லட்சங்களில் விற்க்கப்படும் இஞ்சினியரிங் சீட்டுகள்!

லட்சங்களில் விற்க்கப்படும் இஞ்சினியரிங் சீட்டுகள்!

நான் இதை 22-05-2010 அன்று பதிவு செய்தேன். உடனே சிலர் எனக்கு ஈ-மெயில் அனுப்பி அந்தந்தகாலேஜில் உள்ள “தொடர்பாளிகளின்”  ஃபோன் / செல் நம்பர் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

உண்மையில், இது ஒன்றும் ரகசியம் ஒன்றும் இல்லை. “காசு கொடுத்தா சீட்” என்ற ரீதியில் உள்ளபோது 80-90-95% மார்க் இருந்தாலும், காசில்லா / கொடுக்கா விட்டால் வேண்டிய காலேஜ் / பிராஞ்ச் / துறை கிடைக்காது.

கவுன்சிலிங்கில் ஏதாவது கிடைக்கும், வாங்கிக் கொண்டு படிக்கவேண்டியதுதான். இப்படித்தான் இந்த கல்வி விபச்சாரிகள், படிப்புத்துறைப் பரத்தையர்,  அறிவிஜீவு வேசியர், திராவிடம் பேசும் விலைமாதுகள், இத்யாதிகள் இருக்கின்றனர், பயமுறுத்துகின்றனர், பேரம் பேசுகின்றனர், அழைக்கின்றனர்.

இதற்கு பகட்டு விளம்பரம், வழ-வழப்பான பேப்பரில் ரூ.1000ற்கு விண்ணப்பப்படிவம்………….கோடிகள்அள்ளல் அட்மிஷனுக்கு முன்பாகவே, இந்த கேடுகெட்ட செயலுக்கு நுழைவு தேர்வு வேறு! ……………….எல்லாம்!

மாணவர்களுக்கு நேராக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வந்து பார், இடத்தைப்பார், வசதிகளைப் பார், “இன்ஃப்ரா ஸ்ட்ரக்சரை” பார், பிடித்திருந்தால் வந்து சேர், ஜாலியாக இருக்கலாம் என்ற ஆசை வார்த்தைகள் வேறு!

இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் 06-06-2010 விஷயங்களைத் தனக்கே உரித்தான பாணியில் வெளியிட்டிருக்கிறது!

அரசியல்வாதிகள், அவர்களின் ஏஜன்டுகள், முதலியோரது கூட்டு: மந்திரி சொல்லிவிட்டார், இந்த தடவை அப்ளிகேஷன் போட்டவர்களுக்கு எல்லாம் சீட்! “கட் ஆஃப்” மார்க்குகளையும் குறைத்து விட்டேன், என்று தொடர்கிறார். அண்ணா தொழிற்-பல்கலைக்கழக துணைவேந்தர்கள், மற்றவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் இதே பாட்டு பாடுகின்றனர், ஆனால், காசு வாங்காமல் சீட் கொடு என்று சொல்வதில்லை, ஏன்?

2010 கல்வி ஆண்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்வதற்கான கட் ஆப் ( தகுதி மதிப்பெண் ) குறைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். மாற்றி அமைக்கப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இன்ஜினியரிங் கட் ஆப் 55 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டு்ள்ளது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 45 சதவீதமாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கட் ஆப் 40 சதவீதமாகவும், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கான கட் ஆப் 35 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

பொன்முடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் ‌சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என இன்ஜினியரிங் கல்லூரிகளின் நிர்வாகிகள், முதல்வர்கள், சட்டசபை உறுப்பினர்கள் ஆகியோர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி கட் ஆப் மதிப்பெண்ணை குறைத்துள்ளதாக தெரிவித்தார். இதனால் இவ்வாண்டு இன்ஜினியரிங் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரப்பப்படும். மாணவர்களின் விருப்பமும் நிறைவேறும். மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும். மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண் குறைக்கப்பட்டிருப்பதுடன் ஒரு குடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவருக்குரிய இன்ஜினியரிங் படிப்பு கல்விக் கட்டண தொகையை அரசே செலுத்துவதாலும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்றார்.

