Archive for the ‘தமிழ் ஆராய்ச்சி மாநாடு’ Category

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது – திருமாவளவன் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு ! (4)

ஜூலை 26, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது – திருமாவளவன் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு ! (4)

3-R, RRR, பற்றி மலேசிய முதல்வர் உறுதியாக இருக்கிறார்: மலேசிய பிரதமர் [3-R, RRR, Religion, Race, Royalty] விசயங்களில் யாரும் மற்றவர்களை தாழ்வாகப் பேசக் கூடாது என்று உறுதியாக இருக்கிறார், அதை பலமுறை எடுத்தும் காட்டியுள்ளார். ஆகையால், துவேசப் பேச்சுகளுக்கு மலேசியாவில் இடமில்லை. அந்நிலையில், நாத்திகம், பகுத்தறிவு, பெரியாரிஸம் என்று இதுவரை பேசி வந்தவர்களுக்கு இனி மலேசியாவில் அவ்வாறு பேச முடியாத நிலை உருவாகியிருக்கிறது. மொழி என்று வைத்துக் கொண்டாலும், அதை வைத்து முன்னேற வழிவகுக்க வேண்டுமேயன்றி, மொழிவெறியாக்கி, அதனை மதம், சித்தாந்தம், அரசியல் இவற்றுடன் சேர்த்து பிரச்சினை உண்டாக்கலாகாது. என்ன வேண்டுமானாலும்பேசி, நாத்திகம், பகுத்தறிவு, பெரியாரிஸம் என்று தப்பித்துக் கொள்ள முடியாது. மற்றவர்களின் உணர்வுகளை, உரிமைகளை மதித்தாக வேண்டும். இதனால், அத்தகைய சித்தாந்திகள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை உண்டாகியுள்ளது.

அரசியல்வாதிகள் பிஜேபி-எதிர்ப்பை இந்துதுவேசமாக மாற்றுவது: தமிழகத்தை சேர்ந்த பாஜக எதிர்ப்பு நிலை அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் தற்போது பெரும் சிக்கலை இந்தியாவில் எதிர்கொள்வது மட்டுமல்ல உலக தமிழர்கள் இடையேயும் எதிர்கொண்டு இருப்பது பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. பிஜேபி-எதிர்ப்பு பெரும்பாலான நிலைகளில் இந்துவிரோதமாகி, இந்து துவேசமாகி, வெறுப்புப் பேச்ச்களில் முகின்றன. இங்குதான் சட்டமீறல்களும் வருகின்றன. புகார்கள் கொடுக்கப் பட்டு வழக்குகள் பதிவான்றன.ஆனால், தங்களது அரசியல் ஆதிக்கம் மூலம், அப்படியே அமுக்கப் பட்டு, தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால், இப்பொழுது மக்களுக்கு விழிப்புணர்வு வந்து விட்டது. செக்யூலரிஸ அரசாங்கம் எனும்பொழுது, அவ்வாறு ஏன் இந்துமதத்திற்கு மட்டும் விரோதமாக பேசி வருகிறார்கள் என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். தொடர்ச்சியாக வீரமணி, திண்டுக்கல் லியோனி அவரை தொடர்ந்து திருமாவளவன் ஆகிய மூவரும் அடுத்தடுத்து குறிப்பிட்ட கால இடைவேளையில் மலேஷிய தமிழர்கள் இடையே எதிர்ப்பை சந்தித்து இருப்பது அதன் பின்னணியில் என்ன என்ற தகவல்தான் தற்போது ஒட்டுமொத்த திராவிட ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

2019ல் திக- வீரமணி நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டது: 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24 -ம் தேதி திராவிட கழக தலைவர் வீரமணி தலைமையில் மலேஷியாவில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது அப்போது தொடர்ச்சியாக இந்து மதத்தை விமர்சனம் செய்யும் வீரமணி மலேஷியாவில் கால் வைக்க கூடாது எனவும், அப்படி வைத்தால் மத மோதல் உண்டாகும் எந்த மதத்தையும் தவறாக பேசாத மலேஷிய மக்கள் வாழும் இடத்தில் வீரமணி வந்தால் ஒற்றுமை குறையும் என மலேசியா உள்துறை அமைச்சகத்தில் இந்து தர்ம சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட உடனடியாக வீரமணி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை திராவிட சித்தாந்தம் பேசுவோருக்கு உண்டாக்கியது, இதையடுத்து மலேஷியா சென்ற திண்டுக்கல் லியோனி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்ட நேரத்தை கடந்து உள்ளே வர  அவரை வாசலில் நிற்க வைத்து மலேஷியா தமிழர்கள் வெளுத்து வாங்கினர், தமிழ்நாட்டில் இருந்து வாய் கிழிய ஊருக்கு மேடை மேடையில் நின்று கொண்டு உபதேசம் செய்வது ஆனால் நேரில் பார்த்தால் உங்கள் லட்சணம் தெரிகிறது? குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்றால் நீங்கள் எதற்கு மலேஷியா வருகிறீர்கள் என வெளுத்து வாங்கினர்[1]. அந்த வீடியோ இணையத்தில் TNNEWS24 வெளியிட பெரும் பரபரப்பு தமிழகத்தில் உண்டானது இதையடுத்து திண்டுக்கல் லியோனி விளக்கம் கொடுக்கும் நிலைக்கு சென்றது தமிழக அரசியல் சூழல்[2].

2023ல் திருமாவின் பேச்சிற்கு பலத்த எதிர்ப்பு: இந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய தாக்கம் ஓய்வதற்குள் சில நாட்கள் முன்னர் திருமாவளவன் மலேஷியாவில் பேச சென்று கடும் எதிர்ப்பை சந்தித்து வந்து இருக்கிறார் அதிலும் மதம் குறித்து திருமாவளவன் பேச நிறுத்துடா என கிளம்பிய எதிர்ப்பு பெரும் பின்னடைவை திருமாவளவனுக்கு கொடுத்து இருக்கிறது. திருமாவளவன் மேடையில் பேசும் போது “தமிழ்த் தேசியம் என்பது மொழி, இன உணர்வு மட்டுமல்ல. அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டம்.” என்றார். “மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான். அவற்றைக் கடந்து தேசிய இனம் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மதம் அடையாளத்தை விட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது.” என்றும் அவர் கூறினார். அப்போது மதம் குறித்து திருமாவளவன் பேசியதற்கு அரங்கில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மேடையில் இருந்து பாதியில் கிளம்பினார் திருமாவளவன்.

திருமாவின் சனாதனம் புரிதல் தவறானது: அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தனது வீடியோ பேட்டியில், அருமையாக திருமாவளவனின் பேச்சைக் கண்டித்து விளக்கம் கொடுதுள்ளார். “அவருடைய கருத்தே தவறானது. வெறுப்பு பிரச்சாரம் கூடாது என்பது ஏற்கத்தக்கது. ஆனால் அதே வெறுப்புப் பேச்சை, கடல்கடந்து வந்து ஒருமதத்திற்கு எதிராக தொடர்ந்து பேசுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவருடைய அரசியல்-கட்சி சித்தாந்தத்தை தமிழாராய்ச்சி மாநாட்டில் பேசுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். சனாதனம் என்றால் அவருக்குப் புரியவில்லை என்பது தான் எனது கருத்து. சனாதனம் என்பது நாங்கள் புரிந்து கொண்டது அனைவரும் சமம். அனைவருக்கும் பொதுவானது இப்பூமி.., எல்லோரும் இறைவனின் குழந்தைகள் தான். எல்லோரும் ஒரு தருமம், அறத்தின் அடிப்படையில் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது தான்  நாங்கள் புரிந்து கொண்ட சனாதனம். நாங்கள் புரிந்து கொண்ட இந்து சமயம். பக்தி மார்க்கத்துடன் நாங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர் இங்கு வந்து ஒரு தவறான கருத்தை, தவறான இடத்தில், தவறான நோக்கத்தில் முன்வைத்ததை நாங்கள் ஏற்கமுடியாது. அதற்கு இங்கு மலேசியாவிலேயே பெருங்கண்டனம் உருவாகியுள்ளது. அவர் தமிழ்நாட்டில் என்ன அரசியலையும் செய்து கொள்ளட்டும், ஆனால், இங்கு இனிமேல் வந்தால் அத்தகைய வெறுப்பு அரசியல் உமிழவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்….பாலியிலும் இந்துக்கள் இருக்கிறார்கள் அங்கெல்லாம் ஜாதியம் இல்லை. இந்தியாவில் அரசியல்வாதிகளால் தான் அது ஊக்குவிக்கப் படுகிறது. எனவே இந்திய அரசியலை இங்கே கொண்டு வரவேண்டாம் என்று விளக்கினார்.  மலேசியாவில் இருக்கும் தமிழர்கள் எல்லோருமே ஒன்றாக, ஒரே குடும்பம் போல, ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றாம். இங்கு [தமிழக] அரசியல் மற்றும் மதம் ரீதியில் எந்த பிரசினையும் தேவையில்லை. அது அவருடைய கருத்தாக இருக்கலாம், ஆனால், எங்களுக்கு உடன்பாடு இல்லை. அவ்வாறு அவர் [ஒரு மதத்திற்கு எதிராகப்] பேசியிருக்கக் கூடாது.

