண்டில் 406 என்ற அளவில் இருந்த பதிவு, 2021ஆம் ஆண்டில் 859 ஆக அதிகரித்து உள்ளது[4]. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ், 5 ஆயிரம் அறிஞர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

2022- இதழ்களில் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை: முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள், முன்னணி ஆய்வு இதழ்களில் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டும் என்ற விதிமுறை பல ஆண்டுகளாக அமலில் உள்ளது.ஆனால் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான ஆய்விதழ்களில் 75% மாணவர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதில்லை என்ற தகவலை ஆய்வின் மூலம் யுஜிசி கண்டறிந்துள்ளது[5]. மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐஐடி-களில் முனைவர் பட்டம் பயிலும் 2,573 மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் ஐஐடியில் முனைவர் பட்டம் பயிலும் சில மாணவர்கள் தரமான ஆய்விதழ்களில் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை தொடர்ந்து பிரசுரிப்பதும் யுஜிசி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் சமர்ப்பிப்பதன் வாயிலாக, பின்நாட்களில் காப்புரிமை பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பான்மையான ஆராய்ச்சி மாணவர்கள் தரமான ஆய்வு இதழ்களில் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதில்லை என்று தெரியவந்துள்ளதால் இந்த நடைமுறையை மாற்ற பல்கலைக்கழக மானியக் குழு முடிவெடுத்தது. அதன்படி, மாணவர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் சமர்ப்பிப்பது கட்டாயம் இல்லை என்று நாடு முழுவதும் விரைவில் புதிய விதிமுறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு முடிவெடுத்துள்ளது[6].

காசு கொடுத்து ஆய்வுகட்டுரை பதிப்பித்துக் கொண்டால் கிரிடெட் கிடைக்குமா?: அதாவது, ஆய்வுகட்டுரைகள் பதிப்பிக்க, ISBN, UGC care List என்றெல்லாம் எண்கள் வாங்கி வைத்துக் கொண்டு, ஒரு பேப்பருக்கு, ரூ.1000/- / 2000/- என்று வாங்கிக் கொண்டு, “International Journal………” என்றெல்லாம் பெயரை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வருகிறார்கள். இங்கிலீஷ் / ஆங்கிலம் தெரியாமல் கூட, காசு கொடுத்து, பேப்பர் எழுத வைத்து, பதிப்பித்துக் கொண்டு கிரிடெட் வாங்கிக் கொள்கிறார்கள். இத்தகைய ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இம்முறை கொண்டு வரப் படுகிறது. இதனால், போலி “International Journal………”-களுக்கு வழியில்லாமல் போய் விடும். உண்மையான ஆராய்ச்சி தன்மை, கட்டுரை எழுதும் நபர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆராய்ச்சியில் போலித் தன்மை வரும்பொழுது, எல்லா விதமான போலிகளும் வருகின்றன. காசு கொடுத்தால் வாங்கி விடலாம் என்ற நிலைமையும் வருகிறது.

2016-17 பிஎச்டி நிபுணர் குழு / ரிவீய்வு கமிட்டி/ சரிபார்த்தல் குழு: சென்னை பல்கலைக் கழகம் தமிழ்நாட்டில் மிக பழமை வாய்ந்ததாகும். இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பி.எச்.டி. டாக்டர் பட்டத்துக்கு ஆய்வு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்களில் பலர் ஆய்வு முடித்து வெளியேறுகிறார்கள். ஆனால், அவர்கள் செய்த ஆய்வு முறையாக நடக்கவில்லை. தரம் குறைந்த நிலையில் அவை உள்ளன என்று இப்போது தெரிய வந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பி.எச்.டி. ஆராய்ச்சிகள் எப்படி நடைபெற வேண்டும் என்று பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அவற்றை சென்னை பல்கலைக்கழகம் முறையாக பின்பற்றவில்லை. மாணவர்கள் சமர்ப்பிக்கும் பி.எச்.டி. ஆராய்ச்சி கட்டுரைகளை (திசிஸ்) வெளி பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழக பேராசிரியர்களை கொண்ட நிபுணர் குழு ஆய்வு செய்வது வழக்கம். அவ்வாறு 2016-17-ம் கல்வி ஆண்டில் பி.எச்.டி. முடித்து சமர்ப்பித்த 600 ஆய்வு கட்டுரைகளை இந்த நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது.

முறைப்படி ஆராய்ச்சி நடக்கவில்லை, அறிக்கை சமர்ப்பிக்கப் படவில்லை: இந்த குழுவில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களை சேர்ந்த நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் இதுவரை 100 கட்டுரைகளை ஆய்வு செய்து முடித்துள்ளனர். அவற்றில் பல கட்டுரைகள் முறையாக ஆய்வு செய்து தயாரிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. மேலும் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் ஆய்வு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. படிப்பவர்களை ஆய்வு செய்வதற்காக டாக்டரல் கமிட்டி என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும். அதில் 3 பேராசிரியர்களும், ஒரு துறை சார்ந்த நிபுணரும் இருப்பார்கள். அவர்கள் குறிப்பிட்ட காலவரையரையில் அந்த மாணவர்களின் தரத்தை ஆய்வு செய்வார்கள். பி.எச்.டி. ரெகுலர் படிப்பில் இருப்பவர்களை 6 மாதத்துக்கு ஒரு தடவையும், பகுதி நேர படிப்பில் இருப்பவர்களை ஆண்டுக்கு ஒரு முறை அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வை முடித்து அவர்கள் அறிக்கையும் தர வேண்டும்.

நிபுணர் குழு பல்வேறு குறைபாடுகள் இருப்பதை கண்டுபிடித்தது: ஆனால், சென்னை பல்கலைக்கழகத்தில் டாக்டரல் கமிட்டி முறையான ஆய்வுகளை செய்யவில்லை. பல மாணவர்கள் டாக்டரல் கமிட்டி ஆய்வு செய்யாமலேயே தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து இருக்கிறார்கள். ஆராய்ச்சி கட்டுரைகளை 3 வெளி பேராசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அதில் ஒருவர் வெளி பல்கலைக்கழகத்தை சேர்ந்தவராகவும், மற்றொருவர் வெளி மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்தவராகவும், இன்னொருவர் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை நிவர்த்தி செய்ய சொல்வார்கள். அந்த விதிமுறைகளும் சரியாக பின்பற்றப்படவில்லை. இவ்வாறு பல்வேறு குறைபாடுகள் இருப்பதை நிபுணர் குழு கண்டுபிடித்துள்ளது.