அப்ளிகேஷன் போட்டவர்களுக்கு எல்லாம் சீட்! என்று சொல்லி அப்ளிகேஷன் விற்பனையை ஜோராக தொடங்கிவைத்தார்கள் போலும். கோடிகளை அப்ளிகேஷன்களை விற்றே அள்ளியுள்ளவர்கள், நிச்சயமாக இவர்களுக்கான கமிஷனை கொடுத்திருப்பார்கள். ஆனால், அப்ளிகேஷனையே வாங்க வழியில்லாதவர்கள் பிழைத்துக் கொண்டார்களா? விழித்துக் கொண்டார்களா?

மன்னர் ஜவஹர் எப்படி ஜோதிடப்புலி ஆனார்? அப்ளிகேஷன் போடுபவர்களுக்கு எல்லாருக்கும் சீட் என்றால் ஏன் பணம் தரவேண்டும்? இப்ப்டியெல்லாம் “எச்சரிக்கை அறிவிக்கை” விடவேண்டும்? அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கவுன்சிலி்ங் மூலம் முறையாக தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் யாரும் இடைத்தரகர்கள் போன்ற போலிகளை நம்பி ஏமாற வேண்டாம் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார் (21-05-2010 பத்திரிக்கைகள்). சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக புரோக்கர் மூலம் பணம் கொடுத்து ஏமாந்த மாணவன் சென்னை போலீசில் புகார் கொடுத்துள்ளதை தொடர்ந்து இந்த எச்சரிக்கையை பல்கலை., துணை வேந்தர் விடுத்துள்ளார். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=3732

ஆல்பம்
“பொறியியல் கவுன்சிலிங் 100 சதவீதம் வெளிப்படையாக நடக்கிறது,” என, பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். “தினமலர்’ நாளிதழ், ஸ்ரீசாஸ்தா கல்வி மையங் கள், கே.கே.பார்மசி கல் லூரி இணைந்து நடத்தும், “உங்களால் முடியும்…’ நிகழ்ச்சியில், பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது: பொறியியல் கவுன்சிலிங், 100 சதவீதம் வெளிப் படையாக நடக்கிறது. கிளார்க்கிடம் பணம் கொடுத்தால் ஏதாவது காரியம் நடக்கும் என நினைக் காதீர்கள். இதில் யாரும் எதுவும் செய்ய முடியாது.

கிளார்க்கிடம் பணம் கொடுத்தால் ஏதாவது காரியம் நடக்கும் என நினைக் காதீர்கள்“. அப்படியென்றால், வேறு யாரிடத்தில் பணம் கொடுத்தால் ஏதாவது நடக்கும் என்று மறைமுகமாகக் கூறுகிறாரா?

அவ்வாறு இல்லாமல், எந்த காலேஜும், நிகர்நிலை பல்கலைக்கழகமும் பணம் வாங்கக் கூடாது, அவ்வாறு வாங்கினால், நடவடிக்கை எடுக்கப் படும் என்றள்ளவோ ஆணித்தனமாக சொல்லியிருக்க வேண்டும்?

ஏனெனில், அக்காரியம் தான் இந்தியாவில் ஊழல்;உக்கு வித்திடுகிரது, பல குடும்பங்களைக் கெடுக்கப் போகிறது; சீரழிக்கப் போகிறது;


சீட்டுக்குப் பணம் என்ற உண்மை பற்றி ஏன் பேசமாட்டேன் என்கிறார்கள்? ஆனால், இப்படி லட்சங்கள் வாங்கும் அயோக்கியத்தனத்தைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை, ஏன்?