முனைவர் ராஜேந்திரனின் விளக்கம்: இதே போல முனைவர் ராஜேந்திரனும் அருமையான விளக்கம் அளித்துள்ளார்[3]. “ஒரு நாட்டுக்கு செல்லும்போது அந்நாட்டின் பாரம்பரியம் என்ன, அங்குள்ள சிக்கல்கள் என்ன என்பதை புரிந்து கொண்டு செயல்படுவது தான், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்என்பது. இந்த மாநாட்டில் பேசிய, 99.99 சதவீத வெளிநாட்டவர்கள் அதை கடைபிடித்தனர். ஆனால், ஒரு சிலர் மதத்தை தாழ்த்தி பேசுகின்றனர். மலேஷியாவை சேர்ந்த ஒருவர், எங்கள் மதத்தை பற்றி இழிவுபடுத்தி பேசுகின்றனர் என, காவல்துறையில் புகார் அளித்திருந்தால், அப்படி பேசியவர்கள் வீடு திரும்பியிருக்க முடியாது. மலேஷிய சிறையில் தான் இருந்திருக்க வேண்டும். மலேஷியாவில் மதம், நாடு, இனம் பற்றி தவறாக பேசுபவர்களுக்கு, இம்மியளவும் இடம் கொடுக்க மாட்டோம் என, பிரதமர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள நண்பர்கள் அங்கே உள்ள அரசியல் குப்பைகளை வந்து இங்கே கொட்ட வேண்டாம். அனைவருக்கும் பொதுவான தமிழை எப்படி மேம்படுத்துவது பற்றி மட்டுமே பேச வேண்டும். மாறாக அரசியல், மதம் பற்றி பேசினால் விபரீதமான விளைவுகள் ஏற்படும்,” இவ்வாறு அவர் பேசினார்[4].

அரசியல் தவித்திருந்தால் மாநாடு நன்றாக இருந்திருக்கும்: அன்று அரங்கத்தில் இருந்தவர்களுள் யாரும் புகார் அளிக்கவில்லை, அப்படி புகார் செய்திருந்தால், அவர்கள், [திருமாவளவன்] வீடு திரும்பியிருக்க முடியாது,…சிறையில் இருந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் எடுத்துக் காட்டினார். மூன்று 3 R-களைத் தொடவே கூடாது, பிரதமர் இதன் மீது கைவைத்தால், இம்மி அளவு கூட இடம் கொடுக்க மாட்டேன் என்று பலமுறை சொல்லியிருக்கிறார், நேற்றும் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் இருந்த நண்பர்கள் பெரிய ஆட்களாக இருக்கலாம், பிரச்சினைகள் இருக்கலாம், ஆனால், அங்கிருந்து வந்து குப்பைகளை இங்கு கொட்டவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இங்கு தமிழை எவ்வாறு உயர்த்தலாம், பெரிய அளவில் எடுத்துச் செல்லலாம் என்பது பற்றி பேச வேண்டும். அதை விடுத்து அரசியல் பேசுவது அந்த அளவுக்கு பொருத்தமாக இருக்காது.. இப்படி தொடர்ச்சியாக மலேஷியா தமிழர்கள் இந்து மதம் குறித்து நேரடியாக அல்லது மறைமுகமாக விமர்சனம் செய்யும் நபர்களை சுளுக்கு எடுத்து அனுப்புவதால் அவர்கள் “குட்டி மோடி ரசிகராக மாறி விட்டார்கள்” என்று TNNEWS24 குறிப்பிட்டாலும், அங்கிருப்பவர்களுக்கும் இந்து என்ற உணர்வு இருக்கத்தான் செய்யும். போதாத குறைக்கு இலங்கை தமிழர்களும் மோடிக்கு ஆதரவாக பேச தொடங்கி இருப்பதால் தமிழகத்தில் இருந்து இனி மலேஷியா பயணமே வேண்டாம் என முக்கிய அமைச்சரான இளம் வாரிசு தொடங்கி பலரும் முடிவு செய்து விட்டார்களாம் என்று TNNEWS24 கூறுகிறது.

© வேதபிரகாஷ்

26-07-2023


[1] மலேசியா, மலேசியாவா வேண்டவே வேண்டாம் சாமி தெறித்து ஓடும் முக்கிய அமைச்சர்கள்…!, BY WEB TEAM,  JULY 25, 2023.

[2] https://www.tnnews24air.com/posts/Malaysia-dont-ask-for-Sami–important-latest-tamil-current-update

[3] தினமலர், தமிழக அரசியல் குப்பையை மலேஷியாவில் கொட்ட வேண்டாம் திருமாவளவன் பேச்சுக்கு எதிர்ப்பு, மாற்றம் செய்த நாள்: ஜூலை 26,2023 05:48

,https://m.dinamalar.com/detail.php?id=3386470

[4] https://m.dinamalar.com/detail.php?id=3386470

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது- ஆரம்பம் முதல் முடிவு வரை அரசியல் தான்! (3)

ஜூலை 24, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்ததுஆரம்பம் முதல் முடிவு வரை அரசியல் தான்! (3)

திருமா வளவன் தமிழ் தேசிய பேச்சு, எதிர்ப்பு: இம்மாநாட்டை கண்டுகொள்ளாத தமிழக ஊடகங்கள் திருமாவளவனுக்கு மட்டும் கொடுக்கும் முக்கிய்த்துவம் அல்லது விளம்பரம் ஆச்சரியத்தை அளிக்கிறது. அந்த செய்திகள் அலசப்படுகின்றன. இவ்விழாவில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இருந்தார்[1]. வழக்கம் போல திருமா வளவன், தமிழ் தேசியம், சனாதனம் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்[2]. அதாவது ஏகபட்ட அரசியல்வாதிகள் அழைக்கப் பட்டுள்ளதில், இவரும் ஒருவர். “மரபு சார்ந்த கலாச்சார உரிமைகளை பாதுகாக்க உலகத் தமிழ் மாநாடு முனையும். தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வலிமை வாய்ந்தது மாநாடு. தமிழ்த் தேசியம் என்பது மொழி, இன உணர்வு மட்டுமல்ல. அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டம் தமிழ்த் தேசியம். மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான்[3]. அவற்றைக் கடந்து தேசிய இனம் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மதம் அடையாளத்தை விட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது,” என்று கூறினார்[4].

Thiruma honoured for his “wonderful” speech…………

இஸ்லாம்கிறிஸ்தவம் ஒப்பிட்டு இந்து மதத்தை விமர்சித்துப் பேசியது: தத்துவம்-சமத்துவம் என்று விளக்கம் கொடுத்த போது, இஸ்லாத்தில், கிறிஸ்துவத்தில் சமத்துவம்-சகோதரத்துவம் இருக்கிறது ஆனால், இந்து மதத்தில், சனாதனத்தில், அந்த தத்துவத்தின் படி சமத்துவம் இல்லை, சகோதரத்துவம் இல்லை என்றெல்லாம் பேசினார். இஸ்லாம்-கிறிஸ்தவம் என்றால் மதம், மசூதி-சர்ச் என்றால் இன்ஸ்டிடுஷன். ஆனால், இந்துமதத்தில் அப்படியில்லை. அப்பொழுது மேடையில் அவர் தமிழ் தேசியம் குறித்து பேசினார்[5]. அதில் தமிழ் தேசியம் என்ற பெயரில் மதவாதம், இனவாதம் கூடாது என்று கூறியிருந்தார்[6]. அப்படி அவர் பேசி முடித்து மேடையை விட்டு இறங்கிய சில நொடிகளில் ‘டேய் நிப்பாட்ரா’ என்று திருமாவளவனுக்கு எதிராக சிலர் குரல் எழுப்பினர்[7]. ‘நீ பேசிய தலைப்பே சரியில்லை’ என்று அவரை சத்தம் போட்டு பேசியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது[8]. அதன் பின்னர் விழா ஏற்பாடு செய்திருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தவர்களை சமாதானப்படுத்த முற்பட்டார்கள்[9]. பின்பு திருமாவளவன் எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து வெளியே சென்றனர்[10]. சிறிது சலசலப்புகளுடன் மாநாட்டின் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார் திருமாவளவன்.

