Archive for the ‘மோஹனா’ Category

வலசை அகழாய்வு விடுதி பிரச்சினைக்கு சென்று, பாலியல் தொல்லையாகி, ஜாதியமாக்கப் படும் விவகாரமாகும் சென்னை பல்கலை மாணவர்கள் விவகாரம் –  அரசியலுடன் வெளிப்பட்ட விதம், பின்னணி மர்மங்கள் (8)

மார்ச் 24, 2021

வலசை அகழாய்வு விடுதி பிரச்சினைக்கு சென்று, பாலியல் தொல்லையாகி, ஜாதியமாக்கப் படும் விவகாரமாகும் சென்னை பல்கலை மாணவர்கள் விவகாரம் –  அரசியலுடன் வெளிப்பட்ட விதம், பின்னணி மர்மங்கள் (8)

தன்னை பற்றி பாலியல் புகார் கூறியதால் கையை அறுத்து மாணவி தற்கொலை முயற்சி: சென்னை பல்கலையில் பரபரப்பு – தினகரனில் வந்த செய்தி[1]: சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள், தங்களுக்கு குறைந்த மதிப்பெண் வழங்கப்பட்டதை கண்டித்து, பல்கலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், அதன்படி மதிப்பெண் வழக்காததால், மீண்டும் பல்கலை நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். அதில் 4 பேர் நேற்று பல்கலை நிர்வாகத்தால் சஸ்ெபண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், தொல்லியல் துறையை சேர்ந்த மாணவி ஒருவர் மீது, பாலியல் அத்துமீறல் என்ற வகையில் அந்த துறையின் தலைவர் பல்கலை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அவமானம் தாங்காமல் நேற்று முன்தினம் திடீரென கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணரவர்கள், அந்த மாணவியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று காலை அந்த மாணவி மீண்டும் பல்கலைக் கழகத்திற்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றார். தகவலறிந்த மாணவியின் பெற்றோர், சென்னை வந்து பல்கலைக் கழகத்தில் இருந்த மாணவியை பார்க்க முயன்றனர். ஆனால், அங்கு இருந்த போலீசார் பெற்றோரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும், அந்த போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்களை இழுத்து பல்கலை நுழைவாயிலுக்கு வெளியில் தள்ளினர். இதனால், பல்கலை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது[2].

ஜாதிய பிரச்சினையாக்க முயலும் போராட்ட மாணவர்கள்: ஊடகங்கள், நிர்வாகம் சார்பில் இதுகுறித்து கேட்க சென்றால் பலவிதமான காரணங்களை கூறி வந்தனர். அதில்,

1. பாதிக்கப்பட்ட மாணவி தேர்ச்சி அடையாததால் போலியான ஒரு பாலியல் புகாரை துறைத்தலைவர் மீது வைத்திருக்கிறார் என்பதும்,

2. சாதி இந்து மாணவர்கள் சேர்ந்து துறைத்தலைவரை சாதி ரீதியாக இழிவுபடுத்தினார்கள் என்பதும்,

3. ஆதிக்க சாதி பேராசிரியர்கள் இணைந்து மாணவர்களின் போராட்டத்தை தூண்டிவிட்டு ஒடுக்கப்பட்ட துறைத்தலைவர் மீது போலியாக ஒரு புகாரை அளித்துள்ளார்கள் என்பதும், தெரிவதாக, போராட்டம் செய்யும் மாணவர் குறிப்பிடுகிறார். மேலும், இதற்கு, அம்மாணவர் கொடுக்கும் விளக்கம்: “சாதியை வைத்து தப்பிக்க பார்க்கும் துறைத்தலைவர் சௌந்தரராஜன்!  – மாணவர்களின் இந்த ஐந்து நாள் போராட்டம் என்பது மாணவியிடம் அவர் தகாத முறையில் நடந்துக்கொண்டார் என்பது தான். ஆனால் துறைத்தலைவர் அதுகுறித்து எவ்வித கருத்தும் சொல்லாமல் சாதியை வைத்து தப்பிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இன்று வரையிலும் துறைத்தலைவர் மாணவர்கள் மீது அளித்துள்ள புகார் என்னவென்பதை நிர்வாகமோ அந்த நிர்வாகம் இதற்கு முன் அமைத்த கமிட்டியிலோ கூட விசாரிக்கப்படவில்லை. அதனை மாணவர்களுக்கு தெரியபடுத்தவும் இல்லை. ஆனால் தொடர்ச்சியாக ‘சாதி இந்துக்களான மாணவர்கள் சிலர் சாதி ரீதியாக இவரை விமர்சித்ததாக’ ஒரு தவறான தகவலை சமூக வலைதளங்களில் சுற்றலில் விட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு யார் இப்படி ஒரு தகவலை தெரிவித்தார்கள் என தெரியவில்லை. இதுவரை பதிவாளரோ மற்ற நிர்வாகிகளோ கடந்த ஐந்து நாட்களில் ஒருமுறை கூட எங்களிடம் இதுகுறித்து கேட்கவோ விசாரிக்கவோ இல்லை. அதோடு போராடும் மாணவர்களில் அனைத்து சமூக மாணவர்களுமே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இல்லை.  ஆனால் “The New Indian Express” இதழில் இவ்வாறு செய்தி வெளியாகியுள்ளது[3]. அதுவும் ஒரு பல்கலைக்கழக நிர்வாகி அதனை கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”. இங்கும் வெளியிட்டுள்ள செய்தியை சிறிது மாற்றி விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது[4].