Business-of-eng-admission

Business-of-eng-admission

ஏழைகள், நடுத்தரக் குடும்பத்தினர் படும் பாடு:  பணக்காரர்கள், லஞ்சம் வாங்குபர்கள், சீட்டை அள்ளுகிறார்கள்.

ஆனால், ஏழைகள், நடுத்தரக் குடும்பத்தினர் – அதில் 70, 80, ஏன் 90 மார்க் வாங்கியவர்கள் பணம் இல்லாமல் திகைக்கின்றனர், முழிக்கின்றனர், வருத்தப் படுகின்றனர், ஏன் மனத்தளவில் அழுகின்றனர்.

90 மார்க் வாங்கியவனுக்கு சீட் கிடைக்கவில்லை, ஆனால், 57 வாங்கியவன் மெடிகல் சீட் வாங்கிவிட்டான், ரூ.40 லட்சங்கள் கொடுத்து!

இதே நிலைதான், இஞ்சினியரிங்கிலும்!

மாடுகளில் சூத்திரமாடு பார்ப்பவர்கள், சத்திரிய, வைசிய மாடுகளைப் பார்ப்பதில்லை: பிறகு என்ன சமத்துவம், மண்ணாங்கட்டி…………………..யாரும் இங்கு கேட்பதில்லை!

சீட்டுகள் விற்கும் விவரம்: அண்ணா தொழிற்-பல்கலைக்கழகத்தில் வருபவை, நிகர்நிலை பல்கலைக்கழகம் என்று இருக்கும் எல்லா கல்லுரிகளுமே, கீழ்கண்ட நிலையில் பணத்தை வாங்கிக் கொண்டு சீட்டுகளை விற்கின்றனர்.

பிரிவு முதல் கல்லூரி இரண்டாவது கல்லூரி
Mechanical 4 6 – 8
ECE 2 – 4 4 – 6
EEE 1 – 2 2 – 4
CE 1 2
Civil 1 2
IT

இங்கு “முதல் கல்லூரி” என்றால் ஏற்கெனவே ஆரம்பிக்கப் பட்டு, ஓரளவிற்கு காலேஜ் நடக்கும் உள்ளநிலை; “இரண்டாவது கல்லூரி” என்றால், முதல் கல்லுரியின் பெயரைப் போன்றே இன்னொரு கல்லூரி ஆரம்பித்து, அதில் அனுமதிக்கப்படும் என்று பணம் வசூலித்து, இதில் அனுமதி கொடுத்து ஏமாற்றும் நிலை.

“கவுன்ஸிலிங்” என்ற போர்வையில் பேரம்: “கவுன்ஸிலிங்” என்ற போர்வையில் பேரம்தான் நடக்கிறது.

பணம் உள்ளவர்கள், கொடுத்து சீட்டுகளை வாங்குகிறார்கள்.

இல்லாதவர்கள், எப்படி கடன் வாங்கலாம், நகைகளை விற்க்கலாம், பி.எஃப்.லிருந்து பணம் எடுக்கலாம்……….என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

Rate-for-each-college

Rate-for-each-college

“எடுகேஷனல் ஃபேர்” என்ற மோசடி: அதுமட்டுமல்லாது, இதற்காக “எடுகேஷனல் ஃபேர்” என்று அவர்களை அழைத்து, மாணவ-மாணவியர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, எப்படியாவது காசு கொடுத்து சீட் வாங்கிவிடு, இல்லையென்றால், சீட் கிடைக்காது அல்லது நீ கேட்கும் பிரிவு கிடைக்காது என்று பயமுறுத்துகின்றனர்.

“கேம்பஸ் இன்டர்வியூ” என்பது அதைவிட பெரிய மோசடி: “கேம்பஸ் இன்டர்வியூ”வில் எங்கள் கல்லுரிதான் சிறந்தது, என்று விளம்பரப்படுத்து ஏய்க்கின்றன.