மேற்பார்வை சரியாக நடக்கவில்லை: சென்னை பல்கலைக் கழகத்தில் 2016 ஜனவரி முதல் 2017 வரை மே வரை துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. இதனாலும் பல்வேறு குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக துணை வேந்தர் துரைசாமியிடம் கேட்டபோது, பி.எச்.டி. படிப்பவர்கள் குறைந்தது 2 ஆய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டும். தேசிய மாநாடுகளில் 4 ஆண்டுக்குள் பங்கேற்க வேண்டும். 5-வது ஆண்டில் டீன் அல்லது மூத்த பேராசிரியர்கள் டாக்டரல் கமிட்டியில் இடம்பெற்று இருப்பார்கள். மாணவர்களின் ஆய்வு செயல்பாடு சரியில்லை என்றால் அவர்களை படிப்பை விட்டு செல்லும்படி அறிவுறுத்தப்படுவார்கள் என்று கூறினார். நிபுணர் குழு ஆய்வு குறித்து மூத்த பேராசிரியர் ஒருவர் கூறும் போது[7], “300 பக்கங்கள் கொண்ட ஒரு பி.எச்.டி. ஆய்வு கட்டுரையை முறையாக ஆய்வு செய்வதாக இருந்தால் 3 மாதங்கள் வரை ஆகும். ஆனால், நிபுணர் குழுவினர் சில கட்டுரைகளை ஒரு வாரத்தில் ஆய்வு செய்து முடிவை சொல்லி இருக்கிறார்கள். சில கட்டுரைகளை ஒரு நாளிலேயே ஆய்வு செய்து முடிவை கூறி இருக்கிறார்கள். இது, கேலிக்கூத்தாக உள்ளது,” என்று கூறினார்[8].

© வேதபிரகாஷ்

05-07-2023


[1] தினமலர், உரிய கல்வி தகுதியின்றி முனைவர் பட்டம் அறிக்கை தர சென்னை பல்கலைக்கு உத்தரவு, Added : ஜூலை 05, 2023  02:12

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3366772

[3] டைம்ஸ்.ஆப்.இந்தியா, சென்னைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் (PhD) படிப்பிற்கான பதிவு இரண்டு ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரிப்பு, Feb 8, 2022, 18:12 IST

[4] https://timesofindia.indiatimes.com/tamil/phd-registrations-in-madras-university-double-in-2-years/articleshow/89432150.cms

[5] தினத்தந்தி, பி.எச்.டி. மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் பிரசுரிக்க கட்டாயம் இல்லைபல்கலை. மானியக் குழு, தினத்தந்தி, Sep 28, 1:59 pm (Updated: Sep 28, 4:16 pm)

[6] https://www.dailythanthi.com/News/State/phd-students-are-not-required-to-publish-research-papers-in-research-journals-university-grant-committee-802885

[7] மாலைமலர், சென்னை பல்கலைக்கழகத்தில் தரமில்லாத பி.எச்.டி. – ஆய்வு நிபுணர்குழு சோதனையில் கண்டுபிடிப்பு, Byமாலை மலர்25 பிப்ரவரி 2018 4:56 PM (Updated: 25 பிப்ரவரி 2018 4:56 PM).

[8] https://www.maalaimalar.com/news/district/2018/02/25165654/1147704/Substandard-PHD-study-at-Madras-University.vpf

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் கைதுக்குப் பிறகு சமூகவியல் / மனோதத்துவ துறை பேராசிரியர் கைது – புகார், குற்றங்கள் ஒன்றுதான்!

ஏப்ரல் 21, 2023

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் கைதுக்குப் பிறகு சமூகவியல் / மனோதத்துவ துறை பேராசிரியர் கைது – புகார், குற்றங்கள் ஒன்றுதான்!

மார்ச் 2023லேயே புகார் கொடுக்கப் பட்டது: மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதுரை காமராஜ் பல்கலை சமூகவியல் துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டார்[1]. மதுரை, மாடக்குளத்தைச் சேர்ந்தவர் சி. கருப்பையா, 60 (Madurai Kamaraj University Psychology department head C Karuppaiah); வயது 52 என்றெல்லாம் சில ஊடகங்கள் குறிப்பிடுவது வேடிக்கஈயாக இருக்கிறது. காமராஜ் பல்கலை சமூகவியல் / மனோதத்துவ துறை பேராசிரியராக பணிபுரிந்து மார்ச்சில் ஓய்வு பெற்றார்[2]. மனோதத்துவ பேராசிரியர் என்றால், மாணவ-மாணவியருக்கு, இவரால் பல நன்மைகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், திராவிட மாடலில் இவ்வாறு திசைத் திரும்பி, வேலியே பயிரை மெய்ந்த உண்மையாகி விட்டது போலும். கல்வியாண்டு முடியும் 2023 ஜூன் மாதம் வரை, இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது[3]. புகார்கள் உள்ள நபருக்கு அவ்வாறு பதவி நீட்டிப்பு கொடுத்தது ஏன் என்று தெரியவில்லை. உளவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பல்கலையில் புகார் அளிக்கப்பட்டது[4].

முதலில் கொடுத்த புகார்கள் கண்டுகொள்ளப் படவில்லை: இவர் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சில மாணவியர் புகார் அளித்தனர்[5]. அதன்படி இன்ஸ்பெக்டர் முத்துமணி, விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார்[6]. காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கருப்பையா மீது மாணவிகள் சிலர் குற்றம்சாட்டி வந்தனர்[7]. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பல்கலைகழகத்தில் 04-04-2023 அன்று புகார் அளித்தும் பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவிகள் குற்றம்சாட்டினர்[8]. இதனிடையே மதுரை சரக டிஐஜி பொன்னியை சந்தித்து மாணவிகள் புகார் அளித்தனர்[9]. இவ்வாறு பிடிஐ பாணியில் தான், எல்லா ஊடகங்களும் இச்செய்தியை வெளியிட்டே ஆகவேண்டும் என்ற ரீதியில் வெளியிட்டாலும், எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. மிக சமீபத்தைய கலாக்ஷேத்திரா போல பொங்கவில்லை. இதுதான், பத்திரிகா தர்மத்தின் மிகப் பெரிய மர்மமாக இருக்கிறது எனலாம்.

04-04-2023 அன்றும் புகார் கொடுக்கப் பட்டது: இந்தியன் எக்ஸ்பிரஸ் இதைப் பற்றி தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுளளது. அதாவது, அவ்வாறு செய்திகள் வெளிவந்தாலும், இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாகிறது. இதில் அரசியல் இருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால், கலாக்ஷேத்திராவிற்கு குதித்தவர்கள், இதை கண்டு கொள்ளவில்லை போலும்! அந்த SFI உதலிய போராளிகளும், வீராதி-வீரர்களும் கண்டுகொள்லவில்லை, கொதித்தெழவில்லை, “நக்கீரனும்” மயக்கத்தில் ஆழ்ந்துவிட்டான் போலிருக்கிறது. அதை காமக்ஷேத்திரம் என்றெல்லாம் வர்ணித்தவர்கள், இங்கு அமைதியாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தமிழ் என்றாலோ, பெயர் என்றாலோ, யதுகை-மோனை என்றாலோ, தமிழ்-தமிழ் என்று அரற்றுபவர்களும் நிதர்சனத்தை அறிந்தும் அறியாதவர் போலிருக்கிறார். காமம் கூட ஆளுக்கு ஆள், இடத்திற்கு இடம், ஜாதிக்கு ஜாதி என்று மாறும் போலிருக்கிறது. இருப்பினும் பாதிக்கப் பட்ட மாணவியர், பெண்கள் புகார் கொடுக்கத் தான் செய்கின்றனர்.