விக்கி கண்ணன், “இந்துராம்,” மவுண்ட் ரோட்மஹாவிஷ்ணு பற்றி குறிப்பிடுவது: “பொதுவாகவே ‘தி இந்து’ N.ராம் கும்பல்கள் அதிகார வர்க்கத்துடன் இணைந்தே செய்தி வெளியிட்டு லாபம் அடைவார்கள் என்பது நாம் ஈழப்பிரச்சனையில் இருந்தே கண்கூடாக கண்டு வரும் உண்மை. இப்போது, “மாணவர்கள் மார்க் கேட்டு போராடியதால் தான் சஸ்பென்ட் செய்யப்பட்டார்கள்” என நிர்வாகத்திடம் கேட்டதை மட்டுமே செய்தியாக வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மாணவர்களை அலைபேசி மூலம் அழைத்து கேட்டதை மட்டும் பத்திரிக்கையில் பதிவு செய்யவே இல்லை. நாசுக்காக அதனை தவிர்த்திருக்கிறார்கள்,” இவ்வாறு குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. என்.ராம் ஒரு கம்யூனிஸ்ட், திமுக ஆதரவாளர் (அவர்கள் வீட்டுப் பெண் தயாநிதி மாறனின் மனைவி) மற்றும் கத்தோலிக்க சார்புடையவர் (இப்பொழுது அவருடைய மனைவி, மரியம் சாண்டி). ஆகவே, ஒட்டு மொத்த, கம்யூனிஸ்ட் வகையறாக்கள், முஸ்லிம்களுடன், பெரியாரிஸ-அம்பேத்கர் போர்வையில் வரும் போதும், “இந்து ராம்,” ஆதரிக்கவில்லை என்றால், இதில் விசயமே இல்லை என்றாகிறது. ஒருவேளை ஜாதிப் பிரச்சினையாக்கி, குழப்பத்தை உண்டாக்க முயற்சிக்கும் போக்கும் உள்ளது என்றாகிறது. இதற்கெல்லாம், பல்கலைக் கழகத்தில் உள்ளவர்கள் சளைத்தவர்கள் அல்ல. ஆகவே, இவர்கள் வேறொரு திட்டத்துடன் செயல் பட்டு வருகிறார்கள் என்றாகிறது. இங்கு குறிப்பிட்ட விடைட் தாள்கள் இன்னொரு துறைத் தலைவர் திருத்தி மதிப்பெண்கள் கொடுத்துள்ளதாகவும்[5], அதற்கு, தொல்லியல் துறைத் தலைவரை இலக்காக்கி இருப்பதாகவும், மாணவர்கள் சொல்வதில் உண்மை இல்லை என்றும் ஒரு அதிகாரி சொன்னார் என்று இந்து செய்தி வெளியிட்டுள்ளது[6].