இதைத் தவிர, இடைத்தரகர்கள் “தெரிந்தவர்கள்”, “வேண்டியவர்கள்”, “நம்முடைய நலனை வேண்டுபவர்கள்”………………முதலியோரும் விளையாடுகின்றனர்.

பெற்றோர்கள் தயங்கிகின்றனர், அல்லது ஜாக்கிரதையாக செயல்படுகின்றன, காசில்லாமலேக் கூட சீட் கிடைக்கும் அதனால் கொஞ்சம் பொறுத்திருப்போம், என்ற நிலையில் இருக்கின்றனர் என்பதனால், மாணவ-மாணவியர்களை நேரிடையாக தொடர்பு கொண்டு அழுத்தத்தை ஏற்படுத்துகின்றனர். “என்னுடைய எல்லா நண்பர்களும் காசு கொடுத்து சேர்ந்து விட்டனர், நீ சும்மா உட்கார்ந்து கொண்டிருக்காறாயே”, என்று அவர்கள் கத்தி, சண்டை போடும் வரைக்குக் கொண்டு விடுகின்றனர்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

8 பதில்கள் to “லட்சங்களில் விற்க்கப்படும் இஞ்சினியரிங் சீட்டுகள்!”

  1. vedaprakash Says:

    பி.இ.​ சீட் வாங்கித் தருவதாக ரூ.​ 2.7 லட்சம் மோசடி

    First Published : 22 May 2010 12:00:00 AM IST
    http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=…………BF

    சென்னை, ​​ மே 21:​ சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் விண்ணப்பம் வாங்க வந்த மாணவரிடம் பி.இ.​ சீட் வாங்கித் தருவதாகக் கூறி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரூ.​ 2.7 லட்சம் மோசடி செய்துள்ளார்.

    இது குறித்த விவரம்:

    திருச்சி குறுக்குப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தீட்சித் ​(18).​ இவர் என்ஜினீயரிங் படிப்பில் சேர சில நாள்கள் முன்னர் விண்ணப்பப்படிவம் வாங்குவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் சென்றாராம்.

    அங்கு வரிசையில் நின்றிருந்த போது,​​ தன்னை ரிஷிகாந்த் என்று கூறிக்கொண்டு அணுகிய சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர்,​​ தான் இதே பல்கலைக்கழகத்தில் வேலை பார்ப்பதாகவும்,​​ உயர் அதிகாரிகளிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி,​​ ஏரோநாட்டிகல் பிரிவில் பி.இ.​ சீட் கிடைக்க தாம் ஏற்பாடு செய்வதாகவும் கூறினாராம்.​ இதற்கு ரூ.​ 5 லட்சம் செலவாகும் என்றும் அவர் தீட்சித்திடம் கூறினாராம்.

    இதனை நம்பிய தீட்சித்தும் அவரது பெற்றோரும்,​​ ரிஷிகாந்த் கூறியபடி,​​ ரூ.​ 2.7 லட்சத்தை பல்வேறு தவணைகளாக அளித்தனராம்.​ இந்நிலையில்,​​ பி.இ.​ சீட்டுக்கான கடிதத்தை 20-ம் தேதி தருவதாக ரிஷிகாந்த் கூறியிருந்தாராம்.​ இதன்படி,​​ அவரை சந்திக்க தீட்சித்தும் அவரது பெற்றோரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு சென்றனராம்.

    ஆனால்,​​ ரிஷிகாந்த் என்ற பெயரில் அறிமுகமான நபர் பல்கலைக்கழகத்தில் பணி புரியவில்லை என்பதும்,​​ அவர் ஏற்கெனவே அளித்திருந்த முகவரியும் போலியானது என்பதும் தீட்சித்தின் பெற்றோருக்கு தெரிய வந்தது.