22-07-2023 சனிக்கிழமை: நாளை நடைபெறுகின்ற மாநாட்டின் இரண்டாம் நாள் (22.7.2023) நிகழ்வில் மலேசியப் பிரதமர் தொடங்கி வைத்திட உள்ள அமர்வில் சிறப்பு அழைப்பாளராகவும் வீரமணி பங்கேற்றார், என்று தமிழக ஊடகங்கள் தவறாகக் குறிப்பிடுகின்றன.. அவருடன் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச்செயலாளர்  ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் மலேசிய திராவிடர் கழகம், மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம், பெரியார் பன்னாட்டமைப்புப் பொறுப்பாளர்களும்   மாநாட்டில் கலந்துகொள்கின்றனர் என்று “விடுதலை” கூறுகிறது. அதனால், திக-போன்ற கட்சியினர் அதிக அளவில் கலந்து கொண்டனர் என்று தெரிகிறது. ஆய்வு கட்டுரைகள் வாசிக்கப் பட்டன. முன்பே குறிப்பிட்டபடி, 500 கட்டுரைகள் வந்திருந்தாலும், சுமார் 20-25 கட்டுரைகள் தான் ஆராய்ச்சி நெறிமுறைகளுடன் இருந்தன. மற்றவை ஏதோ மாநாட்டிற்கு என்று அவசர-அவசரமாக தயார் செய்து கொண்டு வந்தது போன்று தான் இருந்தது.

Malaysian PM officially inaugurated the Conference and spoke on the occasion….

PM appreciated that different politicians had come together there at the conference….

23-07-2023 ஞாயிற்றுக் கிழமை: மலேசிய பிரதமர் மாநாட்டணதிகாரப் பூர்வமாகத் துவக்கி வைத்தார். அதாவது, முடிவுநாளில், துவக்கி வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நிதியுதவியை அறிவித்து, தமிழ் இலக்கியங்களை மலேசிய மொழியில் மொழிபெயெற்க வேண்டும் என்றார். மாநாட்டிற்கு 10 லட்சம் ரிங்கெட்டை மானியமாக அறிவித்தார். 2000 பேர் கலந்து கொண்டனர்[11].  மொத்தம் 550 கட்டுரைகள் வாசிக்கப் பட்டுள்ளதாகவும்[12], அவை ஓம்ஸ் அறக்கட்டளை, மலேசிய பண்பாட்டுக் கழகம் மற்ற சமூக அமைப்புகள் ஆய்ந்து அவற்றை வெளியிடுவதைப் பற்றி ஆலோசிக்கும் என்று சொல்லப் படுகிறது[13]. அரசியல், மொழிப்பற்று [வெறி], இனம், போன்ற காரணிகளால், கட்டுரைகள் வேறுவிதமான விளக்கங்களால் விலகிச் சென்றிருப்பதை கவனிக்கலாம். அரசியல்வாதிகளின் பேச்சு, ஆராய்ச்சி ரீதியில் இல்லாமல், மக்களைப் பிரிக்கும் போகில் தான் உள்ளது. அவை அச்சில் ஏறினால், அவர்களது உண்மைத் தன்மையினையும் தெரிந்து கொள்ளலாம். 21ம் நூற்றாண்டிலும் இத்தகைய கட்டுக்கதைகளான மொழி, இனம், ஆரியன், திராவிடன் என்றெல்லாம் பேசிக் கொண்டு காலம் தள்ளும் ஆட்கள் இருப்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவருமான சிவகுமார் உரை: மலேசிய அரசு மற்றும் ஏற்பாட்டுக் குழு சார்பாக, 11ஆவது உலகத் ஆராய்ச்சி மாநாட்டின் வெற்றியை பதிவு செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று மனிதவள அமைச்சரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவருமான வ சிவகுமார் தெரிவித்தார்[14]. “இந்த வருடம் மலேசிய நாட்டில் 11 ஆம் உலக ஆராய்ச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தியதை எண்ணி நாங்கள் பெருமிதம் அடைகிறோம். இதற்கு முன்பு நடந்த மாநாடுகளைக் காட்டிலும் 2023 ஆம் ஆண்டில் நடைபெறும் இந்த மாநாடு மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கும். அதே வேளையில், ஒரு புது சகாப்தத்தையும் தொடக்கி உள்ளது. சுமார் 3,000 தமிழறிஞர்கள் பங்கேற்று, 501 ஆராய்ச்சியின் படைப்புகள் இந்த அரங்கில் சமர்பிக்கப்பட்டன. இதை தவிர்த்து, இலட்சக்கணக்கான ஒன்லைன் பார்வையாளர்கள் இந்த மாநாட்டை கண்டு களித்தனர். இதுவே இந்த மாநாட்டின் மிக பெரிய வெற்றியாகும். இது மாநாட்டின் கடைசி நாள் என்றாலும், மாநாட்டு செயல்முறை இன்னும் முடிவடையவில்லை. இன்னும் சில படிகள் செய்யப்பட வேண்டும். இம்மாநாட்டின் மையக் கருப்பொருளானஇணைய யுகத்தில் தமிழ்என்ற தலைப்பில், இலக்கியவாதிகள், மொழியியலாளர்கள் மற்றும் பலர் தமிழர்களின் தொன்மை, தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் நாகரிகம் குறித்த தங்கள் கண்டுபிடிப்புகளை ஆய்வுக் கட்டுரைகளில் சமர்ப்பித்தனர். ஆய்வாளர்கள் அறிவுபூர்வமாக சமர்ப்பித்த கட்டுரைகளை அனைத்தும் உங்கள் செவிகளுக்கும் சிந்தனைக்கும் விருந்தாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்,” என்று உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்[15].

இனி வரும் மாநாடுகளில் அரசியல் இல்லாமல் இருப்பதாக: மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கஷ்டப்பட்டு குறுகிய காலத்தில் எல்லாவற்றையும் திருப்திகரமாக செய்துள்ளனர். அப்படியே தமிழ், தமிழாராய்ச்சி, ஆராய்ச்சி-நெறிமுறை என்று சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், அரசியல் கலப்பினால், மாநாட்டு ஏற்பாட்டாளர்கள், அவர்களுக்குள் இருக்கும் அரசியல்வாதிகள், வரவேற்கப் பட்ட அரசியல்வாதிகள், என்று எல்லோருமே ஒவ்வொரு நிலையில் பிரச்சினையைக் கிளப்பியுள்ளனர். பிரதமர் பேசும் பொழுது, எல்லா மாறுபட்ட கட்சியினர் ஒன்றாக வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை, அரசியல்வாதிகளாள் சலசலப்புகள், பிரச்சினைகள், கைகலப்புகள் முதலியவை உண்டாகின. இருப்பினும் அனைவற்றையும் அடக்கிக் கொண்டு மாநாடு நடந்து முடிந்துள்ளது. இனிமேல், அடுத்த மாநாடுகளிலிருந்து அரசியல், அரசியல்வாதிகள், கட்சிகள் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால், எல்லாவற்றிற்கும் நல்லது, உன்னதமானது.

© வேதபிரகாஷ்

24-07-2023


[1] தினமலர், திருமாவளவன் பேச்சுக்கு எதிர்ப்பு, பதிவு செய்த நாள்: ஜூலை 22,2023 01:45

[2] https://m.dinamalar.com/detail.php?id=3382814

[3] நியூஸ்.7.தமிழ், தேசிய இன அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும்! – உலக மலேசிய தமிழ் மாநாட்டில் தொல்.திருமாவளவன் பேச்சு!, by Web EditorJuly 21, 2023

[4] https://news7tamil.live/even-if-divided-by-politics-religion-and-cultural-identities-the-national-identity-should-be-strengthened-thol-thirumavalavan.html

[5] திருமாவளவன் பேச்சுக்கு எதிர்ப்பு: மலேசிய உலக தமிழ் மாநாட்டில் சலசலப்பு!, Manikanda Prabu, First Published Jul 23, 2023, 3:29 PM IST;  Last Updated Jul 23, 2023, 3:29 PM IST.

[6] https://tamil.asianetnews.com/tamilnadu/uproar-at-malaysian-world-tamil-conference-counter-stand-to-thirumavalavan-speech-ry8uel

[7] பாலிமர்.செய்தி, மலேசியாவில் திருமா பேச்சுக்கு எதிர்ப்புக் குரல்….! தமிழ் தேசிய சர்ச்சை……!, ஜூலை 23, 2023 08:53:44 காலை.