8-5 மாணவர்கள் இவ்வாறு கலாட்டா செய்வதின் மர்மம், பின்னணி என்ன?: விடுதி பிரச்சினை, மதிப்பெண் பிரச்சினையாகி, வாக்குவாதம்-மோதலில் முடிந்து, தள்ளுமுள்ளு பாலியல் சதாய்ப்பு என்றாகி, இப்பொழுது “தலித்,” ஜாதியம், மேல் ஜாதி மற்ற ஜாதி எனெல்லாம் வந்து முடிந்துள்ளது.  ஆகவே, இவர்கள் பின்னணியில் யாரோ, எந்த அமைப்போ-இயக்கங்களோ இருக்கின்றன என்றாகிறது. ஒரு வேளை, இப்பொழுது இலக்கில் உள்ளவர், எஸ்.சி, பட்டியல் இனத்தவர் இல்லை என்றால், வேறு மாதிரி போயிருக்கும். ஒரு பார்ப்பனர் என்றால், கேட்கவே வேண்டாம், தேர்தல் பிரச்சாரத்திற்கு தீனி போட்டிருக்கும். இப்பொழுதே, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, நாங்கள் வந்தால் கிடைக்கும் என்றெல்லாம், பிரச்சாரத்தில் பேசி வருகிறாற்கள். பிறகு, இது உண்மை என்றால், சும்மாவா விருப்பார்கள். ஆனால், யாரும் இதனை சீண்டுவதாகஹ் தெரியவில்லை. ஒருவேளை தேர்தலை வைத்து கலாட்டா செய்து, ஊடகங்களை ஈர்த்து வருவது, குறிப்பிட்ட கட்சிக்கு உதவ செய்யும் திட்டமாக இருக்கிறது போலும். நெருப்பு வைத்தாலும், எண்ணை ஊற்றினாலும், பற்றியும் கொள்ளமல் இருப்பது தான் வேடிக்கை. படிப்பு தவிர, மற்ற எல்லாம் விவரிக்கப் படுவது, வருத்தமான விசயம் தான்!

© வேதபிரகாஷ்

24-03-2021


[1] தினகரன், தன்னை பற்றி பாலியல் புகார் கூறியதால் கையை அறுத்து மாணவி தற்கொலை முயற்சி: சென்னை பல்கலையில் பரபரப்பு, 2021-03-22@ 01:07:17

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=665012

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=665012

[3] New Indian Express, Students protest sex abuse, UoM suspends five for ‘dirtying’ lawns, Published: 21st March 2021 03:58 AM | Last Updated: 21st March 2021 03:58 AM By Sushmitha RamakrishnanExpress News Service.

[4] A top varsity official said that the students had “dirtied” the lawns, and had not taken permission for protesting. “Further, the teacher against whom they lodged a complaint is from a Scheduled Caste. He is often targeted by some students,” the official said, and added that the complainant had passed the external exam but failed the internals. “The university refused to pass her in internals as she had fallen behind on assignments. This became a bitter fight between the students and the teacher,” the official claimed.

https://www.newindianexpress.com/cities/chennai/2021/mar/21/students-protest-sex-abuse-uom-suspends-five-for-dirtying-lawns-2279471.html

[5] The Hindu, 5 students of Madras University suspended, SPECIAL CORRESPONDENTCHENNAI, MARCH 21, 2021 04:25 IST; UPDATED: MARCH 21, 2021 04:26 IST

[6]  A senior official said the activities of the students and their behaviour with the university officials had forced them to take the decision. “The students were assessed by another professor in the department but the HoD was being targeted. Besides, the students were behaving rudely with the professor, which the committee found unacceptable. There was no truth in the students’ allegation,” the official said.

https://www.thehindu.com/news/cities/chennai/5-students-of-madras-university-suspended/article34122203.ece

வலசை அகழாய்வு விடுதி பிரச்சினைக்கு சென்று, பாலியல் தொல்லையாகி, ஜாதியமாக்கப் படும் விவகாரமாகும் சென்னை பல்கலை மாணவர்கள் விவகாரம் –  அரசியலுடன் வெளிப்படும் போக்கு (7)

மார்ச் 24, 2021

வலசை அகழாய்வு விடுதி பிரச்சினைக்கு சென்று, பாலியல் தொல்லையாகி, ஜாதியமாக்கப் படும் விவகாரமாகும் சென்னை பல்கலை மாணவர்கள் விவகாரம் –  அரசியலுடன் வெளிப்படும் போக்கு (7)

20-03-2021 (சனிக்கிழமை): மார்ச் 20 அன்றுபோராட்டத்தில் ஈடுபட்ட 4 மாணவர்கள், 1 மாணவி என 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.  மூன்று மாணவர்கள் எப்படி தப்பித்துக் கொண்டார்கள்!