  2. vedaprakash Says:

    டாக்டர்களுக்கு சேவை மனப்பான்மை இல்லை : அமைச்சர் வருத்தம்
    தினமலர், மே 21,2010
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=3809

    சென்னை : “”மருத்துவர்களுக்கு சேவை மனப்பான்மை இல்லாதது வருத்தம் அளிக்கிறது,” என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

    தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவாயில், ஆட்சிமன்ற குழு அரங்கம் ஆகியவற்றின் திறப்பு விழா, கிண்டியில் நேற்று நடந்தது. விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கும் இடமாக மட்டும் இல்லாமல், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மருத்துவ கல்லூரி போல, சிறப்பாக செயல்பட வேண்டும். இப்பல்கலையின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய, அரசு ஆவன செய்யும். அரசு மருத்துவமனைகளில், “லேப் டெக்னீஷியன்’ உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பணியிடங்கள், நிறைய காலியாக உள்ளன. இவற்றில் பணிபுரிய, தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை. வேலைவாய்ப்பை தரக்கூடிய மருத்துவம் சார்ந்த புதிய படிப்புகளை, இந்த பல்கலைக்கழகம் கொண்டு வர வேண்டும். இப்பல்கலையில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், சென்னைக்கு அருகிலுள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சென்று, பயிற்சி பெறக்கூட தயாராக இல்லை. மருத்துவர்களுக்கு சேவை மனப்பான்மை இல்லாததே, இதற்கு காரணம். மருத்துவர்களின் இப்போக்கு வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.

    தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலையின் துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் பேசும்போது, “”பல் மருத்துவம், கார்டியாலஜி உள்ளிட்ட பிரிவுகளில் புதிய பட்டம், பட்டய படிப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். மாணவர்களின் ஆராய்ச்சி பணிகளுக்காக, சென்னை அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும்,” என்றார். நிகழ்ச்சியில், பல்கலையின் பதிவாளர் சுதா சேஷய்யன், பேராசிரியர் காமேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

  3. vedaprakash Says:

    3 நாட்களில் 1 லட்சம் பொறியியல் கல்வி …
    தமிழகத்தில் 3 நாட்களில் 1லட்சத்து 25 அயிரம் பொறியியல் கல்வி விண்ணப்பங்கள் விற்பனை……………

    2 நாளில் 9 ஆயிரம் எம்.பி.பி.எஸ் …
    19 May 2010 … 2 நாளில் 9 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் விற்பனை கூடுதலாக 5 ஆயிரம் அச்சடிப்பு……………..

    ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் லட்சத்திற்கும் மேலான விண்ணப்பங்கள் விற்பனை செய்துள்ளனர்….அதாவது 66 கோடி வசூல்………….
    82,000 நுழைவு தேர்வு எழுதியுள்ளனர்…………
    5000 பேர்களுக்கு சீட்…………………….
    குறைந்தது ரூ.2 முதல் 8 வரை சீட்டுகள் பேரம்…………….சராசரி 250 கோடி வசூல்………………….

  4. vedaprakash Says:

    மோசடி பொறியாளர் கைது
    Malaisudar, Saturday, 22 May, 2010 03:58 PM
    http://www.maalaisudar.com/newsindex.php?id=34543%20&%20section=24

    சென்னை, மே 22: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக் சீட் வாங்கி தருவதாகக் கூறி திருச்சி மாணவரிடம் ரூ. 2.5 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த சென்னையை சேர்ந்த என்ஜினியரை போலீசார் கைது அவரிடம் இருந்த ரூ. 1.50 லட்சம் பறிமுதல் செய்துள்ளர். தலைமறைவான அவரது நண்பரை தேடி போலீசார் தேடி வருகின்றனர்.
    .
    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

    திருச்சி மாரியம்மன் கோவில்தெருவைச் சேர்ந்தவர் தேவாநந்தம். இவரது மகன் தீட்சித் (வயது 18). இவர் +2 தேர்வில் தேர்ச்சி பெற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்கல் விண்ணப்பம் பெறுவதற்காக கடந்த 3ம் தேதி பல்கலைக்கழகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது பல்கலை வளாகத்தில் அமர்ந்திருந்த ஒரு டிப்டாப் ஆசாமி தீட்சித்திடம் படிப்பு பற்றி விவாதித்துள்ளார். அப்போது ஏரோநாட்டிக்கள் படிப்புக்கு ரூ. 5 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளார்.