[8] https://www.polimernews.com/dnews/205989

[9] தமிழ்.ஸ்பார்க்.காம், டேய் நிப்பாட்ராநீ பேசுறதே சரியில்ல., திருமாவளவனுக்கு எதிராக மலேசியாவில் வெடித்த குரல்.!!, Sun, 23 Jul 2023 11:14:37 IST Author by Priya

[10] https://www.tamilspark.com/tamilnadu/voice-rise-against-to-thirumavalavan-in-malaysia

[11] பெர்னாமா.காம், 11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை பிரதமர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார், 23-07-2023, 12.10 மாலை.

https://www.bernama.com/tam/news.php?id=2208933

[12] பெர்னாமா.காம், 11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவு விழா, 23-07-2023, 07:19 PM

[13]  https://www.bernama.com/tam/news.php?id=2209142

[14] தினத்தந்தி.மலேசியா, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தது புதிய சகாப்தமாகும்! மனிதவள அமைச்சர் சிவகுமார் பெருமிதம் , Updated: July 23, 2023; July 23, 2023; https://thinathanthi.my/?p=5697

[15] https://thinathanthi.my/?p=5697

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! அரசியல்வாதிகளின் பேச்சுகள்! (2)

ஜூலை 24, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! அரசியல்வாதிகளின் பேச்சுகள்! (2)

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-public-lecture-political.jpg

உள்ளூர் அறிஞர்கள் கௌரவிக்கப் பட்டனர்: முதல் நாளில், மலேசியாவில் குழந்தை இலக்கியம் என்ற தலைப்பில் பாப்பாவின் காவலர் கவிஞர் முரசு நெடுமாறன் உரையாற்றினார். குறிப்பாக பள்ளி குழந்தைகளிடையே கவிதை மூலம் எப்படி தமிழை வளர்த்திருக்கிறோம் என்பதை அழகாக எடுத்துரைத்தார்[1]. கவிஞர் முரசு நெடுமாறன், சிலாங்கூர் மாநில முன்னாள் க. முருகன் ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பிக்கப் பட்டனர். மலேசியாவைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் இராஜேந்திரன், மாநாட்டிற்கான செயலாளர் முனைவர் கிருஷ்ணன் மணியம் ஆகியோர் உட்பட பல பிரமுகர்களும் அரசு சார்பற்ற இயக்கங்களை சேர்ந்தவர்களும் மற்றும் பொது மக்களும் திரளாக வந்திருந்து சிறப்பித்தனர்[2]. உள்ளூர் ஊடகங்கள் இவற்றைப் பற்றி செய்திகள் வெளியிட்டுள்ளன. பிறகு பேசியவர்கள் தமிழ் இலக்கியம், வைணவம், சைவம் பற்றியெல்லாம் பேசினர். ஆனால், அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்த போது, மாநாட்டின் போக்கு திசைத் திரும்பியது எனலாம்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-thiruma-speaking-1.jpg

பிரிவினைவாதம் பேசப் பட்டது: மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள திருமாவளவன் பேசியதாவது[3]: மரபு சார்ந்த கலாச்சார உரிமைகளை பாதுகாக்க உலகத் தமிழ் மாநாடு முனையும். தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வலிமை வாய்ந்தது மாநாடு. தமிழ்த் தேசியம் என்பது மொழி, இன உணர்வு மட்டுமல்ல. அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டம் தமிழ்த் தேசியம். மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான். அவற்றைக் கடந்து தேசிய இனம் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மதம் அடையாளத்தை விட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது என்று கூறினார்[4]. இம் மாநாட்டின் பொது அரங்கில் மலேசிய நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்கு ‘வளர்ச்சி நோக்கில் தமிழ்’ எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முதல்நாள் மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-audience.jpg

கல்விசார், படிப்பு சம்பந்தப் பட்ட, ஆராய்ச்சி-கட்டுரைகள் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை: ஆய்வு அமர்வுகள், ஆய்வு கட்டுரைகள், விவரங்கள், வாசிப்புகள் பற்றிய செய்திகளைக் காணவில்லை. கல்விசார், படிப்பு சம்பந்தப் பட்ட, ஆராய்ச்சி-கட்டுரைகள் என்பது பற்றி மூச்சுக் கூட விட காணோம். மாநாட்டிற்குச் சென்றவர்களும், சமூக ஊடகங்களில் “நான் மாநாட்டிற்குச் சென்றேன்,” என்று புகைப்படங்கள் போட்டுக் கொண்டாலும், கட்டுரைப் படித்தேன், கேள்விகள் கேட்டார்கள், நான் பதில் சொன்னேன் என்றவாறு இல்லாமல், ஏதோ சுற்றுலா சென்றேன் பாணியில் தான் இருந்தது. ஆய்வுக்கட்டுரைகள் பற்றிய பட்டியல், தலைப்புகள், விவரங்களைக் காணோம் கலந்து கொண்டவர்களும் அவ்விவரங்களைப் பகிர்வதாகத் தெரியவில்லை. பெர்ணாம் என்ற இணைதளம் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலரின் வாசிப்புகள் தான் பதிவாகியுள்ளன (சைவம், வைணவம், சித்த மருத்துவம், பிள்ளைத் தமிழ், தோல்சீலை முதலியன).  சில கட்டுரைகள் நன்றாக இருந்தன. மற்றபடி, பெரும்பாலான மற்ற ஆய்வுக்கட்டுரைகள் அரைத்த மாவை அரைக்கும் என்பார்களே அந்த பாணியில் தான் இருந்தன.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia.more-politicians.2.jpg

அரசியல்வாதிகளை அழைத்து அரசியல் இல்லாமல் பேசுங்கள் என்று சொல்லப் பட்டது:. ஆனால், அவர்கள் எல்லோருமே அரசியல் தான் பேசினர், வீடியோவும் உள்ளது. அரசியல் மாநாடாக மாறிய நிலையில், தமிழ் தேசியம் போர்வையில், பிரிவினைவாதம் தான் பேசப்பட்டது. வேல்முருகன், தாமஸ், திருமாவளவன், ஶ்ரீகாந்த் [பீஜேபி], சுப.வீரபாண்டியன், நக்கீரன் கோபால், இலானி, நிறைமதி [சீனர்], கடைசியாக கே.வீரமணி, என்று அதிகமாக, அரசியல் தான் நிறைய பேசப்பட்டது. தமிழ் தேசியம், பார்ப்பனியம், வர்ணம், தமிழ்-சமஸ்கிருதம், சமஸ்கிருத ஆதிக்கம், ஆரியன்–திராவிடன் பண்பாட்டு படையெடுப்பு, என்றெல்லாம் பேசப் பட்டது. வெண்பா, ஆசிரியபா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பா முதலியவற்றிற்கு திரிபு விளக்கமும் கொடுக்கப் பட்டது. இதனால், தமிழுக்கு, தமிழ் ஆராய்ச்சிக்கு, தமிழ் மேன்பாட்டிற்கு எந்த பிரயோஜனும் இல்லை. பெரும்பாலான நேரம் இவ்வாறு அரசியல், பேசியதையே பேசியது, ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் என்று தான் சென்றது. ஊர் சுற்றிப் பார்க்க வந்தவர், அவரவர் வேலைகளுக்கு சென்றனர். சாப்பிடும் நேரதிற்கு வந்து விடுவர்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-velmurugan.jpg

மொழி, தேசம், தேசியம், நாடு, ஒன்றியம் என்று குழப்பவாதங்களை வைக்கும் குழப்பவாதிகள்: வேல்முருகன் தமிழ் தேசியம் என்று, பிரிவினைவாதம் பேசியது வேடிக்கையாக இருந்தது. முன்பு, கம்யூனிஸவாதிகள், பிறகு தமிழீழ ஆதரவாளர்கள், அதற்கும் பிறகு தமிழக பிரிவினைவாதிகள், மொழியை வைத்து, மொழிவாறான தேசிய இனங்கள் என்று பேசி குழப்பி வந்தார்கள். அதாவது ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தேசம் உள்ளது, அந்தமொழிவாரி தேசம் போற்றப் பட வேண்டும். அந்த தேசியம், இந்திய தேசியம் வேறு. எப்படி பலமொழி பேசும் தேசியங்கள், இந்திய நாட்டில் ஒன்றியத்தில் சேர்ந்திருக்கின்றனவோ, அதே போல சுயநிர்ணய உரிமையோடு, ஒவ்வொரு தேசமும் பிரிய உரிமை உண்டு என்றெல்லாம் குழப்பவாதங்களில் ஈடுபட்டனர். நாடு, தேசம், தேயம், இடம் போன்ற சொற்கள், ஒரு இடத்தைத் தான் குறிப்பிட்டன. அதை அறிந்தும் இவர்கள் திரிபுவாதம் செய்து வருகிறார்கள். அவையெல்லாம் கருணாநிதி போன்றோரே அடக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. இப்பொழுது, மறுபடியும் திமுக ஒன்றியம், திராவிட மாடல், திராவிட ஸ்டாக் என்றெல்லாம் பேசி வருவதால், இந்த குழப்பவாதிகளுக்கு தைரியம் வந்து, அவ்வாறே முன்பு போல, பிரிவினைவாதம் பேச ஆரம்பித்து விட்டனர். ஆக இந்து வேல்முருகன் போன்றோருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-srikanth.jpg

வலதுசாரிகளின் பலவீனம், ஒற்றுமையின்மை மற்றும் பழமைவாதம்: ஶ்ரீகாந்த் என்ற பிஜேபி இந்தியதேசத்துடன் பேசினாலும், மற்றவர்கள் கொஞ்சம் பேசினாலும், எடுபடவில்லை. இவரும் கி.ஆ.பே.வின் பெயரன் என்ற முறையில் இருக்கிறார். நக்கீரன் கோபாலுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். இடதுசாரிகள், திக-திமுகவினர் ஒன்றாக வந்திருந்த நிலையில், வலதுசாரிக்கள் இங்கு வாய்கிழிய பேசினாலும், அங்கு யாரையும் காணோம். “இந்திய தேசியமும், தமிழ் தேசியமும்” என்று பேசி, அவர்களின் முகத்திரையைக் கிழிக்க ஆளில்லை; “தமிழ் தேசியமும், திராவிட தேசியமும்,” என்று கட்டுரை வாசிக்கவும் திராணி இல்லை. ஆனால், இங்கு, திராவிட மாயை, பெரியாரின் ம்ச்றுபக்கம் என்றெல்லாம் பேசுவார்கள், எழுதுவார்கள், புத்தகங்களும் போடுவார்கள். ”முகநூலில் கம்பு சுற்றுவதோடு சரி, இம்மாதிரியான, கருத்துருவாக்கும், தாக்கம் கொண்ட அல்லது ஏற்படுத்தும் கருத்தரங்களில் கலந்து கொள்வதில்லை.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-srikanth-next-to-gopal.jpg