21-03-2021 (ஞாயிற்றுக்கிழமை): இந்தப் பின்னணியில்தான், ஞாயிற்றுக்கிழமை காலை (21-03-2021) அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவரை மீட்டு இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றியிருக்கின்றனர்.

22-03-2021 (திங்கட்கிழமை): மார்ச் 22 அன்று மாணவர்கள் 5 பேரும் போலீஸாரால் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அதாவது, ஒரே நாளில் அந்த மாணவி மருத்துவமனையிலிருந்து வெளியே வந்து, போராட்டத்திற்கு தயாராகி விட்டார். அதனால், போலீஸ் நடவடிக்கையும் தொடர்ந்துள்ளது.

துறைத் தலைவர் செளந்தரராஜனிடம் இது குறித்த விளக்கத்தைப் பெற தொடர்புகொண்டபோது, அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.

22-03-2021 அன்று பல அரசியல் அமைப்புகள் ஆர்பட்டம் என்று அறிவித்தது: விக்கி கண்ணன் பதிவு செய்தது, “சென்னைப் பல்கலைக்கழக பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் (APSC), அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் (ATSA), இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI), இஸ்லாமிய மாணவர்கள் கூட்டமைப்பு (SIO Tamilnadu) போன்ற பலதரப்பட்ட மாணவரமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA), தமிழ்நாடு பெண்கள் இயக்கம் (TWM), மனிதி போன்ற மகளிர் அமைப்புகளும் தங்களது ஆதரவை தெரிவித்திருக்கின்றன.

இந்நிலையில் இன்று (22.03.2021) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) மற்றும் இந்திய மாணவர் சங்கம் (SFI) போன்ற இடதுசாரி அமைப்புகள் காலை 10 மணியளவில் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில்கண்டனப் போராட்டம்அறிவித்திருக்கின்றன.

பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைசார் மாணவர்களும், மாணவரமைப்புகளும், மகளிர் அமைப்புகளும் பொதுமக்களும் கலந்துக்கொண்டு இப்போராட்டத்திற்கு ஆதரவளியுங்கள்.

மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்!!” வினவு தளத்தில், RSYFன் கடிதமும் போராட்டத்தைக் குறிப்பிடுகிறது.

CPIM மாவட்ட செயலாளர் போராட்டத்திற்கு 22-03-2021 அன்று அழைப்பு விடுத்தது:

விக்கி கண்ணன் என்ற போராட்டத்தில் கலந்து கொள்ளும் மாணவர், முகநூலில், அவ்வப்போது / உடனுக்குடன் முகநூலில், சில விவரங்களை பதிவு செய்து வருகிறார். அதில், “சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நீதி கேட்டு போராடி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற SFI & AIDWA தோழர்கள் மீது காவல்துறை கொடூரத் தாக்குதல்.. கைது..

12 தோழர்களுக்கு கடுமையான காயம்..

பெண் தோழர்களின் ஆடைகளை பொதுவெளியில் கலைந்து ஆபாச அருவருக்கத்தக்க பேச்சு..

திருவல்லிக்கேணி துணை ஆணையர் சரவணன் இன்ஸ்பெக்டர் சீதாராமன் தலைமையில் காவல்துறை நடத்திய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை கண்டித்து.. சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி இன்று (மார்ச் 22) மாலை 5.00 மணிக்கு வாலாஜா ரோடு திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆணையர் அலுவலகம் முன்பு *மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகை போராட்டம்.*

அநீதிக்கெதிராய்

ஆர்ப்பரித்து வாரீர்!

தோழமையுடன்

ஜி.செல்வா

CPIM மாவட்ட செயலாளர்,” என்றுள்ளது. இதெல்லாம் அரசியலாக்கப் பட்ட நிலையை காட்டுகிறது.