    நான் இந்த பல்கலையில் தான் வேலை செய்து வருகிறேன். கண்டிப்பாக சீட் வாங்கி கொடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார். என் பெயர் ரிஷிகாந்த் (வயது 37). வேளச்சேரி விஜயநகரில் குடியிருப்பதாகக் கூறி வீட்டு விலாசத்தையும், செல்போன் நம்பரையும் கொடுத்துள்ளார்.

    இதை நம்பிய தீட்சித் மறுநாள் ரூ. 25 ஆயிரம் முன் பணமாக கொடுத்திருக்கிறார். 18ம் தேதி போன் செய்து அதே வாளகத்தில் ரூ. 2.25 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.

    20ம் தேதி பல்கலை வளாகத்திற்கு வந்து காத்திருந்த தீட்சித் டிப்டாப் ஆசாமிவராததால் ஏமாற்றம் அடைந்தார். இது குறித்து பல்கலையில் கேட்ட போது இது போன்று ஆசாமி இங்கு பணியில் இல்லை என்று கூறியவுடன் கோட்டூர்புரம் போலீசில் புகார் கொடுத்தார்.

    போலீசார் அவர் கொடுத்த விலாசத்தின் படி வேளச்சேரி சென்று விசாரித்த போது பொய்யான விலாசம் என்று தெரிய வந்தது. மேலும் அவரது செல் போன் நம்பரை வைத்து டிப்டாப் ஆசாமியை, கோட்டூர்புரட் இன்ஸ்பெக்டர் செல்லப்பா தலைமையில் போலீசார் மூலம் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சைதாப்பேட்டையில் சிவில் அலுவலகம் வைத்து நடத்தி வரும் சேலையூர் சாராதா கார்டனை சேர்ந்த சையத் மன்சூர்கான் (வயது 25) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ. 1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    மாணவனிடம் பணம் பெற்ற ரிஷிகாந்த், சையத் மன்சூர்கானும் நண்பர்கள் என்றும், மன்சூர்கானின் செல்போனை ரிஷிகாந்த் பயன்படுத்தியது தெரிய வந்தது.

    இவர்கள் இரண்டு பேரும் சிவில் என்ஜினியர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் தலைமறைவான ரிஷிகாந்த்தை தேடி போலீசார் ஐதராபாத் விரைந்துள்ளனர்.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் செல்லப்பா கூறியதாவது:

    கைது செய்யப்பட்டசையது மன்சூர்அலிகானும், ரிஷிகாந்தும் மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் சிவில் இன்ஜியர் படித்தவர்கள். இவர்கள் கல்லூரியில் சீட்டுவாங்கி கொடுக்கும் வேலையிலும் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது பல்கலைக்கு விண்ணப்பம் வாங்க வந்த தீட்சித்தை சந்தித்து குறைவாக உள்ள மதிப்பெண்ணை திருத்துவதற்கும், சீட்டு வாங்கி தருவதற்கும் சேர்த்து ரூ. 6 லட்சம் ஆகும் என்று கூறியுள்ளார். வீட்டிற்கு சென்ற தீட்சித் கடன் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும் ரூ. 2.75 லட்சத்தை கொடுத்துள்ளார். பணம் கொடுக்கும் போது ரிஷிகாந்தை செல்போனில் படம் பிடித்ததாலும், செல்போன் நம்பரை வாங்கி வைத்ததõல் அவர்களை பிடிக்க சுலபமாக இருந்தது.