வலது சாரிகளின் ரகசிய கருத்தரங்கங்கள்: மத்திய அரசு ஆதரவு மற்றும் நிதியுதவியுடன் நடத்தப் படும் கருத்தரங்கங்கள், மாநாடுகள் என்று இவர்களே கலந்து கொண்டு, குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இலக்கிய விழா என்று கொண்டாட ஆரம்பித்தாலும், ஏதோ ரகசியமாக நடத்துவது போல நடத்துகிறார்கள்[5]. எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லை. சுமார் 50-100 என்றிருந்தால், அவர்களுக்குள் அகிர்ந்து கொண்டு, கூடி விலம்பரப் படுத்திக் கொள்கிறார்கள். மற்ற படி, பொது ஊடகங்களில் அதைப் பற்றி எந்த தகவலும் வருவதில்லை. இதனால், லட்சக்கணக்கில் பணம் செலவழித்தாலும், சித்தாந்த ரீதியில் ஆட்களுக்கு பயிறிசி அளிப்பதில்லை, தயார் செய்வதும் இல்லை. அனுபவம் கொண்ட, ஆராய்ச்சியாளர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. தெரிந்தும் ஓரங்கட்டுகிறார்கள் இதனால் தான், தங்களது பலத்தையுமிழந்து, எதிர்சித்தாந்திகளின் பலத்தை மறைமுகமாக வளர்க்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

24-07-2023


இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-senator-saraswati.jpg

[1] வணக்கம் மலேசியா, பேராளர்கள்பார்வையாளர்கள்திரளாககலந்துகொண்ட 11-வதுஉலகத்தமிழாராய்ச்சிமாநாடு, 21-07-2023.

[2]https://vanakkammalaysia.com.my/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/

[3] நியூஸ்7தமிழ், தேசியஇனஅடையாளத்தைவலுப்படுத்தவேண்டும்! – உலகமலேசியதமிழ்மாநாட்டில்தொல்.திருமாவளவன்பேச்சு!, by Web EditorJuly 21, 2023

[4] https://news7tamil.live/even-if-divided-by-politics-religion-and-cultural-identities-the-national-identity-should-be-strengthened-thol-thirumavalavan.html

[5]  பாண்டி-லிட்-பெஸ்ட் என்றெல்லாம் நடத்துகிறார்கள், ஆனால், விவரங்கள் தெரிவதில்லை. அவர்களுக்கே தெரியாத அளவில் கூட நடக்கிறது.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் iatr-kuala-lampur-malaysia-vips.jpg



11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! (1)

ஜூலை 24, 2023

11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் நடந்து முடிந்தது! (1)

உலகம் முழுவதும் பரவியஉலகத் தமிழ் மாநாடுபிரச்சினை: 21-07-2023 அன்று தொடங்கும் 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கான ஏற்பாட்டுக்  குழுக் கூட்டம், மஇகா துணைத் தலைவர் எம். சரவணனுக்கு முதலில் அந்த நிகழ்வில் பேச இடமளிக்கப்படாததால், கிட்டத்தட்ட அடிதடியில் முடிந்தது[1]. Pakatan Harapan-MIC meeting என்பதே அரசியல் கூட்டணி என்று தெரிகிறது. பிரதமர் அன்வார் இப்ராகிமின் முக்கிய உரையைத் தொடர்ந்து சர்வதேச மாநாட்டில் அமைச்சர் மட்டுமே உரையாற்றுவார் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், சரவணனுக்கு ஏன் இடம் கொடுக்கக் கூடாது என்ற வாதம் எழுந்தது. அதனால் அப்பிரச்சினை ஏற்பட்டது[2]. மனிதவள மேம்பாட்டு அமைச்சர் சிவகுமார் [Sivakumar Varatharaju Naidu] IATRன் தலைவராக நியமிக்கப் பட்டதற்கும் எதிர்ப்பு மொழிரீதியில் என்றும் வெளிப்பட்டது[3].  அதாவது அவர் தெலுங்கர், தமிழர் கிடையாது என்ற வாதம் வைக்கப் பட்டது. தமிழ் வல்லுனர்களுக்கு சிவகுமாரைத் தெரியாது, அவருக்கு தமிழ் இலக்கியம் முதலியனவும் தெரியாது என்றெல்லாம் விமர்சனம் செய்யப் பட்டது[4]. இவ்வகையான மொழிவெறி இக்காலத்திலும் இவர்களிடம் இருப்பது திகைப்பாகவே இருக்கிறது. இந்தியாவில் ந்தியரை, தென்னிந்தியரை ஏன் தமிழரைக் கூடப் பிரித்து வருகின்றனர் என்றால் அயல்நாட்டிலும் அத்தகைய பிரிவினைவாதங்கள் இக்குழுக்கள் வைப்பதை கவனிக்கலாம்.

பல இடங்களை தேசங்களைக் கடத்து வந்த மாநாடு: முன்னரே இம்மாநாடு எங்கு நடத்தப் பட வேண்டும் என்ற பெரிய பிரச்சினையும் இருந்தது. ஷார்ஜா, சிங்கப்பூர், மலேசியா என்றெல்லாம் விவாதிக்கப் பட்டு, சென்னை என்று நடந்தது[5]. போதாகறைக்கு, சென்னையில் ஜூலை 7 முதல் 9 வரை 11ம் உலகத் தமிழ் மாநாடு என்று நடந்து விட்டது[6]. ஒவ்வொரு நிலையிலும் சச்சரவு, முரண்பாடு, சண்டை, புகார் என்றெல்லாம் எழுந்து அடங்கி விட்டன. நிதி, நிதியுதவி, நிதி பற்றாகுறை என்றெல்லாம் காரணங்கள் குறிப்பிட்டாலும், அதனையும் மீறி எதுவோ செயல்படுவது தெரிந்தது. இருப்பினும், இப்பிரச்சினை கோலாலம்பூருக்கு சென்று அங்கு அரசியலாகவே மாறி விட்டது. அழைப்பிதழ் கொடுக்கும் விசயத்தில் கூட அரசியல் தான், பெரும்பாலான அழைக்கப் பட்டவர்கள் திக-திமுகவினர் தான். அவர்களது இணைதள போட்டோக்களே சான்றாக உள்ளன.  அரசியல் பிரச்சினை பெரிதாக்க வேண்டாம் என்ற ரீதியில் தான் தமிழ்நாட்டிலிருந்து தலைவர்கள் வராமல், பிரதிநிதிகள் போல மற்றவர்களை அனுப்பியுள்ளனர். ஸ்டாலின் முதல் எடப்பாடி வரை வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர். அதிமுக சார்பில் வைகை செல்வன் கலந்து கொண்டு பேசினார். அதே போல வந்தவர்கள் மேடையில் பேசினர்.

தமிழ் என்று சொல்லிக் கொண்டே பிரிவினைவாதம் வளர்த்து சண்டைப்போட்டுக் கொள்ளும் கூட்டங்கள்: மொத்தத்தில், “தமிழர்” என்று சொல்லிக் கொள்வதில், அடையாளம் காணுவதில், இப்பொழுது, சில சித்தாந்திகள் எழுப்பும் பிரச்சினையான யார் திராவிடன், யார் தமிழன் போன்ற அர்த்தமில்லாத விசயங்களை இதிலும் நுழைப்பது போலிருக்கிறது. தமிழன் – திராவிடன் அடையாளங்களைத் தாண்டி அப்படி என்ன வேலை செய்கிறது என்பது ரகசியமாகத் தான் உள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில், “தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர் கிடையாது,” என்று பேச ஆரம்பித்து விட்டனர். அப்படியென்றால், தமிழன் என்பதற்கு என்ன தகுதிகளை, சரத்துகளை வைப்பார்கள் என்று தெரியவில்லை. சென்னை மாநாட்டிற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், சிலர் இரண்டிலும் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்-தமிழ் தேசிய, தமிழ் இன, தமிழின தேசியவாத, சுயயாட்சி, சுய-உரிமை என்றெல்லாம் ஆந்தைகள் போல இருந்து, பச்சோந்திகளாக பேசி திரிகின்றனர். பிரிவினைவாதத்தைத் தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

21-07-2023 வெள்ளிக்கிழமை முதல் நாள்: கோலாலம்பூர், ஜூலை 21- மலேசியாவில் இன்று (21.7.2023) 11 ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசிய நட்டுப்பண், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல், மாநாட்டுப் பாடலுடன் கோலாலம்பூரில் எழுச்சியுடன் தொடங்கியது[7]. மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் இன்று (21.7.2023) முதல் 3 நாள்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் (International Association for Tamil Research) 11ஆம் மாநாடு நடைபெற்றது[8]. ஜூலை 21, 22, 23 ஆகிய மூன்று நாள் மாநாட்டினை மலேசிய நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் 23-07-2023 அன்று தொடங்கி வைத்தார். பலருக்கு அழைப்பிதழ் பலவிதமாக அனுப்பப் பட்டது[9]. தமிழ்நாடு, இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், பொது நல செயற்பாட்டாளர்கள், கல்லூரி – பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் என பல தரப்பினரும் பங்கேற்று, ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து உரையாற்றுகிறார்கள்[10].  முதல் நாளான 21.7.2023 அன்று தொடக்க விழாவில் மலேசிய நாட்டின் துணை அமைச்சர் சரஸ்வதி, மலேசிய இந்திய காங்கிரஸ் தேசிய துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இணையக்  காலகட்டத்தில் தமிழ்மொழி என்ற கருப்பொருளை மையமாக வைத்து மாநாடு  நடைபெறுகிறது.