10-04-2023 அன்று மறுபடியும் புகார்: கருப்பையா மீது ஒரு மாதமாக பல்கலை நிர்வாகத்திற்கு தொடர்ந்து, ‘ஆன்லைனில்’ புகார்கள் வந்தன. மார்ச் 2023லேயே புகார்கள் எழுந்தன. அதில், ‘மாணவியரிடம் மிக ஆபாசமாக பேசுகிறார்[10]. “ஏய்நீ ரொம்ப அழகா இருக்கஉன் ஜீன்ஸ் பேன்ட் சைஸ் என்ன, ஒல்லியாக இருக்கும் பெண்களை தான் பசங்க விரும்புவாங்க...’ என, தொடர்ந்து சர்ச்சையாக பேசி வந்துள்ளார்[11]. அத்தகைய ஆதாரங்கள் கூட போதவில்லையா என்று தெரியவில்லை. முதுகலை மாணவி ஒருவருக்கு இ-மெயில் மூலம் ‘செக்ஸ் டார்ச்சர்’ கொடுத்துள்ளார். அப்படியென்றால் சைபர் சட்டம், விதிகள் மூலமாகவே இவர் மீது உடனடி நடவடிக்கை எடுத்திருக்கலாம். மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கடந்த வாரம் 04-04-2023 அன்று புகார் அளித்தனா்[12]. ஆனால், பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை[13]. அதாவது கமிட்டி போட்டாகி விட்டது என்று சாக்கு சொல்லி தப்பித்துக் கொள்ளும். ஆனால், இதெல்லாம் தாமதப்படுத்தப் படும் யுக்திகள் என்று எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான்.

மாணவிகளை பேராசிரியா் கருப்பையா புகாரை திரும்பப் பெறுமாறு மிரட்டினாராம்: இதற்கிடையில் புகார் அளித்த மாணவிகளை பேராசிரியா் கருப்பையா புகாரை திரும்பப் பெறுமாறு மிரட்டினாராம்[14]. இதுவும் அதே பாணியில் நடந்தது எனலாம். ஊடகங்களும் இதை கண்டுகொள்ளவில்லை. இதிலுள்ள பிரச்சினை, மர்மம், அரசியல் அல்லது என்னது தடுக்கிறது, வித்தியாசமாக செயல்பட வைக்கிறது என்பது தெரியவில்லை. அதை வெளிப்படுத்த தயங்குவதும் புரியவில்லை. ஏனெனில், புகார் வாபஸ் என்றால், எல்லாமே மறைந்து விடுகிறது, அவரும் புனிதர் ஆகி விடுகிறார். ஆனால், பாதிப்பு மாணவியர்களிடம் தான் இருக்கும். பாலியல் புகார்களை விசாரிக்கும் ஐ.சி.சி., கமிட்டி விசாரணை நடத்தியது[15]. இதெல்லாம் விஷகா கமிட்டியின் படி நடப்புதான். பாதிக்கப்பட்ட மாணவி, தென் மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க்கிடம் புகார் அளித்தார். கருப்பையாவை சமயநல்லுார் மகளிர் போலீசார் 19-04-2023 அன்று கைது செய்தனர்.

31-03-2023 அன்று வரலாற்றுத்துறை பேராசிரியர் சண்முகராஜா கைதானது: இந்த பல்கலையில் வரலாற்றுத்துறை பேராசிரியர் சண்முகராஜா, மார்ச் 31ல் பாலியல் புகாரில் கைதான நிலையில், தற்போது இவர் கைதாகி உள்ளார்[16]. கருப்பையா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்[17]. மாணவியை சாதிப்பெயரை வைத்தும், உருவத்தை வைத்தும் கிண்டல் கேலி செய்ததால் நாகமலை புதுக்கோட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உதவி பேராசிரியர் சண்முகராஜா மாணவியைத் தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசியது உண்மை எனத் தெரியவந்தது[18]. அதனைத் தொடர்ந்து நாகமலை புதுக்கோட்டை போலீஸார், சண்முகராஜா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.முன்னதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளைத் தவறாகப் பேசியதாகக் கூறி, பேராசிரியர் சண்முகநாதன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்[19]. சில நாட்களுக்கு முன்பு மதுரை மத்தியச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். தற்போது மீண்டும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[20].

© வேதபிரகாஷ்

20-04-2023


[1] தினமலர், மாணவியருக்கு பாலியல் தொல்லை; காமராஜ் பல்கலை பேராசிரியர் கைது, பதிவு செய்த நாள்: ஏப் 19,2023 05:23

[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3297967

[3] தமிழ்.இந்து,  மாணவிகளிடம் தவறாக பேசியதாக மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் கைது, செய்திப்பிரிவு, Published : 19 Apr 2023 06:12 AM; Last Updated : 19 Apr 2023 06:12 AM.

[4] https://www.hindutamil.in/news/crime/977807-madurai-kamaraj-university-professor-arrested.html

[5] தினத்தந்தி, மதுரையில் மாணவிக்கு பாலியல் தொல்லை; பல்கலைக்கழக பேராசிரியர் அதிரடி கைது, ஏப்ரல் 19, 2:14 am.

[6] https://www.dailythanthi.com/News/State/student-sexually-harassed-in-madurai-university-professor-arrested-945905?infinitescroll=1

[7] தினகரன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மதுரை பல்கலை பேராசிரியர் கைது, April 19, 2023, 1:39 am

[8] குமுதம், மதுரை: கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைபோலீஸில் வசமாகச் சிக்கிய பேராசிரியர், kumudam | POLITICS| Updated: Apr 19, 2023

[9] https://www.kumudam.com/news/politics/55084

[10] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உன்னோட சைஸ் என்ன? டபுள் மீனிங் பேச்சு.. மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியர்.!, First Published Apr 19, 2023, 8:22 AM IST

[11] https://tamil.asianetnews.com/gallery/crime/sexual-harassment-of-female-students-madurai-kamaraj-university-professor-arrested-rtcdbs

[12] Nw Indian Express, Madurai Kamaraj University Psychology HoD held for sexual harassment, Published: 19th April 2023 06:36 AM  |   Last Updated: 19th April 2023 06:36 AM

[13] https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/apr/19/madurai-kamaraj-universitypsychology-hod-held-for-sexual-harassment-2567304.html

[14] தினமணி, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: காமராஜா் பல்கலை. பேராசிரியா் கைது, By DIN  |   Published On : 19th April 2023 12:00 AM  |   Last Updated : 19th April 2023 12:00 AM.

[15] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2023/apr/19/sexual-harassment-of-female-students-kamaraj-university-professor-arrested-3993154.html

[16] கூடல்.காம், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் கைது!, April 19, 2023

[17] https://koodal.com/news/2023/04/19/madurai-kamaraj-university-psychology-hod-arrested-for-sexual-harassment/

[18] கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மாணவிகளிடம் உதவி பேராசிரியர் சண்முகராஜா தரக்குறைவாகப் பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நேரில் வந்து சண்டுகராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

[19] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Crime: மாணவிகளுக்கு பாலியல் தொல்லைஅடுத்தடுத்து சிக்கிக் கொள்ளும் பேராசிரியர்கள்!, Suriyakumar Jayabalan, 19 April 2023, 8:29 IST.