    மேலும் ராஜபாளையத்தைச் சேர்ந்த ரிஷிகாந்தின் தந்தை, காட்டு இலாக அதிகாரி என்றும் அவர் சமீபத்தில் ஒரு பிரச்சனையில் மாட்டி சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார் என்று இன்ஸ்பெக்டர் கூறினார்.

  5. vedaprakash Says:

    பொறியியல் கவுன்சிலிங் 100 சதவீதம் வெளிப்படையாக நடக்கிறது : மாணவர் சேர்க்கை செயலர் தகவல்
    பதிவு செய்த நாள் : மே 22,2010,19:38 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=4399

    சென்னை : “”பொறியியல் கவுன்சிலிங் 100 சதவீதம் வெளிப்படையாக நடக்கிறது,” என, பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். “தினமலர்’ நாளிதழ், ஸ்ரீசாஸ்தா கல்வி மையங் கள், கே.கே.பார்மசி கல் லூரி இணைந்து நடத்தும், “உங்களால் முடியும்…’ நிகழ்ச்சியில், பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது: பொறியியல் கவுன்சிலிங், 100 சதவீதம் வெளிப் படையாக நடக்கிறது. கிளார்க்கிடம் பணம் கொடுத்தால் ஏதாவது காரியம் நடக்கும் என நினைக் காதீர்கள். இதில் யாரும் எதுவும் செய்ய முடியாது.

    தகுதி மதிப்பெண் என் பது கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் பெறும் மதிப்பெண்ணின் சராசரியாகும். கணிதம் 100 மதிப்பெண், இயற்பியல் மற்றும் வேதியியல் தலா 50 மதிப்பெண் என்ற அடிப்படையில், “கட்-ஆப்’ மதிப் பெண் கணக்கிடப்படும். அனைத்து மாணவர்களுக் கும், “ரேண்டம்’ எண் வழங்கப்படும். ஒன்றிற்கும் மேற்பட் டோர் ஒரே, “கட்-ஆப்’ மதிப்பெண் பெறும் போது, கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், இயற்பியலில் அதிக மதிப் பெண் பெற்றவர்கள், நான் காவது விருப்பப் பாடத் தில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், பிறந்த தேதி(மூத்தவர்களுக்கு முன்னுரிமை), “ரேண்டம்’ எண் என்ற வரிசையின் அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்படும்.

    மாணவர்களின் விண் ணப்பம், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை வந்து சேர்ந்தவுடன், விண்ணப்பம் ஏற்கப் பட்டதா அல்லது நிராகரிக் கப்பட்டதா; நிராகரிக்கப்படக் காரணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணைய தளத்தில் வெளியிடப்படும்.

    மாணவர்களின் மதிப் பெண் மாறினால் அதற் கேற்ப, “கட்-ஆப்’ மதிப் பெண்ணை கணக்கிட்டு, அந்த “கட்-ஆப்’ மதிப் பெண்ணிற்கு கவுன்சிலிங் நடக்கும் தேதியில், அண்ணா பல்கலைக் கழகம் வந்து கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம்.

    குறிப்பிட்ட தேதியில் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியாத மாணவர்கள், அடுத்த தினத்தில் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். ஆனால், அப்போது காலியாக உள்ள இடங்களிலிருந்தே கல்லூரி, பாடப் பிரிவை தேர்வு செய்ய முடியும். கவுன்சிலிங்கில் கல் லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்து விட் டால், அதன்பிறகு மாற்ற முடியாது. மாணவர்கள் தங்களது, “கட்-ஆப்’ மதிப்பெண் ணிற்கு எந்தக் கல்லூரியில் எந்தப் பாடப்பிரிவில் இடம் கிடைக்க வாய்ப்புள் ளது என்ற விவரத்தை, அண்ணா பல்கலை இணையதளத்தில் உள்ள கடந்த ஆண்டு, “கட்-ஆப்’ மூலம் தெரிந்து கொள்ள வேண் டும். குறிப்பிட்ட கல்லூரிகளை தேர்வு செய்து அக் கல்லூரிகளை நேரில் சென்று பார்க்க வேண்டும்.