முன் வரிசையில் அல்லது முன்னணியில் அரசியல்வாதிகள்: தொடக்க விழா அரங்கில், அரசியல்வாதிகள் அதிகமாகவே இருந்தனர். அவர்கள், அவர்களாகவே வந்தனரா, வரவழைக்கப் பட்டனரா என்று தெரியவில்லை.

  1. திராவிடர் கழகம் கி.வீரமணி,
  2. தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்,
  3. மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா,
  4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் சி.மகேந்திரன்,
  5. இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மதுக்கூர் இராமலிங்கம்,
  6. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி (சி.பி.எம்.),
  7. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் செந்திலதிபன்,
  8. ‘நக்கீரன்’ கோபால்,
  9. தமிழ்த் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன்,
  10. கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் மற்றும்

கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பலர் பங்கேற்றனர்.

பொது விவரங்கள்: மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் தொடங்கியது. பியர்ல் இன்டர்நேசனல் விடுதியில், தங்கியவர் எல்லோரும் காலை உணவை முடித்துக் கொண்ட பின்பு, பேருந்துகள் மூலம் அரங்கிற்கு சென்றனர். 9.45 மணி அளவில் நிகழ்ச்சிகள் தொடங்கின – கடவுள் வாழ்த்து, மலேசிய நாட்டுப் பண்,  தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். அடுத்து வரிசையாகச் சொற்பொழிவுகள் அரங்கேறின. மலேசியத் தமிழ் அறிஞர்களும், இந்தியத் தமிழ் அறிஞர்கள், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முன்னணியினர் வரிசையாகச் சொற்பொழிவு ஆற்றினர். பகல் உணவு, மாலைச் சிற்றுண்டி, இரவு உணவு எல்லாம் அங்கேயே ஏற்பாடு செய்து இருந்தனர். இது ஒரு பங்கேற்றவரின் விவரம். நிறைவாக, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் 40 நிமிடங்கள் சிறப்புரை ஆற்றிய பிறகு, இன்றைய நிகழ்வுகள் நிறைவு பெற்றன. மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை, ஆடல், பாடல்கள். 8 மணிக்கு விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

© வேதபிரகாஷ்

24-07-2023


[1] Free Malaysia Today, Altercation at PH-MIC meeting over who’ll speak at world Tamil conference, K. Parkaran – 20 Jul 2023, 9:57 pm.

[2] https://www.freemalaysiatoday.com/category/nation/2023/07/20/altercation-at-ph-mic-meeting-over-wholl-speak-at-world-tamil-conference/

[3] Focus – Malaysia, Tamils disappointed as Sivakumar, a Telugu, is appointed International Tamil Conference chairman, By Contributor – Tamil Vaanan, 13/07/2023.

[4] https://focusmalaysia.my/tamils-disappointed-as-sivakumar-a-telugu-is-appointed-international-tamil-conference-chairman/

[5]  இவை பற்றியெல்லாம் எற்கெனவே விவரமாக முந்தைய பிளாக்குகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

[6]  இதைப் பற்றியும் விவரமாக எனது முந்தைய பிளாக்குகளில் படித்துத் தெரிந்து கொள்ளலாம். ஊடகங்கள் இவ்விசயங்களில் மௌனமாக இருப்பது தான் ஆச்சரியமாக-திகைப்பாக இருக்கிறது.

[7] நியூஸ்.டி.எம், 11-வது உலகத்தமிழ் மாநாடு மலேசியாவில் தொடங்கியது..!, By: Newstm Admin, Sat, 22 Jul 2023.

[8] https://newstm.in/tamilnadu/11th-world-tamil-conference-begins-in-malaysia/cid11656242.htm

[9] நியூஸ்.லங்காஶ்ரீ, மலேசியாவில் 11ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: பிரபலங்களுக்கு பறந்த அழைப்பு, Malaysia, Tamil,  By Nandhini..

[10] https://news.lankasri.com/article/11th-world-tamil-research-conference-in-malaysia-1687942005

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது–அதன் ஆராய்ச்சி நிலைப் பற்றிய விவரங்கள் (7)

ஜூலை 11, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது அதன் ஆராய்ச்சி நிலைப் பற்றிய விவரங்கள் (7)

இரும்பு காலம் பற்றிய கருத்து: ஆய்வரங்கத்தின் முதல் அமர்வில், புதுச்சேரி பல்கலை பேராசிரியர் ராஜன் பேசியதாவது[1]: “இந்தியா முழுக்க பிராகிருத மொழி பயன்பாட்டிற்கு வந்தது. அதற்கு முன், தமிழகத்தில் தமிழி எழுத்துகள் புழக்கத்தில் இருந்தன. அதனால்தான், தமிழகத்தில் பிராகிருத கல்வெட்டுகள் இல்லை. தமிழர்களின் வரலாற்றை முழுமையாக சொல்ல முடியாது. காரணம், சங்க இலக்கியத்தில் அனைத்து கூறுகளும் சொல்லப்படவில்லை. அகழாய்வில் பயன்படா பொருட்களே அதிகளவில் கிடைக்கின்றன. கல்வெட்டு, காசுகளும், பொதுமக்களின் வாழ்வியலை முழுமையாக சொல்லவில்லை. என்றாலும், உலகின் முன்னேறிய சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததை, இந்த ஆய்வுகளால் அறிய முடிகிறது. தமிழகத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கடல்வழி வணிகம் சிறந்திருந்தது. இங்கு, எழுத்தறிவு மிக்க சமூகம் வாழ்ந்திருந்தது. நெல்லை நாற்றுவிட்டு நடும் பழக்கம், 2,700 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. இவற்றைவிட முக்கியமாக, உலகத்திற்கே இரும்பை அறிமுகம் செய்தவன் தமிழனாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரம், மேட்டூர் அருகே உள்ள தெலுங்கன்குடியில் கிடைத்த இரும்பு வாள் நிரூபித்துள்ளது. அதாவது, சிந்துவெளியில் செம்பை பயன்படுத்திய காலத்தில், தமிழர்கள் இரும்பை பயன்படுத்தி உள்ளனர். அதற்கான தரவுகளை சேகரிக்கும் வகையில், சிந்துவெளி மற்றும் தமிழ் நிலத்தில் கிடைத்துள்ள குறியீடுகளை ஆய்வு செய்து வருகிறோம்,” இவ்வாறு அவர் பேசினார்[2].

அரைத்த மாவை அரைக்கும் பாணியில் ஆய்வுக்கட்டுரைகள்: பட்டியலிடப்பட்ட தாள்கள் தாள்களின் தரத்தை வெளிப்படுத்தின. பெரும்பாலான தாள்கள் மறுவடிவமைக்கும் வகையைச் சேர்ந்தவை, அதே விஷயங்களை மீண்டும் மீண்டும் அரைத்த மாவை அரைக்கும் பாணியில் கூறுகின்றன.

  • தொல்காப்பியர் நோக்கில் வள்ளுவம்
  • திருக்குறள், திருவள்ளுவர் முதலியன… – தற்போதைய வாழ்க்கை முறைக்கான நடைமுறை வழிகாட்டி, இது போன்ற திருக்குறள் பற்றிய பல ஆவணங்கள்.
  • தனிநாயகம் பிள்ளை……
  • தமிழை விரைவாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்வது எப்படி
  • திரு.வி.கல்யாணசுந்தரனார், மயிலை சீனி வேங்கடசாமி (அவர் மீது பல ஆவணங்கள்) முதலியன,
  • சங்க இலக்கியம்……..பற்றி…
  • சிலப்பதிகாரம் பற்றி – பல தாள்கள்
  • சங்க இலக்கியம்
  • சித்த, சித்த மருத்துவம்

இதில் புதியதாக எந்த விசயத்தையும்சொல்ல காணோம்.