[20] https://tamil.hindustantimes.com/tamilnadu/madurai-kamaraj-university-professor-has-been-arrested-for-harassing-college-girls-131681872719405.html

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (1)

ஏப்ரல் 5, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுசார்ஜாவிலிருந்து மலேசியா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என மாறியது தமிழார்வமா, அரசியலா, சித்தாந்த கோளாறா? (1)

உலகத் தமிழ் மாநாடு, உலகத் தமிழர் மாநாடு, முதலியன:தமிழ்-தமிழ் என்று பேசிக் கொண்டும், தமிழைக் காப்பேன் என்று அரற்றிக் கொண்டும், தமிழ் எங்கள் உயிர், தமிழின் உயிர், உயிரின் மூச்சு, மூச்சின் உச்சம் என்றெல்லாமும் கத்திக் கொண்டும் காசிருந்தால் மேடைப் போட்டு, புத்தகம் போட்டு, விழா நடத்தி, காலம் தள்ளிக் கொண்டே இருக்கலாம். திக-திமுக மற்ற திராவிட வகையெறாக்களில் இதைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளலாம், பாடமும் படிக்கலாம். ஏதாவது விமர்சனம் செய்தால், “தமிழின் எதிரி, தமிழர்களின் துரோகி, தமிழனத்தின் கோடாரிக் காம்பு,” போன்ற வசைகளும் எழும். இப்படியாக உலகத் தமிழ் மாநாடு நடத்துகிறேன் என்று பல சங்கங்கள், அமைப்புகள், இயக்கங்கள், கூட்டங்கள், குழுக்கள் கிளம்பியுள்ளனர்.

  • உலகத் தமிழ் மாநாடு,
  • உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,
  • அனைத்துலகத் தமிழ் மாநாடு,
  • உலகத் தமிழர் மாநாடு,
  • உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாடு,
  • இன்னும் பல இருக்கின்றன……

பிறகு திருக்குறளை வைத்து ஏகப்பட்ட கூட்டங்கள் கிளம்பி விட்டன. இவற்றில் 90% ஊரைச் சுற்றிப் பார்க்கும் கூட்டம் தான். மூன்று முதல் ஐந்து-ஆறு நாட்கள் இருக்க இடம், மூன்று வேளை சாப்பாடு கட்டாயம் கிடைக்கும் என்ற போர்வையில் தான் சுற்றுலா திட்டம் போடப் பட்டு, ஆட்கள் கூட்டம் சேருகிறது. இதில் பல நிலைகளில் பலர் வியாபாரமும் செய்து, பணம் சம்பாதிக்கின்றனர். விசா, விமான டிக்கெட் வாங்குவது, உள்ளூர் சுற்றிப் பார்ப்பது என்று பலவழிகளில் வியாபாரம் நடந்து வருகிறது. ஏனெனில் ஏஜென்டுகளுக்கு, ஏஜென்டாக செயல்படுகிறவர்களுக்கு எல்ல நிலைகளிலும் கமிஷன் கிடைக்கிறது. இப்படி மாநாடுகள் நடத்துகிறவர்கள் அல்லது சம்பந்தப் படுபவர்கள் சுற்றுலா ஏஜென்டாகவே மாறி வியாபாரத்தை ஆரம்பித்து விடுகிறார்.

மாநாடுகள் சுற்றுலாவுக்கு உபயோகப் படுத்தப் பட்டு, வியாபாரமாகின்றது: ஹோட்டலில் தங்கி, குளித்து சாப்பிட்டு ஊர் சுற்றக் கிளம்பி விடுவர். மதியம் உணவுக்கு வந்து விடுவர். தூரமாக இருப்பின், இரவு உணவுக்குக் கட்டாயம் வந்து விடுவர். அந்த ஏஜென்டே எல்லாம் செய்து விடுவார். ஆக, தமிழுக்காக, மாநாட்டில் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்பவர் 10 பேர் கூட் இருக்க மாட்டார்கள். இதில் என்ன வேடிக்கை அல்லது வருத்தப் படவேண்டிய விசயம் என்றால், அத்தகைய, முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்தால், அவற்றை ஒதுக்கி விடுவர். பிறகு, அவற்றை காப்பி அடிக்காமல் இருந்தால் சரி. ப்பொழுதெல்லாம், இதற்கும் “எதிக்ஸ்” என்றெல்லாம் பேசப் படுகிறது. ஆனால், அதிலும் அவர்கள் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் ஆயிரகணக்கில் மின்னஞ்சல்களில் பெறப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சேகரிப்பவர்கள் என்ன செய்கிறார்கள், செய்வார்கள் என்று தெரியவில்லை. ஒழுங்காக, ஒழுக்கமாக, ஆராய்ச்சி தர்மத்தைப் பின்பற்றுவார்களா, இல்லை, ஜாலியாக-தாராளமாக “கட்-அன்ட்-பேஸ்ட்” அல்லது “காபி-அன்ட்-பேஸ்ட்” செய்து பிழைப்பார்களா, வியாபாரம் செய்வர்களா என்பதெல்லாம் ஆராய வேண்டியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில், அவர்கள் தமிழ்-தமிழாராய்ச்சி முதலியவற்றில் என்ன-எதனை சாதித்தார்கள் என்று தெரியவில்லை. மென்பொருளின் சாதனை நடந்துள்ளது, இல்லையென்றா இப்படி தமிழில் தட்டச்சு செய்ய முடியாது. இப்பொழுது, அதற்கும் கூகுள் டிரான்ஸ்டேட் வந்து விட்டது. முரட்டுத் தனமான மொழிபெயர்ப்பு நடந்து கொண்டிருக்கிறது.

1966 முதல் 2023 வரை: உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், மொழி வளர்ச்சிக்காகவும் நடைபெறும் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை மாதம் 2023 நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் கவனிப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். உலகத் தமிழறிஞர்களை ஒன்று சேர்த்து அவர்களது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்தவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் திட்டமிட்டது. இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய 1966-ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 10 உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இருப்பினும், இவை அரசியல் சார்ந்து நடந்ததாகவே அறியப் படுகின்றது. மேலும், “மொழிப்பற்று” போர்வையில், உணர்ச்சிப் பூர்வமான உபன்யாசங்கள், பாஷணங்கள் மற்றும் கதாகாலக்ஷேபங்கள் புரிந்ததும் தெரிகிறது. கல்வி, படிப்பு மற்றும் போதனை போன்றவற்றிற்குப் பதிலாக சித்தாந்த உச்சங்களின் எல்லைகளில் அவை பலியானதும் புரிகின்றது.

மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த 2,500 தமிழறிஞர்கள், இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் ரூபாய் 25 கோடி செலவு: இந்நிலையில், 11ஆவது உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெறுகிறது. உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தால் 1966 முதல் நடத்தப்பட்டு வரும் உலகத் தமிழ் மாநாடு இதுவரை தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, தஞ்சாவூரில் இலங்கை, மலேசியா, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் மொரிசியசிலும் நடைபெற்றுள்ளது. இந்த உலகத் தமிழ் மாநாட்டில் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், மொழி வளர்ச்சிக்காகவும் நடைபெறும் மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன், தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 3 நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,500 தமிழறிஞர்கள், இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர். சுமார் ரூபாய் 25 கோடி செலவில் நடைபெறவிருந்தது.  இப்பொழுது மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு மாறியுள்ளது. சரி இவ்வாறு கோடிகளில் செலவு செய்து தமிழுக்கு என்னவாகப் போகிறது? இதுவரை 10 மாநாடுகள் நடந்திருப்பதால் 200 கோடிகளும் செலவாகி இருக்கலாம். ஆனால், கடந்த காலங்களில் தமிழ் புலவர்கள், பண்டிதர்கள் கவிஞர் போன்றோர் செய்ததில் 1% ஆவது தமிழுக்கு சேவை செய்திருப்பார்களா? அல்லது அவ்வாறு செய்தேன் என்பதற்கு எதையாவது காண்பிர்ப்பார்களா?

சார்ஜாவிலிருந்து மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வரை: இந்த உலகத்தமிழ் மாநாட்டில் சார்ஜாவில் 2023 ஜூலையில் நடைபெறுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது[1]. இணைதள குழுக்களில் அதிகமாகவே பேச-பகிரப் பட்டன. இதற்கான மாநாட்டு விவரங்கள் அடங்கிய அழைப்பிதழ், அமைப்புகள், அமர்வுகள், அதற்கான அறிக்கைகள் எல்லாம் தயாராகியது[2]. ஆய்வுக்கட்டுரைகள் எல்லாம் மின்னஞ்சல்கள் மூலம் ஏற்கப்பட்டன. சென்னையில் ரு நிறுவனம், இதே போல பலருக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்து, ஆய்வுக்கட்டுரை ஏற்க பணம் கட்ட வேண்டும் என்று கூட ஆரம்பித்தார். ஆனால், சார்ஜாவில் நடத்த முடியாமல் போனது அல்லது இயலவில்லை அல்லது காரணம் அறிவிக்க முடியவில்லை என்பது அமைதியாகி விட்டது[3]. தயார் செய்யப் பட்ட, அச்சிடப் பட்ட / வெளியான எல்லா ஆவணங்களும் வீணாகின[4]. இந்நிலையில், சில நிர்வாக காரணங்களினால் சார்ஜாவுக்கு பதிலாக மலேசியாவில் ஜூலை 21 – 23 வரை மலேயா பல்கலை வளாகத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது[5]. இங்கும் “அதிகார பூர்வமான அறிவிப்பு” என்பதனைக் கவனிக்கலாம். ஏற்கனவே மூன்று உலகத் தமிழ் மாநாடுகள் மலேசியாவில் நடைபெற்றுள்ளது[6]அப்படியென்றால் ஆன்காவது முறை ஏற்பார்களா என்ற கேள்வி எழுகிறது.

© வேதபிரகாஷ்

05-04-2023


[1] தினகரன், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில் 2023-ம் ஆண்டு ஜூலையில் நடைபெறும், June 7, 2022, 5:25 pm.

[2] https://www.dinakaran.com/11%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/

[3] வீரகேசரி, சார்ஜாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, Published By: VISHNU, 23 JUN, 2022 | 02:41 PM; https://www.virakesari.lk/article/130046

[4] https://www.virakesari.lk/article/130046

[5] தமிழ்.நியூஸ்.7, மலேசியாவில் 11-வது உலகத்தமிழ் மாநாடு; ஜூலை மாதம் நடைபெறுவதாக தகவல், by Yuthi, February 22, 2023 04.78

[6] https://news7tamil.live/11th-world-tamil-conference-in-malaysia-it-is-reported-to-be-held-in-july.html

தமிழக பல்கலைக் கழகங்களில் கல்வி சீரழியும் நிலை – தேர்வுகளில் குளறுபடி, வினாதாள்களில் குழப்பம் மற்றும் திருத்துவதில் முறையற்றத் தன்மை! (2)

பிப்ரவரி 23, 2023

தமிழக பல்கலைக் கழகங்களில் கல்வி சீரழியும் நிலைதேர்வுகளில் குளறுபடி, வினாதாள்களில் குழப்பம் மற்றும் திருத்துவதில் முறையற்றத் தன்மை! (2)

2022- நவம்பர்சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள்: சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 131 இணைப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. சென்னை பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வில் குளறுபடி ஏற்பட்டதால் 18-11-2022 அன்று நடைபெறவிருந்த தமிழ் தேர்வு ரத்து செய்யப்பட்டது[1]. சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கலை அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடந்து வந்தன[2]. 18-11-2022 அன்று 2ம் ஆண்டு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு, மூன்றாவது செமஸ்டர் தமிழ் தேர்வு நடைபெற இருந்தது. ஆனால், மாணவர்களுக்கு 4வது செமஸ்டருக்கான கடந்த ஆண்டு வினாத்தாள் வழங்கப்பட்டது. அதில் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் தவறுதலாகவும், அது வேறு பருவப் பாடங்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனால் தோ்வுக்கு தயார் நிலையில் வந்திருந்த மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். தொடர்ந்து மாணவர்கள் தேர்வறைகளில் இருந்து வெளியேறிய நிலையில், வினாத்தாள் மாறியது குறித்து விசாரணை நடத்த தொழில்நுட்பக் கல்வி ஆணையர் லட்சுமி பிரியா உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைத்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதிதாக தேர்வு நடத்தப்படும் என பல்கலைக் கழகம் தெரிவித்து உள்ளது[3]. மேலும் வினாத்தாள் மாறியது குறித்த விசாரணை அறிக்கையை 2 மாதங்களுக்குள் அளிக்கவும் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது[4]

ஏதோ காரணங்களுக்காக தேர்வு எழுத முடியாதவர்களை தனியாக எழுதவைக்கும் முறை: இல மாணவர்கள் உடல் நலம் சரியில்லை, குடும்பத்தில் இறப்பு, நல்லது-கெட்டது போன்ற நிலை என்று குறிப்பிட்ட தேதிகளில் தேர்வு  எழுத முடியாத நிலை ஏற்ப்டுகிறது. தேர்வுகளை எப்பொழுது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம், குறிப்பாக எல்லோருக்கும் நடத்தப் படும் பொழுது, பங்கு கொள்ளாமல் இருந்தால், தனியாக வரவழைக்கப் பட்டு, ஒரு நாளில் அவ்வாறு வராதவர்களுக்கு தேர்வு நடத்தப் படுவது சகஜமாகி விட்டது. அந்நிலையில் பொதுவாக அதே வினாதாள் கொடுக்கப் பட்டு எழுதுவிக்கப் படுகிறது. முன்பெல்லாம், அடுத்த பரீட்சை வரும் பொழுது, மற்றவர்களுடன் உட்கார வைக்கப் பட்டு, அதே னினாதாள் கொடுக்கப் பட்ட், முறையான கண்காணிப்புடன் எழுத வைக்கப் பட்ட நிலை இருந்தது. இப்பொழுது, இவ்வாறு தனியாக  வரவழைக்கப் பட்டு, எழுதுவிக்கப்படும் பொழுது, முறையற்ற நிகழ்வுகள் ஏற்படலாம்.  கண்காணிப்பு இல்லை என்றால், எளிதாக காப்பி அடித்து அல்லது செல்போன் உதவியுடன் எழுதலாம். இருக்கும் ஒரே கண்காணிப்பாளரே உதவலாம். அவர்கள் இருவர் மட்டும் இருக்கும் பட்சத்தில் என்ன நடந்தது என்பது அவர்கள் இருவருக்கும் தான் தெரியும்.