    அடிப்படை கட்டமைப்பு வசதி, ஆய்வுக்கூடம், ஆசிரியர்கள், பஸ், ஹாஸ்டல் வசதி, கல்லூரியின் சூழல் குறித்து அறிய வேண்டும். அழைப்புக் கடிதம் வராவிட்டாலும், மாணவர்கள் குறிப்பிட்ட தேதியில் அண்ணா பல் கலை வந்து, தங்களது பதிவு எண்ணை குறிப் பிட்டு கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம். பொறியியல் கவுன்சிலிங் தொடர்பான சந்தேகங்களுக்கு, 044 – 22358265, 66, 67, 68 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பதில் பெறலாம். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில், “செல்ப் சப்போர்ட்டிங்’ படிப்பில், 4,000 ரூபாய் வரை கட்டணம் மட்டுமே கூடுதலாக இருக்கும். மற்றபடி பாடத் திட்டம், ஆசிரியர்கள், அடிப்படை வசதிகளில் எந்த வித்தியாசமும் இருக் காது. இவ்வாறு ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.

    கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி பேசியதாவது: பொறியியல் பட்டம் பெறுபவர்களில், 97 சதவீதம் பேருக்கு ஐ.டி., துறையில் தான் வேலை கிடைக் கிறது. “கோர்’ துறைகளில் 3 சதவீதம் பேருக்கு தான் வேலை கிடைக்கிறது. எதிர்காலத்தில் மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தித் துறையில் நல்ல வாய்ப்புகள் உள்ளன.

    பொறியியல் படிப்பை தேர்வு செய்வதில் பாடப்பிரிவை விட கல்லூரிக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும். பாடப் பிரிவுக்கு 20 சதவீதமும், கல்லூரிக்கு 80 சதவீதமும் முக்கியத்துவம் வழங்க வேண்டும். பெற்றோர், மாணவர்களுக்கு விருப்பமான பாடப்பிரிவில் படிக்க வைக்க வேண்டும்.

    இந்த ஆண்டு கணிதத்தில் மதிப்பெண் குறைந் தாலும், இயற்பியல், வேதியியலில் மதிப்பெண் உயர்ந்துள்ளது. தேர்ச்சி விகிதத்தை மட்டும் பார்க் காமல், வேலைவாய்ப்பு, கூடுதல் பயிற்சி, தொழில் துறை ஒத்துழைப்பு ஆகியவற்றையும் பார்த்து கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு ஜெயபிரகாஷ் காந்தி பேசினார்.

    இலவச புத்தகம் : சென்னையில் தி.நகர் மற்றும் குரோம்பேட்டை என நேற்று இரு இடங்களில், “உங்களால் முடியும்…’ நிகழ்ச்சி நடந்தது. இரண்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற மாணவர்களுக்கு பொறியியல் கவுன்சிலிங் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய, “உங்களால் முடியும்!’ புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.

  6. M. Nachiappan Says:

    முதலில் இவஎர்களையெல்லாம் தூக்கில் போடவேண்டும்.

  7. பொறியியல் கல்லூரிகளில், படிப்புகளில் படிப்பு முடிக்காமல் மாணவ-மாணவியர் வெளியேறுவதேன்? | Academic Degrad Says:

    […] [1]https://academicdegradation.wordpress.com/2010/05/22/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0… […]

  8. பொறியியல் கல்லூரிகளில், படிப்புகளில் படிப்பு முடிக்காமல் மாணவ-மாணவியர் வெளியேறுவதேன்? | Academic Degrad Says:

    […] [1]https://academicdegradation.wordpress.com/2010/05/22/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0… […]

பின்னூட்டமொன்றை இடுக