வாலாஜா ரோடில் கம்யூனிஸ இயக்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது, போலீஸார் அப்புறப் படுத்தியது[1]: நியூஸ் 18 தமிழ்நாடு வீடியோ எவ்வாறு குறிப்பிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆர்பாட்டம் செய்தார்கள், போலீஸார் வந்து அப்புறப் படுத்த முயற்சித்தார்கள், அப்பொழுது, பிடிவாதமாக படுத்துக் கொண்டு வராமல் இருக்க செய்தார்கள், வலுக்கட்டாயமாக, போலீஸார் அவர்களை தள்ளிக் கொண்டு, வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள், கல்யாண மண்டபத்தில் தங்க வைத்தார்கள், அங்கும் வீடியோ மூலம் பெட்டி கொடுத்தார்கள், சமூக வலைதளங்களில் பரப்பினார்கள் என்றெல்லாம் தெரிகிறது[2]. அந்த பெண்கள் பிடிவாதமாக படுத்தது, வீழ்ந்தது முதலிய செயல்கள், அசாதரணமாக இருந்தன. இதற்கெல்லாம் கூட பயிற்சி கொடுப்பார்கள் போலிருக்கிறது. மேற்கு வங்களாத்தில், பெண்கள் இவ்வாறெல்லாம் ஆர்பாட்டம் செய்வது வழக்கம், அவை வீடியொக்களில் வரும். மேலும் இவையெல்லாம், வாலாஜா ரோட் பக்கம் நடந்துள்ளது. போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்தார்கள் என்றாகிறது.

மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட், மாவோயிஸ்ட், இஸ்லாமிய, அம்பேத்கரியபெரியாரிஸ, கம்யுனிஸ்ட் மகளிர் அமைப்புகள் ஒன்றாக வருவது ஏன்?: இங்கு, சென்னைப் பல்கலைக்கழக பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் (APSC), அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் (ATSA), இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI), இஸ்லாமிய மாணவர்கள் கூட்டமைப்பு (SIO Tamilnadu) போன்ற பலதரப்பட்ட மாணவரமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA), தமிழ்நாடு பெண்கள் இயக்கம் (TWM), மனிதி போன்ற மகளிர் அமைப்புகளும் தங்களது ஆதரவை தெரிவித்திருக்கின்றன,” என்பதை கவனிக்க வேண்டும்.

  1. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் (APSC),
  2. அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் (ATSA),
  3. இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI),
  4. இஸ்லாமிய மாணவர்கள் கூட்டமைப்பு (SIO Tamilnadu)
  5. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA),
  6. தமிழ்நாடு பெண்கள் இயக்கம் (TWM), மனிதி போன்ற மகளிர் அமைப்புகள்

மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட், மாவோயிஸ்ட், இஸ்லாமிய, அம்பேத்கரிய-பெரியாரிஸ, கம்யுனிஸ்ட் மகளிர் அமைப்புகள் ஒன்றாக வருவதும் திகைப்பாக இருக்கிறது. பிடோபைல் குற்றங்கள் நிறையவே நடந்துள்ளன, நடந்து வருகின்றன. ஆனால், அதௌப் பற்றி ஊடகங்கள் மற்றும் இந்த அமைப்புகள் கண்டு கொள்வதில்லை. “போராடிய மாணவி மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றவாளி சௌந்திரராஜன், தலித் போர்வைக்குள் ஒளிந்துகொள்ள அனுமதிக்காமல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். நிரந்தர பணி நீக்கம் செய்!,” என்று மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு, தமிழ்நாடு, தனது 22-03-2021 தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை கவனிக்கலாம்[3]. ஒருவேளை அவர் எஸ்.சி / பட்டியல் இனத்தவர் இல்லாமல், வேறு ஜாதியாக இருந்தால் என்ன வாயிருக்கும்? ஆகவே, ஏதோ பிரச்சினையை இப்படி, மாற்றி-மாற்றி திசைத் திருப்ப இவை நடக்கின்றன என்று தோன்றுகிறது.

© வேதபிரகாஷ்

24-03-2021


[1] நியூஸ் 18 தமிழ்நாடு, சென்னைப் பல்கலை மாணவி தற்கொலை முயற்சிவிஸ்ரூபம் எடுக்கும் போராட்டம். Crime Time, Mar 22, 2021.

[2] https://www.youtube.com/watch?v=vl-dxnIZIM8

[3] வினவு, சென்னை பல்கலை: உரிமைக்காகப் போராடிய தொல்லியல் துறை மாணவர்களை கைது || புமாஇமு கண்டனம், By புமாஇமு -March 23, 2021

சென்னை பல்கலை : உரிமைக்காகப் போராடிய தொல்லியல் துறை மாணவர்களை கைது || புமாஇமு கண்டனம்