அம்முறையே ஊழலுக்கு வழிவகுத்து பணம் சம்பாதிக்க உபயோகப் படுத்தப் படுவது: ஆக, இத்தகைய முறையை வாடிக்கையாக மாற்றிக் கொண்டு, இதில் ஊழல் ரீதியில் பணம், ஆதாயம், போன்ற பேரங்களுடன் தேர்வுகள் நடத்தப் படலாம். வேண்டிய அளவுக்கு மதிப்பெண்களும் போடலாம். அம்முறையே ஊழலுக்கு வழிவகுத்து பணம் சம்பாதிக்க உபயோகப் படுத்தப் படுகிறது. அவ்வாறு நடக்க ஆரம்பித்து விட்டது என்பது தான் உண்மை. முன்னர், மந்திரி, எம்.பி, எம்.எல்.ஏ, போன்ற விஐபிக்களுக்கு பின்பற்றப் பட்டு வந்த நிலை இப்பொழுது, இவ்வாறான “தேர்ந்தெடுக்கப் பட்ட” அல்ல செல்லப் பிள்ளைகளுக்கு உபயோகப் படுத்தப் படுகிறது. இம்முறையைப் பின்பற்றலாம் என்று தெரிந்த மாணவர்கள் தாம், வகுப்புகளுக்கும் ஒழுங்காக வருவதில்லை. அல்கலைக்கழக / கல்லூரி வளகங்களில் சுற்றிக் கொண்டிருப்பது, டீ-காபி குடிக்கச் செல்கிறேன் / ரெஸ்ட் ரூம் செல்கிறேன் என்று வெளியே சென்று வராமல் இருப்பது, உடன் மற்ற மாணவர்களையும் கூட்டிச் செல்வது போன்ற அடாவடித் தனங்களும் நடந்தேறி வருகின்றன.

எல்லாவற்றிற்கும் சார்ட் கட் / குறுக்கு வழி ஏற்படுத்தப் பட்டுள்ளது: அட்டென்டென்ஸ் இல்லை என்றால் அதற்கும் “பெனால்டி பீஸ்” கட்டி விட்டு, பரீட்சை எழுதலாம் என்ற முறையும் செயல்பட்டு வருகிறது. இதனால், கல்வியில் நாட்டமில்லாதவர், பணக்காரப் பையன்கள், எப்படியும் பாசாகி விடலாம் என்று தைரியமாக இருப்பவர்கள், சார்ட் கட் / குறுக்கு வழிகளை பின்பற்றுகின்றனர். இப்படி, ஒவ்வொரு நிலையிலும் முறையற்ற வழிகள் பின்பற்றப் படும் பொழுது, கல்வித் தரம், படிப்புத் தன்மை, ஓதித்தல்-கற்றல் என்ற எல்லாவற்றிலும் தொய்வு ஏற்படுகின்றது. ஒழுங்காக பாடம் எடுக்க வருகின்ற ஆசிரியர்களுக்கும் தொந்தரவு ஏற்படுகின்றது. ஏனெனில், அவர்கள் சில நேரங்களில் ஏதோ / தேவையற்ற காரணங்களுக்காக, “வகுப்பிற்கு செல்லாதே, எங்கள் கூட வா” என்று வற்புருத்தும் போக்கும் காணப்படுகிறது. இதனால், ஒழுங்காக தினமும் படிக்க வரும் மாணவர்கள் பாதிக்கப் படுகின்றனர்.

படிப்பை உதாசீனப் படுத்தி எப்படியாகிலும் பாசாகி விடலாம் என்றிருப்பவர்களிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது: இவ்வாறு நடந்து கொள்ளும் ஆணவ-மாணவியர்களிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது. ஒரு பக்கம் பெரியவர்களுக்கு மதிப்பு தருவதில்லை. பெண்களுக்கு மரியாதை கொடுப்பதே இல்லை. பெற்றோரிடம் உண்மையாக இருப்பதில்லை. சகோதரர்களிடம் இணக்கமாக இல்லை. அவர்களின் ஏக்க-துக்கங்களையெல்லாம் குறித்து அக்கறையே இல்லை. என்றெல்லாம் புலம்புவதும் தெரிகிறது[5]. அக்கம்பக்கம் குறித்த பயமில்லை. சமூகம் தொடர்பான புரிதலே இல்லை. இப்படிப்பட்ட கட்டமைப்புடன் இருக்கிற இன்றைய தலைமுறையினர், பெரியவர்களையும் பெண்களையும் புரிந்துகொள்ளாமல் மிகக் கேவலமாக இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள், என்றெல்லாம் தொடர்கிறது. குறிப்பாக, பெண்களை வெறும் போகப்பொருளாக நினைத்தைதையும் கடந்து, அவர்களின் உடலையும் உடைமைகளையும் பறித்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இப்போது இருக்கிற நவீன சாதனங்களின் துணையுடன், படமெடுத்து, வீடியோ எடுத்து, ப்ளாக்மெயில் செய்து, மிரட்டி, அடித்து, உதைத்து, பெண்களை வதைத்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கே, வீடும் சமூகமும் பெண்களை மதிப்பது குறித்து கற்றுக்கொடுக்கவே இல்லை என்பதுதான் வேதனை[6].

இப்படியும் நடந்துள்ளது: உதாரணத்திற்கு இது ஒடுக்கப் படுகிறது. பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது, பிளஸ் 1 மாணவர் ஒருவர் தனது, நண்பர்களுடன் சிகரெட் பிடித்து, மாணவிகள் முகத்தில் புகை விட்டு கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது[7]. சம்பந்தப்பட்ட மாணவரை அழைத்து சென்று, இதுபோன்ற பழக்கங்களில் ஈடுபட்டால், பள்ளி வகுப்பறைகளில் சேர்க்க மாட்டோம், பெற்றோர்களிடம் தெரிவித்து டிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்து அடித்ததாக கூறப்படுகிறது[8].  பாதிக்கப்பட்ட மாணவன் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால், நான்கு ஆசிரியர்கள் சஸ்பெண்ட்  செய்யப்பட்டனர். இதில், பாதிக்கப்பட்ட மாணவி ஆசிரியர்களிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். மாணவன் புகை பிடித்து மாணவி மீது ஊதிய விவகாரத்தில் ஆசிரியர்கள் சஸ்பெண்ட்  செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மாணவமாணவியர் தொட்டுப் பேசி, கட்டிப் பிடிக்கும் கலாச்சாரத்தை யாரும் கண்டிப்பதில்லை: இப்படியெல்லாம் எடுத்துக் காட்டினாலும், பல்கலை-கல்லூரி வளாகங்களில் மாணவியர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம். மாணவி-மாணவர்கள் பேசிக் கொள்வது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தொட்டு, அடித்துப் பேசும் மாணவி-மாணவர்களை சகஜமாக காணலாம். தோள்மேல் கை போட்டுக் கொண்டு, மடியில் படுக்கும் நிலைகளையும் காணலாம். இவையெல்லாம் சுரணையற்றத் தன்மையா, காதலா, மோகமா, அனைத்தையும் கடந்த நிலையா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய முடியாது. பெற்றோர் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற கவலைக் கூட அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருந்தால், நிச்சயமாக, அத்து மீறி எந்த மாணவியும் நடந்து கொள்ள மாட்டாள், தன் மீது இன்னொரு மாணவன் கை வைக்க அனுமதிக்க மாட்டாள்.  பார்க்கும் சக-மாணவி-மாணவர்கள் ஆசிரியர்கள் முதலியோரும் தட்டிக் கேட்பதில்லை, கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

23-02-2023.