எப்படியாவது ஒரு ஆய்வுக்கட்டுரையை கொடுத்தே ஆகவேண்டும் என்ற வெறியில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் படுகின்றன: ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுப்பது, தலைப்பை ஆராய்ச்சி செய்தல், திட்டமிடல் மற்றும் எழுதுதல் என்பது இல்லை. வலைத்தளங்கள், கல்வி கட்டுரைகள், புத்தகங்கள், கலைக்களஞ்சியம், நேர்காணல்கள், இணையத்தில் தனிப்பட்ட கட்டுரைகள் (வலைப்பதிவுகள்) என்பதெல்லாம் இல்லாமல், “கட்-அன்ட்-பேஸ்ட்” முறையிலேயே செல்கின்றனர். கட்டுரையின் வடிவத்தில் தர்க்கரீதியான விமர்சன வாதங்களை முன்வைப்பதில்லை, தீர்மானமாக முடிவை வைத்துக் கொண்டு இந்த வேலை நடக்கிறது. பகுப்பாய்வு கட்டுரைகள், என்று சொல்லிக் கொண்டாலும், எந்த ஒரு முக்கியமான பிரச்சினையில் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொண்டு வரும் போக்கில் விசயங்களைச் சொவ்தில்லை. ஆராய்ச்சியின் பொருள் சர்ச்சைக்குரியதாக இருப்பதும் இல்லை, அந்த அளவுக்கு கஷ்டப்படுவதும் இல்லை, உழைப்புடன் முனைவதும் இல்லை. சொந்த கருத்துக்களைத் தெரிவித்து, ஆதாரங்களுடன் எழுதும் கட்டுரையாளர்கள் சிலரே. நேரடி மேற்கோள்கள், நீண்ட மேற்கோள்களைத் தவிர்க்காமல், அவற்றை அவ்வாறே எடுத்தாள்கின்றனர்.

எந்த ஆராய்ச்சிநெறிமுறையும் பின்பற்றப் படுவதில்லை: இப்பொழுதைய ஆராய்ச்சிநெறிமுறை, தரக்கட்டுப்பாடு, விதிகள், மென்பொருளால் சரிபார்க்கும்முறை முதலியவற்றை வைத்து சரிபார்த்தால், எத்தனை ஒழுங்கானவை என்று தீர்வாகும் என்பதும் நோக்கத் தக்கது. இருப்பினும், இவர்கள் தலைப்புகளை மாற்றி, சில வர்களை வெட்டி-ஒட்டி கட்டுரை என்று தயாரித்து, வாசிக்க வந்து விடுகின்றனர். கட்டுரைகளை தேர்வு செய்பவர்களும் எந்த தரத்தையும் சரிபார்ப்பதில்லை, தெரிந்தவர்களா, நண்பர்கள் பரிந்துரைத்தார்களா என்று பார்த்து தேர்வு செய்கிறார்கள். அவர்களே ஒப்புக் கொண்டபடி, பெயர்களை வைத்துக் கொண்டு கூட, சில கட்டுரைகளை ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.

09-07-2023 அன்று அவசரஅவசரமாக முடிந்த மாநாடு: குதிரை முன் வண்டிகல்வி அமர்வுகள் நிறைவடையும் முன் விழா நடைபெற்றது: ஆய்வுக்கட்டுரை அமர்வுகள் முடிவடைவதற்கு முன்பு நிறைவு விழா நடைபெற்றது. ஜூலை 9 ஆம் தேதி, ஆய்வுக் கட்டுரை வழங்குபவர்கள் தங்கள் நிலையைக் கேட்டறிந்து காத்துக் கொண்டிருந்தனர், காலை 9.00 மணி முதல் அறைகள் காலியாக இருந்ததாலும், யாரும் சரியாக பதிலளிக்காததாலும், ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கரவர்கள் சென்று வந்து கொண்டிருந்தனர். ஆய்வுக்கட்டுரை வாசிப்பு / கல்வி அமர்வுகள் குறித்து முற்றிலும் குழப்பம் ஏற்பட்டது. பின்னர், முதலில் பாராட்டு விழா நடைபெறும் என்றும், பின்னர் காலை 10.30 மணி 11 மணிக்கு தாள் வாசிப்பு நிகழ்ச்சி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சாளர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தனர், நேரம் கடந்துவிட்டதால் ஆய்வுக்கட்டுரை வழங்குபவர்கள் கவலையடைந்தனர். பின்னர், பிரிவுத் தலைவர்கள் அறைகளுக்குச் சென்று அமர்வுகளைத் தொடங்க ஆரம்பித்தனர். துரதிர்ஷ்டவசமாக, இந்த முரண்பாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் வாசிப்பவர்களுக்கு 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதித்தனர். மேலும், 10-15 நபர்கள் இல்லை, அவர்களில் பெரும்பாலோர் கட்டுரை வழங்குபவர்களாக இருந்தனர். வழக்கம் போல கட்டுரை வாசிப்பவர் ஆசிட்டுவிட்டு போய்விட்டார்கள்.. நிச்சயமாக, அமர்வுகளைத் தொடங்க அமைப்பாளர்கள் மற்றும் பிரிவுத் தலைவர்கள் தரப்பில் இரண்டு மணி நேரம் ஏற்கெனவே தாமதம் ஏற்பட்டது. எப்படியோ, பேப்பர் வாசிப்பு அமர்வுகள் முடிந்து, மதிய உணவுக்குப் பிறகு பிரதிநிதிகள் நகரத் தொடங்கினர். இதனால், மூன்று நாள் சர்வதேச தமிழ் மாநாடு மேலே விவரிக்கப்பட்டபடி இரண்டரை நாட்களில் முடிக்கப்பட்டது.

மலேசியாவின் போட்டியாளர் கூற்று: சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில், கடந்த 7, 8, 9ம் தேதிகளில், உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சார்பில், 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தது[3]. அடுத்த மாநாட்டை, 2025ல் சிங்கப்பூரில் நடத்த திட்டமிட்டுள்ளனர்[4]. 1968ல் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற 2வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை விட, 11வது மாநாடு செம்மஞ்சேரியில் உள்ள ஆசிய ஆய்வுக் கழகத்தில் ஒரு கல்வி நிகழ்வாக நடைபெற்றது, என்று பொன்னவைக்கொ தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், ஏதோ நடத்த வேண்டுமே என்று நடத்தியாகி விட்டது. இதே ஜூலையில் இரண்டாவது சந்திப்பு. பெரும் ஆரவாரத்துடனும், பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்புடனும் நடைபெறும் என்று சொல்லப் படுகிறது. இந்த மாநாட்டுக்கு மாநில அரசிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஐஏடிஆர் உறுப்பினர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த அரசர் அருளாளரையும் அதிபராகத் தேர்ந்தெடுத்தனர். இதற்கிடையில், 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் ஜூலை 21 முதல் 23 வரை நடைபெறும் என பேராசிரியர் டி.மாரிமுத்து தலைமையிலான மற்றொரு குழு அறிவித்துள்ளது. அவர் இணைய யுகத்தில் தமிழ் மொழி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இதில் கவனம் செலுத்தப்படும் என்கிறார்.

© வேதபிரகாஷ்

11-07-2023

.


[1] தினமலர், சிந்துவெளி காலத்திலேயே இரும்பு பயன்பாட்டில் இருந்தது, பதிவு செய்த நாள்: ஜூலை 08,2023 01:54.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3369634

[3] தினமலர், நிறைவு பெற்றது உலக தமிழாராய்ச்சி மாநாடு, Added : ஜூலை 11, 2023  04:37

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3372482

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது–அதன் நிலைப் பற்றிய விவரங்கள் (6)

ஜூலை 11, 2023

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது, முடிந்தது அதன் நிலைப் பற்றிய விவரங்கள் (6)

அதிரடிகளுடன் ஆரம்பித்து அமைதியாக முடிந்த மாநாடு: சென்னையில் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி 3 நாட்கள் மாநாடு 7ம்தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. நடக்கிறது. இதில், 20 நாடுகளிலிருந்து 200 தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்றதாக சொல்லப் படுகிறது. ஆனால், வந்துள்ளவர்கள் ஏற்கெனவே பரிச்சயம் ஆனவர்கள் தாம். ஏதோ சுற்றுலாவுக்கு வந்தது போல வந்துள்ளனர்.. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் இதுவரை 10 மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் 7ம்தேதி தொடங்கி 9ம் தேதி வரை சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடக்கிறது. இது தொடர்பாக உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மு.பொன்னவைக்கோ, துணைத் தலைவர் இ.சுந்தரமூர்த்தி, மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜி. ஜான்சாமுவேல், பொதுச் செயலாளர் உலகநாயகி பழனி ஆகியோர் சென்னை பல்கலைக்கழகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது[1]: “மாநாட்டை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு..ஸ்டாலினிடம் அனுமதி கேட்டுள்ளோம். ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம்.மாநாட்டின் நிறைவு நாளில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன,” இவ்வாறு அவர்கள் கூறினர்[2]. ஆனால், முதலமைச்சர் வரவில்லை. பொதுவாக, இந்த மாநாடு நடப்பதே தெரியாமல் தான் இருக்கிறது.