[1] தினத்தந்தி, பேப்பர் கொடுத்தாலே எழுதமாட்டோம்..இதுல பேப்பர் மாத்தி கொடுத்துட்டாங்க…” – சென்னை பல்கலை.யில், By தந்தி டிவி 18 நவம்பர் 2022 4:15 PM

[2] https://www.thanthitv.com/latest-news/chennai-university-149394

[3] தினமணி, சென்னை பல்கலை.யில் வினாத்தாள் குளறுபடி: விசாரணைக்குழு அமைப்பு, By DIN  |   Published On : 19th November 2022 06:02 PM  |   Last Updated : 19th November 2022 06:07 PM.

[4] https://www.dinamani.com/tamilnadu/2022/nov/19/university-of-madras-exam-issues-3952354.html

[5] தமிழ்.இந்து, ஒழுக்கம் போதிக்கும் கல்வி வருமா?, செய்திப்பிரிவு, Published : 15 Apr 2019 02:36 PM, Last Updated : 15 Apr 2019 02:36 PM.

[6] https://www.hindutamil.in/news/opinion/columns/161748-.html

[7] தினகரன், மாணவன் புகை பிடித்து மாணவி மீது ஊதிய விவகாரம் ஆசிரியர்கள், சஸ்பெண்ட் கண்டித்து மாணவர்கள் சாலை மறியல், 2022-09-27@ 14:15:20

[8] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=802627

தமிழக பல்கலைக் கழகங்களில் கல்வி சீரழியும் நிலை – தேர்வுகளில் குளறுபடி, வினாதாள்களில் குழப்பம் மற்றும் திருத்துவதில் முறையற்றத் தன்மை! (1)

பிப்ரவரி 23, 2023

தமிழக பல்கலைக் கழகங்களில் கல்வி சீரழியும் நிலைதேர்வுகளில் குளறுபடி, வினாதாள்களில் குழப்பம் மற்றும் திருத்துவதில் முறையற்றத் தன்மை! (1)

இறந்த பேராசிரியருக்கு பேப்பர் திருத்த அழைப்பு: இறந்தவர்கள் அல்லது இறந்ததாகக் கருதப் பட்டவர் உயிரோடு ஓட்டுப் போட வந்தார் என்றெல்லாம் செய்திகள் படித்திருக்கலாம். ஆங்கிலத்தில் “Dead men tell no tales”  இறந்த நபரால் இனி தகவல்களை -குறிப்பாக மற்றவர்கள் ரகசியமாக வைத்திருக்க விரும்பும் தகவல்களை – வெளிப்படுத்த முடியாது, என்று குறிப்பிடுவார்கள். எமில் ஜோலா (1840-1902), எழுதிய, “இறந்த மனிதர்கள் கதை சொல்லவில்லை” என்ற புத்தகமும் பிரசித்தி பெற்றது. பிறகு, அதே பெயரில் திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. ஆனால், அது திராவிட மாடலில் இப்படியும் இருக்கலாம் போலிருக்கிறது. இறந்த நபருக்கு சிகிச்சை என்று லட்சத்தில் பணம் பிடுங்கும் கதைகளைப் பார்த்திருக்கிறோம். இறந்தவர்கள் ஓட்டு போட்டதாகக் கூட செய்திகள் வந்துள்ளன. இப்பொழுது, இப்படியொரு செய்தி[1]இறந்த பேராசிரியருக்கு பேப்பர் திருத்த அழைப்பு”.

இறந்த பேராசிரியருக்கு பேப்பர் திருத்த திருவள்ளுவர் பல்லை அழைப்பாணை அனுப்பியுள்ளது: கொரோனாவால் இறந்த பேராசிரியருக்கு, கல்லுாரி மாணவர்கள் எழுதிய தேர்வுத்தாளை திருத்தம் செய்ய வருமாறு, திருவள்ளுவர் பல்லை அழைப்பாணை அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[2]. வேலுார் அடுத்த சேர்க்காட்டிலுள்ள திருவள்ளுவர் பல்கலை கட்டுப்பாட்டில், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன[3]. கல்லுாரி மாணவர்களின் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, காட்பாடியிலுள்ள கல்வியியல் கல்லுாரியில் 14-02-2023 தொடங்கியது[4]. இந்நிலையில், வேலுார் ஊரீசு கல்லுாரியில் பணிபுரிந்து வந்த வேதியியல் பேராசிரியர் விஜயகுமார், 2021ல் கொரோனாவால் இறந்த நிலையில், 14-02-2023 அன்று தொடங்கிய விடைத்தாள் திருத்தும் பணிக்கு வருமாறு, அவருக்கு, பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சந்திரன் அழைப்பாணை அனுப்பியுள்ளார்[5].

குடும்பத்தினர் திகைத்து பல்கலைக் கழகத்தினரை விசாரித்தது: அதை கண்ட குடும்பத்தினர் திகைத்துள்ளனர். தொடர்பு கொண்டு கேட்ட போது, ஏதோ தவறு நடந்துள்ளது, விசாரிக்கிறோம் என்று கூறியுள்ளனர்[6]. இந்த நடவடிக்கை, கல்லுாரி பேராசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[7]. “திருவள்ளுவர்” பெயரை வைத்துக் கொண்டு இடயங்கும் இப்பல்கலைக் கழகம், தொடர்ந்து பற்பல சர்ச்சைகள், ஊழல்கள், மரணங்கள் என்று பீடித்து வருவதைக் கவனிக்கலாம். பல்கலை பணி மூப்பு பட்டியலை எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பதற்கு, இது ஒன்றே சாட்சியாக உள்ளது என, கல்லுாரி பேராசிரியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். வழக்கம் போல, கிளர்க் / எழுத்தர் / உதவியாளர் போன்றோரின் தவறு என்று விளக்கம் கொடுத்து அமைதியாகி விடுவர். ஆனால், எவ்வாறு நடந்தது என்று சொல்ல மாட்டார்கள். திருத்திக் கொள்ள மாட்டார்கள், திருந்தவும் மாட்டார்கள்.. எல்லாவற்றிலும் நாங்கள் தான் ஃபர்ஸ்ட் / முதலில் உள்ளோம் என்று இப்பொழுதெல்லாம், “திராவிட ஸ்டாக்குகள்” தம்பட்டம் அடித்துக் கொல்வதைப் பார்க்கிறோம்.

கேள்வித் தாள்களில் குளறுபடிசகஜமப்பா நிலையில் உல்ளது: அதே நேரத்தில், தினம்-தினம் ஊடகங்களில் நினைத்துப் பார்க்க முடியாத, கற்பனைக்கும் எட்டாத நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. இளங்கலை வேதியியல் பயிலும் ஐந்தாம் பருவ மாணவர்களுக்கு பிசிகல் கெமிஸ்ட்ரி தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களில் பெரும்பாலானவை ஆறாம் பருவ பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்[8]. இதில், 2 மதிப்பெண் கொண்டதில் 4 வினாக்களும் 5 மதிப்பெண் கொண்டதில் 2 வினாக்களும் 10 மதிப்பெண் கொண்டதில் 2 வினாக்களும் என ஆறாம் பருவ தேர்வு தொகுப்பிலிருந்து இடம்பெற்றுள்ளது. மேலும், கேள்வி எண் 7-10, 14-15, 19-20 ஆகியவை வேறு பாடத் திட்டத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது[9]. இதேபோன்று கடந்த முறை நடைபெற்ற தேர்விலும் வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

2020ல் ஒரே நாளில் அனைத்து எமஸ்டர் தேர்வுகள்: கொரோனா காலத்தில்வீட்டில் இருந்தே தேர்வுகள் எழுதலாம் என்ற முறை இருந்த பொழுது, பற்பல ஊழல்கள் நடந்தேறியுள்ளன. அதன் தன்மை அறிந்து காசாக்க, பல்கலைக் கழகங்களில் பல கும்பல்கள் திட்டமிட்டு, கல்வியில் ஊழல் செய்துள்ளன. இதனால், படிப்பிற்கே மரியாதை இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. அம்முறை எப்பொழுது வேண்டுமானாலும், எப்படியாகிலும் செயல்படுத்தலாம் என்ற யுக்தியினையும் கற்றுக் கொண்டு விட்டார்கள். இதுகுறுத்து கடலூரைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறும்போது, ‘‘தேர்வுகளை மாணவர்கள் வீட்டில் இருந்தே எழுதலாம் என கூறியுள்ளனர். அரியர் தேர்வுகளைப் பொறுத்தவரை சில மாணவர்கள் ஒரே செமஸ்டரில் 3,4,5 என பாடங்களுக்கான தேர்வு எழுத வேண்டியுள்ளது. பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி ஒரே நாளில் ஒரு மாணவர் செமஸ்டரில் தேர்ச்சி பெறாத அனைத்து பாடங்களுக்கும் தேர்வு எழுத வேண்டியுள்ளது.

ஒரே நாளில் 3 அல்லது நான்கு பாடங்களுக்கு தேர்வு எழுதுவது என்பது சாத்தியமா?[10]: என்பதை பல்கலைக் கழக நிர்வாகம் யோசிக்க வேண்டும். ஒரே நாளில் எழுத வேண்டும் என வற்புறுத்துவதால் அந்த மாணவருக்கு பதில் வேறு மாணவர்கள்தான் தேர்வு எழுதுவார்கள். பிறகு, எதற்காக தேர்வு நடத்த வேண்டும். இது தேர்வு நடைமுறையை கேலிக்கூத்தாக்குவதாக உள்ளது’’ என தெரிவித்தார்[11]. வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் 28 முதல் டிசம்பர் 29ம் தேதி வரை நடந்தன. மொத்தம் 1.5 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வுகள் நடந்த போதே, கேள்வித்தாள்கள் இமெயிலில் அனுப்பப்பட்டது, ஜெராக்ஸ் எடுத்து வினியோகிக்கப்பட்டது என்று குளறுபடிகள் நடந்தன. விடைத் தாள்கள் அனுப்புதல் முதலிவயற்றிலும் மோசடிகள் நடந்துள்ளன. இதில் தான், பலருக்கு “டிகிரி” கிடைக்க ஏற்பாடு செய்யப் பட்டது. லட்சக்கத்தில் விற்பனையும் செய்யப் பட்டது.

100க்கு 101, 102, 107 என்று மதிப்பெண்கள் போடப்பட்டுள்ளது: இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் காண வந்த மாணவ-மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வு எழுதிய மாணவர்கள் பலர் தேர்வுகளை எழுதாமல் ஆப்சென்ட் ஆன தாகவும், பல மாணவர்களின் பதிவு எண்கள் வேறு படிப்பை படிக்கும் மாணவர்களது எண்களாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவசரம், அவசரமாக மறுநாள் இரவே தேர்வு முடிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், அதிலும் குளறுபடிகள் எதிரொலித்தன. இந்தமுறை பல மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களை காட்டிலும் கூடுதலாக மதிப்பெண்களை வழங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம்.குறிப்பாக, கடலூரில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்சி படிக்கும் 15 பேரின் மதிப்பெண் பட்டியலில், ஒரு பாடத்துக்கு இன்டர்னல் மதிப்பெண் 25 மதிப்பெண்கள் என்றால், எக்ஸ்டெர்னல் மதிப்பெண்கள் 75 ஆகும். ஆனால், எக்ஸ்டெர்னல் மதிப்பெண் 75 மதிப்பெண்களுக்கு மேல் போடப்பட்டு ஒவ்வொரு மாணவனுக்கும் 100க்கு 101, 102, 107 என்று மதிப்பெண்கள் போடப்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

23-02-2023.


[1]  தினமலர், https://www.youtube.com/watch?v=d3EXGrGZzPM

[2] தினமலர், இறந்த பேராசிரியருக்கு பேப்பர் திருத்த அழைப்பு, Added : பிப் 15, 2023 00:56.

[3] https://www.dinamalar.com/news_detail.asp?id=3242414

[4] ஜீநியூஸ், கொரோனாவில் இறந்த பேராசிரியர் விடைத்தாள் திருத்த பல்கலை., அழைப்பு!, Zee Media BureauFeb 15, 2023, 01:00 AM IST.

[5] https://zeenews.india.com/tamil/videos/vellore-thiruvalluvar-university-calls-professor-for-exam-paper-correction-who-died-two-years-ago-432579

[6] இ.டிவி.பாரத், உயிரோடு இல்லாத பேராசிரியர் பேப்பர் திருத்த உத்தரவு; திருவள்ளுவர் பல்கலை. விளக்கம் என்ன?, Published on: February 17, 2023, 6.46 AM IST.

[7] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/vellore/thiruvalluvar-university-claims-death-professor-issue/tamil-nadu20230217064634865865430

[8] இ.டிவி.பாரத், திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வில் குளறுபடி, Published on: December 16, 2020, 5:18 PM IST.

[9] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/cuddalore/mess-in-chemistry-exam-conducted-by-thiruvalluvar-university/tamil-nadu20201216171817709

[10] தமிழ்.இந்து, திருவள்ளுவர் பல்கலை கழகத்தில் கேலிக்கூத்தாக மாறியஅரியர்தேர்வு அட்டவணை ஒரே நாளில் ஒரு மாணவர் 5 தேர்வுகளை எழுதும் விநோதம், வ.செந்தில்குமார், Published : 17 Feb 2021 03:13 AM, Last Updated : 17 Feb 2021 03:13 AM

[11] https://www.hindutamil.in/news/todays-paper/regional02/634513–2.html