ஆய்வுக்கட்டுரை வாசிப்பு பற்றிய விவரணம்: வழக்கம் போல[3], “உலகமெல்லாம் தமிழோசை பரவ வேண்டும் என்பது இந்த மாநாட்டின் மையப்பொருளாக உள்ளது. தமிழ்மொழி, இலக்கியம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டில், இந்தியாவில் இருந்து மட்டுமின்றி ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் பங்கேற்கின்றனர். தமிழின் தொன்மை, தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம், தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல், சமூகவியல், மொழி பெயர்ப்பியல், மொழியியல் என பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர். மொத்தம் 200 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. மாநாட்டில் புத்தகக் கண்காட்சி, நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மு.பொன்ன வைக்கோ, துணைத் தலைவர் .சுந்தரமூர்த்தி, மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜி.ஜான்சாமுவேல், பொதுச் செயலாளர் உலகநாயகி பழனி, டாக்டர் பத்மினி உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்,” என்று ஊடகங்களுக்குக் கொடுக்கப் பட்ட குறிப்பு கூறுகிறது[4].

பொன்.வைகோமாரிமுத்து பிரச்சினை: பொன்.வைகோ-மாரிமுத்து பிரச்சினை இன்னும் முடிந்த பாடில்லை போலிருக்கிறது[5]. “2019ல் சிகாகோவில் நடந்த 10வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது, நான் ஐஏடிஆர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், முந்தைய தலைவர் மாரிமுத்து தான் தலைவர் என்று கூறிக்கொண்டு மாநாட்டை நடத்த முயற்சிக்கிறார். அது செல்லாத ஒன்றாக இருக்கும்,” என்று பொன்னவைக்கோ மேலும் கூறினார்[6]. ஆக இங்கும் பதவி-போட்டி முதலியன இருக்கிறது போலும். இருப்பினும், இம்மாநாடு சிக்கல்களுடன், முராபாடுகளுடன் தான் நடக்கிறது. ஏற்கெனவே, ஜான் சாமுவேலுக்கும, ஜான் ஜேக்கப் என்பவருக்கும் பிர்ச்சினை இருக்கிறது[7]. சென்னையைச் சேர்ந்த, தாம்சன் ஜேக்கப் என்பவர், “பல குற்றங்களில் சிக்கியுள்ள ஜான் சாமுவேல் எப்படி இம்மாநாட்டை நடத்த முடியும்,” என்று சென்னை பல்கலை துணைவேந்தருக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்[8]. இதைப் பற்றியெல்லாம் தனியாக ஏற்கெனவே விளக்கி பிளாக் போட்டுள்ளேன். இப்படி, எல்லா நிலைகளிலும் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, கல்வி-நெறிமுறை, ஆராய்ச்சி முதலிய கோணங்களில் இவர்களால் எப்படிகவனத்தைச் செல்லுத்த முடியும். மேலும் கூட அரசியலையும் வைத்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

07-07-2023 – அரசியல்வாதிகள் அரசியல் பேசியது: துவக்க விழாவில், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், ”பைபிளில் வரும், சங்கீதக்காரர்களின் பண்புகள், தமிழர்களின் பண்புகளுடன் ஒத்து போகின்றன. எழுத்தாளர் டால்ஸ்டாய் தமிழ் மொழியை நேசித்தார். ”மதம் பரப்ப வந்த கிறிஸ்துவர்கள் கூட, தமிழை படித்து, வியந்து, தமிழுக்காக தொண்டு செய்துள்ளனர்,” என்றார். இவர் இப்படி ஏதோ கிருத்துவ பிரசங்கி போல பேசியது, பலருக்கு திகைப்பாக இருந்தது. பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஆர்.என். ‘சிலர்’ தமிழ் மொழியின் பெருமையை இழிவுபடுத்துகின்றனர் என்று ரவி முதலியோரையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் தமிழை போற்றுவது போல, தூற்றுகிறார்கள் என்றார். “தமிழ் மொழிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தமிழ் மொழியை சொந்தம் கொண்டாடுவதும், தமிழ் மொழிக்கு ஆதரவாக உயிர் தியாகம் செய்தவர்களை இழிவு படுத்துவதும் மாற்றுக் கருத்துகளை கூறி, இது போன்ற மாநாடுகள் (உலகத் தமிழாராய்ச்சி) அவசியம். இதுபோன்ற சதிகாரர்களிடம் இருந்து தமிழ் மொழியைக் காக்க மாநாடு நடத்தப்படும்” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அழைப்பிதழ்-1

மோடி எதிர்ப்பு- முதலியன இம்மாநாட்டிற்குத் தேவையா?: இரண்டு வருடங்களாக சண்டை, சச்சரவு, முரண்பட்ட அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரை சேகரிப்பு, பறிப்பு, முதலியன நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ்-என்ற பெயரில் மொழிப்பற்றையும் தாண்டிய நிலையில் செயல்பட்டு, பல ஆய்வுக் கட்டுரைகள் நிராகரிக்கப் பட்டன. ஆராய்ச்சி நெறிமுறை, தரம் எல்லாம் காற்றில் பறக்க விடப் பட்டன. முதலில் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டு, முழுகட்டுரையும் பெறப் பட்டு, பிறகு, “நேரமில்லை” என்று நிராகரிக்கப் பட்டுள்ளன. ஆனால், இந்த மூன்று நாட்களில் வாசிக்கப் பட்ட பெரும்பான்மையான கட்டுரைகளில் விசயமே இல்லாமல், அரைத்த மாவையே அரைத்துள்ளார்கள். இதற்குத் தான் இவ்வாளவு ஆர்பாட்டம் செய்துள்ளர்கள். போதாகுறைக்கு மைனாரிட்டி மந்திரி, கமிட்டி உறுப்பினர் என்றெல்லாம் அழைக்கப் பட்டு, அவர்கள் பிரதமந்திரி-கவர்னர் பற்றி பேசி, அரசியலாக்கினர். மாநாட்டின் தன்மையினையே கெடுத்தனர் எனலாம். இருப்பினும், மத அடிப்படைவாதியான ஜான் சாமுவேல் போன்றோர் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. இத்தகைய அரசியலால் இவர்களுக்கு என்ன பயன் கிட்டப் போகிறது என்று தெரியவில்லை.

மாநாட்டில் ஆராய்ச்சி போக்கு: உண்மையிலேயே தமிழுக்காக பாடுபடுகிறார்கள் என்றால், சரித்திர ஆதாரமில்லாத பழங்கதைகளை பேசாமல், ஆரிய-திராவிட இனவாத கட்டுக் கதைகள், முதலியவற்றை விடுத்து, ஆதாரங்களுடன் கட்டுரைகள் எழுதப் படவேண்டும். பாரதம் / இந்தியாவிலிருந்து ஏதோ தனியாக தோன்றியது போன்ற பொய்மைவாதங்களை விடுத்து, சங்க இலக்கியங்கள் சொல்வதையாவது வைத்துக் கொண்டு ஆராய வேண்டும். பெரியாரிஸம், நாத்திகம், இந்துவிரோதம், இந்தியவிரோதம், பிரிவினைவாதம் என்ற போக்கிலேயே ஆராய்ச்சிகள் நடந்தால், “குமரிக் கண்டம் போன்று” குறுகிய வட்டத்தில் அடைக்கப் பட்டு, மறைந்து விடும். இறையனாரு, நக்கீரரும், அப்பாதுரையும் கூட காப்பாற்ற முடியாது. இப்பொழுது கூட ஆய்வுக்கட்டுரை தொகுப்பு கொடுக்காமல், “குமரிக் கண்டம்” என்ற சிறு புத்தகம் கொடுக்கப் பட்டுள்ளது.     

© வேதபிரகாஷ்

11-07-2023


[1] மாலைமலர், சென்னையில் ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது: 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, By மாலை மலர், 6 ஜூன் 2023 12:53 PM.

[2] https://www.maalaimalar.com/news/state/7th-july-11th-world-tamil-research-conference-begins-in-chennai-618795

[3] தினகரன், 7ம்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது 11வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு: 200 தமிழறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்பு, July 5, 2023, 1:30 am

[4] https://www.dinakaran.com/3_days_from_7th_research_conference_participation_of_poets/

[5] Times of India, 55 years on, Tamil research conference returns to city, A Ragu Raman / TNN / Updated: Jul 7, 2023, 09:16 IST

[6] “During the 10th World Tamil Research Conference in Chicago in 2019, I was elected as the president of IATR. But, the previous president Marimuthu is still claiming that he is the president and trying to conduct the conference. It will be an invalid one,” Ponnavaikko added.

https://timesofindia.indiatimes.com/city/chennai/55-years-on-tamil-research-conference-returns-to-city/articleshow/101558597.cms?from=mdr

[7] தினமலர்,உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சீர்குலைக்க சதி?..,பதிவு செய்த நாள்: Added : ஜூன் 13, 2023  00:33; https://www.dinamalar.com/news_detail.asp?id=3346006

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3346006